தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, December 14, 2019

காகித வேதாளம் --- கண்ணன், T. ----------சதுரம் - 2- ஏப்ரல்,1995

காகித வேதாளம் ---கண்ணன், T. 
 ----------சதுரம் - 2- ஏப்ரல்,1995 
போர் நாட்கள் முப்பது என்று தீர்மானமாயிற்று. மந்திராலோசனை முடிந்தவுடன் நிமிடங்களோடு மண்டபத்தை விட்டு வெளியேறினான் மன்னன் விக்கிரமாதித்யன். மேகங்களூடே ஏற்பட்ட சிறு துளையின் வழியே சாதக பட்சி ஒன்று இருளை கிழித்துக்கொண்டு விசித்திர ஒலியொன்றை எழுப்பி மறைந்தது. மறையவும் எழுந்தது, அவன் விதியை தீர்மானித்த அவ்வாடை. தாழம்பூ என்ற சொல் அவன் மூளையுள் முளைத்தது. பிறகு அவன் மனம் பாம்பென்ற வார்த்தைக்கு தாவி, முடிவில் அந்தப்புரம் என்ற வார்த்தைக்கு வந்து சேரவும், சற்றே நிமிர்ந்த மன்னன் அந்தப்புர பெண்டிர் தொடர்ந்து 30 நாட்கள் சல்லாப மற்று போகப்போவதை எண்ணினான். யுத்த நாட்கள் முப்பதும் தொடர்ந்து மாத விலக்கு நாட்களானால் நல்லதுதானே ! பின் வரும் பத்து திங்களிலும் மாத விலக்கு பிரச்சனையின்றி சல்லாபிக்கலாமே என யோசித்து அதையே காளியிடம் வரமாக யாசித்தான். மனமகிழ்ந்த காளியும் அவ்வரத்தை அளித்து அதற்குத்தானே முதல் பலியுமானாள். ஈசனும் முப்புரம் எரிக்க பயணமானான். மூன்றாம் பிறை நிலா உலாவும் அவ்வராபிய இரவில் அந்தப்புர அடிமைகளும் வரத்தால் நொந்தனர். 
* * *
அனாலும் யுத்தம் நட்பு யுத்தமான படியாலே 26 நாட்களிலேயே முடிவடைந்தது. போரிலே மிஞ்சிய வீரர்கள் வெற்றியை பெண்களற்று கொண்டாடும் வேதனையில் துடித்தனர். காமம் பொங்கிய வீரர் பலருக்கும் இரு கை மணியிலும் போர் விளைவித்த தீராப் புண்கள் மற்ற இன்பத்தையும் மறுக்கவே மன்னரும் மற்ற வீரர்களும் பெரிதும் துயரமடைந்தார்கள். ஆண்-ஆண் உறவுக்கு தயாரான அவ்வீரர்கள் ' முகமதியர் வருகைக்கு பின்னே பாரதம் அவ்வித்தையை அறிந்தது' என்பதாக எழுதிய வரலாற்று ஆசிரியர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள். 

அகழ்வாராய்ச்சியாளர்களும் அவ்விதமே அபிப்பிராயப்பட்டது மேலும் துயரத்தை உண்டாக்கியது. மன்னரும் மிஞ்சிய வீரர்களும் விட்ட பெருமூச்சு எண்ணையும் முட்டவே பயந்த நிலா மகளும் முகிலிடை மறைந்தாள் எனப் பொருள் தரும் வடமொழி ஸ்லோகத்தோடுதான் இக்கதை தொடங்குகிறது. 
மனைவியும், சந்திர புரு மந்திர ஹாசனின் கனிஷ்ட குமாரியுமான பட்டத்தரசி வளவல்லி நாச்சியாரின் மாதவிலக்கு காரணமாக அந்தப்புரத்தில் நுழையவும் தயங்கிய சாளுக்கிய - மன்னன் விக்கிரமாதித்யன் ஜுனியர் (சீனியரும் அவன் தான் என்பார் ஒரு சாரார்) நாகர்களுடன் நடந்து முடிந்த நட்புப்போரினால் உஜ்ஜயினியின் பெரும் பகுதியையும் ஆட்கொண்ட இடு-சுடு-காட்டின் நடுப்பகுதியில் அமையப்பெற்ற கற்பக விருட்சத்தின் வேதாளத்தை தட்டி எழுப்பி கதை கேட்கலானான். அவ்வமயம் வீரர்களும் இறந்த ஆமைகளை நதியிலே வீசி எறிந்து கொண்டிருந்தார்கள் என்கின்ற அளவிலே சென்ற வாரம் கதையினை நகர்த்தி இருந்தோம். -கடந்த ஒரு வார காலத்தில் தன் வளர்ச்சியில் அதீத அக்கறை கொண்ட கதை எம்முடைய உதவியின்றி யாமறியாமல் வளர்ந்து யாம் அயர்ந்திருந்த வேளையில் தப்பித்து ஓடிவிட்டது. ஓடும்போதே, அதனை தேடி அலையும் உற்சாகத்தின் பெரும் பகுதியையும் புதிய கதைக்கான சிருஷ்டித் திறனையும் திருடிக்கொண்டு போய்விட்ட காரணத்தால், வாசகர்களே உங்கள் மறதியை மூலதனமாகக் காண்டு சொன்ன கதை ஒன்றையே மீண்டும் சொல்கிறோம். ஆனாலும் கதையை தேடிப்பிடித்து வர எம் உதவியாளர் குழு ஒன்று கிளம்பிவிட்டது என்பதை இந்த சமயத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். 
***************
- வியாழ முறங்கி வெள்ளி முளைத்த சமயங்களுள் ஒன்றில் சந்திரனும் ஆல்டபிரான் என்னும் பெரு நட்சத்திரமும் அருகருகே வானவெளியில் சஞ்சாரம் செய்த காலத்தே கனிமங்களை தேடி அலைந்த யதுக்களின் கரிய வீரன் ஸ்ரீகிருஷ்ணன் நீண்டதும் நெடியதுமான தனது பயணத்தின் ஒரு முடிவில் நாகர்களுடன் வென்று காட்டினுள் நுழைந்தான். பிறகும் தொடர்ந்த கொரில்லா போர்களால் தனது திட்டம் அவ்வப்போது தடைப்படவே பெரும் படை காண்ட மாயோன் கண்ணன் நாகர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை தீட்டினான். மாயோனின் குறட்டிலும், குடையிலும், படுக்கையிலும் பாம்புகள் முளைக்க முளைக்க இனி தமக்குள் ' போர் வேண்டாம்' என நாகர்களும் யாதவர்களும் ஒப்பந்தம் ஒன்றை தீட்டினார்கள். 
நாகர்கள் சார்பாக இளவரசி குபேர-நாகா கையொப்பமிட்டு ஸ்ரீகிருஷ்ணனை மணக்கவும் செய்தாள் என சித்திரபாகவத கிளைக்கதையொன்று கூறுவதை நாமறிவோம். நாக-யாதவ கன்னி குபேர-நாக கிருட்டிணி III மலைக் குப்த மஹராசா (விக்கியின் பாட்டன்) மணமுடித்தார். இவ்வாறாய் நாக-யாதவ-குப்த சமுதாயம் தோன்றியது சரித்திரம் அறிந்த ஆன்றோர் அனைவரும் அறிந்த செய்தி. இவ்வினம் பின் போரை முற்றிலும் மறந்தது. தொடர்ந்து
போர்களில்லாமையால் வீர மரண விதி கொண்ட நாக-யாதவ-குப்த வீராகளான எண்ணிக்கை காட்டினில் பெருகியது. ஸ்ரீகிருஷ்ணனைப் போல் தந்திர மரணத்தை அறியாத காரணத்தால் அவன் காலத்திய வீரர்கள் வயது முற்ற ஆமைகளானார்கள். ' ஆமைகள் மிகுந்த சமுதாயம் உருப்படாது என்ற வதந்திப் பழமொழி காடுகளில் ஒன்று முளைத்து வளரவும் ஆமைகள் அரசாங் கத்தால் காடு கடத்தப்பட்டன. துயரம் தோய்ந்த முகத்துடன் அவ்வாமைகள் நகரமேறி வித்தை காட்டி வயிறு வளர்த்தன பாவம்! 
மிஞ்சிய இளம் வயோதிகர்கள் ஆமை தலையுடனும் மனித உடம்புடனும் மன்னன் ஸா-நா-காவை அடிக்கடி அணுகி வீர மரணத்திற்காய் இமசித்துக் கொண்டிருந்தார்கள். 
***************
விக்கிரமாதித்யனின் வற்புறுத்தலால் வேதாளம் கதையினை சொல்லி முடித்தது. பிறகு அனந்த கோடி ஆண்டுகளாய் தொடர்ந்து வரும் நிபந்தனையோடு கேள்வியை கேட்டது. கேள்வியானது காதிலே மிருதுவாய் நுழைந்த சமயம் மன்னன் தலையில் இடி ஒன்று இறங்கியது. அவனது பதில் தாய்-மகன் உடலுறவு பற்றியதான விளக்கமாக இருக்க வேண்டும் என கேளா நின்றது கேள்வி. விடை தெரிந்தும் பேதலித்தான். தானா ? தனது அரசா ? வாழப் போவது யார் என யோசிக்க . . விடைக்கான நேரம் முடியவும் (வானிலே தூமகேது ஒன்று தோன்றி வானவில்லை முழுங்கி மறைந்தது; எறும்புகளும், பாம்புகளும் நாட்டை விட்டு ஓடத்துவங்கின; ஆதி குடிகளின் வனங்களில் வர்ண மயமான ஸர்ப்ப மழை வளைந்து வளைந்து பொழியலாயிற்று; ஓலைச்சுவடிகள் எரியலாயிற்று, அந்தப்புரத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் விசில் மழை பிறக்க . . ) 
வேதாளத்தின் வஞ்சக எண்ணத்தை உணர்ந்த தறுவாயில் தன்னுயிர் ஈந்து அரசின் சிரஸை காத்த விக்கியின் தலை வெடித்து சிதறியது. சிதறிய சதைகளின் மேல் மருத மர நிழல்கள் முளைத்தன. தொடர்ந்து அவை பல வருடங்கள் வாழவும் செய்தன. மூலமின்றி காணப்படும் நிழல்களால் இன்றும் அரசிற்கு சுற்றுலா வருமானம் வந்த வண்ணம் இருக்கிறது. புதியதாய் அடுக்கு மாடிக் கட்டடங்களுக்காக நிழல்கள் அழிக்கப்பட்டபோது, விக்கிரமாதித்யன் முழு உருவத்தை மீட்டது இக்கதையின் அந்திம காலத்தில் படிக்க கிடைக்கிறது. விதிப்படி மரிக்காத காரணத்தால், விக்ரமாதித்யன் தானும் ஒரு வேதாளமானான். ஆனவன் வேதாளத்தின் நெஞ்சிலே வாளைப் பாய்ச்ச மரணித்த வேதாளம் சாபம் விலக நதியாய் மாறியது. பிறகு அந்நதி பேசலானது. " விக்கி மாமன்னா , என்னை இறப்பித்து என் சாபத்தை நீக்கியதற்கு நன்றி. இக்கதையுலகிலே என்னை நீரன்றி யார் சுமந்தார் என ஆபோகியில் வருந்திய நதி ' 'மேலும் நான் தோதாய் தொங்க | இந்திரனிடமிருந்து அறிவால் கவர்ந்த கற்பகத்தருவையே எமக்கு அளிக்கீர். - உம்மை கொல்ல எனக்கெப்படி மனம் வரும். உம்மிடம் அம் பாணக் கேள்வியை கேட்டது நானல்ல என் குரலில் பட்டி எனக்கூறிவிட்டு தன் போக்கில் நகர்ந்தது. தன் மிமிக்ரி திறமையால் தன்னைக் கொன்ற பட்டியைக் கொல்ல கதையைத் தவிர வேறு ஆயுதம் கிடையாது என அறிந்து தேறியது விக்கி. பிறகு தானே கதை சொல்லியாயிற்று. 
மன்னன் இறந்த துயரத்தால் கோகிலங்கள் ஒரு வார காலத்திற்கு சிறையில் தள்ளப்பட, சாரங்கிகள் ஒரு வார சுதந்திரத்தை அனுபவித்தனர். பட்டி. அரியணை ஏறி அந்தப்புரத்தைக் கைப்பற்றி தனது மனைவிகளை மீட்டார். விக்கியின் வஞ்சக எண்ணத்தை ஒற்றர்கள் மூலம் அறிந்த பட்டி மாமன்னன் சாலிவாஹனனால் தனக்கு ஏற்படபோகும் மரணத்தின் தடைகளை உடைக்கும் நிமித்தம், இனி யாரும் ராஜ்ஜியத்தில் கதை கேட்கக்கூடாது என பிரபுக்கள் சூழ்ந்த கனக சபையிலே ஆணை பிறப்பித்தான் என்கிற அளவிலே 11 காண்டம் முடிவடை கிறது. 

காண்டம் III 
ஆனாலும் சுடு-இடு-காட்டுப் பகுதிகளில் கதை கேட்ட மரணங்கள் துளிர்ப்பதை கேள்வியுற்ற மன்னன் பெரிதும் கவலையுற்றான். காலைக்கடன்களுக்கான புதிய இடம் கேட்டு மக்கள் ஒரு ஊர்வலம் வந்தனர். மரணத்தின் நிழல் என்று தம் கதவை தட்டுமோ என பிரபுக்கள் அஞ்சினர். முடிவில் பட்டி காளியிடம் சரணடைந்தார். பட்டியின் பணிவிடையில் மனமகிழ்ந்த காளி-ஒரிஜினல் பழைய எஜமானனுக்கு எதிராக சாய்ந்தாள். இன்றும் அக்கோயில் வடதிசை நோக்கி சாய்ந்தே காணப்படுகிறது. அதனை நிமிர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்த பல ஆன்மீகக் குழுக்கள் 16-ம் நூற்றாண்டின் இறுதியில் முயற்சியை முற்றிலும் துறந்தன. காளிகோயில் சற்றே நிமிர்ந்ததென வதந்தி ஒன்று இக் கதையின் முடிவில் பரவவும் தொடங்கியது. ' கதை கொலைக்கருவியாவதை விரும்பாத காளியானவள் விருப்பப்படாதவர்களை கட்டாயப்படுத்தி கதை கேட்க வைத்தால், பல யுகங்களுக்கு தொங்க வேண்டி வரும்' என விக்கியை நோக்கி சாபமிட்டாள். இவ்வாறாக நகர்ந்தது காலம். தொடர்ந்து ஆவியாக உலவுவதால் போரடித்த வேதாளம் தன் ஆயுதத்தை காளி பிடுங்கி விட்டதற்காய் ஆத்திரமுற்றார். தனக்கு சிரஞ்சீவி வரமருளின காளியின் வரமே தனது மரணத்தின் நீட்டிப்பிற்கு காரணமானதை கண்டு குழப்பமான கோபம் கொண்டார் விக்கி. 
கொண்டதால் சுடு-இடு-காட்டிற்கு சிரம பரிகாரம் செய்யவரும் ஆடவர்களை அணுகி கதை கேட்க கெஞ்சலாயிற்று. மசியாத மாந்தர் மன்னனின் ஆணைக்கு உட்பட்டவர்கள். ஒரு சுக்ல பட்ச அமாவாசை முன் பகலில் தன் வாழ்வின் கடைசி சீனனை ஆரண்யத்தில் வழி மறித்தது வேதாளம். பிரதேசமறியாத சீனன் வேதாளத்திடம் அகப்பட்டுக் கொண்டான். அவ்வமயம் விக்கியின் தலையில் சந்தேகக்கிளை ஒன்று முளைத்து விண்ணை முட்டலாயிற்று. " இது நாள் வரை தன் நாக்கில் வட மொழி தோல் போர்த்திக் கொண்டிருந்த கதை புதிய மொழியை ஏற்றுக்கொள்ளுமா" ஆய மொழிகள் 8X8-ம் அறிந்த விக்கிக்கு சீனமொழி புதியதல்ல. ஆனாலும் கதைக்கு புதியதானபடியாலே சற்றே குழம்பியது வேதாளம். நிகழ்ந்தது அற்புதம். 

பரத கண்டத்தின் முதல் சீன கதை அதன் நாக்கிலே முளைத்து யாத்ரீகனின் காதிலே புகும் வேளையிலே ஓட முயன்றார் யாத்ரீகர். சாபம் மறந்த விக்கி காட்டுக் கொடிகளால் மருத மர நிழலொன்றில் சீனரைக் கட்டிப் போட்டது. பின் விளைந்த கேள்வியால் யாத்ரீகர் மட்டும் மரிக்கவே விக்கியின் மரணம் உயோஜனை மேலும் வளர்ந்து காலத்துள் ஒளிந்து கொண்டது. மருத மர நிழல்கள் மேலும் வளர்ந்து புஷ்டியாகின. இரண்டு வரிகளுக்கு முன்னே நிகழ்ந்த அற்புதம் யாத்ரீகரின் விருப்பமின்மையால் தனது மரண காலத்தை வளர்த்தது கண்டு துயரமுற்ற விக்கி, அற்புதமும் சாபமும் இரட்டைக் குழந்தைகள் என அறிந்து விண்ணை நோக்கி தன் கண்ணீரை செலுத்தியது. 
------------------------------------------------------------------------------------------------------------------------
ஸா-நா-கா வின் பாட்டனார் குமார நாக மகராசா ஒரு மதியப் பொழுதில் ராட்சத வல்லூறாக மாறிய பின்னரே மன்னர் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தார். பின் அவர் மன்னன் விக்கிரமாதித்யரை அணுக நட்புப்போர் ஒன்றை வேண்டவும் செய்தார் - 16-ம் ஸ்லோகம், நாக ஸுக்தம், அம்சநாகா ஜுப்ளி வெளியீடு. கும்பகோணம்.

தாமதமாய் நுழையும் வரிகள் : 
விக்கியின் நிலை கண்டு துயருற்ற காளியானவள் தன்னுடைய மிமிக்ரி ஞானத்தால் அவ்வனத்தில் அசரிரீ ஒன்றை ஏவினாள் ' உன் கதையாலேதான் உன் மரணத்திற்கு மரணம் '' எனக் கூறி வாதா மரம் ஒன்றில் மறைந்தது அசரிரீ. மரணக்கவலையால் உருண்டோடிய காலங்களில் பட்டியை பழிவாங்கும் எண்ணத்திற்கு பதிலாக தாடி வளர்க்க தொடங்கியது விக்கி. 
காவிய காலம் முடிந்த பின்னாலே விதிப்படி பட்டியும் மாண்டார். சாலிவாஹன சகாப்தம் முடிவுற்ற தறுவாயில் சகோதர வேதாளங்கள் பெரு நதி ஒன்றில் மூழ்கி மறைந்தனர். ஆகாயங்களில் புதிய மேகங்கள் முளைத்த போது உதித்த இள வேதாளங்கள், பெரிசு விக்கியை மதித்தார்கள் இல்லை. கதை கேளா மாந்தர்களும் பெருக சோர்ந்த விக்கி தனது மரணத்தின் மரணத்தை தேடி காலத்தோடு ஸ்நேகித்து வாழலாயிற்று. காலமும் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்படியில் விக்கியை கழட்டி விட்டது. வேதாளம் நதிகளால் சூழப்பட்ட நகரமொன்றை அடைந்தது. வான வழியினாலன்றி வேறு வழிகளில் ஊரின் மையத்தை அடைய முயன்று தோற்றதில் பல பாண்டிய மன்னர்களும் அடங்குவர். ஊரின் வடிவத்தை ஒத்திருந்தன அவ் வூரின் திண்ணைகள். பார்வைக்கு தெளிவாய் தெரிந்தாலும் அயலார் அவ்வளவு சுலபத்தில் அமர முடியாதபடி போனதற்கு காரணம் கண்டிப்பாய் திண்ணைகளல்ல. ஆனால் இதெல்லாம் பழைய கதை என்றும் ஊராரில் ஒரு சாரார் கூறுவர். ஒடும் பிரதான நதியின் திருமங்கை மன்னன் படித்துறை வைதீக சுடுகாட்டுப் புளிய மரமொன்றில் ஜாகை பார்த்து குடியேறினார் விக்கி. அங்கே வந்து போகும் மனிதர்கள் அனைவரும் காதுகளற்றே இருந்தார்கள். (இறந்த பின் முளைக்கும் காதுகள் அவர்களுக்கு) சப்தங்களை தமது தேவைகளுக்காக அதிகரித்து கொண்டே போன அரசாங்கம் முடிவில் காதுகளை அறுத்துக்கொண்டு போய்விட்டதாக வழிப்போக்கன் மூலம் கேள்வியுற்ற விக்கி தனது சாபத்தை எண்ணி கலங்கா நின்றது. புதியதாய் பிறந்த குழந்தைகள் காதுகள் அற்றே பிறக்கிறார்கள் என்றும் யானைகளின் காதுகள் கூட அவ்வூர் கோவில் இறைவனுக்கு விசிறிகளாக பயன்பட்டுக்கொண்டு வருவதாகவும் வழிப்போக்கன் மேலுமுரைத்தான். 
இசையையும் கண்ணால் கண்டு களிப்புறும் பழக்கமுடைய புதிய உலகில் திண்ணைகள் தம் மாயத்தன்மையை இழந்து விட்டிருந்தன. ஆனாலும் வேதாளத்தின் இம்சையினால் அவ்வூர் மக்கள் தங்கள் வீடுகளிலேயே கழிவறைகளை கட்டிக்கொள்ள ஆரம்பித்தார்கள். வேதாளத்தின் வரவால் அவ்வூர் பெண்டிர் தம் துயரமொன்று அறுந்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் கதை ஆர்வலர்களாக இருந்த அவ்வூர் மனிதர்களிடம் பழக்கத்தில் இருந்த கதைகள் அனைத்தும் எழுதப்பட்ட கதைகளே. அவ்வாறான கதைகள் அறியாத காரணத்தால் புதிய கதையின் சூட்சுமங்களை அறிய பழக ஆரம்பித்து, ஓராண்டு கால உழைப்பிற்கு பிறகு நன்கு தேறிய வேதாளம் அபிநயத்தோடு கதை சொல்ல நல்ல முறையில் கற்றுக்கொண்டது. 
இவ்வாறான நாளொன்றில் வேதாள விபரமறியாத தமிழ் கதாசிரியனொருவன் (இனி தமிழ்-க) மலம் கழிக்க சுடுகாட்டினை அடைந்தான். அதே சமயம் காதுகள் வாய்க்கப்பெற்ற மனிதனொருவனை வேதாளமும் கண்டது. அவன் காதில் எப்படியும் கதையை நுழைத்து விடலாம் என எண்ணியபடி வேதாளம் வழக்கம் போல் கிழ உருவெடுத்து தமிழ் க-வை சந்திக்க ஆயத்தமானது. கிழ நிழல் ஒன்று மயானத்தில் தன்னை நோக்கி ஊர்வதை கண்ட தமிழ்-க தெளிவான விண்ணை நோக்கி அமர்ந்தவன் எழுந்தான். 

நிழலுடன் தமிழ்-க 

தன் 12 கதைகளை செவ்வனே எழுதி முடித்த தமிழ்-க தமது 13வது கதையினை கொழுகொழுவென வளர்த்து உரிய சஞ்சிகைக்கு கொடுக்க வேண்டு மென்று விரும்பினான். கதைக்கு போஷாக்கு ஏற்ற வேண்டி ஊரிலிருந்து தீர்த்த யாத்திரை கிளம்பி பல ஊர்களுக்கு இறங்கி ஏறிய பின்னாலும் நோஞ்சானாக முனகிக் கொண்டிருந்தது அவன் கதை. 
சென்ற அத்தியாயத்தின் இறுதி வரிகளில் கிழ நிழலாய் ஆன வேதாளம் தமிழ் க-வை அணுகியது. ஊடுருவும் நிழலால் பயந்த தமிழ்-க பீடியை தவறவும் விட்டான். நிழலும் '' தம்பி பயப்படத் தேவையில்லை '' எனக் கூறியபடி கீழே விழுந்த பீடியை எடுத்துக் கொடுத்தது. மணலில் அணைந்த பீடியை விரல் சொடுக்கால் பிறந்த அக்னியில் பற்ற வைத்தது. பின் தன் நட்புமுகத்தைக் காட்ட வேண்டி பீடி ஒன்றை யாசித்து பற்ற வைத்துக்கொண்டது. * நிழல் விட்ட புகை அவர்களையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த வான சிங்கத்தையும் அதனருகே சஞ்சரித்துக் கொண்டிருந்த அதன் பிரஜைகளையும் காட்டாறாய் மாற்றியது. நிழல் பேசலாயிற்று. 

''ஓடிப்போன கதையை தேடியலையும் இளைஞனே, உண்மையில் நான் நிழலல்ல. உனது வரலாற்று பாடங்களிலும், கிழவிகளின் நாக்குகளிலும் உள்ள விக்கிரமாதித்யன் தானே. நான் என் அரசமைப்பாலும், மந்திரியாலும், காளி ஒன்றாலும் வஞ்சிக்கப்பட்டேன். நான் எனது வேதாள உருவிலிருந்து விடுபட வேண்டுமெனில் அதற்கு கதையைத்தவிர வேறு உபாயமில்லை என காளியால் வர-சாபம் பெற்றுள்ளேன்'' என தன் வரலாறை சுருக்கமாகக் கூறி தஸ்தா வேஜுகளை தமிழ்-க விடம் காட்டியது. 

"இசையையும் கண்ணால் கண்டு களிப்புறும் இக்காலத்திலே காதுகள் வாய்க்கப் பெற்ற உன்னை கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உனது நோக்கத்தையும் நான் படித்த கதை ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். கதை எங்கும் பரந்து கிடக்கிறது. இந்நதி அறிந்த கதைகளை நாமறிவோமா? இச்சுடுகாடு தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் கதைகள் அநேகம். நீ எழுதாத உன் கதையினை நானறிவேன். தேடத்தேட பிறக்கும் கதைகள். ஏன் இம்மல்லிகை மரமும் கதைகள் பல அறியும் '' எனக்கூறி மயங்கி விழுந்து மல்லிகை மரத்துள் கூடு பாய்ந்தது. மல்லிகை மரமும் ஆமாம் எனக் கூறியபடி அசைந்தது. வேதாளத்திடம் நம்பிக்கை கொண்ட தமிழ்-க நிழலுக்கு மூர்ச்சை தெளிவித்தான். மூர்ச்சை தெளிந்த வேதாளம் ' இளைஞரே, தெரிந்தோ, தெரியாமலோ கதைகளின் புதிர் வழிகளில் சிக்கிக் கொண்டு விட்டோம். புதிர் வழிகளில் நாம் சந்திக்கும் இவ்விடமே கதைக்கான உருவம். போகட்டும் நீர் மட்டும் நான் கூறும் கதையினை கேட்டு என் கேள்விக்கு உரிய பதிலை அளித்து என் வேதாள வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடுவீரேயானால் நீர் கேட்கும் பரிசிலை நான் உமக்களிப்பேன் '' என்று கூறியது. தமிழ்-க-வும் சம்மதிக்கவே இருவரும் சுடு காட்டில், விராட்டிகளின் மணம் சூழ்ந்த ஊதுமண்டபத்தில் அமரலானார்கள். 
$$$$$$$
நிழலொன்று தன் நிஜத்தை தேடி கண்ணாடியுள் இறங்கி, நிஜத்தையும் தொலைத்து கண்ணாடியிலும் சிறைப்பட்ட கதையினை கூறுகிறேன். விரகதாபத்தால் வெண்ணிலவின் மீது எரியம்பு எய்த வீரன் (அம்பு நிலவை முட்டவும் அவன் ஆயுள் முடிந்ததும் இக்கதையில் தான்) கதையும் இதுவேதான். 
நீராலும் நீலத்தாலும் சூழப்பட்ட கதையுலகிலே போதிசத்வர் காசியை தலை நகராக கொண்டு ஆட்சி செய்த காலமொன்றில் மத்தர தேசத்தை முதல் மூக்குக் கண்ணாடியை அணிந்தவனான மதிவாணன் என்பவன் ஆண்டான். அவன் காலத்தே ஒலைச்சுவடிகள் கல்வி நிலையங்களில் மிகுந்திருந்தன. சுவடிகளை ஒழுங்குபடுத்த வேண்டி தன் ஆட்சியை அர்ப்பணித்தவன்தான் மன்னன் மதி வாணன். ஓலைச்சுவடிகளில் இலக்கிய தரமற்ற குப்பைகள் மிகுந்திருப்பதாய் எண்ணிய மதிவாணன் வரும் சந்ததியர்க்கு உதவும் வண்ணம் ராஜாங்கத்தில்  அனுமதி பெற்ற பிறகே புதிய கவிதைகள் படைக்கப்பட வேண்டும் !  என அணை பிறப்பித்தது தாச மண்டூர் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கிறது எனக்கூறி தும்மியது. ' தும்மியதில் விழுந்தது கல்வெட்டின் வேதாளம் ஜெராக்ஸ் காப்பியை படிக்கும்போது தமிழ்-க-வும் ரின் சோப்பின் வாசனையை முகரவும் செய்தான் (கல்வெட்டின் ஜெராக்ஸ் காப்பி வேண்டுவோர் நேரில் அணுகவும்.) 

கல்வெட்டுகள் சொன்ன கதை : 
அவ்வமயம் ஜாதவேதா என்னும் இளங்கவி ஒருவன் அரசனின் அத்தாணி மண்டபத்தில் கவிதை வாசித்தான். அவனது கவிதையில் திருப்தியுறாத பெரும் புலவர்கள் சூழ்ந்த அச்சபை ஜாதவேதாவிற்கு எழுத்தாணியை தர மறுத்தது. மேலும் தண்டனையாக, அவனது அறிவை விருத்தி செய்யவும், ஓலைச்சுவடி சேகரிப்பு நிலையத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டான். எழுத்தாணி மறுக்கப்பட்ட பலரும் அங்கேயே உத்தியோகத்திலிருந்தார்கள். எழுத்தாணி பெற்றவர்கள் அத்தாணி மண்டபத்தில் தலைமைப் புலவர்கள். அவர்களிடம் அனுமதி மறுக்கப்பட்ட கவிஞர்கள் (இனி அமக) தன் அன்றாட தேவைகளை எண்ணியும், அளவு கடந்து தேங்கிய சிருஷ்டித் தீயை வெளியேற்றவும் தம் கவிதைகளை விற்றார்கள். பெரும் புலவர்கள் கவிதைகளால் நிறைந்திருந்தது ஓலைச்சுவடி சேகரிப்பு நிலையம். காலப்போக்கில் ஆன்றோர் மட்டுமே நிறைந்திருந்த அத்தாணி மண்டபத்தில் காகங்கள் நுழைந்தன. அமக நாட்டிலே பெருகினர். வருங்கால சந்ததிகளாவது அறியட்டும் என எண்ணிய அமக கவிதைகளை படைத்து பூமியில் புதைத்தனர். புதைக்கப்பட்டவை செடிகளாய் முளைக்க கட்டை விரல்களை இழந்த அமக அநேகர். ஆன்றோர்களின் பெயர்களில் அத்தாணி மண்டபங்கள் முளைத்தன. இவ்வாறாய் மறுக்கப்பட்ட கவிஞர்களின் மண்டைகளில் தேங்க தொடங்கியது சிருஷ்டித் தீ. ஒரு இரவில் பெய்த பெருமழையில் அமக மண்டைகள் நனைய தலையில் செடிகள் முளைக்க ஆரம்பித்தன. தலையில் முளைத்த செடிகள் சிறிதும் நறு மணம் அற்றவை என்றும், அவை ராஜ பிளவைக்கு மிகச் சிறந்த ஒளடதம் என்றும் ராஜ்யத்தை தாண்டியும் வதந்தி ஒன்று பரவியது, கதைக்கு முற்றிலும் பொருந்தாதச் செய்திதான். அமக அயர்ந்துறங்கிய வேளைகளில் ஆடுகளால் மேயப்பட்டன அந்தச் செடிகள். ஆடுகளின் புளுக்கைகளில் பொதிந்திருந்தன எழுத்துக்கள். ' மே ' அழியப்பெற்ற ஆடுகள் கவிதையின் போதையால் அமக தலைகளை தேடி அலைந்தன. முடிவில் ஆடுகளால் அங்கீகரிக்கப்பட்டார்கள் கவிஞர்கள். 
ஒரு பனி இரவில் எதேச்சையாய் அத்தாணி மண்டபத்துள் செடியுண்ட ஆடொன்று நுழையவும் பிறந்த கவிதையின் விந்தையை ஒத்துக்கொண்ட ஆன்றோர் அதன் கழுத்திலே எழுத்தாணி ஒன்றை தொங்கவிட தூக்கத்தில் நடப்பதை இழந்தது ஆடு. அதே சமயம் செய்தி நகருள் பரவ செடித்தலையர் பலரும் அத்தாணி மண்டபத்திற்கு விரைந்து வந்து சேர்ந்தனர். கவிதையின் சொந்தக்காரர்கள் தாங்களே என தமக்குள் மோதிக்கொள்ள ஆட்டிடையன் எழுத்தாணியை ஏலத்தில் விட முயல, தடுத்தனர். ஆன்றோர். உங்கள் செடியை விடவும் ஆட்டின் நாக்கிற்கு பெரும் பங்கு உண்டு என ஆன்றோர் தீர்ப்பளித்தனர். பின்னாளிலேயே கவிஞர்கள் சொந்தமாக ஆடுகள் வளர்க்கத்தொடங்கினார்கள். ஆட்டு வளர்ப்பிலே தீவிரமாக ஈடுபட்டவர்களின் தலைகளிலிருந்து செடிகள் மறையத் தொடங்கின. ஆட்டு வளர்ப்பிலே ஈடுபாடு அற்றவர்கள் செடிகளை காக்கும் பொருட்டும், வாழ்வின் தேவைகளை நினைத்தும் வைத்தியர்களானார்கள். மிஞ்சிய செடித் தலைவர்கள் அத்தாணி மண்டபங்களில் ஆடுகள் சகிதம் நுழைந்து கவிதை வளர்த்தார்கள். தேர்ந்த ஆடுகளின் சொந்தக்காரர்களுக்கு ராஜ முண்டாசு, அளிக்கப்பட்டது இவ்விதம் தோன்றிய கவிஞர்களின் பரம்பரை ஆறு தலை முறைக்கு பிறகு விவசாயத்தில் நுழைந்து பருத்தி வளர்ப்பிலே ஈடுபட்டார்கள். தன் அந்திம காலங்களில் இவை.. செடிகள் மட்டுமே மிஞ்சுவதைக்கண்டு கலங்கினர் கவிஞர். காலப்போக்கில் இலைகளற்ற செடியை உண்டதில் ஆடுகள் அத்தாணி மண்டபத்தையும் அரசாங்கத்தையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கின. செடித்தலையர்கள் (அ) முண்டாசு கவிஞர்கள் ஆடுகளின் திடீர் மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்தனர். விமர்சித்த கவிதைகள் இலக்கிய தரமற்றவை என முத்திரை குத்தப்பட்டன. அரசாங்கம் முண்டாசுகளையும், ஆணிகளையும் பறித்துக்கொண்டது. 
மக்கள் மத்தியில் ஆடுகள் புழங்கியதால் பரவின கவிதைகள். இளவரசி மதி மதணி பிறந்த நாள் விழாவிற்கான பெரு விருந்தில் அவ்வாடுகள் மடப்பள்ளியில் இறையாகின. உண்டவர் கவிதைகளில் அரசாங்கம் அதிர்ந்தது. ராஜகுருவின் உதவியோடு செடித் தலையர்கள் மீது கொடிய வியாதி ஒன்றை ஏவி விட்டான் அரசன். செடிகளில் பூச்சிகள் புக, கருகத் தொடங்கின செடிகள். பாக்டம்பாஸ் அறிமுகமாகாத காலத்தால் நாளடைவில் முற்றிலும் அழிந்தன செடிகள். ராஜ பிளவை மீண்டும் மரணத்தின் நண்பனாயிற்று. செடிகள் மறைந்த தலைகளில் ராஜ பிளவை முளைத்தது. 
ராஜகுருவின் உதவியால் இரவில் முளைத்த பூதத்தின் வரவால் கவிஞர்கள் பயந்து திருமணம் செய்துகொண்டார்கள். செடிகள் மறையப் பெற்ற மொட்டை தலைகளுடன் அவர்கள் தந்தைகளாக பிறந்த குழவிகள் முடிகள் அற்று பிறந்தார்கள். பெண்கள் குழந்தைகளுக்கு உச்சந்தலையில் தடிமனான ஒற்றை முடி மட்டுமே உதித்தது. அம்முடிகள் மடங்காத் தன்மையுடையது என எழுதிய கவிஞர் ஒருவரின் கவிதை அத்தாணி மண்டபத்தில் அங்கீகரிக்கப் பட்ட து. 
தந்தையானாலும் உயர்ந்த பரிசில்களை பெற்று வாழ்ந்த புலவர்களின் வாழ்க்கை தரத்தினால் சோர்ந்து போனான் ஜாதகா. அரசாங்கத்தின் சட்ட எல்லைகளுக்குள் வாழ்வை கழிப்பதில் சுவாரஸ்யம் இழந்து விட்டதாய் ஒரு சாக்கை சிருஷ்டித்துக்கொண்டு, பெரும் கள் - குடியனாக மாறினான். கள் குடியர்கள் நாட்டில் பெருகலானார்கள். போதையில் இழந்து போன உலகினை கனவு காணலானான் ஜாதகா. 
மூதாதையர்களின் தொட்டில்களின் ஓட்டைகள் பெரிதாகின. ஜாதகாவின் கறைகள் மேலும் அதிகரிக்க குடுவையில் அடைக்கப்பட்டு என்றோ முடக்கப்பட்ட தனக்கு சொந்தமான பூதமொன்றை அவன் கனவின் துணை கொண்டு விடுவித்தான். ஆன்மாக்கள் நிரம்பிய பிருந்தாவனங்களில் பிளாஸ்டிக் கோகிலங்கள் கூவின. அங்கே அவன் மந்திர குளிகைகளையும் அதிசய ஜமக்காளத்தையும் தேடி அலைந்தான். சுதந்திரம் அருகிப் போன அவ்வனங்களில் கார்ட்டூன் ஆன்மாக்களே நிரம்பியிருந்தன. தனது கவிதைகளின் மூலம் கார்ட்டூன்களை ரஸவாதம் செய்ய முற்பட்ட ஆரம்ப தருணங்களில் அவன் கைது செய்யப் பட்டு நிலவறையில் அடைக்கப்பட்டான். நிலவறையில் உடல் வெளிறிப் போய் அரை குறை உயிரோடு பாதி கார்ட்டூனாகவும் மிச்ச மீதி உடலோடும் உலவிக்கொண்டிருந்தன மூதாதையர்களின் அற்புதங்கள். நாட்டிலோ ஆன்றோர்களின் கவிதைகள் மிஞ்சிய அற்புதங்களையும் கார்டூன்களாக மாற்றி பிரதி, தங்கள் அலங்காரங்களை கஜானாவில் இருந்து எடுத்துக் கொண்டார்கள். 
ஜாதகாவின் கோடைக்கால இரவுக் கனவொன்றில் யாரோ ஒருவனால் அவன் கவிதைகள் மீது சிறுநீர் பெய்யப்பட்டது. திடுக்கிட்டு எழுந்த அவன் படுக்கை நனைந்திருப்பதை அறிந்து கேவி அழ ஆரம்பித்தான். அழும் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள் முறையே 1/4, 1/2, 3/4 திருடர்கள், பின் அவர்களுக்குள் நட்புப் பூ ஒன்று சிறையில் மலர்ந்தது. நாடு நிலத்தை விடுவித்து நீலத்தை பயிர் செய்ய தொடங்கியது. நீலத்தை அழிக்கும் முகமாக அவன் தன் கண்களை அறுத்துக்கொள்ள முயற்சித்த வேலையில் சிந்திய ரத்தம் நீல நிறமாக மாற, அவ்வேளையில் மேகங்களிடமிருந்து வெளியேறிய மதி அவனுடைய முயற்சியை அழித்தாள். 
ஓலைச்சுவடிகளிடையே பெரும் காவியமொன்று கண்டு பிடிக்கப்பட்டது. உடனே எழுந்த மதிவாணனின், பிறந்த தினத்தன்று ஜாதகா விடுதலை செய்யப்பட்டான். அரசாங்கத்தின் அதிகாரங்களுள் நுழைந்து பெரும் செல்வம் ஈட்ட எண்ணிய நாட்களுள் ஒன்றில் அரண்மனை அந்தப்புரத்தில் நுழைந்து வைரமாலை ஒன்றை களவாடினான். இளவரசியின் அலறலில் காவலாளிகள் துரத்த வெகு நேரம் ஓடிய பின் 18-ம் நூற்றாண்டில் தொலைந்து போன நதி ஒன்றில் குதித்தான். நதியின் போக்கில் அடித்துச் செல்லப்பட்ட அவன் பங்குகளாலும் பங்குதரகர்களாலும் சூழப்பட்ட ஒரு காலத்தில் அதன் நகரமொன்றில் அகழ்வாராய்ச்சியாளர்களின் உதவியால் எழுந்தான். எழுந்த ஜாதகாவை சினிமா ஒன்று துரத்திக் கொண்டிருந்தது. அதன் இயக்குநர் ஃபிரெஞ்சு மொழியின் தேசத்தை சேர்ந்த கோதார். அவன் அந்த சினிமாவை முன்பே அறிந்திருந்தான். மத்திய தட்டு வாழ்க்கையின் அன்றாட தேவைகளால் அவதியுறும் அவனின் அலுவலகமானது மேலதிகாரிகள் மட்டுமே கையூட்டு பெறும் வாய்ப்பை உடையது. நிறங்களால் சூழப்பட்ட இரவுகளை சொந்தமாக்கிக் கொண்ட ஜாதகாவின் மண்டையில் கேசம் காணப்பட்டது. அவனுடைய முயல் முகம் புதிய காலத்தில் குதிரை முகமாக இருந்தது. அவனுடைய பெயரும் புதியதாக இருந்தது (ஜாதகாவின் நிழல் மருவி/ஜாநி) அவனுடைய துணைவியாரும் மங்களம் அம்மையார் ஆவார். ஜாநி முதல் ஊழியம் பெற்ற தினமே மதுக்கடைகள் திறக்கப்பட்ட தினம். வசீகரமற்றது என அவன் எண்ணும் படியான குழந்தை பருவத்தின் நினைவுகளை பழி வாங்கும் நிமித்தம் அவன் பியர் குடித்தான். ஆனால் அவனுள் பியர் இறங்கிய பின்னால் இறந்த காலத்தின் அற்புதங்களை பற்றியே பேசி வந்தான். அற்புதங்கள் கார்ட்டூன்களாக மாற்றப்பட்டு விட்டதாக துயருற்ற அவனுடைய உத்தர-பியர் சம்பாஷனைகளில் தொலைந்து போய் விட்ட நாகரீகங்களை பற்றியும் இசை பற்றியுமான துயரங்களும் ஒட்டிக்கொண்டிருந்தன. 
ஜாதகாவின் மரபணு வளர்ந்து மூளையுள் பேருகி கொண்டிருந்த காரணத்தால், அவன் பணத்தின்மீது நெடிய ஆசைகளை கொண்டிருந்தான். அவன் மூளையில் முளைத்த வீட்டிற்கு அஸ்திவாரம் போடும் பொருட்டு அவன் பங்கு சந்தையில் நுழைந்தாலும் செடி வளர்ந்த தலையானபடியாலே சற்று மேடிருந்தது. மேட்டுத் தலையர்களை பங்குகள் இழுத்தடித்ததுக் கொண்டிருந்தன. ஜாதகாவின் பாதி வளர்ந்த வீட்டை மீரட் பங்கு ஒன்று இடித்துப் போட்டது. சகோதர பியர்-அருந்து மாந்தர் அவனை அவ்வனுபவத்தை எழுத அழைத்தபடி இருந்தார்கள். அறிவு பற்றியும் அதன் அத்தியாவசிய தேவைகளை பற்றியும் நீண்ட தும் நெடியதுமான பிரக்ஞை அவனுள் ஓடிக்கொண்டிருந்தது. அவனுடைய சிந்தனா முடிவுகளுக்கும் சிகரெட்டிற்கும் புதியதாய் ஒரு சம்பந்தம் முளைக்கவே, சிகரெட்டை பற்ற வைத்தபடி அவன் எழுத இசைந்தான். 
அவனுடைய முதல் படைப்பு வெளியான பின் சகோதர குடிகாரர்கள் அவனை விட்டு விலகினார்கள். எழுத ஆரம்பித்த சில நாட்களில் அவனுடைய வாயையும் எழுத்தையும் கேவலப்படுத்த தொடங்கின அவனுடைய அத்தியாவசிய தேவைகள். பீளீச்சிங் பவுடர் மணத்தால் சூழப்பட்ட கனவுகளில் சக மனிதர்களை பன்றியாகவும் தன்னை பன்றியோட்டியாகவும் கண்டான். கண்டதில் தன் உள்ளக் கிடக்கையும் அவன் அறிந்து கொண்டான். 
கால் பதித்தவன், 
புதிய உலகில் ஜாதகாவின் குழந்தை மற்றும் இளமைப் பருவம் :
1. எட்டு மாதங்களில் மண்ணுலகில் கால் பதித்தவன்.
2. மூன்று வயது வரை முலைக்காம்பு பற்றியவன்.
3 . நான்கு வயதிலேயே நினைவுகள் முளைக்க ஆரம்பித்தவன்,
4. ஐந்து வயது முடிந்தவுடன் ஆறாம் வயதை அடைந்தவன்.
5. முதலாம் வகுப்பில் மாந்தத்தினால் ஃபெயிலானவன்.
6. ஏழாம் வயதில் தன் முதல் பகற்கனவை கண்டவன்.
7. தற்போது பேருந்து நிலைய பொதுக்கழிப்பிட சுவர்களிலும் அது சார்ந்த மற்ற சுவர்களிலும் காணப்படும் மணலம்மை, சீத வாந்தி பேதிகள், பொன்னுக்கு வீங்கி, மகோதரம், மாந்தம், கக்குவாய் இருமல், அழுகுணிச் சிரங்கு, சிலந்தி, விரை வீக்க நோய்களால் சூழப் பட்டது அவனது ஆரம்பப்பள்ளி பருவம்.
8.  2ம் வகுப்பில் டபுள் பிரமோஷன் வாங்கிய அவன் அவ்வருட கோடை
விடுமுறையில் எலும்பு முறிவை முதன் முதலில் கண்டான்.
“ 9.. மிகவும் பலஹினமான உடல் நிலையால் என்.சி.சி. மறுக்கப்பட்ட அவன்
கைகளில் மருதாணி அச்சு தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது. 1
10. பெண்களின் பரிச்சயம் மிகுந்த அவன் பள்ளி விளையாட்டு பிரியடுகளில்
சக மாணவர்களின் பைக்கட்டு காவலனாய் சோம்பியே அமர்ந்தான். நொறுக்குத் தீனிகள் நிரம்பிய டவுசர் பைகளால் பேச்சைத் தவிர்த்த வன் பல்லாங்குழி தாயக்கட்டை மற்றும் சற்றே தாமதமாய் அறிமுகமான ட்ரேடில் நிபுணன், போதிய வியர்வை மண்டையில் உற்பத்தியா காத காரணத்தால் சதுரங்கத்தை தவிர்த்த அவன் சிவாஜி கணேசனின் ரசிகன் ஆனான்.
11. பரிச்சய பெண்கள் அடைந்து விட்ட பருவத்தால் பெரியோர் எனப் படும் ஆன்றோர் அவன் கை மருதாணி அச்சை தொடர்ந்து வரும் உச்சாடனங்களால் பிய்த்துவிட்டு போயினர்.
12. வண்ணத்துப் பூச்சியின் மணமும் குணமும் உருவமும் கொண்ட மருதாணியின் நிழல் மறைந்து போன கைகளில் காகிதங்களும் சிகரெட்டும் முளைத்த தினத்தை இன்றும் அவன் ஞாபகம் வைத்திருக்கிறான்.
13. ஜாநி உடையலங்காரத்தில் தீவிரமாய் ஈடுபட்ட காலத்தில் சக பையன்கள் வியர்வை கொட்டும் விளையாட்டு வீரர்களானார்கள், (அவனுடைய முதல் நாகரீக புகைப்படம் அரசு பொருட்காட்சியில் தாஜ்மகால் அருகே நின்று எடுத்து கொண்டதுதான்.)
14. தொடர்ந்து காகிதங்களால் சோர்வடைந்த அவன் மூளை த்ரில் தேடி அலையவும் அவன் கண்ணிற்கு புலப்பட்டது நூலகத்திற்கு அருகே அமைந்த நண்பர்கள் மனமகிழ் மன்றம். டென்னிஸ், காரம் - போர்ட், சீட்டு இவற்றில் அவன் சீட்டை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் இன்றும் தெளிவற்றே கிடைக்கிறது.
15. வேலை கிடைக்கும் வரை சீட்டாட்டத்திற்குள் நுழைய முடியவில்லை. அங்கீகரிக்கப்படாத ஊழியனாக மன்றத்தின் அங்கத்தினருக்கு மாறிய சமயத்தில் தான் பெண் தரகர் வரதன் நட்பு அவனுக்கு கிடைக்கப்பெற்றது. பின் தேறிய உடலும் சீட்டாட்டத்தின் மீதான அவன் நெருக்கத்தை பிரிக்க முயன்று தோற்றது.
16. தனக்கு பின்னால் (சேருக்கு) சகவிளையாட்டுக்காரர்கள் நின்று வேடிக்கை பார்க்கும் காலத்தை ஜாநி எதிர் நோக்கி நின்றான். உரிய காலத்திற்கு முன்பே இறந்து விட்ட தந்தையினால் அவர்தம் வேலை கிடைத்தாலும், சற்றே தாமதமாக நுழைந்து விட்ட காலத்தால் அவன் வேண்டியிராத வேறு மக்களே ஜாநியின் ஆட்டத்தை வேடிக்கை பார்க்கும் பாக்கியம் பெற்றார்கள். 
இவ்வாறான நாட்களுள் ஒன்றில் தான் கோதார் அவனை துரத்திக்கொண்டிருந்தார். அவர் மாதிரியான பல இயக்குநர்களால் அவனது சமீபத்திய இறந்த காலம் அலைக்கழிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அவர்தம் பெயர்கள் அவன் இலக்கிய - அங்கீகாரத்திற்கு உதவும் வண்ணம் செவ்வனே அப்பெயர்களை உதிர்ப்பான் 
நண்பர்களின் வேண்டுதலாலும், தூண்டுதலாலும் மேற்கே சற்றே நகர்ந்திருந்த அறிவொன்றின் கட்டாயத்தாலும், ஃபிரெஞ்சு புரட்சியின் உச்சாடமொன்றின் கட்டாயத்தின் பேரிலும் சினிமாவின் பரிச்சயத்தை தவிர்த்தான். சினிமாக்களோடு பரிச்சயமற்றிருந்த அல்லது பார்க்க வாய்ப்பற்ற கூட்டத்தினுள் நுழைந்த ஜாநி தன் முடியலங்காரத்தை மாற்றிக்கொண்டான். ஓர் அந்திப்பொழுதில் அக்கூட்டத்தின் தூண்களை கோதார் அசைத்தார். அசைவால் அக்கூட்டத்தின் பிரதான அங்கத்தினர் அவனுக்கு கடிதமொன்றை எழுதினார்.

அன்பு ஜாநி, உன் கடிதம் கிடைக்கவில்லை, மேன்யுவல் புயிக் புத்தகங்கள் அனைத்தும் வாங்கிவிட்டேன். உன் புத்தகங்கள் ஜெராக்ஸ் கடையில் பணமின்மையால் முடங்கிக்கிடக்கிறது. அறிவின் கட்டாயம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மேற்கில் நகர்ந்துவிட்டது. சினிமா பரிச்சயத்தை மீண்டும் துவக்க கோதாரை விடவும் வேறு ஆரம்பமேது ? இந்த ஞாயிறு சேம்பரில் திரையிடுகிறார்கள். அவருடைய முதல் படம். உன்னை கட்டாயம் சேம்பரில் சந்திக்க விழைகிறேன். நேற்று அந்த ஊர்சுற்றி வந்திருந்தான். பெரும் மடையனான அவனுடன் நமக்கு என்ன பேச்சு என்று மூன்று மணி நேரம் நான் பேசாமல் அமர்ந்திருக் தேன். அவன் தனியே பேசிக் கொண்டிருந்து விட்டு இரவில் நகர்ந்து விட்டான். Convey my enquiries to mangal 

ப்ரியமுள்ள
******

அலுவலக தொலை பேசியின் உதவியால் அவனும் கோதாரை விரித்தான். அன்று முதல் அவனை துரத்தலானார் கோதார். அவன் வழக்கமாக சிறுநீர் கழிக்கும் இடத்தில் பிணமொன்று கோதார் கோதார் என்று கூறி இறந்தது. அவவலகத்திலும் அவனை விடவில்லை. தஸ்தாவேஜுகளில் நுழைந்து அரற்றிய அவர். தட்டச்சு இயந்திரத்தில் 21 எழுத்துக்களை விழுங்கினார். கோதாரை விரட்ட மதுக்கடையினுள் நுழைந்தான். 
வாங்கிய பியர் பாட்டிலுள் உறைந்து கிடந்தார். ஊற்றிய பின் கோப்பையினுள் நீச்சலடித்தார். குடித்தபின் பாட்டிலில் தோன்றினார். பின் நுரைகளில் மிதந்தார். பாட்டிலிலும் கோப்பையிலும் மாறி மாறி தோன்றி வித்தை காட்ட ஜாநி மேலும் குடித்தான். மீண்டும் கோதார். மதுக்கடைவிட்டு வெளியேறியவன் சிறுநீர் கழிக்க கோதார். சிறு நீராய் வெளியேறினார். சோர்ந்த அவன் மயங்கி விழ கோதார் அவனுக்கு விசிறிக் கொண்டிருந்தார். 
அன்றிரவு ஜாநி கனவில் புதிய மிருகமொன்றை கண்டான். அடுத்த நாள் கோதார் அம்மிருகம் தானே என்றார். ஜாநி அது தானே என்றான். முடிவில் வெள்ளியன்று அவனுடன் சமாதானமாய் போனார். 
ஞாயிற்றுக்கிழமை படத்திற்கான ஆர்வத்தை முன்னைப் போல் அவன் கொண்டானில்லை. விடியற்காலையில் கோதார் வீட்டினுள் நுழைந்தார். அயர்ந்துறங்கிய ஜாநியை கனவொன்றினால் தட்டி எழுப்பினார். அறையை சுத்தம் செய்தபடி ஜாநியை குளிப்பாட்டி விட்டார். கணவனின் ஞாயிற்றுக்கிழமை சுறுசுறுப்பை கண்டு ஆச்சரியப்படலானார் மங்களம் அம்மையார். 
ஜாநியால் அன்றே சூதாட்ட வருமானத்தால் தவிர்க்கப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் - அன்று அவனையும் நாற்காலியையும் பிரிக்க முடியாது என உணர்ந்த கோதார் சேம்பரை ஞாபகப்படுத்திவிட்டு வேறொரு ஆளை எழுப்ப கிளம்பிச் சென்றார். 
நகரம் அவனை அழைத்துக்கொண்ட உடனேயே அவன் சீட்டாட்டத்திற்குள் நுழைந்தான். எண்களின் புதிர் வழிகளில் சிக்கிக் கொண்ட அவன் மலர்களையும் அவன் முதற் பகற்கனவின் சிநேகிதனான வண்ணத்து பூச்சியையும் மாயப் பாதையில் தொலைத்திருந்தான். எண்களின் உலகம் சிறிது காலம் மதுவுடனான அவனது பரிச்சயத்தை தடை செய்திருந்தது. தொடர்ந்த வருடங்களில் எண்களூடனான உலகில் மதுவிற்கும் மதுவினாலான உலகத்தில் எண்களுக்கும் பயந்தே வாழ்ந்தான். இப்பயமே அவனை சீராக ஓட்டிக் கொண்டிருப்பதாக நம்ப ஆரம்பித்து விட்டதால், எண்களும் மதுவும் அவனுக்கு ஆன்மீக பலம் அளித்து கொண் டிருப்பதை இன்றும் நேரிலே காணலாம். 
போதுமான அளவுக்கு பணம் சேர்ந்தால் கூட எழுந்து விடலாம், 100 ரூபாய்களுக்கு டோக்கன் வாங்கினான். ஒரு பக்கம் மட்டுமே உள்ள உலோகங்கள் அவை. அவன் தோல்வியுற்ற தினங்களில் மட்டுமே சக சூதாடிகள் அவனை வெறுப்பார்கள். அவனது வெற்றி யாரையும் பழி வாங்கியதில்லை . 2.30 P.M.க்கு கணிசமாக டோக்கன்கள் குவிந்திருந்தன: அரை மணிக்கு ஒரு முறை டோக்கன்களை எண்ணுவது சக ஆட்டக்காரர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயம். இத்தனைக்கும் அவன் புதியவனல்லவன். ஆனாலும், எண்களும் அத்தியாவசிய தேவைகளுள் நிரம்பிய உலகத்தால் ஜாநி மிகவும் பயந்துதான் போயிருந்தான். நாலு மணிக்கு எழுந்து விடலாம் என எண்ணிய நேரத்தில் டொனேடர் என்ற நாம கரணம் கொண்ட செல்வா நுழைந்தார். கற்பூரம் ஏற்றி அதில் மூன்று முறை எச்சிலை துப்பி தன் தோல்வியின் ஞாபகங்களை எரித்துவிட்டு ஆட அமர்ந்தார். 
ஜோக்கர் 6 எப்போதும் சறுக்கி விட்டதில்லை. சின்ன காயங்களோடுதான் தப்பித்திருக்கிறான். கண்ணெதிர்லேயே டோக்கன்களை செல்வாவின் கற்பூரம் விழுங்கியது. மீண்டும் ஜோக்கர் 6. மைனஸ் 150 என்ற நிலையில் யார்தான் எழுந்திருக்க முடியும்? எழுபவன் எதற்கு சீட்டாட வரப்போகிறான் என்பார் சண்முகம். 6 அவருக்கும் மிகவும் ராசியான எண். அவன் நேரம் 5 மணி என முடிவு செய்து மீண்டும் 100 ரூபாய்க்கு டோக்கன் வாங்கினான். 6ஆல் உண்டான 50ரூபாய் கடனையும் அடைத்தான். எழுந்து குளிர்ந்த நீரால் முகம் கழுவிய பின்னால், சிறுநீர் கழித்து விட்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக் கொண்டான், கொஞ்சம் கொஞ்சமாக இழந்ததை மீட்ட சமயத்தில் வேகமாக படியேறியபடி சீட்டுக் கட்டினுள் கோதார் நுழைந்தார். அவன் ராங்-க்ஷேஷா செய்து மீட்டதை இழந்தான். 
தொடர்ந்த ஆட்டங்களில் எண்களோடும் பூக்களோடும் இவற்றிற்கு இடைப்பட்ட வெண்மை பிரதேசங்களில் கோதாரின் சஞ்சாரம் துவங்கியது. 6-லிருந்து 9-திற்கு தாவினார். ராஜாவின் ஒற்றை கண்ணை மூடியபடி ஹார்ட் ராணிக்கு முத்தமிட்டார். பூவிற்கும் வெண்மை பிரதேசத்திற்கும் இடைப்பட்ட சூன்யத்தை குறைத்தார், அதிகரித்தார். கணிதத்திற்கு சவால் விடும் அவரது புதிய புதிர்களா எண்கள் தடுமாற, புதிய கணக்குகளுக்கு இரையாகி, விலையாக டோக்கன்களை இழந்து கொண்டிருந்தான் ஜாநி. (நிறங்களை மறந்து விடாதீர்கள்) என் பூ ; வெண்மை பிரதேசம் : நிறம் என தொடர்ந்தது. பயணம். 
1/2 ஸ்கூட் விடுமளவுக்கு கோதார் தன் பயணத்தில் வெற்றி பெற்றிருந்தார். இரு முறை ஃபுல் கொடுத்த ஜாநியை சக ஆட்டக்காரர்கள் பரிதாபக் கண கொண்டு நோக்கினார்கள். சண்முகம் '' ஆடலேன்னா, விட்டுப் போயயா, ஃபுல்லாக் கொடுத்து ஏன்யா என் சீட்டையும் சாவடிக்கிறே" என இரைந்தார். திருப்பி திட்டுமளவுக்கான டோக்கன்கள் அவனிடம் இல்லை என கௌரவமாய் அவனை ஒப்புக்கொள்ள வைத்தார் கோதார். 
சண்முகத்திடம் 50 ரூபாய்க்கான டோக்கனை கடனாக பெற்று இடம் மாறி அமர்ந்தான். அடுத்த ஆட்டத்திலேயே அத்தனையையும் விழுங்கி கோதார் விட்ட ஏப்பம் மூளையுள் ஒலிக்கவும் ஆட்டத்தை விட்டு எழுந்த ஜாநி ஆத்திரம் தாளாமல் கோதாரை செருப்பால் அடிக்கவும் செய்தான், அவனாடிய மேசை அவனுடைய வெளியேற்றத்தால் குலுங்கிச் சிரித்தது. 
நேராக கழிவறைக்கு சென்றவன் பெண் பிம்பங்களை தேடி அதில் வெற்றியும் பெற்று இன்புற்று கோதாரையும் விரட்டினான், ஒரு தீர்வை கண்டதுபோல் சுறுசுறுப்படைந்து சாலையை அடைந்தான். பேருந்தில் போனால் சேம்பருக்கு 15 நிமிடங்களில் போய் விடலாம் என எண்ணினான். ஆட்டோவினால் 5 நிமிடங்களில் போகலாமே என்றார் கோதார். கோதாரை முறைத்த வண்ணம் வந்த பேருந்தில் ஏறி நின்றான். எட்டாவது நிறுத்தத்தில் அவன் இறங்க வேண்டும். மூன்றாவது நிறுத்தத்திலிருந்து 6-வது நிறுத்தம் வரை அவன் சிந்திக்க முடிவு செய்தான். சிந்தனையின் விளைவுகளை இக்கதையிலே காணலாம். மேலும் கதையிலே காணக்கிடைக்காத பகுதிகளில் அவன் அச்சினிமாவின் கட்டாயத்தை சிந்தித்தான். சிந்தனையின் மையத்தை அடையுமுன்னே அவனுடலில் உரசிய நைலக்ஸ் புடவையொன்று சிந்தனையை தாறுமாறாய் கலைத்தது. 
உடலில் உஷ்ணமேற்றிய அப்புடவையானது ஜீன்ஸின் தோலைக் கிழித்து ஜாநியின் சதையை தொட்டதை கண்ட கோதார் அவனிடமிருந்து வெளியேறினார். (முன்பும் இதுமாதிரியான ஒரு புடவைதான் அவனுடைய ஈகோவையும் கிழித்தது. அது அவன் அலங்காரங்களின் ஆரம்பக் காலம்) ஜாநி விழித்துக்கொண்டு கால் சட்டையின் ஜிப்பை சற்றே நெகிழ்த்தினான். ஏழாவது நிறுத்தத்தை வண்டி அடையவும் நைலக்ஸ் விடைபெற்று அமர கோதார் நுழைந்தார். நுழைந்த கோதார் அவன் கண்ணிற்கு புலப்படவும் வந்து சேர்ந்தது எட்டாவது நிறுத்தம். மணி 6-30 என அலறினார் கோதார். அவன் இறங்கும் முயற்சியில் இருந்த சமயம் பெண்ணின் பேரலறல் ஒன்று திடீரென்று எழுந்த காரணத்தால் பேருந்தின் இதயம் சற்றே நின்றது. 

தாலிக்கொடியை களவு கொடுத்து விட்ட பெண்ணின் அலறலையும் மீறி முன்னேயும் பின்னேயும் ஹாரன் ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன. அப்பெண்ணின் கதறலொளி மேலும் பெருகவும் மதிமேகங்களுடே வெளிப்பட்டாள். கதிரவனின் பொற்கிரணங்கள் அந்நிலைக்கு வர்ணம் பூசவும் கோதார் துரிதப் படுத்தினார். தாலிக் கொடியை களவாடினவனை தேடி கூட்டம் ஒன்று வடக்கே ஓடியது. ஜாநியும் சாலையின் மையத்தடுப்பை தாண்டி சேம்பரை நோக்கி வடக்கே ஓடினான். இருவரையும் பிரித்தது சாலையின் மையத்தடுப்பு. சாலையை தாண்டும் முயற்சியில் பேருந்து ஒன்றால் கோதார் தாக்கப்பட்டார். வியர்க்க விறுவிறுக்க நுழைந்த அவனை முழுவதும் வரவேற்றார் சாப்பின். 
சூரியனை நோக்கி தனது துப்பாக்கியால் சுட்ட பொய்க்கார்ட் ஐ ஃபிரெஞ்சு போலீஸ் துரத்துகிறது. அவனுடைய இத்தாலிய காதலி தொலைந்து போய் பெயராக மிஞ்ச ஆரம்பித்த கணங்களில் மொட்சார்ட்டின் கொம்பு இடியின் காம்புகளுள்ளே தோன்றி பூமியை நோக்கி வளர ஆரம்பித்த சரித்திர நிகழ்வுகளில் பொய்க்கார்டின் இன்னொரு காதலியின் நிலவறைக்கதவை உடைத்து உள்ளே நுழைந்தது கொம்பு, கொம்பின் மாயப்பாதை வழியே நடந்து காதரீனை முத்தமிட. மீண்டும் வானில் முளைத்த இடியோசையில் தொலைந்து போய் கிளாரினெட்டாய் திரும்பிய கொம்பை உதாசீனப்படுத்தியது காதரீனின் பிருஷ்டம். ' இன்று நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன், உனக்கு ஏன் வியர்க்கிறது கொவசெக்.'' 
'' ஒன்றுமில்லை காதரீன் உன் உதடுகளை நோக்கி ஓடி வந்தேன் ' '. 
குரங்கு குட்டியாய் மாறிய காதரீன் அவள் பிருஷ்டத்தை தடவியபடி அவள் பர்ஸின் இருப்பிடத்தை உறுதி செய்தான். 
'' பர்ஸில் ஒன்றுமில்லை, பணம் என் கைப்பையில் இருக்கிறது, உனக்கு என்ன தேவையோ எடுத்துக்கொள். ஆனால் இன்றிரவு நீ எனக்கே சொந்தம், மேலும் உன் பற்றாக்குறையை தீர்க்க என் தோழிகள் பலர் காத்துக்கிடக்கிறார்கள்" 
தூங்கி எழுந்த சாப்பின் வயலின்களால் பல் துலக்க ஆரம்பித்தார். '' தேவையில்லை, இன்றைய தேவை பணமல்ல '' என காதரீனின் உதடுகளை 
மூடுகிறான். 
'' என்னுடைய சந்தோஷமான தருணங்களில் சாப்பின் என்னுடன் இருப்பதை விரும்புகிறேன். அந்த இசை தொலைந்து போன மூதாதையர்களையும் அவர்தம் கல்லறைகளையும் நினைவுபடுத்துகிறது. நீயும் உடல்களை நினைவு படுத்து கிறாய் 
உடைகளை கலைய சந்திரோதயம். 
ஆரோகணங்களின் ஆரம்ப தருணங்களில் சாப்பின். அவரோ முடியும் முதல் முயக்கம் , சம்பிரதாய பயிற்சிகளுக்கு பின் - பட்ட சாப்பின் ஒற்றை புள்ளியை அடையும் முன் சோர்வடைகிறார்
சோர்வினூடே பொய்க்கார்ட் எழுகிறான்/காதரீனின் கைப்பையை இருட்டு அவனை மிகவும் சோதிக்கிறது/கைப்பையை காண்கிறான்/இருட்டு அவனுக்கு உதவுகிறது/ கையை உள்ளே விட்டு பணத்தை சட்டையினுள் திணிக்கில் முனகல்களுடேயான ஆழ் முத்தமொன்று அவளுதடுகளில் இறங்கும் சப்தம் நிலைய வித்வான்கள் தூங்கப் போகிறார்கள். அவன் வெளியேறுகிறான் அவர் பாஸ்டார்ட் என்று முனகியவாறு மங்கிய சாப்பினை அணைக்கிறாள். சாலையை அடைகிறான். நின்றிருந்த கார் ஒன்றை கிளப்ப பகல் ஒன்றிற்கு வந்து சேர்கிறது வண்டி . 
மதியம், பேப்பர் விற்பனைக்கு தயாராகி விட்டது. முத்தங்கள் கொடுத்து செய்தித்தாளை விலைக்கு வாங்குகிறான். 
பல பெயர்களுடன் உலவும் அவனை- ஃபிரெஞ்சு போலீஸ் துரத்துகிறது முன்னால் புகைப்படத்தில் அவன் பெயர் கொவசெக். 
'' எப்படியிருக்கிறாய் ரூடி இம்முறை எப்படியும் இத்தாலி சென்று விடுவேன். இத்தாலியிலிருந்து எங்கு செல்லலாம் ?''
 '' இன்றிரவு நீ தயாரா?'' 
'' மன்னிக்கவேண்டும் இன்றிரவு என் ஆண்-நண்பனுக்காக ஒதுக்கப்பட்டுவிட் டது '' '' அவன் காத்திருப்பான் ''
'' நீ வெறியுடன் கடித்த உதடுகளை நீ தானே சீர்ப் படுத்த வேண்டும் '' 
' இன்று எனக்காக வேறு உதடுகள் காத்திருக்கின்றன. உன் முறைக்கு முன்னமேயே நீ அழைக்கிறாய் உன்னை நான் இன்று எதிர்பார்க்கவில்லை. 
( இன்றுதான் வந்தேன். குற்றங்கள் மிகுந்து விட்ட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடுவதற்கான பணம் இந்நாட்டில் மாட்டிக்கொண்டுவிட்டது ரூடி. உன் அறைச்சாவியாவது கண்டிப்பாய் வேண்டும்.. '' 
* முடியாது கொவசெக், போனமுறை நீ வந்து போனபின் போலீஸ் மிகவும் தொந்தரவு செய்தார்கள். கால் கேர்ள் என்று சொல்லி சமாளித்தேன் 11 
" நாளை ' 
' - பார்க்கலாம் '' 

அவர்களுக்கு அருகே கார் ஒன்று விபத்துக்குள்ளாகியது/சிறுமி ஒருத்தி காயமடைகிறாள்/கூடி விலகும் கூட்டம் கொவசெக் அக்கறை கொண்டான் அல்லன்/ ரூடி விரைகிறாள். 
ஏன் ரோஜர் அச்சிறுமி அடிபட்டது உனக்கு ஒரு பொருட்டாக படவில்லையா ? என்னை கேட்டக் கேள்வியை உன்னிடமே கேட்கிறேன் ரூடி ?
அந்தக்கார்தான் போலீஸ் 
அடிபட்டச் சிறுமிதான் நான் சிறுமிக்கு அருகே செல்லாத நான் தான் நீ. 
சூரியனை நோக்கி இறக்கை விரித்து பறக்கும் பொய்கார்ட் பூமி திரும்பிய அவனுக்கு நிழல் தர காளான் ஒன்று சூரியனை மறைத்து விரிகிறது. 
கதவு தட்டல்களும், போலீஸின் விசில் சப்தமும் பிண்ணனியில் ஒலிக்க பிரளய காலத்தின் வரவிற்காக பாடி. ஓயும் குருட்டுச்சிறுமியர், காசு போட்டபடி நகரும் ஜனம். 
எப்படி இருக்கிறாய் மரியா ?
'' நான் எப்போதும் போலவே ஆர்வமாய் இருக்கிறேன். உன் வரவு என் மனதிலும், அழகு முகத்திலும் பயத்தின் நிழலை கக்குகிறது. என்னுள் பொங்கும் இப்புதிய பரிமாணம் உன்னை நாடவைக்கிறது பொய்க்கார்ட் ரகஸியம் விடுபட விடுபட உன்னை சுற்றிய அற்புதங்கள் சுருங்கிச் சுருங்கி மறைவதும். நீ ஒவ்வொரு முறையும் என்னைப் பற்றிய புதிய ரகசியங்களை போர்த்தி வருவதும் புதிதல்லவே ! வா ! புதிய ரகஸியங்களை தொடர்ந்து போர்த்திவா. 
அவர்கள் மரியாவின் அறையை அடைகிறார்கள் பணத்தை மீட்க மீண்டும் போன் செய்கிறான். 
ஏன் சோர்ந்து இருக்கிறாய் ரோஜர் ?
மரியா, இப்பெயரை எப்படி நீ அறிந்தாய் ?
இதோ செய்திகளைப் பார். 
'' மரியா, என்னை விடவும் என்னை பற்றிய செய்திகளே போலீஸிடம் போய்ச் சேருகின்றன போலும், நான் மட்டும் அறிந்த என் ரகசியங்களை உன்னைப் போல் போலீஸும் சேகரிக்கிறது. என் ரகசியங்களின் புதிர் வழிகளாலன்றி நான் வேறெதாலும் தப்பமுடியாது போலிருக்கிறது '' 
ஏன், உன் சிரிப்பில் சோர்வு மட்டுமே மிஞ்சியிருக்கிறது ? 
" நான் என் குற்றங்களின் புதிர்வழிகளில் சிக்கிக் கொன என் குறிக்கோள் என செய்தித்தாளில் காணப்படும் வா உண்மை '', உன்னுடன் ஆன சிரமமில்லா வாழ்க்கையிம் குற்றங்களின் புதிர் வழிகளுக்கு வலுவூட்டுகிறது மரியா ?
பாரிஸில் மாட்டிக்கொண்டுள்ள பணம் மீட்கப்பட்டாலன்றி எனக்கு விடுதலை  எனச் கிடையாது !

'' நான் இப்போது முழுநேர பத்திரிகையாளர் ஆகி விட்டேன். - என்னைத் தொந்தரவு செய்யாதே பொய்க்கார்ட் நான் நாளை மிக எழுத்தாளர் ஒருவரை பேட்டி காணப் போகிறேன். 
மரியா எரிச்சலடைகிறாள்/நெடிய முத்தமொன்று நிலவிலிருந்து கிளம்பி சாளரத்தின் வழியே புகுந்து அவள் எதிர்பாராத தருணத்தில் பொய்க்கார்ட் மூலம் அவளின் உதட்டில் இறங்க கோபமுற்ற மரியா அவனை அறைகிறாள்/மரியா அவனை அழுந்த அணைக்கிறாள்/அழுத்தத்தின் உச்சத்தில் எழுந்தவள் சிந்தனையாளரின் வாய்ப்பை சுழலவிட அதிகமாகும் தேர்வுகள்/இப்போது மூழ்கிய மெதுவான மூனால் (Moon) புறக்கணிக்கப்பட்ட பொய்க்கார்ட் முத்தம்/ஆடைகளைக் திருடிப்போகும் பொய்க்கார்ட்/சரியான நிலா/சிந்தனையாளரை உறைய வைத்தான் I don't know Bach Chopin is disgusting. 
உனது உதடுகளை ஒத்திப்போடும் இசை எனக்குத் தேவையில்லை மரியா ? 
இசையைத் தவிர்க்கும் உனது ரகஸியங்கள் விடுபட்டுவிட்டன பொய்கார்ட். உனது அற்புதங்கள் தொலையாதிருக்க வேறு ரகசியங்களை என் மேல் போர்த்து./ பொய்க்கார்ட் அவளின் வேகம் மெதுவாய் அவனுள் இறங்க சிரிக்கிறான், 
உன்னுடைய மாற்றம் எனக்கு இன்பமளிக்கிறது பொய்கார்ட் நிஜம்தானே ? 
ஆம், Eroticism is form of Love. Love is form of Eroticism. 
பொய்க்கார்ட் அவள் பாவாடையை தூக்கிப் பார்க்கிறான்./ மரியா அவனை அறையவும் திரையில் முளைக்கும் மொழிகள் நட்சத்திர வடிவங்கள். 
'' பயத்தினால் உண்டாகும் வியர்வை பிறந்து பாகங்களிலும் இறங்கி ஆங்காங்கே தேங்கி நிற்கவும் செய்தது. அவன் நிர்வாணி ஆனான். நிர்வாணத்தோடு படம் பார்ப்பது இதுவே தனக்கு முதல் முறை என நினைத்ததோடு இவ்வாறான சந்தர்ப்பம் தனக்கு வாய்த்ததை எண்ணி இறுமாந்து அதனை தன் மொழியில் பதிவு செய்ய வேண்டும் என நினைத்தவன் உற்சாகத்தின் மிகுதியால் திரையினுள் நுழையவும் செய்தான்.'' 
பொய்க்கார்ட் தனக்கு திடீரென முளைத்த நிழலைக்கண்டு பயந்தான். ஆனாலும் அதை தற்காலிக அலட்சியம் செய்த வண்ணம் மரியாவை நோக்கி பேசலானான் ! 

" மரியா, என்னன்பே, முன்பொரு சமயம் ஆயிரம் திமிங்கிலங்கள் கூடும் கடற் கரை ஏகாந்தத்தில் வியர்வை சொட்ட நிர்வாணமாக ஓடிய உன்னை நான் துரத்திப்பிடித்து மணலில் தள்ள, உன் முலைகளில் மணல் முத்துக்கள் அழுந்த நாம் புரிந்தக் கலவியை இன்னும் நாம் மறக்கவில்லை. அக்கலவியை அடையும் பொருட்டே நாம் கலவிகளை புரிந்துக்கொண்டிருக்கிறோம் என நேற்று நள்ளிரவில் நீ கூறவில்லையா ?" 
" பின்பொரு சமயம் நிலவு தன் பிரஜைகளை தொலைத்த வானத்தினடியில் உன் அக்குளை தான் தேட ஊற்றப்பட்ட ஸ்விஸ் வொய்ன் விலையையும் நீ வெறுத்தாய் இல்லை. நீ உன் கழிப்பறையில் ஒட்டிக்கொண்டிருந்த புராதன ஓவியம் உன் ப்ருஷ்டங்களை மறைத்ததற்காக நான் அவ்வோவியத்தைக் கிழித் தெறிந்தபோது என் உதடுகளில் ஊறிய உன் உதடுகள் எப்போதும் உன் வசம் தான் ஆக . . . . . . '' போதும் Poiccard, என்னுள் பதுங்கிக் கிடக்கும் நானறியா என் ரகஸியங்கள் எனக்கு தேவையானவை. நான் இங்கே அவை எனக்கு மிகவும் வேண்டும். உன் சொற்களால் ரகஸியங்கள் மீது புனையப்பட்ட அற்புதங்களைக் கிழித்தெரியாதே. உன்னை விடவும் என் ரகஸியங்கள் எனக்குத் தேவையானவை " 
“ The times in they are-A-chang' தோன்றி மறையும் சுவரொட்டி சூழ்ந்த, இந்த அறையை நேசிக்கிறேன் மரியா. உன் அறை தூண்டிய குற்றங்கள் அநேகம். என்னுடன் பயணிக்கும்போது எப்போதேனும் ஒரு காரை மறு முறை உபயோகப்படுத்தி இருக்கிறாயா '' உன் நினைவில் குலுங்கும் சாவிக் கொத்துகளை சற்றே நினை பொய்க்கார்ட் எழுந்து அவளை முத்தமிட முயல் கிறான். '' அற்புதங்களை கிழித்தெறியும் நீயும் உன் பாழும் சொற்களும், ஆளை விடு.

நிலவு மேகங்களூடான பயண காலங்களில் Police : Poiccard, Maria அவனை தொடரும் அவனுடைய இரு நிழல்கள்/துப்பாக்கிகளின் உருளும் சப்தம்/கங்கா, ஒரே தந்தை ஜாக்பாட் ஜாங்கோ, சில பாலர்களுக்காக குன்று, ஜோம்ஸ், டீன், சுவரில் பதுங்கி பதுங்கி வல்லவன் ஒருவன்/கண்ணிழந்தவர் சுட சிதறி மரணிக்கும் காளைகள், ஓடும் குதிரைகள்/சூரியனைச் சுட்ட Poiccard இடம் சிக்கிக்கொள்கிறாள் மரியா.

இவன் பாரிஸிலிருந்து நகர்ந்தாலன்றி நான் நிம்மதிக்கமுடியாது.

அவனுடைய விடுதலை, இவளின் தப்பிப்பு/சுய நலம் தலைதூக்க உதவ நினைக்கும் மரியா
சுயநலமற்ற காட்டிக் கொடுத்தல் போதும் மரியா 
நீ தப்பித்தால் போதும் Poiccard 
அவளுடைய கேள்விகளுக்கு உற்சாகமாய் ஃபாக்னர் பதிலளிக்கிறார். 
What Music do you take to hear ?
உதடுகளை ஒத்திப்போடும் இசை எனக்கு வேண்டாம்.
I don't know Bach, Chopin is disgusting 
குற்றவாளிகளைப் பற்றி ? 
They are beautiful, I know then they are not disgusting
நீங்கள் எவ்வாறு இறக்க விரும்புகிறீர்கள் ?
 I want to be immortal and I wish to die. 
What do you prefer nothing or griet-stricken? 
I wish to die. 
அவருடைய பதில்களால் மரியா அசூயை அடைகிறாள். 
பொய்க்கார்ட் மனிதர்களை ஏன் பேட்டி எடுக்க வேண்டும் ? 
உனது உதடுகளை ஒத்திப்போடும் பதில்களை நான் விரும்பவில்லை மரியா. 
சைரன் ஒலியினூடே தப்பித்து ஓடுகிறான் பொய்க்கார்ட். அவனை தொடர்ந்து ஓடும் குட்டையும் நெட்டையுமான இரண்டு நிழல்கள். 
மரியாவின் நினைவில் அவளுடைய பிருஷ்டங்களை பொய்க்கார்ட் தடவிக்கொண் டிருந்தான். 
" செயல்களை நோக்கிய எனது ஓட்டம் ஏன் செயல் புரிவோர் மேல் கோபத்தை உண்டாக்குகிறது ? ஏன் என் கண்ணாடி இவ்வளவு சொரசொரப்பாய் இருக் கிறது.'' | என் இசையை அவன் வெறுக்கிறான். 
என் முன்னேற்றத்தை அவன் தடுக்கிறான். 
அவன் எல்லைகளில் என்னை கரைக்க விரும்புகிறான். 
நான் நழுவிப்போகும் தருணங்களில் என் உதடுகளை நேசிக்கிறான். 
திருடுவதற்கான பௌதீக காரணிகள் இவனுக்கு மட்டுமா சொந்தம். 
இவனை காட்டிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு நான் ஏன் தள்ளப்பட்டேன். இவனை காதலிக்கும் கட்டாயத்திற்கு நான் ஏன் தள்ளப்பட்டேன். 
பயணக்காலங்களில் பேட்டரி திருடர்களின் Black mail/பாழடைந்த கழிவறைகளில் மது அருந்தும் பெண் ஜோடிகள்/உபயோகித்த ஆணுறையில் உருகும் கடிகாரம்/ மாறி விழுந்த கோமாளிக்காய் கத்திக்குத்து/விண்ணை முட்டும் நைலான் புகைகள் குருட்டுப் பெண்ணின் மார்புகளில் புரளும் ஏராளமான கைகள் (பிண்ணனி இசை உண்டியல்கள் குலுக்கும் சப்தம்)/ஹோமோ செக்ஷீவல்களின் good-night-/புறக்கணிக்கப்பட்ட கழிவறையில் ஃபாக்னர். I want to be immortal and I wish to die./கன்வேயர் பெல்டில் எதிரெதிர் திசையில் கிளம்பும் ட்ராலிகள்/திரையைக்கடக்க ஒன்றில் மரியாவும் போலிஸும் இன்னொன்றில் தன் நிழல்கள் புடை சூழ பொய்க்கார்ட்/காரைத் திருடுகிறாள் மரியா/அவனை காட்டிக் கொடுக்கும் கட்டாயத்திற்கு நான் ஏன் தள்ளப்பட்டேன்.

Burglars are always Lovers
Lovers are always Saualers
Saualers are always Burglars. 
இரு பாதியாய் பிரியும் திரை. 
Poiccard ஃபோன் செய்ய, அவனுள் இத்தாலியக் கனவு, Get me a fresh Pass-Port under the name Jhony fam waiting for you  | எப்படியும் வந்து விடுங்கள், அவன் விரியும் நகராதிருக்க நான் உத்தரவாதம்.  Please help me 
சேரும் ட்ராலிகள். 
சூரியனைத் தோட்டா ஒன்று தொட்டுவிட்டு எரிந்தது போலீஸால் துரத்தப் பட்ட பொய்க்கார்ட் சுடப்பட்டு விழுகிறான்/குண்டு பாய்ந்த அவன் நெஞ்சை சட்டையை விலக்கிப் பார்க்கிறாள் மரியா/பொய்க்கார்ட்டின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது பேருந்தில் அபலைப்பெண் இழந்த தாலி/ தாலிக் கொடியின் தங்கம் சிதறி ஒரு மூலையில் போய் விழுந்தது தங்கத்தின் இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது தோட்டா/சிதறி விழுந்த தங்கத்தை பொறுக்கி எடுத்தான் பொய்க்கார்ட்டின் குட்டையான நிழல்/திரையிலிருந்து அரங்கில் விழுந்தான் ஜாநி.
நட்சத்திரங்கள் வார்த்தைகளாக மாறி மின்னும் வானை நோக்கி எழும்பும் கண்கள் திருடனுக்கான உண்மைக் காதலும்

தப்பிப்பதற்கான காட்டிக் கொடுத்தலும்

திருடியதற்காக ஓடிய அவனும் 
படத்திற்காக ஓடிய நிழலும்.

மரணத்திற்கான கதையும் கதையின் மரணமும்

அரங்கிலிருந்து வெளியேறினான் ஜாநி. ஜாநி. எப்போதும் போல் அழைத்த நண்பர்களை காணோம். மேகத்தில் ஏற்பட்ட சிறுதுளையின் வழியே வெளியேறுகிறார் கோதார். வீட்டை அடைந்தான் ஜாநி. அவன் காண இல்லாது போன நண்பர்களுக்காய் சோர்வடைந்த முகத்தை கழுவி கண்ணாடி அருகே சென்மார் கதைதனிலே குரூரத்தைப்போல தனக்கும் பங்கு இல்லையென சோர்ந்த முகத்தோடு காபி கொடுத்தார் மங்களம் அம்மையார். சிரித்தது கண்ணாடி. சிரிப்பு தன் ஆழம் தேடி பிரயாணப் படலாயிற்று. தாலித் தங்கத்தை கையில் எடுத்தான். ரிலயன்ஸ் என்று முனகியவாறே இழுப்பறையில் முடக்கினான். கண்ணாடியின் ஆழத்தில் பொய்க்கார்ட் இவனை பார்த்து கேலியாக சிரிக்க. பின்னால் யாருமில்லாத தைரியத்தில் ஜாநியும் சிரித்தான். கண்ணாடியில் மாறி மாறி சிரிப்பொலி மின்னவும் பொய்க்கார்ட்ஐ பிடிக்க கண்ணாடியுள் இறங்கினான் ஜாநி. பொய்க்கார்ட்டை , ஜாநியின் நிழல்களை தேடி திருச்சூருக்குப் பயணமானான். கண்ணாடியுள் பொய்க்கார்ட் தேடித் தொல்லையுற்ற ஜாநி கண்ணாடியுள்ளிருந்து வெளிவர முடியாமல் அதிலே சிறைப்பட்டான். விரக்தியில் ஜாநி விட்ட பெருமூச்சு விண்ணையும் முட்டவும் நிலா மகள் மேகங்களுடே வெளிப்பட்டாள். கதையினை முடித்தார் விக்கிரமாதித்யன் . 
தமிழ்-க கருமமே கண்ணாக இருந்தான். 
வேதாளம் வழக்கமான நிபந்தனையோடு கேள்வியை கேட்டது '' இக்கதையில் ஜாதகாவின் நிழல் யார் ? பொய்க்கார்ட்ஆ அல்லது ஜாநியா?'' 
தமிழ்-கவும் 'வேதாளரே இக்கதையின் சம்பவங்கள் இறந்த காலத்தில் என்னால் அறியப் பட்டதுதான். நான் தான் ஜாதகாவின் நிழல் போலும் '' எனக் கூறி தன் மார்பில் புரளும் தாலிக்கொடியை காட்டினான். 
வேதாளம் இவனுடைய பதில் சரிதானா ? என ஆராய இறங்கிய வேளையில் தாழம்பூ மணப் பின்னணியில் வட்டமாய் அமைந்திருந்த மருதமர நிழல்கள் ஒன்று சேர்ந்தன. அவை ஒரு பெருமர நிழலால் உருவெடுக்க வெடித்துச் சிதறியது வேதாள உடல். விக்கிரமாதித்யன் தோன்றினார். பின் இதுநாள் வரை தொலைந்து போன தன்னுடலை நீரிலே காண நதிக்கரைக்கு தாவினார். நதியிலே தன்னுடலை கண்ட பேரானந்தத்தில் அவர் பேச லானார். 
 தமிழ்-க வே, மிகவும் நன்றி, உமதறிவையோ அல்லது உனது அனுபவத்தையோ நாம் மெச்சுகிறோம், என் கதாசிரிய வாழ்வை கொன்றதற்கு மிகவும் நன்றி, நீர் எவ்வாறு அக்கண்ணாடியிலிருந்து வெளியேறினீர் ? போகட்டும் வேண்டுவன கேளும் தரச்சித்தமாயிருக்கிறோம். '' 
" கண்ணாடியுள்ளிருந்து நோக்குங்கால் சூன்யம் விரியக்கண்டேன். காலியாய் கிடந்தது எதிரே அறை. என்னைக் காணோம். உடலை மட்டுமே காட்டும் கண்ணாடியின் தோல்வியை உணர்ந்த உடனேயே வெடித்துச் சிதறியது கண்ணாடி பின் வெளியேறினேன். 
கதைகள் அடங்கிய அந்த ஓலைச்சுவடிகளை தந்தால் அதுவே எமக்குப் போதுமானது ' 
விக்கிரமாதித்யர் அவ்வோலைச் சுவடிகளை தமிழ்-க விற்கு அளித்தபின் விண்ணை நோக்கிப் பயணப்படலானார். 
எழும்பிய விக்கியை சற்றே தமிழ்-க நிறுத்தினார் '' இக்கதைக்கு தலைப்புத்தான் என்ன ? 
'' முன் கதைச்சுருக்கம் என வைத்துக்கொள்ளும் '' என்று கூறி மறையத் தொடங்கினார் விக்கி. மேகங்களில் தாழம்பூ மணமும் குடியேறியது.

No comments:

Post a Comment