தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .184 - 233 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)

automated google-ocr in ubuntu with the help of Libre draw


நீலகண்டப் பறவையைத் தேடி. . . .184 - 233

வங்காள மூலம் :

அதீன் பந்த்யோபாத்யாய

தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா புதுடில்லி



அம்மா எங்கே ? அறைக் கதவு திறந்திருந்தது. முற்றத்திலிருந்து கம்புகள் மோதும் 'டக் டக்' சப்தம் கேட்டது. சோனா நிலா வெளிச் சத்தில் அம்மா ஒரு மூலையில் நிற்பதைப் பார்த்துவிட்டான். கிராமத்து இளைஞர்கள் ஏழெட்டுப் பேர் ரஞ்சித் மாமாவிடம் சிலம்பம் கற்றுக் கொண்டார்கள். மாலதி அத்தை, கிரணி அக்கா, நனீ சோபா, ஆபு. அவர்கள் மரக்கத்திகளை வைத்துக்கொண்டு கத்தி வீச்சுப் பழகிக்கொண் டிருந்தார்கள். அவனுடைய அம்மாவும் பெரியம்மா வும் இதைப் பார்த்துக்கொண்டு, வேறு யாரும் அங்கு வந்துவிடாமல் காவல் காத்துக்கொண் டிருந்தார்கள். தடிகள் மோதும் ஒலி, 'சிர், பகேரா, கொட்டி' போன்ற ஒலிகள்.

சிறிய மா மா இந்த வார்த்தைகளை மந்திரம் போல் தாளந் தவறாமல் சொல்லிக்கொண்டு போனார். நடு நடுவே சிறிய மாமா தடியை வேகமாகச் சுழற்றிக்கொண்டு இந்தப் பக்கம் ஓடிவந்தார். சுழற்றும் வேகத்தில், அவர் கையில் தடி இருப்பதே தெரியவில்லை. 'பன் பன்' என்று தடி சுழலும் சப்தம் மட்டும் கேட்டது. அவர் சுற்றிச் சுற்றி, சில சமயம் வலக்காலையும் சில சமயம் இடக்காலையும் தூக்கிக்கொண்டு, தம் இஷ்டப்படி தடியை வீசினார், தாம் பிழைத் திருக்கும் ரகசியத்தை அந்தத் தடிக்குள் கண்டுபிடித்தவர் போல, அந்தத் தடி அவருடைய கையாகவே ஆகிவிட்டது போன்றிருந்தது. தடிக்குப் பின்னால் சிறிய மாமாவின் முகங்கூட இடையிடையே சோனாவின் கண்ணுக்கு மறைந்துவிட்டது.

சோனாவுக்கும் பரபரப்பு ஏற்பட்டது. மங்கலான நிலவொளி, சகடமரத்துக்கு மறுபுறத்தில் வயல்வெளி தனிமையில் படுத்துக் கிடந்தது. பைத்தியக்காரப் பெரியப்பா திண்ணையில் உட்கார்ந்து கொண்டு கையைப் பிசைகிறார் ; நடுநடுவே அவருடைய வழக்க மான வார்த்தையை உச்சரிக்கிறார், உலகத்தை எப்போதும் ஒரு ஆபத்து சூழ்ந்திருப்பது போல. யாரும் யாரையும் நம்பக்கூடாது என்ற பாவனையில், சிறிய மாமா இடையிடையே மாலதி அத்தை யிடம் போகிறார் ; மாலதி அத்தை மரக்கத்தியைக் கீழே கொண்டு வரும்போது செய்த பிசகைத் திருத்துகிறார். திண்ணையில் பெரிய பெரிய தடிகள் வரிசையாகச் சாத்தி வைக்கப்பட் டிருக்கின்றன. எண்ணெய் தடவப்பட்டிருந்ததால் அவை இந்த மங்கிய நிலவிலும் பளபளக்கின்றன. சிலம்பம் விளையாடிக் களைத்துப் போனவர்கள் தடிகளைத் திண்ணைச் சுவர் மேல் சாத்தி வைத்துவிட்டுக் கால் களைப் பரப்பிக்கொண்டு உட்கார்ந்தார்கள். கையில்லாத பனியன் போட்டுக்கொண் டிருக்கும் சிறிய மாமா எல்லாரையும் கவனித்துக் கொண்டார்.

184
சோனா சற்று நேரம் காமிலா மரத்தருகில் நின்றுகொண் டிருந்தான். ஆனால் வெகுநேரம் அங்கேயே இருக்க முடியாமல் அம்மாவிடம் ஓடிவந்து நின்றான்.

தனமாமி சொன்னாள், “'சோனாவா?" 'நேக்குப் பயமாயிருக்கு." இருட்டில் தனியாகப் படுத்திருக்க, அவனுக்குப் பயம். பிறகு அவன் தன் தாயைக் கேட்டான், “இது என்னம்மா?"

"சிலம்பு விளையாட்டு." சோனா விழித்துக்கொண்டு வந்திருப்பதை ரஞ்சித் கவனித்தான். அவன் சோனாவைத் தன் பக்கத்தில் கூப்பிட்டு வைத்துக்கொண்டு கேட்டான், "நீ விளையாட்டு கத்துக்கறியா?"

ஆர்வத்துடன் பதில் வந்தது, "கத்துக்கறேன்!'' ''ஆனாக் கத்துக்கறது ரொம்பக் கஷ்டமாக்கும்! அதுக்கு ரொம்பப் பயிற்சி பண்ண ணும்,”

'பயிற்சி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை சோனாவுக்கு. அவன் தன் தாயைக் கேட்டான், "பயிற்சின்னா என்ன அம்மா?" ரஞ்சித் சொன்னான் : "தன அக்காவுக்கு என்ன தெரியும்? என்னைக் கேளு. சொல்றேன். நீ எதைச் செஞ்சாலும் அதை ஒரே மனசோட செய்யணும், அதுதான் 'பயிற்சி' சரி, என்னோட ஆசையை ஒருத் தருக்கும் சொல்லக்கூடாது."

"நான் சொல்லமாட்டேன்." ''ஆமா, சொல்லக்கூடாது! சொல்லல்லேன்னா, நான் உனக்குக் கத்துத் தரேன்."

"நான் சொல்லவே மாட்டேன், பாருங்களேன்!''

குழந்தைகளின் இம்மாதிரி பேச்சுக்களுக்கு அர்த்தமில்லை என்று ரஞ்சித்துக்குத் தெரியும். இருந்தாலும் அவன் சிறுவர்களையும் சிலம்பப் பயிற்சியில் சேர்த்துக்கொண்டான். அவர்கள் பிறருக்குச் சொல்லலாம், சொல்லாமலும் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு முனைப்பாட்டை உண்டாக்குவதற்காக அவன் அடிக்கடி அவர் களுக்கு உபதேசம் செய்தான். சோனா, லால்ட்டு, பல்ட்டு எல்லாரும் சிலம்பப் பயிற்சியில் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் பயிற்சி செய்வதைவிட அந்தக் குழுவுக்கு உதவியாகக் கூடமாட வேலை செய்வதில்தான் அவர்களுக்கு ரொம்ப உற்சாகம்.

இரவு வெகுநேரமாகிவிட்டால் சில சமயம் சோனா சிலம்பப் பயிற்சியை மறந்து தூங்கிப் போய்விடுவான். காலையில் எழுந்ததும் அவன் தன் தாயிடம் சொல்வான், ''அம்மா, இனிமேல் உன்னோட பேசமாட்டேன்."

"ஏன்?”

185**

"நேத்திக்கு என்னைக் கம்பு விளையாட எழுப்பல்லியே !" ''நீதான் தூங்கிப் போயிட்டியே!" சோனா சில சமயம் தன் மாமாவைப் போல் அல்லது பெரியம் மாவைப் போல் பேச முயற்சி செய்வான். மாமா எவ்வளவு தெளி வாக, கணீரென்ற குரலில் பேசுகிறார்! ரஞ்சித் மாதிரி பேச மாலதிக்கும் ஆசை. பெரிய மாமியும் ரஞ்சித்தும் பேசிக்கொண்டால் அந்தப் பேச்சு மிகவும் இனிமையாக இருக்கும், கேட்பவர்கள் மனத்தில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். அவர்கள் பேச்சில் கரகரப்புத் தன்மை இருக்காது. தன் குரல் கரகரப்பாயிருப்பதாக மாலதிக்குத் தோன்றும். ஆகையால் அவள் முடிந்த வரையில் ரஞ்சித்துடன் மிகவும் குறைவாகத்தான் பேசுவாள். இப்போதெல்லாம் ரஞ்சித்தும் அவசியமான பேச்சைத் தவிர, வேறெதுவும் பேசுவதில்லை. அவன் அவளை அவள் வீட்டுக்குக் கொண்டுபோய் விடும்போது சொல்வான் : ''உங்கிட்டே ஒரு முனைப்பாடே இல்லை, மாலதி ! நீ ஏதோ நினைவில் உன்னை மறந்துவிடுகிறாய். பயிற்சி பெறும்போது இப்படி இருந்தால் உடம்பில் அல்லது தலையில் நன்றாக அடிபட்டு விடும்.''

மாலதி பதில் ஒன்றும் சொல்வதில்லை, அவள் என்ன சொல்வாள் ? அவள் சிலம்பம் பழகுவது அவனுக்கு அருகில் இருப்பதற்காகத்தான். அவன் அவளுடைய மனிதன். அவன் வந்த பிறகு அவளுக்கு என்ன பயம்? ஆகையால் அவன் என்ன சொன்னாலும் பேசாமல் கேட்டுக் கொள்வாள் அவள். சில சமயம் மாலதிக்குப் பழக்கமானது என்பதற்காக அவன் கிராமத்தில் வழங்கும் கொச்சை மொழியில் அவளுடன் பேசுவான். இது அவளுக்குப் பிடிக்காது. இந்தப் பேச்சு இனிமையற்றதாக அவளுக்குத் தோன்றும். ரஞ்சித் அவளிடமிருந்து எதுவும் எதிர்ப்பார்க்கவில்லை என்று அப்போது மாலதிக்குத் தோன்றும், அவள் எரிச்சலுடன் சொல்வாள் : ''நீ ஒண் ணும் எனக்காக இந்தக் கொச்சைப் பேச்சு பேசவேண்டாம், நினைச்சா என்னாலும் உன்மாதிரி வக்கணையாய்ப் பேச முடியும், உனக்குக் கொச்சைப் பேச்சு நன்னாப் பேச வராதபோது அதை ஏன் பேசறே? உன் வாயிலே அந்தப் பேச்சைக் கேட்கப் பிடிக்கல்லே எனக்கு சின்ன வயசிலேருந்து உன்னோடேயே வளந்தவ நான்."

அவளுடைய பேச்சைக் கேட்டுத் திகைப்பான் ரஞ்சித், "உன் பேச்சைக் கேட்டாக் கிராமத்துப் பொண்ணு மாதிரியே தெரியல் லியே ?"

''யார் யாருக்கு எது பழக்கமோ, அப்படித்தான் பேசணும். நீ பேசற பேச்சை நான் பேசினா நன்னா இருக்குமா? கிராமத்துப் 186பேச்சு உனக்கு வராது; அதைப் பேசாதே, கேட்க நாராசமா இருக்கு" என்பாள் அவள்.

சோனா தன் தாயிடம், ''ஏன் என்னை ராத்திரி எழுப்பல்லே?' என்று கேட்டான்.

"போனாப் போறது, இன்னிக்கு எழுப்பறேன். ஆனால் ஒரு நிபந்தனை.''

''நிபந்தனையா? அப்படீன்னா என்ன, மாமா?'' என்று சோனா ரஞ்சித் தைக் கேட்டான்.

"நீ வயல் பார்த்திருக்கிறாயா?'' "பார்த்திருக்கிறேனே!" சோனா தன் மாமாவைப் போல் இலக்கண சுத்தமாகப் பேச முயற்சி செய்தான்.

"பூ பார்த்திருக்கிறாயா ?" "உம், பார்த்திருக்கிறேனே!'' "ஸோனாலி பாலி ஆற்றுப் படுகையைப் பார்த்திருக்கிறாயா?'' "பார்த்திருக்கிறேன். தர்மூழ் வயலைப் பார்த்திருக்கிறேன். ஆனா நிபந்தனை பார்த்ததில்லே?''

'நிபந்தனைங்கறது ஒரு பெரிய ராட்சசன். அவன் மனுஷன் தோள் மேலே உட்கார்ந்துண்டுட்டா, மனுஷன் மிருகமா ஆயிடுவான், சில சமயம் மிருகமும் மனுஷனா ஆறதுண்டு .''

"மாமா, உன்னோட ராட்சசன் என்ன சொல்றான் ?" ''என்னோட ராட்சசன் மிருகத்தை மனுஷனா ஆகச் சொல்றான்.'' "எங்கே அந்த ராட்சசனைக் கொண்டுவந்து காட்டு பார்க்கலாம்." "பெரியவனாப் போ! அப்போ உனக்குக் கொண்டுவந்து காண் பிக்கிறேன்."

இவ்வாறு சொல்லிச் சோனாவைத் தோள்மேல் வைத்துக்கொண்டு சுற்றினான் ரஞ்சித்.

பெரிய முற்றத்தில் சிலம்புப் பயிற்சியும், கத்திப் பயிற்சியும் நடக்கும். முற்றத்தைச் சுற்றி மரத்தாலும் தகரத்தாலும் ஆன அறைகள். பால் வீட்டு வாசலிலிருந்து அந்த இடம் கண்ணுக்குத் தெரியாது. இரவானதும் அந்த முற்றத்தில் கூட்டம் சேர்ந்துவிடும்.

சீதாமரத்து வேலிக்கு மறுபுறத்திலிருந்து ஒரு கண் ரஞ்சித்தை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது. ரஞ்சித்தின் கட்டுமஸ்தான தேகம் அந்தக் கண்ணில் வியப்பை உண்டாக்கியது. திறந்த மேலுடம்புடன் அவன் சோனாவைத் 'தோளில் தூக்கி வைத்துக்கொண்டு சுற்றினான். சோனாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி ; அவனுக்குத் தலை சுற்றியது. ரஞ்சித் சற்று நேரங் கழித்துச் சோனா

187வைக் கீழே விட்டான். சோனாவுக்குக் கிறுகிறுத்தது. அப்படியும் 'இன்னும், இன்னும்' என்று கையை நீட்டினான். ரஞ்சித் சோனாவுடன் விளையாடுவதைச் சசீந்திரநாத் பார்த்தார். ஆனால் ஒன்றும் சொல்ல வில்லை .

காலை நேரம், படிப்பு நேரம். ஆனால் சோனாவுக்குப் பரீட்சை முடிந்து விட்டது. அவன் பரீட்சை நன்றாக எழுதியிருந்தான். அவனுக்கு நல்ல ஞாபகசக்தி. மாமாவும் மருமகனும் விளையாடுவதைப் பார்க்கச் சசீந்திரநாத்துக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவர்கள் குளிர் காலத்தில் மாமா வீடு போவது வழக்கம். குழந்தைகளுக்குப் பரிட்சை முடிந்ததும் தனமாமி தன் பிறந்த வீடு போவாள்.

குளிர்காலத்தில் வயல்களில் பனி மூடியிருக்கும். பருப்புப் பயிரில் பருப்பு முதிர்ந்திருக்கும். கடுகுப் பூக்களால் வயல்களுக்கு மஞ்சள் பூசினாற் போல் இருக்கும்.

குளிர்காலம் பலவிதமான திண்பண்டங்களுக்கு ஏற்ற பருவம். வீட்டுக்கு வீடு பிட்டும் பாயசமும் தயாராகும். பெரிய குடும்பங் களில் * வாஸ்து பூஜை நடக்கும் ; ஆட்டுப்பலி நடக்கும். கத்மா, எள்ளுருண்டை முதலிய வெவ்வெறு ரகத் தின்பண்டங்கள். எள் சேர்த்த புளிக்குழம்பு, கடைத் தெருவுக்குப் போனால் அந்தப் பருவத்தில் பெரிய பெரிய பாப்தா மீன் கிடைக்கும். மீன்கள் தங்க நிறத்தில் பெரிது பெரிதாக இருக்கும். காலி பாவுஷ் மீன், பாக்தா மீன், பால்.

குளிர்காலம் வந்துவிட்டால் பசுக்கள் பாலைக் கொட்டும். கிராமங்களில் வறுமையும் அவ்வளவாகத் தாண்டவமாடாது. குடும்பத்துக்குக் குடும்பம் ஆனந்தம் தவழும். ஏழைகளுக்குச் சம்சாரி வீடுகளில் வேலை கிடைக்கும். சாமான்களின் விலையும் மிகவும் குறையும். அப்போது லால்ட்டுவும் பல்ட்டுவும் கிராமத்தின் மற்றச் சிறுவர்களும் 'கோல்லாச் சூட்' விளையாட்டு விளையாடு வார்கள். வயல்களில் அறுவடை முடிந்திருக்கும். பயிர்கள் காய்ந்த அடித் தண்டு மட்டும் நீட்டிக்கொண் டிருக்கும், தரைக்கு வெளியே. அங்கே கால் வைத்தால் 'சர சர' வென்று சப்தம் கேட்கும். மண் மிருதுவாக இருக்கும். அப்போது எவ்வளவு வேண்டுமானாலும் வயல்களில் ஓடலாம்; கீழே விழலாம். விழுந்தால் கொஞ்சங்கூடக் காயம் ஏற்படாது.

சசீந்திரநாத் சீதாமர வேலிக்கருகில் போனபோது மாலதி அங்கே நின்றுகொண் டிருப்பதைப் பார்த்தார். அவள் காபிலா மரத்தடியில்

* வாஸ்து பூஜா - வீட்டு மனைக்குச் செய்யப்படும் பூஜை.

188நின்றுகொண்டு என்னவோ செய்துகொண் டிருந்தாள், "நீ இங்கே ? என்ன செய்றே?” என்று அவர் கேட்டார்.

"கோந்து எடுக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே மாலதி காபிலா மரத்திலிருந்து கோந்து எடுப்பது போல் பாவனை செய்தாள். உண்மையில் அவள் நின்றுகொண் டிருந்தது வேலிக்கு மறுபக்கம் இருந்த ஒரு மனிதனைப் பார்க்கத்தான், ஆனால் வேறு யாராவது அவளைக் கவனித்துவிட்டால் மரத்திலிருந்து கோந்து எடுப்பதுபோல் பாவனை செய்வாள். இவ்விதம் அவள் தன் ஆசைதீர ரஞ்சித்தைப் பார்த்தாள். காலையில் எழுந்ததும் வாசல் கூட்டுவது, பாத்திரங்களைத் தேய்க்கத் துறைக்கு எடுத்துச் செல்லுவது, வாத்துக்களைக் குளத்தில் விடுவது போன்ற வேலைகளைச் செய்துவிட்டாள். வேறு வேலை பாக்கியில்லை. ஆபாராணி அவலுக் காக நெல் ஊறப் போட்டிருந்தாள். மாலதி சப்தம் செய்யாமல் டாகுர் வீட்டுப் பக்கம் வந்தாள். வேலிக்கருகில் சற்று நேரம் நின்றாள். நிற்க ஏதாவதொரு காரணம் வேண்டுமே! வேலியை ஒட்டிக் காபிலாமரம். அதில் கொஞ்சம் கொஞ்சம் கோந்து வழிந்து கொண்டிருந்தது, அவள் ஓர் இலையைக் கையில் எடுத்துக்கொண் டாள். யாராவது அவளைக் கவனித்துவிட்டால் கோந்து எடுப்பது போல் பாவனை செய்தாள். வேலி யிடுக்கு வழியாக ரஞ்சித்தைப் பார்த்துக்கொண் டிருந்தாள். இது வெளியே தெரிந்தால் பலவித மான பேச்சு ஏற்படும் என்பதைக்கூட அவள் மறந்துவிட்டாள்.

நரேன்தாஸ் வீட்டில் இல்லை ; அமுல்யன் பாபூர் ஹாட்டுக்குத் துணி விற்கப் போயிருந்தான். இப்போது நெசவு வேலை இல்லை. ஆகையால் மாலதிக்கும் ஓய்வுதான், அவள் எங்கும் ஓடித் திரிந்துகொண்டு, புளி ஊறுகாயைச் சப்பிச் சுவைத்துக்கொண்டு இந்த நாட்களைத் தன்னிஷ்டப்படி கழிக்கலாம். இதற்குப் பிறகு பூரி பூஜா உற்சவம். அவள் இந்தத் தடவை உற்சவத்துக்கு ரஞ்சித்தோடு போவாள். உற்சவ மைதானத்தில் சர்க்கஸ் யானை, சிங்கம், புலி, குதிரைப் பந்தயம், கோயிலின் ஒரு மூலையில் டோம் ஜாதிக்காரர்களின் பன்றி பலி ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு ஜிலேபியும் ரசகுல்லாவும் தின்றுகொண்டு சுற்றுவாள். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அப்போது! அவளுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சி எல்லாமே இப்போது ரஞ்சித்திடந்தான். அவள் வேலி யிடுக்கில் கண்ணை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

மாலை கழிந்து இருள் சூழத் தொடங்கியது. சோனா, லால்ட்டு. பல்ட்டு மூவரும் ஒவ்வொன்றாக மூங்கில்களைக் கொண்டுவந்து கிழக் குப் பக்க அறையில் அடுக்கிவைத்தார்கள். அப்போதுதான் அந்தக்

189
குரல் கேட்டது. குளத்தங்கரையிலிருந்து குரல் கொடுத்துக் கொண்டே வருவது யார் ?

அந்த ஆள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டான், ''ரஞ்சித் வந்திருக் கானாமே?"

சசீந்திர நாத் சாமுவைப் பார்த்துச் சற்று வியப்படைந்தார். சில நாட்களுக்கு முன்னால் நிலம் சம்பந்தப்பட்ட ஒரு தகராறில் அவர் சாமுவைத் திட்டியிருந்தார். இருவரிடையேயும் பெருத்த வாக்கு வாதம் நடந்தது. அந்தச் சாமு இப்பொழுது இங்கு வந்திருப்பது அவருக்குத் திக்கென்றிருந்தது. தன் தயக்கத்தை மறைப்பதற்காக அவர் ஏதேதோ பேசினார். "உன் அம்மா படுத்த படுக்கையாக இருக்காளாமே ?"

''ஆமாம்." "தாரிணி கவிராஜ்கிட்டே ஒரு தடவை கூட்டிக்கிட்டுப் போயேன்.'' “போய் என்ன பிரயோசனம்? இந்தக் குளிர்காலம் தாண்டாது போல இருக்கு."

''எதுக்கும் ஒரு தடவை போய்ப் பார்த்துட்டுவா. நான் உனக்குக் கடுதாசு தரேன்."

"கொடுங்க, பார்ப்போம் என்ன ஆறதுன்னு!'' "என்ன ஆகலேன்னு பாரு. என் அத்தையை இந்த மாதிரி கவனிப்பில்லாமே சாக விடமாட்டேன் நான் ."

சாமுவின் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது. நறுக்கிவிட்ட மீசை, மிகச் சிறிய மோவாய்த் தாடி. உற்றுக் கவனித்தால் அதைச் சாமு மிகவும் அக்கரையோடு வளர்ப்பது தெரியும். ஒரு தடவை சாமு பெரிய தாடி வைத்திருந்தான். அப்போது சசீந்திரநாத், ''உன்னைப் பார்த்தால் உன் அப்பாவோட ஞாபகம் வருது" என்றார்.

இவ்வாறு சசீந்திர நாத், சாமுவுக்கு அவன் அப்பாவின் நினைவூட்டி அவனுக்கும் பெருமையளித்திருந்தார். அதன் பிறகு எவ்வளவோ நாளாகிவிட்டது. சாமு மாலதிக்குத் தன் நீண்ட தாடியைக் காண்பித்து அவளைப் பழிவாங்க நினைத்திருந்தான். ஆனால் அவனுக்கு ஒவ்வொரு சமயம் தோன்றியது, "பழிவாங்கும் உணர்வு யாருக் காகவும் காத்திருப்பதில்லை, சமயம் வந்தால் அது தண்ணீரைப் போல் சாதாரணமாக ஆகிவிடுகிறது, கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது" என்று, தன் சிறு பிள்ளைத்தனம் குறித்து அவனுக்கே வெட்கம் ஏற்பட்டது. மறுபடி கண்ணியமாகத் தோற்றம் அளிக்கத் தொடங் கினான் அவன். கட்டம் போட்ட லுங்கி, பயிரின் நிறம் அதற்கு. மேலே மெல்லிய பனியன், முழுக்கை சட்டை. அவன் சசீந்திர நாத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே கேட்டான். "ரஞ்சித் வந்திருக் கறதாகக் கேள்விப்பட்டேனே!''

190''ஆமாம், வந்திருக்கான். இவ்வளவு நாள் கல்கத்தாவிலே இருந் தான். இப்போ திரும்பி வந்திருக்கான்."

இப்போது சாமு சசீந்திரநாத்துக்காகக் காத்திராமல் தானே ரஞ்சித்தைக் கூப்பிட்டான், "டாகுர், எங்கே போயிட்டே? கொஞ்சம் வெளியிலே வா | உன் மூஞ்சியைப் பார்க்கிறேன். உன்னாலே என்னை

அடையாளம் கண்டுக்க முடியறதா, பார்க்கிறேன்."

ரஞ்சித் வாசலுக்கு வந்து சற்று நேரம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். "நீ சாமு இல்லே ?"

"அப்போ என்னை உனக்கு ஞாபகமிருக்கு." ''மறப்பேனா ?" "யாரு கண்டாப்பா ? நீ எங்கேயோ போயிட்டே, உன்கிட்டே யிருந்து லெட்டர், கிட்டர் ஒண்ணுமில்லே. பெரிய மாமியைப் பார்த்தாக் கேட்பேன், உன் கிட்டேயிருந்து லெட்டர் வந்ததான்னு. லெட்டர் இல்லேம்பாங்க. ஒரேயடியா இப்படிக் கண் காணாமப் போயிட்டியே!"

"சரி, உள்ளே வந்து உட்காரு." ''சாயங்கால வேளையிலே வீட்டுக்குள்ளே என்ன ? வயல் பக்கம் போகலாம், வா."

இதுவும் நல்ல யோசனை தான். வயல் என்றால் ஸோனாலி பாலி நதியின் படுகை. எல்லையற்ற காலமாகப் பெருகிக்கொண் டிருக்கும்

நதி.

ரஞ்சித் சாமுவுக்குப் பல விஷயங்களைப் பற்றிச் சொன்னான். அவற்றுக்கு நடுவில் மாலதியைப் பற்றியும் சொன்னான்.

நிலவு கிளம்பிவிட்டது. தெளிவான வானம். அவர்கள் வரப்புக் களின் மேல் நடந்துகொண் டிருந்தார்கள். கோதுமை, சோள வயல்களைக் கடந்தால் நதிக்கரை. கரை பாம்பைப் போல் நீளமாக வயல்களுக்கும் ஆற்று நீருக்குமிடையே படுத்துக் கிடந்தது. மங்கலான நிலவொளியில் சின்னஞ்சிறு தர்மூழ் கொடிகள் காற்றில் அசைவது ஒரு முயல் கூட்டம் அசைவது போலிருந்தது. அந்த முயல்கள் எப்போதும் ஆற்று மணலில் ஓடிக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. ஆற்றில் தண்ணீர் குறைந்துவிட்டது. இப்போது ஆற்றை மாடும் கடக்கலாம், வண்டியும் கடக்கலாம். அவர்கள் தங்கள் உடையை முழங்கால் மட்டும் தூக்கிக்கொண்டு நீரைக் கடந்தார்கள். படிகம் போன்ற நீர், கீழே கூழாங்கற்கள், தலைக்கு மேலே ஆகாயம். பால் போன்ற நிலவு ' நதியைக் கடந் தால் கிராமம், அடர்த்தியான காடு, இன்னும் கிழக்கே நடந்து போனால் ஒரு மூங்கில் பாலம் வரும்.

191முன்பொரு நாள் சாமுவும் ரஞ்சித்தும் மாலதியைக் கூட்டிக் கொண்டு அந்த மூங்கில் பாலத்தைக் கடந்து போனார்கள். நதியைக் கடந்து வயல்களைத் தாண்டிப் பலிசப் பழங்கள், புளிப்பும் இனிப்பு கலந்த பழங்கள், பறித்துவரப் போனார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வழி தெரியாமல் வயல்களில் நாள் முழுதும் அலைந்து சாயங் காலம் வீடு திரும்பினார்கள். நரேன்தாஸ் அவர்களைக் கண்டித்தான், தடியை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் விரட்டினான். அதன் பிறகு அவர்கள் எப்போதாவது அவன் வீட்டுக்கு வந்தால் அவன் மாலதிக்கு ஏதாவது வேலை கொடுத்து அவளை நெசவரைக்கு அனுப்பிவிடுவான். அவர்கள் மாலதியைச் சந்திக்கவே வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. "டாகுர், ஒரு நல்ல வழி சொல்லேன்" என்று சாமு ரஞ்சித்தைக் கேட்டான்.

ரஞ்சித் சொன்னான் : 'நரேன் தாஸுக்கு மீன் பிடிக்கும்.”

"என்ன மீன் ?" "இச்சா மீன்.'' அப்போது பாத்ர மாதமோ, ஆஸ்வின் மாதமோ, இப்போது நன்றாக நினைவு இல்லை. மழை நீர் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது. தண்ணீரில் வளரும் புற்கள் அழுக ஆரம்பித்துவிட்டன. தண்ணீரில் ஒரே நாற்றம். அதிலிருந்த மீன்கள் பெரிய ஏரிக்கோ , ஆற்றுக்கோ , சமுத்திரத்துக்கோ போய்ச் சேர்ந்துவிடத் துடித்துக்கொண்டிருந்தன. தண்ணீரோடு தண்ணீராக அவை ஓடிப்போய் விடும். சரியான இடத்தில் மூங்கில் வலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தால் வெகுசீக்கிரம் வலை நிறைய மீன்கள் நிரம்பிவிடும். பெரிய பெரிய கல்தா சிங்கிடி மீன்கள். ஆனால் அதில் பெரிய ஆபத்து - பாம்புகள், அட்டைகள், தண்ணீர்ப் பூச்சிகள் இவற்றால் ஆபத்து நேரலாம். அவர்கள் இந்த ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் உடம்பு முழுதும் பூண்டு எண்ணெயைத் தடவிக்கொண்டு மீன் பிடிப்பதற் காக நீந்திக்கொண்டு போனார்கள்.

நாற்றத் தண்ணீரில் நீந்திப் போய்ப் பெரிய ஆலமரத்தடியில் மூங்கில் வலையை வைத்துவிட்டு இரவு முழுதும் ஆலமரத்துக் கிளையிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு, மறுநாள் அவர்கள் இரண்டு கூடை நிறையக் கல்தா சிங்கிடி மீன்களை எடுத்துக்கொண்டு நரேன் தாஸிடம் போனார்கள்.

நரேன் தாஸ் திகைத்துப் போய், "இதென்னடா, என்னடா பண்ணி யிருக்கீங்க?" என்று சொன்னான். அவனுடைய மீன் ஆசை அவனை கோபம் கொள்ளச் செய்யவில்லை. அதன் பிறகு ஒரு தடவை கூட அவன் மாலதி அவர்களுடன் பழகுவதைத் தடுக்கவில்லை. மாலதி

192அவர்களுடன் இந்தப் பிராந்தியம் முழுதும் சுற்றுவாள். இவ்வாறு மாலதிக்காக அவர்கள் எவ்வளவோ துணிச்சலான காரியங்களைச் செய்துகொண்டு திரிவார்கள்.

அந்த மாலதி இப்போது எவ்வளவு பெரியவளாகிவிட்டாள்! நடந்துகொண்டே நினைத்தான் ரஞ்சித். நினைத்தவன் ஒரு தடவை சொல்லியேவிட்டான்: "மாலதி ரொம்ப அழகா ஆயிட்டா. எவ்வளவு நாள் கழிச்சுப் பார்க்கறேன் அவளை! நல்ல உயரமாவும் வளர்ந் துட்டா !"

சாமு நிமிர்ந்து பார்த்தான். "அவளை நினைச்சா எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. ஒரு நாள் ராத்திரி நல்ல இருட்டிலே வாத்தைத் தேடிக்கிட்டு வயல்லே சுத்தறா."

சாமு சொன்னது ரஞ்சித்தின் காதில் விழுந்ததோ, இல்லையோ? அவன் திரும்பி வந்தபிறகு மாலதியை முதல் முதலாகப் பார்த்த போது திகைத்துப் போய்விட்டான். தன்னையறியாமல் அவன், ''நீ எவ்வளவு அழகா இருக்கே!” என்று சொல்லப் போனான். நல்ல வேளை; வார்த்தை வெளியில் வரவில்லை. தான் தியாகி என்ற பெருமித உணர்வு அவனுக்கு உண்டு. இருந்தாலும் தனக்குப் பிடித்த விஷயங்களில் விருப்பம் அவன் மனசைச் சில சமயம் சலனப்படுத்துவதுண்டு. சாமுவைப் பார்த்ததும் அவனுக்குத் தோன்றியது, தனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி இவனிடம் சொல்வதில் தவறு இல்லையென்று. அவன் தண்ணீர் ஓரமாக நடந்தபோது மாலதியைப் பற்றிப் பேசினான். தெளிந்த நீரைப் போல மாலதியும் தூய்மையாக இருந்தாள், நிலவு தண்ணீரில் பளபளத்தது. அவர்கள் நடக்கும் அரவம் கேட்டு மீன்கள் அவர் களுடைய கால்களை நோக்கிப் பாய்ந்துவந்தன, அவர்கள் நின்றால் அந்தச் சின்னஞ்சிறு மீன்கள் அவர்களுடைய கால்களைக் கொத்தின. சில சமயம் இருவரும் திடீரென்று மெளனமானார்கள். திடீரென்று பல விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.

பேச்சு நடுவில் ரஞ்சித் சொன்னான் : ' நீ லீக்கிலே பெரிய தலைவனா யிருக்கியாமே ?"

சாமு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. காரணம் ரஞ்சித்தின் பேச்சில் ஓரளவு குத்தல் இருந்தது, இப்போது அவன் பேச்சு சசீந்திரநாத்தின் பேச்சைப் போல் இருந்தது. சசீந்திரநாத்தும் மற்ற இந்துப் பெரியவர்களும் அவனுடைய கட்சியைப் பற்றி ஏளனமாக நினைத்தார்கள், ரஞ்சித்தும் அவர்கள் மாதிரியே நடந்து கொண்டான்.

சாமு பேச்சை மாற்ற விரும்பி, "வா, மணல்லே போய் உட்கார்ந்துகிட்டுக் காத்து வாங்கலாம்" என்றான்.

193

13ரஞ்சித் முன்னால் போனான். பிறகு அவனுக்கு எதிரில் நின்று கொண்டு கேட்டான்: "என்ன, பதில் சொல்லல்லியே நீ?"

"அந்தப் பேச்சை விட்டுடு, டாகுர் !'' "ஏன் விடணும்?" இன்னும் ஏதோ சொல்ல ஆரம்பித்தான், ரஞ்சித். சாமு, ''அது எங்கள் மதத்தைப் பற்றிய விஷயம்" என்று சொல்லி, ரஞ்சித்தின் கையைப் பிடித்து அவனைக் கீழே உட்கார வைத்தான். “நான் உன்னைத் தொட்டுட்டேனே! நீ ஸ்நானம் பண்ணவேண்டாமா ?"

சாமுவின் பேச்சைக் கேட்டு ரஞ்சித் 'ஹா ஹா'வென்று சிரித்தான். ஆனால் சிரிக்கும்போதே ஒரு சோக உணர்வு அவனைத் தாக்கியது. இருவரும் உணர்ச்சித் ததும்ப ஒருவரையொருவர் பார்த்துக்கொண் டார்கள். எங்கோ ஒரு தவறு நேர்ந்திருக்கிறது.

சாமு மெல்லிய குரலில், "இன்னும் எவ்வளவு நாள் இங்கே இருப்பே டாகுர் ?" என்று கேட்டுவிட்டு அவன் தூரத்தில் தெரிந்த ஆற்று நீரைப் பார்த்தான்.

"நிச்சயமில்லே. எவ்வளவு நாள் இருக்க முடியுமோ, அவ்வளவு நாள் இருப்பேன். நான் இப்போ ஒளிவுமறைவா இருக்கேன். நீ என்னைக் காட்டிக் கொடுக்காட்டா ரொம்ப நாள் இங்கே இருக்கலாம்னு நினைக்கிறேன்."

சாமு இப்போது ரஞ்சித்தைத் திரும்பிப் பார்த்தான். இப்போது அவன் ஆற்று மணலைப் பார்க்கவில்லை, ஆற்றைப் பார்க்கவில்லை, மர்ம அழகு நிறைந்த கிராமத்தை, வயல்களை, பயிர்களைப் பார்க்க வில்லை ; ரஞ்சித்தின் முகத்தை மட்டுமே பார்த்தான். அவன் ரஞ்சித்தின் முகத்தில் தியாகத்தின் கர்வத்தைப் பார்த்தான். ரஞ்சித்துக்குப் பிறரது கடமையுணர்வில் கொஞ்சங் கூட நம்பிக்கை யில்லை, அவன் ரஞ்சித்தின் முகத்துக்கருகில் தன் முகத்தைக் கொண்டுவந்து சொன்னான்: "உனக்கு என் பெண்ணைக் கூட்டிக் கிட்டுவந்து காண்பிக்கிறேன், டாகுர் ! சின்ன வயசிலே மாலதி இருந்தாளே, அந்த மாதிரியே இருக்கா என் பெண். எப்பவும் ஆத்தங்கரையிலே திரிஞ்சுக்கிட்டு இருப்பா. அவளைப் பார்த்தால் உன் ஞாபகம் வரும் எனக்கு, டாகுர். என் மேலே சந்தேகப் படாதே, என்னை அலட்சியம் செய்யாதே!" வருத்தத்துடன் சிரித் தான் சாமு.

''மாலதி சொன்னா, நீ டாக்காவிலே இருக்கே, கட்சி வேலை செய்யறேன்னு.''

''மாலதி என்னை ரொம்ப அலட்சியம் பண்ணறா, டாகுர் ! அவ முன்மாதிரி மனம் திறந்து பேசறதில்லே.''

194"உன் மேலே சந்தேகப்படறா." "அது எனக்குத் தெரியாது. நம்பிக்கை, சந்தேகம் இதைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது."

அப்போது ஒரு பைத்தியக்கார மனிதர் நிலவொளியில் ஆற்றைக் கடப்பது தெரிந்தது கிராமத்தில் விளக்குகள் எரிந்துகொண் டிருந் தன. அவற்றின் பிரதிபிம்பங்கள் தண்ணீரில் மிதந்தன. பைத்தியக் கார மணீந்திர நாத் ஆற்றைக் கடந்தபோது அவர் கால்பட்டு நீரில் சிறிய அலைகள் எழுந்தன. விளக்குகளின் பிரதிபிம்பங்கள் அலைகளால் சிதறுண்டன.

பேலு திண்ணையில் உட்கார்ந்துகொண்டு முணுமுணுத்துக்கொண் டிருந்தான். அவனுடைய இடக்கையில் இப்போது கொஞ்சங் கூடச் சக்தி இல்லை. அந்தக் கையைப் பார்க்கும்போதெல்லாம் அவன் நெஞ்சில் ஆக்ரோஷம் பிறக்கும் : "டாகுர், பைத்தியக்கார டாகூர், உன் பைத்தியக்காரத்தனத்தை முறிச்சுப் போடறேன்!'

இடக்கை மணிக்கட்டில் பலம் இல்லை. மணிக்கட்டின் தோல் கறுத்துப் பொசுங்கித் தழும்பாகியிருந்தது. இரண்டு பக்கமும் சதை வீங்கிக் கரடு தட்டிப் போயிருந்தது. ஒரு கறுப்புக் கயிறு அதில் கட்டியிருந்தது. அதில் மந்திரிக்கப்பட்ட ஒரு வெள்ளைச் சோழி தொங்கியது.

பேலு முணுமுணுத்துக் கொண்டிருந்தான். மேலே சில காகங் களும் மைனாக்களும் பறந்தன. அவனுடைய பீபி ஒரு சீசா எண் ணெய் கடன் வாங்கப் பச்சிம்பாடாவுக்குப் போயிருந்தாள். அவன் மீன் வத்தலுக்குக் காவல். குளிர்கால வெயில், காபிலா மரத்துக் கிளைகளின் இடுக்குகள் வழியே கீழே இறங்கியது. இந்தச் சாதாரண வெயிலில் மீன்களைப் பரத்தி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் பேலு. முன்னால் பள்ளம், குட்டை. பயிர் விளையாத தரிசு நிலம். வீட்டுக்கு வடக்கே இருந்த இந்தத் துண்டு நிலம் பேலுவினுடையது. மூங்கில் தோப்பின் நிழல் அந்த நிலத்தை விவசாயத்துக்கு லாயக்கில்லாமல் செய்துவிட்டது.

அவன் தன் கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு கட்டிக்கொண்டிருந் தான். அதில் ஒரு வெள்ளி மெடல் தொங்கியது. எப்போதும் ஒரு பயில்வான் போல் காட்சியளிக்க ஆசை பேலுவுக்கு. பேலு

195இப்போது இளைஞன் அல்ல. இருந்தாலும் இந்த வயதிலும் அவனுடைய கழுத்தையும் கையையும் பார்த்தால் ஆச்சரியமா யிருக்கும். அவனுடைய முகம் பயிர் விளையாத நிலம் போல் இருக்கும், காய்ந்து கிடக்கும், நெருப்பில் கருகிவிட்டாற் போல. அவன் ஒரு கண்ணால் பார்த்தால் யாருக்கும் நடுக்கமேற்படும். கண்ணுக்குள்ளிருக்கும் பாப்பாவில் எப்போதும் ஒரு கொடூரம் கூத்தாடும். ஒரு புறா சந்தோஷமாக வானத்தில் பறப்பதைப் பார்த்தால் அதைப் பிடித்து அதன் சிறகுகளைப் பிய்த்துப் போடத். தோன்றும் அவனுக்கு. அதன் காலை முறித்துவிட முடிந்தால் காஜிப் பாட்டில் பின்பாட்டுப் பாடுபவனைப் போல் 'சந்திரனைப் போல் உன் முகம்' என்று பாடுமளவுக்குக் குஷி பிறந்துவிடும் அவனுக்கு.

சடுகுடு விளையாட்டில் வல்லவனாயிருந்தான் பேலு, அப்போது அவனுடைய கைகளின் மேல் எதிர்க் கட்சிக்காரர்களுக்கு எவ்வளவு கோபம்! எப்படியாவது அவனுடைய கைகளை முறித்துவிட வேண்டும்போல் இருக்கும் அவர்களுக்கு. அவன் கைகளால் அடித்தால், புலியிடம் பயப்படுவது போல் நடுங்குவார்கள், எதிர்க் கட்சிக்காரர்கள்.

மைதானத்தில் விளையாட்டு நடந்தது. கோபால்தி பாபுக்களின் கட்சி பேலுவுக்கு எதிராக விளையாடியது. அவர்களுக்குப் பத்து ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தது. விளையாட்டில் பேலுவின் கையை முறித்துவிட்டால் இன்னும் பத்து ரூபாய் பரிசாக அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் யார் கையை யார் முறிப்பது?

பேலு இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் ஓடினான். வேகமாக ஓடிட பேலுவுக்குப் பிடிக்கும். கோட்டில் கால் வைத்ததுமே ஆகாயத்தைத் தொடுவது போல் உயரத் தாவுவான் அவன். அது அவனுடைய வழக்கம். அவனுடைய உருண்டு திரண்ட கை கால்களின் மேல் வெயில் பளபளக்கும். குட்டையான கறுப்புப் பாண்ட், கறுப்புப் பனியன். கழுத்தில் வெள்ளி மெடல். உயரமான ஆகிருதி. அவலட் சணமான முகம், உடல், 'ஜய்மா!' என்று சொல்லிக்கொண்டு அல்லது அல்லா, அல்லா!' என்று கூவிக்கொண்டு விளையாட்டில் குதிப்பான்.

அவனுடைய கால்களைத் தட்டிவிட்டால் அவன் அப்படியே குப்புற விழுவான். அப்போது அவன் இடுப்பின்மேல் உட்கார்ந்து கொண்டு கைகளைத் திருகிவிட வேண்டும். அப்படி செய்தால் அவனுடைய புலிப் பிடி பூனைப் பிடியாகிவிடும். ஆனால் கடைசியில் முன்பணம் கொடுத்தது வீணாகிவிட்டது. விளையாட்டு முடிந்தபோது பேலுவுக்குச் சிறுகாயங்கூடப் பட வில்லை.

அப்படிப்பட்ட பேலு இப்போது உட்கார்ந்துகொண்டு தன் கையைப் பார்த்துக்கொண் டிருக்கிறான். காகங்களை ஓட்டுகிறான்.

195தன் உடைந்த கையைப் பார்த்துப் பொருமிக்கொண்டு பைத்தியக் கார டாகுரைத் திட்டினான். "உன் பைத்தியக்காரத்தனத்துக்கு வேறே இடம் கிடைக்கல்லியா, டாகுர் ? இரு, இரு, உன் மகாத்மா வேஷத்தைக் கலைக்கிறேன் ஒரு நாள்!'' - பிறகு அவன் காக்கையை விரட்டினான். ஒரு காகம் கூரைமேல் வந்து உட்கார்ந்து வெகுநேரமாகப் பிராணனை எடுத்தது. ஒரு காகம் இல்லை, நிறையக் காகங்கள். 'இவன் கையாலாகாதவன்னு அதுகளுக்குத் தெரிஞ்சுபோச்சு. அவன் கொஞ்சங் கொஞ்சமா முடமாப் போய்க் கிட்டிருக்கான். மூட்டுக்கு மூட்டு வலி. யானையோட தும்பிக்கை

அவனோட சக்தியை யெல்லாம் எடுத்துக்கிட்டுப் போயிடுச்சு.'

அவனுடைய இரு கண்களும் - குறிப்பாகப் பூச்சி குதறிய ஒரு கண் - பயங்கரமாக ஜொலித்தன. காகம் அவனுடைய அந்தக் கண்ணைப் பார்க்கவில்லை போலும்! அவன் காகத்துக்கு அந்தக் கண்ணைக் காட்டுவதற்காகத் திரும்பிக்கொண்டு நின்றான், காகம் பறந்து வந்து அருகில் உட்கார்ந்தது. அது அவனுடைய கண்ணைக் கவனிக்கவில்லை. பேலு அதை விரட்டிக்கொண்டு ஓடினான் " நீ என்னைப் பைத்தியக்கார டா குர்னு நினைச்சுட்டியா?'' வலக் கையைத் தூக்கப் போனவன் அது இன்னும் குணமாகவில்லை என்று உணர்ந்தான். இடக்கை முடமாகிவிட்டது. வலக்கை குணமாக வில்லை. பெண்டாட்டி எண்ணெய் கடன் வாங்கப் போயிருந்தாள். அவனோ பெண்பிள்ளை மாதிரி வீட்டில் உட்கார்ந்து கொண் டிருக்கிறான், மீனுக்குக் காவலாக!

அவனுக்குத் தன் பீபியின் மேல் கோபம் கோபமாக வந்தது. ஒரு சணல் தட்டையை வைத்துக் கொண்டு காகங்களையும் மைனாக் களையும் எவ்வளவுதான் விரட்ட முடியும்? க.கம், மைனா மட்டும் என்ன, பருந்து கூட மீனுக்கு ஆசைப்பட்டு வரலாம். பருந்தின் நினைவு வந்ததும் கெளர் சர்க்காரின் நினைவு வந்தது அவனுக்கு. அப்புறம் ஹாஜிசாயபு. அவருக்குத் தம் இரண்டாம் பீபியின் மேல் சந்தேகம் வரும்போதெல்லாம் அவளைத் தடியால் குத்துவார். பிரதாப் சந்தா - அவருக்குத் தம் தொந்தியில் எண்ணெய் தடவிக் கொள்ளும் வழக்கம். இவர்களுடைய நினைவுவந்ததும் அவன் நினைத்தான். அவர்கள் வெறும் காகம், பருந்து அல்ல, ராஜாளி கூட அல்ல, சிவப்பு நதியின் ராட்சசப் பருந்துகள் ; பெரிய பெரிய மீன் களைத் தவிர மற்ற மீன்களை அவை லட்சியம் கூடச் செய்யாது.' ஊரிலுள்ள நிலபுலன்களெல்லாம் இந்தப் பெரிய மனிதர் களுடையது. நல்ல காலத்திலோ கஷ்ட காலத்திலோ அவர்களுடைய நிலத்தில் உழைத்தால் காசு கொடுப்பார்கள் கூலியாக. கெளர்

197சர்க்காருக்குப் பேலுவிடம் பயம். பேலுவின் கட்டுமஸ்தான உடல் வாகுக்காக அல்ல; இந்த மாதிரி உடல்வாகுள்ள எவ்வளவோ பேரை அவர் தம்மிடம் வேலைக்கு வைத்திருந்தார். பயம் என்னவென்றால், பேலு இளம் வயதில் - ஏன், இப்போதுங்

கூட - ராத்திரி வேளைகளில் எங்கோ போகிறான். அவன் நினைத் தால் பத்து ரூபாய்க் காசுக்காகப் பத்துத் தலைகளை வெட்டி வந்து விடுவான், கொஞ்சமும் தயக்கமில்லாமல் !

என்ன ஆச்சரியம்! அப்பேர்ப்பட்ட பேலுவால் இப்போது ஒரு காகத்தை விரட்ட முடியவில்லை. பேலு கோபத்துடனும் சோர் வுடனும் தன் வலக் கையால் லுங்கியைத் தட்டிவிட்டுக் கொண்டான்.

வெயிலில் மீன்கள் காய்ந்தன. சிறிய திண்ணை. ஒரு கொய்யாமரம். புதிய பீபி வீட்டுக்கு வந்திருந்தாள். அவளை அவன் பிடித்துக் கொண்டு வந்து இரண்டு மூன்று வருடங்கள் தான் ஆகின்றன. அவளுக்கு வயது அதிகமில்லை, இருபது இருக்கலாம், ஒன்று இரண்டு கூட இருக்கலாம். ரொம்ப இளசு. ஊர் பூராவும் இதைப் பற்றிக் கேலி. அவள் ஆல்தாப் சாயபுவின் பீபியாக இருந்தாள். யாரோ ஒரு நாள் ஆல்தாப் சாயபுவின் பிணத்தைச் சணல் வயலில் கண்டார்கள். அதன் பிறகு ஒரு வருடங்கூட ஆகவில்லை. பேலு ஆல்தாப் சாயபுவின் அழகான பீபியைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். யாருக்கும் ஆட்சேபிக்கத் துணிவில்லை. பேலு சண்டைக்கார ஆள். அவனோடு யார் தகராறு செய்வது? அப்பேர்ப்பட்ட பேலுவால் ஒரு காகத்தை, ஒரு சாதாரண காகத்தை, சமாளிக்க முடியவில்லை.

சட்டென்று ஒரு காகம் வந்து ஒரு மீனைக் கொத்திக்கொண்டு பறந்தது. எரிச்சலுடன் அதைத் துரத்திக்கொண்டு போனான் பேலு. இடுப்பிலிருந்து அவனுடைய லுங்கி அவிழ்ந்துவிட்டது. அநேகமாக அம்மணமாகக் காகத்தைத் துரத்திக்கொண்டு ஓடிய அவன் பின்னால் திரும்பியபோது எல்லாக் காகங்களும் மீன்களைத் தின்றுகொண் டிருப்பதைக் கண்டான். லுங்கியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு நடக்க முடியவில்லை அவனால். அவன் முழங்கால்களை மடக்கிய வாறே திரும்பிவந்தான். அந்தச் சாதாரண காகங்களுக்குக் கூடத் தெரிந்துவிட்டது, பேலு கையாலாகாதவன் என்று ! அவன் தன் பூச்சி அரித்தக் கண்ணால் மீன்களைப் பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றான். அங்கிருந்து நகரவில்லை. நகர்ந்தால் மிஞ்சியிருக்கிற கொஞ்ச நஞ்ச மீன்களும் மிஞ்சாது. வலக்கை ஒன்றுதான் அவனுக்கு ஆதாரம். பீபியின் தயவில்தான் குடும்பம் நடந்தது. மீன் இருக்கும் நிலையைப் பார்த்தால் அவள் அவனை வெட்டி விடுவாள்.

1981:38

பேலு மீன்களை நன்றாகப் பரப்பிவைத்தான். பூன்ட்டி மீனையும் சேலா மீனையும் நன்றாகப் பரப்பிவைத்தால் மீன்கள் குறைந் திருப்பதைக் கவனிக்கமாட்டாள். காகம் வந்து மீனைக் கொத்திக் கொண்டுபோன விஷயத்தைக் கண்டு பிடிக்க மாட்டாள்.

சாமு டாக்கா போயிருந்தான் ; இன்னும் திரும்பவில்லை. பேலு சாமுவின் தாயாரிடமிருந்து ஒரு கூடை நெல் கடன் வாங்கி வந்திருந்தான், அதை எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறானோ எப்போதுதான் கொடுக்கப் போகிறானோ, அவனுக்கே தெரியாது, எல்லா விஷயங்களையும் அவனுடைய பீபி ஆன்னு தான் கவனித்துக் கொள்கிறாள்.

ஆன்னுவிடம் பரிவு ஏற்பட்டது அவனுக்கு. அவன் லுங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டான். ஆன்னு பேகம்-அழகான பெயர் ! ஆனால் அவளுடைய உடலில் ரொம்ப வீரியம் சர்க்கார் வீட்டு முரட்டுக்குதிரை மாதிரி. மைதானத்தைக் கண்டால் ஓடத் துடிக் கிறது. ஆனால் இப்போதெல்லாம் பேலுவால் இவ்வளவு வீரிய முள்ள குதிரைமேல் சவாரி செய்ய முடியவில்லை. இடுப்புப் பிடிக் கிறது. குதிரைக்கு ஈடு கொடுக்க முயற்சி செய்தால் சரீரம் அயர்ந்து போகிறது. ஆன்னு எரிச்சலடைந்து, 'நல்ல ஆம்பிளை' என்று கேலி செய்கிறாள். அவனைத் தன் மேலிருந்து கீழே தள்ளிவிடுகிறாள். தரையில் முகம் நசுங்கிக் கீழே விழுந்துவிடுகிறான் அவன். அப்போது சந்தேகமாகிய சக்கரவாகப் பறவை அவனைக் குதறிக் குதறித் தின்கிறது. அவன் மிகவும் கஷ்டப்பட்டுச் சொல்கிறான் : "ஆன்னு, ஆன்னு! பைத்தியக்கார டாகுர் என்னை நொண்டியாக்கி விட்டார்!''

சிறிய கிராமம். சில முஸ்லிம் குடும்பங்கள். ஹாஜி சாயபுவின் வீட்டில் நான்கு புதிய அறைகளை - தகரம் வேய்ந்தவை - கட்டியிருக் கிறார்கள். அவருக்குக் கொஞ்சம் மாடுகன்று உண்டு. இரண்டு பெரிய மாடுகள் இருந்தன. அதற்கு அப்பால் சாமுவின் நிலம், நயாபாடாவில் சாமுவுக்குக் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதன் விளைச்சல் சாமுவின் குடும்பத்துக்கு வருடம் பூராவும் காணும். நல்ல சணல் நிலம் இரண்டு ஏக்கர் இருந்தால் வேறென்ன வேண்டும்!

சாமுவின் உறவுக்காரர்கள் நல்ல வசதியுள்ளவர்கள். ஆகையால் அவனுக்குத் தட்டு ஏற்பட்டால் நெல், பொரி, அவல் எல்லாம் அவர்களிடமிருந்து வந்துவிடும். இவர்களைத் தவிரக் கிராமத்தி லுள்ள மற்றவர்கள் அல்லாவின் அடிமைகள். உடலுழைப்பால் தான் ஜீவனம் நடந்தவேண்டும். ஆபேத் அலிக்கு நிலம் கிடை யாது. மன்சூர் முக்கால்வாசி நிலம் பங்குக்காக உழுகிறான். "ஈசம்,

199அவன் ஒரு ராஸ்கல்!" என்று சொல்லி ஆபாசமாகத் திட்டினான் பேலு. ஈசமின் பீபி நொண்டி. சாமு வீட்டுச் சீதாமர வேலியைத் தாண்டினால் ஹாஜி சாயபுவின் களஞ்சியம். அதற்கும் அப்பால் பிரம்புப் புதர், ஒரு பெரிய சீதாமரம். அந்த மரத்தடியில் ஓர் இடிந்த குடிசை. அதற்குள் முனகிக்கொண்டு படுத்துக் கிடக்கிறாள் ஈசமின் பீபி. ஏதோ வியாதி அவளுக்கு. ஈசமினால் ஒரு நாளும் தன் பீபியுடன் பிரியமாய் இருக்க முடியவில்லை. அவன் தர்மூஜ் வயலே சரணமாகக் கிடக்கிறான், இப்போது குளிர்காலம். பிறகு கோடை காலம் வரும். கோடைகாலம் வந்துவிட்டால் ஈசம் ஒரு வியாபாரி யாகிவிடுவான். அவன் தர்ஜ் விற்று எல்லாக் காசையும் சின்ன டாகுரின் கையில் கொடுத்துவிடுவான். தான் தர்மூழ் வயலிலிருந்து இத்தனை பணம் சம்பாதித்துச் சின்ன டாகுரிடம் கொடுப்பது குறித்து அவனுக்கு ரொம்பப் பெருமை.

கிராமத்துக்கு அப்பால் கிராமம் அல்லது விஸ்தாரமான மைதானம். முஸ்லிம் கிராமங்களில் எப்போதும் வறுமை. ஒவ்வொரு கிராமத்தில் ஹாஜிசாயபுவைப் போன்ற பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர் களுக்கு வேறுவித சுகம். அவர்களுடைய பிள்ளைகள் ஆற்றைக் கடந்து சென்று தொழில் செய்வார்கள், சிலர் சணல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் மசூதியில் பெரிய பெரிய தொட்டிகளில் படையல் படைப்பார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டுப் பேலு வுக்குத் தானும் ஒரு படகு கட்டிக்கொள்ள வேண்டுமென்று ஆசை தோன்றும். அந்தப் படகை வைத்துக்கொண்டு சணல் வியாபாரம் செய்ய ஆசை. சணல் வியாபாரமோ, தரகோ செய்தால் நல்ல வரும்படி. அதன் மூலம் ஹாஜி சாயபு ஹாஜ்யாத்திரை கூடச் செய்துவிட்டார்.

இந்துக் கிராமங்களைப் பார்த்தால்... நரேன்தாஸ் - அவருக்கு நிலம் இருக்கிறது, நெசவுத் தொழில் இருக்கிறது. தீனபந்துவிடம் இரண்டு தறிகள், இரண்டு மனைவிகள். ரொம்பச் சுகமாக இருக்கிறான். டாகுர் வீட்டுக்காரர்கள் அந்தப் பிராந்தியத்திலேயே அதிகம் படித்தவர்கள் என்ற வகையில் செல்வாக்கு பெற்றவர்கள். பெரிய டாகுர்தான் பைத்தியம். இரண்டாவது டாகுரும் மூன்றாவது டாகுரும் அங்கிருந்து பத்துக் கோசத் தூரத்திலுள்ள மூடாபாடா ஜமீந்தாரிடம் காரியஸ்தர்கள். ஜமீந்தாருக்கு அவர்களிடம் அபார நம்பிக்கை. அவர்களது குடும்பம் வசதியாக இருக்கிறது. அப்புறம் பால் வீடு - அவர்களுக்கு நிலம் இருக்கிறது. மில் வேலை இருக்கிறது அதன் பிறகு மாஜி வீடு, அவர்களிடம் பெரிய பெரிய மாடுகள் இருக்கின்றன. திருவிழாவில் நடக்கும் பந்தயங்களில் பெரும்பாலும் அந்த மாடுகள்

200தான் ஜயிக்கும். ஒரு தடவை இரண்டு தடவை நயாபாடா மியான்களின் மாடுகள் ஜயித்துவிட்டால் அதற்குக் காரணம் மாஜி வீட்டாரின் தாட்சணியந்தான். ஒவ்வொரு தடவையும் மாஜி வீட்டு மாடுகளே ஜயித்தால் மக்கள் ஏதாவது சொல்லமாட்டார் களா? அவர்கள் திருவிழாவுக்கு மாடு கொண்டு போகா விட்டால் மியான்களின் மாடு ஜயித்துவிடும்,

கடைசியில் கவிராஜின் வீடு. பிரதாப் மாஜி பெரிய பணக்காரர். பிஸ்வாஸ் பாடாவிலும், பாவுசாவிலும் நிலம் உண்டு அவருக்கு. சுல்தான் சாதியில் உள்ள நல்ல நிலமெல்லாம் அவருடையதுதான். அப்புறம் கெளர் சர்க்கார் - அவருக்குத் தம் மைத்துனிமேல் காதல். அவர் வீட்டுக்குக் கூரை வேயப் போனால் தண்ணீர் குடிக்கவிட மாட்டார். வட்டியாலும் பேராசையாலும் பெரிய மனிதராகிக் கொண்டு வருகிறார். பிறருடைய சுகதுக்கத்தைப் பற்றிக் கவலையே இல்லை, அந்த ஆளுக்கு. எப்போது பார்த்தாலும் பணம், பணந் தான்! காசு கிடைத்தால் தம் இருதயத்தைக் கூட விற்றுவிட்டு வந்துவிடுவார் மனிதர்.

பேலு பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னான். "உன் மாதிரி பெரிய மனுஷங்களை மண்ணைக் கவ்வ வச்சாத்தான் எனக்கு நிம்மதி!" அவன் கத்தினான் : "டாகுர்! நீ பைத்தியம்! உன்னோடப் பைத்தி யத்தை...!'' அவனால் மேலே பேசமுடியவில்லை. அவன் எங்கோ கவனமாயிருப்பதைப் பார்த்துக் காகங்கள் கீழே இறங்கிவந்து விட்டன. அவன் அவற்றை 'உஷ், உஷ்' என்று விரட்டினான். என்ன கஷ்டம்! என்ன கஷ்டம்! அவனுடைய பீபியை இன்னும் காணோம்! என்ன செய்கிறாள் இவ்வளவு நேரம்? ஹாஜி சாயபுவோட சின்னப்பிள்ளை, ஆன்னுவோட வயத்திலே முழங்கால் வைக்கப் பாக்கறானா?

அவன் கூவினான் : ''நாசமாப் போன காக்கா என்கிட்டே பயப் படல்லே! மூதேவி பெண்டாட்டி என் கிட்டே பயப்படல்லே!''

அவன் தன் பிபியைக் கொன்றுவிட வேண்டுமென்று நினைத்து உரக்கச் சிரித்தான். தன் கைகள் இரண்டையும் பார்த்துச் சொல்லிக் கொண்டான்: "என் கை சரியாப் போகாதா, அல்லா ?" அவன் மிகவும் கஷ்டப்பட்டு இடக் கையை வலக் கையால் தூக்கித் தன் கண்ணுக்கு நேரே கொண்டுவந்தான். மணிக்கட்டின் தோல் சுருங்கிக் கிடந்தது. வீங்கின மணிக்கட்டில் சோழி கட்டிய கறுப்புக் கயிறு தொங்கியது. அவனும் ஈசமின் பீபியைப் போல் நொண்டியாகிக்கொண் டிருக்கிறானென்று அவனுக்குத் தோன்றியது. அவன் திண்ணையிலிருந்தே கத்தினான் : "ஆன்னு! ஏ ஆன்னு!...''

2013அப்போது ஆபேத் அலியின் பீபி ஜாலாலி பேலுவின் குடிசைக்குக் கீழ்ப்பக்கமாகப் போய்க்கொண் டிருந்தாள். மூங்கில் புதருக்குக் கீழே போய்க்கொண் டிருந்தாள் ஜாலாலி. மெலிந்திருக்கிறாள். ஏரியை நோக்கிப் போகிறாள் போலத் தோன்றியது. ஏழை பாழைகள் அல்லிக்கிழங்கு பறிக்கும் சமயம் இது. ஆஸ்வின் - கார்த்திக் மாதமா யிருந்தால், அல்லது அக்ரான், பெளஷ் மாதமானால் தாழ்நிலத்தில் பயிரிலிருந்து வளரும் நெல்கதிரை அரிவாளால் திருட்டுத்தனமாக வெட்டி மடியில் நிரப்பிக்கொள்ளலாம். இப்போது வயலில் ஒன்றும் இல்லை. சோளம், கோதுமை விளைச்சல் இல்லை. இப்போது அல்லிக் கிழங்குக்காகத் தண்ணீரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஜாலாலி அல்லிக்கிழங்கு பறிக்க ஏரிப்பக்கம் போய்க்கொண் டிருந்தாள். பேலு அவளைக் கேட்டான்: "அண்ணி, ஆன்னுவைப் பார்த்தீங்களா?"

ஜாலாலி ஒரு துண்டைக் கட்கத்தில் இடுக்கிக்கொண் டிருந்தாள். அவள் தலைமேல் ஒரு சிறிய கூடை. கூடை அவள் முகத்தை மறைத்தது. கூடை தலைமேல் இருந்ததால் பேலு சொல்வது அவள் காதில் விழவில்லை. அல்லது விழுந்தாலும் தெளிவாக விழவில்லை. ஆகையால் ஜாலாலி தலையிலிருந்து கூடையை எடுத்துவிட்டு, ''என்ன சொன்னே, மியான்?" என்று கேட்டாள்.

"வேறே என்ன சொல்லுவேன்?”' ஆனானப்பட்ட பேலு மாடு மாதிரி அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு அவளைப் பார்த்தான்.

"நீ என்ன சொல்றே?" ''ஆன்னு ஒரு சீசா எண்ணெய் வாங்கிட்டு வரப்போனா. இன்னும் வரல்லே ."

"எல்லாம் வருவா” என்று சொல்லிவிட்டு ஜாலாலி கூடையை மறுபடி தலைமேல் வைத்துக்கொண்டு வயலுக்குள் இறங்கிவிட்டாள். எதிரில் விசாலமான வயல்வெளி. இடப் பக்கம் ஸோனாலிபாலி ஆறு. அற்று மணல். மணலைத் தாண்டி நேரே வடக்கில் சென்றால் அந்த ஏரி, பாவுசா ஏரி. அங்கே ஒரு தடவை ஈசமை ஒற்றைக் கண் பிசாசு பிடித்துக்கொண்டு விட்டது. இவ்வளவு பெரிய ஏரி இந்தப் பிராந்தியத்திலேயே, இந்த ஜில்லாவிலேயே கிடையாது. ஒரு சமயம் இந்த ஏரி நீரில் ஒரு முதலை வந்தது. ஒரு பெரிய மலைப் பாம்பு மிதந்துவந்தது. இந்த ஏரியிலுள்ள விதவிதமான ஆமைகளைப் பற்றி, கஜார் மீனைப் பற்றி, இரவில் மிதந்துவரும் ஏழு படகுகளில் ஒன்றான 'மதுகர்' என்ற படகைப் பற்றி - பல கதைகள் வதந்தி களாக இந்தப் பிராந்தியத்தில் பரவியுள்ளன. அந்த ஏரியில்தான் ஜாலாலி அல்லிக்கிழங்கு பறிக்கப் போகிறாள். ஜாலாலி மட்டும் அல்ல, இன்னும் எவ்வளவோ ஆயிரக்கணக்கானவர்கள் போகிறார்

202கள். அவர்கள் அதிகாலையில் கிளம்பிப் போவார்கள், மாலை நேரத்தில் திரும்புவார்கள். பேலு திண்ணையில் நின்றுகொண்டு இதையெல்லாம் பார்த்துக்கொண் டிருப்பான்.

ஆபேத் அலி இந்தச் சமயம் வீடு திரும்புவான். மழைக் காலம், சரத்காலம், பின்பனிக் காலம், இந்தக் காலங்களில் அவன் கொய்னாப் படகில் வேலைப் பார்ப்பான், குளிர், வசந்த, கோடைக் காலங்களில் வீட்டுக்கு வந்து இந்துக் குடியிருப்பில் கூலி வேலை செய்வான். இதுதான் கிராமம். இந்தக் கிராமத்தில் சாமு ஒருவன் தான் பெரிய மனிதனாக வளைய வர முடிகிறது. சாமு பெரிய மனிதனாக ஆக ஆக, இந்து இளைஞர்கள் அவனுக்கு மதிப்புத் தரத் தரப் பேலுவும் சாமுவின் பக்கம் ஈர்க்கப்பட்டான். கொஞ்சங் கொஞ்சமாகச் சாமுவின்

அடிமையாகிக்கொண்டு வந்தான் பேலு.

கண்ணியமான இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த மனிதர்களுக்குச் சமமாகச் சொல்லத் தக்க பெரிய மனிதன் அவர்களுடைய முஸ்லிம் சமூகத்திலும் ஒருவன் இருக்கிறான்-சாமு! சாமு டாக்காவிலிருந்து திரும்பி வந்துவிட்டால் பேலு அவனையே சுற்றிச் சுற்றி வருவான். பேலு தன் முறிந்த கையைப் பற்றி அழாக்குறையாகப் புகார் செய் வான் சா முவிடம். வசதியாக வாழும் இந்துக் குடும்பங்களின் மேல் அவனுக்கிருந்த ஆக்ரோஷம் அவனை வருத்தும்போது சாமுவும் முல்லா மெளல்விகளைப் போல அதற்கு ஒரு வழி சொல்லலாம். சாமு வின் லீக் கட்சி 'ஜிந்தாபாத்! நமக்காக ஒரு தனி நாடு வேண்டும்! நாங்கள் நல்ல முறையில் வாழத் தனி நாடு வேண்டும்!' "ஒருநாள் இத்தேசம் ஏழை மக்களுக்குச் சொந்தமாகிவிடும் என்று கேட்டால் பேலுவுக்கு நல்ல தூக்கம் வரும். தன் ஜாதியினர் எல்லாரையுமே ஏழை மக்களாகத்தான் கருதினான் பேலு. சொந்த நாட்டை அடைய ஜிஹாத் - தர்மயுத்தம் - செய்ய வேண்டும். அதற்காகப் பலவிதமான புரட்சிகள் செய்யவேண்டும். பேசப் பேச ஆவேசம் வந்துவிடும் சாமுவுக்கு நமக்காகத் தேசம், இந்தத் தேசம், இந்த மண், இதன் விளைச்சல் எல்லாம் நமக்காக, நம் தேவைக்காக நாமே இங்கே பெரும்பாலானவர்கள் ; ஆகையால் இந்த நாடு நம்முடையது.

சாமு புத்தக மொழியில் வாக்கியங்களை நீட்டி நீட்டிச் சொற் பொழிவு செய்யும்போது அதைக் கேட்கும் பேலுவுக்குத் தோன்றும், இந்த மனிதன் விரும்புகிறபடி சேவை செய்தால் அதன் மதிப்பு மெளல்வி முல்லாக்களின் சாதனையைவிடக் குறைவாக இருக்காது என்று .

ஆனால் கை உடைந்துவிட்டதே! காகங்கள் மீன்களுக்கு ஆசைப் பட்டு மேலே பறந்தன. அவன் அவற்றை 'உஷ்' என்று விரட்டி

203
னான். அவன், "மூதேவிக் காக்கா, என் பேரு பேலு ஷேக்காக்கும்!' என்று கத்திக்கொண்டே சணல் குச்சியைத் தன் தலைக்கு மேலே வலக்கையால் சுழற்றினான்.

அப்போதுதான் கன்றுக்குட்டி 'ஊஹாம்பா' என்று கத்தியது. குளிர் காரணமாக அதன் மூக்கிலிருந்து சளி வழிந்தது. அதற்கு ஜலதோஷம். குளிரில் அதன் வயிறு உப்பி டமாரம்போல் ஆகிவிட்டது. அதை வெயிலுக்குக் கொண்டுபோனால் வயிற்று உப்புசம் குறையும். அவனுக்கும் ஒரு வேலை பார்த்த மாதிரி இருக்கும். இவ்வளவு நேரமாகியும் ஆன்னு இன்னும் திரும்பவில்லை, கன்று பசியால் கத்தியது. அதை மேய்க்கக் கூட்டிக்கொண்டு போக வேண்டும். புல்வெளியில் ஒரு முளையடித்துக் கட்டிப் போட்டால் கொஞ்சம் புல்லாவது தின்னும். அதற்குக் கொஞ்சம் பலமாவது வரும்.

ஆன்னு வரவில்லை. என்ன செய்வது? அவன் வலக் கையால் மீன்களை யெல்லாம் குவித்து அவற்றை வீட்டுக்குள் வைத்துக் கதவை மூடினான். ஒரு முளையை அடித்துக் கன்றுக் குட்டியை அதில் கட்டினான். அப்போது வரிசை வரிசையாக மக்கள் அல்லிக் கிழங்கு பொறுக்கப் போவதைப் பார்த்தான். எல்லாரும் முஸ்லிம் பெண் கள், விதவைகள். இந்தப் பிராந்தியத்திலுள்ள முகம்மதிய கிராமங் களைச் சேர்ந்தவர்கள். எதிரில் விஸ்தாரமான ஏரி மைதானம். ஹாயி ஜாதியைச் சேர்ந்த சர்க்கார் வீட்டார் குளத்தங்கரையில் வாஸ்து பூஜா செய்தார்கள். ஆடு பலி நடந்தது. தாரை, தம்பட்டங்கள் ஒலித்தன.

டாகுர் வீட்டுச் சிறிய டாகுர் வாஸ்து பூஜைக்காக வெளியே புறப்பட்டார். அவர் இந்துக் குடும்பங்களுக்கு வாஸ்து பூஜை செய்ய எள்ளும் துளசியும் கொண்டுபோய்க் கொடுப்பார். பூஜையில் மத்தளம் முழங்கும். டாகுர் இங்குமங்கும் போவார், மந்திரம் சொல்லுவார். ஈசம் இன்று டாகுர் வீட்டுக்குப் போகமாட்டான். அவன் நாளை அங்கே போய் அரிசி, வாழைக்காய் இன்னும் மற்றச் சாமான்கள் எல்லாவற்றையும் துணியில் முடிந்து கொண்டு வீட்டுக்குப் போவான்.

சர்க்கார் வீட்டு வாஸ்து பூஜை பார்க்க நிறையக் கன்னிகைகள், கல்யாணமான பெண்கள் வந்திருந்தார்கள், புதிய புடைவைகள் அணிந்துகொண்டு. நெற்றியில் சிந்தூரத் திலகம், கைகளில் பொன் வளையல்கள், பட்டுப்புடைவைகள். எவ்வளவு அழகாக இருந்தார் கள் பார்க்க! பின்பனிக் காலத்தில் ஸோனாலிபாலி மணல் ஜொலிப் பதைப் போல் அவர்கள் ஜொலித்தார்கள். பூஜை நடந்தது, உறவுக் காரர்களைப் போல் டாகுர் வீட்டுப் பெரிய மாமியும் தனமாமியும்,

204குளத்தங்கரைக்கு வந்தார்கள். மண்ணில் ஒரு சிறிய வாழைமரத்தைப் புதைத்திருந்தார்கள். அதற்கடியில் ஒரு சிறிய மண்குடம், அதன் மேல் ஒரு தேங்காய். நாற்புறமும் விதவிதமான நைவேத்தியச் சாமான்கள். அவற்றைப் பார்த்தால் சாப்பாட்டுப் பொருளுக்குப் பஞ்சமேயில்லையென்று தோன்றும். கத்மா, எள்ளுருண்டை இன்னும்

மற்றக் குளிர்காலத்தின் பண்டங்கள் எல்லாம் இருந்தன.

என்ன எரிச்சல்! தண்ணீரால் தணிக்க முடியாத எரிச்சல் ! ஜாலாலி தண்ணீரில் இறங்கப் போகிறாள். இப்போது அவள் பார்வைக்கு மறைந்துவிட்டாள். என்ன எரிச்சல், கன்றுக்குட்டி புல்லில் வாய் வைத்து எவ்வளவு நாளாயிற்று! குளிர்காலப் புல் பனியில் நனைந்திருந்தது. நன்றாக வெயில் வரும்வரை, புல்லின் பனி நன்றாக உலரும்வரை, கன்று புல்லில் வாயை வைக்காது. அது புல் தின்னாததற்காகக் கோபமும் வருத்தமும் கொண்ட பேலு அதன் வயிற்றில் ஓர் உதை கொடுத்தான். அது முழங்கால்களை மடக்கிக் கொண்டு கீழேவிழ இருந்து கடைசியில் சமாளித்துக்கொண்டது. பேலுவுக்குப் பயம் இருக்கும், நல்ல புல்லைக் கன்று தின்னா விட்டால் ஹாஜி சாயபுவின் சாமி மாடோ, கெளர் சர்க்காரின் முரட்டுமாடோ வந்து அதையெல்லாம் சாப்பிட்டுப் போய்விடும் என்று. பேலுவுக்கு அந்தப் புல்லைத் தானே கண்டுபிடித்துவிட்ட தாக நினைப்பு. அதைத் தன் கன்று சீக்கிரம் தின்றுவிட்டால் வேறொரு மிருகமும் அதில் பங்கு கொண்டாடாது. இந்த மூதேவி ஆன்னு தன் பங்காகக் கொண்டு வந்தது இந்த ஒரு கன்றுதான்! வத்தல் தொத்தல் கன்றுக்குட்டி ; அதுக்கு அதிர்ஷ்டமில்லை. தேகத்திலே பலமில்லே. வீடு பூரா, ஊர் பூரா அசுத்தம் பண்ணிக் கொண்டு திரிகிறது.

ஆன்னுவின் நினைவு வந்ததும் அவன் கிராமத்துப் பக்கம் போக லாமா என்று நினைத்தான். ஒரு சீசா எண்ணெய் கடன் வாங்க இவ்வளவு நேரமா ?

தூரத்தில் மேளம் ஒலித்தது. அந்த ஒலி அவன் காதில் அபஸ்வரமாக விழுந்தது. ஜாலாலியை இங்கிருந்து பார்க்க முடிந்தது, அவள் பட்டினியால் மெலிந்து சோர்ந்திருந்தாள். இப்போது பாவுசா ஏரிக்குப் போவதற்காகப் பிரதாப் சந்தாவின் துறையைக் கடந்தாள். அவள் தன் முன்னாலிருந்த நிலத்தையும் கள்ளிக் காட்டையும் கடந்து பனியாக்களின் குளத்தங்கரை வழியே நடந்தாள். விஸ்தாரமான நிலம். அது பூரா பிரதாப் சந்தாவுக்குச் சொந்தம். அந்த நிலத்தைத் தாண்டினால் பாவுசா ஏரி. அந்த ஏரிகரையிலுள்ள நிலமெல்லாம் - சணல், கரும்பு வயல்கள், பாகல் தோட்டம் -

205கெளர் சர்க்காருக்குச் சொந்தம். அதற்கப்பாலுள்ள நிலமெல்லாம் ஹாஜி சாயபுவைச் சேர்ந்தது. ஹாஜி சாயபுவுக்கு மூன்று பீபிகள். கடைசி பீபிக்கு வயது அதிகம் இல்லை, இருபத்து நான்கு, இருபத் தைந்து இருக்கலாம், ஹாஜிசாயபு பக்ரீத் அன்று தன் மூன்று பீபிக் களையும் மசூதிக்கு அழைத்துச் செல்லும்போது நாற்புறமும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டு வருவார். யாராவது அவர் களைப் பார்வையால் விழுங்கிவிடாமலிருக்கிறார்களா என்று பார்ப் பார். முகத் திரைக்குள்ளிருந்து அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்று கவனிப்பார். "ஆசையோடு யாரைப் பார்க்கிறே?'' என்று கேட்டு இரண்டாவது பீபியைக் குச்சியால் குத்துவார். ''என் தங்க பீபியே, வழியைப் பார்த்துக்கிட்டு நடம்மா!'' என்பார். அப்போது அவருடைய தடியைப் பிடுங்கி அதைக்கொண்டே அவரை மண்டையில் ஒரு பாட்டம் அடிக்கத் தோன்றும் பேலு வுக்கு. இதையெல்லாம் நினைத்தபோது அவனுக்கு ரத்தம் தலைக்கு ஏறும். அமைதியாக இருக்க முடியாது அவனால்.

பேலு பெரிய மனிதன் அல்ல. தண்ணீரிலும் காட்டிலும் வளர்ந்த வன் அவன். எங்கோ வியாபாரம் செய்யப்போன இடத்தில் அவனைப் பிடித்துக்கொண்டு வந்திருந்தார் ஹாஜி சாயபு. நெல் அறுவடையான பிறகு பேலு, ஹாஜிசாயபுவின் காலிலும் வயிற்றிலும் முதுகிலும் பூண்டுத் தைலத்தைச் சுடவைத்துத் தடவித் தேய்த்து விடுவான். அப்படிப்பட்ட போலுவுக்கு நடுநடுவே ஓர் ஆசை தோன்றும். 'ஹாஜிசாயபுவின் இரண்டாம் பீபியின் முகத் திரையை நீக்கி அவளைப் பார்த்துவிட வேண்டுமென்று.'

அவன் படுகையில் நின்றுகொண் டிருந்தான். பெரிய அரச மரத்துக்குக் கீழே மட்கிலா மரங்கள், விதவித வண்ண இலை களுள்ள செடிகள். குளிர் காலமாதலால் காட்டின் உட்புறம் உலர்ந்து கரடுமுரடாக இருந்தது. அதற்குள் நுழைந்து உடும்பு போல் புதருக்குப் பின்னால் ஒளிந்திருந்தால் ஹாஜி சாயபுவின் இரண்டாம் பீபியைப் பார்க்க முடியலாம். ஏனென்றால் அவர் வீட்டு ஸ்திரீகள் குளிக்கும் குளம் அந்தப் பக்கத்தான் இருந்தது. புதருக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பதற்கு முன் அவன் நாற்புறமும் பார்த்துக்கொண்டான். இடப் பக்கம் ஆபேத் அலியின் வீடு. அதில் இப்போது யாரும் இல்லை. மாமரத்தடியிலிருக்கும் இடிந்த குடிசை இப்போது காலி, தெற்குப் பக்கம் வாசல் வைத்த அந்தக் குடிசை யில் ஜோட்டன் முன்பு வசித்தாள். இப்போது அவள் இல்லாத தால் மழையிலும் புயலிலும் அதன் மண்சுவர் இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டது. பிரம்புச் செடிகளும்

206புதர்களும் ஆபேத் அலியின் வீட்டை எப்போதும் இருட்டாக்கி வைத்திருந்தன. குளிர்காலச் சூரியன் ஆபேத் அலியின் வீட்டுக்குள் நுழையவே மாட்டான்.

இந்த வீட்டையும் புதர்களையும் கடந்தால் - ஹாஜி சாயபு வீட்டுச் சீதாமர வேலிக்கு மறுபுறத்திலிருந்து அவருடைய மூன்று பீபிகளின் குரல்கள் கேட்கும். கண்ணாடி வளையல்கள் குலுங்கும். 'என்ன சிரிக்கிறாங்க?' சிரித்துச் சிரித்தே உலகத்தை விழுங்கிடுவாங்க!

அவங்களோட நீண்ட தலைவகிடு நெல் வயல்களுக்கு நடுவில் செல்லும் வெள்ளை வரப்புப் போல் தெரிந்தது. கட்டம் போட்ட புடைவை முழங்காலுக்கு ரொம்பக் கீழே இறங்கவில்லை. ஆசை உந்த, புதருக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தான் பேலு. இடக்கை முடமாகிவிட்டது ; வலக் கை இன்னும் கொஞ்சங் கொஞ்சம் வழங்குகிறது. எப்போது இதுவும் முடமாகிவிடுமோ!

செத்த பாம்பைப் போல் புதருக்குள் கிடந்தான் பேலு. புதருக்குப் பக்கத்தில் துறைக்குப் போகும் வழி. ஹா ஜிசாயபுவின் அந்தப் புரத்துக் குளத்தின் தண்ணீர் எவ்வளவு கறுப்பு ! இந்தத் தண்ணீ

ரைப் பார்த்தால் ஹாஜி சாய்பு வீட்டுப் பெண்களுக்கு எரிச்சலா யிருக்கும், அடிவயிற்றில் குமட்டும். ஹாஜி சாயபுவின் இரண்டா வது பீபி, வேளை, நேரம் பார்க்காமல் அங்கே குளிக்க வருவாள். வந்தால் அவள் கையைப் பிடித்து இழுத்து, புதருக்குள்ளே கூட்டிக்கொண்டு வந்து....பேலுவால் இன்னமும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் ஆமை போல் கழுத்தை நீட்டிப் பார்த்தான். செத்த பாம்பைப் போல் வெகுநேரம் வேட்டை கிடைக்கும் ஆசையில் படுத்துக் கிடக்க அவனால் முடியவில்லை.

பேலுவின் மனசில் குஷி பெருக்கெடுத்து ஓடாதபோது அவன் தன் பீபியை ஆன்னு என்று கூப்பிடுவான். ஆற்றில் வெள்ளம் பெருகுவது போல் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கினால் 'ஆன்னு பேகம்' என்று கூப்பிடுவான். வயிறு நிறையச் சாப்பாடு கிடைத்தால் 'பேகம் சாகிபா' என்று அழைப்பான். அவனுக்குத் தன் பேகம் சாகிபாவின் மேல் பைத்தியம், ஹாஜி சாயபுவின் இரண்டாம் மனைவியின் மைத்தீட்டிய கண்களின் மேல் பைத்தியம். ஹாஜி சாயபு அவனைப் படகுத் துறையிலிருந்து விரட்டிவிட்ட பிறகு அரசமரத்தடிப் புதர்தான் அவனுக்குப் புகலிடமாக இருந்தது. அவன் புதருக்குள் செத்த உடும்பைப் போல் படுத்துக் கிடந்தான், ஹாஜி சாயபுவின் இரண்டாவது பீபி இன்னும் துறைக்குக் குளிக்க வரவில்லை .

இப்போது குளிர்காலம். அறுவடையாகிவிட்டதால் வயல்கள் காலியாகக் கிடந்தன. நரேன்தாஸும், மாஜி வீட்டு ஸ்ரீச்சந்

207தாவும், பிரதாப் சந்தாவும் மாத்திரம் கூலியாட்களை வைத்துக்கொண்டு தாழ்நிலத்தில் புகையிலை பயிர் செய்தார்கள். பூமி செழிப்பாக இருக்கும் இடங்களில் வெங்காயம், பூண்டு, வேர்க்கடலைச் செடிகள் வளர்ந்துள்ளன. இந்தப் பக்கம் யாரும் அதிகம் வரும் தில்லை. அப்படி வந்தாலும் புதருக்குள்ளே ஓர் ஆள் வேட்டை யாடும் பூனையைப் போல் ஒளிந்துகொண் டிருப்பதைப் பார்க்க முடியாது. ஜாலாலியின் உருவம் மைதானத்தின் கடைசியில் கண் ணுக்கு மறைந்துவிட்டது. கிழக்கு வீட்டு மாலதி மாட்டை ஓட்டிக் கொண்டு படுகைக்கு வந்தாள். அவள் படுகையில் முளையை நட்டு

அதில் மாட்டைக் கட்டிவிட்டுப் போனாள்.

சர்க்கார் வீட்டுத் துறையில் இன்னும் மேளங்கள் ஒலித்தன, வாஸ்து பூஜைக்காகக் கொடிகள் பறந்தன. டாகுர் வீடு, பால் வீடு. பிஸ்வாஸ்பாடாவில் எந்தப் பக்கம் பார்த்தாலும் அந்தப் பக்கம் மத்தளங்களின் ஒலியும் ஆடு அல்லது எருமையின் தீனக் குரலும் கேட்டன. எருமைப் பலி நடக்கும்போது மத்தளம் அடிப்பவர்கள் ஐம்பது பேர் ஒரே சமயத்தில் வாத்தியத்தை முழக்கு வார்கள்.

பேலு சற்று ஒருக்களித்துக்கொண்டு தலையை ஆமையைப் போல் வெளியே நீட்டினான். புதரின் மறுபுறத்தில் ஹாஜி சாயபுவின் இரண்டாம் பீபியின் உருவம் தெரிந்தது. அது துறையில் இறங்கி வருவது போல் இருந்தது. ஆனால் வரவில்லை. கானல் நீர் போலப் பளபளத்தது அந்தத் தோற்றம். பேலுவுக்கு உள்ளே ஏதோ செய்தது.

ஹாயி ஜாதி சர்க்கார் வீட்டார் கழுத்தில் துண்டைப் போட்டுக் கொண்டு கைகளைக் கூப்பிக்கொண்டு நின்றார்கள். எருமை மாட்டின் மாமிசத்தையும் தோலையும் எடுத்துப் போக சீதலட்சா நதியின் மறுகரையிலிருந்து வந்தவர்கள், துறையின் மறுபுறம் நின்றார் கள் வயலுக்கு வயல் உற்சவம் ; புதருக்குள்ளே பேலு. அவன் ஹாஜி சாயபுவின் இரண்டாம் பீபியாகிய கானல் நீரைப் பார்க்கும் ஆசையில் கழுத்தை நீட்டிக்கொண்டு நின்றான்.

மாலதி புல்லில் முளையடித்து மாட்டை அதில் கட்டிவிட்டு ஆபூவையும் சோபாவையும் கூட்டிக்கொண்டு டாகுர் வீட்டுப் படித்துறைக்கு அவசர அவசரமாகக் குளிக்கப் போனாள். அமூல்யன் வயலில் வாழை மரத்தை நட்டுவிட்டு வந்திருந்தான். அருகம் புல்லைச் செதுக்கி நாற்புறமும் சுத்தம் செய்து ஒரு பெரிய மரத் தட்டில் உலர்ந்த மாமரச் சுள்ளியையும் வில்வ இலையையும் பறித்து வைத்திருந்தான். இரண்டு மூன்று வயல்கள் தாண்டினால் டாகுர் வீட்டு மனை நிலம், பெரிய மாமியும் தனமாமியும் சீக்கிரமாகலே

208குளித்துவிட்டு அங்கே வந்துவிட்டார்கள். சோனா பூஜையறையி லிருந்து மணியடிக்கும் வெண்கலத் தட்டை எடுத்துக்கொண்டு மணியடித்துக்கொண்டே ஓடினான், குளத்து நீரில் பாசி, ஆம்பல் செடிகள். குளிர்காலமாதலால் மரங்களில் பழம் இல்லை ; பூக்களும் கொஞ்சந்தான் ; தொங்கட்டான் பூ, அரளி, செம்பரத்தை, வாஸ்து பூஜைக்குச் செம்பரத்தை உபயோகிக்கக்கூடாது. வெள்ளை அரளியை யாரோ அதிகாலையிலேயே மரத்திலிருந்து திருட்டுத் தனமாகப் பறித்துக்கொண்டு போய்விட்டார்கள். பெரிய மாமியால் குடலையில் ஒரு சில பூக்கள் தான் சேகரிக்க முடிந்தது ; கொஞ்சம் வெள்ளை அரளி, ஆளிப்பூ, தொங்கட்டான்பூ, கொஞ்சம் மல்லிகைப் பூ. குளிரில் பூக்கள் நன்றாகப் பூப்பதில்லை, சுருங்கிக் கிடந்தன.

ஜாலாலி மற்ற ஏழை பாழைகளுடன் ஏரிக்கு வந்துவிட்டாள். பிரம்மாண்டமான ஏரி ; ஒரு கரையில் நின்றுகொண்டு பார்த்தால் மறுகரை கண்ணுக்குத் தெரியாது. அதைப் பற்றி எவ்வளவோ கதைகள், வதந்திகள். அதன் நாற்புறமும் நாணற்காடு ; இடை யிடையே மணல்மேடு. பல ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பில் ஆழமான, கரு நிற நீர். அதைக் கடப்பதென்றால் படகில்தான் செல்லவேண்டும், கதைகளில் சொல்வார்கள் - அத்தண்ணீருக்குள் ஒரு ராட்சசன் இருக்கிறான். நிலவு காயும் இரவுகளில் அவனுடைய வயிறும் முதுகும் மயிற்படகு போல இருக்கும். அது படகுபோல் நீரில் மிதக்கும். மனிதர் அரவம் கேட்டால் படகு தண்ணீருக்குள் மூழ்கிவிடும்! அற்புதச் சம்பவங்கள் உண்மையென்பது படிக்காத மக்களின் நம்பிக்கை.

நள்ளிரவில் ஜனங்கள் தூங்கிக்கொண் டிருக்கும்போது, பத்துக் கோச தூரத்துக்குத் தாழ்நிலம் முழுவதும் நீரில் மூழ்கிக் கிடக்கும் போது, பயிர் வயல்களில் நிலவொளி நிறைந்திருக்கும்போது - நீரில் மயிற்படகு மிதந்துகொண்டு போகும். அதற்குள் ஒரு ராஜ குமாரி இருக்கலாம். சாந்த்பேனேயின் மாற்றுப் பெண் இருக்கலாம். பேலா, லக்கீந்தரின் கதையைச் சொல்லும் பாஞ்சாலிப் பாட்டு

மக்களின் உள்ளத்தில் உணர்ச்சியை எழுப்பும்.

மயிற் படகு தண்ணீரில் மிதக்கும்போது ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கும். ஏரி நடுவே நெருப்புப் பிடித்துக்கொண் டிருப்பது போலத் தோன்றும்,

ஜாலாலி முதலில் தண்ணீரை எடுத்துத் தலைமேல் தெளித்துக் கொண்டாள் ; பிறகு வாயில் ஊற்றிக்கொண்டாள். அப்புறம் தண்ணீரில் இறங்கி உடும்பைப் போல் மிதந்துகொண்டு போனாள், குளிர் நடுக்கியது. ஆனால் வயிற்றில் தீ - தண்ணீரால் அணைக்க

209

14முடியாத தீ. ஆபேத் அலி போய் ஏறக்குறைய ஒரு மாதமாகி விட்டது. இன்னும் திரும்பிவரவில்லை அவன். வந்தால்தான் என்ன? இரண்டு வாரத்துக்கு வயிறு நிறையச் சாப்பாடு கிடைக்கும். அப்புறம் மறுபடி உபவாசந்தான்.

ஜாலாலி நீரில் மிதந்தாள் மிதந்தவாறே தண்ணீரை வாயில் நிரப்பிக்கொண்டு அதை மேல்நோக்கிக் கொப்புளித்தாள். மற்றவர் கள் நீந்திக்கொண்டு போகும் இடத்தை நோக்கி அவளும் போனாள். பெரிய அல்லிக்கிழங்கென்றால் எல்லாருக்கும் ஆசை. இந்த ஏரியில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்று யாருக்கும் தெரியாது. என்ன தான் இல்லை! என்னதான் இருக்காது!

ஒரு வருஷம் ஆயிரக்கணக்கான மக்கள் பூரிபூஜா உற்சவத் துக்குப் போய்விட்டுத் திரும்பியபோது ஏரியின் நடுவில் ஒரு கறுப்பு நிற ஸ்தூபி கிளம்பியிருப்பதைக் கண்டார்கள். அது கொஞ் சங் கொஞ்சமாக மேலே கிளம்பிவந்து பிறகு அப்படியே நின்று விட்டது. பிறகு மறுபடி கீழே இறங்கி மறைந்து போய்விட்டது. இந்த நிகழ்ச்சியே ஒரு கனவோ என்று நினைக்கும்படியாக அதைப் பார்த்தவர்கள் மந்திரத்தை நம்புவது போல் உறுதியாக நம்பினார்கள். பார்க்காதவர்கள் கட்டுக்கதை என்று நினைத்தார்கள். அற்புத நிகழ்ச்சிகளை நம்புபவர்கள் இந்த நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு இன்னும் பல கதைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஈசாகான், ஸோனாயி பீபியுடன் அந்தத் தண்ணீருக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவனுடைய மயிற்படகின் சுக்கானின் தடிதான் கறுப்பு ஸ்தூபிபோல் தண்ணீருக்கு மேலே எப்பொழுதாவது தெரிகிறது. இவ்வாறு ஈசாகான் தன்னைக் கொஞ்சம் வெளிப்படுத்திக் கொண்டு மறைந்துவிடுகிறான், "பாருங்க, நான் கிழ வயசிலேயும் ஸோனாயி பீபியோடே தண்ணீருக்குள்ளே சுகமா இருக்கேன். நீங்க எனக்குத் தொந்தரவு செஞ்சா, நான் உங்களுக்குக் கஷ்டத்

தைக் கொடுப்பேன்" என்று சொல்வது போல.

அதனால் ஏரியில் தண்ணீர் பெருகியிருக்கும் பாத்ர மாதத்தில் ஏரி நடுவே யாரும் படகில் செல்வதில்லை. மிகவும் பயங்கரமான ஏரி இது. இதற்கு அடித்தளமே இல்லை. தண்ணீருக்கடியில் தரையே இல்லை. இருளும் பழங்காலச் செடிகொடிகளுமே தண்ணீருக்குள் அமுங்கிக் கிடக்கின்றன. இந்த ஏரியில் யாரும் பாயை விரித்துக் கொண்டு படகு விடுவதில்லை. ஈசாகானின் தூக்கம் கெடாமல் இருப்பதற்காக வெகு நிதானமாக, ஜாக்கிரதையாகப் படகோட்டு வார்கள், படகோட்டிகள்.

இந்தப் பிராந்தியத்து மனிதர்கள் ராட்சசனிடம் பயப்படுவது போல் இந்த ஏரியிடம் பயப்படுவார்கள். ஆனானப்பட்ட ஈசம் கூட

210இந்த ஏரிகரையில் வழித் தவறிப் போய்த் திண்டாடிவிட்டான். ஒரு தேவதை அவனை இரவு நேரத்தில் தொடர்ந்து வந்து மயக்கி விட்டது. இந்த ஏரியில் தான் ஏழை மக்கள் வயிற்றுத் தீயைத் தணிக்க இறங்குகிறார்கள்.)

வயிற்றுத் தீ பெரிய தீ ; தண்ணீரால் அணைக்கமுடியாத தீ. தண் ணீரில் இறங்கிவிட்டாலே தன் வயிற்றுப் பசி அடங்கிவிடும் என்று நினைத்தவள் போல ஜாலாலி தண்ணீரில் நீந்தினாள். அவள் அதிருஷ்டம், தண்ணீருக்கடியில் சேற்றில் கூட அல்லியைக் காணோம். தினமும் பிடுங்கிக்கொண்டு போனால் எப்படி இருக்கும் ? சில ஆம்பல் இலைகள் தண்ணீரில் கவிழ்ந்து கிடந்தன. குளிர்காலத் தில் ஆம்பல் பூப்பதில்லை. சில கறுப்புப் பழங்கள் மட்டும் இருந்தன. ஜாலாலி நீந்திப் போய் இரண்டு பழங்களைப் பறித்து, நீந்திக் கொண்டே அவற்றைத் தின்றாள். அதற்குள் கறுப்பு விதைகள், ஏதோ ஒருவித நாற்றம். வாசனை என்று ஒன்றுமேயில்லை. எதை யாவது சாப்பிட வேண்டும் என்பதற்காகத் தான் சாப்பிட்டாள். வயிற்றில் தீ கிளம்பிவிட்டால் எதைச் சாப்பிடுவது என்று பறக்கத் தோன்றும். அல்லிக்கிழங்கைச் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போல் வேகவைத்து உரித்துச் சாப்பிடவேண்டும். கொஞ்சம் உப்புப் போட்டுச் சில சமயம் ஓர் உருண்டை புளியைப் போட்டு கலந்து சாப்பிட்டால் அமிர்தம் மாதிரி இருக்கும். இந்த ஆசை யால் உந்தப்பட்டு ஜாலாலி நீந்தினாள். அவளுக்கு எதிரில் இரண்டு அல்லி இலைகள் தண்ணீருக்குள் அமுங்கியிருந்தன. அல்லிக் கொடியைப் பிடிப்பதற்காக அவள் தண்ணீருக்குள் முழுகினாள். கீழே, இன்னும் கீழே, கொடியை ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டு இறங்கினாள் ஜாலாலி. பலமாகப் பிடித்து இழுத்தால் கொடி கையோடு வந்துவிடும். கிழங்கு கைக்கு வராது. மந்திரச் சுரங்கத்துக்குள் இறங்கிச் செல்லும் படிகளை மேலே இழுத்துக் கொண்டுவிட்டது போல் ஆகிவிடும்,

ஆழத்தில் முழுகுவதற்காக, முழுகி அடியில் கொடியின் வேரைத் தடவித் தேடுவதற்காக அவள் முத்துக் குளிப்பவளைப் போல் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டாள். தண்ணீருக்கு அடியில் இருந்ததால் ரொம்பப் பயம். பயத்தால் அவள் கண்களைத் திறக்கவில்லை. கண்ணைத் திறந்தால்தான் ஏதோ ஒரு மந்திரலோகத்துக்கு வந்திருப்ப தாகத் தோன்றும் அவளுக்கு. தண்ணீருக்கடியில் வளர்ந்திருந்த செடிகள் அசைந்து அசைந்து அவளைப் பயமுறுத்தின. நீல மாகவும் பசுமையாகவும் தோன்றிய இருள் கறுப்பாகி, அவலட்சண மாகி அவளைச் சூழ்ந்துகொண்டது நாற்புறமும். அவள் ஒரு

211மூச்சில் கீழே முழுகி மறுவிநாடி மேலே கிளம்பிவந்தாள். எவ் வளவோ காலம் கழித்து ஆகாயத்தையும் சூரியனையும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. கவலையில்லாமல் மூச்சு விட்ட அவளுடைய முகம் மகிழ்ச்சியில் ஜொலித்தது. அவளுடைய கையில், தங்கத்தைவிட மதிப்பு வாய்ந்த ஒரு பெரிய அல்லிக் கிழங்கு இருந்தது.

அவளுடைய கூடையை அலைகள் சற்றுத் தூரம் தள்ளிப் போயிருந்தன. அவள் கூடையைத் தன்னருகில் இழுத்துக்கொண்டு அல்லி வேர்களைக் கடித்தெறிந்துவிட்டுப் பார்த்தபோது கிழங்கு அப்படியொன்றும் பெரிதாக இல்லை என்று கண்டாள். இது சிவப்பு வகை. மஞ்சள் வகையாயிருந்தால் கிழங்கு நல்ல தித்திப் பாக இருக்கும். வெள்ளை ரகம் துவர்க்கும். சிவப்பு ரகத்தில் ஒரு சிறு கசப்பு இருக்கும். அவள் கிழங்கை நன்றாகக் கூடையில் வைத்துவிட்டுக் கரைப்பக்கம் திரும்பிப் பார்த்தாள். கரையில் யாரும் இல்லை. எல்லாரும் அல்லிக்கிழங்கைத் தேடிக்கொண்டு ஜலத்தில் இறங்கிப் போய்விட்டார்கள். ஆபேத் அலி இன்னும் வரவில்லை. கொய்னாப் படகில் வேலைக்குப் போனவன் இவ்வளவு நாளாகியும் இன்னும் திரும்பவில்லை. ஜப்பரும் வருவதில்லை. அவன் பாபுர் ஹாட்டில் நெசவு வேலைக்குப் போய்விட்டான் ஜோட்டன், ஆபேத் அலிக்காக ஒரு கோழி கொண்டுவந்திருந்தாள். ' அது ஹாஜிசாயபு வீட்டுக்குப் பறந்து போய்விட்டது. அவருடைய சிறிய பீபி அதைக் கொன்று சாப்பிட்டுவிட்டாள்.

நாலாப் பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஏழை மக்கள் தண்ணீரில் இறங்கி அல்லிக்கிழங்கு தேடினார்கள். பொழுது சாய்வதற்கு முன் அவர்கள் தண்ணீரை விட்டு எழுந்து போய்விடுவார்கள். குளிர்கால முடிவில் அல்லி இருக்காது ; ஆம்பல் இலைகள் தண்ணீரில் மிதக்காது, ஏரி நீர் அமைதியாக, சலனமற்று இருக்கும். அப்போது புதர்களிலும் தண்ணீரிலும் கறுப்பு வாத்துக்கள் நடமாடும். பல ரகப் பறவைகள், சிவப்புச் சிறகுகள், நீலச் சிறகுகள் கொண்ட பறவைகள், ஜலப் பிபி பறவைகள், வித விதமான கொக்குகள் - இவற்றின் கீச்சுக்குரல் ஏரியை நிரப்பிவிடும். அப்போது மூடாபாடா ஜமீன்தார் வீட்டுப் பையன் கள் யானையிலேறி வருவார்கள். ஏரி கரையில் கூடாரம் அடித்துக்கொண்டு காலையிலும், இரவில் நிலாவிலும் பறவைகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைச் சாப்பிடுவார்கள். குளிர்கால முடிவில் ஒரு மாதத்துக்குமேல் இந்த மாதிரி வனமகோற்சவம் கொண்டாடுவார்கள்,

கோடைக் காலந்தான் ஜாலாலிக்கு மிகவும் கஷ்டமான காலம். அநேகமாக எல்லா நேரமும் வயிற்றைத் தரையில் அழுத்திக்

212கொண்டு படுத்திருக்க வேண்டியிருக்கும். மழை வந்துவிட்டால் நெல் வயலிலும் சணல் வயலிலும் ஆபேத் அலிக்கு வேலை கிடைக்கும். மழை வந்தால், சாப்பிட வழியில்லாத ஏழைகளின் ஒரே ஆதாரமான அல்லியும் ஆம்பலும் பூமியில் தோன்ற ஆரம்பிக்கும். மழைக்கால முடிவில் அவை பூக்கும். தண்ணீருக்கடியில் கிழங்கு, அவர்களுக்கு மிகவும் பிடித்தமான, சாதத்தைப் போன்ற உணவு கிடைக்கும். தண்ணீருக்கு அடியில் உள்ள அல்லிக்கிழங்கு மிகவும் மதிப்பு வாய்ந்த பொருள் ; அதை அலட்சியம் செய்யக் கூடாது. சும்மா உட்கார்ந்திருந்தால் பாவம். அல்லிக் கிழங்கைத் தேடிக்கொண்டு தண்ணீரில் மிதந்தால் புண்ணியம். ஜாலாலி கூடையைக் கையால் பிடித்துக்கொண்டு மிதந்தாள். அவள் முழுகினால் யாராவது கூடையிலுள்ள கிழங்கை எடுத்துக்கொண்டு விடுவார்கள்.

எதிரில் ஒரே தண்ணீர், எல்லையற்ற தண்ணீர். அல்லிக்கிழங்கு ஆசையில் அவள் வெகுதூரம் வந்துவிட்டாள். இனிமேல் கிழங்கு இருக்காது போலிருந்தது. வலப் பக்கம் தாமரை காடாக வளர்ந் திருந்தது. இடப் பக்கம் படிகம்போல் தெளிந்த நீர். எதிரில் தண்ணீரில் ஏதேதோ மிதந்து திரிந்தன. பெரிய கஜார் மீனாக இருக்கும். தூணைப் போல் நீளமான, பெரிய பெரிய மீன்கள். பளபளப்பான கறுப்பு நிறம், வாயிலும் தலையிலும் சிந்தூர் தடவியது போல் சிவப்பு. உடலில் மலைப் பாம்புக்கு இருப்பது போல் வளையங் கள். அவளுக்குப் பயமாக இருந்தது. பயத்தாலோ, திகைப்பாலோ வேறு யாரும் இவ்வளவு தூரம் வரவில்லை. எவரும் வராததால் தான் இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் அல்லி இருக்கிறது. அவள் பயத்திலிருந்து தப்புவதற்காகக் கண்களை மூடிக்கொண்டு நீரில் முழுகினாள். ஆனால் தண்ணீருக்குள் கண்ணைத் திறந்தபோது ஒரு பெரிய கஜார் மீன் அவளையே பார்த்துக்கொண் டிருப்பதைக் கண் டாள். அது சலனமற்று இருந்தது ; வாலை மட்டும் ஆட்டியது. ஓர் அபூர்வ ஜந்து-மீன் வகையைச் சேர்ந்ததாகத் தோன்றியது. தவளையைப் போல் தண்ணீருக்குள் இறங்கி வந்தது. எவ்வளவோ காலமாக அங்கு வளர்ந்திருக்கும் நீர்ப்புல், நீர்க் கொடிகளுக்குள் ளிருந்து அது தன் முகத்தை மாத்திரம் வெளியே நீட்டிக்கொண் டிருந்தது. ஜாலாலியால் அதன் முகத்தை மட்டுமே பார்க்க முடிந் தது. தன் பயங்கரமான, கறுத்த வாயைத் திறந்து, தண்ணீரை குடித்து விட்டு வாயை மூடிக்கொண்டது. அது ஜாலாலியைக் கண்டு பயப் பட வில்லை; மாறாக அவளையே பயமுறுத்தியது.

வயிற்று நெருப்பு பெரிய நெருப்பு, தாங்க முடியாத நெருப்பு.

213பயத்தாலும் திகைப்பாலும் சுருங்கிப் போய்விட்டாள் ஜாலாலி. அவள் இன்னுங் கொஞ்சம் கீழே இறங்கினால் அவளுடைய கை மண்ணைத் தொட்டுவிடும்; அல்லிக்கிழங்கும் அவள் கைக்குக் கிட்டி விடும். ஆனால் மூச்சுப் பிடிக்க முடியவில்லை அவளால். அவள் மூச்சு விடுவதற்காகத் தண்ணீருக்கு மேலே வந்தாள். மூச்சு விட்டாள். தண்ணீரில் மிதந்து சற்று இளைப்பாறினாள். மீண்டும் நீருக்குள் மூழ்கிய அவள் பசுமை நிரம்பிய ஒரு தேசத்தைக் கண்டாள். நீல நீர் அங்கே கம்பளமாக விரிந்து கிடந்தது. இருட்டு அடர்ந்து கொண்டு வந்தது. அவளுடைய கை அல்லிக்கொடியின் அடியை எட்டிவிட்டது. கொடி மண்ணிலிருந்து வெளிப்படும் இடத்தைத் தொட்டுவிட்டது. மீன் வாயைத் திறந்துகொண்டு தன் பக்கம் நெருங்கி வருவதை இருட்டிலும் கவனித்தாள் ஜாலாலி.

பிரம்மாண்டமான மீன். எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தால் என்ன ? மீன் மீன் தானே ! ஒரு மீன், ஒரு சாதாரண மீன். 'நீ எவ்வளவு பெரிசாக இருந்தா என்ன, மனுஷியா பிறந்த நான் உனக்குப் பயப்படுவேனா ?'

இம்மாதிரி ஏதோ நினைத்துக்கொண்டு அவள் அல்லிக்கொடியின் வேரை இறுகப் பிடித்தாள். மீன் பசும்புல்லுக்கு நடுவிலிருந்து கொண்டு அவளைப் பார்த்தது ; பார்த்துக்கொண்டு மெதுவாக வாயை அசைத்தது. அல்லிவேரைப் பிடித்துவிட்டதில் ஜாலாலிக்குத் தைரியம் அதிகரித்தது. அவள் இன்னும் சற்று முன்னேறினாள். மீன் சற்றுப் பின்வாங்கியது. அவள் அப்புறம் தாமதிக்கவில்லை. மீன் எப்போது பயந்துவிட்டதோ இனிமேல் தண்ணீரில் அமுங்கிக் கிடப்பானேன்? அவள் சட்டென்று மல்லாந்து கொண்டு முதலையைப் போல் மேலே மிதந்து வந்தாள்.

எவ்வளவோ நாட்களுக்கு முன், தான் மாலதியின் ஆண் வாத்தைத் திருடி அதன் கழுத்தைத் திருகியது, இரவில் அதை வாட்டி அதன் மிருதுவான மாமிசத்தை சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பம் விட்டது. அல்லாவின் உலகம் இனிமை நிறைந்ததுதான் என்று நினைத்தது, இவை எல்லாம் அவளுக்கு இப்போது நினைவுக்கு வந்தன. இந்த மீன் அந்த வாத்தை நினைவுறுத்தியது. இதன் கண்ணும் எப்போதும் தண்ணீருக்குள் அசையாமல் இருந்தது. ஒரு பெரிய மலைப்பாம்பு தன்னை விழுங்க வருவதாக எண்ணினாள் அவள். ஆனால் பாம்பா யிருந்தால் இத்தனை நேரத்துக்குள் தண்ணீரை வாலால் அடித்து அடித்துக் கொம்மாளம் போட்டிருக்கும். இந்த மாதிரி அமைதியாக இருக்காது. தன் பயம் கற்பனையே என்று நினைத்தாள் அவள்.

214அவள் கண்களை திறந்தால் தண்ணீரிலிருந்த செடி கொடிகள் உயிர் பெற்று அவளை நோக்கிப் பாய்ந்து வருவது போல் இருந்தது. ஆகையால் அவள் கண்களைத் திறக்க விரும்பவில்லை,

பச்சையான கடப்பம்பூவை ஒத்த புற்களிடையே அவளை நோக்கி வருவது என்ன என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் மூழ்கி மூழ்கித் தண்ணீருக்குள் போனாள். முத்துக் குளிப்பவள் போல் அவள் மூழ்கினாள், மேலே வந்தாள். கரையில் நின்றுகொண்டு பார்த்தால் ஏராளமான மனிதர்கள் தண்ணீருக்குள் முழுகுவதும் பிறகு மேலே வருவதும் தெரியும். அவர்களுக்குச் சிலசமயம் அல்லி கிடைக்கும், சிலசமயம் கிடைக்காது. எப்போது கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. எல்லா அல்லி வேரிலும் கிழங்கு இருப்பதில்லை. கிழங்கு தேடுபவர்கள் ஏரியெங்கும் பரவி இருந்தார்கள். சூரியன் உயரே வந்துவிட்டான். கண்ணைத் திறந்து பார்த்தால் வெகு தூரத்துக்குச் சலனமற்ற நீர், குளிர்ச்சியான வீடு போல் தெரிந்தது. மறுபக்கம் கண்ணுக்குத் தெரியவில்லை. எல்லையற்ற நீர் எவ்வளவோ காலமாக, பலவிதக் கதைகளைச் சுமந்துகொண்டு கிடந்தது அங்கே குளிர் காலத்தில் அந்தத் தண்ணீர் இன்னும் கறுப்பாகிவிடுகிறது. குளிர் காலத்தில் சுற்றுப்புறத்திலுள்ள நாணற் புதர்களில் வசிக்கும் பறவை கள் வேறெங்கோ பறந்து போய்விடும். தண்ணீர் சற்று வடிந்தால் விஷப் பாம்புகள் அந்தப் புதர்களில் பொந்துகளுக்குள் குளிருக்குச் சரணடையும். வெயிலுக்காக, மழைக்காகக் காத்திருக்கும் அவை. மழை வந்துவிட்டால் அல்லது வசந்த காலத்தில் சூரியன் உச்சி வானத்தில் பிரகாசிக்கும்போது அவை நிலத்திலிருந்து தண்ணீருக்குள் இறங்கிவிடும். தூரத்திலுள்ள சாலமரக் காட்டிலிருந்து கூடச் சில மயால் பாம்புகள் இந்தத் தண்ணீருக்கு வந்துவிடும்.

ஜாலாலி ரத்தச் சிவப்பான இரண்டு கண்கள் தன்னையே எப்போதும் பார்த்துக்கொண் டிருப்பதைக் கவனித்தாள். நீரின் ஆழத்தில் ஒரே இருட்டாக இருந்ததால் ஒன்றும் தெளிவாகத் தெரிய வில்லை. அந்த நீல நிற, பச்சை நிறப் புதர்களில் இரண்டு அல்லிக் கிழங்கு கிடைக்காதா என்ற ஆசையில் ஜாலாலி கறுப்பு வாத்தைப் போல் நீரில் முழுகியவாறே அந்தச் சிவப்புக் கண்களுடன் மரண விளையாட்டு விளையாடினாள்.

அப்போதும் பேலு புதருக்குள் படுத்துக் கிடந்தான், ஹாஜி சாயபுவின் பீபி கானல் நீராகத் தெரிந்தாள், வரவில்லை. வந்தால் சட்டென்று அவளைப் பிடித்துப் புதருக்குள் இழுத்துக்கொண்டு விடுவான். சகடமர நிழலில் பீபியின் உருவம் தெரிகிறாற்போல் இருந்தது, தெரியவில்லை. வெயில் தலையுச்சிக்கு வந்துவிட்டது.

215பீபியின் முகத்தையோ தேகத்தையோ பார்க்க முடியவில்லை வாஸ்து பூஜையில் ஒலித்த மேள, தம்பட்ட ஒலிகள் எப்போதோ நின்றுபோய்விட்டன. குளத்தங்கரையில் பெரிய மாமி. சோனா வயலில் நின்று மணியடித்துக்கொண்டே இருந்தான்.

உற்சவம் முடிந்துவிட்டது. இப்போது எல்லோரும் எள்ளு, துளசி, பெரிய மரத்தட்டு, நைவேத்தியச் சாமான்கள், எள்ளுருண்டை, கத்மா எல்லாவற்றையும் வீட்டுக்கு எடுத்துப் போகவேண்டியதுதான், தன மாமி வெள்ளைக் கல்ஜாடியில் பாயசம் எடுத்துக்கொண்டு போனாள். ரஞ்சித், பூ பழம், புதிய துண்டு, தேங்காய் இவற்றை எடுத்துக்கொண்டு போனான். வயலிலேயே பிரசாத விநியோகம் நடந்தது. கிராமத்து இளைஞர்கள், பெண்கள், கிழவர்கள், குழந்தைகள் எல்லாரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு போனார்கள். இன்று இரவு பூராவும் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எரியும். சர்க்கார் வீட்டார் குளத்தங் கரையில் நாலைந்து பெட்ரோமாக்ஸ் விளக்குகளை எரிய விடுவார்கள். வெவ்வேறு இடங்களில் விளக்குகள் எரிந்துகொண் டிருக்கும். இரவு பூராவும் கிராமமே வெளிச்சத்தில் மூழ்கிக் கிடக்கும். ஆட்டு மாமிசம், பச்சரிசிச் சோறு இவற்றின் வாசனை எங்கும் பரவும். பேலுவின் நாக்கில் ஜலம் ஊறியது.

ரஞ்சித் வேறொரு வயலில் மாலதி இருப்பதைக் கண்டான். அவள் ஏதோ வேலையாக இருந்தாள். அவள் சிலபேரை உட்கார வைத்து, அவர்களுக்குக் கிச்சடியும் பாயசமும் பரிமாறினாள். குளிர்கால வெயில் இதமாக இருந்தது. வாடைக் காற்றில் நல்ல குளிர். எல்லாரும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு வயலில் புல்லின்மேல் படுத்துக்கொண்டு குளிர் காய்ந்தார்கள்.

சோனா மணியடிக்கும் வெண்கலத் தட்டைக் கீழே போட்டுவிட்டு ஓடினான். படுகையில் ஆடு மேய்க்க வந்த பாதிமா அவனை ஜாடை காட்டிக் கூப்பிட்டாள். அவள் ஓர் ஆமையைப் பார்த்து விட்டாள்; அதைப் பிடிக்கத்தான் சோனாவைக் கூப்பிட்டாள். இது குளிர் காலம். குளிர் காரணமாக, ஆமைகள் வெகுநேரம் தண்ணீரில் இருக்க முடியாது. அவை கரைக்கு வந்து குளிர் காயும் : அல்லது பூமிக்குள் புதைந்திருக்கும். ஆமைகள் வயல் உழப்படும் போது வெளியில் வந்துவிடும்.

ஆனால் பாதிமா சோனாவுக்கு ஆமையொன்றையும் காட்டவில்லை. அவள் சோனாவை அரசமரத்தடிக்கு இழுத்துக்கொண்டு போனாள். "புதருக்குள்ளே என்ன இருக்கு, பாரு!' அது பைத்தியக்கார டாகுராக இருக்குமென்று பாதிமா நினைத்தாள். சோனாவின் பைத்தியக்காரப் பெரியப்பா சிலசமயம் ராத்திரி வேளையில், சில சமயம் அதிகாலையில்,

216வீட்டைவிட்டுக் கிளம்பி வயல்களை கடந்து, ஸோனாலிபாலி ஆற்றையும் தாண்டி எங்கோ போய்விடுவார். அவர்தாம் இன்று வெகுதூரம் போகாமல் அரசமரத்தடியில் மட்கிலாச் செடிபுதருக்குள் உட்கார்ந்துகொண்டு பறவைகளுடன் பேசிக்கொண் டிருக்கிறார் என்று நினைத்தாள்' பாதிமா. புதருக்குள் இருப்பது பைத்தியக்கார டாகும் அல்ல, பேலுஷேக் என்று அவளுக்குத் தெரியவில்லை, பேலுஷேக் புதருக்குள் ஒளிந்துகொண் டிருந்தான் - தன் உயிரை விடப் பிரியமான, மரணத்திலும் தன்னால் மறக்க முடியாத, ஹாஜிசாயபுவின் இரண்டாவது பீபியைப் பிடித்திழுத்துப் புதருக்குள் கொண்டு வருவதற்காக.

சோனா புதருக்குள் எட்டிப் பார்த்து, ''பெரியப்பா !" என்று கூப்பிட்டான். அங்கு இருப்பது அவராகவே இருக்கும் என்று அவனும் நினைத்தான், இந்தப் பிராந்தியத்திலேயே அவர் ஒருவருக்குத்தான் வயல்கள், மரங்கள், செடிகொடிகள், திருவிழா எல்லாம் ஒன்று. தான் எவ்வளவு நேரமாக அங்கே காத்துக்கொண் டிருக்கிறோம் என்று போலுவுக்கே தெரியவில்லை. யாரோ வெளியிலிருந்து கூப் பிட்டதைக் கேட்டதும் பேலுவின் கால்கள் புதருக்கு வெளியே தெரிந் தன். அதைப் பார்த்துத்தான் உள்ளே யாரோ இருப்பது அவர் களுக்கு தெரிந்தது. அவர்கள் தவழ்ந்துகொண்டு புதருக்குள் நுழைந்தார்கள். முதலில் சோனா, பின்னால் பாதிமா. பேலு அவசர அவசரமாக எழுந்தான். ஓடிப் போய்விடலாமா என்று நினைத்தான். அப்படி ஓடினால் அகப்பட்டுக்கொள்ள நேரலாம். அவன் கெட்டுப் போன எதையோ புதருக்குள் தேடிக்கொண் டிருப்பதாகப் பாவனை செய்தான்.

இவ்வளவு ரசனையற்ற ஒரு மனிதன் இருக்க முடியும் என்றே சோனாவும் பாதிமாவும் நினைக்கவில்லை. " நீங்களா?” என்று கேட்டான்

சோனா.

"ஆமா, ஒரு வேர் தேடறேன்.'' "எதுக்கு ?" "அரைச்சுக் கையிலே போட்டுக்க." "கிடைக்கல்லியா ?" "இல்லே. வேரெல்லாம் எங்கேயோ மறைஞ்சுக் கிடக்கு."

இப்படிச் சொல்லிவிட்டுப் பாதிமாவை முறைத்துப் பார்த்தான் பேலு. அவன் மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டான், சாமு இந்தப் பொண்ணுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கறான். அவளுக்கு இங்கிலீஷ் கத்துக் கொடுக்கறான். இந்த அநாசாரம் போலுவுக்குப் பிடிக்கவில்லை. பைத்தியக்கார டாகுரின் முகம் அவன் மனசுக்கு

217முன்னே வந்தது ; வந்ததுமே ஆத்திரம் பிறந்தது. தன் கையைப் பார்த்துக்கொள்ளும்போது அவன் அடையும் துக்கத்துக்கு எல்லை இல்லை. செல்வாக்குக் குறைந்து வந்தது. அவனுடைய பீபி ஆன்னு எண்ணெய் கடன் வாங்கப் போகும் சாக்கில் ஹாஜிசாயபுவின் சின்ன பீபியிடம் போய்விட்டாள். சின்ன பீபியிடந்தான் போனாளோ, சின்ன பாபுவிடந்தான் போனாளோ? இன்னும் திரும்பவில்லை.

பீபியின் நினைவு வந்ததும் அவன் சீக்கிரம் போக நினைத்தான். சீக்கிரம் போவதென்றால் பெரிய தோப்பின் வழியேதான் போக வேண்டும். வேறு வழி கிடையாது. வெறும் மூங்கில் காடு, சில பிரம்புச் செடிகள், ஒரே இருட்டு. பகல் வேளையில் அங்கே நடந்து போகவே பயமாயிருக்கும். பக்கத்தில்தான் கிராமத்து இடுகாடு.

பேலு வேகமாக நடந்தான். இடக் கையில் கொஞ்சங்கூடச் சக்தி இல்லை. மந்திரித்த சோழி தொங்கியது அதில். அவனுடைய பீபி இன்னும் தன் ஜோடியுடன் திரிந்துகொண் டிருந்தாள். அவனுக்கு அவள் வயிற்றில் உதைக்கவேண்டும் போல் இருந்தது, அவனுடைய உடலும் பற்களும் இறுகிக்கொண்டன. தன் பீபி அப்போதுதான் தோப்பிலிருந்து வெளியே வருவதை அவன் கண் டான். ஆனால், 'இந்தக் கை, இந்தக் கை !' கை வழங்காமற் போன தால் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால், அவள் தோப்பிலிருந்து வெளிப்பட்டதுமே அவன் பயங்கரமாக, "ஆன்னு, நீயா?'' என்று கத்தினான்.

ஆன்னு நிற்கவில்லை. இப்படிப்பட்ட மனிதனிடம் அவளுக்கு என்ன பயம்? அவள் அவனைத் தாண்டிக்கொண்டு போனாள், "நீ என்ன மனிசன்! நான் உன்னைக் காக்கா விரட்டச் சொன் னேன் ; நீ என்னடான்னா தோப்புலே சுத்தறே."

"நீ தோப்புலே என்ன பண்றே ?'' ''உன்னோடே சேர்ந்திருக்கணுமின்னு உன்னைத் தேடிக்கிட் டிருக்கேன் !"

உம், அவனோட பீபி கூட அவனை இளக்காரம் பண்ணக் கற்றுக்கொண்டிருக்கிறாள். யாரை உதைப்பான் அவன்? தன்னுடைய வயிற்றிலேயே உதைத்துக்கொள்ள வேண்டியதுதான்! அவன் தன் வயிற்றிலேயே உதைத்துக்கொள்ள விரும்பினான். அவன் மனைவிகூட அவன் கையாலாகாதவன் என்று தெரிந்துகொண்டு விட்டாள். இப்போது யார் யாருடைய வயிற்றில் உதைப்பது ? அவள் தோப்பில் ஒளிந்துகொண்டு என்னவெல்லாமோ செய்கிறாள். கடவுளால் கூட அவளைக் கண்டுபிடிக்க முடியாது. பேலு புகார் செய்யும் குரலில், "எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நீ '' நினைச்சுக்கிட்டிருக்கே! நாசமாப் போன காக்கா!'' என்று கத்தினான்,

218அவள் பதிலடி அடித்தாள். ''எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நீ நினைச்சுக்கிட்டிருக்கே!" ""நீ பருவப் பொண்ணு, உனக்குத் தெரியாதது உண்டா ?" என்று சொல்லி நிறுத்திக்கொண்டான் போலு.

சற்றுத் தூரத்தில் சோனாவும் பாதிமாவும் பலாமரத்தடியில் நின்றார்கள். சோனா பலா இலைகளையும் கிளைகளையும் வெட்டிப் பாதிமாவின் ஆட்டுக்குப் போட்டான், பேலு ஆன்னுவோடு சண்டை போட்டால் அந்தச் சத்தத்தில் அவர்கள் இங்கே வந்து விடுவார்கள். வந்தால் இங்கு நடந்த விஷயம் அம்பலமாகிவிடும். அவன் அரசமரத்தடியில் புதருக்குள்ளே ஹாஜிசாயபுவின் இரண் டாவது பீபிக்காகக் காத்துக்கொண் டிருந்தது, ஆன்னுவுக்குத் தெரிந்துவிடும். அவன் ஆன்னுவின் உடலிலிருந்து வந்த மீன் நாற்றத்தை இந்தத் தடவை பொறுத்துக்கொண்டான். அவன் கத்தினான்: ''குளிச்சுட்டு வீட்டுக்குள்ளே வரணும்! இல்லியோ, எனக்காச்சு, உனக்காச்சு, பார்த்துடுவோம்!''

ஆன்னுவின் அடங்காப்பிடாரிதனத்தைப் பொறுத்துக்கொள்ள நேர்ந்ததில் அவனுக்கு ஏற்பட்ட கோபம் பைத்தியக்கார டாகுரின் மேல் பாய்ந்தது.

'அந்தப் பாவி யானை மேலே ஏறி அவனோட ரெண்டு கையையும் ஒடைச்சுட்டு மைதானத்திலே ஹாய்யாப் பறவை ஓட்டறான், காத்தை ஊதிக்கிட்டுப் போயிக்கிட்டிருக்கான். அந்த ஆள் மட்டும் ஆப்புடட்டும், அவனைக் கொல்லாமெ விடப்போறதில்லை !'

கோபமும் ஆக்ரோஷமும் பேலுவைக் குதறிப் பிடுங்கின, எண் ணெய் கடன் வாங்கிக்கிட்டு வரேன்னு, ஆன்னு அவனை மீன் வத்தலுக்குக் காவல் வச்சுட்டு, இங்கே தோப்புக்குள்ளே என்ன செஞ்சுக்கிட்டிருந்தான்னு அவனுக்குத் தெரியும்.

தன் இரண்டு கைகளையும் மேலே தூக்கிப் பார்த்தபோதுதான் எவ்வளவு கையாலாகாதவன் என்று பேலுவுக்குப் புரிந்தது. முரட்டுப் பொண்டாட்டியோட அவனால் இந்த ஜன்மத்துலே சண்டை போட முடியாது. முடிந்திருந்தால் இந்த இருட்டுத் தோப்புக்குள்ளே அவளோட ஒரு பெரிய யுத்தமே பண்ணியிருப் பான். வேறு வழியின்றி, அவன் சாதுவாக ஆன்னுவைத் தொடர்ந் தான், அவர்களிடையே எந்தவிதச் சச்சரவும் இல்லாதது போல, அவர்கள் எங்கேயோ விருந்துக்குப் போய்விட்டு அந்தத் தோப்பு வழியே வீடு திரும்புவது போல் சாதுவாக நடந்தான்.

இன்னும் மேளம், தம்பட்டம் முழங்கின. மாலதி வயலில் பி, சாதம் கொடுத்துக்கொண் டிருந்தாள். காகிதத்தால் செய்த சிவப்பு, நீலநிறக் கொடிகள் காற்றில் அசைந்தன. வெள்ளைப்

219பட்டுப் புடைவை கட்டிய மாலதி, ஆசாரமும் அனுஷ்டானமுமே கதியாக இருக்கும் மாலதி. எல்லாரையும் போல் வாத்து வளர்க்கும் மாலதி, ஆண்வாத்தின் மேல் தனக்கிருந்த பாசத்தால் இரவு முழுதும் மழையில் நனைந்துகொண்டே அதைத் தேடிய மாலதி - யுவதி மாலதி எல்லாருக்கும் பாயசம் கொடுத்துக்கொண் டிருந்தாள்.

சோனா பலாமரக் கிளையின் மேல் உட்கார்ந்திருந்தான். பாதிமா விஷமக்கார வண்ணத்துப் பூச்சியைப் போல் மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து குதித்தாள். சோனா பலாமரக் கொப்புகளை ஒடித்து ஆட்டுக்குப் போட்டான். ஆடு அவற்றைக் கவ்வுவதற்காகத் தன் பின்னங்கால்களால் நின்றுகொண்டு குதித்தது. அதன் மகிழ்ச்சி யைப் பார்த்துச் சோனா இளந்தளிர்களைப் பொறுக்கிப் பொறுக்கி அதற்குப் போட்டான். இப்போது அதற்குப் பக்கத்தில் இலை களும் கிளைகளும் குவிந்துவிட்டன. சோனா மரத்திலிருந்து குதித் தான். குதித்ததும் பாதிமா அவனுடைய காதில் கிசுகிசுத்தாள்: "வரீங்களா, சோனா பாபு ?"

“எங்கே ?" "மகிழம்பழம் பொறுக்க." “எவ்வளவு தூரம் ?" பாதிமா விரலை நீட்டிக் காண்பித்தாள். "ரொம்பத் தூரமில்லே. அதோ பாருங்க, ஹாஸான் பீரோட தர்கா. அதோட வலப் பக்கத்து மேட்டி லே குளம், அந்தக் குளத்தங்கரைக்குப் போகணும்."

* சித்தப்பா வைவாரே !" “இதோ வந்துடலாம்! ஒரு ஓட்டத்திலே போவோம், ஒரே ஓட்டத்திலே திரும்பிடுவோம்."

சோனா நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். விசேஷ தினமானதால் யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை. லால்ட்டுவும் பல்ட்டுவும் பாபுவுடன் ஹோமத்துக்கு ஹவிஸ் சமைக்கப் போயிருந்தார்கள். மாமா சர்க்கார் வீட்டு வாஸ்து பூஜைக்குப் போயிருந்தார். சோபா, ஆபு, கிரணி எல்லாரும் பிரசாதம் சாப்பிட்டுவிட்டுத் திரிந்து கொண்டிருந்தார்கள். விசேஷ நாளில் யார் எங்கே இருக்கிறா னென்று யார் கவலைப்படுவார்கள்? பைத்தியக்காரப் பெரியப்பா அதிகாலையில் எந்தப் பக்கம் போனாரென்று யாருக்குமே தெரியாது. அவன் திரும்பிவர நேரமானால் எல்லாரும் அவனும் அவருடன் போயிருப்பதாக நினைத்துக்கொண் டிருப்பார்கள், சோனா 'போம். போம்' என்று வாயால் சப்தம் செய்துகொண்டு பாதிமாவுடன் மைதானத்தில் ஓடினான். பெரிய மைதானம். வடக்கே போனால், ஹாஸான் பீருடைய தர்கா. கோபால் டாக்டர் அந்தப் பக்கமாக

220சைக்கிளில் வந்தார். அவர் கண்ணில் படாதிருப்பதற்காக அவர்கள் இருவரும் ஒரு பள்ளத்தில் ஒளிந்து கொண்டார்கள். இருவரும் கால்களைக் குற்றிக்கொண்டு தலைகுனிந்து உட்கார்ந் திருந்தார்கள். அவனும் பாதிமாவும் தனியாக மைதானத்தில் சுற்று வதைக் கோபால் டாக்டர் பார்த்துவிட்டால் ஆபத்துத்தான்! "சோனா, நீ நேத்திப் பய ! இவ்வளவு பெரிய மைதானத்துலே இந்தப் பொண்ணோடே சேர்ந்துக்கிட்டு தனியா சுத்தறியே, என்ன தைரியம் உங்களுக்கு ! போங்க போங்க, வீட்டுக்கு ஓடிப் போங்க !" அல்லது கோபால் டாக்டர் வீட்டில் போய்ச் சொல்லிவிடுவார். ஈசம் அவனுக்குப் பிரியமான தர்மூஜ் வயலை விட்டுவிட்டு அவனைத் தேடிக்கொண்டு ஓடிவருவான்; "எங்கே போனீங்க. சோனா பாபு! சோனாபாபு!" என்று கூப்பிடுவான்.

முன்பு ஒரு நாள் சோனா தனியே தர்மூஜ் வயலுக்குப் போனான். எவ்வளவோ நாளுக்கு முன்பு. ஆனால் இன்னும் நினைவு வருகிறது, அந்த வயல், மாலினி மீன், பெரிய மியானின் இரண்டு பீபிகள், துர்க்கையைப் போன்ற முகம், மூக்கில் மூக்குத்தி தொங்கியது. எல்லாவற்றிலும் ஒரு மர்மக் கவர்ச்சி. அந்தக் கவர்ச்சிக்கு ஆசைப்பட்டு ஓடினான் சோனா. பாதிமா தன் துணியை மடித்துக் கட்டிக்கொண் டிருந்தாள். அவளுடைய மேலுடம்பு காலியாக இருந்தது. மூக்கில் மூக்குத்தி தொங்கியது. காதில் பித்தளை டோலாக்கு. மூக்கின் நடுத் தண்டில் தங்கத்தாலான மூக்குத் திருகாணி, திருகாணியின் தலை சந்திரன் மாதிரி " சப்பட்டையாக இருந்தது. சோனா இந்தச் சப்பட்டைச் சந்திரன் பாதிமாவின் மூக்குத் தண்டில் எப்படி ஒட்டிக்கொண் டிருக்கிறது என்று அதைத் தொட்டுப் பார்த்தான். சோனாவின் வாசனை பாதிமாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் உடம்பில் சந்தனத்தின் மணம், தலையில் தேய்த்திருந்த எண்ணெயின் வாசனை. சோனா பாதி மாவின் மூக்கை மடக்கி அதில் ஒட்டிக்கொண் டிருந்த சப்பட்டைச் சந்திரனைப் பார்த்தான்.

பாதிமாவின் உடம்பு சந்தோஷத்தில் சிலிர்த்தது. அவள் சொன்னாள் ; "நாம் போகலாம், வாங்க. கோபால் டாக்டர் போயாச்சு. தூரத்தில் கோபால் டாக்டரின் சைக்கிள் மணியோசை கேட்கிறது. வயல்களில் பயிர் இல்லை. காலி நிலத்தில் சில சில இடங்களில் மட்டும் சிறு புதர்கள் இருக்கின்றன. இப்போது ஓடிப் போய்விடலாம்.''

அவர்கள் ஓடும்போது குளத்தங்கரைக்குக் கீழ்ப் பக்கத்து வயலில் பைத்தியக்கார டாகுரைப் பார்த்தார்கள். அவர் வேகமாக

221;ஏரிப்பக்கம் நடந்து போய்க்கொண் டிருந்தார். சோனா தானே அவரைக் கண்டுபிடித்துவிட்டது போல் அவரைக் கூப்பிட்டான், உரத்த குரலில்.

தம்பட்டங்கள் முழங்கின. அவனுடைய கூப்பாடு கேட்காமல் அவர் வேகமாக நடந்தார். வாஸ்து பூஜைக்காக எருமையைப் பலியிடப் பயன்படுகிற அரிவாளில் ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. பாதிமாவும் சோனாவும் பைத்தியக்கார மனிதரைக் கூப்பிட்டுக்கொண்டே ஓடினார்கள். மேட்டின் மேல் நின்று கொண்டு கூப்பிட்டார்கள், அவர் அதைக் கேட்டால்தானே! அவர் குளத்தங்கரையிலிருந்த காட்டுக்குள் நுழைந்துவிட்டார். உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன, எவ்வளவோ நடப்பதில்லை, வயலில் பயிர் எப்போதும் விளைவதில்லை. வயல்கள் காலியாகக் கிடந்தன. சில இடங்களில் புகையிலைப் பயிர். மேட்டு நிலத்தில் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு முட்டைக்கோசுப் பயிர்கள். குளத்திலிருந்து தண்ணீர் இறைத்து இவையெல்லாம் பயிர் செய்கிறார் பிரதாப்சந்தா. வரப்புகளின் மேலே இருவரும் ஓடினார்கள். பருவம் இல்லாவிட்டாலும் காட்டுக் குள்ளே மகிழமரம் பழுத்திருந்தது. அவர்கள் மகிழம்பழம் பறிக்க ஓடினார்கள். பாதிமா பழங்களைப் பொறுக்குவாள். அவள் கூடச் சோனாபாபு இருக்கிறார். நடுப்பகல் வெயில் தலைக்கு மேலே அடிப் பதால் அவர்களுக்குக் குளிராக இல்லை, பாதிமா வெற்று மேலுடம்புடன் ஓடினாள். அவர்கள் இருவரும் ஓடுவது இரண்டு முயல்கள் ஓடுவதுபோல் இருந்தது.

சோனாவுக்குத் திடீரென்று தோன்றியது, வெகுதூரம் வந்துவிட் டோம் என்று. அவர்களுக்கு எதிரில் பெரியகாடு! பயத்தால் சுருங் கிப் போய்விட்டான் சோனா. அவர்களால் வீடு திரும்பமுடியாது!

மனித சஞ்சாரமற்ற இடம். பண்டைக் காலக் குளம், பழங்குட்டை யைப் போல் இருந்தது. பாசியும் நீர்ச்செடிகளும் காடாக வளர்ந் திருந்தன அதில், கரையில் வளர்ந்திருந்த பலவிதச் செடிகளும் மரங்களும் அந்த இடத்தைக் காடாக ஆக்கிவிட்டன. சிறிய பெரிய கொடிகள் அடர்ந்த புதர்கள். நடுவில் ஒற்றையடிப்பாதை. அதில் உலர்ந்த சருகுகள். உலர்ந்த மரச்சுள்ளிகளும் பறவை களின் சிறகுகளும் மண்ணில் கிடந்தன. தலைக்கு மேல் ஒரு பழங்கால மருதமரக் கிளைகளில் பறவைகள் வசித்தனர். அதற்குக் கீழே, எவ்வளவோ காலமாக, மீன்கள், மனிதர்கள், மாடுகன்று களின் எலும்புகள் கிடந்தன. பக்கத்தில் ஒரு கிழட்டு மாடு போல் ஒரு குருகுமரம் தன் கிளைகளால் ஆகாயத்தைத் தொட்டுக்கொண்

222டிருந்தது. அதில் விதவிதமான விசித்திரப் பொந்துகள். மரத் தின் ஒரு பக்கத்துக் கிளைகள் காய்ந்துவிட்டன. கிளைகளில்

வரிசை வரிசையாகப் பருந்துகள் உட்கார்ந்திருந்தன. சோனா வுக்கும் பாதிமாவுக்கும் அந்த மரத்தையணுகத் துணிவில்லை, ஆனால் அதைக் கடக்காவிட்டால் மகிழமரத்தை அடைய முடியாது. மகிழமரம் பெரியதல்ல, சிறியதுதான். புதர்களுக்குள்ளே போய் மகிழ மரத்தைக் கண்டுபிடிப்பது கஷ்டந்தான். இந்த மரத்தைப் பற்றி ஜோட்டன்தான் பாதிமாவுக்குச் சொல்லியிருந்தாள்.

ஒரு தடவை ஜோட்டன் ஆபேத் அலிக்காக ஒரு கோழி கொண்டு வந்திருந்தாள். அது ஹாஜிசாயபு விட்டுச் சீதாமரவேலிக்குப் பறந்து போய்விட்டது. வேலியோரத்தில் ஹாஜிசாயபுவின் சிறிய பீபியைச் சந்தித்தாள் ஜோட்டன். சிறிய பீபி கோழி வயலுக்குள் ஓடிவிட்ட தாகச் சொன்னாள். வயலில் இறங்கிய ஜோட்டனுக்குத் தூரத்தில் ஏதோ ஓடுவதுபோல் இருந்தது. நாயாக இருக்கலாம், பூனையாக இருக்கலாம், வயலில் இறங்கிய ஜோட்டன் ஹாஜிசாயபுவின் சிறிய பிள்ளையைப் பார்த்தாள். அவன் சொன்னான்: "அதோ பாரு, கோழி ஓடரது ! அதோ, அதோ!'' பீபியும் அவனும் முதலிலேயே பேசி வைத்துக்கொண் டிருந்திருக்கலாம். இருவருமாகச் சேர்ந்து ஜோட்ட னைக்கோழியைத் தேடிக்கொண்டு வயலுக்குள் அனுப்பிவிட்டார்கள்.

ஜோட்டன் அந்தக் கோழியை ஆபேத் அலிக்காகத் திருடிக் கொண்டு வந்திருந்தாள். மெளல்வி சாயபு ஆசையோடு வளர்த்த கோழி அது. அது சமயம் கிடைத்ததும் தன் வீட்டை நோக்கி ஓடுவதாக ஜோட்டன் நினைத்தாள். அவள் கோழியைப் பிடிக்க ஓடினாள். கோழி தப்பி ஓடிவிட்டால் மெளல்வி சாயபுவுக்கு ஜோட்டன் அதைத் திருடிக்கொண்டு போனது தெரிந்துவிடும். அப்புறம் ஜோட்டனுக்கு ஆபத்துதான். கோழி தூரத்தில் தெளி வாகத் தெரியவில்லை. மேட்டுநிலக் குளத்தங்கரையில் இருந்த காட்டுக்குள் அது நுழைவதாகத் தோன்றவே ஜோட்டன் அதைப் பிடிக்க ஓடினாள். எவ்வளவு ஆசையோடு, எவ்வளவு கஷ்டப் பட்டு அதைப் பிடித்துக்கொண்டு வந்திருந்தாள், அவள் ஆபேத் அலிக்காக! அவள் தன் முழங்கால்களுக்கு மேலே துணியைத் தூக்கிக்கொண்டு குளத்தங்கரைக்கு ஓடிவந்தாள், காட்டுக்குள் நுழைந்தாள். வழி தெரியவில்லை அவளுக்கு. கோழி ஏதாவது மரத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறதா என்று தலையை உயர்த்திப் பார்த்துக்கொண்டு போனாள் அவள்.

அப்போது கோழியின் கழுத்தைப் பிடித்து அழுத்தி வைத்துக் கொண்டிருந்தாள் ஹாஜிசாயபுவின் சிறிய பீபி. பிடியைத் தளர்த்தி

னால் கோழி "க்யாங், க்யாங்' என்று கத்திவிடும்.

223முடி:

அப்போது ஜோட்டன் காட்டில் கோழியைத் தேடிக்கொண் டிருந்தாள். ஐயோ ! கோழி எங்கே போச்சு ? தலையில் அடித்துக் கொண்டாள் ஜோட்டன். அப்போது புதருக்குள் சிவப்பாக ஏதோ தெரிந்தது. கோழியின் சிவப்புக் கொண்டையாக இருக்குமோ? அவள் ஆசையோடு குனிந்து குனிந்து காட்டுக்குள் போனாள். போனபிறகு தெரிந்தது, அது மகிழமரத்தில் பழுத்திருக்கும் பழம் என்று. பருவமில்லாப் பருவத்தில் பழுத்திருந்தது மகிழமரம். சில பழங்கள் கீழே கிடந்தன. ஒரு பூனையோ அல்லது தெரு நாயோ காட்டுக்குள் நுழைந்திருந்தது. குளிர்காலத்தில் மங்கிய வெளிச் சத்தில் அதைக் கோழி என்று நினைத்துவிட்டாள் ஜோட்டன் மூக்குக்குப் பதில் நகம் வெட்டி கிடைத்தது போல் அவள் கோழிக்குப் பதிலாக மகிழம் பழங்களைப் பொறுக்கிக்கொண்டாள். அந்தப் பழங்களை அவள் பாத்திமாவுக்குக் கொடுத்து, மகிழமரம் இருக்கு மிடத்தையும் சொல்லியிருந்தாள்.

இப்போது சோனாவுக்குப் பயம் வந்துவிட்டது. "எனக்குப் பயமா இருக்கு, பாதிமா!" என்று அவன் சொன்னான்.

""என்ன பயம்? இங்கே வாங்க!'' பாதிமா அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு குருகுமரத் தைத் திரும்பிப் பார்த்தாள். பெரிய பெரிய பருந்துகள் அதன் மேல் அசையாமல் உட்கார்ந்துகொண் டிருந்தன. அந்த மரத் தைப் பார்க்கப் பார்க்க சோனாவுக்குப் பயம் அதிகரித்தது. அவர்கள் ராணிப் பருந்தைப் பார்த்தார்கள். அது மரத்தின் உச் சாணிக் கிளையில் உட்கார்ந்துகொண்டு எங்கேயாவது ஏதாவது பிராணி செத்துக் கிடக்கிறதா என்று மோப்பம் பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. மற்றப் பருந்துகள் தூங்குகிறாற்போல் அசையாம லிருந்தன. ஒரு சில பருந்துகள் மட்டும் கழுத்தைத் திருப்பித் திருப்பி, சிறிய மரப் பொம்மைகள் மாதிரி இரண்டு மனிதப் பிராணி கள் கீழே நின்றுகொண் டிருப்பதைக் கவனித்தன. பருந்துகளின் ராஜாமட்டும் எப்போதும் விழித்துக்கொண் டிருக்கும். அதுதான் வேட்டையிருக்கும் இடத்தைப் பார்த்து மற்றப் பருந்துகளுக்குச் செய்தி தெரிவிக்கும், அது ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக் கும். ஆகாயத்தில் எங்காவது, ஏதாவது பறக்கிறதா, எவ்வளவு என் றெல்லாம் பார்க்கும். செத்த பிராணியின் நாற்றம் அடித்தால் அது முதலில் இறக்கை யடித்துக்கொண்டு பறக்கும் - அதைத் தொடர்ந்து மற்றப் பறவைகளும் கண்ணுக்குத் தெரியாத ஓர் உலகத்தைத் தேடிக்கொண்டு பறக்கத் தொடங்கும்.

ராஜப்பருந்து மேலே பறப்பதற்குப் பதிலாக அவர்களை உற்றுப் பார்த்தது. பாதிமா ஆற்றுப் படுகைக்கு ஆடு மேய்க்கப் போவாள்.

224சாப்பாட்டுத் தட்டைத் தலையில் வைத்துக்கொண்டு வயலுக்குப் போவாள். அவளுக்குப் பயமே கிடையாது. சணல் வயல்களில் பயிர் மிக உயரமாக, பாதிமாவைவிட உயரமாக வளர்ந்திருக்கும், உயரமான பயிருக்கு நடுவே வயலின் வரப்பு தலைவகிடு போலக் காட்சி தரும். இருபுறமும் வளர்ந்த பயிர் வயலையே காடாக மாற்றியிருக்கும். அந்த வழியில் பாதிமா தன்னந் தனியாகப் பயமின்றி, ஆட்டைக் கூட்டிக்கொண்டு போயிருந்தாள். அப்படிப் பட்ட பாதிமாவே இப்போது பயந்துபோய்விட்டாள். ராஜாப் பருந்து அவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தபோது சோனாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடிவிட நினைத்தாள் அவள்.

கதைகளில் வருமே அந்த மாளிகையின் வாசலாக இருக்கலாம், இந்த மரம். மரம் ராட்சசனைப் போல அந்த மாளிகைக்குக் காவ லாக இருக்கிறது. மரத்தைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டால் பூ, பழம். ராஜகுமாரி எல்லாம் கிடைக்கும். பழங்களுக்காகவும், பூக்களுக்காகவும், அந்த ஆச்சரிய உலகத்தைப் பார்ப்பதற்காக வும் பாதிமா தைரியத்தை வருவித்துக்கொண்டு, சோனாவையும் இழுத்துக்கொண்டு, பறவைகளின் இறக்கைகள், மீன்கள், மனிதர் களின் எலும்புகள், பறவைகளின் விட்டைகள் ஆகியவற்றைத் தாண்டிக் காட்டுக்குள் நுழைந்தாள்,

காட்டுக்குள் பல நிறங்களில் சின்னச் சின்னப் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பறவைகள் கூவின. வண்ணத்துப் பூச்சிகள் பறந்து திரிந்தன. ஓர் ஒணான் "கிளப், கிளப்' என்று சப்தம் செய்து கொண்டு அவர்களைப் பார்த்தது. அந்த இடம் ஆள் இல்லாத இடமாக, சூனியப் பிரதேசமாக இருந்தது. எங்கும் மனித அரவமே இல்லை. தூரத்திலிருந்து யாரோ ஒரு மரத்தை வெட்டும் ஒலி மட்டும் வந்துகொண் டிருந்தது. உற்றுக் கேட்டால் தம்பட்டங்களின் ஒலி யும் கேட்கும், இந்த மாதிரி ஆளரவமற்ற இடத்துக்கு வந்துவிட்ட அவர்கள் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக்கொண் டார்கள்.

"சோனா பாபு, நான் உங்களைத் தொட்டுட்டேன். வீட்டுக்குப் போனப்பறம் நீங்க ஸ்நானம் பண்ணணும்'' என்று பாதிமா சொன்னாள்.

சோனாவுக்குத் தன் அம்மாவிடம் பயம் வந்தது. "நீ ஏன் என்னைத் தொட்டே ?" என்று அவன் கேட்டான்.

''நான் தொட்டேனா, நீங்க தொட்டீங்களா? என் மூக்குத் திருகை நீங்க தொட்டுப் பார்க்கல்லே ?"

''அம்மாவுக்குத் தெரிஞ்சா என்னை அடிப்பாங்க.''

225

18அந்தக் காட்சி சோனாவின் மனக்கண்ணில் தோன்றியது - அந்த மழைக்காலச் சம்பவம். அவன் பாதிமாவின் புடைவைத் தலைப்பில் ஒரு வண்ணத்துப் பூச்சியை வைத்து முடிந்திருந்தான். அதற்காக அவனுடைய அம்மா அவனை நன்றாக அடித்துவிட்டாள். பாதிமா சொன்னதைக் கேட்டு நிஜமாகவே பயந்துவிட்டான் சோனா. ''நீ எங்க அம்மாகிட்டே சொல்லாதே, நான் உன்னைத் தொட்டுட் டேன்னு !" என்றான் சோனா.

" நான் ஏன் சொல்றேன் ?" "சொன்னால் அம்மா என்னை அடிப்பாங்க." "ஒரு நாளும் சொல்லமாட்டேன்." ''மூணு சத்தியம் ?" "மூணு சத்தியம்.” சோனாவுக்கு ஆறுதல் ஏற்பட்டது. ''இந்த விஷயம் ஒருத்தருக்கும் தெரியாது" என்றாள் பாதிமா.

நாற்புறமும் பெரிய பெரிய, அறிமுகம் இல்லாத மரங்கள், செடி கொடிகளும், மரங்களும், புதர்களும் அங்கங்கே சிறிய அடர்ந்த காட்டையே சிருஷ்டித்திருந்தன. அந்தக் காட்டுக்குள் மகிழ மரத்தைத் தேடிக்கொண்டு போனார்கள் அவர்கள். அவர்கள் கேட்க விரும்பினார்கள், 'மர மே! நீ இவ்வளவு நாள் யாரோட மரமா இருந்தே ?'

மரம் பதில் சொல்லும் : *ராட்சசனோட மரமா இருந்தேன்." "இப்போ நீ யாரோட மரம் ?" ''உங்களோடது." ''அப்போ எங்களுக்குப் பழம், மகிழம்பழம், தா!'' அவர்கள் நடந்தார்கள். ஆனால் வேகமாக முன்னேற முடியவில்லை. நாற்புறமும் அடர்ந்த காடு. காட்டுக்குள் எவ்வளவு தூரம் நடந்து போக முடியும்? காலடியில் உலர்ந்த புல்லும் சருகும். நெடுங் காலமாக மனித சஞ்சாரமே இல்லாத இடம், அவர்கள் கால்களை மடக்கிக்கொண்டு குனிந்து செடிகளைத் தாண்டிக்கொண்டு போனார்கள். மனசுக்குள் சொல்லிக்கொண்டார்கள், கதைகளில் கேட்டிருந்தது போல, “மரமே நீ யாரோடதாக இருந்தே ?"

"ராஜாவோடதாக இருந்தேன்.'' ''இப்போ யாரோட மரம் நீ ?" ''உங்களோட மரம்." "அப்போ எங்களுக்குப் பழம், மகிழம்பழம், கொடு!'' மரம் சில சமயம் ராஜாவுக்குச் சொந்தமாயிருந்தது, சில சமயம் ராட்சசனுக்குச் சொந்தமாயிருந்தது. "மரமே, ஏ மரமே!'' அவர்கள் 'மரமே, மரமே!' என்று கத்தினார்கள். "எங்கே போயிட்டே நீ ?"

226அவர்கள் மகிழ மரத்தைத் தேடினார்கள். மரக்கிளையில் பருந்துகள் கூவின. காட்டில் பல விசித்திர சப்தங்களும், பறவைகளின் ஒலி களும் எழுந்தன.

அப்போது யாரோ 'ஹம், ஹம்' என்று சப்தம் செய்துகொண்டு அவர்களை நோக்கி வருவதுபோல் இருந்தது, பாட்டியம்மா சொல்லும் கதையில் வரும் பிசாசு மாதிரி, மோகினிப் பேய் மாதிரி. பாதிமா கிசுகிசுத்தாள் : "இதென்ன ? கேளுங்க, சோனா பாபு!”

சோனா ஒரு மரக்கணுவில் உட்கார்ந்திருந்தான். அவனுக்குக் கால் வலித்தது. மேலும் நடக்க முடியவில்லை. கால்களில் முள் குத்தி விட்டது. இந்த இடத்தை விட்டுத் திரும்பிப் போனால் தேவலை என்று அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும் மகிழம் பழத்தின் மேல் ஆசை அவனுக்கு. பழத்தைக் கொண்டு போனால் அவனு டைய பெரிய அண்ணாவும் இரண்டாவது அண்ணாவும் ஆச்சரியப் படுவார்கள். "சோனா, சோனா, நீ நல்ல பையன். எனக்கு ஒண்ணு கொடுடா, எனக்கொண்ணு தாடா!" என்று கெஞ்சிக்கொண்டே அவனைச் சுற்றுவார்கள். பாதிமாவுந்தான், பழத்துக்காக ரொம்ப ஆசைப்பட்டு அந்தக் காட்டுக்குள் வந்திருந்தாள். அந்த 'ஹம் ஹம்' சப்தம் கொஞ்சங் கொஞ்சமாக அவர்களை நோக்கி வந்தது.

அவர்களுக்கு ஒரே பயம், இப்போது ஏதோ நடக்கப்போகிறது. தப்பியோடும் முயற்சியில் அவர்கள் இன்னும் அதிகமாகக் காட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். காடு உள்ளே இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வில்லை. காட்டுக்குள் நுழைந்ததுமே, மகிழ மரம் அரண்மனை வாயிலில் நிற்கும் சிப்பாய் போல நின்றுகொண் டிருந்தது அதற்கு முன் கையை நீட்டினால் கை நிறையப் பழங்களைக் கொடுக்கும் என்பதே அவர்களது நினைப்பாக இருந்தது.

இப்போதோ அவர்கள் காட்டுக்குள் வெகுதூரம் வந்துவிட்டார்கள், வெளியே போகும் வழி எந்தப் பக்கம் என்பது அவர் களுக்கு மறந்து போய்விட்டது. பாதிமாவின் கண்களும் முகமும் வறண்டு போய்விட்டன. அந்தச் சப்தம் காடு முழுதும் சுற்றியது. யாரோ காட்டுக்குள்ளே அட்டகாசமாகச் சிரிப்பது போல் இருந்தது. பாட்டியம்மா கதையில் வரும் பிசாசு சொல்வதுபோல் யாரோ சொல்கிறார்கள்; 'ஹா ஊங், மா ஊங், கா ஊங், மானுஷேர் கந்த

பா ஊங்!' (மனித வாசனை வருகிறதே!)

அவர்கள் மரண பயங் கொண்டு கண்களை மூடிக்கொண்டு எதிரில் படும் புல், சருகுகள், செடி கொடிகள் இவற்றைத் தள்ளிக் கொண்டு ஓடினார்கள். வயல் வெளி இன்னும் கண்ணுக்குத் தெரிய வில்லை. இப்போது முன்னால் வழியைக் காணோம். அவர்கள் பின்

227பக்கம் திரும்பி ஓடினார்கள். அந்த அட்டகாசச் சிரிப்பு அவர்களைத் தொடர்ந்து வந்தது. அவர்களைப் பிடிக்க வந்தது. சூரியனின் அபரிமிதமான ஒளி போல அந்த அட்டகாசச் சிரிப்பும் மரஞ் செடிகளை முறித்துக்கொண்டு பெரிய ஓசையுடன் அலைந்தது.

இப்போது வயல்வெளியில், ''ராஜராஜேஸ்வர் கீ ஜய்! ஜய் யக்ஞேஸ்வர் கீ ஜய்!'' என்ற சப்தம் எழுந்தது. யாரோ இந்தக் கோஷத்தை எழுப்பிக்கொண்டு போனார்கள். சோனா பயந்து போய் மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். பாதிமாவும் அவ்வாறே செய்தாள். அவர்கள் முகத்தை உயர்த்திப் பார்த்த போது புதரிடுக்கு வழியே வயல்வெளி தெரிந்தது. சுமார் நாற்பது ஐம்பது மக்கள் அடங்கிய கூட்டமொன்று திறந்தவெளியில் போய்க் கொண்டிருந்தது. பதினாறு பேர் ஓர் எருமையின் முண்டத்தை மூங்கில் தடியில் கட்டி எடுத்துக்கொண்டு போனார்கள். பலியிடப் பட்ட எருமையின் முண்டம் மூங்கிலில் தொங்கியது. வெட்டப் பட்ட தலையை அதன் வயிற்றின் மேலேயே வைத்து இரண்டையும் சேர்த்துக் கயிற்றால் கட்டியிருந்தார்கள். கண்கள் திறந்திருந்தன, காதுகள் கீழே தொங்கின. பயிர்கள் அற்ற, சூனிய வயல்களைப் பார்த்துக்கொண்டே போயிற்று, அந்த வெட்டப்பட்ட தலை.

அதை தூக்கிக்கொண்டு செல்பவர்கள் 'ஜய் யக்ஞேஸ்வர் கீ ஜய்! ஜய் ராஜராஜேஸ்வர் கீ ஜய்!' என்று கத்திக்கொண்டே போனார்கள்.

சோனாவும் பாதிமாவும் மூச்சையடக்கிக்கொண்டு புதருக்கு பின்னால் மறைந்திருந்தார்கள், அவர்கள் கண் முன்னே இந்தப் பயங்கரக் காட்சி. வாயைத் திறந்து பேசமுடியாதபடி அவர்களுடைய தொண்டை உலர்ந்திருந்தது. அவர்களால் சொல்ல முடியவில்லை, "நாங்க இங்கே காட்டுக்குள்ளே ஆம்பிட்டுக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு வெளியேவர வழி தெரியலே! இங்கேயே இன்னும் கொஞ்சநேரம் இருந்தால் நாங்க செத்துப் போயிடுவோம்!'

முன்னே எருமையைத் தூக்கிக்கொண்டு போனார்கள். பின்னால் வருபவர்கள் தலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் இவற்றை எடுத்துக்கொண்டு போனார்கள். ஒரு எருமை மாட்டைச் சாப்பிடத் தேவையான அளவு அரிசி, பருப்பு, எண்ணெய். இவர்கள் சீதலக்ஷா நதிக்கரையிலிருந்து வந்திருக்கிறார்கள், பலியிட்ட எருமையை எடுத்துக்கொண்டு போக, பிரசாதம் வீணாகக்கூடாது.

பல்லக்குத் தூக்கிகள் கல்யாணப் பெண்ணைப் பல்லக்கில் வைத்துப் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு பாடியவாறு போவார்களே, 'ஹூங் - ஹோம் - நா, ஹங் - ஹோம் - நா' அது போல் இவர்கள்

228எருமை வயிற்றின் மேல் அதன் தலையை வைத்துக் கட்டித் தூக்கிக் கொண்டு போகிறார்கள். 'ஹங் - ஹோம் - நா!' மிகவும் அருவருப்

பைத் தரும் காட்சி,

காட்டுக்குள் மரக்கிளைகளை முறித்துக்கொண்டு திரிவது யார் ? ஒரே அட்டகாசச் சிரிப்பு! உச்சாணிக் கிளையில் பருந்தின் ஓலம். சுவர்க் கோழியின் குரல், மரக்கிளைகள் முறியும் சப்தம். அவர்கள் பயத்தில் கண்களை மூடிக்கொண்டார்கள். அந்த அட்டகாசச் சிரிப்பு காட்டுக்குள் தனக்கு ஒரு வழி செய்துகொண்டு வந்து அவர்கள் மேலே விழுந்துவிட்டது ; அவர்களைத் தன் சக்தி வாய்ந்த கைகளால் இறுகப் பிடித்துக்கொண்டுவிட்டது. அவர்களைத் தரையிலிருந்து மேலே தூக்குகிறது, தங்க, வெள்ளிப் பதுமைகளைத் தூக்குவதுபோல. அட்டகாசச் சிரிப்புப் பிசாசு அந்தத் தங்க, வெள்ளிப் பதுமைகளைத் தன் இரு தோள்களின் மேல் ஏற்றிக்கொண்டு காட்டுக்கு வெளியே வந்தது. இரண்டு பதுமைகளுக்கும் உயிர் வந்துவிட்டது. பிசாசால் அவர்களுடைய மகிழ்ச்சிப் பெருக்கைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. அது கத்தியது: "கேத்சோரத்சாலா !''

இப்போதும் வயலில் தம்பட்டங்கள் ஒலித்தன. வாஸ்து பூஜைக் குப் பிறகு பூரி பூஜா உற்சவம், உற்சவக் கடைகளுக்கான சரக்குகள் ஆற்றங்கரை வழியே போயின. மூங்கில்களைத் தோளில் வைத்துத் தூக்கிக்கொண்டும் கித்தான் களைத் தலையில் தூக்கிக்கொண்டும் ஆட்கள் போனார்கள். ஸோனாலி பாலி ஆற்றில் வியாபாரிகளின் படகுகள் எத்தனையோ ! அவை பாய்களை விரித்துக்கொண்டு போய்க் கிளை நதி வழியே பிரம்மபுத்திராவில் போய்ச் சேரும். அதன் பிறகு வளைவில் திரும்பினால் அந்தப் பிரம்மாண்டமான ஏரி. ஐந்து கோச தூரத்துக்கு நீண்டிருக்கிறது அது. தாழ் நிலங்களிலுள்ள நீர் ஏரிக்குள் போய் விழுகிறது, ஏரியைக் கடந்தால் உற்சவ மைதானம். பெரிய மரப் பாலத்தைக் கடந்தால் யக்ஞேஸவர் கோவில். கோவிலுக்குப் பக்கத்தில் சர்க்கஸ் கூடாரம் எழும்பியிருந்தது.

பைத்தியக்கார டாகுருக்கு அந்த ஏரியின் நினைவு வந்தது. அவர் சோனாவையும் பாதிமாவையும் வயலில் கொண்டுவந்து விட்டார். சோனாவின் பயம் பறந்து போய்விட்டது. பாதிமா ஹி ஹி என்று சிரித்தாள். அவர்கள் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். பொழுது சாய்ந்துகொண் டிருந்தது. குளிர்காலம். டாக்கா போயிருந்த சாம்சுதீன் இன்று திரும்பிவருவதாகப் பேச்சு. பாதிமா வேகமாக ஓடினாள். அவளுடைய பாபா அவளுக்குக் கண்ணாடி வளையல் வாங்கி வந்திருப்பார், டாக்காவிலிருந்து. 'வீட்டில் அவளைக் காணாவிட்டால் அவருக்குக் கோபம் வரும். அவளுக்குக்

229காது டோலாக்கு வாங்கிவருவார். அம்மாவுக்குக் கட்டம் போட்ட புடைவை வாங்கி வருவார். நினைத்தால் பட்டணத்துக்குப் போய் விடுகிறார் அவளுடைய பாபா. இரண்டு மூன்று நாள் கழித்துத் திரும்பி வருகிறார். பெரியவளான பிறகு பாதிமாவும் டாக்காவுக்குப் போவாள்' இப்படியெல்லாம் பேசிக்கொண்டே போனாள் பாதிமா - ''நானும் போவேன்! நான் பெரியவனானப்புறம் என்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன்னு என்னோட அப்பா சொல்லியிருக்கார்'' என்றான் சோனா.

''சதர் காட்டிலே இருக்கிற பீரங்கி காண்பிக்கிறேன்னு என்னோட பாபா சொல்லியிருக்காரே!"

''என் அப்பா சொல்லியிருக்கார், சதர் காட்டிலே இருக்கிற பீரங்கியைப் காண்பிப்பார், ரம்னா மைதானம் காண்பிப்பார். புரி கங்கையிலே ஸ்நானம் செஞ்சுவைப்பார்."

''நான் எழுதப் படிக்கக் கத்துக்கிட்டேன்னா என்னைப் பாபா மோட்டாரிலே கூட்டிக்கிட்டுப் போவாரே !"

"நான் பரீட்சையிலே முதலா வந்தால் என்னை ரயில்லே டாக்காவுக்குக் கூட்டிக்கிட்டுப் போவார், எங்க அப்பா."

""ரெயில் ரொம்பச் சின்னது. சோனா பாபு, நீங்க சின்ன ரெயில்லே தானே போவீங்க!"

"மோட்டார்தான் ரெயிலைவிடச் சின்ன தாக்கும்." பாதிமா கழுத்தைத் திருப்பிச் சோனாவைக் கேலி செய்தாள். ''அப்படியா ?'' "ஒனக்கு ஒண்ணும் தெரியாது, சிறுக்கி 1 ஓர் அறை கொடுப்பேன்." "கொடுங்க, பார்ப்போம்! நீங்க என்னைத் தொட்டீங்கன்னு உங்க அம்மாகிட்டே சொல்லி அடி வாங்கிக் கொடுக்கிறேன்."

''சொல்லிடுவியா?" "பின்னே மோட்டார் சின்னதுன்னு ஏன் சொல்றீங்க?" ''இனிமே சொல்லல்லே." சோனா பாபுவை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் வேகமாக ஓடினாள் பாதிமா. அவளுடைய தலைமயிர் காற்றில் பறந்தது. அவளுடைய கட்டம் போட்ட புடைவை அவிழ்ந்தது. அவள் ஓடிக்கொண்டே எப்படியோ அதை இடுப்பில் இறுக்கி முடிந்து கொண்டாள். அவள் கால்களில் கொலுசு. கொலுசில் சிறிய சிறிய இரும்பு உருண்டைகள் போட்ட மணிகள். அவள் ஓடும் போது கொலுசுகள் 'ஜல் - ஜல்' என்று ஒலித்தன. ஓடியவள் நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். வருத்தமும் கோபமுமாக ஒரே இடத்தில் நின்றுகொண் டிருந்தான் சோனா ; அசையாமல்

230நின்றான், பாதிமா வெற்றி வீராங்கனை போல் குதித்துக்கொண்டு ஓடினாள். இரண்டடி நடந்தும் மறுபடி நின்றாள் ; பிறகு திரும்பித் திரும்பிச் சக்கரம் போல் சுற்றினாள், ஒரு முயல் புல்லைக் கடித்து ஒரு வாய் தின்றுவிட்டு இரண்டு வாய் கடித்துத் துப்பிவிட்டு வேகமாக ஓடுவது போல. ஆனால் சோனா? சோனாவின் உடம்பி லிருந்து சந்தன மணம் வந்தது. அவனுடைய முகம் பசும் புல்லைப் போல் மிருதுவாக இருந்தது. அவன் இளம் வாழைக் குருத்துப் போல் நளினமானவன். அப்படிப்பட்ட சோனாவை வயலில் தனியே விட்டுவிட்டுப் போகக் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. அவள் நின்றாள்; பின்னால் திரும்பி கூப்பிட்டாள், "வாங்க! நான் நின்னுக் கிட்டிருக்கேன்!''

சோனா கோபத்துடன் கத்தினான்: "நான் வரமாட்டேன் போ!" பாதிமா திரும்பிக் கத்தினாள் : "நீங்க வரலேன்னா, நானும் போக மாட்டேன்!''

இருவரும் அங்கங்கே சற்றுநேரம் நின்றார்கள். சோனா நகரா திருப்பதைக் கண்டு பாதிமா அருகில் போய், "வாங்க !" என்றாள்.

"ஊஹூம். நான் வரமாட்டேன்.'' ''வாங்க! சரி, ரயில்தான் பெரிசு. சரிதானே!" இன்னும் ஏதோ சொல்ல நினைத்தாள் பாதிமா ; ஆனால் சொல்ல முடியவில்லை. அவள் மனசில் இந்த எண்ணம் தோன்றியிருக்கலாம் ; 'திருவிழா வுக்கு நாம ரயில்லேதானே போவோம்! ரயில் பெரிசா இல்லாட்டி ரெண்டுபேர் அதிலே எப்படி ஏறமுடியும் ? ஆனால் இந்த எண்ணத்தைப் பேச்சாக வெளிப்படுத்தத் தெரியாமல் அவள் பேசாமல் சற்றுநேரம் நின்றாள். பிறகு சோனாவின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்: “எனக்கு கார்த்திக் பூஜைக்குடம்

தரீங்களா ?"

"கொடுக்கறேன்.'' "சரி, வாங்க! நாம ஓடுவோம்." அவர்கள் ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு ஓடினார் கள். குளக்கரையில் மாலதியைப் பார்த்ததும் அவர்கள் சட்டென்று கையை எடுத்து விலகிக்கொண்டார்கள். பிறகு தனித்தனியே ஓடத் தொடங்கினார்கள்.

மேளங்கள் முழங்கிக்கொண்டே இருந்தன. ஐம்பது வாத்தியக் காரர்கள் கழுத்தைச் சாய்த்துக்கொண்டு மேளம் அடித்துக் கொண்டே இருந்தார்கள். சர்க்கார் வீட்டு வாஸ்து பூஜை அந்தப் பிராந்தியத்திலேயே பிரபலமானது. அதற்கு ஏராளமான மக்கள் வந்திருக்கிறார்கள், உறவினர்கள், கிராமத்தார், சர்க்காரின் பண்ணை யாட்கள் என்று. தூரத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள்

SEIIII

231வந்திருக்கிறார்கள். குளத்தங்கரையில் கூடியிருப்பவர்களின் எண் ணிக்கை ஆயிரம் இருக்கும். வண்ணார்கள், நாவிதர்கள், நமசூத் திரர்கள் எல்லாரும் இலையைப் போட்டுக்கொண்டு கிச்சடி சாப்பிட் டார்கள், பல்லக்குத் தூக்குவதுபோல் பலியிட்ட எருமையைத் தூக்கிச் சென்றவர்கள் முஸ்லீம் கிராமங்கள் வழியே சென்றபோது, '' சிவடாகுர் கீ ஜய், ராஜராஜேஸ்வர், யக்ஞேஸ்வர் கீ ஜய்!'' என்று கத்திக்கொண்டு போனார்கள்.

வயலிலும், புல்லின் மேலும் இரத்தத் துளிகள் விழுந்தன : 'எங்கள் தர்மம் சநாதன தர்மம். இந்த மாதிரி இளம் எருமை இந்தப் பிராந்தியத்திலேயே பலியாகவில்லை. இவ்வளவு பெரிய அரிவாள் இந்தப் பக்கத்திலே யார்கிட்டே இருக்கு ? எங்க மதத்தைப் போலப் புண்ணிய மதம் வேறு ஏது ? ஜய் ராஜ ராஜேஸ்வர், யக்ஞேஸ்வர் கீ ஜய்!' ஏரிக்கரையில் சென்றபோது ஜயகோஷம் எழுப்பினார்கள், எருமையைத் தூக்கிச் சென்றவர்கள்,

ஏரிக்குள் அல்லிக்கிழங்கு பறிக்க வந்து கைகால் ஜில்லிட்டுப் போனவர்கள், குளிரால் விறைத்து வெளுத்துப் போனவர்கள், நடுநடுவில் கரைக்கு வந்து குளிர் காய்ந்துகொண் டிருந்தவர்கள் எல்லாரும் தூரத்தில் புள்ளி புள்ளியாகத் தெரிந்த ஒரு மனிதக் கூட்டம் எருமையைத் தூக்கிச் செல்வதைப் பார்த்தார்கள். எருமை யின் வயிற்றில் அதன் தலை! திடீரென்று அந்தத் தலை நழுவிக் கீழே விழுந்து, உருண்டு உருண்டு அல்லிக்கிழங்குக்காக வந்திருக்கும் அந்த ஏழைகளின் காலடியில் வந்து விழுந்தது.

தங்கள் காலடியில் விழுந்த தலையைப் பார்த்துப் பயந்து போய் அவர்கள், "தோபா! தோபா ! (அபசாரம்! அபசாரம்!)" என்று கத்தினார்கள். அதைப் பார்த்தது அவர்கள் செய்த பாவம். இந்த அருவருப்பைத் தரும் காட்சியைப் பார்த்துவிட்டு அவர்கள் தங்கள் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டார்கள். எவ்வளவு பெரிய ஏரி! அதைப் பற்றி எவ்வளவு கதைகள்! அதில் எவ்வளவு விதப் பாம்புகள், பிராணிகள், நீர்ச்செடிகள்! பெரிய பெரிய அட்டைகள்! காதுக்குள் நுழைந்துவிட்டால் ஆள் பிழைக்க முடியாது. அவர்கள் அந்த எருமைத் தலையைத் திரும்பிப் பார்க்கவில்லை. சூரியன் அஸ்தமித்துக்கொண் டிருந்தான். அவர்கள் வீடு திரும்ப வேண்டும்,

குளிர்காலமாதலால் வாடைக் காற்றின் பலம் அதிகரித்தது. வானம் நிர்மலமாயிருந்தது. இந்தத் தடவை எல்லாக் குளிரும் இந்த வயல்களில், இந்த ஏரியில் வந்து இறங்குமென்று தோன் றியது. இவ்வளவு நேரம் ஏரி நீரில் ஆயிரக்கணக்கான கூடைகள் 232மிதந்தன; இப்போது ஒரே ஒரு கூடைதான் மிதந்தது. ஒரு கூடை மட்டும் ஏரியில் மிதந்தால் பயந்தான். கூடைக்குரிய ஆள் எங்கே ? கூடைக்குச் சொந்தக்காரன் எங்கே காணோம்?

சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் ஆம்பல் பூப்பதில்லை. தூரத்தில் நிறையத் தாமரை இலைகள். அவற்றுக்கு அருகில் மிதந்தது ஒரு கூடை. கூடைக்குரிய ஆள் எங்கே ? தண்ணீரில் இறங்கியிருந்தவர்கள் கரைக்கு வந்துவிட் டார்கள். தங்கள் தங்கள் கூடைகளை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டார்கள். ஒரு கூடை மட்டும் வாடைக்காற்றில் மிதந்து கொண்டு தொலைவில் போவதைப் பார்த்தார்கள்.

"பாருங்க, தண்ணியிலே ஒரு கூடை மிதந்துகிட்டுப் போகுது!'' என்றான் ஒருவன்.

இன்னொருவன் சொன்னான் : ''யாரோ தண்ணியிலே முழுகிப் போயிட்டாங்க,"

மூன்று காலமும் அறிந்த ஒரு கிழவி, அவள் முகம் உலர்ந்து சுருங்கிக் கிடந்தது, உரக்கச் சொன்னாள், "ஏரி ஒரு ஆளைப் பலி வாங்கிட்டுது" என்று. அவள் விதியைப் போல் நின்றுகொண்டு, "இது நடந்தே தீரும். வருஷாவருஷம் ஏரிக்குப் பசி வந்துடும். அது சமயம் கிடைச்சபோது ஒரு ஆளை முழுங்கிடும்" என்று கூறினான்.

"ஏரிக்குப் பலியான ஆள் யார் ?''

ஜாலாலி தண்ணீருக்கடியில் அந்த இரண்டு சிவப்புக் கண்களுடன் விளையாடினாள். அவை முன்னால் வந்தன ; பின்னால் போயின. தண்ணீருக்குள்ளே முழுகினால் அடர்ந்த நீல நிறம் அல்லது பசுமை நிறம். நாற்புறமும் பிரவாகமாக ஓடியது. கீழே சூரியனின் ஒளி ஊடுருவும் தூரம்வரை மங்கலாகத் தெரிந்தது. அந்த ராட்ஸசக் கஜார் மீன், அவளைக் கடித்துக் கொல்லத் தருணம் பார்க்கிறது என் று ஜாலாலிக்குப் புரியவில்லை. தருணம் கிடைத்ததும் அது அவளைக் கடித்துக் குதறிவிடும். தன் இருப்பிடத்துக்குள் ஜாலாலி வந்ததை அந்த மீனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

தண்ணீருக்குக் கீழே மண் மிருதுவாக, சமதளமாக இருப்பதை ஜாலாலி கண்டாள். பிரம்மாண்டமான ரூயி, காத்லா அல்லது காலிபாஷஸ் மீனாயிருந்தால் தண்ணீருக்கடியில் அதன் இருப்பிடம்

233