Monday, October 20, 2025

 செம்மணி வளையல்‌ - 

அலெக்சாந்தர்‌ 
குப்ரின்‌ https://archive.org/stream/alexander-kuprin-the-garnet-bracelet-stories-in-tamil-raduga-1987/Alexander%20Kuprin%20-%20The%20Garnet%20Bracelet%20-%20Stories%20in%20Tamil%20-%20Raduga%20-%201987_djvu.txt
மொழிபெயர்ப்பாளர்‌: நா. முகம்மது செரிீபு, எம்‌, ஏ.
ராதுகா பதிப்பகம்‌ மாஸ்கோ “காதலை ஓர்‌ அதிசயமாக, ஓர்‌ அழகிய நன்கொடையாக குப்ரின்‌ கண்டுணர்கிறார்‌. ஒரு சிறிய அலு வலன்‌ இறக்கிறான்‌, ஆனால்‌ ௮வ னுடைய சாவு மற்றொரு ஆன்‌ மாவை, காதலை ஒருபோதும்‌ நம்‌ பாத ஓரு பெண்ணை எதிர்த்துக்‌ குற்றஞ்சாட்டுகிறது. காதல்‌ சாவை வெற்றி கொள்கிறது, அதை விஞ்சி நிற்கிறது, வாழ்வின்‌ வசனம்‌, உயர்ந்த கவிதைக்குப்‌ பின்னே நடைபோடுகிறது. ”* அனதோலி செர்னிஷோவ்‌

L. van Beethoven. 2 Son. (op. 2, Ne2). Largo Appassionato. 

ஆகஸ்டு மாத நடுவிலே, அமாவாசைக்கு முன்பாக, கருங்கடல்‌ வடக்குக்‌ கடற்கரைக்குச்‌ சற்று விசித்திரமான, மோசமான பருவச்‌ சூழ்நிலை திடீரென்று வந்தது. பனி மண்‌ டலம்‌ அந்த நிலத்தின்‌ மீதும்‌ கடலின்‌ மீதும்‌ சூழ்ந்திருந்தது, ஒரு வெறிபிடித்த காளையைப்‌ போல பகலும்‌ இரவும்‌ அந்தப்‌ பெரிய கலங்கரை விளக்கினுடைய சங்கு கர்ஜித்தது. அல்லது பிறகு, தண்ணீர்த்‌ தூசி போல நுண்ணிய தன்மை வாய்ந்த மெல்லிய தூறல்‌, காலை முதல்‌ மறு காலை வரை தொடர்ந்து அழுத்தமாக விழுந்து, களிமண்‌ பாதைகளையும்‌, நடைபாதைகளையும்‌, வண்டிகளும்‌ வண்டித்‌ தொடர்களும்‌ நீண்ட நேரம்‌ அழுந்திப்‌ போகுமாறு, ஒரு சேற்றுமடுவாக மாற்றியது. அல்லது அதன்‌ பிறகு ஒரு பயங்கரப்‌ புயற்காற்று வடமேற்குத்‌ திசையிலிருந்த ஸ்டெப்பி நிலத்திலிருந்து வீசத்‌ தொடங்கியது; மர உச்சிகள்‌ அசைந்தன, ஒரு பெரிய புய லிலே அலைகள்‌ போல பெபருமூச்சு விட்டன. யாரோ ஒருவர்‌ கனமான காலணிகளோடு அதன்‌ மீது வேகமாக ஓடியது போல, இரவு நேரத்தில்‌ வீடுகளின்‌ இரும்புக்‌ கூரைகள்‌ ஆர வாரம்‌ செய்தன, சன்னல்‌ சட்டங்கள்‌ ஆடின, கதவுகள்‌ பேரொலி எழுப்பின, புகைப்‌ போக்கெளில்‌ பயங்கரமான ஊளைச்‌ சத்தம்‌ கேட்டது. கடலில்‌ பல மீன்‌ பிடிப்‌ படகுகள்‌ அவற்றினது திசைக்‌ கூறுகளை இழந்து விட்டன, அவற்றில்‌ இரண்டு திரும்பி வரவே இல்லை; ஒரு வாரத்திற்குப்‌ பிறகு அந்த மீனவர்களுடைய பிணங்கள்‌ கரைக்கு அடித்துத்‌ தள்‌ ளப்பட்டன. 
புறநகர்ப்‌ பகுதி கடற்கரைத்‌ தங்குமிடத்திலுள்ள மக்கள்‌--பெரும்பாலும்‌ கிரேக்கர்களும்‌, யூதர்களும்‌, எல்லாத்‌ தெற்கத்திக்காராரகளையும்‌ போல, வாழ்க்கையிலே பிரியமும்‌, மிகுதியான அச்சமும்‌ கொண்டவர்கள்‌- வேக 
20—2027 305 
மாக நகருக்குத்‌ திரும்பிக்‌ கொண்டிருந்தார்கள்‌. அந்த மணற்‌ பாங்கான நெடுஞ்சாலை நெடுகிலும்‌ பெருஞ்சுமை களை ஏற்றிய பாரவண்டிகள்‌ முடிவில்லாதபடி தொடர்ச்சி யாகப்‌ போய்க்‌ கொண்டிருந்தன. அதில்‌ பாய்கள்‌, சோ பாக்கள்‌, பெட்டிகள்‌, நாற்காலிகள்‌, சலவைச்‌ சட்டங்கள்‌, சமவார்கள்‌ போன்றவை மிகுதியாகச்‌ சுமத்தப்பட்டிருந்தன. அத்தூறலின்‌ தெளிவற்ற மென்துகில்‌ வழியே அது பரிதாப கரமான பயங்கரமான காட்சியாக இருந்தது மோசமான நிலையில்‌ இருந்த மூட்டை முடிச்சுகள்‌ அத்தனை அருவருப்‌ பாகவும்‌, அத்தனை கவர்ச்சியற்றும்‌ பிச்சைக்காரத்தனமாக வும்‌ காணப்பட்டன; வண்டிகளின்‌ உச்சியின்‌ மீது உட்கார்ந்து கொண்ட வீட்டு வேலைக்காரிகளும்‌, சமையல்காரிகளும்‌ இரும்புச்‌ சாமான்கள்‌, பாத்திரங்கள்‌ அல்லது கூடைகள்‌ போன்றவற்றைக்‌ கைகளில்‌ வைத்துக்‌ கொண்டிருந்தார்கள்‌; களைத்துப்‌ பெருமூச்சு விட்ட குதிரைகளும்‌ அவ்வப்‌ பொழுது நின்று விட்டன, அவற்றினுடைய முழங்கால்கள்‌ குடுமாறிக்‌ கொண்டிருந்தன, விலாப்‌ புறங்களில்‌ வியர்த்துக்‌ கொட்டின; கம்மிய குரலில்‌ வசை சொல்‌ கூறிக்‌ கொண்ட வண்டியோட்டிகள்‌ மழைக்குப்‌ பாதுகாப்பாகத்‌ தங்களைச்‌ சுற்றிப்‌ போர்த்திக்‌ கொண்டார்கள்‌. மிகவும்‌ வருந்தத்தக்க காட்சியாக, மக்கள்‌ கைவிட்டுப்‌ போன வீடுகள்‌, அழிக்கப்‌ பட்ட பூப்படுக்கைகள்‌, உடைக்கப்பட்ட கண்ணாடிகள்‌, கைவிடப்பட்டுப்‌ போன நாய்கள்‌, மற்றும்‌ சிகரெட்டுத்‌ துண்டுகள்‌, துண்டுத்‌ தாள்கள்‌, உடைந்த பாத்திரங்கள்‌, அட்டைப்‌ பெட்டிகள்‌ மருந்துப்‌ போத்தல்கள்‌ போன்ற கூளங்‌ களுடன்‌ இப்போது காலியாக வெட்ட வெளியாக இருந்தன. ஆனால்‌ பருவச்‌ சூழ்நிலை ஆகஸ்டு பின்‌ பகுதியிலே திடீ ரென்று மாறியது. அப்போது அமைதி வந்தது, மேகமற்ற நாட்களும்‌ வந்தன. ஜூலையில்‌ இருந்ததை விட சூரிய ஒளி வாய்ந்ததாகவும்‌, மிகப்‌ பக்குவம்‌ வாய்ந்ததாகவும்‌, நாட்‌ கள்‌ வந்தன. வறண்ட வயல்களில்‌ குட்டையாக வெட்டப்‌ பட்டிருந்த மஞ்சள்‌ நிற அரிதாள்‌ கட்டைகளின்‌ மீது இலை யுதிர்‌ காலச்‌ சிலந்தி நூல்‌ மைக்கா போல மின்னின. மரங்கள்‌ அவற்றினுடைய அமைதியைக்‌ திரும்பப்‌ பெற்று மிக அடக்க மாக இலைகளை உதிர்த்துக்‌ கொண்டிருந்தன. மேற்குடியினரின்‌ தலைவரின்‌ மனைவி இளவரசி வேரா நிக்கலாயெவ்னா ஷேயினா தனது புறநகர்‌ வீட்டை விட்டு 
306 
நீங்க முடியாமல்‌ இருந்தாள்‌; ஏனெனில்‌ அவளது நகரத்து வீட்டில்‌ மராமத்து வேலைகள்‌ இன்னமும்‌ முடிவடையவில்‌ லை. இப்போது அந்த இன்பகரமான நாட்களால்‌, அமைதி யாலும்‌, தனிமையாலும்‌, தூய காற்றாலும்‌, தெற்கு மநாக்கிக்‌ கூட்டமாகப்‌ பறந்து செல்கின்ற போது தந்திக்‌ கம்பிகளின்‌ மீதிருந்த சிட்டுக்‌ குருவிகளின்‌ கலகலப்பொலி யாலும்‌, கடற்கரையிலிருந்து மெதுவாக வீசிய, கொஞ்சு இன்ற உப்புக்‌ கலந்த தென்றலாலும்‌ பெருமகிழ்ச்சியடைந்தாள்‌. 

மேலும்‌, அன்றைய நாள்‌ செப்டம்பர்‌ பதினேழு-— அவளு டைய பிறந்த நாளாகும்‌. தனது குழந்தைப்‌ பருவத்தினுடைய நெஞ்சார நேசித்த தூரமான நினைவுகளோடு அவற்றைத்‌ தொடர்புபடுத்தி அதை எப்போதுமே அவள்‌ நேசித்து வந்தி ருக்கிறாள்‌. ஒருவித அதிசயமான மகிழ்ச்சியை அது கொண்டு வரும்‌ என்று எப்போதுமே அவள்‌ எதிர்பார்த்தாள்‌. காலை யில்‌ அவசர வேலை நிமித்தம்‌ நகரத்திற்குப்‌ புறப்படுவதற்கு முன்பு, அவளுடைய கணவன்‌ பேரிக்காய்‌ வடிவமுடைய முத்துக்களால்‌ ஆன பிரகாசமான காதணிகள்‌ உள்ள ஒரு பெட்டியை அவளுடைய இரவு மேசையின்‌ மீது வைத்துச்‌ சென்றார்‌. அந்தப்‌ பரிசு அவளது மகிழ்ச்சியான மனநிலை யை மேலும்‌ அதிகப்படுத்தியது. 
அவள்‌ வீட்டிலே தனியாக இருந்தாள்‌. அவார்களோடு வழக்கமாக வசித்து வந்த, அவளுடைய திருமணமாகாத சகோதரன்‌ நிக்கலாய்‌, துணை அரசு வழக்குரைஞன்‌, வழக்கு விசாரணைக்காக நகரத்திற்குப்‌ போயிருந்தார்‌. அவளுடைய கணவன்‌ அவர்களுடைய நெருக்கமான ஓரிரு நண்பர்களைத்‌ தவிர மற்றவர்களை அழைத்து வரவில்லை என்று உறுதி கூறியிருந்தார்‌. அவளுடைய பிறந்த நாள்‌ கோடைப்‌ பருவத்‌ தின்‌ போது இருந்தது அதிருஷ்டமானது, ஏனெனில்‌ நகரத்‌ இல்‌ ஒரு பெரும்‌ விருந்திற்காக அவர்கள்‌ அதிகமான பணம்‌ செலவழிக்க வேண்டி வந்திருக்கும்‌. அதே வேளை இங்கே செலவுகளை மிகக்‌ குறைந்த அளவுக்குக்‌ குறைத்துக்‌ கொள்ள முடியும்‌. சமூகத்தில்‌ அவருடைய செல்வாக்கிற்கு மாறாக அல்லது அதன்‌ காரணமாகக்‌ கூட, வரவையும்‌ செல வையும்‌ சரிக்கட்டுவதற்கு இளவரசன்‌ ஷேயினுக்குக்‌ கஷ்ட 
30) 4 307 
மாக இருந்தது. அவருடைய முன்னோர்களால்‌ மிகப்‌ பெரும்‌ குடும்பச்‌ சொத்து ஏறக்குறைய நாசமாக்கப்பட்டு விட்டது, அதே சமயத்தில்‌ அவருடைய நிலை, வருமானத்‌ திற்கு மேலாக வாழும்படி கட்டாயப்‌ படுத்தியது; வர வேற்புக்‌ கொடுத்தல்‌, நன்கொடைகள்‌ வழங்குதல்‌, நன்கு ஆடையணிதல்‌, குதிரைகளை வைத்துக்‌ கொள்ளுதல்‌ போன்ற பிற. இளவரசி வேரா, குனது கணவனிடம்‌ வைத்‌ திருந்த முந்தைய உணர்ச்சிகரமான அன்பு, ஓர்‌ உண்மையான நீடித்த நட்பாக மாறிய போது, அவருடைய முழுமையான அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும்‌ எடுத்துக்‌ கொண்டாள்‌. அதைப்‌ பற்றி அவர்‌ சந்தேகிக்காத படி, அவளுக்கு வேண்டிய பல பொருள்கள்‌ இன்றியே கழித்‌ தாள்‌, வீட்டு நிர்வாகத்தையும்‌ முடிந்தளவுக்குச்‌ சிக்கன மாக நடத்தினாள்‌. 
விருந்து மேசைக்கான பூக்களைக்‌ கவனமாக வெட்டிக்‌ கொண்டு, அவள்‌ இப்போது தோட்டத்திற்குள்ளாக நடந்து கொண்டிருந்தாள்‌. அந்தப்‌ பூ மெத்தைகள்‌, வெறுமையாக வெட்டப்பட்டு புறக்கணித்த தோற்றத்துடன்‌ இருந்தன. பல்வேறு வண்ணங்களில்‌ இரட்டைத்‌ தோற்றங்கள்‌ அவற்‌ றின்‌ மிகச்‌ சிறந்த நிலையைத்‌ தாண்டி விட்டன, ஆகவே தூர்கள்‌ பாதி மலர்ச்சியாக இருந்தன, முட்டைக்‌ கோசின்‌ மணத்தைப்‌ பரப்பிய மெல்லிய, பச்சை நெற்றுகளால்‌ பாதிச்‌ சுமையேற்றப்பட்டிருந்தன; ரோஜாப்‌ புதர்களிலே, அந்தக்‌ கோடையில்‌ மூன்றாவது முறையாக மொட்டுகள்‌ மலர்ந்து கொண்டிருந்தன, இன்னமும்‌ கூட வளர்ச்சி குன்றிய மொட்டு களும்‌ மலர்களும்‌ அதில்‌ இருந்தன. ஆனால்‌ தாலியாக்கள்‌, போனீஸ்கள்‌ மற்றும்‌ சாமந்திகள்‌ போன்ற பூக்கள்‌ தங்‌ களுடைய செருக்கு வாய்ந்த அழகால்‌, சந்தடியற்ற காற்றில்‌, புல்‌ தன்மையோடு கூடிய சோகமான இலையுதிர்‌ கால மணத்‌ கை நிரப்பியபடி ஆர்ப்பரித்தன. தங்களுடைய செழுமை யான காதலையும்‌ மிகுதியாகப்‌ பழுக்கக்‌ கூடிய தாய்மைக்‌ காலத்தையும்‌ இழந்து விட்ட மற்ற பூக்கள்‌, வருங்கால வாழ்க்கைக்காக எண்ணிலடங்கா விதைகளை அமைதியாகக்‌ கீமே போட்டுக்‌ கொண்டிருந்தன. 
இளவரசி வேராவின்‌ சகோதரி ஆன்னா நிக்கலாயெவ்‌ னா பிரியேஸ்ஸே அங்கு வந்து கொண்டிருக்கிறாள்‌ என்பதை அறிவிக்கின்ற மோட்டார்‌ காரின்‌ ஓலி பக்கத்து நெடுஞ்‌ 
308 
பாலையில்‌ கேட்டது. வீட்டுக்காரியங்களுக்கு உதவி செய்ய ௮ம்‌, விருந்தினர்களை வரவேற்கவும்‌ தான்‌ வரவிருப்பதாக அன்று காலை அவள்‌ தொலைபேசியில்‌ தெரிவித்திருந்தாள்‌. 
வேராவினுடைய கூர்மையான காது அவளை ஏமாற்ற வில்லை. அவளது வருகையை எதிர்‌ நோக்கி வெளியே சென்றாள்‌. சில நிமிடங்கள்‌ கழித்து ஒரு மிடுக்கான அடைப்பு வண்டி படலையில்‌ வந்து நின்றது; மோட்டார்‌ ஒட்டி நளின யாகக்‌ குதித்து, கதவை வேகமாகத்‌ திறந்தான்‌. 
இரு சகோதரிகளும்‌ மகிழ்ச்சியோடு முத்தமிட்டுக்‌ கொண் (பார்கள்‌. இதமான அன்பு இளமை வயதிலிருந்தே அவர்‌ களைப்‌ பின்னிப்‌ பிணைத்திருந்தது. அவர்களுடைய தோற்‌ றத்திலே முற்றிலும்‌ வேறு பட்டவர்களாக இருந்தார்கள்‌. மூத்த சகோதரி வேரா தனது தாயை ஓத்திருந்தாள்‌, அவள்‌ ஓர்‌ அழகான ஆங்கில நாட்டுப்‌ பெண்‌; அவளுக்கு உயரமான, நளினமான உருவம்‌, மென்மையான ஆனால்‌ கடுமையும்‌ கார்வமும்‌ கலந்த முகம்‌, நன்கு அமைக்கப்பட்ட அனால்‌ சற்று பெரிய கைகள்‌, கவர்ச்சிகரமான சாய்ந்த கோள்கள்‌, பழைய நுணுக்க ஓவியங்களில்‌ காணப்படுவது போன்ற உரு வம்‌. ஆனால்‌ இளைய சகோதரி ஆன்னா குன்‌ தந்தையின்‌ மங்கோலியத்‌ தன்மைகளைப்‌ பெற்றிருந்தாள்‌, ஒரு தாத்‌ காரிய இளவரசன்‌, அவருடைய தாத்தா பத்தொன்பதாம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்பத்தில்‌ கிறிஸ்துவ மதத்தில்‌ சேர்ந்து கொண்டார்‌. அவருடைய மூதாதையர்கள்‌ தமெர்லான்‌ வழி வந்தவர்கள்‌, அல்லது கைமூர்‌-லென்க்‌, அந்தப்‌ பெயரால்‌ கான்‌ அந்தக்‌ கொலைகாரனை அவளது அப்பா பெருமை யோடு அழைத்தார்‌. தனது சகோதரியை விட தலைக்குப்‌ பாதி உயரத்தில்‌ நின்று கொண்டிருந்த அவள்‌ அகலமான கோள்களும்‌, சுறுசுறுப்பும்‌ வேடிக்கைக்‌ தன்மையும்‌ வாய்க்‌ கப்பட்டிருந்தாள்‌. மற்றவர்களைக்‌ கேலி செய்வதில்‌ விருப்ப முள்ளவள்‌. குறிப்பிடும்‌ படியாக மங்கோலிய வடிவமைந்‌ திருந்தது அவளுடைய முகம்‌: தூக்கலாகத்‌ தெரிந்த கன்ன எலும்புகள்‌, கிட்டப்பார்வை காரணமாக அவள்‌ தனது சுருங்கிய கண்களை அடிக்கடி சுருக்கிக்‌ கொண்டு பார்ப்பது, கர்வமான தோற்றம்‌, புலன்‌ கவர்ச்சி வாய்ந்த வாய்‌, குறிப்‌ பாக இலேசாக முன்னுக்கு வந்து நிற்கக்‌ கூடிய கீழ்‌ உதடு ஆகியன. எனினும்‌ ஓர்‌ இனமறியாத மருட்சி தருகின்ற ஒரு கவர்ச்சி அவளது முறுவலிப்பிலே இருந்தது, அவளுடைய 
209 
தோற்றங்களில்‌ எல்லாம்‌ ஆழமான பெண்‌ தன்மை வாய்ந்‌ திருந்தது, அல்லது அது மற்றவர்களுக்குப்‌ பொய்யாக ஆசை யூட்டும்‌, நடிப்புக்‌ காதல்‌ புரிகிற தன்மையாக இருக்கலாம்‌. அவளுடைய நயமான அழகுக்‌ குறைவே பல அண்களை மிகவும்‌ அடிக்கடி கவர்ந்தது, மேலும்‌ அவளுடைய சகோதரி யினுடைய உயர்குடித்‌ தன்மையை விட அது வலுவாகக்‌ கவர்ந்தது. 
பணக்காரனும்‌, மதி நுட்பமற்றவனுமான ஒருவனுக்கு அவள்‌ மணம்‌ முடிக்கப்பட்டிருந்தாள்‌. ஏதோ ஒருவகையான அறக்கட்டளைக்‌ குழுவில்‌ இருந்தாலும்‌, கம்மர்ஜங்கர்‌ மேற்‌ குடியினரின்‌ முதற்‌ பிரிவு என்ற கெளரவப்‌ பட்டம்‌ பெற்றி ருந்தாலும்‌ அவர்‌ சுத்தமாக எதுவும்‌ செய்யவில்லை. தன்‌ கணவனை அருவருப்போடு பார்த்தாள்‌, அனாலும்‌ அவருக்கு இரண்டு குழந்தைகள்‌ பெற்றுத்‌ தந்தாள்‌, ஒரு பையன்‌, ஒரு பெண்‌; அதற்கு மேல்‌ குழந்தை பெறுவதில்லை என்று முடிவு செய்திருந்தாள்‌. ஆனால்‌ வேரா, குழந்தைகள்‌ பெற்‌ றுக்‌ கொள்வதற்கு மிகவும்‌ ஆசைப்பட்டாள்‌, அவளுக்கு ஒன்றுமில்லை. மனநிலை திரிந்த நிலையில்‌, தன்‌ தங்கையி னுடைய அழகான ஆனால்‌ சோகை பிடித்த குழந்தைகளைக்‌ கொண்டாடினாள்‌. எப்போதுமே நல்ல நடத்தையும்‌, பணி வும்‌ கொண்ட அவர்கள்‌, வெளிறிய மாப்போன்ற முகங்‌ களையும்‌, சணல்‌ நிறமுடைய வளைந்த பொம்மை முடியும்‌ பெற்றிருந்தார்கள்‌. 
ஆன்னா எப்பொழுதுமே மகழ்ச்சி நிரம்பிய கட்டுப்‌ பாடின்மையையும்‌, சபலத்தன்மை வாய்ந்த முரண்பாடு களையும்‌ பெற்றிருந்தாள்‌. எல்லாத்‌ தலைநகரங்களிலும்‌, ஐரோப்பாவின்‌ நலவாழ்வுப்‌ புகலிடங்களிலும்‌ உள்ள மிகவும்‌ கவலையற்ற காதல்‌ விளையாட்டாளர்களிடம்‌ சுலபமாகத்‌ குன்னைக்‌ கொடுத்து விடுவாள்‌, ஆனால்‌ தன்‌ கணவனுக்கு அவள்‌ உண்மையில்லாதவளாக இருந்ததில்லை. எனினும்‌ அவனை அவனது முகத்திற்கு நேராகவும்‌, பின்னாலும்‌ மிக வெறுப்போடு கேலி செய்வாள்‌. அதிகச்‌ செலவாளி; சூதாட்‌ டம்‌, நடனங்கள்‌, புதிய மனப்பதிவுகள்‌, பரபரப்பூட்டும்‌ காட்சிகள்‌ இவற்றில்‌ பெரு விருப்புக்‌ கொண்டிருந்தாள்‌. வெளிநாடு போகும்‌ போது சந்தேகத்திற்குரிய ஓட்டல்‌ களுக்கு அடிக்கடி போவாள்‌. அதே நேரத்தில்‌ பொதுவாகப்‌ பெருந்தன்மை உள்ளவளாகவும்‌, ஆழ்ந்து உண்மையான 
310 
மதப்பற்று கொண்டவளாகவும்‌ இருந்தாள்‌, ரகசியமாக கத்தோலிக்காக மாறியும்‌ விட்டாள்‌. அவளது இடை, மார்‌ பகம்‌, தோள்கள்‌ அதிக அழகுடையனவாக இருந்தன. நாக ரிகமோ, புதுநடைப்‌ பாணியோ அநுமதிக்கின்ற எல்லை களைத்‌ தாண்டுகன்ற அளவுக்கு அவள்‌ உடையில்லாமல்‌ இருந்தாள்‌. ஆனால்‌ தாழ்ந்த உடையணியும்‌ போது அவள்‌ எப்போதுமே துறவிகள்‌ அணியும்‌ கனத்த அங்கி அணிந்து கொண்டாள்‌ என்று அவர்கள்‌ சொன்னார்கள்‌. 
வேராவோ, அதற்கு மாறாக எல்லாரும்‌ ஏற்கும்‌ ஆதரவு நல்குகின்ற முறையில்‌ மிகவும்‌ கண்டிப்பான, பழக்க வழக்‌ கங்களைக்‌ கொண்டிருந்தாள்‌, ஓர்‌ அரசியைப்‌ போலத்‌ தனித்து நின்றாள்‌. 

“என்‌ கடவுளே, இங்கே எவ்வளவு இனிமையாக இருக்‌ கிறது! எவ்வளவு நன்றாக இருக்கிறது!” தன்‌ சகோ தரிக்குப்‌ பக்கத்திலே அந்தப்‌ பாதை வழியாக வேகமாகச்‌ சின்ன அடியிட்டு நடந்து போன போது ஆன்னா சொன்னாள்‌. ““அந்தச்‌ செங்குத்தான மேட்டிற்கு மேலே உள்ள பெஞ்சில்‌ நாம்‌ சற்று நேரம்‌ உட்காரலாம்‌, உனக்கு மறுப்பு இல்லை என்றால்‌. நான்‌ கடலைப்‌ பார்த்து நீண்ட காலமாகி விட்‌ டது. இங்கே காற்று அவ்வளவு அருமையாக இருக்கிற து-- அது நமது இதயத்திற்கு மகிழ்ச்சியைத்‌ தருகிறது. போன கோடையில்‌, கிரீமியாவில்‌ உள்ள மிஸ்ஹோரில்‌ வியப்பூட்டு கிற கண்டு பிடிப்பு ஒன்றைச்‌ செய்தேன்‌. நுரைத்‌ கண்ணீ ரில்‌ என்ன வாசனை வருகிறதென்று உனக்குத்‌ தெரியுமா? சற்றே கற்பனை செய்து பார்‌- நறுமண மலர்கள்‌ போல மணக்கிறது.” 
வேரா பாசத்தோடு முறுவலித்தாள்‌. 
“நீ எப்போதுமே விஷயங்களைக்‌ கற்பனை செய்‌ கிறாய்‌.” 
“இல்லை, நான்‌ அப்படியில்லை. ஒரு முறை, நிலவொளி இளஞ்சிவப்பு நிழலைக்‌ கொண்டிருக்கிறதென்று நான்‌ சொன்ன போது, எல்லாரும்‌ என்னைப்‌ பார்த்துச்‌ சிரித்தார்‌ கள்‌. இது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால்‌ சில நாட்களுக்கு முன்னர்‌ என்னுடைய படத்தை வரைகின்ற கலைஞராகிய பரீத்ஸ்கி நான்‌ சொன்னது சரி என்றும்‌, கலைஞர்கள்‌ அதை 
311 
நீண்ட காலமாகவே அறிந்து வைத்திருப்பதாகச்‌ சொன்‌ னார்‌.” 
““அந்த ஒவியர்‌ உனது சமீபத்திய மையமா?” 
“உனக்கு எப்போது பார்த்தாலும்‌ விசித்திரமான கருத்து கள்‌ ஏற்படுகின்றன!” ஆன்னா சிரித்தாள்‌, பிறகு கடலுக்‌ குள்‌ ஆழமாக ஒரு சுவராக முடிந்திருந்த மேட்டு நிலத்தினு டைய விளிம்புக்கு விரைந்து நடந்து சென்றாள்‌. தலையைக்‌ குனிந்து பார்த்தவள்‌, திடீரென்று மிகுந்த அச்சத்தோடு கத்தினாள்‌, பின்னுக்குத்‌ திரும்பினாள்‌, அவளது முகம்‌ வெளுத்திருந்தது. 
“யோ, என்ன உயரம்‌!” அவளுடைய குரல்‌ மிக மென்மையானதாகவும்‌, நடுக்கமானதாகவும்‌ இருந்தது. ““£இவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்து நான்‌ பார்க்கின்ற போது ஒருவகையான இனிய அருவருப்பான நடுக்கத்தைத்‌ கருகிறது... எனது கால்விரல்கள்‌ கூட வலிக்கின்றன... இருந்தாலும்‌, அதன்‌ கவர்ச்சிக்கு உட்பட்டவளாக இருக்‌ கிறேன்‌...” 
மறுபடியும்‌ கழ்‌ நோக்கிப்‌ பார்ப்பதற்குத்‌ தயாராக இருந் தாள்‌, அனால்‌ அவளது சகோதரி அவளைப்‌ பின்னுக்கு இழுத்தாள்‌. 
“கடவுள்‌ பெயரால்‌ சொல்கிறேன்‌, ஆன்னா அன்பே! நீ அவ்வாறு செய்கிற போது எனக்குக்‌ கிறுகிறுப்பு வருவ தாக உணர்கிறேன்‌. உட்கார்‌, உன்னைக்‌ கெஞ்சிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. ?” 
“சரி, சரி, நான்‌ உட்கார்கிறேன்‌... ஆனால்‌ அது எவ்‌ வளவு அழகாக இருக்கிறது பார்‌, எவ்வளவு உணர்ச்சியூட்டு வதாக இருக்கிறது பார்‌ இதையே முழுமையாக நம்மால்‌ பார்க்க முடியாது. கடவுள்‌ நமக்காகச்‌ செய்திருக்கக்‌ கூடிய எல்லா அதிசயங்களுக்கும்‌ நான்‌ அவருக்கு எவ்வளவு நன்றி யுடையவளாக இருக்கிறேன்‌ என்பதை நீ அறிந்தால்‌!” 
இருவருமே கண நேரம்‌ சிந்திக்க ஆரம்பித்தார்கள்‌. கடல்‌, நீண்ட தூரம்‌ கீழே அமைதியாக இருந்தது. பெஞ்‌ சிலிருந்து கடற்கரையைப்‌ பார்க்க முடியாது இருந்தது. அது அந்தக்‌ கடலினுடைய கம்பீரத்தையும்‌, பெருமையை யும்‌ உயர்த்தியது. அலைகளைக்‌ குறிக்கக்‌ கூடிய அந்த நீர்கற்றைகளைத்‌ தவிர நீர்‌ அமைதியாகவும்‌, நட்புத்தன்‌ 
212 
அம வாய்ந்ததாகவும்‌ இருந்தது. தொடு வானத்திலே அவை ரிக அழுத்தமானதாக மாறின. 
மீன்‌ பிடிப்‌ படகுகள்‌, கெளிவாகத்‌ தெரியாதபடி, கடற்‌ கரையிலிருந்து மிகத்‌ தொலைவிலில்லாது மென்மையான கண்ணீரிலே அமைதியாகத்‌ தூங்கிய நிலையில்‌ இருந்தன. இன்னும்‌ சற்று தொலைவிற்கு அப்பால்‌ முப்பாய்‌ மரக்‌ கப்பல்‌ ஒன்று அடியிலிருந்து உச்சி வரை வெண்மையாக மூடப்பட்டு, வடிவமைந்த கப்பற்பாய்கள்‌ காற்றினாலே புடைத்தபடி- நகராமல்‌ ஆகாயத்தில்‌ நிலைக்‌ குத்தி இருப்‌ து போலக்‌ காணப்பட்டது. 
“நீ என்ன மனத்தில்‌ வைத்திருக்கிறாய்‌ என்பது தெரி கிறது,*”? என்று மூத்த சகோதரி சிந்தனையில்‌ ஆழ்ந்தவ ளாகச்‌ சொன்னாள்‌. “*அனால்‌ ஒருவகையில்‌ நீ நினைப்பது போல நான்‌ கருதவில்லை. கடலை முதன்‌ முறையாக ஒரு நீண்ட இடைவெளிக்குப்‌ பிறகு நான்‌ பார்க்கின்ற போது அது எனக்குப்‌ பரபரப்பூட்டி தடுமாற வைக்கிறது. இதற்கு முன்‌ பார்த்திராத ஒரு தெய்விக விந்தையை நான்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பது போல உணர்கிறேன்‌. ஆனால்‌ அதற்கு நான்‌ பழகிய பிறகு, அதனுடைய ஒரு மந்தமான வெறுமை என்னை அழுத்தத்‌ தொடங்குகிறது... அதை நான்‌ பார்க்கும்‌ போது மனச்‌ சலிப்படைகிறேன்‌. அதை மறுபடியும்‌ பார்க்‌ காதிருக்க முயல்கிறேன்‌. இது சலிப்பைகத்‌ தரும்‌.?” 
ஆன்னா முறுவலித்தாள்‌. 
“அது என்ன?” என்று சகோதரி கேட்டாள்‌. 
“போன கோடையில்‌,” ஆன்னா மறைக்கும்‌ பாங்கில்‌ சொன்னாள்‌, ““யால்தாவிலிருந்து உச்‌-கோஷ்‌ வரை நாங்‌ கள்‌ ஒரு பெரும்‌ குதிரைச்‌ சவாரிப்‌ பயணம்‌ மேற்கொண் டோம்‌. அது காட்டுக்காரார்களுடைய வீட்டுக்கப்பால்‌, அருவி களுக்கு மேலே இருந்தது. முதலில்‌ நாங்கள்‌ பனி மூட்டத்‌ இற்குள்‌ சுற்றியலைந்தோம்‌. அது மிக ஈரப்பதமாக இருந்த கால்‌ எங்களால்‌ தெளிவாகப்‌ பார்க்க முடியவில்லை. ஆனால்‌, பைன்‌ மரங்களுக்கு இடையிலுள்ள செங்குத்தான பாதை வழியாக, மேன்மேலும்‌ ஏறினோம்‌. பிறகு அந்தக்‌ காடு முடிந்தது, நாங்கள்‌ மூடு பனியைக்‌ தாண்டி விட்டோம்‌. ஒரு மலை உச்சியின்‌ மேல்‌ ஒரு குறுகிய பாதையையும்‌ அதற்‌ நக்‌ கழே ஒரு பள்ளத்தாக்கையும்‌ கற்பனை செய்து பார்‌. அந்தக்‌ கிராமங்கள்‌ தீப்‌ பெட்டிகளை விடப்‌ பெரியதாகத்‌ 
313 
தோன்றவில்லை, காடுகளும்‌, தோட்டங்களும்‌, ஒருவிதத்‌ தில்‌ புல்போலத்‌ தோற்றமளித்தன. அந்த நிலவெளி முழு வதுமே வரைபடம்‌ போலக்‌ கீழே கிடந்தது. அதற்கும்‌ கீழே அந்தக்‌ கடல்‌ ஐம்பது அல்லது நூறு மைல்‌ தூரம்‌ நீண்டு கிடந்தது. ஆகாயத்தின்‌ நடுவில்‌ தொங்கிக்‌ கொண்டிருப்‌ பதாகவும்‌, பறக்கப்‌ போவதாகவும்‌ நான்‌ கற்பனை செய்‌ தேன்‌. அது எவ்வளவு அழகாக இருந்தது, அது என்னை அவ்வளவு மெல்லிய நிலையில்‌ உணரச்‌ செய்தது! அப்பக்‌ கம்‌ திரும்பி வழி காட்டியிடம்‌ மகிழ்ச்சியோடு சொன்னேன்‌: “நல்லது, செயீத்‌ ஒஓக்லு, இது மிக அழகாக இருக்கிறதல்‌ லவா?” அவனுடைய நாக்கால்‌ “கிளிக்‌” ஓசை எழுப்பிச்‌ சொன்‌ னான்‌: “ஆமாம்‌, அம்மையாரே, இவற்றோடு நான்‌ எவ்வளவு சலித்துப்‌ போனேன்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாது. நான்‌ அதை ஒவ்வொரு நாளும்‌ பார்க்கிறேன்‌.” ”” 
“உனது உவமைக்கு நன்றி,” என்றாள்‌ சிரிப்புடன்‌ வேரா. ““அனால்‌ வட பகுதிக்காரர்களாகிய நாங்கள்‌ கடலி னுடைய கவர்ச்சியை ஒருபோதும்‌ புரிந்து கொள்ள முடீயா தென்று அழுத்தமாக நினைக்கிறேன்‌. நான்‌ காட்டை நேசிக்கிறேன்‌. எங்களுடைய யெகோரொவ்ஸ்கொயே காட்டை உனக்கு நினைவிருக்கிறதா?.. அதனால்‌ நாம்‌ எங்‌ ஙனம்‌ சலிப்படைய முடியும்‌? பைன்‌ மரங்கள்‌! என்ன பாசி கள்‌! வெள்ளைக்‌ குமிழ்‌ மணிகளுடன்‌ சிவப்புப்‌ பட்டால்‌ பின்னல்‌ வேலை செய்யப்பட்டது போல காணப்படும்‌ நச்சுக்‌ காளான்கள்‌. அது அவ்வளவு அமைதியாகவும்‌... அவ்வளவு குளிர்த்தன்மை வாய்ந்ததாகவும்‌ இருக்கிறது.” 
“எனக்கு எந்த வேறுபாடும்‌ இல்லை. எல்லாம்‌ எனக்குப்‌ பிடிக்கும்‌,” திற்கும்‌ சிறப்பாக என்னுடைய அக்காவைத்தான்‌, எனது 
என்று ஆன்னா மறுதலித்தாள்‌. “ஆனால்‌ அனைத்‌ 
அன்புக்குரிய கூரறிவுடைய வேராவை எனக்குப்‌ பிடிக்கும்‌. நாங்கள்‌ இரண்டு பேர்தானே இந்த உலகத்தில்‌ இருக்‌ கிறோம்‌, உனக்குத்‌ தெரியுமல்லவா??? 
தனது கையைச்‌ சகோதரியைச்‌ சுற்றிப்‌ போட்டுக்‌ கொண்டு கன்னத்தோடு கன்னம்‌ உரசினாள்‌. திடீரென்று திடுக்குற்றாள்‌. 
““அனால்‌ நான்‌ எவ்வளவு மடத்தனமாக இருக்கிறேன்‌! நாவலில்‌ வரும்‌ பாத்திரத்தைப்‌ போல இங்கே நாம்‌ உட்‌ கார்ந்து இயற்கையைப்‌ பற்றிப்‌ பேசிக்‌ கொண்டிருக்கிறோம்‌. 
214 
என்னுடைய அன்பளிப்பைப்‌ பற்றி நான்‌ முற்றிலும்‌ மறந்து விட்டேன்‌. இதோ, பார்‌. அது உனக்குப்‌ பிடிக்காதோ என்று ।।யப்படுகிறேன்‌.”” 
அவளுடைய கைப்‌ பையிலிருந்து புதுமையாக பைபண்டு செய்யப்பட்ட ஒரு சிறிய குறிப்பேட்டை எடுத்தாள்‌: பழைய நீல நிற வெல்வெட்டுப்‌ பின்னணியில்‌, காலத்தால்‌ வெளிறிப்‌ போன மிக நுண்மையான கோவையும்‌ அழகுமிக்க அமைப்‌ பும்‌ வாய்ந்த ஒரு மங்கிய தங்கச்‌ சரிகைச்‌ சித்திர வேலைப்‌ பாட்டுடன்‌ சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. அது மிகவும்‌ திறமை வாய்ந்த, நுட்பமான கலைஞனுடைய கடினக்கலை ஆக்கம்‌. அந்தக்‌ குறிப்பேடு ஒரு தங்கச்‌ சங்கிலியால்‌ நூல்‌ போல மெல்லியதாக இணைக்கப்பட்டிருந்தது, உள்ளே தாள்‌ களுக்குப்‌ பதிலாகத்‌ தந்தக்‌ தகடுகள்‌ வைக்கப்பட்டிருந்தன. 
“என்ன அழகு! பகட்டாக இருக்கிறது!” என்று சொல்லி வேரா தன்‌ சகோதரியை முத்தமிட்டாள்‌. “நன்றி. இந்தச்‌ செல்வத்தை நீ எங்கே பெற்றாய்‌?'” 
“தொன்மைப்‌ பொருள்கள்‌ உள்ள கடையில்‌. பழைய குப்பைகளைக்‌ கிளறுவதில்‌ உள்ள எனது பலவீனம்‌ உனக்குத்‌ தெரியுமல்லவா? இந்த வழிபாட்டுப்‌ புத்தகத்தை அப்படித்‌ தான்‌ கண்டேன்‌. ஆபரணம்‌ இந்த இடத்தில்‌ சிலுவை மாதிரி எங்ஙனம்‌ உருவம்‌ அடைகிறது என்று பார்‌. நான்‌ இந்தப்‌ பைண்டிங்கைத்‌ தான்‌ பார்த்தேன்‌; ஒவ்வொன்றையும்‌ கூட _— பக்கங்கள்‌, பிடிப்புகள்‌, பென்சில்‌_— நானே தான்‌ நினைக்க வேண்டியதாக இருந்தது. என்னுடைய கருத்தை மல்லி னேயிடம்‌ விளக்குவதற்கு நான்‌ முயற்சி செய்தாலும்‌ எதை நான்‌ விரும்புகிறேன்‌ என்பதை அவனால்‌ தெரிந்து கொள்ள முடியவில்லை. கொக்கிகள்‌ முழு அமைப்பைப்‌ போலவே செய்திருக்கப்பட வேண்டும்‌-— மந்தமாகவும்‌, பழைய தங்‌ கத்தால்‌ செய்யப்பட்டு நுண்மையாகச்‌ செதுக்கப்பட்டு ஆனால்‌ அவன்‌ என்ன செய்தாதென்பது கடவுளுக்குத்தான்‌ தெரியும்‌. எனினும்‌, இந்தச்‌ சங்கிலி சுத்தமான வெனீசிய வேலைப்‌ பாடமைந்தது, மிகப்‌ பழையது.” 
பாராட்டுகின்ற முறையில்‌ அந்த பிரமாதமான பைண்‌ டிங்கை வேரா கையால்‌ வருடினாள்‌. 
“என்ன செழுமையான பழமை!.. இந்தக்‌ குறிப்பேடு எவ்வளவு பழமையானது என்று வியக்கிறேன்‌,” என்றாள்‌. 
““நான்‌ ஊகிக்கத்தான்‌ முடியும்‌. பதினேழாம்‌ நூற்றாண்‌ 
215 
டின்‌ பிற்பகுதியில்‌ அல்லது பதினெட்டாம்‌ நூற்றாண்டின்‌ இடையில்‌ அதன்‌ காலம்‌ இருக்க வேண்டும்‌...” 
“எவ்வளவு விநோதமானது,” என்றாள்‌ வேரா வருந்‌ குந்தோய்ந்த முறுவலிப்புடன்‌. ““மார்கியூசி டீ பாம்படோர்‌* அல்லது அரசி மரீ அன்டுவனேட்‌ கைகளிலே பட்டிருக்கக்‌ கூடிய பொருளை நான்‌ என்‌ கையிலே வைத்துக்‌ கொண்டிருக்‌ கிறேன்‌... ஓ, ஆன்னா, ஒரு வழிபாட்டுப்‌ புத்தகத்திலிருந்து ஒரு பெண்ணிணுடைய குறிப்பேட்டைக்‌ தயாரிப்பது, அது உன்னைப்‌ போலவே இருக்கிறது. சரி, நாம்‌ உள்ளே போய்‌ என்ன நடக்கிறது என்று பார்ப்போம்‌.” 
எல்லாப்‌ பக்கங்களிலும்‌ இசபெல்லா திராட்சைக்‌ கொத்துகளின்‌ பின்னல்‌ அமைப்பினால்‌ சூழப்பட்ட சதுரக்‌ கல்‌ பதிக்கப்பட்ட நீண்ட தாழ்வாரத்தைக்‌ கடந்து அவர்கள்‌ வீட்டிற்குள்ளே சென்றார்கள்‌. கரும்பச்சை நிறத்தினிடை யே ஸ்டாபெரியைப்‌ போல மென்மையாக மணம்‌ வீசிக்‌ கொண்டு கனமாகத்‌ தொங்கிக்‌ கொண்டிருந்த கரிய வள மான கொத்துகள்‌ சூரியனால்‌ முலாம்‌ பூசப்பட்டது போல இங்கு மங்கும்‌ மின்னியது. அந்தத்‌ தாழ்வாரமானது பச்சை நிறமான அரை ஒளியில்‌ தன்னை இழந்திருந்தது. அது அந்த இரு பெண்களுடைய முகத்திலும்‌ ஒரு வெளிறிய பிரதிப லிப்பை உருவாக்கியது. 
““விருந்து இங்கே தான்‌ பரிமாறப்பட விருக்கிறதா?'? என்று ஆன்னா கேட்டாள்‌. 
“அப்படித்தான்‌ முதலில்‌ நினைத்திருந்தேன்‌... ஆனால்‌ மாலைப்‌ பொழுது இப்போது மிகவும்‌ குளிராக இருக்கிறது. உணவுக்‌ கூடமே சரியாக இருக்கும்‌ என்று நினைக்கிறேன்‌. ஆண்கள்‌ இங்கே புகைப்பதற்கு வரக்‌ கூடும்‌.” 
“பார்ப்பதற்குத்‌ தகுதியான ஆட்கள்‌ யாரும்‌ வருவார்‌ களா??? 
““இன்னமும்‌ எனக்குத்‌ தெரியாது. நமது தாத்தாவை மட்டுந்தான்‌ எனக்குத்‌ தெரியும்‌.” 
“அ, செல்லத்‌ தாத்தா! எவ்வளவு நன்றாக இருக்‌ கிறது!” தனது கைகளைத்‌ தேய்த்துக்‌ கொண்டு ஆன்னா 
* பாம்படோர்‌ (1721-—1769)— பிரெஞ்சு மன்னன்‌ பதினைந்தாம்‌ லூயிக்கு விருப்பமானவள்‌, அரசு விவகாரங்‌ களில்‌ பெரும்‌ செல்வாக்குப்‌ பெற்றிருந்தாள்‌. (ப-ர்‌.) 
216 
கத்தினாள்‌. “அவரைப்‌ பார்த்து எவ்வளவோ காலமாகி விட்டது.” 
““வாஸ்யாவின்‌ சகோதரியும்‌ வந்து கொண்டிருக்கிறாள்‌. 2பராசிரியர்‌ சிபேஷ்னிகவ்‌ வருகிறார்‌ என்று நினைக்கிறேன்‌. நற்று அறிவே குழம்பிய நிலையில்‌ இருந்தேன்‌. ஏனென்‌ றால்‌ அவர்கள்‌ இருவருக்கும்‌ நல்ல உணவு பிடிக்கும்‌ என்பது உனக்குத்‌ தெரியும்‌- தாத்தாவுக்கும்‌ பேராசிரியருக்கும்‌. அனால்‌ இங்கோ நகரத்திலோ ஒரு சாமானும்‌ கிடைக்காது, காதலுக்கும்‌ கிடைக்காது காசுக்கும்‌ கிடைக்காது. லுக்கா எங்கேயோ பறவைகள்‌ கொண்டு வந்தான்‌-— ஒரு வேடு வனிடம்‌ அவற்றைச்‌ சொல்லியிருந்தான்‌-—அவற்றிடத்தில்‌ தனது திறமையை அவன்‌ இப்போது பயன்படுத்திக்‌ கொண்‌ டிருக்கிறான்‌. ஒப்பிட்டுப்‌ பார்க்கையில்‌ மாட்டிறைச்சி மோச மாக இல்லை. அந்தோ! தவிர்க்க முடியாத வறுத்த மாட்டி றைச்சி/மிக அருமையான நண்டுகளும்‌ நமக்கு இருக்கின்றன. ' ” 
“நல்லது, பார்க்கப்‌ போனால்‌ அவ்வளவு மோசமாகத்‌ தோன்றவில்லை. கவலைப்‌ படாதே. நமக்குள்‌ பேசிக்‌ கொள் வது என்றால்‌, உனக்கே நல்ல சாப்பாடு என்றால்‌ பிடிக்குந்‌ தானே.” 
““அனால்‌, இன்றைக்கு ஏதோ அரிய சாப்பாடு வைத்துக்‌ கொள்வோம்‌. இன்று காலையில்‌ மீனவன்‌ கடல்‌ சேவல்‌ ஒன்று கொண்டுவந்தான்‌. நானே அதைப்‌ பார்த்கேன்‌. அது உள்ள படியே ராட்சச மீன்‌. பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.” 
குன்னுடையதோ மற்றவர்களுடையதோ என்றில்லா மல்‌, எதையுமே ஆர்வமாகத்‌ துருவிப்‌ பார்க்கக்‌ கூடிய ஆன்னா, அந்த மீனை உடனடியாகப்‌ பார்ப்பதற்கு விரும்‌ பினாள்‌. 
லுக்கா, நன்கு முகம்‌ வழிக்கப்பட்ட உயரமான மனிதன்‌, மரக்கட்டை எழில்‌ விரிப்பில்‌ நீர்‌ கொட்டிவிடக்‌ கூடா தென்று, வெண்மையான நீள்‌ சதுர வட்டிலின்‌ பிடிவளையை சிரமத்தோடு தூக்கிக்‌ கொண்டு வந்தான்‌. 
““பன்னிரெண்டரைப்‌ பவுண்டு, மாட்சிமை தங்கிய அம்‌ மையே,'' என்று, ஒரு சமையல்காரனுக்குரிய வித்தியாச மான கர்வத்தோடு கூறினான்‌. :““நாங்கள்‌ அதைத்‌ திரும்ப வும்‌ நிறுத்துப்‌ பார்த்தோம்‌.” 
அந்த மீன்‌ வட்டிலுக்கு மிகப்‌ பெரிதாக இருந்தது. 
317 
அதனது வாலைச்‌ சுருட்டிக்‌ கொண்டு கிடந்தது. அதனது செதிள்கள்‌ தங்கத்தால்‌ ஆனது போல இருந்தன. அதனது துடுப்பு பிரகாசமான சிவப்போடு இருந்தது. நீளமான விசிறி போன்ற சிறகுகள்‌, அதனுடைய பெரிய தலையிலிருந்து தனித்து நிற்பது போலிருந்தது. அது இன்னமும்‌ உயிரோடு இருந்தது. அதனுடைய செவுள்கள்‌ இப்போதும்‌ சுறுசுறுப்‌ பாக வேலை செய்தன. 
அந்த மீனின்‌ தலையைத்‌ தங்கை தனது சின்ன விரல்‌ களால்‌ எச்சரிக்கையோடு தொட்டாள்‌. ஆனால்‌ அது தன்‌ னுடைய வாலால்‌ அடித்தது. ஆன்னா கிறீச்சொலி எழுப்‌ பியபடி கையைத்‌ திரும்ப எடுத்துக்‌ கொண்டாள்‌. 
“அதைப்‌ பற்றி நீங்கள்‌ கவலைப்படாதீங்க, மாட்சிமை தங்கிய அம்மையே. எல்லாவற்றையும்‌ நாங்கள்‌ மிகச்‌ சிறந்த முறையிலே ஏற்பாடு செய்கிறோம்‌,'' வேராவின்‌ கவலையை நன்கு உணர்ந்தவனாகச்‌ சமையல்காரன்‌ கூறினான்‌. ““இப்‌ போது தான்‌ ஒரு பல்கேரியன்‌ இரண்டு அன்னாசிப்‌ பழங்கள்‌ கொண்டு வந்தான்‌. அவை ஓரளவு முலாம்‌ பழங்கள்‌ போல இருக்கின்றன. அதன்‌ மணம்‌ இனிமையாக இருக்கிறது. நான்‌ உங்களைக்‌ கேட்கலாமா, மாட்சிமை தங்கிய ௮ம்‌ மையே, உங்களுக்கு மீனுடன்‌ என்ன இறைச்சிச்‌ சாறு வேண்‌ டும்‌, தாத்தர்‌ அல்லது போலந்துச்‌ சாறு வேண்டும்‌? அல்லது வெறுமனே வெண்ணையில்‌ உள்ள ரஸ்க்கா?'” 
““நீ விரும்பியபடியே செய்‌. நீ போகலாம்‌!'' என்று இளவரசி உத்தரவிட்டாள்‌. 

ஐந்து மணிக்குப்‌ பிறகு விருந்தினர்கள்‌ வரத்‌ தொடங் கினார்கள்‌. இளவரசன்‌ வசீலி லிவோவிச்‌ தன்னுடன்‌ தனது விதவைச்‌ சகோதரிலியூத்மீலா லிவோவ்னா துராசொவாவை அழைத்து வந்தார்‌. தடிப்பாகக்‌ காணப்பட்ட அந்தப்‌ பெண்‌ நல்ல குணம்‌ வாய்ந்தவள்‌, ஆனால்‌ அபூர்வமாகத்தான்‌ பேசி னாள்‌. வஸ்யூசோக்‌ செல்வம்‌ படைத்து, துடுக்குத்தனம்‌ கொண்ட பரத்தன்‌. அவனை நகரத்தில்‌ எல்லாரும்‌ அவனது வழக்கமான பெயரிலேயே அழைத்தார்கள்‌. பாடவும்‌, கவிதை இசைக்கவும்‌ தெரிந்ததனால்‌ அவன்‌ தோழமைக்‌ கேற்றவனாக இருந்தான்‌. நடிகர்‌ குழு, நாடகங்கள்‌ மற்றும்‌ 
318 
நன்கொடைக்‌ கடைகள்‌ ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்‌ கும்‌ அவனால்‌ முடியும்‌. புகழ்பெற்ற பியானோ வாசிப்பவ ளான ஜென்னி ரெய்தர்‌, இளவரசி வேராவினுடைய சிநே இதி, ஸ்மோல்னி நிறுவனத்தைச்‌ சேர்ந்தவள்‌ அவள்‌; இள வரசனுடைய மைத்துனன்‌ நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌ ஆகி யோர்‌ வந்தனர்‌. அவர்களுக்குப்‌ பிறகு ஒரு காரில்‌ ஆன்னா வினுடைய கணவன்‌, தடித்த, பருமனான பேராசிரியர்‌ சிபேஷ்‌ னிகவ்‌, துணை ஆளுநர்‌ வன்‌ ஸேக்‌ போன்றோரும்‌ வந்தனர்‌. கடைசியாக வந்தவர்‌ ஜெனரல்‌ அனோசவ்‌. அவர்‌ வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஓர்‌ அழகான லான்டாவில்‌ இரண்டு அலுவலர்கள்‌ உடன்வர வந்தார்‌: வயதுக்கு மேல்‌ தோற்றம்‌ வாய்ந்தவராக இருந்த கர்னல்‌ பனமரியோவ்‌, மெலிந்து பித்த உடம்புடன்‌, கடுமையான எழுத்து வேலை யினால்‌ தேய்ந்து போயிருந்தார்‌; ஹூஸ்ஸாரைச்‌ சேர்ந்த லைப்டினெண்ட்‌ பக்தீன்ஸ்கி தலை சிறந்த நடனக்காரர்‌ என்றும்‌ விழாக்களின்‌ தலைவர்‌ என்றும்‌ பீட்டர்ஸ்பர்க்கில்‌ புகழ்‌ பெற்றிருந்தார்‌. 
ஜெனரல்‌ அனோசவ்‌, வெள்ளை முடிவாய்ந்த வயதான மனிதர்‌, உயரமாகவும்‌ கொழுத்தும்‌ இருந்தார்‌. கொஞ்சம்‌ கனமான முறையில்‌ படிக்கட்டிலிருந்து அடியெடுத்து வைத்து இறங்கினார்‌. ஒற்றைக்‌ கையால்‌ பெட்டியின்‌ கம்பியைப்‌ பிடித்துக்‌ கொண்டு இறங்கினார்‌. வலது கையில்‌ ரப்பரால்‌ சுற்றப்பட்ட ஒரு தடி வைத்திருந்தார்‌. சதையுடன்‌ கூடிய மூக்குடன்‌ பெரிய முரட்டுத்தனமான சிவந்த முகத்தைக்‌ கொண்டிருந்தார்‌. அவருடைய குறுகிய கண்கள்‌ மூலம்‌ பார்த்‌ தார்‌. அடிக்கடி ஆபத்தையும்‌ சாவையும்‌ நேருக்கு நேர்‌ சந்தித்த வெள்ளை மனிதர்‌, சற்று இறுமாப்போடு மற்ற வர்களை நோக்கினார்‌. இரண்டு சகோதரிகளும்‌, தூரத்தில்‌ வரும்‌ போதே அவரை அடையாளம்‌ கண்டு கொண்டு லான்டேோ வரை, அவரைச்‌ சற்று நகைச்‌ சுவையோடு கைக ளிலே தாங்கிக்‌ கொள்வதற்காக வேகமாக ஓடினார்கள்‌. 
“நான்‌ தான்‌... பிஷப்‌ என்று நீங்கள்‌ நினைப்பீர்கள்‌!” * என்று ஜெனரல்‌ ஒரு நட்புக்கலந்த கம்மிய குரலில்‌ சொன்‌ னார்‌. 
“தாத்தா, செல்லத்‌ தாத்தா!'' என்று சற்று குற்றம்‌ சொல்வது போல வேரா கூறினாள்‌. ““இவ்வளவு காலமும்‌ உங்களை எதிர்பார்த்துக்‌ கொண்டிருந்தோம்‌. உங்களது 
319 
தோற்றத்தை ஓரளவு பார்ப்பதற்குக்‌ கூட எங்களை விட வில்லை.” 
“நம்முடைய தாத்தா தெற்குப்‌ பகுதியிலே எல்லா வெட்‌ கத்தையும்‌ விட்டு விட்டார்‌,” என்று சிரிப்புடன்‌ கூறினாள்‌ ஆன்னா. “ “உங்களுடைய ஞான மகளை நீங்கள்‌ நினைக்‌ காதது போல. நீங்களோ வந்து வெட்கமில்லாது நடந்து கொள்கிறீர்கள்‌. எங்களை எல்லாம்‌ முழுக்க மறந்து விட்டீர்‌ கள்‌...” 
மிடுக்கான தனது தலையைத்‌ திறந்து காட்டிய ஜெனரல்‌, சகோதரிகளின்‌ கைகளிலே முத்தமிட்டார்‌, பிறகு கன்னங்‌ களில்‌ முத்தமிட்டார்‌,மறுபடியும்‌ கைகளிலே முத்தமிட்டார்‌. 
““பொறுங்கள்‌... பெண்களே... என்னைத்‌ திட்டாதர்‌ கள்‌...” என்றார்‌, நீடித்த ஆஸ்துமா காரணமாக ஓவ்‌ வொரு வார்த்தைக்கும்‌ கொஞ்சம்‌ மூச்சுக்காகத்‌ தயங்கி, “என்னுடைய மரபுக்கேற்ப... அந்த மோசமான டாக்டர்‌ கள்‌... எனது கீல்வாதத்திற்குக்‌.... கோடைக்காலம்‌ முழு வதும்‌ பண்டுவம்‌ பார்த்துக்‌ கொண்டிருந்தார்கள்‌... ஒரு வகையான பாகை வைத்துக்‌ கொண்டு... அது எவ்வளவு மோசமாக மணக்கிறது... என்னை அவர்கள்‌ போகவிட வில்லை... முதன்‌ முதலில்‌ வந்து பார்ப்பவர்‌ நீங்கள்‌ தான்‌ நான்‌ பார்க்கும்‌... உங்களைப்‌ பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சி... எப்படியிருக்கிறீர்கள்‌?.. வேரா, இறந்து போன அம்மாவைப்‌ போலவே இருக்கிறாயே... பெயர்‌ வைப்பதற்கு எப்போது நீ அழைக்கப்‌ போகிறாய்‌?” 
“அது ஒருக்காலும்‌ இருக்காது என்று அஞ்சுகிறேன்‌, தாத்தா...?்‌ 
“நம்பிக்கையை இழக்காகே... அது இன்னமும்‌ வரக்‌ கூடும்‌... கடவுளை வேண்டிக்‌ கொள்‌... ஆன்னா, நீ சற்றும்‌ மாறிப்‌ போகவில்லை... அறுபது வயதிலும்‌ இதே துடிதுடிப்‌ புடன்‌ இருப்பாய்‌ போலிருக்கிறதே. பொறுங்கள்‌, அந்தக்‌ கனவான்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்‌.”” 
“கொஞ்சக்‌ காலத்திற்கு முன்பு எனக்கு வாய்ப்பு இருந்‌ தது!” என்று தலை வணங்கிக்‌ கொண்டு சொன்னார்‌ கர்னல்‌ பனமரியோவ்‌. 
““நான்‌ இளவரசிக்கு பீட்டர்ஸ்பர்க்கில்‌ அறிமுகப்படுத்‌ குப்‌ பட்டேன்‌,” ஹூஸ்ஸாரும்‌ தொடர்ந்தார்‌. 
“நல்லது, பிறகு, ஆன்னா, நான்‌ உனக்கு லெப்டினெண்‌ ட்‌ 
320 
பவர்‌ னு 1 0111 டி 
611273 
1க்தீன்ஸ்கியை அறிமுகப்‌ படுத்தட்டுமா. நாட்டியக்‌ கலை ஞர்‌, சச்சரவிடுபவர்‌, அதே சமயத்தில்‌ ஒரு நல்ல குதிரைச்‌ சவாரிக்காரர்‌. எனதருமை பக்தீன்ஸ்கி, வண்டியிலிருந்து அந்தப்‌ பொருளை எடு,வாருங்கள்‌ பெண்களே...எங்களுக்குச்‌ சாப்பிட என்ன தரப்‌ போகிறாய்‌, அன்புள்ள வேரா? வைத்‌ தியப்‌ பட்டினிக்குப்‌ பிறகு... என்னை டாக்டர்கள்‌ அப்படி வைத்தார்கள்‌... இராணுவப்‌ பள்ளியை முடித்த இளம்‌ அதிகாரியைப்‌ போல எனக்குப்‌ பசி இருக்கிறது.”* 
காலஞ்சென்ற இளவரசர்‌ மிர்ஸா-புலாட்‌-துகனோவ்ஸ்‌ கிக்கு, ஜெனரல்‌ அனோசவ்‌ போர்த்‌ கோழனாகவும்‌ உற்ற நண்பனாகவும்‌ இருந்தார்‌. இளவரசருடைய சாவுக்குப்‌ பிறகு அவருடைய மகள்களின்‌ பால்‌ அன்பையும்‌ பாசத்தையும்‌ காட்டினார்‌. அவர்‌, சின்னஞ்‌ சிறுமிகளாக இருந்த காலத்‌ திலிருந்தே அவர்களை அறிந்திருந்தார்‌, உண்மையில்‌, அவர்‌ ஆன்னாவின்‌ வளர்ப்புத்‌ தந்தையாயும்‌ இருந்தார்‌. இன்றும்‌ இருப்பது போல கே. நகரத்தின்‌ மிகப்‌ பெரிய, ஆனால்‌ முற்றிலும்‌ கைவிடப்பட்ட ஒரு கோட்டையில்‌ ஆளுநராக இருந்தார்‌, துகனோவ்ஸ்கியின்‌ வீட்டிற்கு ஒவ்வொரு நாளும்‌ வந்தார்‌. குழந்தைகள்‌ அவரை வழிபட்டார்கள்‌. ஏனென்றால்‌ அவர்களுக்குச்‌ செல்லங்‌ கொடுத்தார்‌, பரிசுகள்‌ கொடுத்தார்‌, சர்க்கஸ்‌ அல்லது அரங்குகளில்‌ அவர்களுக்குத்‌ தனி அறை கள்‌ ஏற்பாடு செய்தார்‌, மேலும்‌ அவர்‌ செய்வது மாதிரி வேறு யாரும்‌ அவ்வளவு நன்றாக அவர்களுடன்‌ விளையாட முடியாது. ஆனால்‌ அவர்கள்‌ மிகுதியாக விரும்பிய கதைகள்‌ என்னவென்றால்‌ ராணுவத்தின்‌ போர்‌ வினை ஈடுபாடுகள்‌, போர்கள்‌, வீரர்கள்‌ வெட்ட வெளியில்‌ இராத்தங்கல்‌, வெற்றிகள்‌, பின்‌ வாங்குதல்‌, சாவுகள்‌ மற்றும்‌ காயங்கள்‌, கடுமையாகப்‌ பனி உறைதல்‌ போன்றவற்றைப்‌ பற்றிய தாகும்‌. இவை அதிகக்‌ கலைச்‌ சோடனை இல்லாத மெது வான கதைகள்‌, காவியம்‌ போன்ற அமைதியானவை. மாலைத்‌ தேநீருக்கும்‌ குழந்தைகள்‌ டடுக்கைக்குச்‌ செல்லும்‌ கசப்பான நேரத்திற்கும்‌ இடைப்பட்ட பொழுதில்‌ இவை சொல்லப்பட்டன. 
இந்தப்‌ பழங்காலப்‌ பகுதியான அவர்‌ பிரம்மாண்டமான ஆனால்‌ வியப்புக்குரிய ஓவியத்‌ தன்மை வாய்ந்த உருவமாகத்‌ தோன்றினார்‌. அந்த எளிமையான ஆனால்‌ அழமான உள்‌ ளத்கைத்‌ தொடுகிற அந்தப்‌ பண்புகளை அவர்‌ சேர்த்து 
1 ॥--2027 32] 
வைத்திருந்தார்‌. அவற்றை இன்று வரை இராணுவ அலுவலர்‌ களிடம்‌ அல்லாது! தனிப்பட்டவர்களிடமே மிகுதியாகப்‌ பார்க்க முடியும்‌. அந்தத்‌ தூய்மையான ருஷ்யக்‌ குடியான வர்களின்‌ பண்புகளை மொத்தமாகப்‌ பார்க்கின்ற போது அவை உயர்வான ஒரு பண்பினை உருவாக்குகின்றன. அது தான்‌ நமது வீரனை, வெல்லப்பட முடியாதவனாக மாத்திர மன்றி, ஒரு தியாகியாகவும்‌ ஆக்குகிறது. கபடமற்ற எளி மையான நம்பிக்கை கொண்டிருந்தார்‌. ஒரு தெளிவான, மகிழ்ச்சி கலந்த வாழ்க்கையைப்‌ பற்றிய நன்‌ நோக்கோடு, உறுதியான, இயல்பான துணிவு, சாவுக்கு முன்னால்‌ பரிவு, வீழ்ந்தவன்‌ மேல்‌ பரிதாபம்‌, எல்லையற்ற பெருமை, ஒரு வியப்பூட்டும்‌ உடல்‌, ஆன்மீக உயிர்ப்புத்தன்மை ஆகிய பண்புகளைப்‌ பெற்றிருந்தார்‌. 
போலந்துப்‌ போருக்குப்‌ பிறகு அனோசவ்‌, ஜப்பானியர்‌ சம்பந்தப்பட்டது தவிர மற்ற எல்லாப்‌ போர்க்களத்திலும்‌ பங்கு பெற்றிருக்கிறார்‌. போருக்குப்‌ போவதற்கு அவர்‌ எந்த வகையிலும்‌ தயங்கியதில்லை, ஒரு கால்‌ அவர்‌ அமைக்கப்‌ படவில்லை என்றால்‌. அம்மாதிரி பிரச்சினைகளுக்காக அவர்‌ பொன்‌ போன்ற விதி வைத்திருந்தார்‌: ““சாவுக்கு ஒருபோதும்‌ சவால்‌ விடாகதே-—நீ அதற்கு அழைக்கப்பட்‌ டால்‌ ஓழிய.'? பிரம்பால்‌ தனது வீரர்களை அடிக்க உத்தர விடாததோடு மட்டுமல்லாது அவரும்‌ எவரையும்‌ அடித்த தில்லை. போலந்து எழுச்சியின்‌ போது, ரெஜிமெண்ட்‌ கமான்‌ டரின்‌ தனிப்பட்ட ஆணைகள்‌ இருந்தும்‌ கூட, ஒரு கைதியின்‌ கூட்டத்தைச்‌ சுடுவதற்கு அவர்‌ மறுத்தார்‌. **உளவாளியாக இருந்தால்‌ நான்‌ அவனைச்‌ சுடப்படச்‌ செய்வது மாத்திர மல்லாது என்‌ கையாலேயே அவனைக்‌ கொல்வதற்குத்‌ தயாராக இருக்கிறேன்‌. ஆனால்‌ இவர்களோ சிறைக்‌ கைதி கள்‌. இவர்களை என்னால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது.” எந்த விதமான சவாலோ, வறட்டு வீரமோ இல்லாமல்‌ தனது மேலதிகாரியைத்‌ தனது தெளிவான, உறுதியான கண்களால்‌ பார்த்துக்‌ கொண்டு சாதாரணமாகவும்‌, மரியாதையுடனும்‌ அவர்‌ சொன்னார்‌. ஆணைகளை மீறியதற்காக அவரைச்‌ சுடாமல்‌ தனியே விட்டுவிட்டார்கள்‌. 
1877-—1879ஆம்‌ ஆண்டைய போரின்‌* போது, சரி 
* பால்கன்‌ தீபகற்பம்‌ குறித்து ருஷ்யாவிற்கும்‌ துருக்‌ கக்கும்‌ இடையே நடைபெற்ற போரைக்‌ குறிப்பிடுகிறது. 
322 
யான கல்வியறிவு இல்லாமல்‌ இருந்தும்‌ கூட--- அவருடைய வார்த்கைகளிலே சொன்னால்‌,அவர்‌ “ “கரடி அகாடமியைத்‌:” கான்‌ முடித்திருந்தார்‌-— மிக வேகமாக கர்னல்‌ அந்தஸ்துக்கு உயர்ந்தார்‌. டான்யூப்பையும்‌, பால்கன்‌ மலைகளையும்‌ கடப்‌ பதில்‌ அவர்‌ பங்கு பெற்றார்‌. பல்கேரியாவில்‌ குளிர்காலம்‌ முழுவதும்‌ ஷிப்கா மலையில்‌ முகாமிட்டிருந்தார்‌. பிலேவ்‌ னா என்ற பல்கேரிய நகரம்‌ மீது இறுதித்‌ தாக்குதலைச்‌ செலுத்தியவர்களுள்‌ அவரும்‌ ஒருவர்‌. அவர்‌ ஐந்து முறை காயப்படுத்தப்பட்டார்‌, ஒரு முறை கடுமையாகக்‌ காய முற்றார்‌. பயங்கரமான அத்தாக்குதலின்‌ போது குண்டுச்‌ சிதறல்களால்‌ காயமடைந்தார்‌. ஜெனரல்‌ ரதேக்ஸ்கியும்‌, ஸ்கோபெலெவும்‌ அவரைத்‌ தனிப்பட்ட முறையில்‌ அறி வார்கள்‌, மிகுதியான மதிப்பு வைத்திருந்தார்கள்‌. “ “என்னை விட மிகுதியான வீரம்‌ வாய்ந்த ஓர்‌ அதிகாரியை எனக்குத்‌ தெரியும்‌. அவர்தான்‌ மேஜர்‌ அனோசவ்‌,'” என்று ஸ்கோ யெலெவ்‌ கூறியிருந்தார்‌. 
அந்தக்‌ குண்டுச்‌ சிதறலினால்‌ ஏறக்குறைய காது செவி டாகிப்‌ போய்த்‌ திரும்பினார்‌; பால்கன்‌ அணிவகுப்பின்‌ போது, பனி உறைவின்‌ கடிப்பினால்‌ அவருடைய பாதத்‌ இலே மூன்று விரல்கள்‌ வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. ஷிப்‌ காவிலே அவருக்குக்‌ கடுமையான தீல்வாகம்‌ வந்துவிட்டது. இரண்டாண்டு அமைதிகாலப்‌ பணிக்குப்‌ பிறகு அவருக்குப்‌ பதவி ஓய்வு தருவதற்கு முடிவு செய்யப்பட்டது, ஆனால்‌ அதை அவர்‌ எதிர்த்தார்‌. டான்யூப்பைக்‌ கடக்கும்‌ போது அவர்‌ காட்டிய துணிச்சலைக்‌ கண்டிருந்த அந்தப்‌ பகுதி யினுடைய கவர்னர்‌ அந்தச்‌ சிக்கலான நேரத்தில்‌ அவருடைய செல்வாக்கைப்‌ பயன்படுத்தினார்‌. பீட்டர்ஸ்பர்க்‌ அதிகாரி கள்‌ சிறப்பு வாய்ந்த கர்னலுடைய உணர்ச்சிகளைப்‌ புண்‌ படுத்துவதில்லை என்று முடிவு செய்து அவருடைய ஆயுள்‌ காலம்‌ முழுவதற்கும்‌ கே. நகரத்தின்‌ ஆளுநர்‌ பதவி தர முடிவு செய்தார்கள்‌. அந்த வேலை மரியாகைக்குரியது என்பதோடு நாட்டுப்‌ பாதுகாப்புக்குத்‌ தவிர்க்க இயலாத தாக இருந்தது. 
நகரத்திலுள்ள ஒவ்வொருவருக்கும்‌ அவரைத்‌ தெரியும்‌. அவருடைய குறைபாடுகள்‌ பற்றியும்‌, பழக்க வழக்கங்கள்‌ பற்றியும்‌, உடையணியும்‌ முறைகளைப்‌ பற்றியும்‌ நல்ல நோக்கத்துடன்‌ கேலி செய்வார்கள்‌. எப்போதுமே அவர்‌ 
215 323 
போர்க்கருவிகளைத்‌ தாங்கிச்‌ செல்வதில்லை. காலத்திற்கு ஓவ்வாத உடைகளையும்‌ தொப்பியையும்‌ அவர்‌ அணிந்‌ திருந்தார்‌. வலது கையில்‌ ஒரு பிரம்பையும்‌, இடது கையில்‌ காதுகேட்க உதவும்‌ குழாயையும்‌ எடுத்துச்‌ செல்வார்‌. அவர்‌ எப்போதுமே இரண்டு கொழுத்த சோம்பலான முரட்டு நாய்களைக்‌ கூட்டிச்‌ செல்வார்‌. முகவாய்க்‌ கட்டைக்கு இடையே நாக்குகளைத்‌ தொங்கப்‌ போட்டபடி அவை இருக்‌ கும்‌. காலை உலாவுதலின்‌ போது யாராவது தெதரிந்தவார்‌ களை அவர்‌ சந்தித்தால்‌, பல கட்டிடங்களுக்கு அப்பால்‌ நடந்து செல்பவர்கள்‌, அவர்‌ உரத்த குரலில்‌ பேசுவதையும்‌ அந்த நாய்கள்‌ இணைந்து குரைப்பதையும்‌ கேட்க முடியும்‌. 
காதுகேளாத பலரைப்‌ போல அவருக்கும்‌ ஓபெரா மீது ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. சில சமயங்களில்‌ காதல்‌ பாட்டின்‌ போது அவருடைய அதிகாரத்தன்மை வாய்ந்த குரல்‌ அக்‌ கூட்டத்தில்‌ எதிரொளிக்கும்‌: “ஏன்‌, அவர்‌ அந்த மகிழ்ச்சி மிக்க ச, நாசமாய்ப்‌ போக! ஒரு கொட்டையைப்‌ போல நசுக்கிறார்‌.'” அடக்கி வைக்கப்பட்ட சிரிப்பு அந்தக்‌ கூடத்‌ திலே வெடித்துச்‌ சிதறும்‌. ஆனால்‌ ஜெனரல்‌ எதையும்‌ சந்தேகிக்க மாட்டார்‌. ஏனென்றால்‌ பக்கத்திலிருப்பவர்‌ காதுக்குள்ளே ரகசியத்தை முணுமுணுப்பது போன்ற உணர்‌ வில்‌ இருப்பார்‌. 
அவருடைய அலுவலகப்‌ பணிகளிலே ஒரு பகுதியாக அவர்‌ அடிக்கடி, நீண்ட மூச்சுவிடும்‌ தனது நாய்களுடன்‌, பாதுகாப்பு மனைக்குச்‌ சென்று, கைது செய்யப்பட்ட அலு வலார்கள்‌, ராணுவத்‌ தொல்லைகளினின்றும்‌ விடுபட்டு வசதி யாக ஓய்வெடுத்துக்‌ கொண்டும்‌, தேநீர்‌ அருந்திக்‌ கொண் டும்‌ இருப்பவர்களைப்‌ பார்ப்பார்‌. அவர்கள்‌ ஒவ்வொரு வரையும்‌ எச்சரிக்கையோடு வினவுவார்‌: ““உங்கள்‌ பெய ரென்ன? உங்களைக்‌ கைது செய்தது யார்‌? எவ்வளவு நாட்‌ களாகின்றன? எதற்காக?” சில நேரங்களில்‌ வீரம்‌ செறிந்த ஆனால்‌ சட்டத்திற்குப்‌ புறம்பாகச்‌ செயல்‌ புரிந்த அதி காரியைப்‌ பாராட்டுவார்‌ அல்லது வெளியே கேட்கும்படி யாக பலத்த குரலில்‌ திட்டுவார்‌. ஆனால்‌ உரத்த பேச்சு முடிந்த பிறகு அதே மூச்சிலே அந்த அதிகாரி சாப்பிட்டு விட்‌ டாரா என்றும்‌, அதற்கு எவ்வளவு பணமாகிறது என்றும்‌ கேட்பார்‌. நேர்மை தவறியதற்காக, நீண்ட காலத்‌ தடுப்புக்‌ 
324 
பாவலுக்காக ஒரு மூலைப்‌ பகுதியிலிருந்து அனுப்பப்பட்ட, ுனக்கென்று பாதுகாப்பு இல்லம்‌ பெற்றிராத ஒரு லெப்டி மனண்ட்‌ பணப்பற்றாக்‌ குறையினால்‌ பொதுப்‌ பணத்தைச்‌ சாப்பிட்டதை ஒத்துக்‌ கொண்டது போன்ற நிகழ்ச்சிகளும்‌ ரில நேரங்களில்‌ நடந்திருக்கின்றன. அந்த ஏழைப்‌ பிசாசுக்கு பாதுகாப்பு இல்லத்திலிருந்து நூறு கஜ தூரத்திற்கு அதிக பில்லாத தனது வீட்டிலிருந்தே உணவு கொண்டு வருவதற்கு அனோசவ்‌ உடனடியாக ஆணையிடுவார்‌. 
அந்தக்‌ கே. நகரத்தில்‌ துகனோவ்ஸ்கி குடும்பத்தோடு நெருக்கமாகப்‌ பழக ஆரம்பித்தார்‌. குழந்தைகளுடன்‌ நெருங்‌ கிய நட்பினையும்‌ ஏற்படுத்திக்‌ கொண்டார்‌. அவர்களை ஓவ்வொரு மாலையிலும்‌ பார்ப்பது கட்டாயத்‌ தேவையாக விட்டது. சில சமயங்களில்‌ அப்பெண்கள்‌ எங்காவது வெளியே போயிருந்தாலோ, தனது அலுவலகப்‌ பணிகள்‌ காரணமாக அவரால்‌ போக முடியாது போய்‌ விட்டாலோ, கவர்னர்‌ வீட்டினுடைய பெரிய அறைகளிலே மிகவும்‌ பயங்கரமாகத்‌ குனிமையை உணர்வார்‌. ஒவ்வொரு கோடையிலும்‌ அவர்‌ விடுப்பு வாங்கிக்‌ கொண்டு, கே. நகரத்திலிருந்து சுமார்‌ நாற்பது மைல்‌ தூரத்திலுள்ள யெகோரொவ்ஸ்கொயே விலுள்ள துகனோவ்ஸ்கி எஸ்டேட்டிற்கு முழுமையாக ஒரு மாத காலத்தைச்‌ செலவிடச்‌ சென்றுவிடுவார்‌. 
அவரிடம்‌ குமைந்து கொண்டிருந்த பரிவும்‌, அன்புக்‌ கான அவருடைய ஏக்கமும்‌ இந்தக்‌ குழந்தைகள்‌ பால்‌ வேக மாகச்‌ சென்றன, குறிப்பாகப்‌ பெண்‌ குழந்தைகள்‌ பால்‌. ஒரு போது அவர்‌ திருமணமாகி இருந்தார்‌. ஆனால்‌ அது பற்றி நீண்ட காலத்திற்கு முன்பே மறந்து போய்விட்டார்‌. போருக்கு முன்பு அவருடைய மனைவி சுற்றுப்பயணத்தில்‌ இருந்த ஒரு நடிகரோடு ஓடிப்‌ போய்விட்டாள்‌. அவனது பட்டுச்‌ சட்டையாலும்‌, பூவேலைப்‌ பாடு கொண்ட சட்டை யின்‌ முன்‌ கைப்‌ பகுதியாலும்‌ அவள்‌ கவரப்பட்டாள்‌. அவள்‌ உயிரோடு இருந்தவரை அனோசவ்‌ அவளுக்கு உதவிப்‌ பணம்‌ கொடுத்து வந்தார்‌. ஆனால்‌ அவளது கண்ணீர்‌ கலந்த கடிதங்களும்‌, தவறுதலை உணர்ந்த வருத்தக்‌ காட்சிகளும்‌ மாறாக அவளைத்‌ திரும்பி வருவதற்கு அநுமதிக்கவில்லை. அவர்களுக்குக்‌ குழந்தைகள்‌ கிடையாது. 
325 

எதிர்பாராதவிதமாக, மாலை நேரமானது அமைதியாக வும்‌ வெதுவெதுப்பாகவும்‌ இருந்தது. மேல்‌ தளத்திலிருந்த மெழுகுவர்த்திகள்‌ ஒரே நிதானமான சுவாலைகளோடு எரித்தன. இரவு உணவு அருந்தும்‌ போது இளவரசர்‌ வசீலி லிவோவிச்‌ கூட்டத்தினரை மகிழ்வித்தார்‌. கதைகள்‌ சொல்‌ வதற்கு மிக அசாதாரணமான, விந்தையான திறன்படைத்த வராக இருந்தார்‌. அந்தக்‌ குழுவில்‌ இருந்த ஒருவருக்கு ஏற்பட்ட நிகழ்ச்சியையாவது, மற்ற பொதுவான நண்பருக்கு நிகழ்ந்ததையாவது அவார்‌ எடுத்துக்‌ கொள்வார்‌. அனால்‌ அந்தளவு அலங்கரித்து நிகழ்ச்சியைக்‌ கூறுகையில்‌, அதைக்‌ கேட்பவர்கள்‌ தங்களுடைய விலாக்கள்‌ நோகும்படி சிரிப்‌ பார்கள்‌. அன்று இரவு, செல்வமும்‌ அழகும்‌ வாய்ந்த பெண்‌ ணை நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌ காதலுக்கு முயற்சி செய்த மோசமான நிகழ்ச்சி பற்றிய கதையைச்‌ சொல்லிக்‌ கொண் டிருந்தார்‌. அதிலிருந்த ஒரே ஓர்‌ உண்மையான விவரம்‌ என்னவெனில்‌ அவள்‌ கணவன்‌ அவளுக்கு மணவிலக்குத்‌ தர மறுத்ததுதான்‌. ஆனால்‌ அந்து இளவரசர்‌ மிகத்‌ திறமை யோடு உண்மையையும்‌, கற்பனையையும்‌ கலந்தார்‌. கொஞ்‌ சம்‌ போலித்‌ தற்பெருமையுடைய நிக்கலாய்‌ தெருவின்‌ வழி யாகத்‌ தன்னுடைய காலணிகளைக்‌ கைக்குக்‌ கீழே வைத்துக்‌ கொண்டு, காலுறையுடன்‌ நள்ளிரவில்‌ நடந்து சென்றதைக்‌ கூறினார்‌. ஒரு மூலையில்‌ அந்த இளைஞன்‌ ஒரு போலீஸ்‌ காரரால்‌ நிறுத்தப்பட்டார்‌. நீண்ட புயல்‌ போன்ற விளக்கத்‌ திற்குப்‌ பிறகு தான்‌ நிக்கலாய்‌ தான்‌ ஒரு துணை அரசு வழக்குரைஞர்‌ என்றும்‌, ஒரு திருடனல்ல என்றும்‌ அவனை நம்ப வைக்க முடிந்தது. திருமணம்‌ ஏறக்குறைய நிறை வேறியது போல இருந்தது. ஆனால்‌ குறிப்பிட்ட முக்கிய மான நேரத்தில்‌ அக்காரியத்தில்‌ பங்கு பெற்ற பொய்ச்‌ சாட்சிக்‌ குழு ஒன்று, சம்பள உயர்வு வேண்டி திடீரென்று வேலை நிறுத்தம்‌ செய்து விட்டது. உண்மையாகவே அவர்‌ கஞ்சனாக இருந்தபடியால்‌, எல்லாவிதமான வேலை நிறுத்‌ தங்களையும்‌ கொள்கையளவில்‌ நிக்கலாய்‌ எதிர்த்து வந்த தனால்‌, மேலும்‌ சம்பளம்‌ தருவதற்குத்‌ திட்டவட்டமாக மறுத்து விட்டார்‌. சட்டத்திலே உள்ள ஒரு பிரிவைச்‌ சுட்டிக்‌ காட்டினார்‌. அதுவே மேல்நீதி மன்ற முறையீட்டிலும்‌ 
3௮0 
உறுதிப்படுத்தப்பட்டது. பிறகு, வழக்கமான ஒரு கேள்வியை ““இங்கு உட்கார்ந்திருக்கும்‌ யாருக்காவது இந்த இரண்டு பேரும்‌ திருமணத்தில்‌ இணைவதற்கு உள்ள ஏதேனும்‌ இடர்ப்பாடு பற்றித்‌ தெரியுமா?” என ஒரு நீதிபதி கேட்டார்‌. இதற்குக்‌ கோபமூட்டப்பட்ட அந்தக்‌ குழுவினர்‌ ஒரே குரலில்‌ பேசினார்கள்‌: “*ஆமாம்‌, எங்களுக்குத்‌ தெரி யும்‌. நாங்கள்‌ நீதி மன்றத்தில்‌ சான்றாக வழங்கியதெல்லாம்‌ பொய்‌. ஏனெனில்‌ அரசு வழக்குரைஞர்‌ எங்களை பயமுறுத்‌ தலாலும்‌, பலாத்காரத்தாலும்‌ அச்சுறுத்தினார்‌. எங்களைக்‌ கட்டாயப்படுத்தினார்‌. நாங்கள்‌ அறிந்த வரை, இந்தப்‌ பெண்ணின்‌ கணவர்‌, இந்த உலகத்திலேயே மிகவும்‌ மரியா கைக்குரிய மனிதர்‌ என்பதை, தேவதையைப்‌ போல அன்‌ பானவர்‌ என்பதை மட்டுமே சொல்ல முடியும்‌.” இளவரசர்‌ வசீலி திருமணக்‌ கதைகளைச்‌ சொல்ல ஆரம்‌ பித்ததனால்‌, ஆன்னாவினுடைய கணவர்‌ குஸ்தவ்‌ இவா னவிச்‌ பிரியேஸ்ஸேயைக்‌ கூட விட்டு வைக்கவில்லை. அவ ருடைய திருமணத்திற்கு அடுத்த நாள்‌ போலீசை அழைத்து, இளம்‌ மணப்பெண்ணுக்கென்று சொந்தமாக பாஸ்போர்ட்‌ இல்லாததால்‌ அவளுடைய பெற்றோர்‌ வீட்டிலிருந்து வெளி யேற்றி சட்டப்படியான கணவனின்‌ வீட்டில்‌ அவளைக்‌ கொண்டு வந்து வைக்க வேண்டும்‌ என்றார்‌. இந்தக்‌ கதை யின்‌ ஒரே உண்மையான பகுதி திருமணமான முதல்‌ சில நாட்களிலேயே ஆன்னா அடிக்கடி அவளுடைய நோய்‌ வாய்ப்‌ பட்ட தாயுடன்‌ இருக்க வேண்டி இருந்தது என்பதுவேயா கும்‌. ஏனெனில்‌ வேரா தெற்கு நோக்கிப்‌ போய்விட்டாள்‌. குஸ்தவ்‌ இவானவிச்‌ கவலையில்‌ ஆழ்ந்து விட்டார்‌. எல்லாருமே சிரித்தார்கள்‌. ஆன்னா சுருக்கிய கண்க ளோடு புன்னகை செய்தாள்‌. குஸ்தவ்‌ இவானவிச்‌ மகிழ்ச்சி யால்‌ வெடிச்‌ சிரிப்புச்‌ சிரித்தார்‌. இறுகிய, பளபளக்கும்‌ கோலோடு கூடிய அவருடைய மெலிந்த முகத்தில்‌, கவன மாகக்‌ கீழ்‌ நோக்கி வாரிவிடப்பட்ட அடர்த்திக்‌ குறைவான முடி, ஆழப்பதிந்த கண்கள்‌, மிக மோசமான பற்கள்‌ ஆகியன இருந்து, அது ஒரு மண்டையோட்டைப்‌ போலக்‌ காட்சியளித்‌ குது. திருமணமான முதல்‌ நாள்‌ போலவே அவர்‌ இன்ன மும்‌ ஆன்னாவை அஆராதித்தார்‌; அவளுக்கு அருகாமையில்‌ எப்போதும்‌ உட்காரவும்‌, ரகசியமாக அவளைத்‌ தொடு வதற்கும்‌ முயன்றார்‌. நாம்‌ அவருக்காகப்‌ பரிதா பப்படுமாறு 
327 
ஒருவகையான முட்டாள்தனமான கவர்ச்சியோடு அவளையே சுற்றியலைந்தார்‌. 
மேசையிலிருந்து எழுவதற்கு முன்னர்‌ வேரா நிக்கலா யெவ்னா ஓர்‌ எந்திரம்‌ போல விருந்தினர்களை எண்ணி னாள்‌. பதிமூன்று பேர்‌ இருந்தார்கள்‌. அவள்‌ சகுனங்களை நம்பினாள்‌. ஆகவே அவள்‌ தனக்குள்ளாகவே சொல்லிக்‌ கொண்டாள்‌: “*இது நல்லது இல்லை! முன்னதாகவே அவர்‌ களை எண்ண வேண்டும்‌ என்று நான்‌ ஏன்‌ நினைக்கவில்லை? வாஸ்யாவையும்‌ குற்றம்‌ சொல்ல வேண்டும்‌ -— அவர்‌ தொலை பேசியில்‌ எதையும்‌ என்னிடம்‌ சொல்லவில்லை,” 
ஷேயின்‌ குடும்பத்தினர்‌ அல்லது பிரியேஸ்ஸே குடும்பத்‌ தினர்‌ வீட்டிலே நண்பர்கள்‌ கூடிய போது வழக்கமாக விருந்‌ துக்குப்‌ பிறகு போக்கர்‌ விளையாடினார்கள்‌.ஏனெனில்‌ இரு சகோதரிகளும்‌ அதிருஷ்டம்‌ சம்பந்தப்பட்ட விளையாட்டு களில்‌ கேலி செய்யக்‌ கூடிய அளவுக்குப்‌ பிரியமாக இருந் தார்கள்‌. உண்மையில்‌, அந்த இரண்டு வீடுகளிலும்‌ சில விதி களை ஏற்படுத்தியிருந்தார்கள்‌: எல்லா விளையாட்டாளர்‌ களும்‌ குறிப்பிட்ட மதிப்புள்ள ஓரே எண்ணிக்கையுள்ள குந்தம்‌ போன்ற டோக்கன்கள்‌ கொடுக்கப்படுவார்கள்‌. அவை விளையாடுபவர்களில்‌ ஒருவரிடம்‌ போய்ச்‌ சேரும்‌ வரை யிலே விளையாட்டு நடத்தப்படும்‌; பிறகு அது நிறுத்தப்‌ படும்‌. மற்றவர்கள்‌ தொடர வேண்டும்‌ என்று எந்தளவுக்கு வற்புறுத்துகிறார்கள்‌ என்பது பொருட்டல்ல. புதிய டோக்‌ கன்களை கல்லாப்பெபட்டியிலிருந்து எடுப்பது தவிர்க்கப்பட்‌ டிருந்தது. வேராவையும்‌, ஆன்னாவையும்‌ நிறுத்துவதற்கு இத்தகைய கடுமையான விதிகள்‌ தவிர்க்க முடியாகன என்று அநுபவம்‌ சொல்லியது. இருவரும்‌ விளையாட்டின்‌ போது நிறுத்த முடியாத அளவுக்கு மிகவும்‌ பரபரப்படைந்து விடுவார்கள்‌. ஒருபோதும்‌ மொத்த இழப்பு இருநூறு ரூபிள்‌ களுக்கு மிஞ்சியதில்லை. 
இந்த முறையும்‌ அவர்கள்‌ விளையாடத்‌ தயாராக இருந்‌ தார்கள்‌. விளையாடாத வேரா மேல்‌ தளத்திற்குப்‌ போவ தற்குத்‌ தயாராக இருந்தாள்‌. அங்கே தேநீருக்காக மேசை கள்‌ போடப்பட்டிருந்தன. புதிர்த்தன்மை வாய்ந்த தோற்றங்‌ கொண்ட வேலைக்காரி அவளை வரவேற்பு அறையிலிருந்து திடீரென்று அழைத்தாள்‌. 
“ஏன்ன அது, தாஷா?'” என்று இளவரசி வேரா எரிச்ச 
920 
லோடு கேட்டபடி, படுக்கையறையை ஒட்டியிருந்த அவளது சிறிய அறைக்குள்ளாக நுழைந்தாள்‌. ““என்னை ஏன்‌ முட்‌ டாள்தனமாக முறைத்துப்‌ பார்க்கிறீர்கள்‌?அங்கே கைகளிலே என்ன வைக்திருக்கிறீர்கள்‌??? 
வெள்ளைக்‌ காகிதத்தில்‌ அருமையாகச்‌ சுற்றப்பட்டு, ரோஜா நிற நாடாவால்‌ கட்டப்பட்ட சின்னச்‌ சதுரமான பொருளை மேசையின்‌ மேல்‌ தாஷா வைத்தாள்‌. 
“இது என்னுடைய தவறல்ல, மாட்சிமை தங்கிய அம்மா. கடவுள்‌ பெயரில்‌ சொல்கிறேன்‌,” என்று அவள்‌ வாய்‌ கடு 
மாறினாள்‌. ““அவன்‌ உள்ளே வந்து சொன்னான்‌. ..”” “யார்‌ அவன்‌??? “£செய்தி கொணர்ந்த பையன்‌... மாட்சிமை தங்கிய அம்மா.?? “பிறகு?” 
“சமையலறைக்குள்‌ உள்ளே வந்து மேசையின்‌ மீது இதை வைத்து “இதை உங்கள்‌ தலைவியிடம்‌ கொடுங்கள்‌,” என்றான்‌. “அவர்களது கைப்படவே கொடுப்பதில்‌ கவன மாக இருங்கள்‌,” என்றான்‌. “யாரிடமிருந்து?” என்று கேட்‌ டேன்‌. “அது இங்கே எழுதியிருக்கிறது,” என்று சொல்லி விட்டுப்‌ போய்‌ விட்டான்‌.” 
“போய்‌, அவனைத்‌ திரும்பக்‌ கூட்டிவாங்க.”” 
“ஐயோ, என்னால்‌ முடியாது, மாட்சிமை தங்கிய அம்மா. விருந்தின்‌ இடையே அவன்‌ வந்தான்‌. அப்போது உங்களைத்‌ தொந்தரவு செய்ய எனக்குத்‌ தைரியம்‌ வர வில்லை. அரை மணி நேரத்திற்கு முன்புதான்‌ இருக்க வேண்‌ டும்‌.” 
““சரி, நீங்கள்‌ போகலாம்‌.” 
கத்தரியை வைத்து நாடாவை வெட்டி முகவரி தாங்கிய காகிதத்தைக்‌ குப்பைக்‌ கூடையில்‌ போட்டாள்‌. வைர வியா பாரியினுடைய சிவப்புப்‌ பூம்பட்டால்‌ செய்யப்பட்ட ஒரு சிறு பெட்டியைப்‌ பார்த்தாள்‌. கடையிலிருந்து இப்போது கான்‌ புதிதாக வந்திருக்க வேண்டும்‌. நீலப்பட்டால்‌ விளிம்‌ ிடப்பட்டிருந்த மூடியை உயர்த்தினாள்‌. கருப்பு வெல்‌ வெட்டுக்குள்‌ திணிக்கப்பட்டிருந்த நீள்‌ உருண்டை வடிவான ரங்க வளையல்‌ ஒன்றினைப்‌ பார்த்தாள்‌. அதற்குள்ளாக அழகுற எண்கோண வடிவில்‌ கவனமாக மடிக்கப்பட்டு எழுதப்பட்ட குறிப்பு இருந்தது. விரைந்து அந்தத்‌ தாளை 
929 
விரித்தாள்‌. அந்தக்‌ கையெழுத்து தனக்குத்‌ தெரியும்‌ என்று நினைத்தாள்‌, ஆனால்‌, பெண்ணாக இருந்ததால்‌, அந்தத்‌ தாளை ஒதுக்கி வைத்து விட்டு வளையலைப்‌ பார்த்தாள்‌. 
அது சுமாரான தங்கத்தால்‌ செய்யப்பட்டிருந்தது. மிக வும்‌ கனமாக இருந்தது. ஆனால்‌ உள்ளீடாக இருந்தது. வெளிப்புறத்தில்‌ சாதாரணமாக மெருகிடப்பட்ட பொண்‌ மணியால்‌ பொறிக்கப்பட்டிருந்தது. மையத்தில்‌ ஓர்‌ அதிசய மான சின்னப்‌ பச்சைக்‌ கல்லைச்‌ சூழ்ந்து ஐந்து மிக உயர்‌ வான பட்டையிடாச்‌ செம்மணிகள்‌ இருந்தன. ஒவ்வொன்‌ றும்‌ பயறு அளவில்‌ இருந்தது. மின்‌ விளக்கிற்குக்‌ கீழே அதி ருஷ்டகரமாக அந்த வளையலைத்‌ திருப்பிய போது, அந்தக்‌ கற்களின்‌ மென்மையாக, முட்டை வடிவம்‌ வாய்ந்த மேற்பகுதிக்குக்‌ கீழே அழகான சிவந்த விளக்குகள்‌ திடீரென மின்னின. 
“*இது ரத்தம்‌ போலிருக்கிறது!'' என்று வேரா அச்சத்‌ தோடு நினைத்தாள்‌. 
பிறகு கடிதத்தை நினைவு படுத்திக்‌ கொண்டாள்‌. மிடுக்‌ கான கையெழுத்தாக இருந்தது. அதில்‌ இவ்வாறு எழுதப்‌ பட்டிருந்தது: 
“மாண்புமிகு இளவரசி வேரா நிக்கலாயெவ்னா! 
உங்களுடைய பிரகாசமான, மகிழ்ச்சிமிக்க பிறந்த நாளில்‌ பணிவோடு வாழ்த்தி இந்தத்‌ தாழ்மையான காணிக்‌ கையை உங்களுக்கு அனுப்புகின்ற உரிமையை எடுத்துக்‌ கொள்கிறேன்‌.” 
“£ஓ, அவன்‌ அதே மனிதன்‌!” வெறுப்போடு தனக்குள்ளே சொல்லிக்‌ கொண்டாள்‌. ஆனால்‌ அந்தக்‌ கடிதத்தைக்‌ கடைசி வரை படித்தாள்‌... 
“*நானே தேர்ந்தெடுத்த பரிசை உங்களுக்கு வழங்க எனக்குத்‌ தைரியம்‌ வந்திருக்காது. ஏனெனில்‌ அதற்கு உரி மையோ, அழகுணர்வோ என்னிடம்‌ இல்லை. வெளிப்படை யாகச்‌ சொன்னால்‌ அதற்குரிய பணமும்‌ இல்லை. மேலும்‌ உங்களை அலங்கரிக்கின்ற அளவுக்கு இந்த உலகத்தில்‌ ஒரு செல்வமும்‌ கிடையாது என்று நினைக்கிறேன்‌. 
“அனால்‌ இந்த வளையல்‌ என்‌ கொள்ளுப்‌ பாட்டிக்குச்‌ சொந்தமானது. என்னுடைய காலஞ்சென்ற தாய்தான்‌ 
330 
கடைசியாக அணிந்தாள்‌. பெரிய கற்களுக்கு மத்தியில்‌ நீங்‌ கள்‌ ஒரு பச்சைக்‌ கல்லைப்‌ பார்ப்பீர்கள்‌. இது மிக அபூர்வ மான பச்சை மணிக்கல்‌. எங்கள்‌ குடும்ப மரபுப்படி இதை அணிகின்ற பெண்களை அவர்களது வருங்காலத்தை முன்‌ கூட்டியே உணரும்படி இது செய்கிறது. அமங்கல எண்ணங்‌ களையும்‌ வரவிடாது தடுக்கிறது. ஆண்களை பயங்கரச்‌ சாவினின்றும்‌ பாதுகாக்கிறது. 
“எல்லாக்‌ கற்களுமே கவனத்தோடு பழைய வெள்ளி வளையலிலிருந்து மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்‌ கள்‌ உறுதியாக நம்பலாம்‌, உங்களுக்கு முன்னார்‌ ஒருவரும்‌ இந்த வளையலை அணியவில்லை. 
““கேலிக்குரிய இச்சிற்றணியை உடனே நீங்கள்‌ தூக்கி எறியக்‌ கூடும்‌. அல்லது வேறு யாருக்கேனும்‌ அன்பளிப்‌ பாகத்‌ தரக்‌ கூடும்‌; உங்களது கைகள்‌ அதைத்‌ தொட்டன என்பதை அறிய மகிழ்ச்சி அடைவேன்‌. 
“என்‌ மீது கோபப்படாதிருக்கும்படியாக நான்‌ கெஞ்சிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. ஏழாண்டுக்கு முன்பு ஒரு குமா ரிக்கு முட்டாள்தனமாகக்‌ கடிதங்கள்‌ எழுதத்‌ துணிந்ததை யும்‌, அவற்றிற்கு பதிலை எதிர்பார்த்துக்‌ கொண்டிருந்ததை யும்‌ நினைத்துப்‌ பார்க்க வெட்கப்படுகிறேன்‌. ஆனால்‌ இன்‌ றைக்கு உங்கள்‌ பால்‌ மிகுந்த மரியாதை கலந்த அச்சம்‌, என்‌ நிரந்தரமான ஆராதனைகள்‌, ஓர்‌ அடிமையினுடைய மிகப்‌ பணிவான பக்தி இவற்றைத்‌ தவிர என்னிடம்‌ எதுவு மில்லை. நான்‌ இப்போது செய்ய முடிந்ததெல்லாம்‌ உங்‌ களுக்கு நிரந்தர மகிழ்ச்சி கிடைக்க விரும்புவதும்‌, நீங்கள்‌ மகிழ்ச்சியாக இருந்தால்‌ மகழ்ச்சியடைவதுமே ஆகும்‌. நீங்‌ கள்‌ உட்கார்ந்திருக்கக்‌ கூடிய நாற்காலியை, நீங்கள்‌ நடந்து போகின்ற தரையை, போகும்‌ பாதையில்‌ தொடும்‌ மரங்‌ களை, நீங்கள்‌ பேசுகின்ற வேலைக்காரர்களை என்‌ மனத்‌ தில்‌ ஆழ்ந்த உணர்வோடு வணங்குகிறேன்‌. அந்த மனிதர்‌ களின்‌ மீதோ, பொருள்களின்‌ மீதோ இனிமேல்‌ பொறாமைப்‌ பட மாட்டேன்‌. 
“மறுபடியும்‌ இப்படி ஒரு நீண்ட பயனில்லாத கடிதத்‌ கோடு உங்களைக்‌ துன்புறுத்தியதற்காக மன்னிக்கக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. 
“சாகும்‌ வரையும்‌ அதன்‌ பிறகும்‌ உங்களுடைய பணி வான வேலைக்காரன்‌ 
கி.எஸ்‌.ஜெ.”' 921 
“இதை வாஸ்யாவிடம்‌ காட்டுவோமா வேண்டாமா? அப்படியானால்‌ எப்போது? இப்போதா விருந்தாளிகள்‌ போன பிறகா? வேண்டாம்‌. பிறகு செய்வதுதான்‌ நல்லது இப்போது இந்த அப்பாவி மனிதனைப்‌ போல நானும்‌ முட்டாள் தனமாகக்‌ காணப்படுகிறேன்‌.: ? 
இப்படித்‌ தனக்குள்ளாகவே இளவரசி வேரா விவா தித்துக்‌ கொண்டிருந்த போது, ஐந்து ரத்தச்‌ சிவப்பு ஒளிக்‌ குள்ளே ஒளிர்ந்து கொண்டிருந்த ஐந்து செம்மணிகளினின்‌ றும்‌ அவளால்‌ பார்வையை எடுக்க முடியவில்லை. 

மிகுந்த சிரமத்தோடுதான்‌ கர்னல்‌ பனமரியோவ்‌ போக்‌ கர்‌ விளையாடுவதற்குத்‌ தூண்டப்பட்டார்‌. அந்த விளை யாட்டுப்‌ பற்றித்‌ தனக்கு ஒன்றும்‌ தெரியாதென்றும்‌, வேடிக்‌ கைக்குக்‌ கூடத்‌ தான்‌ அதை விளையாடியதில்லை என்‌ றும்‌, தான்‌ சிரத்தை எடுத்துக்‌ கொண்ட திறமையுள்ள ஒரே விளையாட்டு வின்ட்‌* என்றும்‌ சொன்னார்‌. ஆனால்‌ கடைசியில்‌ அதற்கு சம்மதித்தார்‌. 
ஆரம்பத்தில்‌ அவர்கள்‌ அவருக்குச்‌ சொல்லிக்‌ கொடுத்து உதவ வேண்டியிருந்தது, ஆனால்‌ விரைவிலேயே அந்த விளை யாட்டின்‌ விதிகளைக்‌ கற்றுத்‌ தேர்ந்தார்‌. அரை மணி நேரத்திற்குள்ளாக எல்லாச்‌ சீட்டுகளும்‌ அவருக்கு முன்னால்‌ குவிந்து விட்டன. 
“இது நியாயமில்லை! என்று கேலியாகத்‌ திட்டுவது போல ஆன்னா கூறினாள்‌. ““இந்தப்‌ பரபரப்பில்‌ எங்களுக்‌ கும்‌ கொஞ்சம்‌ விட்டுக்‌ கொடுத்திருக்கலாம்‌.”” 
விருந்தினர்கள்‌ மூவரையும்‌-— சிபேஷ்னிகவ்‌, கர்னல்‌ மற்றும்‌ மடத்தனமான, மரியாதைக்குரிய, மந்தமான ஜொர்‌ மானியனான துணை ஆளுநர்‌, எப்படி மகிழ்விப்பது என்று வேராவுக்குத்‌ தெரியவில்லை. வின்ட்‌ விளையாட்டை அவர்‌ களுக்காகத்‌ தயார்‌ செய்தாள்‌. நான்காவது ஆளாகக்‌ கலந்து கொள்ளும்‌ படி குஸ்தவ்‌ இவானவிச்சை அழைத்தாள்‌. தனது இமைகளைத்‌ தாழ்த்தி ஆன்னா குறிப்பால்‌ நன்றி சொன்‌ னாள்‌, அவளுடைய சகோதரி உடனே புரிந்து கொண்டாள்‌. குஸ்தவ்‌ இவானவிச்‌ சீட்டு விளையாடுவதினின்றும்‌ 
* வின்ட்‌--ருஷ்ய நாட்டுச்‌ சீட்டாக வகை. (மொ-ர்‌.) 
332 
விலக்கப்பட்டால்‌ ஒழிய அவருடைய மனைவியை மாலை நேரம்‌ முழுக்கச்‌ சுற்றிக்‌ கொண்டே நிற்பார்‌ என்பதை ஓவ்‌ வொருவரும்‌ அறிவார்கள்‌. அவ்வாறு செய்யும்‌ போது அவ ருடைய கெட்டுப்‌ போன பற்களை, முகத்திலே வெளிக்‌ காட்டி, தன்னை ஒரு முழுமையான நச்சரிப்பாளராகக்‌ காட்டிக்‌ கொள்வார்‌. 
இப்போது காரியங்கள்‌ நல்லபடியாக, சுலபமாகவும்‌ உயிர்த்துடிப்புள்ள சூழ்நிலையில்‌ நடந்தேறின. வஸ்யூசோக்‌, ஜென்னி ரெய்தர்‌ துணையோடு ஒரு தாழ்ந்த குரலில்‌ இத்‌ தாலிய நாட்டுப்புறச்‌ சந்தப்‌ பாடல்களையும்‌, ரூபின்ஷ்கைன்‌ எழுதிய கீழைய நாட்டுப்‌ பாடல்களையும்‌ பாடினார்‌. அவ ரிடம்‌ மெல்லிய ஆனால்‌ இனிய குரல்‌ இருந்தது. உணர்ச்சி ஏற்கும்‌ பாங்குடையதாகவும்‌, உண்மையானதாகவும்‌ இருந்‌ தது. ஜென்னி ரெய்தர்‌, மிகவும்‌ திறமை வேண்டுகிற பியா னோ வாசிப்பவள்‌, கூடவே இசைப்பதற்கு எப்போதும்‌ தயாராக இருந்தாள்‌; ஆனால்‌ அந்தச்‌ சமயத்தில்‌ அவளை அவர்‌ காதல்‌ புரிவதாகச்‌ சொல்லப்பட்டது. 
மூலையில்‌ இருந்த ஒரு சோஃபாவிலே உட்கார்ந்து கொண்டு ஆன்னா, ஹூஸ்ஸாருடன்‌ காதல்‌ விளையாட்டை வெட்கங்கெட்டதனமாகச்‌ செய்து கொண்டிருந்தாள்‌. வேரா அப்பக்கம்‌ நடந்து போய்‌ முறுவலித்தபடி கேட்டாள்‌. 
“இல்லை, இல்லை, தயவு செய்து சிரிக்காதீர்கள்‌, தனது குறும்புத்தனமான தாத்தார்‌ கண்களை அந்த அதி காரி மீது சுருக்கியபடி பார்த்துக்‌ கொண்டு மகிழ்ச்சியோடு ஆன்னா கூறினாள்‌. ““உண்மையில்‌, ஒரு ஸ்குவார்டன்‌ தலை வராக நிமிர்ந்து நடப்பது அல்லது ஓட்டப்‌ பந்தயங்களில்‌ தடைகளைக்‌ கடந்து செல்வது ஒரு பெரிய காரியம்‌ என்று நினைக்கிறீர்கள்‌. ஆனால்‌ எங்களுடைய தீரச்‌ செயல்களைப்‌ பாருங்கள்‌. இப்போது தான்‌ நாங்கள்‌ குலுக்குச்‌ சட்டை முடித்திருக்கிறோம்‌. அது சுலபமானதெதன்று நீங்கள்‌ நினைக்‌ கிறீர்களா? கேவலம்‌! அந்த இடம்‌ மக்கள்‌ நடமாட்டம்‌ மிகுதியான தாகவும்‌, புகையிலை வாசனை நிறைந்ததாகவும்‌ இருந்தது. சுமை தூக்குபவர்களும்‌, வாடகை வண்டி ஓட்டு பவர்களும்‌ இருந்தார்கள்‌, மற்றவர்கள்‌ யாரென்று கடவு ளுக்குத்தான்‌ கெரியும்‌... அவர்கள்‌ எல்லாருமே புகார்களை யும்‌, வருத்தங்களையும்‌ சொல்லி என்னைக்‌ தொந்தரவு செய்தார்கள்‌... நாள்‌ முழுக்க கணநேர ஓய்வு கூட எனக்கு 
233 
இல்லை. அது மட்டுமல்ல, உதவி எதிர்பார்க்கக்‌ கூடிய நல்ல குடும்பப்‌ பெண்களுக்காக இசை நிகழ்ச்சி இருக்கிறது. அதன்‌ பிறகு தர்மத்திற்கான நாட்டியமும்‌ இருக்கிறது...”” 
““அதிலே நீங்கள்‌ எனக்கு மஸார்கா நடனம்‌ மறுக்க மாட்டீர்கள்‌ என்று நம்புகிறேன்‌, லேசாக முன்னுக்குக்‌ குனிந்து கொண்டும்‌, நாற்காலிக்குக்‌ கீழே தனது குதிங்கால்‌ களால்‌ ஓசை எழுப்பிக்‌ கொண்டும்‌ இருந்த பக்தீன்ஸ்கி கூறி னார்‌. 
““நன்றி... ஆனால்‌ சோகமான பிரச்சினை நமது குழந்‌ கைகளுடைய இல்லந்தான்‌. நான்‌ என்ன சொல்கிறேன்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியும்‌ ஒழுக்கச்‌ சீர்கேடான குழந்‌ கைகளுக்கான ஓர்‌ இல்லம்‌...”” 
“ஓ, அதுவா. அது ஏதோ வேடிக்கையாக இருக்கக்‌ கூடும்‌, இல்லையா??? 
“போதும்‌, ஐயா, இது போன்ற விஷயங்களுக்காகச்‌ சிரிப்பதற்கு நீங்கள்‌ வெட்கப்பட வேண்டும்‌. ஆனால்‌ சிக்கல்‌ என்னவென்று உங்களுக்குத்‌ தெரியுமா? பரம்பரையாக வந்த கெட்ட செயல்களாலும்‌, கெட்ட உதாரணங்களாலும்‌ கெடுக்கப்பட்ட அன்மாக்களைக்‌ கொண்ட அந்த துர திருஷ்டக்‌ குழந்தைகளுக்குப்‌ புகலிடம்‌ தர நாங்கள்‌ விரும்பு கிறோம்‌. அவர்களுக்கு வெதுவெதுப்பையும்‌ ஆறுதலையும்‌ குர விரும்புகிறோம்‌...” 
“ஊகும்‌!” 
££... .அவர்களுடைய ஒழுக்கத்தைச்‌ சீர்படுத்தவும்‌, அவர்‌ களிடையே கடமை உணர்வை ஏற்படுத்தவும்‌... என்னுடைய கருத்து புரிகிறதா? ஒவ்வொரு நாளும்‌ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழந்தைகள்‌ எங்களிடம்‌ கொண்டு வரப்‌ படுகிறார்கள்‌. ஆனால்‌ அவர்களில்‌ ஓன்று கூடக்‌ கெட்ட குழந்தை இல்லை! அந்தப்‌ பெற்றோர்களிடம்‌ அவர்களது குழந்தைகள்‌ கெட்டவர்களா என்று கேட்டால்‌, சங்கடப்‌ படுவார்கள்‌-அதை உங்களால்‌ கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஆகவேதான்‌ இந்த இல்லம்‌ தொடங்கப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்‌ அதில்‌ வசிக்கத்தான்‌ ஒருவரும்‌ இல்லை! இங்கு கொண்டுவரப்படக்‌ கூடிய கெட்ட நடத்தையுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும்‌ பரிசு வழங்கலாம்‌ என்று யோசிக்கின்ற நிலைக்கு நாங்கள்‌ வந்து விட்டோம்‌.” 
“அன்னா நிக்கலாயெவ்னா,”? ஒருவகையான உட்‌ 
334 
பொருள்‌ வாய்ந்த முனைப்போடு ஹூஸ்ஸார்‌ குறுக்கிட்டுச்‌ சொன்னார்‌. ““எதுற்காக நீங்கள்‌ பரிசு வழங்குகிறீர்கள்‌? என்னை இலவசமாக எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. என்னுடைய குன்மானத்தின்‌ பெயரால்‌ சொல்கிறேன்‌, என்னை விட ஒரு கெட்ட குழந்தையை நீங்கள்‌ பார்க்க முடியாது.””்‌ 
“நிறுத்துங்கள்‌! உங்களிடம்‌] வினயமாகப்‌ பேசவே முடியாது,” அவள்‌ கிளுக்கென்று சிரித்தாள்‌, சோஃபாவில்‌ நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள்‌. அவளது கண்கள்‌ மின்னின. 
ஓர்‌ அகன்ற வட்டமான மேசையின்‌ முன்‌ உட்கார்ந்து கொண்டு, இளவரசர்‌ வசீலி லிவோவிச்‌ தனது சகோதரிக்‌ கும்‌, அனோசவுக்கும்‌, தனது மைத்துனனுக்கும்‌, தான்‌ வரைந்த கேலிச்‌ சித்திரங்கள்‌ உள்ள குடும்ப ஆல்பத்தைக்‌ காட்டிக்‌ கொண்டிருந்தார்‌. நால்வரும்‌ இதயபூர்வமாகச்‌ சிரித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌, படிப்படியாகச்‌ சீட்டு விளை யாடாத மற்ற விருந்தினர்களும்‌ அவர்களைச்‌ சூழ்ந்து உட்‌ கார்ந்தார்கள்‌. 
இளவரசர்‌ வசீலியினுடைய அங்கதத்தன்மை வாய்ந்த கதைகளுக்கு இணைபகுதியாக அந்த ஓவியங்களின்‌ தொகுப்பு இருந்தது. ஓர்‌ அசையாத அமைதியுடன்‌, “துருக்கி, பல்‌ கேரியா மற்றும்‌ பிற இடங்களில்‌ துணிவுமிக்க தளபதி அனோசவுடைய காதல்‌ தீரச்‌ செயல்களின்‌ கதைகள்‌,” ““£மோண்டே-கார்லோவில்‌ இளவரசர்‌ நிக்கலாய்‌ புலாட்‌- துகனோவ்ஸ்கியின்‌ தீரச்‌ செயல்‌'' போன்ற பலவற்றை அவர்‌ காண்பித்தார்‌. 
“தாய்மார்களே, பெரியோர்களே, நான்‌ உங்களுக்கு என்னுடைய அன்புச்‌ சகோதரி லியூத்மீலா லிவோவ்னாவின்‌ சிறு வாழ்க்கை வரலாற்றை இப்போது அறிமுகப்படுத்து கிறேன்‌,” என்று சொல்லி தன்‌ சகோதரியை கேலி செய்யும்‌ பார்வையுடன்‌ பார்த்தார்‌. ““முதற்‌ பகுதி. குழந்தைப்‌ பரு வம்‌. “குழந்தை வளர்ந்து கொண்டிருந்தது. அவள்‌ பெயர்‌ லீமா.” ?? 
அந்த ஆல்பத்தினுடைய பக்கம்‌ சிறுமி ஒருத்தியின்‌ உரு வத்தைக்‌ காட்டியது, வேண்டுமென்றே வரையப்பட்ட குழந்தைத்தனமான பாவனையுடன்‌, அவளது முகம்‌ பக்கத்‌ தோற்ற வடிவத்துடன்‌ அமைக்கப்பட்டிருந்தது, எனினும்‌ இரண்டு கண்களுமே தெரிந்தன; அவளது ஸ்கர்டிற்குக்‌ கீழே 
232 
இரு உடைந்த கோடுகள்‌ போல நீட்டிக்‌ கொண்டிருந்தவை, அவளுடைய கால்களைப்‌ பிரதிநிதித்துவப்‌ படுத்தின, இரு கைகளின்‌ விரல்களுமே விரிக்கப்பட்டிருந்தன. “என்னை ஒருவரும்‌ லீமா என்று அழைக்கவில்லை,” என்று ஒரு சிரிப்புடன்‌ லியூத்மீலா லிவோவ்னா கூறினாள்‌. “இரண்டாம்‌ பகுதி. முதற்காதல்‌. அந்த மங்கைக்கு முன்னர்‌ குதிரைப்படை வீரன்‌ ஒருவன்‌ முழங்காலிட்டு அமர்ந்து தனது சொந்தப்‌ பாட்டு ஒன்றைப்‌ படிக்கிறான்‌. அபூர்வ அழகோடு கூடிய சில வரிகளை அது கொண்டிருந்‌ தது: உனது கவர்ச்சிமிகு கால்‌ ஓர்‌ தெய்வீக அன்புப்‌ பொருள்‌! 
““£இங்கேதான்‌ அந்தக்‌ காலினுடைய அசல்‌ பிரதிபலிப்பு இருக்கிறது. 
“இங்கே அந்தப்‌ போர்வீரன்‌ அப்பாவி லீமாவை அவளது பெற்றோர்களின்‌ வீட்டை விட்டு ஓடிவருமாறு தூண்டு கிறான்‌. இங்கே அவர்கள்‌ ஓடுவதைப்‌ பாருங்கள்‌. இது ஒரு இக்கட்டான சூழ்நிலை: கோபமுற்ற தந்‌ைத தப்பியோடிய வர்களைத்‌ தாண்டி வந்து விடுகிறார்‌. பலஹீனமான இதயம்‌ படைந்த அந்தப்‌ போர்வீரன்‌ இடர்ப்பாடான நிலையில்‌ பணிவுமிக்க லீமாவைக்‌ கைவிட்டு விட்டுப்‌ போகிறான்‌. இதோ: 
உனது மூக்கிலே கவனமின்றி சுன்னமிட்டுக்‌ கொண்டாய்‌ நம்மைப்‌ பின்கொடர்பவர்‌ நெருங்கி விட்டனர்‌... அவர்களைக்‌ தடுத்து நிறுத்த உன்னாலானகைச்‌ செய்‌ அவ்வேளை நான்‌ புதருக்குள்‌ ஓடிப்‌ போகிறேன்‌. 
““மங்கை லீமா” வின்‌ கதையை அடுத்து வந்த கதையின்‌ தலைப்பு **இளவரசி வேராவும்‌ காதல்‌ மயக்கத்தில்‌ ஆழ்ந்த குந்தியடிப்பவனும்‌”:. 
“இதயத்தைத்‌ தொடுகின்ற இந்தப்‌ பாடல்‌ இதுவரை ஓவியங்களில்‌ தான்‌ இருக்கிறது,” என்று வசீலி லிவோவிச்‌ விளங்கினார்‌. ““அந்த வாசகம்‌ இப்போதுதான்‌ உருவாகிக்‌ கொண்டு இருக்கிறது.” 
“ஓரு வகையில்‌ இது புதியது,” என்றார்‌ அனோசவ்‌, ““இகுற்கு முன்னர்‌ நான்‌ பார்த்ததில்லை.” 
336 
“இதுதான்‌ கடைசியாக வெளிவந்தது. புத்தகச்‌ சந்‌ 
தைக்கு இது ஒரு புத்தம்‌ புதிய செய்தி.” வேரா அவரது தோளை மென்மையாகத்‌ தொட்டாள்‌. 
2 3 
“தயவு செய்து, வேண்டாம்‌,” என்றாள்‌. 
ஆனால்‌ வசீலி லிவோவிச்‌ அதைக்‌ கேட்கவில்லை, அல்‌ லது அதை அத்தனை முக்கியமானதாக எடுத்துக்‌ கொள்ள வில்லை. 
“இது வரலாற்றுக்கு முந்திய காலத்தில்‌ ஆரம்பித்தது. மே மாதத்தின்‌ ஓர்‌ அருமையான நாளிலே வேரா என்ற பெயருடைய நங்கை, இரு புறாக்கள்‌ ஒன்றை ஒன்று முத்த மிடுவது போன்ற படம்‌ வரையப்பட்ட கடிதம்‌ பெற்றாள்‌. இதோ அந்தக்‌ கடிதம்‌, அந்தப்‌ புறாக்கள்‌. 
“அந்தக்‌ கடிதம்‌ உணர்ச்சிகரமான காதலை வெளிப்‌ படுத்துகிறது. ஆனால்‌ எல்லாவிதமான சொல்‌ எழுத்தாக்க விதிகளையும்‌ மீறியதாக இருக்கிறது. இம்மடல்‌ இப்படி தான்‌ தொடங்குகிறது: “ஓ, அழகிய இளம்‌ பெண்ணே, நீ ஒரு... கர்ஜிக்கன்ற தீப்பிழம்புகளை உடைய கடல்‌ என்‌ நெஞ்சிலே இருக்கிறது. உன்‌ பார்வை என்னுடைய இம்சிக்‌ கப்பட்ட ஆன்மாவை நச்சுப்‌ பாம்பு போலப்‌ பற்றிக்கொண் டிருக்கிறது. மேலும்‌ அது போல. கடிதத்தின்‌ கடைசியில்‌ அளவான கையெழுத்து இருந்தது: “நான்‌ ஒரு சாதாரண மான தந்தியடிப்பவன்‌, ஆனால்‌ என்னுடைய உணர்வுகளே மிலார்டு ஜார்‌ ஜக்கு ஏற்றவை. என்னுடைய முழுப்‌ பெய ரைக்‌ தெரியப்படுத்த நான்‌ துணியவில்லை---அது மிகவும்‌ நாகரிகமற்றது. எனது தலைப்பு எழுத்துகளை மட்டுமே நான்‌ கையெழுத்திட முடியும்‌: பி.பி.ஜெ. தயவு செய்து உங்கள்‌ பதிலை அஞ்சலகத்திற்கு அனுப்புங்கள்‌.” இதோ, தாய்மார்களே, பெரியோர்களே, அந்தத்‌ தந்தியடிப்பவ னுடைய படத்தை நீங்களே பார்க்கலாம்‌. வண்ணக்‌ கோலால்‌ மிகத்திறம்பட செய்யப்பட்டது. 
““பவேராவினுடைய இதயம்‌ குத்தித்துளைக்கப்பட்டது (இதோ அவளுடைய இதயம்‌, இதோ அம்பு). ஆனால்‌ நன்‌ னடத்தையும்‌, நற்பண்பும்‌ வாய்ந்த அவள்‌ அக்கடிதத்தைத்‌ தனது மரியாதைக்குரிய பெற்றோர்களிடமும்‌, தனது குழந்தைப்‌ பருவ நண்பனிடமும்‌, மண உறுதி செய்யப்பட்ட வனான வாஸ்யா ஷேயினிடமும்‌ காட்டினாள்‌. அவன்‌ ஒரு கவர்ச்சிகரமான இளைஞன்‌. இதோ பட விளக்கம்‌. நேர 
222027 337 
மிருந்தால்‌ ஓவியங்களுக்குக்‌ கவிதை விளக்கங்கள்‌ தரப்படும்‌: 
““வாஸ்யா ஷேயின்‌, தேம்பியழுதபடி, மண ஒப்பந்த மோதிரத்தை வேராவிடம்‌ திருப்பிக்‌ கொடுத்தான்‌. ‘உனது மகிழ்ச்சியில்‌ நான்‌ எந்தவகையிலும்‌ குறுக்கே நிற்க மாட்‌ டேன்‌,” என்றான்‌, “ஆனால்‌, உன்னை நான்‌ கெஞ்சிக்‌ கேட்டு கொள்கிறேன்‌, அவசரப்பட வேண்டாம்‌. இறுதி முடிவு எடுப்‌ பதற்கு முன்பு அது பற்றிச்‌ சிந்தித்துப்‌ பார்‌ அவனுடைய உணர்வுகளையும்‌ உன்னுடைய உணர்வுகளையும்‌ சோதித்துப்‌ பார்‌. குழந்தாய்‌, வாழக்கையைப்‌ பற்றி உனக்கு ஒன்றும்‌ தெரியாது, எரிகின்ற சுவாலையை நோக்கிப்‌ பறக்கின்ற பூச்சியைப்‌ போல இருக்கிறாய்‌. ஆனால்‌ நான்‌-— அந்தோ! கடுமையான, ஏமாற்றுகின்ற உலகை எனக்குத்‌ தெரியும்‌. தந்தியடிப்பவர்கள்‌ கவர்ச்சிகரமானவர்கள்‌, ஆனால்‌ வஞ்‌ சகர்கள்‌ என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும்‌. தங்‌ களுடைய கர்வமூட்டும்‌ அழகாலும்‌, பொய்‌ உணர்ச்சிகளா லும்‌, அதன்‌ பிறகு அவளைக்‌ கொடுமையாகக்‌ கைவிட்டு விடுகிற தன்மையாலும்‌, அந்த அப்பாவிப்‌ பெண்ணை, ஏமாற்றுவது அவர்களுக்குச்‌ சொல்ல முடியாத மகிழ்ச்சி யைத்‌ தருகிறது.” 
“அறு மாதங்கள்‌ சுழன்றோடின. வாழ்க்கைச்‌ சுழலிலே தன்னைப்‌ போற்றியவனை வேரா மறந்து விட்டு அழகான வாஸ்யாவை மணந்து கொண்டாள்‌. ஆனால்‌ தந்தியடிப்ப வன்‌ அவளை மறக்கவில்லை. ஒரு நாள்‌ அவன்‌ ஓட்டடை யடிப்பவனைப்‌ போலக்‌ தன்னை மறைத்துக்‌ கொண்டு, புகைக்‌ கரிக்‌ கறையால்‌ தன்னைக்‌ கறைப்‌ படுத்தியபடி, இளவரசி வேராவினுடைய தனி அறைக்கு வந்தான்‌. ஓவ்வொரு இடக்‌ திலும்‌ தனது ஐந்து விரல்கள்‌, மற்றும்‌ இரு உதடுகள்‌ இவற்‌ றின்‌ அடையாளங்களை விட்டுச்‌ சென்றதை நீங்கள்‌ காண முடியும்‌: கம்பள விரிப்புகள்‌, தலையணைகள்‌, சுவர்த்தாள்‌, தரையில்‌ கூட இருந்தது. 
“பிறகு, ஒரு கிராமத்துப்‌ பெண்ணைப்‌ போல உடை யணிந்து கொண்டு, நமது சமையல்‌ அறையிலேயே பாத்திரங்‌ கழுவுன்ற வேலையை ஏற்றுக்‌ கொண்டான்‌. ஆனால்‌ சமை யல்காரன்‌ லுக்கா அவன்பால்‌ காட்டிய அளவு கடந்த விருப்‌ பம்‌ “அவளை ஓடும்படி செய்தது. 
“*இதோ, ஒரு பைத்தியக்கார விடுதியிலே அவன்‌ சேர்ந்து கொண்டான்‌. இதோ, ஒரு சந்நியாசியாக நீங்கள்‌ அவனை 
238 
இங்கே பார்க்கிறீர்கள்‌. அனால்‌ ஒவ்வொரு நாளும்‌ தவறா மல்‌ பாசமிக்க கடிதம்‌ ஒன்றை வேராவுக்கு அனுப்பினான்‌, தாளின்‌ மீது அவனது கண்ணீர்‌ படிந்த பகுதி பெருங்கறை யாகப்‌ பரவியது. 
“கடைசியில்‌ அவன்‌ செத்துப்போனான்‌. ஆனால்‌ சாவ தற்கு முன்பு தனது கண்ணீரால்‌ நிரப்பிய ஒரு வாசனைத்‌ கைல போத்தலையும்‌, தந்தி அலுவலகப்‌ பொத்தான்கள்‌ இரண்டையும்‌ வேராவுக்கு வழங்கிச்‌ சென்றான்‌...”” 
“தேநீர்‌ சாப்பிடலாமா, சீமாட்டிகளே, சீமான்‌ களே?” என்று கேட்டாள்‌ வேரா நிக்கலாயெவ்னா. 

நீண்ட இலையுதிர்‌ காலத்துச்‌ சூரியன்‌ மறைந்து கொண் டிருந்தது. தொடுவானத்தின்‌ விளிம்பில்‌ ஒரு நீல மேகத்திற்‌ கும்‌ பூமிக்கும்‌ இடையில்‌ குறுகலான, சிவந்த, மின்னுகின்ற கீறல்‌ மறைந்து கொண்டிருந்தது. இப்போது மண்ணும்‌ மரங்களும்‌ வானமும்‌ கண்ணுக்குத்‌ தெரியாமல்‌ போய்விட்‌ டன. தலைக்கு மேலே பெரிய நட்சத்திரங்கள்‌ இருளின்‌ கருமையில்‌ கண்ணிமைகளோடு ஒளிர்ந்தன. மெல்லிய தூணிலே மேலே செலுத்தப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்‌ தினுடைய நீல நிறத்‌ துண்டு ஆகாயத்தைத்‌ தொட்ட போது, திரவம்‌ போன்ற ஆனால்‌ மங்கிய ஒளிவட்டமாகத்‌ தெரிந்தது. மெழுகுவர்த்திகளுக்கு மேலாக இருந்த புகைப்‌ போக்கி மூடிகளின்‌ மீது விட்டில்‌ பூச்சிகள்‌ சிறகடித்தன. முன்‌ தோட்டத்திலே புகையிலைச்‌ செடியினுடைய நட்சத்திர வடிவமைந்த பூக்கள்‌ அந்தக்‌ குளுமையான இருளிலே கனத்த மணத்தை வெளிவிட்டன. 
துணை ஆளுநரும்‌, சிபேஷ்னிகவும்‌, கர்னல்‌ பனமரியோ வும்‌, ஜெனரலை அழைத்து வருவதற்காக டிராம்‌ வண்டித்‌ தொடரின்‌ கடைசி நிலையத்கை அடைந்ததும்‌, குதிரை களைக்‌ திருப்பி அனுப்புவதாக உறுதி சொல்லிவிட்டு வெகு நேரத்திற்கு முன்பே போய்விட்டார்கள்‌. எஞ்சியிருந்த விருந்‌ தினர்கள்‌ தாழ்வாரத்தில்‌ அமர்ந்திருந்தனர்‌. ஜெனரல்‌ அனோசவ்‌ அவரது விருப்பத்திற்கு மாறாகத்‌ தனது மேலங்‌ கியை அணியும்படி செய்யப்பட்டார்‌. அவருடைய கால்கள்‌ வெதுவெதுப்பான போர்வையில்‌ சுற்றப்பட்டிருந்தன. இரு 
த 339 
சகோதரிகளுக்கும்‌ இடையே அவர்‌ அமர்ந்திருந்தார்‌, அவ ருக்குப்‌ பிடித்தமான “பொம்மாடு' மது ஒரு போத்தலில்‌ அவருக்கு முன்னே வைக்கப்பட்டிருந்தது. கனமான, அழுத்த மான ஓயினை மெல்லிய கிளாஸில்‌ நிரப்பிக்‌ கொண்டும்‌, தீப்பெட்டியை அனுப்பிக்‌ கொண்டும்‌, தனக்காக பாலாடைக்‌ கட்டியை வெட்டிக்‌ கொண்டும்‌ இருந்த அவருக்காகச்‌ சகோ குரிகள்‌ ஆவலோடு பரிமாறினார்கள்‌. வயதான ஜெனரால்‌ மகிழ்ச்சி வெள்ளத்திலே மிதந்தார்‌. 
“ “ஆமாம்‌... இலையுதிர்காலம்‌ வந்து கொண்டிருக்கிறது, இலையுதிர்காலம்‌,” மெழுகுவர்த்தி ஒளியைப்‌ பார்த்துக்‌ கொண்டும்‌, சிந்தனையுடன்‌ தலையை அசைத்துக்‌ கொண் டும்‌ அந்தக்‌ கிழ ஜெனரல்‌ கூறினார்‌. ““இலையுதிர்காலம்‌. இகோ, நான்‌ பொருள்களைச்‌ சேகரிக்கத்‌ தொடங்க வேண்‌ டும்‌. என்ன பரிதாபம்‌! இந்தக்‌ கடற்கரை அருகிலே அமைதி யோடும்‌, எளிமையோடும்‌ இருப்பது எவ்வளவு இதமாக இருக்கிறது...” 
்‌“ஏன்‌,எங்களோடு அப்படிச்‌ செய்ய முடியாது,தாத்தா?'” என்றாள்‌ வேரா. 
“என்னால்‌ முடியாது, என்‌ அன்பே, என்னால்‌ முடியாது. கடமை அழைக்கிறது... எனது விடுப்பு முடிந்து விட்டது... ஆனால்‌ இப்படி நான்‌ செய்கிறேன்‌ என்றால்‌ மிக நன்றாக இருக்குமே! பார்‌, ரோஜாக்கள்‌ எப்படி மணக்கின்றன! அதை இங்கிருந்தே என்னால்‌ உணர முடிகிறது. கோடையில்‌ இந்தப்‌ பூக்களுக்கு ஒருவகையில்‌ வாசனையில்லாமற்‌ போய்‌ விடு கிறது, வெள்ளை கருவேல்‌ தவிர... அது மிட்டாயாக மணத்தது.” 
வேரா இரண்டுசிறிய ரோஜாக்களை, ஒரு சிறிய குடுவை யினின்றும்‌ எடுத்தாள்‌-இளஞ்சிவப்பு நிறத்திலும்‌ கருஞ்‌ சிவப்பு நிறத்திலும்‌ -ஜெனரலின்‌ மேலங்கியின்‌ பொத்தான்‌ துவாரத்தில்‌ அவற்றைச்‌ சொருகினாள்‌. 
“*நன்றி, வேரா.'' அந்தப்‌ பூக்களை நுகர்வதற்காகத்‌ தலையைக்‌ குனிந்தார்‌, அன்புள்ள வயதான மனிதருடைய நட்புக்கலந்த முறுவலிப்புடன்‌ புன்னகை செய்தார்‌. 
““புகாரெஸ்டில்‌ நமது இருப்பிடத்தை நாம்‌ எடுத்துக்‌ கொண்டது எனக்கு நினைவு வருகிறது. ஒரு நாள்‌ தெரு வழியாக நான்‌ நடந்து போய்க்‌ கொண்டிருந்த போது, ரோஜாக்களினுடைய சக்தி வாய்ந்த மணம்‌ வந்தது. நான்‌ 
340 
நின்றேன்‌, அழகுறச்‌ செய்யப்பட்ட அத்தர்‌ போத்தல்‌ இரண்டு படைவீரர்களிடையே இருந்தது. அது முழுக்க ரோலா எண்ணெய்‌ இருந்தது. அவர்கள்‌ ஏற்கெனவே தங்‌ களது காலணிகளுக்கும்‌, துப்பாக்கி விசைகளுக்கும்‌ அந்த ரோஜா எண்ணெய்‌ விட்டுத்‌ துடைத்திருந்தார்கள்‌. “நீங்கள்‌ வைத்திருப்பது என்ன?” என்று நான்‌ கேட்டேன்‌. “இது ஒரு வகையான எண்ணெய்‌, ஐயா. இதில்‌ சிறிகளவை எங்களு டைய கஞ்சியில்‌ போட்டோம்‌, ஆனால்‌ அது நன்றாக இல்லை, நாக்கை என்னவோ செய்கிறது ஆனால்‌ மணம்‌ நன்றாகத்‌ தான்‌ இருக்கிறது.” அவர்களுக்கு நான்‌ ஒரு ரூபிள்‌ கொடுத்‌ கேன்‌, அவர்கள்‌ மகிழ்ச்சியோடு அதை என்னிடம்‌ கொடுத்‌ தார்கள்‌. அந்தப்‌ போத்தல்‌ பாதிக்கு மேல்‌ நிரம்பவில்லை, அனால்‌ குறைந்தது இருநூறு ரூபிள்களைப்‌ பிடிக்கக்‌ கூடிய அகன்‌ அதிக விலையைக்‌ கருதினேன்‌. போர்வீரர்கள்‌ முற்றி லும்‌ மகிழ்ச்சியடைந்து சொன்னார்கள்‌: ‘இகோ மற்‌ றொரு பொருள்‌, ஐயா. ஒருவகையான துருக்கியப்‌ பட்‌ டாணி, அகைக்‌ கொதிக்க வைக்க நாங்கள்‌ மிகவும்‌ சங்கடப்‌ பட்டோம்‌, ஆனால்‌ அது வெறுப்புக்குரிய பொருள்‌, மென்‌ மையாகாது.” அது காப்பிக்‌ கொட்டை, ஆகவே நான்‌ அவர்‌ களிடம்‌ சொன்னேன்‌: “அது துருக்கியர்களுக்குத்தான்‌ நல்‌ லது, ஆனால்‌ போர்வீரர்களுக்கு அதனால்‌ எந்தப்‌ பயனும்‌ இல்லை.” அதிருஷ்டவசமாக அவர்கள்‌ எந்த அபினியையும்‌ சாப்பிட்டிருக்கவில்லை. சில இடங்களில்‌ அபினி மாத்திரை கள்‌ மணலில்‌ நசுக்கப்பட்டிருப்பதை நான்‌ பார்த்தேன்‌.” 
“மறைக்காமல்‌ சொல்லுங்கள்‌, தாத்தா,” என்றாள்‌ ஆன்னா, ““நீங்கள்‌ போர்க்களத்தில்‌ எப்போதேனும்‌ பயத்‌ தை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள்‌ பயந்து போயிருக்கிறீர்‌ களா??? 
““எவ்வளவு வேடிக்கையாகப்‌ பேசுகிறாய்‌, ஆன்னா. நான்‌ பயந்தேன்‌, இது தெரிகிறது. நாங்கள்‌ பயப்படவே இல்லை, குண்டுகளின்‌ ஒசை, பூமியில்‌ இனிமையான இசை என்று கூறுபவார்களைத்‌ தயவு செய்து நம்ப வேண்டாம்‌. பைத்தியக்காரர்களோ, தற்பெருமையடித்துக்‌ கொள்பவர்‌ களோ மட்டுந்தான்‌ அப்படிப்‌ பேச முடியும்‌. எல்லாரும்‌ பயப்படுவார்கள்‌, சிலர்‌ நடுக்கத்தோடு தங்களது கால்களை ஆட்டுவார்கள்‌, மற்றவர்களோ அதைக்‌ கட்டுப்படுத்திக்‌ கொள்வார்கள்‌. அச்சம்‌ எப்போதும்‌ ஒரே மாதிரியாக இருந்‌ 
44] 
காலும்‌, பழக்கத்தால்‌ அதை அமைதிப்படுத்திக்‌ கொள்ள முடிகிறது; ஆகவே எல்லா வீரர்களும்‌, துணிவான ஆட்‌ களும்‌. அது அப்படித்தான்‌. ஆனால்‌ ஒரு முறை சாவது போல பயந்து விட்டேன்‌.” 
““அது பற்றிச்‌ சொல்லுங்கள்‌, தாத்தா,” இரண்டு சகோ தரிகளும்‌ ஒன்று சேர்ந்தார்‌ போலக்‌ கெஞ்சினார்கள்‌. 
தங்களுடைய சிறு பிராயத்திலே கேட்ட அதே போன்ற பெரு மகிழ்ச்சியுடன்‌ அனோசவுடைய கதைகளை அவர்கள்‌ அமைதியாகக்‌ கேட்டார்கள்‌. முற்றிலும்‌ ஒரு குழந்தை போல ஆன்னா தனது முழங்கைகளை மேசை மீது பரத்தி வைத்துக்‌ கொண்டாள்‌. தனது குவிந்த கைகளிலே தனது மோவாயைத்‌ தாங்கிக்‌ கொண்டாள்‌. அவருடைய அவசர மில்லாத, எளிய வார்ணனைகளில்‌ ஒரு கவர்ச்சிகரமான மயக்‌ கம்‌ இருந்தது. அவருடைய போர்‌ நினைவுகளைப்‌ பற்றிச்‌ சொல்கின்ற போது அவர்‌ பயன்படுத்திய புத்தகங்களிலி ருந்து எடுக்கப்பட்ட சொற்களும்‌ உருவகங்களும்‌ விசித்திர மானதாகவும்‌, பாங்கில்லாததாகவும்‌ இருந்தன. அருமை யாகக்‌ கதை சொல்லக்‌ கூடிய யாரோ ஒரு பழைய ஆளைப்‌ போலப்‌ போலியாகச்‌ செய்கிறார்‌ என்று நீங்கள்‌ கருதி யிருக்கக்‌ கூடும்‌. 
““இது மிகவும்‌ சின்னக்‌ கதை,'” என்று தொடர்ந்தார்‌ அனோசவ்‌. ““அது குளிர்காலத்தில்‌ பல்கேரிய ஷிப்கா மலை யில்‌ நடைபெற்றது; அப்போது நான்‌ குண்டதிர்ச்சிக்கு ஆளான பிறகு எங்களுடைய நிலவறையில்‌ நாங்கள்‌ நான்கு 
92 
போர்‌ இருந்தோம்‌. அப்போது தான்‌ எனக்குப்‌ பயங்கரமான நிகழ்ச்சி ஏற்பட்டது. ஒரு நாள்‌ காலை நான்‌ படுக்கை யினின்றும்‌ எழுந்த போது, நான்‌ யாக்கவ்‌ இல்லை என்றும்‌ நிக்கலாய்‌ என்றும்‌ கற்பனை செய்து கொண்டேன்‌. என்னால்‌ மனத்தை மாற்றிக்‌ கொள்ள முடியவில்லை, முடிந்தளவுக்கு நான்‌ முயன்றேன்‌. என்னுடைய மனம்‌ சீர்கேடாகிக்‌ கொண்டு வருவதை உணர்ந்த நான்‌, எனக்காகக்‌ கொஞ்சம்‌ தண்ணீர்‌ கொண்டுவரும்படி கூச்சலிட்டேன்‌. அதைக்‌ கொண்டு தலை யை நனைத்து, எனது நிதானத்தைக்‌ திரும்பப்‌ பெற்றுக்‌ கொண்டேன்‌. :” 
“அங்குள்ள பெண்களிடம்‌ நீங்கள்‌ எவ்வளவு வெற்றி அடைந்திருப்பீர்கள்‌ என்பதை என்னால்‌ கற்பனை செய்து 
பார்க்க முடிகிறது,யாக்கவ்‌ மிஹாய்லவிச்‌,”' என்று பியானோ 342 
வாசிக்கக்‌ கூடிய ஜென்னி ரெய்தர்‌ கூறினாள்‌. “*“உங்களுடைய இளமைக்‌ காலத்தில்‌ நீங்கள்‌ மிகவும்‌ அழகாக இருந்திருக்க வேண்டும்‌.” 
“ஓ, நமது தாத்தா இப்போது கூட அழகாகத்தான்‌ இருக்‌ கிறார்‌!?' என்று ஆன்னா கத்தினாள்‌. 
“நான்‌ அழகாக இருக்கவில்லை,” அமைதியான புன்ன கையுடன்‌ அனோசவ்‌ கூறினார்‌. “*அனால்‌ என்னை யாரும்‌ வெறுத்தொதுக்கவில்லை. புகாரெஸ்ட்‌ நகரத்திலே உள்ளத்‌ தைத்‌ தொடுகிற ஒரு நிகழ்ச்சி நடந்தது. நகரத்திற்குள்ளாக நாங்கள்‌ அணிவகுத்துச்‌ சென்ற போது, குண்டு மரியாதை யுடன்‌ முக்கியச்‌ சதுக்கத்திலே மக்கள்‌ எங்களை வரவேற்‌ றார்கள்‌, பல சன்னல்கள்‌ சேதமடைந்தன; ஆனால்‌ எங்கே கிளாஸ்களில்‌ தண்ணீர்‌ வைத்திருந்தார்களோ அங்கே சன்‌ னல்கள்‌ சேதமடையவில்லை. இதை இவ்வாறு தெரிந்து கொண்டேன்‌. எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதிக்கு வந்த போது, ஒரு குட்டையான கூண்டைக்‌ கண்டேன்‌; அதற்குள்ளாக புத்தம்‌ புது நீருடன்‌ பளிங்கு போன்ற போத்தல்‌ இருந்தது; அந்தப்‌ போத்தலுக்குள்ளாகச்‌ சில பொன்னிற மீன்கள்‌ நீந்திக்‌ கொண்டிருந்தன; மீன்களுக்கு இடையே ஒரு கனே ரியப்‌ பறவை உட்கார்ந்து கொண்டிருந்தது. நீரில்‌ ஒரு கனே ரியப்‌ பறவை! நான்‌ பெரிதும்‌ வியப்புற்றுப்‌ போனேன்‌, ஆனால்‌ அதைச்‌ சோதிக்கையில்‌, அந்தப்‌ போத்தல்‌ ஆழ மான அடிப்பகுதியைக்‌ கொண்ட அகன்ற அடிப்பரப்புக்‌ கொண்டிருப்பதைக்‌ கண்டேன்‌. ஆகவே அந்தக்‌ கனேரியப்‌ பறவையால்‌ சுலபமாகப்‌ பறக்கவும்‌, பற்றிக்‌ கொள்ளவும்‌ முடிந்தது. அந்த விவகாரத்திற்குப்‌ பிறகு நான்‌ ஒரு நுண்‌ ணிய புத்தியுள்ளவன்‌ இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்‌ கொள்ள வேண்டி வந்தது. 
“நான்‌ வீட்டிற்குள்ளாக நடந்து சென்றேன்‌, அங்கே மிகவும்‌ அழகான பல்கேரியப்‌ பெண்‌ ஒருத்தியைக்‌ கண்டேன்‌. என்னுடைய அநுமதிச்‌ சீட்டை அவளிடம்‌ காட்டினேன்‌, குண்டு வெடிப்பிற்குப்‌ பிறகு வீட்டின்‌ சன்னல்‌ கண்ணாடி சேதமடையாமல்‌ இருப்பது ஏன்‌ என்று கேட்பதற்குள்ள வாய்ப்பைப்‌ பயன்படுத்திக்‌ கொண்டேன்‌. அது தண்ணீர்‌ காரணமாகத்தான்‌ என்று அவள்‌ என்னிடம்‌ கூறினாள்‌. அந்தக்‌ கனேரியப்‌ பறவை பற்றி என்னிடம்‌ விளக்கினாள்‌. நான்‌ எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்‌!.. நாங்கள்‌ 
343 
பேசிக்‌ கொண்டிருந்த போது, எங்களுடைய கண்கள்‌ சந்‌ தித்தன, எங்களிடையே மின்சாரம்‌ போல ஒரு தீப்பொறி பாய்ந்தது... இந்தப்‌ பெண்ணிடத்தில்‌ நான்‌ முழுமூச்சாக, உணரா்ச்சியோடும்‌ மாற்ற முடியாதபடியும்‌, காதலில்‌ விழுந்து விட்டதாக உணர்ந்தேன்‌.” 
கிழவர்‌ சற்று மூச்சு வாங்கிக்‌ கொண்டார்‌, கருப்பு ஒயினை மெதுவாகப்‌ பருகினார்‌. 
“அனால்‌ அதை அவளிடத்தில்‌ பிறகு நீங்கள்‌ சொன்னீர்‌ களா?” என்று பியானோ வாசிப்பவள்‌ கேட்டாள்‌. 
“ஊகும்‌... ஆமாம்‌. ஆனால்‌ அதை நான்‌ வார்த்தை களின்றி சொன்னேன்‌. அது நடந்தது இப்படித்தான்‌...” 
““எங்களைக்‌ கன்னஞ்சிவக்க வைத்துவிட மாட்டீர்கள்‌ என்று நம்புகிறேன்‌, தாத்தா?” கபடமாக முறுவலித்தபடி அன்னா குறிப்பிட்டாள்‌. 
“இல்லவே இல்லை. அந்த விஷயம்‌ மரியாதைக்‌ குரிய தாகவேதான்‌ இருக்கிறது. பாருங்கள்‌, நகரத்து மக்கள்‌ எல்லா இடங்களிலும்‌ ஒரே மாதிரியான வரவேற்பைத்‌ தர வில்லை. புகாரெஸ்ட்‌ நகர மக்கள்‌ அலட்டிக்‌ கொள்ளாமல்‌ இனிமையாகப்‌ பழகினார்கள்‌. ஒரு நாள்‌ நான்‌ வயலின்‌ வாசிக்கத்‌ தொடங்கிய போது, தங்களது ஞாயிற்றுக்‌ கிழமை உடைகளில்‌ உடனடியாகப்‌ பெண்கள்‌ வந்து நடனமாடத்‌ தொடங்கி விட்டார்கள்‌. பிறகு அது அன்றாட வழக்கமாகி விட்டது. 
““அது போல ஒரு நாள்‌ மாலை, நிலவு காய்ந்து கொண் டிருந்த போது, என்னுடைய பல்கேரியப்‌ பெண்‌ காணாமற்‌ போய்விட்ட அந்தப்‌ பாதை வழியாகச்‌ சென்றேன்‌. என்‌ னைப்‌ பார்த்ததும்‌, உலர்ந்த ரோஜா இதழ்களைப்‌ பொறுக்‌ குவது போல பாவனை செய்தாள்‌, ஒரு சாக்கு நிறைய அது சேகரிக்கப்பட்டிருந்தது. ஆனால்‌ எனது கைகளை அவளைச்‌ சுற்றிப்‌ போட்டேன்‌, எனது இதயத்திற்கு நெருக்கமாகப்‌ பிடித்துக்‌ கொண்டு சில முறை முத்தமிட்டேன்‌. 
“அப்போதிலிருந்து, நிலவும்‌ நட்சத்திரங்களும்‌ வானில்‌ தோன்றிய உடனேயே, எனது அன்புக்குரிய காதலியை நோக்கி விரைந்து செல்வேன்‌. அவளோடு இருந்த போது பகலின்‌ கவலைகளை எல்லாம்‌ மறந்து விடுவேன்‌. நாங்கள்‌ அங்கிருந்து புறப்படுவதற்குக்‌ காலம்‌ வந்த போது, இறவாக்‌ 
344 
காதல்‌ என்று உறுதிமொழி எடுத்துக்‌ கொண்டோம்‌, பிறகு நிரந்தரமாகப்‌ பிரிந்து விட்டோம்‌.” 
“அவ்வளவு தானா?” என்றாள்‌ லியூத்மீலா லிவோவ்னா ஏமாற்றத்துடன்‌. 
“வேறு என்ன எதிர்பார்த்தர்கள்‌??? என்று ஜெனரல்‌ கேட்டார்‌. 
“இவ்வாறு சொல்வதற்கு என்னை மன்னிக்க வேண்டும்‌, யாக்கவ்‌ மிஹாய்லவிச்‌, ஆனால்‌ இது காதலே அல்ல இது வெறுமனே ஓர்‌ இராணுவ அதிகாரியினுடைய முகாம்‌ சாதனை போல இருக்கிறது.” 
“உண்மையில்‌ எனக்குத்‌ தெரியாது, இது காதலா வேறு ஏதேனும்‌ உணர்வா என்று.”” 
“இல்லை, இது பற்றி நான்‌ சொல்லவில்லை... சொல்‌ லுங்கள்‌, உண்மையான காதலை நீங்கள்‌ ஒருகாலும்‌ அறிந்த தில்லையா? உங்களுக்குத்‌ தெரியுமா, காதல்‌ என்பது... 
நல்லது, சுருக்கமாகச்‌ சொன்னால்‌... தூய்மையும்‌ புனிதத்‌ குன்மையும்‌, நிலைத்ததன்மையும்‌... இந்த உலகம்‌ சாராத ஒருவிக அன்பாகும்‌... அப்படிப்பட்ட காதலை நீங்கள்‌ எப்‌ 
பொழுதேனும்‌ அநுபவித்திருக்கிறீர்களா?'” 
“மனசாட்சியோடு என்னால்‌ அப்படிச்‌ சொல்ல முடி யாது,”? என்று தனது நாற்காலியிலிருந்து எழுந்தபடி கிழவர்‌ கூறினார்‌. ““நான்‌ காதலிக்கவில்லை என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில்‌, நேரமும்‌ இல்லை: நான்‌ இளைஞனாக இருந்‌ கேன்‌, அப்புறம்‌ ஆனந்த விளையாட்டுகள்‌, சீட்டாட்டம்‌, பிறகு போர்‌... வாழ்க்கையும்‌, இளமையும்‌, நல்ல உடல்‌ நலமும்‌ என்றென்றைக்கும்‌ நீடிக்கும்‌ என்பது போலவே காணப்பட்டது. பிறகு நான்‌ திரும்பிப்‌ பார்த்த போது, ஐயோ! நான்‌ ஏற்கெனவே ஒரு வயதான கிழவனாகி விட்‌ டேன்‌... இப்போது, அன்புள்ள வேரா, இதற்கு மேல்‌ என்‌ னைத்‌ தங்க வைத்து விட வேண்டாம்‌. உங்கள்‌ எல்லா ரிடமிருந்தும்‌ விடைபெற்றுக்‌ கொள்கிறேன்‌... ஹுஸ்ஸார்‌,”” என்று பக்தீன்ஸ்கியிடம்‌ கூறினார்‌, “ “இரவு வெதுவெதுப்‌ பாக இருக்கிறது. நாம்‌ புறப்பட்டுப்‌ போய்‌ நமது வண்டியைச்‌ சந்திக்கலாம்‌.” 
“நானும்‌ உங்களோடு வருகிறேன்‌, காத்தா,” வேரா. 

என்றாள்‌ 
““நானுந்தான்‌,'? என்றாள்‌ ஆன்னா. 
945 
புறப்படுவதற்கு முன்னால்‌ வேரா தன்‌ கணவனிடம்‌ சென்று, அவரிடம்‌ மெதுவாகச்‌ சொன்னாள்‌: 
“நீ அங்கே போய்‌, பார்‌... என்னுடைய மேசையில்‌ சிவப்புப்‌ பெட்டி ஒன்று இருக்கிறது. அதற்குள்ளாக ஒரு கடிதம்‌ இருக்கிறது. அதைப்‌ படி.” 

ஆன்னாவும்‌ பக்தீன்ஸ்கியும்‌ வழியை முன்‌ நடத்திச்‌ சென்‌ றார்கள்‌. இருபது எட்டுகளுக்கு அப்பால்‌ வேராவுடன்‌ தோளோடு கோள்‌ சேர்ந்தது போல ஜெனரல்‌ அவர்களைப்‌ பின்‌ தொடர்ந்தார்‌. முதல்‌ ஓரிரு நிமிடங்களுக்கு இரவு அவ்வளவு கருமையாக இருந்தது, அந்த இருளுக்கு அவர்கள்‌ பழகிக்‌ கொள்வதற்கு முன்பு, கங்களுடைய கால்களால்‌ தட வியபடி வழி கண்டு கொள்ள வேண்டி இருந்தது. தன்‌ னுடைய வயதுக்கு மாறாக அனோசவ்‌ வியக்கத்தக்கவாறு இன்னமும்‌ கூர்மையான கண்பார்வை பெற்றிருந்ததனால்‌ தன்னுடன்‌ வருபவளுக்கும்‌ உதவி செய்ய வேண்டி இருந்தது. அவ்வப்பொழுது அவருடைய பெரிய குளிர்ந்த கை, தனது கை மீது இலேசாக வளைந்தபடி இருந்த வேராவின்‌ கையை அன்போடு தடவியது. 
“அவள்‌ ஒரு வேடிக்கையான பெண்‌, அதுதான்‌ லியூத்‌ மீலா லிவோவ்னா,?”” என்றார்‌ ஜெனரல்‌ திடீரென்று. தனது மனத்திற்குள்ளாகப்‌ போய்க்‌ கொண்டிருக்கும்‌ சிந்தனை களுக்கு உரத்த வடிவம்‌ கொடுப்பது போலிருந்தது. ““என்‌ வாழ்க்கையில்‌ அடிக்கடி அதைப்‌ பார்த்திருக்கிறேன்‌: ஒரு பெண்‌ ஐம்பது வயதைத்‌ தாண்டிய உடனேயே, குறிப்பாக அவள்‌ விதவையாகவோ, முதுகன்னியாகவோ இருந்தால்‌, யாருடைய காதலுக்காகவாவது ஏங்க ஆரம்பிக்கிறாள்‌. ஒன்று உளவறிவாள்‌, சிற்றின்ப எண்ணத்தில்‌ திளைப்பாள்‌, மற்றவர்களுடைய மகிழ்ச்சியை கவனித்துக்‌ கொள்வதாக முன்‌ மொழிவாள்‌, அல்லது உயர்ந்த காதலைப்‌ பற்றி தீம்‌ பாகு போல மிகுதியாகப்‌ பேசுவாள்‌. ஆனால்‌ நான்‌ சொல்ல விரும்புகிறேன்‌ ஒன்று: இந்தக்‌ காலத்தில்‌ மக்களுக்கு எப்படிக்‌ காதலிப்பது என்றே தெரியவில்லை. உண்மையான காதலை நான்‌ பார்க்கவில்லை. என்னுடைய காலத்திலும்‌ அதைப்‌ பார்த்ததே இல்லை?!” 
340 
“அது எப்படி இருக்க முடியும்‌, தாத்தா?'' வேரா அவரது கையை மெதுவாக அழுத்தியபடி மறுதலித்தாள்‌. “என்ன அவதூறு! நீங்களே திருமணம்‌ ஆனவர்‌ இல்லையா? அவ்வாறானால்‌ நீங்களும்‌ காதலித்திருக்க வேண்டும்‌.” 
“இது ஒன்றையும்‌ குறிப்பிடுவதாக இல்லை, அன்புள்ள வேரா. நான்‌ எப்படித்‌ திருமணம்‌ செய்து கொண்டேன்‌ என்பது உனக்குத்‌ கெரியுமா? ஒரு நாள்‌, ஒரு கனி போல இளம்‌ பெண்‌ இளமையும்‌ புதுமையும்‌ உடையவளாக இருந் தாள்‌,என்‌ அருகிலே அமர்ந்து கொண்டிருந்தாள்‌. அவளுடைய மார்பு சட்டைக்குக்‌ கழே விம்மிப்‌ புடைக்கும்‌. அவள்‌ தனது அழகிய நீள இமைகளைக்‌ தாழ்த்தி திடீரென்று நாணுவாள்‌. அவளது கன்னங்கள்‌ அத்தனை கவர்ச்சியாக இருந்தன, கழுத்துக்‌ கூட வெண்மையாகவும்‌, அப்பாவித்‌ தனமாகவும்‌ இருந்தன, அவளுடைய கைகள்‌ விரைவான தாயும்‌, வெதுவெதுப்பானதாயும்‌ இருந்தன. ஐயோ, கட வுளே! அவளது அப்பாவும்‌ அம்மாவும்‌ எங்களைப்‌ பற்றி அஞ்சியொடுங்கினார்கள்‌, கதவுக்கருகில்‌ ஒட்டுக்‌ கேட்டார்‌ கள்‌, என்னை ஒரு விதமாகப்‌ பார்த்தார்கள்‌ உண்மை யுள்ள நாய்களின்‌ பார்வையைப்‌ போல. நான்‌ புறப்படுகின்ற போது ஒரு வகை விரைவான சிறு முத்தங்கள்‌ கொடுத்துச்‌ செல்வேன்‌... தேநீர்‌ வேளையின்‌ போது அவளுடைய பாதம்‌ என்னுடைய காலைத்‌ தொடும்‌, ஏதோ எதிர்பாராது நடப்‌ பது போல... பிறகு எல்லாமே தயாராக இருக்கின்றன. “அன்புள்ள நிகீதா அந்தோனவிச்‌, உங்களது மகளுடைய கையைக்‌ கேட்பதற்காக வந்திருக்கிறேன்‌. என்னை நம்புங்‌ நான்‌ முடிப்பதற்கு முன்னேயே அவள்‌ தந்தையினுடைய கண்கள்‌ ஈரமாயின, அவர்‌ என்னை 
கள்‌, அவள்‌ தேவதை... முத்தமிடத்‌ தொடங்கினார்‌... “அன்புள்ள தம்பி! நீண்ட காலத்திற்கு முன்பே நான்‌ ஊகித்தேன்‌... சரி, கடவுள்‌ உன்னையும்‌ என்‌ மகளையும்‌ காப்பாராக... எங்களது ௧௫௬ வூலத்தை நன்கு பார்த்துக்‌ கொள்‌...” மூன்று மாதங்களுக்குப்‌ பிறகு அந்த தேவதைக்‌ கருவூலம்‌, கந்தலான ஆடையுட னும்‌, வெறுங்காலில்‌ மாட்டப்பட்ட காலணியுடனும்‌, மெல்‌ லிய தலைமுடி வாரப்படாமல்‌, சுருள்‌ காகிதங்களைப்‌ போலத்‌ தொங்கிக்‌ கொண்டிருக்க, வீட்டைச்‌ சுற்றிப்‌ போய்க்‌ கொண்டிருந்தது. ஒரு சமையல்காரி மாதிரி சேவ கார்களுடன்‌ சண்டையிட்டாள்‌. இளம்‌ அதிகாரிகளுடன்‌ 
247 
குன்னை ஒரு பைத்தியம்‌ போல ஆக்கிக்‌ கொண்டாள்‌, கொக்கரித்துக்‌ கொண்டும்‌ கண்களை உருட்டிக்‌ கொண்டும்‌ இருப்பாள்‌. மற்றவர்கள்‌ முன்னிலையில்‌ ஏதோ காரணத்திற்‌ காக எனக்கு “ஜாக்‌' என்று பெயரைக்‌ கொடுத்தாள்‌. செல வாளி, கபடதாரி, சோம்பேறி, பேராசை படைத்தவள்‌. அவளுடைய கண்கள்‌ எப்போதுமே அவ்வளவு நன்றியில்‌ லாதது போலக்‌ காணப்பட்டது... இப்போது அது எல்லாமே முடிந்து விட்டது, அந்தக்‌ கோரமான நடிகருக்கு நான்‌ இன்னமும்‌ நன்றியுடையவனாக இருக்கிறேன்‌... நல்ல வேளை எங்களுக்குக்‌ குழந்தைகள்‌ ஏதுமில்லை...”” 
“நீங்கள்‌ அவர்களை மன்னித்து விட்டீர்களா, தாத்தா??? 
““மன்னிப்பது என்பது ஒரு தகுந்த வார்த்கையல்ல, எனது அருமை வேரா. ஆரம்பத்தில்‌ நான்‌ ஒரு பைத்தியம்‌ போலவே இருந்தேன்‌. நான்‌ பார்த்திருந்தால்‌ அவர்களைக்‌ கட்டாயம்‌ கொன்றிருப்பேன்‌. பிறகு முழு விஷயமுமே படிப்‌ படியாக மறைந்து விட்டது. அவமதிப்பைத்‌ தவிர எதுவுமே எஞ்சவில்லை. ஆக நன்றாகவே இருந்தது. கடவுள்‌ தேவை யற்ற குருதிசிந்தலைத்‌ தவிர்த்து விட்டார்‌. மேலும்‌, பெரும்‌ பாலான கணவன்களால்‌ அடிப்பது போல விதியைக்‌ காட்டப்‌ பட்டேன்‌. உண்மையிலேயே அந்த அருவருப்பான நிகழ்ச்சி இல்லாமல்‌ இருந்திருந்தால்‌ எனக்கு என்ன ஏற்பட்டிருக்கும்‌? ஓர்‌ ஒட்டகம்‌, இகழத்தக்க குருமட முதல்வர்‌, பாதுகாவலர்‌, கறவைப்‌ பசு, ஒரு திரை, ஒருவகையான வீட்டுச்‌ சாமான்‌... இல்லை! எல்லாமே நல்லதற்காகத்தான்‌, சின்ன வேரா.?்‌ 
“இல்லையில்லை, தாத்தா, அந்தப்‌ பழைய வருத்தம்‌ இன்னமும்‌ உங்களுடைய இதயத்திலே உறுத்திக்‌ கொண்டே இருக்கிறது... மேலும்‌ உங்களுடைய வருத்தமான அநு பவத்தை மக்கள்‌ சமுதாயம்‌ முழுமைக்கும்‌ நீங்கள்‌ விரிவு படுத்துகிறீர்கள்‌. வாஸ்யாவையும்‌ என்னையும்‌ எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. எங்கள்‌ திருமணம்‌ துக்ககரமானது என்று உங்களால்‌ சொல்ல முடியுமா??? 
அனோசவ்‌ நீண்ட நேரம்‌ பேசவில்லை. 
“எல்லாம்‌ சரிதான்‌... உங்களுடைய மாதிரி ஒரு விதி விலக்கானது என்று நாம்‌ கூறிக்‌ கொள்வோம்‌...” என்றார்‌ அவர்‌ விருப்பமின்றி. “*“அனால்‌ பெரும்பாலும்‌ மக்கள்‌ எதற்‌ காகத்‌ திருமணம்‌ செய்து கொள்கிறார்கள்‌? பெண்ணை 
348 
எடுத்துக்‌ கொள்வோம்‌. அவள்‌ தனியாக இருப்பதற்கு வெட்‌ கப்படுகிறாள்‌, குறிப்பாக அவளது தோ ழிகளுக்முத்‌ இருமணம்‌ ஆன பிறகு. குடும்பத்தில்‌ ஒரு பாரமாக இருப்பது தாங்க முடியாத ஓன்று. குடும்பத்தின்‌ தலைவியாக இருக்கவும்‌, சுதந்திரத்தை அநுபவிக்கவும்‌ அவள்‌ விரும்புகிறாள்‌... பிறகு தேவை ஏற்படுகிறது ஓட்டு மொத்தமான உடற்‌ தேவை-- தாய்மைக்காக, தனக்கென்று சொந்தமாக ஒரு கூட்டைத்‌ தயாரிப்பதற்காக. ஆண்களுடைய நோக்கங்கள்‌ வேறான வை. முதலாவதாக, அவர்கள்‌ தங்களுடைய திருமணமாகாத வாழ்க்கை, தங்கள்‌ அறைகளின்‌ ஒழுங்கற்ற தன்மை, விடுதிச்‌ சாப்பாடுகள்‌, அசுத்தம்‌, சிகரெட்‌ துண்டுகள்‌, கிழிந்த அல்‌ லது இணைசேராத சில்லரைத்‌ துணிமணிகள்‌, கடன்கள்‌, சம்பிரதாயமற்ற நண்பர்கள்‌ மற்றும்‌ இது போன்றவை களால்‌ களைத்துப்‌ போய்‌ விடுகிறார்கள்‌. இரண்டாவதாக, குடும்பத்தில்‌ வசிப்பது உடல்நலமானதெதன்றும்‌, மிகச்‌ சிக்‌ கனமானதெதன்றும்‌ உணர்கிறார்கள்‌. மூன்றாவதாக, அவர்‌ கள்‌ இறந்த பிறகு அவர்களில்‌ ஒரு பகுதி அவர்களது குழந்‌ தைகளிடத்திலே விடப்படும்‌--நிலைபேற்றின்‌ மருட்சி என்று நினைக்கிறார்கள்‌. நான்காவதாக, மாசுமறுவற்ற தன்மை யின்‌ கவர்ச்சி, எனது விவகாரத்தில்‌ உள்ளது போல. சில சமயங்களில்‌ வரதட்சிணை பற்றிய கருத்தும்‌ இருக்கிறது. ஆனால்‌ காதல்‌ எங்கே இருக்கிறது? ஆர்வமற்ற, தன்னைத்‌ தியாகம்‌ செய்யக்‌ கூடிய காதல்‌, எந்த வெகுமதியையும்‌ எதிர்பாராத காதல்‌ எங்கே? “சாவைவிடக்‌ காதல்‌ சக்தி வாய்ந்தகென்று” சொல்லப்படுகிறது, எங்கே அது? எந்த முயற்சியும்‌ தேவையில்லாது, ஆனால்‌ எந்த வீரத்தையும்‌ செய்ய வேண்டும்‌ என்ற வெறுமையான மகிழ்ச்சி, உயிரைக்‌ கொடுத்துக்‌ கன்னைத்‌ தியாகியாக்கிக்‌ கொள்ள வைக்கும்‌ அந்தக்‌ காதலைச்‌ சொல்கிறேன்‌. பொறு, பொறு, வேரா, திரும்பவும்‌ உன்‌ வாஸ்யாவைப்‌ பற்றி என்னிடத்தில்‌ பேசப்‌ போகிறாயா? என்னை நம்பு, நான்‌ அவனை விரும்பு கிறேன்‌. அவன்‌ சரியாகத்தான்‌ இருக்கிறான்‌. அவனது காத லைப்‌ பேரழகு நிறைந்த ஒளியோடு வருங்காலம்‌ காட்டும்‌ என்று யாருக்குக்‌ தெரியும்‌. ஆனால்‌ என்ன வகையான காதலைப்‌ பற்றி நான்‌ பேசிக்‌ கொண்டிருக்கிறேன்‌ என்பதை புரிந்து கொள்‌. காதல்‌ ஒரு துன்பக்‌ கதையாக இருக்க வேண்‌ டும்‌. உலகத்தில்‌ மிகப்‌ பெரிய ரகசியமாக இருக்க வேண்டும்‌! 
249 
அதைக்‌ கட்டாயம்‌ பாதிக்கக்‌ கூடிய அறுதல்களேோ, மதிப்‌ பீடுகளோ, சமரசங்களேோ இல்லை.”” 
“அப்படிப்பட்ட காதலை எப்போதேனும்‌ நீங்கள்‌ பார்த்‌ இருக்கிறீர்களா, தாத்தா?” என்று வேரா மென்மையாகக்‌ கேட்டாள்‌. 
“*இல்லை,”?* என்று நெவர்‌ உறுதியுடன்‌ பதிலளித்தார்‌. “இதற்கு மிகவும்‌ நெருங்கி வரக்கூடிய இரண்டு சம்பவங்‌ களை நான்‌ அறிவேன்‌. ஆனால்‌ அவற்றில்‌ ஓன்று முட்டாள்‌ குனத்தால்‌ உந்தப்‌ பட்டது, மற்றது... வந்து... ஒரு வகை யான புளித்த விஷயம்‌... முற்றிலுமாக மடமை வாய்ந்தது... நீ விரும்பினால்‌ அவை பற்றி என்னால்‌ சொல்ல முடியும்‌, அது நீண்ட நேரம்‌ பிடிக்காது.” 
“தயவு செய்து சொல்லுங்கள்‌, தாத்தா.”” 
“சரி, எங்களுடைய டிவிஷனில்‌ ஒரு ரெஜிமெண்டல்‌ கமான்டர்‌ (ஆனால்‌ எங்களுடைய ரெஜிமெண்டில்‌ அல்ல), அவருக்கு ஒரு மனைவி இருந்தாள்‌. அவள்‌ எலும்புத்‌ தோலு மாக இருந்தாள்‌ என்பதை உன்னிடம்‌ நான்‌ சொல்லியாக வேண்டும்‌. சிவப்புத்‌ தலை முடியும்‌, நீண்ட கால்களும்‌, ஒல்லியான தோற்றமும்‌, பெரிய வாயையும்‌ பெற்றிருந்‌ காள்‌... ஒரு பழைய மாஸ்கோ வீட்டிற்குப்‌ பூச்சுப்‌ பூசியது போல அவளுடைய முகத்திலே ஓப்பனை இருந்தது. ஆனால்‌, இவ்வளவுக்கும்‌ நிறைய உணர்ச்சி, கர்வம்‌, மக்கள்‌ பால்‌ வெறுப்பு, வேறுபட்ட தன்மைகள்‌ மேல்‌ விருப்பம்‌ போன்ற தன்மைகளைப்‌ பெற்ற ஒரு வகையான ரெஜிமெண்டல்‌ மெஸ்ஸாலினாவாக* இருந்தாள்‌. போதை மருந்துக்கும்‌ அடிமையாகி இருந்தாள்‌. 
“ஒரு நாள்‌ இலையுதிர்‌ காலத்தில்‌ எங்களுடைய ரெஜி மெண்டிற்கு ஒரு புதிய இளைய அதிகாரி, இராணுவப்‌ பள்ளி யிலிருந்து புத்தம்‌ புதியவனாக, அநுபவமற்ற இளைஞனாக அனுப்பி வைக்கப்பட்டான்‌. ஓரு மாதத்திற்குப்‌ பிறகு அந்த வயதான குதிரை அவனைக்‌ தன்னுடைய கட்டை விரலுக்குக்‌ கீழே வைத்திருந்தாள்‌. அவன்‌ தான்‌ அவளுடைய பணியாள்‌, அவளுடைய அடிமை, அவளுடைய அமரத்துவமான நடன சகா. அவளுடைய விசிறி மற்றும்‌ கைக்குட்டையை அவன்‌ 
* மெஸ்ஸாலினா -— ரோமப்‌ பேரரசன்‌ கிளாவ்டிசின்‌ (கி.மு. 10— ௧. பி. 54) மனைவி. ஒழுக்கக்கேட்டாலும்‌, விபச்‌ சாரத்தாலும்‌ வசைப்‌ பெயர்‌ எடுத்தவள்‌. (ப:ர்‌.) 
2௦0 
தூக்கிக்கொண்டு போவது வழக்கம்‌. அவளுடைய குதிரை களை இழுத்து வருவதற்காக, தனது மெல்லிய மேலங்கி குவிர வேறு எதுவுமில்லாமல்‌ பனியில்‌ வெளியே சென்று உறைந்து போனான்‌. வயதான, அநுபவமுள்ள, பேராசை மிக்க பரத்தையின்‌ காலடியில்‌ அப்பாவி இளைஞன்‌ தனது முதற்காதலை வைத்தது மிகவும்‌ பயங்கரமானது. மிகுதி யான தாக்குதல்‌ இன்றி தப்பிக்க முயன்றால்‌ கூட, அவனை இழந்து விட நீங்கள்‌ தயாராக இருக்க வேண்டும்‌. வாழ்க்‌ கைக்காக அவன்‌ குறியீடு செய்யப்படுகிறான்‌. 
““திறிஸ்துமசின்‌ போது அவனிடத்தில்‌ அவள்‌ சலிப்‌ படைந்து விட்டாள்‌. ஏற்கெனவே கான்‌ அறிந்திருந்த பழைய காதலார்களில்‌ ஒருவனிடம்‌ அவள்‌ திரும்பிப்‌ போனாள்‌. ஆனால்‌ அவளின்றி அவனால்‌ இருக்க முடியவில்லை. அவளை ஒரு நிழல்‌ போலத்‌ தொடர்ந்தான்‌. கிழிந்து கந்தலாகிப்‌ போனான்‌, எடையையும்‌ நிறத்தையும்‌ இழந்தான்‌. உயர்ந்த அலங்காரச்‌ சொற்களிலே சொல்வதானால்‌ “சாவு அவனது புருவத்தைக்‌ குறித்தது'. அவள்‌ மீது பயங்கரமாகப்‌ பொறா மைப்பட்டான்‌. அவளது சன்னலுக்குக்‌ கீழே இரவெல்லாம்‌ அவன்‌ நின்று கொண்டிருப்பது வழக்கம்‌ என்று அவர்கள்‌ சொன்னார்கள்‌. 
““வசந்த காலத்தில்‌ ஒரு நாள்‌ ரெஜிமெண்டில்‌ ஒரு வகையான வெளிப்புற விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்‌. அவளையும்‌ அவனையும்‌ எனக்கு நேரடியாகவே தெரியும்‌. ஆனால்‌ அது நிகழ்ந்த போது நான்‌ அங்கில்லை. அத்தகைய நிகழ்ச்சிகளில்‌ நடப்பது போல நிறையக்‌ குடித்தார்கள்‌. இரவு கவிழ்ந்த பிறகு அவர்கள்‌ ரயில்‌ பாதை வழியாகத்‌ திரும்பத்‌ தொடங்கினார்கள்‌. திடீரென்று சரக்கு இரயில்‌ வருவதைப்‌ பார்த்தார்கள்‌. ஒருவகையான செங்குத்துச்‌ சரிவில்‌ அது ஊர்ந்து கொண்டு வந்தது. விசில்‌ சத்தத்தைக்‌ கேட்டார்கள்‌. அக்கணத்தில்‌, அந்த என்ஜினுடைய முகப்பு விளக்குத்‌ தெரிய ஆரம்பிக்கவுமே அவள்‌ திடீரென்று அவ னுடைய காதுக்குள்ளே முணுமுணுத்தாள்‌: “என்னைக்‌ காத லிப்பதாகச்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌. ஆனால்‌ நீங்‌ களாகவே இந்த ரயிலுக்குக்‌ கீழே விழும்படி நான்‌ உங்களிடம்‌ கூறினால்‌ அதைச்‌ செய்ய மாட்டீர்கள்‌ என்று உறுதியாகத்‌ தெரியும்‌.” அவன்‌ ஒரு வார்த்தை கூட பதில்‌ பேசவில்லை. அதே கணம்‌ ரயிலுக்குக்‌ கீழே வேகமாகப்‌ பாய்ந்தான்‌. 
351 
தான்‌ இரண்டாக வெட்டுண்டு போகும்படி, சரியாக முன்பின்‌ சக்கரங்களுக்கு இடையே விழ அவன்‌ திட்டமிட்டிருந்தான்‌ என்று அவர்கள்‌ சொன்னார்கள்‌. ஆனால்‌ யாரோ ஒரு மடையன்‌ அவனைப்‌ பின்னுக்கு இழுத்து அப்பால்‌ கள்ள முயன்றான்‌. போதுமான வலிமை வாய்ந்தவனாக இல்லை. அந்த இளம்‌ அதிகாரி இரு கைகளையும்‌ நீட்டியபடி தண்ட வாளத்தில்‌ பாய்ந்தான்‌. அவை வெட்டப்பட்டன.” 
““யோ, என்ன பயங்கரம்‌!” என்று வேரா வியந்துரைத்‌ தாள்‌. 
“அவன்‌ இராணுவப்‌ பணியிலிருந்து விலக வேண்டி நேரிட்டது. அவனுடைய தோழார்கள்‌ அவனது பயணத்திற்‌ காகக்‌ கொஞ்சம்‌ பணம்‌ சேகரித்தார்கள்‌. அவளையும்‌, அந்த முழு ரெஜிமெண்டையும்‌ பழிகூறிக்‌ கொண்டு வாழ்ந்த அந்நகரத்தில்‌ அவனால்‌ தங்க முடியாது போய்‌ விட்டது. அதுதான்‌ அந்த அப்பாவி இளைஞனுடைய முடிவு... மிகக்‌ கெட்ட முறையில்‌... அவன்‌ பிச்சைக்காரனாகிப்‌ போனான்‌... அதன்‌ பிறகு பீட்டர்ஸ்பர்க்கில்‌ கடற்கரையில்‌ எங்கோ பனிக்‌ காலத்தில்‌ செத்து உறைந்து போனான்‌. 
“இரண்டாவது சம்பவமும்‌ முற்றிலும்‌ பரிதாபத்திற்‌ குரியதாகும்‌. இளமையோடும்‌, அழகோடும்‌ இருந்தாள்‌ என்‌ பதைக்‌ தவிர முன்னைய கதையில்‌ கூறப்பட்ட பெண்ணைப்‌ போலவே இருந்தாள்‌. அவளுடைய நடத்தை முழுதும்‌ வெறுக்கத்தக்கதாகவே இருந்தது. ஒருவருக்கொருவர்‌ கள்‌ ளத்தனமாக நட்புக்கொள்வதை குடும்ப விவகாரம்‌ போலக்‌ கருதிய எங்களுக்கே அவளது நடத்தை அதிர்ச்சியைத்‌ தந்‌ குது. ஆனால்‌ அவளது கணவன்‌ அதைப்‌ பற்றிக்‌ கவலைப்‌ படவில்லை. அவன்‌ ஒவ்வொன்றையும்‌ அறியவும்‌, பார்க்க வும்‌ செய்தான்‌. ஆனால்‌ நிறுத்துவதற்கு ஏதும்‌ செய்ய வில்லை. அவனுடைய நண்பர்கள்‌ அவனுக்குக்‌ குறியீடு காட்டினார்கள்‌. ஆனால்‌ அவர்களை அப்பால்‌ வெறுத்து ஒதுக்கி விட்டான்‌. “வேண்டாம்‌... அதை நிறுத்தி விடுங்‌ 
கள்‌... அது என்னுடைய பிரச்சினையல்ல, என்னுடைய விஷயமல்ல... நான்‌ வேண்டுவதெல்லாம்‌ லேனா மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும்‌ என்பதுதான்‌!..*” அத்தகைய ஒரு முட்டாள்‌! 
“முடிவில்‌, கம்பெனியிலிருந்த ஒரு துணைநிலைத்‌ தலை வனாகிய லெப்டினெண்ட்‌ விஷ்னியகோவுடன்‌ அவள்‌ மிகத்‌ 
332 
தீவிரமாகத்‌ தன்னைச்‌ சம்பந்தப்‌ படுத்திக்‌ கொண்டாள்‌. அந்த மூவரும்‌ இரண்டு கணவன்களுடன்‌ இணைந்த திருமண வாழ்க்கையிலே வாழ்ந்தார்கள்‌. அதுதான்‌ உலகிலே சட்ட பூர்வமான திருமண முறை போலும்‌. பிறகு எங்களது ரெஜி மெண்ட்‌ முன்னணிக்குச்‌ செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டது. எங்களது பெண்கள்‌ விடை கொடுத்து அனுப்பினார்கள்‌, அது போலவே அவளும்‌ செய்தாள்‌. ஆனால்‌ அது உண்மை யில்‌ மிகவும்‌ அருவருப்பாக இருந்தது: அவள்‌ கணவனிடம்‌ அவ்வளவாகப்‌ பார்வையைச்‌ செலுத்தவில்லை, வேறொரு காரணம்‌ இல்லாவிட்டாலும்‌ வருகை தர வேண்டும்‌ என்‌ பதற்காக வந்தது போலிருந்தது. ஒரு கெட்டுப்‌ போன சுவற்‌ றிலுள்ள படர்கொடி போல அந்த லெப்டினெண்ட்‌ மீது அவள்‌ சாய்ந்து கொண்டாள்‌. ஒரு கணப்‌ பொழுது கூட அவனை அகலாது இருந்தாள்‌. வழியனுப்புகிற முறையில்‌ நாங்கள்‌ ரயிலில்‌ உட்கார்ந்து புறப்பட்ட போது, அவள்‌ கணவனை நோக்கிக்‌ கத்தினாள்‌: “வலோத்யாவை நன்கு பார்த்துக்‌ கொள்‌! அவனுக்கு ஏதாவது நிகழ்ந்தால்‌ நான்‌ வீட்டை விட்டு வெளியே போய்‌ விடுவேன்‌.திரும்பி வர மாட்‌ டேன்‌. குழந்தைகளை என்னோடு எடுத்துக்‌ கொள்வேன்‌.” 
“ஒருவேளை நீ அந்தக்‌ காப்டனை ஒரு பேதை என்று நினைக்கக்‌ கூடும்‌? ஒரு ஜெல்லி மீனா? ஒரு பேடியா? இல்லவே இல்லை. அவன்‌ தைரியமான வீரன்‌. செலோனியை கோரி யில்‌ துருக்கியக்‌ களக்காப்பரணுக்கு எதிராக ஆறு முறைத்‌ தனது கம்பெனியை நடத்திச்‌ சென்றான்‌. அவனுடைய இருநூறு ஆட்களில்‌ பதினான்கு போர்தான்‌ தப்பித்தார்கள்‌. அவன்‌ இரு முறை காயப்படுத்தப்பட்டான்‌. அனால்‌ மருத்து வமனைக்குப்‌ போவதற்கு மறுத்து விட்டான்‌. அவன்‌ அப்படிப்பட்ட ஆள்‌. வீரர்கள்‌ அவனை வழிபட்டார்கள்‌. 
““அனால்‌ அவன்‌ என்ன செய்ய வேண்டும்‌ என்று அவ”: சொல்லியிருந்தாள்‌... அவனுடைய லேனா! 
“அகவே ஒரு பணிப்‌ பெண்ணைப்‌ போல அல்லது ஒரு தாய்‌ போல அந்தக்‌ கோழையையும்‌, சோம்பேறி மடையன்‌ விஷ்னியகோவையும்‌ முகாமில்‌ இரவிலே மழையிலும்‌ சகதி யிலும்‌ தனது பெரிய மேலங்கியிலே மூடிக்‌ கொள்வான்‌. அவன்‌ ஓய்வெடுத்துக்‌ கொண்ட போதோ, சூதாட்டச்‌ சீட்டு விளையாடும்‌ போதோ அவனுக்காக கருங்கை தோண்டும்‌ வேலையில்‌ மேற்பார்வை செய்வான்‌. விஷ்னியகோவுக்காக 
292027 253 
இரவிலே புறக்காவல்‌ நிலையங்களைப்‌ பரிசோதிப்பான்‌. யரோஸ்லாவல்‌ நாட்டுப்புறப்‌ பெண்‌ தன்னுடைய முட்டைக்‌ கோசுகளை வெட்டுவது போல நமது பாதுகாவல்‌ ஆட்‌ களைக்‌ துருக்கியர்கள்‌ வெட்டி வீழ்த்திய சமயத்தில்‌ அப்படிச்‌ செய்தான்‌. அப்படிச்‌ சொல்வது ஒரு பாவம்‌, 'ஆனால்‌, என்னுடைய கெளரவத்தின்‌ பெயரால்‌ சொல்கிறேன்‌, விஷ்‌ னியகோவ்‌ சன்னிக்‌ காய்ச்சலால்‌ மருத்துவமனையில்‌ இறந்து விட்டான்‌ என்று கேட்டவுடன்‌ எல்லாரும்‌ மகிழ்ச்சியடைந்‌ தோம்‌...” 
“பெண்கள்‌ எப்படி, தாத்தா? காதலிக்கின்ற பெண்‌ களை நீங்கள்‌ சந்திக்கவே இல்லையா?” * 
“ஏன்‌, நான்‌ சந்தித்திருக்கிறேன்‌, வேரா. நான்‌ மேலும்‌ சொல்கிறேன்‌? காதல்‌ உள்ள ஓவ்வொரு பெண்ணும்‌ மிக உயர்ந்த ஆளுமைத்தன்மை அடைவதற்குத்‌ தகுதி படைத்த வள்‌ என்பது எனக்கு உறுதி. அவள்‌ முத்தமிட ஆரம்பித்த நேரத்திலிருந்து, தழுவுகற, தன்னை இழக்கிற நேரங்கள்‌ வரை அவள்‌ ஒரு தாய்‌ தான்‌ என்பது உனக்குத்‌ தெரிய வேண்டும்‌. அவள்‌ காதலிக்க ஆரம்பித்து விட்டால்‌, வாழ்க்‌ கையின்‌ முழு அர்த்தம்‌ இந்தப்‌ பிரபஞ்சம்‌ தான்‌! ஆனால்‌ காதல்‌ அருவருக்கத்தக்கத்‌ தோற்றங்களை அடைந்து விட்‌ டால்‌,ஒரு வகையில்‌ அன்றாட வசதிக்கேற்ப, அற்பத்தனமான வடிவங்களுக்குத்‌ தாழ்ந்து போய்‌ விட்டால்‌ அதற்கு அவள்‌ பொறுப்பில்லை. பழிக்கப்பட வேண்டியவர்கள்‌ ஆண்கள்‌ தான்‌. ஏனெனில்‌ இருபதிலேயே அவர்கள்‌ சலித்துப்‌ போய்‌ விடுகிறார்கள்‌. கோழிக்குஞ்சு உடலும்‌, முயலினுடைய நெஞ்சும்‌ இருக்கிறது. அழுத்தமான ஆசைகள்‌, வீரச்‌ செயல்கள்‌, காதலின்‌ மென்மையும்‌ வழிபாடும்‌ அவர்களுக்கு முடியாது. உண்மைக்‌ காதல்‌ ஒரு காலத்தில்‌ இருந்தது என்று கூறுகிறார்கள்‌. இல்லையென்றால்‌ உலகத்தின்‌ மிக உயர்ந்த மனங்களும்‌, ஆன்மாக்களும்‌ --- கவிஞர்கள்‌, நாவலாசிரியர்‌ கள்‌, இசைவாணர்கள்‌, கலைஞர்கள்‌ -- கனவுகண்டதும்‌ ஆசைப்பட்டதும்‌ அது தானே? சமீபத்தில்‌ மனோன்‌ லெஸ்கோ மற்றும்‌ வீரன்‌ டெ கிரியே கதையை நான்‌ படித்‌ தேன்‌... அது என்‌ கண்களில்‌ நீரை வரவழைத்தது... உள்ள படியே அப்படிச்‌ செய்தது. உண்மையில்‌ சொல்லு, ஓவ்‌ வொரு பெண்ணும்‌ அவளுடைய நெஞ்சின்‌ ஆழத்திலே, 
ஒரே மனத்துடன்‌, எதையும்‌ மன்னிக்கக்‌ கூடிய, எதையும்‌ 
224 
தாழ்ந்து பணிவோடு தன்னைத்‌ தியாகம்‌ செய்யக்‌ கூடிய அன்பு கொண்ட காதலுக்காகக்‌ கனவு கண்டதில்லையா?”' 
“ஆமாம்‌, அப்படித்தான்‌, தாத்தா...” 
“அது இல்லையென்றால்‌ தான்‌ பெண்கள்‌ வஞ்சம்‌ தீர்த்துக்‌ கொள்கிறார்கள்‌. இப்போதிலிருந்து சுமார்‌ முப்பது ஆண்டுகளில்‌ அதைப்‌ பார்ப்பதற்கு நான்‌ உயிரோடு இருக்க மாட்டேன்‌, அன்புள்ள வேரா, நான்‌ சொல்வதை நினைவு வைத்துக்‌ கொள்‌. இப்போதிலிருந்து முப்பது ஆண்டுகளில்‌ உலகத்திலே பெண்கள்‌ இணையற்ற சக்தியினைக்‌ கைவரப்‌ பெறுவார்கள்‌. இந்திய தெய்வங்களைப்‌ போல அவர்கள்‌ ஆடையணிவார்கள்‌. அடிமைகளைப்‌ போல அண்களைக்‌ காலடியிலே மிதிப்பார்கள்‌. அவர்களுடைய எல்லை கடந்த ஆசைகளும்‌, உணர்வுகளும்‌ ஆண்களுக்குச்‌ சோகமான சட்‌ டங்களாக மாறிவிடும்‌. ஏனெனில்‌ பல சந்ததிகள்‌ காலம்‌ வரை நாங்கள்‌ காதலைப்‌ போற்றவும்‌ வழிபடவும்‌ முடியாத வர்களாகி விட்டோம்‌. அதற்கு இது ஒரு பழிவாங்குத லாகும்‌. உனக்கு அந்த விதி தெரியும்‌: செயலும்‌ எதிர்ச்செய லும்‌ சமத்தன்மைக்கும்‌ எதிர்த்தன்மைக்கும்‌ இணையான சற்று நேரம்‌ அவர்‌ நிறுத்தினார்‌, பிறகு திடீரென்று கேட்டார்‌: 
“சொல்லு, வேரா, உனக்குச்‌ சங்கடமில்லாமல்‌ இருந்‌ தால்‌, அந்தத்‌ தந்தியடிப்பவன்‌ பற்றி இன்று இரவு இளவர சன்‌ வசீலி நமக்குச்‌ சொன்ன கதை என்ன? அதிலே எவ்வளவு உண்மை, அவருடைய அலங்காரச்‌ சோடனை எவ்வளவு??? 
“உள்ளபடியே நீங்கள்‌ தெரிந்து கொள்ள விரும்புகிறீர்‌ 
வை 
களா, தாத்தா??? 
“சொல்வதை நீ சிரமமாக எடுத்துக்‌ கொண்டால்‌, வேரா, ஏதாவது ஒரு காரணத்திற்காக நீ சொல்ல வேண்‌ டாம்‌ என்றால்‌...” 
“இல்லவே இல்லை, மகிழ்ச்சியோடு சொல்வேன்‌.” 
தனது திருமணத்திற்கு இரண்டாண்டு காலத்திற்கு முன்‌ பாகத்‌ தொடர்ந்த அந்தப்‌ பேராவல்‌ கொண்டவனைப்‌ பற்றி ஜெனரலிடம்‌ விவரமாகச்‌ சொல்ல ஆரம்பித்தாள்‌. 
அவள்‌ அவனைப்‌ பார்த்ததே இல்லை. பெயரைக்‌ கூடத்‌ தெரியாது. கி.எஸ்‌.ஜெ.. என்று மட்டுமே கையொப்பமிட்டு அவளுக்கு எழுதியிருந்தான்‌. ஏதோ ஓர்‌ அலுவலகத்தில்‌ 
க, 355 
எழுத்தர்‌ என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தான்‌- தந்தி அலுவலகம்‌ பற்றி ஒரு வார்த்தை கூடச்‌ சொல்லவில்லை. அவளுடைய நடவடிக்கைகளை மிக நெருக்கமாகக்‌ கவனித்து வந்திருக்கிறான்‌ என்பது தெளிவு. ஏனெனில்‌ அவனது கடிதங் களிலே, அந்த மாலைப்‌ பொழுதை அவள்‌ எங்கே செலவிட்‌ டாள்‌ என்பதையும்‌, எந்தக்‌ குழுவில்‌ இருந்தாள்‌ என்பதை யும்‌, எப்படி உடையணிந்திருந்தாள்‌ என்பதையும்‌ மிகச்‌ சரியாகக்‌ குறிப்பிட்டிருந்தான்‌. முதலில்‌ அவனது கடிதங்‌ கள்‌, முற்றிலும்‌ சரியாக இருந்தாலும்‌, கொஞ்சம்‌ ஆபாச மாக ஒலித்தன. ஆனால்‌ ஒரு முறை அவள்‌, பைத்தியக்காரத்‌ தனமான உணர்ச்சிவயப்பட்ட காதலால்‌ தன்னை இதற்கு மேலும்‌ அலைக்கழிக்க வேண்டாம்‌ என்று அவனுக்கு எழு தினாள்‌. (அதோடு, தாத்தா, இதை எங்கள்‌ ஆட்களிடம்‌ சொல்லாதீர்கள்‌. இது யாருக்கும்‌ தெரியாது.) அதன்‌ பிறகு அவன்‌ காதலைப்‌ பற்றி எழுதுவதே இல்லை, மாறாக ஈஸ்‌ டர்‌, புத்தாண்டு மற்றும்‌ அவளது பிறந்த நாள்‌ போன்ற குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில்‌ மட்டுமே வாழ்த்துகளை அனுப்‌ பினான்‌. இளவரசி வேரா மேலும்‌ ஜெனரலிடம்‌, அந்த ரக சியப்‌ பாராட்டு நரிடமிருந்து அன்று வந்த விசித்திரக்‌ கடிதத்‌ தில்‌ உள்ளதை வரிக்கு வரியாகச்‌ சொன்னாள்‌... 
“அமாம்‌,” என்று கடைசியாக ஜெனரல்‌ இழுத்தார்‌. “ஒருவேளை அவன்‌ குழப்பமானவனோ, வெறி பிடித்த வனோ யாருக்குத்‌ தெரியும்‌? ஒருவேளை, பெண்கள்‌ கனவு காண்கிற ஆனால்‌ ஆண்கள்‌ வராத அப்படிப்பட்ட காதலால்‌ உனது வாழ்க்கைக்‌ குறுக்கிடப்படுகிறதோ என்னவோ. நிற்க, நமக்கு முன்னே விளக்குகள்‌ நகர்ந்து கொண்டிருப்பகை நீ பார்க்கிறாயா? அது எனது வண்டியாகத்தான்‌ இருக்க வேண்டும்‌.” 
அதே நேரம்‌ அவர்களுக்குப்‌ பின்புறத்தில்‌ காரின்‌ ஓசை கேட்டது. சக்கரங்களினால்‌ தடம்‌ ஏற்படுத்தப்பட்டு, பாதை பிரகாசமாகச்‌ சுடர்‌ விட்டெரிவது போல பிரகாசித்தது. குஸ்தவ்‌ இவானவிச்‌ ஓட்டி வந்தார்‌. 
“உன்னுடைய பொருள்களை நான்‌ எடுத்து வந்திருக்‌ கிறேன்‌, ஆன்னா, உள்ளே வா,”” என்றார்‌. “*உங்களை வீடு வரை நான்‌ அழைத்துச்‌ செல்லலாமா, ஜெனரல்‌ அவர்‌ களே??? 
“£வேண்டாம்‌. நன்றி, என்‌ நண்பரே,” என்று ஜெனரல்‌ 
226 
சொன்னார்‌. ““எனக்கு இந்தக்‌ கார்‌ பிடிக்காது. அது செய்வ தெல்லாம்‌ அலைப்பதும்‌ குலுங்குவதும்‌ கான்‌, அதில்‌ எந்த மகிழ்ச்சியும்‌ இல்லை. நல்லது, இரவு வணக்கம்‌, அன்புள்ள வேரா. நான்‌ அடிக்கடி வந்து கொண்டிருப்பேன்‌,” என்ற அவார்‌ வேராவின்‌ நெற்றியிலும்‌ கைகளிலும்‌ முத்தமிட்டார்‌. சுற்றிலும்‌ விடை பெற்றுக்‌ கொண்டிருந்தார்கள்‌. வேரா நிக்கலாயெவ்னாவை அவளது நகர்ப்புறமனை படலை வரை அழைத்துச்‌ சென்றார்‌ பிரியேஸ்ஸே. பிறகு ஒரு வட்ட மடித்து, கர்ஜிக்கிற, புகை கள்ளுகின்ற தனது காரில்‌ இருட்டுக்குள்ளாக மறைந்தார்‌. 9 
ஒரு கசப்பான உணர்வோடு இளவரசி வேரா தாழ்‌ வாரத்தில்‌ காலடி வைத்து வீட்டிற்குள்‌ போனாள்‌. சற்று தூரத்தில்‌ அவளுடைய சகோதரன்‌ நிக்கலாயின்‌ உரத்த குரலைக்‌ கேட்டாள்‌. அவருடைய மெலிந்த உடல்‌ குறுக்‌ கும்‌ நெடுக்குமாக அறைக்குள்‌ உலாவிக்‌ கொண்டிருப்பதைப்‌ பார்த்தாள்‌. வசீலி லிவோவிச்‌ சீட்டு விளையாடும்‌ மேசை யின்‌ முன்‌ அமர்ந்திருந்தார்‌. ஒரு சுண்ணக்‌ கோலால்‌, பச்சை நிறத்‌ துணியில்‌ அவர்‌ கோடுகள்‌ வரைந்த போது, அவ ருடைய பெரிய தலையில்‌ வெட்டப்பட்டிருந்த முடி, கீழே தாழ்ந்து கிடந்தது. 
“இதை எப்போதோ செய்திருக்க வேண்டும்‌!” என்று நிக்கலாய்‌ எரிச்சலோடு சொன்னார்‌. கண்ணுக்குத்‌ தெரியாத ஒரு பாரத்தை இறக்குவது போல, தனது வலது கையைப்‌ பாவனை செய்து கொண்டார்‌. ““அந்த முட்டாள்தனமான கடிதங்களுக்கு ஒரு முற்றுப்‌ புள்ளி வைக்கப்பட வேண்டும்‌ என்பது நீண்ட காலத்திற்கு முன்பே உறுதியாகத்‌ தெதரிந்‌ தது. நான்‌ அதை உன்னிடம்‌ சொன்னபோது வேரா உன்‌ னுடைய மனைவியாகவில்லை. சிறு குழந்தைகளைப்‌ போல அவற்றில்‌ சிரிக்கத்தக்கது எதுவோ அதை மட்டுமே பார்த்துக்‌ கொண்டு அவள்‌ அதனை வேடிக்கையாக எடுத்துக்‌ கொண் டிருக்கக்‌ கூடாது. இங்கே வேராவே இருக்கிறாள்‌... வசீலி லிவோவிச்சும்‌ நானும்‌ உங்களுடைய பைத்தியக்காரனைப்‌ பற்றிப்‌ பேசிக்‌ கொண்டிருந்தோம்‌, வேரா. அந்தக்‌ கடிதப்‌ போக்குவரத்து திமிரானதாகவும்‌, அருவருக்கத்தக்கதாக வும்‌ இருக்கிறதென்று நான்‌ கருதுகிறேன்‌.” 
257 
“இதில்‌ கடிதப்‌ போக்குவரத்தே கிடையாது,” ஷேயின்‌ ஆர்வமற்றுக்‌ குறுக்கிட்டுச்‌ சொன்னார்‌. ““அவன்‌ ஒருவன்‌ தானே கடிதம்‌ எழுதினான்‌...” 
அப்போது வேரா நாணினாள்‌, ஒரு பெரிய விசிறியின்‌ நிழலில்‌ கிடந்த சோஃபா மீது அமர்ந்தாள்‌. 
“நான்‌ வருந்துகிறேன்‌,’ என்றார்‌ நிக்கலாய்‌ நிக்கலா யெவிச்‌, கண்ணுக்குக்‌ தெரியாத கணத்த பொருளைக்‌ கீழே வீசினார்‌. அது அவருடைய நெஞ்சிலிருந்து கிழித்தெறிவது போல இருந்தது. 
““நீ எதற்கு அவனை என்னுடையவன்‌ என்று சொன்‌ னாய்‌ என்பது எனக்குத்‌ தெரியவில்லை, கதன்‌ கணவனுடைய பக்க பலத்தினால்‌ மகிழ்ச்சியடைந்தவளாகக்‌ கூறினாள்‌ வேரா. “*“அவன்‌ உனக்கு எவ்வளவு வேண்டியவனோ, அவ்‌ வளவு கான்‌ எனக்கும்‌...” 
“சரி, நான்‌ மீண்டும்‌ வருத்தத்தைக்‌ கூறிக்‌ கொள்‌ கிறேன்‌... சுருக்கமாக, நான்‌ சொல்ல விரும்பியது என்ன வென்றால்‌, அவனுடைய மடத்தனத்திற்கு நாம்‌ முடிவு கட்ட வேண்டும்‌. நாம்‌ வெறுமனே சிரித்து, நகைச்சுவைப்‌ படங்களை வரைகின்ற ஒரு கட்டத்தைத்‌ தாண்டி இந்த விஷயம்‌ போய்க்‌ கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்‌... என்னை நம்புங்கள்‌, நான்‌ எதற்குக்‌ கவலைப்‌ படுகிறேன்‌ என்றால்‌ வேராவினுடைய பெருமையும்‌, வசீலி லிவோவிச்‌, உன்னுடைய பெருமையும்‌ சம்பந்தப்பட்டது இது.” 
“நீ மிகவும்‌ மிகைப்படுத்துகிறாய்‌ என்று நினைக்கிறேன்‌, நிக்கலாய்‌,” என்று பதிலளித்தார்‌ ஷேயின்‌. 
“ஒருகால்‌ நான்‌ அப்படிச்‌ செய்யலாம்‌... ஆனால்‌ நகைக்‌ கக்‌ கூடிய நிலையில்‌ உங்களை நீங்களே ஆக்கிக்‌ கொள்ளும்‌ ஆபத்து இருக்கிறது.” 
“எப்படி என்று எனக்குக்‌ தெரியவில்லை,” என்றார்‌ இளவரசர்‌. 
“பார்‌, இந்த முட்டாள்தனமான வளையல்‌ தான்‌...”” நிக்கலாய்‌ மேசையிலிருந்து சிவப்புப்‌ பெட்டியை உயர்த்தி னார்‌, உடனே அதை வெறுப்போடு கீழே எறிந்தார்‌. ““இந்த ராட்சசப்‌ பொருள்‌ நமது வீட்டில்‌ இருந்தாலோ அதை வெளியே தூக்கி எறிந்தாலோ தாஷாவுக்கு அன்பளிப்புச்‌ செய்து விட்டாலோ... பிறகு, முதற்காரியமாக பி.பி.ஜெ. தனக்கு அறிமுகமானவர்களிடமோ நண்பர்களிடமோ இள 
229 
வரசி வேரா நிக்கலாயெவ்னா ஷேயினா அப்படிப்பட்ட பரிசுகளை ஏற்றுக்‌ கொண்டதாக அவன்‌ தம்பட்ட மடித்துக்‌ கொள்ள முடியும்‌. இரண்டாவதாக, இந்த முதல்‌ வாய்ப்பு மேற்கொண்டு சுரண்டுவதற்கு அவனுக்கு ஊக்கமளிக்கும்‌. நாளைக்கு அவன்‌ வைர மோதிரம்‌ அனுப்பலாம்‌, அடுத்த நாள்‌ முத்துக்‌ கழுத்தாரம்‌ அனுப்பலாம்‌, அதன்‌ பிறகு, நாம்‌ அறிந்த வகையில்‌, கையாடல்‌ செய்ததற்காகவோ ஏமாற்றியதற்காகவோ அவன்‌ கூண்டிற்குள்‌ நிறுத்தப்பட லாம்‌. அதற்கு சாட்சியம்‌ அளிப்பதற்கு இளவரசர்‌, இள வரசி ஷேயின்கள்‌ அழைக்கப்படுவார்கள்‌... ஒரு நல்ல காட்சி தானே, இல்லையா?” 
“இல்லை, வளையல்‌ கட்டாயம்‌ திருப்பி அனுப்பப்பட வேண்டும்‌!” வியப்புற்றார்‌ வசீலி லிவோவிச்‌. 
“*நான்‌ கூட அப்படித்தான்‌ நினைக்கிறேன்‌,” வேரா ஏற்றுக்‌ கொண்டாள்‌. ““எவ்வளவு சீக்கிரம்‌ முடியுமோ அவ்‌ வளவு நல்லது. ஆனால்‌ நாம்‌ அதை எப்படிச்‌ செய்யப்‌ போகிறோம்‌? நமக்குப்‌ பெயரோ முகவரியோ தெரியாதே.” 
“ஓ, அது குழந்தை விளையாட்டு!” நிக்கலாய்‌ நிக்கலா யெவிச்‌ அக்கறையின்றி பதில்‌ சொன்னார்‌. ““இந்த பி.பி.ஜெ. உடைய பெயர்‌ முதலெழுத்துத்தான்‌ நமக்குத்‌ தெரியும்‌... அது என்ன, வேரா??? 
““இ.எஸ்‌.ஜெ.”” 
“மிகவும்‌ நல்லது. மேலும்‌, அவன்‌ எங்கோ வேலை பார்க்‌ கிறான்‌ என்பதும்‌ நமக்குத்‌ தெரியும்‌. அது போதுமானது. நாளை நான்‌ நகர அட்டவணையை எடுத்து இந்த முத லெழுத்து உள்ள மனிதன்‌ அதிகாரியா எழுத்தரா என்பதைக்‌ கண்டுபிடித்து விடுகிறேன்‌. எதோ காரணத்தினால்‌ என்‌ னால்‌ கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்‌, துப்பறியும்‌ ஆளை அழைத்துத்‌ தேடிப்பார்க்க உத்தரவிடுவேன்‌. ஏதா வது சிரமம்‌ ஏற்படும்‌ போது, அவனுடைய கையெழுத்து உள்ள இந்தத்‌ தாளை வைத்துக்‌ கொள்கிறேன்‌. சுருக்கமாகச்‌ சொன்னால்‌, நாளை இரண்டு மணிக்குள்‌, அந்த ஆசாமி யினுடைய சரியான பெயரையும்‌ முகவரியையும்‌ அவன்‌ எப்போது உள்ளே இருப்பான்‌ என்பதையும்‌ நான்‌ அறிந்து விடுவேன்‌. அதன்‌ பிறகு அவனுடைய வளையலைகத்‌ திருப்பிக்‌ கொடுப்பது மாத்திரமல்ல, அவன்‌ மறுபடியும்‌ தான்‌ உயிர்‌ 
23209 
வாழ்தலை நமக்கு நினைவுபடுத்தாதபடி பார்த்துக்‌ கொள்‌ கிறேன்‌.” 
“நீ என்ன செய்யப்‌ போகிறாய்‌?” என்று இளவரசர்‌ வசலி கேட்டார்‌. 
“ “என்னவா? அளுநரைப்‌ பார்க்கப்‌ போகிறேன்‌.” 
“இல்லை, ஆளுநரை வேண்டாம்‌. அவரோடு நாம்‌ என்ன நிபந்தனைகள்‌ வைத்திருக்கிறோம்‌ என்பது உனக்குத்‌ தெரியும்‌... நம்மை நாமே கேலிக்குரியவர்களாக்கிக்‌ கொள்‌ வோம்‌.” 
“அது சரி. போலீஸ்‌ தலைமையதிகாரியிடம்‌ நான்‌ போகி றேன்‌. அவர்‌ எனது கிளப்‌ நண்பர்‌. அந்த ரோமியோவை அவர்‌ அழைத்து, அவனது மூக்கிற்குக்‌ கீழே விரலை வைக்கட்‌ டும்‌. அதை எப்படிச்‌ செய்வார்‌ என்று உனக்குத்‌ தெரியுமா? ஒரு மனிதனுடைய மூக்கிற்குப்‌ பக்கத்தில்‌ அவர்‌ தனது விரலைக்‌ கொண்டு வருவார்‌. ஆனால்‌ தனது கையை அசைக்க மாட்டார்‌... விரலை மாத்திரமே அசைப்பார்‌. ‘இதை என்‌ னால்‌ பொறுத்துக்‌ கொள்ள முடியாது, ஐயா!” உரத்த குரலில்‌ சொல்வார்‌.” ” 
“கேவலம்‌! போலீசோடு விருப்பார்வத்தோடு தொடர்‌ பா!” என்றாள்‌ வேரா, முகத்தைச்‌ சுழித்தபடி. 
“நீ சொல்வது சரி, வேரா,” என்று இளவரசர்‌ ஒத்துக்‌ கொண்டார்‌. ““இதற்குள்ளாகவெளியாட்களை இழுக்காமல்‌ இருப்பது நல்லது. வதந்திகளும்‌, பழிச்‌ சொற்களும்‌ பரவும்‌. நமது நகர்‌ எப்படிப்பட்டகென்று நமக்கு நன்றாகத்‌ கெரி யும்‌. கண்ணாடிக்‌ கூண்டிற்குள்‌ வசிப்பது போல. அந்து... இளைஞனிடம்‌ நானே போவது நல்லதென்று நினைக்‌ கிறேன்‌... கடவுளுக்குத்தான்‌ தெரியும்‌, அவன்‌ அறுபது வய துக்காரனாக இருக்கலாம்‌. அவனிடத்தில்‌ வளையலை ஒப்படைத்துவிட்டு, ஒரு பேச்சும்‌ அவனுக்குக்‌ கொடுத்து விட்டு வருகிறேன்‌.” 
““நானும்‌ உன்னோடு வருகிறேன்‌,” என்று நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌ குறுக்கிட்டுச்‌ சொன்னார்‌. ““நீ மிகவும்‌ மென்‌ மையானவன்‌. அவனிடம்‌ பேசுவதை என்னிடம்‌ விட்டு விடு... இப்போது, என்‌ நண்பர்களே,”” தனது கடிகாரத்தை வெளியே இழுத்துப்‌ பார்த்தார்‌. “ “என்‌ அறைக்குச்‌ செல்வதற் காக நீங்கள்‌ மன்னிக்க வேண்டும்‌. என்னால்‌ நிற்க முடிய 
260 
வில்லை. நான்‌ பார்க்க வேண்டிய இரு வழக்குகள்‌ இருக்கின்‌ றன.” 
“எப்படியோ அந்த துரதிருஷ்ட மனிதனுக்காக நான்‌ வருந்துகிறேன்‌,” என்றாள்‌ வேரா தயக்கத்துடன்‌. 
“அவனுக்காக வருத்தப்படக்‌ காரணம்‌ இல்லை!:' நிக்‌ கலாய்‌ கதவுப்‌ பக்கம்‌ திரும்பியபடி மறுதலித்தார்‌. “ “நமது வர்க்கத்கைச்‌ சேர்ந்த யாராவது ஒருவர்‌ அந்த வளையலை யும்‌ கடிதத்தையும்‌ அனுப்பியிருந்தால்‌ இளவரசர்‌ வசீலி ஒரு சவாலே விட்டிருப்பார்‌. அல்லது அவார்‌ செய்யாவிட்டா லும்‌, நான்‌ செய்திருப்பேன்‌. பழைய காலமாக இருப்பின்‌ அவனைச்‌ சவுக்கால்‌ அடிக்கச்‌ செய்திருப்பேன்‌. நாளை எனக்‌ காக உன்‌ அலுவலகத்தில்‌ காத்திரு, வசீலி லிவோவிச்‌. நான்‌ தொலைபேசி மூலம்‌ பேசுகிறேன்‌.” 
10 
ஆபாசமான மாடிப்படி எலிகள்‌, பூனைகள்‌, மண்ணெண்‌ ணெய்‌ மற்றும்‌ நீர்நனைப்பு வாடையடித்தது. ஆறாவது மாடியை அவர்கள்‌ அடைவதற்கு முன்பே இளவரசர்‌ வசீலி லிவோவிச்‌ நின்றார்‌. 
“கொஞ்ச நேரம்‌ காத்திரு,” என்று மைத்துனனிட.ம்‌ கூறினார்‌. ““‘நான்‌ மூச்சு வாங்கிக்‌ கொள்கிறேன்‌. ஓ, நிக்கலாய்‌, நாம்‌ இங்கு வந்திருக்கக்‌ கூடாது...” 
அவர்கள்‌ இன்னும்‌ இரண்டு மாடி ஏறினார்கள்‌. மாடியின்‌ எண்ணைக்‌ கண்டுபிடிப்பதற்கு முன்பாக நிக்கலாய்‌ நிக்கலா யெவிச்‌ இரண்டு தீக்குச்சிகளை ஏற்றி வைக்க வேண்டிய அளவுக்கு அது இருட்டாக இருந்தது. 
அவர்‌ மணி அடித்தார்‌. ஒரு கனமான, வெண்முடி வாய்ந்த, சாம்பல்‌ நிறக்‌ கண்களும்‌, கண்ணாடி அணிந்த வளுமான ஒருத்தி பதில்‌ சொன்னாள்‌. ஒரு வகையான வியாதி காரணமாக அவள்‌ இலேசாக முன்னோக்கிக்‌ குனிந்து வளைந்திருந்தாள்‌. 
“திரு. ஜெல்த்கோவ்‌ உள்ளே இருக்கிறாரா?” என்று கேட்டார்‌ நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌. 
அந்தப்‌ பெண்ணினுடைய கண்கள்‌ ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறிமாறி அச்சத்தோடு பார்த்தன. இரண்டு ஆண்களுடைய மரியாதைக்குரிய தோற்றமும்‌ ஊக்கந்தரு வது போலக்‌ காணப்பட்டது. 
961 
“அமாம்‌, உள்ளே வாருங்கள்‌,” பின்‌ பக்கம்‌ நகர்ந்து கொண்டு அவள்‌ கூறினாள்‌. “உங்களது இடது புறத்தில்‌ முதலாவது கதவு.” 
புலாட்‌-துகனோவ்ஸ்கி மூன்று முறை மெதுவாகவும்‌, உறுதியாகவும்‌ கதவைக்‌ தட்டினார்‌. ஏகோ சலசலப்பு உள்‌ ளேயிருந்து வந்தது. அவர்‌ மீண்டும்‌ கதவைத்‌ தட்டினார்‌. 
“உள்ளே வாருங்கள்‌, ஒரு மென்மையான குரல்‌ பதி லளித்தது. 
அந்த அறையின்‌ கூரை மிகவும்‌ உயரம்‌ குறைவானதாக இருந்தது, ஆனால்‌ அகலமாக இருந்தது, ஏறக்குறைய சதுர வடிவத்தில்‌ இருந்தது. அதனுடைய இரண்டு வட்டச்‌ சன்னல்‌ களும்‌ கப்பற்‌ சாளரம்‌ போன்றே காணப்பட்டன. கொஞ்ச மாக வெளிச்சத்கை உள்ளே விட்டது. உண்மையில்‌, அது சரக்குக்‌ கப்பலினுடைய உணவு அறை போல இருந்தது. சுவர்களில்‌ ஒன்றுக்கு எதிராக, ஒரு குறுகலான கட்டில்‌ கிடந்தது, மற்றொன்றிற்கு எதிராக அகலமான சோஃபா, அருமையான அனால்‌ அழுக்‌ கடைந்த தெக்கின்‌ சமுக்காளத்‌ தால்‌ மூடப்பட்டிருந்தது. நடுவே வண்ண உக்ரேனியத்‌ துணி யால்‌ பரப்பப்பட்ட மேசை ஒன்று கிடந்தது. 
முதலில்‌ பார்வையாளர்களால்‌ உள்ளிருந்தவனுடைய முகத்தைப்‌ பார்க்க முடியவில்லை, ஏனெனில்‌ அவன்‌ தனது முதுகை வெளிச்சத்திற்கு வைத்து நின்று கொண்டிருந்தான்‌, குழப்பத்தில்‌ தனது கைகளைக்‌ தேய்த்துக்‌ கொண்டிருந்‌ தான்‌. அவன்‌ உயரமானவனாகவும்‌, ஒல்லியானவனாகவும்‌, நீண்ட சில்க்‌ போன்ற முடியுடன்‌ காணப்பட்டான்‌. 
“நீங்கள்‌ இரு. ஜெல்த்கோவ்‌ தானே, நான்‌ தவறாகப்‌ புரிந்து கொள்ளவில்லை என்றால்‌??? என்று நிக்கலாய்‌ நிக்‌ கலாயெவிச்‌ ஆணவத்தோடு கேட்டார்‌. 
“அமாம்‌. அது தான்‌ என்‌ பெயர்‌. உங்களைச்‌ சந்திப்‌ பதில்‌ மகிழ்ச்சியடைகிேன்‌.?” 
தனது கையை துகனோவ்ஸ்கியை நோக்கி நீட்டிக்‌ கொண்டு இரண்டு எட்டுகள்‌ எடுத்து வைத்தான்‌. ஆனால்‌ வரவேற்பு அறிகுறியை கவனிக்காதது போல நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌, ஷேயின்‌ பக்கமாகத்‌ திரும்பிக்‌ கொண்டார்‌. 
“நாங்கள்‌ தவறாகப்‌ புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னேன்‌. ”” 
ஜெல்த்கோவினுடைய ஒல்லியான, நடுக்குறும்‌ விரல்கள்‌ 
262 
அவனுடைய பழுப்பு நிற ஜாக்கெட்டினுடைய முன்‌ பகுதியில்‌ பொத்தான்களை மாட்டியபடியும்‌, கழற்றிய படியும்‌ மேலும்‌ கீழும்‌ போய்‌ வந்தன. கடைசியில்‌ பெரு முயற்சி செய்தபடி, சோஃபாவைச்‌ சுட்டிக்காட்டி, ஆபாச மாகத்‌ தலை வணங்கிக்‌ கொண்டு, “அமருமாறு வேண்டிக்‌ கொள்கிறேன்‌,” என்றான்‌. 
இப்போது அவன்‌ முழுப்பார்வைக்கு வந்து விட்டான்‌. மிகவும்‌ வெளிறியபடி, பெண்ணினுடைய முகத்தைப்‌ போன்‌ றும்‌, நீலக்‌ கண்களுடனும்‌, பிடிவாதம்‌ பிடித்த குழந்தை போல பிளவுற்ற முகவாயுடனும்‌, முப்பதிலிருந்து முப்பந்‌ கைந்து வயதிற்குப்பட்டவன்‌ போலக்‌ காணப்பட்டான்‌. 
““நன்றி,”” அவனை ஆழ்ந்த அக்கறையுடன்‌ பார்த்து விட்டு இளவரசர்‌ ஷேயின்‌ கூறினார்‌. 
““நன்றி,”” என்று நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌ பிரெஞ்சு மொழியில்‌ சுருக்கமாகப்‌ பதில்‌ அளித்தார்‌. இருவரும்‌ நின்று கொண்டிருந்தார்கள்‌. ““எங்களுக்கு ஓரிரு நிமிடங்கள்‌ தான்‌ பிடிக்கும்‌. இவர்‌ இளவரசர்‌ வசீலி லிவோவிச்‌ ஷேயின்‌, இந்த மாவட்டத்திலுள்ள உயர்குடியினரின்‌ தலைவர்‌. என்‌ பெயர்‌ மிர்ஸா-புலாட்‌-துகனோவ்ஸ்கி. நான்‌ ஒரு துணை அரசு வழக்குரைஞன்‌. நாங்கள்‌ உங்களோடு பேசக்‌ கூடிய பெரு மைக்குரிய விஷயம்‌ இரண்டு பேருக்கும்‌ சம்பந்தப்பட்டது, அல்லது இன்னும்‌ சரியாகச்‌ சொன்னால்‌, அது இளவரசர்‌ மனைவி சம்பந்தப்பட்டது, அவள்‌ எனது சகோதரியும்‌ 
23 
கூட. 
முற்றிலும்‌ அதிர்ச்சியுற்றபடி ஜெல்த்கோவ்‌ சோஃபாவில்‌ சாய்ந்தான்‌, ஒருவாராகத்‌ திக்கித்திக்கிப்‌ பேசினான்‌: ““தயவு செய்து உட்காருங்கள்‌, கனவான்களே.” ஆனால்‌, ஏற்கெனவே அகைச்‌ சொல்லி விட்டோம்‌ என்பது நினைவு வந்தவனாய்‌ குதித்தான்‌, சன்னலுக்கு வேகமாகச்‌ சென்றான்‌, தலைமுடியை அலங்கோலமாக்கியபடி, திரும்ப வந்தான்‌. திரும்பவும்‌ தனது நடுங்கிய விரல்களால்‌ பொத்தான்களைப்‌ போ ட்டுக்‌ கொண்டும்‌, இலேசாகச்‌ சாயம்‌ பூசப்பட்ட சிவப்பு மீசையை இழுத்து விட்டுக்‌ கொண்டும்‌, முகத்தைத்‌ தொட்டுக்‌ கொண்டும்‌ இருந்தான்‌. 
“நான்‌ உங்கள்‌ பணிக்காகக்‌ காத்திருக்கிறேன்‌, மாண்பு மிகு ஐயா,” என்று உள்ளடங்கிய குரலில்‌, கெஞ்சும்‌ பார்‌ வையுடன்‌ வசீலி லிவோவிச்சைப்‌ பார்த்துக்‌ கூறினான்‌. 
263 
ஆனால்‌ ஷேயின்‌ பதில்‌ பேசவில்லை. நிக்கலாய்‌ நிக்கலா யெவிச்‌ தான்‌ பேசினார்‌. 
“முதலாவதாக, உங்களுக்குச்‌ சொந்தமான ஒன்றை நான்‌ திருப்பித்‌ தரணும்‌,” என்றவர்‌ தனது பையிலிருந்து ஒரு சிவப்புப்‌ பெட்டியை எடுத்து அதைக்‌ கவனமாக மேசையின்‌ மீது வைத்தார்‌. ““நிச்சயமாக, இது உங்களுடைய சுவைக்‌ குப்‌ பெருமை சேர்க்கக்‌ கூடியது, அனால்‌ மிக உண்மை யாகக்‌ கேட்டுக்‌ கொள்வது, இது போன்ற வியப்புகளை இனி மேலும்‌ எங்கள்‌ மீது திணிக்க வேண்டாம்‌ என்பது தான்‌.”” 
““கயவு செய்து என்னை மன்னியுங்கள்‌... நான்‌ மிகவும்‌ தவறு செய்துவிட்டது எனக்குத்‌ தெரியும்‌,”*” என்று ஜெல்த்‌ கோவ்‌ கிசுகிசுத்தான்‌, முகஞ்சிவந்து போன அவன்‌ தனது கண்களைக்‌ கீழ்‌ நோக்கித்‌ தாழ்த்தினான்‌. “உங்களுக்குக்‌ கொஞ்சம்‌ தேநீர்‌ வேண்டுமா??? 
“பாருங்கள்‌, திரு. ஜெல்த்கோவ்‌,”” நிக்கலாய்‌ நிக்கலா யெவிச்‌ தொடர்ந்தார்‌, ஜெல்த்கோவின்‌ கடைசி வார்த்தை களை அவர்‌ செவிமடுக்காதது போலக்‌ காணப்பட்டது. “நீங்கள்‌ ஒரு சரியான ஆள்‌ என்பதையும்‌, ஓர்‌ உண்மையான பெரியமனிதன்‌ என்பதையும்‌, எதையும்‌ இரு முறை சொல்லத்‌ தேவையில்லாதவர்‌ என்பதையும்‌ பார்க்க நான்‌ மிகவும்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌. ஒரு முறையான ஒப்பந்தத்திற்கு நாம்‌ வர முடியும்‌ என்று நம்புகிறேன்‌. நான்‌ தவறாகப்‌ புரிந்து கொள்ளவில்லை என்றால்‌, கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக நீங்கள்‌ இளவரசி வேரா நிக்கலாயெவ்‌ னாவைத்‌ தொடர்ந்து வருகிறீர்கள்‌ என்று நினைக்கிறேன்‌??? 
“அமாம்‌,” ஜெல்த்கோவ்‌ மெதுவாகப்‌ பதில்‌ பேசினான்‌, அச்சத்தோடு தனது கண்‌ இமைகளைதக்‌ தாழ்த்திக்‌ கொண் டான்‌. 
“அனால்‌ இது வரை உங்களுக்கு எதிராக எந்த நட வடிக்கையையும்‌ நாங்கள்‌ எடுக்கவில்லை, எங்களால்‌ அப்படி முடியும்‌ என்பதையும்‌, உண்மையில்‌, அப்படிச்‌ செய்திருக்க வேண்டும்‌ என்பதையும்‌ நீங்கள்‌ ஒப்புக்‌ கொள்கிறீர்களா?”” 
“ஆமாம்‌.” 
“அமாம்‌. ஆனால்‌ உங்களுடைய கடைசிச்‌ செயல்‌ மூலம்‌, இந்தச்‌ செம்மணி வளையலை அனுப்பியதன்‌ மூலம்‌ எங்களுடைய பொறுமையின்‌ எல்லையை நீங்கள்‌ தாண்டி விட்டீர்கள்‌. புரிந்து கொள்கிறீர்களா? எல்லை. எங்களது 
304 
முதலாவது யோசனை இந்த விஷயத்தை அதிகாரிகளிடம்‌ தெரிவிப்பது என்பதை நாங்கள்‌ மறைக்கவில்லை. ஆனால்‌ நாங்கள்‌ அவ்வாறு செய்யவில்லை, அதைச்‌ செய்யவில்லை என்பதற்காக நான்‌ மகிழ்ச்சியடைகிறேன்‌— நான்‌ மறுபடி யும்‌ சொல்கிறேன்‌— நீங்கள்‌ மரியாகைக்குரிய மனிதர்‌ என்‌ பதை நான்‌ உடனே கண்டு கொண்டேன்‌.” 
““நான்‌ உங்கள்‌ மன்னிப்பைக்‌ கோருகிறேன்‌. நீங்கள்‌ சொன்னது என்ன?” ஜெல்த்கோவ்‌ திடீரென்று கேட்டு விட்டுச்‌ சிரித்தான்‌. “இந்த விஷயத்தை அதிகாரிகளிடம்‌ சொல்வதாக இருந்தீர்கள்‌?.. நான்‌ உங்களைச்‌ சரியாகப்‌ புரிந்து கொண்டேனா?” 
தனது கைகளைச்‌ சட்டைப்‌ பைகளுக்குள்ளாக விட்டு, வசதிப்‌ படுத்திக்‌ கொண்டு அந்தச்‌ சோஃபாவின்‌ மூலையில்‌ அமர்ந்தான்‌. சிகரெட்‌ பெட்டியையும்‌, தீப்பெட்டியையும்‌ எடுத்து, ஒரு சிகரெட்டைப்‌ பற்ற வைத்தான்‌. 
“ஆக இந்த விஷயத்தை அதிகாரிகளிடம்‌ சொல்ல இருந் ததாக நீங்கள்‌ சொன்னீர்கள்‌?.. உட்கார்ந்திருப்பதற்காக நீங்கள்‌ என்னை மன்னிப்பீர்களா, இளவரசரே?”” என்று ஷேயினிடம்‌ கூறினான்‌. “நல்லது, சொல்லுங்கள்‌.”” 
நாற்காலியை மேசைக்கு அருகிலே இழுத்துப்‌ போட்டுக்‌ கொண்டு இளவரசர்‌ உட்கார்ந்தார்‌. புதிரான ஆர்வத்தால்‌ உந்தப்பட்டு, அந்த அபூர்வமனிதனின்‌ முகத்தை உன்னிப்‌ பாய்‌ கவனித்தார்‌. 
“அந்து நடவடிக்கையை எந்த நேரத்திலும்‌ எடுப்பது எங்களுக்குச்‌ சாத்தியமானது, அன்பரே,” நிக்கலாய்‌ நிக்கலா யெவிச்‌ கொஞ்சம்‌ கர்வத்தோடு தொடர்ந்தார்‌. ““அந்‌ நியர்‌ குடும்பத்தில்‌ குறுக்கிட்டு...” 
“உங்களிடம்‌ குறுக்கிட்டுச்‌ சொல்ல விரும்புகிறேன்‌...” 
“இல்லை, நான்‌ உங்களிடம்‌ குறுக்கிட்டுச்‌ சொல்ல விரும்புகிறேன்‌...?*? துணை அரசு வழக்குரைஞர்‌ கத்தினார்‌. 
“நீங்கள்‌ விரும்புவது போல, மேலே பேசுங்கள்‌. நான்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌. ஆனால்‌ இளவரசர்‌ வசீலி லிவோவிச்சிடம்‌ சில வார்த்தைகள்‌ சொல்ல விரும்புகிறேன்‌.” ” 
துகனோவ்ஸ்கி பக்கம்‌ அக்கறை காட்டாதபடி அவன்‌ பேசினான்‌? 
“இது எனது வாழ்க்கையில்‌ மிகவும்‌ சிக்கலான நேரம்‌. எந்தவிதமான நடைமுறை வழக்கமும்‌ இன்றி நான்‌ பேச வேண்டும்‌... நான்‌ சொல்வதைக்‌ கேட்கிறீர்களா??? 
365 
“நான்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌,” என்றார்‌ ஷேயின்‌. “மெதுவாக, நிக்கலாய்‌, தயவு செய்து,” துக னோவ்ஸ்கி கோபமாகப்‌ பார்ப்பதைப்‌ பார்த்ததும்‌ பொறு மையில்லாமல்‌ சொன்னார்‌. ““ஆமாம்‌??” 
சில விநாடிகளுக்கு ஜெல்த்கோவினுடைய மூச்சுத்‌ திண றியபடி வந்தது, திடீரென்று வார்த்தை வெள்ளத்தைப்‌ பொழிந்து தள்ளினான்‌. முகவாய்க்கட்டையை மட்டும்‌ வைத்துக்‌ கொண்டு பேசினான்‌. அவனுடைய உதடுகள்‌ இறந்தவனுடையதைப்‌ போல பயங்கரமாக வெளிறிப்‌ போயும்‌, தடிப்புற்றுப்‌ போயும்‌ இருந்தன. 
“இத்தகைய வார்த்தைகளைப்‌ பயன்படுத்துவது... சரம மானது... அதாவது உங்கள்‌ மனைவியை நான்‌ காதலிக்‌ கிறேன்‌ என்று சொல்வது. ஆனால்‌ ஏழாண்டு கால நம்பிக்கை இழந்த, எந்த நடிப்புத்‌ தன்மையும்‌ இல்லாத எனது காதல்‌ ஓரளவு எனக்கு உரிமையைத்‌ தந்திருக்கிறது. முதலில்‌ வேரா நிக்கலாயெவ்னா இன்னமும்‌ திருமணம்‌ ஆகாத வளாக இருந்த போது முட்டாள்தனமான கடிதங்களை அவளுக்கு எழுதினேன்‌, அவற்றிற்கு பதில்‌ எழுதுவாள்‌ என்று எதிர்பார்த்தேன்‌ என்பதை ஒப்புக்‌ கொள்கிறேன்‌. வளை யலை அனுப்பியது தான்‌ எனது இறுதி நடவடிக்கை என்‌ பதையும்‌, இது அதைவிட முட்டாள்தனமானது என்பதை யும்‌ ஒப்புக்‌ கொள்கிறேன்‌. ஆனால்‌... உங்கள்‌ கண்களையே நேராகப்‌ பார்க்கிறேன்‌, என்னை நீங்கள்‌ புரிந்து கொள்வீர்‌ கள்‌ என்று உணர்கிறேன்‌. அவளைக்‌ காதலிப்பதை நிறுத்து வது எனது சக்திக்கு அப்பாற்பட்ட தென்று நினைக்கிறேன்‌... சொல்லுங்கள்‌, இளவரசே... இந்த முழுச்‌ செயலையும்‌ நீங்கள்‌ வெறுப்பதாக வைத்துக்‌ கொள்ளுங்கள்‌, இந்த உணர்ச்சியை நிறுத்துவதற்கு நீங்கள்‌ என்ன செய்வீர்கள்‌ என்பதை எனக்குச்‌ சொல்லுங்கள்‌? நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌ ஆலோசனை சொன்னது போல என்னை இன்னொரு நகரத்‌ திற்கு அனுப்புவீர்களா? ஆனால்‌ அங்கேயும்‌, இங்கே நான்‌ செய்வது போல வேரா நிக்கலாயெவ்னாவைக்‌ காதலிக்கத்‌ தான்‌ செய்வேன்‌. என்னைச்‌ சிறையில்‌ போடுவீர்களா?ஆனால்‌, அங்கேயும்‌ கூட, நான்‌ உயிரோடு இருப்பதை அவளுக்கு நினைவு கூர்வதுற்கான வழிகளைக்‌ கண்டுபிடிப்பேன்‌. ஆக ஒரே தீர்வு சாவு தான்‌... நீங்கள்‌ அது போல விரும்பினால்‌, அதை நான்‌ எந்த வடிவத்திலும்‌ ஏற்றுக்‌ கொள்கிறேன்‌.”” 
266 
“விஷயத்தைப்‌ பேசுவதை விடுத்து, உணர்ச்சி கலந்த நாடகத்தில்‌ நாம்‌ ஆழ்ந்து விட்டேபாம்‌,'' குனது தொப்பியை அணிந்தபடி நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌ கூறினார்‌. *“இந்து விஷயம்‌ மிகத்‌ தெளிவாக இருக்கிறது: ஓன்று நீங்கள்‌ இள வரசி வேரா நிக்கலாயெவ்னாவை சித்திரவதை செய்வதை நிறுத்த வேண்டும்‌, அல்லது, நீங்கள்‌ செய்யவில்லை என்‌ றால்‌, நாங்கள்‌ எங்களது தகுதிக்கும்‌, செல்வாக்கிற்கும்‌ ஏற்றபடி உள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டி வரும்‌.”* 
ஆனால்‌ ஜெல்த்கோவ்‌, அவர்‌ சொல்வதைக்‌ கேட்டா லும்‌, அவர்‌ பக்கமாக அவ்வளவாகத்‌ திரும்பவில்லை. மாறாக அவன்‌ இளவரசர்‌ வசீலி லிவோவிச்சிடம்‌ கேட்‌ டான்‌: 
“உங்களை விட்டுப்‌ பத்து நிமிடம்‌ போவகைப்‌ பொறுத்‌ துக்‌ கொள்ள முடியுமா? இளவரசி வேரா நிக்கலாயெவ்னா விடம்‌ தொலை பேசியில்‌ நான்‌ பேசப்‌ போகிறேன்‌ என்பதை ஒப்புக்‌ கொள்கிறேன்‌. அந்த உரையாடல்களிலே எவ்வளவு முடியுமோ அவ்வளவை உங்களிடம்‌ திருப்பிச்‌ சொல்வேன்‌ என்று உறுதி கூறுகிறேன்‌.” 
““அகட்டும்‌,?”' என்றார்‌ ஷேயின்‌. 
தனது மைத்துனருடன்‌ தனிமையில்‌ விடப்பட்ட நிக்க லாய்‌ நிக்கலாயெவிச்‌ கத்தத்‌ தொடங்கினார்‌. 
“இது சரிப்படாது,'” என்றார்‌, அவரது வலது கை வழக்கம்‌ போல அவரது நெஞ்சிலிருந்து கண்ணுக்குத்‌ தெரி யாத ஏதோ ஒன்றை எடுத்து கீழே வீசியது. “இது சரிப்‌ பட்டே வராது. இந்தக்‌ காரியத்தை நான்‌ கவனித்துக்‌ கொள்கிறேன்‌ என்று உன்னிடம்‌ எச்சரித்திருக்கிறேன்‌. ஆனால்‌ அவனது உணர்ச்சிகளை விரிவுபடுத்துவதற்கு நீ வாய்ப்புத்‌ தந்து விட்டாய்‌. எல்லாவற்றையும்‌ நான்‌ இரண்டே வார்த்தைகளில்‌ சொல்லியிருப்பேன்‌.?”்‌ 
“பொறு,” என்றார்‌ இளவரசர்‌ வசீலி லிவோவிச்‌, “கண நேரத்தில்‌ எல்லாமே தெளிவாகிப்‌ போகும்‌. முக்கிய மானது என்னவென்றால்‌, ஏமாற்றுவதற்கோ, வேண்டு மென்றே பொய்‌ சொல்லுவதற்கோ இயலாத ஒரு மனித னுடையகைப்‌ போன்று அவன்‌ முகம்‌ இருப்பதாகக்‌ கருது கிறேன்‌. ஆனால்‌ காதலித்தால்‌ அது அவனது தவறா? இன்னமும்‌ மக்களால்‌ விளக்கம்‌ கூறாது இருக்கக்‌ கூடிய காதல்‌ போன்ற ஓர்‌ உணர்ச்சியை உன்னால்‌ எப்படிக்‌ கட்டுப்‌ 
367 
படுத்த முடியும்‌?” சிந்தனையோடு அவர்‌ நிறுத்தினார்‌. பிறகு தொடர்ந்தார்‌: “*அந்து மனிதனுக்காக நான்‌ வருத்தப்படு கிறேன்‌. மேலும்‌ ஓர்‌ ஆத்மாவினுடைய பிரம்மாண்டமான துன்பியல்‌ நாடகத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பதாக நான்‌ உணர்கிறேன்‌. ஒரு கோமாளியைப்‌ போல என்னால்‌ நடந்து கொள்ள முடியாது.” 
£“தரங்கெட்ட நிலை என்று நான்‌ அழைக்கிறேன்‌,” என்றார்‌ நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌. 
பத்து நிமிடங்களுக்குப்‌ பிறகு ஜெல்த்கோவ்‌ திரும்பி வந்தான்‌. அவனுடைய கண்கள்‌ சிந்தப்படாத கண்ணீர்‌ நிரம்பியது போல ஓஒளியுடனும்‌, ஆழமாகவும்‌ காணப்பட டன. நல்ல நடைமுறைகளை அவன்‌ முற்றிலும்‌ மறந்து விட்டான்‌ என்பது தெளிவாகக்‌ தெரிந்தது, ஒரு பெரிய மனிதனைப்‌ போல நடந்து கொள்வதையும்‌ நிறுத்தி விட்‌ டான்‌. மீண்டும்‌ ஒரு முறை மிக நுட்பமான உணர்வாற்ற லால்‌ அந்தக்‌ காரணத்தை இளவரசர்‌ ஷேயின்‌ உணர்ந்து கொண்டார்‌. 
““நான்‌ தயாராக இருக்கிறேன்‌,” என்றான்‌. “நாளை முதல்‌ என்னிடமிருந்து எதுவும்‌ கேள்விப்பட மாட்டீர்கள்‌. உங்களுக்கு, நான்‌ செத்தவனைப்‌ போலத்தான்‌. ஆனால்‌ ஒரே ஒரு நிபந்தனை நான்‌ இதை உங்களிடம்‌ சொல்‌ கிறேன்‌, இளவரசர்‌ வசீலி லிவோவிச்‌_— நான்‌ பணத்தைக்‌ கையாடி விட்டேன்‌, எந்த வகையிலும்‌ இந்த நகரத்தை விட்டு நான்‌ பறந்து சென்றாக வேண்டும்‌. இளவரசி வேரா நிக்கலாயெவ்னாவுக்கும்‌ கடைசிக்‌ கடிதம்‌ எழுதுவதற்கு என்னை அநுமதிப்பீர்களா?”” 
“இல்லை. அது முடிந்து விட்டது என்றால்‌, முடிந்து விட்டது தான்‌. கடிதங்கள்‌ கூடாது!” என்று கத்தினார்‌ நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்‌. 
“சரி, நீங்கள்‌ எழுதலாம்‌,”” என்றார்‌ ஷேயின்‌. 
““அப்பச்சரி,”' என்றான்‌ ஜெல்த்கோவ்‌ ஆணவத்தோடு புன்னகை செய்தபடி. “என்னைப்‌ பற்றி நீங்கள்‌ எதுவும்‌ கேட்க மாட்டீர்கள்‌, என்னைப்‌ பார்க்கவும்‌ மாட்டீர்கள்‌. இளவரசி வேரா நிக்கலாயெவ்னா என்னுடன்‌ பேசுவதற்கே விரும்பவில்லை. ஏதோ சந்தர்ப்பத்திலேனும்‌ அவளைப்‌ பார்ப்பதற்கு உண்மையில்‌, அவள்‌ பார்க்காத அளவில்‌ இந்த நகரத்தில்‌ நான்‌ தங்கி இருக்கலாமா என்று கேட்ட 
368 
12 
துகி 
ப 
ம்‌) ப்ச்‌ 
ககக பவம்‌ வேட 
பத 
EST 
என்ன்‌ வ ப்பட ட்‌ ட்‌ 2: ஒவ மு - 3 அபர ம தக வக்ப்‌ xX - MN கரைய டி ்‌ & ல்‌ 1 X 4 Sp NN வ த்‌ WAN VN ர்‌ ல்ல . ஆ MEIN, NO Rw 4 ட்‌ ற்றி 
~~ 
சல ஆக அதல கியி 0 
RN 1 பல்‌ *அ 3௬௩ ஆரூ 
கட்டே லட 
ம்‌ த டிம்‌: ட © ஆஃ த 6 4 5 - 
போது, அவள்‌ சொன்னாள்‌: “முழு விவகாரத்திலும்‌ நான்‌ எவ்வளவு சலித்துப்‌ போய்‌ விட்டேன்‌ என்பதை நீங்கள்‌ மட்டும்‌ அறிந்தால்‌. தயவு செய்து உங்களால்‌ எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக நிறுத்துங்கள்‌.” ஆகவே, நான்‌ முழுப்‌ பிரச்சினையையும்‌ நிறுத்துகிறேன்‌. என்னால்‌ முடிந்தளவுக்குச்‌ செய்துவிட்டதாக நான்‌ கருதுகிறேன்‌, இல்லையா??? 
மாலையில்‌ புறநகர்‌ மனைக்குத்‌ திரும்பிய வசீலி லிவோ விச்‌, ஜெல்த்கோவிடம்‌ தான்‌ மேற்கொண்ட சந்திப்புப்‌ பற்றிய முழு விவரத்தையும்‌ தன்‌ மனைவியிடம்‌ கூறினார்‌. அப்படிச்‌ செய்வதை அவர்‌ கடமை என்று உணர்ந்தது போல தோன்றியது. 
வேரா கவலையடைந்தாள்‌, ஆனால்‌ வியப்படையவோ மனங்குழம்பவோ இல்லை. பிறகு அந்த இரவில்‌, அவளுடைய கணவன்‌ அவளது படுக்கைக்கு வந்த போது, அவள்‌ திடீ ரென்று சுவர்ப்பக்கம்‌ திரும்பிச்‌ சொன்னாள்‌: 
“என்னைத்‌ தனிமையில்‌ விடு--அந்த மனிதன்‌ தன்னைத்‌ தானே சாகடித்துக்‌ கொள்ளப்‌ போகிறான்‌ என்று எனக்குத்‌ தெரியும்‌.” ” 
11 
இளவரசி வேரா நிக்கலாயெவ்னா எப்போதும்‌ செய்‌ தித்தாள்களைப்‌ படிப்பதில்லை, ஏனெனில்‌, முதலாவதாக, அவை அவளுடைய கைகளைக்‌ கறைப்படுத்தின, இரண்‌ டாவதாக, தற்காலத்தில்‌ பயன்படுத்துகிற மொழியின்‌ தலை யும்‌ காலும்‌ புரிவதேயில்லே. 
ஆனால்‌ விதி விரும்பியது போலும்‌, இந்தச்‌ செய்தியைத்‌ தாங்கிவந்த பத்தி இருந்த பக்கத்தை அவள்‌ திறக்க வேண்‌ டும்‌ என்பது போல: 
““ஒரு புதிரான சாவு. கட்டுப்பாட்டுக்‌ குழுவில்‌ ஓர்‌ ஊழி யனான கி.எஸ்‌. ஜெல்த்கோவ்‌, நேற்று இரவு ஏழு மணி வாக்கில்‌ தற்கொலை செய்து கொண்டான்‌. விசாரணையின்‌ போது கிடைத்த சாட்சியத்தின்‌ படி, அவனுடைய சாவு கையாடலால்‌ உந்தப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்பை அவன்‌ விட்டுச்‌ சென்றிருக்கிறான்‌. சாட்சியங்கள்‌ அளித்த சான்றுகளைக்‌ கொண்டு, அவன்‌ தன்‌ கைகளாலேயே இறந்து போனான்‌ என்பது உறுதிப்‌ படுத்தப்பட்டது. ஆகவே 
24—2027 369 
சாவுக்குப்‌ பிந்திய அறுவைச்‌ சோதனை வேண்டாம்‌ எனத்‌ தீர்மானிக்கப்பட்டது.”” 
““இது வருகிறதென்று நான்‌ ஏன்‌ உணர்ந்தேன்‌? இந்த மாதிரியான சோக முடிவு? அது என்ன: காதலா பைத்தியக்‌ காரத்தனமா??” என்று வேரா நினைத்தாள்‌. 
அன்று முழுவதும்‌ மலர்த்தோட்டத்திலும்‌, பழத்தோட்‌ டத்திலும்‌ உலாவினாள்‌. நிமிடத்திற்கு நிமிடம்‌ வளர்ந்து கொண்டிருந்த கவலை அவளை அமைதியற்றவளாக்கிற்று. அவளுடைய எண்ணமெல்லாம்‌, அவள்‌ ஒருபோதும்‌ பார்த்‌ கேயிராத, தெரியாத மனிதனாகிய கேலிக்குரிய பி.பி. ஜெ. மீது பொருத்தப்பட்டிருந்தது. 
“யாருக்குத்‌ தெரியும்‌? ஒருவேளை உண்மையாக, தன்‌ னைக்‌ தியாகம்‌ செய்கின்ற, உண்மையான அன்பு உன்‌ வாழ்க்‌ கையில்‌ குறுக்கிட்டிருக்கலாம்‌,”? என்று அனோசவ்‌ சொன்‌ னகதை அவள்‌ நினைவு கூர்ந்தாள்‌. 
ஆறு மணிக்கு தபால்காரன்‌ வந்தான்‌. இந்த முறை வேரா நிக்கலாயெவ்னா, ஜெல்க்கோவின்‌ கையெழுத்தைப்‌ புரிந்து கொண்டாள்‌. தன்னைப்‌ பற்றி அவள்‌ எதிர்பார்த்த தற்கு மேலாக அதிகமான மென்மையோடு கடிதத்தைப்‌ பிரித்தாள்‌. 
இது தான்‌ ஜெல்த்கோவ்‌ எழுதியிருந்தது: 
“£இது என்னுடைய தவறன்று, வேரா நிக்கலாயெவ்னா, கடவுள்‌ எனக்கு, மிகுதியான ஒரு மகிழ்ச்சியைப்‌ போல, உங்கள்‌ பால்‌ காதலை அனுப்பியிருந்தார்‌. அரசியல்‌, அறிவி யல்‌, தத்துவம்‌ அல்லது மனிதனுடைய எதிர்கால மகிழ்ச்சி இப்படி எதிலுமே ஈடுபாடு இல்லாதவனாக இருந்தேன்‌; எனக்கு வாழ்க்கை உங்களை மட்டிலுமே மையமாகக்‌ கொண் டிருக்கிறது. மன உலைவு ஆப்புப்‌ போல உங்கள்‌ வாழ்க்‌ கைக்குள்ளாக என்னைத்‌ திணித்து விட்டுக்‌ கொண்டதாக இப்போது உணர்கிறேன்‌. உங்களால்‌ முடியுமானால்‌ அதற்‌ காக என்னைக்‌ தயவு செய்து மன்னித்து விடுங்கள்‌. இன்று நான்‌ புறப்படுகிறேன்‌, திரும்பவும்‌ வரவே மாட்டேன்‌. என்னை நினைவுபடுத்துவதற்கு உங்களிடம்‌ இனி எதுவும்‌ இராது. 
““நீங்கள்‌ உயிரோடு இருக்கிறீர்கள்‌ என்பதற்காகவே நான்‌ உங்களுக்குப்‌ பெரிதும்‌ கடமைப்‌ பட்டிருக்கிறேன்‌. 
370 
என்னை நானே சோதித்துக்‌ கொண்டேன்‌: இது ஒரு நோய்‌ அன்று என்பதையும்‌, ஒரு பித்தனுடைய ஆட்டி வைப்பு அன்று என்பதையும்‌ நானறிவேன்‌. ஏதோ காரணத்திற்காக இந்தக்‌ காதலைப்‌ பரிசாகத்‌ தர கடவுள்‌ என்னைக்‌ தேர்ந்‌ தெடுத்திருக்கிறார்‌. 
“உங்களுக்கும்‌, உங்கள்‌ சகோதரன்‌ நிக்கலாய்‌ நிக்கலா யெவிச்சிற்கும்‌ நான்‌ பைத்தியக்காரத்தனமாகத்‌ தோன்றி யிருக்கலாம்‌. நான்‌ புறப்படுகையில்‌ ஆனந்தத்தோடு சொல்‌ கிறேன்‌: “உன்னுடைய பெயர்‌ புனிதப்படுத்தப்படட்டும்‌.” 
““எட்டு ஆண்டுகளுக்கு முன்னால்‌ உங்களை ஒரு சர்க்கஸ்‌ கொட்டகையிலே பார்த்தேன்‌. அடுத்த நொடியே எனக்கு நானே சொல்லிக்‌ கொண்டேன்‌: நான்‌ அவளைக்‌ காதலிக்‌ கிறேன்‌, ஏனெனில்‌ பூமியில்‌ அவளைப்‌ போல எதுவுமில்லை, அவளை விட மேலானதாக எதுவுமில்லை, மிருகமில்லை, செடியில்லை, நட்சத்திரம்‌: இல்லை, ஏனெனில்‌ அவளை விட அழகாக எந்த மனிதரும்‌ இல்லை. இந்த உலகத்தின்‌ முழு அழகுமே உங்களிடையே உருவகிக்கப்பட்டிருப்பது போல எனக்குத்‌ தோன்றியது... 
““நான்‌ என்ன செய்திருக்க முடியும்‌? வேறு ஒரு நகரத்‌ திற்கு ஓடுவதா? ஆனால்‌ எனது நெஞ்சம்‌ எப்போதுமே உங்களுக்கு அருகிலேயே, உங்களுடைய காலடியிலேயே இருக்கிறது, ஒவ்வொரு நிமிடமும்‌ உங்களைப்‌ பற்றிய சிந்‌ தனைகளாலும்‌, உங்களைப்‌ பற்றிய கனவுகளாலும்‌, ஓர்‌ இனிய வெறியோடு அது நிறைகிறது... அதற்காக நான்‌ மிகவும்‌ வெட்கப்படுகிறேன்‌, அந்த முட்டாள்கனமான வளை யல்‌-— சரி, அதைத்‌ தடுக்க முடியவில்லை; அது ஒரு தவறு தான்‌. உங்களுடைய விருந்தினர்‌ பால்‌ ஏற்படுத்தியிருக்கக்‌ கூடிய உணர்ச்சியை என்னால்‌ கற்பனை செய்ய முடிறெது. 
““இப்போதிலிருந்து பத்து நிமிடங்களில்‌ நான்‌ புறப்பட்‌ டுப்‌ போய்‌ விடுவேன்‌. இந்தக்‌ கடிதத்தின்‌ மீது அஞ்சல்தலை ஓட்டவும்‌, இதைப்‌ பெட்டிக்குள்ளாகப்‌ போடவுமே எனக்கு நேரமிருக்கிறது. ஏனெனில்‌ மற்ற எவரையும்‌ இகைச்‌ செய்‌ யச்‌ சொல்லாமல்‌ இருப்பதற்காக. தயவு செய்து இந்தக்‌ கடிதத்கை எரித்துவிடுங்கள்‌. நான்‌ இப்பொழுது தான்‌ அடுப்பை மூட்டியிருக்கிறேன்‌, என்‌ வாழ்க்கையில்‌ மிக உயர்‌ வாக இருந்ததை எல்லாம்‌ எரித்துக்‌ கொண்டிருக்கிறேன்‌: உங்களது கைக்குட்டை, அதை நான்‌ திருடினேன்‌ என்பதை 
24° 371 
ஒப்புக்‌ கொள்கிறேன்‌. பிரபுக்கள்‌ சபையில்‌ நடனவிருந்தின்‌ போது அதனை ஒரு நாற்காலி மீது நீங்கள்‌ விட்டுச்‌ சென்‌ றீர்கள்‌. உங்களுடைய குறிப்பு--ஓ, அதை நான்‌ எங்ங னம்‌ முத்தமிட்டேன்‌!--எதில்‌ எழுதக்‌ கூடாது என்று தடுத்‌ திருந்தீர்களோ அதில்‌. ஒரு கலைப்‌ பொருட்காட்சி நிகழ்ச்சி நிரலை, நீங்கள்‌ ஒரு முறை கையில்‌ வைத்திருந்து, நுழை வாயில்‌ பகுதியில்‌ ஒரு நாற்காலி மீது மறந்து வைத்துவிட்டுப்‌ போனது... அது முடிந்து விட்டது. எல்லாவற்றையும்‌ நான்‌ அறுத்துக்‌ கொண்டு விட்டேன்‌, அனால்‌ இன்னமும்‌ நான்‌ நம்புகிறேன்‌, மிகவும்‌ நம்பிக்கையோடு உணர்கிறேன்‌, நீங்‌ கள்‌ என்னை நினைப்பீர்கள்‌ என்று. அப்படி நீங்கள்‌ நினைத்‌ தால்‌--நீங்கள்‌ மிகுந்த இசைத்‌ தன்மை வாய்ந்தவள்‌ என்பது எனக்குத்‌ தெரியும்‌, ஏனெனில்‌ பீத்தோவான்‌ இசை நிகழ்ச்சிகளின்‌ போது உங்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன்‌ _— நீங்கள்‌ என்னைப்‌ பற்றி நினைத்தால்‌ தயவு செய்து வாசியுங்கள்‌ அல்லது யாரையாவது வாசிக்கச்‌ சொல்லுங்‌ கள்‌, Sonata D-dur 762, op. 2. 
“எனது கடிதத்தை எப்படி முடிப்பதென்று வியக்கி றேன்‌. எனது இதயத்தின்‌ ஆழத்திலிருந்து நான்‌ உங்களுக்கு நன்றி சொல்கிறேன்‌, ஏனெனில்‌ நீங்கள்‌ தான்‌ எனது வாழ்க்‌ கையில்‌ ஒரே மகிழ்ச்சியாய்‌, எனது ஒரே ஆறுதலாய்‌, எனது ஒரே சிந்தனையாய்‌ இருந்தீர்கள்‌. கடவுள்‌ உங்களுக்கு மகிழ்ச்‌ சியைக்‌ கொடுப்பாராக, உங்களுடைய அற்புதமான ஆன்‌ மாவை எதுவும்‌ மறைக்காமலும்‌, சாதாரணமான எதுவும்‌ பாதிக்காமலும்‌ இருக்கட்டும்‌. உங்கள்‌ கைகளை நான்‌ முத்த மிடுகிறேன்‌. 
இ.எஸ்‌.ஜெ.?” 
குன்‌ கணவனிடம்‌ சென்றாள்‌. அழுகையால்‌ கண்கள்‌ சிவந்தும்‌, உதடுகள்‌ வீங்கியபடியும்‌, அவரிடம்‌ கடிதத்தைக்‌ காட்டியபடி சொன்னாள்‌? 
“உன்னிடமிருந்து எதையும்‌ மறைக்க நான்‌ விரும்ப வில்லை, ஆனால்‌ நமது வாழ்க்கையில்‌ ஏதோ மிக பயங்‌ கரமானது நடந்து விட்டது என்ற உணர்வு எனக்கேற்பட்‌ டிருக்கிறது. நீயும்‌ நிக்கலாய்‌ நிக்கலாயெவிச்சும்‌ இந்த விஷ யத்தை சரியான முறையில்‌ கையாளவில்லை என்பது போலத்‌ தோன்றுகிறது.”” 
372 
இளவரசர்‌ ஷேயின்‌ ஆழ்ந்த கவனத்தோடு அடு குக்ைதப்‌ படித்தார்‌, கவனமாக அதை மடித்தார்‌, நீண்ட. வு திக்குப்‌ பிறகு சொன்னார்‌: 
“இந்த மனிதனுடைய உண்மையை நான்‌ சந்தேகிக்க வில்லை, மேலும்‌ என்ன, அவன்‌ உன்பால்‌ வைத்திருந்த உணர்வுகளைப்‌ பகுத்துப்‌ பார்ப்பதற்கு உரிமை இருப்பதாக எனக்குத்‌ தோன்றவில்லை.” 
““அவன்‌ இறந்து விட்டானா?” வேரா கேட்டாள்‌. 
“ஆமாம்‌, அவன்‌ இறந்து விட்டான்‌. அவன்‌ உன்னைக்‌ காதலித்தான்‌ என்றும்‌ ஆனால்‌ பைத்தியம்‌ இல்லை என்றும்‌ நினைக்கிறேன்‌. எல்லா நேரத்திலும்‌ அவனை நான்‌ கவனிக்‌ கேன்‌, ஒவ்வொரு இயக்கத்தையும்‌, அவன்‌ முகத்தில்‌ ஓவ்‌ வொரு மாற்றத்தையும்‌ பார்த்தேன்‌. நீ இல்லாமல்‌ அவ னுக்கு வாழ்க்கையே இல்லை. ஒரு பயங்கரமான சோகத்‌ கைப்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பது போல நான்‌ உணர்ந்‌ கேன்‌, செத்துப்‌ போன மனிதன்‌ ஒருவனிடம்‌ செயல்‌ தொடர்பு கொண்டிருப்பது போல ஏறக்குறைய உணர்ந்‌ கேன்‌. பார்‌, வேரா, எப்படி நடந்து கொள்ள வேண்டும்‌ என்பதோ, என்ன செய்வது என்பதோ எனக்குத்‌ தெரிய வில்லை...” 
“இங்கே பாரு, வாஸ்யா,”?” அவள்‌ குறுக்கிட்டாள்‌. “அவனைப்‌ பார்ப்பதற்காக நான்‌ நகரத்திற்குச்‌ சென்றால்‌ அது உனக்கு வருத்தமளிக்குமா??” 
“இல்லை, இல்லை, வேரா, தயவு செய்து போ. நானே போவதற்கு விரும்புகிறேன்‌, ஆனால்‌ நிக்கலாய்‌ முழு விஷ யத்தையும்‌ குழப்பிவிட்டான்‌. நான்‌ அருவருப்பாக உணர்‌ வேனோ என்று பயப்படுகிறேன்‌.” * 
12 
வேரா நிக்கலாயெவ்னா தனது வண்டியை லூத்தரன்ஸ்‌ கயா கெருவினின்றும்‌ இரண்டு பிளாக்குகள்‌ தள்ளி நிறுத்‌ தினாள்‌. சிரமமின்றி ஜெல்த்கோவின்‌ குடியிருப்புப்‌ பகுதி யைக்‌ கண்டு பிடித்தாள்‌. அதே சாம்பல்‌ நிறக்‌ கண்ணுள்ள வயதான கிழவியைச்‌ சந்தித்தாள்‌. அவள்‌ சற்று தடித்துக்‌ காணப்பட்டாள்‌. வெள்ளிப்‌ பூண்‌ போட்ட கண்ணாடி அணித்‌ 
373 
திருந்தாள்‌. முதல்‌ நாள்‌ கேட்டது போலவே கேட்டாள்‌: “நீங்கள்‌ யாரைப்‌ பார்க்க விரும்புகிறீர்கள்‌?:* 
“திரு. ஜெல்த்கோவ்‌,”' என்றாள்‌ இளவரசி. 
அவளுடைய உடையலங்காரம்‌, அவளது கொப்பி, கையுறைகள்‌, ஒருவகையில்‌ கண்டிப்பான குரல்‌ வீட்டுக்‌ காரியைக்‌ கவர்ந்தன. அவள்‌ பேசத்‌ தொடங்கினாள்‌. 
“தயவு செய்து உள்ளே வாருங்கள்‌, உங்களுக்கு இடது பக்கத்தில்‌ முதல்‌ வாசல்‌, அதோ... அது தான்‌... நம்மை விட்டு விரைவாகப்‌ பிரிந்து விட்டார்‌. சரிதான்‌, அவர்‌ பணக்‌ தைக்‌ கையாடல்‌ செய்துவிட்டார்‌ என்று இருக்கட்டும்‌. அது பற்றி அவர்‌ என்னிடம்‌ சொல்லியிருக்க வேண்டும்‌. கல்‌ யாணம்‌ ஆகாதவர்களுக்கு அறைகளை வாடகைக்கு விட்டு நாங்கள்‌ அதிகப்‌ பணம்‌ சம்பாதிப்பதில்லை என்பது உங்‌ களுக்குத்‌ தெரியும்‌. ஆனால்‌ அது அறுநூறு அல்லது எழு நூறு ரூபிள்‌ பற்றிய விஷயமாக இருந்தால்‌ அவருக்காக நான்‌ கொடுத்திருக்க முடியும்‌. நீங்கள்‌ அவரை அறிந்திருந்‌ தால்‌, அம்மா, எவ்வளவு அருமையான மனிதர்‌ அவர்‌, என்‌ னுடைய வீட்டில்‌ எட்டு அண்டுகளாக அவர்‌ குடியிருந்தார்‌, ஆனால்‌ அவர்‌ என்‌ மகனைப்‌ போல இருந்தார்‌.” 
பாதையில்‌ ஒரு நாற்காலி கிடந்தது, வேரா அதன்‌ மீது சாய்ந்து விழுந்தாள்‌. 
“இறந்து போன உங்களுடைய குடியிருப்பாளருடைய சிநேகிதி நான்‌,” என்றாள்‌. தனது வார்த்தைகளைக்‌ கவன மாகத்‌ தேர்ந்கெடுத்துப்‌ பேசினாள்‌. “ “அவருடைய கடைசி நிமிடங்களைப்‌ பற்றி ஏதாவது சொல்லுங்கள்‌, என்ன சொன்னார்‌, என்ன செசய்தார்‌.”” 
““அவரைப்‌ பார்க்க இரண்டு கனவான்கள்‌ வந்தார்கள்‌, அம்மா, அவரோடு நீண்ட நேரம்‌ பேசினார்கள்‌. எஸ்டேட்‌ டில்‌ அவருக்கு மேலாளர்‌ வேலை தர அவர்கள்‌ முன்வந்த தாக பிறகு அவர்‌ என்னிடம்‌ கூறினார்‌. பிறகு தொலை பேசிக்கு ஓடினார்‌, அத்தனை மகிழ்ச்சியோடு திரும்பி வந்‌ தார்‌. அதன்‌ பிறகு அந்த இரு கனவான்களும்‌ சென்றார்‌ கள்‌, ஆனால்‌ அவர்‌ உட்கார்ந்து ஒரு கடிதமெழுதத்‌ தொ டங்கினார்‌. பின்னர்‌ அந்தக்‌ கடிதத்தைக்‌ தபாலில்‌ சேர்க்க வெளியே சென்றார்‌, பிறகு நாங்கள்‌ ஏதோ விளை யாட்டுத்‌ துப்பாக்கியிவுடைய ஓசையைக்‌ கேட்டோம்‌. அது பற்றி நாங்கள்‌ பொருட்படுத்தவில்லை. அவர்‌ எப்போதுமே 
374 
ஏழு மணிக்குத்‌ தேநீர்‌ சாப்பிடுவார்‌. லுக்கேர்யா, வேலைக்‌ காரப்‌ பெண்‌, அவருடைய கதவைத்‌ தட்டுவதற்காகச்‌ சென்றாள்‌, ஆனால்‌ அவர்‌ பதில்‌ பேசவில்லை, திரும்பத்‌ திரும்பத்‌ தட்டினாள்‌. நாங்கள்‌ கட்டாயமாகக்‌ கதவைத்‌ திறக்க வேண்டியதாயிற்று, அங்கே அவர்‌ செத்துக்‌ கிடந்‌ தார்‌.” 
““அந்த வளையலைப்‌ பற்றி எனக்கு ஏதாவது சொல்‌ லுங்கள்‌,'” என்று உத்தரவிட்டாள்‌ வேரா நிக்கலாயெவ்னா. 
“ஐயோ, அந்த வளையல்‌---நான்‌ சுத்தமாக மறந்து போய்‌ விட்டேன்‌. அது பற்றி உங்களுக்கு எப்படித்‌ தெரி யும்‌? கடிதத்தை எழுதுவதற்கு முன்னால்‌ அவர்‌ என்னிடம்‌ வந்து கேட்டார்‌: “நீங்கள்‌ கத்தோலிக்கா?” நான்‌ “ஆமாம்‌” என்றேன்‌. பிறகு அவர்‌ சொன்னார்‌: “உங்களிடத்திலே நல்ல வழக்கமிருக்கிறது'--அது தான்‌ அவர்‌ சொன்னது “புனித மரியாள்‌ உருவத்தில்‌ மோதிரங்கள்‌, கழுத்தாரங்கள்‌ மற்றும்‌ வெகுமதிகளைத்‌ தொங்கவிடுகின்ற அருமையான வழக்கம்‌. உங்களுடைய தெய்வ பீடத்தின்‌ மீது இந்த வளையலைத்‌ தயவு செய்து தொங்கவிட மாட்டீர்களா?” என்றார்‌. நான்‌ உறுதி தந்தேன்‌.” 
“அவரைப்‌ பார்ப்பதற்கு என்னை அநுமதிப்பீர்களா??” என்றாள்‌ வேரா. 
““கட்டாயம்‌, அம்மா, அதோ கதவு, டெது புறத்தில்‌ முதலாவது. அறுவைக்‌ கூடத்திற்கு இன்று அவரைத்‌ தூக்கிக்‌ கொண்டு போக விருக்கிறார்கள்‌, ஆனால்‌ அவருக்கு ஒரு சகோதரர்‌ இருக்கிறார்‌, கிறிஸ்துவப்‌ புதையலுக்கு அநு மதி கேட்டிருக்கிறார்‌. தயவு செய்து வாருங்கள்‌.” 
தனக்குத்தானே தைரியப்படுத்திக்‌ கொண்டு வேரா கத வைத்‌ திறந்தாள்‌. அந்த அறையில்‌ நறுமணம்‌ கமழ்ந்தது, மூன்று மெழுகு வர்த்திகள்‌ எரிந்து கொண்டிருந்தன. மேசை யின்‌ மீது ஜேல்த்கோவ்‌ கிடத்தி வைக்கப்பட்டிருந்தான்‌. அவனுடைய தலை மிகத்‌ தாழ்வான பலத்தில்‌ கடத்திவைக்‌ கப்பட்டிருந்தது- யாரோ ஒருவர்‌ வேண்டுமென்றே அதைக்‌ கீழிருந்து அந்த மென்மையான தலையணையை அழுத்திக்‌ கொண்டிருப்பது போலக்‌ காணப்பட்டது, ஏனென்றால்‌ ஒரு பிணத்திடமிருந்து அது எந்தவிதமான வேறுபாட்டையும்‌ காட்டவில்லை. அவனுடைய மூடிய கண்கள்‌ மிக ஆழ்ந்த துயரத்தை வெளிக்‌ காட்டின, அவனுடைய உதடுகள்‌ ஓர்‌ 
375 
இன்பகரமான, அமைதியான புன்னகையில்‌ நிலைத்திருந் தன. வாழ்வினின்று பிரிகின்ற போது, வாழ்க்கையின்‌ முழு ரகசியத்தையும்‌ விளங்க வைத்த இனிய ஆழ்ந்த புதுமையை அது உணர்த்துவது போல இருந்தது. அதே அமைதியான வெளிப்பாட்டை பூஷ்கின்‌, நெப்போலியன்‌ அகிய இரு தியாகிகளுடைய அடைவுருவில்தான்‌ பார்த்திருக்கிறாள்‌. 
“உங்களைத்‌ தனியாக விட வேண்டும்‌ என்று விரும்பு கிறீர்களா, அம்மா?” என்று கிழவி கேட்டாள்‌, அவளுடைய குரலிலே மிகவும்‌ நெருக்கமான தொனி இருந்தது. 
“ஆமாம்‌, பிறகு உங்களைக்‌ கூப்பிடுகிறேன்‌,” என்றாள்‌ வேரா. தனது ஜாக்கெட்‌ பையிலிருந்து ஒரு பெரிய சிவப்பு ரோஜாவை உடனே எடுத்தாள்‌, பிணத்தின்‌ தலையைத்‌ குனது இடது கையால்‌ இலேசாக நிமிர்த்தி வலது கையால்‌ அந்த மலரை அவனது கழுத்திற்குக்‌ கீழே வைத்தாள்‌. அக்‌ கணத்தில்‌ ஒவ்வொரு பெண்ணும்‌ கனவு காண்கின்ற அந்தக்‌ காதல்‌ அவளைத்‌ தாண்டிப்‌ போய்‌ விட்டதை உணர்ந்தாள்‌. ஜெனரல்‌ அனோசவ்‌ சொன்னதை நினைவு கூர்ந்தாள்‌, பெரும்பாலும்‌ தீர்க்க தரிசனத்தோடு, நிரந்தரமான, முழு மையான காதல்‌. இறந்தவனுடைய  நேெற்றியிலிருந்த முடியை ஒதுக்கி விட்டு, நெற்றியை கைகளால்‌ பிடித்தாள்‌. அவனுடைய உணர்ச்சியற்ற ஈரமான நெற்றியில்‌ தனது உதடுகளால்‌ ஒரு நீண்ட அன்பு கலந்த முத்தமிட்டாள்‌. 
அவள்‌ புறப்படும்‌ போது வீட்டுக்காரி நன்றி கலந்த குரலில்‌ அவளிடம்‌ பேசினாள்‌: 
“அம்மா, வெறுமனே ஆர்வத்தோடு வந்த மற்றவர்‌ களைப்‌ போல நீங்கள்‌ அன்று என்பது தெரிகிறது. சாவதற்கு முன்னால்‌ திரு. ஜெல்த்கோவ்‌ என்னிடம்‌ கூறினார்‌: “நான்‌ சாக நேர்ந்தால்‌, என்னைப்‌ பார்ப்பதற்காக ஒரு சீமாட்டி வருவாள்‌, அவளிடம்‌ பீத்தோவானுடைய சிறந்த படைப்பு 
என்று சொல்லுங்கள்‌...” எனக்காக இங்கே எழுதித்‌ தந்‌ இருக்கிறார்‌. இதோ, பாருங்கள்‌...”” “அதைக்‌ காட்டுங்கள்‌,” என்றாள்‌ வேரா நிக்கலா 
யெவ்னா, உடனே அவளுக்கு கண்ணீர்‌ பெருக்கெடுத்தது. “தயவு செய்து என்னை மன்னியுங்கள்‌ இந்தச்‌ சாவு என்னை அந்தளவுக்கு அதிர்ச்சியடைய வைத்துவிட்டது, ஆகவே என்னையே என்னால்‌ கட்டுப்‌ படுத்திக்‌ கொள்ள 
முடியவில்லை.” 376 
அறிமுகமான கையினால்‌ எழுதப்பட்ட வார்த்தைகளை அவள்‌ படித்தாள்‌: “1. van Beethoven. Son. Ne2, op. 2. Largo Appassionato”. 
13 
வேரா நிக்கலாயெவ்னா வீட்டிற்கு மாலையில்‌ காலந்‌ தாழ்த்தி வந்தாள்‌. தனது கணவனையோ சகோதரனையோ காணாதது குறித்து மகிழ்ச்சியடைந்தாள்‌. 
எனினும்‌, பியானோ வாசிப்பவள்‌ ஜென்னி ரெய்தா அவளுக்காகக்‌ காத்துக்‌ கொண்டிருந்தாள்‌; தான்‌ பார்த்தது, கேட்டது பற்றிக்‌ கலக்க முற்றிருந்த வேரா அவளை நோக்கி விரைந்து போய்‌, அவளது பெரிய அழகான கைகளை முத்த மிட்ட போது அழுது விட்டாள்‌: 
“தயவு செய்து எனக்காகக்‌ கொஞ்சம்‌ இசைப்பாயாக, ஜென்னி, உன்னைக்‌ கெஞ்சிக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.” அவள்‌ உடனே அறையை விட்டு வெளியேறி பூத்தோட்டத்‌ தில்‌ கடந்த ஒரு பெஞ்சின்‌ மீது அமர்ந்தாள்‌. 
ஜெல்த்கோவ்‌ என்ற விசித்திரமான பெயருள்ள மனிதன்‌ கேட்டுக்‌ கொண்டபடி சோனடாவின்‌ அந்தப்‌ பகுதியையே ஜென்னி வாசிப்பாள்‌ என்று ஒரு கணம்‌ கூட அவள்‌ சந்தே கிக்காது இருந்தாள்‌. 
மேலும்‌ அது இவ்வாறு நிகழ்ந்தது. அந்த முதல்‌ சுரத்தி லிருந்தே அதனது அபூர்வக்‌ கலையாக்கத்தை வேரா புரிந்து கொண்டாள்‌. அவளது ஆன்மா இரண்டாகப்‌ பிளப்பது போலிருந்தது. ஆயிரம்‌ ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்‌ கூடிய தன்மை வாய்ந்த ஒரு பெரும்‌ காதல்‌ தன்னைக்‌ கடந்து போய்‌ விட்டதை அவள்‌ நினைத்தாள்‌. ஜெனரல்‌ அனோசவினுடைய வார்த்தைகளை தநினைவுகூர்ந்தாள்‌. பீத்கோவானின்‌ எல்லாப்‌ பாடல்களினும்‌ குறிப்பாக இந்தப்‌ பாடலைத்‌ தான்‌ கேட்கும்படி ஜெல்த்கோவ்‌ எதற்காகச்‌ செய்தார்‌ என்று அவள்‌ வியந்தாள்‌. சொற்கள்‌ அவளது மனத்திலே அவைகளாகவே பின்னிக்‌ கொண்டன. அவை தெய்வ வழிபாட்டுக்‌ கவிதைகளைப்‌ போல இருந்தன. அவை ஒவ்வொன்றுமே கீழ்க்‌ கண்ட சொற்களோடு முடிந்தன: “உன்னுடைய பெயர்‌ புனிதப்படுந்தப்படட்டும்‌.”” 
““£மென்மையான ஒலிகளால்‌ தன்னைப்‌ பணிவோடும்‌, ஆனந்தத்தோடும்‌, சித்திரவதைக்கும்‌ துன்பத்திற்கும்‌, 
3277 
சாவுக்கும்‌ ஆட்படுத்திக்‌ கொண்ட வாழ்க்கையை நான்‌ இப்‌ போது உனக்குக்‌ காட்டுகிறேன்‌. குற்றச்சாட்டு, வருத்துதல்‌ அல்லது புறக்கணிக்கப்பட்ட காதலின்‌ வேதனை எதுவும்‌ எனக்குத்‌ தெரியவில்லை. உனக்கு நான்‌ வேண்டுகிறேன்‌. “உண்ணுடைய பெயர்‌ புனிதப்படுத்தப்படட்டூம்‌.” 
“ஆமாம்‌, துன்பத்தையும்‌, குருதியையும்‌, சாவையும்‌ நான்‌ முன்‌ உணர்கிறேன்‌. ஆன்மாவை விட்டுப்‌ பிரிவது உட லுக்கு மிகச்‌ சிரமமானது என்று உணர்கிறேன்‌. ஆனால்‌ அழகிய, உணர்ச்சி பூர்வமான, மென்மையான காதலே, உன்னை நான்‌ போற்றுகிறேன்‌. “உன்னுடைய யெயர்‌ புனிதப்‌ படுத்த ப்படட்டும்‌ .” 
“உன்னுடைய ஒவ்வொரு காலடியையும்‌, ஒவ்வொரு புன்னகையையும்‌, ஒவ்வொரு தோற்றத்தையும்‌, உனது கால டியின்‌ ஓசையையும்‌ நினைத்துப்‌ பார்க்கிறேன்‌. என்னுடைய இறுதி நினைவுகள்‌ ஓர்‌ இனிய சோகத்தில்‌, மென்மையான அழகான சோகத்தில்‌ மூடப்பட்டிருக்ன்‌ றன . ஆனால்‌ உனக்கு நான்‌ துயரத்தை ஏற்படுத்த மாட்டேன்‌. நான்‌ தனிமையில்‌ போகிறேன்‌, அமைதியாக, ஏனெனில்‌ அது தான்‌ கடவு ளினுடையதும்‌, விதியினுடையதுமான விருப்பமாகும்‌. “உன்‌ னுடைய பெயர்‌ புனிதப்படுத்தப்படட்டூம்‌.” 
“என்னுடைய மரண நேர இறுதியில்‌ உனக்கு மாத்திரம்‌ வழிபடுகிறேன்‌. எனக்கும்‌ வாழ்க்கை அழகானதாக இருந்‌ திருக்கலாம்‌. முணுமுணுக்க வேண்டாம்‌, என்‌ இனிய நெஞ்சே, முணுமுணுக்க வேண்டாம்‌. என்னுடைய ஆன்‌ மாவோ சாவை அழைக்கிறது. என்‌ நெஞ்சத்திலே உனக்‌ கான புகழ்ச்சி நிறைந்து கிடக்கிறது: “உன்னுடைய பெயர்‌ புனிதப்படுத்தப்படட்டும்‌.” 
“உனக்குத்‌ கெரியாது--உனக்கோ உன்னைச்‌ சூழ்ந்து இருப்பவர்களுக்கோ-— நீ எவ்வளவு அழகானவள்‌ என்று. கடிகார மணியடிக்கிறது. நேரமாகிறது. வாழ்க்கையை விட்டுப்‌ பிரிகின்ற சோகமயமான நேரத்தில்‌ நான்‌ இன்னமும்‌ பாடுகிறேன்‌. உனக்குப்‌ புகழ்‌ உண்டாகட்டும்‌. 
“இதோ வருகிறது, எல்லாவற்றையும்‌ வெல்லும்‌ சாவு, ஆனால்‌ நான்‌ கூறுகிறேன்‌ -— உனக்குப்‌ புகழ்‌ உண்டாகட்‌ டும்‌!” 
தனது கைகளை அந்தக்‌ கருவேல்‌ மரத்‌ தண்டைச்‌ சுற்றிப்‌ போட்டுக்‌ கொண்டு, தனது உடலை அழுத்திக்‌ கொண்டு 
378 
வேரா நிக்கலாயெவ்னா அழுது கொண்டிருந்தாள்‌. மரம்‌ மென்மையாக அசைந்தது. அநுதாபப்படுவது போல, காற்று மெல்ல வீசி இலைகளில்‌ சலசலத்தது. புகையிலைச்‌ செடி யின்‌ வாசனை மிகவும்‌ கூர்மையாக இருந்தது... இதற்‌ கிடையே, மிகச்‌ சிறந்த அந்த இசை, அவளது துயரத்திற்கு மறுமொழி கூறுவது போலத்‌ தொடர்ந்தது: 
“அமைதியாக இரு, என்‌ இனியவளே, அமைதியாக இரு. என்னை நினைவிருக்கிறதா உனக்கு? உன்னைத்‌ தான்‌? நீ தான்‌ எனது இறுதி, எனது ஒரே காதல்‌. அமைதியாக இரு. நான்‌ உன்னோடு இருக்கிறேன்‌. என்னை நினைப்பாய்‌. நான்‌ உன்னை நினைப்பேன்‌. ஏனெனில்‌ நீயும்‌ நானும்‌ ஒரு வரையொருவர்‌ கணப்‌ பொழுது மட்டுமே காதலித்தோம்‌, ஆனால்‌ நிரந்தரமாக. என்னை நினைவிருக்கிறதா உனக்கு? உன்னைத்‌ தான்‌? இதோ, உனது கண்ணீரை உணர்கிறேன்‌. அமைதியாக இரு. தூக்கம்‌ அவ்வளவு இனிமையானது, எனக்கு அவ்வளவு இனிமையானது. ”” 
இப்பகுதியைப்‌ பாடி முடித்ததும்‌, ஜென்னி ரெய்தர்‌ அறையை விட்டு வெளியே வந்தாள்‌. பெஞ்சில்‌ அமர்ந்தபடி கண்ணீரில்‌ மூழ்கி இருந்த இளவரசி வேராவைப்‌ பார்த்தாள்‌. 
““என்ன விஷயம்‌?” அவள்‌ கேட்டாள்‌. 
வேராவினுடைய கண்கள்‌ மின்னிக்‌ கொண்டிருந்தன. இருப்புக்‌ கொள்ளாத படியும்‌, அமைதி குலைந்த படியும்‌ அவள்‌ ஜென்னியினுடைய முகத்தை, உதடுகளை, கண்களை முத்தமிட்டபடி கூறினாள்‌: 
“எல்லாம்‌ சரிதான்‌, இப்போது அவர்‌ என்னை மன்‌ னித்து விட்டார்‌. எல்லாம்‌ சரிதான்‌.?” 
1910 



தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்