தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, December 09, 2017

மெளனியில் மெளனமாகும் எதார்த்தங்கள் - அ. மார்க்ஸ், உடைபடும் மெளனங்கள் :: முன்னுரை - ரவிக்குமார்

படிப்பகம்WWW.padippakam.Com
Vimaladhitha Maamallan
22 hrsமெளனியின் மரணம்
மௌனியின் கதையில்
இரவெல்லாம் தன் மனைவியின் பிணத்தோடு
தனியாகப் படுத்துக் கிடந்தவனைப் பற்றிய
எண்ணங்களில்நேற்று இரவெல்லாம் உறக்கமின்றிபுரண்டுகொண்டிருந்தேன்தவிர்க்க முடியாத கதை
என் மண்டைக்குள்ளிருந்து
இடது செவி வழியே வெளிவந்து
தோள்பட்டையில் ஊர்கிறது
கருந்தேள் குஞ்சு
- ரமேஷ் பிரேதன்
மெளனியில் மெளனமாகும் எதார்த்தங்கள்
அ. மார்க்ஸ்

மெளனிக்கு மறுபடியும் மவுசு வந்திருக்கிறது. கதைகள் தொகுக்கப்படுகின்றன. பழைய பேட்டிகள் கணையாழி களில் மறுபிரசுரம் செய்யப்படுகின்றன. இரண்டு நாள் விவாதங்கள், விவாதக் கட்டுரைகளின் தொகுப்பு.

மெளனியிடம் ஒப்போதுமே என்னால் ஒன்ற முடிந்ததில்லை. அப்படியானதில் எனக்குக் கொஞ்சம் கூச்சந்தான். மெளனியைக் கண்டுகொள்ள இயலாதவர்கள் "தேர்ச்சியும், பயிற்சியும், கண்ணும், செவியும் இல்லாதவர்கள்"என்று க. நா. சுவும் (மெளனியின் கதைகள்-பக். 318), மெளனியின் உலகம் "சொல்லிக் கொள்ளும்படியான ஆழம் ஏதுமற்ற தமிழ் வாசகனின் கிரஹறிப்பிற்கு அப்பாற்பட்ட உலகம்" என வெங்கட் சாமிநாதனும் (என் பார்வையில்-பக், 27), மெளனியை அணுகுவதற்கு "சுய முயற்சி'அதிகம் வேண்டும் என பிருமிளும் (தமிழில் நவீனத்துவம்-பக். 55) மிரட்டி வைத்திருந்ததன் விளைவு தான் என் கூச்சம். இப்போது மீண்டும் மெளனியின் கதைகளைப் படித்தேன். மெளனி காட்டும் அக உலகின் ஆழங்கள் பற்றியும் மேலோட்டமான பார்வைக்கு அப்பாற்பட்டு அவை இயங்கும் இதர தளங்கள் குறித்து இவர்கள் எழுதியுள்ளவற்றையும் சேர்த்துப் படித்தேன். மார்க்சிய விமர்சகர்களின் வரட்டுப் பார்வையைக் காய்கிறேன் என்கிற பெயரில் மார்க்சியச் சித்தாந்தத்தையும் வர்க்கப் பார்வையையும் வாழ்நாளெல்லாம் தாக்கிக் கொண்டு பார்ப்பன-வேளாள மரபுகளை "இந்தியக் கலாச்சாரம்" எனவும் தமிழ் பண்பாடு" எனவும் தூக்கிப் பிடித்து வந்தவருகிற இவர்கள், 'மெளனியின் சிறுகதைகள் ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் ஒரு புது அனுபவமாக அமைகிறது"(மெள. க.-பக். 313) எனச் சொல்லும் போது பிரதி, பிரதியியல், பிரதிக்கும் கருத்தியலுக்கும் உள்ள உறவு, பிரதியின் சுயேச்சைத் தன்மை, பிரதியியல் வியூகம் ஆகியவை பற்றிக் கொஞ்சம் சிந்திக்கத் தூண்டு கிறது.

பிரதியின் சுயேச்சையான இயக்கத்திற்கு கூடுதல் மதிப்பளிக்கக் கூடிய அமைப்பியலாளர்களிடையே கூட பிரதியின் உற்பத்தி, பிரதியின் நுகர்வு ஆகியவற்றுக்கும் வரலாற்றுக்குமுள்ள உறவுகள் குறித்து கருத்து மாறுபாடுகள் உண்டு. சுத்த இலக்கியம் (purely literary) என்பதை சேத், ஈகிள்டன் போன்றோர் மறுக்கின்றனர். பிரதியின் செயல்பாடு அதன் தனித்துவத்திலோ தூய்மையிலோ இல்லை; மாறாக அது எவ்வாறு இதர அம்சங்களுடன் கலந்து கிடக்கிறது; இதர அம்சங்களால் கட்டுப்படுத்தப் படுகின்றது என்பது முக்கியமாகின்றது.

நம் நடவடிக்கைகள் அனைத்துமே பெளதிகச் சூழல்களால் வரையறுக்கப்படுகின்றன. பிரதியின் நுகர்வோர்களாகிய நாம் அனைவருமே வெறும் மூளையை மட்டுமே கொண்ட இலக்கிய எந்திரங்களல்ல. நமது உடல்கள் பெளதிக இருப்புச் சூழல்களில் வேர் கொண்டுள்ளன. எனவே தூய்மை, தனித்துவம் என்பதைக் காட்டிலும் எவ்வாறு பிரதி தூய்மையற்று இதர அம்சங்களுடன் கலந்து கிடக்கிறது என்பதை நோக்கி நம் கவனத்தைத் திருப்பு வேண்டியவர்களாக இருக்கின்றோம். -

பிரதி தன்னைத்தானே முடிவில்லாமல் சுயேச்சையாக உற்பத்தி செய்து கொள்கிறது என்பது தனிநபர் சுதந்திரம் குறித்த முதலாளிய மாயையின் இன்னொரு வெளிப்பாடேயாகும். பிரதியின் சுதந்திரம் என்பது தவிர்க்க இயலாமல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது. ஒரு வரலாற்றுப் பிரதியையும் இலக்கியப் பிரதியையும் ஒப்பிடுவோம். இலக்கியப் பிரதி நேரடியாக வரலாற்றைத் தனது பொருளாக எடுத்துக் கொள்வதில்லை. வரலாற்று எதார்த்தங்களிலிருந்து அது எந்த அளவு விலகி நிற்கிறதோ அந்த அளவு அது சுதந்திரம் பெறுவதாகத் தோன்றுகிறது. தூலமான குழல்களை நேரடியாக ஒரு பிரதி சுட்டாத போது அது தன்னைத் தானே சுட்டிக்கொள்கிறது எனவும், மனிதப் பொதுவான ஆழங்களைச் சுட்டுகிறது எனவும் நமக்குத் தோன்றுகிறது. மெளனியின் கதைகள் இவ்வாறு வரலாற்றில் இருந்து விலகி நிற்பதாகத் தோற்றமளிப்பதுதான் அவரது சிறப்புக்கான காரணம் எனவும் அவரது “படைப்புகள்" வாசகனின் தரத்திற்குத் தக்கவாறு பலப்பல தளங்களை விரித்துக் காட்டும் உன்னத நிகழ்வு எனவும் கருதப் படுவதற்குக் காரணமாகின்றது.

ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இலக்கியப் பிரதி வரலாற்றுப் பிரதி என்கிற வகைப்பாட்டில் அதிகப்

1. "அவரது அக்கறை அடித்தள உண்மைகளைப் பற்றியது; தோற்ற உலகின் பின்னிருக்கும் உண்மை பற்றியது'-(வெங்கட்சாமிநாதன், மு. கு. நூ. பக்.23) *அவர் சாமான்யமான தூல நிகழ்ச்சிகளை ஒரேயடியாக அசட்டை செய்பவர். தூல உலகின் தாக்கத்திற்கு மெளனி கட்டுப்படமாட்டார்." (பிருமிள், மு. கு. நூ. பக். 60)



பொருளில்லை என்பது புலப்படும். இருக்கிற வரலாற்றை ஏற்றுக் கொள்ளும் பிரதி வரலாற்றை கேள்விக்குள்ளாக்கும் பிரதி; ஒற்றைக் குரலை ஒலிக்கும் பிரதி பல குரல்களைத் தன்னகத்தே கொண்ட பிரதி என்பவற்றில் உள்ள பொருள் இலக்கியப் பிரதி இலக்கியமற்ற பிரதி என்கிற வகைப்பாட்டில் இல்லை. வரலாற்றிலிருந்து தூரப்படுத்திக் கொண்டதாகத் தோற்றம் கொள்வதாலேயே ஒரு பிரதி வரலாற்றிலிருந்து விலகி நிற்பதாகி விடாது; வரலாற்றைக் கேள்வி கேட்பதாகிவிடாது; இருப்பில் விமர்சனபூர்வமான இடையீட்டைச் செய்ததாகிவிடாது. வரலாற்றிலிருந்து தூரப் படுத்திக் கொண்டதாய் மேற் தோற்றமளிக்கும் பிரதிகளே மேலும் நுண்மையாய், தீர்க்கமாய் வரலாற்றைச் சுட்டக் கூடியதாய் அமைந்துவிடக் கூடும். தூலமான சூழலைச் சுட்டிக் காட்டாமலேயே அதற்குரிய கருத்தியல் உருவாக் கத்தைச் சுட்டிக் காட்டிவிடக் கூடும்.

பிரதிகள் வெறுமனே சமூகத்தை எதிரொளிக்கின்றன அல்லது சமூகத்திலிருந்து தோன்றுகின்றன எனச் சொல்லிவிட முடியாது. எதார்த்தத்தைப் பிரதிகள் எதிரொளிக்கின்றன அல்லது எதார்த்தத்திலிருந்து தோன்றுகின்றன எனச் சொல்வதைக் காட்டிலும் புனைவுகள் மற்றும் கதையாடல்களின் மூலம் பிரதிகளில் எதாாத்தம் புதிதாகக் கட்டமைக்கப்படுகிறது எனச் சொல்வதே சரியாக இருக்கும். சமூக, கலாச்சார, கருத்தியல் மூலப் பொருட்களிலிருந்து இக்கட்டமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. எதிரே விரிந்து கிடக்கும் இந்த மூலப் பொருட்களிலிருந்து எவை, எவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எப்படி இவை வரிசைப்படுத்தித் தொகுக்கப்படுகின்றன, எந்தெந்த வடிவங்களில், என்னென்ன கோணங்களில் இவை முன் வைக்கப்படுகின்றன என்பனவற்றைப் பொறுத்து கட்ட மைக்கப்படும் எதார்த்தங்கள் அமைகின்றன. இவற்றையே பிரதியியல் வியூகம் அல்லது அணிவகுப்பு (Textual Strategy
என்கிறோம். இந்த அணிவகுப்பை அமைப்பதில் படைப் பாளியின் கருத்தியல் முக்கிய பங்கு வகிக்கிறது.

வரலாற்றுப் பிரதிகளில் இது எளிதாய் வெளிப்பட்டு விடும் போல்செவிக் கட்சி கட்டப்பட்டு, ஜார் ஆட்சியைத் தூக்கி எறிந்து புரட்சிகர அரசு உருவாக்கப்பட்டது குறித்து ரசியாவிலேயே மூன்று வெவ்வேறு வரலாற்றுப் பிரதிகள் உருவாக்கப்பட்டன. ஒன்று ஸ்டாலின் உருவாக்கியது (போல்செவிக் கட்சியின் வரலாறு), இன்னொன்று குருசேவ் காலத்தியது (சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கமான வரலாறு), மற்றது ட்ராட்ஸ்கி எழுதியது. வரலாற்றுச் சம்பவங்களைத் தொகுத்து எழுதப்பட்ட இம்மூன்றும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட எதார்த்தங்களைக் கட்டமைத்து விட்டதை நாமறிவோம். தொகுப்பவரின் கருத்தியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுத் தொகுக்கப்படும் "வரலாறானது' இதர வெளிப்பாட்டு அம்சங்கள், பிரதியியல் அணிவகுப்பு களுடன் இணைந்து அதற்குரிய ஒரு புதிய கருத்தியலை உற்பத்தி செய்துவிடுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கருத்தியல் என்பது பிரதிக்கு முந்திய (Pretextual ideology) G5i G|égi Lluai LIGg55 "ul L கருத்தியலுக்குப் பொருத்தமானதாக அமையலாம்; சமயங்களில் விலகியும் அமையலாம். சுருங்கச் சொல்வதெனில் பிரதி என்பது எதார்த்தத்தையும் கருத்தியலையும் எதிரொளிக்கிறது அல்லது வெளிப்படுத்துகிறது என்பதைக் காட்டிலும் கருத்தியலை உற்பத்தி செய்கிறது.

இவ்வாறு உருவாக்கப்படும் எதார்த்தங்கள் மற்றும் கருத்தியல்கள் தூலமான செயல்பாடுகளிலேயே வேர் கொண்டுள்ளன. நுகர்வின் போது தூலமான சூழல்களை அவை நேரடியாகச்சுட்டிக் காட்டாதபோதும் குறிப்பிட்ட கருத்தியல் உருவாக்கத்தை சுட்டிக் காட்டக் கூடும். குறிப் பிட்ட எதார்த்தத்தைக் கட்டமைத்து விடக்கூடும்.

நுணுக்கமான செயற்பாடுகள் மூலம் பிரதி நுகர்வோனை இவ்வாறு கட்டமைக்கப்பட்ட எதார்த்தத்திலும் கருத்தியலிலும் வேர்கொள்ள வைத்துவிடுகின்றது. எனவே, மெளனி கதைகள் போன்றவற்றை வரலாற்று வேரிலிருந்து பிரித்து தன்னிச்சையானவை போலப் பார்ப்பதில் பொருளில்லை. வரலாற்றைத் "தூரப்படுத்தி" கருத்துருவ மாக்கப்பட்ட (abstract) குறியீடுகளின் செயல்பாடுகள் மேலும் அதிகார பூர்வமானதாய், மேலும் தூலமானதாய் (concrete) மாறுகின்றன. சுருக்கிச் சொல்வதானால் "கருத்தியலே இங்கு தூலமாக்கப்படுகிறது" (abstract is concretised here)

எத்தகைய கருத்தியலுக்கு வாசகன் இயைபுபடுத்தப் படுகிறான்; எத்தகைய வரலாறு இங்கே தூரப்படுத்தப் படுவதுபோல தூலப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்குப் பிரதி கவனமாகக் கட்டவிழ்க்கப்படுதலும் பிரதியியல் அணிவகுப்பைப் புரிந்து கொள்வதும் அவசியம். எதார்த்தங்களின் மறைவால் சிறப்புப் பெறுகிற இப்பிரதிகளைக் கட்டவிழ்ப்பதற்கு எத்தகைய எதார்த்தங்கள் இங்கே மறைக்கப்பட்டுள்ளன, என்னென்ன தூலமான சூழல்கள் மெளனமாக்கப்பட்டன. என்னென்ன வெளிப்படுத்தப்படுகின்றன எனக் கவனிப்பது முக்கியம்.விமர்சகனின் வேலை இம் மெளனங்களைப் பேசவைப்பது என்பதைக் காட்டிலும் ஏன் அவை மெளனங்களாக்கப்பட்டன, மெளனங்களாக இவற்றின் பணி என்ன, பிரதியின் நனவிலியின் (unconsious) பங்கு என்ன என்பனவற்றைக் கண்டறிவதுதான். பிரதி சுட்டாமல் கட்டும் இந்தத் தூலங்கள், இருப்பிற்கு (status quo) ar6ìữ tổạoaờujiả)-(Oppositional || Subựersive mode); விமர்சனபூர்வமாய் இருக்கிறதா, இருப்பை மறு உறுதி செய்கிறதா என்பது பின் தன்னால் வெளிப்படும். பிரதியைத் தூலமான வரலாற்றுச் சூழலில் வைத்துப் பார்ப்பது அவசியம். அரசியல் இலக்கிய அறிவுத்துறை சார்ந்த பொருளாதார. சொல்லாடல்களுக்கிடையேயான கூட்டிணைவான மேலாண்மையை வாசித்துக் காட்டு வதற்கு இவ்வாறு பிரதியை அது சிக்கிக் கிடக்கும் சூழல்; காலம், இடம், சமூகம் ஆகியவற்றிலேயே கொண்டுபோய் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. சிலர் சொல்வது போல அதிலிருந்து பிரித்துப் பார்ப்பது அல்ல. நாம் இப்படிச் செய்வது சுருக்கிப் பார்ப்பது அல்ல; மாறாக இதுவே விரித்துப் பார்ப்பதாகும், இத்தகைய விரிந்த பார்வையே இன்று அவசியம். உலகில் கிடக்கும் இப்பிரதிகளில் வெளிப்படும் உலகியலம்சங்களைத் தேடுவதே சரியான கட்டுடைத்தல்; சரியான புனைவு நீக்கல்.

ஒரு பிரதியின் உற்பத்தியில், வாசிப்பில், பரப்பலில் என்னவிதமான அரசியல், சமூக, மனித மதிப்பீடுகள் அடங்கியுள்ளன என உடைத்துக் காட்டுவதே பொருள் முதல் விமர்சனம். எனவே அது தல உலகியற் சூழல் களைச் சார்ந்துள்ளது. அவ்வாறன்றி தூய பிரதி, விமர்சனத் தலையீடின்மை, உயர்ந்த தரம் என்றெல்லாம் பேசுவது இன்றைய வலச்சாய்வை நோக்கிய எழுச்சிக ஆளுடன் இணைத்துப் பார்க்கத் தக்கது.

2

மெளனி கதைகளில் வெளிப்படும் பிரதியியல் அணி வகுப்பின் ஒரு சில அம்சங்களைக் காண முயற்சிப்போம்.

முதலில் மெளனியில் மெளனமாகும் எதார்த்தங்களின் ஒரு சில கூறுகளை எடுத்துக்கொள்வோம். மெளனியின் கதைகளில் பெரும்பான்மை பணிக் களத்தில் நடைபெறுவதில்லை. மொத்தக் கதைகளில் சுமார் ஐந்து சதக் கதைகளில் மட்டுமே உடலுழைப்பாளர்கள் முக்கிய பாத்திரங் களாக வருகிறார்கள். அவர்களில் மூவர் தாசிகள். ஒருவன் படையாச்சி சாதியைச் சேர்ந்த பண்ணையடிமை,


இன்னொருவன் ஏட்டு ராயன். இவர்கள் மட்டுமே அவர்களின் பணியிடத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். மற்றவர்கள் யாரும் அதாவது தொண்ணுரற்றைந்து சத நாயக நாயகியர் உழைப்பதில்லை. இவர்கள் உயர்ந்த-பார்ப்பன-சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படுகிறது. இவர்களில் யாருக்கும் வயிறு சார்ந்த கவலைகள் இல்லை. சிலர் குறித்து நிறைந்த சொத்துக்களின் வாரிசு என்கிற குறிப்புகளும் காணப்படுகின்றன. இவர்கள் பங்கு பெறும் கதைக்களங்கள் பெரும்பாலும் அறைகள் அல்லது வீடுகள்தான். சமயங்களில் கடற்கரை, கோயில் போன்ற பொது இடங்களில் கதைகள் நிகழ்ந்தாலும் அவை பொது இடங்களுக்குரிய தன்மைகளுடன் அறிமுகப்படுத்தப்படுவதில்லை. அங்கு நடைபெறும் பொது நடவடிக்கைகள் கதைகளில் பங்கு பெறுவதில்லை. மையப் பாத்திரங்களின் அந்தரங்க வெளியாகவே (Personal Space) அவை அமைகின்றன. எனவே பொது நடவடிக்கைகள், அவற்றின் ஊடான சமூக உறவுகள், உற்பத்திச் செயற்பாடுகள், அவற்றினூடான மனித உறவுகள் இவையெல்லாம் நீக்கப்பட்ட துரய்மையான ஒரு அந்தரங்க உலகையே மெளனியில் நாம் காண்கிறோம்.

மனிதனின் மனநிலை என்பது பல்வேறுவிதமான சமூக உறவுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே அது சிக்கலாகிறது. இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும் என எளிதில் ஊகிக்க இயலாததாகிறது. பொது உலகையேகூட அந்தரங்க உலகாகக் குறுக்கிக் கொண்டு வாழும் மெளனி நாயகர்களின் மனநிலைகளோ ஒற்றைக் காரணிகளால் பட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன. மற்ற காரணிகளைக் கட்டுப்படுத்திவிட்டு இரு காரணிகளுக்கிடையேயான உறவை மட்டும் ஆய்வு செய்கிற சோதனைச் சாலை சோதனைகளைப் போன்றவையே மெளனியின் கதைகள், பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு பார்வையின் வசீகரத்தில் ஈடுபட்டுக் காத்திருந்து செத்துப்போகிற "கொள்கை ஈடுபாடுடைய' (Committed) நாயகர்களை மெளனியில் மட்டுமே காண முடிவது இதனால் தான். இதர ஈடுபாடுகள் இவர்களுக்குக் கிடையாது; எனவே இந்த ஈடுபாடுகளுக்கிடையேயான பரஸ்பர தாக்கங்களும் கிடையாது. ஏனெனில் இத்தகைய ஈடுபாடு களுக்கெல்லாம் காரணமாகிற பொது வாழ்க்கையே இவர்களுக்குக் கிடையாது. எனவே மெளனியின் நாயகர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது முன் கூட்டியே நமக்குத் தெரிந்து விடுகிறது.

பணிக் களத்தில் அறிமுகப்படுத்தப்படும் பாத்திரங்களில்கூட மேல் இருந்து கீழான படிநிலை உறவுகளிடையேயான எதிர்நிலை முரண்களும் ஒத்திசைவின்மைகளும் வெளிப்படுவதில்லை. ஏட்டு ஆனந்தராவுக்கும் அவனது மேலதிகாரிகளுக்குமிடையேயான ஒத்திசைந்த உறவும் (மிஸ்டேக்), சிவராமய்யருக்கும் செல்லக் கண்ணுப் படையாச்சிக்குமுள்ள உறவும் (இந்நேரம், இந்நேரம்) இதற்கு எடுத்துக்காட்டுகள். மேலதிகாரிகளும் பண்ணையய் பரும் தங்களுடைய மேலாண்மையில், நலன்களில் குறியாய் இருந்த போதிலும் அடிமைகள் சேவையில் திருப்தியடைகின்றனர். இயல்பாய் வெளிப்படுகிற முரண்கள் முற்றிலும் மழுங்கடிக்கப் படுகின்றன. இப்படித் திருப்தி கொள்ளும் அடித்தட் டினரும் இருக்கத் தானே செய்கிறார்கள் என்கிற கேள்வி எழலாம். இந்த உறவின் இரு எதிர் எதிர் துருவங்களில் நமது வெறுப்பும் அனுதாபமும் எங்கெங்கே குவிக்கப்படுகின்றன என்பது முக்கியம், செக்காவின் “குமாஸ்தாவின் மரணம் கதையை ஏட்டு ஆனந்தராவ் கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். அங்கே அதிகாரத்துவத்தின் கொடூரம் நம்மில் ஆழமாய்ப் பதிகிறது. இங்கே கீழேயுள்ள போலீஸ்காரன் ஏழை வண்டிக்காரனைச் சுரண்டும் இரக்கமற்ற வனாகவும் உயரதிகாரி இதனைச் சுட்டிக்காட்டி வண்டிக் டகாரனுக்கு நியாயம் வழங்கும் ஈர மனம் படைத்தவராகவும் சித்தரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இன்னொன்றும் குறிப்பிடத்தக்கது. அதிகாரி உயர்சாதிக்குரிய குறியீடுகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளார்.

தந்தை வழிச் சமூகத்திற்கும் தாசிகளுக்குமிடையேயான உறவுகளும் மிகவும் ஒத்திசைவுடன் காட்டப்படுகின்றன. மூன்று நான்கு தாசிகளை மெளனியில் காண்கிறோம். சுசிலா (நினைவுச் சுவடு), ஜோன்ஸ் (குடை நிழல்), கெளரி (உறவு, பந்தம், பாசம்). விடுதியில் இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்; ஆண்டுகள் இருபது ஆனாலும் ஒரு பழைய, இனிய தொடர்பை நினைவில் சுமந்து ஏங்கியிருக்கிறார்கள் மனைவி கன்னி! தாசி நிலைகளுக்கிடையே வேறுபாடுகளை அமைதியாய் தர்க்கம் செய்கிறார்கள். போலீஸ் தொல்லையோ, முதுமையோ அவர்களுக்குப் பிரச்சனையில்லை. அவர்கள் நொடித்துப் போகவில்லை; நோய்வாய்ப்படவில்லை: இறுதிக் காலத்தில் கஷ்டப்படவில்லை. தங்களை விட்டுப் போன பிரபுக்களுக்காகக் காத்திருக்கின்றனர். தேவதாசி கள் நிறைந்திருந்த பிரபுத்துவ வாழ்க்கை பற்றிய ஏக்கம் மெளனிக்கே இருக்கிறது.

'...... ஊர் அரவம் அடங்கி, அரை இருளில் தெருவே ஒரு தூக்கத்தில் ஆழ்ந்ததெனத் தோற்றம் கொடுத்தது. ஒரு காலத்தில் அத்தெரு முழுவதிலும் தேவதாசிகள் இருந்தனர். வழிவழியாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு குடும்பப் பிரபல தாளிகள், அவர் களின் இசை நாட்டிய கலைத் தேர்ச்சி, பழைய பெரிய மனிதர்களுடைய ஈடுபாடு. என அநேக ஞாபகங் களைக் கொண்ட தெரு அது. ஒரு வசீகரம் பாழ் பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை அது இப்போது அளித்துக் கொண்டிருக்கிறது. யார் யார் இப்போது அங்கு வசிக்கிறார்கள் எனபதற்கில்லை. " (மெள, み。ーLó。140-141).


மேற்கண்ட வரிகளைத் திறவுகோலாக்கி மெளனியில் வெளிப்படும் உயர்சாதி|ஆணாதிக்கக் குரலை விரிவாக நாம் ஆராய முடியும். 1920களின் பிற்பகுதியில் சென்னை சட்ட மன்றத்தில் தேவதாசி எதிர்ப்பு ஒழிப்பு மசோ தாவை நிறைவேற்ற முத்துலெட்சுமி ரெட்டி போன்றோர் முயன்றபோது அதனை எதிர்த்து ராஜகோபாலாச்சாரியும் சத்தியமூர்த்தியும் செயல்பட்டது நமக்குத் தெரியும். தேவதாசி சாதியில் குடும்பத்துக்கு ஒரு பெண்ணாவது பொட்டுக் கட்டப்பட வேண்டும் என வாதிட்ட சத்திய மூர்த்தி, சுதேசிய- இந்து-தேசியக் கலாச்சாரமாகிய தேவதாசி முறை காப்பாற்றப்பட வேண்டுமென்றார். சத்தியமூர்த்தியின் குரல் மெளனியில் அப்படியே வெளிப்படுவதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. தாசி களின் அவலம் இங்கு முக்கியமல்ல; பிரபுக்களின் சுகமே முக்கியம். வழக்கம்போல இந்தியக் கலாச்சாரம்" என்கிற பெயரில் இந்த அநீதி மூடி மறைக்கப்படுகின்றது; கட்டிக் காக்க முயற்சிக்கப்படுகிறது.

திருமணத்தில்தான் பெண் முழுமையடைகிறாள்: திருமணமின்றி பெண் வாழமுடியாது என்கிற கருத்தை மெளணியின் பெண் பாத்திரங்கள் அடிக்கடி ஒலிப்பதைக் காணலாம். மெளனியின் கருத்தும் அதுதான். "மன வாழ்க்கையில் பெண்கள் ஆடவரால் அடிமைப்படுத்தப் படுகின்றனர்" என்கிற கருத்துடைய நாணத்தை வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்பும் நாகரிகச் செருக்குடைய ஒரு பெண் டாக்டரை அறிமுகப்படுத்துகிறார் (சிகிச்சை). தனது நோயாளி ஒருத்தியின் குடும்ப வாழ்வைப் பார்த்தவுடன் 'கணவனுக்கு அடிமைப்படுதல் என்பதான மண வாழ்க்கையைப் பற்றிய தனது வியாக்யானம் பிசகு' என்பது போன்ற எண்ணம் அவள் மனத்தில் எழுகிறது. அதை அவள் கிள்ளி எறிய முயன்றாலும் தோற்கிறாள். அந்த நோயாளி இறந்தவுடன் அவள் கணவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். கணவன், குழந்தை என அவளது வாழ்க்கை 'நிறைவடைகிறது'. சராசரி சனரஞ் சகச் சினிமா ("பட்டிக்காடா பட்டணமா அல்லது 'சந்திரோதயம்') ஒன்றின் கருத்தியலுக்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை,

பொதுவாகவே நாகரிகம் X பாரம்பரியம் என்கிற முரணில் நாகரிகத்தை அருவருப்பாய் பார்க்கும் பார்வையைத் தொடர்ந்து மெளனியில் காணமுடிகிறது.* பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்த்து வழி விலக்குபவர்கள் என்கிற தொனியையும் காணலாம். அத்தகைய குற்ற உணர்ச்சி பெண்கள் மீதும் ஏற்படுகின்றது. (பக். 80/81, 184), பாரம்பரியத்தை ஏந்திக் கையளிக்கும்

2. "நவீன நாகரிகத்தை அணிந்து நாணத்தை வீட்டில் வைத்து விட்டு வெளிக் கிளம்பும் அனேக பெண்களைப் போல அவளும் வாலிபருடைய பார்வைக் காதலுக்கு ஆளானாள்.' (பக். 123)

'இவனுக்குக் காதல் வந்தது!. சமுத்திரக் கரையில் ஒழுங்கு உடை தரித்த வாலிபர்களுக்கு, நாகரிக ஒய்யார நடை மாதர்களைக் கண்டால் வருவதைப் போலவா' (மெள, க. பக். 245)

'பன்னிக் குட்டிக்குப் பதினாறு' என்ற ஒரு பழைய மொழி உண்டு. பழைய மொழி அவ்வா றாயின் புதுக் காலத்தில் நாகரிகத்தில் தட்டுத் தடையின்றி மேலே போய்க்கொண்டிருக்கும் நமது பெண்மணிகளின் விஷயத்தில் அதே மொழி புது மொழியாக எவ்வளவு தூரம் பொருத்தம் கொள்கிறது மற்றும் பன்றிக் குட்டிக்கே இப்படி என்றால்? சுந்தரி மாதிரியான குட்டிக்குப் பதினாறு வயது வந்தால்" (மெள. க. பக். 249)

கடமையும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. 


சாதாரணப் பெண்களுக்கென வரையறுத்த இந்த பாத்திர வார்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே, குடும்பம் என்கிற நிறுவனத்தை உன்னதப் படுத்திப் பார்க்க வேண்டிய அவசியமும் அவருக்கு நேர்கிறது.

"குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும். எவ்வளவு நாகரிக முற்போக்கு எண்ணங்களிலும் கட்டுக்கடங்கி உணர முடியாது எட்டிச் செல்வது போன்ற குடும்பம்- குடும்ப வாழ்க்கை' என்பது எவ்வளவுதூரம் தன் தாயாருடன் லயித்து இருந்தது என்பதை எண்ணித் துக்கமடைந்தார். உலகம் சீர் கெட்டுச் சிதைவுபடுவதின் காரணம் குடும்ப வாழ்க் கையில் சமாதானமற்று இருப்பதுதான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார்.’ (மெள, க. பக். 216, 217)

என்கிற கூற்றில் குடும்பத்தையும் நாகரிக முற்போக்கையும் அவர் எதிர் எதிராக நிறுத்திப் பார்ப்பது குறிப் பிடத்தக்கது.

3. 'சூன்ய மூலையில் அழகற்று மிருக வேகத்தில் தாக்குவது போன்ற நவ நாகரீகம், அவளிடம் தன் சக்தியைக் காட்ட முடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றிவரப் பட்ட மிருதுவாக உறைந்த குடும்ப லகரியங்கள் உரூகொண்டவள் போன்றவள்தான் அவள்." (மெள. க. பக்.215) -
“எவ்வளவு தூரம் தன் மதிப்பு, குடும்ப மதிப்பு, ஆரோக்கியமான போதனைகளை, குழந்தைகள் மனத்தில் பாலூட்டுவது போன்று ஊட்டி வந்தாள்' (மெள. க. பக்.216)

'குடும்பம் ஒரு விசித்திர யந்திரம்- பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை அதற்குப் பிரதி மறுபாகம் தானாகவே-உண்டாகி விடும்." (மெள. க.-பக். 217) என்று அவர் நம்பிக்கை ஆறுதல் கொள்வதும் மாற் றங்களுக்கும் கலகங்களுக்கும் எதிரான மனநிலையின் வெளிப்பாடுதான்.

மெளனியின் நாயகர்கள் பற்றி ஏற்கெனவே சொன்னோம். பணிக்களத்தில் அறிமுகப்படுத்தப்படும் மிகச் சிலர் தவிர பிற உன்னத நாயகர்கள் அனைவருமே வசீகரமானவர்கள்.அதிலும் பிரமிப்பில் ஆழ்த்தும் வசீகரம்; பின்பற்றத் தூண்டும் பேரழகு. முன்னே செல்பவர்களைத் திருப்பி இழுப்பது போன்ற நீண்ட மூக்கு; அது சற்று முன்புறம் வளைந்திருக்கும். இந்த வருணனையில் வெளிப்படும் ஒருவகையான பார்ப்பன உடற்கூற்று அம்சங்கள் கவனிக்கத்தக்கன. அதே சமயத்தில் பணிக்களத்தில் அறிமுகப்படுத்தப்படும் ஏட்டு ராயனும், செல்லக்கண்ணு படையாச்சியும் இன்னும் சில கீழ்சாதி உப பாத்திரங்களும் இவ்வாறு கூர்மையான நாசியும் சுண்டி இழுக்கும் வசீகரமும் பெற்றவர்களல்ல. இவர்களது கவலைகளும், கரிசனங்களும் லட்சியங்களும் கூட ரொம்பச் சாதாரணமானவைதான். உன்னத விசாரங்கள் இவர்களுக்குக் கிடையாது. சாதியில் தாழ்ந்த இவர்களது உடல்களின் வசீகரங்கள் உதாசீனப்படுத்தப்பட்டாலும் பெண்களைப் பொறுத்தமட்டில் கூடைக்காரி (பக் 240) மற்றும் விலைமாது ஜோன்ஸ் (பக். 175) ஆகியோரின் உடற்கூறுகள் மட்டுமே பாலியல் நோக்கில் விவரிக்கப் படுகின்றன. இதர உயர்சாதி பெண்கள் யாரும் அவ்வாறு

4. "வசீகரம்" என்ற சொல் மெளனியில் கிட்டத்தட்ட பக்கத்திற்கு ஒரு முறை வருகிறது. "பசி என்ற சொல் எங்கும் காணோம்.

வருணிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறவஞ்சிகளில் உயர்சாதிப் பெண்களைக் காட்டிலும் தாழ்ந்த சாதிப் பெண்களின் உடல்கள் கொச்சையாக வருணிக்கப்படுவதுடன் இது ஒப்பு நோக்கத்தக்கது.

அந்நிய மனிதர்களை அதுவும் சற்றுக் கீழ் நிலையிலுள்ள மனிதர்களைப் பார்த்தாலே அவர்கள் இருப்பை அச்சுறுத்தக் கூடியவர்களோ என அஞ்சும் போக்கை உடையவர்களாகவும் இவர்களை 'மாமா' வேலை செய்ய வர்களோ இல்லை முடிச்சு மாறியோ என அய்யுறுபவர்களாகவுமே மெளனியின் உயர்நாயகர்கள் படைக்கப் பட்டுள்ளனர் (பக்.28). மெளனியின் மனநிலையும் அது தான் என்பது தனது சொந்த ஊர் பற்றிய அவரது கட்டுரையில் வெளிப்பட்டு விடுகிறது. ஊர்ப் பொதுச் சாவடி "அநேக எதிரிகள் தங்கிப் போன இடமாக அவருக்குக் காட்சியளிப்பது (பக்.300) நமக்கு அதிர்ச்சியளிக் கிறது.

மெளனியின் இலக்கிய வடிவம் எதார்த்தச் சட்டகத்தை அதிகம் மீறியதில்லை. எனினும் அவரது நாயகர் விகள் Romantic தன்மையுடையவர்கள். எதார்த்த வடிவம் முதலாளிச் சூழலுக்கு இயைபானது; மெளனியில் வெளிப்படும் Romantic தன்மை அவர் உயர்த்திப் பிடிக்கும் பிரபுத்துவ- பார்ப்பனிய கருத்தியலுக்கு இயைபானது.

மெளனி ஒரு வகைமாதிரியான தஞ்சை மாவட்டப் பார்ப்பனப் பண்ணையார். அடிமைச் சுகம், வேத விசாரம், சங்கீத ரசனை என வாழ்ந்தவர். அவரது உலகியல் செயற்பாடுகள் சுகபோகங்களை அனுபவிப்ப தாக மட்டுமே இருந்தன. நெருங்கிய உறவினர்களின் இழப்புகள் தவிர பெரிய சோகங்களை அவர் அனுபவித்த

*5. ஒரு உரையாடலின்போது தோழர் ராஜன்குறை இதனைச் சுட்டிக் காட்டினார்.

தில்லை. அவரது விசாரங்களும் இவற்றைத் தாண்ட வில்லை. நியதிகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார் நியதிகளை மீறுகிற நெருக்கடி அவருக்கு எங்கும் தோன்ற வில்லை.

மெளனியின் குறியீடுகள் (ஜீவாத்மா - பரமாத்மா இணைவு- பிரபஞ்ச கானம்; அழியாச் சுடர், கோவில் கோபுரம், சுடலை ஒலி), அவரது கடவுள் ஏற்பு நிலை, மொழியின் அபூர்வத் தன்மை, இருண்மை, அந்தரங்கம் (Privacy), பிரகடனங்களை மாற்றீடு செய்யும் தியான நிலை வெளிப்பாடுகள், மேட்டிமைத்தனமான போதனைத் தன்மைமிக்க மொழி, ஆகிய அனைத்துமே மதம் சார்ந் தவை. எதார்த்த வடிவத்துடன் இத்தகைய அபூர்வத் தன்மைகளும், கனவுகளும் (Fantacles) இணையும் போது எதார்த்த வாழ்க்கைக்கு மிக நெருக்கமான தோற்றம் கொண்டு வாசக மனத்தில் ஆழமான தாக்கத்தை இவை ஏற்படுத்துகின்றன. மெளனியின் வாசக இலக்கான (Target audience) மேல் தட்டு ஆண்களின் கனவுகள் இங்கே முழுமை பெறுகின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இலக்கியத் தரம் பற்றிய குரல் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. பிரதியின் தூய்மை சுயேச்சைத் தன்மை போன்றவற்றோடு இவை

*6. இக் கட்டுரை வாசிக்கப்பட்டபோது திரு. பூர்ணச்சந்திரன், பிரதி ஆய்வில் எழுதுபவனின் சொந்த வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பயன்படாது என்றார். பிரதியை, அது வழங்கப்படும் சூழலில் (Context) வைத்தே பார்க்கவேண்டும். "சிறுகதையின் திருமூலர்' என்கிற புனைவின் பின்னணியில் இன்று மெளனி நிறுத்தப்படுகிறாா மெளனியின் பிரதியை எதிர்கொள்ளும் ஒரு வாசகன் இந்தப் புனைவுகளோடுதான் அவரை எதிர்கொள் கிறான். இத்தகைய புனைவுகளைத் தகர்த்து பிரதியை வெளிக்கொணர்வது அவசியமாகிறது.

இணைக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் பிரதியின் அரசியல் மழுங்கடிக்கப் படுகிறது. தரம் பற்றிய இக் கூப்பாடு மண்டல் குழு எதிர்ப்பு அரசியற் சொல்லாட அலுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

எள்ளளவும் தர்க்கப்பூர்வமற்ற கொடூரமான அரசியற் சூழல், கடுமையான கருத்தியல் நெருக்கடி, பொருளாதாரத் தேக்கம் ஆகியவற்றோடு உலகமெங்கும் மதவாத பாசிச சக்திகள் மறு எழுச்சி கொள்கின்றன. இத்தகைய சூழலில் மத்திய தர வர்க்கத்தின் புகலிடங் களில் ஒன்றாக மெளனி கதைகள் அமைந்து விடுகின்றன. இவை விமர்சனத்தினிடத்தில் ஆறுதலை முன் வைக்கின்றன. பகுப்பாய்விற்குப் பதில் உணர்வுத் தாக்கத்தை முன் வைக்கின்றன; பல குரல்களுக்குப் பதில் ஒற்றைக் குரலை ஒலிக்கின்றன. அது சனாதனக் குரல்; பார்ப்பனிய குரல்; ஆணாதிக்கக் குரல். மையம் சார்ந்ததும் ஒற்றைப் பரிமாணமுடையதுமான மெளனியின் கதைகள் இன்றைய கட்டுமானங்களையும் ஒழுங்குகளையும் சிதையாமல் காப்பாற்ற மட்டுமே பயன்படும். வெளிப்படையான பிரகடனங்களாக அமையாமல் இந்த வீர்யமான குரலை ஒலிக்கும் வகையில் இவை ஆபத்தானவையுங் கூட.

(நெய்வேலியில் “வேர்கள் அமைப்பு நடத்தியமெளனி பற்றிய இரு நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)

கனவு, மே, 1992.


  உடைபடும் மெளனங்கள் :: முன்னுரை - ரவிக்குமார்
"நான் வியக்கிறேன், இன்னும்கூட மனிதர்கள் உண்மையைத் தேடிக்கொண்டிருக்கிறார்களே என' -E. M. AGung Tairl
*பின் அமைப்பியல், குறியியல், பிரதியியல், பெண்ணியம் ஆகியவற்றின் கொடைகளையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் சார்பாக வாசிப்பில் அரசியல் குறுக்கீடு செய்யும் ஒரு காலகட்டத்தில் மார்க்சிய இலக்கிய விமர்சனம் சர்வதேச அளவில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது" என குறிப் பிடுகிறார் . மார்க்ஸ். தமிழில் அவ்வாறு மார்க்சியத் தின் விமர்சன எல்லைகளை அகலிக்க அவர் செய்துவரும் முயற்சிகளின் பதிவுகளே இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள். . மார்க்ஸின் விமர்சன முற்சிகள் பிரதி களின் உள் பொதிந்துள்ள உண்மையை வெளிப்படுத்தி விட செய்யப்படும் யத்தனங்களல்ல. ஏனென்றால் அப்படியானதொரு உண்மை எதுவும் கிடையாது என் பதைத்தான் மேலே சொன்ன பின் அமைப்பியல் முதலான சிந்தனா முறைகள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளன. ஆக, உண்மையைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தி விருதுவாங் கும் துப்பறிபவரின் செயல்பாட்டையொத்ததாக விமர் சகரை ஆக்கிவந்த மாடர்னிச அணுகுமுறையைக் கடந்த தாகவே . மார்க்ஸின் அணுகுமுறை அமைந்துள்ளது.
பின் நவீனத்துவம் எழுப்பும் எல்லா கேள்விகளையும்
உள்வாங்கி செரித்துக் கொள்வது மார்க்சியத்துக்கு சாத்தியம்தானா என்பது முக்கியமான கேள்வி. இதனைக்
படிப்பகம்WWW.padippakam.Com
ν
கணக்கில் கொள்கிறவராகவே . மார்க்ஸ் இருக்கிறார். அதனால்தான் சோசலிசக் கட்டுமானம் என்கிற பிரச் சனையை முன்வைத்து மார்க்சியத்தின் தத்துவ சட்டகம் குறித்து விவாதிக்கும் விதமாக அவர் எழுதிவரும் பல்வேறு கட்டுரைகளும் தீவிரமான கேள்விகள் பலவற்றை முன் வைப்பனவாக இருக்கின்றன.
இங்கே, அறியப்பட்ட மார்க்சியம் என்பது இன்னtrம் பூஜைக்குரிய ஒன்றாகக் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப் பதால் . மார்க்ஸ் முன்வைக்கும் இந்த அணுகுமுறையை நாம் "மார்க்சியம் கடந்த இடதுசாரி” (Post Marxist Left) அணுகுமுறை என அடையாளப்படுத்துவது பல குழப்பங் களிலிருந்து விலகிச் செல்ல உதவலாம்.
III
எண்பதுகளின் இறுதிப் பகுதியில் ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலானவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையொட்டி ஜனநாயகம் பற்றிய விவாதம் முதன்மைபெற்றதை நாம் அறிவோம். நமது சூழலில் சாதிப் பிரச்சனை குறித்த ஆழமான விவாதங்கள் இதனைத் தொடர்ந்தே தீவிரம் பெற்றன. இலக்கியம் பற்றிய அணுகுமுறையிலும்கூட இத்தகைய மாற்றங்கள் புதிய வழிமுறைகளைத் திறந்துவிட்டன. மார்க்சியம் குறித்த விமர்சனங்கள் எந்தெந்த திசைகளிலிருந்து வந் துள்ளன எனத் தொகுத்துக் கொண்டு ஜனநாயகத்தின் புதிய விளக்கங்களையும், நடைமுறைகளையும் கண்டறிய முயன்ற மிகச்சில மார்க்சியர்களில் . மார்க்ஸ் குறிப்பிட் டுச் சொல்லப்பட வேண்டியவர். இவருடைய இந்தத் தேடல், சுயமுன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு புதய மோஸ்தர்களைப் புலம்பெயர்ந்த நிலை யில் இறக்குமதி செய்யும் "அறிவாளிகளுடையதைப் ஒபான்றதல்ல; சந்தேகம் கொள்வதே குற்றமென்பதாக
படிப்பகம்WWW.padippakam.Com
V1
கேள்விகளுக்கு சமாதி எழுப்ப முற்படும் கட்சி வழி உாட்டு இடதுசாரிகள் சிலரைப்போல் தாங்கள் ஏற் கெனவே எழுதி வைத்துவிட்ட தீர்ப்புகளுக்கு ஆதா ரங்கள் தேடி அலைவதுமல்ல. இதனால்தான் பின் நவீனத்துவ தத்துவ அறிஞர்களெனத் தங்களுக்குத் தாங் களே முடிசூட்டிக்கொண்ட சில அறிவாளிகளைப் போல் "இலக்கியம் என்றாலே அது புரட்சிதான்" என்று குதூ கலிக்காமல் எல்லாவற்றையுமே பிரதிகள்தான் என்கிற நிலையில் வைத்துப் பார்க்க . மார்க்ஸால் முடிகிறது. "போதுவானதாக, சுதந்திரமானதாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் நிறுவனங்களின் செயல்பாடுகளை விமர்சித்து அதன்மூலம் X அதனுள் எளிதில் புலப்படா வண்ணம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் வன் முறையை வெளிப்படுத்துவதுதான் இன்றைக்கு உண்மை யான அரசியல் இலக்காக இருக்க முடியும்' என மிஷல் ஃபூக்கோ குறிப்பிட்டதை உள்வாங்கிக் கொண்டதனால் தான் கலாச்சார நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பற்றி இப்படியான விமர்சனங்களை மேற்கொள்ளவும் . மார்க்சுக்கு முடிந்திருக்கிறது. இந்தத் தொகுப்பில், இதுவரையிலுமான மார்க்சிய இலக்கிய விமர்சனம் குறித்து விவாதிக்கும் விதமாக அமைந்துள்ள இரு கட்டுரைகள் மரபுவழி மார்க்சிய இலக்கிய நோக்கினை விமர்சித்துப் புதிதாக உள் வாங்கிக் கொள்ள வேண்டிய கூறுகளை அடையாளப்படுத்துவனவாக இருப்பதையும், புதிய அணுகுமுறைகளைப் பிரயோகித்துப் பார்ப்பன வாக மெளனி, எம்.வி.வி, கி.ரா. ஆகியோரின் படைப் புகள் பற்றிய வாசிப்புகள் அமைந்திருப்பதையும் இநதப் பின்புலத்தில் வைத்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
III
1926 இல் வி.என். வொலொஷினோல் என்பவரின் G_JuJifiả) LJ49ảT &TCup6)u Discourse in life and Discourse
படிப்பகம்WWW.padippakam.Com
W
n Art என்ற கட்டுரையில் "சமூகவியல் பகுப்பாய்வு முறை கலையின் மீது சரியானபடி பிரயோகிக்கப்பட வேண்டுமெனில் முக்கியமான இரண்டு குறைபாடான போக்குகள் களையப்படவேண்டும்" என்று வலியுறுத்து கிறார். அவர் குறிப்பிடும் முதல்போக்கு, கலைப்படைப்பு களை வழிபடும் போக்கு. இது எல்லாவிதமான விமர்சனங் களையும் கலைப்படைப்போடு மட்டுமே குறுக்கிவிடுகிறது. அதை உருவாக்கியவரும் அதை வாசிப்புக்கு உட்படுத்து பவரும் கலைப்படைப்பின் எல்லைக்கு வெளியே நிறுத்தப் பட்டு விடுகின்றனர்.
இரண்டாவது போக்கு படைப்பை உருவாக்கியவரின் அல்லது வாசிப்புக்கு உட்படுத்துபவரின் உளவியலை ஆராய்வதோடு மட்டுமே தன்னைக் குறுக்கிக்கொள்கிறது. இதனைப் பொறுத்தவரை படைப்பை உருவாக்குகிற வாசிக்கிறவரின் அனுபவங்களின் வாயிலாகவே படைப் பைப் புரிந்துகொண்டுவிட முடியும்.
முதல்வகையான போக்கு படைப்பின் வடிவத்தை மட்டுமே முக்கியமானதெனக் கூறி ஆராய்கிறது. இது சொல்வழக்கினை (Verbal) ஒரு சமூகவயப்பட்ட விஷய மாகக் கொள்ளாமல் வெறுமனே மொழியியல் நோக்கில் மட்டுமே வைத்துப் பார்க்கிறது.
இரண்டாவது போக்கோ படைப்பாளி அல்லது வாசகளின் உளவியலில் படைப்பின் அழகியலைக் கண்டு பிடித்துவிட முயற்சிக்கிறது.
இவை இரண்டுமே தவறானவை. ஏனென்றால் இந்த இரண்டு போக்குகளுமே பகுதியின் அமைப்பை எடுத்து வைத்துக்கொண்டு-அதை முழுமையிலிருந்து துண்டித்து வைத்த நிலையில்-அதுவே முழுமையின் அமைப்பு என வாதிடுகின்றன. கலைத்தன்மை என்பது படைப்பாளிக்கும் வாசகருக்கும் ஒரு படைப்புக்குள் ஏற்படுகிற ஒரு விசேஷ
படிப்பகம்
WI
பாது இடையுறவு (Interrelationship) ஆகும் என்கிறார் பத்தின்,
இதனை ஏற்றுக்கொள்பவர்கள் இலக்கியமானாலும் சரி மற்ற எந்த விஷயமாக இருந்தாலும் சரி அது எந்த அளவு மற்றவற்றோடு கலந்துள்ளது என்பதைப் பற்றித் தான் அக்கறை கொள்வார்கன். அவர்களது பணி இலக்கி யத்தின் சுத்தத்தன்மை பற்றி வலியுறுத்திக் கொண்டிருப்பு தாக இருக்க முடியாது. மாறாக சுத்தத்திலிருந்து வெளி யேறுவதாக அசுத்தமென்றும் கலப்பு என்றும் கூறப்படு வதை நோக்கிச் செல்வதாகவே இருக்கும். இங்கே அர்த்தி உருவாக்கம் என்பது ஆசிரியன், பிரதி வாசகன் என்ற மூன்றின் கலவையிலிருந்து வெளிப்பாடு கொள்வதாக ஆகிவிடுகிறது.
வெங்கட்சாமிநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு மரபு வழிப்பட்ட மார்க்சியம் பதில்சொல்ல முடிaயாமல் போன போது காப்பாற்ற வந்ததுதான் அமைப்பியல் என்கிற பொருள்பட தமிழ்வன் பல இடங்கனில் எழுதிவருகிறார். வெங்கட்சாமிநாதன் அப்படியென்னகேள்விகளை எழுப்பி விட்டார் என நாம் கேட்பதை விடுத்து தமிழவனின் அமைப்பியல் எப்படி மார்க்சியம் எதிர்கொள்ள முடியாதி பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது என ஆராய்ந்தோ மானால் நமக்குக் கிடைப்பவை சில் பிதற்றல்கள் தவிர வேறில்லை. ஏற்கெனவே நிலவிவந்த பிம்பல்வழிபாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாகவே இங்கு இதுகாறும் அமைப் பியல் முதலான அணுகுமுறைகள் இவர்களால் கையானப்பட்டு வருகின்றன. இவர்களது அணுகு மூனறயை பத்தின் கடபடிக்காட்டும் முதல் போக்கோடு நாம் அடையாளப்படுத்தலாம். படைப்புக்கு அப்பாற் பட்ட கூறுகனை மட்டுமே ஆராய்ந்து பனிடப்பின் கலைக் தன்மையைக் கண்டுவிடலாமென நினைக்கிற இரண்டா வது போக்காக இன்றும் தொடரும் மரபுவழிப்பட்ட கட்சிவழிபாட்டு இடதுசாரிகளின் அணுகுமுறையை நாம்
________________
IX
வகைப்படுத்தலாம். . மார்க்னின் அணுகுமுறை மேற் சொன்ன இரண்டு குறைபாடுகளிலிருந்தும் விடுபட்டு நிற்பதை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் நிருபணம் செய்கின்றன.
W
இத்தொகுப்பிலுன்ன மெனனியின் படைப்புகள் பற்றிய கட்டுரை ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பட்டபோது அந்த அரங்கிலிருந்த ஒரு அமைப்பியல் விமர்சகர் மெளணி யின் வாழ்க்கைக்கும் அவரது படைப்புகளை வியாக் யானப்படுத்துவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என ஆவேசமாகக் கேட்டார். அவர் பயின்ற அமைப்பியலின் படி "ஆசிரியன் இறந்துவிட்டான்" என்று அவர் நம்பி யிருக்கவேண்டும். 1968இல் ஆசிரியனின் இறப்பையும் வாசகனின் பிறப்பையும் ரொலாண்ட் பார்த்ன் அறிவித்தி திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த விவாதம். வாசகனை அடிப்படையாகக்கொண்டு பிரதியை வியாக் யானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முன்வைக்கப் பட்ட பார்த்ளின் கருத்தாக்கம் பிரதியில் ஆசிரியனின் பங்கை முற்றாகத் துடைத்துவிடுவதில்லை. "பிரதி என்பது வியாக்யானங்களை வெனிக்கொணர்வதற்கான ஒரு யந்திரம்" என குறிப்பிடும் உம்பர்ட்டோசக்கோவும் கூட பிரதியில் ஆசிரியனின் இடத்தை மறுப்பதில்லை. தொதரோவ் குறிப்பிட்டதுபோல "பிரதி என்பது ஒரு "பிக்னிக்". அங்கே ஆசிரியன் வார்த்தைகளைக் கொண்டு வருகிறான், வாசகன் அர்த்தத்தைக் கொண்டு வருகி றான்" ஆக பிரதியில் ஆசிரியனைத் துடைத்துவிட்டு பிரதியைத் தனித்த ஒரு வஸ்துவாக பார்ப்பது ஏற்கெனவே பக்தின் குறிப்பிட்ட குறைபாடுடைய பார்வையே தவிர வேறில்லை. "ஆசிரியன் வெற்றிடத்தில் பேசிக் கொண் டிருப்பதில்ல்ை, அவன் ஏற்கெனவே உள்ள பிரதிகளாலும் கூட கட்டுப்படுத்தப்படுகிறான், நிர்ணயிக்கப்படுகிறான்" என்கிறார் ஈக்கோ. ஆசிரியனைக் கட்டுப்படுத்திய, நிர்ண
________________
பித்த அந்த ஏற்கெனவே உள்ள பிரதிகளைத் தெரிந்து கொள்வதும் கூட வாசிப்புக்கு அவசியம் என்பதைத்தான் நாம் இதன் மூலம் அறிந்துகொள்கிறோம். "ஒரு பிரதியை எழுதிமுடித்ததுமே ஆசிரியனானவன் இறந்து போய்விட வேண்டும். ஏனென்றால் பிரதியின் பாதையில் அவன் இடையூறாக இருக்கக் கூடாது" என்கிறார் ஈக்கோ, இதன்பொருள், பிரதிக்கும் ஆசிரியனுக்கும் எந்த உறவுமே கிடையாது என்பதாகாது. ஆக ஒரு பிரதியை வாசிக்கும் செயல்பாட்டுக்கு-ஆசிரியனும் அவனது பிறசெயல்பாடு களும் வேறுபல பிரதிகனாய் அமைந்து அந்தப் பிரதிகள் யாவும் இடையுறவு ஒத்தாசை புரிவதாக இருக்கக்கூடும் என்பதை யாரும் மறுக்கி முடியாதி
இன்னும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: பிரதியிலிருந்து ஆசிரியனை முற்றாகத் துடைத்தெடுத்து இடுவது பிரதியின் வழிபாட்டுக்கு இட்டுச் சென்றுவிடுவது மட்டுகின்றி இப்படி ஆசிரியனின் மரணத்தை வலியுறுத் தும் போக்கு பலகாலமாக அதிகாரம் மறுக்கப்பட்டு தற்போதுதான் அதை அடைய முற்படும் விளிம்புநிலை க்கன் இரனினரை அதிகாரமற்றவர்களாக ஆக்கும் யற்சியாகவும் அமைந்து விடுகிறது. "வரலாற்று ரீதியா கவும், மரபுரீதியாகவும் தன்னிலைத்துவம் மறுக்கப்பட்ட தன்னிலைகளுக்கு ஆசிரியனின் மரணம் பற்றிய கோட் பாட்டைப் பொருத்திப் பார்ப்பது கூடாது" என்கிற கிமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிரதியின் அதிகாரத் தைக் கைப்பற்றும் விக்கப்பட்ட தன்னிலைகள் பிரதியில் தமது அதிகாரத்தை நிறுவுவது பட்டுமின்றி தம்மை இதுகாறும் அதிகாரம் செய்தவர்கன் உற்பத்திசெய்தபிரதி களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கவும் கேட்பார்கள். இதைத்தான் நாம் . மார்க்ளின் வாசிப்பினூடாகப் பார்க்கிறோம்.
________________
XI
"W"
எல்லாவற்றையுமே பொதுக்காட்சியாக (spectace) மாற்றுவதில் தேர்ச்சி பெற்றது தமிழ்ச் சமூகம். இதனைப் GLIrgá. Kr. Fl SeypSALIST (Society of the Spectacle) நாம் குறிப்பிடலாம். இங்கே"யதார்த்தம், நம்பகத்தன்மை முதலானவை காலாவதியாகி விட்டன. அவற்றின் இடத்தை காட்சி - அரசியல் கைப்பற்றிக் கொண்டு விட்டது. பொதுக்காட்சி அரசியலின் குணாம்சம் பற்றி விளக்குகின்ற தெபோர் (Debord) என்ற சிந்தனையாளர் காட்சி அதிகாரம் இருவகைப்பட்டதெனக் குறிப்பிடு கிறார். ஒன்று ஒரே இடத்தில் குவித்திருப்பது மற்றது எல்லா இடங்களிலும் பரவி நிற்பது. "இரண்டுமே யதார்த்தமான சமூகத்திற்குமேலே மிதந்து கொண்டிருக் கின்றன. முதலாவது வடிவம் ஒரு சர்வாதிகாரியின் பிம்பத்தைச் சுற்றி செயல்படுகிறது. இரண்டாவதோ கூலி உழைப்பாளிகன் தமது சுதந்திரத்தை தம்மைச் சுற்றிலுமுன்ன பண்டங்களைப் வாங்குவதற்குப்பயன்படுக் தும்படி செய்கிறது." என்கிறார் அவர். இதனையொட் டிக் கட்டமைக்கப்படும் காட்சிக் கலாச்சாரத்தின் முதீன் மையான நோக்கம் வரலாற்று அறிவை நீக்கிவிடுவது தான். பொதுக்காட்சியில் பேசப்படுவது மட்டுமே உலகத் தில் இருக்கிறது எனவும் அதனுள் பேசப்படாதது இல்லவே இல்லை எனவும் நம்பவைக்கப்படுகிறது. இதில் பார்வையானனானவன் அவனது சார்பில் வேறு யாரோ தேர்ந்தெடுத்த பிம்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி செய்யப்படுகிறான், அதுவே அவனது பார்வையாக மேல்ல மெல்ல மாறிவிடுகிறது. தெபோர் குறிப்பிடுகிற காட்சி அதிகாரத்தின் இருவகைப்போக்குகளும் ஒன்று கலந்து நிற்பதாக தமிழ்ச் சமூகத்தை நாம் வகைப்படுத் தலாம். எனவே, மற்ற எந்தப்பகுதியை விடவும் இங்கே காட்சி ஊடகங்கள் பற்றிய விவாதங்கன் முக்கியம் பெறு
________________
||
கின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொடர்பு சாதனங்கள் பற்றிய சுட்டுரை நாம் மேற்கொன்ன வேண்டிய எதிர்ப்பு யுக்தியின் வடிவங்களை எடுத்துக் கூறுகிறது. தொடர்பு சாதனங்கள் பற்றிய அணுகுமுறை யாக மட்டுமின்றி வேறுபல பிரதேசங்களுக்கும் கூட அதனை நாம் விரிவுபடுத்திப் பார்க்க முடியுமென்பது அந்தக் கட்டுரையின் சிறப்பம்சங்களில் ஒன்று எனக் கூறலாம்.
WI
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக . மார்க்கின் செயல்பாடுகளில் பங்கெடுத்துவருபவன் என்கிற முறையில் அவரது சித்தனைப் போக்கிலேற்பட்ட மாறுதல்கனை இெருக்கமாகக் கவனிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத் திருக்கிறது. இயக்கமின்றி தன்னை சதாகாலமும் சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்கிற மனவலிமை அவருக்கிருப்பதை நான் அறிவேன். எவ்வித ஒளிவு மறைவுமின்றித் தன்னை எப்போதும் ஊடுருவத்தக்க Transparent) நிலையில் வைத்துக் கொண்டிருப்பவர் அவர் வாசிப்பவனை அருகே அமர்த்திக்கொண்டு தேசத்தோடு பேசுவதுபோல் வெளிப்படுவது அவரது எழுத்து நிறை மட்டுமல்ல அவரது இயல்பும் அத்தகையது தான். இத்தகைய மனநிலையால்தான் எங்கவிதக் காழ்ப்பு மின்றி நீவீனத்துவ சிந்தனைகளை உள்:ாங்கிக் கொன்ன அவருக்கு முடிந்திருக்கிறது. தலித் பிரச்சனையில் கொஞ்சமும் ஐயப்பட முடியாத அர்ப்பணிப்போடு செயல்படவும் முடிகிறது. தான் பார்த்துவரும் பேராசி ரியர் என்னும் பணியின் காரணமாக அவர் மரபுரீதியான அறிவுஜீவியென கணிக்கப்படலாம். ஆனால் கல்வி பற்றிய அவரது அணுகுமுறை அவ்வாறு மதிப்பிடுவதிைத் தடுத்து விடும். எட்வர்ட் செய்த் தெரிகா போன்றோரும்கூட ல்விக்கூடங்களில் பணிபுரிபவர்கள்தான். ஆனால் அவர்
________________
XIII
*ஆக்கிருக்கும் சுதந்திரமோ நாம் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது. அத்த கைய வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையிலும் கூட கல்வி "கட்டுமிடம் என்பதை சேர்ந்து கற்கும் வெளியா மாற்ற முயன்றுவருபவர் . மார்க்ஸ். மாணவர்களென ஆாரை அம் கருதாமல் தோழர்களென நினைத்தே பழகுபவர் அவர் இந்தக் கட்டுரைகளின் தொனியும்கூட வாசகனை STSL stuff S Larsetsuger fra நினைத்துக் கற்பிக்க முயற்சிக் காமல் சகதோழனோடு பேசும் விதமாகவே அமைந்துன் விகித நரம் உணரமுடியும்,
பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது கவிதைத் தொகுதி ஒன்றுக்கு முன்னுரை வாங்குவதற்காகத்தான் bTit மார்க்கினி முதன் முதலாக சந்தித்தது. அவரது நூலுக்கு இன்று நான் முன்னுரை எழுத நேர்ந்தது என்னுடைய வளர்ச்சியின் காரணமாக அல்ல, மார்க்கி பெருந்தன் மையின் தோழமையின் காரணமாகத்தான் எனக் கூறுவது இன்னடக்கம் ഋജTളൂ.
urskrigsof -ரவிக்குமார் =12-4
குறிப்புகள் :
1. ON THE HEIGHTS OF DESFAIR-E. M. Сіогап The University of Chicago Pross-1992 2. THE FOUCAULT READER- Ed. Paul Rabinow Penguin Books Ltd-1986 3. FREUDANISM A MARXIST CRITIOUE
W. N. Wolosinow, Academic Press inc-1976
(வொலொஷினொவ் என்ற பெயரில் இந்தக் கட்டுரை வெளியான போதிலும் பின்னர்
________________
轟。
XIW
உரையாடலின் போது-1951இல்- பக்தின் இந்தக் கட்டுரை தன்னாங் எழுதப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.செர்ஜிபோஷரோவ் ETT பவரால் தொகுக்கப்பட்டுள்ள 0MWERSAT108 WITH BAKHTN என்ற கட்டுரையில் இந்த விவ ரங்கள் காணப்படுகின்றன. EDWARD SAD-IN CRITICISM IN SOCIETY.
Ed. Imre Salusinzky, Methuen 1987
READING MY READERS-Umberto ECO, MIn 10
(1992). B19-827, Johns Hopkins Univ. Press. REFLECTIONS ON THE NAME OF THE ROSE -Lumberto Eco, Minerva 1994
CHANGING THE SUBJECT: AUTHORSHIP
WRITING AND THE READER-Nancy Millor, In
-What is an author
Ed, Maurice Biriotti E. NiCOla Miller Manchester University Press, 1993
OLOTED IN
DEATH OF POLITICS AND SEX IN THE EIGHTIES SHOW-M. Carmen Africa Widal, New Literary History Wol-24, Winter-1993
________________
பதிப்புரை
சமூகநீதிக்கிான கருத்தியல் பரவவும், சோசலிசக்கட்டு மானம் பற்றிய பிரச்சினைகனை எதிர்கொள்ளவுமாக விடியல் பதிப்பக வெளியீடுகள் வந்துகொண்டிருக் கின்றன. நாம் எதிர்கொன்கிற எல்லாவற்றையும் விமர் சனக் கண்ணோட்டத்தோடு அணுகவேண்டியதன் அவசியம் தீவிரமாகியுள்ள நமது சூழலில் சமூக அரசியல் கனங்களோடு மட்டுமின்றி இலக்கியம் கலாச்சாரம் எல்லாவற்றையும் தீவிரமான பரிசீலனைக்க நாம் உட்படுத்த வேண்டியுள்ளது.
இலக்கியம் பற்றிய புனிதம் தோய்ந்த மாயைகளை விலக்கி அதுவும் ஒரு போராட்டக்களன் தான் என்பதை இங்கே உள்ள கட்டுரைகள் நிரூபணம் செய்கின்றன. ஏற்கெனவே மார்க்ளின் மார்க்சியத் தத்துவம் பற்றிய நூலோன்றை விடியல் கொண்டு வந்தது. இப்போது இந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் நூலாக முன் வைக்கப்படுகின்றன.
இந்த நூல் . மார்க்ளின் பன்முகப்பட்ட பார்வையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் எமது பதிப் பகத்தின் பரந்துபட்ட தேடலையும் வெளிப்படுத்துகிறது என்றும் கூறலாம். இதுமட்டுமின்றி முக்கியமாகனல்லாமே "ஒன்றோடொன்று தொடர்புடையவைதான் என" எங்கேல்ஸ் கூறியதை இந்த நூல் நினைவுபடுத்துமாயின் அதுவே இதன் வெற்றியுமாகும்.

- விடியல் பதிப்பகம்