சிறுகதை
வெளியில் தெரியாத அந்த நீர்வீழ்ச்சியின் அனாதியான சப்தம் கேட்டு மலை இடுக்கில் உயரும் நத்தையின் உணர்கொம்புகள் மெதுவாகத் தொட்டு மூக்கில் புதர் எரிகிறது. எழுந்த தியில் அசையும் விரல்கள் சாண்குழல் கொண்டு மாடுகளின் பெருமூச்சை வாசிக்கின்றன. பரட்டைத்தலையும் செம்பட்டைக் கண்களும் வெளிப்பட்டு கருத்த உதடுகளில் நுரைபொங்கி மறையும் பால்வெளியை இசைக்கும். உடந்தம்பில் சாய்ந்தவாறு மோனத்தில் மறைகறாள் மாட்டுக் காரச் சிறுவன். சுற்றிச் சுற்றி மலைவிறகு உடைக்கும் காட்டுச்சிறுமிகளின் ஆயுத ஒலிகள் மலைகளில் தெறிக்கின்றன. அருவாள்களை வீசி எழுகின்றது வயல். மஞ்சள் வெளிறிய நெல் வெய்யிலில் கரையும். நெல்லின் பால்பருவத் தம்பலப்பூச்சிகள் ஆயிரம் நிறங்களைப் பகிர்கின்றன பூமியோடு. காட்டிலந்தை முள்ளுகளின் உச்சியில் தம்பலப்பூச்சிகள் பதிந்து சிறகுகள் படபடக்கின்றன. முள்ளில் சிக்கிய காற்று பரபரவென்று கிழியும் ஓசை. தம்பலப்பூச்சிகள் பறந்து தலைகீழாய் நகர்கிறாள் ஓசே. அவற்றின் ஆயிரம் நூல்கள் பாதைகளாய நீளும். தலைகீழாய் பறந்து வந்த பெண்பறவையின் நீண்ட அலகு நகரின் மீது மோதி பற்றி எரிகிறது பறவை. வாயில்லாப்பூச்சிகளின் மௌனங்களை வீடற்றவன் திசைகளிடையே வாசிக்கக்கூடும். நெஞ்சுக்குள் பதித்த இரட்டைக்குழல் ரத்த நாளங்களிடையே பயணமாகின்றது. இருவேறு காலங்களில் வாசிக்கப்படும் குழல்களாக இருக்கும். அமெச்சூர் நாட்டியங்களின் பெரும் சலிப்பில் வாசித்துக் கொண்டிருந்த இரட்டைக் குழலை தோளில் சுமந்தவாறு இனம் புரியாத பயத்தில் குடித்துவிட்டு தள்ளாடி ஒரு அகதி போகின்றான். வேறொரு நகரில் தொலைந்து, இன்னொரு நகரில் தேடப்பட்டு, தலைநகரின் தெருவில் சுடப்பட்டு மலைநகரில் அந்நியனாக இருக்கும் அவன். இரவு பகுதிகள் எல்லாம் மூடிய பின்னும் குடிப்பதற்காக அவன் நாக்கு பரபரத்தது. இருளில் பாடியபடி நடந்து போகின்றான். நட்சத்திர நகரில் அவர்களும் இவர்களும் இவனும் நானும் நான்களும் நீயும் அவனும் பெயர்களை மாற்றி மாற்றி நடந்து போகின்றார்கள். மலைகள் நகர்கின்றன நட்சத்திர நகரை நோக்கி. காணாமல் போன அவன் பெயர் மாற்றிக்கொண்டு பாழ் நகரில் திரியக்கூடும். நிறக்கண்ணாடிகளால் மாறும் மாட வீட்டின் ஜன்னல் திறந்து பெண்ணிறமான சீனிவிரல்கள் கீழேபோகும் அவனை சைகை செய்து அழைக்கின்றன. கண்ணாடியில் தாளமிட்டவாறு பழைய வால்ட்ஸ் நடன இசைதட்டுகளை சுழலவிட்டு கதவுத்துவாரங்கள் மரச்சட்டங்களின் இடுக்குகளில் கசியும் மொசார்ட்டின் இசைக்கோலங்களில் இலைகள் படர்ந்து மலைப்பூச்சி மனிதர்கள் ஊர்ந்து வருகிறார்கள். கல்கோடுகளில் வாழ்ந்த ஊசிகள் தரையில் க்ளங் கென்று தெறிக்கின்றது. கிராமபோன் ஊசிகளில் பதுங்கி வரும் மலைப்பூச்சி மனிதர்கள் மொசார்டிடம் தொடங்கி எங்கே போகின்றார்கள் என்று தெரியவில்லை. விஷம் வாய்ந்த உலோகக்கலவையால் நீலம் பாரித்த அவன் இறந்தபடி தனக்காக எழுதிக்கொண்டிருந்த மரித்தோருக்கான கூட்டு வழிபாட்டை எவ்வாறு முடிக்கவேண்டும் என்று தன் சீடர்கள் சேவியர், ஜோசப் ஆகிய இருவர்காதிலும் டிரம் இசைப்பகுதிகளை வாயால் வெளிப்படுத்த முயற்சித்தான் மொசார்ட் புயல்மழைக்கு. ஊடே மொசார்ட்டின் அம்மண உடல் ஒரு லிணன் துணிக்குள் வைத்து அந்நகரின் கல்லறைக்குள் இறக்கப்பட்டது. மொசார்ட்டின் சாம்பல் நிற நீரின் பாதைகள் தொடங்கிவிட்டன; அவற்றின் அனாதியான சொற் றொடர்களை நீர்வீழ்ச்சி உச்சரித்தபடி இருக்கிறது. உயரத்திலிருந்து தொங்கும் சாம்பல் நீரின் மீது பக்கம்பக்கமாய் வெண்ணிற யுவதியின் வரைபடங்கள்; முடிவு பெறாத வாக்கியங்கள்; எல்லா விரல் கொண்டும் பதிந்த பூச்சியின் கால்கள் சிறிய விநோதமான கீறல்கள்; கைத்துப்பாக்கியால் சுடப்பட்ட பொம்மைகள்: உடைந்த விமானங்கள்; ஸிபிரிங் சிப்பாய்கள் ஏழுபேர். பனிரெண்டு வளைவகோட்டுப் பந்துகள்; விளையாட்டுக்கட்டங்கள், ரப்பர் தேள்கள் எல்லாம் அவளுடையது தானா? அவனுக்குத் தெரியவில்லை.
மொசார்ட்டின் பெயர்சொல்லி , அழைத்த மரப்பல்லியின் தடித்த கண்பட்டை விளிம்புக்குக் கீழ் பைத்திய ரேகைகள்; அதன் கண்களில் விழுந்த கருவளையத்தில் - அமக்கில் சிவந்துபோன மந்திரப் புல்லாங்குழல் எரிந்து கொண்டிருக்கிறது இசையில். அதில் காற்றின் மெதுவான தடங்கள்; பல்லியின் கால் ஜவ்வுக்குள் அழுத்தப்பட்ட காற்று இறுகிக்கொண்டே இருக்கிறது. காற்றில் பதிந்த துவாரங்களை பல்லியின் மரவிரல்கள் மூடித்திறக்கின்றன. அசையாத பல்லி ஒளிந்து கொண்டு திவலைகளில் தலைகிழாக தெரியும் வியன்னா நகரத்தின் பழுப்படைந்த வரைபடத்தைக் குறுக்காக கடந்து கொண்டிருந்தது. இற்று ஓடிந்து கொண்டிருக்கும் வரைபடத்தில் பதிந்த பல்லியின் நிழல்கள் வியன்னாவின் மையத்திலிருக்கும் ஆயுதச்சாலையில் சிறைவைக்கப்பட்ட வெண்ணிற யுவதியைத் தேடுகின்றன. வியன்னா நகரின் எல்லா வீடுகளின் ஜன்னல் கம்பிகளில் மொசார்ட்டின் வெண்ணிறமான கையுறைகள் காய்கின்றன.
மொசார்ட் பிறந்த வீட்டைச் சுற்றிலும் பனிரெண்டு ஸ்பிரிங் காவலர்கள் நடந்தபடி இருக்கிறார்கள். அவன் பொம்மைகள் புதைக்கப்பட்ட இடங்களை செடிகளும் கற்பனைத் தாவரங்களும் மூடியுள்ளன. துருபிடித்த ஆயுதங்களில் படர்ந்த பாரிகளில் கூடு வைத்திருந்த நீலப்புழுக்கள் கூட்டை உடைத்து, கால்களை இழுத்து, பின்னிக்கிடந்த முட்டைகளிலிருந்து வெளியேறி, சட்டைகளை அடித்து, துடிதுடிப்பில் பறந்து வருகின்றன நீலத்தும்பிகளாய். அந்நகரில் இருக்கும் மறைவிடங்களில் இசை ஊற்றிலிருந்து திவலைகளை உருட்டி சிந்தாமல் சிதறாமல் நட்சத்திர நகருக்குத் தூக்கிச் செல்கின்ற நீரின் இசையை உருட்டி, நீர் ஸ்படிகத்தில், மொசார்ட்டின் உருவத்தை நூற்றாண்டின் கனவுகளுக்குள் தூக்கி எறிகின்றன பறக்கும் தும்பிகள். ஆதார ஊற்றின் அடியில் அசைந்து கொண்டிருக்கும் தைலவண்ண நீர் ஓலியத்திலிருந்து சாம்பல் பூனை வெளிக்கிழம்பி, பாசியடைத்திருந்த சிங்கமுக வாயில்களில் நுழைந்து அசையாத காவலர்களைக் கடந்து கோட்டைக்குள் பிரவேசித்தது. சாம்பல்பூனையின் உள் பாதங்களில் இருந்து சப்தமற்ற காலடிகள் பதிகின்றன. அதன் நிசப்தத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும் மதில் சுவர்களில் பூனையின் தடங்கள் இருப்பதாகத் தெரிகிறது; பதியாமல், தொட்டும் தொடாமல் நடந்துபோன வெற்றிடத்தில் நிலவும் தடங்கல் தாமே நகர்கின்றன. பதிந்து வசிப்பிடங்களின் சூட்சுமங்களை அறிந்த கால்கள் இருந்தால் எடுத்து நடந்த காலில் மொசார்ட்டின் நிழல் படரும். மோப்பத்தில் தோன்றும் மந்திரப்பாதைகளில் ஊர்ந்து செல்லும் கபில நிறக் கண்கள் கங்கெனப் பழுத்து எரிகின்றன. அடிமாலியில் பாசிப்படர்ந்து தொங்கிக் கொண்டிருந்த மந்திரப்புல்லாங்குழலில் பிறந்த சுருள் நத்தை மலைகளுக்குள் சிறுகின்றது. வேட்டைக்கான வில்லும், அம்பும் மலைமீது அதிரும். வேட்டைக் குரல் யாரை அழைக்கின்றது? உயரத்தில் எரியும் கற்களுடன் பறக்கும் நத்தையின் வெண்கூடு. அதில் சுருண்ட பிரபஞ்ச காணம் மறைந்தவளின் குரலா? பிரபஞ்சத்தின் குரல் அழைக்கின்றது? அழைப்பின் திசை நோக்கி அம்புகள் பறக்கின்றன. பிரபஞ்ச ஓசையில் நெருகிப்பாய்ந்த அம்புகள் மறையும். ராட்சஸப்பறவையின் இறகு ஒன்று சுழன்று சுழன்று கீழ்நோக்கி வருகிறது. ஆள் உயர இறகின் ஸ்பரிசம் கண்டு அந்த இறகின் கண்களில் எழுதப்பட்டிருந்தது எரிந்துபோன வெண்பறவையின் காவியம். அவளின்றியே எழுதிச்செல்லும் இறகு. மொசார்ட்டின் கையுறை அணிந்த விரல்கள் எழுதிச்செல்கின்றன. வெகுதொலைவில் அசையும் விரல் அவளுக்கான இசைக்குறிப்புகளை பதியும் போது; ஓர் அபூர்வ இறகின் சரித்திரத்தை அதே இறகு கொண்டு மொசார்ட் எழுதிக்கொண்டிருக்கும் போது, அதுவரையில் இல்லாமலிருந்த இறகு முளைத்த காவியம். இறகுக்குள் செதுக்கப்பட்ட வடிவங்கள் எல்லாம் விரல்களைச் சுடுகின்றன. ஊமையான நரம்புகள் எதை உணரகூடும்? இறகின் சாம்பல் கட்டங்களில் மொசார்ட்டின் சாம்பல் கோடுகள் அவன் கண்களைக் கீறிச் செல்கின்றன. அவன் இருப்பிடத்தில் ரேகைகள் பட்டு சிதைந்து கொண்டிருந்தது எல்லாம். இறகுக்குள் ஊர்ந்து மறைகிறான். எழுதிச் சென்ற மொசார்ட்டின் விரல்கள் மறைகின்றன. அந்த அபூர்வ இறகிலான படகில் ஏறிச்செல்கிறான். அவன் நிஜமான பெயர்கூவி அழைத்த பறவையின் இசை. மௌனமாய் மிதந்து மிதந்து வெற்றிடத்தில் செல்லும் படகு. யாருமின்றிக் கேட்பாரின்றி அவள் காவியம் நத்தைக்கூட்டுக்குள் ஒடுங்கியது. அம்பெரிய இறகுதந்த வெண்பறவையின் ஒற்றைக்கண் நத்தைக்குள் தனியே மிதக்கிறது. உள்ளே அவள் இல்லை. தாறுமாறாய் கோடுகள் வந்தன. இறகுப் படகிலிருந்து நத்தைக்கூட்டின் குகைவாயிலை அடைந்தான், வாய்பிளந்த குகைக்குள் அதிசய இறகு சென்று கொண்டிருக்கிறது. அவ்விறகில் அவள் மூதாதைகளின் நிழல்கள் அசைகின்றன. இறகுத் துடுப்புகள் கொண்டு கடந்து போகிறார்கள். உருவமின்றி நிழலாக இருந்தார்கள். எல்லா நிழல் கொண்ட தண்ணீர் அசைய அசைய யார்யாருடைய நிழல்களோ தோன்றுகின்றன. அவனுக்குத் தெரியாதவர்களுக்குத் தெரிந்த முகங்கள் இருந்தன. இனந்தெரியாத மயக்கம். தலைகீழாகச் சுருண்ட வானில் கிரகங்களின் நகர்வ. உயாத்தில் காமை
மகளில் ஓரி மழைக்காலத்தில் பாலங்களைக் கடந்து போன ரயிலில் அவனுடன்
யாரோ இருக்கிறார்கள். அவர்களிடையே பார்த்த அந்தப் பெண்ணுருவம் திரும்பவும் தோன்றி ஆழத்தில் மறைந்தபடி இருக்கிறது. உள்புறம் எப்படிப்பாராத கதகதப்பு. வேட்டையாடப்பட்ட மிருகங்களின் தோலால் ஆன சுவர்களில் அமமிருகங்களான சாயைகள். குகையின் உள் சுவர்கள் மிகமெல்லிய நீரால் அனவை. மீன்தொட்டிக்குள் இருக்கும் மென்மையான கனவுநிலை. ஒளி ஊடுருவும் ஸ்படிக நீரோடைகள் வயல் மீனின்கண் நீந்திவந்து அவனைக் கவ்விச்சென்று சுருள் நத்தையில் தோன்றும் நட்சத்திர நகரின் மையத்திலிருந்த நாததோட்டத்தில் அவனை மறைத்தது. நட்சத்திர நகரிலிருந்த மொசார்டின் இசை எண்கள் முளைத்து கற்பனைத் தாவரங்கள் பரவிக்கிடந்தன. யாருமில்லாத நட்சத்திர நகல் எல்லோருக்காகவும் சுற்றிக்கொண்டிருந்த மொசார்ட்டின் கறுப்பு இசைத்தட்டுகளல கடுனை மறைந்து மறைந்து வருகின்றன. நட்சத்திரங்களின் ஆபூர்வ நிறங்கள் மாறிமாறிச் சுமறும். மொசார்ட் செதுக்கப்பட்ட அவன் உருவம். மெல்லிய இசைக்கோடுகளில் எல்லாப்பாபன் உருக்கலும் வெகுவெளியில் நீந்துகிறார்கள் நிர்வாணமாய்; மரங்களின் சாயலில் அண்ணாந்த மோனத்தில் அசைகிறார்கள். நட்சத்திர நகரில் எல்லாருடைய சாயைகளும் இருக்கவேண்டும்.
அந்நகரின் மடிப்பு வீதியில் பாய்ந்து சென்ற சிங்கத்தின் மீது நிர்வாணமான ஓசே வீற்றிருந்தாள். நகரின் எல்லா நீர்க்கண்ணாடியிலும் ஓசேயின் ரூபம் வெட்டப்பட்டு தோன்றி மறையும். அவள் காணாமல் போன அதிர்வு நகரமெங்கும் வருகிறது. வெற்றிடத்தில் அவள் சாயை தெரிகிறது. நெருங்க, நெருங் மறைகிறது. அவள் தோற்றங்கள் மறைந்த காற்றுச்சுருள் குபுகுபுவென வெளிக்கிளம்பும். வெண்கூட்டுக்குள் அசையும் பிம்பங்கள். யாரென்று தெரியவில்லை. சாயைகள் பதிந்த கூடு. யார்யாருடைய குரல்களோ எவை எவற்றின் மௌனங்களோ நிலவும் அங்கு. காணாமல் போனவற்றையெல்லாம் கொண்டு செல்லும் வெண்ணிற கேலக்ஸி. விண்ணில் தடம் நீள்கிறது. அது சுற்றும் பாதை மெல்லிய கோடாக தொடுகிறது. )
கூடுகளை விட்டு வெளியேறியவர்கள் விட்டு சென்ற பிரக்ஞை படரும். எல்லோரது பிரக்ஞை வெளியே நத்தைக்கூடு. அவற்றுக்குள் எழுதிக்கொண்டிருக்கிறான் நத்தையின் உணர்கொம்புகளால் ஒட்டிக்கொள்கிற உணர்கொம்பில் ஸ்பரிசிக்கப்படாத உணர்வுகள் சுரக்கின்றன. 'நத்தையின் உடலில் சுரக்கும் தைலத்தால் எழுத நேர்ந்தது. துடிக்கும் உணர்கொம்பில் நிஜ உருவாக வரும் கோடு. கற்பனைக்கோடு உயிர்பெற்றுவிடும். தொற்றிவிரியும் ரேகையில் அழியாத நிறங்கள் வரும். நேரடி மரங்களின் மெல்லிய இலைக்கூட்டம் துல்லியமாக அசைந்துபரவும் கடல் சத்தம்; கரைந்து, கரைந்து கற்பனை இலைகள் படரும். தோல் வரைபடங்கள் அசைந்தசைந்து வெளிப்படுகின்றன. அவற்றை , உலவவிட்டு நகர்ந்துவரும் கேலக்ஸி. கற்பனை மிருகங்கள் புராணங்களில் அதீத சரித்திரத்தின் பழுத்த காகிதங்கள் உருமாறுகின்றன. நகரங்களின் கோடுகள், தெருவில் சர்வே படங்கள் வந்துவிடுகின்றன. சரியான தூரத்தில் எதிர்ப்பட்ட ஒருவன் எதிர்பாராத சந்தில் நுழகிறான். தப்பமுடியாத பாதைகளில் ஸ்ப்ரிங் காவலர்கள் எந்திரத்துப்பாக்கிகளால் அவனை விரட்டுகிறார்கள். 'விடுதிஜன்னல் திறந்து அமெச்சூர் நடிகையின் ரோஸ் பவுடர் முகம் தோன்றி சைகை செய்து தப்பிப்பதற்கான சூதுக்கட்டங்களை விளக்குகிறாள். உயரத்தில் பறந்த நட்சத்திர வரிசையைக் காட்டி தெரு அமைப்பைச் சுட்டுகிறாள். சுடப்பட்டு கண்ணாடிகள் உடையம் சடாரென்ற சப்தத்துடன் அவள் வீறிடல். விடுதி விளக்குகள் அணைகின்றன. ஏற்கனவே பெயர் மாற்றிச் சுடப்பட்ட அவன் உடல் பதனபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. எந்தப்பக்கம்
காலம் விசையின் கவனம். கைகளைத் தூக்கி அகப்படுகின்றான். அவன் பாஸ்போர்ட்டில் இருந்த சில் வைத்த புகைப்படத்தைக் கிழித்து மென்று தின்றவாறு தாடைகள்
கைய்யாக்கிக் கத்தியால் அவன் தாடைகளைப் பிரிக்க முடியாமல் கத்தி நறநறவென்று கோபிக்கிறது. பெயர் இல்லாத பூச்சியாக சிறைச்சுவர்களில் நகர்ந்து ஹன்னல் கம்பியைத் திருகித்திருகி ஒன்றை ஒடித்துக்கொண்டு தொப்புள் குழியில் குத்திக்கொண்டு கம்பியின் மறுமுனையை சுவரில் ஒட்டி அழுத்துகிறான். சாவதற்கு முன் தன் ரத்தப்பெருக்கில் நீந்திக்கொண்டிருக்கிறான். அகதியின் ரத்தத்தில் - கழுவப்பட்ட சிறைச்சாலையில் ஸ்பிரிங் காவலர்கள் கறுப்பு பூட்ஸ்களை நகர்த்தும் க்ரீரீரீச் ஒலி, சாவதற்கு முன்பிருந்த சிறிது மயக்கத்தில் இருந்த பிரக்ஞையில் அவன் யாரென்று தெரிந்துகொள் முயற்சிக்கிறான். மிஞ்சிய உயிர் அடையாளம் பார்க்கும் உஷார் கொண்டதென தன்னையே சந்தேகிக்கிறான். தன்னைத்தானே காட்டிக்கொடுக்கும் தன் கண்களையும் நம்பமுடியாமல் தற்கொலை விளையாட்டில் தன்னைத் தோற்கடிக்க விரும்புகிறான். தரையில் பரவிக்கிடக்கும் ஸ்பிரிங் சிப்பாய்கள் பனிரென்டுபேர்; மூன்று கம்யூனிஸ்ட் கமிஸர்கள்; இரு வேட்டை நாய்கள்; பெண் உருவிலான நீலப்புலி; அவனை மாய்த்துவிடுகிற விதியின் விளையாட்டுப் பலகை. இவ்வாறு அவன் தற்கொலை செய்துகொண்ட சதுரங்கக் கட்டங்களில் அவன் இரண்டாவது உடல். நகரத்தின் பீடத்திலிருக்கும் அவன் பதன உடலை எடுத்துவிட்டு இரண்டாவது உடலை வைப்பதற்கு ஆள்மாறாட்ட விளையாட்டுகளை அறிந்த காவல்துறை வேறொரு வீதியில் சிக்கிக்கொள்கிறது. கறுப்புத்துணி மூடப்பட்ட இருதலைகளை அடையாளம் கண்ட காவலன் 'ஒருவன் பைத்தியம் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறான். புதிரில் சிக்கிக்கொண்ட காவலன் சுடப்படுகிறான். தொடர்ந்து விசில். தன் இருபதன உடலுக்கு அடியில் பதுங்கியிருந்த அவன் தப்பித்துக்கொள்கிறான். அவன் யாரென்று அவனுக்கே தெரியவில்லை. தெரியாதவனாக இருந்து தன்னை யாரென்று தெரிந்து கொள்ள ஒவ்வொரு விநாடியிலும் மாறிக்கொண்டிருந்த கேலக்ஸியின் பிரக்ஞைவெளியில் எதை எதையோ பதிந்துவருகிறான். நூற்றாண்டின் சுழல்வட்டப்பாதையில் சிக்கி வேறுவேறு மனிதனாகப் பயணமாகிறான். ஒவ்வொரு திருப்பத்திலும் கைதுப்பாக்கி மாறிக்கொண்டிருந்தது. அவனை நேரில் காணுவதற்கு காத்திருக்கின்றார்கள். பைத்தியமாவதற்கு முன்பிருந்த கண்களின் வெறுமையுடன் அடைக்கலம் புக இடமின்றி பூட்டப்பட்ட அறைகளில் கதவு எண்கள் திருத்தப்படுகின்றன. காட்டிக் கொடுப்பவர்கள் துடைக்கப்பட்ட கண்ணாடிக்கோப்பைகளுடன் நெருங்குகின்றார்கள். மொசார்ட்டின் மந்திரப்புல்லாங்குழல் சுருதியேற, வறண்ட, மலையில் ஏறி, ஒரு லய மலரைப் பறித்து இறக்கும் விருத்தறையில் விஷக்கோப்பைகள் மதுக்கோப்பைகளுடன் இடம் மாறுகின்றன. உலோக விஷத்தின் தகடுகள் எரித்தபடி எழுத்தில் தகடு படுகிறது. கண்ணாடி கோப்பையில் ஒரு துளி ரத்தம் ஒட்டி லய மலராய்த் தோன்றி மறைகிறது. காட்டிக்கொடுப்பவர்கள் உதவியுடன் தப்பி ஓடுகிறான், நகரத்தின் வேகத்திற்கும். பைத்தியமாகிக்கொண்டிருந்த பாதைகள் வசீகரமாய் சுற்றிச்சுற்றி சுற்றுகின்றன அவனை. எல்லாத்தெருக்களிலும் ஓடித் தொலைந்து போகிறான். அந்நகரின் கல்வெட்டிலிருந்த வார்த்தைகளின் படி வந்து சேர்கிறான் நட்சத்திர நகருக்கு.
நத்தைக்கூடுகளின் வெற்றிடம் தேடி பசிக்கக்கூடியவன், வெற்றிடத்தின் பிரக்ஞை எழுதிக்கொண்டிருப்பதால் எழுதிக் கொண்டிருக்கிறான். கேலக்ஸியில் சுருண்டிருந்த நத்தை எங்கே போனதென்று தெரியவில்லை. நத்தையின் உருமாற்றத்தை அடைந்து விட்டிருந்தான். எழுதப்பட்ட முன்வழிகள் ஒடிந்து விழுந்தன. நத்தையான அவன் உணர்கொம்பில் பச்சை உயிரிகள் மர்மமாகத் தொட்டு ஸ்பரிசம் படாத இடங்களில் நகரும். தனக்குள் துளிர்விடும் நீர் இலைகள் ஏந்தி அதிர்கிறது. ஏகாந்தத்தில் பரவும் நீர்மரத்தின் மந்திர இசை சதா சலனமடைகிறது. அந்த நீர்மரத்தின் அனாதி துக்கத்தில் கலந்துவிடும் நத்தை. கனவுக்குள் நகர்கிறது வெண்ணிற கேலக்ஸி. எல்லா உயிரின் தோற்றத்திலும் இலை நரம்புகள் பிறக்கின்றன. இலை வீடுகளில் துயிலும் நத்தைகள் ஊதும் இசை யாரும் கேட்டறியாத பாதையில். அடிமாலி மலைகளுக்குள் உருண்டு சரிகிற விசில். வெண்ணிற ஓடுகளில் புகுந்த காற்று சுருண்டு சுழல்கிறது. கம்பியாய் மெலிந்த அவன் குரல் மொசார்ட்டின் ஓப்பராவில் சுருண்டு சுருண்டு கூவுகிறது. பெரும் சப்தத்திலான ஓப்பரா; மலைபெயர்ந்து பாறைகள் பறக்கும் வெளி. பாறைகள் சுழற்சியில் கரகரவென்று முதுமையடையும் ஓசை. விஷமூட்டப்பட்ட உலோகக்குரல் விசில் கற்றையாக மாறுகிறது; அது ஓசே..... அவள் உருவம் கரைந்து மிகச்சிறிய தம்பலப்பூச்சியாக மாறி வெகுதொலைவு பறந்து மறைகிறாள். எங்கும் இரவில் குழலில் நத்தையின் விசில். ஆயிரம் கூடுகளில் காற்று மர்மமான காலடிகளை வைத்து நகரும், காற்றுக்குமிழ்கள் உடைந்து ஆயிரம் தம்பலப்பூச்சிகள் தொடுவதற்காக வேண்டி குழந்தைகளிடம் பறந்து போகின்றன. சிறுமிகளின் ஒளிவீசும் காலடிகள் எங்கோ நகர்கின்றன. காடுகளின் ஏகோபித்த விசில்கற்றை சுழன்று ஒவ்வொரு இலைமூச்சிலும் கரைகிறது. மலைகளுக்கு மேல் விசில் பறக்கும். சூறாவளி சுழன்றடிக்கும். காணாமல் போன மலைமாடுகளின் தகரமணி எறிந்தவாறு பறக்கிறது. ஏரியம் ஜ்வாலைக்குள் செந்நிற நத்தைகள் ஊர்ந்து செல்கின்றன. பசும்பாறையில் ஒட்டி மல்லாந்தவாறு நட்சத்திரங்கள் திரள்வதைப் பார்க்கிறான். இருண்டு திரண்டு கிழிக்கிற வானிலிருந்து எரியும் பெண்பறவை தலைகீழாய் பூமியில் மோத மீண்டும் விசிறி எழுந்து சுழன்று பறக்கிறது நிறம் மாறிக்கொண்டே வரும் நட்சத்திரம் ஒன்றை நோக்கி இலைகள் சுருள்கின்றன. இலைச்சுருளில் தொங்கும் ஆயிரம் நத்தையோடுகளில் காற்றின் விதவிதமான பாதைகள். சப்தபேதங்களின் எணவரிசை ஏறி இறங்கும். இலையின் சாகரத்தில் கருஞ்சிவப்பாய் உருத்திரளும் நத்தைகள் சீறிப்பாய்கின்றன. அதில் துயிலும் ஜீவராசிகளின் இடைவிடாத முனகல். செந்நிறமான அயோதயத்தில் ஒட்டி நகரும் நத்தைக்கூடுகள் ஜீவகோடி ரகசியங்களின் பாதையை கடந்துகொண்டே வரக்கூடும்.எல்லைகளுக்கு அப்பால் மூங்கில் அசையும். இலைமறையில் மாடுகளின் பெருமூச்சு. கானகமெங்கும் இருட்டி மறைகிறான் சிறுவன். இசையின் பால்வெளியில் அவன் திரியக்கூடும். எல்லாம் மறைந்த வெற்றிடத்தில் அவன காண குழலன நுரைகொதிக்கும். ஏகாந்தத்தில் வளரும் மூங்கில் புதரினால் மாட்டுக்காரன் மறைகிறான். ஒவ்வொரு பச்சை உயிர் மீது மர்மமாகத்தொட்டு அசையும் காற்றில் சிறுவன் விரல்களன ஸ்பரிசம். தகரமணி எரித்தபடி பறக்கும் ஓசையை அவன் ஒரே மூச்செடுத்து வாசிக்ககூடும். அவன் குழலில் தோன்றும் ராட்சஸப்பறவையின் கால்பதிவுகள். காற்றின் கொக்கிகளில் இறங்கும் நத்தைகள் உணர்கொம்புகளில் அழியாச்சுடர் ஏந்தி கானகமெங்கும் தேடுகின்றன; மிருகத்தின் விரல்கள் பதிந்த மர்மமான கானக ஒளி.
வெளிர்நீல மரங்கள் பின்னிரவில் கரைந்து சிறுசிறு இலைகளும் நீலத்தில் வெளிர் அடைகின்றன. மொசார்ட்டின் வெண்நிறமான இசைக்கோப்பையில் அவன் விநோதமான விதியின் பலத்தைக் கற்பனை இலைகளாக்குகிறான் ஓசே. இசைக்கீற்று செங்குத்தாக தோன்றி எண்வரிசை வெளிர்நீல இலைவடிவத்தில் ஒலித்தது. இசையின் மந்திரத்தை உள்வாங்கிய மலைகள் நீலமாய் எழுந்து உயிரில் பற்றி எரிகின்றன. மந்திரப்புல்லாங்குழல் சரிந்து சரிந்து...... எங்கிருக்கிறாய் ஓசே... ஓசே..... நீ இருப்பது தெரியவில்லை .... ஓசே.... ஓசே... நீலத்தில் பறக்கும் நத்தைகள் கொம்புகளில் அழியாச்சுடர் ஏந்தி நீலஒளியாகி மலைகளில் உருண்டு சரிந்து செல்லும். பின் மலைகளே நத்தையின் குரலில் அழைத்தன. ஓசே.... ஓசே.. ஓசே... நத்தைகளின் கூடுகளை விட்டு வெளியேறிப்போன வெண்நிற யுவதி நீர்வீழ்ச்சியில் சரிந்து கொண்டே இருக்கிறாள். நீர் ஒளியில் யுவதி அலைகிறாள். அவளைக் கண்டபோது இறந்துவிட்டிருந்தாள். எதை எதையோ நீர் கொட்டிக்கொண்டே மறைகிறது. தலைகீழாய், தலைகீழாய் அவள் சென்ற கண்வெளியில் உருளும் நீர்பிம்பமாய் அசைகிறாள். திவலைக்குள் தொங்குகிறாள் தலைகீழாய். திவலைகள் உருண்டோடி கண்பரப்பில் கழுவப்பட்ட பச்சைத்தோட்டம்.
கற்பனை இசை விநோதங்கள் குவித்த காற்றின் சுருள்வாள் கொண்டு சூன்யத்தில் வெட்டிய சிலை உருவை பொஹீமிய அரசனான இரண்டாம் லியோபோல்குக்குப் பரிசளிக்கிறான் மொசார்ட் ஸ்படிகச்சிலையில் நத்தைகள் தத்தளிக்கின்றன. சுருள் நத்தையின் விசில் கற்றை சூறாவளியாகிறது. திடிரெனப் பறந்துவந்த கேலக்ஸியின் கூடுகளும் மூடித்திறந்த விரல்கள் அசைந்து எண்வரிசை உருத்திரள, மந்திரப்புல்லாங்குழல் தோன்றும். ஓசே... ஓசே..... எனும் காற்றின் சப்தம். அவள் உரு ஏந்திய மாயத்திவலைகள் சப்தத்திலிருந்து உருண்டுவர, நீர்த்திவலைகளின் கூட்டம் ஜூவலையாக எரிகின்றது. ஜூவாலையில் அசையும் வெண்நிற யுவதி, இல்லதாபோதும் இருந்துகொண்டிருக்கும் பிரக்ஞைவெளியில் யாருமில்லாத ஒரே ஒரு நத்தைக்கூடு; அதனுள்ளே ஸ்படிக ஒளியாக உருள்கிறாள். அவள் குரல் நரம்புகள் சுருண்டு, சுருண்டு மந்திரப்புல்லாங்குழலாக மாறுகின்றன. வெறும்கூடு பறக்கும் பாதையில் அவன் மெதுவாக கோடு வரைகிறான். கூட்டுக்குள் மடிக்கப்பட்ட வரைபடம் விரிந்து தோட்டமாகிறது. சிறு கத்திரி கொண்டு தோட்டத்தை எண்கோணமாக வெட்டிக்கொண்டிருக்கிறான் அவன். வரை படத்தின் பாதைகளில் ஸ்பிரிங் காவலர்கள் எந்திரத் துப்பாக்கியுடன். தோட்டத்தின் மையத்தில் சிறைவைக்கப்பட்ட அவள் மீது காவலரின் கண்கள் திரும்புகின்றன. இரு வேலையாட்கள் பொரிய பெரிய கத்தரி கொண்டு கற்பனைத் தாவர இலைகளை வெட்டும் ஒலி நகரமெங்கும் எதிரொலிக்கிறது. அவன் சிறுவனைப்போல வரைபடத்தை வெட்டி முடிக்கிறான். ஒரு, செடி அசைவிலும் சுட்டுவிடும் உஷார்நிலை. ஒரு டஜன் காவலர்களைத் தாண்டி சதுக்கத்தை அடைகிறது கேலக்ஸி. அவளை அணுகியபோது மிக மெலிந்து கரைந்து போன தம்பலம்பூச்சி அளவே இருந்தாள். திடீரென ஒசேயுடன் காற்றின் மெதுவான தடங்களைக் கடந்து வெளியேறினாள். கிறுகிறுகிறுகிறுவென தோட்டமே சற்றிச்கமல தோட்டத்தின் குறுக்குப்பாதையில் வெடியோசைக்கும் பின் தோட்டம் இருள்கிறது. மாயக்குமிழ்விடும் எல்லாத் துளைகளையும் மூடித்திறந்து பறந்து கொண்டிருந்தன தம்பலப்பூச்சிகள், ஆயிரம் நூல் கொண்டு அவன் உடலை இழுத்துச் செல்கிறார்கள் ஸ்பிரிங் காவலர்கள். விசில் கற்றைகள் சூறையாகி எரிகிறது கேலக்ஸி... -