தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, December 09, 2017

கலைவாணன் இ.எம்.எஸ் அவர்களின் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிலிருந்து

Mayura Rathinaswamy
1.
வீட்டு முன்வாசலில்
ஒத்த விளக்க தொங்கவிட்டு
சாயங்காலம்
ராம ராம ராம ராம
ராம ராம பாகிமா பஜனை பாடி
செற்று முண்டு ஸாரி உடுத்து
விளக்குத்தல நாசுவத்திகளெல்லாம்
நாயராயிட்டாளுக
2.
இந்து கவரான்னு போட்டு
சலுகையில் மெடிக்கலும்
இஞ்சினியரிங்கும் படிச்சுட்டு
ஜாதி சர்டிபிகட்டை
மேசைக்கடியில
ஒளிச்சு வைக்கானுக
எங்க பயக்குளும் குட்டியளும்
3.
நல்லது கெட்டதுக்கு கூப்பிட்டா
ஜாதி தெரிஞ்சுரும்னு
கவர்மெண்டுல வேலைபாக்குறவனுகளும்
பணக்கார நாசுவப்பயலுகளும்
வீட்டுக்கு வரமாட்டானுக
4.
எங்க வகையறாவிலேயே
நல்லா படிச்சு மார்க் எடுத்த
பிள்ளைக்கு கொடுத்த
சவர சங்கத்து
உதவித்தொகையை
வேண்டாம்னுட்டான்
அவளுக்க அப்பன்
செட்டிக்குளம் சலூன் ரவி
ரூபாயில மயிறு மணக்கும்னு.
(கலைவாணன் இ.எம்.எஸ் அவர்களின் ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிலிருந்து. வெளியீடு : கீற்று வெளியீட்டகம், 1/47ஏ, அழகிய மண்டபம், முளகுமூடு அஞ்சல், குமரி மாவட்டம் 529 167. விலை ரூ. 75. செல் : 097157 93820)
நாவிதர் சமூகத்திலிருந்து வந்திருக்கும் மிக முக்கியமான பதிவு. அவசியம் வாசியுங்கள் நண்பர்களே.