தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, December 08, 2016

கவிதை - போர்ஹே (தமிழில் : சுபத்ரா) : யாதுமாகி. மார்ச் 2001


போர்ஹேயால் நிகழ்த்தப்பட்ட உரைகளில் Poetry என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட உரை. 
________________
AUTOMATED GOOGLE-OCR
WWW padippakam.com

இலக்கியம் என்பது வெளிப்பாடு என்பதே கருத்து. அதிலிருந்துதான் பெறப்படுகிறது அடிக்கடி மறக்கப்படும் க்ரோஸினுடைய மற்றைய கொள்கை; இலக்கியம் என்பது வெளிப்பாடு என்றால், இலக்கியம் வார்த்தைகளால் ஆக்கப்பட்டிருந்தால், மொழியும் கூட ஒரு அழகியல் புலனுணர் நிகழ்வுதான். மொழி என்பது ஒரு அழகியல் நிகழ்வு என்ற கருத்து நமக்கு ஒத்துக்கொள்ள ஓரளவு சிரமமானதுதான். க்ரோஸினுடைய கொள்கையை யாருமே கிட்டத்தட்ட வெளிப்படையாகத் தெரிவிப் பதில்லை, ஆனால் அனைவரும் அதைத் தொடர்ந்து பிரயோகிக்கிறார்கள்.

ஆழமாகத் தடம் பதிக்கக்கூடிய மொழி ஸ்பானிய மொழி என்றும், பலதரப்பட்ட ஒசைகளைக்கொண்டது ஆங்கிலம் என்றும், பிற்காலத்தைய மொழிகளெல்லாம் கொண்டிருக்க விரும்பிய ஒரு குறிப்பிட்ட கெளரவத்தை லத்தீன் கொண்டிருக்கிறது என்றும் நாம் கூறுகிறோம்; அழகியல் வகைப்பாடுகளை மொழிகளின்மேல் நாம் பொருத்திப்பார்க்கிறோம்.

மஞ்சளாக, பிரகாசமுடையதாக மாறிக் கொண்டிருப்பதாக உள்ள ஏதோ வொன்றை நாம் கற்பனை செய்வோம். அது ஆகாயத்திலுள்ள ஏதோவொன்று, வட்ட மாயிருக்கும்; மற்ற தருணங்களில் அது ஒரு பிறை வடிவத்தைக் கொண்டிருக்கும், மற்ற நேரங்களில் அது வளரவும் சுருங்கவும் செய்யும். யாரோ - அந்த "யாரோ வின் பெயரை நாம் என்றும் தெரிந்து கொள்ளமுடியாது - நம் மூதாதை ஒருவர், நமது பொது மூதாதை, அதற்கு Moon என்ற பெயரை அளிக்கிறார், வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடனும், பலதரப்பட்டவகையில் அழகுமிக்கதாகவும். Selene என்ற கிரேக்க வார்த்தை சந்திரனுக்கு மிகச் சிக்கலான தாகவும், ஆங்கில Moon என்பது சந்திரனுக்கேயுரிய ஒரு நிதானத்தைக் குரலில் புகுத்துவதாகவும், கிட்டதட்ட அது வட்டமாயிருப்பதால் சந்திரனைப்போலவே இருப்பதாகவும் நான்

கூறுவேன்; இறுதி எழுத்தைப் போலவே ஏறக்குறைய உள்ள ஒரு எழுத்தைக்கொண்டே அது தொடங்கிறது. ஸ்பானிய மொழியின் Luna லத்தீனிடமிருந்து ஸ்வீகரித்துக் கொண்ட இத்தாலிய மொழியுடன் பகிர்ந்துகொள்ளும் அந்த அழகிய வார்த்தை; அது இரண்டு ஒலிப்பிரிவுகளால் ஆனது. இரண்டு பகுதிகள் - ஒருவேளை அவை அதிகமாகக் கூட இருக்கலாம். போர்த்துகீசிய மொழியில் Lua என்று உள்ளது அழகுக் குறைவாகத் தோன்றுகிறது; ஃப்ரெஞ்சின் Lune என்பது மர்மமான ஏதோவொன்றைக் கொண்டுள்ளது. சந்திரனுக்கான ஜெர்மன் வார்த்தை ஆண்தன்மை கொண்டுள்ளது. எனவே, பூமியைப் பொறாமையுடன் பார்க்கும் ஒரு துறவியாகவோ அல்லது நட்சத்திரக் கம்பளத்தின்மேல் நடக்கும் ஒரு பூனையாகவோ சந்திரனை நீட்ஷேவால் கூறமுடிந்தது.

யாரோ, எங்கோ Moon என்ற வார்த்தையைக் கண்டுபிடித்ததாக நாம் கற்பனைசெய்கிறோம். முதல் கண்டுபிடிப்பு ஒருவகையில் சற்று வித்தியாசமான தாயிருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஒலி அல்லது மற்றொன்றைக்கொண்டு சந்திரனுக்குப் பெயரிட்ட அந்த முதல் மனிதனுடன் மட்டுமே ஏன் அது முடிந்துபோகவில்லை?

சந்திரன் என்பது காலத்தின் கண்ணாடி எனக் கூறும் ஒரு பாரசீக உருவகம் இருக்கிறது. காலத்தின் கண்ணாடி என்ற அந்தச் சொற்றொடரில் சந்திரனது லகுத்தன்மையும் முடிவின்மையும் இருக்கின்றன. ஒளி ஊடுருமளவு தெளிவை மிக அனேகமாகக் கொண்ட, மிக அனேகமாக எதுவுமற்ற தாயிருக்கும், ஆனால் தன் அளவை முடிவின்மையாகக் கொண்ட சந்திரனுக்கு அது முரணான ஒன்று. சந்திரன் என்பதோ காலத்தின் கண்ணாடி என்று கூறுவதோ, பின்னது இரண்டாம் கட்டமொன்றின் வேலை என்பதைத் தவிர, இரண்டு அழகியல் நிகழ்வுகள்தான். ஏனென்றால் காலத்தின் கண்ணாடி என்பது இரண்டு ஒருமைகளால் ஆனாது, ஆனால் சந்திரன் என்பது

யாதுமாகி. மார்ச் 2001 2

படிப்பகம்________________




WWW padippakam.com

ஒருவகையில் இன்னும் திறன்வாய்ந்த முறையில், வார்த்தையை, சந்திரன் என்ற கருத்தை நமக்குத் தருகிறது. ஒவ்வொரு வார்த்தையுமே கவித்துவ வேலைப்பாடுதான்.

கவிதையைவிட உரைநடை யாதார் தத்துக்கு நெருக்கமானதென்று கூறப்படுகிறது. இது தவறென்று நான் நினைக்கிறேன். சிறுகதை எழுத்தாளர் ஹொராஷியோ க்விரோகா வுடையதாக அறியப்படும் ஒரு கருத்து இருக்கிறது. குளிர்ந்த காற்று ஆற்றங்கரை யிலிருந்து வீசினால், ஒருவர் வெறுமனே "குளிர்ந்த காற்று

கவிதையைவிட உரைநடை யாதார்தத்துக்கு நெருக்கமானதென்று

மெளனம்" இதை ஒரு தவறு என்றும், கார்டுக்கி பண்பை வேறிடத்தில் பொருத்திவிட்டார் எனவும், "பச்சை வயல்களின் மெளனம்" என்று எழுத அவர் உத்தேசித்திருந்ததாகவும் நாம் நினைக் கக்கூடும். அதை நாம் எப்படி உணர்வது? ஒரேநேரத்தில் பல விஷயங்களை நாம் உணர்கிறோம். (விஷயம் என்ற வார்த்தை ஒருவேளை மிகவும் பொருள் ரீதியாகவும் இருக்கலாம். வயலை, வயலின் கண்ட இருப்பை, செழுமையை, மெளனத்தை நாம் உணர்கிறோம். மெளனத்துக்கு ஒரு வார்த்தை உண்டெ ன் பது அ ழ கி ய ல் சி ரு ஷ் டி யே .

ஆற்றங்கரையிலிருந்து மக்களுக்குப்  கூறப்படுகிறது. இது தவறென்று நான் பெறுத்தவரையில் நினைக்கிறேன். சிறுகதை எழுத்தாளர் மெளனம். வயலில் 5ے

副业 எந்தச் சப்தமும் அதைப்பற்றிய ந ஹொராஷியோ க்விரோகாவுடையதாக இல்லை என்ற புலனு ன ர் த ல் SS SMS C SSS SSSSLS SSLSSS என்ன? காற்று அறியப்படும் ஒரு கருத்து இருக்கிறது. ཆཔ་མ་མ་ཞུ་ அசைவதை நாம் - பிரயோகிக்ரயோகிததது ஒரு உணர்கிறோம். அதைக் காற்று என்று அழகியல் செயல்பாடுதான், சந்தேகமே அழைக்கிறோம்; Ꭷ (Ꮂ5 குறிப்பிட்ட

திசையிலிருந்து, ஆற்றங்கரை லிருந்து காற்று வருவதை நாம் உணர்கிறோம். இதைக்கொண்டு, கோங்கொராவினுடைய கவிதை வரி போலவோ ஜாய்ஸினுடையதைப் போன்ற ஒரு வாக்கியம் போலவோ சிக்கலான ஏதோவொன்றை உருவாக்குகிறோம். "குளிர்ந்த காற்று ஆற்றங்கரையிலிருந்து வீசுகிறது" என்ற அந்தச் சொற்றொடருக்குத் திரும்புவோம். காற்று என்கிற பெயர்ச் சொல்லையும் வீசுகிறது என்ற வினைச் சொல்லையும் ஆற்றங்கரை யிலிருந்து என்ற அர்த்தத் தளத்தையும் உருவாக்குகிறோம். இவை அனைத்தும் யதார்த்தத்திலிருந்து தொலை வானவை. யதார்த்தமென்பது எளிமையான ஒன்று. வெளிப்பார்வைக்கு மந்தமானதாகவும் சாதாரணமாகவும் தெரியக்கூடிய, வேண்டு மென்றே க்விரோகாவால் அப்படியே தேர்ந்தெடுக்கப் பட்ட அந்த வரி, ஒரு சிக்கலான சொற்றொடர்; அது ஒரு அமைப்பு.

கார்டுக்கியின் பிரபலமான வரியை நாம் எடுத்துக்கொள்வோம். "வயல்களின் பச்சை

யில்லாமல் அந்தக் காலத்துக்கு மிகவும் துணிச்சலான ஒன்று. கார்டுக்கி 'வயல்களின் பச்சை மெளனம்" என்னும்போது, "பச்சை வயல்களின் மெளனம்" என்று கூறியிருக்கக்கூடியதைப் போலவே உடனடி யதார்த்தத்திலிருந்து மிகவும் நெருக்கமான, அதே சமயம் மிகத் தொலைவிலுள்ள ஏதோவொன்றைப்பற்றிக் கூறுகிறார்.

நம்மிடம் இன்னோரு உதாரணமும் உள்ளது, விர்ஜிலின் வெல்லமுடியாத அந்த வரி, 'நிழல்களினூடாக ஏகாந்த இரவின் கீழ் அவர்கள் இருண்டு சென்றார்கள்." வாக்கியத்தை வட்டமாக்கும் "நிழல்களினூடாக" வைத் தவிர்த்துவிட்டு, "ஏகாந்த இரவின்கீழ் அவர்கள் (ஏணியாஸ9ம் சிபிலும்) இருண்டு சென்றார்கள்" என்பதை எடுத்துக் கொள்வோம். வார்த்தைகளை விர்ஜில் மாற்றியிருக்கிறாரென்று நாம் நினைத்துக் கொள்வோம், ஏனென்றால் உண்மையில் கூறியிருக்கக்கூடியதானது "இருண்ட இரவின் கீழ் அவர்கள் தனியாகச்

யாதுமாகி. மார்ச் 2001 3

படிப்பகம்________________




WWW, padippakam. COm

சென்றார்கள்" என்பதே. இருந்தாலும், அந்தப் படிமத்தைப் புத்துருவாக்கம் செய்யும் போது ஏனியாஸையும் சிபிலையும் நாம் நினைப்போம், மேலும், "இருண்ட இரவின்கீழ் அவர்கள் தனியாகச் சென்றார்கள்" என்பதைப் போல் 'ஏகாந்த இரவின்கீழ் அவர்கள் இருண்டு சென்றார்கள்" எனபதும் நமது படிமத்துக்கு அதேயளவு நெருக்கத்துடன் இருக்கிறது.

மொழி என்பது அழகியல் சிருஷ்டி, அதைப்பற்றிய கேள்விகளேதுமில்லை யென்று நான் நினைக்கிறேன். ஒரு மொழியை நாம் கற்கும்போது, வார்த்தைகளை நெருக்கமாகப் பார்க்க வேண்டியிருக்கும் போது அவை அழகானவை அல்லது அழகற்றவை என்று நாம் உணர்வது இதற்கொரு காட்சியாக இருக்கின்றது. மொழியைக் கற்கும் போது ஒருவன் வார்த்தைகளைப் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கிறான்; இந்த வார்த்தை அசிங்கமானது, இது அழகானது, இது மிகவும் கனமுடையது என்று நினைக்கிறான். ஒரு வனது தாய்மொழியில் இது நிகழ்வதில்லை, அங்கே வார்த்தைகள் r பேச்சிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வையாக நமக்குத் தோன்றுவதில்லை.

கவிதை என்பது வெளிப்பாடு என்றார் க்ரோஸ், ஒரு வரி என்பதும், பாடல் உருவாக்கத்தின் ஒவ்வொரு பாகமும் வெளிப்பாடு என்றால், ஒவ்வொரு வார்த்தையும் கூட அதனளவில் வெளிப் பாட்டுத்தன்மை கொண்டதே. இது ஒன்றும் புதிதானதல்ல என்றும், அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றும் நீங்கள் கூறுவீர்கள். ஆனால் இது நமக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. அதை நாம் உணர்வது அது உண்மை என்பதால்தானென்று நினைக்கிறேன்.

கவிதை என்பது நூலகத்திலுள்ள புத்தகங்கள் அல்ல, எமர்ஸனின் மாயக் கூடத்திலுள்ள புத்தகங்கள் அல்ல என்பதே நிஜம். கவிதை என்பது புத்தகமும் வாசகனும் நிகழ்த்தும் சந்திப்பு, புத்தகத்தின் கண்டுபிடிப்பு. கவிஞன், படைப்பை மனதில் உருவாக்கி, அதைக் கண்டுபிடிக்கவோ புதிதாகத் தோற்றுவிக்கவோ

செய்வதான மற்றொரு வினோதமான அழகியல் அனுபவமும் இருக்கிறது. Invent) என்பதற்கும் (discover) எனபதற்கும் லத்தீனிலுள்ளது ஒரே வார்த்தைதான் என்பது நன்கு தெரிந்ததே. கண்டுபிடிப்பதோ புதுத்தோற்றுவிப்பு செய்வதோ நினைவுகூர்வதே என்னும் ப்ளேட்டோவின் கொள்கையுடன் இது அனைத்தும் ஒத்துப்போகிறது. கற்பது என்பது நினைவுகூர்வது என்பதையும், தெரியாம லிருப்பது என்பது மறக்கத் தெரிவது

என்பதையும் ஃப்ரான் லிஸ் பேகன் ஒப்புக் கொண்டார், அனைத்தும் இந்த வகையில் தானிருக்கின்றன, நாம்தான்

அவற்றைக் காண்பதில்லை.

ஏதாவதொன்றை நான் எழுதும்போது, அது ஏற்கனவே இருந்திருக்கின்றது என்ற உணர்வைப் பெறுகிறேன். ஒரு பொதுவான கருத்திலிருந்து நான் தொடங்குகிறேன். தொடக்கமும் முடிவும் சற்றேறக் குறைய எனக்குத் தெரிகிறது. பின்பு நான் இடைப்பட்ட பகுதிகளைக் கண்டு பிடிக்கிறேன். ஆனால் அவற்றை நான் புதுத்தோற்றுவிப்பு செய்ததாகவோ, என் சுதந்திரமான விளைவை அவை நம்பியிருப்பதாகவோ நான் உணரவில்லை, பொருட்க்ள் அவை போலவேயிருக்கின்றன, ஆனால் அவை மறைந்துள்ளன, ஒரு கவிஞனாக எனது கடமை அவற்றைக் கண்டுபிடிப்பதுதான்.

புதிதாக ஏதோவொன்றைக் கண்டுபிடிப்பது என்பதல்லாமல், நாம் மறந்துவிட்ட ஏதோவொன்றை நினைவு கூறச்செய்வதே கவிதையின் விளைவுகளில் ஒன்று என்றார் ப்ராட்லி, ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் போது நாமும் அதை எழுதியிருக்கலா மென்றும், அந்தக் கவிதை ஏற்கனவே நமக்குள் இருந்திருக்கிறதென்றும் கற்பனை செய்கிறோம். சிறகுகளைக் கொண்ட, உருமாறிக்கொண்டேயிருக்கும் புனிதமான அந்த விஷயமான கவிதையைப் பற்றிய ப்ளாட்டானிக் வரையறுத்தலுக்கு இது நம்மை அழைத்துச்செல்கிறது. வரையறுப்பு என்றமட்டில் அது தவறாக இருக்கலாம், ஏனென்றால் அந்த

யாதுமாகி. மார்ச் 2001

படிப்பகம்________________




WWW padippakam.com

சிறகுகளைக்கொண்ட உருமாறிக் கொண்டே யிருக்கும் புனிதமான அந்த விஷயம் இசையாகக்கூட இருக்கலாம். (கவிதை என்பது இசையின் ஒரு வடிவம் என்பதை விடுத்து) கவிதையை வரையறுக்கும் ப்ளேட்டோ, கவிதையின் ஒரு உதாரணத்தையும் தருகிறார். கவிதையென்பது ஒரு அழகியல் அனுபவம் என்னும் கருத்துக்கு இது நம்மை அழைத்துச் செல்கிறது.

ப்யூனோஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தின் தத்துவ மற்றும் படைப்புக்கலைக் கல்லூரியில் நான் ஆங்கில இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறேன். மேலும், இலக்கிய வரலாற்றை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்க்க முயன்றிருக்கிறேன். என் மாணவர்கள் என்னிடம் ஒரு புத்தகப்பட்டியல் கேட்டபோது நான் அவர்களிடம் கூறினேன் "புத்தகப்பட்டியல் என்பது முக்கியத்துவ மற்றது" ஷேக்ஸ்பியரிய விமர்சனங்களைப் பற்றி ஷேக்ஸ்பியருக்கு எதுவும் தெரியாது. பிரதிகளை ஏன் நேரடியாகப் படிக்கக் கூடாது? உங்களுக்குப் புத்தகம் பிடித்திருந்தால், நல்லது. இல்லையென்றால் அதைப் படிக்காதீர்கள். கட்டாய வாசிப்பு என்பது முட்டாள்தனமானது, கட்டாயமான சந்தோஷத்தைப்பற்றிப் பேசுவது வேண்டு மானால் பிரயோஜனமான தாயிருக்கும். உங்களால் கவிதையை உணரமுடியவில்லை யென்றால், அழகு பற்றிய உணர்வு உங்களுக்கு

இல்லை யென்றால் அடுத்து என்ன நிகழ்ந்ததென்று தெரிந்துகொள்ள ஒரு கதை உங்களைத் தூண்டாவிட்டால், அந்த

எழுத்தாளன் உங்களுக்காக எழுதவில்லை. அதைத்தூக்கிப் போடுங்கள். உங்களது கவனத்தைக் கவருமளவு வேறொரு எழுத்தாளனையோ " அல்லது. இன்றைக்கு உங்கள் கவனத்தை ஈர்க்கத் தகுதியற்ற, நீங்கள் நாளை படிக்கக் கூடிய எழுத்தாளனைக் கொண்டி ருக்குமளவு இலக்கியம் செழுமைபெற்றது."

வரையறுக்கப்படத் தேவையற்ற அழகியல் நிகழ்வைச் சார்ந்து இப்படித்தான் நான் கற்பித்தேன். அழகியல் நிகழ் வென்பது காதலைப்போல், கனியின் சுவையைப்போல்,

தண்ணீரைப்போலத் தெளிவானதும், உடனடி யானதும் வரையறுக்க முடியாதது மான ஏதோவொன்று. ஒரு பெண்ணின் நெருக்கத்தை, அல்லது ஒரு மலையை அல்லது ஒரு வளைகுடாவை உணர்வதைப் போல் நாம் கவிதையை உணர்கிறோம். நாம் அதை *2-L-67 L. LI T & உணரும் போது, நமது உணர்வுகளைவிடச் சந்தேகமற்ற வகையில் பலவீனமாயிருக்கக்கூடிய பிற வார்த்தை களைக் கொண்டு அதை ஏன் நீர்த்துப் போகச் செய்யவேண்டும்?

கவிதையைக் கிட்டத்தட்ட உணரவே செய்யாத சிலர் இருக்கின்றார்கள், பொதுவாக அவர்கள்தான் கவிதையைக் கற்பிக்க அர்ப்பணித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். கவிதையை உணர்வதையும், கற்பிக்கப்படாமலிருப்பதையுமே நான் நம்புகிறேன். சில பிரதிகளைப்பற்றிய காதலை நான் கற்பித்ததில்லை, இலக்கியத்தை எப்படி நேசிப்பது, மகிழ்ச்சியின் ஒரு வடிவமாக இலக்கியத்தை எப்படிப் பார்ப்பது என்பதையே என் மாணவர்களுக்கு கற்பித்து வந்திருக்கிறேன். நான் குணரூபமாகச் சிந்திக்க கிட்டத்தட்ட இயலாதவன் - மேற்கோள்களைக் கொண்டும் நினைவுக்களைக் கொண்டும் தொடர்ந்து ஊன்றுதாங்கல் செய்கிறே னென்பதை நீங்கள் கவனித் திருக்கலாம். குணரூபமாகக் கவிதையைப்பற்றிப் பேசுவதான - மனதைக் களைப் படையச் செய்வதும் நேரத்தை வீணடிப்பதுமான செயலை விட, இரண்டு ஸ்பானியக் கவிதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை அலசுவோம்.

நன்றாகத் தெரியவந்துள்ள இரண்டு கவிதைகளை நான் தேர்வுசெய்கிறேன். ஏனெனில் என் நினைவுகள் தவறு செய்யக்கூடும்; உங்கள் நினைவுகளில் ஏற்கனவே தங்கியுள்ள பிரதிகளை நான் தேர்வுசெய்கிறேன். ஒஸ9னாவின் கோமகன் டான் பெட்ரோ டேல் லெஸ் ஜிரோனின் நினைவாக க்விவடோவால் எழுதப்பட்ட பதினான்குவரிக் கவிதையை நாம் எடுத்துக் கொள்வோம். அதை நான் நிதானமாகக் கூறுகிறேன், பின்பு அதற்குள் போகலாம், ஒவ்வொரு வரியாக

படிப்பகம்________________




WWW, padippakam. COm

பெருமைமிகு ஒளUலினா தன் தாய்மண்ணை இழந்திருக்கலாம்

ஆனால் அதன் எதிர்ப்புக்கான தீரச்செயல்களை அல்ல

ஸ்பெயின் கொணர்ந்தது மரணத்தையும் சிறைவாசத்தையும் அவனுக்கு, அதிர்ஷ்டம் அடிமையாக்கியது அவனை. பொறாமையில் அவர்கள் அழுதார்கள், ஒருவர்பின் ஒருவராக, அயல்தேசங்களும் அவனுக்குச் சொந்தமானதும்; ஃப்ளாண்டர்களின் படையெடுப்புக்களே அவன் கல்லறை, ரத்தமயமான நிலவே அவனது கல்லறை வாசகம்,

அவனுடைய சவச்சடங்குகளுக்காக பார்த்தீனோப்

எரித்தது வெளU9வியஸ்ை, ட்ரினாக்ரியா மாங்கிபெலோவை;

ராணுவ அழுகை வெள்ளமாய் வளர்ந்தது. சொர்க்கத்தில் சிறந்த இடத்தை செவ்வாய் அளித்தான் மோஸெல், ரைன், டாகஸ், டான்யூப் யாவும் துக்கத்தில் முணுமுணுக்கின்றன தங்கள் சோகத்தை

நான் கவனிக்கவிரும்பும் முதல் விஷயம், அது ஒரு சட்டரீதியான காரணங்காட்டலில் ஈடுபடுகிறது என்பதே. ஒஸ9 னாவின் கோமகனைப்பற்றிய நினைவுகளை - வேறொரு கவிதையில் அவரே எழுதியதுபோல, "சிறையில் இறந்தான், இறந்தவன் கைதி" என்று தற்காத்துக்கொள்ள கவிஞர் விரும்புகிறார். கோமகனுக்கு ஸ்பெயின் பெரும் ராணுவ மரியாதையைக் கடன்பட்டிருக்கிறது, ஆனால் அவர்கள் அவனுக்குச் சிறையை அளித்தார்கள் என்கிறார் கவிஞர். இது நிறைவான ஆதாரபூர்வ்ங்களற்றது, ஏனெனில் ஒரு கதாநாயகன் குற்றவாளியாக இருக்கமுடியாது என்பதற்கோ அவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கோ எந்தக் கட்டாயமுமில்லை இருந்தாலும்,

பெருமைமிகு ஒளUனொ

தன் தாய்மண்ணை இழந்திருக்கலாம்,

ஆனால் அதன் எதிர்ப்புக்கான தீரச்செயல்களை அல்ல

ஸ்பெயின் கொணர்ந்தது மரணத்தையும் சிறைவாசத்தையும்

அவனுக்கு, அதிர்ஷ்டம் அடிமையாக்கியது egy 61/62)60T.

என்பது, காரணங்களையன்றி, உணர்வு களை மட்டுமே தூண்டும் ஒன்று. இந்தப் பதினான்குவரிக் கவிதைக்காகவோ, அதை

எதிர்த்தோ நான் பேசவில்லை, அதை நான் அலச முயல்கிறேன். -

பொறாமையில் அவர்கள் அழுதார்கள், ஒருவர்பின் ஒருவராக,

அயல்தேசங்களும் அவனுக்குச் சொந்தமானது;

இந்த இரண்டு வரிகளும் பிரதானமான கவித்துவ அதிர்வு ஏதுமற்றவ்ை, கவிதையை விஸ்தாரப்படுத்தும் பொருட்டே அவை அங்கே வைக்கப்பட்டுள்ளன. நான்கு அடியியைபுகள் தேவைப்படும் இத்தாலியப் பதினான்கு வரிக் கவிதையின் சிக்கலான வடிவத்தை க்விவடோ பின்பற்றினார். ஷேக்ஸிபியர் பின்பற்றியது இரண்டு மட்டும் தேவைப்படும் எலிஸபெத்திய பதினான்குவரிக் கவிதை யின் சுலபமான வடிவத்தை, க்விவடோ தொடர்கிறார்;

ஃப்ளாண்டர்களின் படையெடுப்புக்களே அவன் கல்லறை,

ரத்தமயமான நிலவே அவனது கல்லறை வாசகம்.

தேவையானது இதோ இருக்கிறது. இந்த இரண்டு வரிகளும் தம் செழுமையை அதன் நிச்சயமின்மைக்குக் கடன்பட்டிருக்கின்றன. "ஃப்ளாண்டர்களின் படையெடுப்புக்களே அவன் கல்லறை' என்பதன் அர்த்தம் என்ன? ஃப்ளாண்டர்களின் பிரதேசங்களைப்பற்றி,

யாதுமாகி. மார்ச் 2001

படிப்பகம்________________




WWW padippakam.com

கோமகன் மேற்கொண்ட ராணுவப் படை யெடுப்புகள் பற்றி நாம் நினைக்கலாம். "ரத்தமயமான நிலவே அவன் கல்லறை வாசகம்" என்பது ஸ்பானிய மொழியின் மிக அமரத்துவமான வரிகளுள் ஒன்று. அதன் அர்த்தம் என்ன? அழிவு நாளின் போது தோன்றும், அல்லது யுத்த களத்தின்மேல் தோன்றும் ரத்தமயமான சந்திரனை நாம் நினைக்கலாம். ஆனால், ஒஸ9 னாவின் கோமகனுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்ட மற்றொரு பதினான் குவரிக்கவிதையில் அவர் கூறுகிறார்.

"த்ரேளயின் நிலவுகளுக்கு, ரத்தமயமான

கிரஹணத்துடன் இப்போதுங்கள் tJ tJ 600 tb முடிக்கப்படுகிறது.”

& i I (3 – L— т шо п 6іп கொடி ையப் பற்றி க் வி வ டேட r ஆ ர ம் பத் தி ல் நினைத்திருக்கக்கூடும்; ரத்தமயமான சந்திரன் என்பது செந்நிறமான அரைச் சந்திரனாக இருக்கக் கூ டு ம் . எந்தவொரு அர்த்தமும் தவிர்க்கப் படக்கூடாது என்பதை நாம் அ ைன வ ரு ம் நினைக் கிறேன் , க்விவடோ, ராணுவப் ப ய ன ங் கட ைள மட்டுமோ, கோமகனின் சேவைகளையோ, ஃ ப் எ I ன் ட ர் படையெடுப் பையோ, துருக்கியக் கொடியையோ மட்டும் குறிப்பிடுகிறாரென்று நாம் கூறமாட்டோம். பல்வேறு அர்த்தங்களை நினைவில் கொண்டார் க்விவடோ. இந்த வரிகள் நிச்சயமின்மை கொண்டதால் அற்புதமாயி ருக்கின்றன.

அவனுடைய சவச்சடங்குகளுக்காக பார்த்தீனோப்

Lub: (oor6&T

எரித்தது வெஸவிெயஸை, ட்ரினாக்ரியா மாங்கிபெலோவை,

வெஸ9வியஸ்ை நேப்பிள்ஸ9ம், எட்னாவை சிசிலியும் எரித்ததாக அது கூறுகிறது. அந்தப் புராதனப் பெயர்கள்

ଶt ଖାଁ ଶu ଶITଶ! வினோதமாக இங்கு உபயோகிக்கப்பட்டுள்ள. - பின்பு வந்த புகழ்மிக்க பெயர்களைவிட அவை

வெகுதொலைவில் இருப்பதாகப் படுகிறது.

ராணுவ அழுகை வெள்ளமாய் வளர்ந்தது கவிதை என்பது ஒரு விஷயம், அ றி வ |ா ர் ந் த உணர் வெ ன் பது மற்றொரு விஷயம் எ ன் ப த ந் க ர ன மற்றொரு ஆதாரம் இதோ இருக்கிறது.

வ ள் ள ம் உருவாக்கு மளவு ராணுவ வீரர்கள் அழுதார்களென்ற L LH LD ம் Slag. Dë Ski அ பத் த மா னது . ஆனால், தனக்கேயுரிய விதிகள் கொண்ட கவிதையில் அது அபத்தமான தல்ல. "ராணுவ அழுகை" -

"ராணுவ' என்ற வ T ர் த் ைத ஆச்சரியந்தருகிறது.

அ மு ைக க் கு அளிக் கப் படும் வினோதமான அடையாக "ராணுவ" என்பது இருக்கிறது. 'சொர்க்கத்தில் சிறந்த இடத்தை செவ்வாய் அளித்தான் இதையும் நாம் தர்க்கபூர்வமாக நியாயப்படுத்தமுடியாது; சீஸருக்கு பக்கத்தில்

படிப்பகம்________________




WWW, padippakam.com

ஒஸ்9 னாவின் கோமகனை செவ்வாய் தங்க வைப் பானென்று நினைப் பதில் அர்த்தமில்லை. தன் மிகைப்படுத்தும் குனாம்சத்தாலேயே இந்தச் சொற்றொடர் தன் இருப்பைக் கொண்டிருக்கிறது. இதுதான் கவிதையின் உரைகல், அர்த்தத்தைத்தாண்டியும் ஜீவித்திருக்கிறது அந்த வரி.

மோளெல், ரைன், டாகஸ், டான்யூப் யாவும்

துக்கத்தில் முணுமுணுக்கின்றன தங்கள் சோகத்தை

பல வருடங்களாக என் மனதைத் தொட்டுவந்திருந்த இந்த வரிகள் அடிப்படையில் தவறானவை என்று கூறுவேன். தனது படையெடுப்புக் களின் புவியியலாலும் பிரபலமான நதிகளாலும் அழுதுதீர்க்கப்பட்ட ஒரு கதாநாயகன் பற்றிய கருத்து தன்னை இழுத்துச் சென்றுவிட க்விவடோ அனுமதித்தார். அது தவறென்று நாம் உணர்கிறோம். உண்மையைக் கூறுவது நல்லதாயிருந்திருக்கும், தனது பதினான் குவரிக் கவிதையின் இறுதியில் காடு ஒன்றை

அழித்ததற்காக டக்ளஸை வேர்ட்ஸ்வொர்த் தாக்கியது போல அவர் கூறுகிறார், ஆம். "சகோதரத்துவங்கொண்ட வழிபடத்தக்க மரங்களின்" உயர்ந்த பெரும் கூட்டமொன்றை அழித்தது டக்ளஸ் வனத்துக் கிழைத்த கொடூரமான ஒன்றாகும். இருந்தாலும், அவர் மேலும் கூறுகிறார், நாம் உணரும் தீமையின் வலிகள் இயற்கைக்கு ஒன்று மேயில்லாததாக இருக்கிறது - ட்வீட் ஆறும் பச்சைப் புல்வெளிகளும் மலைகளும் பாதிப் பேதுமின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

உண்மையைக் கூறுவதன்மூலம் வலுவான தாக்கத்தை உண்டாக்க முடியுமென அவர் கருதினார். அந்த அழகிய மரங்களை அவர்கள் அழித்துவிட்டார்கள் என்பது நம்மை வலிகொள்ளச்செய்கிறது, ஆனால் இயற்கைக்கு அது ஒரு விஷயமில்லை. இயற்கையால் - அப்படி அழைக்கப்படும் ஒன்று இருந்தால் - அவற்றைச் சீர்செய்து கொள்ளமுடியுமென்பது அதற்குத் தெரியும். لگے ]][[ ஓடிக்கொண்டேயிருக்கிறது.

க்விவடோவுக்கு, ஆற்றின் கடவுளைப் பற்றியதுதான் முக்கியமான தாயிருக்கிற தென்பதுதான் உண்மை. ஒ ஸ9 னாவின் கோமகனின் மரணம் நதிகளுக்கு ஒரு பொருட்டாயிருக்க வில்லையென்று அவர் எழுதியிருந்தால் ஒருவேளை இன்னும் கவித்துவமானதாக இருந்திருக்கும். ஆனால், மனிதன் ஒருவனது மரணத்தின் பின் இயற்றப்படும் ஒரு இரங்கற்பாவை உருவாக்க க்விவடோ விரும்பினார். மனிதனின் மரணம் என்பது என்ன? மறுபடி தோன்ற முடியாத ஒரு முகம் அவனுடன் இறக்கிறது என்று கண்டார் ப்ளினி. ஒவ்வொரு மனிதனுக்கும் பிரத்யேக முகமொன்று இருக்கிறது, மிகவும் மனிதத்தன்மை கொண்ட ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளும், ஆயிரக் கணக்கான நினைவுகளும் அவனுடனே சேர்ந்து இறக்கின்றன. இது எதையும் க்விவடோ உணர்வதாக தெரியவில்லை அவரது நண்பரான ஒஸ9னா கோமகன் சிறையில் இறந்திருக்கிறார், க் விவடோ இந்தக் கவிதையை இரக்கமின்றி எழுதுகிறார், அதன் தேவையான வேறுபாடின்மையை நாம் உணர்கிறோம். கோமகனைச் சிறையில் தள்ளிய அரசுக்கு எதிரான குரலாக அதை எழுதுகிறார். கோமகனை அவர் விரும்பாததுபோல் கூடத் தோன்றும். இருந்தாலும், நமது மொழியின் பெருமைமிகு பதினான்குவரிக் கவிதைகளுள் அதுவும் ஒன்று.

என்ரிக் பாங்க்ஸ் எழுதிய மற்றொரு பதினான்குவரிக் கவிதையை நாம் பார்ப்போம். க்விவடோவைவிட பாங்கஸ் நல்ல கவிஞர் என்று கூறுவது அபத்தமானது. பின்பும், இப்படிப்பட்ட ஒப்புமைகள் எதை

யாதுமாகி. மார்ச் 2001 8

Ш19ШШБ!і________________




WWW padippakam.com

உயிரினங்கள் புழங்கும் இடத்தில் பிரதிபலிப்பதில் வரவேற்கக்கூடியதும் விசுவாசமானதும் தோற்றத்தைப் பொறுத்தமட்டில், கண்ணாடி இருளில் சந்திர ஒளி போன்றது.

பெருமைகொள்கிறது இரவுக்குக்கொணர்வதில் விளக்கின்

மிதக்கும் தெளிவை, சோகத்தை,

பூந்தொட்டியில் இறந்துகொண்டிருக்கும் ரோஜா அதற்குள்ளும் தலையை நுழைக்கிறது.

வலியை அது இரட்டிப்பித்தால், அது மறுபடியும் நிகழ்த்துகிறது எனக்கோர் ஆன்மாவின் தோட்டமான விஷயங்களை.

ஒருநாள் வாழக்கூடுமென்று அது நம்பிக்கை கொள்கிறது அதன் நீல நிசப்தத்தின் மாயத்தில் நெற்றிகள் இணைக்கப்பட்டும் கைகள் பின்னப்பட்டும் பிரதிபலிக்கப்படும் ஒரு விருந்தாளி,

அர்த்தப்படுத்துகின்றன? பாங்க்ஸின் இந்தப் பதினான்குவரிக் கவிதையைக் கவனித்து, இதை மிகவும் அனுபவிக்கத்தக்கதாய் ஆக்குவது எது என்று பார்ப்போம்.

இந்தப் பதினான்குவரிக் கவிதை ஓரளவு விசித்திரமானது, ஏனெனில் முன்னிலைப் படுத்தப்படுவது கண்ணாடி அல்ல, இறுதியில் நமக்குத் தெரியவரும் ஒரு ரகசிய முன்னிலை யாளன் இருக்கிறான். அனைத்துக்கும் முதலாக, நம்மிடருக்கும் மையக் கருத்து மிகவும் கவித்துவமானது. அனைத்துப் பொருட்களையும் இரட்டிப்பாக்கும் கண்ணாடி

ப்ளோட்டினஸை நாம் நினைவுகூரலாம். அவனது உருவத்தை ஒவியமாக வரைய விரும்பினார்கள், ஆனால், "நானே ஒரு நிழல், ஆகாயத்திலுள்ள மூதாதையுருவின் ஒரு நிழல், அந்த நிழலின் ஒரு நிழலைச் செய்வதில் என்ன அர்த்தமிருக்கிறது?" னக் கூறி, மறுத்துவிட்டான். கலை என்பதே இரண்டாம்படி நிலை ஆவியுருதான் என்று நினைத்தான் ப்ளோட்டினஸ். மனிதன் பலவீனனாயிருந்தால், அவனது பிம்பத்தை எப்படி நேசிக்கமுடியும்? பாங்க்ஸ் உணர்ந்தது இதுதான். கண்ணாடியின் மாயாரூபத் தன்மையை அவர் உணர்ந்தார்.

கண்ணாடிகள் இருக்கின்றன என்பதே கொடுமையானது; நான் எப்போதுமே கண்ணாடிகளால் திகிலடைந்திருக்கிறேன்.

"போ'வும் உணர்ந்திருக்கிறாறென்று நினைக்கிறேன். அறை அலங்காரத்தைப் பற்றிய, அதிகம் தெரியவராதஅவரது கட்டுரை ஒன்று உள்ளது. அவர் வலியுறுத்தும் விதிமுறைகளில் ஒன்று உட்கார்ந்திருக்கக்கூடிய மனிதன் பிரதிபலிக் கப்படாத வகையில் கண்ணாடிகள் நிறுவப் படவேண்டும் என்பதே. கண்ணாடியில் பார்ப்பதைப்பற்றிய இவரது பயத்தை இது உணர்த்துகிறது. இரட்டையைப் பற்றிய கதையான "வில்லியம் வில்சன்" ணிலும் நாம் இதைக் காணமுடியும். மேலும், "ஆர்தர் கார்டன் பிம்மின் கதைக்கூற்று" என்ற கதையில் ஒரு அண்டார்டிக ஆதிவாசிக் கூட்டத்தையும், அதிலொரு மனிதன் முதல் முறையாகக் கண்ணாடிப் பார்த்தும் திகில டைந்து வீழ்வதையும் காணலாம். கண்ணாடிகளுக்கு நாம் பழகிவிட்டோம், ஆனால் நிஜத்தின் அந்தப் பார்வைப் புல இரட்டிப்பில் பீதியூட்டும் ஏதோவொன்று இருக்கிறது.

பாங்க்லின் கவிதைக்குத் திரும்புவோம். "வரவேற்கக்கூடியதும்" என்பது ஒரு மனிதநேயப் பாங்கைத் தருகிறது. இருந்தாலும், கண்ணாடிகள் வரவேற்கக் கூடியவை என்று நாம் நினைத்திருக்கவே இல்லை. ஒரு நட்பான விலகலோடு கண்ணாடிகள் அமைதியுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. உயிரினங்கள் புழங்கும் இடத்தில் பிரதிபலிப்பதில் வரவேற்கக்கூடியதும்

யாதுமாகி. மார்ச் 2001

படிப்பகம்________________




WWW, padippakam. Com

விசுவாசமானதும் தோற்றத்தைப் பொறுத்தமட்டில், கண்ணாடி இருளில் சந்திர ஒளி போன்றது.

தன்னளவில் Lay as IT & Lorr 6T smas & கண்ணாடியை நாம் பார்க்கிறோம், அவர், சந்திரன் போன்ற தொட்டுணரமுடியாத ஒன்றுடன் அதை மேலும் ஒப்பிடுகிறார். கண்ணாடியின் வினோதத்தன்மையையும் மாயத்தன்மையையும் உணர்வதைத் தொடர்கிறார். "நிழலின் மேலான சந்திர ஒளிபோல்."

பெருமைகொள்கிறது இரவுக்குக் கொணர்வதில் விளக்கின்

மிதக்கும் தெளிவை.

"மிதக்கும் தெளிவு" என்பது, பொருட்களை வரையறுக்க முடியா தென்பதைக் கூறுகிறது: கண்ணாடியைப் போல அனைத்தும் துல்லியமற்றதாக இருக்க வேண்டும். நிழலின் கண்ணாடிபோல் அது ஒருவேளை பிந்தைய மதியமாகவோ இரவாகவோ இருக்கலாம்.

விளக்கின் மிதக்கும் தெளிவை, சோகத்தை. பூந்தொட்டியில் இறந்துகொண்டிருக்கும் ரோஜா அதற்குள்ளும் தலையை நுழைக்கிறது. அனைத்தும் தெளிவற்றதாகப் போய் விடாமலிருப்பதற்கு, இப்போது நம்மிடம் ஒரு ரோஜா உள்ளது, ஒரு துல்லியமான ரோஜா,

வலியை அது இரட்டிப்பித்தால், அது மறுபடியும் நிகழ்த்துகிறது எனக்கோர் ஆன்மாவின் தோட்டமான விஷயங்களை, ஒருநாள் வாழக்கூடுமென்று அது நம்பிக்கைகொள்கிறது அதன் நீல நிசப்தத்தின் மாயத்தில் நெற்றிகள் இணைக்கப்பட்டும் கைகள் பின்னப்பட்டும் பிரதிபலிக்கப்படும் ஒரு விருந்தாளி, இங்கே நாம் கவிதைக்கான விஷயத்தை நெருங்குகிறோம், அது கண்ணாடி அல்ல, காதல் - அடக்கமான காதல், நெற்றிகள் இணைபட்டும் கைகள் பின்னப்பட்டும் காண விழைவது. கண்ணாடி அல்ல, கவிஞன்தான். ஆனால்,

ஒருவிதமான அடக்கம் இது அனைத்தையும் மறைமுகமான வழியில் கூறச்செய்கிறது. பாராட்டத்தக்கவகையில் இது தயாரிக்கப்

பட்டுள்ளது. தொடக்கத் திலேயே "வரவேற்கத்தக்கதும் விசுவாச மானதும்" என்பதை நாம் காண்கிறோம்,

தொடக்கத்திலிருந்தே கண்ணாடி என்பது கண்ணாடிப்பொருளால் ஆனதோ உலோகத்தால் ஆனதோ அல்ல. கண்ணாடி என்பது ஒரு ஜீவன், வரைவேற்றும் விசுவாசமாகவுமிருந்து, கவிஞனுடையதாக இறுதியில் அடையாளங் காணப்படும் தோற்றங்களாலான உலகத்தை நமக்கு அது பரிச்சயமாக்குகிறது. கவிஞன் என்பவன், காதல் என்ற விருந்தாளியைப் பார்க்க நம்பிக்கையுடனிருப்பவன்.

மொழிகளைப் பற்றியும், ஒப்பிடுவது எவ்வளவு நியாயமற்றது என்பது பற்றியும், பேசியிருக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு கவிதைப் பத்தியை ஸ்பானிய மொழியில் யோசித்தர்ல்

அவற்றை

quien hubiera tal ventura sobre las aguas del mar Como hubo el conde Arnaldoes la manana de San Juan கடல்தண்ணீர் மேல் யாருக்கு அவ்வளவு அதிர்ஷ்டமிருந்தது அர்னால்டோஸ் கோமகன் போல சான் ஜூவானின் காலையில் அர்னால்டோஸ் கோமன் அல்லது சான் ஜூவானின் காலை என்பது ஒரு பொருட்டல்ல. அந்த வரிகள் ஸ்பானிய மொழியில் மட்டுமே சொல்லப்பட முடியும்.

ஃபிரெஞ்சு மொழியின் ஒலி என்னால் ஒத்துத்கொள்ள முடியாததாயிருக்கிறது. பிற லத்தீன் மொழிகளின் ஒலியதிர்வை அது கொண்டிருக்கவில்லையென்று நினைக்கிறேன். ஆனால் ஹ்யூகோவின் இதுபோன்ற பிரமாதமான வரிகளுக்கு இடமளித்திருக்கும் ஒரு மொழியைப் பற்றி எப்படி ஒருவர் மோசமாக எண்ண முடியும்?

L'hydre - Univers tordant son Copros e 'Calle'd" astres

யாதுமாகி. மார்ச் 2001 | 10

படிப்பகம்________________




WWW padippakam.com

எப்படித் தவிர்க்கமுடியும் இப்படிபட்ட ஒரு மொழியை, அதில்லாமல் இப்படிபட்ட வரிகள் சாத்தியமில்லை எனும்போது,

ஆங்கிலத்தைப் பொறுத்தமட்டில், பழைய ஆங்கிலத்தின் திறந்த உயிரெழுத்துக்களைத் தொலைத்துவிட்ட குறைபாடு அதற்கு உள்ளதென்று நினைக்கிறேன். இருந்தாலும்,

And shalee the yoke of inauspicious stars From this World-Wearied flesh

போன்ற வரிகளை அது ஷேக்ஸ்பியருக்கு சாத்தியமாக்கியது.

ஒரு மொழியை நான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் அந்த ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கும் காரணங்களில் லா LD ବର୍ଷା ଗାଁ) କୋଷ) ଗ0 அந்த மொழி, ol) சொற்களாலாக்கப்பட்ட சொற்களை உருவாக்கச் சாத்தியமுள்ள (ஆங்கிலத்தைப் போல, ஆனால் இன்னும் அதிகமாக), திறந்த உயிரெழுத்துக் களையும் நுண்மையான இசையையும் கொண்ட ஜெர்மானிய மொழியாகத் தானிருக்கும். இத்தாலிய மொழியைப் பொறுத்தமட்டில் commedia போதுமானதாயிருக்கிறது.

பல்வேறு மொழிகளுக்கிடையில் இவ்வளவு பெரும் அழகு விரவிக் கிடக்கிறதென்பதை விட பிரமாதமான விஷயம் வேறொன்றுமில்லை. என் ஆசிரியரும் , ஸ்பானிய - யூதப் பெருங்கவிஞருமான ரஃபேல் கன்ஸினோஸ் அஸ்ஸேன்ஸ் நம்மிடம் விட்டுச்சென்ற கடவுளைநோக்கிய பிராத்தனையொன்றில் கூறுகிறார், "கடவுளே, இவ்வளவு அழகு இல்லாமலிருக்கட்டுமாக"

ப்ரெளனிங் கூறுகிறார் இருப்பதிலேயே பத்திரமாக

நாமிருக்கும்போது, இருக்கிறதொரு அஸ்தமனத்து வருடல்,

பூவின் ஒசையிலிருந்தொரு கற்பனை, யாரோ ஒருவரின் மரணம், யூரிப்பிடிஸிடமிருந்து

ஒரு குழு-இசைமுடிவு நாம் மறுபடித் தோற்கிறோம்.

அழகு நமக்காகப் பதுங்கியவாறு காத்திருக்கிறது. நாம் உணர்வுடையவர் களாயிருந்தால், அனைத்து மொழிகளின் கவிதைகளையும் உணர்வோம்.

கீழைத்தேச மொழிகளை நான் கற்றிருக்க வேண்டும். மொழிபெயர்ப்புகள் வாயிலாகத் தான் அவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அவைகளின் வீரியத்தை, அவற்றின் அழகின் தாக்கத்தை உணர்ந்திருக்கிறேன். உதாரணத்துக்கு பாரசீகக் கவிஞர் ஹஃபீஸின் அந்த வரி, நான் பறந்துசெல்கிறேன், என் தூசு நானாயிருக்கும் கூடுவிட்டுக் கூடுமாறுதலின் மொத்தக் கொள்கையும் இதிலுள்ளது. "என் தூசு நானயிருக்கும்". நான் மறுபடி மறுபடிப் பிறப்பேன். இன்னொரு நாட்டில், நான் ஹஃபீஸ் என்ற கவிஞனாயிருப்பேன். இது அனைத்தையும் உள்ளடக்கிய சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் நான் படித்துள்ளேன், ஆனால் பாரசீகத்தில் அது மிகவும் வேறுபட்டதாக இருக்கமுடியாது. பெருமளவில் மாற்றப்படத் தேவையற்ற அளவு அது எளிமையாக உள்ளது.

அழகு எங்கும் இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், பாரசீகத்தில் சற்றுக்காலம் வசித்துவந்து, உமர்கய்யாமை நேரடியாக ஃபார்ஸியிலிருந்து மொழிபெயர்ந்த என் நண்பர் ராய் பார்த்தொலோமியூ, ஏற்கனவே நான் யூகித்துவிட்டிருந்ததை எனக்குக் கூறினார்; கிழக்கில், பொதுவாக, இலக்கியத்தையும் தத்துவத்தையும் அவர்கள் காலவரிசையில் படிப்பதில்லை. தத்துவ வரலாற்றை அவர்கள், பெர்க்ஸனுடன், அரிஸ்டாட்டிலும், ஹ்யூமுடன் ப்ளேட்டோவும், விவாதிப்பது போல அனைத்தையும் ஒரே காலத்தில் படிக்கிறார்கள். ட்யூஸ்ஸனையும், மாக்ஸ்முல்ல ரையும் இது பெருமளவில் பாதித்தது, அவர்கள் வாசித்த எழுத்தாளர் களின் காலவரிசையை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.

முதலாம் நூற்றாண்டு ஃபொனீஷியக் கடலோடிகளின் மூன்று பிரார்த்தனைகளைக் கூறி முடித்துக் கொள்கிறேன். கடலில் தொலைந்து போகுமளவு கப்பல் சென்று

யாதுமாகி. மார்ச் 2001 11

படிப்பகம்________________




WWW padippakam.com

விட்டபோது இந்தப் பிரார்த்தனைகள் கூறப்பட்டன. முதலாவது;

கார்தேஜின் தாயே, என் துடுப்பைத் திருப்பியளிக்கிறேன்

கார்தேஜின் தாய் என்பது, டிடோவின் ஊரான டைர் நகரம், பின்பு " என் துடுப்புக்களைத் திருப்பியளிக்கிறேன்."- அசாதாரணமான ஒன்று இங்கிருக்கிறது; ஃபொனிஷியன் ஒருவன், தன் வாழ்க்கையை ஒரு துடுப்புப் போடுபவனாகத்தான் மேற்கொள்ள முடியும், அவன் தனது வாழ்க்கையை முடித்துவிட்டான். மற்றவர்கள் துடுப்புப்போடுவதைத் தொடர்வதற்காகத் தன் துடுப்பைத் திருப்பியளிக்கிறான்.

இன்னும் சோகமான மற்றொரு பிராத்தனை,

நான் தூங்குகிறேன்; இப்போதைக்கு மறுபடித் துடுப்புப்போடுகிறேன்.

அந்த ம்னிதன், வேறு எந்த விதியையும் கருத்தில் கொள்ளவில்லை. வட்டமான காலம் என்ற கருத்தையும் அது காட்டுகிறது.

இறுதியாக, மிகவும் உருக்கமானதும், மற்றவைகளிடமிருந்து வேறுபட்டதுமான இந்தப் பிராத்தனை, ஏனெனில் இது விதியை ஏற்றுக்கொள்வதாகக் கூறவில்லை. அது இறக்கப் போகும் மனிதன் ஒருவனின், தீக்கடவுள்களின் தீர்ப்புக்குள்ளாகப்போகும் ஒருவனின் விரக்தி, அவன் கூறுகிறான்; கடவுள்களே, என்னைக் கடவுளாக விசாரிக்காதீர்கள் ஆனால் சமுத்திரம் சிதைத்துவிட்ட ஒரு மனிதனாக

இந்த மூன்று பிராத்தனைகளில் உடனடியாக நாம் கவிதையின் இருப்பை உணர்கிறோம். அல்லது குறைந்தபட்சம் நானாவது உணர்கிறேன். நூலகங்களிலோ புத்தகப்பட்டியல்களிலோ, கால வரிசைப் படியான கையெழுத்துப் பிரதிகளின் ஆய்வுகளிலோ, மூடப்பட்ட புத்தகங் களிலோ, இல்லாத அழகியல் நிகழ்வு இதில் உள்ளது.

ஃபொனீஷியக் கடலோடிகளின் அந்த மூன்று பிரார்த்தனைகளை, புனித பாலைப்பற்றிய "மனிதர்களின் பாங்குகள்" என்ற கிப்ளிங்கின் கதையில் படித்தேன். அவை நம்பகமானதா (அவர்கள் சொல்வது போல்) அல்லது கிப்ளிங் என்ற பெரும் கவிஞரால் அவை எழுதப்பட்டனவா? இந்தக் கேள்வியை உருவாக்கிக் கொண்டதும் நான் குற்றவுணர்வு கொண்டேன, ஏனென்றால் தேர்ந் தெடுப்பதால் என்ன பயன்? சிக்கலின் இரண்டு கொம்புகளான இரண்டு சாத்தியங்களையும் பார்ப்போம்,

முதலாவதன் படி, கடலில் மட்டுமே வாழ்க்கை கொள்ளமுடியும் கடல் மக்களான ஃபொனீஷியக் கடலோடிகளின் பிரார்த் தனைகளை நாம் எடுத்துக்கொண்டுள்ளோம். ஃபொனீஷிய மொழியிலிருந்து அவை கிரேக்கத்துக்குச் சென்றதாகவும், பின்பு கிரேக்கத்திலிருந்து லத்தீனுக்கும், லத்தீனிலிருந்து ஆங்கிலத்துக்கும் சென்றதாக நாம் கூறலாம். கிப்ளிங் அவற்றை மறுபடி எழுதினார்.

இரண்டாவதன்படி, பெரும் கவிஞரான கிப்ளிங், ஃபொனீஷியக் கடலோடிகளைக் கற்பனைசெய்கிறார். ஏதோ ஒருவகையில் அவர் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார், ஒருவகையில் அவரே அவர்களாயிருக்கிறார். வாழ்க்கையை, கடலிலுள்ள வாழ்க்கையாகக் கொள்கிறார், இந்தப் பிரார்த்னையை அவர்களது உதடுகளில் பதிக்கிறார். அனைத்தும் கடந்தகாலத்தில் நிகழ்ந்தன. ஃபொனீஷியக் கடலோடிகள் இறந்து விட்டார்கள், கிப்ளிங் இறந்துவிட்டார். இந்த இரண்டு ஆவிகளில் எது இந்த வரிகளை எழுதியது அல்லது யோசித்தது என்பது எப்படியிருந்தால் என்ன?

இந்தியக் கவிதையொன்றில் 象@ வினோதமான உருவகம் உள்ளது. அதை முழுதுமாகக் கூறமுடியுமா என்பதை என்னால் நிச்சயித்துக் கூற முடியவில்லை. இமயமலை என்பது- அந்த மலையும் அதன் சிகரங்களும், கிப்ளிங்கைப் பொறுத்தமட்டில் பிற மலைகளின் முழங்கால்களே- இமயமலை என்பது சிவனின் சிரிப்பு - அந்த உயர்ந்த மலைகள் ஒரு கடவுளின், உக்கிரமான ஒரு கடவுளின் சிரிப்பு. அதிரவைக்கும் உருவகம் அது.

படிப்பகம்________________




WWW, padippakam.com

என்னைப் பொறுத்தவரையில் அழகு என்பது பெளதீகரீதியான ஒரு உணர்வு, நம் முழு உடலால் உணரக்கூடிய ஒன்று. தீர்வொன்றின் முடிவல்ல இது விதிமுறைகளின் வழி நாம் அங்கே வந்து சேர்வதில்லை, ஒன்று நாம் அழகை உணர்வோம், அல்லது உணர்வதில்லை.

17ம் நூற்றாண்டில், ஏஞ்சலஸ் சைலீலியஸ் என்ற வினோதமான வகையில் நிஜமான, கவித்துவமான பெயரை ஏற்றுக்கொண்ட கவிஞர் ஒருவரின் முக்கியத்துவம் வாய்ந்த வரியைக் கூறி இதை முடிக்கிறேன். இந்த இரவு நான் கூறிய அனைத்து விஷயங்களின் சுருக்கம் அது - அவற்றை நான் தர்க்க அறிவின் வாயிலாகவும், பாசாங்கான தர்க்க அறிவின் உதவியுடனும் கூறினேன் என்பதைத் தவிர. அதை முதலில் ஸ்பானிய மொழியிலும் பின்பு ஜெர்மனிலும் கூறுகிறேன்.

La rosa sin proque"florece porque florece

Die Rose ist ohne Warum, Sie bliihet weil sie bliihet.

(The rose has no why, it flowers because it flowers) 
ஏன் என்பது ரோஜாவிடமில்லை, அது பூக்கிறது ஏனென்றால் அது பூக்கிறது.

1977 ஜூனிலிருந்து ஆகஸ்டுக் குள்ளாக ப்யூனோஸ் அயர்வின் Teatro Colse0 வில் ஏழு வெவ்வேறு தலைப்புகளில் போர்ஹேயால் நிகழ்த்தப்பட்ட உரைகளில் Poetry என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட உரை. பின்னர் பதிப்புக்காக அவரால் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப் பட்டது.

தமிழில் : சுபத்ரா

ப்ாழியெனும் ஒற்றை வார்த்தையின் முடிவற்ற அகராதி நவீனப் படிகமாக மாறுவதற்கு மரபுப் பிரதிகளில் படர்ந்த திராட்சைத் தோட்டத்தில் கொடிவெட்டி தலைமுறையாகப் பதியம் போட்டு கால்நாட்டி மனிதஞாபகத்தின் அழுத்தமான ரூபிநிறக் கோப்பைகளில் தேவதாசிகளின் கோட்டுருவங்களைத் தீட்டும் திராட்சைநிற வயலின் வில் சிறகடிக்கப்பில் பறந்த தாய்வழி இசைமரபை என் ரத்த அலை ஸ்பரிசித்துக் தலை வணங்குகிறது.

நிகண்டு வடிவத்தைப் பின்பற்றி, பல பொருளுடைய ஒரு சொல்தான் இந்நாவல்.

யாதுமாகி. மார்ச் 2001 13

படிப்பகம்