இன்று கவிஞரும், எழுத்தாளருமான சு.வில்வரத்தினம் அவர்களின்
நினைவு நாள்..!
( 9 , டிசம்பர் 2006 )
-------------------------- -
பொழிவு -சு. வில்வரத்தினம்.
(இது மறுபதிப்பு)
மின்னி முழங்கி
பொழிந்தாற்றான் பொழிவா
பொழிந்த பெருமழைக்கு பின்னால்
மெல்லக்
காத்திருந்து எழுமே ஓர்
பேர் மௌனப்பெருக்கு
அடைமழைக்குப் பின் முளைக்கும்
கதிர்விரிக்காலையில்
வழியுமே
ஓர் எல்லையற்ற பேரமைதி
கழுவி துடைத்த வானின்
நட்சத்திர விழிகள்
சொரியுமே
ஒரு ஸ்ருதிச் சுத்தம்
புலன்கள் உறைந்து போக
இவற்றின்
பொழிவில் நனைந்திலையா
இலையுதிர்த்த நெடுமரமாய்
ஏகப்பெருவெளியின்
சங்கீதம் குளித்திலையா ?
-சு. வில்வரத்தினம்.
Thanks to http://mkmani-sulal.blogspot.in/
நினைவு நாள்..!
( 9 , டிசம்பர் 2006 )
--------------------------
பொழிவு -சு. வில்வரத்தினம்.
(இது மறுபதிப்பு)
மின்னி முழங்கி
பொழிந்தாற்றான் பொழிவா
பொழிந்த பெருமழைக்கு பின்னால்
மெல்லக்
காத்திருந்து எழுமே ஓர்
பேர் மௌனப்பெருக்கு
அடைமழைக்குப் பின் முளைக்கும்
கதிர்விரிக்காலையில்
வழியுமே
ஓர் எல்லையற்ற பேரமைதி
கழுவி துடைத்த வானின்
நட்சத்திர விழிகள்
சொரியுமே
ஒரு ஸ்ருதிச் சுத்தம்
புலன்கள் உறைந்து போக
இவற்றின்
பொழிவில் நனைந்திலையா
இலையுதிர்த்த நெடுமரமாய்
ஏகப்பெருவெளியின்
சங்கீதம் குளித்திலையா ?
-சு. வில்வரத்தினம்.
Thanks to http://mkmani-sulal.blogspot.in/
யாருக்கும் சொல்ல யாதொன்றும் இல்லை.
MKMANI-SULAL.BLOGSPOT.COM
இன்று கவிஞரும், எழுத்தாளருமான சு.வில்வரத்தினம் அவர்களின்
நினைவு நாள்..!
( 9 , டிசம்பர் 2006 )
-------------------------- -
இப்போதெல்லாம்
எமது நகரத்து வீதிகள்
காவற் கருவிப் பேய்களுக்கென்றே
எழுதப் பட்டதாய் போனதே போலும்.
‘எவரையும் சுடலாம் விசாரனையின்றியே
எரிக்கலாம் அன்றிப் புதைக்கலாம்’ என்று
இயற்றப்பட்ட புதிய விதிகளால்
குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.
இன்றைய இரவை அவனிடம் இழந்தோம்
இனிவரும் பகலும் எமதென்பதில்லை,
எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின்
எங்கள் முன்றிலும் எமதென்றில்லை.
எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய்
இன்புறு நாட்கள் எங்கோ தொலைந்தன.
இருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்?
வீடு நிறைந்த பீதி விடுத்தே
கோடரி ஏந்தியே யாவரும் வருக
விழுதுகள் ஊன்றிய இருளரக்கனைத் தறிப்போம்.
(‘எங்கள் வீதியை எமக்கென மீட்போம்’ - மரணத்துள் வாழ்வோம், ப.ம் - 84)
நினைவு நாள்..!
( 9 , டிசம்பர் 2006 )
--------------------------
இப்போதெல்லாம்
எமது நகரத்து வீதிகள்
காவற் கருவிப் பேய்களுக்கென்றே
எழுதப் பட்டதாய் போனதே போலும்.
‘எவரையும் சுடலாம் விசாரனையின்றியே
எரிக்கலாம் அன்றிப் புதைக்கலாம்’ என்று
இயற்றப்பட்ட புதிய விதிகளால்
குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.
இன்றைய இரவை அவனிடம் இழந்தோம்
இனிவரும் பகலும் எமதென்பதில்லை,
எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின்
எங்கள் முன்றிலும் எமதென்றில்லை.
எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய்
இன்புறு நாட்கள் எங்கோ தொலைந்தன.
இருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்?
வீடு நிறைந்த பீதி விடுத்தே
கோடரி ஏந்தியே யாவரும் வருக
விழுதுகள் ஊன்றிய இருளரக்கனைத் தறிப்போம்.
(‘எங்கள் வீதியை எமக்கென மீட்போம்’ - மரணத்துள் வாழ்வோம், ப.ம் - 84)
சாஆதியின் கடைசி வசந்தம் -
அவெதிக் இலாகியன் (1875-1957 )
AUTOMATED GOOGLE-OCR
Armenian Short Stories BY NBT
மொ.பெ : வல்லிக்கண்ணன்
வசந்தம் வந்துவிட்டது. மண்ணுலகை அற்புதமாக மாற்றுகிற மாய வசந்தங்களில் அதுவும் ஒன்று. சந்தோஷத்தின், மற்றும் சோகத்தின் கவிஞனன சாஅதி அதைப்போல் நூறு வசந்தங்கள் கண்டிருக்கிருன், அன்று அதிகாலையிலேயே சாஅதி விழித்தெழுந்தான். கானப்பறவை மீண்டும் கீதமிசைப்பதைக் கேட்கவும், வசந்த கால அற்புதங்களை மறுபடியும் பார்ப்பதற்காகவும், ரோணுபாத் நதிக்கரையின் மீதிருந்த பூந்தோட்டத்துக்கு அவன் போஞன். இயற்கையின் வெகுமதியான ரோஜா மலர்களைச் சூடி, காலைத் துயிலில் ஆழ்ந்திருந்த ஷிராஜின் வயலை அவன் நோக்கினன், நறுமணம் கலந்த வெண்பனியினல் திரையிடப் பட்டிருந்தது அது பூத்துக் குலுங்கிய மல்லிகைச் செடி ஒன்றின் கீழே, அழகான விரிப்பின்மீது சாஅதி உட்கார்ந்தான். அவன் நடுங்கும் கை களில் பசுமையும் செம்மையும் கலந்த ரோஜா மொக்கு ஒன்றைப் பற்றியிருந்தான். 'தன்னை அணைக்கும் காதலனைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கும் ஒரு இளம் பெண்ணேப்போல, காலை மென் காற்றுக்காகத் தன் இதழ்களை விரிக்கிறது இந்த ரோஜா’’ என்று மெதுவாக முணுமுணுத் தான். சாஅதி இப்போது மிகுந்த வயோதிகளுகிவிட்டபோதிலும், அவனுடைய ஆத்மா அரைவாசி மூடிய இமைகளினூடாகவும் காதுகளின் வழியாகவும் இந்த உலகத்தின் அற்புதமான நிகழ்ச்சி களையும் உருவங்களையும், அறிமுகமாகாத நெடுந்தொலைவுகளின் இசைகளையும் நிசப்தங்களையும் இன்னும் கண்டும் கேட்டும் மகிழ்ந்தது. கவிதை எனும் மந்திரசக்தி-விண்மீன்களின் ராஜ் யத்தில் உள்ள காஃப் மலையின் உச்சியில் தனது கூட்டை அமைத் துள்ள அந்த ஜாருக்த் பறவை-அவஞேடு இன்னும் பேசிவந்தது தான் காரணமாகும். ஒளி நிறைந்த கண்களும் சாம்பல்நிறச் சிறகுகளும் பெற்ற கானப்பறவைகள், காதல் கனலும் வசீகரமான இன்னிசைப்________________
岛 சாஅதியின் கடைசி வசந்தம்
பாடல்களைக் கூவின. அவற்றின் பாடல்கள் சாஅதியின் இதயத்தில் எதிரொலித்தன. நெடுந்தூரத்தில் காதலோடு மலர்ந்து திகழும் ரோஜாக் களின் நறுமண வாழ்த்துகளை வருடுகிற மென்காற்றின் கன்னி மூச்சு கொண்டு தந்தது. இக் காதல் அறிவிப்புகளை சாஅதியின் ஆத்மா புரிந்துகொண்டது. "இயற்கையின் மொழிகளை ஒரு அன்பு உள்ளம் எப்போதும் புரிந்துகொள்ளும். இசைப் பொருத்தத்தினல் நிறைந்திருக் கிறது இவ் உலகம். அதன் காதல் போதை அமரத்துவமானது." இப்படி வெகுநாட்களுக்கு முன்பு அவன் கூறியிருந்த வார்த்தை களை சாஅதி நினைவுகூர்ந்தான். கானப்பறவையின் இன்னிசையாலும் சிவப்பு ரோஜாக் களின் அழகினலும் பரவசமுற்ற சாஅதி, அவற்றின் மோக மூட்டும் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தான்; அதனல் கிறக்க முற்றுக் கண்களை மூடினன். கனவில் நிகழ்வதுபோல் இந்த உலகம் தன் உள்ளத்தில் சலனிப்பதை அவன் கண்டான்.
புனிதமான தாமரை மலர்கள் அணிசெய்ய அசைவற்று விளங்கும் இந்திய ஆறுகளை அவன் கண்டான்.
அறிவுள்ள யானைகள், அடர்ந்த காடுகளின் நடுவில் வாட்ட முற்று நிற்பதை அவன் பார்த்தான். டில்லியின் தங்க மாளிகை களில், தங்கள் கருநீலக் கூந்தலில் செக்கச் சிவந்த மலர்கள் சூடிக் காட்சி தரும் இனிய மகளிரையும் அவன் பார்த்தான்.
துரானின் சூறைப் பிரதேசங்களைக் கண்டான். சுடர்வீசும் வாள்கள் ஏந்திய கொடிய கயவர்கள் சூறைக்காற்றின் சிறகு களால் சுமந்துசெல்லப்படுவதையும் அவன் பார்த்தான்.
சூரியனுல் பொசுக்கப்படுகிற பாலை நிலத்தையும் அவன் பார்த்தான். மேலே பறக்கும் கழுகுகளின் கூரிய கண்களிலிருந்து தப்ப வேகம் வேகமாக ஒடும் மான்களை, குதிரைகள் மீதமர்ந்து துரத்திச் செல்கிற பெ தூ யின் வேட்டைக்காரர்களையும் பார்த்தான்.
புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வரிசைகளைப் பார்த்தான். அவர்கள் மெக்காவின் வாயில்கள் முன்னே முழந் தாளிட்டுப் பணிந்து பாடித் துதிப்பதையும் அவன் கண்டான்,
புராதன எகிப்தின் புகழ்வாய்ந்த அற்புதங்களை, பரந்து விரிந்த கடல்களின் நீல மினுமினுப்புகளை, டமாஸ்கஸ் நாட்டின் பட்டுபோல் மிருதுவான சருமம் பெற்ற பெண்களின் ஒளிவீசும்________________
அவெதிக் இஸாகியன் 9
உடல்களை அவன் பார்த்தான். வளைந்து கொஞ்சுகிற அவர்களின் கைகள் இளம் சா அதியின் கழுத்தை அழகிய மாலைபோல் சுற்றித் தழுவியது உண்டு.
சாஅதி நெடுமூச்சுயிர்த்து, கண்களைத் திறந்தான்.
"ஐயோ, எனது நூறு ஆண்டுகள் இனிய கனவைப்போல் பறந்து போய்விட்டன; ஒரு இரவின் கனவுக் காட்சிபோல் மறைந்தன. அத்தனை வருஷங்களும் ஒரு நொடிப்பொழுதுபோல் ஓடிவிட்டன. இன்பக் கதைகளே, கானப்பறவைகளே, ரோஜா மலர்களே, ரோஜாக்களின் சகோதரிகளான இன்பம் நிறைந்த இளம்பெண்களே, நீங்கள் எல்லோரும் எப்போதும் எனக்குத் துணையாக இருந்ததுதான் காரணம்!’
வெள்ளி மலர்கள் ஒளிர்ந்த சொர்க்கத் தோட்டத்திலிருந்து கதிரவன் வெளிப்பட்டான். புல்லும் பசிய இலைகளும், கற்களும் குன்றுகளும் மினுமினுத்தன. ஏனெனில் இரவு அவை அனைத்தின் மீதும் வைரப் பொடியை வாரித் தெளித்திருந்தது.
நீல வானத்தையும், சூரிய உதயத்தின் பொன்னுெளியில் பறந்து செல்லும் பறவைகளையும் சாஅதி ஆழ்ந்து நோக்கிஞன்.
வியப்போடும் பயத்தோடும் அவன் அவற்றைப் பார்த்தான்.
"உண்மை. உலகம் ஒரு அதிசயம்தான். ஒரு மோகினிக் கதைதான். அதன் அற்புதமும் அழகும் நிரந்தரமானவை,
'நாள்தோறும் நான் இந்த உலகத்தைப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அதை அன்றுதான் முதல் முதலாகப் பார்ப்பது போல் நான் புதுவியப்புப் பெறுகிறேன். உலகம் பழகிப்போனது தான். இருந்தாலும், அது அற்புதமாக இருக்கிறது. பழசானது என்ருலும் நித்தியப் புதுமை உடையது. தனக்குத் தானே நிகரான-நிரந்தரமான, விளக்கிச் சொல்ல முடியாத-ஒரு தனி அழகினுல் அது புதிதாக விளங்குகிறது."
சாஅதி மீண்டும் உலகை நோக்கினன். இயற்கையின் பன் முக, அதிசய விளையாடல்களைப் பார்த்தான். பச்சைப் புல் வெளியில் பவளச் செந்நிறக் கால்களால் நடக்கும் இரண்டு புருக்கள் கொஞ்சிக்கொண்டிருந்ததை அவன் கவனித்தான். திரும்பவும் உரக்கப் பேசிஞன்.
*உலகம் ஒரு வசியத்தில் கட்டுண்டிருக்கிறது. திறைந் திருக்கும் எவளோ ஒரு மாயக்காரியின் கைக்கோலின் மந்திர சக்தியில் அது சிக்கியுள்ளது. அதஞல் எ ல் லா மே இனிய மோகினிக் கதையாக மாறிவிட்டது.________________
夏伊 தாஆதியின் கடைசி வசந்தம்
*உலகம் தலைதெறிக்க ஓடுகிறது. சிதறிப் பிரிகிறது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனலும்: இந்த மகத்தான உலகத்தைப் புதுப்பித்து, மறுபடியும் சீரமைத்து. இப்படி அற்புதமான அழகுக் கதையாய் நம் முன்னே பரப்பி வைப்பதுதான் எதுவோ?
"காதல் துடிப்பினுல் கனத்துச் சோர்ந்த இதயத்தோடு: மானை, பாறைகளில் இடித்துத் தன் கொம்புகளை முறித துக கொண்டே கூரிய குன்றின்மீது ஏறும்படி செய்கிற சக்தி எது?
"அதன் பச்சைப் போர்வையைக் கிழித்து வெளிப்பட்டு, மிக இனிய நறுமணத்தைப் பரப்பும்.டி ரோஜாவை எது தூண்டு கிறது?
*மனிதப் பிறவியை எங்கிருந்தோ தோன்றவைத்து, சிந்திக்கவும், துன்பப்படவும், சுட்டெரிக்கும் ஆசைகளின் தீக் கொழுந்துகளை அனுபவிக்கவும், சாக விரும்பாமல் எப்போதும் இருக்கவும் தவிக்கும்படியாக, ரத்தமும் சதையும் பெற்றுத் திரியச் செய்வது எது?
"ஆ, காதலே, வெற்றிகொள்ள முடியாத சக்தியே, இனிய கொடுங்கோலனே! நெடுங்காலமாக நான் உன்னை அறிவேன். ஆயினும், உனது ஆழத்தையும் உன் சாரத்தையும் ஒருபோதும் நான் பூரணமாக உணர முடிந்ததில்லை.”
இதுதான் அவனது கடைசி வசந்தம் என்று சாஅதியின் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்தியது.
அவனுடைய இறுதி வசந்தம்!
தோட்டக் கதவு திறந்தது,
ஷிராஜின் நளியத், மென்காற்றின் வருடுதலுக்குத் தனது
பணிவெண் உடலேக் காட்டியவாறு உள்ளே வந்தாள். அடிக்கடி வருகிறவள்தான், சாஅதியின் காதலி அவள்.
திராட்சை மதுபோல் கிறங்கவைக்கும் அவளுடைய உதடு களும், துணி போர்த்தாத அவளது கரங்களின் வெண்மையும் கதகதப்பும், நூறு வயதுக் கவிஞனின் தூக்கமற்ற இரவுகளை அவ்வப்போது ஆனந்தமயமாக்கி யிருக்கின்றன.
சாஅதி, தன் இளமை நிரம்பிய, வாட்டமுருத இதயத் தினுல் பூரணமாக அவளைக் காதலித்தான். அவனது அமரகாவிய மான குலிஸ்தானில் பொன் எழுத்துகளால் அவளைச் சித்திரித் திருக்கிருன்,________________
அவெதிக் இஸாகியூன் i.
கைநிறைய ரோஜா மலர்கள் ஏந்தி நஸியத் அருகே வந்தாள். அவளே ஒரு ரோஜாப்பூ மாதிரி சுகந்தம் பரப்பினள். அவனை வாழ்த்தினுள்.
கவிஞன் துக்கத்தோடு இருந்தான், அவனது வெளிர் உதடு களில் விசனம் படிந்திருந்தது.
*மனிதரில் மிகவும் சந்தோஷமானவரே, உங்களை எது துயரப்படுத்துகிறது?’’
சாஅதி மவுனமாக இருந்தான்,
**உங்கள் நினைவோட்டத்தை நான் நேசிக்கிறேன். ஒ, சாஅதி! உங்கள் துக்கம் அறிவுபூர்வமானது. வேதனையில்தான் முத்துகள் பிறக்கின்றன என்றும், வாசனை திரவியம் எரிகிற போதுதான் நறுமணம் தருகிறது என்றும் உங்கள் இனிய உதடுகள்தானே அறிவித்திருக்கின்றன.'
சாஅதி ஒளியற்ற மென்னகையோடு அவளைப் பார்த்தான்.
**பாருங்கள், உங்களுக்காக நான் ரோஜாப் பூக்கள் கொண்டு வந்திருக்கிறேன். என் தோட்டத்தில் பூத்த மென்மையான ரோஜாக்கள்.”*
அவள் சாஅதிமேல் ரோஜா மலர்களைத் தூவிஞள். கவியின்
வருத்தம் படிந்த முகத்தை, பளிச்செனத் திகழ்ந்த தன் விரல் நுனிகளால் தொட்டாள்.
"சொர்க்கசுந்தரி, நீ எனக்குத் தந்த ரோஜாக்கள் உலகத் திலேயே மிகச் சிறந்த மலர்களாகவே எப்போதும் விளங்கின. அவை வாடியதே இல்லை,**
**ஆமாம் சாஅதி. "ஒருவர் ரோஜாவின் மணத்தை நுகரும் போது, அது சீக்கிரமே வாடிவிடும் என்று ஏன் நினைக்கவேண்டும்? அதன் வாசனையை எண்ணிப்பார். மலர் எப்பவோ வாடி விட்டது என்ற நினைவை நீ சீக்கிரம் மறந்துவிடுவாய்.”** கவி என்ருே சொன்ன வார்த்தைகளை நஸியத் தன் வெள்ளிமணிக் குரலில் திரும்பச் சொன்ஞள்.
அவள் அவன் அருகில் உட்கார்ந்தபோது, ஏகப்பட்ட கனவுகளை வரவழைத்த அவளது கூந்தல் சாஅதியின் முகத்தில் விழுந்தது. உடனே இனிய மென்காற்று ஒன்று, தனது வானவில் வர்ணச் சிறகுகளை அடித்தவாறு, தோட்டத்தின் வழியே விரைந்தது. சாஅதி தடுமாறும் தன் கையினல் நஸியத்தின் கனவுமயக் கூந்தலைத் தடவுகையில், காற்றில்________________
2 சாஅதியின் கடைசி வசந்தம்
படபடத்துச் சென்ற ஜும்ருக்த் பறவையின் அற்புதச் சிறகுகள் தான் அது. பின்னர், தன்னைச் சுற்றிலும் தகதகத்த மோகினிக் கதை உலகத்தின்மீது, தன் ஆத்மாவின் அடித்தளத்திலிருந்து எழுந்த பார்வை ஒன்றைப் படரவிட்டான், இனிய காதலியின் பிரகாசமான புன்னகையை அவன் பார்த்தான். சூடான கண்ணிர் அவனது கிழ இதயத்தைப் புண்ணுக்கியது. அவளுடைய சின்னக் கையைத் தன் கையில் எடுத்தான். அதை முத்த மிட்டான். பிறகு அதை அவன் பதைபதைக்கும் தன் நெஞ்சோடு அழுத்தினன். "எனது கடைசி வார்த்தைகளை என் குலிஸ்தான் காவியத்தின் கடைசிப் பக்கத்தில் உனது சின்னக் கையினுல் எழுதிவை : "நமது சுய விருப்பத்தின்படி நாம் பிறப்பதில்லை. நாம் ஆச்சர்யத்தில் வாழ்ந்து, கவலையோடு சாகிருேம்.***