தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, December 31, 2017

அவதாரிகை - *நகுலன்" :: மழை-மரம்-காற்று முன்னுரை

அவதாரிகை - *நகுலன்"
முன்னுரை
நன்றி கொல்லிப்பாவை சிற்றிதழ்

இந்தக் கவிதை - வரிசையை நான் 15-8-75 ல் ஆரம்பித்து 22-8-75 ல் முடித்தேன். இதை நான் ஏன் எழுத ஆரம்பித்தேன் -எப்படி முடித்தேன் ஏன்பதைப்பற்றி எனக்குத் திட்டமாகத் தெரியவில்லை. திரும்பிப் பார்க்கும் பொழுது சில விஷயங்களைச் சொல்லலாமென்று நினைக்கிறேன். 
-
சமீபத்தில் திரு ஆர். பார்த்தசாரதியை (ஆங்கிலத்தில் கவிதை எழுதும் இந்திய க் கவிஞர்களில் குறிப்பிடும்படியான ஒரு கவிஞர்) இங்கு வேறு சில எழுத்தாள - நண்பர்களுடன், சந்திக்க என ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. எங்க்ள் பேச்சுக்கிடையில் அவர் சொன்ன ஒரு விஷயம் மாத்திரம் என் மனதில் பச்சை பிடித்தது. அவர் சொன்னார் தமிழில் மேல்நாட்டுக் கவிதைகளை மொழி பெய்ர்ப்பதால் தமிழ் இலக்கியத்திற்கு அது வளம் சேர்க்கும். பிறகு தான் சமீபத்தில் படித்த "பிரக்ஞை' யில் பிரஷ்ட் எழுதி ஒருகவிதையின் ஒரு பிரசித்தமான வரி என் உள்ளத்திஸ் வளைய வந்து கொண்டிருந்தது. பிரஸ்தாப வரி ” .இதில் .... மரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது கொடுஞ்செயல்" பிரஷ்ட் இதை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறியிருக்கிருன் என்பது'தெளிவு. ஆனால் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உள்ள ஆபர்வமான ஒரு கேள்வி - கேட்கும் புத்தியில் பேசினால் என்ன என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. நான் என் கவிதையில் எழுதியிருக்கிற மாதிரி நான் ஒரு புதுக்கவிஞன் இல்லை; நான் ஐரோப்பிய இலக்கியங்களைப் படிக்கலாம்; ஆங்கில ஆசிரியனாக இருக்கலாம்; ஆனால் ஒரு சம்பிரதாயத்தில் வந்தவன்; ஒரு சூழ்நிலையில் வாழ்பவன். இவைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய குறை பாடுகளென்றால், உண்மையாகவே சொல்கிறேன், என்னால் அவைகளிலிருந்து மீற   முடியாது . அதைப் போலவே தான் என்னால் ஒரு அனுபவத்தை (அதைஎப்படி வேண்டுமானுலும் வரையறை செய்து கொள்ளுங்கள்) வைத்துக் கொண்டு தான் எழுத மு டி கிற து . பிறகு சமீபத்தில் நான் 'கணையாழி' யில் வந்த க. நா. சு. வின் காவியரூபத்தில் வந்த சுயசரிதையைப் படிக்க நேர்ந்தது. இது அந்தப் பத்திரிகையில் முற்றுப் பெறவில்லை. பலருக்கு அது காவியமாகவே படவில்லை; எனக்குப் பட்டது என்பதுதான் காரியம். பண்டிதர்களும் விதிகளும் என்றுமே சாசுவதம். ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு அவன் உணர்வும் அனுபவமும் தான் கட்டளைக்கல். அதனால் க. நா. சு. வின் 'சோதனை யைப் பின் பற்றி அனுபவத்தைச் சொற்சிக்கனத்துடன் மிகவும் நுட்பமாகவும் ஆழமுடனும் வெளியிடும் எந்த எழுத்தும் கவிதைதான் என்று ஏற்றுக் கொண்டு நாம் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் "யாப்பு' என்ற கட்டுப்பாட்டை மீறி இந்தக் கவிதையை எழுதியிருக்கிறேன். கடைசியாக ஆனால் அ - முக் கியமாக இல்லை. சமீபத்தில் நான் 'தெறிகள்" ல் படித்த 'கலாப்ரியா"" (என் அபிமானக் கவிஞர்களில் ஒருவர்) வின் "சுயம்வரம்" இக்கவிதைக்கு ஒரு அபூத காரணம் என்றும் சொல்ல வெண்டும்.

இந்தக் கவிதை - வரிசையில் சில மொழி பெயர்ப்புகளைச் சேர்த்திருக்கிறேன். மொழி பெயர்ப்பு பற்றி ஒரு வார்த்தை. இந்த மொழி பெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த கவிதைகள் அவைகள் பிரசித்த பெற்ற கவிஞர்களால் எழுதப்பட்டவை என்பதாலோ, அவர் - அவருடைய பிரசித்த பெற்ற கவிதைகளைத்தாள் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையாலோ தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனக்குப் பிடித்த கவிதைகளை, என் கவிதைக்குப் பொருத்தமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அடுத்தபடியாக மொழி பெயர்ப்பு அவசியமா? ஒரு எழுத்தாளன் தன் சிருஷ்டி வேகம் குறைந்தபோது மொழி பெயர்ப்பில் ஈடுபடுகிறான் என்கிறார்கள். எனக்கு இது பொருத்தமாகப் படவில்லை. இன்னும் ஒன்று ஒரு எழுத்தாளன், தேசம், காலம் என்ற எல்லைகளைத் தாண்டினவனாலும், அந்த எல்லைகளிலிருந்து கொண்டு தான் அவன் அந்த எல்லைகளை மீறுகிறான் . இதில் முக்கியம் என்னவென்ருல் எந்த மொழியில் எழுதினாலும் எழுத்தாளன் பாஷை அனுபவத்தின் குரல். அதை அவன் எப்படி அவன் மொழி - மூலம் வெளிப்பாடு செய்கிறான் என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். இன்னுமொரு கேள்வி: மொழி பெயர்ப்பை எப்படிச் செய்ய வேண்டும்? நேரடியாகவா? எழுதப்பட்ட பாஷையின் இயல்புகளை ஒற்றியா? அல்லது மொழி பெயர்க்கப்படும் பாஷையின் இயல்புகளை ஒற்றியா? இதற்கு முடிவான ஒரு பதிலைக் கூறமுடியாது. ஆனால் பாஷையில் அனுபவமும் - மொழியும் புருஷனும் - பிரகிருதியும் போல் இணைந்திருப்பதால் இரண்டையும் இணைத்து மொழி பெயர்ப்பது தான் உத்தமம். இங்கு கூட ஒரு நூதன அனுபவம். தமிழில் பல வார்த்தைகள் இருக்கின்றன இதில் பல கலைஞனால் ஆளப்படாதவை. ஆனால் இத்தகைய வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்ப்பில் முதலாவதாகக் கொண்டு வரப்படுகையில் ஒரு நூதன உணர்ச்சி ஏற்பட்டாலும், மொழிபெயர்ப்பு கலாபூர்வமாக அமைந்தால், தமிழில் கூடுதல் வார்த்தைகள் எழுத்தாளனுக்குப் பொருத்தமான கருவிகளாக அமைந்து விடுகின்றன. சில இடங்களில் நேரடி யான மொழிபெயர்ப்பு சாத்தியமாவதில்லை. இது ஒருவகையில் மொழி பெயர்ப்பாளனின் திறமை யைப் பொறுத்தது. எனவே ஒரு நூலின் ஒன்றிற்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புகளின் அவசியம், மேலும் ஒரு படைப்பை ஒரு மொழியிலிருந்து என் மொழியில் நான் மொழி பெயர்க்கையில் அந்தப் படைப்பை இன்னும் சற்றுக் கூடுதலாக அணுகுகிறேன்.

இவ்வளவும் எழுதிவிட்டேன். ஆனால் என் கவிதை . வரிசையில் - மொழிபெயர்ப்புகள் ஒரு அம்சம் மாத்திரம். இந்தக் கவிதையில் எந்த அனுபவத்தை எவ்வளவு தூரம் வெற்றியுடன் செய்திருக்கிறேன் என்ற நிர்ணயிப்பை வாசகர்களுக்கு விட்டுவிடுகிறேன்.

*நகுலன்"