தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, May 11, 2020

ஒற்றைசடைக் குதிரைவாலிக் கதிருடன் வந்த புராதனக் கதைசொல்லி 1. கதாமந்திரப் பரப்பு: வனமந்திர தேவதைச்சுருள் - கோணங்கி

ஒற்றைசடைக் குதிரைவாலிக் கதிருடன் வந்த புராதனக் கதைசொல்லி 
1. கதாமந்திரப் பரப்பு: வனமந்திர தேவதைச்சுருள் - கோணங்கி

பழைய பிரதிகள் கதைசொல்ல மறுக்கும் பட்சத்தில் ஞாபகப் பரப்பிலிருந்து விடுபட்டுப் போன வனமந்திர தேவதைச் சுருள் ஆனது வான விளிம்புவரை பரந்து கிடக்கும் நிலம் கடல் ஆறு வழியாக பயணம் செல்லும்போது, மூப்படைந்த அலகும் மாபெரும் சிறகுகளும் கொண்ட கதை சொல்லியாகிய அண்டரண்டாப் பட்சி நினைவால் மர்மமாகச் செதுக்கி வைத்திருக்கும் அற்புத விநோதக் கதைகளால் ஆன வரைபடத்தைப் பின்பற்றிச் செல்லும்போது ஒவ்வொரு தேசங்களின் அடையாளக் கற்களில் அமர்ந்து தன் அலகால் கீறிச் சென்ற கோடுகள் திரும்பத் திரும்ப வந்தமர்ந்து கீறிய கல் வரிகளாகி கதாச்சுருள் சுழன்று கொண்டிருக்கவேண்டும். மனித மிருக பூதக ராட்சஸப் பறவையின கற்பனை மிருக எலும்புகளாக மாறக்கூடிய எழுத்தறியாத வனமந்திர தேவதைச் சுருள் ஆனது எப்போதுமே மீண்டும் கதை சொல்லியை வரலாற்றிலிருந்து உயிர்ப்பித்துவிடும். 

வெவ்வேறு உருவங்களை எடுத்து எழுதப்படாத சரித்திரத்தில் இடம் மாறிக் கொண்டே இருக்கிற முடிவற்ற காகிதப் பரவலில் சிதைந்த கதாமூலத்தின் ஒவ்வொரு துகளையும் கொண்டு உயிர் பெறுகிறான் கதை சொல்லி. 

கனவில் விழுந்த பிம்பங்களைக் குறுக்கே கீறி அதன் வாய்திறந்து வரும் வன மந்திர தேவதைச்சுருள் என்பது சுயேச்சையான உலகங்களோடு இணைந்திருப்பதால் ஒவ்வொரு கனவுமே வனமந்திர தேவதைச்சுருளின் வசீகரத்தில் எல்லா மொழிகளோடும் இணைந்து பாஷைகளுக்கு முந்திய கருவறைக்குள் கர்ப்ப ஸ்திரீயின் சுரோனிதப்பைக்குள் குழந்தையின் மூடிய விரல்களுக்குள் இருக்கும் கமலக்கல்லாகவே இருக்கக்கூடும். கனவுக்குள் அலைவுறும் கதைசொல்லி ஸ்திரீகளின் துயிலில் சென்று மர்மமான சுரோனிதப் பைகளைக் கீறி கமலக்கல்லை எடுத்துத் தன் கண்களைக் குறுக்கே வெட்டி சுரோனிதக் கல்லை கண்மேல் பொருத்தி வேறொரு பிரபஞ்சத்தில் உலவும் குழந்தையோடு உரையாடலைத் தொடங்குகிறான். உயிரின் தோற்றமே இருளறைக்குள் நீந்தும் கதாச்சுருளாக சுருண்டு சிசுவின் வளர்ச்சியாய் உருமாறி ஜனித்த இடத்திலேயே ஒரு வனமந்திர தேவதைச் சுருளின் வேனல்சார் உபகதைகளாக வாழத் தொடங்குகிறது குழந்தை. பொருட்கள் பெயர்கள் மீது வசீகரம் கொள்ளாத நிலையில் பிரபஞ்சத்தின் தைல மிதப்பில் நீந்தத்துவங்கிய சிசுவின் பிறந்த சிவப்பு மாறாத உரு ஈக்கிநெல் கீறித் திறந்த கீற்றுக் கண்களின் சிறு ஒளியே கதைசொல்லியால் இரு கமலக்கல்லின் மறைமுகமாய் இருக்கவேண்டும். அதன் இமை ரெப்பை மினுப்பில் எந்த வார்த்தையும் பிறக்காதபோது கதை பிறந்தது. 

பின்னே தாயாரும் தாதியரும் இமை பூட்டிய கண்மீது வார்த்தைகளை ஒட்டிப்பிறந்த வெளியை மூடி அதிசய உலகைவிட்டு வார்த்தைகளால் விரட்டினார்கள் கதையை. ஒரு ஊர்ல ஒரு நரி அதோட கதை சரி. கதை கதைகளின் கதை என கதை விரித்த கிளைகள் எண்ணிக்கையற்றுப் போயின. 

குழந்தைகளின் அதிசய உலகைக் கொண்டே கதை அல்லாததின் பரப்பை முன் அறியப்படாத வனமந்திர தேவதைச்சுருளின் இன்னொரு பிரதியை உருவாக்கும் புனைவின் வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன குழந்தையோடு ரவுக்கை போட்ட எலிகளும். 
அறியப்பட்ட எல்லாக்கதைகளின் சாத்தியத்தை போர்ஹே எழுதிவிடக்கூடும். போர்ஹே நுழையச் சாத்தியமல்லாத கதையை ஒரு குழந்தையும் பாட்டியம் பூனைகளும் ஆந்தைகளுமே உருவாக்க முடியும். 

முதல் கதை என சொல்ல முடியாத அளவிற்கு போர்ஹே முன் அறியாக கதையிலும் நுழைந்து விடுவதை காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் 'கனவுகளை விற்பவள் நான்' கதையின் பிற்பகுதியில் நெரூடாவும் மார்க்வெஸ்ஸும் பேசிக் கொண்டதிலிருந்து, 

நெரூடா: 'கனவுகள் சொல்லும் அவளைக் கனவில் கண்டேன்.' 

கண்ட கனவைச் சொல்லுமாறு அவர் மனைவி வற்புறுத்த 'என்னைக் கனவில் கண்டதாக அவளைக் கண்டேன்' என்றார் நெரூடா 

'போர்ஹேயின் கதையிலிருந்துதான்' என்றேன். 

'ஏற்கெனவே எழுதிவிட்டாரா' என்று எழுத்தாளனின் வருத்தத்துடன் கேட்டார் நெரூடா, 

'இல்லாவிட்டால் என்றாவது புதிர்ப் பாதைகளில் ஒன்றாக வைத்து எழுதி விடுவார்' என்றேன். 

எனவே 

போர்ஹேயை விட்டு விலகமுடியாத புதிர்ப்பாதைகளில் அவரை சந்தித்துக் கொள்ள நேர்வதிலிருந்து தப்பமுயன்று தோற்றுப்போன நான் எழுதுதல் என்ற வேஸ்ட் பேப்பர் தயாரிப்பில் ஈடுபடுபவன். பூச்சி இன ஆராய்ச்சி பறவைகள் ஆய்வு மானுடவியல் அறிவியல் மனநோய் - பாலியல் கலகங்களில் மொத்தமாகவும் சரணடைந்துவிட்ட இந்த நூற்றாண்டு அடுத்த நூற்றாண்டில் முன்கூட்டியே தடுக்கி விழுந்து விட்டது. ஆனாலும் காகிதத்தில் எழுதுவது கஷ்டம். எழுதிய காகிதங்களை சிகரெட்டாகச் சுற்றலாம். எழுத எழுத சிகரெட் ஆஷ்ட்ரேயில் பல துண்டுகள் சிகரெட் எரிந்து வளைந்த கருப்புக் குச்சிகள், சாம்பல். மறுபடியும் சிகரெட் என் கதையைச் சுருட்டி சிகரெட்டாகப் புகைத்துக் கொண்டிருக்கிறேன். எழுதுபவனுக்கு எழுத்தின் ஊடாகத்தான் ஜீவனே நகரும்போலும். சிகரெட்டைப் பாதியில் அணைத்து ஆஷ்ட்ரேக்குள் பத்திரப்படுத்திக்கொள்வேன். எழுத எழுத ஒவவொரு காகிதமாக சுருட்டிப் பற்றவைப்பதுதான் வழக்கம். இதை மீறுவதில்லை. 

எழுதப்படும் கதையின் முதல் காகிதத்தைக் கிழித்துச் சுருட்டிப் புகைத்தபடி அடுத்த பக்கத்தை எழுதுவேன். எழுத்தின் வேகத்தில் புரளும் பக்கம் ஒவ்வொன்றும் முடிவற்ற பாத்திரங்களின் இடமாற்றத்தில் வெவ்வேறு வேளைகளில் கால இட ரீதியான இடைவெளியில் வேறு தோற்றம் கொண்டபோது முன்யோசிக்கப்படாத உணர்வுகளில் தாஸ்தாயெவ்ஸ்கியோடு பகிர்க்க கொள்ளும் கதாபாத்திரங்களின் சூதாட்ட வெறி என்னைத் தொற்றிக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதிச் சுருட்டி நெருப்பின்றியே உணர்வுகளால் மேண்ட காகிதங்களின் முடிவற்ற பரவல் எாத்து முடிந்த பின்னும் எழுத்துகள் மறையாமல் வளர்க்க வந்து கொண்டிருக்கின்றன. சிகரெட் புகைபோன்ற மெல்லிய வெள்ளை ஆடைகள் அசைய வனமந்திர தேவதை என்முன் உரையாடலைத் தொடங்கியபோது கடலுக்குள்ளிருந்து மீனுக்குள்ளிருந்து சிப்பிக்குள்ளிருந்து கதைராஜ்ஜியத்தில் கடல்பாசிநிற எழுத்துகள் மரம் கல்லாக மாறும் பாசில்களாக எழுத்தென்பது தொல்தமிழின் குலக் குறிகளுடன் நீந்திக் கொண்டிருக்கிறது கண்முன்னே போர்ஹேயை விட்டுவிலகிய கீழை மந்திரக்கதையுடன் மேற்கில் அறியப்பட்ட கதைகளின் நிழல் விழாத ஜப்பான் சீன இந்திய அரேபியக் கதை மரபின் பாதையில் கனவாலோ புனைவு மொழியாலோ புதிய கதைவெளியைப் படை வேண்டியது அவசியமாகிறது. 

நவீன கதை மெட்டாபிஷன் நவநவீனம் அ நேர்கோடு என கதைகள் எல்லாமே எழுதும் முறையை மாற்றி மாற்றித் திரும்பத் திரும்பக் கொடுத்து வாங்கப்பட்டு கதை தன்னைத் திரும்பத் திரும்ப மறுகதையாக்கம் கொண்டு சிறைப் பட்டிருக்கக்கூடும். 

அதன் காரணமாக பொதுவாசகர்கள் பெருகுகிறார்கள் கதாவசீகரம் இழப்பதும் நடக்கிறது. ஆகவே கிழை மந்திரக் கதைச்சுருளை வேறுபட்ட பிராந்தியக் குணங்களின் மண் நிறங்களின் முகங்களில் வட்டமாய் எழுத வேண்டியது அவசியமாகிறது.

எனவே 

முடிவடைந்த கதைக்கும் பனைமரங்களில் அமர்ந்திருக்கும் பேய்களிடம் சாவிகளை வாங்கி கதை அல்லாததிலிருந்து புதிய அற்புதக் கதையைத் திறக்கும் புனைவு எழுத்தை காலத்தின் வரிசைக்கிரமமான அடுக்குகள் முன்னும் பின்னுமாய் மாறிமாறித் தீவிரமாய் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை உடைத்துக்கொண்டு டாலியின் உருகிவழியும் கடிகாரத்தைப் பின்னோக்கித் திருகியவாறு நூற்றாண்டுகளின் அடுக்கில் அலைந்து கொண்டிருக்கும் கதைசொல்லி தமிழின் முதல்தாவலாக அறியப்பட்ட பிரதாப முதலியார் சரித்திரத்துக்குப்பின் விரட்டியடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டு குடிஉரிமைகள் பறிக்கப்பட்டு லத்தீன் அமெரிக்க எழுத்துக்குள் பதுங்கித்திரிந்தவன் நிர்மூலமாக்கப்பட்ட இனங்களின் கடைசி மனிதனாய் வருகிறான் புராதனக் கதைசொல்லி 

அவனிடம் சொல்வதற்கு ஏதுமில்லை கதைகளைத் தவிர. அவன் கொண்டு செல்வதெல்லாம் கைவிடப்பட்ட இனங்களின் குலக்குறிகளைத்தான். அதிலிருந்து இன்னொரு பிரதியை புனர்சிருஷ்டியில் புத்துருவாக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட நவீன கதைசொல்லி சரித்திரத்தில் படிந்த நிழல்களை இழுத்துக் கொண்டு மையும் காகிதமும் இன்றி கைதட்டியவாறு கதைகூறிக் கதைகூறி கூத்து வாசலில் நின்று எதார்த்த வாதத்திலும் சமூகவியல் படைப்புகளிலும் திரிவோரை மரபின் தொனியோடு கூவி அழைக்கிறான்.

குலக்குறிகள், தொல்கதைச்சுவடிகளை இழுத்துச் செல்லவில்லை அவன் கயிற்றரவைக்கண்ட பித்தனாக மாயக்கண்ணாடியுடன் உரையாடலை தொடங்கிவிட்ட ரஸவாதியாக தலைகீழாக அடுக்கி வைக்கப்பட்ட துண்டு துண்டான காலகட்டங்களின் கேலிச் சித்திரங்களை கடந்த யுகத்தின் கோடுகளால் வரைந்து ஜிப்ஸிகளின் டேரட் கார்டுகளை குலுக்கிக்கொண்டு முக்காலங்களின் சறுக்குப்பாதையில் உருமாறிக்கொண்டே புலப்படாத நகரங்களை நோக்கி நெடுங்கால நகரங்களின் விளக்குகள் ஏற்றிய இரவு அவன் வருவதாக கூறப் பட்டிருந்த கல்வெட்டில் உள்ளவாறு கழுகு மூக்குடன் பாபகெனோ படைப்பில் வரும் பறவைமனிதனின் கதையைச் சொல்லியவாறு நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறான். எதிரே முகவெட்டு பார்த்து முகத்தில் எழுத்தை வாஸிக்கும் அவன் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு கதாச்சுருள் எழுதப்பட்டிருப்பதை நிமித்திகமாகச் சொல்லிவிடும் நூதனக் கண்களில் சாம்பல் நீலம் மறைந்திருக்கும். 

குற்றங்களின் பாதையில் பைத்தியமாகத் திரிந்தவர்களை அவனுக்குத் தெரியும். பலவகை மையில் எழுதப்பட்டு அடித்து திருத்தப்பட்ட உலகின் எல்லா வனமந்திர தேவதைச்சுருளுக்குமான கதைப்பேழையை இழுத்துக்கொண்டு வருகிறான். எந்தமொழி எனக் காணமுடியாமல் குழம்பியிருந்த பக்கங்கள் ஆங்கிலமல்லாத லத்தீனில் பாரசீகக் கதைகளில் இடம் மாறிக்கொண்டே ஆதி குடிகளுடன் சேர்ந்து திரிந்த அவர்கள் இயற்கை மொழி உச்சரிப்புகளை சித்திர வடிவமாக்கியிருந்தது. உலகின் அடிவாரங்களில் மறைந்து திரியும் கணங்களின் அடையாளங்களுடன் எலும்புமாலை அணிந்து நரபலிக் காடுகளில் ஓடித்திரிந்த தடங்களின் மந்திர வெட்டுகள் அவன் பாதங்களில், சடங்குகளில் ஊதப்பட்ட மந்திரக்குழலின் ஒலி பதிந்திருந்த உடம்பில் செதில்களை அசைத்தபடி அடி ஆழங்களில் புதைந்த கற்பாறைகளின் பிளவுகளுக்குள் சென்று கணக்குழுவின் மந்திரக்குழல் வாசித்தபடி கதை சொல்லியைச் சுற்றி சுருணை சுருணையாக மஞ்சள் கோலங்கள் சுற்றிச் சுற்றி மாந்திரீக ஒலியலைகள் கதைக் கூட்டமாய் மயங்கி வெண்கொம்புகள் பார்க்க மயக்கமூட்டுவதாயிருந்தன. கொம்பூதும் உதடுகள் கவ்விய மந்திரக்குழலில் கதைசொல்லியின் மரணத்துக்கான இசை ஒரு கார்வையில் நீருக்குள் ததும்பித் ததும்பி உயிரின் அனந்தத்தில் மேலெழுந்த பக்கங்களைப் புரட்டிக்கொண்டு இருக்கிறேன். தன் உயிரையே பணயம் வைத்துப் பதியப்பட்ட மஞ்சள் கிறுக்கல்களை நான் திரும்பத்திரும்ப வாஸித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் பக்கங்களை விட்டுவிடுபட என்னால் முடியவில்லை. அவற்றை எந்த இலக்கியத்திலேனும் படித்ததாக ஞாபகமில்லை. என்னை ஆரம்ப நிலைக்குக் கொண்டு செல்ல மந்திரத்திற்குள் சிக்கவைத்தது. மந்திர வார்த்தைகள் திரும்பத் திரும்ப திரும்பி வந்தன. கடக்க முடியவில்லை. கட்டுண்டநிலையில் வெகுகாலம் வாழ்ந்த கீழ்த்திசைக் கதைகள் தான் தோன்றியாக அலைவுறுகின்றன. தலைகீழாக அடுக்கி வைக்கப்பட்ட ஆதிகுடிகளின் கனவுகள் சுவடு விழுந்து பதிந்த கழுதைகளின் சாயல்களை மனித வடிவுகளில் வரையப்பட்ட சோகங்கள். பெரிய பெரிய பாதங்களில் வரைந்த கோலங்கள். உதடுகிழிந்த ஆதிவாசிகள் புலிக்குகையில் கட்டம் கட்டமான கோடுகளில் இருந்த ஆதிபயம். கோண்டுகளின் கடல் மந்திரம். மிகவும் அழுக்குப்படிந்து பக்கங்களின் முனைகள் கிழிந்த அவன் கதைப் பேழை, கருப்பானது. விரல்கள் பட்டு அழிந்த எழுத்துகள். பலரும் சந்திக்க மற கண்களுக்குப்படாது மறையும். உள்ளே ஒடிந்த தாள்கள். கவன புரட்டினேன். ஒவ்வொரு ஒடிந்தவார்த்தைகளும் தைக்கப்பட்டிருந்த கந்தலாகும் வார்த்தைகள். தலைகீழாக அடுக்கப்பட்டிருந்தன. காலம் ஊடுருவிப் பழுப்படைந்து பச்சையும் கருப்பும் கலந்த மையில் அலைக்கழிந்த கதை சொல்லியின் கிறுக்கல். 

காணாமல்போன தோல் கூனையின் கிழிசல்களை பொத்தலை சிறிய தோல் வாரினால் மாட்டுக்கொழுப்பில் குத்திய செருப்பு ஊசி எனும் எழுத்தாணி கொண்டு நூதனத்தோல் ஏடு தயாரித்து மிருகத்தொலி உலர்த்தி லிபிகளை வரையும் ரவாதியான கராமத்துப் பகடையும் தச்சுவேலைக்காரரும் சேங்கொட்டையில் ஊக்கால் குத்தி மை எடுத்து குலக் குறி போடும் வண்ணாரும் நவீனக் கதைகளின் மொழியை தைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

மென் தோல் மிருகங்களின் சருகு உடல் கூடுகளை உரித்து பதனிட்டு கஷாயங் களும் உப்பும் தடவி உலர்த்தியவாறு ஜிப்ஸிகளாய் திரியும் நரிக்குறத்திகள் தாவரத்தில் ரஸமெடுத்து ஜனங்களின் உடல்தோலில் கீறிய பச்சை மொழி தேள், பாம்பு, பல்லி, டிராகன், அணில், வௌவால், பூரான் ஊர்ந்து வந்து கனவில் பதிய கண்ட கனவின் அகராதியை கம்பள ஜாதிப்பெண்கள் குறி போடும் குச்சியில் சுற்றி வைத்திருப்பதால் தமிழ்க் கதையின் மந்திரக்குறிகளை கம்பள ஸ்திரீயிடமே அறிய முடியும். குறடையும் கம்பளியும் தோளில் போட்டுத் தேள்கொடுக்கு மீசையைத் திருகியவாறு நவகம்பளத்தார் காடாறுமாசம் நாடாறுமாசம் திரியும் போது முன்னுணர்ந்து சொன்னவாக்கில் வேதிவினைகளில் ஓடும் ரஸவாத பரிபாஷைகளை கிராமத்தார் சமிக்ஞைகளால் அறியக்கூடும். புலனுக்கு எட்டாத ஒலிகளைக்கூவும் பறவைகளுக்கு பதில் மொழி கூறிய குருவிக்காரன் பின்னே தேவாங்கு நடந்துபோன தடத்தைக் கவனமாகப் பின்பற்றிப் போன கவுளி தொண் டைக்கடியில் உள்ள வெந்நீர்ப் பைகள் நிரம்பி நடுங்கும் குரலில் கலகலவென்று சுவரிலிருந்தவாறே அதிர்கிறது குரலால், உயர்வெப்ப அழுத்தத்தில் கவுளிமொழி மனிதனோடு ஒட்டி வருவதால் சுவரில் நடந்துவரும் கவுளியின் அடிவயிற்றில் இருந்த முட்டையின் வெள்ளை நிறம் சூரிய ஒளியால் ஊடுருவித் தெரிந்தது. அந்த முட்டைக்குள் பாம்பு போல சுருண்ட ஒரு குட்டிப்பல்லி மொழி சமிக்ஞையாக வால் சதாவும் துடித்தது. தாயிடமிருந்து விடுவிக்கப்படாத முட்டை மீது எழுதப்பட்டிருந்த ஜந்துக்களின் மொழிவடிவைப் பிறவாத பல்லியின் ஜீவனில் உறைந்த கனவை கண்ணாடியில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்' கதையில் ஜுரவேகத்தில் உணரநேர்ந்தது. 

கதாஒலித்தொகுதியாக இராவிருட்டில் புதைந்திருக்கின்றன ஜந்துக்கள். அடையும் குகை இருட்டில் நுண்பூச்சிகளின் உயிர்ச்சத்தமாக நாமறியாத மெய்யெழுத் தொலியும் உயிரெழுத்தொலியும் செடித்திரளில் உராய நாசி வெப்ப மூச்சில் ஒலிவடிவ நுரையீரல் எரிய அலோக - உலோக இணைவில் தொல்மனப் படிவங்கள் நூதன இழையாகப் பின்னப்பட்ட மொழிவலையில் உருவாகும் மாயக்கதைப்பரப்பை எழுத்தறியாத ஜனத்தின் குரல் அடியில் தொட இன்றுவரை யாராலும் முடியவில்லை . 

ஜனத்தின் குரல்மாயக் கதைத்துகளை எடுத்து எழுத்து வழிக் கதையுடன் மறு உருவாக்கம் செய்ய ஓடிப்போன சூனியக்காரக் கிழவியை கிழக்கே போய்த்தான் அழைத்து வரவேண்டும். 

தமிழின் நவீன மந்திரக்கதை உருவாகி இருக்கிறதா? இருந்தால் காலவரம்பற்ற பிரபஞ்சத்தன்மையுடன் இணைந்திருக்கும். தமிழ்க்கதைக்காரர்கள் மந்திரத்தின் பக்கம் புராணத்தின் பக்கம் அற்புதங்களின்பக்கம் திரும்பாமல் இருப்பதற்குக் காரணங்களை அறிவோமா? இந்த வடிவங்களில் சமகால விஷயங்களை முன்வைக்க முடியாமல் போனதேன்? உறைந்து போன வடிவங்களுக்குள் முகம்காட்டி ஒவ்வொரு கதையின் கற்பனை சாத்தியங்களுக்கு எல்லை வரம்பிட்டு விட்டிருந்தார்கள் வைதீகப்பாங்கை முன்வைத்த பெரும்பாலான குடும்ப அச்சில் கிறுகிறுத்தவர்களும் மரபுவடிவத்தில் சிறுகதை படைத்தவர்களும் நேர்கோட்டு அ-நேர்கோட்டு சிதைவுகள் வனமந்திர தேவதைச்சுருளின் தனித்துவத்தைக் கண்டடைந்ததில்லை. வனமந்திர தேவதைச்சுருள் பற்றி எல்லோருமே சில அலகுகளைச் சோதித்திருந்தாலும் உணர்ந்த வழியில் தவறான அறிதலுக்கே இட்டுச்சென்றது. இந்த மரபு கிழக்கில் வெகுகாலம் ஜனங்கள் தங்களுக்குள் இயற்கையிடம் நீருடன் தவளையுடன் பூச்சிகளுடன் காற்றிடம் முட்டையிடம் பாதையிடம் மந்திரக்கட்டாகப் படித்தவர்களை ஏமாற்றி தனி வழியே கொண்டு போகிறார்கள். திரட்டித் தொகுத்த ஃபோக்லோர் மியூஸியங்களில் செத்த மிருகக் காட்சியகமாக பிஸ்லரி வாட்டர் கேனுடன் இன்டர்நேஷனல் செமினார்களில் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டிகளில் தட்டுத்தீனி விவாதமாக முள்கரண்டியில் வனமந்திர தேவதைச் சுருளைப் பிடித்து தலைகீழாகப் பார்த்துப் பிரமித்தார்கள்.

No comments:

Post a Comment