தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, November 28, 2018

லங்காபுரி ராஜா - பிரமிள் :: மகுடம் இதழ் - 10

லங்காபுரி ராஜா - பிரமிள் :: மகுடம் இதழ் - 10

இரவு பனிரெண்டுக்கு மேலாகிவிட்ட அந்த அகாலத்தில் கோபால கிருஷ்ணன் விழிப்படைந்து விட்டான். மணி 12 - 49.

பெட்ரூம் லைட் வெளிச்சத்தில் 1984 இறந்து 1985 பிறந்து விட்டதை அந்த எலெக்ட்ரானிக் சுவர்க் கடிகாரம் கொள்ளிக் காந்தியுடன் பிரகடனம் செய்தது. 12க்கும் 49க்கும் நடுவே இருந்த மேல் கீழ் புள்ளிகள் இரண்டு ரத்தத் துளிகளாக மறைந்து தோன்றித் துடித்தன.

பத்மினியும் அபிராமனும், குழந்தை அபிராமன் ஐந்து வயது தாண்டுவதற்குள்ளேயே பத்மினி இரண்டாவது கர்ப்பம் சிதைந்து மறைந்து விட்டாள். இது நடந்து பதின்மூன்று வருடங்களாகிவிட்டன. அபிராமனும் மறைந்து விட்டான். ஆனால் மரணத்தினுள் அல்ல. அப்படி மறைந்திருந்தால் ஞாபகம் மட்டும் அவ்வப்போது தோன்றி பத்மினிக்காக விசும்புவது போல் விசும்பிவிட்டு அடங்கி விடும். இப்போது குவிந்திருக்கும் பிரைவேட் நில அளவைகளில் மூழ்கித் தன்னை மறந்திருப்பான், அரசாங்கத்திலிருந்து ரிடையரான சர்வேயர் கோபால கிருஷ்ணன்.

பதினேழு வயது ஆகி இராத பருவத்தில் இப்போது கண் காணாமல் போய்விட்ட அபிராமனின் மறைவு, அவனது குழந்தைப் பருவத்திலேயே ஒரு தடவை கோபாலுக்கும் பத்மினிக்கும் சகுனம் காட்டி இருக்கிறது.

அது நடந்தது சிங்களக் காட்டுப் பிரதேசமான லங்காபுரியில் நேற்று நடந்தது போன்ற வீர்யத்துடன் அந்த ஞாபகம் மோதி வந்தது. அப்போது சர்வே டெண்ட் வாசலில் கிராமத்துச் சிங்களக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த அபி , தன்னை ராஜா என்று சொல்லிக் கொண்டான். லங்காபுரியின் ராஜா, அந்த வனப்பிராந்தியத்தை ஆள்கிற ஓர் அபூர்வமான யானைதான் என்பது கிராமவாசிகளின் பரம்பரை நம்பிக்கை. கரும்புத் தோட்டங்களைக் கொண்ட கிராமம் அது. கரும்பினால் இழுக்கப்பட்டு வரும் யானைகள் எதுவும் கிராமவாசிகளின் மிரட்டல் டெக்னிக்கைத் தாக்குப் பிடித்து நிற்காது. லங்காபுரி ராஜாவின் விஷயம் வேறு. அது நிலை கலங்கியதில்லை . தொடுவானத்தில் உதித்தெழுந்து, அசையாமல் நிற்கிற பர்வதம் போல் அது கரும்பு வனத்தை மீறி எழுந்து தோன்றி நிற்கும். ஒரு லாரி அளவு கரும்புக்கு மேல் அது தின்றதுமில்லை அடிக்கடி கரும்பு வனத்தில் தோன்றுவதுமில்லை.

ஒரு சம்பிரதாயத்துக்காக, அல்லது உண்மையில் இது ராஜாதானா என்று பரீட்சிப்பதுக்காக, இந்தச் சமயத்தில் அதிர்வேட்டு விடுவார்கள் கிராமவாசிகள். வேட்டு சத்தத்தைக் கேட்டு எந்தக் கொம்பன் யானையாக இருந்தாலும் வாலைக் காட்டிக் கொண்டு திமுதிமுவென்று ஒரே ஓட்டமாக ஓடிவிடும். ராஜா என்றால், அதன் பிரமாண்டமான நீண்டு வளைந்த தந்தங்கள் வெடி வந்த திசையை நோக்க ஒரு விசாரணைக் குறிப்போடு திரும்பும். கிராமத்தார்கள் கண்டு கொள்வார்கள். பிறகு ராஜாவை பய பக்தியுடன் தரிசிக்க வந்து நிற்கும் கும்பலாகி விடுவார்கள். இவ்வளவுக்கும் அவர்கள் அதனைப் புகை உருவமாக வெகு தூரத்தில் கண்டதுமே இது ராஜாதான் என்று அடையாளம் கண்டு விடுகிற மக்கள். அதிர்வேட்டு ஒருவகையில், இந்த யானையைப் பொறுத்த அளவில், கிராமத்தையும் யானையையும் பிணைப்பதுக்கான அனுஷ்டானம் என்று தான் சொல்ல வேண்டும்.

ராஜாவை, குழந்தை அபிக்கு மூன்று தடவை பத்மினி காட்டி இருக்கிறாள். சில விசித்திர மனோ நிலைகளில் அபி இருக்கும்போது, ராஜா என்றுதான் அவன் அழைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கைக்கு அகப்பட்டவை எடுத்து வீசப்படும். இப்போது அபியைப் பிடித்த மனோ நிலை ஏறத்தாழ இதுதான். ஆனால் இது கிராமத்தையே கலக்கி விட்டது. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அபி , அரைநிஜாருடன் தப்தப் என்று நடந்து, கோபாலகிருஷ்ணனின் பார்வையிலிருந்து மறைந்து விட்டான்.

''அபி எங்கே? என்று அவன் கேட்டபோது, "ராஜா காடேறி விட்டான்." என்றன குழந்தைகள்.

குழந்தைகள் இதைச் சொன்ன முதிர்ந்த தோரணையில் தானோ என்னமோ கோபால் திடுக்கிட்டான். டெண்டை விட்டு வெளியே வந்தபோது குழந்தையைக் காணோம். மற்ற குழந்தைகள் காட்டிய திசையில் தெருவைக் கடந்து, "அபி அபி'' என்று குரல் கொடுத்தான். தெருவின் மறுபுறத்தில் திடீரென, புதர் அடர்ந்த காடு ஆரம்பித்து விடுகிறது. கோபாலின் குரலில் கூட்டம் கூடி நாலு புறமும் புதர்களுக்குள் ஆண்களும் பெண்களுமாகக் குழந்தையைத் தேடினார்கள். பத்மினி பேயறைந்தவளைப் போல் வந்து தெருவில் நின்று கொண்டிருந்தாள். கிராமத்துத் தலைமைக் கிழவர் சார்ளிஸ் உடவத்த, "ஒருவரும் கூச்சல் போடாதீங்க." என்று சப்தத்தை அடக்கினார். தமது குரம் மட்டும் ஒலிக்கும் அளவு நிசப்தம் தோன்றியதும், "ராஜா" என்று சுபாவமான குரலில் கூப்பிட்டார். உடனே அபியின் கீச்சுக்குரல், யானைப் பிளிறலின் ஒலியை எழுப்பிய பதில் கேட்டது. அபி , கரும்பு வனத்தை நோக்கிப் போகும் பாதை ஓரத்தில் பாதத்தில் குத்தியிருந்த முள்ளை அழாமல் உட்கார்ந்திருந்து எடுக்க முயன்று கொண்டிருந்தான்.

இது நடந்து பனிரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் அபி மறைந்து விட்டான். ஸ்கூல் பைனல் பாஸான செய்தியை அறிந்து கொள்ளக்கூட அவன் தனது நண்பர்களையோ ஹைஸ்கூலையோ தொடர்பு கொள்ளவில்லை. அடிக்கடி தந்தைக்கும் மகனுக்குமிடையே தலைகாட்டும் இலங்கை அரசியல் பிரச்சினைதான் அவன் மறைந்த திசையைக் காட்டியது. சிங்கள ராணுவ மூர்க்கத்திலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதமுனை மூலம் மட்டும்தான் விடுதலை கிடைக்கும் என்ற அபிராமனின் பார்வை முரட்டுக் குழந்தைப் பார்வையாகவே கோபாலுக்குத் தோன்றிற்று. அபி , சிங்களக் காட்டுக் கிராமமான லங்காபுரியைக்கூட இப்போது மறந்துவிட்டான். தாய் கொழும்பில் இறந்ததைத் தொடர்ந்து சொந்த ஊரான திருக்கோணமலைக்குத் தந்தை மாற்றலாகிவிட்ட பிறகு, அவ்வப்போது அவன் நினைவில் எழுந்த "லங்காபுரி ராஜா" இப்போது அபியின் பிரக்ஞையில் இல்லை. குழந்தைப் பருவத்தின் அந்த ஞாபகம் அபியின் மனசில் ராஜாவைப் பார்த்த அபூர்வ அனுபவமாகப் பதின்மூன்று வயதுவரை பதிந்திருந்தது. பதின்மூன்று வயது சமயத்தில் ஒரு நாள் தந்தையிடம் அபி தனது தாய் இறந்த விதத்தைப் பற்றிக் கேட்டான். அபார்ஷன் விஷயத்தை அபி நம்பவில்லை. ''லங்காபுரி கிராமத்தில் 
அம்மா கொலை செய்யப்பட்டிருக்கிறாள்."

அபியின் இந்த வாசகத்தில் நிலை தடுமாறிய கோபால், பத்மினியின் மரண சர்டிபிகேட் அடங்கிய பைலை உருவி மகனின் முன்னால் விட்டெறிந்து, ''பாரடா உன் கண்ணாலேயே.'' என்று கத்தினான்.

எத்தனை தாய்மார்கள், பெண்கள் கேவலப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் - என்ற பொருளில் அபி தொடுத்த அடுத்த அஸ்திரத்துக்கு கோபாலினால் பதில் தர முடியவில்லை. பதின்மூன்று வயதுப் பிஞ்சு உள்ளம், பழுக்கும் முன்பே இறுகிக் கல்லாகி விட்டிருக்கிறது. கோபால் மகனை ஏறெடுத்துப் பார்த்தான். கிழக்கு மாகாணத்து ஸ்கூல்களினுள்ளேயே ஒரு ஸ்டாராகிக் கொண்டிருந்த புட்பால் வீரன் அபிராமனுக்கு, பதின்மூன்று வயதிலேயே உடல் பதினேழு வயது வளர்ச்சி காட்டியது. புருவங்கள் அடிக்கடி கண்களின் குழந்தைமையினை முதிரவைக்கும் அந்தரங்க அவஸ்தையில் சுருங்கின. ரத்தினபுரியில் சிங்கள வெறியர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்தான் அபியின் மிக நெருங்கிய பள்ளித் தோழன்... சந்திரசேகரனின் பிஞ்சு மனம் கண்ணெதிரிலேயே தாய் குதறப்பட்டபோது, கனியுமுன் கல்லாகிவிட்ட ஒன்று. அபியின் உள்ளத்திலும் இந்த கல் தன்மை பரவி இருக்க வேண்டும்.

பதின்மூன்று வயதிலேயே அபி ஏதோ ரகசிய சரீரப் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகக் கோபாலுக்குத் தோன்ற ஆரம்பித்து விட்டது. அபியின் கண்களில் பதினாறு வயதுக்குள் ஒரு தொலைதூரப் பார்வை வளர்ந்து வருவதைக்

கோபால் கிலேசத்துடன் கவனித்தான். எப்போதோ, திடீரென குழந்தை அபி வாலிபனாகி விட்டிருந்தாலும் இந்தத் தொலைதூரப் பார்வையை கோபாலினால் ஆழம் காண முடியவில்லை . ஏதோ அவசரத்தில் உடலின் குணத்தையே முடுக்கினாற்போல அபி ஒரு முழு மனித உயரத்துக்குப் பதினாறு வயதிலேயே வளர்ந்து விட்டான். ஒருநாள் ஸ்டேடியம் வரை போய் வருவதாகச் சொல்லி விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு போன அபி திரும்பவில்லை.

பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதிலக்கே, அபியின் உடைமைகளைத் தடயத்துக்காகப் பரிசோதித்துவிட்டுக் கோபாலிடம், "கோபித்துக் கொள்ளாதீர்கள் சர்வேயர் - உங்கள் குழந்தை ஏதாவது ஆக்ஸிடென்டில் எங்காவது மாட்டியிருந்தால் மட்டும் நாங்கள் சந்தோஷமாக உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்." என்றபடி அபியின் தலையணைக்குள்ளிருந்து உருவிய சில புத்தகங்களைக் கோபாலின் முன்னால் போட்டார். அமில்கர் கப்ரால், பிரான்ஸ் பனன், நெல்ஸன் மண்டேலா - யார் இந்த எழுத்தாளர்கள்?

"நான் புத்தகப்பூச்சி அல்ல" என்றார் இன்ஸ்பெக்டர். "ஆனால் சில விஷயங்களைப் பற்றித் தகவல் தெரியும். இவர்கள் எழுத்தாளர்கள் அல்ல. ஆயுதப் புரட்சிக்காரர்கள். எங்கள் தகவலின்படி பயங்கரவாதிகள். மூவருமே ஆபிரிக்கர்கள்"

கோபால் நிமிரவில்லை. கண்கள் திடீரென எரிந்தன. கல்ராலின் தெளிவான சிரிப்பன் மீது அவனது கண்ணீர்த்துளி வீழ்ந்து, புத்தக அட்டை நனைந்தது.

முதலில் தனியாக அதுவும் மப்டியில் திடீர் திடீரென சினேக பாவத்துடன் வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜெயதிலக்கே போகப் போகப் பொறுமை இழக்க ஆரம்பித்த குறிகள் தெரிந்தன. தன் குழந்தையைத் தேடிப் பிடித்து ஒப்படைக்க வேண்டிய போலீஸ் தன்னிடம், உன் குழந்தை இப்போது எந்த மறைவிடத்தில் இருக்கிறான் என்று கேட்காமல் கேட்கும் அறிகுறி ஆரம்பித்தது.

இரண்டொரு தடவை அகாலத்திலேயே, அதுவும் யூனிபாரத்துடன் உருவிய ரிவால்வரும் கையுமாகத் திடீர் விஜயம் செய்திருக்கிறார் ஜெயதிலக்கே. அவருக்குப் பின்னால் ஜீப் - ஆயுதம் தாங்கிய போலீஸ். "அபிராமன் எங்களைப் பொறுத்தவரை குழந்தையல்ல சர்வேயர். சார்லஸ் அன்டனி என்ற சீலனிடம் இங்கே திருக்கோணமலையில் நேரடியாகப் பயிற்சி பெற்ற முதல் வரிசைப் பயங்கரவாதி. இங்கே உங்களைத் தேடி அவன் மரணகாயம் பட்டால் மட்டும் தான் வருவான். திரியாய் போலீஸிக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்திருக்கிறது. எதற்கும் இங்கே செக் பண்ணலாம் என்று வந்தோம்..."

கோபால் ஒதுங்கி நின்றான். போலீஸ் போன பிறகு வீட்டைச் சீர்படுத்த கோபாலுக்கு இரண்டு நாட்கள் பிடித்தன.


ப்போது கதவு இந்த அகாலத்தில் தட்டப்பட்ட போது, இன்ஸ்பெக்டரின் விஜயம்தான் மீண்டும் நினைவுக்கு வந்தது. ஆனால் தட்டும் சப்தத்தில் ஒரு வேறுபாடு, ஒருவித திருட்டுத் தட்டல் அது. கோபாலுக்கு இது முதலில் தூக்கத்தினூடே கேட்டுத்தான் விழித்தான். விழித்த பிறகு ஏன் விழித்தோம் என்பது மறந்து விட்டது. ஆனால் மீண்டும் கதவு தட்டப்பட்ட போது தன்னை விழிக்க வைத்ததே இது தான் என்று புரிந்துவிட்டது. மணி 12.49

அபியாக இருக்கக்கூடாது, அல்ல அபியாக இருக்க வேண்டும். மரணக்காயம் பட்டால் மட்டும்தான் வருவான். மனமும் உடலும் பதறி எழுந்த கோபால், லைட்டைப் போடாமல், முன் கதவைத் திறந்தான். அபி அல்ல என்றதில் ஒரு ஆழ்ந்த வேதனையும் அதே சமயத்தில் நிம்மதியும் பிறந்தன. இது யார்?

இருளினுள் சற்றே உயரக் குறைவான ஒரு உருவத்தின் தீவிரமான கண்கள் மட்டுந்தான் கோபாலுக்குத் தெரிந்தன.

"யார்? என்ன வேணும்,'' என்று தமிழில் கோபால் கேட்டவுடனேயே உருவம் விசித்திரமாகச் சிரித்தது.

"அதே கோபால் மஹாத்மியா, அதே குரல். உங்களுக்கு என் புது வருட வாழ்த்துக்கள்”.

கோபால் லைட்டைப் போட்டான். அங்கே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார், லங்காபுரிக் கிராமத்தின் தலைமைக் கிழவரான சார்ளிஸ் உடவத்த. பன்னிரண்டு, பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு லங்காபுரியின் திவலை ஒன்றை கோபால் மீண்டும் சந்திக்கிறான், "உள்ளே வாங்க''

உடவத்த கோபாலை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "அபிராம ராஜா எங்கே?' என்றார். கோபால் ''முதலில் சிரம் பரிகாரம் செய்யுங்கள். இங்கே எங்கே வந்தீர்கள்? சேருவாவிலைக்கா?'

"அதற்கும் தான். ஆனால் எனக்கு இந்த சேருவாவில் ஒரு பெரிய ஸ்தலமல்ல. இதெல்லாம் தமிழனுடைய இடத்தை சிங்களவன் பிடிக்கிற தந்திரம். நான் புத்தகயாவுக்குப் போய் வந்தவன்." என்றார் உடவத்த, சிங்களத்தையும் தமிழையும் கலந்து, பிறகு தமிழிலேயே, "உங்களையும் அபியையும் பார்க்கிறதுக்குத்தான் முக்கியமாக நான் வந்ததது. அவன் எங்கே?' என்றார். கோபால் அவரை உட்கார உபசரித்து, அந்த வேளையினுள் தன்னைச் சுதாரித்து, "அபியை படிக்கிறதுக்கு மெட்ராஸ் அனுப்பி விட்டேன்." என்றான்.

"நல்ல வேலை செய்தீர்கள். இங்கே ஸ்ரீலங்கா தூள் தூளாகிக் கொண்டிருக்கிறது. நீங்களும் அவனோடு போயிருந்திருக்கலாம். இதெல்லாம் நடக்கப் போவது

எனக்கு முந்தியே தெரியும்" என்றவர் கோபாலைக் குறிப்பாகப் பார்த்தார், "லங்காபுரிராஜா விஷயம் தெரியுமல்லவா? அதில் தான் எல்லா சகுனமும் அடங்கியிருந்திருக்கிறது."

"ஒன்றும் புரியவில்லை " என்றான் கோபால், "இந்த வருஷப் பிறப்பு, இதற்கு முந்தியது, இரண்டுக்குமே ஊரடங்குச் சட்டம்" "பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே இங்கே வந்தீர்களா? விலாசம் எப்படிக் கிடைத்தது.'' ''உங்களிடம் முந்தி வேலை செய்தானே பியதாஸ். அவன் இப்போது என் மருமகன் . நாளனியை லவ் பண்ணிக் கல்யாணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நாளனி குழந்தைக்கு பத்மினி என்று பெயர் வைத்திருக்கிறாள். விலாசம் எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களே! சார்ளிஸ் உடவத்த, கோபால் பரிமாறிய பிஸ்கட்டைக் கடித்தார். "உலகம் அழியட்டும். ஆனால் நீங்களும் நானும் ஒருவரையொருவர் தொட்டுக் கொண்டு லங்காபுரி ராஜாவின் முன்னால் நின்றிருக்கிறோம். உங்களுக்கு ராஜா மகாபரிநிர்வாணமானது தெரியாதா? சாதாரண பாஷையில் சொன்னால், லங்காபுரி ராஜா என்ற யானை செத்துப் போய்விட்டது என்பது தான் செய்தி. ஆனால் புத்த பிரானுக்கும் அவரைப் போன்று அர்ஹத் நிலை அமைந்தவர்களுக்கும் தான் மரணம் மகாபரிநிர்வாணமாகும்.”

கோபால் கையில் எடுத்த பானத்தை மேஜையில் வைத்தான். "அவ்வளவு வயதா ராஜாவுக்கு?' "வயதா அந்த யானை இன்னும் ஐநூறு வருஷம் இருக்கும். அவ்வளவு உக்கிரமான பலம் அதுக்கு. நாலைந்து நாட்களாக, தூங்காமல் ஒரு கானகமளவுக்கு நூறு இருநூறு மரங்களை அது பிடுங்கி எறிந்து விட்டுத்தான் மறைந்திருக்கிறது.''

"ஏன் அதற்கு ஏதும் பைத்தியம் பிடித்திருந்ததா? சார்ளிஸ் உடவந்த ஒரு கணம் கோபாலைக் கோபத்துடன் பார்த்து விட்டு உடனே வாய்விட்டுச் சிரித்தார். "மஹாத்மியா, நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். அது யானை அல்ல. மனிதனைவிடப் பெரிய மனிதன். அதற்கு எப்படிப் பைத்தியம் பிடிக்கும்? நடந்ததைக் கேளுங்கள். அப்போதுதான் ஸ்ரீலங்கா இன்றைக்கு ஏன் இப்படித் தூள் தூளாகிக் கொண்டிருக்கிறது என்று புரியும்.''

சார்ளிஸ் உடவத்த நிறுத்தித் தொடர்ந்தார். "இப்போது தமிழர்கள் மேல் சிங்கள ராணுவத்தை அவிழ்த்து விட்டிருக்கிறானே லலித் அதுலத் முதலி? அவனுடைய ஒன்று விட்ட அண்ணா சிரில் திஸ்ஸ் நாயக்க. இந்தச் சிரில், யானைகளைப் பிடிக்கும் அரசாங்கக் காண்டிராக்ட் ஒன்றை வாங்கி கொண்டு லங்காபுரிக் கிராமத்துக்கு வந்து கூடாரம் போட்டான். இதெல்லாம் நியூஸில் வரவில்லை ."

"நாங்கள் கிராமத்தார்கள் சிரிலிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் - இங்கே யானை பிடிக்காதீர்கள். ராஜா அதை அனுமதிக்க மாட்டான் என்று சொல்ல வேண்டிய மாதிரி எல்லாம் சொன்னோம். கிராமத்தில் பாதிப் பேர் ஊரைவிட்டே குடிபோகத்துவங்கி விட்டார்கள்.

''சிரில் திஸ்ஸநாயக்க அசைந்து கொடுக் கவில்லை. ஒரு தடவை மேஜைக்கு அடியிலிருந்து பெரிய ரைபிள் ஒன்றை எடுத்து எனக்கு குறிவைத்து 'இடத்தைக் காலி பண்ணடா கிழவா' என்று மரியாதை இல்லாமல் கத்தினான். "சீ, மனிதனாடா நீ," என்று நான் பதிலுக்குக் கத்திவிட்டு நாளனியிடமும் பியதாஸவிடமும் போய் அவர்களைக் கொழும்புக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். ஆனால் நான் மட்டும் போகவில்லை. என்னை போல சிலர் லங்காபுரியிலேயே இருந்து விட்டோம்.

இதற்குள் யானை பிடிக்கிறவர்கள் ஆயிரக்கணக்கில் ரூபாய் போட்டு, பிரம்மாண்ட மரங்களை மெஷினால் வெட்டினார்கள். பிறகு காட்டுக்குள் மரங்களை வளைவான வரிசைகளில் நட்டு யானைகள் உள்ளே போனால் வெளியே வர முடியாதபடி கூடுகளை உண்டாக்கினார்கள். எங்களால் என்ன செய்ய முடியும்? லங்காபுரிக் கிராமத்தவர்களிடம் யானை பிடித்திறவர்களின் ஆதிக்கம் வேறு. ராஜாவைப் பற்றி நாங்கள் சொன்ன போது, கரும்புத் தோட்டங்களை வெட்டியாக நின்று தின்று விட்டுப் போகும் மிருகம் தானே, அதைப் பிடித்து விடுவோம், பிறகு நீங்கள் ஒரு கவலையும் இல்லாமல் கரும்புப் பயிர் போடலாம் என்றார்கள் சிரிலின் ரைபிள் எப்பேர்ப்பட்டது என்று புளுகினார்கள்.

"தட்டு வாத்தியங்கள் ஒரு மாசத்துக்குள்ளேயே ஒலிக்க ஆரம்பித்து விட்டன. யானைக் கூட்டத்தை மோப்பம் பிடித்து, குறிப்பான இடங்களில் டமாரக்காரர்களை நிறுத்தி அடிக்க வைத்தார்கள். மற்றவர்கள் புதர்களுக்குள் வரிசையாக நின்று கூக்குரல் கொடுத்து யானைகளை விரட்டினார்கள் சிரிலின் திட்டப்படி யானைகள் ஓடிப்போய்க் கூட்டுக்கள் நின்று கொண்டன. உள்ளே போனால் வெளியே வர முடியாத வளைவுகள் உள்ள பிரமாண்டமான கூடு அது. அப்படியே யானைகளைப் பட்டினி போட்டு அடக்கி, பிறகு உணவு கொடுத்து வசக்கும் முறை இது என்று யானை பிடிப்பவர்கள் விளக்கம் சொன்னார்கள். ஆனால் யானைக் கூட்டத்தில் ” "லங்காபுரி ராஜா" இல்லை . இது கிராமத்தவர்களுக்குத்தான் தெரியும்.

"அன்று இரவு யானைகள் பிளிற ஆரம்பித்தன. சுமார் அரைமணி நேர பிளிறலுக்குப் பிறகு ஒரு திடீர் நிசப்தம். யானை பிடிக்க வந்தவர்களுக்கு இந்த நிசப்தம் ஏன் என்று புரியவில்லை . அவர்கள் கணக்குப்படி யானைகள் களைக்கிறவரை நாட்கணக்காகப் பிளிறிக் கொண்டிருக்க வேண்டும். நடுஇரவு யானைக் கூட்டிற்கு

காவலிருந்தவர்கள் 'வாள் வாள்' என்று அடிபட்ட நாய்கள் மாதிரி கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். ஒரு பிரம்மாண்டமான யானை, இரண்டு யானை உயரத்துக்கு ஒரு யானை, கூட்டு வளைவுகளின் மரங்களை வெளியே நின்று பிடுங்கி எறிவதாக அவர்கள் உளறியதிலிருந்து தெரிந்தது.

"வெகு தூரத்தில் வனாந்தரத்துக்குள், ஒரு பர்வத சொரூபம் பற்களைக் கோபத்தில் நறநறவென்று கடிக்கும் சப்தம் - மரங்கள் முறிக்கப்படும் சப்தம் அது. நானும் காட்டுக்குப் பழகினவர்களுமாக குறுக்கு வழி பிடித்துப் போய்ப்பார்த்தோம்.

"இருளுக்குள் இருளாக ராஜா, யானைக் கூட்டை உடைக்கிறான். கூட்டின் மத்திய பாகத்தை அடைய நான்கு வளைவுகளையாவது உடைக்க வேண்டும். ஒவ்வொரு மரமும் பிரம்மாண்டமான யந்திரங்களினால் தள்ளி நட்டப்பட்ட மரம். நாங்கள் பார்த்த போது ஏற்கனவே இரண்டு யானைகளின் அகலத்துக்கு முதல் வளைவு உடைக்கப்பட்டு விட்டது. அப்போது இரவு மூன்று மணி. காற்றில் ராஜாவின் கோபம் புயலடிக்கிறது. இதில் நாங்கள் பயந்து கிராமத்துக்கு ஓடி வந்து விட்டோம்.

"முதலில் சிரில் திஸ்ஸநாயக்க இது பற்றிக் கவலைப்படவில்லை. ஒரு வளைவை உடைத்து உள்ளே போனாலும், யானை உள்ளேயே அகப்படும்படியாக இரு புறமும் அடித்த மரவேலி வளைவு வழியே மையக் கூட்டுக்குப் போய்விடும் என்பது அவன் கணக்கு. அவனுடைய பழைய அனுபவம் அப்படி

"நாட்கள் இரண்டாகி விட்டன. மரம் முறிகிற சப்தம் நின்று விட்டது. பயத்தில் எவருமே கானகத்துக்குள் போய் என்ன நடக்கிறது என்று வேவுபார்க்கவில்லை. இப்போது யானைகள் மீண்டும் பிளிற ஆரம்பித்தன. சிரில், பெரிய யானை அகப்பட்டு விட்டது என்று சொல்லி, உடைந்திருந்த அடைப்பை மூடுவதற்கு மீண்டும் மெஷின்களை ஏவினான். அங்கும் இங்கும் தாறுமாறாக வீசப்பட்டிருந்த பிரம்மாண்டமான முழு மரங்களை மெஷின் ஒன்று தூக்க ஆரம்பித்த வேளை. பகல் பதினொரு ஜீப்புக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். எங்கோ மர அடர்த்திக்குள் ஒளிந்திருந்த ராஜா குபீலென்று வெளிப்பட்டு மெஷினை நோக்கி ஓடி வந்தான் சிரில் ஓடிப்போய் ஜீப்பில் ஏறிக் கொண்டான். ராஜாவின் தலை, வரும்போதே தாழ்ந்து, கொம்புகள் டாங்கி போன்ற வடிவத்திலிருந்த ஒரு மெஷினின் சங்கிலிச்சக்கரங்களிடையே பாய்ந்தன. ஒரு வீடளவு பெரிய ஜெர்மன் மெஷின். அதை ராஜா ஒரே எற்றில் பக்கவாட்டாகத் தூக்கினான். மெஷின் விகாரமாக அர்த்தமில்லாதபடி உறுமிக் கொண்டு மல்லாந்தது. ராஜா குறி வைத்த மாதிரி சிரில் திஸ்ஸஸ் நாயக்கவை நோக்கி திரும்பினான். சிரிலினால் ஜீப்பை ஸ்டார்ட் பண்ண முடியவில்லை. பக்கத்திலிருந்த ரைபிளை எடுத்துக் கொண்டு ஜீப்பை விட்டுக் குதித்து ஓடினான். கூட்டை உடைப்பதை ராஜா ஏன் பாதியில் நிறுத்தினான் என்பதை அப்போதுதான் நாங்கள் புரிந்து கொண்டோம். ராஜாவின் நோக்கம் கூட்டுக்குக் காரணமானவர்களையே அழிப்பதுதான்.

தன்னைக் குறிவைத்துவிட்டது யானை என்று கண்டு கொண்டான் சிரில். நிலத்தில் ஒரு மத்த கஜத்துக்குக் குறிவைத்து இரண்டு தடவை வில்லை அழுத்தினான். ரைபிள் கல் பிளந்தது போல் வெடித்து ஒலித்தது. ராஜாவின் நெற்றியில் பட்டென இரண்டு சிவப்புத் திலகங்கள். உடனே சிரில் ரைபிளை நிமிர்த்தி எழுந்தான். அவனுடைய ரைபிளும் ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட மெஷின்தான், கால் மைல் தூரத்துக்குப் பறந்து தாக்கக் கூடியது அதன் புல்லட், டெலஸ்கோப் பூட்டி குறி வைக்கிற தூரதிருஷ்டிப்படை அது. இதனால்தான், யானையின் மூளைக்குள் குண்டுகள் பாய்ந்து விட்டன என்று சிரில் திஸ்ஸநாயக்க எழுந்து நின்றான். இந்நேரம் யானை முழுங்கால் மடிந்து சரிந்து வழுந்திருக்க வேண்டும். ஆனால் இது யானையல்ல என்பதை மடையன் சிரில் உணரவில்லை. ராஜா மூளையினுள் பாய்ந்த புல்லட்டுகளுடன் முந்திய வேகம் தணியாமல் இரண்டு எட்டில் சிரிலை அணுகி விட்டான். சிரிலின் கையும் காலும் விறைத்து விட்டன. அவன் வாய் மட்டும் வீல் என்று பயப்பிராந்தியில் அலறியது. மறுவிநாடி, துவம்சம். சிரில் திஸ்ஸநாயக்கவை ஒரு வாரம் கிழத்து இரண்டு பிளாஸ்டிக் வாளிகளில் அள்ளிக் கொண்டு போனார்கள் சொந்தக்காரர்கள்.

"சிரிலை துவம்சம் செய்த ராஜா அதே வேகத்தில் திரும்பினான் கூட்டை நோக்கி. பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு மயிர்க் கூச்சமிட்டது. ராஜா மீண்டும் கூட்டை மரம் மரமாகப் பெயர்த்தெறிய ஆரம்பித்தான். ஒவ்வொரு மரமும் இரண்டு மூன்று நிமிஷங்கள் ராஜாவின் தாக்குதலிக்குத் தாக்குப் பிடித்துத்தான் சரிந்தது. மத்த கஜத்துத் திலகங்களிலிருந்து கிளைகள் விட்டு ரத்தம் இறங்கியபடி இருக்க ராஜாவின் போர் தொடர்ந்து. பார்த்துக் கொண்டே இருந்த எங்களுக்குத்தான் பசியும் தாகமும். யானை பிடிக்க வந்தவர்கள் பறந்து விட்டார்கள். எஞ்சியது நானும் லங்காபுரிக்காரர்களும் தான். மாலைக் கருக்கலில் நாங்கள் கிராமத்துக்குத் திரும்பி விட்டோம். இரவு முழுவதும் மரங்கள் முறிகிற கோரமான ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. காலை எழுந்ததும், ரொட்டி வாழைப்பழம் என்று எதையோ அவசரமாக விழுங்கிவிட்டு மீண்டும் போய் ராஜாவின் சளைக்காத யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அதன் நெற்றி பிராவும் ஒரே ரத்தப்படலம். ஒரு கொம்பின் நுனி பிளந்து விட்டிருந்தது. கொம்புகள் வாயினுள் பொருந்திய இடத்தில் கருமையான ரத்தம். நான் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டேன்.

" அன்று மாலை வரை நான் தண்ணீர் கூடக் குடிக்காமல் அங்கேயே கிடந்திருக்கிறேன். ஆனால் நேரம் போனது தெரியவில்லை. ராஜா நேரே கூட்டின் உள்வளைவுக்குப் போய் விட்டிருந்ததால் அவனைப் பார்க்க முடியவில்லை. கிராமத்துக்குத் திரும்பி விட்டோம்.

"அன்றிரவு ராஜா பிளிறிய சப்தத்தில் விழித்துக் கொண்டேன். என கபாலத்தின் உள்ளிருந்து இரண்டு கொம்புகள் தலையை தகர்ப்பது போன்ற பயங்கர வலி, பிளிறல் ஏதே பிரமை என்று நினைத்து நெற்றியில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு தூங்க முயன்றேன். உடம்பு ஜிவ்வென்று கொதிக்து நடுங்க ஆரம்பித்து. ஜூரம். நாளனியும் இல்லை . ஒரு விதமாக நானே கஷாயம் பண்ணிக் குடித்துவிட்டுப் படுத்தேன். அன்று 1982ம் ஆண்டு முடிந்து 1983 துவங்குகிறது. பிளிறல் கேட்ட சமயம் சரியாகப் பனிரெண்டு மணி என்று என்கு நிச்சயமாகத் தெரியும்.

என் சுவர்க் கடிகாரம் அதே சமயம் பனிரெண்டு அடித்துக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு நடுவே, இரண்டு வருஷங்களுக்கு நடுவே இரண்டு சகாப்தங்களுக்கு நடுவே பிளந்த காலமற்ற இடைவெளி அது. ராஜாவின் பிளிறல் அந்த வெற்று வெளியுள் ஓடி மறைந்து விட்டது.

"மறுநாள் நான் தட்டு தடுமாறி நடந்து போய் யானைக் கூட்டைப் பார்த்தேன். கொம்பன்களும் பெண்யானைகளும் குட்டிகளுமாகக் கூட்டுக்கு வெளியே அநாதரவாய் நின்று சிதறிக் கொண்டிருந்த காற்று ஹேவென்று ஓலமிட்டு அழுது கொண்டிருந்தன. நான் மர அடர்த்திகளுக்குள் மாறி நடந்து போய் உடைபட்ட கூட்டின் வாசலுக்கு எதிரே நின்று பார்த்தேன். நான்கு வேலிகளும் சீராக ஒரே வரிசையில் உடைக்கப்பட்டு இருந்தன. உள்ளே அடைபட்டிருந்த யானைக் கூட்டம் வெளியேறி நிற்கிறது. ஆனால் அமைப்பின் இருட்டுக்குள் ஆகாயத்தை நோக்கி உட்கார்ந்தபடி கிடந்தது ராஜாவின் உடல் வலது கொம்பு சிதறி உடைந்திருந்தது. கொம்புகள் தலை முழுவதும் ஒரே உதிர படலங்கள் என் உடலும் ஒரேயடியாகப் பலமிழந்து விழுந்து விட்டது. கிராமத்துப் பயல்கள் பிரக்ஞையில்லாமல் கிடந்த என்னை தூக்கிக் கொண்டு வந்திராவிட்டால் அப்போதே நிம்மதியாகச் செத்திருப்பேன். பிறகு இந்தப் புதிய பயங்கர சகாப்தம். 1983ன் ஜூலை . கொழும்புத் தமிழர்களை சிரில் மத்தியூ, கேமினி திஸ்ஸநாயக்க இரண்டு பேரின் ரெளடிப் படைகள் சின்னா பின்னமாய்க் குதறியதுக்கு நான் சாட்சியாக இருந்திருக்கிறேன். நான் அப்போது கொழும்பில் இருக்க வேண்டும் ராஷஸர்களை நேரே பார்க்க வேண்டும் என்று எனக்கு விதி. புத்தகயாவுக்குப் போய் தரிசனம் பண்ணிய கண்கள் மூலம் நிஷ்டூரத்தின் முழு வடிவமும் காணப்பட வேண்டும். இதுதான் தெய்வத்தின் தர்க்கம்." குரல் சிதறாமல் பேசி வந்த உடவத்தின் முகம் எப்போதோ சிதறிவிட்டிருந்தது.

வன்...” என்று குறுக்கிட்டு, தெரியும்” என்கிறீர்

லங்காபுரி ராக இறங்கியதும் எங்கனுப்பியது.

பஸ்ஸின் ராஜாதைத் துல

கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கரடு முரடான பாறைகளின் மேடு பள்ளங்களைப் போன்ற முகச் சதை மடிப்புகளில் ஏறி இறங்கி வழிந்தது. கோபால் நெற்றியை எவ்வளவு சுருக்கி அடக்க முயன்று அவனால் கூட கண்ணீரை அடக்க முடியவில்லை . தன் முன் சிதறிய முகத்தைப் பக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், "அபிராமராஜாவை, நான் மெட்ராஸ்க்கு அனுப்பவில்லை. உண்மையில் அவன்...” என்று ஆரம்பித்தான்.

உடவத்த குறுக்கிட்டு, "எனக்கு இந்த வாசற் கதவைத் தட்டு முன்பே அது தெரியும்,'' என்றார். கைகள் முகத்தைத் துடைத்தன. "என் கண்ணீர் லங்காபுரி ராஜாவுக்காக மட்டுமல்ல. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் எங்களை ஒவ்வொருவராகப் போலீஸ் விசாரித்துத்தான் அனுப்பியது. உங்கள் விலாசத்தை நான் சொன்னதும் எனக்கு மட்டும் ராஜ மரியாதை நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப்பில் கொண்டு போய் நான் சொன்னதையெல்லாம் பதிந்து கொண்டார்கள். ஒரு இன்ஸ்பெக்டர் என்னிடம் அபிராம ராஜாவைப் பற்றிச் சுற்றி வளைத்துச் சொல்லி விட்டு, உங்களிடம் அவனைப் பற்றி உளவு கண்டு பிடிக்க முயற்சிக்கும்படிக் கூறித்தான் இங்கே ஜீப்பில் கொண்டு வந்து விட்டார்கள். இதற்குதான் "சிங்களயா மோடயா" என்று நாங்களே சொல்கிறோம். என்னையே உங்களிடம் வேவு பார்க்க அனுப்பியிருக்கிறார்கள். நான் ஒன்றுதான் உங்களுக்குச் சொல்ல இருக்கிறது. லங்காபுரி ராஜாவின் கதையை நான் எனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் தேடி பிடித்து நேரில் சொல்கிற யாத்திரையில் இருக்கிறேன். அபிராமன் லங்காபுரியில் பிறந்தவன். அவனுடைய யாத்திரையும் ராஜாவின் தர்மத்துக்கு அப்பாற்பட்டதல்ல.

No comments:

Post a Comment