கடல் நடுவே ஒரு களம்.. - பிரமிள்
ஸந்த ஸுதாயிபய் லஹாஙி
- அமரரின் புகழ் அவர்தம் அமரத்வத்திற்காக
லஹய் நீசாயி நீச்
- நீசர் புகழ் நீசத் தனத்திற்காய்
ஸுதா ஸாரஹி அமரதா
- அமரத்வம் அளிப்பதால் அமிழ்தத்தினைப் போற்று
கர்ள ஸராஹி நீச
- மரணிக்க வைப்பதால் விஷத்திற்கு வாழ்த்து
- துளசிதாஸ்
Posted on மே 11, 2009 by Senthilaan
https://senthilaan.wordpress.com/2009/05/11/கடல்-நடுவே-ஒரு-களம்/
கடல்களைத் தாண்டி கேட்கிறது
வீறிட்ட சிசுக்குரல்,
காப்புடைந்த பெண்ணின் கதறல்,
கனன்றெரியும் வீட்டின் குமுறல்,
சமரசப் பேச்சின் அலங்கார வளைவுக்குள்
எதிரெதிர் இனத்து மகனும் மகளும்
முகூர்த்த வேளையில்
சிரசறுபட்டு அலறிவிழும் ரணகளம்
இனம் மொழி மதம் என்று
ஊர்வலம் எடுத்த
மூளையின் தாதுக்கள் மோதி
சங்கமம் பிறழ்ந்து
சிக்கெடுத்தது ஒரு முடிச்சு
முடிச்சு இனி
வேட்டிக்கும் முந்தானைக்குமல்ல,
முஷ்டிக்கும் பொறிவில்லுக்கும்
அமைதியின் அனுஷ்டானங்களும்.
ஆரவாரம் ஒடுங்கி ஸ்தம்பித்தன.
கல்லும் உருகி
அலையெடுக்கிறது
எரிமலைப் பிழம்பு.
மரணம் மட்டுமே என்றான பின்
மரணம் தான் என்ன..?
அழிவது உடலின்
கற்பூர நிர்தத்துவம்;
அழியாததுவோ உயிரின்
ஆரத்திச் சுடர்.
—–பிரமிள்
பிரமிள் நினைவுகள்: Vimaladhitha Maamallan
Prasanna Ramaswamy:
// 80களில் ப்ரமீளின் ஒரு கையெழுத்து ப்ரதியைப் படித்து விட்டு அதைப் பதிப்பிக்க வேண்டியிருந்த தொகையைத் திரட்ட ஒரு சைக்கிளில் சென்னை முழுவதும் அலைந்தவர் மாமல்லன்.
// 80களில் ப்ரமீளின் ஒரு கையெழுத்து ப்ரதியைப் படித்து விட்டு அதைப் பதிப்பிக்க வேண்டியிருந்த தொகையைத் திரட்ட ஒரு சைக்கிளில் சென்னை முழுவதும் அலைந்தவர் மாமல்லன்.
அப்போதுதான் கல்லூரி முடித்திருந்தார் என்று நினைவு.
"இனி வேட்டிக்கும் முந்தானைக்குமல்ல உறவு" என்ற வரிகள் வரும் ப்ரமீளின் கவிதையை, ஏறக்குறையை இருவது வரிகளில் அந்த நாளின் ஈழப் போராட்ட வரலாற்றையே சொல்லும் கவிதை அது...அதை சிவராம் எழுதிய கைப்ரதியை வைத்துக் கொண்டு போகிறவருகிற இடத்திலெல்லாம் படித்துக் காட்டுவார். "கடல்களைத் தாண்டிக் கேட்கிறது வீறிட்ட சிசுக்குரல்" புத்தகத்தில் படிப்பதற்கு முன் ப்ரமீளின் கையெழுத்தில் அவர் படித்துக் கேட்டதுதான்....பிற்பாடு என் நாடகங்களில், குறும்படத்தில் ஒரு முக்கியமான வரி அது...

ஒரு பேச்சு கேட்க, ஒரு எழுத்தாளரை சந்திக்க, ஒரு கவிதை வாசிப்பு கேட்க, தெய்யம் பார்க்க, ஒரு யான்ச்சோ படம் பார்க்க வண்டியேறிப் போன நாட்கள் அவை....
அன்று வேறு கிழமை:))//
அன்று வேறு கிழமை:))//
Lakshmi Chitoor Subramaniam:
// What a poem! //
// What a poem! //