தரிசனமற்ற ஓர் பயணத்தின் அழியும் சுவடுகள் -
வெங்கட் சாமிநாதன்
======================================
இக்காலத்திய இலக்கிய சூழலில், மற்ற சூழல்களைப் போன்று, நம் பார்வைகள் ஈடுபாடுகள் மேலோட்டமானவை யாகவே இருந்து வந்துள்ளன, வருகின்றன.
அவன் தான்
ன்னு
கதை பண்ணு கிறவன் இலக்கியாசிரியன்.
எழுத்தாளன். பாட்டும் செய்யுளும் எழுதித் தள்ளுபவன்-(இப்போது புதுக் கவிதையிலும் பாட்டும் செய்யுளும் படையெடுத்து ஆக்கிரமம் செய்து கொண்டுள்ளன) கவிஞன். வெறும் கைத்திறன், தொழில் திறன், கலை, "நல்லாருக்கு. நல்லால்லே" சொல்றது விமர்சனம், - இப்படி எதையும் கொச்சைப்படுத்தி, மலினப்படுத்தி வைத்துக் கொண்டால் தான் நமக்கு, நம் ஜீரண சக்திக்கு ஏற்றதாக இருக்கிறது. இது இன்றைய நேற்றைய வியாதி அல்ல. போன தலைமுறையைச் சேர்ந்த வியாதியல்ல. போன நூற்றாண்டைச் சேர்ந்த வியாதியல்ல. காலம் காலமாக, நூற்றாண்டு நூற்றாண்டுகளாக நம்மைப் பீடித்திருக்கும் ஒன்று இது.
ஓர் ஆழ்ந்த பார்வையில், உத்வேகத்தில் பிறந்த புதுக் கவிதை இயக்கத்துக்கும் கூட, மற்ற பல உத்வேகங்களுக்கும் பார்வைகளுக்கும் நேர்ந்தது போலவே, ஒரு கொச்சைப் படுத்துதல், மலினப் படுத்துதல் இன்று நேர்ந்துள்ளது. இன்றைய தொழில் திற சூழலில், வியாபாரச் சூழலில், பழைய கசடுகளே, புதுக்கவிதையின் உத்வேகம் தூக்கி
244
யெறிந்த பழைய கசடுகளே, புதுப் போர்வை போர்த்தி மீண்டும் உலாவத் தொடங்கியுள்ளன.
இதற்கு இரண்டு முகாம்களில் இருவேறு உதாரணங் களைக் காட்ட முடியும். புதுக் கவிதையை, ஒரு போராட்ட ஆயுதமாகப் பயன் படுத்துவதாகச் சொல்லிக் கோஷமிடும் பாட்டாளிக் கவிதைக்காரர்கள். ஆஹா, நாங்கள் அப்படி யெல்லாம் செய்ய மாட்டோம். நாங்கள் தூய இலக்கியவாதி களாக்கும். கவிஞர்களாக்கும்" என்று சொல்லி ஆகாயத்தை நோக்கி மூக்கை நிமிர்த்தும் "தூய இலக்கிய" முகாம். இரண்டு முகாம்களிலும், உத்வேகமோ, ஆழ்ந்த பார்வையோ சுய தரிசனமோ கிடையாது. இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் எள்ளி நகையாடிக் கொள்வார்கள். சபித்துக் கொள் வார்கள். ''உனக்கு ஏது இங்கு இடம்?" என்று ஜன்னலுக்கு வெளியே எறிவார்கள்.
இரு முகாம்களுமே ஜன்னலுக்கு வெளியே எறியப்பட்டுக் கிடப்பதை நான் உணர முடிகிறது. பார்க்க முடிகிறது.
66
'அன்று வேறு கிழமை” என்ற தொகுப்பு நம் பார்வை யில் படும் சந்தர்ப்பத்தில், இப்போது நம் கவனத்திற்கு வருவன ஞானக்கூத்தன் கவிதைகள். ஞானக்கூத்தன் நான் மேற்குறிப்பிட்ட இரண்டாம் முகாமைச் சேர்ந்தவர். அதன் ஞானகுரு. குரு பிரக்ஞையும், சிஷ்ய கோடிகளும் கூட உண்டு. ஆகவே குருவின் இடத்தைக் காட்டி விட்டால் சிஷ்யர்களின் இடம் பற்றிய கேஸ் ஃபைஸலாகி விடும்.
ஞானக்கூத்தன் எழுதியதென நான் முதலில் பார்க்கக் கிடைத்தது-"பிரசினை”
'திண்ணை இருட்டில் எவரோ கேட்டார் தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை
245
முதன் முதலாக இதை, இத்தகையதொரு குரலைக்கேட்க நேர்ந்தபோது, இதில் காணும் கிண்டலும், கோணல் பார்வையும் அன்றைக்குப் புதிதாகவும், நம் இலக்கியச் சூழலில் அவசியம் விழ வேண்டிய ஒரு குணமாகவும் எனக்குத் தோன்றின. இவ்வாறு நான் பார்த்த மற்றவை "ஒட்டகம்" "கொள்ளிடத்து முதலைகள்" 'நாய்'" "வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு" முதலியன.
இந்த முயற்சிகளுக்கு முன்னதாக, அவர், ம. பொ. சி. வாழ்த்துப் பாடிய (கவிஞர் கண்ட ம.பொ.சி) இன்னும் மற்ற யாப்பின் மரபொழுகிய கவிஞர். சம்பிரதாயமாக தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளிலேயே தான்
ஞானக்
கூத்தனும் தன்னைக் கவிஞராகக் கண்டவர். அப்பழமை அநுபவங்களை, ஈடுபாடுகளை உதறி எறிவதாக, மறப்பதே சிலாக்கியம் என நினைத்தவராக அன்று எனக்கு அவர் தெரியக் காட்டியதும், பின்னர் மேற் குறிப்பிட்ட கிண்டலும் கோணல் பார்வையும், ஞானக்கூத்தனிடமிருந்து நிறைய எதிர்பார்க்க லாம் என்று என்னை நினைக்க வைத்தன.
இவ்விரு குணங்களும் ஒரு புதிய திசையைச் சுட்டுவன. அதற்கு மேலும் வலுவூட்டுவது, பழைய முயற்சிகளை disown செய்த அன்றைய மனம்.
இதற்கு அடுத்தபடியாக, சுட்டிய புதிய
புதிய திசையில் செல்லும் பிரயாணமாக, நாம் எதிர்பார்ப்பது, இக் கிண்டலிலும், கோணல் பார்வையிலும் ஓர் ஆழமும், வாழ்க்கை நோக்கும். சுயதரிசனமும். இவைதான் ஞானக் கூத்தன் என்ற கிண்டல் கைவந்த மனிதரை, கோணல் பார்வையினரை, கவிஞனாகக் காட்டும். ஞானக்கூத்தனுக்கு என ஒரு தனித்வம் உண்டு, ஒரு தனி உலகம் உண்டு, என அவைதான் நிர்ணயிக்கும்.
ஆனால் அவ்வெதிர்பார்ப்பு கைகூடவில்லை. தானே தனது சிறந்த கவிதைகள் எனத் தேர்ந்து எடுத்து, பெருமையும்
246
கர்வமும் கொள்ளத்தக்க அளவில் ஒரு புத்தகத் தயாரிப்பாக வெளிக் கொணர்ந்திருக்கும் "அன்று வேறு கிழமை" தொகுப்பில், அவ்வெதிர்பார்ப்பு கைகூடவில்லை.
.
ஞானக்
கூத்தன் இம் மூன்றாண்டு காலத்தில் நிறையவே எழுதி யிருக்கிறார். அவ்வளவையும்
அவ்வளவையும் வைத்துக்
வைத்துக் கணிப்பதைவிட, அவரே தனது சிறந்தது எனக் கழித்துக் கட்டி, சலித்து எடுத்து அளித்துள்ளவைகளை வைத்துப் பார்க்கும்போது கூட, ஒரு கிச்சுக் கிச்சு மூட்டுவது, ஒரு சிரிப்பை உதிர்ப்பது, என்பதற்கு மேற்கொண்டு ஆழமாக, விசேஷமாக என்று சொல்ல ஞானக்கூத்தன் ஒரு கவிஞன் என்று சொல்ல இவ் வைம்பது ? என்ன வென்று சொல்வது, பாடல் என்றா, செய்யுள் என்றா, விடுகதை என்றா, சாமர்த்தியமான விகடத் துணுக்கு என்றா, வெறும் statement என்றா, (''எனக்கும் தமிழ் தான் மூச்சு...சமூகம் கெட்டுப் போய் லிட்டதாடா... உனக் கென்ன தோன்றுது? சூளைச் செங்கல் குவியலிலே இத்யாதி) என்ன என்று இவற்றை அழைப்பது?-“கவிதை’`களிலும் (இப்
—
..
போதைய சௌகரியத்திற்கு), சாட்சியம் இல்லை. இக் கிண்டலையும், கோணல் பார்வையையும், நம் வாழ்க்கை விசித்திரங்களை நம் கோணல்களை நமக்குக் காட்டும் கருவிகளாக நாம் கொண்டால், அவ்வளவில், ஓர் இடித் துக் காட்டும், பரிகசிக்கும் எல்லை வரையறைக்குள் செயல்படுபவை. "பரிசில் வாழ்க்கை" "ஸ்ரீலஸ்ரீ,” "தோழர் மோசி கீரனார்” "எதிரெதிர் உலகங்கள்" "கீழ் வெண்மணி" அம்மாவின் பொய்கள்' உள் உலகங்கள்' ஆகியவை. ஆனால் இவையெல்லாம் ஒரு superficial level-ல் செயல்படுபவை. என். எஸ். கிருஷ்ணன். 'கிந்தனார்' காலட் சேபம் செய்தது போல, சோ, தன் "நாடகங்கள்" எனப்படு வனவற்றில் செய்தது போல, வேறு சில எலக்ஷன் பேச் சாளர்கள் தேர்தல் காலத்தில் மேடைப் பேச்சுக்களில் இயங்குவது
ஞானக் கூத்தன் தன்னுடைய பாக் களின் மூலம் செயல்பட்டுள்ளார். (வேறு துறையிலிருந்து ஓர் உதாரணம் இங்கு அளிப்பது தெளிவை அளிக்கும். ஞானக்
போல,
247
கூத்தன் பெரும்பாலும் Jerry Lewis போல ஒரு கோணங்கி யாகவும், சிற்சில சமயங்களில் N. S. கிருஷ்ணன் போன்று, ஒரு சமூக உணர்வுடனும் செயல்பட்டுள்ளாரே தவிர, சார்லி சாப்ளினைப் போன்று ஒரு கலைஞனாக செயல்படுவது அவருக்கு இயலாததாகவே ஆகிவிட்டது.) இதற்கு மேல், இவற்றிற்கு கவிதைகள் என முக்கியத்வம் ஏதும் இல்லை. ஏனெனில், இவற்றை இயற்றிய ஞானக்கூத்தனிடம் ஏதும் vision இருப்பதாக இவற்றிலிருந்து தெரியவில்லை. சாட்சியம் இல்லை. இவற்றைப் படித்த பிறகு, "அப்படியா, சந்தோஷம்" (கைதட்டல்) அவ்வளவே. அதற்கு மேல்? திரும்பப் படிப்ப தற்கோ, படித்தவற்றைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கோ, அவற்றில் ஏதும் இல்லை. இவை ஒரு consumer product. ஒரு சமயத்திய தேவைக்காக எழுதப்பட்டவை. படிக்கும் மனத்தில் ஓர் அதிர்வை எழுப்பும் சக்தி அற்றவை.
ப
இந்த consumer products என்பவை, தயாரிப்பாளரின் பார்வையை, வாழ்க்கை நோக்கை, சுயதரிசனத்தை, தனித்வத்தைப் பொறுத்தவை அல்ல. இவையெல்லாம் கவிஞனிடம் எதிர்பார்க்கப்பட வேண்டியவை. Consumer- products தேவையை நோக்கி அவற்றின் காரணமாக எழுபவை. இவ்வாறு தயாரிக்கப் பட்டவை எல்லாம் ஒரு தனித்துவத்தைக் காட்டவேண்டும் என்ற நிர்ப்பந்தமே கிடையாது. ஆகவே இந்நிலையில், நிர்ப்பந்தமின்மை, தேவையை நோக்கிய தயாரிப்பு, எல்லாம் ஒரு அபாயகரமான எல்லைக்கு, பொறுப்பின்மை வழியே, ஒரு தயாரிப்பாளரை இட்டுக் செல்லக்கூடும். ஞானக்கூத்தனை அவை இட்டுச் சென்றிருக்கின்றன. இவ்வபாயகரமான எல்லைக்கு ஞானக் கூத்தன் செல்லும் பாதையின் பல்வேறு நிலைகளை இத் தொகுப்பில் பார்க்கலாம்.
.
இதுவரை நாம் பார்த்தவை ஏதோ ஒரு சில குணங் களாவது கொண்டவை. ஆழமாக எதையும், கவிஞனின் தனித்வம் என, சுயதரிசனம் என ஏதும் அவை சொல்லா விட்டாலும் கூட.
248
ஒன்றுமே சொல்லாமல், வெறும் statement ஆக observa- tion ஆக, (அவற்றில் விசேஷார்த்தம் என்பதை அறியா மலோ, சொல்லத் தெரியாமலோ,) சொல்லி, இவை கவிதைகள் என முன் வைக்கப்பட்டவை சில; 'தலையணை ' 'யோசனை' 'சைக்கிள் கமலம்' 'பவழமல்லி' 'உயர்திரு பாரதியார்' 'விட்டுப்போன நரி,'நாள்' 'அன்று வேறு கிழமை' 'நேற்று யாரும் வரவில்லை' 'பட்டிப்பூ' 'உள்ளோட்டம் 'நாயகம்' 'உதை வாங்கி அழும் குழந்தைக்கு' 'முந்திரிக் கொல்லை' என இன்னும் பல தலைப்பிடாதவையும் இவற் றுடன் சேரும்.
"அன்று வேறு கிழமை"யின் அர்த்தம் என்ன என்பது இன்னமும் யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியம். எனக்கு ஒன்று தோன்றுகிறது; ஞானக்கூத்தனுக்கு பல விஷயங்களில் குழப்பம் அதிகம், Expression of obscurity என்பதற்கு கவிதையில், இலக்கியத்தில, கலையில் இடமுண்டு; ambiguityக்கு இடம் உண்டு. தனக்கு ஏதோ சொல்ல இருப்பதாகவும் அதைத் தன் "கவிதை'யில் சொல்லாமல் விட்டுவிடுவது (சொல்ல ஏதும் இருந்தால்) obscurity யோ ambiguity யோ ஆகாது. Vacuity என்பது suggestion ஆகாது என்ற விஷயம் ஞானக்கூத்தனுக்குத் தெளிவாக வில்லை. Withholding information, lack of expression இவையெல்லாம் suggestion-னோ obscurity-யோ ஆகாது என்பது அவருக்குத் தெரியவில்லை. இத்தெளிவின்மை, அவருக்கென ஒரு vision இல்லாது தனக்குத் கைவந்த ஒரு பா இயற்றும் திறனை, கிண்டலை, கைத்திறனாக, வியாபாரச் சூழ் நிலையில் பயன்படுத்த முனைந்து விட்ட துதான்.
.
"சூளைச் செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது”
என்பதில் வெறும் observation தான் உள்ளது. இந்த observation யாருக்கும் செங்கற்சூளைச் சித்தாளுக்கும்கூட, வாய்க்கும் observation தான். ஆனால் ஒரு கவிஞன் இதில்
249
எத்தனையோ பார்த்திருக்க வேண்டும். உயிரற்ற ஜடப் பொருட் கூட்டத்திலே, ஒரு ஜடம் திடீர் என உயிர் கொண்டு இயங்கத் தொடங்கிவிட்டது போன்ற தோற்றம் தரும் ஒரு காட்சி; இல்லை, ஜடமாகிவிட, தனது உயிர்ப்பை இழந்து' விட்ட கூட்டத்திலிருந்து அந்நியனாகி, தனது தனித்வத்தை நிலைநாட்டக் கிளம்பி விட்ட ஒரு தனி மனிதன். "இந்தச் சூட்டில் எவன் இருப்பான்" எனக் குதித்தோடுவது போன்ற ஒரு பிரமை. ஆக எத்தனையோ இதில் காண எனக்குத் தோன்றுகிறது. இவை அனைத்தையும் நான் காண்பவை. ஞானக்கூத்தன் காட்டியவை அல்ல. அவருக்குத் தெரிந்தது, சொன்னதை நீங்களும் நானும் பார்த்திருக்கும், ஒரு காட்சி விவரத் துணுக்கு. அவ்வளவே, ஏன்? அவரிடம் vision இல்லை.
இந்த vision இல்லாமைதான் ஆரம்பத்தில் கண்ட distorted perspectives க்கு ஆழம் இல்லாமல் செய்துவிட்டது, கிண்டலில் விசேஷமான பார்வை இல்லாமல் செய்து விட்டது. விவரம் அறியாது, தேவை தெரியாது, பழைய யாப்புடனும் சந்தத்துடனும், இன்னமும் ஒதுக்க முடியாத உறவை நீடிக்கச் செய்துள்ளது. (இதற்கு நிறைய உதார ணங்கள் கொடுக்கலாம். தேவை இல்லாத இடத்தில் அர்த்த பங்கம் நேரிடும் இடங்களில் கூட ஒற்றுகள் வந்து வீழுகின்றன. அர்த்தத்தைவிட, சொல்லின் வெளிப்பாட்டின் வேகத்தைவிட, யாப்புக்கு முக்கியத்வம் கொடுத்தால், சில நல்ல potential images கூட, வெறும் சக்கையான அலங்கார உவமைகளாக சீரழிந்து விடுகின்றன. ஒருவித உணர்ச்சிப் பாங்கான, காட்சி பூர்வமான தேவையில்லாமலேயே வெறும் அலங்காரங்களாக, உவமைகள் உபயோகப்பட்டுள்ளது... இத் யாதி எல்லாம் பழமையின் கசடுகள்) அதற்கு
அடுத்து
எத்தகைய significant meaning ம் இல்லாமல், உப்பு சப்பு அற்ற மேலோட்ட விவரங்களே செய்யுள்களாக இயற்றப் பட்டுள்ளன. இவற்றின் பா உருவமே, இங்கு கவிதை என்ற பிரமையில் ஞானக்கூத்தனை ஆழ்த்தியுள்ளது.
250
இதற்கு அடுத்தபடி, அபாய வெளியின் ஆரம்பம்.
கேலி ஒரு consumer product ன் கவர்ச்சி அம்சமாகவே, கேலி செய்பவனுக்கு எதையும் எப்படியும் சொல்லலாம், தனக்கென வாழ்க்கை மதிப்புகள் தேவை இல்லை (vision தான் இல்லையே) என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது.
"மஹ்ஹான் காந்தி மஹ்ஹானி"-ல் யாரைக் கிண்டல் செய்கிறார்? "உயர்திரு பாரதியாரில்" அவர் பார்வை என்ன? நாம் நினைத்துக் கொள்ளலாம் காந்தியை அல்ல. பாரதியை அல்ல என. ஆனால் ஞானக்கூத்தனின் எழுத்தில் அந்நினைப்பு களுக்கு நிச்சய ஆதாரம் கிடையாது. இதன் அடுத்தபடிதான் "தூக்கம் வரைக்கும் யாவரும் சித்தர்".. ம், "உங்கள் எதிரே நான் வரும்போது..."ம்.
அதற்கும் அடுத்தபடி, ஒரு பொறுப்பின்மை வளர்கிறது. சமூகத்தில் தானும் ஓர் அங்கம், சமூகம் தன்னிடம் கோரும் உரிமைகள் அதற்கு உண்டு. சமூகத்திடம் தான் ஆற்ற வேண்டிய கடமை உண்டு என்ற நினைப்பின்மை, “நான் வேலை செய்ய மாட்டேன்" என்ற சித்தாந்தம்.
சித்தாந்தம். "முகக் கண்கள் அழுதால் கண்ணீர்'-லும் 'விடுமுறை தரும் பூதம்" - மிலும் வேலையைக் கண்டு வெறுத்து ஓடும் அவர், ஒரு anti-social attitude-ஐ கைக்கொள்கிறார். தான் செய்யும் ஒரு குறிப்பிட்ட வேலையில் தனக்கு பிடித்தமில்லை, தனக்கு தன் திறனுக்கு ஏலாத வேலையில் தனக்கு பிடித்தமில்லை. தான் கவிஞன் அதனால் இவ்வேலை ஒரு பளு. தன் மன திற இயல்புக்கு மாறான குணமுடையது என்று ஏதும் சொல்லி விடலாம். வேலை மீதே வெறுப்பு. அவ்வளவே. இது vision இல்லாததன் காரணமாக எழுந்துள்ள, அபாயகரமான மனநிலை. எவ்வித நியாய பூர்வ மான காரணங்களும் இல்லாமலேயே, வேலை என்பதே தனக்கு வெறுப்பானது என்று சொல்வது ஒரு anti-social attitude.
இதற்கு அடுத்த அபாயகரமான விளைவை, "தொழு நோயாளிகள்"-ல் பார்க்க நேரிடும் துர்பாக்கியம்,
251
இது மிக அடிப்படையான விஷயம்.
விஷயம். கவிதையிலா கட்டும், எதுவுமே ஆகட்டும், அதன் முதலும் முடிவுமான், உட்கிடையான, நாதமான-இப்படி எந்த விதமாக சொல்லிப் பார்த்தாலும், அது மனிதபிமானமாகத்தான் இருக்கும். இருக்க முடிவது சாத்யம். இதை மீறி, இதற்கு எதிரான, கலை, இலக்கியம், கவிதை ஏதும் இருப்பதிற்கில்லை. ஆகவே, இலக்கியத்தில் எழுதா மரபு ஒன்று உண்டு மனிதனுக்கு,
ஏன், எந்த ஜீவனுக்கும்-இயற்கை செய்துள்ள கொடுமைகளுக் காக எள்ளி நகையாடாதிருப்பது.
குருடுகள் காலூனங்கள்
பித்துக்கள் பிறக்கும்போதே
வேலையைத் தவிர்க்கும் மார்க்கம்
தெரிந்ததால் பிழைத்துக் கொண்டார்.
நானொரு குருடனாக
நானொரு முடவனாக
நானொரு பித்தனாக
பிறக்காமல் போய்விட்டேனே."
என்று ஆரம்பித்த எள்ளல், பாவம் தொழு நோயாளிகளையும் விட்டு வைக்கவில்லை! இவையெல்லாம், vision அற்ற ஓர் மனிதன், தன் பரிகாசத்திலும் நகையாடலிலும், புகழையும் வெற்றியையும் கண்டு விட்டால், பொதுஜனக் கவர்ச்சியும் அம்மனிதனுக்குக் கிடைத்து விட்டால், அது, anti-social ஆக உருவெடுத்து anti-human ஆகக்கூட வளர்ச்சி பெற்று விடுகிறது என்ற அபாயத்தைச் சுட்டுகின்றன.
இவை எல்லாம் என் எதிர்பார்ப்பில், அன்றைய முன் சொன்ன எதிர்பார்ப்பில் இல்லை. vision இல்லாதவர்கள் கையில் சிக்கிய சாதனங்கள், நம் இலக்கிய சூழலில் இத்தகைய விளைவுகளைத்தான் ஏற்படுத்த முடியும்.
ஆனால் கடைசியில் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. கவிதை என அச்சிடப்பட்டவை பெரும்பாலானவற்றை
252
ஒதுக்கி விடுவோம். ("போராட்டம்" எனக்குப் பிடித்த ஒன்று.)
இம்முயற்சி, புத்தகத் தயாரிப்பு, சைத்ரிகர்களின் ஒத்து ழைப்பு, அவர்களது ஒத்துழைப்பும் வேண்டும் என்று விஷயம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டுள்ள மதிப்பு, இலக்கிய சங்கம், அவர்கள் கவிஞன் எனக் கண்ட ஒருவரை கௌரவித்த வகை எல்லாப் பாராட்டுக் குரியவனவாகும்.
ஏ
இப்புத்தகத்தின் மிகச் சிறப்பான அம்சம், இதில் நிறைய நல்ல வரை படங்கள் உள்ளன. அவற்றுடன் நமக்கு ஏற்படும் பரிச்சயம், அப்பரிச்சயத்தினால் அழியும், அந்நியப்படும் மனப் போக்கு, நம்மை பல புதிய அநுபவங்களுக்கு, புதிய உலகங் களுக்கு எதிர்காலத்தில் இட்டுச் செல்லும். கவிதைகள் என அச்சிடப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான வற்றை நாம் மறந்து விடலாம். இப்புத்தகத்திற்கு ஏற்படும் மதிப்பு கவிதைகளால் அல்ல, வரை படங்களால்.
Sunday, November 02, 2025
தளத்தைப் பற்றி
ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com