தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, November 27, 2018

பாழி - கோணங்கி :: 18. மஞ்சப் பூத்தெரு

* கோணங்கி

18. மஞ்சப் பூத்தெரு 


பிறக்கும் முன்பே மறைந்த வீடுகளின் மாடித்திருப்பங்களில் அமர்ந்திருந்த தேவதாசிகளின் விதி பார்த்துக் காத்திருந்த முட்டை அகழ்விளக்கின் சுடரில் பதிந்த சுவர்பல்லி குமிழ் நீர் உமிழக் கூறி நிமித்திகத்தில் முன் நடந்தவற்றின் தீவினையும் நடக்க இருப்பதின். துர்சகுனத்தின் சப்தங்களை கவனமாகக் கேட்ட கிழத்தாசி அமிர்தம் நீண்டகாலம் முன்பிருந்த அழகான ருத்திரகணிகையர் விதியில் பூத்த மஞ்சப்பூத் தெரு வழியே பூக்களற்ற களைகள் முளைத்த வீடுகளைக் கடந்து புலம்பியவாறு தனிமை கொண்டிருந்த சாவின் அருகே சென்று உரையாடினாள் பயத்தில்.

'போ... போ சாகுருவியே இங்கிருந்து. துயிலும் நாயனத்தை எழுப்பாதே. புனுகு பனிநீர்களபம் பூசிய கணிகை யாருமில்லை. சதங்கைகட்டி தளியிலார் மரபில் வந்த பொட்டுக்கட்டிய சிறுமிதான் துயில்கிறாள் தெருவில் விளையும் மாக்கல்லில் வடித்த பாரி நாகஸ் வரம் இருந்த வீட்டில் யாருமில்லை . ஊமத்தம் பூவில் மறையும் அன்னாவிமார் காற்றில் உலவும் நேரமிது போய்விடு சாகுருவியே'

'களிம்பேறியசதங்கைகள் உருள்கிறதே. சிறுமியின் கற்பகப் பூதளிரடியில் சிவன் புகுந்து ஆவிகொண்டானோ. புவனமெங்கும் சிறு பாதங்களின் ரேகை படர்கிறதே. பிரம்படி பட்டும் உணரவில்லையா சிறுமியும். அரவங்கள் விசும்பி நெளிவதைப்பார்த்தேன் தெருவில். யாரோ நாகஸ்வர ஏழுகண்களில் அடைக்கிறார்கள் விரலால்'

'யாருமில்லை சாயைகள். கனவில் உலவும் அரவுதான் போய் விடு சாவே'

'மோதிரப்பாம்பின் ரகஸியமே தேவதாசி. மயக்கும் இசைதான் பாம்பு. நெளிவுதான் சாவின் அசைவெனத்தெரியவில்லையா தந்திரக் கிழவியே'

'பின்னொரு இரவும் வந்து பாம்பு நெளிவு மோதிரத்தை கொண்டு போ. ருத்ர வீணை நாண்களில் நுண்ணிய அலைகளைத் தடுத்தால் உன்மீதே வரும் பழி. அவளிடமிருந்து பிரிக்காதே மோதிரத்தை கணிகை தலைமீது பறந்து சா.. வென சாபமிடாதே பயமாக இருக்க? தெனக்கு' என்றவாறு சேலை முந்தியால் தலையைமூடி அதன் பின் படாமல் நகர்ந்தாள்.

'சா... சா...' வெனப்பறந்து சிரித்தது சாகுருவி.

தேவதாசி விரல்களில் இருந்த இசையின் உள்ளுணர்வுகள் என்றுமே உறங்குவதில்லை. மோதிரத்தில் இல்லை இசை. ஒரு பாம்பு நெளிவில் மறையக்கூடும் போய் விடு'

'விதியால் வந்தேன் தேடி , தடுக்காதே என்னை

'இசைதான் விதி நாணில் அதிரும் சாவின் விதியை மஞ்சள் பூவிடம் கேள், சா... வெனக் கத்தி இசை வீதியை மூடாதே. பயிர்களும் பூச்சிகளும் விரல்கள் அசையும் நரம்பின் கானத்தில் ஜனிப்பதால் போய் விடு. உணர்வில்லையா நீயும் பூச்சியென'

'சா... சா...' வென இருட்டி அலறித் தெருவின் குறுக்கே பாய்ந்தது சாகுருவி.

'சாவின் ஆழத்தில் ஒலிக்கும் உன் குரலின் பயங்கரத்தில் தெரு மயங்கிவிடப்போகிறது காலத்தை விட்டு. தூங்கா விளக்கில் என் இளமையும் கரைந்தது இற்று. என்விதி நீ. இருந்துவிடாதே வராமல்' என வளைதடியால் விரட்டினாள் சாகுருவியை. துயிலும் பறவைகள் கூட்டமாய் சேர்ந்து மெல்லிய இறகுக்கோடுகளைத் தெருவில் பதித்து இசையில் உருகும் தாசி உயிருக்காக எழுதிச் சென்ற லிபிகள் அழுதன உயிரில். இசைக்கருவிகளின் துவாரங்களில் கண்வைத்து விழித்திருக்கும் தேவதாசிகளின் தந்திர விளக்கின் சுடரில் உருகிக்கேட்ட இசை மங்கிய வெளிச்சமாய் அறையிருளில் கலந்து இரவின் நிசப்தத்தில் மயங்கிய வாறு உள்ளுணர்வுகள் தூண்டப்பட்டு புல் பூண்டுகளின் முனகலைக் கேட்டார்கள் துயரில்,

என்றோ மறைந்த அன்னாவியின் நாயனத்தில் உயிர் கொண்ட விருட்சங்கள் காசி அன்னாவியாரின் சமாதியில் கிளைபரப்பி ஆங்காரத்தில் உயர எழுந்து பாழ்பட்டு தேடும் நாயனச் சுருள்காற்று மஞ்சப் பூத்தெருவில் அகாலத்தில் விரிவுகொள்ளும். பூவரும்புகள் இருளில் நாகதாளி மரங்களில் ஜனித்ததும் பொட்டுக்கட்டிய தளியிலார் மரபின் நாத உறிஞ்சலில் முலைக்கண் திறந்து பாலூட்டும் தாசியின் ஒலி முகவாசலில் சப்தாஸரங்கள் கோர்த்த சுரைக்கூடுகள் பேய்ச் சுரை முலைகளாய் விம்மி கொடிகளில் மஞ்சள் பூ இதழ் விரியும் ராகவி போதம்.

துளசிச்சுடர் அசையும் தெருமுனையில் நாழி ஓடு கருத்த வீடுகளில் இசை நூல்கள் உதிரும் சுவர் மடிப்பில் பித்த உருக்கொண்ட யாளிமுகவீணையின் தந்திகளில் நாதபேதம் உயிர்ச்சரத்தில் ஓட அசையும் தாவர ரூபங்களில் வளைந்த ஆவி கரையும் தனம் எனும் துளசியில் பிறந்த தேவதாசியை கண்களில் ஊடுருவி அழைத்தாள் கிழத்தாசி அமிர்தம். நடுங்கும் விரல்களில் ஓடிய நரம்புகள் பச்சையாய் வேதிவினைபுரிய வெளிறிய ரேகையில் பாழ் இசை. இடைவிடாத உயிரின் மோனத்திலிருந்த பாம்பு நெளிவு மோதிரத்தால் எட்டாவது பஞ்சமும் ஒன்பதாவது கோமள தைவதமும் சுருதி நுட்பம் கூட.. யாளி முகத்தில் உருக்கொண்ட துயர் ராப்பாடிப்பறவையென குரல் அதிர்ந்து கண்ணாடிப் பந்தாகச் சுருள் கொள்ளும் பிரதியொலி கீழ்பாய்ந்து கோமள ரிஷLJமும் தீவிரகாந்தாரமும் ஆறாவது தீவித மத்திமமும் தந்திகள் தழுவிய எதிரெதிர்ராகமும் நாதபேத ஆதாரம் காலபருவங்கள்-சுற்றிப் புலர்பொழுதுகளின் குளிரையும் உதிரும் தெருவையும் வெளிப்படுத்தியது. மரணத்தருகில் நினைவிழந்த தனம் நோயின் ஆழத்தில் தன் முதுவுடலுள் தண்டுவட எலும்பில் வடிவம் கொண்ட யாழ் மீட்டி திணைமயக்கத்தில் மறைந்த இனத்தின் தனிப்பாடல் இசைக்கநீர்வீதி திறந்து சப்தகன்னிகள் ஐந்துவகை நில உடல் கொண்ட, யாழ் தடவி முன் அறியாத விதியில் கடல்கோளில் சந்திர சூரியர் சுருதி தும்புருநாரதர் பாடகுடுக்கை இமயனும் மத்தளம் தந்தீஸ்வரனும் விம்மும் தாளம் ஜெனிக்கத்தாக்கிய பாதம் நீர்சுழியில் மறைய முதற் சங்க அசுரர் இசை நூல்கள் மூழ்கி நீர்வரிகொண்ட ஒரு துளி நீரில் சுழலும் நகரம் விரிவுகொண்டு திக்குகள் எட்டும் நீர் அலையும் ஏடுகள் வாஸிக்கும் துளைமூங்கில் கண்களை கணிகையர் விரல் மூடி ஒவ்வொரு  கண்ணிலும் பார்வை கொள்ள மறைந்த நிலத் தோற்றங்களின் துயிர் உயிர்கொள்ள தேவதாசிகண்கள்  துவர்ந்து கரையும் தெரு.

நீர்நகரில் அலைவுற்ற பாசுரங்கள் கீறி உருவெடுத்த மஞ்சம் தெரு. தீபச்சுடரின் பின்னே மூழ்கிய மிருகங்களை ராட்சஸ சாயை கொள்ள வைத்தது நீர். மஞ்சப்பூத்தெருவில் விரியும் கருணாமிர்த சாகரம் ஏதோ மஞ்சள் வெளிறிய நிலவெளியில் நெல் ஆறு திறந்து காகம் செம்புநிறமாகி கிளிகொறிக்கும் ஒர் நெல் மூடி திறந்து தனம் எனும் சிங்கமுகவீணை ஜாதிப்பெண் விளக்குகளுக்குப் பின்னால் மங்கிய தெருவில் ஸங்கீதபாரிஜாதப் பூவில் மறைந்தாள்.

பழங்காலச் சுருள் திறந்து புலி எலும்பு துருத்திய ரபாப் கருவியின் பதினெட்டு உலோகத்தந்திகளின் ஒலித்தளத்தில் இடம்மாறும் குதிரைகள் கால் தூக்கி நிற்க சுடரில் நிழல் பெரிதாகி அசையும் அலைக்குள் தங்கியிருந்த கடைசி நெல்லின் அடியில் தேவதாசி சுரங்களால் ஆன ரபாப் நரம்புகள் சுழற்றிச் சென்ற தனிமைப்பிரதேசத்தில் முன்னிருந்த தாவரங்கள் எதிர்காலம் வரை நீண்டு படர்ந்து பூத்த ஒரு மஞ்சள் பூ விளக்கொளிமேல் விரிந்த விரல்கள் யாரையோ நகரம் தாண்டி அழைக்கும். வேறு தெருவில் சுண்ணாம்பு உதிரும் சுவரில் கீறியிருந்த தேவதாசியின் பெயரைத் தனிமையாய்த் திரியும் வழிப்போக்கன் வாஸித்து, வறித்த பார்வைமுன் ஏதுமற்ற வெறுமையில் உருக்கொள்ளும் வெளிறிய மஞ்சள்முகக் கணிகை. விலகிப்போன காலத்திற்குள் வராத உரையாடலை விதியுடன் போட்டுத் திரிகிறாள் அவளும். என்றோ போன வழிப்போக்கன் விட்டுச் சென்ற தொடர்பில்லாத வாக்கியங்கள் கனவுக்குள் கேட்டு விழித்து தெருமுனையில் அவனைக் கூவ திரும்பாமல் போகிறான் அவனும், நீர் நகரை விட்டு வெளியேறிய பாஸ்கர தாஸின் நிழல் அசைந்தது ஐட்காவில் விளக்கின் பின்னே. அனுமந்தராயன்தெரு வீட்டில் இருந்த விஜயாளைப் பார்க்கத் திராட்சை நிறவயலின் வில்லுடன் இருந்தது. மதுராவிலிருந்து தொடுவானம் தாண்டி மெளனமாக இறங்கியது வாசலில், பொட்டுக்கட்டிய சிறுமி விஜயாளின் கபில நிறக்கண்கள் தழுவிய திராட்சை  வயலின் உள்ளே துயர நுரைபொங்கிய பாடல். மீன் செதில்கள் துடிக்க அசையும் முள்ளின் அடுக்கில் குத்தும் ஸ்வரவரிசையில் சுயேச்சையான வெள்ளரி விதைகள் நீர்கோர்த்து பழுப்புத் தடமாய் ஒட்டும் இசையில் பேசியது மதுரா வயலின். மாசிவிதிகளில் வளைந்து திரும்பிய ஜட காவுக்குள் கருக்கிருட்டில் தனிமையான வர்ணமெட்டு ஜட்காவுடன் சேர்ந்தசையும், பாஸ்கரதாஸின் கருப்புக்கோட்டுக்குள் தேவதாஸிகள் துயில்கிறார்கள். மஞ்சப்பூத்தெரு முளைத்த விருட்சங்களில் உதிர்ந்து உடையும் கணிகை உடல் தழும்புகளில் இசைவிரல்கள் நாண்தட விரணத்தின் பாதையில் செல்லத் துரதிருஷ்டத்தை கொண்டுவரும் ஜட காமனிதர்களின் மெய்யுடுக்கி நோயில் துவளும் எளிய தாசியின் நாழி ஓடு மூடிய மரவீட்டில் புகைக்கூண்டு வழியே அலையலையாய் சுரியும் பிரபஞ்ச சுதிகானம் ரகஸியமான மஞ்சள் பூவிலிருந்து மெலியும். விசாரத்தில் ஆழ்ந்த தேவதாசியின் பூர்வீக இசைவீடு ரகஸியமாய் கமலவேணி, விஜயாளிடம் சொன்ன தாஸின் வர்ணமெட்டு இருந்து கொண்டிருந்த பாதரஸப்பேழையில் எரியும் சிமிழிக்குள் பறவைகள் மூக்கை நனைத்து நாசியில் பாடும் சிறுபறவைகளிடம் உதிர்ந்து பரவிய கருப்புக்கோட்டில் அலகு கொத்தி இசைநூல் பிரதியொலி பறித்து இடம் விட்டு இடம் மாறி செல்லும் இசை.

கே. எல். சைகாலிடமிருந்து வந்த கடிதங்களின் பழுப்பு நிறப்பாசி எழுத்து. முத்திரைத்தடத்தில் தாஸ் மீது பாடகனின் நட்பு உரையிடப் பட்டிருந்தது, மரவாசனை பரவிய தாஸின் ரங்கூன் பெட்டிகளில் அடுக்கிய பழுத்த வஸ்திரங்களில் தீபஒளியில் வெளிர் மஞ்சள் இற்ற காலத்துடன் ஒட்டும். தீபச்சிமிழில் மறைந்த சரசப்பொற் கோழி மஞ்ச நிறப்பாவையாகி சிமிழிக்குள் நடனமாது மெல்ல சுடர் மிருது வான உடல்கதிர் மரக்கூடமெங்கும் மாய இழைகளாய் அவள் சாயை உருமாறி சதுர்தண்டிப்பிரகாசிகை ஒளிநூலாய் ஆனது. மலார்ராகம் முடிந்த அரக்குமரக் கூடத்தில் வயதான அமிர்தம் கிழிந்த கருப்புக் கோட்டை ஊசிஒளியால் தைக்க உதிரும் நூலில் தாஸின் வரி சிதைந்து கருப்பு இசைத்தட்டில் சுழலும் கடந்த பாடல். கல்கத்தாப் பெட்டிகளின் மரக்குமிழ் மீது தைல மினுப்பில் ஒட்டிய தாஸின் விரல்ரேகை அச்சு மறையாமல் அப்படியே விட்டிருந்தாள் கிழத்தாசி' அமிர்தம். அவரது கல்கத்தா நண்பன் கே.எல்.சைகாலோடு டிராம் ஏறிப்போன பல பகல்வேளை மறையாமல் கருப்புக்கோட்டில் படிந்திருக்கக் கூடும். சைகால் கொடுத்த கல்கத்தா புகையிலை கூடும் பைப்பும் கோட்டும் கருப்பு அகலும் பத்திரமாய், தெருவில் இறந்து கிடந்த சைகால் சேரிக்குள் பாடிய இசைத்தட்டுகளில் கோடு மெல்ல வெளியேறுகிறது குரலுடன். அவள் கண்ணீரின் நிழலில் உயிரின் அனந்தத்தை இசைக்கவும் மஞ்சப்பூத்தெரு வாசனை ரகஸிய உள்ளுணர்வுகளைத் தூண்ட மறைக்கப்பட்ட தேவதாசிகளின் விரல்கள் பிரபஞ்ச அசைவில் இருக்கவும் விரும்பினாள் தனம். அத்தெருவில் மறைந்து போன இசை எளிய வாழ்வின் விதியாக இருக்கவும் இவ்வுலகின் நுரையீரலில் நிரம்பிய காற்று தாவரப் பாசிகளில் மச்சங்களில் நீரின் ஆத்மாவுக்குள் ஊடுருவிச் சென்று தனத்தின் மிகப்பழைய வீணையின் கிளர்ச்சியிலிருந்து முத நூலின் அசுர மெட்டு உயிர்பெறவும் வீணையின் ஆழத்தில் அவள் உயிர் கசிந்து வெளிப்பட ட சாயைகள் மெல்ல உடலாய் உருக்கொள்ளப் பார்த்திருந்தது மஞ்சப்பூதெரு.

கிரகங்களின் பெயர்ச்சியில் மாறும் சுரங்கள் கடல் ஆழங்களில் சாவின் மெளனம் கலங்கப்படாதிருக்குமாறு சந்திர சூரியர் துந்துபி கதிரெதிர் நரம்பு மயக்கத்தில் அமிர்தத்தின் ஆவீமீன் நீந்தி சுரங்களில் வால் சுழற்றும். ஒலிகளை விழுங்கும் ஆவிமீன் ராட்சத வடிவத்தை அடைந்து அசுரகண மூதாதையானது. கடல் பாய்களின் நிழல் விழா ஆழத்தில் என்.எஸ்.எஸ். இர்வின் லாஞ்சி ஏறிய தாஸ் தலைமன்னாரில் தேவதாசிகளுடன் இசைப்பேழையைக் கொண்டு கதிர்காமத்தில் நிகழ்த்திய மெல்லிய திரைச் சீலைகள் பின்னே இசைத்த உருவங்கள் லாந்தர் விளக்கில் அசைந்தது. உயிரினங்களுக்கான ரகஸிய பாஷையில் விஜயாள் திராட்சைநிற வயலின் வில்லின் நாணைமுறுக்கி காலத்தை திருகிமறைகிறாள் என் கொழும்பில். எஸ்.எஸ். இர்வின் லாஞ்சி திரும்பிய நகர்வுகளோடு சேர்ந்து ஊர்ந்துவரும் ஆவிமீன்களுக்கு கொஞ்சிய வாறு விஜயாள் சொன்ன நால்வகை யாழின் வட்டப்பாலையைச் சுழற் றிய நீர்ச்சுழியில் பாஷைகளுக்கு முந்தியசமிக்ஞைகள் இருக்கக்கூடும்.

கிழத்தாசி அமிர்தத்தின் ஆவிமீனின் கண்கள் இசையின் எல்லா அமைதியையும் விரித்து தனிமொழியின் அடையாளங்களை தன்னுள் கொண்டிருந்தது. அவள் உடல் நட்சத்திரச் செதில்களால் ஓணானின் பழுப்பு நிறத்தில் சுருங்கிவந்தது. எல்லோருமே தாவரப்பாசியின் மெதுவான குறத்தில் இசையாக இருந்த சூனியத்தின் ரகஸியத்திலிருந்து வந்தார்கள்' என ஆவிசொன்னது. நீரில் விரியும் இலைமடல்களில் பிறந்த பெண்சிசுக்கள் அமிர்தாளின் உடலில் ஒட்டி குருதியின் மிருதுவான இசை வட்டத்தில் நீந்தியவாறு கனவுக்குள் மறைகிறார்கள். காலான்களில் இருந்த வரி கொண்ட அவள் தேகம் பழுத்துவந்தது நரம்பு தெறித்து. இல்லா தபலரும் தாவர இருளில் வளைந்து எட்டிப் பார்க்கிறார்கள் அவளை. அமிர்தாளின் கால்கள் அசைவதைப்பார்த்து மிரண்டுபோன விஜயாள் பச்சிலையை விளக்கில் வாட்டி சூட்டுடன் ஒட்டவைத்தாள் அவள் கால்களில். வெற்று அசைவில் பாதவிரல்கள் மெளனமாகச் சொன்ன தாள அமைதியின் விரிவுபுவனமெங்கும் ரேகை யாக கோடு சுற்றியது. உறக்கத்திலிருந்தவாறே மறைந்த சகோதரிகளை கூவுகிறாள். இறந்து கொண்டிருக்கும் சதங்கையின் உயிர் காலத்தை வசப்படுத்தி எங்கோ கொண்டுபோனது. மெலிவான ஒளிமேலே. கரு மையும் வெளிச்சமும் மிகுந்த இலைகள் காற்றில் தத்தளித்து அதிர்கிற ஓசை. மெல்ல மெல்ல மண்ணில் இறங்கி கீழே புதைவுகொண்ட எலும்புகளின் அசுர இசையில் கரைந்து கொண்டிருந்தாள் அமிர்தம்.


பொட்டுக்கட்டிய சிறுமிகள் பாசுரம் முளைத்த துளசி என்பவளை அழைத்து வருகிறார்கள் தெருவுக்கு. அமிர்தம் அருகே போய் அவள் கைக்குள் மூடியிருந்த மஞ்சள் பூவைப் பார்த்தாள் துளசி. குளிர்ச்சியான அந்தப்பூ எலும்புகளின் இசையில் எரிந்து பிரகாசமடைந்து நட்சத்திரவடிவமாகமாறி வேகமாக மறைந்தது ஒளியாய். காரை வீட்டு மாடித்திருப்பங்களிளெல்லாம் பரவிவந்த அந்த ஒளியில் பாசுரங்களைப் பறிமாறிக்கொண்டாள் துளசி. பூமியில் கலந்துவிட்ட இசை அலைகளில் மஞ்சள் பூஅந்தரங்கமாக தாவர உலகுடன் சேர்ந்து வருகிறது மேலே வளைந்து. வாடி உலர்ந்து போய் நின்றிருக்கும் ஓரிரு பூவரச மரங்களின் பின்னால் வந்துபோன ஒருவனுக்கு முதல் காதலை அளித்த கள்ளம் கபடறியாத அமிர்தம் துயரமான காற்றாகிபூவரசுகளை அசைத்தவாறிருக்கிறாள். தாஸின் கருப்பு கோட்டு சாம்பல்வெளிறிய பாசிமுளைத்து இலைகள் படர்ந்து வாசனைகொள்ளும் மரக்கூடம். பூர்வீக இசைவீட்டின் உள்ளே அமிர்தம் மஞ்சப்பூத் தெருவின் எல்லா அடையாளங்களும் நூலில் பின்னிக் கண்டாள். வெள்ளைப் பூக்கள் கோட்டில் பறித்து பாதரஸப்பேழையில் வைக்கவும் உலர்ந்த கண்ணாடியில் திரும்பவும் அவள் பேர் சொல்லி அழைத்தவாறு யாரோ மறைந்திருக்கிறார்கள் சுற்றி. மஞ்சப்பூத் தெருவில் கிடந்த குருத்து மணலில் கால் விரல்பதிய சிறுமி சதங்கை ஒலி மணல் சுழியில் சுற்றி வீடுகளுக்குள் வரும் காற்று. அந்த வீடுகளின் கணிகைகளால் வளர்க்கப்பட்ட துளசி அலையாக இருக்கிறாள் சமையலறையில்.

 சமைந்த கன்னி மெல்ல சுடர மிக உயரமான சமையலறையில் உதிரத்தொடங்கிய குரல்கள் ஆண்பார்வைபடாத பதிமூன்று கணிகையரின் ஆவி உருகும் சுரசாதகத்தில் மெலிந்த குரல் விட்டு விட்டு கேட்கும். கன்னிச் சுடர் மீது புகைவளையம் சுழன்று உயர எழுந்து படர்ந்தது கண்ணாடிச் சட்டத்தில். புகையின் அடியில் மங்கிய புகைப் படத்துக்குள் திறந்திருந்த கமலவேணி கண்களின் அமைதியில் நகரும் மூங்கில் நதி. கபிலநிறக் கண்களின் உள்ளே நிழல்படமாய் உறைந்த கணம் நின்று சதங்கைக்குள் சுருளும் காற்று. மூங்கில் நதி உருளும் நீர் குழல்கள் அலைகோர்த்து தத்தளிக்கும் மாயநீர் இசை. குழல் முளைத்த வேர் குருத்தில் இசைவிரல் தொடு கணம் உறைந்த செப்பியார்டோன் புகைப்படம் உ.திராத அறையில் தானே கழன்றுதிரும் மஞ்சள் பூத்தெருவொன்று அசையா மனக்காற்றுள் வண்ணத்துப் பூச்சி பதுங்கிய வீணை நாண்களில் படபடக்கும் இறகு சுரஸ்தானத்தில் பலவித ரஞ்சகமுள்ள சுரங்களில் இமை பட...க்கும் தாசி கை விரலின் அசைவினாலும் அழுத்தத்தினாலும் சிக்கிய வர்ணப்பூச்சி சாவிலும் நுண்ணிய பேத ஒலி வித்துகளில் தாசியின் மரணம் இமை மூடு கணத்தில் தனித்தனி நிறமாக மறையும் தம்பலப்பூச்சி. மிகப் பழைய பாடலின் வெல்வெட்ட நிறம் உதடுகளில் துடித்திருந்தது. அறையின் மெழுகிருள் உருகி செர்ரி நிற பிரேம் சட்டத்தில் நெளியும் கொடியும் இலைகளும் சிறகு முளைத்த நிறங்களைப் பூண்டு உருமாறி பாம்புச்சட்டையுள் புகுந்த சருகுலயத்தில் திரைச்சீலையின் பின்னே உருளும் அபினயத்தில் படமெடுத்து ஆடிய முக சூலத்தில் பொடி தேகம் படர்ந்து வெண்டில் மண்பரப்பில் விஷம் முகர்ந்து ஆடும் ஸர்ப்ப துள்ளல். ஸ்திரீகள் நுனி நாக்கில் தீண்டிய மகுடிக் காற்றிழைகள் கண்ணிருட்டில் கணம் சுழல கால் சதங்கை வியாபகம் கொள்ளும் மாயம். சர்ப்பம் சிலம்புகளாய் கால் சுற்றி விழித்த கருங்கணத்தில் தனித்தனி விழியாக ஊடுருவி வரும் சிலம்பு, ஒலிநாவுகள் அறுபத்திநாலும் சீறும் தவளை நீர் நாவுகளில் கூட்ட உணர்ச்சி ஒன்றையொன்று தொடர்ந்துவர ஒத்திசையின் சுர அடுக்கில் காலக் கவை முள் உடல்குத்தி வெப்பமாய் தாவும் உதிர இசை பிடில் தந்திகளில் தவளையின் கூட்டு நாதத்தை ஒலிப்ப செவித்தோலில் தடவும் மிருதுவான தவளையின் சுருள்நாக்கு நீர் உலகின் ஆழங்களில் மெளன அசைவில் நீந்தும். மயங்கவைத்து ஒப்பனைத்திரைக்குள் மறைவான வாசனை உதிரும் சாந்துச் சுவரில் சட்டமிடப்பட்ட கண்ணாடிக்குள்ளிருந்த ஸ்திரீபார்ட நடிகன். பூச்சிகள் அளித்த செப்பி யார் டோன் புகைப்படங்களில் இருந்த கங்கா பாய், பஞ்சரத்தினம், கமலா, நாஸிகாவதி, தானரூபி அனுசுரங்களைப் பிடித்த விரல்களுக் கிடையில் சிலந்தி நூல்கோர்த்தபின்னல் கால்களால் நெய்து நுண்ணிய கால அடுக்கில் ஊடுநூல் பாவிச்சென்றது பூச்சி.

மரபீரோவின் தைல வண்ணத்தில் பர்மா ஈட்டிமர ஆசனங்களில் தாஸ் அமர்ந்த தடம் பதிவு மாறாமல் இருக்கும். முக்காலிமீது தைல விளக்கு கசியும் கூம்புவடி வ சிம்ழி நீண்டு சுடர் உயரமாய் பளிங்கில் பிரதிஒளி அசைந்தது. கடல் சிப்பிகளில் பச்சை நிறம்படர்ந்த நாரில் செராமிக் கல் பலகைகள் வர்ணம் பூசிய செடி ப்பூக்களுடன் நடுக்கியது வெளிச்சத்தில். மர அலமாரிகளில் தேவதாசிகளுக்குச் சன்மானமளித்த நாட்டிய ஆடைகள் நிஜமுத்து பதித்த வி : 30:ரிகள் களிம் பேறிய சதங்கைகள். புஸ்பராகக் கல்பதித்த நெற்றிச்சுட்! இலைமிடி தாமிரப் பூண் போட்ட குச்சி வளை முங்கில்லில், மான் தோலில் புத்தரை நோக்கித் தவமிருந்தாள். அமிர்தாள் பர்மாவிலிருந்து கொண்டு வந்த புத்தசிலை அது. பெல்ஜியம் கண்ணாடியின் ஓவல் வடிவத்தில் பதிந்த தாசிமுகங்கள் நாய் மண்டையோட்டை நீரிலினடித்த வெளிர் சூடி முன் உருமாறும் ஸ்திரி. தாசி தோன்மீதமர்ந்த தாசிமுகங்கள் நாய் மண்டையோட்டை நீரிலிழைத்த வெளிர் ஆடிமுன் உருமாறும் ஸ்திரீ. தாசி தோள்மீதமர்ந்த தேவாங்கு தலைப்பேனை உருவி நகத்தில் இருக்கி கண்ணாடியில் முகம்பார்க்க இந்திரகோப்பூச்சி விளையாடியது ஆடியில். கருப்பு நாயின் பக்கவிலாவில் பாகாக்கை அமர்ந்து கூறிய அந்தரங்க வெளி ஆடியில் தோன்றி தாசிமுகங்கள் மாறிமாறி ஜடைப் பின்னல் பார்த்து கூந்தல் விரித்து அரிதாரம் கழுவும் தைலம் பூசிப் பிரிக்கிறாள் நாட்டிய முகத்தை. முதிய கீறல் துணுக்குற பாலுண்ணி களின் பார்வையால் சலனமாகிறாள். கண் இமையடியில் கருத்திருந்தது காலம். எதையோ நினைத்துச் சலிக்கும் பெருமூச்சு கண்ணாடியில்  குழந்தைகள் ஏந்திய சிண் ணங்களில் திரா1 சை ஒளிவரி சுழன் று கண்ணாடிப் பரப்பில் இலைகளில் சூன்யச் சிலந்தி வலை பின்னிய நூல் குறுக்கு அடுக்காய் அதிரும். கமலவேணி முகத்தில் சிலந்த வெள் ளி வலை விரித்தவாறு நெய்து கொண்டி ருந்தது. வலையை ஊடுருவிய அவள் கண்திரா" சை 4,ரல் வண்டுகளாய் அறையினூடு ரீங்கரித் துச் சுழன்று சுற்றி குழல் மூங்க : ர், துளைகளில் கண்களாக பொருந்தி பார்வை தனியே யாரும் அறைகளில் பார்த்தது. கண்ணாடித் தொட்டிகளில் பாசிண்டை நீர்த்தாவரங்களில் செதில் சிவந்து காற்றசைக்கும் கரு வள்ளை மீனின் இமை மூடாத பார்வை அறைகள் சுழல் சுற்றுடைய நீருக்குள் இருப்பதாகப் பார்த்தது தோற்றம். பழவகை கொட்ட. டை கள் தானியம் வைக்கும் ஆதிகால ஏழை கிராமங்களிலிருந்து வந்த அடுக்குப்பானைகளில் அப்ஸரஸின் தன்யங் கள் ஒளிந்திருக்கும். பழவகை வாசனையில் மூழ்கிய சயன அறையில் பரம்பரையான தாம்பத்தியக் கட்டிலில் விருத்தாப்பியப் பருவத்தில் கிடந்த தாஸின் முனகல் வரும். மரத்தோப்பின் மொடு மொடுவென்ற சத்தம் வரும் கட்டில் சட்டங்களில். பரம்பரையான தாசிகள் கட்டி, லை விட்டிறங்காமல் காத்திருந்தனர் அப்ஸரஸின் பாதரஸதன்யங்களே கட்டில் குமிழ்களாகி மனிதப் பாலின் கொச்சை நெடி வந்தது கட்டிலில் நினைத்தபடி யெல்லாம் பேசும் கட்டிலது. மருந்தீடு மயக்கம் அலை வுறும் தாம்பத்தியக் கட்டில் காலில் பெண்ணுருவஞ் செய்து சித்திர மூலக்கொடி சுற்றி அசைய பேசும் வசியத்தில் மையை எடுத்து எந்தப் பட்சி இறகில் தடவினாலும் அந்தப் படசி வந்து கட்டில் மீதமரும். பட்சி அரசாயிருக்கும் ராத்திரி ஏர் வெள்ளிகள் வெகு தூரம் போய் திரும்பிக் கட்டில் அருகில் அப்ஸரஸின் தன்யங்களில் மறையும். பருத்திப் பஞ்சினால் ஆமணக் கெண்ணை விளக்குத்திரி ஒளிகருகும் இரவில் தெரியும் பச்சைப்பாம்புகள் தோன்றி மதனப்பூவடி வில் கல்வி கொள்ள மேயப்போன சர்ப்பங்களும் ஒளித்திரி கருகச் சேர்ந்து கொள்ளும் உடல் இல்லாத தேவதாசிகள் கட்டில் காலில் தோன்றி மச்சகந்தி உருவில் நீர்யாழில் அலைவுற்ற ராகல.. சணம் வளைவுகள் கமகங்கள் சுரங் களைப்பிடிக்கும் வழியில் அனுசுரங்கள் ஒருங்கு சேர்ந்து ராகமுண்டாக் கினர் தாசியர். பளிங்குத் தளத்தில் புலர்பொழுது நாட்டியம் பயிலச் சிறுமிகள் நடமாடும் பாதங்கள் விதவித மென்மையான குருத்து விரல் களின் பதிவு மாறாமல் உயிர் பெற்று வரும் மஞ்சப்பூத்தெரு.

இருட்டில் நிற்கும் மூலிகைச் செடிகளின் மயக்கத்தில் கஸ்தூரி மணக்கும் அந்தத் தெருவில் இருளில் தூண்டப்பட்ட சதங்கைகளின் சீற்றம் தக்கித் தக்கிட கிட தகிதா தாதிர துரதா... மென்றதிர ஸ்திரி சாடை உயிர்பெற ஜனனத்தில் தொடங்கினான் போலும் புனைந்த ஸ்திரீ முகம் கண்ணாடிக்குள் மறைகிறது. அரும்பிய மீசையை சவரக் கத்தியால் மயிர்கட்டை கணுவில் கீற ஆண்மறைந்து வேறு வேறு வடி வ கணிகையாகி மர அலமாரிகளில் அடுக்கிய துகிலை ஆபரணங்களை படிந்து உள்சென்ற பாதரஸ தாசியைத் தேவாங்கு அழைத்த படி கூண்டில் புலம்பும். உடல்மீதுநகரும் ரோமச் சுழியில் மயங்கி மறைந்த யுவனை நினைத்து திரும்புகிறாள்.

தீவு தீவாந்தரங்களில் கிடந்த அம்மண ரூப்புத்தர்சிலை யொன்று தந்தத்தில் வடித்த நிசப்தத்தில் இமை மூடிப் பார்வை அக விளக்கம் கொள்ள கண்விழுந்த இடமெல்லாம் பட்டணங்களும் நான்கு திக்கு களிலும் போன பார்வையில் விதிகளும் தாசி தலைமுடி நீளத்தில் நீட்டி கிடந்தது. பாதரஸத்தில் தோன்றும் வேப்பமரக் காக்கைக் கூட்டின் வடிவத்தில் உற்பத்தியான பட்டிணத்தில் மந்திர வாதியான காக்கை மூக்கால் அடைக்கும் கூட்டு நரம்புநார் சருகு முள்வேர் உலர்ந்த செடிக்கவையில் புலம்பும் மொழிபுகா இசைக்கு நோயாளிகளும் குழந்தையும் கனவினூடே கண்ட காக்கைச் சிறகில் தொடுகி றார்கள் துயிலில். அம்மணரூப் தந்தச் சிலை நாணத்தில் எரியும் மேனியுடன் கரைகிறது மெல்ல, தந்த உடல் வரியில் ருத்ரகணிகை ரேகை தொட்டுத் தேயும் நிர்வாணம். தாஸின் கருப்பு இசைத்தட்டுகள் அடுக்கி அடுக்கிச் சரிந்த நாட்கள் கோடு சுற்றிவிழுந்த கிராமபோன் ஊசி பர்மாவி லிருந்து வந்த புத்தர் சிலைமுன் சிதறிக்கிடந்தது. கரும்பூனை உலவும் அறைகளில் யாருமில்லை. ரெட்டைவால் அரணை ஊர்ந்து செல்ல நுனிநாசியில் கல்வத்தில் இருந்த பாவை வாசனை வர செப்புச் சிமிழில் விளையாடும் பொம்மைகள் அரணைப் பார்த்து கூப்பிட பாழ் சுவர் களில் மறைந்தது பூச்சி.

ஒற்றை மாடிச் செங்கல் தெருவின் வளைந்த படி களில் சாயல் கொண்ட தாசி நவரட்சணம் முலைப்பால் இழைத்துக் கோர்த்த மெய்யுருகும் சகோட யாழ் கேட்டு சிங்கங்கள் வசப்பட்டு அசைவற்று நிற்க அவள் தன்யங்கள் கசிந்த கவிச்சிட்டால் ஒளிகொள்ள அனாதைக் குழந்தைகள் கூடி நிர்வாணமாய் மடிபுகுந்து பசியாறவிரல் அசைக்கும் சகோட யாழ் அதிர்வுகளில் உருவடைந்த சிங்கம் காற்றில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி ராகத்தில் மறையும். கண்ணால் பார்க்காத மிருகம் நாககரத்தில் தோன்றி ஆயிரக்கணக்கில் உணர்ச்சிகளில் பல திற ஆழங்களில் நுட்பத்தின் கவை கொண்ட சிங்கம் சுர இடைவெளியில் அலைவுறும். பூதசதுக்கத்தின் கையில் இருந்த ஆன்மாவை உருக்கும் நாகசுரம் வாடியபயிரில் கலந்து சிருஷ்டியில் ஓரறிவினத்தின் உயிரில் நத்தையில் தும்பியில் பல்லியில் சிலந்தியில் நுண் உயிரில் அணுத்திரைந்து பரவி ஒலிநாவுகளில் புலனாகி மேல் சுரத்திற்கும் கீழ் சுரத்திற்கும் இடைவெளியில் எரியும் காற்றாகிறது. செங்காலி ஆம்பல் செம்மரம் கடம்பம் தோதகத்தி வார்த்துளை தோல் புடை பறைகள் உலர்ந்து வரும் அறையில் நோயிலாப்பசுந்தோலும் உடும் புத்தொலி அருந்தியர் தெருவில் உலர்த்திய ஆயிரத்து மூன்று ஐந்து மிருக நார்த்தொலி தாளின் மரக்கூடத்தில் மௌனமாய் காய்ந்து வரும். மிருக உடல் உரிக்கும் கருப்புவிரல்கள் இந்த தோலில் மறைந்து விடைத்த பறைமுழக்கம்
ஊருக்கு ஒதுங்கிய ஒரு இருளில் நாயும் வால்நரியும் ஊளையிடும் குரல் ராகம் கேட்டுப் பிச்சாடணர் வரை போட்டுடன் பைத்தியக் கூத்தில் எரியும் திசையொலியில் மயானம். எரியும் உடல் எழுந்து ஊளையிட்ட நாத ஊண் வாட்டிய சக்கிலியத் தோல் வளையவாயமர்ந்து மரித்த மாடுகளின் தொலி துடிக்க மூட்டிய தொலிவாரில் உறுமும் ஊமையன் பிணந்தள்ளும் கோல் எலும்பில் விழுந்த ஓசைசாவுக் கூத்தாடும். கருத்த முகில் கூட்டம் தெற்கே இறங்கிபிளந்த ஒலியில் கன்னியொரு பாகமாய் ஆதியில் ஊழி நெருப்பாற்றில் இருந்த நூத்தி எட்டுக் கரண முடைய அரங்கில் மூங்கில் கண்கள் நெருப்பு உமிழ தீக்கணம் நடுங்கும் முதல் ஊழி.

உத்தீக்கணம் பந்தங்கள் கழற்றி எரியும் கடல்கோளில் முதற் சங்க ஏடுகள் கீறும் அசுரப்புலவரும் முனிகளும் இயற்றிய சரபலீலையில் ஆதித்தாண்டவம். அருவமேனி நடுநின்ற முதல் சபையில் நிழல் எனும் தாண்டவம் கால் மாற தனம் வீணைத் தந்தி எரியும் நீரில் சிரவகை பதினான்கும் கண்வகை பதினைந்தும் நவநாதன் காரணம். தாசியெனும் அரூபவசீகரத்துள் கல்தச்சன் உயிர் உருகி மெலிந்த சுரப்பிர தேசத்தில் உடல்தானே... நிழலா... சாயைகளா கல்லில் பதுங்கிய முகபேதம் சித்திர கரணம் சிதையாமல் சிற்பவரிதிரிய திரிபுவன அடிக்கல் மிருகங்கள் கோபுரத்தை நகர்ந்த குகைக்குள் தீட்டிய நாகவீணையின் முகமாய் பதிந்து சீறும் தந்திகளைத் தன் தோலால் மூடிய தேவதாசி குகை விதானத்தில் சித்திரம் கொள்ள மிருக வீணையின் ஜீவநாண்களில் அதிர்வுகண்டான் நிச்சயமின்மையின் கணநேரத்தில்.

திருவிடைமருதூர் மேற்குவாசலில் நாயுடன் நின்றவன் வரை யோட்டை நாய் மண்டையில் போட்டுடைத்து நூற்றி ஆறு உள்ளு ணர்வு கொண்ட நாய் மண்டை எலும்பேந்தி நிற்கிறான். விலங்கு பூட்டிய ஸ்திரீகளைப்பிரகாரம் சுற்றிவரும் தலைமுறைக் கோட்டி ஒருவனை ஜன்னலில் பார்த்தான் பிரமகத்தி. உள்வெளி பிரகார நீளத்தில் நீட்டிய பித்த நீட் சியில் பூச்சிகளின் இரைச்சலைக் கேட்: கும் பிரமகத் தியின் ஜன்னலில் பூக்கள் கூவிச் சிரிக்கும். சப்தங்களை கவனமான தடங்களில் விட்டுச்சென்ற தாசி உடல் குகையுள் வில்நாணில் சேர்ந்து கோடு கொள்ள குரங்கு விரல்கள் நீண்டுவரும் குகை இருளில் ஐந்துக் களின் தோல் உரசலில் புடைத்தபாறை ஓசை. குரங்கின் மிருதுவான கை ஸ்பரிசம் பட்ட. ராவெள்ளி எரிந்து சரிந்து வம்பி துடைப்புடவில் விஷத்துள் புகுந்து உள் சுழல்கிறது மஞ்சள்பூ

சாயைகள் சதாவும் மோனத்தில் பரவிவர தெருவில் உயிர் கொண்ட இசையும் நாட்டியமும் நெற்றிக்கும் உந்திச்சுழிக்கும் ஒரு நூல் பிடித்தும் அந்நூலை பனிரெண்டங்குலமாய் பாதம் பகிர்ந்திருந்தது மண்டலம். பாதம் போனவழி கைசெல்ல விரல் அசைவில் விழி செல்ல பாதாதிகேசம் சுழித்து ஆடுகிறாள் கமலவேணி. மஞ்சப்பூத் தெருவின் - ஞாபகமாய் எங்கோ மறைந்த கமலவேணி அரூப வாசனைகளில் பூக்கார வீடுகளில் தோன்றி மறைகிறாள் தினம். கல்மண்பத்தில் வரைந்த கோடு களில் காமக் கோட் டி பிடித்த சித்திரத் திரள் விதானங்கள் உருமாறு கின்றன நினைத்தபடி . மறைந்தவன் சாயையும் மண்ட், பக்குளிரில் கோடுகொள்ள தாசிகள் உயிர்பெற்று வருகிறார்கள் தூண்களில். நட்மாட்டமில்லாத மண்டபத்தில் தூண்களாயிருந்த வேறுவேறு கல் வகையில் தோன்றிவிடும் கண்ணுக்குப் புலப்படாத வேங்கையுரித் தோலும் நாகம் சுற்றிய கழுத்தும் விஷம் சுமந்த கண்டத்துடன் சமசிர லட்சணம். நவரஸபேதம் பிரிய சிவன் பாதம் தாக்கியதெல்லாம் தாளம். திரிபுரங்களைச் சட்டெரித்த உகாந்தகால ருத்ரவீணை தாசி கையில். தேவதாசிகளின் பல்லுருவம் பெயர்ந்து கொடு கொட்டி ஆடும் நர்த்தனரூபம். கணிகை கீறிய இசைஏட்டில் கழன்றுதிர்ந்த லிபிநீரில் மிதற்று நீலகண்டத்தில் பாம்பின் சூலத்தில் தாக்கி இசைகூடி தேவ தாசி வீணையின் கனராகம் நீர்ப்பாசியில் முளைக்கும். தா சித்தொரு நால்வகையாழ் வட்டப்பாலையில் சுற்றி கிரகம் மாறுவதில் இடமுறை திரிபென வேனிற்காதையில் தாள அமைதி கீறிய கல்தச்சன் சீர்தாளம் தந்து நிலைகுலைந்து அழிவின் ஊழிக்காற்று சூழ ஒடுங்கிக்கொண்ட உமையின் நீர் உரு சலனமாகும் இசையில். எரியும் கல்லில் கீறிய நெற்றிக்கண் உள் பார்வைச் சல்லடை ஆயிரம் கண் விழித்து ஊர்ந்து விண்பரப்பில் சுழலும் நட்சத்திர ராசிகளிடையே மஞ்சப்பூத்தெரு வீடுகளில் புலித்தோல் போர்த்திய தனம் வீணை. விதிமேல் தாக்கிய பாசுரத்தில் திரிபுரமெரித்து பொட்டுக் கட்டிய சிறுமிகால் ரேகைக்குள் புகுந்தான் வேங்கை உரியுடன்.

அத்தி இலுப்பை செண்பகவிருட்சம் அரசிருந்த இரவில் தேய் பிறைக்குள் வந்த மங்கிய வெளிச்சத்தில் மேல் தூக்கிப்பார்க்கும் குரும்பை முலை சிப்பி முலையில் உதிர நிறம் ஒளிர இருள் கூந்தல் மூடி தன்யங் களில் நெளிய சிப்பிவரிக்கோடுகளில் பூசிய மருதோன்றி இலை முற்றி கண் நரம்பு அசையும் மிருதுவான இலை மிடியை மூடிய இலைக் கண் வெளிச்சமடைந்து அசையும் இலை இறகு அடர்ந்த அறுபத்தி நாலு கிளிகளும் சுவர் பொந்துகளில் இருந்தவாறே மறைந்த கணிகையின் கனவுகளில் ஆரூடம் சொல்லும். மிருதுவான கன்னிகளின் நடமாட்டத் தைப் பார்த்த செடிகள் அவர்கள் உடலில் குருத்து ரேகை மாறுவதை தெளிவாகப்பார்த்தன. உயரமான சமையல்கட்டு ஓடுகளில் இருந்த இருட்டு கீறல் விழுந்து வெளியேறிக்கொண்டிருந்த ரகஸியங்களை நீர் நகரின் இலைவீடுகளில் குடியிருந்த கம்பளத்தார்கள் புகைக் கூண்டு வழியே பார்த்தார்கள். பொட்டுக்கட்டிய வமிசத்தாருக்கு ஆபத்து நேரப்போவதை சாமக்கோடாங்கி முன்னுணர்ந்து சொல்லி விட்டுப் போனான். சுடுகாட்டுச் சாம்பலில் புரண்டு மயான ருத்திரனை அழைத்து பூசைபலியிட்டு சாரைப்பாம்பு சட் டை சுற்றி சமாதி வைத்த தலைச்சன் எலும்புப்பிடியில் மை சேர்த்து கண்ணில் தீட்டிப் பார்த்தால் உரை நோக்கி மேற்குத் திசையிலிருந்து வால் நட்சத்திரம் சரிந்துவரக்கண்டு கம்பளத்தார் சொன்னகுறி விண்ணில் சரிந்து வந்தது.

செடிகளின் துயரம் இன்னதாக இருந்ததென்று அண்டைவீட்டார் உணர்ந்திருந்தார்கள். ருதுவான சிறுமி வயதான தாசிக்கு சம்ரக்ஷணை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்தாள்.

கமலையைக் குளிப்பாட்ட அங்ங்னக்குழிக்கு நகர்த்திக் கொண்டு வந்து மெல்ல படுக்க வைத்தாள் மேகலா. அங்ஙனத்தின் ஈரவாடையில் பல பெண்களின் வாசனை உறைநிலையில் படுத்திருந்தது. பெண்களின் கால் பதிந்த சுண்ணாம்புத் தரையில் இருந்த உயிரோட்டத்தை ஸ்பரி சித்தவாறு வெகுநேரம் ஸ்திரீகளின் தாபவேகத்தை நுகர்ந்தாள் கமலை. அவளைவிட்டு உதிர்ந்த பல வர்ணமெட்டு பீங்கான் கோப்பையில் படர்ந்த இஞ்சுக்கிழங்கில் காரமாய் படர்வதை பார்வை கொண்டு முளைவிடுவதைப் பார்த்தாள் நிதானமாய். காட்டில் மண!',த தளியி லார் மரபில்வந்த திகைப் பூண்டுகளும் தொட்டால் வாடியும் அமலைச் செடிகளும் மல்லிப்பூவும் அலைபாய்ந்து சுவாசத்தில் பட்டதும் நீர் நகர் தாண்டிய தூரக்காடுகளைப் பற்றி வலியுடன் முணுமுணுத்தாள். முற்பிறவிகளாய்த் தொடரும் எலும்புகளின் செந்நிறமாடங்களில் நிழலாக மறைந்து தோன்றும் மேகலா ஒளிர்வு கொள்ளும் கற்பளிங்கில் கன்னிமை காக்கப் பளிக்கறையில் மிதக்கும் பிம்பமாய் அலராகிப் பேசுகிறாள் பாட்டியிடம். நவநாதங்கள் இருட்டில் முளைவிட்டு வெளிறிவளர்ந்து பாட்டியை எட்டிப்பார்த்து உதய குமாரனை மறுத்து சுழல்வண்டாகி அவன் உவவனத்தில் பின் தொடர்வதினின்று விலகிக் கணிகையர் சுரத்தாவரத்துள் மறைகிறாள். மேகலா வைத்தேடிச் சுதமதி எல்லா ராகங்களிலும் யாழ் இசைக்க மணிபல்லவச் சிங்கமொன்று செந்நிற நில உருக்கொண்டு யாழ் அதிர்வுகளில் உலவி பாட்டியின் மனத்தில் உறுமும். மயக்கத்திலிருந்த கமலை ''அது என் பிறவி மிருகம்

எலும்புத்தொடரில் சுழன்று மறையும் நீர்ப்பரப்பில் மங்கலாய் மூதூர் தெரிகிறதே” என்றாள் சிங்கத்திடம். அவள் நாடித் துடிப்புகளை ஜீர வேகத்தில் உணர்ந்த சிங்கம் பாட்டியின் வெப்பமான குருதியில் படர்ந்து பூர்வப்பிறவியைத் தொடுகிறது. அரூபமாய் மூச்சுவிடும் மூதோரின் நீழல்கள் வந்தன. மனித மிருக பூதக முனிகளைத் தாவரங்கள் அடையாளம் காணக்கூடும்.

சமையலறையில் எட்டிப்பார்த்த தும் தனிமையில் திறந்து கொண்ட கதவுகளைத் தாண்டி துயரங்களின் இருட்டைட அழைத்துக் கொண்டு அண்ணாவிகளின் மாக்கல்லில் வளைந்த பாரி நாயனம் சுருளும் காற்றுடன் வால்நரிகளும் ஊளையிட்டு தொலைவில் சிரித்தன. குளியலுக்காக அங்ஙனத்தில் நிர்வாணமுதலையாகக்கிடக்கும் கமலையைத் தங்கள் புராதன மூச்சினால் சூடேற்றியது பாரிநாயனம். கருப்பு மரத்தண்டுத்துளைகள் திறந்து இசைச்சாகரத்தில் எல்லா மிருங்களின் நரிகளின் முக்கலும் முனகலும் இடை..விடாமல் கேட்டது. பனைமர உரசலில் காட்டு வேம்பில் கிசுகிசுக்கும் நூறு அடுக்கைக்கொண்ட காற்றிலிருந்தும் தேள்கொடுக்குவளைந்து விஷமேற்றிய தந்திகள்

உருண்டு சப்தித்தன ஆழத்தில். காட்டு முள்பூவின் வாடையால் மாட்டுத்தொலி விரிந்து பகடைவிரல் முழக்கம் பாட்டியின் காதுகளில் உரசியது. பற்றி இருவயதான கிழத் த்துவிட்டு காலடிகளில் வால் நரிகள். தெரு தாவர சீர்த் தொட்டிகள் அருகில் சமையலறையில் அசைந்து கொண்டிருந்த நூற்றி இருள தாசி கமலை உறுமுவதை தள்ளி நின்று பார்த்துவிட்டு காலடிகளில் சப்தமில்லாமல் வெளியேறிப்போயின தங்கவால் நரிகள்..

பேசிக் கொள்வதைக்

களின் மீது படிந்த பச்சைப்

நீள சர்ப்பராசிகளின் ரோகங்களில் அசைந்த சாவ

 வாடை காதுகளி,  -  நிழல்களில் தோன்றியது. இருட்டில் தண்ணீர்த் தொட்டிகள் ஆண்பார்வைபடாத ருதுக்கள் நீருடன் கரைந்து பேசிக் கேட்டாள் தாசிகமலை.. நீர்த் தொட்டிகளின் மீதுபடி பாம்பு ரஸத்தில் எரியும் அகலில் தோன்றிய நீளசர்ப்ப மூச்சும் நெளிவும் இசைஉள்ளில் பதுங்கிய ராகங்களில் அது தானத்தில் நீரில் விரல் நீட்டித் தொடுகிறார்கள் தாசிகள் . பாம்பின் திரிஒளிபடிந்த நீர் சிற்றலைகளாக காற்றில் பரவி வி-ே சாயைகளில் கமலையின் முன் உருவில் நகர்ந்து சென்றது நகர் நீக நீரில் மிதந்து வந்த பனைஓலை முறிகளில் கீறிய முதநூல்களின் இடை குறிப்பு சிங்கமுகயாழின் மந்திரத்தில் நரிவினாஞ் செடிகள் என சூரியக்கலையாகவும் பச்சைப் பாம்பு அரகிருந்தது இருட்டில், தொட்டிகளை எட்டிப்பார்த்து உரையாடும் ஸ்திரீகள் நீரில் ரோஜா சம்பங்கி இதழ்களைப் பிரித்து மிதக்கவிட்டு நீரில் இறங்கும் இகம் சாற்றில் தைலமெடுத்து கூந்தல் தடவுகிறார்கள் விரல்களால். நீரில் முகம்பார்த்த தேவாங்கின் தோலில் எழுதிய லிபிகள் நீரே வாசித்திருக் கும். உறையும் சப்தங்கள் மெல்லக் கரையும் நீரின் இசை சலனமான கணத்தில் கமலை வீடு இசை கொள்கிறது. தாழ்வாரத்தில் ஆ டும் தாக் கணாங் குருவிகளின் கீச்சொலிகள் நீரைக் கீறி வடித்த காட்டின் தாவரமொழி கமலை காதில் விழுந்தவாறிருக்கும் தீராமல், தானே திறந்தபல ஜன்னல்களில் மறைந்த ரூபங்களும் ஓணான்களும் பெரிய பல்லிகளும் ஊர்ந்து வந்து சுவர்களில் மூச்சு விட்டுக்கொண்டிருப்பதை கிழத்தாசியின் ரகஸியமான கண்கள் பார்த்தன. மறைவிடங்களில் திரியும் உயிரினங்களைக் கூவி அழைத்தாள் அடிக்குரலில். கீரிகளும் புனுகுப்பூனையும் கருநாயும் காட்டு அணிலும் மண்ணைக் கிளைத்த வாறு படைபடையாய் கனவின் வளமையில் பிரவேசித்தன வீட்டுக்குள். கருணாமிர்த சாகரத்தில் ஐந்துயிர்களின் உயிர் ஆவிசப்திக்கும் கூட்டி சையில் ருத்ரனின் கால் பாதத்தில் பல்லி ஊர்ந்து தன் நாசியில் இருந்த மூச்சினால் நாதத்தைத் தூண்டியிருக்கும்.

தேவதாசியின் கட்டளைக்கணக்கு

தேவதாசி முறை புத்தமதத்திலும் ஜைன மதத்திலும் பரவலாக இருந்து வந்திருக்கிறது. மத்தியகாலத்தில் இந்துக் கோயில்களிலும் புத்தமடங்களிலும் தேவதாசிகள் இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. சீனாவிலிருந்து வந்த நாடோடி காமோஸ்டாவோவின் கூற்றுப்படி குஜராத் பிரதேசத்தில் நாலாயிரம் புத்தக் கோயில்கள் இருந்ததாகவும் அதில் இருபதாயிரம் நாட்டியப்பெண்கள் தினம் இருமுறை பாடி ஆடிப் புத்தர் சிலைக்குப்பூச்சொரிந்து உணவிட்டு வந்ததாகத் தெரிகிறது.
ஒரு ஊரிலே ஒரு தேவதாசிக்கு ஒருவராகன் விகிதமாய் அத்தேவ தாசிக்குப் பட்டினம் ஆளுகிற வம்பமெளரிய அரசனுடைய ஊழி யக்காரன் புத்தமடத்துக்கு வந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டான். அது எவ்வாறெனில் நாள் ஒன்றின் காலையும் மாலையும் புத்தர்முன் ஆடிப்பாடும் வேளை முடிந்ததும் இசை கற்பித்துத் தரவேண்டும். ஒரு திங்களுக்கு முப்பது வராகன் கட் டளையாகையால் என் கையில் ஐந்து மோதிரங்கள் இருக்கின்றன. அவை முப்பது வராகனில் செய்யப்பட்டவை. திங்கள் ஒன்றுக்கு நாள் முப்பதுக்கு ராகம் சொல்லி நடந்துகொண்ட நாளைக்கு ஐந்து மோதிரங்களிலும் உண்டான வராகன் கணக்குப்பார்த்து கொடுத்து விட்டுப் போகிறேன். அரிய ராகங்கள் அடங்கிய ஐந்து மோதிரங்களும் பிதிராய்ப் பல தேவதாசிகளின் கைமாறிவந்தது. அதை அணிந்து கொள்ளும் போது அவந்திகாபுரத்திலிருக்கும் பவிஷ்ய புராணத்தில் இந்து வழக்கப்படி கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டவள் சொர்க்கம் அடைவாள் என்பது புராண வாசகம். புத்தரை நாடிய தேவதாசியோ சொர்க்கத்தையும் கடவு ளையும் இசையில் படைத்துக்காட்டி அந்த ஐந்து மோதிரங்களுக்கும் கீழ் கண்டவாறு இசை கற்பித்துக் கணக்குத் தீர்த்தாள். அல்லாமல் அரசன் ஒரு வேளை வேறிடங்களுக்குப் பயணம் போகச்சொன் னால் இசை கற்பித்த நாளைக்கு ஐந்து மோதிரங்களிலும் உண்டான வாரகன் கணக்குப் பார்த்து கொடுத்து விட்டுப் போகிறேன். அரிய ஐந்து தேவதாசி மோதிரங்களும் எத்தனை வராகன் எடை, என்றால் 'க' வராகன் எடையில் 'க', 'உ' வராகன் எடையில் 'க' இருவராகன் எடையில் க' ஆக முப்பது வராகன் எடை என்ற வாறு தனது சீதள ஓலையில் எழுதியிருந்த கணக்கை நீட்டினான் டாவோ. அடுத்தமடிப்பில் செல்அரித்த புகார் தெரு வந்தது.


19. நீர்ப்பாழி


சாம்பல் நிறப்புகார் நகரில் இருந்த பவளப்பாறைகளில் புராண காலச் சொற்களின் ஒழுங்கு வரிசையில் புதிரும் ஒளியும் நிழலும் பின்னிப் பிணைந்த ஆமைகள் வெந்நண்டுகள் பழுப்புக் குளிர் நள்ளி கூர்மம் உப்பில் துவழும் ஏரலும் சுரிமுகக்கொம்பு நீட்ட கிளிஞ்சில் அப்பிய காளான் திட்டுகளில் பொங்கிய வெளுத்த கோரைகள் உயிர்ச் சிப்பிகளின் தடங்களில் ஊர்ந்து பதிந்தபுகார்க் கோடு நீரின் உருவாகத் தோன்றினான் மறலிப் பிச்சன். அவன் கல்சிரசில் சலஞ்சலச் சங்கும் சுரிமுகக்கோடும் மகரத்தின் சிமிழ்திறந்து கூன் முள் குத்த கவைமுட் கள்ளித் தலைகளுடன் அசையும் கபாலத்தில் பூத்த நெருஞ்சியே காயாகி ..............................

187 28

No comments:

Post a Comment