தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, December 26, 2017

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை : முன்னுரை & அத்தியாயம் 1


செம்மீன் மீனவர் சமூகத்துக்கதை. செம்பன் குஞ்சுவின் வாழ்வையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை. கடற்கரைக் கன்னி கறுத்தம்மாவின் தூய காதல் கதை.தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை.ஊக்கமும் உற்சாகமுமே உருவான சக்கியின் உழைப்புக் கதை. ஆண்மையும் ரோஷமும் மிக்க இளைஞன் பழனியின் கதை. மேலைக்கடல் அன்னையின் செல்லக் குழந்தைகளது நித்தியக் கதை. எளிய கதாபாத்திரங்களையும் சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் செம்மீன் . தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய இந்தப் புகழ்பெற்ற மலையாள நாவல் 1959-ல் சாகித்திய அக்காதெமிப் பரிசைப் பெற்றது. யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றுள் மொழி பெயர்க்ப்பட்டு வருகிறது.பல இந்திய மொழிகளில் சாகித்திய அக்காதெமியின் ஆதரவில் வெளிவந்துள்ளது. இதைத் தமிழாக்கியவர் சுந்தர ராமசாமி.


செம்மீன் -  தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள் எழுதியது. தமிழில்: சுந்தர ராமசாமி.


முன்னுரை
டாக்டர் நாராயண மேனன்


கேரள ராஜ்யத்தில், ஆலப்புழைக்குத் தெற்கே பத்துமைல் தூரத்திலுள்ள தகழி என்னும் சிறு கிராமத்தில், 1914 ஏப்ரலில் பிறந்தவர் தகழி சிவசங்கரப்பிள்ளை. அவரது தந்தையார் ஒரு வேளாளர்; மெத்தப் படித்தவர். கேரளத்தின் சிறந்த நாட்டிய நாடகமான கதக்களிக் கலையில் தேர்ந்த நிபுணர். அவரது சகோதரரே நமது காலத்தில் தலைசிறந்த கதக்களி நாட்டிய நிபுனர் குஞ்சு குரூப், அந்த இல்லமே சம்ஸ்கிருதப் பண்பும் கேரள நாட்டுக் கலைகளும் செழித்த் சூழ்நிலை நிரம்பி விளங்கியது.

இளமையில் வீட்டிலேயே கல்வியைத் தொடங்கிய தகழி, பின்னர் கிராமப் பள்ளியிலும், அம்பலப்புழை நடுத்தரப் பள்ளியிலும் படித்தார். அந்தப் பள்ளிக்கூடம் கடற்கரையில் மீனவர் பகுதியினிடையில் இருந்தது. தகழி இங்குதான் முதன் முதல் செம்படவர் வாழ்க்கையை நேருக்கு நேர் கண்டார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் அங்கே ஒரு வக்கீலாகப் பணியாற்றியபோது அவரது கட்சிக்காரரில் பல செம்படவர் கள் இருந்தார்கள். அவரது நாவல்களில் காணும் பரீக்குட்டி களும் கறுத்தம்மாக்களும் கற்பனைப் பாத்திரங்கள் அன்று; அவர் நேரில் அறிந்த பாத்திரங்களே.

அம்பலப்புழையில் தடுத்தரப் பள்ளியில் கல்வியை முடித்துக்கொண்டு, ஹரிபாடுக்கு அருகிலுள்ள கருவட்டாவின் உயர்நிலைப்பள்ளியில் படிக்கத் தொடங்கினார் தகழி. அத்தக் காலத்தில்தான் அவர் கைணிக்கர குமாரப் பிள்ளையைச் சந்தித்தார். பெரும் புலவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான குமாரப்பிள்ளை,தகழியை மிகவும் கவர்ந்தார்.இதுவே அவரது இலக்கிய வாழ்வு உருவான காலம். தகழி சிறு பிராயத்தி

ézielégoks.gets karxbiridir

லிருந்தே கவிதை எழுதி வந்தார். தகழியின் திறமை வசனத்தில் அதிகமாகச் சுடர்விடுகிறது என்பதை உணர்ந்து, குமாரப் பிள்ளை அவரை வசனத்துறைக்குத் திரும்பிவிட்டார்.

பள்ளிக் கல்வி முடிந்ததும் தகழி, திருவனந்தபுரம் சென்றார். பிளிடர்ஷிப் பயிற்சி பெறுவதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அது சுதந்திரப் போராட்டம் உச்சத்திலிருந்த காலம் ஏ. பாலகிருஷ்ணபிள்ளை என்பவர் வீட்டில் அடிக்கடி கூடும் ஒரு அறிஞர் குழுவில் அவரும் சேர்ந்து கொண்டார். 'கேலரி என்னும் இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரான பாலகிருஷ்ணபிள்ளை, ஒரு அறிஞர் குழு அமைத்து, இலக்கியர், அரசியல் சர்ச்சைகள் நிகழ்த்தி வந்தார். எதிர்காலத்தில் கேரளத்தின் இலக்கிய, அரசியல் தலைவர்களாக விளங்கக் கூடிய பல இளம் எழுத்தாளரும் அரசியல் மேதைகளும் அவரது தேர்ந்த தலைமையின்கீழ் உருப்பெற்றனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் தகழியின் இலக்கியக் கல்வியும் ஆர்வமும் விரிவடைந்தன. புரூட், மார்க்ஸ் உட்பட, ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களை விரிவாகப் படிக்கலானார். "வெள்ளத்தினிடையே", "அழகுப் பாப்பா" என்பன போன்ற அவரது கதைகள், அவர் ஒரு பெரிய கதாசிரியர் என்பதை உணர்த்தின.

1934-தகழியின் முதல் புத்தகம்"புதுமலர்"வெளிவந்தது.அது ஒரு சிறுகதை மாலை, அது உடனேயே பிரபலமாகி விட்டது. அதைத் தொடர்ந்து அவரது முதல் நாவல், "பிரதிபலம்" கைம்மாறு) வெளிவந்தது. வெளியான சில வாரங்களிலேயே பிரதிகள் முற்றும் விற்றுப்போய்விட்டன. அதே ஆண்டு,"பதித பங்கஜம்" என்னும் மற்றொரு நாவல் உருப்பெற்றது. அவரது எழுதுகோல் பல கதைகளைத் தீட்டியது. "அடியொழுகல்", "நித்திய கன்னிகை", "பைங்கதிகள்" என்பவை குறிப்பிடத் தக்கவை.

இந்தக் கதைகள் சமுதாய அமைப்பு வேகம் கொண்டவை. அதோடு, இடதுசாரி அரசியல் சார்புகொண்டவை.

இந்த நாள்வரை மலையாள இலக்கியத்தில், வசதியுள்ள தடுத்தரக்குடும்பவாழ்க்கையே இடம்பெற்றது. தகழியும்அவர் காலத்தவரும் வாழ்க்கையின் சகல துறைகளிலுள்ள மக்களின் ககதுக்கங்களையும் இலக்கிய ஏட்டுக்கு ஏற்றிவிட்டனர்.

ézielégoks.gettaritain

பெரும் காட்டுத் தீ என நாடு முற்றும் பரவிய விடுதலை இயக்கத்தில் தகழியும் பங்குகொண்டார்.ஓரிருமுறை அரசியல் நடவடிக்கைகளுக்காக அவர் தலைமறைவாக இருக்க வேண்டியிருந்தது. திருச்சூர் அருகே தடக்கன்சேரியில் இவ்வாறு தலைமறைவாக இருந்த ஒரு சமயம் தான். அவரது "தோட்டியுடமகன்" வெளிவந்தது.1947-ல் அது வெளிவந்ததும் மலையாளத்தில் பலமான விவாதத்தை எழுப்பியது. ஒரு தோட்டியின் வாழ்க்கையைத் தத்ரூபமாகச் சித்திரிக்கும் கதை அது படிப்பவர் மனம் தொந்துவிடும் அளவு அவ் வாழ்க்கையின் உண்மையைப் படம் தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.அந்த இளம் தோட்டிதன் மகன் தன்னைவிடச் சிறந்த வாழ்வை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறான். சாக்கடை வாழ்விலிருந்து தன் மகனை உயர்த்தும் முயற்சியில், தனது சமூகத்து மக்களையே ஏமாற்றும் அளவுக்குச் சுயநலவாதியாகிவிடுகிறான்.ஆயினும் என்ன பயன்? சமுதாயக் கட்டுப்பாடு அசைக்க முடியாத ஒன்றாயிற்றே தோட்டியின் மகன் பள்ளியிலும், தோழர்களிடையேயும் ஒதுங்கியேதான் வாழமுடிகிறது. சமூகத்தை எதிர்க்கும் இந்தப் போராட்டத்தில் அவன் தோற்றுவிடுகிறான். கொள்ளை நோயில் மடிந்து விடுகிறான்.தோட்டியின் மகனும் ஒரு தோட்டியாகவே வேலை பார்க்க தொடங்குகிறான் போரில் தோல்விதான்; ஆயினும் போராட்டம் ஓயவில்லை. சமுதாயத்தின் கண்ணும் காதும் மனச்சாட்சியும் திறக்கப்பட்டு, அப்பட்டமான உண்மையைக் காணும் வாய்ப்புப் பெறுகின்றன.

தகழி ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை உணர்த்தியது "இரண்டிடங்கழி" (இரண்டு படி" என்ற நாவல் 1948-ல் வெளியாயிற்று."ஒரு குடியானவன் மகன் என்ற நிலையில் நான் நன்கு அறிந்த, அனுபவித்த கஷ்டங்களை அதில் வெளி. யிடுகிறேன்" என்று தகழியே கூறுகிறார். இந்த நாவல் பல இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் வெளிவந்திருப்பதோடு, சினிமாப் படமாகவும் உருப்பெற்றது.

இரண்டிடங்கழிநாவல் பண்ணை வேலைசெய்யும் புலையர் என்னும் தீண்டாதார் சமூகத்தைப் பற்றியும், கடினமான கெளரவக் குறைவான விதிகளுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் நிலச் சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் எடுத்துக்

* இந்த நாவல் தமிழிலும் வெளிவந்துள்ளது.

ézielégoks.get8 Filbidadi

கூறுகிறது. உண்மையை உள்ளபடியேதான் கூறுகிறது கதை ஆனால் தகழியின் அனுதாபம் எந்தப் பக்கம் செல்கிறது என்பதை உணர்வதில் சிரமமில்லை.

இரண்டிடங்கழியைத் தொடர்ந்து பல சிறுகதைகளும் குறுநாவல்களும் வெளிவந்தன. 1956 மார்ச்சில் வெளிவந்தது “செம்மீன். இந்தியாவின் சிறந்த இலக்கியப் பாராட்ட rான சாகித்திய அக்காதெமிப் பரிசு இந்த நாவலுக்கு அளிக்கப்பட்டது. இந்த நாவலும் சர்ச்சைக் குரியதாயிருந்தது வாழ்த்தும் வசவும் இதற்கு நிறையக் கிடைத்துள்ளன வீடுகளிலும் இலக்கியக் குழுக்களிலும் இது குறித்து விவாதங்கள் நிகழ்ந்தன. தாலுபேர் கூடிய இடங்களில் பேச்சு எழுந்தால், அது "செம்மீனைப் பற்றியே இருக்கும்.

இதுவரை பிரத்யக்ஷய வாழ்வையே பிரதிபலிப்பவர் கான்று கருதப்பட்ட தகழி, "செம்மீன்"நாவலில் கற்பனை அம்சத்தைப் புகுத்தினார். மீனவர் சமூக வாழ்க்கை முறை, அவர்களது நம்பிக்கைகள், மரபுகள், அவர்கள் படும் கஷ்டங்கள் ஆகிய அனைத்தையும் முறைப்பட வர்ணித்து, ஒழுக்கம் மிக்க வாழ்வு வகைகளில் அதுவும் ஒன்று என்பதை உணர்த்தினார்

கேரளத்துக் கடற்கரை எத்தனையோ சிறு சிறு மீனவர் கிராமங்கள் கொண்டது. கடலுடன் தமது வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட எளிய மீனவர்கள் வாழும் சின்னஞ்சிறு செம்படவச் சேரிகள் அவை; அத்தகைய கிராமத்துக் கதை "செம்மீன்"

இந்த மீனவர்களின் கொடிய வறுமை, அயரா உழைப்பு. எளிமை, ஆகியவற்றை நேரில் கண்டாலன்றி நம்பமுடியாது. அவர்களது வாழ்க்கையே ஒரு நீண்ட போராட்டம். ஆனால் அந்த சாகச வாழ்க்கையை அவர்களே பெருமையுடன் விரும்பி ஏற்றுக் கொண்டு விட்டதனால், வேறுவிதமாக வாழ விரும்பவில்லை. நல்லோரைக் காத்து, தீயோரைத் தயவின்றித் தண்டித்துவிடும் கடலன்னையிடம் உள்ள நம்பிக்கைதான் அவர்கள் வாழ்க்கையை இயக்குகிறது.

இத்தகைய எளிய சமூகங்களிலும் கூடக் கட்டுப்பாடுகளும் மரபுகளும் எத்தனை எத்தனையோ, சொந்தப் படகு வைத்திருப்போர், வெறும் கூலி வேலை செய்யும் செம்படவர், கிழக்கேயிருந்து, அதாவது உள்நாட்டிலிருந்து வரும் கீழ்மக்கள் என இவ்வாறு பல சாதிகள் - உட்பிரிவுகள் - அவர்களிடையே

arrietos. retPåstfir 8 உண்டு வியாபாரிகள், பெரும்பாலும் முஸ்லீம்கள், மீன் வாங்கி,

பதப்படுத்தி, நகரங்களிலும் துறைமுகங்களிலும் மொத்த sínum Lifrrfissíft.ti sólb Itirfssir.

கிராமத்தின் தலைவன் கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை சர்வாதிகள்ரி அவன் அனுமதியும் ஆசியும் இராமல் எவரும் சொந்தப் படகு வைத்துக்கொள்ள முடியாது. அவன் ஆசியில்லாமல் எந்தத் திருமணமும் நடந்துவிட முடியாது. சச்சரவுகளில் மத்யஸ்தம் செய்வது அவனே. எந்த வழக்கிலும் நீதிபதி அவனே,

பெண்களுக்குக் கற்பும் தூய்மையும்; ஆண்களுக்கு உடலு றுதியும் நெஞ்சுரனும் முக்கியம், கரையிலுள்ள பெண்களுடைய கற்பின் வலிமைதான் கடலில் படகேறிச் சென்றுள்ள மீனவருக்குப் பாதுகாப்பு. கடலம்மை கண்டிப்பானவள் எத்தனையோ சுழல்களும் கொடிய நீரோட்டங்களும் நிறைந்த பாதையைக் கடந்து, கடலின் பாதாளத்தில் வாழ்கிறாள் அவள், சற்றும் இரக்கமின்றி, கொடியோரை அவள் இழுத்துக் கொண்டு விடுவாள்.

கடின உழைப்பு மிக்க இத்தகைய தினசரிச் சூழலில் வேடிக்கைக்குப் பொழுது எங்கே? ஆனால் வாழ்க்கை வரண்டுவிடவில்லை. வலை நிறைந்து வழியும் நாட்களில், மீனவர்கள் அருகே உள்ள நகரத்திற்குச் சென்று கொண்டாடுவார்கள். ஆண்டுக்கொருமுறை ஆயில்ய விழா வருகிறது. புத்தாடை உடுத்து, பண்டிகை கொண்டாடி மகிழும் நேரம் அது இந்த வாழ்க்கை முறையில், ஒரு ஒதுக்குப்புறத்தில், அன்பும் காதலும் கூட இருப்பதைக் காணலாம், மெளனமான, பகட்டற்ற காதல், நிறைவேறிய காதல், சோகத்தில் முடியும் காதல் - எல்லாம் உண்டு. இவ்வாறு நெற்குன்னம், திரிகுன்னம் புழைகிராமத்து மீனவர் குடிகள் எவ்வளவுதான் எளிமையா யிருந்தாலும், மனித சமூகத்தின் அம்சமாகவே விளங்கினர்.

இதுதான் செம்மீன் கதையின் களம், அதிக ஆசை பிடித்து, அதன் காரணமாகச் சீலம் குறைந்த ஒரு மீனவனின் பெண் கறுத்தம்மா, பரீக்குட்டி என்னும் முஸ்லீம் வியாபாரியை நேசிக்கிறாள். ஆனால் அவர்களது தூய காதல் இனிது நிறைவேறவில்லை. தான் பரீக்குட்டியை மணக்க முடியாது என்று கறுத்தம்மாவுக்குத் தெரியும். பரீக்குட்டிக்கும் அது தெரியும். சமூகக் கட்டுப்பாடுகள் அவ்வளவு வலுவானவை.

arrietoseg lráldi

பரீக்குட்டியிடமிருந்து தன் நினைவை அகற்றக் கூறுக்கம1 வால் இயலவில்லை. வசந்த நாளில் தயே வரும் ரோஜாவைப்போல தவிர்க்க முடியாத வண்ா அவர்கள் காதல் மலர்கிறது. ஆயினும் சுறுத்தம், மெகtalக, சோகத்துடன், ஓர் இளம் மீனவனைக் கூடிாவதாகக் கைப்பிடிக்கிறாள். அவளது மனப் பேட் மிகசா அறிந்தவள் அவள் தாய் ஒருத்திதான் சுறுத்தl! கட்டிய கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ டிஸ்கrவே பக்குவமாக நடந்து கொள்கிறாள்? இந்த அப்போ!'

டத்தை விவரிக்கும் பகுதிகள் இந்த நூலிலே உள்நாத்த உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. கறுத்த்bthாவிகர் வாழ்வில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்துகொண்டே வருகிறது கடைசியில் தவிர்க்க முடியாத சோக முடிவு வற்படுகிறது

செம்மீனுக்குப் பிறகு தகழி மற்றுமொரு நவாடி 1989 ல் எழுதினார், கேரள சமூகத்தில், தோட்டி , குடியவள். மீனவன் என்று தாழ்ந்து ஒதுங்கிய சிறு சிறு இகாங்கலாப் பற்றியே எழுதியவர், "ஒளியப்பின் மக்கள்" என்று இப்புது நாவலில் கேரளதாட்டுக் கிறிஸ்துவக் குடிமக்களின் வtழ்வை விளக்குகிறார். தற்போது அவர் எழுதி முடித்துள்க! புதிய பெரிய நாவல், அவர் காலத்துச் சமூகச் சரித்திராக விாங்குக் ஒரு தனி இனத்தைப் பற்றி வருணிக்க#1ல், இது சமுதாயம் அனைத்தையுமே களமாகக் கொண்டது

தகழி அதிகமாகவும் வேகமாகவும் எழுதுபவர் செம்மீன் நாவலை அவர் இருபது நாட்களுக்குள் முடித்து விட் ஈர். ஆனால் அவர் எழுத்தில் விகாரமான ஒரு சொல்காலக்க நான் கண்டதில்லை. நாற்பத்தெட்டு வயது நிறைந்தவர் தகழி. மாறி வருவதோடு நாள்தோறும் வளர்கிறார் இவ்வகையr வளர்ச்சி அவருடைய ஆற்றலுக்கு மட்டுமல்லாமல், அவருடைய தன்மைக்குமே அளவுகோலாகும் தெளித்த ஓட்டமும், வேகமும், சிருஷ்டித் திறந்தும் ரிக்க கழுதுகோபி லிருந்து நாம் எதிர்பார்க்கக் கூடியவற்றிற்கு ஒரு கல்லையும் உண்டோ?

jas"எங்க அப்பா தோணியும் வலையும் வாங்கப் போறாரே" "உன் அதிர்ஷ்டம்"

கறுத்தம்மாவுக்கு வாய் அடைத்துப் போய்விட்டது. தனது நிலைமையைச் சமாளித்துக் கொண்டு பேசினாள்:

"ஆனா பணம் கொஞ்சம் குறையிது. எங்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுப்பியா?"

"என் கையில் ஏது பணம்?" என்று தன் சுைகளை விரித்துக் காட்டினான் பரீக்குட்டி கறுத்தம்மா சிரித்தாள்.

"பின்னே எதுக்காகப் பெரிய முதலாளின்னு சொல்லிக்கிட்டு இருக்கிறாயாம்?"

"நீ ஏன் என்னை சின்ன முதலாளீன்னு கூப்பிடுறே?" "பின்னே எப்படிக் கூப்பிடணும்?" "பரீக்குட்டின்னு கூப்பிடணும்" சுறுத்தம்மா "பரீ" என்பது வரையிலும் சொல்லி விட்டுச் சிரித்தாள்.தனது முழுப்பெயரையே சொல்லும்படி பரீக்குட்டி அவளிடம் கேட்டுக் கொண்டான். கறுத்தம்மா சிரிப்பை

அடக்கிமூகத்தில் கெளரவபாவத்தை வரவழைத்துக்கொண்டு, "மாட்டேன்" என்று தலையசைத்து விட்டுச் சொன்னாள்:

"நான் கூப்பிடமாட்டேன்"

"அப்படியானா நானும் கறுத்தம்மான்னு கூப்பிட Lott GLoir.”

"பின்னே எப்படிக் கூப்பிடப் போறே?"

"நான் உன்னே பெரிய மரக்காத்தீன்னு கூப்பிடுவேன்."

குபிரென்று சிரித்தாள் கறுத்தம்மா. பரீக்குட்டியும் வாய்விட்டுச் சிரித்தான். நெடுநேரம் சிரித்தார்கள் அப்படி எதற்குத்தான் அப்படிச் சிரித்தார்களோ? ஏனோ அடக்க முடியாமல் சிரித்தார்கள்:

arrietose2 0lrúidir

"அது சரி, தோணியும் வலையும் வாங்கினா, தோணி மீனை எனக்கு விலைக்குப் போடணும்னு உன் அப்பா கிட்டே சொல்லுவியா?"

"நல்ல விலை கிடைத்தால் மீன் கொடுப்போம்." மீண்டும் குபிரென்ற சிரிப்பு! இத்தனை தூரம் சிரித்து மகிழ இந்தப் பேச்சில் என்ன இருக்கிறது? இது என்ன ஒரு பிரமாதமான ஹாஸ்யமா? பேச்சுக்குப் பேச்சு ஒருவரால் வாய்விட்டுச் சிரிக்க முடியுமா?

சிரி சிரியென்று சிரித்ததில் கறுத்தம்மாவின் கண்களில் நீர் முட்டி விட்டது. மூச்சுத் திணற அவள் சொன்னாள்:

"சிரிப்பு மூட்டாதே சின்ன முதலாளி" அதைப்போல், தன்னையும் சிரிப்பூட்ட வேண்டாமென்று பரீக்குட்டி அவளிடம் கேட்டுக்கொண்டான். "அடேயப்பா! என்னாசின்ன முதலாளி நீ"

ஒருவரை ஒருவர் கிசுகிசுமூட்டிவிட்டுக் கொண்டது போல் இருவரும் சிரித்தார்கள். கிசுகிசு மூட்டினால் சிறிது நேரத்தில் சிரிப்பு மறைந்து போகும்; முகம் சிவக்கும்; கடைசியில் அழுகையில் போய் முடியும், அப்படித்தான் கறுத்தம்மாவின் முகமும் சிவந்தது. அவள் ஏனோ கலவரமடைந்தாள்; இல்லை, ஒருவகை அருவருப்புணர்வு ஏற்பட்டது அவளுக்கு,

"என்னை அப்படி மொறைக்காதே"

அவளிடம் சிரிப்பு மறைந்தது. தன்னுணர்வின்றி ஏதோ தவறிழைத்துவிட்டான் பரீக்குட்டி அவன் சொன்னான்:

"நீ எனக்குச் சிரிப்பு மூட்டிவிட்டு"

"La lubapebubo"

பெருக்கல் சின்னம்போல் கைகளை மார்பின்மீது மடக்கி வைத்துகொண்டு திரும்பி நின்றாள் சுறுத்தம்மா. அவள் மீண்டும் ஒருமுறை குன்றிக் குறுகிப் போனாள். ஓர் ஒற்றை வேட் டி மட்டும்தான் அவள் உடுத்தியிருந்தாள்.

t

"ஹம்ே. என்ன இது சின்ன முதலாளி

வீட்டிலிருந்து கறுத்தம்மாவை அழைக்கும் குரல் கேட்டது. வியாபாரத்திற்காகக் கிழக்கே சென்றிருந்த சக்கி திரும்பி

ézielégoks.getlaritis 3. வந்துவிட்டாள். கறுத்தம்மா வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தாள். அருவருப்பு உணர்ச்சியோடுதான் அவள் செல்லுகிறாள் என்று பரீக்குட்டி எண்ணிக் கொண்டான். அவன் வாட்டமுற்றான். பரீக்குட்டியிடம் கோபத்துடன், கடுமையாக ஏதோ தான் சொல்லிவிட்டதாகவே கறுத்தம்மாவுக்கும் தோன்றிற்று. அவன் மனம் வேதனைப்படுமே. பfக்குட்டியின் முன்னால் மட்டுமல்ல, வேறு எந்த இடத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் அவள் அப்படிச்சிரித்ததில்லையே ஒரு விசேஷமான அனுபவம்தான். மூச்சுத் திணற, சுவாசப் பையே வெடித்து விடுவது போல் அல்லவா அவள் சிரித்தாள். தான் அம்மணமாக நின்று கொண்டிருப்பது போல் தோன்றியது அவளுக்கு. எவருடைய பார்வையிலும் படாமல் மறைந்துவிட்டால் போதும் என்ற எண்ணமும் அப்போது கூடவே பிறந்தது. அன்றுவரை அவளுக்கு ஏற்பட்டிராத அனுபவம் அது. அவன் நெஞ்சில் தைக்கும்படி ஏதோ சொல்லிவிட்டேன் போலிருக்கிறது!

எத்தனை எடுப்பாக இருக்கிறது அவளுடைய மார்பகம்! கனத்துக்குக் கனம் எத்தனை வளர்ச்சி பார்வையை அங்கே குவிக்கையில் பரீக்குட்டிக்குத் தன் நரம்புகள் முறுக்கேறுவது போலிருக்கிறது. அந்த உணர்விலிருந்துதான் சிரிப்பு மூண்டதோ! அவள் ஓர் ஒற்றை வேட்டிதான் கட்டியிருந்தாள். அதுவும் மெல்லியதாகவே இருந்தது.

அவள் பிணங்கிச் சென்று விட்டதாகப் பரீக்குட்டி எண்ணினான், நான் நடந்துகொண்ட விதத்தில் அதிருப்திபுற்று, கோபித்துக் கொண்டு போய் விட்டாள் கறுத்தம்மா இனிமேல் என்னை நாடி வரமாட்டாளா?.தவறை மன்னித்து விடு என்று கறுத்தம்மாவிடம் சொல்லவேண்டும். இனிமேலும் இப்படிமரியாதைக்குறைவாகவே நடந்துகொள்ளமாட்டேன்.

பரஸ்பரம் இருவரும் மன்னிப்புக் கோர எண்ணினர்.

நாலைந்து வயதான ஒரு சிறுமி அந்தக் கடற்கரையில் கிளிஞ்சல் பொறுக்கியும்,தோனிக்குள் வலையை உதறுகையில் வெளியே சிதறி விழும் குஞ்சு மீன்களைப் பொறுக்கியும் திரிந்த காலத்தில், அந்தச் சிறுமிக்கு ஒரு தோழன் கிடைத்தான். அவன்தான் பரீக்குட்டி, நிஜாரும் மஞ்சள் சொக்காயும் அணிந்து, கழுத்தில் பட்டு உருமாலும் சுற்றி, குஞ்சம் தொங்கும் தொப்பியும் அணிந்து கொண்டு, தன் "வாப்பா'வின் கையில்

ézielégoks.get4. laritain

தொங்கியவாறு பரீக்குட்டி முதன்முதலில் கடற்கரைக்கு வந்தது, கறுத்தம்மாவுக்கு நல்ல ஞாபகம்தான். தங்கள் வீட்டின் தெற்குப் பக்கத்தில்தான் அவர்கள் மணலில் கிட்டங்கி கட்டி விளையாடினார்கள். இன்றும் அந்தக் கிட்டங்கி அங்கேதான் இருக்கிறது. வாலிபனாகிவிட்ட பரீக்குட்டி இப்போது அங்கே வியாபாரியாகக் காட்சியளிக்கிறான்.

இப்படி அவர்கள் இருவரும் அண்டை வீட்டுக்காரர்களாக அந்தக் கடற்கரையில் வளர்ந்து வந்தனர்.

அடுப்பில் தீ மூட்டியபடி அடுக்களையில் உட்கார்ந்திருந்த கறுத்தம்மா ஏதேதோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தர்ள். நெருப்பு அடுப்புக்கு வெளியே படர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அப்போது அடுக்களையினுள் நுழைந்த அவளுடைய தாய் தன் பெண் உட்கார்ந்திருந்த லட்சணத்தையும் அடுப்பு எரியுங் கோலத்தையும் சிறிது நேரம் பார்த்தபடி நின்றாள்.

சக்கி கறுத்தம்மாவைக் காலால் ஒரு தட்டுத் தட்டினாள்.

அவள் கனவிலிருந்து விடுபட்டு, திடுக்கிட்டு விழித்தாள். சக்கி Garrutorsa, Gastrait:

"யாரை நெனச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கே?"

கறுத்தம்மா அப்போது இருந்த நிலையைப் பார்த்தால் யாருமே அப்படிக் கேட்கத்தான் செய்வார்கள், சக்கியின்மேல்

பிசகு இல்லை; கறுத்தம்மா இந்த உலகிலேயே இருக்கவில்லை.

"அம்மா! அங்கே கரையிலெ ஏத்தி வெச்சிருக்கே தோணி, அதுக்குப் பின்னாலே நின்னுக்கிட்டு, சின்ன முதலாளி கிட்டே அக்கா சிரிச்சிப் பேசிக்கிட்டிருந்தா அம்மா"

இப்படிச் சொன்னவள் கறுத்தம்மாவின் தங்கை பஞ்சமி. கறுத்தம்மா பதறிப் போனாள், அவள்மீது பழிசேர்க்கும் ரகசியம் அல்லவா அது? யாரும் அறியாத ரகசியத்தை அவள் வெட்ட வெளிச்சமாக்கி விட்டாளே. அதோடு விட்டுவிடவில்லை பஞ்சமி

"என்னா சிரிப்புச் சிரிச்சிக்கிட்டிருந்தா தெரியுமா அம்மா"

இதைச் சொல்லிவிட்டு, ‘என்னை ஏய்த்தால் இப்படித்தான் வரும்’ என்ற பாவத்தில் விரலைச் சுட்டிக் காட்டி விட்டு ஓடிவிட்டாள் பஞ்சமி

ézieÉgoks.getசெம்ய்ன் s பஞ்சமியை வீட்டிலே விட்டு விட்டுத்தான் வெளியே சென்றாள் கறுத்தம்மா. அக்கம் பக்கத்துக் குழந்தைகளுடன் விளையாடப் போகமுடியாமலாகி விட்டது, பஞ்சமிக்கு, வீட்டில் ஒருசமயம்கூட ஆள் இல்லாமலிருக்கக் கூடாது என்பது செம்பன் குஞ்சுவின் உத்தரவு தோணியும் வலையும் வாங்கும் பொருட்டு அவன் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தான். எனவேதான் பஞ்சமி வீட்டில் இருக்கவேண்டியதாயிற்று. அதற்கு இப்படி அவள் வஞ்சம் தீர்த்துக்கொண்டு விட்டாள்.

ஒரு தாய் அசட்டை செய்யக்கூடிய காரியமா இது?

சக்கி கறுத்தம்மாவிடம் கேட்டாள்:

"என்னடி சொல்றா இவ?"

சுறுத்தம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

"என்ன நெனச்சிக்கிட்டிருக்கே நீ?"

இந்தக் கேள்விக்குக் கறுத்தம்மா பதில் சொல்லித்தானே வண்டும். ஆமாம் சொல்லக் கடமைப்பட்டவள் அவள்.


தட்டுத்தடுமாறி ஒரு பதிலைக் கண்டுபிடித்தாள்.

"நான் கடற்கரைப் பக்கம் சும்மா போய்க்கிட்டிகுந்தேன்"

"கடற்கரைப்பக்கம் போய்க்கிட்டிருக்கிறபோது-?"

"சின்ன முதலாளி தோணியிலே உட்கார்ந்துகிட்டிருந்தான்."

"அதுக்கு நீ ஏன் இளிக்கணுமாம்?"

கறுத்தம்மாவுக்கு ஒரு சாக்கு சொல்லக் கிடைத்தது.

"தோணியும் வலையும் வாங்குறதுக்குப் பணம் குறையிதேன்னு, கேட்டுக்கிட்டிருந்தேன்."

"நீ எதுக்குடி பணம் கேக்கணும்?"

கறுத்தம்மா முதலில் சொன்ன பதிலையே விடாமல் பிடித்துக் கொண்டு பேசினாள்:

"சின்ன முதலாளிக்கிட்டே பணம் கேட்கணும்னு அண்ணைக்கி நீயும் அப்பாவும் பேசிக்கிட்டிருக்கலியா?"

a7iiieaas, rei8 ris

- நம்பும்படியான பேச்சாக இல்லை அது. அவள் ஒரு பதிலை ஜோடித்துச் சொல்லிப் பார்த்தாள். சக்கி கறுத்தம்மாவை ஏற இறங்கக் கூர்ந்து கவனித்தாள்.

சக்கி அந்தப் பருவத்தைக் கடந்து வந்தவள்தான். சக்கி, கறுத்தம்மாவின் பிராயத்தில் இருந்த காலத்திலும் அந்தக் கடற்கரையில் கிட்டங்கிகளும், கிட்டங்கிகளில் சின்ன முதலாளிகளும் இருந்திருக்கலாம். கரையேற்றிப் போட்டி ருக்கும் தோணியின் மறைவில் நின்றவாறு சின்ன முதலாளிகள் சக்கியையும் கலகலவென்று வாய்விட்டு சிரிக்கும்படி செய்திருக்கலாம். சக்கியும் கடற்கரையில் பிறந்து வளர்ந்த ஒரு செம்படவப் பெண்தான். அவளுடைய பரம்பரை பரம்பரை. யாக ஒப்புக்கொள்ளப்பட்டு வரும் ஒரு தத்துவப் பேருண்மைக்குக் கட்டுப்பட்டவள்தான்!

அலைகளுக்கும் நீரோட்டத்துக்கும் எதிராகப் போர் தொடுத்து,ஒரு மரத்துண்டில் அடிவானத்தைத்தாண்டிசென்ற முதல் செம்படவனின் மனைவி, விரத நோன்பெடுத்துக் கடற்கரையில் மேற்கு நோக்கி நின்றவாறு தவம் செய்து கொண்டிருந்தாள். கடலில் குறை கிளம்பி விட்டது. வாயைப் பிளந்தபடி திமிங்கிலங்கள் நெருங்கின. சுறாமீன்கள் வாலால் தோணியைத் தாக்கின. நீரோட்டம் தோணியை ஓர் அகண்டமான சுழியினுள் இழுத்துச் சிக்கவைத்தது. சகல விபத்துகளினின்றும் வியக்கும்படி தப்பித்துவிட்டான் அந்தச் செம்படவன். அதுமட்டுமல்ல ஒரு பெரிய மீனோடு அவன் கரைவந்து சேரவும் சேர்ந்தான். அந்தப் புயலிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தான் அவன்? அவனைத் திமிங்கிலங்கள் ஏன் விழுங்கவில்லை? சுறாமீனால் தாக்குண்டும் தோனிக்குக் கேடு எதுவும் சம்பவிக்கவில்லையே? நீரோட்டம் வழிவிடத் தோணி மிதந்துவந்தது. இவ்வாறெல்லாம் நிகழக்காரணம் என்ன? அந்தக்கற்புடையாள் கடற்கரையில் தவம் செய்து கொண்டி ருத்தாள்.

கடற்கரைப் பெண்டிர் அந்தத் தவபலத்தை உணர்ந்து கொண்டனர். அந்தத் தவபலத்தை, வாழ்க்கைத் தத்துவத்தைச் சக்கியும் தனதாக்கிக் கொண்டாள். சக்கியின் மார்பு பூரண வளர்ச்சி அடைந்த அந்தக் காலத்தில் ஒருவேளை அவளையும் ஒருசின்னமுதலாளிவெறித்திருக்கலாம்.அன்று சக்கியின் தாய் சக்கியிடமும் கடற்கரைப் பெண்களின் தவபலத்தையும், வாழ்க்கைத் தத்துவத்தையும் அறிவுறுத்தியிருக்கலாம்.

ézielégoks.getFår 睿

கறுத்தம்மாவின் தவறைப் புரிந்துகொண்டோ, புரிந்து (elsirairgirrupGarr éráká Gearnrgárairirgír:

"இன்னைக்கிநீசின்னப் பொண்ணில்லெ, பெரிய மரக்காத்தி ஆயிப்புட்டேஆமா"

'பெரிய மரக்காத்தி’ என்று பரீக்குட்டி அழைத்தது சுறுத்தம்மாவின் செவிகளில் முழங்கிற்று. சக்கி தொடர்ந்து (asfrekvezreit:

"பரத்துகிடக்கிற இந்தக் கடல்லே எல்லாம் இருக்குது பொண்னே; எல்லாம் இருக்குது. கடலுக்குப் போகிற ஆம்புளை திரும்பிவாறது எப்படீன்னுநெனச்சுக்கிட்டிருக்கே? கரையிலே இருக்கிற பொம்புள்ளைகள் மானம் மரியாதை யோட இருக்கிறதனாலேதான். தோணியைச் சுழி அப்படியே துக்கி முழுங்கிப்புடும். கடலுக்குப் போகிற ஆம்புள்ளையின் உசிரு கரையிலே இருக்கிற பொம்புள்ளை கையிலதான்

இருக்கு"

கறுத்தம்மா அங்குமட்டுமல்ல, அந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல, இவ்வார்த்தைகளைக் கேட்கிறாள். தாலு மரக்காத்திகள் கூடுகின்ற இடத்திலெல்லாம், இதே பேச்சு அடி படுவதைக் கேட்டிருக்கிறாள்.

இருந்தாலும் பரீக்குட்டியோடு சற்றுசிரித்து விளையாடிப் பேசியதில் என்னதான் தவறு நேர்ந்து விட்டதாம்? கடலுக்குப்போகிற புருஷன் ஒருவனின் உயிர் இன்னும் அவள் கையில் ஒப்படைக்கப்படவில்லையே. ஒப்படைக்கப்பட்டால் அவளும் அந்த உயிரை மிக ஜாக்கிரதையாக, பத்திரமாகக் காப்பாற்றுவாள் எப்படிக் காக்க வேண்டும் என்பதையும் அவள் அறிவாள். ஓர் அரயப் பெண்ணுக்கு யாரும் இதைக் சுற்றுக் கொடுக்கவேண்டியதில்லை.

சக்கி தொடர்ந்து சொன்னாள்:

"சில சமயம் இந்தக் கடல் வறண்டு ஒண்ணுமில்லாமப் போகுதே, அது ஏன் தெரியுமா? கடல்தாய்க்குக் கோபம் வந்துடுத்தின்னா எல்லாத்தையும் அளுச்சிப் போடுவா. அப்படி இல்லைன்னா தன் குழந்தைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பா. தங்கக் கட்டி கெடக்குது பொண்னே, கடல்லே தங்கக்கட்டி கெடக்குது."

ézielégoks.gete kvúdd

அத்துடன் ஒரு பேருண்மையையும் தன் மகளுக்கு உபதேசித்தாள் சக்கி

"ஒழுக்கம் இருக்குதே, அதுதான் பொண்னே பெரிசு, மரக்காத்தியின் ஒழுக்கம்தான் மரக்கானுக்குச் சொத்து"

ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்துவிட்ட சில சின்ன முதலாளிகள், சில சமயங்களில் கடற்கரையை அசுத்தப் படுத்திவிட்டுப் போய்விடுவார்கள். செம்மீன் அடிக்கவும், கருவாட்டுச் சிப்பம் கட்டவும் கிழக்கே இருந்து சில பெண்கள் வருவதுண்டு. அவர்களும் கடற்கரையை அசுத்தமாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கே தெரியும், கடற்கரையின் பரிசுத்தத் தன்மை? அவர்கள் கடல்தாயின் குழந்தைகளும் அல்ல. ஆனால், அதன் பலாபலன்கள் கடற்கரைச் செம்படவர்களின் தலையில் வந்து விடியும்.

"கரையேத்திப் போட்டிருக்கும் தோணியின் பின் பக்கம், புதர்க்காடு. இதெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய இடங்கள். ஆமாம்"

இதைச் சொல்லிவிட்டு, மிகுந்த கெளரவ பாவத்துடன் முக்கியமான எச்சரிக்கை ஒன்றைச் சக்கி அறிவித்தாள்:

"இதோபாரு, நீ வயசுவந்த பொண்ணு. சின்ன முதலாளி களும், கண் தலை தெரியாமல் திரிகிற இந்தக் காலத்து இளவட்டப் பிள்ள்ைகளும் முன்னும் பின்னும் கண் போடுவாங்க"

கறுத்தம்மாவுக்கு நடுக்கம் எடுத்தது. ஆமாம், உண்மையில் தோணிமறைவில் அப்படித்தானே நிகழ்ந்தது? அப்போது கறுத்தம்மாவின் மனசுக்குள் ஒர் எதிர்ப்பு உணர்ச்சி மூண்டதே அது பரம்பரை பரம்பரையாக வந்து, அவள் உடம்பிலும் உறைந்துவிட்ட குணாம்சமாக இருக்கலாம். மார்பகத்தையும் பிருஷ்ட பாகத்தையும் ஒருவன் வெறித்துப் பார்ப்பது கடல்தாயின் குழந்தைக்குப் பெருமை தரக்கூடிய காரியம் அல்ல போலும்,

"கறுத்தம்மா, நீ கடலைப் பாழாய் அடிச்சி, கரையிலே வாழுகிற ஜனங்கள் வாயிலே மண்அள்ளிப்போட்டுவி தே"

கறுத்தம்மாவுக்குப் பயம் பிடித்து விட்டது சக்கி 'தெ: ப்த்து சொன்னான்:

arrietoaks, frelaribdaig 19

"அவன் நாலாம் மதத்து ஆசாமி. அவனுக்கு இந்த நினைப்பெல்லாம் இருக்காது"

சகல விஷயங்களையும் தெரிந்துகொண்டு விட்டது போலத்தான் சக்கி பேசினாள். அன்று இரவு கறுத்தம்மா உறங்கவில்லை. அந்த ரகசியத்தை வெளியாக்கிய பஞ்சமியிடம் அவளுக்குக் கோபம் இல்லை, இப்படிச் சொல்லி விட்டானே என்றும் அவள் எண்ணவில்லை. தவறு செய்து விட்டோம் என்ற உணர்வு அவளுக்கே இருந்ததால்தான் அவள் அவ்வாறு எண்ணவில்லையோ என்னவோ? ஒரு ஜனசமூகத்தில், நூற்றாண்டுகளாக, நிரந்தரமாக நிலைநின்று வரும் வாழ்க்கைத் தத்துவம் அவளிடத்திலும் குடிகொண்டிருக்கிறது. இப்போதுதான் அது தெளிவான உருவம் பெறுகிறதோ என்னவோ? வழிபிசகிச் சின்னாபின்னமாய்ப் போய்விடுவோமோ என்ற பீதியும் அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். அந்தப் பீதி இருக்கும் வரையிலும், அவள் பஞ்சமியிடம் கோபம் கொள்ளக் காரணமில்லை, கறுத்தம்மா அப்போது எந்த மனநிலையில் இருந்தாளோ அதிலிருந்து அவளைக் கிள்ளியெறியக் கிளம்பியது போல் ஒரு பாட்டு, கடற்கரையிலிருந்து மிதந்துவந்து அவள் காதை அடைந்தது.

கறுத்தம்மா கவனித்தாள்.

பாடுவது பரீக்குட்டிதான். அவன் ஒன்றும் பாடகன் அல்ல. ஆனாலும் தோணியின் விளிம்பில் அமர்ந்தவாறு அவன் பாடிக் கொண்டிருக்கிறான். தான் அங்கிருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியவளுக்கு, பின் அதை எப்படித் தான் தெரிவிப்பது.

தெரிந்துகொள்ள வேண்டியவள் தெரிந்துகொண்டு விட்டாள். எட்ட வேண்டிய இடத்தை எட்டிவிட்டது. கறுத்தம்மாவுக்கு இருக்கை கொள்ளவில்லை. யாரும் அறியாமல் இறங்கிச் சென்றுவிட்டால்-? மார்பகங்களையும் பிருஷ்ட பாகத்தையும் அவன் வெறித்துப் பார்ப்பான். போகவேண்டிய இடமோ தோணி மறைவு. ஆபத்தான இடம். அவனோ நாலாம் மதத்துக்காரன்.

அவன் பாடிய பாடல் கடல்மேல் செல்லுகிற, செம்படவர் கள் பாடும் பாட்டுத்தான். சிறிதுநேரம் செவிசாய்த்து இருந்துவிட்டோம் என்றால், தானாகவே எழுந்து இறங்கிச் சென்று விடுவோமோ என்றுகூடக் கறுத்தம்மா பயந்தாள்.

anietzaka, e2 rifau

மார்பகத்தை அவன் வெறிக்கையில், பார்வை இதயம்வரை துளைத்துக் கொண்டு சென்றுவிடுகிறது. அதற்கு இடம் கொடுத்து ஆட்பட்டு நிற்பதில் அலாதியான ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. மார்பு என்பதெல்லாம் என்ன? வெறும் சதைப் பிண்டம்தானே? கறுத்தம்மா மார்பு குழையக் கவிழ்ந்து படுத்தாள். விரல்களையும் காதினுள் திணித்துக் கொண்டாள். அதன் பின்பும் அப்பாடல் அவளுள்ளே ஊடுருவிச் செல்லத்தான் செய்தது,

கறுத்தம்மா அழுதே விட்டாள்.

அவளிருந்த அந்த அறையின் செல்லரித்துப்போன கதவு தானே திறந்து கொண்டு விடலாம். அல்லது அது கக்கு நூறாய்ச் சிதறுண்டு போய்விடலாம். ஆனால் எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாத கற்கோட்டையின் உள்ளே அல்லவா அவள் வாழ்ந்து வருகிறாள். கடல் தாயின் குழந்தைகளிடையே நூற்றாண்டுகளாக நின்று நிலைத்து வரும் வாழ்க்கைத் தத்துவத்தால் எழுப்பப்பட்ட, கனமான, உன்னதமான கற்கோட்டை அது அதற்கு வாசல் என்பது இல்லை; ஜன்னல் என்பதும் இல்லை, ஆனால், குருதி கொப்பளிக்கும் தசை அக் கற்கோட்டையைப் பிளந்து எறிந்து விடாதா? அதற்கு முன்னும் அதுபோன்ற கற்கோட்டைகள் தகர்ந்ததில்லையா?

மனித நடமாட்டம் இல்லாத அந்தக் கடற்கரையில் பரீக் குட்டியின் பாட்டு எங்கும் ஒலித்தது. இரவில் குடிசை வாயிலைத் தானே திறந்துகொண்டு ஒர் அரயப் பெண் வெளியேற வேண்டும் என்பதற்காகப் பாடப்பெற்ற பாடல் அல்ல அது அதற்குத் தாளம் இல்லை; இசை இனிமையும் இல்லை.பாடுகிறவன் குரலும் நன்றாக இல்லைதான். எனினும், அந்தப் பாட்டில் அலாதியானதொரு ஜீவகளை இருக்கிறது. தான் அங்கிருப்பதை அவன் அவளுக்கு அறிவிக்க வேண்டாமா? தன்னை மன்னிக்க வேண்டுமென்று அவன் அவளிடம் கேட்டுக்கொள்ளப்போகிறான். பாடிப் பாடிப் பரீக்குட்டிக்குத் தொண்டை கட்டியது.

காதிலிருந்த விரல்களை அகற்றினாள் கறுத்தம்மா. அடுத்த அறையில் அவளுடைய தாயும் தகப்பனும் பேசிக் கொண்டிருந்தனர். இல்லை, அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருத்தார்கள். கறுத்தம்மா இதைக் கவனித்தான். அவள்

ézielégoks.getQlariâsdr 2.

விஷயமாகவே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

செம்பன் குஞ்சு சொன்னான்:

"அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒண்னும் சொல்ல வேண்டாம். நானும் ஒரு மனிசப் பிறவிதான்"

சக்கி கோபத்துடன் சொன்னாள்:

"பூ மணிசன்,அப்படி நெனச்சிக்கிட்டிருந்தாப் போதும் மக அதியாயாமாக கெட்டுப் போவா. ஆமா, "போடி போ!

அதுக்குள்ளே நான் அவளைக் கட்டிக் கொடுத்திடுவேன்"

"அது என்னமா முடியும்? காசு கொடுக்காமெ எந்தப் பய வருவான்று கேக்கறேன்?"

"இதைக் கேளு புள்ளே" என்று ஆரம்பித்து, தன் வாழ்க்கைத் திட்டத்தை சவிஸ்தாரமாகச் சொன்னான் செம்பன்குஞ்சு, கறுத்தம்மாவும் அதை நூறாவது முறையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

வருத்தத்துடனும், கோபத்துடனும் சக்கி கேட்டாள்:

"அப்போ தோனியும் வலையும் சம்பாதிச்சிகிட்டு உக்காந்திரு."

செம்பன்குஞ்சு தீர்மானமான குரலில் சொன்னான்:

"என்னதான் வரட்டும். அந்தப் பணத்திலே இருந்து சல்லிக்காசு எடுக்கமாட்டேன். அந்த நெனப்பே வேண்டாம் உனக்கு"

சக்கிக்குக் கோபம் பொங்கிற்று.

"யாராவது நாலாம் மதக்காரன் மகளைக் கெடுக்கப் போறான், பாரு; அதுதான் நடக்கப்போகுது"

செம்பன்குஞ்சு பேசவில்லை. அந்த விஷயத்தின் முக்கியத் துவம் அவன் அறிவுக்கு எட்டவில்லையா? சிறிது நேரத்துக்குப் பின் அவன் சொன்னான்:

"நான் ஒருத்தெனத் தேடிப்புடிச்சுப் புடுவேன்." "பனம் கொடுக்காமலா?"

arazielas, ne经2 Eyritir

செம்பன்குஞ்சு ஒரு முனகலில் அதை ஆமோதித்தான் சக்கி கேட்டாள்;

"யாராவது நொண்டி, கூன் குருடு வரும்." "பார்த்துக்கிட்டே இரு" அவன் வார்த்தைகளை நம்பாமல் சக்கி சொன்னாள்: "அப்படியானா ஒண்னு செய். என் பொண்ணைக் கடல்லே தூக்கிப் போட்டுப்புடு"

செம்பன்குஞ்சு சீறி விழுந்தான்.

சக்கி கேட்டாள்:

"இந்தத் தோனியும் வலையும் யாருக்குன்னு கேக்கிறேன்?" செம்பன்குஞ்க வாயைத் திறக்கவில்லை. தோணியும் வலையும் வாங்கவேண்டும் என்ற திட்டம் அவனுடைய வாழ்க்கை லட்சியமே தவிர, அத்திட்டம் யாருக்காக வகுக்கப்படுகிறது என்பதை அதுவரையிலும் அவன் யோசிக்கவில்லை.

சக்கி ஒரு யோசனை சொன்னாள்: "அந்த வெள்ள மனவி வேலாயுதனுக்குப் பாத்தா என்ன?" "osersaarirež"

"ஏனாம்? அவனுக்கு என்ன குத்தம்?" "அவன் ஒரு மரக்கான்; வெறும் சாதாரன மரக்கான்" "மரக்கானா இல்லாம வேறயாரைப் போய்ப்புடிச்சிக்கிட்டு வந்துடப் போறியாம்?"

அந்தக் கேள்விக்குப்பதில் பிறக்கவில்லை.

நாலாம் மதத்துக்காரன் எவனாவது கெடுத்து விட்டுப்போய்விடுவான் என்று சக்கி சொன்னது கறுத்தம்மாவின் செவியில் முழங்கிற்று. அதன் முழுப்பொருளையும் அப்பா வாங்கியிருக்கமாட்டார். மார்பே விண்டுவிடும் போல் அவள் இதயம் துடித்தது வேற்று மதத்துக்காரன் ஏற்கனவே அவளைக் கெடுத்து விட்டிருந்தான் அல்லவா?

அப்போதும் பரீக்குட்டி தொடர்ந்து பாடிக்கொண்டுதான் இருந்தான்.

ézielégoks.get