கலப்பு  
- பிரமிள்
- பிரமிள்
கலப்பு  :  :கண்கள்
உயர்ஜாதிக்காரி 
ஒருத்தி நகத்தோடு 
என்பறை நகம்மோதி 
மனம் அதிர்ந்தது 
கோபத்தில் மோதி 
கலந்தன கண்கள் 
பிறந்தது ஒரு 
புதுமின்னல் 
ஜாதியின் 
கோடைமேவிப்பொழிந்தது 
கருவூர்ப் புயல்..  
 கலப்பு  :  : புகைகள்
உயர்ஜாதிக் காரி
ஒருத்தி நகத்தோடு
என்பறை நகம்மோதி
ஊர்  அதிர்ந்தது
ஐயாயிர வருஷத்து
இரவு சிவந்து
எரிந்தது என்சேரி...
புகைகள் கலந்து
இருண்டது இன்றென்
உதய நெருப்பு...