தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, August 18, 2019

மோக முள் - தி. ஜானகிராமன் :: முதல் பாகம் - 1,2,3 (Backwards)

மோக முள் - தி. ஜானகிராமன் ::   முதல் பாகம் -  1,2,3
 (Backwards)
 -
மோக முள் மலையாள மொழியாக்கத்தின் முன்னுரை
1955-56 வருஷங்களில்தான் "மோகமுள்ளை எழுதினேன். அப்போது எனக்கு வயது முப்பத்துநாலு.
எனக்குச் சங்கீதம் சொல்லிக்கொடுத்த ஒரு மகா வியக்தியும் எனக்கு நன்கு தெரிந்த பலரும் இந்த நாவலில் இருக்கிறார்கள், உருவத்திலும் பெயரிலும் மாத்திரமே வேறுபாடு.
இந்த நாவலின் பாதி பாகமும் என் சொந்தக் கதை என்று எண்ணுபவர்கள் உண்டு. அது சரியல்ல. சில சம்பவங்கள், மனிதர்கள், விகார விசாரங்களை வாழ்க்கையிலிருந்து எடுத்திருப்பதாகத், தெரியலாம். அப்படி எடுப்பதுதான் இலக்கியப் படைப்பு என்று சொல்வதற்கில்லை,
நான் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறேன். வாழ்க்கை இலக்கியம், இப்படியெம் இரண்டும் இரண்டுதான். இரண்டும் ஒன்றாகத் தெரியலாமென்றாலும் அது வெறும் தோற்றம் மட்டும்தான், வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குச் சில சமயங்களில் இலக்கியம் பரிகாரங்களை வைக்கலாம், ஆனால் இலக்கியம் அந்தப் பரிகாரங்களைக் கொடுத்தே தீர வேண்டும் என்ற அபிப்பிராயம் எனக்கு இல்லை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனின் அக உலகம், அதிலிருக்கும் சிக்கல்கள், அதன் கடினமான துக்கங்கள், சித்ரவதைகள், அதன் மகிழ்ச்சி இவை எல்லாவற்றின் மொத்தமான அனுபூதிநிலைதான் இலக்கியப் படைப்பின் உந்துசக்தி, எதற்காக, எந்த நோக்கத்துக்காக எழுதுகிறேன் என்று கேட்டால் அந்தக் கேள்வி அநாவசியமானது என்றுதான் பொங்குவேன். அது நீங்கள் ஏன் காதலிக்கிறீர்கள் என்று கேட்பதைப் போலத் தான் இருக்கும்,
'மோக முள்ளில் சங்கீதம், காதல், கல்வி, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் பார்த்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் மோகங்களும் மோக பங்கங்களும் இப்படி என்னவெல்லாமோ இருக்கின்றன. இவையெல்லாம் நாவலாசிரியனின் திடமும் தீர்மானமுமான முடிவுகளென்றோ அபிப்பிராயங்கள் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாம். தராசில் நிறுத்துப் பார்ப்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை .
இந்த நாவலில் கட்டுக்கோப்பான கதை இல்லையென்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சாமான்யன் ஒரு குழந்தையையோ ஒரு பூவையோ ஒரு நாய்க்குட்டியையோ தன் நெஞ்சோடு வாரியணைத்துக் கொள்வது போல விதவிதமான அனுபூதிகளை - உணர்ச்சிகளை, எண்ணங்களை, கதாபாத்திரங்களை கட்டித் தழுவிக் கொள்வதில் ஏற்படும் ஒரு பிரத்தியேக அனுபூதிதான் எனக்கு இருக்கிறது.
இந்த நாவலில் நாவலின் உத்திகள் இல்லை. பரிணாமம் இல்லை. இத்தியாதி விமர்சனங்களுமிருக்கின்றன. அந்த விமர்சனங்களைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் முன்னால் உந்திய வயிறும் ஒட்டிய பிருஷ்டமும் சூம்பிப்போன கால்களுமாகப் பிறந்துவிட்டது என்பதற்காக தன் குழந்தையை ஒரு பிச்சைக்காரிகூடக் குப்பைத் தொட்டியில் வீசி எறிவாளா?
புது தில்லி                                                        தி. ஜானகிராமன்
7.6.1970

முதல் பாகம் 
அணைக்கரை பஸ் ஆனையடியைக் கடந்து வந்து டவுன் ஹைஸ்கூல் வாசலையும் கடந்து, நாற்சந்தியையும் கடந்துபோயிற்று. அவ்வளவுதான்; ஏதோ புழுதிப் புயல் கிளம்பி, ஊரையே சூறையாடுவது போலாய்விட்டது. மேல் துண்டாலும் முந்தானையாலும் மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டார்கள். செம்மண் புகாமல் கண்ணை இடுக்கிக்கொண்டார்கள். உடம்பைச் சுற்றிப் போர்த்திருந்த காவிக் கதர் ஐந்து முழத்தால் மூக்கையும் வாயையும் பொத்தினவாறே விளக்குமாறு பட்ட நாய்போல் 'வரம் ஹ்ரம்' என்று சந்தேகத்தையும் அருவருப்பையும் கமறி வெளித்தள்ளினான் பாபு. புழுதி அடங்கக் குறைந்தது மூன்று நிமிடங்களாவது ஆகும். காலையில் தோய்த்து வெய்யிலில் உலர்த்தி முடமுடவென்று உடுத்தியிருந்த சட்டை, அங்க வஸ்திரம், வேட்டி எல்லாம் இப்படியே நடந்து போனால் பாழாகிவிடுமேயென்று கடையோரமாக ஒதுங்கி நின்றான் அவன், அங்கவஸ்திரம் மூக்கிலேயே இருந்தது. 
அன்யே தேச க்ருதம் பாபம் வாராணஸ்யம் விநச்யதி வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி. 
என்றார், புழுதிக்காகக் கடையோரமாக சைக்கிளை விட்டிறங்கி ஒதுங்கி நின்ற மேலக்காவேரி சாஸ்திரிகள். அவர் நெற்றி உச்சியில் பளபளத்த காயத்தின் வடுவைப்போல எப்போதும் அவர் உதட்டில் தங்கியிருக்கும் சிரிப்பு, சற்று காவிப்பல்லாக மலர்ந்தது. 
"என்னங்க இது? யாரையோ வெய்யக் கிளம்பிட்டீங்களே திடீர்னு!" என்றார் கடைக்கார் ஆறுமுகம், 
"வெய்யவும் இல்லெ, மண்ணும் இல்லெ." 
"பின்னே இது என்னவாம்?" 

"ஸ்தல மாகாத்மியம்."
"நம்ம பாஷையிலே சொல்லுங்களேன்." 
"லோகத்திலே எந்தக் கண்டத்துலே, எந்த தேசத்துலே, எந்த மாகாணத்திலே, எந்த ஜில்லாவிலே பாவம் பண்ணினாலும் காசிக்குப் போனா தொலைஞ்சுபோயிடும். அந்தக் காசியிலே பாவம் பண்ணினால், இந்த நம்ம கும்பகோணத்துலெ வந்து மாமாங்கக் குளத்துலெ ஒரு முழுக்குப் போட்டா தொலைஞ்சு போயிடும்." 
"இந்தக் கும்பியிலியா?" 
"இன்னொரு தடவை அப்படிச் சொல்லாதீர். முன்ஸிபாலிட்டியிலெ மணு மணுவா மருந்தைக் கொண்டு கொட்றாளாக்கும்." 
"அப்பதான் அசல் சாக்கடை நாத்தம் வருது." 
"நாத்தமாவது, வாசனையாவது? முதல்லெ நாத்தமாத்தான் இருக்கும். பழகிப் போயிட்டா சரியாப் போயிடறது." 
"இந்தக் கும்பிக்கு மாத்து இந்தக் கும்பிதான்னு சொல்லுங்க!" 
"நீர் மாமாங்குளத்தையும் கும்பகோணத்தையும் குறை சொல்லக் கிளம்பிவிட்டீர்! மத்த ஜில்லாக்கள்ளே போய் பார்த்தாத் தெரியும், மெட்ராஸிலே போய்ப் பார்த்தாத் தெரியும்." 
"என்னாத்தை?" 
"கும்மாணம் கைச்சீவல், ரவாதோசை, தேங்கா சட்னி, பட்டுப் புடவை, பேச்சிலெ கெட்டிக்காரத்தனம்." 
"ஆளை எத்தறது ...." 
"சொல்லிக்குமே. ராமசாமி கோயில்லே ஒரு தூணைப் பாக்கறவன் இந்த ஏமாத்தத்தையும் நாத்தத்தையுமா நெனச்சிண்டிருக்கப் போறான் ... பாருமே, கமகமகமன்னு நீர் கட்ற வாசனை வடயம்!, கணக்குப்புலி ராமானுஜம் எல்லாம் இந்த ஊர்ச்சரக்குத்தானேங் காணும்." 
"ஆகாகாகாகா, ராமானுஜம் பெருமையெல்லாம் இந்த ஊர்க்காரங்களாலே தானே உலகத்துக்குத் தெரிஞ்சுது!" 
| "யாராலெ தெரிஞ்சா என்ன? அவன் பிறந்த மண்ணு இது. அப்புறம் என்ன? கும்பகோணத்திலே பண்ணின பாவம் கும்பகோணத்திலெ தொலையறதுன்னு நான் சொன்னா உமக்கு எளக்காரமா இருக்கு." 
"கும்மாணத்திலே இருக்கறவங்க கூட காசிக்குப் போய் வாராப் போல இருக்கே!" 
"ஆறுமுகம், தெரியலேன்னு நெனச்சுக்காதீர். ஸார், இதப் பாருங்க ஸார்..." என்று பாபுவை ஏதோ தெரிந்தவர் போலப் பார்த்துச் சொன்னார் சாஸ்திரிகள். "போன வருஷம் சக்ரபாணி அய்யர் இருக்காரே, ரிடயர்ட் லெக்சரர், அவர் காசிக்கு வா, கூடமாடத் துணையா இருக்கும்னு என்னை அழைச்சிண்டு போனார். அதை எவ்வளவு நாசூக்கா குத்திக் காமிக்கிறான் மனுஷன், பார்த்தேனோல்லியோ? ஆறுமுகம்! ஒரு ஆறு செகண்ட் தப்பிப் பிறந்துப்பிட்டீர். இல்லாட்டா, அல்லாடி, நார்ட்டன் அந்த கோஷ்டியிலே சேர்ந்திருப்பீர்." 
"அப்புறம் உங்களுக்கு யார் இஞ்ச வடயம் கட்டிக் குடுப்பாங்க!" 
"அதுவும் வாஸ்தவம்தான், ஓய் ஆறுமுகம், இதைப் பாரும். சார்கூட உம்ம பேச்சைப் பார்த்து அஞ்சு நிமிஷமா அசந்து போய் நிக்கறார். சாரைத் தெரியுமா உமக்கு?" என்று பாபுவைப் பார்த்துக்கொண்டே ஆறுமுகத்தைக் கேட்டார் சாஸ்திரிகள். 
"கடைக்கு வர வாடிக்கைதானே. தெரியாம என்ன?"
"அவ்வளவுதான் தெரியுமா?"
"சொல்லுங்களேன்." 
"அட போமய்யா. இவ்வளவு பேச்சு பேசறீர்! ஊரையே விலைக்கு வாங்கறேங்கிறீர். சாரைத் தெரியாதுங்கிறீரே!" 
"அம்மா , , , ஷண்முகா , , , சாஸ்திரியாருகிட்ட ஒரு சேதி தெரிஞ்சுக்கறதுக்குள்ளார ... ராம ராமா... நீங்களும் சொல்ல மாட்டீங்க , 
"போன வருஷம் காலேஜிலே நாடகம் போட்டாளே பார்த்தீரா?" 

"பாத்தேன்."
"அப்படீன்னா சொல்லும் சார் யாருன்னு?" 
ஆறுமுகம் பாபுவை உற்று, புன்சிரிப்புடன் பார்த்தார்.
"சொல்லும்." \
"இருங்க." 
"எத்தனை நாழி? ஏன்யா, இது தெரியலியா? லீலாவதி வேஷம் போட்டுண்டாரேய்யா!" 
"ஆமாங்க, ஆமாங்க. அதுக்கும் இதுக்கும் அடையாளமே தெரியலீங்க." 
"அதான் ரகசியம். என்ன சாரீரம் பார்த்தீரா? என்ன பெரட்டு! என்ன ரவை! பொலபொலன்னு மத்தாப்பூவா உதிக்கிற சாரீரம். ரவை உதிர்த்தாப் போருமா? தனியா ஒரு ஜிலுஜிலுப்பு. நான் முதல் கிளாஸிலேதான் உட்கார்ந்திருந்தேன், எம்பக்கத்திலே மிருதங்கம் சாமிப்பிள்ளை, உங்க பாட்டைக் கேட்டு அவர் தலையே ஆடி ஆடி ஓடிஞ்சே போயிடுத்துன்னு வச்சுக்குங்கோளேன், யாருங்க இந்தப் பொம்பிள்ளேன்னார் என்னைப் பார்த்து! ஆம்பிள்ளைதான் சார்னேன்! அ! ஆம்பிள்ளையா! ஆம்பிள்ளையான்னார்! அவருக்கு ஆச்சரியம் தாங்கலெ. நானும் அனந்தநாராயணையர், கலியாண ராமையர்லாம் ஆடிப் பார்த்திருக்கேங்க. அவங்களையே தூக்கியடிக்குதே இந்தப் புள்ளேன்னார். என்ன தளுக்கு! என்ன லஜ்ஜை! நிக்கறது, கையை வச்சுக்கறது எல்லாம் - அப்படியே எல்லாம் சொக்கிப்போயிடுத்து! , , , ஏன் ஸார், வேஷத்தைப் போட்டு புடவை கட்டின உடனேயும் பொம்மனாட்டியாவே ஆயிடுவேளா சார்?" 
பாபு ஒன்றும் பேசாமல் புன்சிரிப்புச் சிரித்தான். நேரடியான இந்த முகமன் பட்டு அவன் உடல் சங்கோசத்தாலும் நாணத்தாலும் உள்ளே ஒடுங்கிற்று. 
"கன்னத்திலே முகவாயை ஒரு இடிப்பு இடிச்சிண்டேளே கோபத்திலே . - , அதிருக்கட்டும், ராஜாவைப் பார்த்துக் கண்ணை ஒரு சுழட்டு சுழட்டினேளே - - - எப்படி! எப்படி! எனக்குக்கூட வரமாட்டேங்கறது சார்." 


"உங்களுக்குக் கூடன்னா? எனக்கும் ஒண்ணும் புரியலியே" என்று இடைமறித்தார் ஆறுமுகம்," 
"ஓய்! அதெல்லாம் பிறவிய்யா, பிறவி! தெய்வானுக்ரகம் வேணும், டான்ஸ் கூட நன்னா ஆடறேளே சார் ... அதெல்லாம் ஒரு அருள்தான். எல்லாருக்கும் வந்துடுமா என்ன? நீங்க அன்னிக்கி கானடாவை மேலே கொண்டு போய் ஒரு ஹிந்துஸ்தானி பிடிபிடிச்சு கிர்ர்னு ஒரு வளை வளைச்சுக் கீழே இறங்கி மேலே போனேளே....." 
"என்ன! என்ன! ஏது! சாஸ்திரியாருக்கு சங்கீதம் கூடத் தெரியும் போலிருக்கே!" என்றார் ஆறுமுகம், 
"அட போய்யா , , அன்னிக்குக் கானடாவை நீர் கேட்டிருந்தா தெரியும், இவர் மாத்திரம் சங்கீதம் சொல்லிக்கட்டும். இன்னிக்கி, காக்கா ஒண்ணோட ஒண்ணு மூக்கைக் குழறுமே, அந்த மாதிரி கால் கட்டையிலே நோண்டிண்டு சங்கீத வித்துவான்னு தடல்டி அடிக்கிறானே, அவனெல்லாரையும் போற இடம் தெரியாம பண்ணிவிடுவார்." 
சாஸ்திரிகள் மேலே பேசுவதற்குள் எதிர்த்த ஹோட்டலிலிருந்து காபி சாப்பிட்டு வரும் சாயங்கால இளம் ஜமா ஒன்று வாசனை வடயம், வாசனைப் புகையிலைக்காக ஆறுமுகத்தின் கடை முன் வந்தது. 
"சரி, வியாபாரத்தைக் கவனியும். நான் வரேன்... நான் வரேன் சார்" என்று பாபுவிடமும் சொல்லிக்கொண்டு, சைக்கிள் மிதிமேல் காலைத் தூக்கி வைத்தார் சாஸ்திரிகள், அதற்குள் திருவையாற்றுக்குப் போகிற பஸ் ஒன்று, அடங்கின புழுதியை மறுபடியும் கிளப்பிவிட்டுகொண்டே மண் காப்பெல்லாம் தடதடவென்று அதிர, தளர்ந்து போன ஹார்ன் தாறுமாறாக அலற, வடக்கு நோக்கி ஓடிற்று. 
"நான் இன்னிக்கிப் போனாப்போலத்தான்" என்று சைக்கிள் மிதியிலிருந்து காலை எடுத்தார் சாஸ்திரிகள், 
"அஞ்சு நிமிஷமாச்சு. இடத்தைவிட்டு நகர முடியாம் பண்ணிப்பிட்டாளே முனிசிபாலிடியும் பஸ்ஸுமாய் சேர்ந்துண்டு! மைசூரிலே ரோட்டிலே சிமிண்ட் போட்டுப்பிட்டான். இஞ்ச எல்லாம் எப்ப வரப்போறதோ? நான் உசிரோட இருக்கற வரைக்கும் வரப்போறதில்லே.. , ம், என்ன அக்ரமம்! இந்தப் புழுதியிலேயும் அல்வா, வடயம் எல்லாம்  வியாபாரமாறது. நாமும் ஏலக்கா வாசனையோட இதையெல்லாம் முழுங்கிவிடறோம். நல்ல வேளை; நம்ம தெரு ஒதுப்புறமா இருந்துதோ பிழைச்சேனோ! நீங்க எங்க ஜாகை இருக்கேன்?" 
"காலேஜுக்கு எதிரேதான்." 
"நாசமாப் போச்சு. கோர்ட்டுக்குப் போற வழின்னா அது. அங்கேயும் தூசிக்குப் பஞ்சமிராது. எந்த வீடு?" 
"சுப்பய்யர் வீட்டுக்கு ஒரு வீடு போட்டு மேலண்டை வீடு."
"அப்படின்னா , கைலாசம் வீடா?" 
"ஆமாம்." 
"அங்கே ஜாகை வச்சுக்க இடமிருக்கா என்ன?"
"இல்லை . ரூம் வச்சிண்டிருக்கேன்."
"அப்பா அம்மாவோட இல்லியா?"
"இல்லை ."
"சாப்பாடு... கணபதி லாட்ஜா?" 
"இல்லை இல்லை. நான் இருக்கறதுக்குப் பக்கத்து வீட்டிலேயே சொந்தக்காரா ஒருத்தர் இருக்கா. அங்கேயே பணம் கொடுத்து சாப்பிட்டிண்டிருக்கேன்." 
"பக்கத்து வீடுன்னா, கீழண்டையா மேலண்டையா?"
"மேலண்டை ." 
"மேலண்டைன்னா, நீலுப்பாட்டின்னு ஒரு அம்மா இருக்கா அங்கெ ." 
"அதே அம்மாதான்."
"அவ பிள்ளைகூட இன்ஷூரன்ஸ் ஏஜண்டா இருக்கானே." 

"அதேதான்."
"உங்களுக்கு என்ன உறவா அவா?"
"உறவுதான். ஏதோ தூரத்து உறவு."
"அப்படீன்னா உங்க ஊர்?"
"கிளிமங்கலம்." 
"கிளிமங்கலம்னா எனக்குத் தெரியுமே. ஆனா, எந்தக் கிளிமங்கலமோ? பஜனை பண்ணுவர் வைத்தின்னு ஒருத்தர், அந்தக் கிளிமங்கலமா?" 
"அதே கிளிமங்கலம்தான். அந்த வைத்தியும் எங்கப்பாதான்."
"என்ன! என்ன! வைத்தி பிள்ளையா நீங்க?"
"ஆமாம்." 
"அதான், தாய் ஒரு அடின்னா, குட்டிப் பத்தடி தாண்டறது .. நான் முதல்லியே நெனச்சேன், பரம்பரையா சங்கீத வாசனை இருக்கணுமே இப்படி அமக்களமாகப் பாடறதுன்னா! என்னடாப்பான்னு யோசிச்சேன், வைத்தி பிள்ளையா நீங்க, கிளிமங்கலம்னு சொல்றேளே. ரொம்ப நாளா தஞ்சாவூர்லேன்னா இருக்கார்." 
"இப்ப தஞ்சாவூர்லே இல்லை, பாபநாசத்துக்கு வந்துட்டோம்." 
"ஏன்?", 
"அவருக்கும் வயசாயிடுத்து. தள்ளலே. பாபநாசத்திலே நல்ல வீடா, மலிவாக் கிடைச்சுது. வாங்கியாச்சு." 
"அப்பா திடமாயிருக்காரா?"
"திடம் என்ன? வயசாயிடுத்து." 
"உங்கப்பா சாரீரமே அலாதி சார்? தம்புராவுக்கு ஜீவா புடிச்சாப்போல்! பாடவே வாண்டாம். ஆன்னு வெறுமே இழுத்தாலே போரும். உள்ளுக்குள்ளே போய் என்னமோ பண்ணும் ... மூணு ஸ்தாயியும் சிரமமில்லாமல் பேசும்." 
"இப்ப ஒண்ணும் முடியலே அவராலெ, பாடிப் பாடியே வயித்திலே புண் வந்துட்டுது. வயித்து வலி வயித்து வலின்னு துடிச்சுப் போயிடறார்." 
"இந்த மாதிரி ஒயாம் பாடினா, வயித்து வலி வராம என்ன பண்ணும்? ரொம்ப பூஞ்சை உடம்பு அவருக்கு. வெறும் தடியன்லாம் பிராந்தியைக் குடிச்சுப்பிட்டு கத்திண்டு கிடக்கான், என்ன பாடறோம், எந்த பாஷையிலே பாடறோம்னுகூட தெரியாம கத்தறான்கள். அவனுக்கெல்லாம் ஒண்ணும் வரமாட்டேங்காது. மனசு உருகி உருகி, பகவானைப் பாடறார் உங்க அப்பா. வயித்து வலி, தலைவலி எல்லாம் வரது. பகவான் இதைத்தான் கொடுப்பர் . . . வைத்தியம் பண்ணிக்கிறாரோல்லியோ?" 
"வைத்யத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே. நெல்லுன்னு வித்த பணத்திலே பாதி வைத்யனுக்குத்தான் போறது. இன்ஜெக்ஷன், லேகியம், சிந்தூரம் ...... என்னமோ, அப்பப்ப சாந்தியா இருக்கு. அவ்வளவுதான். விடாம சாப்பிட்டிண்டே இருந்தா சரியா இருக்கு. ஒரு நாலு நாள் விட்டுட்டா வந்துடறது." 
| "ரத்தம் குறைஞ்சுபோயிடுத்துன்னா சிரமம்தான், மருந்து பிடிக்கிறதே கஷ்டம் ... என்னமா பாடுவர்! அருணாசலக் கவி முழுக்கத் தலைகீழ்ப் பாடம் அவருக்கு. என்னமா அனுபவிச்சுப் பாடுவர்! எனக்கு நேரே பழக்கமில்லை. பாபநாசம் போனா கட்டாயமா அவரைப் பாக்கணும், இஞ்ச எப்பவாவது வந்தார்னாலும் சொல்லுங்கோ, நான் வந்து தர்சனம் பண்றேன், பாடிக் கேக்க முடியாட்டாலும், பார்த்தாவது சந்தோஷப்படுவமே, ஆனா நீங்களும் அதுக்கு மேலேதான் பாடறேன் ..... ரூமிலே பாடறத்துக்கு வசதியாயிருக்கோ ?" 
"அதெல்லாம் தொந்தரவே கிடையாது." 
"இராது. கைலாசம் அப்படி ஒண்ணும் அட்டாதுட்டியாயிருக்க மாட்டான், காசிலெதான் கெட்டி. ஒண்ணாம் தேதி காலமே கடன்காரன் மாதிரி வந்து நின்னுடுவான் வாடகைக்கு. மத்தபடி போக்கிரி சாக்கிரி இல்லை. பிறத்தியார் வம்புக்கு வரமாட்டான் . . . ஆனா சார், நீங்க இருக்கிற ரூம் இருக்கே, ரொம்ப ஆகிவந்தது. அதிலே இருந்து படிச்சவாள்ளாம் ஒருத்தரும் அப்பை சப்பையா இல்லை இப்ப, எல்லாரும் பெரிய பெரிய ஆசாமியா ஆயிட்டான், மூர்த்தின்னு அங்கதான் படிச்சான், 

அவன் யூபிலியோ பீகார்லியோ கலெக்டரா இருக்கான். சங்கரன் சங்கரன்னு இருந்தான். அவன் இப்ப டில்லியிலே டிப்டி செக்ரடரியா இருக்கான், நீங்களும் பெரிய ஆளாத்தான் ஆயிடுவேள் .... ம்.... சங்கீதம் சொல்லிக்கிறேளோ?" 
"சொல்லிக்கணும்."
"இதுவரையில் சொல்லிக்கவே இல்லியா!" 
"எதொ கொஞ்சம் நடந்துது. வகையா சொல்லிக்கலெ." 
"இப்பவே சொல்லினுடுங்க சார். இதெல்லாம் ஒரு வயசுக்குள்ள சொல்லிண்டாத்தான். கல்யாணமாகி, குழந்தை குட்டின்னு ஆயிடுத்தோ, 
அப்புறம் அதுக்குத்தான் போது சரியாயிருக்கும்." 
சாஸ்திரிகள் இன்னும் பேசியிருப்பார். ஆனால், தெருவில் தூசி அடங்கிவிட்டது. ஆறுமுகமும், "என்னங்க இன்னும் முடிக்கலியா?" என்று கேட்டு வைத்தார். "போறேன் ஐயா, எனக்கும் நாழியாச்சு. வரேன் சார், உங்க ரூமுக்கு வரேன்... ஆனால் தொந்தரவா இருக்கப் போறானென்னு நெனச்சுக்காதிங்கோ . எனக்கு இங்கிதம் தெரியும்." 
"கட்டாயம் வாங்கோ சார். காலமே பூரா ரூம்லேதான் இருப்பேன்" என்று அழைத்தான் பாபு. 
சாஸ்திரிகள் இப்போது சைக்கிள் மீது ஏறி உட்கார்ந்தே விட்டார். நல்ல வேளையாக அணைக்கரை, திருவையாறு பஸ் ஒன்றும் வரவில்லை, சைக்கிளில் ஏறினவர் நாற்சந்தியில் நின்ற போலீஸ்காரனைச் சுற்றிக்கொண்டு பெரிய தெருப்பக்கம் திரும்பினார். 
அவர் உருவம் பெரிய தெருவின் கூட்டத்திலும் புழுதிப் படலத்திலும் மறைகிற வரையில் பார்த்துக்கொண்டிருந்தான் பாபு. அவருடைய சிரிப்பும் மிகை அதிகமாகத் தாளித்துவிடாத முகமனும் மனதைவிட்டு அகலவில்லை, சாஸ்திரிகளுக்கு நாற்பது வயதுக்குட்பட்டுத்தானிருக்கும். நல்ல உயரம். சற்று முக்கோணம் வாய்ந்த முகம், மார்பு வைரம் பாய்ந்திருந்தது. காவேரியில் நனைத்த, சலவை செய்த வேட்டிச் சற்றுப் பழுத்திருந்தது. காலில் தெரிந்த ஆடுசதையில்தான் எவ்வளவு கரவுசரிவு, எவ்வளவு அழுத்தம்!

பாபு காத்திருந்த நண்பன் வரவில்லை. காந்தி பார்க்கில் நுழைவதற்காக நாற்சந்தியைக் கடந்தான் அவன், பெரிய தெரு கோலாகலமாகத்தான் இருந்தது. நவராத்திரி காலம். இளமையும் பெண்மையும் கரைதவழும் அலையாகக் கிழக்கிலும் மேற்கிலுமாக நடந்துகொண்டிருந்தது. மாலை வெயில் காதிலும் கன்னத்திலும் பூரிப்பை அள்ளித் தெளித்து வீசிக்கொண்டிருந்தது. நகையும் சிரிப்பும் பட்டும் பகட்டும் பவனி வந்த அந்தப் பொற்காலம், பாபுவின் கண்ணை நிறுத்தவில்லை. அவன் மனம் எங்கேயோ அலைந்தது. சாஸ்திரிகளின் பேச்சு அவனை ஏக்கத்தில் ஆழ்த்திவிட்டது. வீட்டை விட்டுப் புறப்பட்ட மகிழ்ச்சியும் அமைதியும் எங்கோ பறந்து போய்விட்டன. கடமை தவறிய குறு குறுப்பு நெருஞ்சியாக விட்டு விட்டுக் குத்திற்று. நடக்கக் கால் பாவவில்லை. வீட்டுக்குத் திரும்பிவிடலாமா என்று நினைத்தான், எங்காவது உட்கார்ந்தால், அல்லது படுத்தால் தேவலை போலிருந்தது. காந்தி பார்க்கிற்குள் நுழைந்தான். 
வழக்கம்போலப் பார்க் நிறைந்துதானிருந்தது. அங்கங்கு புல்பத்தைகளிலும் மணற்பரப்புகளிலும் கும்பல் கும்பலாக மாலைக் கூட்டம் குவிந்து, பேச்சையும் புகையிலையையும் அரைத்துத் துப்பிக் கொண்டிருந்தது. கும்பகோணத்து ஜனங்களுக்குக் காந்தி பார்க்தான் கடற்கரை, பொழுதுபோக்கு, இளைப்பாறும் சோலை, எல்லாம்! (கேட்டைத் தாண்டி நுழைந்தபோதே வடமேற்காக ஒதுங்கியிருந்த புல்பத்தையை உற்றுப் பார்த்துக்கொண்டே நடந்தான் பாபு. அங்கு அவனுடைய நண்பனைக் காணவில்லை. சற்று நின்று நாற்புறமும் கண்ணால் நோட்டம் விட்டான். அந்த இடத்தை விட்டுவிட்டு வேறு எங்கும் ராஜம் உட்காரமாட்டான் என்று அவனுக்குத் தெரியும், இருந்தாலும் மனம் சோர்ந்திருந்த அந்த நிலையில், அவனை உடனே பிடித்துவிட்டால் தேவலை போலிருந்தது. ஒரு முறை சுற்றிலும் பார்த்தான். சிறிது தூரத்தில் அன்று காலையில் வந்த தினசரிப் பத்திரிகையை யாரோ உரக்கப் படித்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி இருபது முப்பது பேர் உட்கார்ந்து 
அவர் வாசிப்பதை சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பல், கும்பகோணத்தின் பல மூலைகளிலிருந்து வந்து சேருகிற குழு. பெரும்பாலும் நெசவுக்காரர்கள். கடியார் ரிப்பேர்க்காரர் ஒருவர், மாட்டுத் தரகர் ஒருவர், இந்த மாதிரி அதிர்ஷ்டத்தை நம்பிப் பிழைக்கிற இன்னும் இரண்டு மூன்று ஆசாமிகளும் அந்தக் கூட்டத்தில் உண்டு. கூட்டு சந்தா போலிருக்கிறது. மணி ஐந்தடிப்பதற்குள் முப்பது பேரும் ஒவ்வொருவராக வந்து கூடி பத்திரிகை முழுவதும் கையெழுத்து மறைகிற வரையில் வாசிக்கக் கேட்டு, முக்கியச் செய்திகளை நன்றாக வாதம் செய்து, அலசி ஆராய்ந்துவிடுவார்கள். 'சோ'வென்று பெய்கிற மழையைத் தவிர, வேறு ஒன்றும் அந்தக் கூட்டத்தை அங்கு வந்து செய்தி கேட்காமல் தடுத்துவிட முடியாது. புழுதிக் காற்றுக்கும் பனிக்காலத்துக்கும் பயந்து விடுகிற கூட்டமில்லை அது. அதைத் தாண்டிக்கொண்டே போனான் பாபு. காலேஜில் இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கிற ஒரு சிறு கூட்டம், ஒரு பழைய சீட்டுக் கட்டை வைத்துக்கொண்டு 504 ஆடிக்கொண்டிருந்தது. பாபுவைப் பார்த்த ஒரு பையன், வெற்றிலையை அரைக்கும் வாயைத் தூக்கி ஒரு குட்மார்னிங் வைத்துவிட்டு, மறுபடியும் சீட்டு விழுந்த களத்தை நோக்கிக் கண்ணைத் திருப்பிக்கொண்டான். 
வடமேற்கில் ஒதுங்கியிருந்த புல்பத்தையை அடைந்ததும் காலாலும் கண்ணாலும் வெற்றிலை எச்சில் இல்லையே என்று நிச்சயப்படுத்திக்கொண்டு பாபு உட்கார்ந்தான். தளதளவென்று புல்சிரிக்கும் இடமில்லை இது. புல் காய்ந்து மண்ணும் புல்லுமாக இருந்த இடம். காலால் ஒரு தடவை திலாவிவிட்டு, குட்டையாகக் கத்தரித்திருந்த சவுக்கைக் கன்றின் மறைவில் உட்கார்ந்து கொண்டான் அவன். 
2

இன்னும் ராஜம் வரவில்லை . 
சற்று தூரத்தில் பி.ஏ. இரண்டாவது வருடம் படிக்கும் கூட்டம் ஒன்று உட்கார்ந்து அமர்க்களமாக இரைச்சல் போட்டுப் பேசிக் கொண்டிருந்தது. 
பாபு தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு யாராவது ஒரு பையன் கிளம்பி, "என்ன மிஸ்டர்" என்று வந்தால் ....? அப்படி ஒருவனும் வரமாட்டான். அந்த இடமே ராஜமும் அவனும் உட்கார்ந்து பேச ஒதுக்கப்பட்ட இடம், அவனுக்கு ராஜம், ராஜத்திற்கு அவன் என்று பரஸ்பர உடைமையாகக் கொண்ட நட்பு அது. அதில் மூன்றாம் பேருக்கு இடமில்லை. மூன்றாம் பேர் யாராலும் அவனுடைய எண்ணங்களையோ ஏக்கங்களையோ புரிந்து கொண்டுவிட முடியாது. பரிவோடு அவற்றை மனதில் வாங்கி அனுதாபப் படவும் முடியாது. 
பாபுவுக்கு வேடிக்கையாக இருந்தது. முன்பின் பழக்கமில்லாத சாஸ்திரிகள் எவ்வளவு தூரம் பேசி, எவ்வளவு கலக்குக் கலக்கிவிட்டுப் போய்விட்டார்! அவர் சொன்னது உண்மைதானா? தான் பாடுகிற பாட்டைப் பற்றி இப்படி வாய் நிறையப் புகழ்ந்த அவருடைய வார்த்தைகள் அவ்வளவும் உண்மையா? இல்லாவிட்டால் வெறும் முகமனா? வெறுமே, வழியில் போகிறவர், எதற்காகத் தன்னைப் புகழ வேண்டும்? 
அவர் எப்படியிருந்தாலும் இருக்கட்டும். அவருடைய வார்த்தைகள் அவனைச் சும்மா விட்டுவிடவில்லை, ஊரில் தனக்காகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிற தந்தையின் நினைவைக் கொண்டு விட்டுவிட்டது, அவர் பேச்சு, பாபு வாயைத் திறந்து ஒரு பெருமூச்சு விட்டான், 
பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலி பெருக்கியிலிருந்து இசை தவழ்ந்து வந்துகொண்டிருந்தது. வீணையின் இசை; ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிடம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றிவிட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது, அந்த கானம், (கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன் வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம், நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை, உள்ளத்தை உலுக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதந்த நீத பதமாகர் . . . ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்தவைகளோ! முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று. பதமா . . . என்று கெஞ்சி இறைஞ்சும் அந்த இசை அவனைக் குற்றம் சாட்டிற்று. அவன் செய்தது தவறென்று உணரவில்லையா என்று தீனமாக மன்றாடிக் கேட்டது. பழைய நினைவுகளை உதறிவிட்டு, மீண்டும் சங்கீதத்தின் இனிமையில் லயிக்க முயன்றான் பாபு, ஆகா! எவ்வளவு பாக்கியம் செய்த விரல்கள்! பாபுவின் கண்களில் தாரைதாரையாக நீர் பெருகிற்று. கண்ணை மூடிக்கொண்டு இசையின் தூய்மையான இனிமையில் திளைத்தான். கண்ணைத் திறக்கக்கூட மனம் இல்லை. வெளி உலகைப் பார்க்கக்கூட மனம் வராத கண்கள், திறக்க மறுத்தன, காலமும் இடமும் மறைந்து அற்றுப்போன நிலையில், வெறும் ஒலி வடிவமான அனுபவத்தில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஒரு கணப்பொழுது உள்ளமும் ஒலியும் ஒன்றாகிவிட்டன. ஆனால் அடுத்த விநாடி உள்ளம் ஒலியினின்றும் விண்டு தனியாகப் பிரிந்து, கேட்பவனாக, அனுபவிப்பவனாகத் தனியாக நின்றது. 
நாமும் காலத்தையெல்லாம் இப்படி வீணாக்காமலிருந்தால்? இந்தச் சங்கீதத்தை நன்றாகப் பயின்றிருந்தால்? 
காலத்தை வீணாக்கியாவிட்டோம்? இந்தப் படிப்பு ஒரு வீணா? இந்தப் படிப்பு பயனில்லாத படிப்பா? எத்தனையோ மேதைகளோடு புத்தகக் கண்ணாடியின் மூலமாக உறவாடி மகிழ்ந்து பெருமிதம் அடைகிற இந்தப் படிப்பு வீணா? பெற்றோரை விட்டுப் பிரிந்து, தனியாக உலகத்தைப் பார்க்கிற இந்தக் காலம் வீணா? ரத்னம் கிடைத்தது போல் கிடைத்த ராஜத்தின் நட்பு வீணா? ம்... ஆனால் ராஜத்தின் நட்பிற்காகவா, இவ்வளவு அழகான குரலும் சங்கீத ஞானமும் வாய்த்தன? பெற்றோரை விட்டுப் பிரிந்து, படிப்புக்காகத் தனியாக இருந்து, உலகத்தைப் பார்த்து கற்றுக்கொள்வதற்கா அப்பா இவ்வளவு இடம் கொடுத்தார்? அவ்வளவு அன்பைச் சொரிந்தார்? ஏழு வயதிலிருந்து நிசியும் பனியும் பாராது கேட்ட சங்கீதம் எல்லாம் இந்த மாதிரி எங்கோ வந்து, என்னத்தையோ படித்து, யாருடனோ நட்புக் கொண்டு, எதையோ வித்தையென்று பயிலத்தானா? அந்த மாதிரி தந்தை, யாருக்குக் கிடைப்பார்கள்? 
ஆமாம் , - . ஏழு வயது முதலே அவன் கச்சேரி கேட்க ஆரம்பித்துவிட்டான். கேட்கும்படியாகச் செய்தது அவர்தான். இரவு பன்னிரண்டு மணி, இரண்டு மணி என்று அப்பாவும் பிள்ளையும் வந்து வீட்டுக் கதவைத் தட்டுவார்கள்! தூக்கக் கலக்கத்தில் அம்மா எழுந்து வந்து கதவைத் திறப்பாள், கோடை காலமோ பனி நாளோ, எப்போழுதும் அப்படித்தான், அதுவும் தஞ்சாவூரில் கச்சேரிக்கா பஞ்சம்! காசில்லாமல் சுத்த சங்கீதத்தைக் கேட்க அந்த நாள் தஞ்சாவூரைவிட வேறு இடம் கிடைக்குமா என்ன? வெங்கடேச பெருமாள் தெரு அனுமாருக்கு வாசு நடத்திய உற்சவம், சிவகங்கை அனுமாருக்கு நடக்கும் உற்சவம், மேல வீதி விச்வநாதய்யர் கோயிலில் ஜவுளிக்கடை சாம்பு நடத்திய கந்தஷஷ்டி, ராஜமாணிக்கம் செட்டியார் நடத்துகிற ராமலிங்கர் பூஜை விழா, வாகைப்பையர் சந்தில் தியாகப் பிரம்மம் பூஜை செய்த விக்ரகங்களுக்கு நடந்த ஆராதனை, தெற்கு வீதி காளி கோயிலில் நடக்கிற உற்சவம் இப்படி வருஷம் முழுவதும் சங்கீதத்திற்குப் பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருந்தது. மனிதர்கள் செல்வாக்கைப்போல், திடீரென்று கோயில்களின் செல்வாக்கும் மறைகிற வழக்கம்தான். ஆனால், வேறு புதிதாக ஒரு கோயிலுக்கு - ஒரு சுப்பிரமணியருக்கோ, விநாயகருக்கோ தசாநாதம் அடிக்க ஆரம்பித்துவிடும். சங்கீதம் மட்டும் இந்த வித்தியாசத்தைப் பாராமல் கூப்பிட்ட இடத்தில் போய்ச் சேவகம் செய்து கொண்டிருந்தது. 
சங்கீதத்தில் லயித்த பாபுவின் காதுகளுக்கு ரங்கூன் கமலத்தில் அடுப்புக் கட்டிக் கடுக்கன் போட்டதோடு நின்றுவிடவில்லை, வைத்தி, ஒரு சங்கீதக் கச்சேரி விடாமல் அவனை அழைத்துக்கொண்டு போய் வந்தார். 
ஒரு தைமாசம்தான். பாபுவுக்கு ஏழு வயது அப்போது. வெடவெடவென்று பனி நடுக்கிக்கொண்டிருந்தது. ராமலிங்கர் திருவிழாவில் நடந்த கச்சேரியைக் கேட்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள் வைத்தியும் பாபுவும், நடுநிசிக்கு மேலாகிவிட்டது. வீடுகளும் ஜன்னல்களும் கதவுகளும் உறங்கிக்கொண்டிருந்தன, 

குளிருக்குப் பயந்து எல்லையம்மன் கோயில் தெரு நாய்கள் கூட நடுத்தெருவை விட்டு, வீட்டுத் திண்ணைகளில் ஒண்டிக் கிடந்தன. இரவின் அந்த மௌனத்திற்கு நடுவில், தலைக்கு ஒரு மப்ளரும் மார்பில் கட்டிய கைகளுமாக பாபுவும் வைத்தியும், தாவடை குளிரில் அதிர நடந்துவந்தார்கள், கதவைத் தட்டியதும் அம்மா கதவைத் திறந்தாள். 
"கதவைத் திறக்க முடியலெ, அப்படி ஊதறது குளிர். இந்தப் பனியிலே குழந்தையை அழச்சிண்டு . . ? உடம்பு என்னத்துக்காகுமாம்?" என்று, கண்ணை முழுவதும் திறக்கக்கூட முடியாமல் இமைகள் அழுத்த, பாபுவை இழுத்து அணைத்துக்கொண்டாள் அம்மா! 
"ஏண்டா பாபு குளிரலையா?"
 "குளுர்ந்துதும்மா."
 "இந்தக் குளுர்லேகூட கச்சேரி கேட்டுத்தான் ஆகணுமா?" "ரொம்ப நன்னா வாசிச்சார்மா," 
"கச்சேரி பண்றவா நன்கு வாசிக்காமயா இருப்பா .. ? இந்தப் பனியிலே, மார்லெ சளி பிடிச்சுண்டா என்ன பண்றது? அவன் ஏற்கனவே உலந்து வத்தலாயிருக்கான். அவனை இப்படி இழுத்திண்டு போகாட்டா என்ன ?" 
"ஒருநாள் தானே. நித்யம் போகப்போறோமா?" என்றார் வைத்தி. 
"ஒருநாள் என்ன? இன்னும் அஞ்சுநாள் உற்சவம் பாக்கியிருக்கு. அப்புறம் விடாயத்தி. போனமாசம் பத்து நாள் திருவையாறு பனி ஆயிடுத்து." 
"நல்ல பனிக் காலமாப் பார்த்து தியாகராஜர் சமாதி ஆயிட்டார். என்ன பண்றது? பாபு கச்சேரி கேக்கப்போறான்னு தெரிஞ்சிருந்தா, சித்திரை வைகாசி மாசமாப் பாத்து சமாதி அடைஞ்சிருப்பார்." 
அப்பா சொன்னதைக் கேட்டு பாபு சிரித்தான். 
"ராமலிங்க சாமியும்தான்" என்றான், "ஏம்மா, மப்ளர், பனியன், முழுச்சட்டை எல்லாம்தான் இருக்கேம்மா, அப்புறம் என்ன?" 

"சரி, பாலைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கலாம்" என்று பாயைப் போட்டுவிட்டு, சமையலறைக்குள் போய்ப் பாலை எடுத்து வந்தாள் அம்மா, அவன் சாப்பிடும்போது, "உனக்கென்னடா கச்சேரி கேட்கத் தெரியும்? நீட்டி முழக்கிண்டு போயிட்டு வறியே?" என்று கேலியாகப் புன்னகை செய்தாள். 
"பியாகடை இன்னிக்கு ரொம்ப நன்னா வாசிச்சார் அம்மா." "ஆமாம், மறக்கவே முடியலே" என்றார் அப்பா. "எனக்குக்கூட இன்னும் அப்படியே ஞாபகம் இருக்குப்பா." 
"சரி சரி, படுத்துக்கோ " என்றாள் தாயார், பாபு படுத்துக்கொண்டான். அப்புறமும் ஒரு நிமிஷம் தொண்டைக்குள்ளேயே ராகத்தை இழுத்தான். மூடியிருந்த கண்களும் உள்ளமும் ராமலிங்க மடத்தில் இன்னும் பியாகடைராகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தன. ஒலியில் அதிரும் ஏனத்து நீர்போல அவன் இளம் நெஞ்சு அந்த நினைவின் கார்வையில் சிலிர்த்துக்கொண்டிருந்தது. 
"பாபூ." 
"ஏம்மா ." "மணி மூணடிச்சுப்பிடுத்து." 
"எப்பம்மா ?" 
"இப்ப அடிச்சுதே, காதிலே விழலை? தூங்கு." 
"பாபு, தூங்குடா" என்று அப்பா ஒருக்களித்துப் படுத்திருந்த அவனுடைய கையைத் தடவிக் கொடுத்தார். 
என்ன ஆனந்தமான ஸ்பர்சம்! ஒரு ஸ்பர்சத்தில் தந்தையின் பாசம் முழுவதையும் வடிக்கக்கூடிய அந்த உள்ளங்கை, இப்போது கூடத் தடவுவது போலிருக்கிறது. அப்போது கூடம் முழுவதும் பெட்ரூம் விளக்கின் முத்தொளியில், மார்பளவு நீரில் நிற்பவனைப்போல, இருளில் மெளனமாக அமுங்கிக் கிடந்தது. அந்த உள்ளங்கையில் ஊறிவடிந்த அமைதியையும் ஆறுதலையும் இன்னும் மறக்க முடியவில்லை . 
இரண்டு நாள் கழித்து - அன்றிரவும் பெரிய கச்சேரிதான். ஏகக்கூட்டம், அன்று என்னமோ சமையலாகச் சற்று நேரமாகிவிட்டது. அதன் பலன் முன்னால் இடம் கிடைக்கவில்லை , மடம் முழுவதும் நிறைந்துவிட்டது. உள்ளே ஊசி குத்த இடமில்லை. வாசற்படி அடைந்துவிட்டது. மடத்து மொட்டை மாடியும் நிறைந்துவிட்டது. சிளுகிளுவென்று இறங்கிய பனியைக் கூடப் பாராட்டாமல் ஒரு பெரும் கூட்டம் அங்கும் நெருங்கி, துடைமேல் துடையாக நெருக்கிக்கொண்டு கூடியிருந்தது. 
மடத்திற்கு வெளியே வந்து, எதிர் வீட்டில் இரண்டு ஆள் உயரத்திற்குக் கட்டியிருந்த திண்ணையில் பாபுவுடன் வந்து உட்கார்ந்துகொண்டார், வைத்தி. அங்கும் பத்து பன்னிரண்டு பேர் ஏற்கனவே தலையில் துணியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். 
ஒவ்வொரு பாட்டும் ராகமும் ஆரம்பிக்கும்போது, "என்னடா ராகம், பாபு?" என்று கேட்டுக்கொண்டிருந்தார் வைத்தி. பாபுவும் 'பளிச்பளிச்' சென்று சொல்லிக்கொண்டு வந்தான். ஒன்றிரண்டு அவசரப்பட்டுத் தவறாகச் சொல்லவே, "செத்தெ இருந்து சொல்லு. அந்த மாதிரிதான் இந்த ராகம் இருக்கு. ஆனா அது இல்லை" என்பார் வைத்தி. 
"சரி சரி சரி, இப்ப புரிஞ்சுதுப்பா, புரிஞ்சுதுப்பா" என்பான் பாபு. 
"நிதானமாகக் கவனிச்சுச் சொல்லணும், குடுக்கை மாதிரி அவசரப்படப்படாது." 
"நீங்க முதல்வியே கேட்டுடறேள்." 
"பிள்ளை நம்ம குழந்தைங்களா?" என்று குரல் கேட்டது. வைத்தியும் பாபுவும் திரும்பிப் பார்த்தார்கள். மொட்டைத் தலையையும் சட்டை மேலும் ஒரு பச்சை சால்வையால் போர்த்தியிருந்த ஒருவர்தான் கேள்வி கேட்டது. 
"ஆமாம்." 

"பிள்ளை பாடும் போலிருக்கே."
"பாடத் தெரியாது. ஏதோ கேட்கிறது." 
"ம்" என்று இழுத்தார் அவர். சற்றுக் கழித்து "எதுக்காக கேட்டேன்னா ... பிள்ளைக்கு வயசு என்னா ஆவுது?" என்று கேட்டார், 
"ஏழு."
"பிஞ்சு. யாராவது பாத்துக்கிட்டிருந்தா?"
"என்ன ?" 
"ஒண்ணுமில்லீங்க. இந்தக் கண்ணைத்தான் சொல்றேன்."
"கண்ணா ?" 
"கண்ணுதான். எங்க மாதிரி நாலுபேருங்க கண்ணுதான். பிள்ளை சிறிசு, வெடையா நறுக்கு நறுக்குனு பதில் சொல்லுது. நாலுபேர் கண் படப்படாது பாருங்க." 
"நான் இரைஞ்சே கேக்கலியே." 
"என் காதிலே உளுந்திச்சு, இந்தக் கண்ணு இருக்கு பாருங்க" என்று வலது கைப் பாம்பு விரலால் இரண்டு கண்களையும் மாற்றி மாற்றித் தொட்டுக்கொண்டே சொன்னார், அவர். "இது கெட்ட சாதிப் பயமவனுது. எந்தக் கண்ணு எப்படியோ? எல்லாக் கண்ணும் ஒரு மாதிரியா இருக்குமா? உங்களுக்குத் தெரியாததையா சொல்லப் போறேன்! 'அடெ'ன்னு ஆச்சரியமாக் கண்ணை விரிப்பாங்க சில பேருங்க. அப்பறம் அந்தக் கண்ணு பாத்த இடம் சாணியாப்போயிரும். அவ்வளவு புண்யமான கண்ணு. என்னாத்துக்கு இந்த வம்பு?" 
"என்னப்பா?" என்றான் பாபு.
"என்னடாது? பேசறதையா கேட்டிண்டிருக்கே. பாட்டுக் கேக்கலே?"
"அவர் என்னப்பா சொன்னார்?"
 "உனக்கு ஒண்ணுமில்லெடா?" 

"என்ன சொல்லுங்களேன்பா."
 "அப்புறம் சொல்றேன். நீ பாட்டைக் கேளு." 
கச்சேரி முடிந்து வீட்டுக்கு வரும்போது, "ஏம்பா, சில பேர் ஆச்சரியமா கண்ணை விரிச்சா, சாணியாப் போயிடும்னாரே உங்களோட பேசிண்டிருந்தவர், எப்படிப்பா சாணியா மாறும்?" என்று கேட்டான், 
"ம்..." என்று என்ன பதில் சொல்வதென்று யோசித்துக்கொண்டே நடந்தார் வைத்தி. 
"புதுசா ஒரு சட்டையிருக்கு. அதைப் பாத்தா, அதுகூடச் சாணியாப் போயிடுமா? ஏம்பா?" 
"அதெல்லாம் ஒண்ணும் இல்லெ."
"பின்னே அவர் சொல்றாரே?" 
"சும்மா தெரியாம சொல்றார்."
 "நீங்க, அவர் சொல்றதுக்கு ஆமாம்னேளேப்பா." 
"அப்படிச் சொன்னாத்தான் அவர் பேசாம இருப்பார். இல்லாட்டா மொல்லு மொல்லுன்னு பேசிண்டு கச்சேரி கேக்க முடியாம பேசிண்டேயிருப்பார்." 
"ஏம்பா அப்படிப் பேசறார்? அவருக்குக் கச்சேரி கேக்கத் தெரியாதா?" 
"அதான் போலிருக்கு...." 
"ரொம்ப வேடிக்கையா இருக்குப்பா. பார்த்தா எப்படிப்பா சாணியா மாறும்?" என்று சிரித்தான் பாபு. 
வைத்தியும் விழுந்து விழுந்து சிரிக்கிறாற்போலப் பாவனை செய்து, சங்கடத்திலிருந்து மீண்டுகொண்டார். 'முர்ர்ர்' என்று பரமேச்வரய்யர் ஹோட்டலுக்கு எதிர்த்த வீட்டுத் திண்ணையில் ஒண்டிக்கிடந்த நாய் உறுமிற்று. பாபு அப்பாவோடு ஒண்டிக்கொண்டான். 'இந்த அர்த்த ராத்திரியில் என்னடா தெருவில் நடை?' என்று மிரட்டுவது போலிருந்த 

அந்த உறுமலைக்கேட்டு, பாபு வாயை மூடிக்கொண்டான். 
அன்றைய இரவு இந்த விசித்திரத்தோடு போய்விடவில்லை, வீட்டுக்குப் போனதுதான், ஊரிலிருந்து வந்திருந்த அண்ணாவின் ஞாபகம் வந்தது வைத்திக்கு. கதவு திறந்ததும் "அம்மா" என்று ஏதோ சமாசாரம் சொல்ல ஆரம்பித்தான் பாபு. 
"ஸ், பெரியப்பா தூங்கறார். இரையாதே" என்றாள் அம்மா. 
பெரியப்பா கோர்ட்டு அலுவலாக மாசத்திற்கு ஒரு தடவை வருகிற வழக்கம், அன்று காலையில் வந்தவர் கோர்ட்டுக்குப் போய், வக்கீல் வீட்டுக்குப்போய், இன்னும் காரியங்களை எல்லாம் முடித்துக்கொண்டு இரவு எட்டரை மணிக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டு விட்டாராம். நாலைந்து மணிநேரம் முதல் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டவர், இப்போது கதவைத் தட்டுகிற ஓசை கேட்டதும் விழித்துக்கொண்டு விட்டார். பாபுவும் வைத்தியும் படுத்துக்கொள்கிறபோது, அவருக்குத் தூக்கம் நன்றாகத் தெளிந்துவிட்டது. 
"யாரு வைத்தியா?" என்று கேட்டார். 
"ஆமாண்ணா ."
"இப்பதான் வறியா என்ன?"
"ஆமாம்."
 "எங்கே கச்சேரி?" 
"ராமலிங்க மடத்திலே." 
மணியை அடிக்க வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொள்வதுபோல, நாலு விநாடி 'கர்ர்ர்ர்ர் என்று காறி விட்டு, கூடத்து ஜப்பான் கடிகாரம் இரண்டு அடித்தது. 
"மணி ரண்டடிக்கிறதே!" 
"ஆமாம். பத்து நிமிஷம் பாஸ்ட்" என்று பயந்துகொண்டே சொன்னார் வைத்தி. 

"இத்தனை நாழியா கச்சேரி பண்ணினான்?"
"ஆமாம்." "இந்தக் குளிரிலியா?"
 "அங்கே இவ்வளவு குளிர் தெரியாது." 
"நல்ல பைத்தியங்கள்டா . . - ராக்கூத்து அடிச்சிண்டு , . , சரி, கச்சேரின்னா, இந்தப் பயலை வேறே என்னத்துக்கு இழுத்துண்டு போறே?" 
"ஏதோ ஆசையாக் கேக்கறான்."
"நல்ல ஆசை போ. இந்த வாண்டுக்கு என்னடா தெரியும்?"
"ஏதோ கேக்கறதுக்கு ஞானமிருக்கு."
"நல்ல ஞானம் போ. இப்பவே பிடிச்சு இப்படி இடம் கொடுத்தா ..." 
வைத்தி ஒன்றும் பதில் சொல்லவில்லை, 
"குளிரானா, வயறு எலும்பெல்லாம் போய் உலுக்கறது. ஊதலானா வெளியிலே தலை கிளப்ப முடியலே, இத்துனுண்டு பய இவன். இவன் வரேன்னு சொன்னா, ஆகான்னு இழுத்துண்டு போயிடணுமா? நன்னாருக்கு." 
வைத்தி பேசாமல் உட்கார்ந்திருந்தார். 
"என்னமோ. இப்படீ இடம் கொடுத்திண்டேயிருந்தா, அப்பறம் கடிவாளம் போட முடியாது. பாத்துக்கோப்பா," 
"ஒரு நாளைக்குத்தானே, போனாப் போறதுன்னு அழச்சிண்டு போயிட்டு வந்தேன்." 
"சரி, நானும் வழக்கமாயிடப்படாதுன்னுதான் சொல்றேன் ... நம்ம பயலை பாக்கு வெட்டியிலே வக்கற மாதிரி வச்சிண்டிருக்கேன். தெரியுமோவ் வியோ? இல்லாட்டா இந்தக் காலத்துப் பிள்ளைகள் சொன்னதைக் கேக்கும்னா நெனக்கறே? சாயங்காலம் ஆறு அடிச்சதோல்லியோ, வீட்டுக்கு வந்துவிடணும். படிப்பு கிடிப்பெல்லாம் முடிச்சு எட்டரை மணிக்கு படுக்கை. விடிய காலமே அஞ்சுமணிக்கு எழுப்பிவிட்டுடறேன். இவ்வளவு பண்ணினப்பறம் கிளாஸ்லே முதலாயிருக்கான். இல்லாட்டா, தத்தாரியாத்தானே திரியும்?" 
பாபு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டேதான் படுத்திருந்தான். 
"பெரியப்பாவுக்குப் பொறாமை' என்று அவன் நெஞ்சு உறுத்திக்கொண்டேயிருந்தது. 
பெரியப்பா பிள்ளை சங்கு, அவனை விட இரண்டு வயது மூத்தவன். அப்போது முதல் படிவம் படித்துக்கொண்டிருந்தான், பெரியப்பாவுக்கு அவனைப் பள்ளிப்படிப்புக்கு மேல் படிக்கவைக்க முடியவில்லை. இப்போது மதராஸில் பெரிய இரும்பு, சைக்கிள் மோட்டார், வர்ணம் என்று பல துறைகளில் வியாபாரம் செய்கிற பெரிய கம்பெனியில் குமாஸ்தாவாக இருக்கிறான். கம்பெனியை நிர்வாகம் செய்கிற செட்டியாருக்கு அந்தரங்க குமாஸ்தா அவன், அவன் கையெழுத்து மணி மணியாக இருக்கும், அவ்வளவு அழகான கையெழுத்தை பாபு இதுவரையில் பார்த்தது கிடையாதுதான். அந்த மாதிரி எழுத வேண்டும் என்று போன மாதம்கூட பத்து நாள் எழுதி எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தான். சங்கு எழுதுகிற தானா, கானா, ஜானா, நம்பர் நாலு, நானா, டானா - எல்லாம் தனி ராயசமும் முதுமையும் பெற்று, கம்பீரமாக நிற்கும். கானா, ஜானா என்ன, ஆனா, ஐயன்னா , ... இதென்ன இது! - அவன் எழுதுகிற எல்லா எழுத்துக்களும் அப்படித்தான் இருக்கின்றன! கணக்கில் அவன் கெட்டிக்காரன். எப்படித்தான் இவர்களுக்குக் கணக்கு இவ்வளவு வேகமாக, சுலபமாக வருகிறதோ! ஒவ்வொரு லீவுக்கும் தஞ்சாவூரிலிருந்து மாயவரம் போய், பாபு அவனிடம் கணக்குச் சொல்லிக்கொள்வான். ஏ.பி.எக்ஸ், ஒய், ஸி, டி, என்று தலையைச் சுற்றிய கணக்குகளெல்லாம் பாபு கற்றுக்கொண்டது சங்குவிடம்தான் பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்லிக்கொடுத்து வரவில்லை அவனுக்கு. பாபு அப்படிச் சொல்லிக்கொண்டதும் பள்ளிப்படிப்பின் கடைசி வருடத்தில்தான். பள்ளிப்படிப்பை ஒரு தினுசாகத் தாண்டினதுகூட அப்படி சங்கு, சங்கு சங்காகக் கணக்கைக் குழந்தைக்குப் போட்டுகிறாற்போலப் போட்டினதால்தான் என்று பாபுவுக்கு உணர்வு உண்டு. இதையே இரண்டு வருடம் முன்னால் சொல்லிக்கொண்டிருந்தால், அவன் ஐந்தாவது பாரத்தில் கணக்கு எடுத்துக்கொண்டு, காலேஜிலும் கணக்கு எடுத்துக்கொண்டு, டாக்டருக்கோ என்ஜினீருக்கோ படித்திருக்கலாம், கணக்குப் பையன்களை 

எடுப்பதற்காக ஐந்தாவது படிவம் வந்ததும் ஒரு பரீட்சை வைத்தார்கள். வெறும் தசாம்சப் பெருக்கல்தான். பாபு அந்தக் கணக்கை வைத்து கொண்டு விழிவிழியென்று விழித்தான். கடைசியில் ஏதோ பெருக்கிப் புள்ளிகளை எங்கெங்கோ வைத்து, விடை என்று எதையோ எழுதிக்கொடுத்தான், 
"யார்றா பய நீ! வைத்தி பிள்ளைன்னா நீ ... ஓடு ஓடு, ஹிஸ்டரிக்கு ஓடு. உனக்குக் கணக்கு வராது . . . ம் . . . ஓடு" என்று விரட்டினார், விஞ்ஞான வாத்தியார் பஞ்சாபகேசய்யர். 
"யாரு, பஜனை வைத்தி பிள்ளையா?" "ஆமாம்." 
"எலே போடா, ஹிஸ்டரிக்குப் போ, மாவடு ரங்கசாமிக்கும் பஜனை, பாட்டுன்னா புடிக்கும். ஓடு." 
பாபுவுக்கு வெட்கமும் அவமானமும் தாங்கவில்லை. இந்தக் கணக்கைக்கூடப் போடத் தெரியவில்லையே என்று சிரித்து, குமுறலைச் சமாளித்துக்கொண்டே பாட்டுப் பிடிக்கிற சரித்திர ஆசிரியர் மாவடு ரங்கசாமியின் வகுப்பு வாசலில் போய் நின்றான். 
"என்னடாது? நீ நமக்குத்தானா? உன்னையும் உதவாக்கரைன்னு இஞ்ச அனுப்பிச்சிப்பிட்டானா பஞ்சாமி . . . வா வா, வந்து உட்காரு" என்று மணிபர்ஸ் வாயால் சிரித்துக்கொண்டே வரவேற்றார், மாவடு ரங்கசாமி, அந்தக் கபடமற்ற சிரிப்பு அவனை அடிமைப்படுத்தி விட்டது, இப்போதும் தஞ்சாவூருக்குப் போனால் அவரைத்தான் பாபு வாத்யாராக மதித்து, வீட்டுக்குப் போய்ப் பேசுகிற வழக்கம். அடிபட்ட புறாவைப் போல அன்று அவன் ஓடிவந்து, அவர் வகுப்பு வாசலில் வந்து நின்றபோது, அவரும் அவனும் பார்த்துக்கொண்ட வேளையோ என்னவோ, இரண்டு உள்ளங்களும் பிணைந்துவிட்டன. அவனுடைய ஹிருதயத்தில் அழியாத ஒரு ஸ்தானத்தை அவருக்குக் கொடுத்துவிட்டான் பாபு. அன்று படிப்பு, புத்தகம், சர்ச்சை என்று அவன் வெறி கொண்டு அலைவதற்கெல்லாம் வித்திட்டவர் அவர்தான், 
சங்கு இல்லாவிட்டால் மட்டும் கணக்கு அவனைப் பள்ளியைத் தாண்டாமல் கட்டைப்போட்டிருக்கும். சொல்லிக்கொடுப்பதில் சங்கு புலி. பெரியப்பாவுக்கு அவன் மேல் உயிர். தம்பி பிள்ளை மேலும் கொஞ்சம் பொறாமையுண்டு. போன வருஷம் பாபநாசம் வந்திருந்த போது கூட, "நம்ம பய சங்கு சொல்றாண்டா பி.ஏ., எம்.ஏ., எல்லாம் இந்தக் காலத்திலே பிரயோஜனமே இல்லையாம். மெட்ராஸிலே இந்தப் பசங்கள்ளாம் வந்து இவன்கிட்ட வேலை வாங்கிக்கொடுன்னு மோளம் அடிக்கிறாளாம்" என்று அவர் அறியாமலே அவர் பொறாமை, வைத்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தது. "ஆமாமாம்... ரொம்பக் கஷ்டம்தான்" என்று என்னமோ சொல்லிப் பேசாமலிருந்துவிட்டார் அப்பா, பெரியப்பா அப்படிச் சொன்னதும். பத்துப் பன்னிரண்டு வருஷம் முன்னால் அன்றிரவு கச்சேரி கேட்டுவிட்டு வந்தபோது சொன்ன எச்சரிக்கைகளும் மறக்க முடியாத காட்சிகளாக, அந்த இருட்டு, முத்தொளி, குளிர் - எல்லாவற்றுடன் நெஞ்சில் பதிந்து கிடக்கின்றன, அப்பா 
அப்போதெல்லாம் விட்டுக் கொடுத்து ஒரு வார்த்தை பேச வேண்டுமே! 
இந்த மாதிரி தந்தை கிடைப்பாரா? அவருடைய ஆசையெல்லாம் நிறைவேறிற்றா? 
பாபுவுக்கு உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. பைரவி ராக வர்ணத்தில் மபகாரீஸந்தபமா என்று வீணை கீழே இறங்குவது கேட்டது: என்னடா இப்படிச் செய்துவிட்டாயே என்று பொறுமையாகவும் இடித்தும் கேட்பது போல் விழுந்த அந்த ஸ்வர வரிசை, நெஞ்சில் பாய்ந்து வயிற்றைக் கலக்கிற்று. மறுபடியும் தாரை தாரையாக அவன் கண்ணில் நீர் பெருகிற்று. தன் தவறிய கடமைகளை நினைத்தா, அல்லது ராகத்தின் வடிவத்தைச் சுத்தமாக எழுப்பிய அந்தச் சுருதியைக் கவ்வின் இசையில் நனைந்தா, 
அவன் கண் நனைந்தது, அவன் இதயம் விம்மிற்று? 
பாபு உதட்டைக் கடித்துக்கொண்டு, கண்ணில் நீர் வருவதை யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்று நன்றாகக் குனிந்து கொண்டான். எவ்வளவு உன்னதமான சங்கீதம்! இல்லை, சங்கீதமே தான் இயல்பிலேயே இப்படி உன்னதமானதா என்று அவன் அறிவும் அனுபவமும் திணறின. 
"என்ன பாபு, ரொம்ப நேரமாக் காத்துண்டிருக்கியா?" என்று குரல் கேட்டது. 
பாபு நிமிர்ந்தான். ராஜம், செருப்பைக் கழற்றிவிட்டு, ராஜம் உட்கார்ந்து கொண்டான். 
"இல்லை" என்று வாய்விட்டுச் சொல்ல முடியாமல், நெஞ்சுருண்டை மேலே ஏறி இறங்கத் தலையசைத்தான் பாபு. 

ராஜத்தைப் பார்த்ததும் மீண்டும் அவன் நெஞ்சை அடைத்துக்கொண்டது. தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்ள வந்த ஆத்மாவைக் கண்டதும் பாபுவிற்குத் தழதழப்பு 
அதிகரித்து உலுக்கிற்று. 
"என்ன பாபு?" 
ரொம்பவும் சிரமப்பட்டுத் தழதழப்பை அடக்கி, "இந்தப் பாட்டைக் கேளு" என்று பாட்டு வரும் பக்கம் முகத்தால் காண்பித்து, சொன்னான் பாபு. அவ்வளவுதான். வாயைத் திறந்ததும் என்னமோ மூடியைத் திறந்தது போல கண்ணில் நீர் தளும்பி வழிந்தது. வாயைக் கடித்து, திறந்து பெருமூச்சு விட்டான். 
ராஜமும், "கேட்டுண்டே வரேன். பிரமாதமாகத்தானிருக்கு" என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, இசையில் மனதைச் செலுத்தினான். 
3
பைரவி ராகத்தையும் கீர்த்தனத்தையும் வாசித்துவிட்டு ஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார், வாத்யக்காரர். கமகமும் குழைவுமாகப் பொழிந்த அந்த இசை இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு ஓய்ந்தது. "இதுவரை வீணை வாசித்தவர் ஈச்வரி அவர்கள்" என்று ஈச்வரியின் இசையை முடித்துவிட்டு, ஆங்கிலத்தில் செய்தியைக் கக்கிற்று ஒலி பெருக்கி, 
"யாருப்பா இது ஈச்வரி?" என்று கேட்டான் ராஜம்.
"யாரோ - ஆனால் ஈச்வரியே வந்து வாசித்தாற்போல் தானிருந்தது."
"யாரது? நான் கச்சேரியே கேட்டதில்லையே." 
"கச்சேரியே தொழில் இல்லையோ என்னமோ? அப்படி எத்தனையோ மேதைகள் இல்லையா!" 
"இருக்கலாம், ஆனா, இவ்வளவு நன்னா வாசிக்கிறவாளை ஜனங்கள் சும்மா விடுமா? கச்சேரி கச்சேரின்னு அரித்துவிடாதா?" 
"வீணை வாசிக்கிறவாளுக்கு அப்படி ஒண்ணும் பிரமாத கிராக்கி வந்துவிடாது." 
"இந்த வீணைக்குக் கூடவா?" 
"இந்த வீணையென்ன? சரசுவதியே வந்து வாசிக்கிட்டுமே!"
"ஏன் அப்படிச் சொல்றே?" 
"இது வாய்ப்பாட்டு இல்லை. சொல் கிடையாது. வெறும் நாதம். வாய்ப்பாட்டை அனுபவிக்கிறதைவிட இன்னும் கொஞ்சம் உயர்ந்த அளவுக்கு ரசிக்கிற சக்தியிருக்க வேண்டும். வார்த்தையில்லாத வெறும் சுத்த சங்கீதத்தை ரசிக்கிற மாதிரிதான் இது." 
"வாத்யம்தான் உசந்ததுங்கிறியா வாய்ப்பாட்டை விட?" 
"அப்படிச் சொல்லலே, வாத்யத்திலே ஒரு பாட்டையோ ராகத்தையோ கேட்டு ரசிக்கிறதுன்னா, கேட்கிறவன் தரமும் உசந்திருக்கணும்னு சொன்னேன்." 
"என்னமோ பாபு, எனக்கு சங்கீதம் தெரியாது. இப்ப வாசிச்ச பொம்மனாட்டி பெரிய மேதாவின்னு மாத்திரம் தெரியாது." 
"மேதாவிதான்." 
"ராகம் அவ்வளவு சுத்தமாயிருக்கு. ராகத்தோட உருவமே அவ்வளவு அழகு, அது கண்ணைமூட வச்சுடறது, ராகத்துக்கே அந்த சக்தியிருக்கோல்லியோ?" 
"பாடறவா பாடினாத்தானே அதுவும்" என்றான் ராஜம். "ராகத்துக்கே ஒரு வடிவம், ஒரு உருவம் உண்டு. அதே போதும்." 
"ராமனுடைய குணத்தை யார் சொன்னா என்னன்னு கம்பன், வால்மீகியோட காளிதாசனோட, நானும் பண்றேன் ராமாயணம்னு எத்தனையோ சில்லுண்டி கவிராயன்லாம் பண்ணின ராமாயணத்தையும் சேர்த்து வைக்கிறாற்போல இருக்கு." 
பாபு யோசித்தான். "ஆமாம், கிட்டத்தட்ட அந்த மாதிரிதான்."
"ராகமோ பாட்டோ பாடறவா பாடினால்தானே ரசிக்கும்."
 "ராகத்திற்கே ஒரு அழகு இல்லையோ சொந்தமா?"
"திருப்பித் திருப்பி அதையே சொன்னா?" 
"அதையே சொல்லலே நான். ஒரு ராகத்துக்கு சொந்தமா ஒரு அழகு, ஒரு தனித்தன்மை இருக்குன்னு தெரிஞ்சாத்தானே, பாடறவன் நன்னா பாடறான் பாடலேன்னு தெரியறது." 
"அப்பவும் பாடினாத்தானே தெரியறது!" 

"பாடாமலே இருக்கலாம். மனசுக்குள்ளேயே ராகத்தின் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். வடிவத்தை வளர வளரப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்" என்றான் பாபு, 
"ஆனா இப்பத் திடீர்னு இந்த ஞாபகம் வந்ததே, இந்தப் பாட்டைக் கேட்டதனால்தானே?" 
"ஆமாம் ... கேட்காமலேயே சில சமயம் ஞாபகம் வந்து மனசுக்குள்ளே அனுபவிக்கிறேனே." 
"அதுவும், எப்பவோ (கேட்டதன் ஞாபகமாக இருக்கும். எப்பவோ கேட்டதன் விளைவாக இருக்கும். ஒன்றுமே கேட்டிராத குழந்தை, ராகத்தின் அழகையா திடீரென்று தியானம் பண்ணும்? முன்னே பின்னே கேட்காதவனுக்கு, இந்த அனுபவமெல்லாம் எங்கே வரப் போகிறது?" 
"அதுவும் சரிதான்." 
"அப்ப சங்கீதம், பாடறதுக்குத்தானே? தியானம் பண்ணுறதுக்கு இல்லையே" என்றான் ராஜம். 
"தியானமும் பண்ணலாம்." 
"தியானமும் பண்ணலாம்னு எப்பத் தோணும் தெரியுமோ? நான் பாட ஆரம்பிச்சுட்டேனோ, 'ஐயோ ஐயோ மனசுக்குள்ளேயே பாடிக்கோ போரும்னு' சொல்லுவே நீ" என்று ராஜம் புன்னகை அரும்பக் கூறினான். 
"நீ அப்படி ஒண்ணும் தாழ்த்திப் பேசிக்க வாண்டாம். சங்கீதத்தைப் பத்தி நீ இவ்வளவு பேசறியே." 
"பேச்சு! வாயைத் திறந்தா பேச வரது! யாருதான் பேசமாட்டா? இதென்ன சங்கீதப் பேச்சா? எல்லாத்துக்கும் இதே மாதிரி பேசிண்டிருக்கலாம், கலை விமர்சனம் இது" என்று கண்ணை விஷமமாகச் சிமிட்டினான் ராஜம். "பாடத் தெரியாதவர்கள், எழுத வராதவர்கள், நடக்கத் தெரியாதவர்கள், விளையாடத் தெரியாதவர்கள் யாரானலும் அதைப் பற்றி இப்படியே பேசலாம்." 
"ராஜம் திடீர்னு குறுக்கே எங்கேயோ போயிட்டியே, நான் சொன்னதுக்குப் பதில் சொல்லலியே நீ?" 

"எல்லாம் சொல்லியாச்சு." "என்ன சொன்னே?" 
"ராகத்துக்கு வடிவம் அழகெல்லாம் இருக்கு. பாடினால்தான் அது வெளிப்படும், நீ சொல்கிற தியானம் எல்லாம் எல்லாருக்கும் பிரயோஜனப் படாது. நீ வேணும்னா பண்ணிண்டிரு." 
"எனக்கு ஒண்ணும் வரப்போறதில்லே. தியானம்தான் மிச்சப்படு போலிருக்கு." 
"தியானம் என்ன? உனக்கு அற்புதமான சாரீரம் இருக்கு. நன்னாவும் பாடறே, உனக்கென்ன?" 
"நான் பாடிக் கிழிச்சேன்."
"என்ன பாபு, ஏன் இன்னிக்கி என்னமோ போலிருக்கே?" 
"நல்ல சங்கீதம் கேட்கிறபோதெல்லாம் எனக்கு துக்கம் துக்கமாக வருகிறது; நிம்மதியே போயிடறது." 
"நல்ல சங்கீதம் அமைதியைக் கொடுக்கும்னு நீயே சொல்லியிருக்கியே." 
"அது நல்ல சங்கீதத்தின் சுபாவம். ஆனால், நான் கேட்கிறபோது என் மனசு விழுந்திடறது. நான் அதுக்கு ரொம்ப துரோகம் பண்ணியிருக்கேன்." 
"என்ன பாபு, பெரிய வார்த்தை எல்லாம் போடறே?" 
"துரோகம்தான். அப்பாவுக்கு நான் காலேஜிலே சேர்றதிலேகூட அவ்வளவாக இஷ்டமில்லை." 
"ஏன்?" 
"அவருக்கு நான் பெரிய சங்கீத வித்வானா வரணும்னு ஆசை. நான் அதிலெல்லாம் மண்ணை வாரிப்போட்டேன், சங்கீதம் சொல்லிக்கிறதுக்காகக் கொண்டு ஒருத்தரிடம் விட்டார். நான் ஆடிக்கு ஒருநாள், ஆவணிக்கு ஒருநாள்னு போயிண்டிருந்தேன். எட்டு வர்ணமும் பதினாலு கீர்த்தனமும் முடிகிறதற்குள் பள்ளிக்கூடப் படிப்பு முடிஞ்சு போயிட்டுது!" 
"ஏன் அப்படி?" 
"அதான் சொன்னேனே, நான் ஆடிக்கு ஒருநாள் ஆவணிக்கு ஒருநாள் போவேன். நான் போன சமயத்துக்கு அவர் இருக்க மாட்டார்; ஒழுங்கா வரவனா இருந்தா, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வருவான்னு அவரும் இருப்பார். சும்மா சொல்லப்படாது. சொல்லிக் கொடுத்ததை நன்னாத்தான் சொல்லிக் கொடுத்தார். நான்தான் சரியாப் போகலை ... நீ சொல்றாப்போல சங்கீதம் சொல்லிக் கொடுக்கறவர்களும் இருக்கா ... எங்கப்பா பிரமாதமாப் பாடுவார். ஆனா சங்கீதம் சொல்லிக்கவே இல்லை, ஊர்லே பக்கத்து வீட்டிலே குருமூர்த்தின்னு ஒருத்தர் இருந்தாராம். பெரிய சங்கீதப் பரம்பரை, தீட்சிதர், தியாகையர் ரண்டு பேரோட நேர் சிஷ்யரோட சிஷ்யர்கிட்ட சொல்லிண்டவராம், எங்கப்பா கிட்ட பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேண்டா வாடா வைத்தின்னாராம். அப்பா போனாராம். அஞ்சுக் கட்டை சுருதியை வச்சுண்டு சொல்லித்தர ஆரமிச்சாராம். அப்பாவுக்கு மேல் ஸாவே பிடிக்க முடியலியாம். நெற்றியெல்லாம் நரம்பு புடைச்சிண்டு கண் சிவந்து, மூஞ்சியெல்லாம் ரத்தம் கசியிறாப்போல, ஆயிட்டுதாம். இந்த மாதிரி நாலு நாள் ஆச்சு. அப்பாவுக்கு அப்புறம் நான்கு மாசம் வாயைத் திறக்க முடியலியாம். அவரும் கட்டையைக் குறைக்கிறது நல்லதில்லேன்னு போயிட்டார். அப்பா அதோட அந்த வாத்தியார்கிட்ட போகவே இல்லை. அப்படிக் கத்திக் கத்தி அந்த வாத்யாருக்கும் கடைசீலே தொண்டை தகரக் குழாயாய்ப் போயிடுத்தாம், அந்த மாதிரி சொல்லிக் கொடுக்கிற குருமூர்த்திகளும் இருக்கா." 
"பேரும் பொருத்தமாத்தான் இருக்கு." 
"அவர் என்ன செய்வாராம் தெரியுமா, தொண்டை மேலே எட்டணும்கிறதுக்காக, கோட்டான் குளம்னு எங்க ஊர்லே ஒரு குளம் இருக்கு, அங்கே போய் சாதகம் பண்ணுவாராம்." 
"என்னது! குளத்திலியா?" 
"குளத்தங்கரையிலே ஒரு சத்திரம். அந்த சத்திரத்து நிலைப்படிக்கு மேல் பக்கத்திலே கையைத் தூக்கி அந்தக் கட்டையைப் பிடிச்சிண்டு, மேல் 
ஸ்தாயியை எட்டிப் புடிச்சிண்டிருப்பாராம்," 

"அசுர சாதகம் மாதிரி, இது கதவு சாதகமா? புதுசா இருக்கே." 
"அப்படியே தன் தொண்டையையும் பாழா அடிச்சிண்டாராம். யாரும் சொல்லிக்க வராமியே அவ்வளவு வித்தையோடு பிராணனையும் விட்டாராம் . - - அந்த மாதிரி இல்லை எங்க வாத்தியார். எங்கப்பா நன்றாகப் பார்த்துத்தான், நல்ல வாத்யாராப் பார்த்ததுத்தான் அனுப்பிச்சார், நான் கொடுத்து வக்யலெ." 
"பாபு, உனக்கு என்ன வயசாறது இப்ப?"
"இருபது."
"பின்னே ஏன் நூற்றுக் கிழவன் மாதிரி பேசறே," 
"ஏன்?" 
"இப்ப என்ன குடி முழுகிப் போச்சு? இப்ப சொல்லிண்டாப் போறது." 
- பாகம் 
"நிஜமாவா?" என்று ஒரு நம்பிக்கை மின்னலடிக்கக் கேட்டான் பாபு, 
"ஏன் சத்யம் பண்ணிக் கொடுக்கணுமா?"
"நீயும்கூட இருந்தா எனக்கு நிச்சயம் வரும்." 
"எனக்கும் கொஞ்சம் சங்கீதம்னா விலைவாசியாவது தெரிஞ்சிருக்க முடியும்." 
"நீ சுத்த பைத்தியம்டா ராஜம். உன் சக்தி உனக்குத் தெரியலே." 
"அது போகிறது. விஜயதசமி மூன்று நாள்தான் இருக்கு. ஆரமிச்சுடலாமா, எங்கப்பாவுக்கு ரங்கண்ணாவை நன்னாத் தெரியும், ரங்கண்ணாவும் தியாகய்யரோட பரம்பரைதான். இன்னிக்கி பெரிசு பெரிசா (பேர் சொல்லிண்டிருக்கிற வித்வான் எல்லாம் அவர்கிட்ட வெசவு வாங்கினவங்கதானாம். விஜயதசமி அன்னிக்கி என்ன?" 
"விஜயதசமிக்கு முடியாது."
"ஏன்?" 
"அப்பா ஊருக்கு வரச்சொல்லி லெட்டர் போட்டிருக்கார்."
"நீ சொல்லவே இல்லியே." 
"இன்னிக்கி சாயங்காலம்தான் பார்த்தேன். அறையில் லெட்டர் கிடந்தது." 
"போகப் போறியா?" "நாளைக்குச் சாயங்காலமே போகணும்." "எப்ப திரும்பி வருவே?" 
"நமக்குத்தான் விஜயதசமிக்கு மறுநாள் காலேஜ் உண்டே ; காலேஜுக்கு வந்துவிடுவேன் அன்னிக்கி." 
"என்ன விசேஷமாம்?" 
"அதுதான் தெரியலே. வருஷா வருஷம் சரஸ்வதி பூஜை விஜயதசமிக்கு நான் ஊருக்குப் போகும் வழக்கம்தான். நவராத்திரி வந்தால் அப்பா சும்மா இருக்கமாட்டார். பூஜை பாராயணம்னு உடம்பைப் போட்டு அலட்டிப்பார், காலமே மூணு மணிக்கு ஜபத்துக்கு உட்காருவார். பதினோரு மணிக்குத்தான் எழுந்திருப்பார். அப்பறம் பாராயணம் இரண்டு மணி. அப்பறம் பூஜை. சாப்பிடறதுக்கு இரண்டு மணிக்கு மேல் ஆயிடும். சாயங்காலம் பஜனை, இப்ப மூணு நாலு வருஷமா பஜனை இல்லை . அவராலெ முடியலெ. பேசாம இருக்கார்... நவராத்திரிக்கு எப்பவும் நான் ஊர்லெதான் இருக்கிற வழக்கம். இந்த வருஷமும் தனியா இருக்க வாண்டாம்னு கூப்பிட்டிருப்பார்." 
"சரி, அப்படீன்னா, போய்ட்டு வந்தப்பறம் ஆரமிக்கிறது." 
"ஆமாம், அப்பா கிட்டவும் சொல்றேன். ஆனா எப்படிச் சொல்றதுன்னுதான் யோசனையா இருக்கு, அவர் சொன்ன காலங்களில் எல்லாம் மழுப்பிவிட்டு, இப்ப நானா சொன்னா .. ?" 
"புத்தி வந்துதுன்னு நெனச்சுண்டு சரிங்கப் போறார். தடை சொல்லப் போறதில்லே ." 
"அவர் எனக்கு என்னிக்குமே தடை சொன்னதில்லே, பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோதே நித்யம் ராத்திரி எட்டு மணி ஒன்பது மணின்னுதான் வீட்டுக்கு வருவான். 'ஏண்டா இத்தனை நாழி'ன்னு அவர் கேட்டதே கிடையாது. புஸ்தகத்தைத் தொடவே மாட்டேன், அப்பவும் ஏன்னு கேக்கமாட்டார். பரீட்சைக்கு இரண்டு நாள் முன்னாடி உக்காந்துண்டு ராத்தூக்கமில்லாம் படிப்பேன். அப்பவும் ஏன்னு கேக்கமாட்டார். இஷ்டப்பட்ட நேரத்துக்குக் குளிப்பேன். சாப்பிட வருவேன். அம்மாதான் 'ஏண்டா, பள்ளிக்கூடத்திலே படிக்கிற பசங்கள்ளாம் திண்ணையிலே உட்கார்ந்துண்டு ஓயாம வாசிக்கிறா, நீ வாசிக்கிற குரலையே நான் கேட்டதில்லை. புஸ்தகத்தைத் தொட்டான்னா நீ வாசிச்சுக் கேக்கலாம்' என்று எப்பவாவது சொல்லுவா, எதிர்த்த வீட்டிலே நாராயணசாமின்னு ஒருத்தன் என்னோட வாசிச்சிண்டிருந்தான், விடிய விடிய எழுந்து, பல் தேய்ச்சு, விபூதியைக் குழச்சு இட்டுண்டு, திண்ணையிலே வந்து உட்கார்ந்து நாலு வீடு கேக்கும்படியா இரைஞ்சு வாசிப்பான், அவனைப் பார்த்துவிட்டுத்தான் அம்மாவுக்கு ஏக்கம், அப்பாகிட்ட போய், 'பிள்ளை பள்ளிக்கூடத்திலேதானே வாசிக்கிறான்? அவன் புஸ்தகம் எல்லாம் எப்படியிருக்கும்னு ஒரு நாளைக்குப் பார்க்கச் சொல்லப்படாதா?" என்றாள் ஒரு நாளைக்கு. 'ஏண்டா பாபு, ஏண்டா இப்படி திரிஞ்சுண்டே இருக்கே? புஸ்தகத்தை எடுத்து வாசிடா, போடா' என்று சொல்லணுமேன்னு சொல்லிவிட்டுப் போயிடுவார். அவர் அப்பவே இப்படி இடங்கொடுக்காம நன்னா உதைச்சிருந்தார்னா, நான் இப்படி ஆயிருக்கமாட்டேன். அம்மாவும் அதுக்கு மேலே சொல்லமாட்டா." 
"இன்னிக்கி என்ன? நொந்து கொள்ளும் படலமாகவே இருக்கு." "நாம் காலத்தை வீணா அடிக்கலியா?" "இப்படி உட்கார்ந்து பேசறது வீணா?" "இதைச் சொல்லலே நான்." 
"பின்னே என்ன? நாம் சீட்டாடறோமா? வெறுமே அரட்டை அடிக்கிறோமா, ஊர் சுத்தறோமா? விருதாப்பேச்சு பேசறோமா?" 
| "பேசறதைக்கூட நன்றாகப் படிச்சு, நன்றாக உலகத்தைப் பார்த்துச் சிந்தனை பண்ணின பிறகு செஞ்சா நல்லது. நீ அப்படியெல்லாம் செய்யறே, நான் செய்யலே." 

"பாபு இன்னிக்கு நீ சரியாயில்லே, சாப்பிட்டுவிட்டு வா, சினிமாவுக்குப் போயிட்டு வருவோம்." 
"மணி என்ன ஆகிறது?"
"ஆறரை இருக்கும்."
"இப்ப போக முடியுமா?" 
"நான் இன்னும் சாப்பிடலை, சாப்பிட்டுவிட்டு இரண்டாவது ஆட்டத்துக்குப் போவோம்." 
"போவோம்." 
"கடைத்தெருவுக்குப் போகணும், அப்பா கடைத்தெருவிலே ஒரு சமாசாரம் சொல்லிவிட்டு வரச் சொன்னார்." 
"அப்ப கிளம்பு. நான்கூட இன்னிக்கி கும்பேச்வரன் கோயிலுக்குப் போகலாம்னு பார்க்கறேன். நாளைக்கு ஊருக்குப் போய்ட்டா, அப்பறம் நவராத்திரியும் போயிடும்... நீயும் வாயேன்." 
"நான் வரலை,"
"எனக்காக வாயேன், இன்னிக்கி ஒரு நாளைக்கு."
"உனக்காகத்தான் நீ போறியே, நான் எதுக்கு?"
"என்னமோ உன் சித்தமே அலாதி. எனக்கு நீ சொல்றது புரியலெ." "புரியாட்டாப் 
போறது, 
என்னைக் காப்பாத்திக்கணுமோல்லியோ?" 
"காப்பாத்திக்கிறதா? ஸ்வாமிகிட்டேருந்தா?"
"மனிதர்களிடமிருந்து."
"மனிதர்களிடமிருந்து ஸ்வாமி காப்பாத்துவார், வா."
"ஸ்வாமிக்கு அந்த சிரமம் கொடுப்பானேன்! நான் வரலை." 
இருவரும் எழுந்து, சாந்தி பார்க்கின் வடமேற்கு வாசல் வழியாகப் பெரிய தெருவுக்கு வந்து நடந்தார்கள். 

No comments:

Post a Comment