விஞ்ஞான விமர்சனம்
விஞ்ஞானம் உலக நடப்புக்களின் நியதியை ஆராய்ந்து அறியும் துறை, நடப்புக்களை நாம் அறிந்திருந்த போதிலும் அவை எந்த நியதியைப் பின்பற்றி இயங்குகின்றன என்ற உண்மை நமக்குத் தெரியாது மறைந்திருந்தது. படிப்படியாக விஞ்ஞானம் வளர்ச்சி பெற, இவ்வுண்மைகள் நமக்குப் புலப் படலாயின. விஞ்ஞானம் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்கிறது. புதிதாக உற்பத்தி செய்வதில்லை. இவ்வுண்மைகளின் அறிவால், சில சாதகங்களை நாம் செய்து கொள்கிறோமானாலும் உலக நடப்புக்களின் நிரந்தர ஒழுங்கு மாறுபடுவதில்லை. விஞ்ஞான உண்மையின் மற்றொரு அடிப் படையான குணம் சரி பார்க்கப்பட முடிவதும் நிரூபிக்கப்பட முடிவதும்.
எந்தத் துறையும் விஞ்ஞானம் என்ற மகுடம் சூட்டப் படுகின்றன. விஞ்ஞான உண்மைகளுக்குரிய மூன்று அடிப் படையான குணங்கள் அதற்கு இருக்கின்றனவா
என்று பார்க்க வேண்டும். ஒன்று, ஏற்கனவே இருந்த, மாறாத, ஆனால் இதுகாறும் மறைந்திருந்த உண்மையை அது வெளிக் கொணர்ந்ததா? இரண்டு, இவ்வுண்மைகள் சரி பார்க்க முடி வனவா? நிரூபிக்கப்பட முடிவனவா? மூன்றாவது, இவ்வுண்மை களை வெளிக்கொணர கொள்ளப்பட்ட ஆராய்ச்சி சுய பாதிப்பு நீங்கிய நிலையுள்ளதா?-என்பன.
இலக்கிய விமர்சனம் இந்த ஷரத்துக்களை எப்படி நிறை வேற்றுகிறது என்பது தெரியவில்லை. இலக்கிய விமர்சனத்தை
41
ஒரு விஞ்ஞானமாக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எதற்கும் சம்பந்தம் உண்டோ இல்லையோ, விஞ்ஞானம், விஞ் ஞானம் என்று கூறுவது ஒரு 'நாகரீகம்' ஆகிவிட்டது போலும். செயற்கை கிரகங்கள் சிருஷ்டிக்கப்படும் இந்தக் காலத்தில் இந்த விஞ்ஞான 'மோஸ்தர்' புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
இலக்கியமும், மற்றும் எந்தக் கலையுருவமும் தன்னின் வெளிப்பாடுதான். தன்னோக்கு அல்லது சுய பாதிப்பு இல் லாத எந்தக் கலைப் படைப்பையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. சுய பாதிப்பு இல்லாத படைப்பு இலக்கியமாக இராது. அது விஞ்ஞானக் கட்டுரை ஆகிவிடும். ஒரே குரு விடம், ஒரே ராகத்தை, ஒரே மாதிரியாக பாடக் கற்றுக் கொண்ட இரு சங்கீத வித்வான்கள் பின் அதே ராகத்தை கையாளும் முறை வேறாகிறது. தரையில் சாக்கட்டியால் வரையப்பட்ட ஒரு வட்டத்தைக் கண்டு, 'இது ரெம்ப்ராண்ட் வரைந்ததல்லவா?' என்று ஒருவர் வியந்தாராம். ஒரு வெறும் வட்டக் கோட்டிலும்கூட கலைஞனின் தனித்தன்மை துலங்கு கிறது. 'ஒரு கலைஞனின் முன்னேற்றம் தொடர்ந்த
சுய
தியாகத்திலும் தன் தனித்தன்மை நீக்கலிலும்தான் அடங்கி யிருக்கிறது' என்று டி.எஸ் இலியட் சொன்னார். முற்றிலும் அழித்து விட முடியும் என்று அவர் சொல்லவில்லை. தன் சித்தாந்தத்துக்கு எடுத்துக்காட்டாக 'பாலே' நாட்டியத்தை சுட்டிக் காட்டினார். நமக்கு 'பாலெ'யைப் பற்றித் தெரியாது. முகமூடி அணிந்து தன்னை முற்றிலும் மறைத்து, குறிப்பிட்ட முத்திரைகளின் வரையறைக்குள்ளேயே குறிப்பிட்ட பாவனை களோடேயே உயர்தர பத்ததி வாய்ந்த கதகளி நாட்டியத் திலுங்கூட நாம் கலைஞனுக்குக் கலைஞன் வித்யாசம் காணமுடி கிறது. கலை வெளிப்பாட்டில் தனித்தன்மை, சுயபாதிப்பு என்பன முற்றிலும் என்றும் அழிவதில்லை.
சுய பாதிப்பு உள்ளது எதுவும் விஞ்ஞான உண்மை ஆவது மில்லை. அதைப்பற்றிய விமரிசனமும் விஞ்ஞான ரீதியில் நடைபெறுவதில்லை.
42
எந்தக் கலைப்படைப்பும் ஒரு விதத்தில் கலைஞனின் அபிப் பிராயம்தான். மாறாத, மறைந்து கிடந்த உண்மையல்ல. அவனளவுக்கு அது உண்மை. அக்கலைஞனுடன் நாமும் சமூக மும் எந்த அளவுக்கு ஒத்து நோக்குகிறோமோ அந்த அளவுக்கு அப்படைப்பு நமக்கும் சமூகத்திற்கும் உண்மை. இந்த உண்மை உணரப்பட முடியுமேயல்லாது நிரூபிக்கப்பட முடி சரிபார்க்கவும் முடியாது. ஏற்கனவே இருந்த சுய பாதிப்பினால் விளைந்தது என்ற காரணத் தால் புதிதாக சிருஷ்டிக்கப்பட்ட உண்மை. இதன் ஜீவன். நமது கலைஞனின் ஒத்த நோக்கின் ஜீவன் எவ்வளவோ அவ்
யாது;
உண்மையல்ல.
வளவு.
க்
விமர்சனத்திற்கு வருவோம். சுய பாதிப்புள்ள இக் கலைப் படைப்புகள் தன்னை, தன் கலையுணர்ச்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்று சொல்லுவது தான். இதையும் தன் னோக்கு இன்றி சுயபாதிப்பு நீங்கிய நிலையில் செய்ய முடியாது. அபிப்பிராயத்தைப் பற்றிய அபிப்ராயம்தான் விமரிசனம், சுயபாதிப்பு நிறைந்த படைப்பு எதைப் பற்றியும், தன் னிலேயே தன் ஆதாரத்தைக் கொண்ட எந்த அபிப்பிராயத் தைப் பற்றியும், நிரூபிக்கப்பட முடியாத எதைப் பற்றியும் விஞ்ஞான முறையில் எதுவும் சொல்வது என்பது சாத்திய மில்லை.
க.நா.சு. சொன்னது போல, விமர்சனம் ஒரு சுட்டிக் காட்டும் விவகாரம்தான். தன் அபிப்பிராயம் இது என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன் அபிப்பிராயத் திற்கு ஆதாரமான எண்ணங்கள் என்ன என்பதையும் சொல்ல லாம். அவ்வளவே. இந்த ஆதார எண்ணங்கள் என்னவோ நம்மை அதிக தூரம் இட்டுச் செல்வதில்லை. மேலும் இந்த ஆதார எண்ணங்களின் தகுதியைப் பற்றிக் கேள்விகள் எழுப் புவதும் நியாயமில்லை. தன் அபிப்பிராயம் இது. தான் இந்த அபிப்பிராயம் கொள்ளக் காரணமான ஆதார எண்ணங்கள் இவை என்பதோடு, நிச்சயமாக, 'ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்
43
கொள். இல்லையானால் போ' என்று சொல்லிவிட முடியும். நிரூபணம் என்பது சாத்தியம் இல்லை. அபிப்பிராயத்திற்கு ஆதாரமான எண்ணங்களும் விமர்சகனின் சொந்தமேயன்றி உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் அளவு கோல்கள் அல்ல.
66
நீக்ரோ ஒருவன் தன் காதலியின் அழகைப்பற்றி நம் மிடம் பரவசத்தோடு அளக்கிறான். அவனது பரவசமும், அவனது அழகுணர்ச்சியும் நம்மைத் திகைக்கச் செய்கின்றன. “இதோ பார் இந்த மாதிரி சட்டடியாக 'முகத்திலடித்தாற்' போல் உன் அபிப்பிராயத்தைச் சொல்லும் பாச்சாவெல்லாம் நம்மிடம் காட்டாதே. நாங்கள் எதற்குமே விஞ்ஞான முறை யில் முடிவு காண்பவர்கள். அவள் அழகி என்ற முடிவிற்கு வர நீ கொண்ட கோட்பாடு எது என்று விஞ்ஞான முறையில் விளக்கு' என்று அவனைக் கேட்கிறோம், 'இதில் விளக்கம் என்ன வேண்டிக் கிடக்கு. பார்த்தாலே தெரியவில்லையா? அழகிதான் அவள்' என்பான். 'எங்களில் சிலர் கோபிக்கிறார் களப்பா ' நீ விளக்கத்தான் வேண்டும் என்று வற்புறுத்து கிறோம். "பாருங்கள் அவள் முன் தலையின் வழுக்கைப் பரப் பைப் பாருங்கள். தென்னை நார் போன்ற முரட்டு மயிரின் சுருட்டை அழுத்தம் தரும் அழகுதான் என்ன. பிளந்த உதடு களின் தடிப்பு என்ன கவர்ச்சி ஊட்டுகிறது. அவளது குள்ள சப்பை மூக்கும் அது இரண்டாகப் பிளந்திருக்கும் வண்ணமும் அது நெற்றியிலிருந்து கிளம்பும் இடத்தில் விழுந்திருக்கும் பள்ளமும் அவள் அழகிய முகத்திற்கு எவ்வளவு சோபை அளிக்கிறது. இவளைப் போன்ற அருமையான பெண்ணை எங்கு பார்த்திருக்கிறீர்கள்?" இருப்பினும் அவள் தன் கரு மையை கரிப்பொடியால் இன்னும் அதிகமாக்கிக் கொண்டிருக் கிறாள். அவள் மார்பகங்கள் இடுப்புவரை தொங்குவது எவ் வளவு நேர்த்தியாக இருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் அவள் அழகி என்பதில் என்ன சந்தேகம்?" என்று விளக்கம் தருகிறான். இவைதான் அவன் கோட்பாடுகள். இதற்கு மேல் சென்று அவள் அழகை விஞ்ஞான முறையில் விமர்சிப்பது,
44
நிரூபிப்பது என்பது சாத்யமில்லை. அவனளவுக்கு இந்த அம் சங்களைக் கண்டதும் இந்தமுடிவுக்கு வருவது என்பது தவிர்க்க முடியாததாகிறது.
அவனுடைய கோட்பாடுகளை, அழகி என்று விமர்சிப் பதற்கு தேர்வுக் கோட்பாடுகளைக் கூறிவிட்டானே ஒழிய அந்தக் கோட்பாடுகளின் தகுதி, நியாயம் இவற்றைப் பற் றியோ, அவற்றிலிருந்து அவனது முடிவு, எப்படி, எத்தகைய ஒரு நிச்சயத் தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பற் றியோ, கூறவில்லை. கூறவும் முடியாது. கரியவள், அழகான வள் என்பன ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு தனிவாக்குகள். கரியவள் என்பது நிரூபிக்க முடிவது. அழ குள்ளவள். என்பது உணரப்படுவது மட்டுமே. நமது விஞ் ஞான முறைகள் கரியவள் என்ற அறிவு தெளியும் தூரம் வரை அழைத்துச் செல்லும். கரியவள் என்ற அறிவுக்குப் பிறகு அழகுள்ளவள் என்ற ரசனைக்கு வரும் பிணைப்பு அறுந்துவிடு கிறது. இதில் எந்த விஞ்ஞான முறையும் நமக்கு உதவுவ தில்லை. இரண்டாவது சங்கடம், கருமை, சுருட்டை மயிர், வழுக்கை விழுந்த முன் தலை, சப்பை மூக்கு என்று நீக்ரோ கொள்ளும் கோட்பாடுகள், அளவுகோல்கள், விஞ்ஞான முறையில், அழகி என்ற ரசனை முடிவுக்கு வர, இவைதான் அளவுகோல்கள் என்ற தகுதிப் பத்திரம் பெறாத அளவுகோல் கள். ஏனெனில் இதே அளவுகோல்களைக் கொண்டு நாம் அவள் முதல் தர குரூபி என்ற முடிவிற்குத்தான் வருவோம்.
இவ்வளவுக்கும் பிறகுகூட.
அந்த நீக்ரோ அழகை ரசிப்பவன்தான். அவனுக்கு அவன் காணும் பொருள்களின் அழகு உண்மை. அவனுக்கும் உலகம் அழகு நிறைந்து காட்சியளிக்கிறது. ஆனால், நம்மால் அவனுடன் அந்த அழகுணர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள. முடிவதில்லை.
ஆகவே, விமர்சனம் என்பது சுட்டிக்காட்டுவதோடு நிற் பதுதான். வேண்டுமானால் நீக்ரோ செய்தது போல
ன்ன
45
மும் சிறிது தூரம் தனது ரசனைக்குச் சமீபமாக அழைத்துச் செல்ல முடியும். தனது ஆதார எண்ணங்களைச் சொல்லி, அதற்கு மேல் செல்வது என்பது முடியாத காரியம். அது வார்த்தைகளால் அளந்து காட்டிவிடக்கூடிய கோட்பாடு களல்ல. எல்லை வகுத்து விடக்கூடிய ஒன்று அல்ல.
படைப்பாளியே தன் சிருஷ்டியைப் பற்றிக் கூற முனைந் தால்கூட தனது படைப்பின் அருகில் வேண்டுமானால் அழைத் துச் செல்லலாம். அதனுடன் ஒன்றிவிடச் செய்ய முடியாது தான். அவனுக்கே அது சாத்தியமில்லாத காரணத்தால்தான். ஏனெனில் அவனே தன் படைப்பை வேறு கண்களால், வேறு நோக்கால்தான் பார்க்கிறான். தான் சிருஷ்டிக்க எண்ணிய போது இருந்த சிருஷ்டி உருவம் கலையுணர்ச்சிகள் வேறு; படைக்கப்பட்ட உருவம், அது வெளிக்காட்டும் கலையுணர்ச்சி கள் வேறு. வாசகனாகவோ, விமர்சகனாகவோ, அவன் அப் படைப்பினின்றும் பெறும் கலை அநுபவம் வேறு. இம்மூன்று நிலைகளின் வேறுபாட்டிற்குக் காரணங்கள் கால வேறுபாடு, அத்துடன் விளைந்த தன் நிலை சூழ்நிலை இவற்றின் வேறுபாடு கள். மூன்றாவது தன் உணர்ச்சிகள் பெற்ற மூன்றுவித வளர்ச்சி மாற்றங்கள். ஒன்று, சிருஷ்டிக்கு முன் இருந்த குழம்பிய நிலை. இரண்டு, படைக்கும் பிரசவ வேதனை. மூன்று தன்னினின்று பிறந்து, தனியொரு பொருளாகி தன் வளர்ச்சி பெற்று தன்னினின்று அகன்று விலகிச் செல்லும் நிலை.
கவிதா சிருஷ்டியை
பற்றிச் சொல்வதுண்டு, 'உணர்ச்சி களை அமைதியில் நினைவு கொள்ளல்' என்று டி.எஸ். இலியட் சொன்னார்: 'அவ்வாறு நினைவு கொள்வதாகச் சொல்லப்படு வது நினைவு கொள்ளலும் அல்ல. கொள்ளப்படும் காலம், அர்த்த பங்கம் நேராத, அமைதியும் இல்லை. எல்லாமே முற் றிலும் வேறுபட்டவை' என்று.' ஒரு முறை பெற்ற உணர்ச்சி வாழ்வு இன்னொரு முறை பெறப்படுவதில்லை. ஆகவே படைத் தவனுக்கும் தன் படைப்பை நெருங்கி ஒன்றாவது என்பது சாத்யமில்லை. இந்நிலையில் சுயபாதிப்பு நீங்கிய, தன்னோக்
46
கற்ற மதிப்பிடு, விஞ்ஞான வழி என்பனவெல்லாம் எங்கே காணப்படுகின்றன?
விமர்சனம் விஞ்ஞான முறையில் கையாளப்பட முடியாத தற்கு இன்னொரு காரணம், விமர்சன அளவு கோல்களின் ஆதார எண்ணங்களின் ஒரு ஒத்த கோல்களின் ஆதார எண்ணங்களின் ஒரு ஒத்த தன்மையின்மை. ஒவ்வொரு விமர்சகனும்
கையாளும் அளவுகோல்கள், ஆதார எண்ணங்கள் அவனது தனித்தன்மையை அவற்றினுள் உள்ளடக்கியவை. அத்தனித்தன்மை என்பது அவனது ரசனையின் விஸ்தீரணம், ஆழம், விவரங்களின் பெருக்கம், நெருக்கம், பக்குவம், வேறுபட்ட அநுபவங்கள், முதிர்ச்சி இவை கலந்து பிறந்த ஒரு புதிய பண்பு. நிச்சயமாக ஒரு விமர்சகன் ஒரு கலைப் படைப்பைப்பற்றி அளிக்கும் விமர்சனம், அவனைப்பற்றிய விமர்சனமும்தான், "கலை யுணர்ச்சியோடு தீட்டப்பட்ட எந்த உருவப் படமும் தீட்டிய கலைஞனின் உருவமே யல்லாது தீட்டப்பட்ட உருவத்தின் உருவம் அல்ல," என்று ஆஸ்கர் ஒயில்டு தனது சைத்ரிக பாத்திரம் மூலம் கூறுகிறார். உண்மைதான். இல்லையெனில்
அது கலைப் படைப்பாக இராது. யந்திரப்படைப்பான புகைப்படமாகிவிடும். விமர்சனத்தைப் பற்றியும் இது உண்மைதான். கலையுணர்ச்சியோடு படைக்கப்பட்ட எதிலும் கலைஞனின் தனித்தன்மை, அவனது என்று சொல்லக் கூடிய அம்சம் ஒன்று அதில் கலவாது இருக்க முடியாது. விமர் சகன் பத்திரிகை நிருபனல்ல, உணர்ச்சியற்று, உள்ளதை உள்ளபடியே, தன் சுயபாதிப்பு இல்லாது எடுத்துக் கூற. கலைப்படைப்பு, பத்திரிகை நிருபன் கையாளும் பொருளும் அல்ல.
ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகம் கலையாகத் தோல்வி யுற்றது என்றார் டி. எஸ். இலியட், இலியட், அதற்கு ஆதார மாக 'அப்ஜெக்டிவ் காரிலேடிவ்' என்ற ஒரு புதிய சித்தாந் தத்தைக் கொணர்ந்தார். இந்த புதிய சித்தாந்தம் தோன்றும் வரை, 'ஹாம்லெட்' ஷேக்ஸ்பியரின் தலை சிறந்த
47
படைப்பாக இருந்தது. இன்றும் நமக்கும் மற்றவர்க்கும் சிறந்த படைப்புதான். ஒரு கலைப் படைப்பை ஒரு புதிய கலை நோக்கில், தான் பிறப்பித்த கலை நோக்கில், பார்த்து மதிப்பிடும் வரை சிறந்த படைப்பாக இருந்த ஒன்று. இன்று கலைத் தோல்வியாகக் கீழிறக்கப்படுகிறது டி. எஸ். இலி யட்டால். இதன் காரணமாக, 'ஹாம்லட்' இலக்கியத்தி லிருந்து மறைந்துவிடப் போவதில்லை. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வாழும் என்று நம்மால் சொல்ல முடியாது. இதே காரணத்தால், டி. எஸ். இலியட் தன் புதிய சித்தாந்த நோக்கை விஞ்ஞான முறை என்று நிச்சயமாகக் கூறமுடி யாது.
ஏனெனில் அதற்கு அவரது தனித்தன்மை உண்டே அல்லாது, எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வழக்கில் கொணரும் தன்மை பெரும்பாலோருடைய ரசனை அநுபவத்தில் இந்த சித்தாந்தம் ஒரு அடிப்படைப் பொதுத் தன்மை பெறும்வரை
கிடையாது. டி. எஸ். இலியட் போன்ற ஒரு சித்தாந்த கலைஞனின், சிறந்த விமர்சகனின் ரசனைக் கோட்பாடு என்ற அளவுக்கு, அவரது சித்தாந்தத்துக்கும், அதன் ரீதியாக விளைந்த விமர்சனத்திற்கும் மதிப்புண்டு. அவரது விமர்சனம் மற்ற எல்லா விமர்சனங்களையும் போலவே வெறும் அபிப் பிராயம்தான். விஞ்ஞான முறையில் விமர்சித்துப் பெற்ற உண்மை அல்ல. அவரளவுக்கு அவரது ரசனை உண்மை. அவரது இந்த சித்தாந்த ரீதியான விமரிசனம் அவரைப் பற்றிய விமரிசனமும்தான். ஏனெனில் எந்த ரசனை நோக்கில் அவர் தனது சிறந்த நூல்களைப் படைத்தாரோ, அதே ரசனை நோக்கில் தான் அவர் தனது சித்தாந்தங்களையும் வகுத்துக் கொண்டார்.
ஜெரால்ட் கௌல்ட்,
கௌல்ட், ஜேம்ஸ் ஜாய்ஸின் 'யூலிஸஸ்' நாவல் வெறும் குப்பைக் கூடை என்றார். எச். ஜி, வெல்ஸ், நீங்களும் நானும் வளர்ந்த சூழ்நிலை வேறானது. பெற்ற படிப்பு, மதிப்புகள், சமுதாய நோக்கு வேறானவை. உங்களது யுலிஸஸை என்னால் ரசிக்க முடியவில்லை. அவ்வளவும் வீணான வேலை. இத்தகைய உபயோகமற்ற, வார்த்தை ஜாலங்
48
களையும் கண்டு எனக்கு வெறுப்புத்தான் அதிகமாகிறது" என்று (வார்த்தைக்கு வார்த்தை சரியாக ஞாபகமில்லை. கிட்டத்தட்ட இப்படித்தான்) ஜேம்ஸ் ஜாய்ஸுக்கு எழுதிய கடிதத்தில் சொன்னார்: இலக்கியத்தில் இலக்கிய விமர்சனத்தில், யுலிஸஸ், ஹாம்லட் போன்றவைகளுக்கும் இடம் உண்டு. இவற்றைப்பற்றி அபிப்பிராயம் கூறிய இரண்டு கட்சிகள், இதற்கு
இதற்கு மேலும் எத்தனை கட்சிகள் உண்டோ அவ்வளவுக்கும் இடம் உண்டு. ஆனால் விஞ்ஞான உண்மை ஒன்றுதான். விஞ்ஞான கோட்பாடுகள், விஞ்ஞான விசாரணை ரீதிகள், ஒரு உண்மையைப் பற்றி ஒன்றுதான் இருக்க முடியும்.
நிச்சயம் விமர்சனமும் ஒரு கலைப் படைப்புத்தான். ஒரு புதிய படைப்பும்கூட. மதிப்புரைகளைப் பற்றி நான் ஏதும் சொல்ல வரவில்லை. மதிப்பரை செய்யும் வேலை, மாணவனின் பரீட்சைத் தாள்களைத் திருத்தும் வேலை. சொல்லிக் கொடுக் கப்பட்ட பாடம் என்ன? கேட்கப்பட்ட கேள்வி என்ன, மாணவனின் அறிவுப் பக்குவம் என்ன? என்ற எல்லைக் கோடு களை வரைந்துகொண்டு, அதனால் மாணவனின் தேர்ச்சி என்ன, தேர்வதற்கு வேண்டிய மார்க்குகள் என்ன, என்ற விவகாரங்களில் புகுவது போன்றது மதிப்புரை. விமர்சன வேலையே வேறு.
இலக்கியாசிரியனின்
நோக்க மென்ன, படைப்பின் தன்மை யென்ன, இதுவரை பிறந்த படைப்புக்களின் சூழ் நிலையில் அதன் இடம் என்ன, அது வகுக்கும் புதிய பாதை என்ன என்று ஆராய்வதோடு, அது தன் கலையுள்ளத்தை எவ்வாறு பாதித்தது, அதன் இன்றைய உபயோகம் என்ன என்றும் மேற் சென்று பார்ப்பதும் கூடத்தான் விமர்சனம். இலக்கியாசிரியன் தன் தன் சிருஷ்டி வேலையில் கொண்ட சித்தாந்தங்கள், நோக்கங்கள் தனதினின்று வேறாக இருந்த போதிலும், தனது சித்தாந்தங்கள் மூலமும் தன் ரசனை நோக்கு அநுபவம் பக்குவம் மூலமும் அப்படைப்பை,
49
விமர்சகன் ஆராயலாம். இலக்கியாசிரியனைவிட விமரிசகனின் ரசனைவிஸ்தீரணம் ஆழம், அநுபவ முதிர்ச்சி, பக்குவம், வாழ்க்கை நோக்கு, தனித்தன்மை அதிகமாகவும் வேறுபட்ட தாகவும் இருப்பது சாத்தியம்தான். இந்நிலையில் தனது விமர் சனங்கள் மூலம், ஒரு புதிய கோட்பாட்டை, இலக்கிய ரசனையை சிருஷ்டித்து, பழைய பாதையே யானால், இன்னும் முன்னுக்கு இழுத்துச் சென்றும், வேறாயின் புதிய பாதைக்குத் திருப்பியும், தனது விமர்சனத்திற்குப் பிறகு படைக்கப்படும் இலக்கிய சிருஷ்டிகள் எல்லாம் தான் காட்டிய லக்ஷியத்தை நோக்கி விரைவனவாகச் செய்வதும் சாத்தியம். இதுவும் விமர்சனம் தான். இலக்கிய வளத்தைக் கணிப்பவன் மட்டுமல்ல; புதிய இலக்கியப்பாதைகளுக்கு. வளத்திற்கு வழிகாட்டியாகவும் விமர்சகன் ஆகிறான். நிகழ்ந்த சரித்திரத்தை பதிப்பிக்கும் சரித்திராசிரியனாகவும் சரித்திர சிருஷ்டி கர்த்தாவாகவும் இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலைப் போலாகிறான் விமர்சகன்.
மாறாக எந்தத் தனியொரு இலக்கியாசிரியனும் இன்று வரை பெரும்பாலும் காணப்பட்டது போல் இலக்கிய வளர்ச்சியில் முன் செல்பவனாக இருந்தால் அவன் தனது காலத்திய ரசனைக்கே ஒரு எல்லை வகுத்து விடுகிறான். அவ் வெல்லையை தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் விஸ்தரித்து விடுகிறான். அதிக ஆழமுடையதாக்குகிறான். உத்வேகத்தை அதிகமாக்குகிறான். இவற்றின் மூலம் புதிய இலக்கிய கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் உருவாக்கி விடுகிறான். ஏனெனில் அவனது படைப்பு இதுவரை இருந்த கோட்பாடுகள் சித்தாந்தங்கள் இவற்றை மீறிப் படைக்கப் பட்டுவிட்டது. ஆகவே அவனது படைப்பை அளவிட, புதிய கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் தோன்றும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. இந்த சித்தாந்தங்கள் அவனது காலத்திய படைப்புக்களை அளவிட உதவுவதோடு, கடந்த கால படைப்புக்களின் அளவீடுகளை, மதிப்புகளை மாற்றி யமைத்து ஒரு புதிய நோக்கைச் சிருஷ்டிப்பதோடு, எதிர்கால படைப்புகளின் பாதையையும் நிர்ணயித்து அவற்றை மதிப்
ய
பா-3
50
பிடும் அளவுகோல்களையும் உண்டாக்கி விடுகின்றன. ஆகவே, அளவுகோல்களான சித்தாந்தங்களுக்கும், கோட் பாடுகளுக்கும் ஒரு நிரந்தர வாழ்வு, ஸ்தானம் என்பது கிடையாது. இந்த சித்தாந்தங்கள், கோட்பாடுகள் ஒரு காலத்திய இலக்கிய ஆசிரியனின் சிருஷ்டி சிகரம், விமர்சகனின் கலையனுபவ சிகரம், அக்காலத்திய சூழ்நிலை, மதிப்புகள், தேவைகள் இவற்றைச் சார்ந்து ஜீவிப்பவை அல்லது மடிபவை. இன்று ஆங்கில இலக்கியத்தில் மில்டனுக்கு, முன் இருந்த உயர்ந்த இடம் இல்லை. இடையில் மங்கிய ஜார்ஜ் இலியட்டுக்கு புத்துயிர் அளிக்கப்படுகிறது. இலக்கிய ரசனை என்பது விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு அடங்கி வாழாத, தன் வழிச் செல்லும் ஒரு குணம். அதை விஞ்ஞானமாக்க முயலுவது அதைப்பற்றிய விஞ்ஞானத்தைக் குறிக்கிறது.
இலக்கியாசிரியனும் விமர்சகனும் ஒருவர் மற்றொரு வரிடம் தன் பிழைப்புக்குக் கையேந்தி நிற்பவர்கள். அல்லது அவரவர் வழி அவரவர் செல்பவர்கள். இரண்டுமே உண்மை தான்.
இலக்கியாசிரியனைச் சுற்றிச் சுழல்பவன் மட்டுமல்ல விமர்சகன். பிடில்வித்துவான் பக்க வாத்தியமாகவும் இருப் பான்; தனி ஆவர்த்தனமும் செய்வான். அதில் சங்கீத வித் வானைவிட மேம்பட்ட தனது கலை வித்வத்தைக் காட்டி அதன் மூலம் தனது சுயேச்சையையும், தனித்தன்மையையும் காட்டிக் கொள்வான். அவனும் கலைஞன்தான். விமர்சகனும் கிட்டத் தட்ட இத்தகைய நிலையில் இருப்பவன். பின் ஏன் அவன் கலைஞனாக முடியாது? அவனது படைப்பு ஏன் கலைப்படைப் பாகாது? அவனது படைப்பு கலைப் படைப்பாயின், அவனது தனித்தன்மை அதில் தோற்றம் காரணத்தால், அவன் சுய பாதிப்பு அதில் அடங்கியுள்ள காரணத்தால் அவனது விமர் சனம் ஏன் ஒரு புதிய படைப்பாகாது? அவனுக்கு, அவன் விமர்சிக்க எடுத்துக்கொள்ளும் இலக்கிய படைப்பு தன் கலை யுள்ளத்தை வெளிப்படுத்தச் சாதகமாக்கிக் கொள்ளும் ஒரு கருவிதான். எச். எல். மெங்கன், தியோடார் டிரீசரைப் பற்றி தான் எழுதிய விமர்சனங்களைப் பற்றிக் கூறுகிறார் :
51
"டிரீசரைப் பற்றி இவ்வளவு நிறைந்த அளவில் நான் எழுதக் காரணம் என்ன? டிரீசருக்கும், அவரைப் போல் என்னை நெருங்கி அறிந்தவர்களுக்கும் இது தெரியும். மெங்கனின் (தனது) சிந்தனைகளை வகைப்படுத்தி ஒரு சீராக்கி அளிக்கத் தான்" என்று.
கடைசியாக, இல்லாததை இருப்பதாகச் சொல்வதும், தானே சிருஷ்டித்தவற்றை இலக்கியாசிரியரின் தலையில் சுமத்துவதும், ஆஹா! ஓஹோ! என்று கூவுவதும், தனக்குப் பிடிக்காதவற்றை,அந்த ஆசிரியனின் படைப்பேயில்லை இவை என்று நீக்குவதும் விமரிசனம் என்றோ புதிய
என்றோ புதிய படைப்பு என்றோ யாரும் சொல்வதற்கில்லை. இவை விமர்சனம் போன்ற ஒரு கனமான தொழிலை கேலிக்கிடமாக்குவதாகும். இவற்றில் உண்மை இல்லை.
உண்மையான கலைஞனின் உண்மையான விமரிசனம் ஒரு புதிய படைப்புத்தான்.
தளத்தைப் பற்றி
ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com