http://www.subamangala.in/archives/199303/files/mobile/26.jpg
... http://www.subamangala.in/archives/199303/files/mobile/34.jpg
... http://www.subamangala.in/archives/199303/files/mobile/34.jpg
அம்மா ஏன் இப்படி ...? - விக்ரமாதித்யன்
நெடுங்கதை
சத்தியமாய் இது மனநோய் தான்; மனநோயில்லாமல் வேறென்னவாம்; ஒருவிதமான மனநோய்; அம்மாவுக்கு மனநோய்தான். பக்கத்தில் இருக்கிற பெண்களையெல்லாம் தேவடியாளென்று சொல்வது என்னவாக இருக்கும். அம்மா பாவம் தான்,
அம்மா இந்த மாதிரியே இல்லை; அவள் ரொம்ப நல்ல மனுஷி; இயல்பும் எளிமையுமாய் இருந்தவள்; யாரையும் எதையும் பரமாகப் பார்ப்பவள்; விகற்பமாக நினைக்கத் தெரியாது. வித்தியாசமாகப் பேசத் தோன்றாது அவளுக்கு. எந்தக் காலத்தில் தப்பாக நினைத்தாள் அவள்?
திருநெல்வேலியில் வளவுசேர்ந்த வீட்டில்தானே இருந்தது; எல்லோரிடமும் அக்கா, மதினி, சித்தி என்றுதானே பழகினாள்; யார் கூட வாவது சண்டை போட்டதுண்டா; யாரோடேயாவது மனத்தாங்கல் வந்ததுண்டா; எத்தனை வருஷமாய் ஒரே அளவில் சூரியநாராயண பிள்ளை வளவில் இருந்தபோது செட்டிப் பிள்ளைமார் தெருவில் இருந்து போது, கீழத்தெருவில் குடியிருந்தபோது எந்த இடத்திலாவது முணும் கென்று சொல்லியிருப்பாளா.
இப்போதுதான் இப்படி ஆகி விட்டாள்; எல்லாம் அப்பாவா தான். கமலா சித்தி வைத்த தீ இது எவ்வளவு வெள்ளந்தியாய் இருந்தாள் அம்மா; இப்படி கிறுக்கசயாகி விட்டாளே!
இவர்கள் எல்லோரும் மெட்ராஸில். இருந்தார்கள்.
அப்பாவும் கமலா சித்தியும் கொஞ்சகால சினிஃபீல்டில் எக்ஸ்ட்ராவாக இருந்து பார்த்துவிட்டு ஒன்றும் சரி படவில்லையென்று குற்றாலத்துக்கு வந்து விட்டார்கள். வந்து இரு இடத்தில் வரிசையாய் மூணு பிள்ளைகாளை அம்மை போட்டுத் தூக்கி கொடுத்துவிட்டாள். "நீங்க அக்கா. கூடவே போய் இருங்க... எனக் பயமாக இருக்கு... நானும் என் பிள்ளைகளும் ஊருக்கே போயிருந்தோம்"
அப்பாவுக்கு விடமுடியவில்லை . எல்லாம் காலியாகி கமலா சித்தி தளவாய் முதலியார் மகனோடு ஓடிப் போன பிறகுதான், மனசு வெறுத்து அம்மாவைத் தேடி வந்தார்கள். ராமலிங்கம்பிள்ளை பெரியப்பாவும் பாம்பேயில் சரக்கு எடுத்து கிட்டு வரும் வழியில் வந்து சொன்னார்கள், "அவன் திருந்திட்டாம்மா. வேற யார் இருக்கா அவனுக்குப் பொம்பளை பிள்ளைய வச்சிட்டு தனியா இருக்க வேண்டாம்மா. நாளைக்கு அந்த பிள்ளைக்கு ஒரு நல்ல இடமா பாத்துக் கட்டி குடுக்கவாவது அவன் இருக்கட்டும்மா. இனிமே ஒழுங்கா வீடு குடும்பம்னு இருப்பான். என்கிட்ட வந்து சொன்னான். 'அண்ணன், நீ வந்து சொலுண்ணேன்' என்கிறான். திரும்பவும் என்னவும் பண்ணினான்னா ஜன்மத்துக்கும் நடையேத்தாதே."
அக்காவுக்காகத்தான் அம்மா வைராக்யமாக இருக்க முடியாமல் போயிருக்கும். மெட்ராஸில் இருந்து கொண்டு என்ன செய்ய. ஊர்ப்பக்கம் போனால்தான் மாப்பிள்ளை பார்க்க முடியும். எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணி விட்டாள்; கல்லூரியில் சேர்த்துவிட வசதியில்லையென்று சும்மாதான் இருந்தாள்.
அப்பா காவலன்கோட்டை ஐமீன் செகரட்டரியாகச் சேர்ந்திருந்தார்கள். ராமலிங்கம் பிள்ளை பெரியப்பாவிடம்தான் இரண்டாயிரம் ரூபாய் கடன்வாங்கி, பழைய மாம்பலம் வீட்டு வாடகை பாக்கியைக் கொடுத்து, நாடார் கடைக்குக் கொடுக்க வேண்டியதை கொடுத்து, புடவைக்காரருக்கும் பணம் கொடுத்துவிட்டு, ரயில் செலவுக்கும் வைத்துக் கொண்டது. இவன் படிப்புக்காகவும், தம்பிகள் படிப்புக்காகவும், வீடு வசதிக்காகவும் வாசுதேவநல்லூரிலேயே இருந்து கொண்டார்கள். அப்பா சைக்கிளில் போய் வந்தார்கள். காலையில் போனால் ராத்திரி எட்டு மணியாகிவிடும் திரும்ப. குத்தகை வசூலிப்பது, பஞ்சாயத்து கணக்கு என்று எதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். - இவன் பத்து படித்துக் கொண் டிருந்தான். பெரிய தம்பிக்கு பிரை.வேட்டாக டியூஷன் வைத்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அடுத்த வருஷம்தான் ஆறாவதில் சேர்த்துவிட வேண்டும். காவலன் கோட்டை பஞ்சாயத்து ஸ்கூலில் அஞ்சு பாஸ் பண்ணியதாக சர்டிஃபிகேட் வாங்கிக் கொள்ளலாம். சின்னவன் நாலு போய்க் கொண்டிருந்தான். அக்கா தையல் கிளாஸில் சேர்ந்திருந்தாள். எல்லாம் நல்லபடி போய்க் கொண்டிருந்தது. ரொம்ப காலத்துக்குப் பிறகு இவர்கள் எல்லோரும் ஒன்றாய் சேர்ந்திருந்தார்கள். சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லை. எந்த கஷ்டமும் இல்லை.
முதன்முதலில் இந்த ஊருக்கு வந்ததும் முல்லைவனம் அழகப்பன் பிள்ளை வளவில்தான் குடியேறியது. அந்த மாமா, அப்பா வழியில் தூரத்துச் சொந்தம். மாமா சங்கராபுரம் கணக்குப்பிள்ளையாக இருந்தார்கள். கொஞ்சம் புஞ்சைக்காடு உண்டு; சாப்பாட்டுக்குப் போதும். மேல் செலவுக்குச் சம்பளம் வந்து விடும். சொந்த வீடு. வளவில் மூன்று வீடுகள். மாமா வீடு கழக கடைசியில், மத்தியில் லோகநாயகி அத்தை வீடு. கிழக்கு பார்த்தது இவர்களது. தெற்கு மூலையில் ஒரு குச்சு கிடந்தது. அதுதான் மாமாவுக்குக் கணக்கு எழுதக் காம் மாமாவுக்கும் அப்பாவுக்கும் நல்ல பழக்கம். அப்பா வீடு பார்த்து கொண்டிருந்தார்கள். மாமாவை பார்க்க வரப் போக இருக்கை வீடு காலியாக இருந்தது தெரிந்து அப்பா வீட்டு விஷயத்தை பிரஸ்தாபித்ததும் சாவி கொடுத்து விட்டார்கள்.
லோகநாயகி அத்தைப்பற்றி ஊர்பூரா தெரியும். மாமாதான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணன் பொண்டாட்டி. அண்ணன் மண்டையைப் போட்டு விட்டார். அதுக்குப் பிறகுதான் இந்த இடைபாடா... முந்தியேவா என்று தெரியாது. இந்த விஷயத்திலெல்லாம் எப்படி சொல்ல முடியும். அத்தைக்கு முதல் இரண்டும் பெண்கள். அடுத்தது ராமு. இவன்கூடத்தான் படித்துக் கொண்டிருந்தான். கடைக் குட்டி செம்பாவுக்கு ஏழு வயசு இருக்கும். எப்படியோ அந்த மாதிரியாகி விட்டது. அண்ணன் குடும்பத்தைப் பராமரிக்கப் போய் லோகா அத்தையை வைத்துக்கொள்ளும்படி ஆயிற்று. அல்லது லோகா அத்தையை வைத்துக்கொண்டதால் அந்தக் குடும்பத்தைக் கவனிக்கும்படி இருந்தது. மாமாதான் சின்ன அத்தை குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.
பிள்ளைகள் எல்லாரும் வெடியாஞ் சுட்டிகள். பெரியவள் பக்கத்து ஊரிலுள்ள மகளிர் கல்லூரி விடுதியில் எழுத்தர். அந்த மதினி நல்ல அழகு. அப்போதே ஆண் சிநேகம். கல்யாணத்துக்குப் பிறகும் விட முடியாமல் விவாகரத்து வரை ஆனது. நடுவுள்ளவள் பற்றியும் தப்பாகப் பேச்சு அடிபட்டது. மைனர் செயின் போட்ட உள்ளூர் ஆர்.ஐ. சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருந்தான். பிறகு மிலிட்டரிக்காரனுக்கு கல்யாணமாகி கூட்டிக்கொண்டு போய் விட்டான். ராமு ராஜபாளையம் திருநெல்வேலி போய் புது சினிமா பார்த்து விட்டு வருவான். சின்னவள் வளர்ந்து பெரிய மனுஷியான பிற்பாடு இவனுக்குக் கூடப் பேசினார்கள். அம்மாதான் வேண்டாமென்று சொல்லி விட்டாள்.
மாமா குடும்பம் கீழ் வீட்டில் பிள்ளைகள், இருந்தது. இரண்டே மூத்தது பெண். சுமாராக இருப்பாள். அடிக்கடி ஹிஸ்டீரியா மாதிரி வரும். சின்னவன் சுபாவி. ஏன் இப்படி என்று தெரியவில்லை. அந்த அத்தை ரொம்ப நல்ல மாதிரி. அமைதியான குணம். எல்லாவற்றி லிருந்தும் ஒதுங்கியே இருந்தாள். மாமாவிடமிருந்தும். மாமாவுக்குச் சின்ன அத்தை வீட்டில்தான் சாப்பாடெல்லாம். அத்தை வீட்டுக்கு எல்லாம் வாங்கிப்போட்டு விடுவார்கள். அத்தைக்கும் மாமாவுக்கும் பேச்சுக் கிடையாது. - வீட்டுக்கு ஏதாவது வேணுமென்றால் அத்தை சின்னவனிடம்தான் சொல்லி விடுவாள், அம்மைக்குப் பெரிய அத் தையைத்தான் பிடிக்கும். அந்திக்குப் பிறகு வீட்டுக் காரியங்களை முடித்து விட்டு இருக்கிற நேரத்தில் அந்த அத்தை வீட்டுத் திண்ணையில் இருந்து பேசிக் கொண்டிருப்பாள்.
சின்ன அத்தை தப்பானவளாக இருக்கலாம். ஆனால், அன்பான மனுஷி. தப்பான பெண்கள் எல்லோருமே பிரியமானவர்களாகத் தான் இருப்பார்கள் போல. பிரியமாக இருப்பதுதான் தப்புப் போல. கீரைக்காரி வந்தால் கூப்பிட்டுச் சொல்வாள். கோலப்பொடி தெருவில் போனால் வேணுமா என்று விசாரித்து விட்டுப் போவாள். காய்கறி வண்டி வரும்போது மெனக்கெட்டுச் சொல்லி விட்டுப் போவாள். அரிசிக்காரி வரட்டும், சீனிக் கிழங்கு வரட்டும், உப்பு வண்டி வரட்டும், எது ஒண்ணு என்றாலும் கேட்காமல் இருக்க மாட்டாள். ஆரம்பத்தில்தான் இப்படி. போகப் போகத்தான் வீடு தேடி வருவது அம்மைக்குப் பிடிக்கவில்லையென்று தெரிந்து ஒதுங்கியிருந்து கொண் டாள்.
இவ்வளவு தாராள மனசுக்காரி கொழுந்தனிடம் ஒப்புக்கொடுத்ததில் பிழைசொல்லி என்ன பிரயோஜனம்? ஆனால், உலகம் ஒத்துக் கொள்ளுமா? பழி சொல்லியது. பாவம் பாராட்டியது. அத்தைக்கு மட்டும் குற்ற உணர்வு இல்லாமலிருக்குமா என்ன... எல்லாம் விதி!
அத்தை நடத்தை கெட்டவளாகவே இருக்கட்டும்... தீபாவளியன்று விடியற்காலையிலேயே பலகாரம் கொண்டு வருகிற மனசு? ஏன் எடுத்துக் கொண்டு வரவேண்டும். விடிய விடிய விழித்திருந்து எண்ணெய்ச் சட்டிமுன் இருந்து சுட்டு முதலில் இவர்களுக்குக் கொடுக்கத் தோன்று கிறதே!
அப்பாவை அத்தை அண்ணாச்சி என்றுதான் கூப்பிட்டாள், அப்படித்தான் பாவித்தாள். அது போல ஒரு அண்ணனை அவள் வாழ்க்கையில் பார்த்திருக்க மாட்டாள்; அதுதான் பாசம். இதெல்லாம் அம்மாவுக்குப் புரியவில்லை ; விகற்பம் கற்பித்துப் பேசினாள்.
அத்தைக்கு என்ன வயசு? 47 என்ன உடம்பு? வாழ்க்கையில் அடி பட்டு நைந்து இற்றுப் போய் விட்டாள். படுக்கத் தோன்றுமா யாருக்கும்? அம்மா விசித்திரமா. கற்பனை செய்து கொள்கிறாள். அத்தை பாவம்... எப்போதோ பண்ணிய பாவத்துக்கு இப்போது பழி சுமக்கிறாள்!
அத்தை இவனிடம் அன்பாக இருந்தாள்; அக்காவிடம் எவ்வளவு பிரியம் காட்டினாள்! தம்பிகளைத் தன் பிள்ளைகள் போலவே நடத் தினாள். சின்ன வயசில் செய்த தப்புக்கு இன்றைக்குச் செருப்பாலடிக்கலாமா..
அப்பா எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள்; சரளமாகப் பேசுவார்கள்; அப்பாவின் முகராசி, பழகும் விதம், பேச்சு சுவாரஸ்யம் எல்லோருக்கும் பிடித்துப் போகும்; வலிய வந்து பேசுவார்கள். இன்னொன்று... அப்பாவுக்கும் பெண்களிடம் பழகப் பேசப் பிடிக்கும். அதுக்காக ஊரில் உள்ள பெண்களையெல்லாம் அப்பாவோடு சேர்த்துப் பேசுவதென்பது வக்ரம்...
அம்மா மனசு எல்லோருக்கும் தெரிந்து போயிற்று. மாமா மறுகிப் போனார்கள்; அத்தை கூனிக் குறுகிப் போனாள்; பிள்ளைகள் சங்கடப்பட்டார்கள். அப்பா கோபப்பட்டார்கள். பெரியத்தை ஒரு மாதிரி சந்தோஷப்பட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னால் கழியாத வன்மம். பிறகென்ன... வேறு வீடு பார்க்கச் சொன்னாள் அம்மா. அப்பாவுக்குத் தலைவலி போனால் போதும் என்றாகிவிட்டது; வீடு மாறினார்கள்,
சீனியாபிள்ளை வீடு என்று விளங்கி வந்தாலும் அது நாராயணபிள்ளை பொறுப்பில்தான் இருந்து வந்தது; சீனியாபிள்ளையிடம் ஒத்தி பிடித்திருந்தார். நாராயணபிள்ளைக்குக் கொஞ்சம் வயல்காடு இருந்தது; சாப்பாட்டுக்கு நெல் வந்துவிடும். மேல் செலவுக்கு இட்லிக் கடை. முதல் தாரம் செத்துப் போய், இரண்டாம் தாரம் கட்டியிருந்தார். முதல் தாரத்துக்கு ஒரு பையன்; பன்னி ரெண்டு வயசு இருக்கும். இரண்டாம் தாரத்துக்கு இரண்டு பிள்ளைகள். பெரியவனுக்குப் பத்து வயசு இருக்கும்; சின்னவள் எட்டு வயசு? நாராயணபிள்ளைக்கு இட்லிக் கடையை விட்டால் வீடு
மனைவி மக்கள்தான். காலையில் கடைக்கு வாங்கிப் போட்ட தினத்தந்தியை மத்யான சாப்பாட்டுக்குப் பிறகு படித்து விட்டு தூங்கி விடுவார். எப்போதாவது ராமகிருஷ்ணா டாக்கீஸ் போனால் உண்டு. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நாலு காசு சேர்த்து வைத்துத்தான் இந்த வீட்டை ஒத்தி பிடித்தது.
இவர்கள் வீட்டுக்கு அடுத்தது அவர்கள் வீடு; அங்கே பிள்ளைகள் சலித்துக் கொண்டிருந்தால் இங்கே கேட்கும்; முன்வாசல் திண்ணைப் பக்கம் ஒரு தட்டி மறிப்புத்தான், நாராயணபிள்ளையை விட அந்த அக்கா சற்றே மீர்க்கம்தான்; வயசு என் காரணமாக இருக்கும். நாராயணபிள்ளை எலும்பும் தோலுமாகத்தான் இருப்பார்; முகத்தில் ஒரு கிழத்தனம் தெரியும்; உடம்புவாகா... வயசா என்று சொல்ல மடியவில்லை . அந்த அக்கா உடம்பு மேலெல்லாம் சிரங்கு வந்த மாதிரி இருக்கும்; முகம்கூட கொஞ்சம் வறண்டு காய்ந்திருக்கும். இவர்கள் அந்த வீட்டுக்குக் குடிபோன பிறகு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை உண்டாயிருந்த சமயத்தில்தான் அவள் அழகாயிருந்தாற்போலப் பட்டாள். பாவம், அந்த அக்காவும் க ஷ்டப்பட்ட குடும்பம் அங்கப் போய்த் தானே ரெண்டாம் தாரமாக வாக்கப்பட்டிருப்பாள். உடம்பும் அழகும் வசதி சம்பந்தப்பட்டதும் கூடத் தானே கொஞ்சம் கொஞ்சம். இந்த வீட்டுக்கு வந்த பிற்பாடு எல்லாம் இயல்பாக மாறிவிட்டிருந்தது. அம்மா சுபாவமாக இருந்தாள்; ஒரு பிரச்சினையும் இல்லை .
- இந்த ஊருக்கு வந்த மறு வருஷமே அக்காவுக்கு கல்யாணமாயிற்று. பெரியம்மைதான் முன் கையெடுத்து எல்லாம் செய்தாள்; வயசாகுதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவள் - தென்காசி, கடையநல்லூர் என்று அலைந்து திரிந்து மாப்பிள்ளை பார்த்தாள், கல்கத்தாவில் தூர தொலைவு என்று எல்லோரும் பெண் கொடுக்க யோசித்துக் கொண்டிருந்தபோது. அதெல்லாம் பார்க்க வேண்டாம் என்று சொல்லி சம்மதிக்க வைத்தாள். கையில் பணம் இல்லையே என்று அப்பா மலைத்து நின்ற போது சுபகாரியத்துக்குத் தன்னால் வரும்... முகூர்த்தத்துக்கு நாள் பாருங்க என்றாள். எல்லாம் நல்லபடி முடிந்தது; இப்போது நினைத்தாலும் மாயம் மாதிரிதான் இருக்கிறது அக்கா எப்போதுமே அதிர்ஷ்டக் காரிதான். அவள் நல்ல மனசுக்கு தேவதைகளின் ஆசீர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி. முடித்து திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து புலவர் படித்து விடலாம், தமிழாசிரியராவதுதான் இவன் லட்சியம். அரசர் கல்லூரியில் இலவச விடுதியும் இருக்கிறது... கவலையில்லை இவன் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் விடிவு பிறந்துவிடும்; அம்மாவை கண்கலங்காமல் பார்த்துக்குவான். இன்னும் அஞ்சு வரும் இப்படியே போனால் போதும்! * எல்லாம் நேராகி விடும்.
இடம்
அம்மா மறுபடியும் ஆரம்பித்து விட்டாள். முழுசாக மூணு மாசம் கூட ஆகியிராது... அதுக்குள் பழையபடி புகார் சொல்லத் தொடங்கிவிட்டாள். அப்பா முன் வாசல் திண்ணைப் பக்கம் வந்து நின்று ஷ - போடும் போது புருபுருப்பாள்; அப்பாவுக்கு குரல் கொஞ்சம் பெரிசுதான்; சத்தமாகப் பேசுவதே அவள் கேட்கத்தான் என்பாள்; அப்பா இதையும் கேலியாக சமாதானம் செய்து பார்த்தார்கள்; அம்மா இதில் மட்டும் என்ன சொன்னாலும் நம்பத் தயாரில்லை .
வரவர அம்மா சத்தம் போடுவது கூடிக் கொண்டே வந்தது; முன் வாசல் திண்ணையை ஒட்டி ஒரு அங்கணக்குழி இருந்தது; அதில் அப்பா குளிப்பது கொள்வது. அப்பா மெளனமாகத்தான் குளித்து விட்டு வந்துவிட வேண்டும்; இல்லை அவளுக்குத் தெரிய வேண்டும் என்று நடிக்கிறார்.
அம்மா பாவம்... ஆனால், அவள் செய்கிற பாவம்... நாராயண பிள்ளை வீட்டுக்காரி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாவைப் பார்த்திருக்கலாம்; ஆசைப்பட்டுக் கூட இருக்கலாம். பிள்ளைமாரில் ஆணழகும் குறைச்சல், பெண்ணழகும் கம்பி; தப்பித் தவறி அழகாயிருக்கிற ஆணைப் பார்த்து பெண்கள் பிரமித்து நிற்பது இயல்புதான்; பிள்ளைமார்ப் பெண் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தால் ஆற்றில், குளத்தில் கல்யாண வீட்டில் பார்ப்பதில்லையா ஆண்கள்; அந்த மாதிரி தான் இதுவும்... இதுக்கு மேல் இதில் ஒன்றுமில்லை ... ஆசைப்படுவதென்றால் படுத்துக் கொள்ள என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. மனித மன ரகசிய அறைகளில் தோண்டித் துருவி ஆராய்ந்து கொண்டிருந்தால் எப்படி... நிறைய விஷயங்கள் நொறுங்கிப் போகும். அம்மாவின் மனச்சுளுக்கு இப்படி நொறுக்கிக் கொண்டே இருந்தது. அப்பா ஏதாவது மறுத்துப் பேசினால் போதும், பிசாசாகி விடுவாள்; பேயாக மாறிவிடுவாள்.
வாசுதேவ நல்லூர் வந்ததிலிருந்து அம்மா சினிமா பார்ப்பது அதிகரித்தது. அம்மா அத்தையோடுதான். சினிமாவுக்குப் போயிருந்தாள். சின்ன தம்பி டியூஷன் போயிருந்தான்; பெரியவன் ரத வீதியில் எங்காவது நின்று கொண்டிருப்பான்; இவன் மட்டும்தான் வீட்டில் இருந்தான்; பொம்மை புரட்டிக் கொண்டிருந்தான். திருநெல்வேலி போயிருந்த அப்பா வருவார்கள் என்றுதான் இவனை வீட்டில் இருக்கச் சொல்லி யிருந்தது.
எட்டரை மணி வாக்கில் அப்பா வந்தார்கள்; வீட்டுக்குள் நுழையக்கூட இல்லை; சட்டையைக் கழட்டிக் கொடியில் போட்டுவிட்டு அப்படியே பேண்டோடு முன் வாசலில் ஒட்டுத் திண்ணையில் படுத்து விட்டார்கள். இந்த ஒட்டுத் திண்ணை தெருவையொட்டி இருக்கிறது: தெருவில் நிற்கும் வேப்ப மரக் காற்று வீசும்; சிமெண்ட் தரைக் குளிர்ச்சி சுகமாக இருக்கும்; நன்றாத் தூக்கம் வரும்... ஒட்டுத் திண்ணை ஒரு சொர்க்கம்.
சினிமா விட்டு அம்மா வந்தாள்; அப்பா படுத்துக் கிடப்பதைப் பார்த்து விசாரித்தாள்; 'இங்கென்ன படுக்களை... உள்ளே போயி நொடக்க வேண்டியதுதான் என்றபடி வீட்டனுள் போனாள். "அப்பாவ எழுப்பி, உள்ள வந்து படுக்கச் சொல்றா" இவன் எழுப்பினான்; . அப்பா எரிச்சல் பட்டார்கள்; தூக்கக்கலக்கம் மாறவில்லை .
அம்மா அடுப்பில் தோசைக் கல் போட்டிருந்தாள்; தம்பியை எழுப்பிச் சாப்பிட வைத்தது, பெரிய தம்பி அதுக்குள் வந்திருந்தான்; அவன் சாப்பிட்டான பிறகு இவன் சாப்பிட உட்கார்ந்திருந்தான். "ஏய்... நீ தின்னுட்டு அப்பா எழுப்பு... சாப்பிட வறாளா என்னன்னு கேளு... நான் கல்ல இறக்கிப் போடணும்”
இவன் போய் எழுப்பினான்; எழுந்திருந்து திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார்கள்;'ராஜு கைலி எடு" என்று கேட்டுக் கொண்டே பேண்டைக் கழட்டிக் கொண்டிருந்தார்கள்; இவன் கைலி. எடுத்து வந்து கொடுத்தான். அம்மா கூடவே வந்தாள்; அப்படியே நின்றாள்; அப்பாவை பார்த்தபடியே கத்த ஆரம் பித்தாள்.
"என்ன... அந்த தேவிடியா கூப்பிட்டு விட்டாளாக்கும்... போயி அழகு காட்டிட்டு நிக்கேரு... போரும்... அவ கூடப் போரும் வயசாக ஆக சின்னப் பிள்ளையளா தேடு தாக்கும். அவ அங்க நின்னு ஜாட காட்டுத்தும்... நீரு இங்க நின்னு சைக பண்ணுததும் தெரியாமலா நா இருக்கேன்... நா என்ன முட்டா சிறுக்கியா.. நீரு என்ன திருந்துவீரா இல்ல, உம்ம கட்டயில கொண்டு போயி வக்கிறவரைக்கும் இந்த வரத்துத்தான் வருவாரோ..."
"லட்சுமி... நீ என்ன சொல்த... நா அசதில அப்படியே படுத்திட்டேன்... கேளு... நீ சினிமா போயிருக்கேன்னான் இவன்... வரட்டும்னு செத்த கண்ணசந்துட்டேன். நீ என்ன டான்னா லொட லொடங்க...'
தெரியும்வே ... உம்மத் தெரியும். சண்டாளப் பாவி... இல்லேன்னா அன்னிக்கு எங்களை அப்படி. விட்டுட்டுப் போவேரா..."
பொலபொலவென்று அழுது
பம்பியபடி முன் வராந்தா நடையில் உட்கார்ந்து கொண்டாள். அப்பா சடென்று தாங்கிப் பிடித்தபடி தாளைத் தட்டி அமர்த்தினார்கள். லட்சுமி... இது என்ன கற்பனை... வ பாவம், வங்கொரங்கு கணக்காருக்கா, அவளப் போயி என்னோட இணச்சுப் பேசுதிய... அசிங்கமாருக்கு. சரி... இன்னும் சாப்பிடலல்லா ... வா, சாப்பிடுவோம்.... என்ன சினிமாவுக்குப் போன... Tு, போயி பழமும் சிகரெட்டும் வாங்கிட்டு வா... சட்டைப் பையில காசு எடுத்துட்டுப் போ". - இந்த அரவத்தில் சின்னவன் கழித்து எழுந்து மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தான்; இவன் பாய் அவனைத் தூங்கப் பண்ணினான்,
இரண்டு புலிகள் ஆக்ரோஷமாய் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு காட்சி மண்ணில் பட்டு இவன் தூக்கம் கெட்டு யோசித்துக் கொண்டிருக்கையில் ஏனோ தோன்றியது. இந்த வாழ்க்கை, இந்த மனிதர்கள், இந்த உலகம் எதுவும் சரியில்லை ...' தலையணையில் முகம் புதைத்து ரகசியமாய் அழுதபடி தூங்கிப் போனான்.
குழந்தையண்ணன் வீட்டு மதினி வெகுளி ; தள்ளி நின்று பேசத் தெரியாது; சகஜமாகத்தான் பழகுவாள்; இரண்டு பிள்ளைகள் பிறந்த பிற்பாடும் சுபாவத்தை மாற்றித் கொள்ளத் தோணவில்லை அவளுக்கு; பொதுவாகப் பிள்ளைமார் வீட்டுப் பெண்கள் இப்படி இருப்பதில்லை; ரொம்ப அடக்க ஒடுக்கமாக இருக்கும்படியே வளர்த்து விட்டிருப்பார்கள். மதினி - தாய் தகப்பன் இல்லாமல் ஆச்சி வளர்ப்பு; புளியங் குடி ஊரில் பிள்ளைமார் குடும்பங் களும் அதிகம் இல்லை ; அதிகம் படித்தவளும் இல்லை. எப்படியோ இந்த மாதிரி கள்ளங்கபடி.ல்லாமல் வளர்ந்து விட்டிருந்தாள். பெரியம்மை கூட இருந்திருந்தால் இந்தக் குணம் அழிந்து போயிருக்கும். மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆரம்பத்திலேயே ஒத்துப் போக வில்லை; - பெரியம்மை சின்ன மகனுக்குப் பொங்கிப் போட வந்து விட்டாள். அண்ணனும் தூத்துக்குடி. ராமநாதபுரம் இப்படி வேலையாக இருந்தான், மதினிக்குப் பிள்ளை மார்ப் பெண் குணம் படியவே இல்லை .
அக்கா மறுவீட்டுக்கு வந்திருந்தவள் பெண்கள் பந்திக்குப் பரி மாறிக் கொண்டிருந்தபோதே அம்மா முகம் மாறிவிட்டது: சிடுசிடுத்துக் கொண்டிருந்தாள் இவர்களிடம். பாயாசம் இருக்கா அத்த என்ற கேட்டு வந்தவளிடம் ஆக்குப்பறையில போயிப் பாரு என்று வெடுக்கென்று சொல்லி அனுப்பி விட்டாள். மதினிக்கு அப்போது கூட புரியவில்லை. சாப்பிட வர்றீஹளாத்த என்று கூப்பிட்டு கொண்டு வந்து நின்றாள்; எனத்தல்லாம் ஒழிச்சுப் போடனும், நீ போயி சாப்பிடு என்று சொல்லி விட்டாள் அம்மை.
அப்பா அந்தப் பக்கமாக வந்திருந்தார்கள். மறுவீடு சுருக்கமாக வச்சா போதும்னுதான் சொல்லிருந்தது... எதுக்கு இவங்கள்லாம் அக்குஸா அழைச்சிக. யார் யாருக்குப் பத்திரிகை அனுப்பிதேன்னு சொன்னீ ஹளா... இந்த திருட்டுப்புத்தி தான போமாட்டேங்கு... பெரியவன் கூப்பிட வேண்டியதுதான்... இவன் எந்த நாள்ல வீடு தேடி வந்தான். கையில இருந்தாத்தான் உங்களைப் பிடிக்க முடியாதே".
சாப்பிடாமல் அடுக்களையில் போய்ப் படுத்துக் கொண்டாள்; அப்பாதான் தாங்கித் தடுக்கிச் சாப்பிட வைத்தார்கள். மாப்பிள வீட்டுக்காரங்களுக்கு முன்னால கேவலப்படுத்திராத லெட்சுமி... எதுன்னாலும் பிறகு பேசிக்கலாம் என்று பச்சைப் பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லித் தணித்தார்கள்.
பங்குனி உத்ரத்துக்குக் குற்றாலம் போய் கருப்பசாமிக்குப் பொங்கலிட்டு வீட்டுத் திரும்புகையில் நன்றாக இருட்டி. விட்டது. பெரிய அண்ணாச்சி குடும்பத்துக்குக் குல தெய்வம் சங்கிலிபூதத்தான்; அண்ணாச்சி வீட்டில் முன்னமேயே வந்திருந்தார்கள், நேரத்தோடு திரும்பி விட்டார்கள். கருப்பையா அண்ணன், அண்ணாச்சி கூடயே போய் விட்டான். குழந்தையண்ணன் சித்தி சித்தி என்று இவர்களோடேயே இருந்து விட்டான். அன்றைக்குப் பார்க்க பஸ்ஸில் சரியான கூட்டம். இரண்டு,
மூணு பஸ்ஸை பார்த்து விட்டு அப்பா டாக்ஸி பேசி அமர்த்திக் கொண்டு வந்தார்கள். தென்காசி வந்து - ஷெகண்ட் ஷோ - கந்தன் கருணை பார்த்துவிட்டு, மதினிக்குச் சொந்தக் காரர்களான டாக்டர் பிள்ளை வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டார்கள்; முன்பே சொல்லி வைத்து விட்டுப் போயிருந்தது.
பொங்கலிட்டுச் சாப்பிடவே நாலு நாலரையாகி விட்டிருந்தது; ராத்திரி யாருக்குமே ஒன்றும் வேண்டியதிருக்கவில்லை. சினிமா விட்டு வரும்போது அப்பா லாலாக் கடை போய் அல்வா வாங்கிக் கொண்டு வந்தார்கள். மதினிதான் எல்லோருக்கும் எடுத்துக் கொடுத்தாள்.
விடியக் கருக்கலில் எழுந்து பஸ் ஸ்டாண்ட் வந்து காபி குடித்து விட்டு வாசுதேவநல்லூர் பஸ்ஸில் ஏறினார்கள். அண்ணனும் மதினியும் புளியங்குடியில் இறங்கிக் கொண்டார்கள்.
எப்போது வெளியூர் போய்விட்டு வந்தாலும் அம்மா வழக்கத்தை விட வேகமாக வீட்டுக் காரியங்களைப் பார்ப்பாள்.
அன்றைக்கு வீடு வந்து சேர்ந்ததுமே ஒரு மாதிரி இருந்தாள்; எந்த - வேலையும் செய்ய ஆரம்பிக்கவில்லை, இவன் போய் காபி போடலியாம்மா என்று கேட்டான். உங்கப் பாட்ட போய் கேளு... கடையில வாங்கி சப்ளை பண்ணுவாரு என்றாள். இவனுக்குப் பட்டுவிட்டது இன்றைக்குத் தீபாவளிதான். | அப்பா ஜமுக்காளத்தில் காலாட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தார்கள்; பெரியதம்பி பல் தேய்த்துக் கொண்டிருந்தான்; சின்னவன் வெளிக்குப் போய் விட்டு வந்து கால் கழுவத் தண்ணீர் ஊற்றச் சொல்லிக் கொண்டிருந்தான். அம்மா நேரே வந்து அப்பா மார்புப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்; அப்பா என்ன என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"என்ன... அந்த சிலுப்பட்டக் காரிய நினைச்சுகிட்டு படுத்திருக்கேரா... நேத்து அவ்வளவு செலவு செஞ்சு சினிமாவுக்குக் கூட்டிட்டு போனேரே... என்னிக்கு வே அல்வா வாங்கிட்டு வந்திரு... அந்த ஆளய பார்த்ததும் வாங்கச் சொல்லுதாக்கும் உமக்கு... மருமகளா காரியமா இல்ல உமக்கு: மாமனார்னு ஒதுங்கி நடக்கத் தெரியல அவளுக்கு... நீரு புளியங்குடி போறப்பல்லாம் அவன் வீட்டுக்குப் போய் வர்றது எதுக்குன்னு எனக்கு நேத்திக்கில்லா தெரிஞ்சுது... எவ்வளவு காலமா இப்டி ... அவ மாமா மாமான்னு இளிக்கதும், நீரு எம்மா எம்மாங்கதும் நாடகம் மாதிரில்லா இருக்கு..."
அப்பா உக்கி போய் விட்டார்கள். படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள், லெட்சுமி. என்ன பேசுதந... எதுக்கும் ஒரு முறையிருக்கு. அந்தப் பிள்ளையாரு... மகன் பொண்டாட்டி... மக மாதிரி..." - "ஆமா... பெரிசா விண்ணானம் கொழிக்காதேரும்... ரொம்ப யோக்கியம் உங்க பரம்பரை... கணபதியா பிள்ளை கதயல்லாம் தெரியாதாக்கும் எனக்கு... இந்த வெளிப் பேச்செல்லாம் எதுக்கு..."
அப்பா ஒன்றும் பேசவில்லை... சட்டையை மாட்டினார்கள்; சைத்கிளை எடுத்தார்கள்; புறப்பட்டு போய்விட்டார்கள்.
அம்மாவுக்கு யார் மீது கோபம் அப்பா மேலா... கமலா சித்தியிடமா... சரி அதை யாரிடம் காண்பிப்பது... இப்படியா அக்கா இங்கே வீட்டில் இருந்தவரைக்கும் மெளனமாக இருந்து கொண்டாள். அவள் என்றைக்குத்தான் உதாரமாகப் பேசினாள். தம்பிகளுக்கு எதுவும் விளங்கவில்லை. இவனுக்குத்தான் கோபம் கோபமாக வரும்... அப்பா கூட எப்படியோ அமைதியாகவே இருந்து கொண்டிருந்தார்கள்; பண்ணிய பாவம் சும்மா போகுமா. அண்டை வீடுகளில் என்ன நினைத்துக் கொள்வார்கள்...
- இவனும் ஒவ்வொரு தடவையும் சொல்லிப் பார்த்து விட்டான்... மாமா வளவில் குடியிருந்தபோதே சொன்னான். "லோகநாயகியத்த பாவம்... அவளல்லாம் இந்த மாதிரி சொல்லாதம்மா" அம்மா இவன் வாயை அடைத்து விடுவாள், "நீ எல்லாம் கண்டவன்... சும்மா கி சீனியா பிள்ளை வீட்டில் இருந்த சமயம் எரிச்சல் பட்டு பேசியிருக்கிறான்: "ஏம்மா என்ன இது..' எல்லாரையும் தேவடியாளன்னுட்டி ருக்க... உனக்கென்ன ஆச்சு..' "உனக்கு என்னடா தெரியும். அவ இங்க வந்து நின்னுட்டுத்தான் சேல மாத்துதா... வேற இடம் இல்லையாக்கும்
"நீயென்ன பேசுதன்னு தெரிஞ்சு தான் பேசுதியாம்மா... அன்சி சித்தி சித்தின்னு வந்திட்டிருக்கா? உன் குணம் தெரிஞ்சுது. நொந்து போயிருவான்". "அவன் பொண்டாட்டி வர்ற வரத்து அவனுக்கு தெரியாம அலையுதான்.. மாமனார் முன்னாடி என்ன - பேச்சும் வேண்டிக் கிடக்கு அவளத"
இவனுடைய மண்டைக் குடைச்சி தீராது என்றுதான் பட்டது.
இந்த வளவுக்கு வந்து மாதம் போலாகிறது. எதிர் வீட்டில் என்ன சிரிப்பும்
"இது மூணு
லீலா மதினி இயல்பாக வந்து பேசுவாள். அம்மா வயசுக்குப் பார்த்தால் தங்கச்சியாகக் கூட இருக்க மாட்டாள். அக்காவை விட நாலைந்து வயசு கூட இருக்கும். ஆறு வயசில் ஒரு பையன் இருக்கிறான்; அது கூட ஒன்றிரண்டு வருஷம் பிந்திப் பிறந்ததுதானாம். பதினெட்டு வயசில் கல்யாணம் ஆகியிருக்குமா. அவள் வீட்டுக்காரர் குமாரபுரம் கிராம முன்சீப். அப்படி யொரு அப்பாவி மனுஷன். அந்த வேலை அண்ணாச்சியுடைய திறமையில் கிடைத்தது இல்லை. தாத்தா செல்லையா பிள்ளைக்குப் பிறகு, அப்பா சங்கரன் பிள்ளைக்குப் பிறகு இவருக்கு வந்தது.
செல்லையாபிள்ளையும் சங்கரன் பிள்ளையும் இந்த கிராம முன்சீப் வேலையில் சம்பாதித்துதான் ரெண்டு கோட்டை விதப்பாடும் வாங்கி, இந்த வீடும் கட்டி வைத்து விட்டு போனார்கள். முத்தையா பிள்ளை அண்ணாச்சிக்கு வீட்டு வாடகை இல்லை; சாப்பாட்டுக்குக் கவலையில்லை ; நெல் வந்து விடும்; மேல் செலவுக்கு சம்பளப் பணம் இருக்கவே இருக்கிறது. தாத்தாவைப் போலவோ அப்பாவைப் போலவோ அண்ணாச்சிக்கு விவகார ஞானம் போதாது. ஆனாலும் எப்படியோ வருமானம் வந்து கொண்டுதான் இருந்தது.
அண்ணாச்சி ஒத்தை ஒரு பிள்ளை; சின்ன வயசிலேயே அம்மா செத்துப் போய்விட்டாள்; அப்பா தான் வளர்த்தது; கூடமாட கிராமத் துக்குப் போக வர இருந்தும் தொழில் பிடிபடவில்லை ... அண்ணாச்சி அவ்வளவு எளிய சுபாவம் உள்ளவர்; கணக்கு வழக்குக்கு லாயக்கில்லாதவர்; காசு பணம் பத்திரப்படுத்த முடியாதவர்; வம்சாவளியாக கிராம முன்சீப் வேலை. சங்கரன் பிள்ளை தங்கச்சி, மகள்தான் லீலா மதினி. வீட்டுக்கு வந்த மகா லட்சுமி.
லீலா மதினிக்கு திருநெல்வேலி டவுண்; தெக்குப் புதுத் தெரு: எல்லா திருநெல்வேலிப் பிள்ளைமார் பெண்களைப் போலவும் மதினி ரொம்ப நாகரிகம்; அவள் தழையத் தழைய சேலை உடுத்தியிருக்கிறளா கரண்டைக் காலைத் தொடுகிறார் போல கட்டியிருக்கிறாளா என்று சொல்வது கஷ்டம்; சரோஜாதேவி நீள ஜாக்கெட் போடுகிற காலத்தில் மதினியும் நீள ஜாக்கெட்தான் போட்டிருப்பாள்; வெண்ணிற ஆடை நிர்மலா அம்மைத் தழும்பு தெரிய சோளி போட்டிருக்கிற நேரத்தில் மதனியும் அப்படித்தான் போடுவாள். மகனுக்கு ஆம் வயசாகிறபோதுகூட மதினி ஜிமிக்கு போட்டிருந்தாள், இந்த வளவுக்கு வந்த புதிதில் நத்து போட்டிருந்தாள்; இப்போதும் கொலுசு என்றாலே லீலா மதினியின் சிவந்த பாதம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. இவனுக்கு விவரம் தெரிந்து மிக அழகாகக் கண்மை பூசியிருந்தது லீலா மதினிதான். பிருஷ்டம் தொடுகிற - கூந்தல்; கோணல் வகிடுதான் எடுத்துச் சீவியிருப்பாள்; மிதந்த விழிகள் மிதந்தபடி அலைபுரளும்.
வளவில் அஞ்சு வீடுகள்; சுகுணா இல்லம்; அதையொட்டி இவர்கள் வீடு; அதற்கு அடுத்தது கண்ணாடி வாத்தியார் வீடு; இந்த மூணும் வடக்கு பார்த்தது, எதிரே இடது புறம் சின்ன குச்சு சும்மா கிடந்தது; பிறகு * மதினி வீடு.
வீடு பார்த்து பால் காய்ச்சிக் குடி வந்ததும் முதன் முதலாக மதினிதான் யார் வந்திருக்கா என்று கேட்டுக் கொண்டே வந்தாள். அன்றைக்கு மதினி ரொம்பவும் அழகாக இருந்தாள்; நீல வண்ணப் புடவையில் நட்சத்திரம் போட்டிருந்தது. அப்பா, அம்மா சேகர், ஆறுமுகம், அக்கா இவன் எல்லோரும் இருந்தார்கள். அக்கா முகத்தில் ஒரு சின்ன வானவில். சென்னையிலிருந்து இங்கு வந்ததிலிருந்து அவளுக்கு சிநேகிதியே கிடையாது; அப்பா ஏறெடுத்துப் பார்த்துவிட்டுத் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்கள்; இவன் நிமிர்ந்து பார்த்து பார்த்தபடி நின்றான்; பிள்ளைமார் பெண்ணில் இவ்வளவு அழகா... அம்மாகூட சிரித்த முகத் தோடு வாம்மா என்று சொல்லி ஒரு தம்ளரில் பால் ஊற்றிக் கொடுத்தாள்.
மதினி அதுக்கு அப்புறம் தன் போக்காய் வந்து கொண்டிருந்தாள்; அக்கா தையல் கிளாஸ் போய்க் கொண்டிருந்தாள்; அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிறது என்பதையே மதினி தான் தெரிவித்தாள். மகனுக்குப் பிறந்த நாள் வந்தபோது சர்க்கரைப் பொங்கல் எடுத்துக் கொண்டு வந்தாள். திருநெவேலிக்குப் போய்விட்டு வந்தால் ரத்னா டாக்கீஸிலும். ராயல் டாக்கிஸிலும், பாபுலர் தியேட்டரிலும் பார்த்த சினிமாக் கதைகள் ஒன்றுவிடாமல் அந்திக்குப் பிறகு முன்னிரவில் திண்ணையில்உட் கார்ந்து சொல்வாள்.
தலையாரி கொண்டு வருகிற பணத்தை பீரோவில் வாங்கி வைப்பாள்; அண்ணாச்சி வேலையில் சரத்தில்லாமல் இருந்தால் இப்படி இருக்கக் கூடாதுய்யா என்று உஷார்படுத்து வாள்,
அம்மா ஒரு தடவை கருப்பையா அண்ணன் கல்யாணத்துக்குப் போக வேண்டி வந்தபோது இவனுக்கு அரை பரீட்சை ... இவனை மதினி வீட்டில் விட்டு விட்டுப் போனாள். எந்த நாளும் நாளும் காலையில் சுடச் சுட இட்லி எடுத்து வைத்தாள்; பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் சுடு சோறு பரிமாறுவாள்; ராத்திரிக்கு தோசை ஊத்தட்டுமா என்று கேட்டு தோசை சுட்டு போடுவாள்; சொந்த மதினி போலவே பார்த்துக் கொண் டாள்.
மதினிக்கு வீட்டு வேலை அதிகம் இல்லை . வயதான மாமனாருக்குக் கஞ்சி இட்லி, குழைந்த சோறு போதும்; , பையன் இரண்டு படித்துக் கொண்டிருந்தான்; இதுதான் வேண்டும் என்பதில்லை; அண்ணாச்சி வெளியே வேலையாகப் போனால் சாப்பிட்டு விட்டு வந்து விடுவார்கள்; சாப்பாட்டில் சுவனம் இல்லா மனுஷனும் கூட மதினி என்ன சமைக்கிறாள் என்றே தெரியாது. ஒரு வேளை சில பெண்களைப் போல படபடவென்று எல்லாவற்றையும் முடித்து விடுவாளாக இருக்கலாம்; எப்படியோ நிறைய நேரம் இருந்தது; காலையில் ஒரு முறை வந்து விட்டு போவாள்; மத்தியான சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு முறை; சாயங்கால வேளை ஒரு முறை, ராத்திரி ஒரு முறை கண்டிப்பாக.
அம்மைக்கு மதினி இப்படி அடிக்கடி வந்து போவது பிடிக்காமல் போக ஆரம்பித்தது: எதிர் எதிர் வீடு; நினைத்த நேரமெல்லாம் வருவாள்; போவாள். காலையில் அப்பா இருப்பார்கள். ராத்திரி அப்பா வருகிறபோது இவர்கள் மாநாடு முடிகிற கூட்டத்தில் இருக்கும். அப்பாவுக்காக வருவதாக அம்மா நினைத்துக் கொண்டாள். கல்யாணமாகி எட்டு வருஷமாகி, ஒரு பிள்ளையும் பெற்ற மனுஷி அப்படியா ஒரு அந்நிய மனுஷனை தேடி வருவாள். மதினி அன்பான மனிதர்களைத் தேடித்தான் வந்தது. அக்காவும் - இவனும் தம்பிகளும் அம்மாவும் அப்பாவும் பிரியமானவர்களாக இருப்பதாக உணர்ந்திருக் கிறாள் போல.
இவன் எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறான்; இல்லை : பயந்து கொண்டு... அது அப்படியே நேர்ந்தது... "அந்த சிறுக்கிக்கும் உமக்கும் என்ன; உன்னைத் தேடிக்கிட்டுத்தான் அந்த தேவடியா வர்றா... அவளை யார் அழைச்சுது. நீ இருக்கும்போது வர்றா... அவ கூடவே போயிரும்."
அம்மைக்குப் பழையபடி ஹிஸ்டீரியா... எவ்வளவு அசிங்கமாக பேசுகிறாள். இதைக் குணப்படுத்தவே முடியாதா... பாவமாக இருக்கிறது அவளைப் பார்த்தாள். கோபமாகவும் இருக்கிறது... இந்த கொடுமைக்கு என்ன செய்ய... கடவுள்தான் அவளைக் காப்பாற்ற வேண்டும்.
லீலா மதினி திருநெல்வேலிக்கு அம்மை வீட்டுக்குப் போவதும் அப்பா கலெக்டர் ஆபீசுக்குப் புறப்படுவதும் சமயங்களில் ஏக காலத்தில் தான் நிகழ்கிறது... அதுக்காக இரண்டு பேரையும் சேர்த்துப் பேசுவது பைத்தியக்காரத்தனம்.
அப்பா யாரையும் வளைத்துப் போடக் கூடியவர்களாக இருக்கலாம்... ஆனால், அம்மா மதினியைப் பேசுவது பாவம்! அப்பாவுக்கு ஜமீன் செகரட்டரி என்ற அந்தஸ்து இருந்தது; ஒரு நடிகனுக்குரிய உடம்பும் அழகும் எல்லோரையும் நின்று பார்க்க வைத்தது: நாப்பத்திச் சில்வானம் வயசு என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்; ஆச்சி போட்ட சாப்பாடு; தாத்தா சம்பாத்தியத்தில் பாதி அப்பா உடம்புதான். அந்த உயரமும் கம்பீரமும் உரமும் பிள்ளைமாரில் அபூர்வம்... திருநெல்வேலிப் பிள்ளைமார்க்கான எல்லா கல்யாண குணங்களும் அப்பாவுக்கு உண்டுதான்; ஆனால், அம்மா வீணாய்க் கற்பனை செய்து கொள்கிறாள். மதினி சிவாஜிகணேசன் படத்துக்குத் திரும்பத் திரும்பப் போகிற மாதிரி இவர்கள் வீட்டுக்கும் வருகிறார்கள்; இதில் என்ன தப்பு. அப்பா சிவாஜிகணேசன் மாதிரி தான் இருந்தார்கள்; இவ்வளவு கஷ்டத்துக்குப் பிறகும் ஒரு வாட்டம் இல்லை ... ஜமீன் பழக்கத்தில் மான் கறி, மிளாக் கறி, முயல் கறியெல் ஒலாம் சாப்பிட்டுச் சாப்பிட்டு விஸ்கியும் பிராந்தியும் மண்டைராமையத்தேவர் வடிசரக்கும் குடித்து குடித்து தேவமாராகவே ஆகிவிட் டிடருந்தார்கள்; பேச்சு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும், பெண்கள் ஆசைப்படத்தான் செய்வார்கள். மதினி அப்படி இல்லையென்று எப் படிச் சொல்ல முடியும்... அம்மாவுக்கு யுக்தியான மனசு. எப்படியோ கண்டுபிடித்து விடுகிறாள்... கண்டு பிடித்து சண்டை போடுகிறாள்.
இந்தப் பத்து வருஷத்தில் அம்மை சன்னமாக ஒடுங்கி விட்டாள்; கல்லிடைக்குறிச்சியில் அப்பளமாய் போட்டுத் தேய்ந்த உடம்பு... பட்டணத்தில் ஐயர் வீடுகளில் பத்துப் பாத்திரம் விளக்கிப் பிள்ளைகளை வளர்த்து இற்றுப் போனாள்... எண்ணெய்ச் சட்டி முன் இருந்து நைந்து விட்டிருக்கிறாள். மனசும் திரிந்து போயிற்று; இயல்பிலேயே கொஞ்சம் கோபக்காரி ; பட்டுப்பட்டு, பாடு தொலைத்து சுபாவமே மாறிவிட்டது. அநியாயத்துக்குச் சிடுசிடுப்பு வந்து சேர்ந்திருக்கிறது; எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறாள்; வார்த்தைகள் தீக்கங்குகளாகத் தெறிக்ககின்றன. எப்போதும் இப்படியில்லை; திடீர் திடீர் என்றுதான். அக்காவுக்கு கல்யாணமாகிற வரை அவளோடு சண்டை போட்டு அழ அழ வைத்துக் கொண்டிருந்தாள்; அவள் கல்யாணமாகிப் போன பிறகு வீட்டில் மாட்டிக் கொண்டது அப்பாதான்; இவன்மேல் ஒரு பிரியம் வைத்திருந்தாள் சண்டை வராது: தம்பிகள் சின்னவர்கள்; தப்பித் தவறி இவனோடு சண்டை வந்தாலும் பெரிசுபடுத்த மாட்டாள். அப்பாவைப் பழிவாங்குகிறாளா என்ன..."
இப்போதெல்லாம் லீலா மதினி இவர்கள் வீட்டுக்கே வருவதில்லை; பேச்சு வார்த்தையும் அற்றுப் போயிற்று. ராசியாக இருந்த நாள்களில் கொல்லைப்புறம் இருக்கும் சிவப்புக் கனகாம்பரம் - பறித்துத் தொடுத்து அக்காவுக்கும் கொடுத்து மதினியும் சூடிக் கொள்வாள்; சினிமாவுக்குப் போகலாமா என்று கூப்பிட்டு வருவாள்; செவ்வாய்க் கிழமை மாரியம்மன் கோயில் போகையில் சித்தி என்று தேடி வருவாள்; கிராமத்திலிருந்து யாரும் கத்திரி, வெண்டை , புடலை, பீர்க்கை , பூசனியென்று கொடுத்து விட் டால் பங்கு பிரித்து கொடுப்பது போல எடுத்துக் கொண்டு வருவாள். அம்மையும் வஞ்சகமில்லாமல் செய்வாள். கூட்டாஞ்சோறு பொங்கினால் கூட கொடுத்து விடுவாள்; முறுக்கு சுட்டால், சீடை போட்டால், களி கிண்டினால், இடியாப்பம் பிழிந்தால், அடைக்குப் போட்டால், கொழுக்கட்டை அவித்தால் மதினி வீட்டுக்குத் தனியே எடுத்து வைத்துக் கொடுத்து விடுவாள்.
இப்போது ஒரு வெறுமை கவிந்திருந்தது: மதினி இவர்கள் வீட்டில் யாரைப் பார்த்தாலும் முகத்தை திருப்பிக் கொள்கிறாள்; பாராதது மாதிரி போய்விடுகிறாள். ஒரு வளவுக்குள் எத்தும் எதிருமாக இருந்து கொண்டு இப்படியிருப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், அண்ணாச்சி எப்போதும் போலக் தான் இருக்கின்றார்கள்; லேசாய் உதடு பிரிகிற சிரிப்பு என்றைக்கும் போல் இன்றைக்கும் மாறாதிருக்கிறது... என்ன என்பது போல ஒரு பார்வை எப்போதும் போலிருக் கிறது... அண்ணாச்சிதான் சரி போல; மதினி போலப் பழகவும் வேண்டாம். ஒதுங்கவும் வேண்-டாம்.
- சேகர் படிக்கானா என்று சகலமாகக் கேட்பார்கள் அண்ணாச்சி; எங்கே அப்பா ஊரில் இல்லையா என்று விசாரிப்பார்கள்; அத்தான் வந்திருக்காஹளா என்று கேட்டுவிட்டுப் போவார்கள்; யாரு வந்திருக்கா என்று கேட்பார்கள். எப்படி முடிகிறது அண்ணாச்சிக்கு. அம்மை பேசுவது தெரியும்; மதினிக்கும் இவர்கள் வீட்டுக்கும் பிடிக்காமல் போனது புரியும். இவ்வளவுக்கும் பிறகும் அப்பா கருப்பையா கடையில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கையிலோ, பஸ்ஸுக்கு நிற்கையிலோ அந்தப் பக்கமாக வந்து விட்டால் பார்க்காமல் பேசாமல் போகமாட்டார்கள். அண்ணாச்சி அபூர்வமான மனுஷன்தான்.
லீலா மதினி சின்னத் தங்கச்சிக்கு கல்யாணமென்று அன்றைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள்; அண்ணாச்சி வசூலுக்குக் கிராமத் துக்குப் போய் விட்டிருந்தார் காலையிலேயே. மதினிக்கு திருநெல்வேலி கிளம்பினாலே சிறகுகள் முளைத்து விடும்; தனி குதூகலம் வந்து விடும்; முகமெல்லாம் பூரிப்பு கூடி விடும்; வளவையே கலக்கி விடுவாள், அன்றைக்கும் அப்படித்தான்...
அப்பா குஞ்சு ராஜாவுக்கு ஆஸ்டல் பணம் கட்டவேண்டுமென்பது முதல் நாளே சொல்லியிருந்தார்கள். காலையில் இட்லி சாப்பிட்டு காப்பி குடித்ததும் சிகரெட் பிடித்தபடி அம்மையிடம் வந்து பணம் எடுத்துக் கொடுத்தார்கள்; "லட்சுமி இந்த அம்பத ரேஷனுக்கு வச்சுக்கோ: கோதுமையும் வாங்கிடு; மைதா, | ரவை போட்டான்னா வாங்கிக்கோ. டோபி வந்தார் இருபது ரூபா கொடுத்திரு. பிறகு கணக்குப் பாத்தி தர்றேன்னு சொல்லு. சுப்பையபிள்ளை கடைக்கு முந்நூறு கொடுத்து விட்டிரு: லிஸ்ட் போட்டு பெரியவன்ட்ட கொடுத்து வாங்க நா அப்படியே ராஜபாை போயி பங்களா குத்தகை வாங்கிட்டு புதங் கிழமதான் வருவேன்" ஏர்-பேக்கில் பேண்ட் வு எடுத்து வைத்தார்கள்; பேள் பிரஷ், சோப் டப்பா, ஷேவிங் ஷெட் எல்லாம் எடுத்துதார்கள்,
''ஜபாளையம் அடுப்பில் இட்லித் தட்டை எடுத்துக் கொண்டிருந்த அம்மா ஆவேசமாக எழுந்து வந்தாள்; ஏர்பேக்கை எடுத்து விட்டெறிந்தாள்; அப்பா கால்மாட்டில் விழுந்து முட்டி முட்டி அழுதாள்: "நீரு போகக் கூடாது ... அந்த தேவிடியா குண்டியத் திருப்பினதும் நீரும் புறப்படுதிரு. எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னா நினைச்சிட்டிருக்கீங்க... பாம்போட காலு பாம்பறியும். அவ திண்ணையில நின்னுட்டு, கண் ஜாட காட்டுதா... நீரு இங்க இருந்துட்டு தலையாட்டுதீரு என்ன நினைச்சிட்டு அலையும் தீங்க மனசுக்குள்ள... ரெண்டு பேரும் திருநெல்வேலி போயி கும்மாளம் போடுத்து எனக்குத் தெரியாதாக்கும். போ வேண்டாம் இன்னிக்கு நீரு: போனா இருக்கு.”
அப்பா ஏந்தி எடுத்துக் கொண்டு தேற்றினார்கள்; மடியில் போட்டுக் கொண்டார்கள்: "இல்ல லட்சுமி இல்ல... சொன்னா கேளு. இல்லாததும் பொல்லாததும் நினைச்சுக் கற்பன பண்ணிட்டு இருக்க நீ. நா வேணா போல... இந்த மாரில்லாம் பேசாத, அவ புருஷன் காதுக்குக் கேட்டா பாவம்..."
“எனக்குத் தெரியும்... எல்லாப் தெரியும்... அவளும் நீரும் ஒரே நாள்ல தான் போணுமா... அந்த முண்ட விளங்க மாட்டா... நா உம்ம நம்பமாட்டேன்".
அப்பா பேண்டைக் கழட்டிவிட்டு கைலியை உடுத்திக் கொண்டு ஜமுக்காளத்தை எடுத்து படுத்தி காலாட்டிக் கொண்டு கிடந்தார்கள் அக்கா சாப்பிடாமலே தையா கிளாஸ் போனாள்; சின்னத்தம்பி பள்ளிக்கூடம் புறப்பட்டு போனான் சேகர் டியூஷனுக்குக் கிளம்பினான் அவர்கள் ரெண்டு பேரும் அப்போ சாப்பிட்டு விட்டிருந்தார்கள் இவனுக்குப் பசித்தது; பம்பு செட்டி இவ்வளவு நேரம் நின்று குளித்த தப்பு.
"ஒழுங்கா இருந்தா இருக்கணும் 2ர் மேல போனா அப்படிே போணும். உமக்குல்லாம் எதுக் குடும்பம் பொண்டாட்டி பிள்ளைகள் அந்த மலையாளத்துத் தே யாளக் கூட்டிட்டு அலை மாதிரியே இன்னமும் அலையலாம் பாக்கேரு... சுட்டுக் கொல பறத்திருவேன் உம்ம. நீரு மனுஷன் வே..." படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
அப்பா எழுந்து தண்ணீர் குடித்து விட்டு சிகரெட் பற்ற வைத்தார்கள்; பக்கத்தில் கிடந்த ஆனந்தவிகடனை எடுத்துப் புரட்டிப் பார்த்தார்கள்; இடது கையால் தலை கோதிவிட்டுக் கொண்டார்கள் சிகரெட்டை அணைத்துப் போட விட்டு வலது கை விரல் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந் தார்கள்.
"என்ன முழிச்சுப் பாக்கேரு... போமுடியலேன்னா.. அவ பஸ் ஸ்டாண்டில் காத்துக்கிட்டு நிப்பா, என்ன... அந்த வளவில் இருந்த வரைக்கும் அந்த சொறி பிடிச்ச முண்ட கீழ வளவில அறுதலி ... இங்க இவளா... நா விடுவனா ... அவங்க கூடயே போயி இருக்க வேண்டியது தான. எங்கூட இருந்தா ஒழுங்கா இருக்கணும். இல்லேன்னா போயிரனும்... எங்குடியக் கெடுத்த சண்டாளா... இன்னும் அலையுதேரே இப்ப டி ..."
அப்பா எழுந்து நின்று கொண்டார்கள்; என்னவோ அருள் வந்த மாதிரி சுவரில் முட்டிக் கொண்டார்கள்: "லட்சுமி... ரொம்ப பேசுத... நா அன்னிக்கு செஞ்சதுக்கு இன்னும் எவ்வளவு காலம் அனுப்விக்கணும்... ஏழுமலையானே, என்ன சீக்கிரமே கொண்டு போயிறேன்... தாங்க முடியலியப்பா... நா இருக்கக் கூடாது.. செத்தாத்தான் நம்புவியா நீ..."
அம்மா அதிர்ச்சியில் ஒன்றும் பேசவில்லை ; ஒரு ஓரமாக சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். எடுத்து வைத்த இட்லியில் ஈக்கள் அரித்துக் கொண்டிருந்தன, இவன் போய் தட்டெடுத்து மூடி வைத்து விட்டு, அடுப்புத் தீயை இறக்கி வைத்துவிட்டு வந்தான்.
பசியும் மனசுக் கஷ்டமான வேகத்தில் இவன் கத்தினான்... "நீங்கள்லாம் சாவுங்க... செத்துத் தொலைங்க... உங்களோட இதே இழவா போச்சே... பொழுது விடிஞ்ச பொழுது அடைஞ்சா.. நீல்லாம் காட்லதான் போய் இருக்கணும்... யாரைப் பார்த்தாலும் தேவடியாங்கே... பக்கத்தில் பொம்பிளையே இருந்துரப்படாது உனக்கு, சக்களத்தியாக்கிருவியே முண்ட... நீ சாவு; செத்துத் தொல... உன் புருஷன் மம்முத ராஜா... ஊர்ல உள்ளவல்லும் அலையுதா, உனக்கென்ன கோட்டி பிடிச்சிருச்சா.. பெத்த பிள்ளையக் கூட சந்தேகப்படுவியே நீ... அந்த மனுஷன் என்னைக்கோ கூத்தியார் வச்சிருந்தான்னா அதுக்கு இப்படியா.. நீல்லாம் என்ன பொம்பளையா... பிசாசு. அப்படிப் போனாத்தான் போறாரு... என்ன குடிமுழுகிப் போகுது... ஏன் இப்டி ஆடுத... ராக்ஷஸி"
இவனைப் பார்த்து சத்தமி டாள்; "என் கைச்சோந்த தின்னுட்டு பேசுவடா... நா போட்டம் பாரு... என் கைய முறிச்சு அடுப்பிலதான் வைக்கணும். உங்களைல்லாம் கைப் பாடுபட்டு வளத்ததுக்கு எனக்கு வேணும்; நீல்லாம் நல்லா இருப் யோ ..."
"நல்லா ஒண்ணும் இருக்க வேண்டாம்; நாசமாகவே போறேன் போ; உங்க வயித்துல பிறந்துட்டு எப்படி நல்லா இருக்க முடியும். நீ போட்ட துல்லாம் போதும்; செருப்பாலடிச்சு சோறு போடுற ஜாதி நீங்க அக்கா தங்கச்சில்லாம்"
"நா பொங்கி வச்ச சோத்த திங்காதடா நீ மனுஷன்னா ; போயிடு... போக்கழிஞ்சு போயிடு; என் மூஞ்சில முழிக்கக் கூடாது.”
"உனக்கு கோட்டிதான் பிடிச்சிருக்கு, நானும் பாத்துட்டுத்தான் இருக்கேன்; நீ ஏன் இப்படி வர்றே...”
"என்ன பேச்சு பேசுதான் பாருங்க.. அவன் இந்த வீட்ல இருக்கக் கூடாது; அவன் இருந்தா நா இருக்க மாட்டேன் இங்க..."
அம்மை விருட்டென்று எழுந்து புற வாசல் பக்கம் போனாள்; இவன் வெளியே புறப்பட்டு வந்தான்; அப்பா கவரிலேயே சாய்ந்த மேனிக்கு காலை நீட்டியபடி ஓய்ந்து போயிருந்தார்கள்.
இரண்டு நாளாய் அம்மா சோறெடுத்து வைக்கவில்லை; தானே எடுத்து வைத்துச் சாப்பிடுவது சாப்பிட்ட மாதிரியே இல்லை; அம்மை தான் சொல்வாள்: "தான், வயித்துக்குத் திங்கக் கூட அளவு தெரிய லையே...” இவன் சாப்பிட வந்ததுமே பாட்டாளைக்குப் போய் இருந்து கொள்வாள். - மூன்றாவது நாள்; வருஷப் பிறப்பு. அப்பாவுக்கு இலை போடு கையில் இவனையும் கூப்பிட்டு விட்டார்கள்; பிறகு சாப்பிடுதேன் என்று சொல்லிப் பார்த்தேன்; சும்மா வாடா என்று அப்பா அழுத்திச் சொன்னார்கள்; இவன் போய் உட்கார்ந்தான்; அம்மை எப்போதும் போல பரிமாறினாள்,
சாப்பிட்டு, ரொம்ப நேரம் கழித்தும் வேப்பம்பூ பச்சடியின் தனி ருசி. நாவில் தங்கியிருந்தது. அம்மாவை அப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.