தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, June 22, 2016

தாமஸ் ஹார்டி தி ரிட்டேன் ஆப் தி நேட்டிவ் (THE RETURN OF THE NATIVE) - மறுஆய்வு - மாரப்பன் : சதுக்கப்பூதம்

padippakam
மறுஆய்வு
(காலத்தின் அத்துக்களுக்கு அடங்காமல் திமிறிதிற்கும் பழைய புதிய நாவல்கள் எதுவாயினும், எம்மொழிகளில் எவரால் படைக்கப்பட்டிருந்தாலும் கலைத்தரம் கருதி அதை திரும்பிப் பார்க்கும் விமர்சனப் பகுதி இது இருட்டடிக்கப்பட்டவைகளும் ஏளனப்படுத்தப்பட்டு ஏற்கனவே விமர்சனத்துக்கு உட்படுத்தப்படாதவைகளும் இதற்கு முன்னுரிமைகள். சென்ற இதழில் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு தொடர்ந்து தாமஸ் ஹார்டியின் தி ரிட்டேன் ஆப் தி நேட்டிவ் இப்பொழுது இடம் பெறுகிறது.)
தாமஸ் ஹார்டி 
தி ரிட்டேன் ஆப் தி நேட்டிவ் 
(THE RETURN oF THE NATIvE)
தென் இங்கிலாந்தின் புராதன வெசக்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த டோர்செஸ்டர் மாவட்டத்தில் புல்லும் புதரும் பள்ளமும் பாறைகளும் மண்டி இயற்கைபூத்துக் கிடந்த புட்டில்டவுண் என்ற சிற்றுாரில், 1845 வாக்கில் ஒருநாள் மாலை தனிமையில் வயலின் வாசித்து ஆடிப்பாடித் திரிந்துகொண்டிருந்த ஆறு வயது அறியாச்சிறுவன் ஒருவன், திடீரென்று இடித்து வீசிய மழைக்காற்றில் கரையோரத்திலிருந்த ஓர் பெரிய ஆலமரம் வேரோடு சரிந்துவிழுந்ததையும், அதன் கிளையில் கூடுகட்டி வாழ்ந்த அன்றில் பறவை அதில் அடிபட்டு அதன் குஞ்சுகளோடு நசுங்கி கிரீச் கிரீச் என்று ஓலமிட்டு பரிதாபமாக செத்ததையும் கண்டு சகியாமல் விசும்பி விசும்பி அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்திருக்கிறான். சிவந்த கண்களோடும் சிந்திய ஊழை மூக்கோடும் அன்று இயற்கையை துணுகி நோக்கிய அந்தப் பொடியன்தான் பெரியவன் ஆனதும் மானிடத்தின் நிலையாமையை முழுக்க முழுக்க ஒரு அறிவியல் கலந்த துக்க கண்ணாடிக்குள் அடைத்த இலக்கிய ஞானி தாமஸ் ஹார்டி,
அடிப்படையில் கவிஞனான ஹார்டியின் சோக நாவல்கள் ஷோபக்கிள், ஷேக்ஸ்பியர் படைப்புக்கள் வரிசையில் தானாகவே சேர்ந்து கொள்கின்றன என்பதற்கு ஏச்சுக்களோ எதிர்ப்போ கிடையாது. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மேதைகளான காப்கா, காம்யூ ஜாய்ஸ், மியூசில் இவர்கள் மனிதன் கரப்பான்
52 ம் .
படிப்பகம்
________________
padippakam
பூச்சியாக கட்டில் ஒட்டிக்கிடப்பதையும், தாயார் இறந்த அன்றே ஹாஷ்ய சினிமாவுக்குப்போய் இரவில் விபச்சாரியுடன் கூடியதையும், மலம் கழிக்கும் போதும் உடலுறவின் வினையாக விந்து வெளியேறும் தருணத்திலும் நினைவுகள் ஒட்டம் எடுப்பதையும், மானவெட்கமற்ற குணங்கள் மனிதனில் மலிந்து கிடப்பதையும் சோதனை ரீதியில் துல்லியமாக சித்தரித்ததற்கு ஹார்டியின் நவீனத்துவம் உதவியிருக்கிறது. நினைவோட்டக் கலையின் ஊற்றுக்கண் ஹார்டியின் கடைசி நாவலான ஜூட் தி அப்ஸ்கூர்’-ல் ஒரு ஸ்நோ வொயிட் அழகியின் அரை மயக்க நிலையில் ஒயிலாக உறங்கிக் கிடப்பதை லேசாக கிளறிப் பார்த்தால் தெரியும் அறிவு ஜீவித்தனத்தின் கையாளாகாத ஆக்கிரமிப்பையும் அடாவடித்தனத்தையும் எதிர்த்து உடல் ஆரோக்கியத்தின் உன்னதமான பாலுணர்வுக்கு முதன்மை தந்த D. H. லாரன்ஸ் ஹார்டியின் கருத்துலகுக்கு, கடன்பட்டவன், கட்டுப்பட்டவனும் கூட. ஜேம்ஸ் ஜாய்ஸ் விட்டெறிந்த 'stream of consciousness என்ற கல் உலக நாவல் கலையையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.
டோரதி ரிச்சர்ட்சனின், பாய்ன்டட் ரூப் விர்ஜினியாவுல்பின் 'மிசஸ் டல்லோவே' 'டுதி லைட்ஹவுஸ் கொன்ராடின் ப்ளு வாயேஜ் டாஸ் பாசோஸின் மன்ஹட்டன் டிரான்ஸ்பர் நாதன் ஆஷின் பே டே வில்லியம் பாக்னரின் திசவுன்ட் அன்ட்தி...பரி' ஷெர்வுட் ஆன்டர்சனின் டார்க் லாப்டர் இவைகள் அவசியம் படிக்கவேண்டிய நனவோடையுக்தி நாவல்கள்.
பேரண்டத்தின் ஒரு பகுதியாக ஒரு ஆரஞ்சுப்பழம்போல் சுழன்று கொண்டிருக்கும் இப்புண்ணிய பூமியானது தனது உபகரணங்களான பஞ்சபூதங்களுக்குள் சிண்டு முடிந்துவிட்டு சதா சீதோஷ்ண சண்டைகள் செய்துகொண்டிருந்தாலும் பூரண ஆயுசுடன் என்றென்றும் நிலைத்துநிற்பது. இதில் உதிரிகளாக அவ்வப்போது தோன்றிமறையும் மனிதன் ஈரான உயிரினங்கள் 'இருத்தலுக்காக வேண்டி இயற்கைவிதிகளை எதிர்த்து நிகழ்த்தும் ஜீவமரண வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி இயற்கைக்கும் வீழ்ச்சி மனிதனுக்கும் இறுதியாகின்றது. இப்படியொரு திடமான தத்துவ அஸ்திவாரத்தில்தான் தாமஸ் ஹார்டியின் நாவல்கள் கட்டப்பட்டுள்ளன. வழிவழியாக கட்டிடக்கலை வல்லுநர் வம்சத்தில் வந்தவனல்லவா? எனவே ஒரு வீட்டிற்குத் தேவையான வாசல், ஜன்னல்கள், கதவு நிலவுகள் போல் நாவலுக்கு அவசியமான கதை, கரு, ஆரம்பம், முடிவுகள், பாத்திரங்கள், சம்பவங்கள் இவைகளை பாங்குடன் புள்ளிபோட்டு நிர்மானித்திருக்கின்றான்.
கடவுள் மேலோகத்தில் இருக்கிறான். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற பிரெளனிங் கருத்துலகை ஹார்டி ஏற்றுக் கொள்ளவில்லை. தனிமனிதன் மீது சமூகச் சட்டங்களாக திணிக்கப்பட்டிருந்த கற்பு, கல்யாணம் போன்ற பித்தலாட்டங்களை, போலிச்சம்பிரதாயங்களை எதிர்த்து கடைசி மூச்சுவரை கலகம் நிகழ்த்திய ஹார்டி உலகம் கண்டிராத முதல்தர காதல்
. பூ A 33
படிப்பகம்
________________
padippakam
கதாசிரியன் என்பதையும் தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். பெண் நெஞ்சின் ரகசியத்தை திறந்து காட்டியதில் டெஸ், யுஸ்டேஷியா முன் ஹெலனும், கிளியோபாட்ராவும் மண்டியிட்டு பிச்சைகேட்கும் நிலை. குறும்புக்க்ார பையன்கள் வண்ணத்துப்பூச்சியை பிடித்து விளையாடிவிட்டு வதக்கி எறிவதைப்போல் கடவுள் கையில் நாம் விளையாட்டுப் பொம்மைகள். வேதனை எனும் பொது நாடகத்தில் இன்பம் எப்போதாவது ஒரு தூரல்போல் விழுந்து மறைகிறது. எனவே விதியின் விளையாட்டை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது. நாம் நினைப்பது நடக்கமுடியாததால் வாழ்க்கை வாழ்வதற்கே என்று முழங்கமுடியாது. தொடர்ந்த தேடல்களில் இம்மாதிரி துண்டுப்பிரச்சாரங்களும் ஹார்டியில் மையம் கொண்டிருந்தன.
தாமஸ் ஹார்டியின் பிறந்த தேதி 2-6-1840 டோர்செஸ்டர் டவுனுக்கு 3 மைல் தூரத்திலிருந்த மேல்போக்ஹாம்டன் குக்கிராமத்தில் செங்கல்லால் கட்டப்பட்டு கூரைவேய்ந்திருந்த குடிசையில் பிறந்தபோது, இக்குழந்தை பிழைக்காது. புதைத்து விடுங்கள்' என்று பிரசவம் பார்த்த மருத்துவர் கைவிரித்து விட்டார். வளர்ப்புத்தாதியின் வாஞ்சையான கவனிப்பில்தான் நோஞ்சான் ஹார்டி கண்டம் தப்பியதாக சொல்லப்படுகிறது. அவன்பிறந்த வெசக்ஸ் மண்ணுக்கு தன் செல்வங்களை தீமைகளிலிருந்து காத்துக்கரைசேர்க்கும் ஒரு மகாசக்தியுண்டு. தாய்மீதான இந்த Noslagia நோய்தான் டி. எஸ். எலியட்டின், The wasteland க்கும் வித்திட்டிருககிறது. எடுத்துக்காட்டாக நாம் பேசப்பட இருக்கும் தி ரிட்டேன் ஆப் தி நேட்டிவில் எட்ஜானை வெறுத்து கணவன் கிளிம்மையும் மனைவி தமர்வினையும் கைவிட்டு பாரிசுக்கு ஓடிப்போக எத்தனித்த யுஷ்டேஷியா, வில்டீவ் இருவரையும் தன் பிள்ளைகளுக்கு துரோகம் செய்த  குற்றத்திற்காக மாகாளியாக வெகுண்டு காவுகொள்கிறாள். இதனாலோ என்னவோ, ஹார்டியும் டோர்செஸ்டர் தாண்டி கதைகளை அதிகம் நகர்த்தியதில்லை. மில்டனுக்கு ஏடன் கார்டன் போல் எட்ஜான் ஹெக்' இவனது லட்சியதாயகம். வெஸ்ட்சாக்சன்ஸ் என்பதன் பேச்சு வழக்கான வெசக்ஸ் ரோமனிய ஆட்சிக்காலத்தின் சிதைந்த சின்னங்களான நெடுஞ்சாலைகள், பாழட்ைந்த கோட்டைகள், பழுதுபட்ட மதில்கள், இடிந்தமதில்கள் உடைந்து மூடிய கலையரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள், பூண்டுமுளைத்துக்கூம்பிய கல்லறைகள் இவற்றிடையே பசுமை அடர்ந்த விளைநிலங்கள், குன்றுகள், கோம்பைகள், ஆங்காங்கே சிறுசிறுகுடிசைகள், இவற்றில் சிறுவிவசாயத்துடன், விறகுவெட்டுதல், பால் பண்ணைத் தொழில்கள் முக்கியமானவை. தன்வாழ்வில் விளையாடிய அலெக்சை கொலை செய்துவிட்ட டெஸ் ஆருயிர் கணவனுடன் மனைவியாக சுகித்திருந்த ஐந்துநாட்கள் .சி.ரூமிலோ, ஏழடுக்கு இலவந்திகை வெள்ளிமாடத்திலோ அல்ல. ஒரு திறந்த பழங்கால பாழடைந்த மண்டபத்தில்தான். உலகம் வியக்கும் சாமர்த்தியசாலியும் தன் குடும்பத்திற்காக தன்னையே மெழுகாய் எரித்துக்கொண்ட ஆங்கில இலக்கியத்தின்
54 A *, *
படிப்பகம்
________________
padippakam
மகோன்தைக் காதல் _ கதாநாயகியுமான டெஸ் அங்குதான் கைதுசெய்யபட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறாள்.
செல்லப்புத்திரனானதால் எட்டாவது வயதில்தான் ஹார்டி பள்ளிக்கு அனுப்பப்பட்டான். வகுப்பில் பாடத்தை படிக்காமல் தன்னைவிட முப்பது வயது மூத்த ஆசிரியை ஜூலியா அகஸ்தஸ் மார்ட்டினை. சைட் அடித்துத்திரிந்தான். அவளும் கட்டித்தழுவி கொஞ்கிச் சிணுங்கியபோதுதான் பெண்ணழகின் ரகசியம் ஹார்டிக்கு சித்தியாகி பிற்க்காலப் படைப்புகளுக்கு பெருந்தீனி போட்டிருக்கிறது. ஹார்டியின் கதாநாயகிகளில் பெருமளவினர் படிக்காத கவர்ச்சிகரங்கள்தான் என்றாலும் அவர்களது ஆதிக்கம் மிகவும் அதிகம். தாய் ஜெம்னா ஹேண்ட் புத்திசாலித்தனமாக காதலர்களைப் பிரித்து வீட்டிலேயே டிரைடனின் விர்ஜில்" ஜான்சனின் ராசலெஸ் மற்றும் ஸ்காட், டுமாஸ் முதலியோரை சொல்லிக்கொடுத்தாள். உடன்பிறந்தவர்கள் யாருமில்லை தகப்பன் தலைமை மேஸ்திரியானதால் முப்பாட்டன் காலத்திய குடும்பத்தொழிலிலேயே மகனையும் இறக்கிவிட்டான். ஜான் ஹிக்ஸ் என்பவரிடம் தொழில் பயிலும்போது டோர்செஷ்டரின் சகல மூலை முடுக்குகளும், வயல்வரப்புகளும் அத்துபடியாயிற்று. நாட்டுப்புற உழவர்களின் நடை உடை பாவனைகள் முட நம்பிக்கைகள், பேச்சுத்தோரணைகள், காற்றின் ஒலி, சூரியன் சந்திரன் எழுந்து விழுந்த மலைமுடிகள் இவைகள் இதயத்தில் சேகரமாயின். இந்த ஊறலின் முழுத்திரட்சிகள் தி ரிட்டேன் ஆப் தி நேட்டிவ் ஃபார் ஃபிரம் தி மேடிங் கிரெளடு" இரண்டிலும் நூற்றுக்குநூறு பிரதிபலித்திருக்கிறது. இந்நாட்களில் தான் வேலைபார்த்த அலுவலகத்தின் எதிர் வீட்டில் குடியிருந்த வில்லியம் பர்னீஸ் என்ற டோர்செஸ்ட் கவிஞனுடன் விவாதங்கள் நடத்தி நிறைய விஷயங்களை பிடுங்கிக்கொண்ட தாக தெரிகிறது. ஹார்டியின் நாட்டுப்புற யதார்த்தம் கவித்துவமாக மலர இந்தநட்பு, கைகொடுத்திருக்கிறது. 1862 ல் பிரபல என்ஜினியர் ஆர்தர் புளும்பீல்டு உதவியாளனாக லண்டன் சென்றபோது அவரிடம் இசைத்தன்மையை உறிந்து கொண்ட தாக சொல்லப்படுகிறது. இதை உறுதியாக நிறுவிவிட முடியாது ஏனெனில் ஹார்டியின் மூதாதையர்கள் கிருஸ்துமஸ், நியூஇயர் ஈவ் வைபோவங்களில் மாதாக்கோயிலில் பிடில் வாசித்துக் கொண்டு வருஷாவருஷம் வேஷம் கட்டி ஆடியவர்கள் எனவே ஹார்டியின் அறிவுத்திறன் மட்டும் தாய்வழிக் கொண்ட எனலாம். லண்டன் வாழ்க்கையில் ஹார்டி கிங்ஸ் கல்லூரி நூலகத்தோடு பெருந்தொடர்பு கொண்டிருந்தான். லத்தீன், கிரிக், ஜெர்மன், பிரெஞ்சு, மொழிகளையும், கணிதம், பூகோளம் இவைகளையும் விசாலமாக்கிக் கொண்டான். ஹோமர், விர்ஜில், டான்டே, பிராய்ட், ஹெகல், மார்க்ஸ், டார்வின், மில், இப்சன், ஹக்ஸ்லி, மால்தஸ், ரிக்கார்டோ, நீட்சே ஸ்வின்பர்ன், ஷேக்ஸ்பியர்-இவர்களில் ஊடுருவினான் என்றாலும் ஹோப்பன்கர். தாக்கம் இவனில் மிதமிஞ்சிக் கிடக்கிறது. ரூசோவின் சமூக ஒப்பந்தத்தை பரப்பியவன் என்பதற்கு ஒரு உள்ஆதாரம் கிளிம் இயோபிரைட்டை  Rossoe of Edgon என்று குறிப்பிடுவதை வைத்தே ருசுப்படுத்தலாம்.
சி. பூ பி 55
படிப்பகம்
________________
padippakam
என்விட்டை நான் எப்படிக் கட்டுவேன்?_கட்டுரை சேம்பர்ஸ் மேகசைனில் முதலில் வந்தபோது பிரிட்டிஷ் கிட்டிடக் கழகம் பதக்கம் வழங்கியது. ஆனால் பரிசை உதறி எறிந்து விட்டான் ஹார்டி உடல்நிலை குன்றி ஒய்வுக்கு டோர்செஷ்டர் வந்த போது கவிதை முயற்சிகள் கைவிடப்பட்டு, சார்லஸ் டிக்கன்ஸ், ஜியார்ஜ் எல்லியட், ஆன்டனி ட்ரோலோப்-இவர்கள் ஈட்டியிருந்த புகழ்மயக்கம் இவனையும் நாவலுக்குள் இழுத்து விட்டது. கள்போதையை விட கொடியதான இதன் காட்டு வழித்தடங்கள் கட்டிடக்கலையிலிருந்து இலக்கியத்துக்கு ஊர்ந்த 'ஆட்டோபயாகிராப்பிகல் நாவலான ஜாட் தி ஆப்ஸ்கூர்-ல் பதிந்துகிடக்கின்றன. தி புவர்மேன் அன்ட் தி லேடி நகர்ப்புற வாழ்க்கையைசாடி அதீத கற்பனையில் எழுதி அனுப்பப்பட்ட போது அலெக்ஷாண்டர் மேக்மில்லன் அந்நாவலை ஏற்றுக் கொள்ளாமல் உடனடியாக ஒரு அனுதாபக்கடிதமும் அனுப்பி வைத்தார். அப்போது மேக்மில்லன் பதிப்பகத்துக்கு இலக்கிய ஆலோசகராகயிருந்த 'ஜியார்ஜ் மெரிடித் பார்வைக்கு கையெழுத்துப்பிரதி சென்றபோது அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பிறகு சேப்மேன் ஹாலில் நேரில் சந்தித்து சந்தித்து மறுபரிசீலனைக்கு கெஞ்ச மேற்கொண்டு இதைத் திருத்தவோ, அல்லது வேறு புதியநாவல் எழுதவோ வேண்டாம் என்று மெரிடித் புத்தி கூறி அனுப்பி விட்டார். மேலும் இரண்டு பதிப்பாளர்களும் உதட்டைப் பிதுக்கிவிடவே ஹார்டியின் முதல் நாவல் இதுவரையும் அச்சேறாமல் தான் தூசிபடிந்து கிடக்கின்றது. ஒரு சவாலாக 1861-ல் டெஸ்பரேட் ரெமடிஸ்' டின்ஸ்லி பிரதர்ஸ் வெளியீடாக சொந்த செலவில் மூன்று தொகுதிகளாக பதிப்பிக்கப்பட்ட்போது பத்திரிக்கைகள் பாராட்டைக் குவித்தன. மூன்றாவதான அன்டர்தி கிரீன்வுட் ட்ரி வட்டார வழக்கை அப்படியே பதிவு செய்திருந்தும் ஆள் பலே பட்டிக் காட்டுப் பேர்வழி போல் இருக்கிறது. நம்மை விடமாட்டான் போலும் என்று இம்முறையும் மேக்மில்லன் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஆள் இல்லை என்று 3–Luso-G, gol-o-go, under the green wood tree, who loves to lie with me, stop 3sosovouffs. As you like it பாடலை நாவலின் தலைப்பாக எடுத்துச் சூட்டியதும் ஒரு காரணமோ என்னவோ?...அடிமேல் அடிவிழுந்தால் அம்மியும் நகருமல்லவா? மூன்று ஆடவரின் கைப்பாவையாக மாறிய சதைப்பிண்டமான பாத்ஷெபா எவர்டீன் பலத்த கைகாரியாக ஃபார் பிரம் தி மேடிங் கிரெளடு-ல் சர்ச்சைக்குள்ளாகி கார்ன்ஹிைல் பத்திரிக்கையில் பவனிவந்த போது, நிச்சயம் ஒரு பென அதுவும் ஜியாாஜ் எலியட் தான் புனைபெயரில் இதை எழுதியிருக்க வேண்டும் என்று எடிட்டர் லெஸ்லி ஸ்டீபன் அடித்து மதிப்பிட்டார். எல்லியட்டும் இந்நாவல் கதாநாயகி பாத்ஷெபாவைப்போல் இரண்டு மூன்று கைமாறியிருக்கிறாள். கடைசிக் கணவன் இவளைவிட 17 வயது இளையவன் ஒரு வேளை அந்தக்காலத்தில் பரபரப்பான விஷயங்களான எல்லியட்டின் அந்ங்கதரங்களை அம்பலப்படுத்தக் கூட இதை ஒரு கருவியாக உபோகித்திருக்கலாமா?- எஃபேர் ஆப் ப்ளு அய்ஸ். தான் தாமஸ்ஹார்டியின் பெயரை முதலில் தாங்கி
56 ம் . பூ.
படிப்பகம்
________________
padippakam
வந்த நாவலாகும், அரசு|அலுவலக ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டு முகமூடிக்குள்_திகழ்ந்தேறியிருந்தாலும் ஹார்டியின் ஆரம்ப முயற்சிகள் இன்றும் கேட்பதற்கு எவ்வள்வு க்வாரஷ்ய்மாக யிருக்கின்றன? - -- -
வாலிபன் ஹார்டி கார்ன்வால் என்ற நகரில் சர்ச் புணருத்தன வேலைக்காக நெடுநாள் கூடாரம் அடிக்க வேண்டியிருந்தது. புதுப்பிக்கப்பட்ட சர்ச்சை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான்
‘Here we suffer grief and pain Here we meet to part again"
என்று எம்மா லாவண்யா கிப்போர்ட் கண்ணில் பட்டாள். வாட்டசாட்டமான உருவம் எம்மா. பிளைமவுத் வக்கில் மகளான இவளை கொத்திக்கொண்டு வீடு திரும்பினான். கட்டிடத்தை எறிந்துவிட்டு இலக்கியத்தை தொழிலாக தொடர ஆதார சுருதி எம்மாதான். புதுப்பெண்டாட்டியுடன் உல்லாசமாக ஐரோப்பிய சுற்றுப்பயணம் செய்த ஹார்டி ஆரம்ப நாட்களில் அவள் கால்களில் நெடுங்கிடையாகத்தான் விழுந்துகிடந்தான். சமுதாயத்தையும் மக்களையும் படித்து சிருஷ்டிப்பதா என்ற திண்டாட்டமும் இக்கட்டத்தில் ஒரு பிரச்சினையாக இருந்தது. இவ்வேளையில் தி ஹேண்ட் ஆப் எதில்பர்ட்டா வெளியாயிற்று. ஹார்டி தம்பதிகள் எழில்நிறைந்த ஸ்டர்மினிஸ்டர் நியூடன் கிராமத்தில் குடியேறிய தருணத்தில்தான் ஹார்டியின் இலக்கியக் கொள்கையை பறைசாற்றும் சக்தி வாய்ந்த தி ரிட்டேன் ஆப் தி நேட்டிங் உருவானது. தொடர்ந்து வெசக்ஸின் நெப்போலியப் போர் பாதிப்புகளை, "தி டிரம்பட் மேஜர் வெளிப்படுத்தியது. லாவ்டிசியன் நோயுற்று படுக்கையிலிருந்தபடியே சொல்லச் சொல்ல எம்மாவால் எழுதப்பட்டது. டு ஆன் டவர் அட்லாண்டிக் மன்த்லி என்ற அமெரிக்கப் பத்திரிக்கையில் தொடராக வந்தது. லண்டன் உயர்வட்டங்கள் ஹார்டியை மொய்த்து மெச்சித் தள்ளினாலும் அவன் இதயம் என்னவோ செயற்கைப் பூச்சுக்களிலிருந்து விலகி டோர்செஷ்டரையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. எனவே அடிக்கடி டோர்செஷ்டர் வந்து போய்க்கொண்டிருந்தான். மேயர் ஆப் கேஸ்டர் பிரிட்ஜ்வெளியாகி ஒரு குலுக்கு குலுக்கியபோது அந்நாவலின் சூழல் கேஸ்டர்பிரிட்ஜ் ஆக இல்லாமல் முழுக்க டோர்செஸ்டராகவே எதிரொலித்தது. குடிவெறியில் மனைவி, மகளை விற்றுத் தொலைத்த மைக்கேல் ஹென்சர்ட் ஹார்டியின் ஆண்கதா பாத்திரங்களில் மகாமுக்கியமானவன். மேக்ஸ்கேட் என்ற இடத்தில் புதுவீடு கட்டிக் குடியிருந்த இக்காலம் ஹார்டியின் ந்ேதனையிலும் வாழ்க்கையிலும் பெரும்புயல்களை தோற்றுவிப்ப தற்கான அமைதியைக் காட்டியது. -வுட்லேண்டர்ஸ் மேக் மில்லன் மேகசைனில் தொடராக வந்தபோது முதல் இதழின் 10,000 பிரதிகளும் பறந்தடித்துத் தீர்ந்தன. பிளாக்மூர் பள்ளத் தாக்கின் வர்ணனை வீரியங்களுடன் கதாநாயகி கிரேஸ் மெல்பரியை தூக்கியடித்த காட்டுவாசி பெண்ணான மார்டின் செளத் பாத்திரப் படைப்பு ஹார்டிக்கு பல பெண் ரசிகைகளை
. பூ. A 57
படிப்பகம்
________________
padippakam
நெருக்கப்படுத்தியது. இவன் தீவிர இலக்கிய ரசிகைகளில் திருமதி ஹென்னிக்கர் குறிப்பிட வேண்டியவள். பணக்கார மலடியான இவள் ஒரு பக்கா செக்ஸ் நோயாளி. கைப்பிடித்துஇழுக்க, கட்டிக் கசக்க சம்மதித்த இவள் நேரடி உடலுறவுக்கு மசியாமல் ஹார்டியை நெடுங்காலமாக தொங்கவைத்த உன்மத்தக்காரி. ஹார்டி உடலமைப்பில் பெண்தன்மை விஞ்சியவனா? என்ற சந்தேகமும் கூட எழ ஆரம்பித்தது. பமீலா அமோக வெற்றி யடைந்தபோது ரிச்சர்ட்சனை விமர்சகர்கள் இப்படித்தான் பார்த்தனர். அது உண்மையாகவே போயிற்று. ஹார்டியிலும் இந்தப் பலவீனம் கிடக்கின்றது. ஒரு மலட்டு அல்லது வரட்டுத் தன்மை உடல்மோகிப்பின் பலவெறிகளைகிண்டிவிடலாமல்லவா? வாழ்க்கையில் நெருங்க முடியாத பேரழகிகளை இலக்கியத் திலாவது சித்தரித்து வணங்கியிருக்கலாமல்லவா? இந்த Sweet Helen make me immortal with a kiss” stair so upri Gavirgor டாக்டர் பாஸ்டஸ் உடல் மோகம் பல ஆசிரியர்களுக்கும் கனவாக இருந்திருக்கிறது. (இதன் விபரம் பின் தொடர்கிறது) தொடர்ந்த டெஸ் ஆப் தி டியர்பர்விலஸ் உலகப் புகழை அள்ளி ஹார்டியின் கழுத்தில் கழட்ட கழட்ட மாலைகளாக போட்டன். எச்சில்பட்ட கனியான டெஸ் - திருமணமாகாமல் தாயானபோது எப்படி ஹார்டி அவளைசுத்தமான பெண்னாக ஏற்றுக் கொண்டான்? துரங்கிக் கொண்டிருந்த அலுப்பில் அவளையறியாது நிகழ்ந்த திட்டமிட்ட கற்பழிப்புத் தாக்குதலுக்கு டெஸ் எந்தவிதத்திலும் பொறுப்பாளியல்ல. பெண்ணிய கருத்துலகில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்திய இந்நாவல் ஒரே சமயத்தில் பரபரப்புக்கும் பலத்த கண்டனத்துக் கும் சமூக பகிஷ்கரிப்புக்கும் ஆளானது, இதையும் இரண்டு புகழ்பெற்ற பதிப்பங்கள் கொண்டுவர மறுத்துவிட்டன. ரோமன் போலன்ஸ்கி இந்நாவலை வண்ணப்படமாக்கியபோது டெஸ்சின் பாத்திரத்துக்கு ஹாலிவுட்டிலிருந்து கோடம்பாக்கம் வரை தேடியும் ஒகு லிப்ஸ்டிக் தொப்பைகள் கூட உருப்படாமல் போகவே லண்டன் தெருக்களில் திரிந்த முக்கும் முழியுமான ஒரு பால்கார கிராமத்துப் பெண்ணை பிடித்து நடிக்க வைத்ததாக கேள்வி. கறவைக்கு நிற்காத பசுக்கள் கூட காம்பில் டெஸ்ஸின் மென்மையான கைப்பட்டதும் வசிய மருந்து பூசினாற்போல பாலுக்கு நின்றதாக நாவலில் வருகிறது. ஆங்கில இலக்கியத்தில் டெஸ்சை ஒருதட்டிலும் மற்றெல்லோரையும் ஒகு தட்டிலும் கூட நிறுத்திப்பார்க்கலாம். பின் தொடர்ந்த தி வெல் பிலவுட் சாதாரணத்தரத்தில் அமைந்தது. மாடியில் தனியறையில் எழுத்தில் மூழ்கிக்கிடந்தபோது மனைவி எம்மா தனிமையில் தவித்து சாக்கைவிரித்துத் தாங்கிக் கொண்டிருந்தாள். எம்மாவின் உடம்பை கட்டியாளமுடியாமல் போகவே, புத்தி பேதலித்து அவள் நடைப்பிணமாக உலவினாள். காட்டுத்தனமான கற்ப்பை ஹார்டி சுக்குநூறாக உடைத்து தூள்ளாக்கியபோது எம்மாவுக்கும் அவனுக்கும் ஏற்கனவே இருந்த விரிசல் பெரியதாகியது. செக்ஸை ஒரு சுதந்திரமான போக்காக வலியுறுத்திய போது அவள் அதை எதிர்த்து வாழ்க்கையை இரண்டாக்க நினைத்தாள். இறுதி நாவலான ஜாட் தி அப்ஸ்கூர் வெளியாவதை ரகசியமாக தடுத்து நிறுத்த
58 ம் . பூ.
படிப்பகம்padippakam
எத்தனித்திருக்கிறாள் என்றால் அவனை சாதாரணமாக எடை போட முடியுமா? இதன் சியூ பிரைட்ஹெட் அசல் எம்மாவே தான். அரபெல்லா ஹார்டியின் அகோரக் காமச்சின்னம் வீனஸ் தேவதையின் விரசக்கோலம் ஹார்டியின் வரட்சிப் பார்வைகள் தீவிர விமர்சனத்துக்கு உள்ளாகவே நாவல் நிறுத்தப்பட்டு சிறுகதைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. கடைசிக்காலம் அமைதியாக கவிதைகளில் கழிந்தது. நெப்போலியினின் வீரதிர சரித்திர அம்சங்களை அழுத்தமாக பதிவு செய்த புகழ் பெற்ற காப்பியநாடகமான் திடைனாஸ்ட்ஸ்லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பிரமாண்டமாக அரங்கேறியது. 1912-ல் மனைவி இறந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு தனது இலக்கியக்காரியதரிசியும், பின்னால் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவளுமான புளோரன்ஸ் எமிலி டக்டேல் என்பவளை மறுமணம் செய்துகொண்டான். இரண்டு மணங்களிலும் ஹார்டிக்கு புத்திரபாக்கியம் கிட்ட வில்லை. ராயல் இலக்கியக் கழகம் தங்கப்பதக்கம் வழங்கி கெளரவித்தபோது ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ்கள் வலிய டாக்டர் பட்டம் தந்து தங்களை பெருமைப்படுத்திக் கொண்டன. பலகல்லூரிகளில் வருகைதரு பேராசிரியர் பதவி காத்துக் கிடந்தன. கையெழுத்துப் பிரதிகளை நூல் நிலையங்களும் மியூசியங்களும் காட்சிப் பொருளாக கண்ணாடிக்குள் வைத்தன. அமெரிக்க இலக்கிய வாசகர்கள் ஆட்டோகிராப் வாங்க டோர்செஸ்டரை முற்றுகையிட்ட வண்ணமிருந்தனர். எல்லா வற்றிலும் நிறைவுடன் 87-வயதில் ஹார்டி இறந்தபோது வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் சார்லஸ் டிக்கன்சுக்கு பக்கத்தில் புதைக்கப்பட்டான்.
ஹார்டியின் புது பையாகிராப்பிகளில், 1960-ல் செய்மூர் ஸ்மித் வெளியிட்டது ஒரு மேதையின் முகத்தில் கரியைத்தான் பூசியிருக்கிறது. ஹார்டியின் அத்தைமகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை அவரை உரித்துவைத்திருப்பதாக பூதம் கிளப்பி விடப்பட்டிருக்கிறது. இரண்டாவது மனைவி புளோரன்ஸ் எமிலி மீதும் வாய்க்குவந்தபடி புரளிகள் வெடித்திருக்கின்றன. இவள் ஏற்கனேவே சர். தார்ன்லி ஸ்டோக்கர் என்ற பணக்கார டப்ளிள் டாக்டருக்கு வைப்பாக இருந்து அவரது மனைவிக்கு மரணப் படுகையில் உதவியகைகாரி, தகாத தலைகீழ்ப்புணர்ச்சிகளில் அக்கிழவரைத் திருப்திபடுத்தியதால் ஏராளமான பணத்தை இவள் பெயரில் உயில் எழுதிவிட்டு செத்ததாகத் தெரிகிறது. வயோதி கத்தில் இவள் ஹார்டியை கைக்குள் போட்டுக் கொண்ட போது அவரையும் முறைதவறிய gossuto-soloist (Masturbation) கலவியில்தான் அடக்கி ஆண்டிருக்கிறாள். இன்னும் சில சிதம்பர ரகசியங்கள்.கல்யாண்மாகாத இலக்கிய நண்பன் ஹோரஸ் மூல் மிதமிஞ்சிய குடியில் தற்கொலை செய்துகொண்டதற்கும் ஹார்டியுடன் கொண்ட ஹோமோசெக்சுவல் பழக்கம்தான் காரணமாக சொல்லப்படுகிறது. முன்னால் சொன்ன திருமதி ஹென்னிக்கர் இன்னொரு விசித்திர வழக்கு இப்படிப்பட்ட பாலுணர்வுப் பலகீனங்கள் கீழ்த்தர உறவுகள்தான் வாளிப்பான எம்மாவை பைத்தியமாக்கி பலிகிடா ஆக்கிவிட்டது. இவற்றிற்கு ஹார்டியின் கவிதைகளில் ஆதாரம் காட்டப்படுகிறது.
4. g. A 59
படிப்பகம்
________________
padippakam
II
தாமஸ் வரார்டியின் நாவல்களில் தலைசிறந்தது எது? என்ற ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டால் டெஸ் ஆப்தி டி' யர்பர்விலஸ்' என்று கண்ணை மூடிக்கொண்டு பதில் வரும். அதே சமயத்தில் திரிட்டேன் ஆப் தி கேட்டிவ்"க்கு கை தக்கும் அனுதாபி களும் உண்டு. முக்கோணக் காதல் தோல்வியில் 1:2 நிறை வேறாத காதல் சூத்திரத்தில் ஒட்டிப்பழுத்த இரட்டைப் பழங்கள் போல் இரண்டும் அமைந்துள்ளன. டெஸ் - சில் அவள் பாத்திரப் படைப்பும் கேட்டிவ்"-ல் எட்ஜான் ஹெத்தின் இயற்கை வர்ணனையும் தலைப்பிலேயே பட்டுத்தெரித்தாலும் டெஸ்சின்சமூக ஒட்டம் அதை முதலிடத்துக்கு உயர்த்தி விடுகிறது. பதினாறாம் நூற்றாண்டின் இயற்க்கையை வழிபடும் இயக்கம்,
Nature herself her shape admires The Gods are wounded at her sight
என்று பெண்மையையும் தோளில் தூக்கிவைத்துப் பாராட்டிப் போற்றியது என்பதற்கு யுஸ்டேஷியா வை பாத்திரத்தை உதாரணமாக கூறலாம். இயந்திர நாகரிகத்தை வெறுத்து அமைத்திக்குத் திரும்பும் குறியீடு நாவலில் தொக்கியிருக்கிறது. இன்பத்தோட்டத்தில் இணைந்து வாழ்ந்த இரு ஜோடி காதலர் களில் கண்ணிழந்து கஷ்டப்பட்டான் ஒருவன், காதலை இழந்து தவித்தான் இன்னொருவன். கற்பிழந்தாள் ஒருத்தி, கெளரவத்தை இழந்தாள் மற்றொருத்தி. இது இயற்கையின் தண்டனையா? இறைவனின் தீர்ப்பா? என்று கூட கதையை சுருக்கிச் சொல்லிவிடலாம். ஆறுபாகங்களில் அத்தியாயங்கள் ஏத்தினச் சுருக்கமான கவிதைத்தலைப்பை தாங்கியிருக்கின்றன. கிரேக்க அவல நாடங்கள் போல் catastrophe முடிந்தும் கடைசியில் ஒரு aftercourse ஏன் ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது? ஒரு கழுவாய் osugi, so Giorgoth (redemption or purgation) @péâuloss sor அம்சமல்லவா?
எட்ஜான் பொட்டல்தான் நாவலின் நிலைக்களம், தலைமைப் பாத்திரம் இயக்கும் சூத்திரதாரி எல்லாமே. இதன் மேற்குப் பக்கமான ப்ளும்ஸ்ளண்டில் கணவனை இழந்த வயதான விதவை திருமதி இயோபிரைட் அமைதியே உருவாய் தன் அண்ணன் மகள் தமாவின் துணையுடன் காலத்தை கழித்து வருகிறாள். - தாய் தந்தையரை இழந்துவிட்ட தமாவதினுக்கு அத்தைதான் தெய்வம். இயோபிரைட்டின் ஒரே மகனான் கிளிம் உலகக் கலாச்சாரமையமான பாரிஸ் பட்டணத்தில் ஒரு பிரபல வைரக்கம்பெனியில் மேனேஜர் இதற்கு கிழக்கில் சற்று துரத்தில் டேமன் வில்டில் அநாதைப்பெண்கள் த்ங்கும் விடுதி நடத்தி வருகிறான். லண்டனில் ஏற்கனவே பார்த்த எனஜியர் தொழிலுக்கு முழுக்குப்போட்டு எட்ஜானில் குடியேறிய இவன் பொல்லாத பொம்பிள்ளைபொறுக்கி. மலர்விட்டு மலர்தாவும் தும்பியான இவன் மாயாவிலைகள்தான் அமைதியான எட்ஜானில் பலத்த புழுதியை பரப்பியது. மறுபுறம் மிஸ்டோவர்நேப் புக்கு நேர்எதிர் மேட்டுப் பகுதியில் ஒய்வு பெற்ற கடல் சிப்பந்தியான கேப்டன் ட்ரூ
60 A . பூ.
படிப்பகம்
________________
padippakam
தன் மகள்வழிப் பேத்தி அழகி யுஸ்டேஷியாவுடன் வசித்து வருகிறான். இரண்டு குடும்பங்களுக்கும் சண்டை யில்லாவிட்டாலும் பேச்சு வார்த்தை புழக்காட்டங்கள் அதிகம் கிடையாது. மீதி ஆங்காங்கே குடியானவர் குடிசைகள் காட்டில் முள்வெட்டி ஜீவிப்பவர்கள் இத்யாதிகள். ஆரம்ப அத்தியாயம் எட்ஜான் மண்ணைப் பற்றிய அறிமுகம் புயல் இதற்கு காதலன், காற்று நண்பன், நாகரிகம் ஜென்ம எதிரி. ஆறுகடல் வற்றலாம். ஏரிகுளங்கள் காயலாம். கிராமங்கள், மக்கள் மாறலாம்! ஆனால் எட்ஜான் மட்டும் எத்தனை யுகமானாலும் அப்படியே குத்துக்கல்லாகவே இருக்கும் ஒரு நவம்பர் மாத சனிக்கிழமை, முன்பணிக்கால சாயங்கால நேரம் ஒரு கிழவன் ரோமன் ரோட்டில் பொடி நடையாக போய்க் கொண்டிருப்பதுடன் கதை துவங்குகிறது. இதன் atomoshere ஷேக்ஸ்பியரின் ஹாம்ல்ட் முதல் காட்சியில் வரும் Who is there' எலிசனுார் கோட்டை நள்ளிரவு விபரனை போல் சஸ்பென்சில் அமைந்துள்ளது. அவனோடு டிக்கரிவேன் என்ற மூடுவண்டிக்காரன் சம்பாவித்துக் கொண்டு பயணம் செய்கிறான். வெசக்ஸ் விவசாயிகளின் பட்டிகளுக்குச் சென்று செம்மறியாட்டின் கொம்புகளுக்கு சிவப்புச்சாயம் அடித்துப் பிழைக்கும் தொழில் அவனுடையது. வண்டியிலிருந்து ஒரு பெண் இறங்கி புதருக்குள் மர்மமாக மறைகிறாள். தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்ட இவள் நாவலின் இரண்டாவது கதாநாயகி தமாவின்- டிக்கரிவேனின் காதலி.
தீமைகளையும் தேவையற்ற பழைய பொருள்களையும் நெருப்பில் போட்டு கழிக்கும் பூர்வீகப் போகிப் பண்டிகையான போன்பைர், எட்ஜானில் வருடந்தவறாமல் அனுஸ்டிக்கப்படுவது. சாக்சானியர் காலத்திலிருந்து தொடரும் இல்விழாவில் புதிதாக கல்யாணமான இளஞ்ஜோடிகள் ஓரிடத்தில் கூடி நடனமாடுவது சம்பிரதாயம். ஏசுவைத் தொழ எட்ஜானில் மாதாக் கோயில் இல்லாததால் ஏங்கிள்பரிக்குத்தான் போக வேண்டும் தைப் பொங்கலுக்குமுன் கார்த்திகை கூம்பு பொருத்துவது போல் டிசம்பர் 25 கிருஸ்துமஸ் விழாவுக்குமுன் நவம்பர்- 15-ல் இது நடைபெறும். எட்ஜான் எங்கும் இளசுகள் தீ எரித்து சந்தோஷத்திலிருந்த இத்தருணத்தில் கிளிம் இயோபிரைட் பாரிஸிசிலிருந்து கிருஸ்துமஸ் வைபோவத்திற்கு வருவதாக பேச்சு அடிபடுகிறது. சிறுவயதிலேயே ஊரை விட்டுச் சென்றவன் அல்லவா? சொர்க்கத்திலிருந்து இறங்கும் தேவனின் வருகை யைப்போல் யுஸ்டேசியாவின் இரண்டு கண்களும் ஆவலுடன் காத்துக்கிடந்தன.
புத்திசொல்ல யாருமில்லாத யுஸ்டேஷியா தண்ணிt தெளித்து விட்டதுபோல் தன்போக்கில் திரிகிறாள். அடைய நினைத்த ஒரு பொருளை அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தது அவள் அகராதியில் கிடையாது. பட்மவுத்திலிருந்து பாட்டன் வீட்டுக்கு வந்ததும் அவள் பிடித்து அடைக்கப்பட்ட கூண்டுக் கிளி ஆனாள். அவள் தந்தை பட்மவுத்தில் ஒரு பிரசித்தி பெற்ற இசைக் குழுவில் பேண்டு மிஸ்டராக இருந்ததால்
", εί, Δ 61
படிப்பகம்
________________
padippakam
சுபாவத்திலும் சரி பேச்சிலும் சரி ஒரு இசை ரத்தம் ஒடிக் கிடந்தது. தாய் சிறுவயதிலேயே மரித்துவிட்டதால் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் போய்விட்டது. இந்த அடங்கி நடக்காத போக்குத்தான் பின்னால் அவள் வாழ்வையே குறையாடி விட்டது. தகப்பன் கஷ்டப்பட்டு பட்மவுத் பள்ளியில் சேர்த்து விட்டான். சரித்திர புருஷர்களான வில்லியம் தி கான்குவிரர், ஸ்டாபோர்டு புரூக், நெப்போலியன் போனபர்ட் இவர்களை அடவுளாக கும்பிட்டாள் கதாநாயர்களாகவும் வரித்துக் கொண்டாள். இவள் தாயும் ராங்கிக்காரிதான். புருஷனுக்கு கோடு கிழித்திருந்தாள். இதனாலோ என்னவோ அந்த முண்டை இறந்ததும் துக்கம் தாங்காமல் இவனும் குடியால் கெட்டொழித்தான். தாயின் திமிர் புஸ்டேஷியாவுக்கும் ஒட்டிக் கொண்டது.
uţool soutrama-raw material of the divinity, ousin மலையில் குடிகொண்டிருக்கும் மாடல் தேவதை வில்லியம் மாரிஸ் கவிதையில் வரும் கினிவர் அரசி போன்றவள். குளித்து கூந்தலை உலர்த்தி நின்றாள், கவர்ச்சியில் ஸ்பிங்ஸ் சிற்பம் தோற்றுவிடும். வெண்ணிறத்தில் இவள் பச்சை நரம்புகள் பிதுங்கிக் கொண்டிருப்பவை வயோலாவின் குரல் பாரசீகத்து ரோஜா முகம். ஏனோதானோ என்று விட்டால் இதழ்களை வண்டுகள் மொய்த்துக் கொள்ளும். எப்போதும் கனவில் மிதக்கும் Pagan eyes விஷேசமான அடையாளங்கள். ஷேக்ஸ்பியர் லுக்லிரிஷியாவின் வெல்ல முடியாத இரண்டு உலகங் களைப் போன்ற குத்தான மார்பகங்கள் இவளுக்கு இல்லை. இருந்தாலும் கால்கள் இரண்டும் கடைந்தெடுத்த இவன்தந்தம் களின் வழவழப்பை கொண்டிருந்தன. பட்மவுத் இளமைக் காலத்தை நின்னத்து நினைத்து ஏக்கப்பெருமூச்சு விடும்போது தலையனை நனைந்து ஆடைகள் கலைந்து அம்மன்மாவது அவளுக்கே தெரியாது. குளிர் கால இரவு மேகங்கள் நிழலுக்கு இடமில்லாமல் தவிப்பது போல் அவள் அடர்ந்த கருங்கூந்தல் நெற்றியில் தொங்கிக் கொண்டிருந்தன. மொத்தத்தில் இவள் ஒரு மோகினி.
இரவு முப்பது மைல் தொலைவிலுள்ள கடற்கரை நகரமான பட்மவுத்திலிருந்து இப்படியொருத்தி எட்ஜானுக்கு ஏன் வந்தாள்? எட்ஜான் ஜெயிலில் இவள் தண்டனைக் கைதி உயரமான இரண்டு குன்டுகள் நடுவில் வீடு மேலே பணி மூடிய தொடுவானம் அங்கிருந்து உருண்டு விழுந்தால் இங்கிலிஷ் கால்வாயில்தான் பிணம் மிதக்கும். பாட்டன் கப்பல் செலுத்தும்போது உபயோசித்த டெலஸ்கோப்பை மாட்டிக் கொண்டு, செத்துப் போன பாட்டியின் பழைய மடிக் கடிகாரத்தை வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தாள். மகாவீம்புக்காரியான இவளுக்கு இமோஜன்போல் தொடையில் மச்சமிருந்திருந்தால் ரோவம் கூடியிருக்கும். இவளை சூனியக்காரியாக மகனிடம் திருமதி இயோபிரைட் எச்சரித்தாள். எஸ். டி கோவிரிட்ஜின் chritabel' கவிதையில் வரும் துஷ்ட தேவதை ஜெரால்டின் சாயலும் செயலும் தெரிந்தாலும் வாழ்வின் மீதான இவளது அர்த்தங்கள்
62. A * g.
படிப்பகம்
________________
padippakam
நியாயமானவை சூசனின் குழந்தை இவளைப் பார்த்து பயந்து பிதற்றியபோது யுஸ்டேஷியா போன்ற மெழுகுப் பொம்மை செய்து குண்டுசிகளால் குத்தி - கண்ணாமுழி சுண்ணாம்பாகப் போவ, கறுத்த முழி நிறுத்தி எரிய - என்று மிளகாய் சுத்தி கொடும்பாவியாக நெருப்பில் போட்டு எரிந்த போது சுரம் நீங்கி விடுகிறது. பின் வருவதை முன் உணர்த்தும் இச்சம்பவம் ஒரு டிராமாட்டிக் ஐரணி. சில்லாக்குலுக்கி, சிறுக்கி, கள்ளி இவள், பாமர மக்களின் பார்வையில், யுஸ்டேஷியாவின் அழகை எதிர் கொள்ளவோ, ஈடுகட்டவோ எட்ஜானியில் யாருக்குத் திராணி யிருக்கிறது. ஒரு காட்டு நிலவின் மயக்கும் தன்மைபோல் ஒரு முறை பார்த்துவிட்டாள் இழுத்துக் கொள்ளும் காந்தம் அவளது உடல் வசீகரம். வில்டீவ் யுஸ்டேஷியா முகத்தைப் போல் இது வரை கண்டதே இல்லை என்கிறான். டெஸ் அப்படியல்ல உடம்பின் அசைவில் ஒரு மிருக மதமதப்பு மின்சாரம் போல் இழையோடியிருந்ததால் குறைந்தது நான்கு தடவையாவது திரும்பிப் பார்க்க வேண்டும். யுஸ்டேஷியா ரொமாண்டிக்கான கும்மிருட்டு. டெஸ் வெட்ட வெளிச்சமான யதார்த்தம். பகீரத பிரயத்தனம் செய்தும் யுஸ்டேஷியாவை வில்டிவ் கடைசி வரை நெருங்க முடியவில்லை. ஆனால் டெஸ் அலெக்கிடம் ஆரம்பத்திலியே பலியாகி விடுகிறாள். யுஸ்டேஷியா கல்யாண மாகியும் தாயாகவில்லை. டெஸ் கழுத்தில் தாவியேறு முன்னரே பிள்ளை பெற்றவள். குடும்பச்சுமை டெஸ்சுக்கு, யுஸ்டேஷியா எதற்கும் அலட்டிக் கொள்ளாத சுதந்திரப் பறவை. இவளது அகந்தையும் பேராசையும் சொல்லிமாளாது. தன் அழகின் மந்திர சக்தியை அறிந்து வைத்திருந்த இவள் யாரையும் ஆட்டிப் படைக்கும் வலிமை பெற்றிருந்தாள். இவள் நாட்டுக்கு ராணி யாக இருக்க வேண்டியவள் தப்பி பிச்சைக்கார கிளிம்மிடம் சிக்கிக் கொண்டாள் ஒரு mistit ஆக பாரிஸ்பகட்டுக்கு ஆசைப் பட்டாலும் இவளது காதல் உண்மையானது. ஹார்டி-எம்மா தாம்பத்தியச் சிக்கல்கள் கிளிம் - புஸ்டேசியாவிலும் பொருந்திக் கிடக்கிறது
ஆரம்பத்தில் யுஸ்டேஷியா வில் அவை ஒரு பொழுதுபோக்கு பொம்மையாகத்தான் வைத்து விளையாடினாள். முத்தமிட் அனுமதி கிடையாது. கை மட்டும் குலுக்கலாம். முதன்முதலாக போன் பைர் ஒரு வசந்தத்தில் எரிந்த போது - வில்டீவ் ஓடோடி வந்து பிளாக்ப்ாரோ பள்ளத்தில் யுஸ்டேஷியாவை சந்திந்தான் பெரியஎதிர்பார்ப்புடன். அவள் விஷமத்தனம் அவன் ஆண்மையைச்சிண்டி தமாவதினை காதலிக்க நிர்ப்பந்தித்தது. இருவரும் ஆங்கில்பரி சர்ச்சில் நின்றபோது அனுமதிச்சீட்டின் வில்லங்கம் காரணமாக திருட்டுத்திருமணம் தடை பட்டது. மூதேவி தமாவினை அங்கேயே கைகழுவிவிட்டு விடுவந்ததும் வீழ்ந்தாள் தன் ஒரே எதிரி என்று வில்டீவை மீண்டும் தன்பக்கம் இழுத்துக் கொள்கிறாள். டிக்கரிவேன் தமாஷினை மனமார நேசித்தும் அந்தஸ்து காரணமாய் அத்தைக்காரி பெண்தர மறுத்துவிடுகிறாள்.
இந்நிலையில் கிளிம் வருகை, பாரிஸ் என்ற வார்த்தை காதில் கேட்டதுதான் தாமதம் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்
. பூ. A 63
படிப்பகம்
________________
padippakam
புதுச்சட்டை தைத்ததும் பழையது எறியப்பட்டதுபோல் வில்டில் முழுக்க ஒதுக்கப்பட்டத்ால் அவனை பழிவாங்க தமாவதிலுக்குத் தாலி கட்டினான். பெண்களை மசியவைப்பதில் கில்லாடியான், வில்டில் விரித்த வலையில் தமாவின் விழுந்தது பெரிய அதிசயமில்லை. வில்லாதி வில்லனான, லேடிகில்லருக்கு இந்த நாட்டுக்கட்டை எம்மாத்திரம்?
கிளிம் இயோபிரைட் சொந்த ஊருக்குத் திரும்பியதன் உள்ளார்த்தம் பாரிஸ் படோடபத்தின் மீதான வெறுப்பு மட்டும் மூலகாரணமல்ல, சொந்தத்தில் ஒரு பள்ளிக் கூடம் நடத்தி அறிவைப்பரப்பும் லட்சியமும்தான். எட்ஜான் பூமி பூரண எழுத்தறிவு பெரவேண்டும் என்பதும் அவனது வேட்கை இவனது எதிர்காலத் திட்டம் தாய் கட்டியிருந்த மனக் கோட்டையை தகர்த்தது. பத்தாதற்கு புஸ்டேஷியாவின் கரங்களில் சிக்கியது அவளை வேதனைக்குள்ளாக்கியது. எட்ஜான்வாசிகள் கிளிம்-யு.ஸ்டேஷியாவை ஒரு கணவன் மனைவி ஜோடிப்புறாக்களாக இணைத்துப் பேசிக்கொண்டது யுஸ்டேஷியாவின் காதில் தேனாக பாய்ந்தது. அந்த ஊர்க்குருவி உடனே உயரப்பறந்து வானையே பிடிக்க நினைத்துவிட்டது. பிரெஞ்சு புரட்சியின் போது பதினான்காம் லூயி தலை வெட்டப்பட்டதை எட்ஜானில் பயத்துடன் பேசிக்கொண்ட போது கிளிம் குழந்தை. மகாபாட்டாளியான அவன் தந்தை மண்ணைக்கிளறியே இறந்துவிட்டான். ஒரு உறவினர் பட்மவுத்கடையில் அவனை சேர்த்துவிட முயன்றார். ஆனால் லண்டன்போய் பிறகு பாரிஸ் சென்று விட்டான். இளமையில் காலடிபட்ட இடங்கள் இன்றும் அவனை குளிர்ச்சியுடன் வரவேற்றன. அப்பாடா தாயின் முலைகளை உலுக்கிச்சப்பும் குழந்தைபோல் உருண்டு புரண்டான்.
கிருஸ்துமஸ் ஈவுக்கு எட்ஜான் இளசுகள் மம்மிங் நடனம் ஏற்பாடு செய்திருந்தனர். இதன் ஒத்திகை கேப்டன் வீட்டிலும் அரங்கேற்றம் இயே பிரைட் விட்டிலும் நடந்தது. சார்லி என்ற யுஸ்டேஷியாவின் பண்ணைப்பையன் டர்க்கிஸ் நைட் வேஷம் போட உடைகளை வைத்திருந்தான் யுஸ்டேஷியாவை அவன் கற்பனையில் நினைத்து மகிழ்வதுண்டு. அந்த உடைகளை யுஸ்டேஷியா தரித்துக்கொண்டு ஆண் வேஷத்தில் கிளிம்மை அவன் கண்டு கொள்ளாதபடி சந்தித்து திரும்பினாள். இதற்காக சார்லி யுஸ்டேஷியாவின் கையை கால்மணி நேரம் பிடித்துக் கொள்ளும் உரிமை ஒப்பந்தம் பேசியபடி நிறைவேறியது. கிளிம் யுஸ்டேஷியாவை கேள்விப்பட்டு பள்ளத்தாக்குகளில் திடீரென்று தோன்ற மாட்டாளா? என்று உறக்கமின்றி திரிந்தான். செவ்வானத்திலும் அந்தத் தேவதையின் வெண்சுடர் முகம் தென்படவில்லை. இப்படியிருக்க ஒரு நாள் கேப்டனின் சேட்வாட்டர் தோட்டத்தில் வாளி எதிர்பாறாமல் அறுந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. எப்படி தண்ணீர் எடுப்பது? பன்னிரண்டு திடகாத்திரமான ஆட்கள் முயன்றும் முடியாமல் போகவே, வந்த கிளிம் துணிந்து இறங்கினான் அப்போது: "அவர் இடுப்பில் கயிறு கட்டுங்கள் இல்லாவிட்டால் ஆபத்து',
64 ம் . பூ
படிப்பகம்
________________
padippakam
என்று யுஸ்டேஷியாவின் கரிசனக் குரல்கேட்ட போது முதல் சந்திப்பு. அவன் உடம்பு சிரைத்ததற்கும் நனைந்ததற்கும் பெரிதும் ஒத்தனையாக பேசினாள். வாயில்லாபுதர்கள் எல்லாம் அவர்களது உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. பாரிஸ் சொர்க்கத்தைப் பற்றியே அவனிடம் மனப்பாடமாய்ச் சொன்னாள். லூயிஸ் மன்னர்களின் வார்சேல்ஸ் அரண்மனை, கடற்கரை மாளிகையான அப்போலன் காலரி, பேண்டின்ப்ளு, செயின்ட்கிளவுட், தி பாய்ஸ் - கலையரங்கங்கள் இவற்றைச் சொன்னதும் அவனுக்கு வெறுப்புத்தான் மிஞ்சியது.
எட்ஜானில் சந்திரகிரகணம் ஏற்பட்டபோது இருவீட்டுக் கிழடுகளும் சர்ச்சுக்கு சென்றுவிட்டன வெளியில் உலவிக் கொண்டிருந்த கிளிம்மை ஒரு முகமூடி உருவம் கட்டித்தழுவி முத்தமிட்டது கிளிம் டியரஸ்ட் என்று மை யுஸ்டேஷியா அவனும் இறுக்கிக் கொண்டபோது பேச்சுவரவில்லை. மூச்சுத்தான் உஷ்ணமாக வந்தது. தன் பள்ளிக்கூடத்துக்கு பெண் உதவியாளராக அவளை பயன்படுத்திக் கொள்ள நினைத்திருந்தான். அவளோ பாரிஸ் சொகுசே குறியாக இருந்தாள். திருமணத்திற்கு தாயார் சம்மதிக்கவுமில்லை வரவுமில்லை ஒருவழியாக ஒதுக்குப்புறமான வீட்டில் தனிக் குடித்தனம் தொடங்கியது. மழைக்காலத்தில் உள்ளேயே அடைந்துகிடந்தனர். இரண்டு நட்சத்திரங்களும் ஒன்றைஒன்று விடாமல் சுற்றிக் கொண்டாலும் தூரப்பார்வைக்கு ஒன்று போல்தான் தெரிந்தது. டெஸ்சும் ஏஞ்சல்கிளாரும் இப்படித்தான் ஒருவீட்டில் முதலிரவை சந்தித்தபோது அவள் ஏற்கனவே கெடுக்கப்பட்டு ஒரு குழந்தைக்குத் தாயானவள் என்பதும் அவன் லண்டன் விபச்சார விடுதியில் ஒரு இருபத்து நான்கு மணிநேரம் கழித்தவன் என்பதும்-இருவர் வாயிலிருந்து வெளிவர அதுவே அவர்கள் பிரிவுக்கு வித்திட்டுவிடுகிறது. தாயின் நிரந்தரப்பிரிவு கிளிம்மை அரித்துத்தின்றது. ஆசிரியத் தொழிலுக்காக நிறைய புத்தகங்கள் படித்தான். பட்மவுத் பள்ளித்திட்டம் யுஸ்டேஷியாவை பொடிப் பொடியாக பொசுக்கியது. இவனுடன் வாழ்வதைவிட சாவதே மேல் போல் தோன்றியது. திடீர் என்று இடித்தஇடியில் தற்காலிகமாக கண்பார்வை இழக்கிறான். அழுக்குச்சட்டை போட்டுக்கொண்டு ஓயாமல் முள்வெட்டு கிறான். கானல் நீரைக்கண்டு ஏமாந்த கலைமான் கதையாயிற்று அவள் எதிர்காலக்கனவுகள். அவள் தூணைக்கட்டிப்பிடித்துக் கொள்ளவேண்டியதாயிற்று. எப்படியோ இவர்களின் பிளவு வில்டீவுக்கு எட்டியது. சதியாலோசனை! ஒரு கிராமத்தில் நடந்த விருந்தில் அவள் வில்டீவுடன் நடனமாடினாள். திருமணத்துக்குப்பின் நின்றுபோன உறவு மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. இரவு நேரங்களில் அவள் வீட்டை மொய்த்ததை டிக்கரிவேன் கண்காணித்ததால் சொந்தக்காரனாக பகலிலையே வரத்துணிந்துவிட்டான். கைவிடப்பட்ட அபலை மனைவியான தமாஷினுக்கு டிக்கரி எல்லா உதவிகளும் செய்தான். தன் அத்தை தந்த 50 கினியாக்களை வில்டிவிடம் பந்தயமாடி நூறாக பெருக்கி அவளுக்கு சேமிப்பாக்கினான்.
. பூ A 65
படிப்பகம்
________________
padippakam
காலம் என்னவோ ஒடிக்கொண்டு தானிருந்தது. நொந்த மனசை மாற்றிக்கொண்டு மகனைப் பார்க்க முடிவு எடுத்தாள் இயோபிரைட் கொளுத்தும் கோடைவெய்யிலைப் பொருட் படுத்தாமல் வந்து கதவை இருமுறை பலமாகத்தட்டினாள் உள்ளே பழைய காதலனுடன் சல்லாபச் சொல்லாடிக் கொண்டிருந்த யுஸ்டேஷியா மாமியாளைப் பார்த்தும் கதவைத் திறக்கவில்லை. கோழிகூப்பிடும் போதே முள்வெட்டச் சென்ற கிளிம் அலுப்பில் முன்கட்டில் தூங்குகிறான். இக்காட்சியைக் கண்ட பெற்ற மனம் சுக்குது.ாறாக சிதைந்தது. தன் மகன் உத்திரவால்தான் தன்னைக்கண்டும் யுஸ்டோஷியா தாழ்ப் பாளை திறக்கவில்லை என்ற கசப்புடன் வெளியேறினாள். ஆனால் உண்மை அதுவல்ல துக்கத்தில் கிளிம் அம்மா. என்று உலறியது நிஜமான அழைப்புத்தான் என்று அவள் வானாவிருந்து விட்டாள். அதுமட்டுமல்ல மகனைத்தானே பார்க்கவந்தாள் என்னை இல்லையே! என் மீது கோபம் கொள்ள நான் எந்த தவறும் செய்யவில்லையே என்று சமதானப் படுத்திக் கொண்டாள். அதே சமயத்தில் இங்குவந்தது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்று வில்டிவை எச்சரித்து வெளியேற்றினாள். ஆனால் தன் உரிமையான யுஸ்டேஷியாவை வில்டில் இழக்கவிரும்பவில்லை. ஆயிரம் கவிஞர்கள் இரவு பகலாக ஒன்று சேர்ந்தாலும் அவள் அழகை பற்றி ஒரு வரிகூட பாடமுடியுமால் திக்கிக்திணறி விடுவார்கள். என்பது அவன் எண்ணம். எனவே பனிக்கட்டி உருகும் சமயம் பருகிவிடத் தயாராக இருந்தான். விதிவிளையாடிய இக்கட்டம் நாவலின் திருப்புமுனையாகிவிட்டது.
அவமானத்தால் தலைகுனிந்து திரும்பிய துர்ப்பாக்கியத் தாய் தன் ஒரே மகன் வாழ்வு குழைந்து விட்டது.கண்டு மேலும் எட்டிவைக்க முடியாமல் மண்ணில் சாய்ந்தாள். புஸ்டேஷியா வில்டீவுடன் கொஞ்சிய காட்சி அவள் உடம்பை தகித்தது. பாரம்பரியமாக மானரோஷத்துடன் வாழ்ந்த குடும்பத்தில் இப்படி ஒரு ஒடுகாலியா? எடஜானில் ஊர்ந்து கொண்டிருந்த ஒரு கருநாகம் அவளைத் திண்டியது. வாயில் துரைதழும்பியது. ஜானி கான்சக் என்ற சிறுவனிடம் தன் மகனைத் துரங்கவைத்து விட்டு மாற்றானுடன் சல்லாபம் செய்த நடத்தைகெட்ட மருமகளைப் பற்றி எல்லாம் சொல்லிவிட்டாள். சாம் என்ற விறகு வெட்டியும் காப்பாற்ற ஓடிவந்தான். அவன் தந்தை இப்படி பாம்புகடித்து இறந்த போது விஷம் தீண்டிய இடத்தில் வேறு நாகங்களைக் கொன்று எரித்து அதன் கொழுப்பைத் தடவினார்கள் அதே நாட்டுவைத்தியம் செய்தும் பிழைக்க முடியவில்லை (ஆர் ஷண்முகசுந்தரத்தின் பனித்துளி'யில் முத்தாயாள் மருந்தை குடித்துபோது நாவிட்டையை கரைத்து வாயில் ஊற்ற வாந்தி எடுத்து அவள் பிழைத்துக்கொள்கிறாள்.)
தாயின் தகனத்துக்குப்பின் கிளிம் உடம்பும் மனசும் குன்றிக் கிடந்தான். தாடிமுளைத்து இளைத்திருந்தான். யுஸ்டேஷியா பாட்டன்விட்டுக்கு சீராட்டு வந்துவிட்டாள். வெறிச்சோடி எதையோ பார்த்தவள் துஷ்டமிருகங்களிடமிருந்து பாதுகாக்க தயாராக குண்டுபோட்டு வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச்
66 ம் பூ.
படிப்பகம்
________________
padippakam
சுட்டுக்கொள்ள ஒட சார்லி தடுத்துவிடுகிறான். தன் எஜமானியிடம் விசுவாசமானவன் இவன் தமாஷினுக்கும். வில்டீவுக்கும் பிறந்த குழந்தைக்கு யுஸ்டேஷியா கிளிமெண்டென்என்ற பெயர் சூட்டியதாக ஒருவன் சொன்னபோது கிளிம் விதியை மிகவும் நொந்து கொண்டான். ராசியில்லாத ஜோடி களின் பெயரையா ஒன்றுமறியாத குழந்தைக்கு நிலையாக வைப்பது? மகன் பிறந்த வேளை வில்டீவுக்கு யோகமடித்தது. கனடாவில் அவன் தாய்மாமன் இறந்துவிட்டதால் அவன் பாங்கு கணக்கில் 12000 பவுன்கள் ஏறியது. தெய்வம் அவனுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியது. புனையாத ஒவியமாக யுஸ்டேஷியா மயிரை விரித்துப் போட்டுக் கொண்டு துக்கித்துக் கிடந்தாள். கைத்தாங்கலாக படுக்க வைத்து அவள் சந்தோஷத்திற்காக சார்லி விறகுகளைப் போட்டு தீ மூட்டு கிறான் ஒருவிதத்தில் அவள் அவனுக்கு அக்காதானே. விளையாட்டுக்காக அவன் செய்தது தனக்காக காதல் அழைப்பு என்று ஓடி வருகிறான் வில்டீவ், பாரிஸ் திட்டம் உருவெடுக்கிறது. புதிய பயணத்தில் இத்தாலி, கிரீஸ், எகிப்து, பாலஸ்தீனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா என்று பட்டியல் நீளுகிறது. பணத்தைப் பற்றி இப்போதுதான் முதன்முதலாக யுஸ்டேஷியா நினைக்கிறாள். ஒரு தாழ்வுமனப்பான்மை தலையைச் சுற்று கிறது தன்னை பட்மவுத்துறைமுகத்தில் இறக்கிவிட மட்டும் நாள் குறிக்கப்படுகிறது. அங்கு அவள் கூலி வேலை செய்தாவது, பழைய சினேகிதி வீட்டில் பாத்திரம் தேய்த்தாவது தனியாக வாழ முடிவெடுத்தாள். வில்டீவ் எவ்வளவு ஆசை காட்டியும் அவள் மசியவில்லை. மனைவியின் மீது சீறிவிழுந்த கிளிம் தன் தவற்றை உணர்ந்து அவளை வீட்டுக்கு அழைக்க முடிவு செய்து ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினான். அதை அறை பெட்ரமாஸ் விளக்கின்மேல் அவள் ப்ாட்டன் சொருகிவிட கவனிக்காமலே போய்விட்டாள். டெஸ் தான்.அடிபட்டவள் என்ற உண்மையை விளக்கி திருமணத்துக்கு முதல் நாள் எழுதிய கடிதம் ஏஞ்சல் கிளேர் பார்க்காமல் அது தலையனைக்குள் இப்படித்தான் சிக்கி விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இயற்கையின் தாமதங்கள் சரித்திரத்தையே மாற்றி எழுதி விடும் வலிமை வாய்ந்தவை என்பது ஹார்டியின் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று.
நவம்பர் 6-ல் நிகழ்ந்த துக்கச்சம்பவங்கள் பயங்கரமானவை. உணவை முடித்துக்கொண்ட யுஸ்டேஷியா சரியாக இரவு எட்டு மணிக்கு பச்சைச்கொடி காட்டிவிட்டு குன்றின் மீதிலிருந்து இறங்கி வருகிறாள். நிலத்தில் நடப்பதாக அவளுக்கு நினைவே இல்லை சேட்வாட்டர் குளத்தின் சேறு நிரம்பிய கரையில் குதிரையில் பறந்தடித்து வருகிறான் வில்டீவ் பை முழுவதிலும் வங்கிக்கட்டு நோட்டுகள். மழையும் புயலும் மாறிமாறி அடித்துக்கொண்டதில் எட்ஜான் இருளில் மூடிக்கிடந்தது. யுஸ்டேஷியாவின் உடலை மழைநீர் கழுவித்தள்ளியது. போதிய பணமில்லாத அவள் சுய கவுரவும் திட்டத்தை தவிடுபொடியாக்கியது. என்ன நினைத் தாளோ? பாவிமகள் எட்டிக்குதித்துவிட்டாள். நெருங்கிவிட்ட வில்டீவ் அவளை காப்பாற்ற குதித்தான். விஷயம் தெரிந்து ஓடி வந்த கிளிம்மும் குதித்தான். யுஸ்டேஷியாவையும் வில்டீவையும்
. பூ. A 67
படிப்பகம்
________________
padippakam
வெள்ளுத்தின் நீர்ச்சூழல் பதம் பார்த்துவிட்டது. டிக்கரிவேனின் முயற்சியால் கிளிம் காப்பாற்றப்பட்டான். காலையில் கரையில் பிணமாக கிடந்த யுஸ்டேஷியாவின் முகம்முழுதும், மறைத்து அவளது அடர்ந்த கூந்தல் காடாகக் கிடந்தது. இந்த உடன் போக்கை ஏற்கனவே அரசல்பொரசலாக தெரிந்திருந்த தமாவின் கைக்குழந்தையுடன் பரிதாபமாய் நின்றாள் செய்திகேட்டு ஒடிவந்த அண்டை அயலார்களான கிரிஷ்டியன் கேன்டில் _ கிரான்ட்பர் கேன்டில் என்ற ப்ளும்ஸ் என்ட் சகோதரர்கள், ஒல்லி டவ்டன், பேர்வேதிமொதி. ராசெல். சாம்ஜான், சார்லி, சூசன் நான்சக், இவர்கள் செய்வறியாது திகைத்து நின்றனர்.

பதினெட்டு மாதங்களுக்குப் பின் டிக்கரிவேன் கிளிம் அனுமதி யுடன் தமாவினைக் கல்யாணம் செய்து கொண்டான் ஒரு காலத்தில் அவளைச் சந்திப்பதற்காக ரோமன் ரோட்டுக்கு தினமும் ஐந்துமைல் நடந்தவன் இப்போது சொந்தமாக பால் பண்ணை நடத்துகிறான். இரண்டு பெண்களின் சாவுக்குக் காரணமாக கிளிம் கழுவாய் தேட ஊர்ஊராக தீவிரமதப் பிரச்சாரம் செய்ய கிளம்பிவிட்டான். ஆனால் இரண்டு கல்லறை களுக்கு அவன்அடிக்கடி சென்று கொண்டிருந்தான். ஒன்று தாயினுடையது. மற்றொன்று மனைவியினுடையது. எட்ஜான் மண்ணில் இவர்களது கதைகள் நெடுங்காலம் பேசப்பட்டன.

கிளிம் பாரிஸிலிருந்து திரும்பாதிருந்தால், யுஸ்டேஷியா பட்மவுத்திலேயே எவனையோ ஒருத்தனைக் கைப்பிடித்திருந்தால் வில்டிவ் லண்டனிலேயே நிலைத்திருந்தால் - இந்தத்துக்க காவியம் நடந்திருக்குமா? எதிராக யுஸ்டேஷியா பாரிசுக்கு வில்டீவுடன் உடன்போகி கால்போட்டிருந்தாலோ கிளிம் இயோபிரைட்டுடன் சமாதானமாகி கையில் ஒன்றும் இக்கத்தில் ஒன்றும் ஏந்தி பெருவாழ்வு வாழ்ந்திருந்தாலோ ஒரு ஜோலா வையோ ஸ்காட்டையோதான் நாம் பார்த்திருக்க முடியும். பண்படுத்தப்படாத மண்ணில் கன்னிகழியாத ஒரு பெண்ணின் ஏக்கத்தை எதிரொலித்த தணித்துவக் கலைஞனான தாமஸ் ஹார்டியை தரிசித்திருக்க முடியாது! ஒருத்தனுக்கு மனைவி யாகவும் அடுத்தவனுக்கு ஆசைநாயகியாகவும் ஒரே சமயத்தில் இழைத்த இரட்டைத் துரோகத்திற்காக அன்னா ஒடும் ரயிலில் தலை கொடுத்து முடிவுதேடிக் கொண்டாள். ஆனால் ஒருபாவமும் அறியாத உத்தமி யுஸ்டேஷியாவின் தற்கொலை தேவைதானா ... . - மாரப்பன் )
*******************************************************************
இன்று கிடையாது என்றெழுதியிருக்கிறது
முதுகில் இல்லை முகப்பில்
என்றும் கிடைக்காதானாலும்
மொழி பெயர்க்கப்பட்ட பெர்டோல்ட்
ப்ரக்டை விற்றால் வாங்கலாம்
குளியல்சோப், புகையிலைப் பொட்டலம்
இன்ன பிற, O
. செ. துளசி.
68 A . பூ
படிப்பகம்




-