தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, June 01, 2016

தாவளம் நாட்குறிப்பில் படிந்த வரலாறு :காலக்குறி 8

 
தாவளம்
நாட்குறிப்பில் படிந்த வரலாறு :காலக்குறி 8

பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி போன்ற இன்றைய கருர் மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் சுதந்திரத்திற்கு முன்பு வரை தாவளத்தொழில்' தான் முக்கியமானதாக இருந்தது. தாவளம் என்பது பெருவழிகளில் இருந்த வணிகச் சந்தை நகரங்களைக் குறிக்கும் சொல்லாகும்" தாவளத்திலிருந்து தன்மம் வளர்த்த செட்டியும், செட்டி வீரப்புத்திரர்களும் என்று பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
'அறியப்படாத தமிழகம்' - தொ. பரமசிவன் பக். 48
(விதைப்புக் காலத்தில் மல்லு, காடா. போன்ற துணிவகைகளை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர் ஊராய் விநியோகிப்பார்கள். அறுவடைக் காலத்தில் சென்று, கொடுத்த துணிகளுக்கு பணம் வசூலித்துக் கொண்டு வருவார்கள். இது தாவளம். இப்படி ஊரைவிட்டு புறப்பட்டு வியாபாரம்-வசூல் பண்ணி மறுபடியும் ஊர் திரும்ப சரியாக ஆறுமாதம் ஆகிவிடும் என்பதால் இவர்களை ஆறு மாதத்தான்' என்று கிண்டலாக அழைப்பார்கள். இதன் மறு உருவாகவே இன்றைய தவணைமுறை வியாபாரம், ஜவுளி, ஆயத்த ஆடைவியாபாரம் என வெளியூர் சென்று வணிகம் நடத்தும் சிறு வியாபாரிகள் நிறைந்த ஊராக பள்ளபட்டி உள்ளது. இவ்வூர்களில் உள்ள தாத்தாமார்கள் அனைவருக்கும் தங்கள் தாவள அனுபவங்களைப்பற்றி சொல்ல சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளன. இங்கு முதல் உலகப்போர் காலகட்டத்தில் பெற்ற இவ்வனுபவத்தை எழுதிய அரவக்குறிச்சி குண்டான் முஹமது யாகூப்ராவுத்தர் மைசூர் அருகில் உள்ள கமலாபுரம் என்ற கிராமத்தில் புகையிலை வணிகம், புகையிலை பயிரிடல் போன்ற தொழிலில் ஈடுபட்டவர். இவர் எழுதிவைத்த நாட்குறிப்பேட்டின் ஒரு பகுதியே இத்தாவள அனுபவம். இங்கு இதை வெளியிடும் நோக்கம்: நாட்குறிப்பு வரலாற்றில் ஆனந்தரங்கம்பிள்ளை மற்றும் வீராநாயக்கர் போன்றோரின் நாட்குறிப்புக்கு இது சற்றும் குறைவானதல்ல. மேலும் மக்களின் வாழ்நிலை வரலாறு முற்றிலும் பதியப்பெறாமல் போன சூழலில் இதை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி வெளியிடுகிறோம்.)
1917 வருஷம் முடிய மாக்கோட்டிலிருந்து அரவாக்குரிச்சி போனேன். ஊரில் ஒரு மாத காலமிருந்து பிறகு பள்ளபட்டி செல்லத்தா ராவுத்தர் என்ற பேருடைய ஒரு முதலாளியிடம் மல் 1க்கு மூன்றரை ருபாய் சம்பளம் பேசி, ஐந்து ரூபாய் முன் பணம் வாங்கிக் கொண்டேன். எனக்கு சமையல் செய்யும்
காலக்குறி | 47 | மார்ச் 98
படிப்பகம்

________________
 வேலை என்று குறிப்பிட்டார். சரி, தாவளம் புறப்படும் தேதியை குறிப்பிட்டு அன்று அதிகாலையில் பள்ளபட்டி வந்து சேரவேண்டுமென்று ஆக்யாப்பித்தார். சரி என்று பதில் கூறினேன். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பள்ளப்பட்டி வந்து சேர்ந்தேன். அன்றுதான் பிரயாணம். சமையல் ஆள் மூன்று பேர்கள், வசூல் ஆள்கள் ஆறுபேர். முதலாளி, முதலாளி மகன் ஆக மொத்தம் பதினொறு பேர்கள் அடங்கிய ஒரு கும்பல் எங்கள் தாவளம். சரியாக காலை எட்டு மணிக்கு பிராயணம். ஒரு மாட்டு வண்டி அதில் எங்கள் வேஸ்ட்டி துணிகள், களபட்டு சாமான், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, எண்ணை சிப்பம், சட்டி பானைகள், முதலாளி உக்காரவும், முதலாளி மகன் உக்காரவும் இடம், இவைதான் வண்டி பாரம். எஞ்சிய ஒன்பது பேர்களும் பாதசாரிகள்தான். அன்றே எங்களுடன் இதே ஊரிலிருந்து இரண்டு தாவளம் புறப்பட்டது. அவர்களும் எங்கள் போன்றே ஒவ்வொரு வண்டியுடன்தான் புறப்பட்டார்கள். சுமார் முப்பது நபர்கள் அடங்கிய ஒரு பெரும் கூட்டம் புறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அரவாக்குரிச்சி வேலாமரத்தான், சேக்கிஸ்மாலும் ஒருவர். இவரைப் பற்றிய வரலாறை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இருந்தவர்கள். நன்றாய் தெரிந்திருப்பார்கள் சேக்கிஸ்மால் ஒருவடிகட்டிய மூட சுபாவம் உடைய பேர்வழி படிப்பு வாசனையை அறியமாட்டார். இவரை கூட்டத்திலுள்ளவர்கள் சிலர் தூண்டி விட்டு, சேக்கிஸ்மாலு, கொஞ்சம் உன் கை சரக்கை எடுதது விடவேணும் என்பார்கள். அவ்வளவுதான், குதிரை, கழுதை, நாய், நரி, கோழி, கொக்கு போன்றபடிய அதன் குரல்களை பிரதிபலிப்பார். இத்துடன் கான் சாயபு சண்டை, மதுரை வீரன் பாடல் எல்லாமே ஆரம்பித்து விடுவார். கூட்டத்தில் ஒரே சிரிப்பும், கெக்களிப்பும் ஆரம்பிக்கும். பிரயாணிகளாகிய எங்களுக்கு நடந்த அலுப்பு தோன்றாது. சாயங்காலம் 5யீ மணிக்கு வேட சந்துரை அடைந்தோம். இடம் வண்டிப்பேட்டை, வண்டி அவிழ்த்து விட்டவுடன் முதலாளி தொண்டையை கனைத்துக் கொண்டு, "அடே, சமையல்கார பசங்களே இங்கே வாங்கடா, சட்டி பானை கட்டை அவிழ்த்து ஆளுக்கொரு பானையில் தண்ணி கொண்டாரணும் ஒடுங்க" ஏப்பா காதர் இஸ்மால், முஹம்மது சக்கரை, காட்டுவா நீங்கள்ளாம் அடுப்பை கூட்டி சமையலை ஆரம்பிங்க என்றார். சமையல்காரர்களாகிய நாங்கள் தண்ணிர் பானைகளை இறக்கியவுடன் வசூல் ஆள்கள் எங்களைப் பார்த்து "அடே கல்களை தூக்கி வாங்கடா" என்று ஆர்டர் போட்டார். உடனே கல்கள் வந்து குவிந்துவிட்டது. சமையல் ஆரம்பமானது இந்த சமையலுக்கு எந்த தாவளக்காரரும் ஒரு கால் காசு கூட சிலவு செய்ததாக தெரியவில்லை. விறகு ரோட்டு சாலை வழியில் பொறுக்கியதுதான். மீதமுள்ள சமையலுக்குள்ள சாமான் எல்லாம் முதலாளி பெஞ்சாதி களபட்டு பைகளில் போட்டு கட்டிக் கொடுத்திருந்தார். குழம்பு என்ன சமைக்கவேண்டும் என்ற கேள்வியை முதலாளியையோ, அல்லது காரியஸ்தனையோ கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. காலையில் மொச்சைக் கொட்டை, மாலையில் பருப்பு புளிச்சார். இவைகளைக் கண்டுபிடித்த மகான் யார் என்பதை இதுவரை என்னால் கண்டு கொள்ள முடியவில்லை, அவர் யாராகவோ இருக்கட்டும் எங்கள் கடமை பருப்பு புளிச்சார்தானே? சரி, சமையல் ஆகிவிட்டது பழங்காலத்து வட்டி பீங்கான்களில் ஒரே முச்சாய் சாதத்தை தோண்டி ஒவ்வொருவருக்கும் ஒன்றாய் வழங்கி விட்டோம். சாப்பாடு முடிந்ததும் முதலாளி வெற்றிலை பாக்கு ஆள்களுக்கும் கொடுத்தார் "அடே, சமையல்காரப் பயல்களே நீங்களெல்லாம் பொடிப்பயல்கள் உங்களுக்கு வெற்றிலை பாக்கு கிடையாது" (சரிங்க) சரி, எல்லாம் படுத்துத் துங்குங்க. கோழி கூப்பிட வண்டிகட்ட வேணும்" நாங்கள் எல்லார்களும் தூங்கினோம். சரியாக நாலு மணிக்கு முதலாளிகள் எல்லார்களுமே விழித்து எழுந்து ஏப்பா காட்டுவா, சக்கரை வாவா எல்லாரும் எந்திரிங்க வண்டியை பூட்டச் சொல்லுங்க என்றார். உடனே வண்டி பூட்டி ஆகிவிட்டது பிரயாணம் முன்னோக்கியது. காலை ஒன்பது மணிக்கெல்லாம் ரயில்வே டேசனை அடுத்த சத்திரத்தில் போய் இறங்கினோம். அங்கு வேடசந்தூரில் சமைத்த பழைய சோறு ஆளுக்கு கொஞ்சமாக பங்கிட்டு கரைசோறாய் சாப்பிட்ட உடனே சமையல் ஆரம்பித்தோம். ஆணம் என்ன என்பதை இங்கு எழுதாமலே இதைப்படிக்கும் வாசகர்களுக்கு மொச்சைக் கொட்டைதான் என்பது ஞாபகம் வந்துவிடும். அடே அரவாக்குரிச்சியான் அந்த விழக்கெண்ணே சிப்பத்தை அவுத்து ஒரு கரண்டி ஆகும் போலே எண்ணே எடுத்துக்கிட்டு வா என்றார் காட்டுவா. உடனே சிப்பத்தை அவுத்து எண்ணை எடுக்க எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தேன். முடியை கழட்ட என்னால் முடியவில்லை. ஏண்டா பயலே பயிரெல்லாம் தீய்ஞ்சு போன பிறகா எண்ணெ கொண்டு வருவே? என்றார். "இல்லிங்க மூடி வரமாட்டேங்குது" என்றேன் அடபோடா சத்துக் கெட்டபயலே, ஏப்பா கனி அந்த மூடியைத் தொறந்து குடு என்றார். கனி வந்து திறந்தார். ஒரு கரண்டி என்ணை கொண்டு போய் கொடுத்தேன். "என்னடா போடா,
காலக்குறி | 48 | மார்ச் 98
படிப்பகம்
________________
www.padippakam.com
குண்டா ராவுத்தர் வம்சத்திலே பிறந்து உனக்கு எண்ணெப் பொதலி முடி தொறக்க முடிலேங்கரே. ஓங்க சச்சா காதர் இஸ்மாலு களுதையைக் கட்டி தோளுல தூக்கி போட்டுக்கிட்டு வந்துடுவார் அப்படி உள்ள வம்சத்திலே நீ இப்படி இருக்கிறே போடா" என்பார் சமையல் ஆனது சாப்பாடு தயார் ஆனது. எல்லோருக்கும் சாப்பாடும் முடிந்தது. முதலாளி, "அடே பயல்களே, சட்டி பானைகளைக் கழுவி கித்தானில் கட்டி ரடி படுத்துங்கள்" என்றார். உடனே தயார் செய்து விட்டோம் தாவாளம் புறப்பட்டு விட்டது. ரயில்வே டேசனை அடைந்தோம். சரியாக முனரை மணிக்கு ஷட்டல் வண்டியில் பிரயாணம் செய்தோம். இரவு மதுரை வந்து ரயில் நின்றவுடன் எல்லோரும் இறங்கினோம். மதுரை டேசனை சமீபிக்கும்போதே முதலாளி என்னுடையதையும், நூறு என்ற பையனுடையதையும் இருவர்களின் தலைத் தொப்பியைப் பிடுங்கி ரெட்டுப் பையுள் போட்டுக் கொண்டார். இதன் ரகசியம் எங்களுக்கு விளங்கவில்லை. சரி, டிக்கட் சோதிக்கும் இடத்திற்கு வந்தவுடன் எங்கள் காரியஸ்தர்களாகிய முஹம்மது வாவா, பதினொரு டிக்கட்டையும் எடுத்து டிக்கட் மாஸ்டரிடம் கையில் கொடுத்து எட்டு முழு டிக்கட்டு, முணு அரை டிக்கட்டு என்றார். ஆள்களை எண்ணியவாறே விட்டார். நான் வந்ததும், என்ன ஐயா இந்தப் பையன் அரை டிக்கட்டா? என்றார். ஆமாங்க சின்னப் பையனுங்க என்றார். என்னையும், நூரையும் கையில் பிடித்து நிற்க வைத்துவிட்டு ஜனங்கள் வெளியில் வந்த பிறகு, "என்னய்யா களுதையைப் போலிருக்கான் இவனுக்கு அரை டிக்கட்டா வாங்கியிருக்கே? முழு டிக்கட்டுக்கும் பணம் கொடுத்துவிட்டு வெளியில்போ" என்றார். முதலாளி, குளறியவாறே இல்லீங்க சாரு இவனுக்கு 9, இவனுக்கு 10 ஆகுதுங்க என்றார். "என்ன பெரியவரே மிெர்ச்சக் கொட்டை தாவாள்த்திலே ஏமாத்திர மாதிரி ரயில்வே காரனையும் ஏமாத்தப் பாக்கறே" என்றார். வேறு வழியின்றி முதலாளி பணத்தை அவிழ்த்துக் கொடுத்தார். எல்லோரும் வெளியில் வந்துவிட்டோம். டேசன் பெரியதொரு வராண்டாவில் போய் உட்கார்ந்து திண்டுக்கல் சாப்பாட்டை பங்கிச் சாப்பிட்டோம். எங்களுடன் வந்த தாவாளங்கள் பிரிந்து வெவ்வேறு இலாகாக்களுக்கு புறப்பட்டார்கள். நாங்களும் 2 மணிக்குப்பின் புறப்படும் ரயிலில் முழு டிக்கட்டுடன் புறப்பட்டு விட்டோம். காலையில் பரமகுடி அடுத்த சூடியூர் என்ற டேஷனில் இறங்கி மாட்டு வண்டி அமைத்துக் கொண்டு பார்த்திபனுரை அடுத்த வழி மறிச்சான் என்ற கிராமம் போய்ச் சேர்ந்தோம். இடம் கோனார் வீடு, சமையலுக்கு பக்கத்தில் பள்ளர் தெருவில் ஒரு வீடு, மறுதினமே பாத்திஹா ஓதி மூன்று பேர்கள் ஆங்கிய ஒரு பிரிவுக்கு ஒரு கை என்று அழைப்பது -எங்கள் கும்புல் நான்கு கிளையாகப் பிரிந்து, சாகை வசதிகளையும் செய்து கொண்டு வசூல் ஆரம்பமானது. முதலாளியின் இருப்பு வழி மறிச்சான், ஏழு தினத்திற்கு ஒரு முறை வசூலான ருபாயை முதலாளி சாகை வழி மறிச்சானுக்கு எல்லா ஆள்களும் வந்து சேர்வது வழக்கம். அன்றுதான் அன்று அரிசி, மொச்சை, பருப்பு, மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் எடுத்துச் செல்லவேண்டும். அரிசிக்கு பாத்திபனுருக்கு சென்று வாங்கிக் கொள்வது வழக்கம். இந்தப் பிரகாரம் if மாத காலம் நடந்து வந்தது. இந்த கத்து வட்ட கிராமங்களில் எங்கள் முதலாளிக்கு ஏழு ஆயிரம் ரூபாய் பாக்கி இருந்தது. பீ மாத காலத்தில் 2500 ரூபாய் வரை வதுலாகி இருந்தது. திடீரென்று ஆள்களுக்கும், முதலாளிக்கும், மோதலும், மனஸ்தாபமும் ஏற்பட்டது. இந்த மோதலுக்குக் காரணம் முதலாளிக்கு மந்திரியாகவும், காரியஸ்தராகவும் இருந்த மீர்ஸ் ராவுத்தர் என்ற பேர்வழி. இவர் முதலாளி சாகையில் இருந்தார். சில சமையம் முதலாளியும், மந்திரி மீர்ஸ் ராவுத்தரும் புறப்பட்டு வதுல் ஆள்கள் தங்கி இருக்கும் கிராமங்களுக்கு வந்து மேற்படி ஆள்கள் சமையல் செய்யும் சாகையை சோதனை செய்வது. ஆள்கள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் பார்ப்பது வழக்கம். ஒரு நாள் நானிருக்கும் சாகைக்கு வந்தார்கள். நான் விறகு பொறுக்க காட்டுப் பக்கம் போய் விட்டேன். சமையல் சாகை ஒரு மரவன் வீட்டுத்தாழ்வாரம். இந்த இடத்திற்கு கடினமான பந்தோபஸ்து எதுவும் கிடையாது. வந்தவர்கள் உள்ளே நுழைந்து சட்டி பானைகளைத் தேடினார்கள். ஒரு அலுமினியம் கிளாசில் புதினா சட்னி அரைத்து வைத்து மேற்படி கிளாசை ஒரு மெல்லிய வெள்ளைத் துணியால் அதன் வாயைக்கட்டி சட்டிக்குள் வைத்திருந்தோம். இதை எடுத்துப் பார்த்த மந்திரி அவர்கள், "என்னங்க, விசயம் தெரிந்துங்களா? நெய்யை சாடி சாடியாய் வைத்து புழங்குகிறது. வதுல் ஆள்களுக்கு என்னத்திலே குறைவு" என்றார். முதலாளியும் கிளாசை முடியிருக்கும் துணியை அவிழ்க்காமலே முக்கில் வைத்து முகர்ந்து பார்க்கும் தருணத்தில் விறகு சுமையுடன் நான் அங்கு வந்தேன். மறுபடியும் கிளாசை சட்டிக்குள் வைத்துவிட்டார்கள். ஏன்டா பயலே ஓங்கள் முதலாளிமார்கள் நல்ல நெய் எல்லாம் சாப்பிடுராங்களா? என்றார். நெய்க்கு நாங்கள்ளாம் எங்க போறது என்றேன். "எல்லாம் தெரியும்டா திருட்டுப்பயலுகளா" என்றார். நானொன்றும் பேசவில்லை "காத்தாலே என்ன ஆணம்?" அதானுங்க மொச்சைக் கொட்டைங்க - சரி புறப்படுங்க போலாமென புறப்பட்டு விட்டார்கள். மறுதினம் ஒரு சாகை சப்த்தி செய்தார்கள். அங்கு சமையல் ஆளும் வசூல்
காலக்குறி | 49 | மார்ச் 98
படிப்பகம்
________________
www.padippakam.com 
ஆளுடன் போய் இருந்தான். அங்கு சமையல் சாகையை சோதனை போட்டுப் பார்த்ததில் 5, 6 கருவாட்டுத் துண்டங்களும், குருவித்தலை பாவக்காய் பொறியலும் கிடைத்தனவாம். இப்பெரிய திருட்டை பதிவு செய்து கொண்டார்களாம். வாரம் வியாழக்கிழமை சாயந்திரம் எல்லா கை ஆள்களும் வந்து முதலாளி சாகையாகிய வழி மறிச்சானுக்கு வந்து சேர்ந்தார்கள் வசூலான பணங்கள் எல்லாம் முதலாளி வால் பையில் போய் சேர்ந்தது. சாப்பாடும் முடிந்தது. விசாரணை ஆரம்பம் ஆனது.
ஏப்பா கனி நெய்யும் கருவாடும் வாங்கி வச்சுக்கிட்டு திங்க யாருட்டு மொதலு? பதில் : அப்படி ஒண்ணும் ஓங்க வீட்டு மொதலை நாங்க முழுங்கிப் போடலெங்க, காதர் சர்க்கரை, இந்த கனி இருக்கட்டும்ப்பா, இவருக்கு சொல்லிக் கொடுக்கற மந்திரி இருக்கான் பாரு, அவனை அடிக்கனும் சோட்டாலே, மீர்ஸ் ராவுத்தர் ஏண்டா அய்யோக்யப் பயலே உன் பல்லை உடைச்சுப் போடுவேன்டா, யாருன்னு இருக்கே உஷாராய்ப் பேசு, ஏது உன் அன்னம்பாரி போக்கிரித் தனத்தைக் காட்ரையா? உசாரு பயலே! அடடா. இந்தச் சிப்பாய் மகன் அப்படியே தூக்கி முழுங்கித்தான் போடுவான். பொச்சை முட்ராபோதும் என்றார்.

முதலாளி குறுக்கிட்டு "எண்டா திருட்டுப் பயல்களே நீங்களெல்லாம் கும்பு கூடிகிட்டு மேஞ்சு போட்டு போலாம்டா இருக்கீங்க" என்றார். சக்கரை வாவா எழுந்து நின்று இந்த கனி பயலுக்கு சேரதுக்கு முன்னே சொன்னேன். சரியான கஞ்சன், சனுப்பன, வேண்டாமடானேன். எம்பேச்சை கேட்க மாட்டேன்டுட்டான். உடனே கனி, "இப்பதான் என்னதான் சக்கரை வாவா, 1% மாச பத்துவரி வாங்கி இருக்கிறோம். 1யி மாசத்தோட முடிஞ்சுப் போச்சு, காத்தால புறப்படு. இவரு வீங்கறதைப் பார்க்கலாம்" என்றார். சமையல்காரரைத் தவிர வதுல் ஆள்கள் எல்லோரும் ஏகம்ாய் சத்தம் போட்டார்கள். முடிவில் முதலாளி உடைய மந்திரி மீர்ஸ் ராவுத்தருக்கு சரியான உதை விழுந்தது. கலாட்டா கூச்சல் அதிகமானதும், இந்த ஊர் பெரிய மனிதர் ராமசாமி கோனாரும் இன்னும் முக்கியமான மனிதர்களும் ஏராளமாய் கூட்டம் கூடி விட்டார்கள். ஒருவாறு சமாதானப்படுத்தி எல்லோரையும் உட்காரச் செய்து முதலாளியைக் கோனார் விசாரித்தார். பிறகு ஆள்களை ஒவ்வொருவராய் விசாரித்து அதன்பின் பஞ்சாயத்தார் தீர்ப்பாக "குற்றம் முதலாளியுடையதுதான். ஆனாலும் அதை மன்னித்து கடைசி வரை ஒற்றுமையாய் இருந்து வசூல் முடிந்ததும் ஊருக்குப் போய்விடுங்கள்" என்றார். ஆள்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. அரை நாழி கூட இருக்கமாட்டோம் என சத்தியம் செய்துவிட்டார்கள். பஞ்சாயத்தார், இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கைவிட்டு விட்டார்கள். முதலாளி, மந்தையில் பிரிந்து தப்பிய செம்மறி ஆடு போல, விழித்தார். முடிவில் "அல்லா விட்டபடி ஆகட்டும் கச்சாத்தை சடுத்திப் போட்டு கணக்கை ஒப்பிவேணும்" என்றார். ஆஹா அதுக்கென்ன போடு என்று ஒவ்வொருவராய் கச்சாத்து சடுத்தி ஆனது. இரவு 12 மணிக்கு ஆரம்பித்து காலை 7 மணிக்கு முடிந்தது. கச்சாத்து எழுத்தாணி, ரெட்டுப்பை எல்லாம் ஒப்படைக்கப்பட்டது. சாகைகளை காலி செய்து வரும்படிக்கு சமையல் ஆளை அனுப்பி அங்குள்ள சட்டிபானை, கழப்பட்டுகளைக் கொண்டு வரும்படிக்கு ஆர்டர் ஆனது. உடனே முன்று சாகைகளில் உள்ள பானை, சட்டி, கழப்பட்டு எல்லாம் பகல் 12 மணிக்குள் வந்து சேர்ந்து விட்டது. ஒப்படைத்தும் ஆனது. ஆள்கள் பத்து வளி கணக்குப் பார்க்கப்பட்டது. ஒவ்வொரு ஆள்கள் பேரிலும் 0-6-0, 0-8-0, 0-12-0 இவ்வீதம் மொத்தம் ரு 2-2-0 அதிகப்பற்று ஆனது. இதைக் கொடுக்கவும் ஆள்களிடம் காசு ஏதும் கிடையாது. ஒரு சமையல்காரன் புதிதாய் காலில் போடாமல் வைத்திருந்த செருப்பு ஒரு சோடியை ரூ. 3-4-0க்கு அவ்வூரில் விற்று அதிகப்பற்று 2-2-0 முதலாளிக்கு கொடுத்துவிட்டார்கள். அப்போது மணி பகல் 3. இரவு சாப்பிட்ட சாப்பாடுதான் ஆறுபேர்கள் ஒரே கூட்டமாய் புறப்பட்டார்கள். கனி, "அடே அரவக்குறிச்சியான், நீயும் எங்க கூடவே வந்துரு இல்லேன்டா தாயோலி ஒன்னெய இங்கெயே பொதச்சுப் போடுவான்டா" என்றார். "இல்லீங்க நானு மொதலாளி கூடத்தான் வருவேன்" என்றேன். போடா தாயோலி என்றார். ஆறு பேரும் துணிமணி பொட்டனத்துடன் கால்நடையாகவே போய்விட்டார்கள். இங்கு மீதம் முதலாளி, முதலாளியார் மகன், மந்திரி, மந்திரியார் மகன் பானதுரன் நானும் சேர்ந்து மொத்தம் 5 பேர்கள். முன்னிட்டுச் செய்யவேண்டிய காரியங்களைப் பற்றியும் வசூலாக வேண்டிய 5000/- ரூபாயைப் பற்றியும் பேசினார்கள். முதலாளி இன்று இரவு படுக்கப்போகும்போது
1. அன்னம்பாரி : முஸ்லீம்களில் ஒரு வகையறாவினருக்கான பட்டப் பெயர். 2. பத்துவரி சம்பள முன்பற்று 3. கச்சாத்து கணக்குநோட்டு
காலக்குறி | 50 | மார்ச் 98
படிப்பகம்
________________
www.padippakam.com
அல்லாவையோ, ரசூலையோ, கலிமாவையோ எதையும் ஒதவில்லை. அதற்கு பதில் "இவனுக திண்டவாயும், தொண்டையும் நாசமாகப் போக" என்று உச்சரித்தபடியே படுத்தார். படுத்த பின்னும் சும்மாவிடவில்லை. ஒன்னாலெ தானப்பா இத்தனை நாசக் கேடுல்லாம் ஆச்சு. இபிலீசு" மாதிரி அங்கிட்டும் சொல்லி, இங்கிட்டும் சொல்லி எல்லாத்தையும் தொரத்திப் போட்டே என்றார். மீர்ஸ் கிழவன் குறைந்தவரா? உடனே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்து "என்னாங்க மண்டையிலே மூளையில்லாமப் பேசlங்க ? நீங்க ஒழுக்கமாய் வச்சு இருந்தா ஆளுக எதுக்குப் போறானுங்க” என்றார். "இந்தா, என் குடியைக் கெடுத்தவன் நீதான்". இரண்டு பேருக்கும் சண்டை முத்திவிட்டது. உடனே மந்திரி ராவுத்தர் வெடுக்கென்று பாயை சுருட்டிக் கொண்டு பக்கத்தில் கோனார் வீட்டுத் திண்ணையைப் பிடித்தார். விடிந்தது. மீர்ஸ் மந்திரியும், பானதுரமகனும் வேட்டி பொட்டனத்துடன் நின்றார்கள். முதலாளி பார்த்தார் "ஏன் நிக்கறீங்க ?' 'அரை நிமிஷம் இருக்கமாட்டேன். கணக்கைப் பார்" என்றார் என்னத்தெ போட்டுப் பார்க்கறது? ஊர்ல வந்து பார்க்கலாம் போ என்றார். இருவர்களும் நடக்கலானார். சற்று தூரம் சென்றதும் பானா துரனை கூப்பிடச் சொன்னார். நான் சத்தமிட்டேன். சூரன் வந்தான். அவனிடம் 3/- ரூபாயைக் கொடுத்து கொப்பனை ஊரில் வந்து பேசிக்கறேன். போ என்றார். இந்த நாடகம் இத்துடன் பாதி கட்டம் முடிந்ததாய் வைத்துக் கொள்வோம். இனி எஞ்சிய நபர்கள் மூன்றே பேர்கள்தான். அதிலும் முதலாளி கிழவர் முதலாளியார் மகன் அஜீசும், நானும் ஒரே வயதுடைய பையன்கள். சற்று நேரம் கண்ணைத் துடைத்துக் கொண்டு என்னை நோக்கி அடே பயலே போயி கோனாரை கூட்டியா என்றார். உடனே கோனாரும் தடிபூண்டி வந்தார். அவரை உக்கார வைத்து ஆள்கள் செய்யும் மோசத்தையும், தன் குறைகளையும் சொல்லி அழுதார். கோணார் மனமிரங்கி கிழவருக்கு தகிரியம் கூறி இந்த ஊர் பாக்கியைப் பற்றி நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம், நான் வசூல் செய்து தருகிறேன் வெளியூரில் உள்ள பாக்கிகளை அவிடம் உள்ள பெரிய மனிதரைப் பிடித்து காரியத்த சாதிக்க வேண்டும் என்று யோசனை கூறினார். அதுதான் சரி என்று ஒத்துக் கொடுத்தார். பிறகு இருவரும் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டார்கள். நான் சமையல் செய்தேன் சாப்பாடு முடிந்ததும் சட்டி பானைகளை கட்டிக் கொண்டு ஆளுக்கொரு சுமையுடன் ஒவ்வொரு ஊருக்கும் எட்டு, பத்து நாள் தங்கள் போட்டு அவ்வூர் பெரிய தனக்காரரை பேட்டி செய்வது. தன் குறைகளைச் சொல்லி கோவென்று அழுவார். இவர் அழுகும் போது அஜீசுக்கும் எனக்கும் கண்களில் நீர் பெருகி விடும். நாங்களும் சற்று அழுவோம். இரவானதும் கிழவர் ஊர் சாவடியில்தான் உறங்குவது வழக்கம். கிழவருக்கு சந்திரமதி புலம்பல், பானா துரன் நாடகம் இன்னும் பல பாடல்கள் மனப்பாடம். இந்தப் பாடலை துவக்கி விடுவார். ஊர் ஜனங்கள் எல்லாம் கூடி விடும். இடையில் பாடலை நிறுத்தி தன் குறைகளையும், ஆள்கள் செய்த மோசத்தையும் சொல்லி அழுது விட்டு மறுபடியும் புலம்பலை துவக்குவார். கேள்ப்பவர்கள் மனம் இரங்கி விடும். முடிவில் நாட்டாமைக்காரர், ஜனங்களைப் பார்த்து கிழவருக்கு நம் கிராமத்தில் உள்ள பாக்கிகளை எட்டு தினத்தில் எல்லோரும் இதே இடத்தில் கொண்டு வந்து கணக்குத் தீர்த்து விட வேண்டும் என்று ஆர்டர் போட்டு விட்டார். அந்த நாட்டில் நாட்டாமைக்காரருக்கு அளவு கடந்த செல்வாக்கு உண்டு. அவர் பேச்சை யாராலும் தட்ட முடியாது. முடிவில் எட்டாம் நாள் அவ்வூர் பணம் பூராவும் கச்சாத்தை குறித்து விட்டோம்.சுருங்க எழுத வேண்டுமானால் இதே பிரகாரம் எல்லா கிராமத்திலும் நாடகம் நடத்தினார். பாக்கியில் போவடியே கிடையாது. காரணம், கிராமஸ்த்தரே முக்கியமானவர் அல்லவா? நிற்க, தாவாளம் ஊரை விட்டுப் புறப்பட்டதர்க்கும் நாங்கள் வசூல் செய்து ஊர் திரும்பிய தேதிக்கும் 7 மாதம் எட்டு நாளானது. இத்தனை மாதங்களில் என் உடல் தண்ணீர் கண்டது சுமார் 5.6 தடவைதான் இருக்கும். மகாயுத்த காலமானதால் ரெங்கோன் அரிசி, குரினி இவைகள் வந்து மானாமதுரையில் சர்க்கார் டிப்போவில் விற்பனை செய்வார்கள். என் முதலாளி 2 ரூபாய் எங்களிடம் கொடுத்து 10 மயிலுக்கு அப்பாலிருக்கும் மானா மதுரை போய் அரிசி வாங்கி வரச் சொல்லுவார். நாங்களிருவரும் இரண்டு கோணியை எடுத்துக் கொண்டு. பழைய சோத்து நீச்சு தண்ணியைக்
4. இபிலீசு துஷ்ட தேவதை 5. போவடி : வியாபாரத்தில் வராத பணம் 6. மஹாயுத்தம் : முதலாம் உலகப்போர்
காலக்குறி)-51-Tமார்ச் 98
படிப்பகம்
________________
www.padippakam.com குடித்து விட்டு புறப்படுவோம். அதுவும் ஒரே முக்கிப்போன வாடை இதுதான் எங்கள் ஆகாரம். மானா மதுரை போய் பகல் 11 மணிக்கு டிப்போ திறப்பார்கள். டிப்போ வாயிற்படியில் பெருந்திரளான கூட்டம் இக்கூட்டத்தில் ஏபாரிகளாகிய நாங்கள் இருவர்களைத் தவிர மீதமுள்ள ஜனங்கள் எல்லாம் பள்ளு, பரையர், பரதேசிகள், கூலிகள். இக்கூடத்தில் சில அறிமுகம் உள்ள ஜனங்கள், எங்களைப் பார்த்து, ஏ, ஐயா ஆறு மாத்தான் எங்களுக்கு இல்லாக் குறை, உங்களுக்கென்ன நல்ல அரிசி வாங்கித் திங்க ? என்று இழிவாய்ப் பேசுவார்கள். போய் எங்கள் முதலாளிக்குப் போய் சொல்லு, இதுதான் எங்கள் பதில், சரி, அரிசியை வாங்கிக் கொண்டு வெளியில் வந்ததும் ரோட்டோரம் ஒரு பெரிய புளிய மரத்தடியில் 2.4 பேர்கள் இட்லி, தோசை கூடையில் வைத்து விற்பார்கள். அவர்களிடம் 2 படி அரிசியை வாங்கிய விலைக்கும் குறைவாக விற்று விட்டு இருவரும் புட்டு, தோசை வாங்கி வயிர் நிறைய தின்று விட்டு மீதம் அரை அனாவோ, ஒரு அனாவோ இருந்தால் அதை தொப்பியில் ஓட்டை செய்து அதனுள் வைத்துக் கொள்வோம். குறைப்பட்ட அரிசி 2 படியை முதலாளி மகன் அஜீஸ் கணக்குப் போட்டு ருபாய்க்கு இத்தனை படி அரிசி என்று முடிவு கட்டுவோம். அதன் பிறகு தலையில் துக்கி மூட்டையை வைத்து ரயில் ரோட்டிலேயே நடப்போம். 10 மயில் நடந்து மாலை 6 மணிக்கு ஊர் வருவோம் கிழவர் எங்கள் சாப்பாட்டைப் பற்றியோ, பசியைப் பற்றியோ கேள்க்கவேமாட்டார். 15 தினத்திற்கு ஒரு முறை மானாமதுரை நாத்தம் பிடித்த அரிசிக்குப் போவோம். எங்கள் முதலாளி பெரும்பாலும் கஞ்சிக்குத்தான் போடச் சொல்லுவார். இந்தக் கஞ்சி வேகும் போது தெருவில் போகும் ஜனங்கள், இது என்ன வீச்சம்? என்பார்கள். எங்கள் பக்கத்து வீட்டார்கள், ஆறு மாத்தான் ரங்கோன் குரினிக் கஞ்சி காச்சாறான் என்று பதில் கூறுவார்கள் ஆத்தாடியோ, இதை எங்ங்ணம் குடிக்கறது என்றபடியே போவார்கள். சரி, இந்த சாகையை விட்டு வேறு சாகை போவோம். அங்கும் இதே நாடகம் தான். முதலாளிக்கு ராஜதானியாகிய வழி மறிச்சான் வந்தோம். உடனே கோனார் கூறியபடியே எல்லா ஜனங்களும் பணத்தை கொண்டு வந்து கச்சாத்தை கிழித்துவிட்டார்கள். ஒரு ஆசாமி மட்டும் பணமில்லாததால் மேற்படியான் பாக்கி 41/- ருபாய்க்கு ஒரு பசுமாடு கொடுத்து கணக்கை கிழித்துவிட்டான். இதை மேய்க்கும் பொறுப்பு எங்கள் இருவருக்கும் கிடைத்தது. போகுமிடமெல்லாம் கூடவே பகவும் இருக்கும். காலையில் கஞ்சி குடித்தவுடன் மாட்டை மேய்த்துக்கொண்டு ஒரு கட்டு புல்லும் கொண்டு வர வேண்டும். இது எங்களுக்கு நித்திய கடமையாகி விட்டது. இங்கிருந்து கமுதி, அபிராமம் அடுதத கிராமத்தில் சாகை வைத்து நாடகம் நடத்தினோம். அங்கும் எங்களுக்குத்தான் செயம். இங்கு ஒரு தினம் அரிசிக்கு அபிராமம் போக வேண்டியதாய் விட்டது. எங்கள் நாத்தம் பிடித்த அரிசி இங்கு கிடையாது. அது மானா மதுரையுடன் தொலைந்தது. நல்ல அரிசி வாங்குவதென்றால் கிழவருக்கு உயிரே போய்விடும் போல் இருக்கும். அன்று அரிசிக்கு என்னை மட்டும் நேமித்தார். மாடு மேய்க்க மகனை நேமித்து விட்டார். ஒரு ரூபாயை கையில் கொடுத்து அடே பயலே மலுச்சமாய்ப் பார்த்து வாங்கிட்டு வரனும் என்றார். சுமார் 3 மயில் இருக்கும் அபிராமத்திற்கு புறப்பட்டேன். இந்த ஊர் எனக்குப் புதியது. பாதையை விசாரித்துக் கொண்டே போனேன். ஊர் நெருங்கிவிட்டது. பெரும் பட்டணம். ஊருள் நுழைந்தேன். பெரும்பாலும் முஸ்லீம்களே காணப்பட்டார்கள். வானளாவிய கட்டிடங்களும் மாட மாளிகைகளும் காணப்பட்டன. ஒரு தெருவில் நுழைந்து போய்க் கொண்டிருந்தேன். ஓரிடத்தில் பெரிய பங்களா போன்ற வீடு அதன் முன் கட்டில் பழபழப்பான ஈசேர் ஒன்றில் 50, 55 வயதைக் கடந்த பெரும் சீமான், மரைக்காயர் வாயில் சுருட்டுடன் சரிந்த வண்ணம் என்னை நோக்கினார். நானும் அவ்வீட்டின் சுவர்களில் தொங்கிய கெடியாரம், தொகராக்கல் என் கண்ணைக் கவர்ந்த படியால் சற்று நின்று அவைகளைப் பார்த்தேன். மரைக்காயர் என்னைப் பார்த்து "நீர் யாருங்கானும்?" என்றார் "நானுங்க. பள்ளவடடிங்க" என்றேன். "ஆறு மாத்தானா?" என்றார். ஆமாங்க பசியாறினயா? என்றா. இல்லிங்க என்றேன். உடனே தன் வலது பக்கமாய்த் திரும்பி, ஏப்பிழா என்று சத்திமிட்டார். உடனே 10, 11 வயதுடைய ஒரு அழகிய பெண் பட்டுக்கைலி உடையுடன் அங்கு வந்து நின்று என்ன வாப்பா? என்றது. இந்த ஆறு மாத்தானுக்கு நெய்ச் சோறு குடு என்றார். அப்பெண் என்னைப் பார்த்து வாரும் கானு என்று அழைத்தது. நானும் கூடவே பின் தொடர்ந்து சென்றேன். வீட்டின் மத்தியமாகிய முற்றத்தில் ஒரு பாயை விரித்து அமரு என்றது. அமர்ந்தேன். நெய்சோறு கொண்டு வரப்போய்விட்டது.
நெய் சோற்றின் விபரம் எனக்கொன்றும் விளங்கவில்லை. அரவக்குறிச்சி பேட்டை கந்துரியில்
காலக்குறி | 52 | மார்ச் 98
படிப்பகம்
________________
புழுங்கல் அரிசி யானி சாப்பிட்டஇேதிே"தி வேறேங்கும் நெயச் சோறு
திண்டதில்லை. இன்று கிடைக்கப் போகும் நெய் சோறைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வீட்டின் சுவர்களில் தொங்கிய கெடியாரங்களைப் பார்த்தவாறு உட்கார்ந்து இருந்தேன். சற்று நேரத்தில் சிறுமி பெரிய கோப்பை பீங்கானில் மிளகு சம்பா அரிசி சோறு மோருத்தி, மாங்காய் ஊறுகாயுடன் கொண்டு வந்து வைத்து பசியாரும் என்றது. நெய் சோறு என்றால் பழைய சோறு என்பதை அறிந்து கொண்டேன். அச்சோறு கால்படி அரிசிக்கும் அதிகமாய் இருக்கும் இத்தகைய அருமையான சாப்பாடு சாப்பிட்டு எத்தனை மாதங்கள் ஆனதோ? சாப்பிட்டேன். சற்று நேரத்திற்குள் வீட்டின் பின் கட்டத்திலிருந்து 4,5 பெண்களும் அவர்கள் தாயாரும் வந்தார்கள். என்னைப் பார்த்து என்னங்கானும்? உமக்கு உம்மா, வாப்பா இருக்காகளா? எந்த ஊரு என்றெல்லாம் பளவாறு விசாரணை செய்தார்கள். அவர்கள் கேள்விக்கு பதில் கூறினேன். எனக்களித்த சோறு என்னால் சாப்பிடவே கஷ்டமாய்விட்டது. இந்த நிலமையில் அந்தப் பெண்கள் மறுபடியும் சோறு வேண்டுமா என்று உபசரித்தார்கள். இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது என்றேன். சாப்பாடு முடிந்ததும் நான் போறேங்க என்றேன். எல்லோரும் ஒரு முறை சிரித்தார்கள். எதற்கு சிரித்தார்கள் என்று விளங்கவில்லை. இவர்கள் எல்லோருமே பட்டு கைலி வேட்டி கட்டி குப்பாயம் மேல் முன்டுடன் இருந்தார்கள். இவர்களிடம் விடை பெற்று வெளியே வந்தேன். மரைக்காயர் சுருட்டுடன் சாய்ந்தவாறு, பசியாறினயா? என்றார். ஆமாங்க என்றேன். புறப்பட்டேன் 4.5 அடி தூரம் வந்தேன். "இந்தா காணும் நீர் வந்த போதெல்லாம் பசியாறிட்டுப் போ" என்றார். சரிங்க என்று புறப்பட்டு கடைத் தெருவுக்குப் போய் ஒரு ருபாய் அரிசி வாங்கி தலையில் வைத்து புறப்பட்டேன். வழி நெடுகிலும் மரைக்காயரையும், அவர் வீட்டுப் பெண்களையும், மகராசரு நல்லா இருக்கணும் என்று ஆசீர் வதித்தேன். மத்தியானம் ஒரு மணிக்கு கிராமம் வந்தேன். முதலாளி நாட்டாமைக்காரருடன் உட்கார்ந்து கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசியவாறு, ஏன்டா பயலே! முனு மயிலு போயிட்டு வாரதுக்கு இவ்வளவு நேரமா என்றார். இல்லிங்க பாதை நல்லா தெரியலிங்க என்றேன். சற்று நேரத்திற்குள் அஜீஸ் பசு மாட்டுடன் வந்தான். நான் சமையல் செய்தேன். வெறும் சோறு புளி சட்னிதான். எனக்கு நெய் சோறு தெம்பு என் சாப்பாட்டை அஜீசுக்கு அதிகமாய்ப் போட்டேன். அவனுக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது. என்னடா அரிசிலே சுங்குடி புடிச்சு எதும் வாங்கித் தின்டயாக்கும் என்றான். அதெல்லாம் கிடையாது மரைக்காயர் நெய்சோறு விபரம் சொன்னேன். அவன் வாயில் சலம் ஊறியது. அடே இன்னொரு நாளைக்கு நானும் வாரண்டா என்றான். அது எப்படி முடியும்? மாடு மேய்க்க யாரு போறது? போனா நீயே போ. ஆனா ஆடு தெரிஞ்சாத்தானே? என்றேன். எட்டு தினம் சென்றபின் மறுமுறை அரிசிக்குப் போகவேண்டியதாய் விட்டது. அந்த முறையும் நானே புறப்பட்டேன் நேரே மரைக்காயர் வீட்டுக்கு சென்றேன். அன்று நெய் சோறு இருக்கவில்லை. இன்று அவ்வீட்டு அந்தப்புரமெல்லாம் பார்த்தேன். மரைக்காயர் பெஞ்சாதி, தம்பி நீ போய் அரிசி வாங்கி வரும்போது வந்து பசியாறிட்டுப் போ என்றார். புறப்பட்டேன். ஊரை ஒரு சுத்து சுத்தினேன். பெரும் பெரும் பள்ளி வாசல் எல்லாவற்றையும் சுத்திப் பார்த்துவிட்டு 11 மணிக்கு அரிசியுடன் திரும்பினேன். மரைக்காயர் மோட்டார் காரில் வந்து இறங்கினார். இவருடன் இவர் மக்கள் இரண்டு பேர்களும் இறங்கி வீட்டினுள் நுழைந்தார்கள். இவர்கள் காலேஜில் படிக்கிறார்களாம். சற்று நேரத்திற்குப் பின் எனக்கு சாப்பாடு கொடுத்தார்கள். அருமையான சாப்பாடு, 4.5, விதமான குழம்புகள். சாப்பிட்ட பின் மாம்பழம் ஒரு தட்டில் அறுத்து வைத்து இருந்தது. அதையும் சாப்பிட்டேன் மணி 12 ஆய் விட்டது. அரிசி முட்டையை தூக்கிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். சரியாக 2 மணிக்கு ஊர் வந்தேன். முட்டையை கீழே இறக்கியதும் முதலாளி பக்கத்தில் கூப்பிட்டார். போய் நின்றேன் காதைப்பிடித்து முறுக்கி விட்டு மூன்று அரைச்சல் கன்னத்தில் கொடுத்தார். அது நெய்ச் சோறின் அருமையை விளக்கியது. அன்றும் அஜீஸ் விசாரித்தான். வாயில் சலம் ஊற வைத்துக் கொண்டேன். இந்தக் கிராமம்தான் கடைசி பாக்கி வசூல் ஆய்விட்டது. சட்டிபானை என் தலை மீது ஏறியது. வேட்டி துணி பொட்டணம் கிழவர் மகன் அஜீஸ் தலைமீது ஏறிக்கொண்டது. பசு மாட்டுடன் புறப்பட்டோம். அன்று முதலாளி ராஜதானி வழி மருச்சான் தங்கல், கோனாரின் உபசரிப்பு எல்லாம் முடிந்தது. மறுநாள் கோழிச் சத்தம் கேட்டவுடன் பிரயாணம் நடந்தோம். எங்கள் துணிகளை நெருப்பில் போட்டு வேவித்தால் ஒரு பகலாவது வேகும். இந்த நிலமையில் புறப்பட்டோம். தினமும் 15 மயிலுக்கு குறையாமல்
காலக்குறிT_53_Tமார்ச் 93
படிப்பகம்
________________
நடப்பது வழக்கம். முதலாளியிட் விகி3 鰓 கில்ான பணத்தை அப்போதே பாத்திபனுரு போய் அனுப்பி விடுவார். சரி இவ்விதமே நடந்து மதுரை வந்து சேர்ந்தோம். அங்கு வைகை ஆற்று ஒரம் ஒரு வண்டிப்பேட்டையில் தங்கினோம். இங்கு தான் 4 அனாவுக்குப் புல் வாங்கியதைப் பார்த்தேன். இங்கும் கஞ்சிதான் காய்ச்சினோம். எங்களை கஞ்சி காய்ச்ச சொல்லிவிட்டு முதலாளி, மாட்டை பதனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் வாப்பு ராவுத்தர் கடைக்கு போய்விட்டு வருகிறேன் என்றார். அவர் ரொம்பநேரம் சென்று வந்தார். அது வரை நாங்களும் சாப்பிடாமல் இருந்தோம். நீங்கள் சாப்பிட்டீங்களா? என்றார். இல்லை என்றோம். சரி சாப்பிடுங்க என்றார் கஞ்சி சாப்பிட்டோம். மறுதினம் அதிகாலை புறப்பட்டோம். மூன்று தங்கலுக்குப் பின் திண்டுக்கள் வந்து பேகம்பூர் தெரு வழியாக வரும்போது முஸ்லிம் ஜனங்கள் பெரும் திரளாய் பட்டு, பட்டாடைகள் உடுத்தி நறுமணம் கமழ, மலர்ந்த முகத்துடன் எங்களுக்கு எதிரில் கூட்டம் கூட்டமாய் வந்து கொண்டு இருந்தார்கள். இதன் விபரம் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை எங்கள் முதலாளி மகன் அஜீஸ், என்னடா இன்னிக்கு எல்லாம் நல்ல நல்ல துணி போட்டுக்கிட்டு, கூட்டம் கூட்டமா வராங்க என்றான். பொருடா, இந்தப் பையனைக் கேக்கலாம் என்றேன். கிழவர் சற்று பின்னால் வந்தார்.எதிரில் வந்த ஒரு பையனை ஏப்பா, என்னத்துக்கு எல்லாம் இப்படிப் போlங்க என்றேன். பையன் சற்று ஏற இறங்கப் பார்த்துவிட்டு, இன்று சூட்டுக் கறி கொத்துவா தொழுது விட்டு போறோம் என்றார். அவ்வளவுதான் என் தலையில் பெரும் இடி விழுந்ததைப் போல் ஆயிவிட்டது. என்னையறியாமல் என் கண்களில் தாரை தாரையாய் சலம் வடிந்தது. சட்டிபானை சுமையுடன் என் கரித்துணிச் சட்டையில் கண்களைத் துடைத்துக் கொண்டேன். நாங்கள் வண்டிப் பேட்டையைப் போய் சேரும் வரையிலும் ஜனங்கள் திரள் திரளாய் வந்த வண்ணமிருந்தார்கள். வண்டிப் பேட்டையை அடைந்தோம். காலை 11 மணியிருக்கும் தலை சுமையை கீழே இறக்கி தலையை ஆற்றினேன். மாட்டைக் கட்டிவிட்டு, அங்குள்ள வண்டிக்காரரிடம் கிழவர் பல்லைக் கெஞ்சி கொஞ்சம் புல் வாங்கி வந்தார். கிழவர் அடே இந்தாங்கடா, இந்தக் கடைக்குப் போய் முணுகாசுக்கு உப்புச் சோப்பு வாங்கி வா என்றார். சோப்புக்கட்டி வாங்கி வந்து கொடுத்தேன். கிழவர் ஒரு அனாவைக் கையில் கொடுத்து இருவரும் போய் ஏதாகிலும் வாங்கித் தின்டுக்கங்க என்றார். வண்டிப் பேட்டையைக் கடந்து வெளியில் வந்து நீ என்னடா வாங்கறே என்றான் அஜீஸ் எனக்கு ஒன்னுமே வேண்டாம். நீயே வைத்துக் கொள் காசை என்றேன். அவன் அறையனாவுக்கு புட்டும், காலணாவுக்கு கிழங்கும் வாங்கிக் கொண்டான். கிழவர் பேட்டை நடுவில் உள்ள கிணற்றில் இறங்கி வேஸ்டி சட்டையை துவைத்துக் கொண்டு, மறுபடியும் அதையே போட்டுக் கொண்டு, அட பயலே, மாட்டை ஆதானமா பார்த்துக்கோ நான் கடை வீதிக்குப் போய் வருகிறேன். சரிங்க என்றேன். புறப்பட்டார். அஜீஸ், நானும் கடைக்கு வர்றேன் என்றான். ஏண்டா, துணிமணியெல்லாம் இப்படி வைத்துக் கிட்டு நீயும் வர்ரே ? நானும் வருவேன். இருவரும் புறப்பட்டார்கள். அவர்கள் போனபின் நான் மட்டும் மாட்டைப் பார்த்து உட்கார்ந்திருந்தேன். வண்டிப் பேட்டையில் 3 வண்டிக்கார முஸ்லீம்கள். இவர்கள் எளகாகுறிச்சியைச் சேர்ந்தவர்கள். குத்பா ஜமாத்துடன் சேர்ந்து தொழுதுவிட்டு மார்கட்டு போய் எறைச்சி, காய்கறி எல்லாம் வாங்கி வந்து சமைத்துக் கொண்டிருந்தார்கள். சமையல் ஆனதும் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தார்கள். ஒருவர் என்னைத் திரும்பி பார்த்து, அடே பயலே, தம்பி நீ சாப்பிட்டாய என்றார். இன்னும் இல்லை என்றேன். இங்கே வா தம்பி என்றழைத்து ஒரு வாழை இலை போட்டு சோறு வைத்து சாப்பிடச் சொன்னார். சோத்துக்கு வெறி பிடித்த நான் என்ன சொல்லமுடியும்? சாப்பிட்டேன். வயிறு நிறைந்தது. கையைக் கழுவிவிட்டு மாட்டுப் பக்கத்தில் உட்கார்ந்தேன். கிழவர் மண்டிக் கடையில் சாப்பிட்டு விட்டு ஒரு சிறிய புல்லுகத்தையுடன் பேட்டைக்கு வந்தார். உடனே புறப்பட ஏற்பாடு ஆனது. என் தலையில் சட்டிபானைகள் சவாரி செய்தது. அன்று மாலை 7 மணிக்கு தாடிக்கொம்பு தங்கல். கோவிலுக்குப் பக்கத்தில் ரோட்டின் ஒரமாய் உட்கார்ந்து மரத்தடியில் தங்கினோம். வட்டிகளை எடுத்து தண்ணிர் கொண்டு வந்து சமைக்க ஆரம்பித்தோம். சோறே ஆக்கும்படி ஆர்டர் ஆனது. மொச்சைக் கொட்டை ஆனம். அரிசி அரைப்படி அதிகம்போடச் சொன்னார். ஆனதும் சாப்பிட்டோம். கிழவர் வெத்திலை மடித்துக் கொண்டிருந்தார். இந்தச் சத்தம்
7. சூட்டுக்கறி கொத்துவா பக்ரீத் பண்டிகை
காலக்குறி | 54-1 மார்ச் 98
படிப்பகம்
________________
w padiror. கேட்டதும் ஒரு குடியான கிழவன் ೨೩''ಸಿಡಿಡಿ'ಘಿಘೀ கொஞ்சம் போல பாக்கு வெத்தலை கொடுங்கள் என்றான். வெற்றிலை பாக்குக் கொடுத்தார். கிழவன் பேசிக் கொண்டே, சாமி இங்கே மாடு கண்ணு மட்டும் கொஞ்சம் ஆதானமாய் இருக்கனுங்க நான் சொல்றதை சொல்லிட்டேன், என்றான். கிழவன் போய் விட்டான் கிழவருக்கு கருக்குப் பிடித்துவிட்டது. கிழவர் மெல்ல எங்களைத் கூப்பிட்டு, அட மாடு திருட்டுலே தாடிக் கொம்பு பேர் போனது. சூதானமாய் இருக்கணும் என்றார். சரிங்க, கித்தான் தாட்டை விரித்து உட்கார்ந்து கொண்டே மாட்டைப் பிடித்து கயிற்றை இடுப்பில் கட்டி கொண்டார். அஜீசும் நானும் சிரித்தோம். அதன் பிறகு நாங்கள் படுத்துக் கொண்டோம். கிழவர் சந்திரமதி புலம்பலை ஆரம்பித்தார். சுமார் 4 மணிக்கு எழுப்பிவிட்டார். பிரயாணம் துவங்கியது. கால 7 மணிக்கு வேடசந்தூர், பழைய சோறு சாப்பாடு, மறுபடியும் பிரயாணம். கல்வார்பட்டி ஒரு மணி நேரம் தங்கல். இங்கு அரை அனாவுக்கு நொங்கு வாங்கி மூவரும் தின்று விட்டோம். புறப்பட்டோம். ஆண்டிபட்டிபோய் குறுக்கு வழியாக புறப்பட்டோம். மாலை 4% மணிக்கு பள்ளபட்டி அடுத்த குப்பேக்கா ஓடைக்கு வந்து இறங்கினோம். எங்கள் முதலாளி வீட்டுக்கு, வெளுக்கும் வண்ணான் 2 கழுதையுடன் 4.5 ஆட்டுத் தலையை கயிற்றில் கோர்த்துக் கொண்டு கையில் பிடித்துக் கொண்டு, அழுக்கு மோளியுடன் வந்து ஓடையில் இறங்கினான். முதலாளி பார்த்துவிட்டார். வாடா, வண்ணா மவனே என்றார். வண்ணான் தலையை நிமிர்ந்து பார்த்துவிட்டு சற்று நிதானித்து விட்டு, இதென்னங்க இப்படி வாரிங்க, அடையாளமே தெரிலிங்க, நேத்து நோம்புக்கு வராமே இன்னிக்கு வர்ரிங்க, நம்ப ஆட்லே குருபானி, கிருபானி ஒன்னுமே இல்லீங்க, அரிசி கூட அம்மாவ கேட்னுங்க, அதெல்லாம் முதலாளி வந்துதான் கொடுப்பேன்டுச்சுங்க. இப்புதான் போயி அளுக்கெடுத்துக்கிட்டு வாரனுங்க என்றான். ஏ மொதலாளி நீங்க போயி ஒரு வருஷம் ஆயிருக்குமா? அதெல்லாமில்லேட ஆறு மாசமாச்சு, வண்ணாத்தி, போச்சுது போ! என் மக புள்ளெப்பெத்து பள்ளவட்டிக்கு சாமானம் வாங்க வந்தன்னைக்குத்தாங்க தாவளம் புறப்பட்டுதுங்க, யோசனை செஞ்சுபாருங்க. சரி வண்ணா மகளே, வெத்தலை பாக்கு இருந்தாக்குடு என்றார். தரேங்க போட்டுக்கங்க நம்ம ஆட்லே வெத்தலைபாக்கு கூடகுடுக்கலிங்க 'சரி சரி குடுக்கலாம் போடா, பொழுது போகுது. நாங்கள் புறப்பட்டு முதலாளி வீட்டை அடைந்தோம். அப்போது மணி 5% இருக்கும். என் தலைக்கு ரஜா வந்துவிட்டது. என்னையறியாமல் என்னுள் ஒரு உற்சாகம் பிறந்தது. முதலாளி என்னை, அடேய் நீ ஊருக்கு ஒரே ஓட்டமாய் ஓடிரு. திங்கக்கிழமை வந்து கணக்கு பார்த்துக்கோ. சரிங்கோ என்று வீட்டை விட்டு வெளியே வந்தேன். சூரியன் சுழன்டு கொண்டிருந்தது. ஒரே ஓட்டமாய் ஆற்றைக் கடந்தேன். குத்புதீன் தர்கா பக்கத்திலே வந்ததும் அவுலியாவே நீங்கள்தான் துணை என்று கூறிக்கொண்டே ஓட்டம் பிடித்தேன். அரவக்குறிச்சி சைய்யது சாயபு தர்கா வந்ததும் இருட்டி விட்டது. பாதையில் ஏதேனும் சரக்கென்றால் உடம்பு புல்லரித்து விடும். ஒரே ஓட்டமாய் வேட்டுவத் தெருவை சமீபத்தேன். அங்கு 10, 12 கோசா பெண்கள் அணைதொரைக்கு தண்ணிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அக்கூட்டத்தில் என் அக்கா தாவூதுபீவியும் இருந்தது. இவர்கள் பேசியகுரல் % பர்லாங்கு தூரம் வரும். என் காதிலும் கேட்டது. என் அக்காவின் குரல் எனக்கு நன்றாய்த் தெரியும். ஓடிக்கொணடே அக்கா அக்கா என சத்தமிட்டேன். என் சத்தம் கேட்டவுடனே எல்லோரும் நின்று திரும்பி யாரது? என்றார்கள். மறுபடியும் அக்கா அக்கா என்று சத்தமிட்டேன். அடியா, தாவூது உன் தம்பி ஏக்குவாட்டம் இருக்குதுடி? என்னைக் கண்டதும் என் அக்காள் கோவென்று அழுதது. இந்தக் கூட்டத்திலிருந்த எல்லாரும் என் முதலாளியை வாய்நோகும்வரை வசைத்தார்கள். நிலவு வெளிச்சம் இருந்தது. அவர்கள் ஆற்றுக்குப் போய்விட்டார்கள். நான் வீட்டை அடைந்தேன். என் தாயார் என்னைக் கண்டதும் கட்டிக் கொண்டு அழுதது. என் அக்காவும் வந்து விட்டது பக்கத்து வீட்டிலிருந்த ஜனங்களும் கூடி விட்டார்கள். முதலாளி கிழவருக்கு மட்டும் வசை குறையவில்லை. அன்று புதன் கிழமை என் சச்சா அவர்கள் ஓமத்தாபட்டி போய் பத்து மணிக்கு வந்தார். எல்லா விபரங்களையும் விசாரித்தார். அதன்பிறகு அந்த அயோக்யனை நான் விசாரிக்கிறேன் என்றார். சாப்பிட்டுப் படுத்து அலுப்பு தீரும்வரை துங்கினேன். காலை எட்டு மணிக்குத் தான் எழுந்து வெண்ணிரில் குளித்தேன். என் உடலில் இருந்த அழுக்கை கணக்கிட முடியாது. வேட்டி துணிகள் அரவே கிடையாது. ஜவுளிக்கடைக்குப் போய் எல்லாம் எடுத்து வந்தேன். அன்று என் சிநேகிதப் பையன்களுக்கெல்லாம் பேட்டி கொடுத்தேன். என் கஷ்ட சுகங்களையும் கூறினேன்.
திங்கள்கிழமை வந்தது. எங்கள் சொந்த வண்டியிலே சிச்சாவுடன் பள்ளபட்டிக்கு போனேன். வண்டி
काढकल्लल्लछ L55_Tळाऊ ब्रह
படிப்பகம்
________________
வந்தவுடன் மொத்த ஏபாரிகள் .டிவிedர்கிள் இனிப்ால் அவ்விடமே நின்ற பள்ளபட்டிக்காரர் ஒருவரை என்னுடன் போய் கணக்குத் தீர்த்துவரும்படி அனுப்பினார். இவர் பெயர் எனக்குத் தெரியாது. மத்தியானம் ஒரு மணி இருக்கும் முதலாளி வீட்டுக்குப் போனோம். முதலாளி உட்கார்ந்து இருந்தார். நாங்கள் இருவரும் போய் உட்கார்ந்தோம். அடே கணக்குப் பாக்கனுமாடா? என்றார் வீட்டுக்குள்ளே போய் ஒரு புஸ்தகத்தை எடுத்து வந்தார். என் கூட வந்தவர் இந்தப் பையன் சம்பளம், பத்துவளி எல்லாம் ஒரு லிஸ்ட்டுப் புடுச்சுக் கொடுங்கள் என்றார் சீட்டு எழுதி கையில் கொடுத்தார். அது வருமாறு.
ரூ. |அனா பை
மாதம் 1க்கு சம்பளம் 380 ஆக மாதம் 7, }
O
நாள் 8க்கு சம்பளம் வரவு
25
6 ஊரில் ரொக்கம் பற்று மல்துணி ரொக்கம் பற்று
குடம் உடைத்தது 1க்கு பற்று உளம்படி உடைத்தது 1க்கு பற்று கைலி வேட்டி 1க்கு பற்று
25
19
19
O O O
இந்த ருபாயையும் சீட்டையும் கையில் கொடுத்தார். கூட வந்தவர் ஏங்க தொப்பி, கொடம், உளம்படி எல்லாம் என்ன தெரியலையே என்றார். அவன்ைக் கேட்டுப் பாரு உடைச்சானா ವ್ಹೀಲ್ಡ್ என்றார். அது நிசம்தான் தவறி ஆ உடைந்துவிட்டது. தொப்பி மட்டும் கஞ்சியில் ஊற வைத்து தொவைக்கச் சொன்ன்ார். அதேபடி ஊறவைத்தேன். - உறைந்து போன கஞ்சியை நாய் வந்து நக்கித் தின்றுவிட்டது. கம்மாயிக்குப் போகும்போது பார்த்தேன். உளம்படி காலியாகிக் கிடந்து என்று விபரம் சொன்னேன். சரி இன்னம் என்ன எந்திரி போல்ாம். #? சந்தை வந்தோம். சிச்தாவிடம் சீட்டையும், பணத்தையும் கொடுத்தார். சீட்டைப் பார்த்தார் ரித்துக் கொண்டார்._ம்ாலை 4% மணிக்கு ரெட்டுப் பையுடன் கிழவர் சந்தைக்கு வந்தார். சச்சா எதிரில் வந்து சலாமலேக்கும் என்றார். அவ்வளவுதான். ஏண்டா அய்யோத்யப்பயலே ஆன்னெப் போல பத்துப்_பேத்துக்கு சம்பளம் கொடுக்குழ் நான் இந்தப் பையனை உன்னிடம் அனுப்பிய விசயம் என்ன ? வீட்டில் ச்ொன்னபடி கேள்ப்பத்தில்லை என்று வெளியில் அனுப்பினால் பையனை படாதபாடுபடுத்தி இருக்கான். இந்தச் சீட்டைப் பாருங்கள் என்று அவிடம் கூடி நின்ற பேர்களிடம் கொடுத்தார். சீட்ட்ைப் பார்த்தவர்கள் எல்லாரும் சிரித்தார்கள். கடைசியாக சமாதானப்படுத்தி விட்டு கூட்டம் கலைந்தது. இந்த நாடகம் முடிந்தது இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட அனுபவம் இதுதான். நான் ஒரு காலத்தில் ஆள்கள் வைத்து வேலை வாங்கும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் எனக்கு அளிப்பானாகில் என் ஆட்களுக்கு இத்தகைய கஷ்டங்களைக் கொடுக்கமாட்டேன். அஸ்ரத் லுக்மான் ஹக்கீம் வாக்கியமிது.
பற்றுபோக அதிக வரவு ரூ.
6
1 மேற்படி பற்று 1
K.S. முஹம்மது யாக்கூப்

காலக்குறி | 55 | மார்ச் 98
படிப்பகம்