தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, December 15, 2019

மௌனி - நகுலன்

மௌனி இலக்கியத் தடம் :: (தொ) ப.கிருஷ்ணசாமி
10. மௌனி  - நகுலன்

முதலில் ஒன்று சொல்லலாமென்று நினைக்கிறேன். எனக்கு “மௌனி”யைத் தெரியும். நான் அவரின் மௌன ஆராதகர்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஏன், அவருடன் ஒரு சமயம் நெருங்கிப் பழக ஏற்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 'THOUGHT' இதழ் ஒன்றில் "Introducing Mouni'' என்ற ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன். என்ன எழுதியிருந்தேன் என்பது இப்பொழுது ஞாபகம் இல்லை! கைமறதியாக வைத்துவிட்டதால் ''THOUGHT' பிரதி கிடைக்கவில்லை. மறைந்துவிட்டதைத் தேடுவது என்ற பழக்கத்தை விட்டுவிட்டேன்! இந்தக் கட்டுரையை எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் எனக்குக் கிடையாது. ஆனால் நண்பர் சிவசு நான் ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும் என்று வற்புறுத்தியதால் (இன்றையச் சூழ்நிலையில் இந்தத் தூண்டுதல் எனக்குச் சற்று ஆச்சரியத்தைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்!) இதை எழுதினேன். 

இந்தக் கட்டுரை எழுதுவதற்கென்று என்னிடம் கைத்தங்கியிருந்த மௌனி-எழுத்துக்கள் பற்றி'' சில எழுத்துக்கள் கிடைத்தன. 'மௌனியுடன் மூன்று நாட்கள்'' என்று நான் 'வஞ்சி நாட்டில்' எழுதியது கிடைக்கவில்லை. அதுவும் நல்லதுதான்! இந்தக் கட்டுரை எழுதுவதற்கு எனக்கு முக்கிய மாகக் கிடைத்த மௌனி விமர்சன இலக்கியம் வருமாறு : 

1) ''எழுத்து'' வில் 1960-61இல் சி. சு. செல்லப்பா எழுதிய “மௌனியின் மனக்கோலம்' என்ற ஐந்து கட்டுரைத் தொடர்.
2) மௌனி கதைகள் என்ற தொகுப்புக்கு தர்மு சிவராமு, க. நா. சு. எழுதிய முன்னுரைகள் .
3) எழுத்து January '62 இதழில் “தமிழில் சிறு கதைகள் 3'' என்ற தொடரில் க. நா. சு. மௌனியைக் குறித்து எழுதியது. இவை மூன்றில், மூன்றாவது கட்டுரையான க. நா. சு. எழுதியதை நான் மிகவும் முக்கியமானதாகக் கருது கிறேன். ஆனால் இன்று தமிழ் மாணவர் உலகில் முக்கிய மாக தமிழ் M.A தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இம்மூன்று கட்டுரைகளும் மௌனியைத் தெரிந்து கொள்வதற்கு ' அவசியமான வாசிப்பு' ஆகும். 

செல்லப்பாவின் கட்டுரைத் தொடர் மிகவும் பொறுமை யுடன்-பொறுப்புடன்-ஆர்வத்துடன் எழுதப்பட்ட ஒரு தொடர். அதைப் படிக்கும்பொழுது BURKEஇன் வாதங் களைப் பற்றி ஆங்கில விமர் சகன் HAZLITT எழுதியது ஞாபகம் வருகிறது. (இது கேள்வி ஞானம்!] ''பர்க் ஒரு தவறான முடிவுக்கு வருகிற வழியில் ஒரு ஆயிரம் உண்மைகளை உதிர்த்துவிடுகிறான். செல்லப்பா மௌனி பாத்திரங்களைப் பற்றி வரும் முடிபு - ஃபிராய்டு அடிப்படையில் [ஃபிராய்டுடன் மௌனியை இணைக்க முடியாது என்பதில்லை - முடியும். இதைப் பற்றிப் பின்னர்) அவர்கள் மனோவியாதிக்காரர்கள், மெஸோக்கிஸிட்ஸ் என்பது பொருத்தக் கேடாகப்படலாம். ஆனால் முதல் நான்கு கட்டுரைகளும் ஒரு இலக்கிய மாணவனுக்கு மிகவும் பயன்படும். சி.சு.செ. ஒரு இலக்கியப் படைப்பை இனமறிந்து தரம் நிர்ணயிக்க மிகவும் அவசியம் உள்ளுணர்வு என்கையில், மௌனியின் கதைகள் அகஉலகப் படைப்புகள் என்கையில், அவைகளின் தன்மைகளை நாம் புரிந்துகொள்வதற்குச் சில திறவுகோல் வாக்கியங்கள்'' உதவி புரிகின்றன என்கையில், அவர் மாறுதல்" மௌனியின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று என்கையில், அதில் வரும் படிமங்கள் பற்றிப் பேசுகையில், அவர் மௌனி உள் வியாபக உலகைப் பற்றி நிறையவே பேச இருக்கிறது என்கையில், அவர் நடை நுணுக்கம் மிகுந்தது என்கையில் நாம் செல்லப்பாவின் மௌனி - கட்டுரைகளைப் புறக்கணிக்க முடியாது. மௌனி பாத்திரங்களைப்பற்றி அவர் மேல்-நாட்டு மனோதத்துவ அடிப்படையில் முடிவிற்கு வருகையில்தான் அவர் விமர்சனம் லயம் பிசகுகிறது. 

க. நா. சு. [எழுத்து January '62 கட்டுரை யில் - மௌனி : கதைகள் முன்னுரையில் இல்லை) மௌனி அக உலகை நம் மரபுவழி பார்க்கவேண்டும் என்கையில் அவர் காதல் பற்றிய சர்ச்சை ஒரு இலக்கிய மரபு பற்றி, அவர் வரையில், அவர் அறிந்தோ அறியாமலோ வந்தது என்கையில், இவ்வளவு சுருக்கமாக இவ்வளவு தெளிவாக அவர் விமர்சனம் செல்கையில், அவர் விமர்சனம் ஒரு தரிசனப் பார்வையைக் காட்டுகிறது. க. நா.சு. கட்டுரையிலிருந்து சில மேற்கோள்கள் : "உலகிலுள்ள மனிதர்களையெல்லாம் பலமற்ற, கனவுகாணும் பதினெட்டுப் பிராயத்துக் காதலர்களாக- அப்படிப்பட்ட காதலர்களின் பலத்துடனும் பலஹீனத்துடனும்-கற்பனை செய்து கணித்துக் காட்டுகிறார்.'' “அத்துடன் தமிழ்ப் பண்பும் மரபும் இந்த இரண்டு கதைகளிலும் [பிரபஞ்சகானம், அழியாச்சுடர்) அபூர்வமாகப் பின்னிக் கிடக்கின்றன. கோவில் சந்நிதியும் அதன் உயிருள்ள சிற்பங்களும் சங்கீதத்தின் உயிருள்ள பகைப்புலமும் இந்த இரண்டு கதைகளிலும் சிறப்பாக உருவாகியிருக்கின்றன'' மேலும் “அழியாச்சுடரில் பொய்மைக்கும் வாய்மைக்கும் உள்ள போராட்டம் லேசாக நிழலாடுகிறது. மனிதனின் பலமும் பலமின்மையும் மோதுகின்றன'', 'கோவில் விக்ரஹத்துக்கும் அப்பால் நிழலாடும் உண்மை , பரம உண்மை எவ்வளவு நிச்சயத்துடன், தீர்மானத் துடன் இங்கு உயிர்பெற்றிருக்கிறது". மீண்டும் சொல்கிறேன். மௌனியின் பிரத்தியக்ஷக், கிரியா - சக்தியை உருவங்கண்டு கொள்ள ஒவ்வொரு மௌனி - மாணவனும் க.நா.சு.வின் கட்டுரையை ஒரு முறைக்கு இரண்டு முறையாகப் படிக்க வேண்டும். 

தர்மு சிவராமு கட்டுரையிலிருந்து நான் புரிந்து கொண்டவரை : மௌனியின் படைப்புகளில் காணும் விளைவுகள் தற்செயல் விளைவுகள் அன்று, கிரியா சக்தியில் தன்னை மறந்த வேகத்தில் தன்னையும்மீறி உருக்கொண்டவை இங்கு, ஒரு மாறாட்டம் என்று தோன்றினாலும் மௌனியின் அடித்துத் திருத்தி எழுதும் பயிற்சியும் ஒரு தவிர்க்க முடியாத தன்மை . தர்மு சிவராமு கட்டுரையிலிருந்து தெரிகிறது, அவர் மௌனியிடம் அவர் எழுத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார் என்று. எடுத்த எடுப்பிலேயே மௌனியின் சிருஷ்டி நம்மைக் கவர்கிறது என்றும், அவைகளின் உருவ-அமைதி நோக்குகையில் அர்த்தம் இரண்டாம் பக்ஷம் என்றும் கூறுகிறார். 

மௌனி தன் படைப்புகள் வாசகனுக்கு ஒருவித சிரமமும் கொடுக்காது என்று கூறுகையில், அவர் அவற்றின் வெளி யீட்டுச் சிறப்பைப் பற்றிப் பேசுகிறார் என்று கூறலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வாசகனுக்கும் எந்த ஒரு படைப்பும் தன்னளவில் ஒரு விளைவை ஏற்படுத்த வேண்டும்; 


விமர்சனம் அதன் எல்லையையும் ஆழத்தையும் விவரிக்கலாம். ஆனால் ஒரு தனி வாசகன் என்ற வகையில் எங்கு எனக்கு ஒரு படைப்பு இந்த விளைவைத் தரவில்லையோ அந்த அளவில் அந்தப் படைப்பு என்னைப் பற்றியவரை, விமர்சகர்கள் என்ன சொன்னாலும், அர்த்தமற்றது தான். என்னில் ஒரு மௌனி கதை என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றுதான் என்னால் கூறமுடியும். இந்த என் விளைவுக்கு படைப்பு இடங்கொடுக்க வேண்டும். ஒரு மௌனி கதை ஒரு தவிர்க்க முடியாத பாதிப்பை விளைவிக்கிறது. அநேகமாக எல்லாக கதைகளிலும் அவர் காதலைப் பற்றிப் பேசினாலும், இங்கு பேசப்படுவது காதல் அன்று, வேறு ஏதோ ஒன்று என்ற ஒரு போதம். இந்தக் கதைகளில் வெகு தீவிரமாக உருவாகியிருப்பது ஒரு சூழ்நிலை (ஆங்கிலத்தில் Atmosphere என்கிறார் களே அது). அதே சமயம் இவர் கதைகள் காட்டும் உலகம் தத்ரூபமாக அமைந்திருப்பதாகத் தோன்றினாலும், இந்தத் தத்ரூபமே ஒரு மயக்க நிலை என்று நம்மை நினைக்கச் செய்வது. இங்குதான் க.நா.சு. மௌனி உலகைக் காஃப்கா உலகுடன் ஒப்பிடுகையில், ஆங்கிலமொழி மரபில் கூறு வதென்றால், ஆணியைத் தலைமேல் கிளிப்தமாக அடிக்கின றார். காஃப்காவைப் பற்றி ஒரு விமர்சகன் சொன்னது ஞாபகம் வருகிறது. 

இந்த- மாதிரி- இருக்கிறது-ஆனால்- அதே-சமயம் இல்லை என்ற ஒரு கயிற்றரவு நிலை கனவு உலகைச் சார்ந்தது. அதாவது நமது தத்துவ பரிபாலஷயில் சுவப்னாவஸ்தை! இந்தக் கதையில் உருவாகும் சூழ்நிலையில் மரங்கள், கோவில்கள், பரந்தவெளி, இயற்கைக் காணிகள் இவைகளெல்லாம் நம் ஐதீகங்கள் மூலம் உருவான உள்வியாபகம் பெற்ற படிமங்கள். அவைகள் ஒரு வசீகரமான குரூரத்துடன் உருவாகின்றன. இருப்பதெல்லாம் இல்லாமையாகப் போவதற்குத்தான் என்று தெரிந்தாலும் இந்த இருந்தும்-இல்லாமல் போகும் ஒன்றின் மீது நம் பிடிப்புத்தான் எவ்வளவு அழுத்தமாக இருக்கிறது? ''எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?'' மௌனியைப் பற்றி எழுதுபவர்கள் எல்லாருமே அவர் பாத்திரங்கள் நாம் கண்டு கேட்டுத் தொட்டுப் பழகும் பாத்திரங்கள் மாதிரி இல்லாமல் இருந்தும் ஏன் நம்மைக் கவர்கிறார்கள் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கிறார்கள். தர்மு சிவராமு பாஷையில் சொல்வதென்றால் மௌனி ஒரு அக - உலகக் கலைஞர், என்றால் இவர்கள் (இந்தப் பாத்திரங்கள்) சப்த ரூபங்களாக அல்லாமல் பிரக்ஞை வெளியில் மிதந்து செல்லும் சாயைகளாகத் தோற்றமளிக்கிறார்கள். 'மௌனி'' கதை யில் உருவாகும் சூழ்நிலை- காலப் பரப்பு, பிரபஞ்ச வெளி-- நம்மை நம் கட்புலன் மூலம்தான் வந்து சேர்கின்றன. “கொஞ்ச தூரம்'' என்ற கதையில் வரும் ஓசைகள் கூட நிசப்தத்தைத்தான் எழுப்புகின்றன. இதுகூட வாழ்வின் தோற்றம் மறைவு என்ற மயக்க நிலையை உருவாக்க உதவு கிறது. ''குடும்பத்தேர்'' என்ற கதையில் சாவின் முன் உயிர் வாழ்தல் என்பது ஒரு விந்தையான அழகுடன் மிளிர்கிறது. 

செல்லப்பா சுட்டிக் காட்டிய மாதிரி மௌனி உலகில் அமானுஷ்ய அம்சங்களும் (Elements of fantasy) உண்டு அழியாச் சுடர், அத்துவான வெளி. ஆனால் இந்த அமானுஷ்ய அம்சங்கள் சில அடிப்படையான "தத்துவங் களை'' வெளிப்படுத்த என்பது வெளிப்படை. க.நா.சு. மௌனி கதைகளைப் பற்றிப் பேசுகையில் ஒன்று ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு மரபிலிருந்துதான் ஒரு கலைப்படைப்புக்கு ஒரு வேகமும் ஆழமும் வருகிறது. இதை அமெரிக்க இலக்கியத்தைப் பற்றி அறிந்தவர்கள் அறிவார்கள். அதே சமயத்தில் இது ஒரு குறுகிய அர்த்தத்தில் செயல்படுவது இல்லை. இலக்கியப் படைப்பு ஒரு பிரதேச எல்லையில்தான் அனுபவ வலிமை பெற்று ஒரு பிரம்மாண்டமான வீச்சை அடைகிறது. அதனால்தான் க.நா.சு. நமது இலக்கியமும் உலக இலக்கியத்தின் பாதிப்பைக் காண்பிக்க வேண்டு மென்பது இல்லாவிட்டாலும் மொழி-பிரதேச எல்லைகளைத் தாண்டி மனிதன் எங்கும் மனிதன் தான். நான் முன் குறிப் பிட்டபடி ஃப்ராய்டை மௌனி உலகுடன் இணைக்க முடியாது என்றில்லை - முடியும் என்றுதான்! இரண்டு - மூன்று விஷயங்கள் ஃப்ராய்டின் முக்கியத்துவத்தை ஆண்-பெண் உறவை அவன் மிகைப்படுத்துகிறான் என்பதுடன் அடக்கி விடுகிறார்கள். இந்த மாதிரி ஒரு அம்சம் அவன் எழுத்தில் பிரதானம் என்றாலும், அவன் முக்கியத்துவம் அவன் முதல் முதலாக நம் மனம் நமக்குத் தெரிந்தது என்ற நிலைபோய் நம் அடி - மனதின் ''ஆசாபாசங்கள்'' நம்மை நாம் அறியாமலேயே ஆட்டி வைக்கின்றன, என்பதொன்று. பின்னர் “காதல்'' விவகாரம்- நமக்கு உயிரின்மீது, வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்குகிறதென்றால் உயிருடன் சலிக்கும் நாம் ஜடமாக மாறும் நிலையையும் விரும்புகிறோம், என்ப தொன்று. 

அதைப்போலவே ஆண் ஆளப்பிறந்தவன் என்றால் பெண் சகிக்கப் பிறந்தவள் என்று மௌனி கதைகளில் இந்த அம்சங் கள் இருக்கின்றன--ஒரு அம்சமாக, அவை வழியில். இப்படிப் பேசுகையில் மேல்நாட்டுத் தத்துவ ஞானியான பிளேட்டோ வின் அடிப்படைக் கொள்கை ஞாபகம் வருகிறது. இப் பிரபஞ்சமே அப்பாலுக்கும் அப்பால் இருக்கும் ஒரு 'சக்தி'' யின் பிரதிபலிப்பு என்கிறான். மௌனியின் ''எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்பது இதை ஞாபகப்படுத்துகிறது. மேலும் பிளேட்டோ வகை சார்ந்த தத்துவவாதிகள் ரூபங்களுக்குப் பின் இந்தச் சக்தி சலிக்கிறது என்கையில், "மௌனி” கதையில் பாத்திரங்கள் தேடல் இதைத்தானோ என்று நம்மைச் சிந்திக்கச் செய்கிறது. எது எப்படியிருந்தாலும் நம் மரபுதான் நம் படைப்புகளுக்குப் பலம் தருகிறது. ' அத்துவானவெளியில் மேல் நாட்டு இலக்கியத்தில் ஒரு கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கருத்து வருகிறது. இதன் அடிப்படை ஒரே மனிதன் நன்மை-தீமை என்ற இரு மனம் தாங்கிய 'பிராணி'' என்றவாறு இது இந்தக் கதையில் நம் தத்துவப் பின்னணியில் உருவாகிறது. உடல் - உள்ளம் என்ற இருநிலையில் சிக்கித் தவிக்கும் இக்கதையில் வரும் பாத்திரம் கடைசியில் உடல் அழிய அவனும் அழிகிறான் என்று அமைகிறது. இங்கும் மரம் வருகிறது. இது நமக்குத தாமஸ் மன் என்ற ஜெர்மன் நாவலாசிரியர் தன் நாவல்களில் ஒரு சரடாக அமைத்த கருத்தொன்றை ஞாபகப்படுத்துகிறது. சமூகத்தின் பிரதிவாத ரூபமாக எழுந்த கலைஞன் அதே சமயம் அதன் நடுவில் ஒரு சாதாரண மனிதனாக முக்கியஸ்தனாக இயங்க விரும்புகிறான். மௌனி கதையில் உடல் - உள்ளத்தின் எல்லைகள் விரிந்து போகின்ற நிலையில் இதை யெல்லாம் நமக்கு ஞாபகமுறுத்துகிறது. இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தபிறகுதான் எனக்கு மௌனி கதைகள் தொகுப்பு இரண்டு கிடைத்தது. இதில் இருக்கும் கி.அ. சச்சிதானந்தத்தின் முகவுரையும் ஒரு மௌனி மாணவனுக்கு அவசியப் படிப்பாகும். அதிலிருந்து ஒரு மேற்கோளுடன் இப்பகுதியை முடிக்க விருப்புகிறேன்: ''(மௌனி படைப்புகளில்) இரு உலகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காலத்தால் படைக்கப் பட்டது. இவ்வுலகத்தில் தவிர்க்க முடியாத தேவை, மாயை, துயரம், மாறுதல், அழிவு, இறப்பு யாவும் மாற்ற முடியாத சட்டங்களாக இருக்கின்றன. மற்றோர் உலகமோ ஊழூழியால்-காலங்கடந்த நிரந்தரத்தால் படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே சுதந்திரம், அழகு, அமைதி கொலுவீற்றிருக்கின்றன. நம் சாதாரண அனுபவம் காலத்தால் படைக்கப்பட்ட அந்த முதல் உலகத்தில் நடைபெறுகிறது. ஆனால் அந்த இரண்டாம் உலகத்தின் காட்சி, தற்செயலான சுயமாய் எழும் நினைவாலும், ஆழ்ந்த தியான உணர்வாலும் தோன்றும்போதே மறையும். அந்தக் காலத் துளிகளில் கணங்களில் புனையா ஓவியம்போல் தெரிகிறது. மௌனி எனும் ஒரு கலைஞன் அந்தக் காலத் துளிகளின் மின்னொளியைப் பிடித்துக் காலத்துக்கு உட்பட்ட இவ்வுலக அனுபவத்தின் மேல் பாய்ச்சுகிறார்.” 

இனி மௌனி நடை ஒரு உள் - அமிழ்ந்த அவர் காட்டும் தோற்றம் - மறைவு என்ற உலகைப் பிடிப்பதற்கேற்ற நடை. இங்கு வாக்கிய - அமைப்பைக் கவளிக்கலாம். ''உறவு, பந்தம், பாசம்'' என்ற கதையின் முதல் பகுதி. இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும் அசதியிலும்கூட இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வை கொண்டபோது, மனது குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ணமுடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ளமுடியாது. தோன்றியதை ஜடமென அவன் வெகு நேரம் கண்டு நிற்கவில்லை. புறக் காட்சியில் மனது ஒருமையில் அனுபவம் கொள்ள அனுபவம் கொண்டு திகைப்பு நீங்கச் சிறிது நேரம் ஆகியது போலும். 

மேலே கொடுக்கப்பட்ட பகுதியில் நான் சில பகுதிகளை அடிக்கோடு இட்டிருக்கிறேன். ''இவன் மனது' குதூகலம் அடைந்தது என்று எழுதுவதில், மனது மாறலாயிற்று என்பதில் இவன் வேறு மனது வேறு என்ற நிலையைச் சுட்டிக் காட்டுவதற்கு என்று தோன்றுகிறது. பிறகு பெயர்ப்பலகை தன்னை வெறித்து, மனம் புறக்காட்சியில் ஒருமை கொள்வது. அதை மீட்டுக்கொண்டு வர அனுமானம்'' உதவி புரிகிறது - இதெல்லாம் சொல்லும் தகவலைவிட ''மனதை'' நம் தத்துவப் பார்வை மூலம் பார்ப்பது தான் போலும். பல கதைகளில் “அவன்'' "இவன்'' என்ற பதங்கள் உபயோகப்படுத்தப் படுவது இந்தத் “தன்'' என்பதிலிருந்து " மனதை'' வேறு படுத்துவதற்குத்தானோ? ''காதல் சாலையில் வரும் சம்பாஷணை கூட மனதின் குரைப்பாகத் தோன்றுகிறது கூடைக்காரியுடன் பேசுவது, நாய் குரைப்பது. இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் மௌனியின் நடைபற்றி அதைத் தக்கவர் செய்வதற்கு விட்டுவிட்டு நான் மாறி நிற்கிறேன்! 

'மேலும்', மே, 1990

No comments:

Post a Comment