தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, July 16, 2016

பணிப்பெண்கள் - ஜோன் ஜெனே தமிழில் : கதி

பணிப்பெண்கள் - ஜோன்  ஜெனே தமிழில் : கதி
WWW.padippkam.com!

நன்றி - நூலகத்திட்டம்
கதாபாத்திரங்கள்
சோலான்ஸ், கிளேயர் இரு பணிப்பெண்கள் சகோதரிகள் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதுக்குள் இருப்பார்கள். சோலான்ஸ் மூத்தவள். மதாம் அவர்களின் எசமாணி, அவளுக்கு ஏறத்தாழ இருபத்தைந்து வயது இருக்கலாம்.

எசமானியின் சயன அறை

 15வது லூயி காலத்துத் தளபாடங்கள் மிக அரிதான லேஸ்துணிகள், முன்வீட்டை நோக்கித் திறந்த ஜன்னல் வலதுபக்கம் கட்டில், இடதுபக்கம் ஒப்பனை மேசையும் ஒரு கதவும்: மலர் அலங்காரத்தில் ஊதாரித்தனம்,

 (கிளேயர் மெல்லிய உள்ளாடை அணிந்து தனது பின்புறத்தை ஒப்பனை மேசைக்குக் காட்டியவாறு நிற்கின்றாள் - விரிந்த கைகள், குரலில் மிகைப்படுத்தப்பட்ட வருத்தபாவனை)
கறுப்பு/311________________

கிளேயர்: கையுறைகள், என்றுமே உன்னை விட்டகலாத கையுறைகள் எத்தனை முறை உனக்குச் சொல்லியுள்ளேன், அவைகளைச் சமையலறையிலே விட்டு வைக்கச் சொல்லி, நீ பால்காரனை உனது கையுறைகளைக் கொண்டு வசீகரிக்க நினைக்கின்றாய் போலும். இல்லை, இல்லை பொய் பேசாதே; அது உனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை! அவைகளை கழுவும் தொட்டியின் மேல் தொங்கவிடு. இந்த அறையின் தூய்மை கெட்டுவிடக் கூடாது என்பதை என்றுதான் நீ புரிந்து கொள்ளப் போகின்றாயோ... எல்லாமும் - ஆம் சமையலறையிலிருந்து வரும் எல்லாமும் எச்சில் பட்டவைதான். எனவே அப்படி நடந்து கொள்வதை விட்டுவிடு. (இந்த உரையாடல் நேரம் முழுவதும் சோலான்ஸ் தனது ரப்பர் கையுறைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தனது கையுறைகளிட்ட கைகள் ஒரு விசிறியைப் போல் விரிவதையும் பூங்கொத்தினைப் போல் சுருங்கு வதையும் அவதானித்துக் கொண்டிருந்தாள்.) நீ வீட்டினில் இருப்பதை நினைவு கொள். ஒரு மயிலினைப் போல் உன்னை அழகுபடுத்திக் கொள்; எல்லாவற்றிற்கும் மேலாக அவசரப்படாதே நமக்கு நேரம் தேவைக்கதிகமாகவே இருக்கின்றது. (சோலான்சின் தோற்ற அமைவு மாறுகின்றது. பணிவுடன் ரப்பர் கையுறைகளை விரல் நுனியில் பிடித்தவாறு வெளியேறுகிறாள். கிளேயர் ஒப்பனை மேசையில் அமர்கிறாள். பூக்களை முகர்ந்து பார்க்கின்றாள். வாசனைத் திரவியங்களின் மேல் தனது விரல்களை ஒட விடுகின்றாள். தலை முடிகளைச் சீவிக் கொள்கிறாள். முகத்தினை ஒற்றிக் கொள்கின்றாள்.) எனது உடைகளை ஆயத்தப்படுத்து. சீக்கிரம், நேரம் விரயமாகின்றது. நீ எங்கே இருக்கின்றாய் (மேசையிலிருந்த வாறு திரும்பி) கிளேயர் கிளேயர் (சோலான்ஸ் உள்ளே வருகின்றாள்)

சோலான்ஸ்: மன்னிக்க வேண்டும் மதாம். நான் மதாமின் தேநீரைத் தயார் செய்துகொண்டிருந்தேன்.

கிளேயர்: எனது ஆடை அணிகலன்களை ஆயத்தப்படுத்து. சரிகை வேலைப்பாடுடன் கூடிய எனது வெள்ளை உடை, கைவிசிறி, இரத்தினக் கற்கள் வைத்த நகைகள். சோலான்ஸ்: நல்லது மதாம். மதாமின் எல்லா நகைகளையுமா? கிளேயர்: எல்லாவற்றையும் வெளியே எடுத்து வை, நான் தெரிவு செய்து கொள்கின்றேன். அத்துடன் நிச்சயமாக எனது பிரத்தியேக வடி வமைப்புக் கொண்ட தோல்காலணிகள். நீ வருடக் கணக்காக கண் வைத்துள்ளாயே, அதே காலணிகள்தான். (சோலான்ஸ் சில நகைப் பெட்டிகளை சிறு அலுமாரியினுள் இருந்து எடுத்து கட்டிலின் மேல்
312/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
வைக்கின்றாள்.) நீ உனது திருமணத்திற்கு அணியத்தானே எனது காலணிகள் மேல் கண் வைத்துள்ளாய். சந்தேகமே இல்லை, அவன் உன்னை மயக்கி விட்டான் பார் அவளை, என்னவொரு செழுமை! உண்மையை ஒத்துக்கொள். (சோலான்ஸ் கம்பளத்தின் மீது குந்தி இருந்து கொண்டு எச்சிலிட்டு காலணிகளை மினுக்குகின்றாள்.) நான் உனக்குச் சொல்லி உள்ளேன் எச்சில் படுத்தாதே என்று; அதை உன் மனதில் பதித்து வைத்துக் கொள் என் குழந்தாய், மனதின் ஆழத்திலதை நிறுத்தி வை. ஹா. ஹா. (ஒரு பரபரப்பான அடங்கிய சிரிப் பொலியை வெளிப்படுத்தி) நீ ஓர் அருவருப்பானவள். முன்னால் உடலை வளைத்து எனது காலணிகளில் உன்னைப் பார்த்துக் கொள். உனது உமிழ் நீர் வெள்ளத்தில் என் கால் புதைந்து போவது எனக்கு மகிழ்ச்சியைத் தருமென நீ நினைக்கின்றாயா? சோலான்ஸ்: (முழந்தாளிட்டு மிகப்பணிவாக) எனது ஆசை மதாம் அழகாகக் காட்சியளிக்க வேண்டுமென்பதே.

கிளேயர்: நிச்சயமாக நான் அழகாகக் காட்சியளிப்பேன் (கண்ணாடி முன் தன்னைச் சீர்படுத்திக் கொள்கின்றாள்) நீ என்னை வெறுக்கின்றாய் இல்லையா? உனது கவனிப்புக்களாலும், பணிவாலும் என்னை நீ அடக்கி விடுகின்றாய். பூக்களைக் கொண்டு என்னை நீ நசுக்கி விடுகின்றாய். (எழுந்து நின்று குரலைத் தாழ்த்திக் கொண்டு) நிறையப் பூக்களால் இந்த அறை தேவைக்கதிகமாகவே அலங்கரிக்கப் பட்டுள்ளது. என்னால் நம்ப முடியாமலிருக்கின்றது (மறுபடியும் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்கின்றாள்) நான் அழகாகத் தான் இருப்பேன். உன்னால் என்றுமே என்னைப் போல் அழகாக இருக்க முடியாது. இந்த முகத்தையும் உனது உடல் தோற்றத்தையும் வைத்துக் கொண்டு உன்னால் மரியாவைக் கவர்வது இயலாத காரியம். (பாசாங்கான தொனியைக் கைவிட்டு) ஒர் உதவாக்கரைப் பால்கார இளைஞன் எங்களை முட்டாளாக்குகின்றான். நாங்கள் ஒரு குழந்தையை அவன் மூலம் பெறப்போகிறோம். சோலான்ஸ்: ஆ நான் என்றுமே...

கிளேயர்: (விட்டதொனியில் தொடர்ந்து) பேசாதே முட்டாளே. எனது உடை!

சோலான்ஸ்: (அலுமாரியில் தொங்கும் உடைகளை கைகளால் தள்ளிக் கொண்டே) சிவப்புடுப்பு, மதாம் சிவப்பு உடுப்பினை அணிந்து கொள்வார்.

கிளேயர்: வெள்ளையுடுப்பு - சரிகையுடன் கூடியது.

சோலான்ஸ்: (உறுதியாக) மன்னிக்க வேண்டும். மதாம் சிவப்பு நிற வெல்வெட் உடையைத்தான் இன்று மாலை அணிவார்.

கிளேயர்: (வெகுளிக்குரலில்) ஏன்?
கறுப்பு/313________________

சோலான்ஸ்: (உணர்வுகளை வெளிக்காட்டாத குரலில்) வெல்வெட் மடிப்புகளினுள் பொதிந்த மதாமின் மார்பகங்களைப் பார்ப்போரால் மறக்கவே முடியாது. அத்துடன் மார்பிலணியும் அந்த புரோச் மதாம் பெருமூச்சுக்களுடன் உரையாடும்போது, எனது பக்திக்குப் பாத்திர மானகர்த்தாவே! உங்களது விதவை நிலை முற்று முழுவதுமான கறுப்பு உடையைத்தான் அனுமதிக்கின்றது.

கிளேயர்: ஆ...

சோலான்ஸ்: இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா? அறிவுள்ளோர்க்கு ஒரு சொல்

கிளேயர்: ஆகா, அப்படியானால் நீ பேச விரும்புகின்றாய்... நல்லது என்னைப் பயமுறுத்து! உனது எஜமானியைச் சிறுமைப்படுத்து சோலான்ஸ், மிசுயுவின் துர்பாக்கிய நிலைமை பற்றி நீ பேச விரும்புகின்றாய்; அப்படித்தானே? முட்டாளே பொருத்தமற்ற இந்த நேரத்தில் அது பற்றி ஏன் மறைமுகமாகக் கூட குறிப்பிடுகின்றாய்? என்னால் இந்தத் துர்ப்பாக்கிய நிலையைக் கூட எனக்குச் சாதக மாகத் திருப்பிவிட முடியும். நீ புன்னகைக்கின்றாயா? நீ இதை நம்பவில்லையா?

சோலான்ஸ்: அதை வெளிக்கொவர நேரமின்னும் கனியவில்லை.

கிளேயர்: என்னவொரு மொழிப் பிரயோகம் என்றும் அழிக்க முடியாத என் மீதான பழி! என்றும் அழிக்க முடியாத என் மீதான பழி, வெளிக்கொண்டுவர
சோலான்ஸ்: மதாம்.

கிளேயர்: மிசுயுவை பொலீசிற்குக் காட்டிக் கொடுத்ததற்காக உனக்கு நான் பணிந்துபோக வேண்டுமோ? அவரை விற்று விட்டதற்காக? என்னால் இதைவிடத் திறமையாக அன்றேல் முட்டாள்தனமாக நடந்திருக்க முடியும். நான் வருந்தவில்லை என்று நீ நினைக்கிறாயா? கிளேயர் எனது கரங்களால் அந்தக் கடிதத்தை எழுத என்ன பாடு பட்டேன் எழுத்துப் பிழைகள் விடாமல், சொல், பொருளில் பிழை யில்லாதிருக்க, எதையுமே எழுதி பின்பதனைக் கோடிட்டு அழிக்காம லிருக்க, என் காதலனைச் சிறைக்கனுப்பிய அந்தக் கடிதத்தை வரைய. ஆனால் நீ எனக்குப் பக்கபலமாய் இருப்பதை விட்டு என்னைப் பரிகசிக்கின்றாய். உனது எண்ணங்களை என் மீது திணிக்கின்றாய். நீ விதவை நிலை பற்றிப் பேசுகின்றாய். அவர் இறந்து விடவில்லையே; மிசுயு ஒரு சிறைச் சாலையிலிருந்து இன்னொரு சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்படுவார். சில வேளைகளில் பேய்த் தீவிற்குக் கூடக் கொண்டு செல்லப்படலாம். அவரது காதல் அடிமையான நான் ஆழ் துயரோடு பைத்தியமாகி அவரைப் பின் தொடரலாம். அவரை ஏற்றிச் செல்லும் காவலர் வாகனத் தொடரணியில் நானும் செல்லலாம்.
314/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
அவரின் புகழை நானும் பகிர்ந்து கொள்ளலாம். நீ என்னவென்றால் விதவை நிலை பற்றிப் பேசுகின்றாய். அரசிகளின் துக்க மரபு நிறமான வெள்ளை ஆடையை அணியத்தர மறுக்கின்றாய். உனக்கு விளங்கவில்லை கிளேயர். சோலான்ஸ்: (உணர்வற்ற குரலில்) மதாம் சிவப்பாடையை அணிந்து கொள்வார்.

 கிளேயர்: (சாதாரணமாக) பேசாதே (கடுமையாக) எனது உடையை என்னிடம் கொடு. ஓ.. நான் மிகவும் தனிமையாயும் நண்பர்கள் அற்றவளாயும் போய் விட்டேன். உனது கண்களில் என் மீதான மனமார்ந்த வெறுப்பினைக் காண்கிறேன். எனக்கு என்ன நடந்தாலும் அதுபற்றி உனக்கு அக்கறையே கிடையாது.

சோலான்ஸ்: நான் நீங்கள் போகுமிடமெலாம் உங்களைப் பின் தொடர்ந்து வருவேன். நான் உங்களை நேசிக்கின்றேன்.

கிளேயர்: அதில் சந்தேகமில்லை; ஒர் எஜமானியை எப்படி நேசிக்க வேண்டுமோ அப்படி என்னை நேசிக்கின்றாய், மதிக்கின்றாய்; அத்துடன் என்னிடமிருந்து முதுசொத்தை எதிர்பார்க்கின்றாய். என் உயிலில் உன் பெயரும் வரவேண்டுமென நினைக்கின்றாய். i

சாலான்ஸ்: எனது சக்திக்குட்பட்ட விதத்திலெல்லாம். ளேயர்: (வஞ்சகப் புகழ்ச்சியுடன்) நீ எனக்காக எதையும் செய்வாய், அது எனக்குத் தெரியும். (சோலான்ஸ் கிளேயர் உடையணிய உதவுகின்றாள்) சேர்த்துக் கட்டு, என்னை வரிந்து மூட்டையாகக் கட்ட முயலாதே. (சோலான்ஸ் கிளேயரின் பாதங்களருகில் முழந்தாளிட்டு உடையின் மடிப்புக்களைச் சீர் செய்கின்றாள்) என்னை உன் கையால் தொடு வதைத் தவிர்த்துக் கொள்; நீ ஒரு மிருகம் போல் நாறுகின்றாய். இரவினில் அடிமைப்பணி புரிபவர்கள் எங்களைச் சந்திக்க வருவார்களே, அந்த மேல் மாடத்து அறை, அங்கிருந்துதான் இந்த நாற்றத்தை நீ கொண்டு வந்துள்ளாய். அந்த அறைக்குமொரு பெயர் பணிப்பெண் அறை - ஒரு கேவலமான பொந்து. (நளினமாக) கிளேயர் ஞாபகம் காரணமாகத்தான் மேல்மாட அறையைப் பற்றிப் பேசினேன். அங்குதானே ஏவல் பணி புரிபவர்கள் எங்களை இரவில் சந்திக்க வருவார்கள் - பணிப்பெண் அறை மேல்மாடி அறை அத்துடன் அந்த இரண்டு கட்டில்கள், இரு சகோதரிகளும் ஒருவர் மேல் மற்றவர் கனவு கொண்டு தூங்குவது. (அறையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி) அங்குதான் இரண்டு இரும்பிலான கட்டில்கள் கிடக்கும். இடையே ஒரு சிறிய மேசை. அங்கே (முன்னைய பக்கத்திற்கெதிராக ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டி) இங்குதான் மலிவான பலகையிலான ஒப்பனை மேசையுடன் கூடிய கன்னி மரியாளின் அடுத்தார் நான் சொல்வது சரிதானே? 313
கறுப்பு/315________________

சோலான்ஸ்: தாங்கள் மிகவும் மகிழ்வற்றுக் காணப்படுகின்றீர்கள். இப்படியே பேசினால் நான் அழுதுவிட நேரிடும். கிளேயர்: நான் சொல்வது சரிதானே? உனது அழுகையையும் முழந்தாளிடலையும் விட்டு விடுவோம். நான் காகிதப் பூக்கள் பற்றிச் குறிப்பிடக்கூடாதுதான் (சிரிப்புடன்) காகிதப் பூக்கள்! இந்த மலர்களைப் பார், என்னை கெளரவிப்பதற்காகவே தங்கள் மலர்வினை அர்ப்பணித்தவை கிளேயர், நானொரு அதிரூப கன்னியல்லவா? சோலான்ஸ்: (தன்னைக் கிளேயருக்கு அர்ப்பணித்தது போன்ற தொனியில்) அமைதியாயிருங்கள்.

கிளேயர்: அத்துடன் அங்கே (ஜன்னலில் மிக உயரமான பகுதியைச் சுட்டிக்காட்டி) அந்தக் கூரை ஜன்னல், அதனுடானகத்தானே அரை நிர்வாணமாய் பால்காரன் உனது கட்டிலின் மேல் குதிப்பான்.

சோலான்ஸ்: மதாம், நீங்கள் உங்களை மறந்து பேசுகின்றீர்கள்.

 கிளேயர்:கைகள்; உனது கைகள் பற்றி மறந்து போய்விட்டதா (பேச்சறுந்த இடைவெளி பின் முணுமுணுப்பாக) அவைகள் கழுவும் தொட்டியையே அசுத்தப்படுத்திவிடும்.

சோலான்ஸ்: வீழ்ச்சி! கிளேயர்: என்ன? சோலான்ஸ்: (கிளேயரின் உடுப்பை இடையினில் ஒழுங்குபடுத்திய வாறு) உடுப்பு இடுப்பிலிருந்து கீழ் நோக்கி விழுவதை எடுப்பாகத் தெரிய ஒழுங்குபடுத்துகின்றேன். கிளேயர்: உன் கைகளை என் மீதிருந்து எடு குளறுபடிக்காறியே. (தனது சப்பாத்தின் குதியினால் சோலான்சின் தாடையில் உதைக்கிறாள். முழந்தாளிட்டிருந்த சோலான்ஸ் தடுமாறிப் பின் வாங்குகிறாள்)

சோலான்ஸ்: ஓ நானொரு திருடியா?

கிளேயர்: திருடியல்ல; எதிலும் திறமையற்றவள் என்று சொன்னேன். நீ தேம்ப வேண்டுமாயின் உனது பொந்துக்குள் போய் அழு. எனது படுக்கையறையில் கெளரவம் மிக்கவர்களின் கண்ணிர்தான் சிந்தப்பட வேண்டும். ஒரு காலம் வரும், அந்தக் கண்ணிர்த் துளிகள் என் ஆடையின் ஓரங்களை அலங்கரிக்கும். அவைகள் விலைமதிப்பற்ற கண்ணிர்த் துளிகளாய் இருக்கும். முட்டாளே, எனது உடையின் தரையில் புரளும் பகுதியை ஒழுங்கு செய்.

சோலான்ஸ்: (பரவச நிலையில்) நீங்கள் தன்நிலை மறந்து போய் விடுகின்றீர்கள் கிளேயர்: உண்மையாகச் சொல்லுகிறேன், அவன் என்னைத் தன் வாசனை நிறைந்த கரங்களால் தூக்கிச் செல்கிறான். என்னை உயரத் தூக்குகின்றான். நான் தரையில் கால் பாவாது மேலெழும்புகின்றேன்.
316/கறுப்பு
நன்றி - நூலகத்திட்டம்
(தனது சப்பாத்துக் கால்களால் தரையை உதைத்துக் கொள்கின்றாள்) ஆனால் நான் பின்தங்கி நிற்கின்றேன். எனது 'நெக்ல"சை எடு. எங்களுக்கு நேரம் போதாது. எனது ஆடை நீளமாக இருந்தால் மடித்து ஊசிகளைக்கொண்டு அளவாக மடித்துக் குத்து (சோலான்ஸ் எழுந்து நகைப் பெட்டியுனுள் இருந்து ஒரு "நெக்லசை எடுக்க கிளேயர் அதிலும் வேமாகச் சென்று அதனை எடுக்க அவளின் விரல்கள் சோலான்சின் விரல்கள் மீது படிகிறது. அருவருப்புடன் தனது விரல்களை மீட்டுக் கொள்கிறாள்.) உனது கைகளால் என்னைத் தொடாதே என்னால் நீ தொடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. சிறிது உன்னைத் துரிதப்படுத்து.

சோலான்ஸ்: எல்லாவற்றையும் மிகைப்படுத்த ஒரு தேவையுமில்லை. உங்கள் கண்களில் பிரகாசம் தெரிகின்றது.

கிளேயர்: (ஆச்சரியத்துடன்) நீ இப்போது என்ன சொன்னாய்?

சோலான்ஸ்: முடிவுகள் எல்லைகள் மதாம்; எல்லைகள் ஒப்பந்தங் களல்ல, மரபுமல்ல, அவை சட்டங்கள். இங்கே எனது நிலங்கள்; அங்கே உங்களது கரைகள்

கிளேயர்: என்னவொரு மொழிப் பிரயோகம், எனது அன்பான கிளேயரே! நான் ஏற்கனவே கடலைக்கடந்து விட்டேனென நீ கருதுகின்றாயா? உனது கற்பனைகளை என் மீது திணிக்கின்றாயா? நீ என்னைப் பழி வாங்குகின்றாய், அப்படித்தானே? காலப்போக்கில் ஒரு பணிப்பெண்...

சோலான்ஸ்: உங்களால் என்னை உள்ளும் புறமும் பார்க்க முடிகின்றது. எனது சிந்தனைகளை மகிமைப்படுத்துகின்றீர்கள்.

கிளேயர்: (மேலும் உணர்ச்சிவசப்பட்டு) காலப்போக்கில் ஒரு பணிப்பெண் பணிப்பெண்ணாக இல்லாது பழி வாங்கலாக உருமாறும் காலம் வந்து விட்டதென்கிறாய். ஆனால் கிளேயர் மறந்து விடாதே, கிளேயர் கவனிக்கின்றாயா? மறந்துவிடாதே பழி வாங்கும் திட்டங்களைப் பணிப்பெண்தான் சிந்தனையில் அடைகாக்கின்றாள். நான், கிளேயராகிய நான் இதைச் செவிமடுக்கவில்லை.

சோலான்ஸ்: (வேறெங்கோ கவனத்துடன்) நான் செவிமடுக்கின்றேன்.

கிளேயர்: நான் என்னுள் பணிப்பெண்ணையும் பழிவாங்கலையும் ஒரு சேரக் கொண்டுள்ளேன். அவ்வப்போது இவைகளில் ஒன்று வெளிப்படும். வாழவும் மீளவும் இவைகளுக்கு நான் சந்தர்ப்ப மளிப்பேன். கிளேயர் இது ஒரு சுமை எஜமானியாக இருப்பது துன்பங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கை; எல்லா வெறுப்புகளினதும் ஊற்றுக் கால்களாகவும் அருவருப்பான மலக்குவியலாகவும் அதிலே வளர்பவளாயும் இருக்க வேண்டும். என்னை நிர்வாணமாக ஒவ்வொரு நாளும் பார்க்க விரும்புகின்றாய். நான் அழகானவள்? இல்லை
கறுப்பு/317________________

என்று கூற முடியுமா? என் காதலின் ஏக்கம் இன்னும் என்னை மெருகுபடுத்தும். ஆனால் எவ்வளவு மனத்தைரியம் வேண்டுமென்று உனக்குப் புரியாது. . சோலான்ஸ்: (ஆழ்ந்த யோசனையில்) உங்கள் காதலர்!

கிளேயர்: என் பரிதாபத்துக்குரிய காதலன் என்னை மேன்மைப் படுத்துகின்றான். ஆனால் நமக்குத் தெரிந்ததெல்லாம் நமது இழி நிலைதான். சோலான்ஸ்: இந்த மட்டும் கதை போதும். விரைவாகப் புறப்படு. நீ செல்ல ஆயத்தமா? கிளேயர்: நீ ஆயத்தமா? சோலான்ஸ்: (உடுப்பு அலுமாரியை நோக்கிச் சென்று கொண்டு) நான் ஒரு வெறுக்கப்படும் பொருளாக இருப்பதில் இனியும் எனக்குச் சம்மதமில்லை. நான் உன்னை வெறுக்கிறேன். என் மனது நிறைய உன் மீது ஏளனம்தான் உள்ளது. உனது வாசனையூட்டிய மார்பகங்களை வெறுக்கிறேன். உனது. தந்த நிற மார்பகங்கள் உனது .... தங்க நிகர் தொடைகள் ... உனது ... பொன்னாம்பல் நிறப் பாதங்கள். நான் உன்னை வெறுக்கிறேன். (சிவப்பு நிற உடை மீது துப்புகிறாள்.) கிளேயர்: (திகைப்புடன்) அ. அ. ஆனால்....
சோலான்ஸ்: (அவளை நோக்கி நடந்து கொண்டு) ஆம், பெருமை பிடித்த அழகியே நீ நினைத்ததையெல்லாம் செய்துவிட முடியுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். இவ்வுலகின் அழகெல்லாவற்றையும் என்னை அண்டவிடாது தடுக்க முடியுமென எண்ணுகிறாய். உன்னால் உனது வாசனைத் திரவியங்களை உனது நகப் பூச்சுகள் பட்டுகளை வெல்வெட் துணிகள், சரிகைகளைக் கவனமுடன் தேர்ந்ததெடுக்க முடியுமென்றும் என்னால் இவைகளை அடைய முடியாது செய்யவும் நீ நினைக்கிறாய். எனது பால்காரனை என்னிடமிருந்து பறிக்க முடியுமென நினைக்கிறாய்? ஒப்புக்கொள் பால்காரனின் இளமையும் ஆண்மையும் உன் உணர்வுகளைத் தூண்டவில்லை? உண்மையை ஒத்துக்கொள்; ஏனெனில் சோலான்ஸ், சொல்கிறேன்! நீ நாசமாகப் போ!

கிளேயர்: (பயப்பிராந்தியுடன்) கிளேயர். கிளேயர்.

சோலான்ஸ்: ங்ங்ா... கிளேயர்: (பிதற்றலாக) சோலான்ஸ் - கிளேயர் - சோலான்ஸ்

சோலான்ஸ்: ஆம் கிளேயர், கிளேயர்தான் சொல்கிறேன். நீ நாசமாய் போ. கிளேயர்தான் இங்கிருக்கின்றேன். பிரமிக்கத்தக்க அழகுடன் காண்போரை வெட்கித் தலை குனிய வைக்கும் சவுந்தரியத்துடன் (கிளேயரின் கன்னத்தில் அறைகிறாள்.)
31.8/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்

கிளேயர்: ஓ கிளேயர் நீ... ஒ.

சோலான்ஸ்: மதாம் நினைத்தீர்கள் போலும் பூக்களின் அணி வகுப்புக்காவல் தங்களைப் பாதுகாக்குமென்று, மற்றவர்களில் நின்று வேறுபட்ட விசேட வாழ்க்கை தங்கள் தலையில் எழுதப்பட்டுள்ள தென்று. ஆனால் மதாம் நீங்கள் பணிப்பெண்ணின் எழுச்சியை, கோபத்தைக் கணக்கிலெடுக்க மறந்து விட்டீர்கள். அவள் உங்கள் அழகிய பேச்சுகளைக் குப்பையிலும் கேவலமாக ஆக்கிக் காட்டுவாள். உங்களது காதல் களியாட்டத்தின் அடிப்படையையே வெட்டிச் சாய்ப்பாள். உங்களது மிசுயு ஒரு கீழ்த்தரமான திருடன் நீங்கள்.

கிளேயர்: நான் உன்னை எச்சரிக்கிறேன். உனது மடமையை ஒத்துக் கொள்.
சோலான்ஸ்: சுத்தப் பிதற்றல், நீங்கள் எனக்குத் தடையுத்தரவு போடுகிறீர்கள் மதாம்தான் மடமையை ஒத்துக் கொள்ள வேண்டும். தங்களது முகம் அதிர்ச்சியைக் காட்டுகிறது. கண்ணாடி வேண்டுமா பார்த்துக் கொள்ள, இதோ! (கிளேயருக்குக் கண்ணாடியைக் கொடுக்கிறாள்.)

கிளேயர்: (திருப்தியுடன் தன்னைப் பார்த்துக் கொண்டு) கன்னத்தில் அறைந்த விரல்களின் அடையாளம் பதிந்துள்ளது. ஆயினும் எப்போதையும்விட இப்போது அழகாகவுள்ளேன்.

சோலான்ஸ்: ஆம், ஒர் அறை

கிளேயர்: ஆபத்தானது கிளேயர் நீ இருளில் உழல்கின்றாய்.
சோலான்ஸ்: ஆனால் இருள் ஆபத்தானது. இதுபற்றி எல்லாவற்றையும் ஏற்கனவே நான் அறிவேன். நான் என்ன மறுமொழி கூற வேண்டுமென்பதை உனது முகத்தைக் கொண்டே அறிந்து கொள்ள முடியும். எனவே நான் சொல்ல வந்ததை முழுமையாகக் கூறி முடித்து விடுகின்றேன். இங்கே பார் இரண்டு நம்பிக்கைக்குப் பாத்திரமான பணிப்பெண்கள். அவர்கள் உனக்கு முன்னால் நிற்கின்றார்கள். அவர்களை நீ நன்றாக இகழ். மேலும் மேலும் அலங்காரமாகக் காட்சியளி. நாங்கள் இனி உனக்குப் பயப்படப் போவதில்லை. எங்கள் கோபக்கனல் எங்களைச் சுற்றிப் படலமாகிப் படிந்திருக்க உன் மீதான கோபமும் அதை வெளிக்காட்டும் நடப்புமாக நாங்கள் உருமாறி மேலெழுந்துள்ளோம். வார்ப்பு இறுகி வருகின்றது. நாங்களும் உருமாற்றம் பெற்று வருகின்றோம். மதாம் ஏளனமாகச் சிரிக்க வேண்டாம்; முக்கியமாக எனது அபாரமான பேச்சுத் திறமையைக் கண்டு சிரிக்க வேண்டாம்.

கிளேயர்: வெளியே போ!

சோலான்ஸ்: ஆனால் உங்களுக்குச் சேவை செய்வதற்காக மட்டும்தான் வெளியேறுகிறேன். நான் எனக்கு விதிக்கப்பட்ட சமையலறைக்குச்
கறுப்பு/319________________

செல்கின்றேன். எனது கையுறைகளை அணிந்து கொள்ளச் செல்கின்றேன். நாற்றமடிக்கும் எனது வாயுடன் செல்கிறேன். நான் துவைக்கும் தொட்டிக்குச் செல்கிறேன். உங்களுக்கு மலர்களும் எனக்கு துவைக்கும் தொட்டியும். நானொரு பணிப்பெண்; உங்களால் என்னைக் கறை படுத்துவதோ இழிவு படுத்துவதோ முடியாத காரியம். ஆனால் ஆனால் (பயமுறுத்தும் வகையில் கிளேயரை நோக்கி நகர்கிறாள்) நான் போவதற்கு முன்பு வந்த காரியத்தை முடித்து விட்டுப் போகிறேன். (சடுதியாக கடிகாரத்தின் அலாரம் அலறுகிறது. சோலான்ஸ் உறைந்து நிற்கிறாள். அந்த இரு நடிகைகளும் பரபரப்பாக சேர்ந்து ஒடிச் சென்று அருகருகாக நின்று காதைக் கூர்மையாக்கிக் கேட்கிறார்கள்.) இவ்வளவு விரைவாக...

கிளேயர்: சீக்கிரமாக, மதாம் திரும்பி வந்துவிடப் போகிறார். (தனது
உடைகளைக் களையத் தொடங்குகிறாள்.) உடைகளைக் களைய உதவி
செய்.நாடகம் ஏற்கனவே முடிந்து விட்டது முடிவைத்தான் நீ செய்யவில்லை. -

சோலான்ஸ்:(கிளேயருக்கு உதவியவாறே கவலையான குரலில்) எல்லாத் தடவையும் இதே மாதிரித்தான் நடந்து விடுகிறது. நீ என்றுமே முடிவுக்குத் தயாராவதில்லை. அதனால் என்னாலும் உன்னை அழித்துவிட முடிவதில்லை.
கிளேயர்: ஆரம்பக் கட்டடங்களில் நாம் அதிக நேரத்தைச் செலவிட்டு விடுகின்றோம். ஆயினும் நாங்கள்.

சோலான்ஸ்: (கிளேயருக்கு உடைகளைக் களைய உதவியவாறு) ஜன்னலைக் கவனி

கிளேயர்: நமக்கு இன்னும் சிறிதளவு நேரம் பாக்கியுள்ளது அலாரம் வைக்கும்போது பொருட்களை ஒழுங்குபடுத்தச் சிறிது நேரம் கணக்கிட்டுத்தான் வைத்தேன். (அங்கிருந்த கதிரையில் களைப்பாக விழுகின்றாள்) *>

சோலான்ஸ்:(மென்மையாக) இன்று மாலை முடிவு கைக்கெட்டும் போல் இருந்தது. நாள் முழுவதும் அவ்வுணர்வே என்னை ஆட்கொண்டிருந்தது.

கிளேயர்: ஆம்

சோலான்ஸ்: முடிவுதான் எங்களை வதைக்கின்றதா இளேயர்?

கிளேயர்: ஆம்.

சோலான்ஸ்: நேரம் முடிந்து விட்டது. . -

கிளேயர்: ஆம், (களைப்புடன் அவள் எழுந்து கொள்கிறாள்) நான் தேநீரைத் தயாரிக்கப் போகின்றேன். -
320/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்

சோலான்ஸ்: ஜன்னல் மீது கவனமிருக்கட்டும். கிளேயர்: இன்னும் நேரமுள்ளது (தனது முகத்தைக் கைகளால் துடைத்துக் கொள்கிறாள்) சோலான்ஸ்: நீ இன்னும் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயர் கிளேயர்?

கிளேயர்:என்னைத் தனிமையில் விடு. எனது சக்தியெல்லாம் வழிந்தோடி விட்டது.

சோலான்ஸ்: (கடுமையாக) ஜன்னலைக் கவனித்துக் கொள். மிக்க நன்றி. இந்த அறை முழுவதும் மீண்டும் தாறுமாறாகக் கிடக்கிறது. மதாமின் ஆடையையும் நான்கழுவ வேண்டியுள்ளது. (அவள் தனது சகோதரியை உற்றுப் பார்க்கிறாள்) உனக்கு என்ன நடந்தது? நீ என்னைப் போல இப்போது இருக்கலாம்தானே. நீ கிளேயராக மாறு மீண்டும் எனது சகோதரியாகு.

கிளேயர்: நான் சோர்ந்து போய்விட்டேன். இந்த விளக்கொளி என்னைக் கொல்கிறது. எதிர்வீட்டுக்காரர் எங்களை... நீ என்ன நினைக்கிறாய்?

சோலான்ஸ்: அது பற்றி நமக்கேன் கவலை? (சிறிது தாமதத்தின்பின்) இருட்டில் எவ்வாறு நாங்கள் பணி செய்ய முடியும்? சிறிது ஒய்வு எடுத்துக் கொள். கண்களை மூடு. உனது கண்களை மூடிக் கொள் கிளேயர். -

கிளேயர்: (தனது கறுத்த குறுகிய பணியுடையை அணிந்து கொள்கிறாள்.) நான் களைத்துப் போய்விட்டேன் என்று சொன்னால் அதை ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். என் மீது பரிதாபப்பட அதனைப் பாவிக்காதே. என் மீது அதிகாரத்தைத் திணிப்பதை நிறுத்திக் கொள்.

சோலான்ஸ்: நான் என்றுமே உன்னை அடக்கியாள நினைக்கவில்லை. நான் கேட்டதெல்லாம் உன்னைச் சிறிது இளைப்பாறச் சொல்லித்தான். நீ இளைப்பாறுவது எனக்கு மிகவும் உதவியாயிருக்கும்.

கிளேயர்: எனக்கு விளங்குகிறது. உனது விரிவுரை தேவையில்லை.

சோலான்ஸ்: ஆம், நான் விளக்கம் கூறத்தான் வேண்டியுள்ளது. நீதான் அதுபற்றி ஆரம்பித்தாய். பால்காரனைப் பற்றிப் பேசியதே நீதான். உனது உள்நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியாதென்று நீ நினைத்தாயா? மாரியோ...

கிளேயர்: ஓ...

சோலான்ஸ்: பால்காரன் கொச்சையாக என்னிடம் பேசுவான்; உன்னிடமும் அவ்வாறே. ஆனால் நீயோ அவைகளை ஏற்றுக் கொள்வதுபோல

கிளேயர்: (தோள்களைக் குலுக்கியவாறு) எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா எனப்பார். இங்கே பார். அந்த எழுதும் மேசையின் சாவி
கறுப்பு/321________________

இப்படித்தான் இருந்தது (அவள் சாவியை ஒழுங்குபடுத்துகிறாள்) மிசுயு சொல்வதுபோல்

சோலான்ஸ்: உன்னை மரியாதைக் குறைவாகப் பேசுவதை நீ விரும்புகிறாய். -
கிளேயர்: அவர் பணிப்பெண்களின் மயிர் ரோஜாக்களின் மீதும் மற்றப் பூக்கள் மீதும் கிடப்பதாகக் கூறுகிறார்.

சோலான்ஸ்: எங்கள் அந்தரங்க வாழ்க்கை பற்றிய விடயங்கள்

கிளேயர்: விடயங்கள்... என்ன விடயங்கள் சொல்லு? நாம் விரும்பும் விடயங்கள்? அது நிற்க ஓர் கலந்துரையாடலைத் தொடங்க நமக்கு நேரம் போதாது. மதாம் திரும்பி விடுவார். ஆனால் சோலான்ஸ் இந்த முறை அவள் எங்கள் பிடியில் சிக்கிக் கொண்டாள். நீ உண்மை யிலேயே அதிர்ஷ்டசாலிதான். அவளின் காதலன் கைதான செய்தி கேட்ட அவள் முகம் போன போக்கை நான் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன். எனது வாழ்க்கையில் ஒருமுறையெனினும் நானொரு நல்ல காரியம் செய்தேன். எனது அனாமதேயக் கடிதமில்லாவிடில் ஓர் அழகான காட்சியை நீ இழந்திருப்பாய். காதலன் கையில் விலங்குகளுடன், மதாம் கண்களில் கண்ணிருடன். அதுவே அவளைக் கொல்லப் போதுமானது இந்தக் கவலையிலிருந்து அவளால் மீள்வது கடினம்.

சோலான்ஸ்: மிக நல்லது அவள் அப்படியே சடுதியாக இறந்து போகட்டும். நான் வாரிசாவேன். ஏனெனில் அறையெனும் பொந்தினுள் சமையல்காரனோடும் பட்லரோடும் இனிமேலும் இருக்கத் தேவை வராது.

கிளேயர்: எமது அறை எனக்கு மிகவும் பிடித்தது.

சோலான்ஸ்: என் கருத்தை எதிர்க்க வேண்டுமென்பதற்காக மாத்திரம் அப்படிப் பேசுகின்றாய். அறை பற்றி பெரிதாக அலட்டிக் கொள் ளாதே. அறை பற்றி நினைத்தாலே வெறுப்பு அளவற்றுப் பெருகுகிறது. அறையை நான் அதன் அமைப்பு மாதிரியே பார்க்கிறேன். வெறுமை யானதும் வெறுப்பூட்டத்தக்கதுமாகத்தான் அது இருக்கின்றது. ஓர் ஒழுங்கோ அழகோ அற்ற அறையென்ன, நாங்களே சமுதாயத்தின் கழிவுதானே!

கிளேயர்: மறுபடியும் அதைத் தொடக்காதே! ஜன்னலைக் கவனி என்னால் எதையுமே பார்க்க முடியாதிருக்கின்றது. வெளியே மிக இருட்டாக இருக்கிறது.
சோலான்ஸ்: என்னைப் பேசவிடு. என் உள்ளக் கிடக்கையை வெளியே சொல்லவிடு. எங்கள் அறை எனக்குப் பிடித்தமானது. ஏனெனில் அது மிகச் சாதாரணமானது. நான் எந்தவித பாசாங்குமின்றி அங்கிருக்கலாம்.
322/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
தொங்கும் சீலைகள் இல்லை; அதனால் அவைகளைத் தள்ளிவிடத் தேவையுமில்லை. கம்பளங்கள் எதுவுமில்லை. அதனால் அவைகளை உதறிப்போடத் தேவையுமில்லை. தளபாடங்கள் எதுவுமில்லை; அதனைக் கண்களாலோ துணியாலோ வருடத் தேவையில்லை. கண்ணாடிகளில்லை, திறந்தமாடமுமில்லை, ஒன்றுமேயில்லை. அழகாக எந்தச் சைகைகளையும் நாங்கள் செய்யத் தேவையில்லை. கவலைப்படாதே, நீ தொடர்ந்தும் அரசியாகப் பாவனை செய்து கொள்ளலாம். மேரி அந்தனெற்றைப் போல் இரவெல்லாம் வீடு முழுவதும் நடந்து திரியலாம்.

கிளேயர்: உனக்கென்ன பைத்தியமா நான் என்றும் இரவில் நடந்து திரியவில்லை.

சோலான்ஸ்: (திடமான குரலில்) இல்லை மதாம் திரைச் சீலையாலோ அல்லது அலரங்கார படுக்கை விரிப்பாலோ போர்த்துக் கொண்டு நடந்து திரியவில்லை. தன்னைக் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டும் செருக்கு நடை நடந்தும் இரவு இரண்டு மணிக்கு மேல் மாடத்துக்குச் செல்லவுமில்லை, அங்கு ஜன்னலின் கீழ் சாரி சாரியாகக் கூடிவந்த பொதுமக்களுக்குக் காட்சி தரவுமில்லை - இல்லை என்றுமே அப்படிச் செய்யவில்லை.

கிளேயர்: ஆனால் சோலான்ஸ்...

சோலான்ஸ்: மதாமை வேவுபார்ப்பதற்கு இரவு உகந்ததல்ல. ஏனெனில் கருமை அடர்ந்த இருளில் எதுவுமே தெரியாது. உன்னுடைய மேல் மாடத்தில் நின்றால் யாருக்குமே தெரியாது என்று நினைத்தாயா? என்னை என்னவென்று நினைத்தாய்? உனக்குத் தூக்கத்தில் நடக்கும் வழக்கமுண்டென்று எனக்குச் சொல்ல எத்தனிக்காதே. எங்களிரு வருக்குமே என்ன நடக்கின்றதென்று தெரியும் பேசாமல் ஒத்துக்கொள்.

கிளேயர்: சோலான்ஸ் நீ கத்துகிறாய். தயவுசெய்து, தயவுசெய்து உன் குரலைத் தாழ்த்திக் கொள். மதாம் எந்தவொரு சத்தமும் செய்யாது உள்ளே வரலாம் (அவள் ஒடிச் சென்று திரைச் சீலையைத் தூக்கிப் பார்க்கிறாள்)

சோலான்ஸ்: சரி, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். திரைச் சீலையைப் பற்றிப் பேசுவோம். நீ அதனைத்துக்கிப் பிடிப்பதை என்னால் பொறுக்க முடியாதிருக்கின்றது. அதனைக் கீழே விடு. அது என்னை மிகவும் குழப்புகின்றது. மிசுயு கைதான காலையில் இப்படித்தான் அவரும் பொலிசாரை வேவு பார்த்தார்.

கிளேயர்: ஆக, நீ நன்றாகப் பயப்படுகின்றாய்? ஒரு சிறு செய்கை கூட ஒரு கொலைகாரன் பின்பக்கப் படிக்கட்டால் தப்பி ஓடுவது போன்று உன்னை நினைக்க வைக்கின்றது.
கறுப்பு/323________________

சோலான்ஸ்: பரிகாசம் பண்ணு; நன்றாக என்னைப் பரிகாசம் பண்ணி என் கோபத்தைக் கிளறு. யாருமே என்னை நேசிக்கவில்லை; யாருமே நேசிக்கவில்லை.

கிளேயர்: மதாம் நேசிக்கிறார்; மதாம் எங்களிருவரையும் நேசிக்கிறார். அவர் அன்புள்ளம் கொண்டவர் மதாம் எங்களை அளவு கடந்து நேசிக்கிறார். -

சோலான்ஸ்: தனது கதிரையை நேசிப்பது போல்தான் எங்களை நேசிக்கிறார். அந்த அளவு கூட இல்லை தனது கழிப்பறைத் தொட்டி போல் அல்லது ரோஜா நிற எனாமல் மூத்திரக் கோப்பையைப் போல் இருக்கலாம். ஆயினும் நாங்கள்... நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க முடியவில்லை... குப்பைகள்...

கிளேயர்: ஆ.

சோலான்ஸ்: ... குப்பைகளை நேசிப்பதில்லை. நான் இதனை இப்படியே விட்டு வைக்கப் போகிறேன் என நீநினைக்கிறாயா? தொடர்ந்தும் இந்த விளையாட்டை விளையாடி விட்டு இரவு மடக்குக் கட்டிலுக்குச் செல்வேன் என் நினைக்கிறாயா விளையாட்டு, நாங்களதைத் தொடரத்தான் முடியுமா? என்னை கிளேயர் என்று அழைப்பவள் மீது துப்ப முடியாவிடில் நான் மூச்சு முட்டிப் போய்விடுவேன். எனது உமிழ் நீர்த்துகள்கள்தான் எனக்கு வைரங்களின் தூவல் போன்றது.

கிளேயர்: (எழுந்து அழுதுகொண்டே) சிறிது மெதுவாகப் பேசு.
தயவுசெய்து; தயவுசெய்து மதாமின் அன்புள்ளம் பற்றிப் பேசு சோலான்ஸ்: அவளின் கருணை அதுதானே? கருணை உடையவளாக இருப்பது மிகச் சுலபமானது. அத்துடன் எப்போதும் புன்சிரிப்புடன் இனிமையானவளாக ஆ... எப்படியானதொரு இனிமை அவளது - அழகானவளும் செல்வச் சீமாட்டியுமாக இருந்தால் அது சாத்தியமே. ஆனால் ஒரு பணிப்பெண்ணாக மாத்திரமிருப்பின்? உன்னால் முடிந்ததெல்லாம் துப்பரவாக்கும் பொழுதோ துணிதுவைக்கும் பொழுதோ அதுமாதிரி பாவனை செய்து கொள்ள மாத்திரம் முடியும். ஓர் இறகுத் துடைப்பானை விசிறி மாதிரி விரிக்கலாம். பாத்திரங்கள்
துடைக்கும் துணியை வைத்து நளினமான அசைவுகளைச் செய்யலாம்,
அல்லது நீ மதாமின் அறையினுள் உன் வரலாற்று அணிவகுப்புக்களை நடாத்தலாம்.

கிளேயர்: சோலான்ஸ் நீ மீண்டும் அதனை ஆரம்பிக்கிறாய். நீ என்னதான்
செய்ய முயல்கிறாய்? இப்படிப் பேசி நாமிருவரும் கோபம் தெளியப் போவதில்லை. என்னாலும் இரண்டொரு விடயங்கள் உன்னைப் பற்றிக் கூற முடியும்.
சோலான்ஸ்: நீ நீ... கிளேயர்: ஆம், நான்தான். ஏனெனில் எவ்வாறு இருப்பினும்.
324/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்

சோலான்ஸ்: ஆகையால்? நீ எதற்காகப் பசப்புகிறாய்? நீதான் பால்காரனை முதலில் குறிப்பிட்டாய். நீ என் வெறுப்பைத்தான் சம்பாதிக்கின்றாய்.

கிளேயர்: அதே போல்தான் நீயும்; அதற்கு மேலும்கூட உன் கோபத்தைக் கிளற வேண்டுமானால் பால்காரனை ஒரு சாக்காக உபயோகிக்கத் தேவையில்லை. அதிலும் மோசமானதொன்று உன்னைப் பற்றியுண்டு. அது உனக்கும் தெரியும்.

சோலான்ஸ்: யார் யாரை வெல்வதென்று பார்ப்போமா? ஏதாவது சொல்லித்தான் பாரேன்.

கிளேயர்: சரி நீயே ஆரம்பித்து வை முதலடியை நீதான் அடித்தாய். அதே நேரம் பின்வாங்குவதும் நீதான். நீ எவ்வாறு என்னை இழிவாகக் குற்றஞ்சாட்டலாம்? எனது கடிதங்கள் எத்தனை பக்கங்கள் அறை முழுவதுமே குப்பை போல் பரவிக் கிடந்தன. நான் எவ்வளவு $pಣ೦un கதைகளை உருவாக்கினேன். நீயோ உனது தேவைகளுக்கு அவறறைப் பயன்படுத்திக் கொண்டாய். எனது சீற்றத்தைச் சிறதறடித்தாய். நேற்று நீ மதாமாக இருந்தபொழுது உனது காதலன் ിmിക്ക விட்டுக் கப்பலில் நாடு கடத்தப்பட்டு ஒழிந்து போவது உனக்கு எவ்வளவு மகிழ்வாயிருந்ததென்று நான் கண்டு கொண்டேன்.

சோலான்ஸ்: கிளேயர்.
கிளேயர் உனது காதலன் - பேய்த்தீவிற்கு - கயானாவிற்கு எனது தடிதத்தால், அந்தக் கள்வனின் காலடியில் வேசையாக முழந்தாளிட்டு இருக்தக் கிடைத்த சந்தர்ப்பத்தை நீ எவ்வளவு மகிழ்வாக ஏற்றுக் ೧765-16 உன்னை அர்ப்பணித்துக் கொள்ள, அந்த இழிவான கள்வனின் சிலுவையை நீ சுமக்க அவனின் முகத்தைத் துடைக்க அவன் பக்கத்தில் நின்று, துடுப்புப் போட்டுக் களைத்த அவனிடத்தை நீ நிரப்ப அவன் தன்னை ஆற்றிக் கொள்ள இவைகளை எவ்வளவு ஆனந்தமாக நீ ஏற்றுக்கொண்டாய். நீ பெருமையினால் பூரித்துப் போனாய். உனது புருவங்கள் என்னதை விட உயரமாக எழுந்தன. ஒரு நெடு விருட்சத்திலும் உயரமாய்.

சோலான்ஸ்:உனது கதை எப்படி சிறிது நேரத்திற்கு முன்பு உன் காதலனைத் தொடர்வது பற்றிப் பேசும்போது.
குறைவுதான். அறையில் கடிதங்களுக்கு மத்தியில் அங்குமிங்கும்
தோணியின் ஆட்டத்திற்கு ஈடு கொடுப்பதுபோல் ஆடவே தொடங்கி விட்டாய்.

சோலான்ஸ்: நீ உன்னைப் பார்க்க மறுக்கின்றாய்...
கறுப்பு/325________________

கிளேயர்: பார்க்கிறேன். நான் உன்னை விட மெல்லுணர்வுகள் உள்ளவள். இந்தக் கதையை வடிவமைத்ததே நீதானே. உனது தலையைத் திருப்பு. உன் முகத்தை மட்டும் உன்னால் பார்க்க முடிந்தால் அஸ்தமன சூரியனின் கதிர் பட்டுத் தெறிக்கும் உன் முகம். நீ எவ்வாறு தப்ப வைக்கலாம் எனத் திட்டமிடுகின்றாய். (அவள் நடுக்கத்துடன் சிரிக்கிறாள்) நீ உன்னைக் கவலைக்குள்ளாக்கிக் கொள்கிறாய்! அந்த விடயத்தை விட்டுவிடு. உனது மகிழ்வான பயணத்தை இடையறுப்பது குரூரமானது. நான் உன்னை வெறுப்பதற்கு வேறுபல காரணங்கள் உள்ளன. உனக்கே தெரியும் அவைகள் எவையென்று. -

சோலான்ஸ்: (குரலைத் தாழ்த்திக் கொண்டு) நான் உன்னைக் கண்டு பயப்படவில்லை. நீ என்னை வெறுப்பவளென்றும் என் காரியங்களுள் மூக்கை நுழைப்பவளென்றும் எனக்குத் தெரியும். ஆனால் கவனமாக இரு நான் உன்னைவிட மூத்தவள்.

கிளேயர்: அதற்கிப்போது என்ன? மூத்தவள்! அத்துடன் பலம் பொருந்தியவளுமோ? அந்த மனிதனைப் பற்றி என்னைப் பேச வைத்து என்னைப் பலமிழக்கச் செய்ய முயல்கிறாய். நான் உன்னைக் கண்டு கொள்ளவில்லையென்று நீ எண்ணுகிறாயோ? நீ அவளைக் கொல்ல முயல்கிறாய்.

சோலான்ஸ்: நீ என் மீது குற்றம் சுமத்துகிறாயா?

கிளேயர்: மறுதலிக்காதே! நான் உன்னைக் கண்டு கொண்டேன். (ஒரு நீண்ட மவுனம்) நான் உண்மையிலேயே பயந்து போனேன். பயந்திருக்கிறேன். சோலான்ஸ் அவளினுடு நீ குறி வைத்திருப்பது என்னைத்தான். நான்தான் ஆபத்தின் மத்தியிலுள்ளேன். நாங்கள் அந்தச் சடங்கை முடித்தவுடன் என்னை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். (நீண்ட மவுனம் சோலான்ஸ் தோள்களைக் குலுக்கிக் கொள்கிறாள்)

சோலான்ஸ்: (முடிவெடுத்த நிலையில்) அவ்வளவுதானா? ஆம் முயன்றது உண்மைதான். நானுன்னை விடுவிக்க விரும்பினேன். என்னால் இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீ மூச்சுத் திணறுவதைப் பார்த்தே எனக்கு மூச்சுத் திணறல் வந்து விட்டது. நீ மூச்சுத் திணறலில் சிவப்பாக, பச்சையாக நிறம் மாறத் தொடங்கினாய்; போலியான அவளின் கருணையில் மூழ்கி அழுகிப் போனாய். உன்னை நான் மிக அதிகமாக நேசித்தேன். அதற்காக வேண்டுமானால் குற்றம் சாட்டு. நான் அவளைக் கொன்றிருந்தால் முதல் ஆளாக நீ என்னைக் காட்டிக் கொடுத்திருப்பாய். நீ என்னைப் பொலீசாரிடம் ஒப்படைத் திருப்பாய். ஆம், நீ அதைச் செய்திருப்பாய்.

கிளேயர்: (சோலான்ஸின் மணிக்கட்டில் பற்றிப் பிடித்து) சோலான்ஸ்...

சோலான்ஸ்: (தன்னை விடுவித்துக் கொண்டே) எதற்காக நீ பயம் கொள்கிறாய். அது என்னைப் பற்றிய விடயங்கள்.
326/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
கிளேயர்: சோலான்ஸ் அடி பேதைப் பெண்ணே. அவள் எந்நேரமும் திரும்பி வரலாம். -

சோலான்ஸ்: நான் யாரையும் கொல்லவில்லை. நானொரு கோழை. நான் என்னால் முடியுமானதைச் செய்தேன். ஆனால் அவள் நித்திரையில் புரண்டாள். (வேகத்தைக் கூட்டி) அவள் மெதுவாகச் சுவாசித்தாள். போர்வையின் வெளியே வந்தாள். ஆம், அது நமது மதாம்தான்.

கிளேயர்: நிறுத்து

சோலான்ஸ்: இப்போது உனக்கு என்னைத் தடுத்தாக வேண்டும். நீ அறிந்து கொள்ள நினைத்தாயல்லவா? இதையும் கேள்! நானுனக்குச் சொல்ல இன்னும் விடயமுள்ளது. உனது சகோதரி யாரென்பதை நீ அறிந்து கொள்வாய். அவள் எம்மாதிரியானவளென்பதை, ஒரு வேலைக்காரி உண்மையிலேயே எப்படியானவள் என்பதை அறிவாய். நான் அவளது கழுத்தை நெரிக்க எண்ணினேன்.

கிளேயர்: என்னை விட்டு விடு; அதன் பிறகு என்ன நடக்குமென்பதை எண்ணிப்பார்.

சோலான்ஸ்: எதுவுமே நடக்காது. தேவாலய மரவாங்கு களிடையே முழந்தாளிடுவது எனக்குச் சலித்துப் போய்விட்டது. சிவப்பு வெல்வெட் உடையும் விலையுயர்ந்த கற்களையும் அணிந்து சென்றால் என் தோற்றம் ஒரளவேனும் மதிப்புக்குரியதாய் இருக்கும். அவள் எவ்வாறு துன்பத்தில் உழல்கிறாள் என்பதைப் பார்! தனது அழகு குலையாது எவ்வாறு துன்பப்படுகிறாள் கவனி. கவலைகள் அவளை உருமாற்றுகிறது, இல்லையா? அவளை இன்னும் அழகாக்கு கிறதோ? தனது காதலன் ஒரு திருடனென அறிந்ததும் அவள் பொலிசார் பக்கம் நின்றாள். அது பற்றி மகிழ்வும் கொண்டாள். ஆனால் இப்போது நாதியற்றவளாகி விட்டாள். இரு நம்பிக்கையான பணிப்பெண்கள் அவளை இரு பக்கமும் கைகளிடையில் துக்கிக் கொண்டு அவள் வேதனையைப் பொறுக்க மாட்டாது இரத்தக் கண்ணிர் வடிக்கின்றார்கள். நீ பார்க்கவில்லையா? அவளது கவலை அவளது நகைகளில் மிருதுவான துணியிலான அவளது ஆடைகளில் கண்ணாடி விளக்குச் சரங்களில் மினுமினுக்கிறது. கிளேயர் எனது துக்கத்தின் வறுமையை எனது குற்றத்தின் செழுமையால் நிரவப் போகிறேன். அதன் பின்பு எல்லாவற்றையும் தீயிடப் போகிறேன்.

கிளேயர்: சோலான்ஸ் அமைதியாயிரு. நெருப்பு சரிவரப் பற்றாமல் விட்டு, நீயும் பிடிபட்டு, உனக்குத் தெரியும் தீயூட்டுவோர்க்கு என்ன நடக்குமென்று.
சோலான்ஸ்: எனக்கு எல்லாமே தெரியும். நான் எனது கண்களையும் காதுகளையும் சாவித்துவாரத்தினுள்தான் வைத்துள்ளேன். எந்தவொரு
கறுப்பு/327________________

வேலைக்காரரும் என்னைப் போல் ஒட்டுக் கேட்க முடியாது. எனக்கெல்லாமே தெரியும். தீயூட்டுவோள், என்னவொரு மாட்சிமை பொருந்திய பட்டம்.

 கிளேயர்: அமைதியாயிரு எனக்கு மூச்சுத் திணறுகிறது. நீ (iaಣ್ಣ மூச்சுத் திணறடிக்க வைக்கிறாய். (ஜன்னலைத் திறக்க முயல்கிறாள்) கொஞ்சம் காற்று வரட்டும்.

சோலான்ஸ்: ஜன்னலைத் திறக்காதே; சமையலறையையும் முன்னறைக் கதவையும் திற. (கிளேயர் இரு கதவுகளையும் திறக்கிறாள்) நீர் கொதிக்கிறதா எனப் போய்ப்பார். கிளேயர்: தனியாகவா? சோலான்ஸ்: பொறு அவள் வரமட்டும் பொறு! வரும்போது அவள் தனது விண்மீன்களையும், தனது தண்ணிரையும், புன்னகையையும், பெருமூச்சுகளையும் தன்னுடன் கொண்டு வருவாள். தனது கருணையால் எங்களைக் கெடுத்துவிடுவாள். (தொலைபேசி ஒலிக்கின்றது. இரு சகோதரிகளும் கவனிக்கின்றனர்.) கிளேயர்: (தொலைபேசியில்) மிசுயு... நீங்களா மிசுயு... நான் கிளேயா. (சோலான்சும் கேட்பதற்காகச் செல்கிறாள். கிளேயர் அவளைத் தள்ளி விடுகிறாள்) நல்லது, நான் மதாமிற்கு சேதி சொல்லி వgథిārGpత. மதாம் நீங்கள் விடுதலையானதை அறிந்தால் மிகவும் மகிழ்வுறுவார். ஆம், மிசுயு; மிக்க நல்லது மிகயு. (ஒலிவாங்கியை அதனிடத்தில் கொழுவ நினைத்தபோதும் கைகள் நடுங்கியதால் மேசை மீது வைக்கிறாள்.) சோலான்ஸ்: அவன் விடுதலையாகி விட்டானா?

கிளேயர்: நீதிபதி பிணையில் விடுதலை செய்துள்ளார். சோலான்ஸ்: மிக்க நல்லது; நீ நன்றாகவே காரியமாற்றியுள்ளாய். எனது வாழ்த்துக்கள். உனது தகவல்கள், கடிதங்கள் நன்றாகவே Gవణఖ செய்கிறது. உனது கையெழுத்தையும் அடையாளம் கண்டு கொள்வார் களாயின் எல்லாம் மிகப் பொருத்தமாகவிருக்கும்.

கிளேயர்: தயவுசெய்து, தயவுசெய்து என் மீது ஏறி அமர்ந்து கொள்ளதே, நீ அதிபுத்திசாலி, மதாமுடனான உனது அலுவலை நீ திறம்படத் செய்திருக்க வேண்டும். ஆனால் நீ பயந்து போய்விட்டாய். கட்டிலில் படுத்த சூடு ஆறவில்லை. அறையெங்கும் வாசனைத் திரவிய ಉಣ। நிச்சயமாக அது மதாம்தான். இப்போது நாம் அதே வாழ்க்கையைத்தான் தொடர வேண்டியுள்ளது. அதே விளையாட்டை விளையாடியபடி. புத்தியற்றவளே எமது விளையாட்டிற்குக் கூட ஆபத்து வந்து விட்டது. நாங்கள் விளையாட்டின் அடையாளங்களை விட்டுவிடுகின்றோம். ஒவ்வொரு முறையும் தடயங்களை கவனயீனமாக விட்டு
328/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
விடுகின்றோம். என்னாலேயே பல தடயங்களைப் பார்க்க முடிகின்றது. எல்லாவற்றையும் அழித்துவிட முடிவதில்லை. ஆனால் மதாம் விலங்குக் காட்சிச்சாலையில் பழக்கப்பட்ட மிருகத்தின் லாவகத்துடன் அறையைச் சுற்றி நடப்பதும், தடயங்களைத் தனது வெள்ளைக் கால் விரலால் சுட்டிக் காட்டுவதுமாக எங்களை ஒவ்வொன்றாகக் கண்டு பிடித்துவிடுகின்றார். மதாம் எங்களைப் பார்த்துக் கேலிச் சிரிப்புச் சிரிக்கிறார். எல்லாமே உனது தவறுதான். எல்லாம் தொலைந்து போன தற்குக் காரணமே உனது பலக்குறைவுதான்.

சோலான்ஸ்: இன்னும் என்னால் தேவையான பலத்தைப் பெற்றிட முடியும்.

கிளேயர்: எங்கே? எங்கிருந்து நான் உன்னை விட மேலானவள். நீ என்ன மரங்களின் நுனிகளின் மேலாகவா வாழ்கின்றாய்? உனது சிந்தனை களோடு செல்லும் ஒரு பால்காரன் பற்றிய எண்ணம் உன்னை நன்றாகவே கிளர்ச்சியுற வைத்துள்ளது.

சோலான்ஸ்: மதாமின் முகத்தினைப் பார்க்காததால் வந்த வினை கிளேயர். நான் மதாமிற்கு அருகாமையில் மிக மிக அருகாமையில் சென்றுவிட்டேன். அவளின் துயிலிற்கும் அருகாமையில் சென்று விட்டேன் போலும். எனது பலத்தையெல்லாம் இழந்து விட்டேன். அவளின் கழுத்தைப் பிடிப்பதற்கு மேலும் கீழுமாக இறங்கியேறும் அவளது மார்பைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்க வேண்டியிருந்தது.

கிளேயர்: (இகழ்வாக) அத்துடன் போர்வை வெதுவெதுப்பாகவிருந்தது. இரவு இருள் மண்டிக் கிடந்தது; இப்படியான வேலைகளைப் பட்டப் பகலில் பளிச்சிடும் வெளிச்சத்தில்தானே செய்ய வேண்டும். நீ இந்தக் காரியத்திற்கு லாயக்கற்றவள். இது ஒரு கொடுரமான செயல். ஆனால் என்னால் சமாளிக்க முடியும்.

சோலான்ஸ்: கிளேயர்

கிளேயர்: நீ எங்கு தவறினாயோ அங்கு நான் வெற்றியடைவேன்.

சோலான்ஸ்: (ப்ேபினால் தலைமுடிகளை வாரியவாறு) கிளேயர் அவசரப்படாதே உணர்ச்சிவசப்பட்டு.

கிளேயர்: நான் கவனயீனமாக நடக்கிறேன் என்று எதை வைத்துச் சொல்கிறாய்? ஏய் முதலில் உனது கிளிப்புக்களை என்னுடையதுடன் கலக்காதே நீ... சரி சரி உனது குப்பையை என்னுடையதுடன் கலந்து
பணிப்பெண் சிணி வாடையடிக்கட்டும். மிசுயூ நம்மைக் கண்டு பிடிப் பதற்கு எந்தவொரு சிரமமும் அவருக்கில்லாமல் போகும். நாமிரு வரும் வெட்கிச் சாகலாம். (சடுதியாக அமைதியான குரலில்) என்னால் எதுவும் செய்ய முடியும். உனக்குமது தெரியும்.
கறுப்பு/329

________________

சோலான்ஸ்: தூக்க மாத்திரைகள்.

கிளேயர்:நல்லது, நாம் அமைதியாக உரையாடுவோம். நான் வலிமை பொருந்தியவள். நீ என்னை அடக்கியாள நினைக்கிறாய்.

சோலான்ஸ்: ஆனால் கிளேயர்.

கிளேயர்: (அமைதியாக) என்ன சொன்னாய், நான் என்ன பேசுகின்றேன் என்று எனக்குத் தெரியும். நான் எனது முடிவை எடுத்துவிட்டேன். அதற்கு ஆயத்தமாகவும் இருக்கின்றேன். என்னால் இப்படியே இருந்துவிட முடியாது. ஒரு சிலந்தியைப் போல குடை வைக்கும் பெட்டியைப் போல, கடவுளைத் தொலைத்த கன்னியாஸ்திரியைப் போல, ஒரு குடும்பமற்றவளாய் இனியும் என்னால் இருக்க முடியாது. ஒரு அடுப்புடனும் அடுத்தாருடனும் இனியும் காலந்தள்ள முடியாது. உனக்கும் கூட ஒன்றுக்கும் உதவாத மந்தமான, நாற்றமெடுக்கும் பெண்ணாக அல்லவா போய்விட்டேன்.

சோலான்ஸ்: கிளேயர் நாமிருவருமே உணர்ச்சிவசப்பட்டுள்ளோம். (பரபரப்பாக) மதாம் எங்கே போய்விட்டார்? என்னாலும் இதனை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. நாமிருவரும் ஒரே மாதிரி இருப்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. எனது கைகள் எனது கறுப்புநிற நீண்ட காலுறைகள், எனது தலைமுடி எல்லாம் எனக்கு வெறுப்பூட்டுகின்றன. நான் வெறுப்புணர்வுடன் எதையும் பார்க்கவில்லை எனது சிறிய சகோதரியே. நீ வீடு முழுவதும் இரவில் உலாவித் திரிவது உனது மனப்பாரத்தைக் குறைக்க உதவுமென்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

கிளேயர்: (எரிச்சலுடன்) நிறுத்து அந்தக் கதையை

சோலான்ஸ்: நானுனக்கு உதவத்தான் விரும்புகிறேன். உனக்கு ஆறுதலாயிருக்க விரும்புகிறேன். ஆனால் நான் உன்னை வெறுப்பது எனக்குத் தெரியும். உன்னைக் காணவே எனக்குப் பிடிக்காது. ஏனெனில் நீயுமென்னை வெறுக்கிறாய். இரண்டு அடிமைகள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அது நேசமல்ல.

கிளேயர்: தொடர்ந்து வரும் கெட்ட நாற்றம் போல் கண்ணாடியில் விழுந்து தெறிக்கும் எனது விம்பம் எனக்கு வெறுப்பூட்டுகிறது. நீதான் எனது கெட்ட நாற்றம். நான் தயார், நான் கொத்தும் நேரம் வந்துவிட்டது. எனது கிரீடத்தைப் பெறுவேன்; வீடு முழுவதும் உலாவி வருவேன். -

சோலான்ஸ்: மதாமைக் கொல்லுவதற்கு அது போதுமான காரணமல்ல.
கிளேயர்: உண்மையாக? தயவுசெய்து ஏனென்று கூறுவாயா? வேறெந்தக் காரணங்கள்? எங்கு எப்போது இதைவிட நல்ல காரணங்களைப் பெறப்போகின்றோம்? காம வேட்கையுடன் எங்கள் அறைகளினுள்
330/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
புகுந்து வல்லுறவு கொள்ள நினைக்கும் பால்காரன் போதுமான காரணமில்லை? இன்றிரவு மதாம் இந்த வெட்கக் கேட்டிற்குச் சாட்சியாவாள். சிரிப்பு பொங்கிவர, கண்களில் கண்ணிர் வரும்வரை சிரித்துக் கொண்டே, அவளது பெருமூச்சுகளுடன். நான் எனது கிரீடத்தை அடைந்தே தீருவேன். நீ செய்யத் தவறிய நஞ்சூட்டலைச் செய்பவளாக நானிருப்பேன். உன் மீது ஆதிக்கம் செலுத்தும் எனது நேரம் வந்துவிட்டது!

சோலான்ஸ்: நான் என்றுமே...

கிளேயர்: துவாயை எடு ஆடைகளைத் தொங்கவிடும் கொழுவியை எடு! வெங்காயத்தைத் தோலுரி, கரட் தோலைச் சீவு: பளிங்குத் தரையைத் துடை, இவையெல்லாம் இனிமேல் இல்லை. இல்லை. . மறந்து விட்டேன். தண்ணிர்க் குழாயை மூடிவிடு. இனிமேல் இவைகளில்லை. (பூரிப்புடன்) நான்தான் இனிக் கட்டளையிடுவேன்.

சோலான்ஸ்:எனது குழந்தைத்தனமான குட்டித் தங்கையே

கிளேயர்: நீ எனக்கு உதவ வேண்டும்.

சோலான்ஸ்:எப்படி நடந்து கொள்ள வேண்டுமென உனக்குத் தெரியாது. நிலைமை தீவிரமாகி விட்டது. அத்துடன் இலகுவாகவுமிருக்கிறது.

கிளேயர்: (பெருமிதச் சிரிப்புடன்) பிளசெட்வலி என்னும் இடத்தில் ஹோலி குரேஸ் எனும் பெயர் கொண்ட கன்னியாஸ்திரி இருபத்தி யேழு அரேபியர்களை நஞ்சு வைத்துக் கொன்றதாக வாசித்திருக் கிறோமல்லவா? கால்களில் பாத அணிகளின்றி கால் விறைக்க நடக்குமந்த கன்னியாஸ்திரி இந்தக் கொலைகளைச் செய்யத் தகுந்த காரணங்கள் இருந்தனவாம். இளவரசி அல்பார்னெஸின் கதை நமக்குத் தெரியும் தனது கணவனையும் காதலனையும் கொன்றவள். நஞ்சை ஊற்றுவதற்கு முதல் போத்தலைத் திறந்து கோப்பைக்கு மீதாகப் பெரிய சிலுவை அடையாளம் போட்டார்களாம். பிரேதங்களின் பக்கத்தில் அவள் நின்றபோது அவள் கண்டதெல்லாம் மரணத்தைத்தான். சிறிது தூரத்தில் தனது உருவம் காற்றினில் கலந்து விடுவதுபோல் கண நேரக்காட்சியொன்றைக் கண்டாளாம். உலகின் எல்லாத் துன்பங் களையும் தானே சுமப்பதாக நினைத்தாளாம். மார்க்குய்ஸ் து வெனொஸோ பற்றிய புத்தகத்தில் தனது குழந்தைகளைக் கொன்றாளே அவளேதான். என்ன சொல்லப்படுகிறதென்றால் அவள் கட்டிலை அணுகியபோது அவளது இறந்த காதலனின் ஆவி அவள்
கரங்களைப் பலப்படுத்தியதாம்.

சோலான்ஸ்: என் குழந்தைச் சகோதரியே எனது தேவதையே! sy கிளேயர்: எனது கரங்கள் பலம் பொருந்திய பால்காரனது ளால் வலிமை பெறும். எனது இடது கரத்தால் நான் அவனினிடரியை
அழுத்துவேன். அவன் வலியை உணர மாட்டான். நீ எனக்கு
கறுப்பு/331________________

உதவுவாய். சோலான்ஸ் தொலை தூரத்திற்கு, நாம் தொலை தூரத்திற்குப் போக வேண்டுமேயானால் நான் பேய்களின் தீவிற்குப் போக வேண்டி வந்தால் நீயும் என்னுடன் வருவாய். நீயும் அந்தக் கப்பலில் ஏறுவாய். மிசுயுவிற்காக திட்டமிடப்பட்ட தப்பிக்கும் மார்க்கம் எனக்குப் பயன்படும். நானும் நீயும் என்றும் பிரியாத ஜோடியாக இருப்போம். சோலான்ஸ், நாங்கள் குற்றமும் புனிதமும் சேர்ந்த இணைகளாக இருப்போம். நாம் இதிலிருந்து விடுபடுவோம்.
சோலான்ஸ் சத்தியமாகச் சொல்கிறேன். (கிளேயர் மதாமின் கட்டில்
மீது விழுகிறாள்)

சோலான்ஸ்: அமைதியாயிரு, நீ இப்போது நித்திரை கொள்ளப் போகிறாய். நானுன்னை மேல் மாடத்திற்குத் தூக்கிச் செல்வேன்.

கிளேயர்: என்னைத் தொந்தரவு செய்யாதே. விளக்குகளை அணைத்து விடு; தயவுசெய்து விளக்குகளை அணைத்துவிடு. (சோலான்ஸ் விளக்குகளை அணைக்கிறாள்)

சோலான்ஸ்: அமைதி, அமைதி கொள் எனது சின்னச் சகோதரியே. (சோலான்ஸ் முழந்தாளிட்டு கிளேயரின் காலணிகளைக் கழற்றி அவள் கால்களை முத்தமிடுகிறாள்) அமைதியாயிரு என் செல்லமே. (அவள் கிளேயரைக் கைகளால் வருடுகிறாள்) உனது கால்களை என் தோள் மீது போட்டுக் கொள். கண்களை மூடிக் கொள்.

கிளேயர்: (பெருமூச்சுடன்) நான் என்னை நினைத்து வெட்கப்படுகிறேன் சோலான்ஸ்.

சோலான்ஸ்: (மிக மென்மையாக) பேசாமலிரு, காரியங்களை என்னிடம் விட்டுவிடு. நீ நித்திரையாகினால் நானுன்னை கட்டிலுக் கிட்டுச் செல்கிறேன். உன்னை மேல் மாடத்தறைக்குத் தூக்கிச் செல்வேன். உன் உடைகளைக் களைந்து உனது தொட்டிலில் தூங்க வைக்கிறேன். கவலையின்றி நித்திரைக்குப் போ நான் இங்கு தானிருப்பேன்.

கிளேயர்: நான் வெட்கித் தலை குனிகிறேன்

சோலான்ஸ். சோலான்ஸ்: உஷ் உனக்கு நானொரு கதை சொல்கிறேன், கேள்.
கிளேயர்: சோலான்ஸ்... சோலான்ஸ்: என் தேவதையே?

கிளேயர்: சோலான்ஸ் நான் சொல்வதைக் கேள். சோலான்ஸ்: தூங்கிவிடு (நீண்ட மெளனம்)

கிளேயர்: உனது தலைமுடி என்ன அழகாயிருக்கிறது. அவளதோ...

சோலான்ஸ்: அவளைப் பற்றி இனிமேல் பேசாதே.
கிளேயர்: அவளது பொய்யானது (நீண்ட மெளனம்) உனக்கு
332/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
நினைவிருக்கிறதா சோலான்ஸ்! மரத்தினடியில் நாமிருவரும், நம் கால்களில் சூரிய வெளிச்சம் பட்டபடி,சோலான்ஸ்?

சோலான்ஸ்: நான் இங்குதான் இருக்கிறேன். நித்திரை கொள் - நானுனது பெரிய சகோதரி. (அமைதி சிறிது நேரத்தில் கிளேயர் கட்டிலில் இருந்து எழும்புகிறாள்.)

கிளேயர்: சோர்வுறக் கூடாது; விளக்கைப் போடு. இது ஒரு கிடைத்த தற்குரிய தருணம் (சோலான்ஸ் விளக்கைப் போடுகிறாள்.) எழுந்திரு' நாங்கள் ఒణా ! உண்ண வேண்டும். சமையலறையில் என்ன உள்ளது? ம்... நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் நீ எனக்கு ஆலோசனை கூற வேண்டும். பெனோபாயிற்றால்?"

சோலான்ஸ்: நான் நன்றாகக் களைத்துத்தான் விட்டேன். பெனோபா பிற்றால் சரியானதுதான்.

கிளேயர்: பெனோபாயிற்றால் ஏன் முகத்தைச் சுழிக்கிறாய்..? நாம் மகிழ்வுற வேண்டும்; பாட வேண்டும். வா இருவருமாகப் பாடுவோம். மாளிகைகளிலும் தூதரகங்களிலும் பிச்சை கேட்பதுபோல் பாட வேண்டும். (இருவரும் வெடித்துச் சிரிக்கின்றனர்.) அப்படியில்லா விடில் நாமிருவரும் தடுமாறிப் போய்விடுவோம். ஜன்னல்களை மூடிவிடு (சோலான்ஸ் சிரித்தவாறு ஜன்னல்களை மூடுகிறாள்.) கொலை என்பது... அதுபற்றிப் பேசவே கூடாது! -

சோலான்ஸ்: நாம் பாடுவோம். அவளைக் காட்டிற்குத் தூக்கிச் செல்வோம். நிலவின் ஒளியினில் ஊசியிலை மரங்களின் கீழ் அவளைத் துண்டு துண்டாக வெட்டுவோம். பிறகு நாங்கள் பாடு வோம். நமது பூப்பாத்திகளில் பூக்களின் கீழ் அவளைப் புதைத்திடு வோம். இரவினில் அவளின் பெருவிரலுக்குக் குழாயினால் நீர் பாய்ச்சுவோம். (அழைப்பு மணி ஒலிக்கிறது)

கிளேயர்: மதாம்!


சோலான்ஸ்: அவராகத்தான் இருக்க வேண்டும். கட்டிலைச் சீர்படுத்து (கிளேயரின் மணிக்கட்டைப் பிடித்தவாறு) கிளேயர் உன்னால் இதனை நிறைவேற்றிட முடியுமா?

கிளேயர்: எத்தனை நமக்குத் தேவையாகவிருக்கும்?

சோலான்ஸ்: பத்து போதுமானதாகவிருக்கும். அதனை அவளின் தேனில் கலந்துவிடு. உன்னால் முடியுமா?

கிளேயர் (తణg கரத்தினை விடுவித்துக் கொண்டு கட்டிலை நோக்கிச் ೧೮ುಣ್ಣpm. சிறிது நேரம் அதனை உற்றுப் பார்த்துவிட்டு) ஆம், பெட்டி யுடன் என் சட்டைப் பையினுள்தான் இருக்கின்றது. (சோலான்ஸ் வெளியேறுகிறாள். கிளேயர் தொடர்ந்தும் அறையினை ஒழுங்கு
"வாசனையற்ற வெண்ணிறத்துள், மயக்கமருந்தாக உபயோகிக்கப்படுவது.
கறுப்பு/333________________

படுத்துகிறாள். சில வினாடிகள் கழிகின்றன. வினோதமான சிரிப் பொலி மேடையின் பின்புறத்தில் ஒலிக்கிறது. மதாம் குறுமென்மயிர் தோலாடை அணிந்து சிரித்தவாறே சோலான்ஸ் பின்தொடர வருகின்றார்.) மதாம்: வெறுப்பையூட்டும் இளம் சிவப்பு நிற கிளாடியோல் பூக்கள். அத்துடன் மிமோசாப் பூக்களும் எங்கு பார்த்தாலும் நிறைத்து வைத்துள் ளார்கள்; சந்தையில் அதிகாலை வேளையில் மலிவாக வாங்குவதற்கு விடிவதற்கு முன்பே சென்று விடுவார்கள் போலும் (சோலான்ஸ் மேலங்கியைக் கழற்ற உதவுகிறாள்)

சோலான்ஸ்: மதாம் சிறிது அதிகமாகவே குளிரவில்லை?

மதாம்: ஆம் சோலான்ஸ் நான் நன்றாக குளிர்ந்துதான் போனேன். இரவி ரவாக இரு பக்க அறைகளின் நடுவிலான ஒடுங்கிய பாதைகளினூடே தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தேன். விறைத்துப் போன மனிதர் களையும் கல்லென இறுகிய முகங்களையும் கண்டேன். ஆயினும் ஒருகணமேனும் மிசுயுவைக் காண எனக்கு வாய்ப்புக் கிட்டியது. அவரை நோக்கிக் கையசைத்தேன். இப்போதுதான் நீதிபதி ஒருவரின் மனைவியுடன் பேசிவிட்டு வந்தேன். கிளேயர். சோலான்ஸ்: அவள் மதாமின் தேநீரைத் தயார் செய்கிறாள்.

மதாம்: சீக்கிரமாக வந்தால் நல்லதே. மிசுயு தனியாக எதுவுமே இல்லாமல் உணவு சிகரட் கூட இல்லாமலிருக்க தேநீர் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது.

சோலான்ஸ்: மிசுயு அங்கு அதிக நாள் இருக்க மாட்டார். அவர்கள் அவர் குற்றமற்றவர் என்பதைச் சீக்கிரமாக அறிந்து கொள்வார்கள்.

மதாம்: குற்றமற்றவரோ இல்லையோ, நான் அவரைக் கைவிடப் போவதில்லை. இப்படியானதொரு நேரத்தில்தான் நாம் ஒருவரை எவ்வளவு நேசிக்கின்றோமென்பதை நாமே உணர்ந்து கொள்வோம் சோலான்ஸ். நான் அவரைக் குற்றவாளியென்றே நினைக்கவில்லை. அப்படியிருப்பினும் அவருக்குத் துணை போனவளாய் நான் மாறு வேன். பேய்களின் தீவிற்கு அவரைப் பின் தொடர்வேன், சைபீரியாவாக இருந்தாலும் சரி.

சோலான்ஸ்: அதை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. மிக மோசமான குற்றச்சாட்டுகள் கூட நீதி மன்றத்தில் மன்னிக்கப்பட்டதை நான் கண்டுள்ளேன். போர்தோ நகரில் ஒரு வழக்கில்...

மதாம்: வழக்குகளுக்குச் செல்வாயா? நீயா?

சோலான்ஸ்: குற்றச் செய்திகளை நான் வாசிப்பது வழமை. அது
ஒருவனைப் பற்றியது அவன்.

மதாம்: மிசுயுவின் வழக்கை நீ ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. ஆவர் மீது அதி முட்டாள்தனமான திருட்டினைக் காட்டிக் குற்றம்
334/கறுப்பு
சாட்டியுள்ளனர். இதிலிருந்து அவர் வெளிவருவாரென்பது எனக்குத் தெரிந்ததே. நான் சொல்வதென்னவென்றால் சற்றும் பொருத்தமற்ற இந்தக் குற்றச் சாட்டின் மூலம் எவ்வளவு ஆழமாக அவரில் ஈடுபாடு கொண்டுள்ளேன் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்பதைத் தான். இந்த வழக்கே எந்தவித முக்கியத்துவமுமற்றதுதான். அல்லது அது நேர்மாறாய்ப் போயின் சோலான்ஸ் அவரின் சிலுவையைச் சுமப்பது எனக்கு மகிழ்வான காரியமே. எங்கு சென்றாலும் அவரைப் பின் தொடர்வேன். சிறைச்சாலை சிறைச்சாலையாக தேவைப்படின் கால்நடையாகக் கூட குற்றவாளிகளுக்கான கொலனிக்குக் கூடச் செல்வேன்.

சோலான்ஸ்: அவர்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். பெருந் திருடர்களின் மனைவியோ, சகோதரியோ, தாயோ மட்டும்தான் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மதாம்: தண்டனை பெற்ற மனிதன் தொடர்ந்தும் திருடனாக இருக்க முடியாது. அப்படியிருப்பினும் நான் காவலாளிகளை மீறிப் பலாத் காரமாக உள்ளே நுழைவேன். (திடீரென வெறித் தொனியில்) அத்துடன் சோலான்ஸ் நான் எவ்வித பயமுமற்றவளாக இருப்பேன். நான் எனது ஆயுதங்களைப் பயன்படுத்துவேன். என்னை யார் என்று எண்ணி விட்டாய்? -

சோலான்ஸ்: மதாம் இப்படியான சிந்தனைகளை நீங்கள் மனதில் எடுத்துக் கொள்ளக்கூடாது. சிறிது ஓய்வெடுங்கள்.

மதாம்: எனக்குக் களைப்பே இல்லை. நீ என்னை ஓர் அங்கi முற்றவளைப் போல் நடத்துகிறாய். ஏதோ நான் இறப்பதுபோல் அரவணைக்கவும் ஆறுதல் சொல்லவும் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறாய். கடவுளிற்கு நன்றி! இன்னும் எனது அறிவு மழுங்கி விடவில்லை. நான் போராடத் தயரீராகவே இருக்கின்றேன். (சோலான்ஸைப் பார்த்து அவளது உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதை உணர்ந்த ஒரு சிரிப்புடன்) சரி, சரி, முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாதே. (சடுதியான மூர்க்கத்துடன்) சரி, அது உண்மை தான், சில வேளைகளில் உனது பரிவு என்னைக் கோபம் கொள்ள வைக்கிறது. உன் பரிவு என்னை நசுக்குகிறது. என்னைச் செயலற்றுப் போகச் செய்கிறது. இந்தப் பூக்கள் இவை மகிழ்வின் எதிர்மறை யாகத்தான் இருக்கின்றன.

சோலான்ஸ்: மதாம் தங்கள் விருப்பு வெறுப்பை நாம் அறியவில்லை என
நினைத்தால்...

மதாம்: நான் அப்படிக் கருத்துப்படச் சொல்லவில்லை. இங்கே பார்
நான் மிகவும் குழம்பிப் போயுள்ளேன். நான் என்ன நிலையி லிருக்கின்றேனென்று நீயே பார்.
கறுப்பு/335________________

சோலான்ஸ்: மதாம் இன்றைய கணக்குகளைப் பார்க்க விரும்பு கின்றீர்களா?

மதாம்: நீ சரியான நேரத்தைத்தான் தேர்ந்தெடுத்துள்ளாய். உனக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். நான் இப்போது கணக்குப் பார்ப்பேனென்று நீ நினைக்கிறாயா? நாளை அவைகளை எனக்குக் காட்டு.

சோலான்ஸ்: (மென்மயிர் தோல் தொப்பியை எடுத்து வைத்துவிட்டு) தொப்பியின் உள் பக்கத் துணி கிழிந்துள்ளது. செப்பனிட நாளை நான் எடுத்துச் செல்கிறேன்.

மதாம்: நீ விரும்பியபடி செய். ஆயினும் அது தேவையற்றது. நான் எனது உடைகளை இனிக் கவனிக்கப் போவதில்லை. நான் வயது சென்ற பெண்.

சோலான்ஸ்: மீண்டும் கவலைக்குள் மூழ்குகிறீர்களே.

மதாம்: நான் துக்கம் காப்பதைப் பற்றி யோசிக்கிறேன். நான் அப்படிச் செய்தால் நீ ஆச்சரியப்படாதே. நான் எவ்வாறு உலக சுகங்களை அனுபவித்து வாழ்வது?'மிசுயு சிறையிலிருக்கும்போது இந்த வீடு உனக்குத் துக்கம் தோய்ந்ததாகப் பட்டால்...

சோலான்ஸ்: நாம் மதாமை என்றும் கைவிடப் போவதில்லை.

மதாம்: எனக்குத் தெரியும் நீ என்னைப் பிரியப் போவதில்லையென்று. நான் உனக்கு அதிக கவலையைத் தரவில்லைத்தானே?

சோலான்ஸ்: !

மதாம்: உனக்கு ஏதாவது தேவையாயின் அவை கிடைக்கும்படியாக நான் பார்த்துக் கொண்டேன். எனது பழைய உடுப்புக்களே உங்களிரு வருக்கும் இளவரசிகள் போல உடுத்துக் கொள்ளப் போதுமானதாக விருக்கின்றன. (உடுப்பு அலுமாரிக்குச் சென்று தனது உடைகளைப் பார்த்தவாறு) இவைகளால் எனக்கு என்ன பயன்? மோட்டித்தனம்
முடிந்து விட்டது. அத்துடன் அவைகளுக்குத் தேவையான,
அலங்காரமும் போய்விடட்டும். (கிளேயர் தேநீர் கொண்டு வருகிறாள்)
கிளேயர்: தேநீர் தயாராக இருக்கிறது.

மதாம்: நடனங்கள் களியாட்டங்கள் நாடகங்கள் எல்லாவற்றிற்குமே பிரியாவிடை நீ அவைகளைச் சுவீகரித்துக் கொள்வாய்.

கிளேயர்: மதாம் உங்களை நீங்களே இழந்து கொண்டிருக்கின்றீர்கள்.
நீங்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டும். சோலான்ஸ்: தேநீர் ஆயத்தமாக உள்ளது.

மதாம்: அதைக் கீழே வை. நான் படுக்கைக்குச் செ எல்லாம் முடிந்த விட்டது. (தனது சிவத்த வெல்வெட் உடை மீது தனது
ல்லப் போகிறேன்.
336|கறுப்பு
நன்ற நூலகத்திடடம்
ಬೌಲ್ಡಿಹ66 ஒட விடுகின்றாள்.) எனது அழகிய உடைகளில் எல்லா வற்றிலும் மிக அழகானது (அதை எடுத்துதனது கைகளால் தடவியபடி) எனகதாக 'சனல் பிரத்தியேகமாக வடிவமைத்தது. இந்தா இதை நீ வைத்துக் கொள்.(அதை கிளேயரிடம் கொடுத்து மீண்டும் அலுமாரியினுள் தேடுகிறாள்) -

கிளேயர்: எனக்கா?

தாம்: (சோகமாக புன்னகைத்துக் கொண்டு) உனக்கென்றுதானே நான் கூறினேன், இல்லையா? rnಿಕ್ತು: மதாம் மிகவும் கொடையுள்ளம் கொண்டவர் (கிளேயரை
நோக்கி) மதாமிற்கு நன்றி கூறலாமல்லவா. நீ இந்த உடையின் சிறப்பை வியந்து கொள்வாயே.

கிளேயர் இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதனை அணியும் துணிவு எனக்கு வருமென்று எண்ண முடியவில்லை.
மதாம்: Grui நீ இதனை உனது அளவுக்கேற்ப திருத்திக் கொள்ளலாம். உடையின் தரையில் தளர்வாகப் புரண்டு வரும் பகுதியில் தேவையான அளபுெ வெல்வெட் உள்ளது. கைகளை நீளமாக்க அது உதவும். உனக்கு 76. உனக்கு நான் தரப் போவது... உனக்கு என்ன தரலாம்? இந்த (சோலான்ஸிற்கு மிக அழகான மென்மயிர்த் தோலிலான தொப்பியைக் கொடுக்கிறாள்) -

கிளேயர்: மென்மயிர் தோல் தொப்பி!

சோலான்ஸ்: (ஆவல் மிகுதியாக) . மதாம். மதாமின் கருணைக்கு அளவில்லை.
மதாம் இல்லை, 67ಹಅ நன்றி கூறத்தேவையில்லை. மற்றவர்களை மகிழ்விப்பது எவ்வளவு ஆனந்தமானது. சரி, நான் ஆடைகளைக் களுைநது வேறு உடுப்பு உடுத்தப் போகிறேன். (தொலை பேசியை நோக்குகிறாள்) யார் ஒலி வாங்கியயைக் கீழே வைத்தது.

கிளேயர்: மிசுயு (திடீரெனப் பேச்சை நிறுத்துகிறாள்)
மதா, (அதிர்ச்சியடைந்தவளத ) என்ன? மிகயு? (கிளேயர் மெளனமாக நிற்கிறாள்) நீ என்ன சொல்கிறாய்? விபரஞ்சொல்.

சோலான்ஸ்: (மெதுவாக ஏதோ மிசுயு தனக்குத்தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதுபோல்) மிசுயு தொலைபேசியில் அழைத்தபோது... z

மதாம்:.நீ என்ன சொல்கிறாய்? மிசுயு பேசினாரா?

சோலான்ஸ்: உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த விரும்பினோம். மிகுயு பிணையில் வெளியே வந்துள்ளார். உங்களுக்காக அவர் ஹொங்கொங் மதுபான விடுதியில் காத்திருக்கிறார்.
கறுப்பு/337________________

மதாம்: (எழுந்தவாறு) நீ எதுவுமே சொல்லாதிருந்திருக்கிறாய். போய் ஒரு வாடகைக்கார் கொண்டுவா சோலான்ஸ், விரைவாக கெதியாக ஒரு வாடகைக்கார். கெதியாக ஒடு. (சோலான்ஸை அறைக்கு வெளியே தள்ளி விடுகிறாள்) எனது மென்மயிர் தோலாடை கெதியாக - உங்களிருவருக்கும் பைத்தியம் பிடித்துள்ளது - என்னைப் பேசவிட்டு ஒன்றும் சொல்லாதிருந்திருந்கிறீர்கள். உனக்கு உண்மையிலேயே பைத்தியம்தான். எனக்கும் பைத்தியம் பிடிக்கிறது. (தனது மென் மயிர் தோலாடையை அணிந்துகொண்டு) எப்போது பேசினார்?

கிளேயர்: (மிக அடங்கிய குரலில்) நீங்கள் வருவதற்கு ஐந்து நிமிடங் களுக்கு முன்னர்.

மதாம்: நீ எனக்கு முன்னமேயே சொல்லியிருக்க வேண்டும். இது வேறு ஆறிய தேநீர். சோலான்ஸ் வரும்வரை என்னால் பொறுத்திருக்க முடியாது. . அவர் என்ன சொன்னார்? கிளேயர்: நானுங்களுக்கு முன்பே கூறியதுதான். ஆனால் அவர் மிகுந்த நிதானமாகவே பேசினார்.

மதாம்: அவர், அவர் எப்போதுமே அப்படித்தான். மரண தண்டனை கிடைத்தாலும் அதுபற்றி அலட்டிக் கொள்ள மாட்டார். அவரொரு அரிதான பிறவி. வேறென்ன சொன்னார்?

கிளேயர்: வேறொன்றுமில்லை. நீதிபதி அவரை விடுதலை செய்ததாகச் சொன்னார்.

மதாம்: பொலீஸ் தலைமைக்காரியாலயத்திலிருந்து நள்ளிரவில் யாரால் வெளி வரமுடியும்? நீதிபதிகள் இரவில் இவ்வளவு நேரங்கழித்தும் வேலை செய்வார்களா?

கிளேயர்: சிலவேளைகளில் இதற்குப் பிந்தியும் வேலை செய்வார்கள். மதாம்: இதற்குப் பிந்தியும்? உனக்கெவ்வாறு தெரியும்?

கிளேயர்: துப்பறியும் பத்திரிகை வாசிப்பேன். இதுபோன்ற விடயங்கள் எனக்குத் தெரியும்.

மதாம்: (ஆச்சரியத்துடன்) அப்படியானால் உனக்குத் தெரியும். நீ விடயம் தெரிந்த பெண்தான் கிளேயர். அவள் துரிதமாக வரவேண்டுமே. (தனது கைக்கடிகாரத்தைப் பார்க்கிறாள்) எனது மேலங்கியினை தையல் காரனிடம் கொடுத்துச் செப்பனிட மறக்க மாட்டாயே?

கிளேயர்: நான் நாளை அதனைச் செய்கிறேன். (நீண்ட அமைதி)

மதாம்: கணக்குகள் எங்கே? இன்றைய கணக்குகள்; அவைகளைத் தா எனக்கு இப்போது பார்க்க நேரமிருக்கிறது.

கிளேயர்: கணக்குகள் சோலான்ஸின் வேலை.
மதாம்: அது உண்மைதான். நானும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன்.
338/கறுப்பு
நனற நூலகததடடம
நாளை அவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். (கிளேயரை உற்றுப் பார்த்து) சிறிது கிட்டே வா! வா இங்கு, என்ன... ஒப்பனை செய்துள்ளாய்! (சிரித்தவாறு) கிளேயர் நீ ஒப்பனை செய்து கொண் டிருக்கிறாய்.

கிளேயர்: (கூச் சமாக) மதாம். மதாம்: ! பொய் சொல்லாதே. உனக்கு ஒப்பனை செய்து கொள்ள எல்லா உரிமையும் உள்ளது. அனுபவி பெண்ணே அனுபவி. அது சரி. யாருக்காக நீ ஒப்பனை செய்து கொண்டாய்? யாராவது ஒருவன் உன்னைக் கவர்ந்து விட்டானா? உண்மையைச் சொல். கிளேயர்: நான் சிறிது பவுடர் போட்டுக் கொண்டேன்.

மதாம்: அது பவுடரல்ல - ரோஜா முகப் பூச்சு ஆனால் அதில் ஒரு பிழையு மில்லை. நீ இன்னும் இளமையானவள். உன்னை கவர்ச்சியாகக் காட்டிக் கொள். கம்பீரமாகக் காட்டிக் கொள். (கிளேயரின் தலையில் ஒரு பூவை வைக்கிறாள்.) இவள் என்னதான் செய்து கொண்டிருக் கிறாள்? நடுநிசியாகிவிட்டது; இவளை இன்னும் காணவில்லை.

கிளேயர்: இந்த நேரத்தில் வாடகைக்கார்கள் கிடைப்பது அரிது. அவள் வாடகைக்கார் நிறுத்தத்திற்குப் போக வேண்டியிருக்கலாம்.

மதாம்: அப்படியா நினைக்கிறாய்? எனக்கு நேரம் பற்றிய நினைவே இல்லாது போய்விட்டது. மகிழ்ச்சியால் திணறிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு பிந்தி மிசுயு தொலைபேசியில் அழைத்ததும் அவரின் விடுதலையும்.

கிளேயர்: உட்காருங்கள் மதாம். நான் உங்கள் தேநீரைச் சூடாக்கிக் கொண்டு வருகிறேன். (அவள் போக எத்தனிக்கிறாள்) மதாம்: வீணாகச் சிரமப்படாதே. எனக்குத் தாகமில்லை. இன்றிரவு நிச்சயமாக ஷம்பெய்ன்தான் குடிப்போம்: வீட்டிற்கு வரமாட்டோ மென நீ நிச்சயம் நம்பலாம். கிளேயர்: நிச்சயமாக சிறிதளவு தேநீர்...

மதாம்: (சிரித்தவாறே) இப்போதே பரபரப்பாக உள்ளது. நீயும் சோலான்சும் எங்களுக்காகக் காத்திருக்க வேண்டாம். மேலே சென்று உடனடியாகப் படுக்கைக்குப் போங்கள். (அலாரம் மணிக்கூட்டைப்' பார்க்கிறாள்) இந்த அலாரம் மணிக்கூடு - இது இங்கு ஏன் வந்தது? எங்கிருந்து இது வந்தது?

கிளேயர்: (சங்கடமாக) அலாரம் மணிக்கூடு? இது சமையலறை மணிக்கூடு. மதாம்: அப்படியா? நான் இதை எப்போதும் பார்த்ததே இல்லையே... கிளேயர்: (மணிக்கூட்டை எடுத்தவாறு) இது சமையலறையில் உள்ளது. எப்போதும் அங்குதான் இருக்கும்.
கறுப்பு/339________________

மதாம்: (சிரித்தவாறு) குசினியைப் பொறுத்தளவில் நான் ஏறத்தாழ அந்நியமானவள்தான். நீதான் அங்கு இருப்பவள். அது உனது அதிகாரத் திற்குட்பட்ட இடம். நீதான் அங்கு ஆட்சி நடத்துபவள். அது சரி, எதற்காக மணிக்கூட்டை இங்கு கொண்டுவந்தாய்?

கிளேயர்: சோலான்ஸ்தான் இங்கு கொண்டுவந்தாள். துப்பரவு செய்யும்போது மணி பார்ப்பதற்கு இதுதான் அவளுக்கு நம்பிக்கை யானது. பெரிய மணிக்கூட்டை அவள் அவ்வளவாக நம்புவதில்லை.

மதாம்: விநோதமாயிருக்கிறது. (கிளேயர் மணிக்கூட்டை எடுத்துச் செல்கிறாள்) அவள் வேண்டுமென்றே நேரம் கடத்துகிறாள். ஒவ்வொரு வீதி மூலையிலும் வாடகைக்கார்கள் கிடைக்கும். (தனது ஒப்பனை மேசை முன் அமர்ந்து கண்ணாடியைப் பார்த்தவாறு தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள்.) நீ எப்படி, முட்டாளே அவரை வரவேற்க அழகாக இருக்கிறாயா? சுருக்கங்கள் ஏதுமில்லையே? நீண்டதொரு பிரிவு... ஓர் ஆயிரம் வருடப் பிரிவு போலிருக்கிறது. பார்ப்போம் . புத்தியாக நடந்து கொள் முட்டாளே. மடைச்சி நானே எனக்குள் பேசிக் கொள்கிறேனே. மகிழ்ச்சி என்னைக் கிறுகிறுக்க வைக்கிறது. சோலான்சை இன்னும் காணவில்லை. எவ்வளவு பூக்கள் இவர்கள் இருவரும் உண்மையிலேயே என்னை ஆராதிக்கிறார்கள் என்ன இது (தனது ஒப்பனை மேசையையும் சிந்தியுள்ள பவுடரையும் பார்த்து) ஒப்பனை மேசையை ஏன் துடைத்து வைக்கவில்லை. இவர்களது வீட்டுப்பராமரிப்பு அதி கூடிய ஆடம்பரமும் அழுக்கும் சேர்ந்த ஒரு விநோதமான கலவை. (கடைசி வரியைக் கூறும்போது கிளேயர் தனது பாத முனைகளில் நடந்து வந்து மதாமின் பின்புறம் நிற்க, மதாம் அவளைக் கண்ணாடியில் அவதானிக்கிறாள்.) ம்... கிளேயர் நானெங்கோ மிதக்கிறேன். எனது மூளை எங்கோ போகிறது. இன்றைய தினம் பரபரப்பு எல்லையற்றுப் போய்விட்டது.

கிளேயர்: மதாம் எங்களின் பணியில் திருப்தியுறுகிறீர்கள்ா? மதாம்: (சிரித்தவாறு) உண்மையிலேயே மகிழ்வுதான். நான் ஏழாவது மோட்சத்தில் இருக்கும் மகிழ்ச்சி. கிளேயர்: நீங்கள் எங்களைக் கேலி செய்யவில்லையே.

மதாம்: (சிரிப்புடன்) ... சிறுபிள்ளை போல் நச்சரிக்காதே. இன்று முழுவதும் நான் பட்ட துன்பத்திற்குச் சிறிது அப்படி இப்படி இருக்க எனக்கு உரிமையிருக்கிறது. அதிருக்க முதலாவதாக பொலீசிற்கு யார் அந்தக் கடிதத்தை அனுப்பியிருப்பார்கள்... உனக்கு யார் இதனை அனுப்பியிருப்பார்களென்று ஏதாவது ஊகமிருக்கிறதா?

கிளேயர்: மதாம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

மதாம்: நான் எதையும் குறிப்பாகக் கூறவில்லை. எனக்குத் தெரிய வேண்டும், அவ்வளவுதான். இன்று முழுவதும் ஒரு குருடியைப் போல
340/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
அலைந்து திரிந்தேன். புதருக்குள் இளம் பெண்ணின் உடலைத் தேடும் பொலீசார் போல அலைந்தேன்.

கிளேயர்: மிசுயுவின் விடுதலையுடன் எல்லாம் முடிந்து விட்டது. மதாம்: இறைவனுக்கு நன்றி. ஆனால் கடித விடயம் இன்னும் முடியவில்லை. இவள் என்னதான் செய்து கொண்டிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது. நீ எனக்கு ஏன் உடனடியாக மிசுயு பேசியதாகக் கூறவில்லை? அவர் மிகக் கோபப்படப் போகிறார்.

கிளேயர்: மதாமிற்கு அதிர்ச்சி தரக் கூடாதென நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம்.

மதாம்: மிகவும் புத்திசாலித்தனம்தான். பூக்களாலும் நேசத்தாலும் மிகச் சாதுரியமாக என்னைக் கொல்லுகிறீர்கள். என்றோ ஒருநாள் ரோசாப் பூக்களின் கீழ் நான் இறந்து கிடப்பேன். கிளேயர் எனது தலை அலங்காரம் பற்றி என்ன நினைக்கிறாய்? உனக்குப் பிடித்துள்ளதா?

கிளேயர்: எனக்கு உங்கள் தலை அலங்காரம் பற்றிப் பேசத் துணிவிருந்தால் நெற்றிக்கு மேலாக வாரிக்கட்டினால் தோற்றத்தி லொரு பொலிவேற்படுமெனச் சொல்வேன்.

மதாம்: உண்மையாகவா?

கிளேயர்: அந்தத் தலையலங்காரம் மதாமின் முகத்தை மென்மையாகக் காட்டும். -

மதாம்: அப்படியா? நீ சொல்வது சரிதான். நீ புத்திசாலிதான் கிளேயர். உனக்கு உண்மையிலேயே நல்ல ரசனை இருக்கிறதென நான் எப்போதும் எண்ணிக் கொள்வேன். நீ இருக்க வேண்டிய இடம்

கிளேயர்: நான் இப்படி இருப்பது பற்றிக் கவலை கொள்ளவில்லை. மதாம்: எனக்குத் தெரியும். ஆனால் நீ மெல்லுணர்வுகள் நிரம்பியவள். மற்றவர்கள் அப்படியல்ல. அவர்களுடன் நீ இருப்பது இலகுவான காரியமல்ல. ஆனால் அதிர்ஸ்டவசமாக நீ உன் சகோதரியுடன் இருக் கிறாய். நீங்களிருவரும் ஒரே குடும்பத்தவர். சிறிது அதிர்ஸ்டமிருந்தால். கிளேயர்: நான் எதையும் விரும்பவில்லை.

மதாம்: எனக்கதில் எந்தச் சந்தேகமுமில்லை. (கூர்ந்து கேட்கிறாள்) என்ன அது (எழுகிறாள்) ஆகா ஒரு கார்; சோலான்ஸ் வருகிறாள். (தன்னை மீண்டும் கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள்) கிளேயர்: குளிரிற்காகவேனும் சிறிது தேநீரருந்த வேண்டும்.

மதாம்: (சிரித்தவாறே) நீ உனது தேநீராலும் பூக்களாலும் ஆலோசனை களாலும் என்னைக் கொல்கிறாய். நீ என் மீது மிகவும் கரிசனை
கறுப்பு/341________________

யெடுக்கிறாய். கிளேயர், இல்லை என்றுமே இன்று போல் நான் துடிப்பாக உணர்ந்ததில்லை. , மிகச்சிறந்த தேநீர். அதிஉயர்ந்த தேநீர்க் கோப்பைதான் என்னவொரு ஆடம்பரம்; என்னவொரு நளினம். (மதாம் வெளியேற முயல கிளேயர் அவளுக்கும் கதவிற்குமிடையில் நிற்கிறாள்)

கிளேயர்: (பார்வையில் கடுமை காட்டி) மதாம் கட்டாயம் தேநீர் பருகியே தீரவேண்டும். இல்லையேல்... (சோலான்ஸ் ஓடிவந்து தனது சகோதரியைத் தள்ளி விடுகிறாள்.)

மதாம்: என்ன?

சோலான்ஸ்: (ஆச்சரியமாக) மதாம் நீங்கள் இன்னும் இங்கேயா
இருக்கிறீர்கள்? நான் உங்களை எல்லா இடமும் தேடினேன். யாரும் இந்த நேரத்தில் வரப்பிரியப்படவில்லை.

மதாம்: வாடகைக்கார் கிடைத்ததா? சோலான்ஸ்: அது இங்கு வந்துள்ளது. கீழ்த்தளத்தில் நிற்கிறது மதாம். மதாம்: சரியாக விளங்கிக் கொண்டீர்களென நினைக்கிறேன். நீங்களிரு வரும் மேல் மாடிக்குச் சென்று தூங்க வேண்டும். நாங்கள் நாளைக் காலை நித்திரை... நித்திரை. தொடர்ந்து நித்திரை கொள்வோம். கிளேயர் என்னுடன் வா. கதவை மூடிக் கொள். ஆனால் தாழ்ப்பாளைப் போடாதே! (கிளேயர் தொடர மதாம் செல்ல சோலான்ஸ் தனித்து விடப்படுகிறாள். கிளேயர் திரும்பி வருகிறாள். இரு சகோதரிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.)

சோலான்ஸ்: (கேலியாக) நல்ல வேலை செய்தாய். அது மட்டு மில்லாமல் என்னை அவமதிக்கவுமல்லவா செய்தாய். கிளேயர்: அது குறித்துப் பேசாதே. நான் அதைச் சொல்லக்கூடாதென மிகவும் முயற்சியெடுத்தேன். ஆனால் என்னால் முடியாமல் போய் விட்டது.

சோலான்ஸ்: மதாம் அதைக் குடித்தாளா? (கிளேயர் தலை அசைவில் இல்லை எனக் கூறுகிறாள்) அதைத்தான் எதிர்பார்க்கவும் வேண்டி யிருந்தது.

கிளேயர்: எனது இடத்தில் உன்னை வைத்துப் பார்க்க நினைக்கிறேன். (ஒரு நிமிடம் அசைவின்றி நின்று விட்டுச் சமையலறையை நோக்கி நடக்கிறாள்.) சோலான்ஸ்: எங்கு போகிறாய்? கிளேயர்: (திரும்பிப் பார்க்காது சலிப்பான குரலில்) நித்திரைக்கு. (அவள் வெளியேறுகிறாள்)
342/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்

சோலான்ஸ்: கிளேயர் (அமைதி) கிளேயர் (கதவினருகில் சென்று அவளைக் கூப்பிடுகிறாள்) கிளேயர் நான் உன்னைக் கூப்பிடுவது கேட்கவில்லையா?
கிளேயர்: (மேடைக்கு வெளியே) அதற்கிப்போது என்ன? சோலான்ஸ்: (வலது பக்கக் கதவை நோக்கியவாறு) இங்கே வா. உன் காதில் விழுகிறதா, வா இங்கு. (கிளேயர் இடுப்பிலுள்ள "எப்ரனை களைந்தவாறு வருகிறாள்) கிளேயர்: (மிகச் சலிப்பாக) உனக்கு என்ன தெரியவேண்டும்? இது எனது குற்றமா? தேநீர் ஆயத்தமாகத்தான் இருந்தது. நான் மாத்திரைகளை அதனுள் போட்டதும் உண்மை. ஆனால் அவள் குடிக்கவில்லையே.

சோலான்ஸ்: நாங்கள் இங்கு குந்தியிருந்து கொண்டு நடுங்கிக் கொண்டிருக்க வேண்டுமென நீ நினைக்கிறாயா? (தனது சகோதரியைக் கடுமையாகப் பார்க்கிறாள்) அவர்களிருவரும் நாளை திரும்பி வருவார்கள். மது போதையுடன் ஏறத்தாழ மூர்க்கமாகவும் வெற்றி வீரர்கள் போலும். கடிதம் எங்கிருந்து வந்ததென்பதை அவர்கள் ஏற்கனவே அறிந்து விட்டிருப்பார்கள். அவர்கள் - நான் அவர்களை வெறுக்கிறேன் - (கிளேயர் தோள்களைக் குலுக்கிக் கொள்கிறாள்) நானவளை மனதார வெறுக்கிறேன். அவளைக் கண்டாலே வெறுப்பு எல்லை மீறி விடுகிறது. நீ என்னவென்றால் ஒர் உணர்வுமில்லாது அங்கு வெறுமனே நிற்கிறாய். அவளின் கண்கள் மினுங்கியதை நீ பார்க்கவில்லையா என்னவொரு அருவருப்பான சந்தோசம் அவளுக்கு. எங்களின் தோல்வியில், வெட்கத்தில் அவளது மகிழ்வு திளைக்கிறது. அவளின் மாமிசத்தின் இளஞ்சிவப்பு நிறம் எங்கள் வெட்கத்தின் நிறம். அவளின் உடை (சிவப்பு வெல்வெட் உடையைக் காலால் உதைக்கிறாள்) இது எங்கள் வெடிகத்தின் நிறம். அதை அவள் திரும்ப எடுத்துக் கொண்டாள். நீ... நீ ஒன்றுமேயில்லாமல் அங்கு நிற்கிறாய். நீ அலறவில்லை. நீ என்ன இறந்தா போய்விட்டாய்?

கிளேயர்: என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? எங்களிடமிருந்து அவள் தப்பி விட்டாள். நீ வெகு சீக்கிரமாகவே திரும்பி வந்து விட்டாய். சோலான்ஸ்: அவள் தப்பிவிட்டாள்; நீ ஒன்றுமே செய்யாது நின்று கொண்டிருக்கிறாய்

கிளேயர்: என்னதான் செய்ய வேண்டுமென நீ எதிர்பார்க்கிறாய்? கத்திக் குழறச் சொல்கிறாயா? (சோலான்சின் முகத்தெதிரே சென்று உரத்துக் கத்துகிறாள்

சோலான்ஸ் அசைவற்று நிற்கிறாள்) மூர்க்கமான காட்சியொன்றை அரங்கேற்ற வேண்டுமா? உனக்கு அதுதானே வேண்டும். இரவு முழுவதும் நமக்கு நேரமிருக்கிறது. பதில் சொல் - சொல்லு - வேண்டுமா?

கறுப்பு/343
________________

சோலான்ஸ்: (அமைதியாக) மறுபடியும் தொடங்குவோம்.

கிளேயர்: ஏன் அவசரப்படுகிறாய்? நாம் தேவையான அளவு நேரம் எடுத்துக் கொள்வோம்; சரியா? (தனது ஏப்பிரனை அவிழ்க்கிறாள்)

சோலான்ஸ்: ஏப்பிரனை அவிழ்க்காதே. இது உனது முறை

கிளேயர்: இல்லை. அப்படியல்ல.

சோலான்ஸ்: இந்த முறை எனது முறை நான்தான் மதாம்.

கிளேயர்: இந்தா ஏப்பிரனைப் பிடி.

சோலான்ஸ்: ஆனால் கிளேயர்.

கிளேயர்: (சாதாரணமாக) எனக்கு அது பழக்கப்பட்டு விட்டது. இந்தா (பவித்திரமாக ஏப்பிரனைக் கையளிக்கிறாள்) நான் அளவுக்கதிகமாக முகப்பூச்சை பாவித்து விட்டேனா?

சோலான்ஸ்: ரோஜா நிறம் மட்டும் போடவில்லை. முழுமையாக ஒப்பனை செய்து கொண்டுள்ளாய்.

கிளேயர்: அதைத்தான் அவளும் சொன்னாள்.

சோலான்ஸ்: எல்லாம் முடிந்து விட்டது. (ஏப்பிரனை எடுக்கின்றாள்.) கட்டாயம் கட்டியே தீர வேண்டிய நிலை. எதுவாயினும் நானொரு நல்ல பணிப் பெண்ணாக இருக்க விரும்புகிறேன். (நாடாவை எடுத்துப் பின்புறமாகக் கட்டிக் கொள்கிறாள்) விளக்கை அணைத்துவிடு.

கிளேயர்: (துணுக்குற்று) நீ ... நாங்கள் இருட்டில் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா?

சோலான்ஸ்: நான் சொல்லியபடி செய். (விளக்கை அணைக்கிறாள். அறை இருட்டாகிறது. சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அசையாது தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.)

கிளேயர்: .. சிறிது பொறுப்போமே - சோலான்ஸ் தற்செயலாக மதாம் திரும்பி வந்தால் - சிலவேளைகளில் எதையாவது மறந்து விட்டிருக் கலாம். அவசரத்தில் கைப்பை அல்லது பணம் அல்லது.

சோலான்ஸ்: ஒருபோதுமில்லை, குழந்தைத்தனமாகப் பேசாதே. கிளேயர்: (முணுமுணுப்பாக) வலு அவசரமாக வெளியேறினாள். இது எங்களைப் பிடிப்பதற்கான ஒரு பொறியாகக் கூட இருக்கலாம். மதாம் எதைப் பற்றியோ சந்தேகப்படுகிறாள்.

சோலான்ஸ்: (தோளைக் குலுக்கியவாறு) உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லேன் எதுவாகவிருக்கும்?

கிளேயர்: அவள் எங்களைச் சந்தேகிக்கிறாள் - நாங்கள் கண்காணிக்கப் படுகிறோம்.

சோலான்ஸ்: அதற்கென்ன அதையெல்லாம் கடந்து வந்துவிட்டோம்.
344/கறுப்பு
நன்ற நூலகத்திடடம்

கிளேயர்: (சிறிது நேரத்தைக் கடத்துவதற்காக) நீ நான் சொல்வதை புரிந்து கொள்கிறாயில்லை சோலான்ஸ். உண்மையாகவே சொல் கிறேன் ;என் உணர்வுகள் சொல்கின்றன. உண்மையாகவே நான் உணர்கிறேன். காது கொடுத்துக் கேள். எங்களை யாரோ வேவு பார்க்கிறார்கள். திடமாக நம்புகிறேன். திடீரென மதாம் வரத்தான் போகிறாள். அவள் தனது கையுறைகளை அல்லது கைக்குட்டையை மறந்து விட்டிருக்கலாம். (சோலான்ஸ் தோள்களைக் குலுக்குகிறாள்). அல்லது அவளது கையளவு ஒப்பனைப் பெட்டியை - கடவுளுக்குத்தான் தெரியும் எதுவாகவுமிருக்கலாம் - அல்லது இந்த அறையில் ஏதாவது எங்கள் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் கருவிகளை மறைத்து வைத்திருக்கலாம். நினைவிருக்கிறதா தாழ்ப்பாளைப் போட வேண்டாமென்று கூறியது.

சோலான்ஸ்: உனக்குப் பைத்தியம் முற்றி விட்டது. -

கிளேயர்: எனக்குப் பைத்தியமில்லை. சிறிது பொறு. தயவுசெய்து பொறுமையாக இரு. நான் சொல்வதின் முக்கியத்துவத்தை நீ விளங்கிக் கொள்கிறாயில்லை. தற்செயலாக அவள் வந்தால்...

சோலான்ஸ்: அவளுக்குத்தான் தீங்காகவிருக்கும் கிளேயர்: நீ வேகமாக முதிர்ச்சியடைகிறாய் சோலான்ஸ். எல்லா வற்றிற்கும் உன்னிடம் விடை இருக்கிறது. ஆகக் குறைந்தது. சோலான்ஸ்: என்ன? -

கிளேயர்: (கூச்சமாக) ஆகக் குறைந்தது. நாமொரு செபமாவது சொல்வோமா?
சோலான்ஸ்: கடவுளை இதனுள் கொண்டு வரத் துணிகிறாயா? கிளேயர்: பரிசுத்த... 4.

சோலான்ஸ்:கடவுளின் தாயை இந்த நிகழ்வினுள் கொண்டு வருகிறாயா? நான் நினைத்ததை விடத்துணிவு உனக்கு அதிகம்தான். உனக்கு வெட்கமென்பதே இல்லை.

கிளேயர்: மெதுவாகப் பேசு சோலான்ஸ். சுவர்கள் அவ்வளவு தடிப் பானவையல்ல. -

சோலான்ஸ்: (சிறிது தொனியைக் குறைத்து) உனக்குப் பைத்தியம் பிடிக்கிறது கிளேயர். கடவுள்தான் நமது பேச்சுக்களைக் கேட்கிறார். அவருக்காகத்தான் கடைசிக் காட்சியை நடத்த வேண்டுமென்பதும் நமக்குத் தெரிந்ததே. அவருக்கு முன்கூட்டியே நாம் சொல்லி விடக்கூடாது. நாங்கள் இறுதிவரை நாடகத்தை நடத்தியே தீருவோம்.

கிளேயர்: உரக்கப் பேசாதே.


சோலான்ஸ்: சுவர்கள் அவரின் காதுகள்.
கறுப்பு/345________________

நன்றி நூலகத்திட்டம்

கிளேயர்: அப்படியாயின் நான் வெள்ளை உடையைப் போட்டுக் கிளேயர்: சவக்குழி கிண்டுபவன், குப்பை அள்ளுவோர், பொலிசார் கொள்கிறேன். போல வேலைக்காரரும் தேவையானவர்கள்தான். ஆயினும் ஓர் அழுகி

சோலான்ஸ்: உனக்கு அது விருப்பமாயின் அப்படியே செய். இதனால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. கெதியாக உடுத்திக் கொள். நமது நிகழ்வின் ஆரம்ப ஆயத்தங்களை விட்டுவிட்டு தொடங்கு வோம். காலப்போக்கில் திருப்பங்களும் காட்சி மாற்றங்களும் நமக்குத் தேவையற்றுப் போய்விட்டது. பொய்களும் கூட. எடுத்த எடுப்பி லேயே நாம் விரும்பும் மாற்றத்திற்குப் போய்விடுவோம். கெதியாக என்னால் இனியும் நிந்தைகளையும் வெட்கத்தினையும் தாங்கிக் கொள்ள முடியாது. உலகம் நம்மைப் பார்த்தும் கேட்டும் தோள்களைக் குலுக்கிக் கொண்டும் எனக்குப் பைத்தியம் என்றும் பொறாமை என்றும் சொன்னாலும் அதைப்பற்றி நான் கணக்கெடுக்கப் போவதில்லை. மகிழ்வால் எனது உடல் நடுங்குகின்றது. மகிழ்வு என்னுள் பரவி நாடி நரம்பெங்கும் ஒடுகிறது. கிளேயர் சந்தோசத்தில் நான் அரற்றப்போகிறேன். - (இந்த உரையினூடு கிளேயர் வெள்ளை உடையை எடுத்து ஒரு தடுப்புக்குப் பின்னால் சென்று அதனைத் தனது பணிப்பெண் உடையான கறுப்பு உடை மேல் அணிந்து கொள்ள கறுப்புடையின் நீண்ட கை, கைகளற்ற வெள்ளையுடையினுடு தெரிகிறது.)

கிளேயர்: (வெள்ளையுடையில் கட்டளையிடும் குரலில்) ஆரம்ப மாகட்டும்.
சோலான்ஸ்: (அழகுணர்வுடன்) நீ அழகாக இருக்கிறாய்.

கிளேயர்: அதைவிடு; ஆரம்ப நிலையை விட்டு விடுவதாக அல்லவா நீ சொன்னாய். இழிவு படுத்துவதை ஆரம்பி.

சோலான்ஸ்: என்னால் அது முடியுமென்று நினைக்கவில்லை. உன் அழகு என்னை மயக்குகிறது.

கிளேயர்: இழிவு, இழிவுபடுத்தலை ஆரம்பி; அதனை கட்டவிழ்த்து விடு. என்னை அது மூழ்கடிக்கட்டும். உனக்குத் தெரியுமல்லவா. எனக்கு வேலைக்காரர்களை அடியோடு பிடிக்காது. அடிமைப் புத்தியுள்ள இழிவான அருவருப்பான சமூகமது. அவர்கள் மனித இனத்தினிலே சேர்த்தியில்லாதவர்கள். நாற்றம் பிடித்தவர்கள். அழுக்கின் ஊற்றுக் கால்களான அவர்கள் எங்கள் அறைகளினுடும் வீட்டின் கதவுகளினூடும் புகுந்து புறப்பட்டு எங்கள் வாய் வழியாக உட்புகுபவர்கள். எங்களையும் அழுக்காக்குபவர்கள். உன்னை நினைக்கவே வாந்தி வருகிறது.

சோலான்ஸ்: விட்டுவிடாதே, தொடரு. (அமைதி - கிளேயர் இருமுகிறாள்) தொடர்ந்து பேசு நான் வரவேண்டிய இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன்; வந்து கொண்டிருக்கிறேன்.
346/கறுப்பு
நாற்றமெடுக்கும் கூட்டமது.

சோலான்ஸ்: இன்னும் கொஞ்சம் நிந்தனையைத் தொடரு.
கிளேயர் உங்களது பயங்கள்விய குற்ற உணர்வு உறைந்த முகமும் சுருங்கிய வளைந்த முழங்கைகளும், நாகரீகத்திற்குப் பொருத்தமற்ற உடைகளும் தேய்ந்து போன உங்கள் உடல்கள் எங்களின் கழிவு உடுப்புகளுக்கு மாத்திரம் பொருத்தமானவை. நீ எமது ரசமிழந்த கண்ணாடி போன்றவள். எமது அருவருக்கத்தக்க மலவாசல். எமது வெட்கக்கேடு. எமது கிழிசல், -

சோலான்ஸ்: தொடரு விட்டுவிடாதே.

கிளேயர்: தயவுசெய்து விரைவாகச் செயல்படு. என்னால் தொடர முடியவில்லை. நீ, கடவுளே என்னால் இதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை. எனது மூளை வெறுமையாகி விட்டது. நிந்தைச் சொற்கள் ஒன்றுமே இனி என்னிடமில்லை. கிளேயர் நீ என்னைக் களைப்படையச் செய்து விட்டாய்.
சோலான்ஸ்: நிறுத்து. நான் அங்கு வந்துவிட்டேன். இப்போது எனது முறை - மதாம் உங்கள் வசைமாரியும், உங்கள் காதல் பிதற்றல்கள், உங்கள் காதலர்கள், உங்கள் பால்காரன்.

கிளேயர்: சோலான்ஸ்

சோலான்ஸ்: பேசாதே காலையில் வரும் உனது பால்காரன், விடி காலையை அறிவிக்கும் தூதுவன், உனது கிளர்வூட்டும் குரல், உனது அழகிய வெண்நிறக் காதலன் எல்லாம் முடிந்து விட்டது. (குதிரைச் சவுக்கொன்றை எடுக்கிறாள்) ! உனது பாத்திரத்தை ஏற்றுக்கொள்.

கிளேயர்: நீ என்ன சொல்கிறாய்? 4.

சோலான்ஸ்: (பரவசமாக) நான் நிகழ்வின் திசையை நிர்ணயிக்கிறேன். முழந்தாளிடு)

கிளேயர்: சோலான்ஸ்!

சோலான்ஸ்: ம். முழந்தாளிடு. (கிளேயர் சிறிது தாமதித்து முழங் காலிடுகிறாள்) ஆகா, ஆகா உன் அழகிய கரங்களை மடக்கிய விதம் எவவளவு அழகாக இருக்கிறது! உனது கண்ணிர் - உனது மலரிதழ் களொத்த கண்ணிர் உன் அழகிய முகத்தில் வடிகின்றது. படு (கிளேயர் அசையாதிருக்கிறாள்) படு. (சவுக்கால் அடிக்கிறாள்) கீழே படு. (கிளேயர் கீழே படுக்கிறாள்) ஆக, நீ என்னை மகிழ்விக்கிறாய். ஊரு, ஊரு ஒரு புழுப்போல் ஊரச்சொல்கிறேன். நீ கப்பலைத் தொடர்ந்து போய் நாடு கடத்தப்பட்ட உனது காதலனுக்கு ஆறுதல் சொல்லப் போகின்றாயா? அது உன்னால் முடியுமா? காவலர்கள் உன்னைப்
கறுப்பு/347________________

பார்த்துப் பல்லிளிப்பார்கள். மக்கள் உன்னை விரல் சுட்டிப் பேசுவார்கள். உனது காதலன் வெட்கித் தலை குனிவான். என்ன நீ வலிமை நிரம்பியவளா? அவனது பிரயாணப் பையைத் தூக்குமளவு பலசாலியா? ம்தாம் சுறுசுறுப்பானவளா? கால்களில் அவ்வளவு சுறுசுறுப்புள்ளதா மதாம்? கவலைப்படாதே நான் உன்னைப் பார்த்துப் பெருமைப்படவில்லை. நான் போகுமிடத்திற்கு அந்தச் சில்லறைத் திருடன் எனக்குத் தேவையே இல்லை. நானே திருடனும் நானே அவனின் இருண்ட நிழலும். நான் தனியாகவே ஒளி நிறைந்த கரைகளில் நடந்து செல்வேன். கிளேயர்: நான் அவரை இழந்து கொண்டிருக்கிறேன்.

சோலான்ஸ்: நானுனக்குப் போதுமாயில்லை?

கிளேயர்: சோலான்ஸ் தயவுசெய்து உதவு. நான் மூழ்கிக் கொண் டிருக்கிறேன்.
சோலான்ஸ்: மூழ்கு; ஆனால் மேற்பரப்புக்கு மீண்டும் எழுந்து வா. எனது ஊழ்வினை என்ன என்பது எனக்குத் தெரியும். நான் எனது இருப்பிடத்தினைக் கண்டு கொண்டேன். தன்னிறைவுடன் அங்கு வாழ்வேன். (மூச்சை இழுத்து விட்டுக் கொள்கிறாள்.) எழுந்து நில்! நானுன்னை மணந்து கொள்கிறேன். ஒர் ஆணின் காலடியில் புழுவைப் போல் ஊர்ந்து கொண்டு. என்ன கேவலம்? முதுகெலும்பற்ற தன்மை. இம்மாபெரும் காரியம் அழகாகத்தான் முடியப் போகிறது. அது சரி நீ எவ்வாறு எழப்போகிறாய்?

கிளேயர்: (மெதுவாகவும் பிரயத்தனத்துடனும் எழுந்து கொண்டு) நீ என்னை வருத்துகிறாய்.

சோலான்ஸ்: (கேலியாக) கவனம், எழும்போது கவனமாக எழுந்திரு.

கிளேயர்: (எழுந்து நின்று) நாங்கள் திசை தெரியாது மூழ்கிக் கொண்டிருக்கிறோம். தூங்கப் போவதுதான் நல்லது. எனது தொண்டை...

சோலான்ஸ்: (அவளை நோக்கி நடந்து சென்று) மதாமின் கழுத்து மிக அழகானது. ஓர் அரசியின் தொண்டை போன்று அழகானது. (கிளேயர் சமையலறைக் கதவை நோக்கிப் பின்னால் நகர்கிறாள்.) ஒரு மணிப்புறாவின் அழகினை ஒத்துள்ளது. ஆமைக் கழுத்துக் கொண்ட புறாவே!

கிளேயர்: (தொடர்ந்தும் பின் நகர்ந்து தனது தொண்டையில் பாது காப்பாகக் கைகளை வைத்துக் கொள்கிறாள்.) நன்றாகவே நேரமாகிவிட்டது.

சோலான்ஸ்: ஆனால் ஆகப்பிந்திவிடவில்லை.

கிளேயர்: மதாம்...
348/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்

சோலான்ஸ்: ...ஷம்பெயின் மிசுயுவுடன் சேர்ந்து அருந்திக் கொண் டிருப்பாள். சாவிலிருந்து தப்பியல்லவா மிசுயு வந்துள்ளார்.

கிளேயர்: அவள் எந்த நிமிடமும் திரும்பி வரலாம். என்னைப் போகவிடு.
சோலான்ஸ்: கவலைப்படுவதை விட்டொழி. அவள் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறாள். கால் பாவாது நடனமாடிக் கொண்டு அதி உயர் திராட்சை மதுவை அருந்தி மதி மயங்கிப் போயிருக்கிறாள்.

கிளேயர்: இதை விட்டு விடுவோம் சோலான்ஸ் - ஆபத்து நம்மை எதிர்நோக்கியுள்ளது.

சோலான்ஸ்: அங்கே போ (சமையலறையைச் சுட்டிக் காட்டுகிறாள்) மெழுகுத் துணிகளை இன்னும் நீ முடிக்கவில்லை.

சோலான்ஸ்: கத்தாதே அதில் எந்தப் பயனுமில்லை. மரணம் பிரசன்னமாகியுள்ளது. அது உன்னை வேட்டையாடத் தொடங்கி விட்டது. கத்தாதே! நான்தான் பூனைக்குட்டிகள் மூழ்கி விடாது பாதுகாப்பது போல் உன்னைப் பாதுகாத்தேன். நான்தான் உன்னைப் பாதுகாப்பதற்காக ஊசிகளால் என் வயிற்றைக் குத்தி கருக்களை வெளியில் எடுத்துக் கழிவு வாய்க்காலினுள் வீசினேன். உன்னை வைத்துக் கொள்வதற்காக உயிருடன் வைத்துக் கொள்வதற்காக

கிளேயர்: (அறையினுள் சுற்றி ஓடியவாறு) சோலான்ஸ், சோலான்ஸ் நீ உன்னை மறந்து பேசுகிறாய்.

சோலான்ஸ்: (அவளை நோக்கி ஒடியவாறு) உன்நிலைக்கு

கிளேயர்: (சிறிது உணர்வடங்கிய குரலில்) யாராவது உதவிக்கு வாருங் களேன்.

சோலான்ஸ்: கத்துவதை நிறுத்து. யாருமே உனது குரலைக் கேட்கப் போவதில்லை. நாமிருவரும் எல்லைகளை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம்.

கிளேயர்: சோலான்ஸ்...

சோலான்ஸ்: எல்லோருமே காதுகளைக் கூர்மையாகத்தான் வைத்துள் ளனர். ஆனால் யாருக்குமே கேட்கப் போவதில்லை.

கிளேயர்: எனக்கு மயக்கம் வருகிறது.

சோலான்ஸ்: அங்கு நீ நன்கு கவனிக்கப்படுவாய்.

கிளேயர்: எனக்கு - நான் - எனக்கு வாந்தி வரும்போல் இருக்கிறது. (ஒங்காளிப்பது போல் சத்தம் செய்கிறாள்)

சோலான்ஸ்: (கிளேயரை அணுகிப் பரிவான குரலில்) உண்மையாகவா? உண்மையாக உனக்கு நல்ல சுகமில்லையா, உண்மையாகவே வாந்தி
வருவதுபோல் இருக்கிறதா?
கறுப்பு/349________________

கிளேயர்: என்க்கு - நான்.

சோலான்ஸ்: இங்கேயில்லை; கிளேயர் சிறிது பொறுத்துக் கொள்
(அவளைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறாள்) இங்கு வேண்டாம் ೧ು என்னில் சாய்ந்து கொள். வா, மெதுவாக நடந்து வா: இங்கு வேண்டாம் வா. நாம் நமது பூக்களலங்கரிக்கும் ராஜ்ஜியத்திற்குச் QతాడుఖGమిత இந்த எல்லாத் துன்பங்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் நல்லதொரு வழி என்னிடம் இருக்கிறது. (அவர்கள் சமையலறைக் கதவினால் வெளியேறுகின்றனர். மேடை சில வினாடிகள் வெறுமையாக இருக்கிறது. திடீரெனப் பலமாக வீசிய காற்று பூட்டப்படாத ஜன்னல்களைத் திறக்கின்றது. வலப்பக்கத்தினூடு சோலான்ஸ் வருகிறாள். தனது கறுப்பு நிற வேலை ஆங்கியை அணிந்திருந்தாள். காட்சி முழுவதும் கற்பனையான பாத்திரங்களுடன் அங்கே இருப்பது போல் பாவனை செய்து சம்பாசிப்பாள்.)


சோலான்ஸ்: மதாம். முடிவாக மதாம் இறந்து விட்டாள். மெழுகு சீலையின் மேல் வளர்த்தப்பட்டுக்கிடக்கிறாள். கழுவுவதற்குப் பயன்படும் கையுறை அணிந்த கைகள் கழுத்தை நெரித்து... agar? மதாம் நீங்கள் தொடர்ந்தும் அமர்ந்திருக்கலாம். மதாம் 66 சோலான்ஸ் என்றே அழைக்கலாம். மெத்தச் சரி. ஏனெனில் 16 செய்த செயலிற்காக. என்னை மதாமும் மிசுயுவுடன் மத்மோசெல் சோலான்ஸ் லுமெசியே என்றுதான் அழைக்க வேண்டும். மதாம் அந்தக் கறுத்த உடையை அணிந்திருக்கக் கூடாது. 66Qug ரசனையற்ற கோமாளித்தனம் (அவள் மதாமின் குரலில் பேசுகிறாள்) ஆக, எனது வேலைக்காரிக்காக துக்க உடை அணியுமளவிற்கு மதிப்பிழந்து போய் விட்டேன். நான் சேமக்காலையிலிருந்து aಿಗಿGಲ್ಲ வந்தபோது சுற்று வட்டாரத்திலுள்ள எல்லா வேலைக்காரரும் 76 முன்னே நானும் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் Guఖఆణfఖత్తాతీఘ్ర சென்றனர். நான் பல வேளைகளில் குடும்பத்தில் ஒருத்தியாய் இருந்துள்ளேன். மரணம் இந்தக் கசப்பான நகைப்பை இறுதி வரை நீட்டிவிடுகிறது... என்ன? ... மதாம் எனக்காக வருந்தத் Gణాఖ யில்லை. நான் உங்களுக்குச் சமமானவள். என் தலை எனறும தாழ்ந்ததில்லை. . மெசியே சில விடயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவருக்குத் தெரியவில்லை. அவர் எங்கள கட்டளைகளுக்குப் பணிந்து நடந்து கொண்டார் என்பதனை (சிரிப்பு). அவரொரு சிறு பையனாகவும் எங்கள் கட்டளைகளைச் சிரமேற் கொண்டு நடப்பவருமானார். நான் பேசமாட்டேன் இன்ஸ்பெக்டர் இந்தக் கொலையுடனான எனது தொடர்பு பற்றி நான் உங்களிடம் பேசப் போவதில்லை. அந்த உடை நீங்கள் அந்த உடைகளை
எங்களுக்குத் தரத் தேவையில்லை. நீங்களே அவைகளை வைத்துக்
கொண்டிருந்திருக்கலாம். என்னிடமும் எனது சகோதரியிடமும்
350|கறுப்பு
நயை று பகததாடடப
எங்களுக்குச் சொந்தமான உடுப்புகள் இருக்கின்றன. அவை களைத்தான் நாங்கள் இரவில் இரகசியமாக அணிந்து கொள்வோம். என்னிடம் சொந்த உடைகளுள்ளன. நான் உனக்குச் சமமானவள். நான் குற்றங்கள் புரிவோர் அணியும் சிவப்புடை அணிவேன். மிசுப்பு கேலியாகச் சிரிக்கின்றீர்? புன்னகைக்கின்றீர்கள்? மிசுயு எனக்கு மூளை கலங்கி விட்டதென நினைக்கின்றீர்கள். சீமாட்டிகளின் நடைமுறை களைக் கைப்பற்றாது ரசனையுடன் வேறு நடைமுறைகளைப் பணிப்பெண்கள் கையாள வேண்டுமென்று மிசுயு எண்ணுகின்றீர்களா? மிகயு என்னை மன்னிக்க வேண்டும். மிசுயு ஓர் இரக்கமே உருவான ஆன்மா. நீங்களென்னுடன் சாதுரியமாகப் போட்டியிட விரும்பு கிறீர்கள். நானோ காடுகளின் உயரங்களை அளந்தவள். மதாம் என்னவென்றால் - எனது தனிமை, ஆம் நான் தனிமையானவள், அத்துடன் மூர்க்கமானவள். நான் சில வேளைகளில் கொடுரமான விடயங்களைச் சொல்வேன்; இருப்பினும் இரக்கம் நிறைந்தவளாகவும் இருக்க என்னால் முடியும். மதாம் உங்களது பயத்தினை வெல்வீர்கள், நிச்சயமாக பயத்தினை ஜெயிப்பீர்கள். அது சரி மதாமின் பூக்கள், நகைகள், உடைகள், வாசனைத் திரவியங்கள், காதலர்கள் இவைகள் பற்றிப் பேசுவோமா? எனக்கு என் சகோதரி இருக்கிறாள். சந்தேக மில்லை, எனக்கு இவைகளைப் பற்றிப் பேசத்துணிவுண்டு. நான்' பேசுவேன் மதாம். என்னால் பேசமுடியாத விடயம் ஒன்றுமேயில்லை. யார் என்னைப் பேச முடியாது தடுத்துவிட முடியும்? யார்? எனது குழந்தையே! என என்னைப் பார்த்துக் கூற யாருக்குத் துணிவிருக்கிறது. நானொரு பணிப் பெண். நல்ல திறமையான பணிப்பெண். எனது நடைமுறைகளெல்லாம் ஒரு பணிப்பெண்ணின் நடைமுறை எவ்வாறாக இருக்க வேண்டுமோ அவ்வாறே இருந்தது. நான்மதாமைப் பார்த்து மகிழ்ச்சியாகச் சிரித்துள்ளேன். குனிந்து,அவளது படுக்கையைச் சீர்ப்படுத்தியுள்ளேன்; குனிந்து பளிங்குத் தரையை உரசிக் கழுவி யுள்ளேன், காய்கறிகளை நறுக்குவதற்காகவும் காதுகளைக் கதவின் மேல் பொருத்துவதற்காகவும் குனிந்துள்ளேன், கண்களைச் சாவித் துவாரத்தின் மீது இறுகப் பதிப்பதற்காகவும். ஆனால் இப்போது நான் நிமிர்ந்து நிற்கின்றேன்; அத்துடன் உறுதியாகவும். கழுத்தை நெரித்த வளாக. மத்மோசெல் சோலான்ஸ் தனது சகோதரியின் கழுத்தை நெரித்தவள். நான் அமைதியாக இருக்க வேண்டும்? மதாம் மென்மை யானவர்; உங்கள் மீது இரக்கம்தான் வருகிறது. மதாமின் வெண்மை யான நிறத்தினை, வெல்வெட் போன்ற தோலின் மென்மையினை அவளது சிறிய காதுகளை, மெலிந்த மணிக்கட்டினை... . நான் ஒரு கறுப்புக் காகம். ... ... என்னிடமும் நீதிபதிகள் உள்ளனர். நான் பொலிசைச் சேர்ந்தவள். கிளேயர்? அவள் உண்மையில் உங்கள் மீது பற்றுக் கொண்டிருந்தாள் மதாம். உனது உடைகள் பற்றி மீண்டும்
கறுப்பு/351________________

பார்ப்போம். அந்த வெள்ளையுடை, அவளை அணிய வேண்டா மென்று தடுத்தேனே அதே வெள்ளையுடை அதுதான். ஒபேராவிற்கு அன்றிரவு நீங்களனிந்த அதே வெள்ளையுடைதான். அன்றிரவுதானே அவள் குசினியுள் அமர்ந்து கரி கூப்பரின் புகைப்படத்தினை ரசித்ததற்காக அவளைக் கேலி செய்தீர்களே..மதாமிற்கு நினை விருக்கும். மதாமிற்கு ஞாபகமிருக்கும். மெலிதான கண்டிப்புடன், ஒரு தாயின் நாசுக்குடன் எங்களிடமிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டீர்கள். அல்லது அவளைக் கிளாரினெற் என்று அழைத் ததையும் மறந்திருக்க மாட்டீர்கள். மிசுயு சிரித்துச் சிரித்து கன்னங்களில் கண்ணிர் வடிந்ததே. ம்... நான் யாரா? எல்லா வேலைக்காரர்களின் ஒட்டு மொத்தமான அசுர ஆத்துமா இல்லை இன்ஸ்பெக்டர், நான் இவர்கள் முன்னிலையில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப் போவ தில்லை. அது எங்களுக்குண்டான விடயம். வேலை செய்பவர்கள் வாழுமிடத்தின் நிழல்களில் எஜமானர்கள் புகமுடியுமாயின் எவ்வளவு நன்றாகவிருக்கும். எனது குழந்தை, இருள், எங்களின் இருள். (ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துப் பதட்டமாகப் புகைக்கிறாள். புகை அவளை இரும வைக்கிறது.) உனக்கோ அன்றேல் வேறு யாருக்குமோ எதுவும் சொல்லப்பட மாட்டாது. நீங்களே கூறிக் கொள்ளுங்கள் சோலான்ஸ் இம்முறை அதனை நடத்தி முடித்து விட்டாளென்று. அவளது உடையைப் பார்த்தீர்களா? சிவப்புடை. அவள் வெளியே போகின்றாள். (ஜன்னலைத் திறந்து மாடத்தில் போய் நிற்கிறாள். இரவைப் பார்த்துக் கொண்டும் அவளது பின்புறம் பார்வையாளர் பக்கமாக இருக்க இவ்வுரையில் வழங்குகின்றாள். மெல்லிய காற்று அறையினுள் புகுந்து திரைச் சீலைகளைச் சலனப்படுத்துகிறது.) வெளியே செல்வது மிகப்பெரிய படிகளைக் கடந்து இறங்குவது, பொலிசார் புடைசூழ, உனது மாடத்தில் நின்று கழுவாய் தேடும் நிழலுருவங்கள் மத்தியில் அவள் செல்வதைப் பார். நேரம் நண்பகல். அவள் ஒன்பது இறாத்தல் கை விளக்கை கையிலேந்திச் செல்கிறாள். தூக்கிலிடுபவன் அவளை மிக அருகாமையில் தொடர்ந்து செல்கின் றான். அவன் அவள் காதுகளில் இனிய மொழிகளை ரகசியக் குரலில் கூறுகின்றான். கிளேயர் தூக்கிலிடுவோன் என் பக்கத்தில் இருக்கின் றான். எனது இடுப்பிலிருந்து உனது கையை எடு. அவன் என்னை முத்தமிட எத்தனிக்கிறான். என்னை விடு . ... (சிரிக்கிறாள்) தூக்கிலிடுபவன் என்னைக் கேலி செய்கிறான். அக்கம்பக்கத்திலுள்ள எல்லா வேலைக்காரர்களும் அணி வகுத்து அவளுடன் செல்வர். கிளேயரின் இறுதிப் பயணத்தில் கலந்து கொண்ட எல்லா வேலைக்காரரும் இதிலும் கலந்து கொள்வர். முடிகளணிந்தும், பூக்கள் சூடியும், தோளில் காற்றில் பறக்கும் துகில் அணிந்தும் பதாதைகள் தாங்கியும் வருவர். மணிகள் சோக ஒலி எழுப்பும் மரண ஊர்வலம் தனது பகட்டாரவாரத்தை மெல்லத் தொடங்கும். எவ்வளவு
352/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்
அழகாகவிருக்கும் இல்லையா? முதலில் பட்லர்கள் தமது சுருக்கு வைத்துத் தைத்த விசேட உடையை அணிந்திருப்பார்கள். ஆனால் பட்டினாலான வேலைப்பாடு இல்லாதிருக்கும். அவர்கள் தங்கள் முடிகளை அணிந்திருப்பார்கள். பின்பு காலாட்கள். அந்த ஏவல் புரிவோர் முழங்கால் நீளத்திற்குக் காற்சட்டையும் வெள்ளை நிறக் காலுறைகளை முழங்கால் வரையும் அணிந்திருப்பர். அவர்கள் தங்கள் முடிகளை அணிந்திருப்பர். அதன் பின்பு எஜமானர்களின் விசேட உதவியாட்கள். அவர்களுடன் பணிப்பெண்கள் எங்கள் நிறங்களை அணிந்து வருவர். அதன் பின்பு மோட்சத்தின் தூதுக்குழு வரும். இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி நான். தூக்கிலிடுவோன் என்னைக் கேலி செய்கிறான். நான் பாராட்டப்படுகிறேன். என் நிறம் வெளிறி நான் இறக்கும் தறுவாயில்... (அறைக்குத் திரும்புகிறாள்) எவ்வளவு பூக்கள்! அவளின் மரணச் சடங்கினை மிகச் சிறப்புற வைத்தன. கிளேயர் என் அருமை கிளேயர் (உடைந்து அழுது கொண்டு கதிரை மேல் தொப்பென விழுகிறாள்) என்ன? (அவள் கதிரையை விட்டு எழுகிறாள்) மதாம் இதில் எவ்வித மாற்றமுமில்லை. நான் பொலிசாரின் கட்டளைக்கு அடிபணிகின்றேன். அவர்களும் போக்கிரிகளான எங்கள் உலகத்தவர்கள்தான். இவ்வுலகை நீங்கள் உங்கள் காலணிகளால் மாத்திரம்தானே தொடுவீர்கள். (பார்வை யாளருக்கு மாத்திரம் தெரியும் வகையில் கிளேர் சமையலறைக் கதவின் நிலையில் முழங்கையை வைத்தவாறு சோலான்சின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நிற்கிறாள்.) இப்போது நான் மத்மோசெல் சோலான்ஸ் லுமெசியே. நான் பெயர் பெற்ற கிரிமினல்; இவைவெயல்லாவற்றையும்விட, மிசுயு நீங்கள் அமைதி குலைய வேண்டாம். நான் ஓர் உயர்குடிப் பெண். சாதாரண பணிப் பெண்ணல்ல. (தோள்களைக் குலுக்கிக் கொள்கிறாள்) இனி யாரும் எதையும் பேச வேண்டாம். மதிப்புக்குரியவனே. . மதாம் நான் உங்களுக்குச் செய்தவற்றையெல்லாம் மறக்க வேண்டாம்... இல்லை... உங்கள் மீது நான் கொண்டிருந்த ஆழமாக அன்பினை மறக்க வேண்டாம். (இந்த வேளையில் கிளேயர் இடது பக்கக் கதவினுாடு உள் நுழைகிறாள். அவள் வெள்ளை நிற உடை அணிந்துள்ளாள்.) நான் எவ்வளவு தடுத்தும் மதாம் வீடு முழுவதும் நடந்து திரிகிறார். தயவுசெய்து உட்காருங்கள்; உட்கார்ந்து நான் கூறுவதைச் செவிமடுங்கள். (கிளேயரைப் பார்த்து) கிளேயர். நம்மைப் பைத்தியம் நன்றாகவே ஆட்டுகின்றது.

கிளேயர்: (மதாமின் குறைகூறும் தொனியில்) நீ அதிகம் பேசுகின்றாய்.
மிக மிக அதிகமாக என் சிறுமியே, மிக அதிகம். ஜன்னலைச் சாத்து. (சோலான்ஸ் ஜன்னலை மூடுகின்றாள்) திரைச் சீலைகளை இழுத்துவிடு. நல்லது கிளேயர்!
கறுப்பு/353________________

சோலான்ஸ்: எல்லோரும் துயில் கொண்டிருக்க நாங்கள் மாத்திரம் இந்தப் பைத்தியக்கார விளையாட்டை விளையாடிக் கொண் டிருக்கிறோம். -

கிளேயர்: (விரலால் பேசாதிருக்கும்படி சைகை காட்டி) கிளேயர் ஒரு கோப்பை தேநீர் தா. சோலான்ஸ்: அது... கிளேயர்: நான் ஒரு கோப்பை தேநீர் வேண்டுமென்றேன். சோலான்ஸ்: நாங்களிருவரும் நன்றாகக் களைத்து விட்டோம். இதை நாங்கள் நிறுத்திவிட வேண்டும். (ஒரு கதிரையில் உட்காருகிறாள்.) கிளேயர் . ஒருக்காலுமில்லை பரிதாபத்திற்குரிய பணிப்பெண்ணே, இதிலிருந்து அவ்வளவு சுலபமாக நீதப்பி விட முடியுமா? காற்றுடன் கூடிச் சதி செய்வதும் இரவைத் துணைக்கழைப்பதும் மிக இலகு வானது. சோலான்ஸ் என்னை உன்னுள் நிலை நிறுத்து. இப்போது கவனமாகக் கேள். -

சோலான்ஸ்: கிளேயர்

கிளேயர்: நான் சொல்கிறபடி செய். நானுனக்கு உதவப் போகிறேன். நான் முடிவுவரை செல்லப் போகிறேன். உனது பங்கு நான் பின் தங்காது பார்த்துக் கொள்வதுதான்; வேறொன்றுமில்லை.

சோலான்ஸ்: நாங்கள் முடிவுவரை வந்து விட்டோமே வேறென்ன வேண்டும் உனக்கு? கிளேயர்: நாங்கள் ஆரம்பத்தில்தான் நிற்கிறோம். சோலான்ஸ்: அவர்கள் வந்துவிடப் போகிறார்கள்...

கிளேயர்: அவர்களை மறந்துவிடு. நாமிருவரும்தான் இந்த உலகில் உள்ளோம். இரு பணிப்பெண்களில் ஒருத்தி தன்னைப் பலியிடும் பலி மேடை தவிர இவ்வுலகில் வேறு ஒன்றுமே இல்லை.

சோலான்ஸ்: ஆனால்...

கிளேயர்: அமைதியாய் இரு. இது உனது கடமை. உன்னுடையது மாத்திரம்தான். நம்மிருவரையும் நீ உயிருடன் வைத்திருக்க வேண்டும். நீ உறுதியுடன் இருக்க வேண்டும். சிறைச்சாலையில் நான் உன்னுடன் இருப்பதை யாரும் அறியக்கூடாது. நான் உன்னுடன் ரகசியமாக, மறைமுகமாக இருப்பேன்

சோலான்ஸ்: என்னால் ஒருக்காலும் முடியுமென. கிளேயர்: தயவுசெய்து உறுதியாய் இரு நிமிர்ந்து நில்.சோலான்ஸ்! கிளேயர் உறுதியாக நிமிர்ந்து நில், உன் பலமனைத்தினையும் திரட்டிக் கொள். சோலான்ஸ்: நீ என்னைத் திணறடிக்கின்றாய்.
354/கறுப்பு
நன்றி நூலகத்திட்டம்

கிளேயர்: ஒரு பணிப்பெண் - அவளின் தகமை நிமிர்ந்து நில். எனக்குரிய மரியாதையைத் தர உனக்குக் கட்டளையிடுகிறேன்.

சோலான்ஸ்: நான் கடுமையாக உழைத்தேன். எனக்குக் களைப்பாக இருக்கிறது.

கிளேயர்: என்னை நீ இவ்வுலகில் நிலை நிறுத்த (தனது சகோதரியைத் தூக்கி நிறுத்த எத்தனித்து) ஒழுங்காக நிமிர்ந்து நில்.

சோலான்ஸ்: தயவுசெய், உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

கிளேயர்: (அதிகாரத்தனத்துடன்) எழுந்து நில், தயவாகக் கேட்கிறேன். எங்கே பணிவாகச் செய் பார்ப்போம். உன் சின்னக் கால்களை உயர்த்து. (அவளை மணிக்கட்டில் பிடித்து கதிரையிலிருந்து தூக்குகிறாள்) கால் களில் நில் - எழுந்திரு - எழுந்திரு.

சோலான்ஸ்: நீ அபாயத்தை உணரவில்லை.

கிளேயர்: ஆனால் சோலான்ஸ் நீ அழிவற்றவள். நான் சொல்வதைத் திருப்பிச் சொல்! - -

சோலான்ஸ்: சொல் ஆனால் சத்தமாகச் சொல்லாதே. கி

ளேயர்: (இயந்திர கதியில்) மதாம் தேநீர் அருந்த வேண்டும். சோலான்ஸ்: (அழுத்தமாக) இல்லை, நான் சொல்ல மாட்டேன்.

கிளேயர்: (அவள் மணிக்கட்டில் பிடித்தவாறு) வேசியே சொல் மதாம் தேநீர் அருந்த வேண்டும்.

சோலான்ஸ்: நான் எவ்வளவோ கஸ்டங்களைச் சந்தித்தவள். கிளேயர்: (இன்னும் அழுத்தமாக) மதாம் தேநீர் அருந்த வேண்டும். சோலான்ஸ்: மதாம் தேநீர் அருந்த வேண்டும்.

கிளேயர்: ஏனெனில் அவள் தூங்க வேண்டும்.

சோலான்ஸ் ஏனெனில் அவள் தங்க வேண்டும்.

கிளேயர்: நான் தூங்காது விழித்திருக்க வேண்டும்.

சோலான்ஸ்: நான் தூங்காது விழித்திருக்க வேண்டும். கிளேயர்: (அவள் மதாமின் கட்டிலில் படுக்கிறாள்) மீண்டும் என்னைக் குழப்பாதே. இன்னொரு தடவை கேட்கிறேன். நான் சொல்வதைச் செவிமடுக்கிறாயா? கட்டளைகளுக்குப் பணிகின்றாயா? (சோலான்ஸ் தலையாட்டி ஆம் என சைகை செய்கிறாள்) திரும்பவும் கேட்கிறேன், எனது தேநீர்.. -

சோலான்ஸ்: (தயக்கமாக) அது...

கிளேயர்: நான் கேட்பது எனது தேநீரை சோலான்ஸ்: ஆனால் மதாம்
கறுப்பு/355________________

நன்றி நூலகத்திட்டம்

கிளேயர்: நல்லது தொடரு.

சோலான்ஸ்: ஆனால் மதாம் தேநீர் ஆறிவிட்டது.

கிளேயர்: பரவாயில்லை. நான் குடிக்கின்றேன். கொண்டு வந்து கொடு. (சோலான்ஸ் தேநீர் கோப்பையைக் கொண்டுவருகிறாள்.) நீ தேநீரை மிக அழகிய, விலை உயர்ந்த ஒரு கோப்பையில் எடுத்து வந்துள்ளாய், (அவள் தேநீரை எடுத்துப் பருக சோலான்ஸ் பார்வையாளர்களைப் பார்த்து இறுதி உரையை நிகழ்த்துகிறாள்.)

சோலான்ஸ்: இசைக்குழு திறம்பட இசைக்கின்றது. பணியாளன் சிவப்பு வெல்வெட் திரையை மேலிழுக்கிறான். அவன் தலை குனிந்து வணங்குகின்றான். மதாம் படிகளில் இறங்கி வருகிறாள். அவளது மென் மயிர் தோலாடை அங்குள்ள செடிகளில் உரசுகிறது. மதாம் காரினுள் ஏறுகிறாள். மிசுயு அவள் காதினுள் காதல் மொழி பேசுகிறான். அவள் சிரிக்கத்தான் விரும்புகிறாள். ஆனால் அவள் இறந்து விட்டாள். அவள் மணியை அடிக்கின்றாள். காவலாளி கொட்டாவி விடுகிறான். அவன் கதவைத் திறக்கின்றான். மதாம் மேல் மாடிக்குப் போகிறாள். தன்து பகுதியினுள் அவள் நுழைகிறாள் - ஆனால் மதாம் இறந்து விட்டாள். அவளது இரு பணிப்பெண்களும் மகிழ்வாக இருக்கின்றார்கள்; அவர்கள் மதாமின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள். எல்லாப் பணிப்பெண்களும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர் - பணிப்பெண்களல்ல. அவர்களின் அவலங்கள் அங்கு பிரசன்னமாயிருந்தன. அவர்களின் பெயரால் பிரசன்னமாகியிருந்தன. பணிப்பெண்கள் இரகசியமாகப் பூசிக் கொள்ளும் மென்மையான வாசனைத் திரவியத்தின் நறுமணம் - மதாமின் காற்றுடலைச் சுற்றி மிதந்து கொண்டு, நாங்கள் அழகான வர்கள், மகிழ்வுடனிருக்கிறோம், மது போதையில், விடுதலை!
திரை
கவிதை
356/கறுப்பு