தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, June 16, 2016

ஜே.ஜே. சில குறிப்புகள் தத்துவ நோக்கில் ஒரு மதிப்பீடு - ஞானி : மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

19. ஜே.ஜே. சில குறிப்புகள் தத்துவ நோக்கில் ஒரு மதிப்பீடு - ஞானி

ஜே. ஜே. உயர் அளவில் ஒரு கலைஞன், கலைக்கான ஒரு கோட்பாட்டில்-கோட்பாடு பற்றிய சிந்தனையில் அவன் உச்சம் பெறுகிறான்.

இந்த உச்சம் பெறுதலில்-பெறுதலின் மூலம் அவன் சமூகத்தி லிருந்து அந்நியனாகிறான்.

இதற்கான தேவை இருந்து, இப்படி ஆகி, இதற்கான மரியாதை யோடு அவன் சாகிறான்.

அதாவது, ஜே.ஜே. உயர் அளவில் ஒரு கலைஞன் மட்டும் அல்ல. கலைத்துறைச் சித்தாந்தி.

இதைப்பற்றிச் சில விளக்கங்கள் தேவைப்படலாம்.

ஜே.ஜே. கலைஞனாகத் தன் வாழ்க்கையைத் தேர்கிறான். பெற்றோர் விருப்பத்திற்கு இவன் ஒத்தோட முடியவில்லை; முடியாது.

ஒரு கலையில் தொடங்கி - அதன் இயக்கத்தில் பல கலைகளில் அவன் பயணம் தொடர்கிறது.

சமூகம் என்பது சில நண்பர்கள் மூலமே இவனுக்கு அறிமுகமாகிறது அல்லது நெருக்கமுடையதாகிறது. அந்தச் சிலரே இவனுக்கு வேண்டியவர்கள் அல்லது விருப்பத்திற்கு உகந்தவர்கள் அல்லது, சமூகத்தின் நேசத்தை இந்தச் சிலர் மூலமே இவன் அனுபவித்துக் கொள்கிறான். இதில் நிறைவு காண்கிறான். ஒரு கலைஞனுக்கு இந்த நேசம் தேவை. சில நண்பர்களோடு-அவர்களின் நேசத்தோடு-அதில் நிறைவோடு, சமூகத்திலிருந்து ஒதுங்குவது, ஒரு கலைஞன் ஆவதற்கான தேவை.

இவன் சமூகத்தை நம்பி இங்கு இருக்கவில்லை. சமூகத்தைச் சார்ந்து இருப்பதாகக் கருதுவதில்லை. தனக்குள் தட்டுப்பட்ட ஒரு பொறியை ஊதிப்பெருக்க இந்த ஒதுங்கலை அவன் தேர்கிறான். சமூகத்தோடு மோதல் இவன் செயல் முறை அல்ல. இத்தகைய நடைமுறையில் தன்னை இவன் உருவாக்கவில்லை.

________________

2

04 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

இப்படி ஒதுங்கியவர்கள், இதனாலேயே கலைஞராகிவிட முடியாது. கலைஞனாவதற்கு இது ஒரு சந்தர்ப்பம். தனக்குள் கண்பொறியை ஊதிப்பெருக்கி-அப்படி ஊதுவதற்கான ஒரு சமூகத் தேவை இருந்து-அந்தத் தேவையை அவன் உணராத நிலையிலும் அதை ஊதிப் பெருக்கி-அந்தக் கனலில் அவன் வெந்து அப்படி வேவதன்மூலமும் கனலைப் பெருக்கி இந்நிலையில் சமூகத்தை அவன் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது) இந்த நடைமுறையிலேயே இவன் கலைஞனாகிறான். அதாவது, இம்முறையில் கலைஞனை விளக்குவது சார்த்தர் முறையல்ல; பிராய்டின் முறையல்ல. இம்முறையை அப்படிக் குறுக்கிவிட (ԼՔԼգւաՈՅ:/:

இப்படி உருவாகும் கலைஞனுக்கு நேசம் மிக்க நண்பர்கள் தேவை. அன்பு தேவை. அதே சமயம் ஆசான்களும் தேவைப்படலாம்.

முல்லைக்கல்லும் பேராசிரியர் முதலியவர்களும் ஜே.ஜே.வுக்கு இப்படி வாய்த்தவர்கள்.

ஜே.ஜே.வுக்கான சமூகச் சூழலில் அவனுக்கு மனைவியாக வாய்த்தவள் உடைமை வர்க்கத்தின் பிரதிநிதி உடைமை வர்க்கத்தின் மோதலை ஜே.ஜே. தன்மனைவி மூலம் சந்திக்கிறான் மனைவி தரும் சுகமும் அவள் வழி வெளிப்படும் மோதலும் ஜே.ஜே.வைப் பாதிக்கின்றன.

இவனது முரண்பட்ட பெற்றோரும் இவனை ஆக்குவதற்கான சூழல்.

மேலும் சிலர். இவர்கள் வழியேதான் இவன் சமூகத்தோடு கொள்ளும் உறவு நேர்கிறது.

சமூகத்தோடு இவன் கொள்ளும் உறவு சிக்கலானது. சமூகம் இவனோடு கடுமையாக மோதுகிறது. இந்த மோதலில் ஜே.ஜே. உருவாகிறான் அல்லது சிதைகிறான்.

இது அழிவா? இல்லை, ஒருவகையில் இது ஆக்கம். இந்த ஆக்கம்தான் ஜே.ஜே. என்ற கலைஞன். -

இவன் மனைவிக்காகச் சம்பாதிக்க முடியாது. இந்தச் சமூகம், ஒரு மனைவியின் வழியே எதிர்பார்க்கும் இந்தத் தேவையை இவன் நிறைவேற்று முடியாது. ஆகவே, இந்தச் சமூகத்தின் பார்வையில் இவன் 'ஒட்டுண்ணி. -

இவனால் சம்பாதிக்க முடியாது. சமூகம் இவன் மீது திணிக்கும் அளவுகோலை இவன் ஏற்க முடியாது. இதற்கான நரம்பியக்கத்தை இளமையிலேயே இவன் இழந்து விட்டவன்.

பிறர் அடிபடுவதை இவன் பார்த்துக் கொண்டுதான் இருப்பான். இவனால் இயங்க முடியாது. புறத்தில் நிகழும் அடிபடல்

ஞானி 205 இவனுக்குள்ளும் நிகழும்.

இயங்குவதாயினும் வெகு நேரம் கழித்தே இவனால் இயங்க முடியும். அப்போது, அடிபடலை எதிர்ப்பதற்கான சந்தர்ப்பம் கை நழுவிப் போயிருக்கும்.

இந்த ஒட்டுண்ணி, தன்னைப் பற்றிய சிந்தனையின் போது, சமூகத்தில் பரவலாக நடைபெறும் சுரண்டலை உணர்ந்து கொள்ள முடியும் உணர முடியும் தடுக்க முடியாது. இதற்காகவும் சேர்த்து, இவன் தனக்குள் சிலுவை ஏறுவான். ஜே.ஜே. இந்தச் சமூகச் சூழலில் ஒரு அந்நியன். அந்நியப்பட்டிருப்பதைத் தம்க்குள் உணரும் மனிதர்கள் இந்த ஜே.ஜே.வைப் புரிந்து கொள்ள முடியும். இப்படி ஜே.ஜே.வைப் புரிந்து கொள்பவர்கள் புரிந்து பாராட்டுபவர்கள் பாக்கியவான்கள். ஆம்-பாக்கியவான்கள் மட்டுமே. இந்த ஜே.ஜே. வின் கலை, சமூகத்திற்குத் தேவை. ஜே.ஜே.வும் தேவை. இவன் மூலம்-இவனது கலையின் மூலம் இவனை உருவாக்கிய சமூகத்தை சமுதாயச் சக்திகளை - இவனைச் சிதைத்த சமுதாயச் சக்திகளை அறிந்து கொள்ள ஜே.ஜே. தேவை; ஜே.ஜே.வின் கலை தேவை. தாஜ்மகால் தற்காலத்தில் சிதைந்து வருவதை அறிவதன் மூலம் சமூகத்தில் மேன்மையான உறவுகளை கலைகளைப் பற்றிக் கவலைப்படாத அசுரத்தனமாக தொழிற்சக்திகளின் ஆதிக்கத்தை நாம் அறிய வருவதுபோலமகாபலிபுரம் முழுமையாக உருவாவதைத் தடுத்த சக்திகளை வரலாற்றளவில் அறிவது போல (கல்கி பாணில் இதனை அறிய முடியாது. சரியான வரலாற்றாய்வில் என்றாவது இது பற்றிய அறிவு நமக்கு நேரலாம்)

ஜே.ஜே. பற்றிய அறிவை நாம் பெற முடியும் பெற வேண்டும். அதாவது-அவனுக்குள் எழுந்த உன்னதத்தை-அவன் விரும்பிய மனித மேன்மையை சமூகம் போற்றாத போற்ற முடியாத உன்னத உறவைத் தனக்குள் தாங்கியிருந்ததை நாம் அறிய முடியும். அதாவது சமூகம் அந்நியப்பட்டகாலம் முழுவதும் ஜே.ஜே. தோன்றுவான். செத்துப்போவான். பழங்கால நிலைமையில் மட்டும் அல்லதற்காலத்திலும்-ஏன், ஒரு வேளை சோசலிசம் வந்த நிலையிலும் கூட-அரசு இருக்கும் வரை

________________

206 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

ஆதிக்கம் இருக்கும் வரை அதனால் அந்நியமாதல் அழியாத வரை ஜே.ஜே. தோன்றுவதையும், அப்படித் தோன்றுவதன் மூலம் அந்தச் சமூகம் பற்றிய உண்மையையும் நாம் அறியமுடியும்.

இதற்காக, ஜே.ஜே. தேவை.

எந்தச்சமூகமும் (புராதனப் பொதுமைச்சமுதாயம் என்று கூறப்படும் காலத்தின் இறுதியிலிருந்து, ஒரு வேளை கம்யூனிதசமுதாயம் சரியாக உருவாவது வரை). நாம் சாதாரணப் பொருளில் சொல்லக் கூடிய பொய்கள். போட்டி, பொறாமை, களவு முதலிய குற்றங்களோடு தான் வாழும்; இயங்கும். அறவியல் கோட்பாட்டின் முற்றான பார்வையிலிருந்து சமுதாயத்தைப் பார்ப்பவர்கள் : இப்படித்தான் விளக்கம் தந்திருக்கிறார்கள். சுரண்டல் என்பது கூட இவர்கள் பார்வையில் ஒருகொடுமை - பெருங்குற்றம். அவ்வளவுதான்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு உரியவன் ஜே.ஜே.வும் தான். ஜே ஜே. இதை ஏற்கவும் செய்கிறான். இந்தக்குற்ற உணர்வின் எதிர் முகமாக உழைப்பாளிகளை நேசிக்கிறான். அவர்களுககாக இரக்கப்படுகிறான். அதாவது இந்தக் குற்றத்தோடுதான் இவன் கலைஞனாகவும் இருக்கிறான். இந்தச் சமூகத்தின் பொய்களை, போலித்தனங்களை இவனும் தனக்குள்ளே தாங்கியுள்ள அறவியல் பார்வை மூலமே பருதது வருந்துகிறான். முல்லைக்கல்லைப் பொய்யன் என @ಎ கோபிப்பது அல்லது வருந்துவது இதனால்தான். முல்லைக் கல்லின் படைப்புகளுக்காக சமூகத் தேவையை இவன் அங்கீகரிப்பதும் கூட இப்படித்தான்.

இந்த அங்கீகாரம் முற்போக்குவாதிகளுக்குப் பிடிக்கும். இப்படிப் பிடிப்பதும் கூட அவர்களிடமும் படிந்துள்ள அறவியற் பார்வையின் வழியேதான். * °

மனித உறவுகளில் உன்னதமான உறவுகள் பற்றிய அக்கறை யோடும், சமூக நிகழ்வுகள் பற்றிய அறவியல் பார்வையோடும் கலைஞன என்ற எல்லைக்குள் தன்னை முற்றாக ஈடுபடுத்திக் கொண்டவன் ஜே.ஜே.

இதனால்தான், முன்பு குறிப்பிட்டேன். ஜே.ஜே. உயர் அளவில் ஒரு கலைஞன் கலைஞன் மட்டும் அல்ல, கலை பற்றிய சித்தாந்தியும் கூட எனறு.

ஜே.ஜே. அரசியல்வாதி அல்ல. அரசியலை அறவே விரும்பாதவன். முற்போக்கு அரசியல் என்று சொல்லப்படுவதாகிய சித்தாந்த நிலைபாட்டிலிருந்து. ஜே.ஜே. எப்படியெல்லாம் விமர்சனம்

-

 20/
செய்யப்படுவான் என்று பார்த்துக் கொள்ளலாம். (இவர்களின் சித்தாந்தம் கடுமையான வரையறைகளோடு செயல் படுவது என்பதைப்பிறகு பார்ப்போம்)

ஜே.ஜே. ஒரு கோழை.

சமூகம் பற்றி-சமூகத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டம் பற்றி அறியாதவன்; வர்க்கப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கலைக்குள் பதுங்கியவன்.

ஒரு வியாபாரியின் ஆதரவில் தங்கி, இயற்கையை, யானைகளை ரசிப்பவன். is

இவனால் முல்லைக் கல்லின் பெருமையை தேவையை அறிய முடியாது. I’

இவனும் பொய்யன், தற்பெருமைக்காரன்

இவன் குடிக்கிறான், சமூகப் பொறுப்பு அற்றவன் இவன், ஆகவே ஒரு தற்கொலையைத் தேர்கிறான்.

சிந்தாந்தம் சில வரையறைகளுக்குள் முடங்கியது. இதற்கு அப்பால் போய்விடுவது நமக்கு நல்லது. சித்தாந்த வரையறை களிலிருந்து விலகி நிற்பது தத்துவப்பார்வை.

முற்போக்குவாதிகள் என்று தம்மைக் கருதிக் கொள்பவர்கள் தாம் விரும்பி அணிந்திருக்கும் தங்கச் சங்கிலி, அவர்களின் சிந்தாந்தப்

for of.

சமூக நெருக்கடிகள் சிக்கலாகி அந்தச் சிக்கல் எல்லோரையும் கடுமையாகப் பாதித்திருப்பதுபோலே தம்மையும் பாதித்து இதனால் இவர்கள் தமக்குள்ளும் சிதைந்து அந்நியப்பட்டு, போட்டி, பொறாமை, புகழாசை பொருளாசை, அதிகாரப் பற்று முதலியவற்றில் சிக்கி-இப்படிச் சீர் கெட்டிருப்பதாலேயே இந்தச் சமூகத்தைப் பாதித்திருக்கும் கடுமையான உறவுச் சீர்கேடுகளைச் ாவாப் பார்க்கத் தெரியாமல், இதனாலேயே இச்சீர்கேடுகள் மேலும் கடுமையாகி இருப்பதைக் காணப்பிடிக்காமல், இத்தகைய பார்வை இல்லாததனால் சமூகத்தை அதன் அடித்தளத்தோடு சேர்த்து மாற்றும் அடிப்படையான மாற்றங்களில் அக்கறை இல்லாமல் இருக்கும் இப்படிப்பட்ட "முற்போக்குவாதிகளின் வித்தாந்தப்பார்வையில்தான். ஜே.ஜே. கோழை, கலைக்குள் புகைந்தவன் சுரண்டல்வாதி, சமூகம் பற்றிய அக்கறை அற்றவன். ைைகய முற்போக்குவாதிகளுக்கு முல்லைக்கல் பிடிக்கும். அலுைம் கூட ஒரு வித்தியாசம் முல்லைக்கல் ஜே.ஜே. வை. நோக்கிறான். ஜே.ஜே. முன்னிலையில் முல்லைக்கல் தன்னை விமர்சனம் செய்து கொள்கிறான். அது இவர்களுக்குப் பிடிக்காது.

முற்போக்குவாதிகள் எனப்படுபவர்களின் அரசியல் சித்தாந்தப் ாவையிலிருந்து விலகி, மார்க்சியக் கண்ணோட்டம் எனப்படும்



________________

208 மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

வரலாறு-வர்க்கம் சார்ந்த தத்துவப் பார்வையிலிருந்து பார்க்கும்போது.

இந்தப் பயணம் புதியது, சிக்கலானது, நெருக்கடிமிக்கது.

தவறுகளுக்கும் இடம் தந்து விடக்கூடியது. ஆயினும் இப் பயணம் தேவையானது. இது சரியானதா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் முடிவு செய்ய முடியும்.

இப்பார்வையின் சில அம்சங்களில் கவனம் கொள்வோம்.

வர்க்கப் போராட்டம் இல்லாமல் வரலாற்று வளர்ச்சி இல்லை; சமூக வளர்ச்சி இல்லை.

சமூக வளர்ச்சி என்பது நேர்கோட்டுப்பாதையில் நிகழ்வதில்லை. நிறையத் திரிபுகளோடும் தேக்கத்தோடும் தான் நடைபெறும்.

இறந்தகாலம் அறுபட்டும், சில அம்சங்களில் தொடர்ந்தும் நிகழ் காலமாகி பின் அதே வகையில் எதிர்காலமாகிறது.

இறந்த காலம், நிகழ் காலம் ஆகியவற்றின் குற்றம் குறை' களிலிருந்து-இவைதான் பகை முரண்பாடுகள்-இவற்றைக் கடந்து எதிர்காலம் உருவாகும்.

இப்படி ஒரு எதிர்காலம் தானே உருவாகிவிடாது.

வரலாற்றுச் சக்திகளோடு, தமக்குத் தேவையான நிகழ்காலத்தை மாற்றுவது என்பதை மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள்.

வர்க்க முரண்பாடுகள் உள்ள சமுதாயத்தில் மனிதர்களும் முரண்களோடுதான் செயல்படுகிறார்கள்.

முரண்பாடுகள் சமூகத்தில் பெரிய அளவில் வர்க்கப் போராட்டங்களாக நடைபெறுவதோடு, இந்தப் போராட்டம் கட்சி,

குடும்பம், தனிநபர் ஆகிய அனைத்தினுள்ளும் நுண்ணிய முறையில் நடைபெறும்.

வரலாற்றியக்கம், ஒரு முரண் இயக்கம், எதிர் எதிர் மோதும் சக்திகளோடு இந்த இயக்கம் நடைபெறுகிறது.

சுரண்டலற்ற, மேன்மையான சமூகம் தேவையில்லை என்றால், போராட்டங்களும் தேவையில்லை.

வர்க்கப் போராட்டத்தினூடே வளர்ச்சி பெறும் சமுதாய இயக்கத்தின் போக்கில்தான், மனித சுதந்திரம் காலத்திற்குக் காலம் விரிவடைகிறது. இந்தப் போராட்டத்தின் வழியேதான் கடவுள்களும் மதமும் கலைகளும் இலக்கியங்களும் தோன்றுகின்றன; மாறுகின்றன: மறைகின்றன. புதியவை பிறக்கின்றன. வரலாற்றின் வளர்ச்சிக்காக மனிதர் உழைத்தாக வேண்டும். துன்புற்றாக வேண்டும். கொடுமைகளுக்கு உட்பட்டாக வேண்டும்.

ஞானி 209

சமூகத் தேக்கத்தை ஆதிக்கச் சக்திகளே விரும்ப முடியும். மேன் மையான வாழ்க்கையை விரும்புபவர் அனைவரும் சமூக மாறறததை ஏறறாக வேண்டும், அதற்காக உழைத்தாக வேண்டும். இவர்களில் யாா ஒதுங்கியிருந்தாலும் அந்த அளவுக்குச்சமூக மாற்றம் தாமதப்படும். நல்லவர்கள், கலை ஞர்கள், சிந்தனையாளர்கள், உழைப்பாளிகள் எல்லோரும் இதில் சங்கமிக்க வேண்டும்.

அப்போதுதான் சமூக மாற்றம் அனைத்துத் துறைகளிலும்

கூடியவரை சரியாக நடைபெறும் இல்லா விட்டால், சமூக மாற்றம் ഗുജങ്ങജു திரிபுகளோடும் கோணல்களோடும் தான் நடை பெறும். பின்னர் கோணல்கள் தொடர்கின்றனவே என்று குறைகூறிப் பயன் இல்லை. அந்நிலையில்தான் விரும்பத் தகாத விசாரணைகள், கொலைகள் நடைபெறுகின்றன.

வரலாறு ஒரு முரண் இயக்கம் என்ற தத்துவப் பார்வையில் பார்க்கும்போது, சில உண்மைகள் நமக்குத் தெளிவுபடுகின்றன. Gజ్రత్తి. ஒரு சமுக முரண்பாட்டுக்குள்ளும், சமூக முரண் பாட்டோடும்தான் வாழ்கிறான். முரண்பாடு அவற்றுக்குள்ளும் தான் இருக்கிறது. தான் விரும்பி, அதை இல்லாமல் செய்துவிட இயலாது.

முல்லைக்கல்லும் இப்படித்தான்.

சமூக முரண்பாட்டை ஏற்கும் ஜே.ஜே. இதை வர்க்கப் போராட்டம் என்பதான அறிவு நிலையில் வைத்துக் கணிக்க வில்லை.

இப்படிக் கணித்திருந்தால், தனக்குள்ளும் நடைபெறும் முரண் பாட்டை-முரண்பாட்டிற்குள் தான் சிக்குண்டு இருப்பதைஎல்லோரும் தமக்குள் உணரும்பதற்றம் முதலியவற்றின் காரணத்தை அறிந்திருக்க முடியும்.

தனது சோதம் வரலாற்றுச் சூழலின் சோகம் என்பதாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது வரலாற்றினுள் வைத்துத் தன்னைக் கண்டிருக்க முடியும்.

இயற்கைச். சூழலில் ஏற்படும் இரசனையையும், வரலாற்று வளர்ச்சியின் ஒரு கட்டத்திலுள்ள மனித இரசனையாகக் கண்டி ருக்க (Poio வரலாற்றில் மனிதனுக்கு-தன்னைப் போன்ற மத்தியதர வாகததது மனிதனுக்குக் கிடைத்த சுதந்திரம்-உன்னதம், இந்தஇரசனை TV கண்டு, இந்த உன்னதம் எல்லோருக்கும் வாய்ப்பதற்கான சூழல் பற்றி அவன் கவலைப் பட்டிருக்க முடியும். இந்த உன்னத இரசனை, னனகமான உறவின் வழியேதான் சாத்தியம் எனக் கண்டிருக்க முடியும் இந்த உறவுக்கு யார் தடை என்பதை அவன் அறிந்திருக்க !" "To அத்தகையவர் அழிய வேண்டும் என அவன் விரும்பியிருக்க வேண்டும்.

இப்படி ஜே.ஜே. இந்திப்பதானால், இன்றைய உலக இந்திய தமிழக

பகிலுள்ள எதிர் எதிர் சக்திகள் யாவை என்பது பற்றியும்,

蠶° தன் சார்பு எது என்பது பற்றியும் சிந்தித்திருக்க முடியும்.

- || ||--



________________

210 mnišstuurih slog strošaugott ஜே.ஜே.இப்படியெல்லாம்.உண்மைத்தேட்டம் கொள்ள வில்லை.

முல்லைக்கல், ஏதோ தற்பெருமையால் மட்டுமே இறுதிப் போனவனும் இல்லை. இந்தச் சமூக Фрдsoft-4-** எதிர் நிலைகளுள் ஒன்றின் சார்பில் தன்னை (ുതുTാ ?-ടൂു. எதிர்வர்க்கத்தின் பாதிப்பு தனக்குள்ளும் இருப்பதை ஆதன வழியே எதிர்வர்க்கத்தைத் தனக்குள்ளும் இவனே தாங்கி зияттылығы; இவன் அறியாதவன். இவனது பார்வைதான் @aಷ್ರ சாாநத கட்சிக்கும் அதன் தொழிற்சங்கத்திற்கும். இந்தக் ஆட்சி, உடைமைவாகக அமைப்பினுள் சில மாற்றங்களையே விரும்பு கிறது எனபதை அறியாதவன் முல்லைக்கல். இந்தச் சமூகத்தில் நடைபெறும் சுரண்டல் தன்னைப் போன்றவர்கள் மூலமும் நடைபெறுவதை இவன் அறியவில்லை. இத்தகையவர் தளையே கம்யூனிஸ்டுகள் என்றும் இவர்களைக் கொண்ட கட்சியே கம்யூனிஸ்ட் கட்சி என்றும் புரிந்து கொள்ளப்படுவதாலேயே இவர்களுக்கு எதிர் நிலையில் இந்த ஜே.ஜே.க்கள் தோன்றுகிறார்கள். இந்த ஜே.ஜே. க்களும் தமக்குள் சுருங்கி இருப்பதனால் இந்தச் சுருங்கிய உலகையே தமக்கான உலகமாக இவர்கள் கருதிக் கொள்வதனாலும், இந்தத் சுருங்கிய உலகத்திற்குள் மேன்மையான உறவுகளைத்தாங்களேனும் காத்திருக்க வேண்டும் என்ற உணர்வோடு கலைஞர்களாக கலைத துறை பற்றிய சித்தாந்திகள் ஆவதற்கே அஞ்சுகிறார்கள். ஜே.ஜே.க்களைப் பிடித்துள்ள அவலம் இது. இவர்கள் பாவை இதற்கு மேல் விரிவடையாததால், இவர்கள் சாவையே தேர்ந்து கொள்கிறார்கள்.

முல்லைக்கல்லின் இலக்கிய ஆக்கம், ஆரம்ப காலப் பெருமை முதலியவைகளும், அவனுடைய கட்சி சார்ந்த வறட்டுப் பார்வையிலிருந்தே அல்லது இந்தப் பார்வையை ஒப்புக் கொள்வதிலிருந்தே எழுகிறது. வறுமை முதலியவை கடுமையாக இருக்கும் போது,அவை பற்றிய முற்போக்குவாதிகளின் இலக்கிய முயற்சியை உயர்வாகக் கணிப்பதிலும் இதே தவறுதான நிதழ்கிறது. அவர்கள் ஏதோ சமுதாயத்திற்குத் தியாகம் பலச் செய்து விட்டதாக இவர்களைத் தலையில் தூக்கி வைத்துச் சுமக்கச் இசால்கிறது இப்பார்வை. இவர்களின் பார்வையை . . . இதைத்தான் சித்தாந்தப்பார்வை என்று குறிப்பிட்டேன் . நியாயப்படுத்துவதற்கான ஆபத்து இங்கு இருக்கிறது, ஸ்டாலினிசம், கொஞ்சமாகவாவது இருந்தால்தான் சரி எனபதாக இது தருதுகிறது. இதன் விளைவாகத்தான், ஜே.ஜே. க்கள் தண்டிக்கப்படுவதும் நியாயம் என்றாகிறது.

ஜே.ஜே. வின் கலை, சுரண்டலின் துய்ப்பிலிருந்து உண்டாவு இல்லை. இப்படிச்சொல்லிவிடும் சித்தாந்தப்பார்வை, 3ఖGఖ. ວ. கால முகத்துக்குத் தேவை. மனிதன் தனக்கு உண்மையாக வேண்டும், ன்னது. உறவுகளுக்காக இருக்க வேண்டும் _ _ புறத்துகிறது. பொய்யும் வறட்டுத் தனமும் எச்

ஞானி 211

சமூகத்திலும் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ நீடிக்கலாம். அக்காலங்களிலெல்லாம் அவற்றால் பாதிக்கப் பட்டு, அதனை எடுத்துச் சொல்ல, விமர்சனம் செய்ய, அப்படிச் செய்வதால் வரும் தண்டனைகளையும் துணிவோடு ஏற்றுக் கொண்டு சொல்லச் சில கலைஞர்களாவது தேவை. நுண்ணுணர் வும் உன்னத உறவுகளில் ஈடுபாடும் உள்ள கலைஞர்க்கு இது தவிர்க்க இயலாதது. இம்முறையில், இவ்வகையான கலைஞர்கள், மார்க்கியூஸ் கூறிய முறையில், எச் சமூகத்திலும் கலகக்காரர்கள். இப்படிப்பட்ட கலைஞர்கள் தம் படைப்பை உருவாக்குவது, வெறும் உழைப்பைக் கொடுத்தல்ல-உயிரைக் கொடுத்து. மார்க்ஸ் கூறிய முறையில், இவர்கள் பட்டு உற்பத்தி செய்வதனாலேயே சாவைத் தேர்ந்து கொள்ளும் பட்டுப் புழுக்கள். இவர்கள் உழைப்புத் திறனுக்கு விலை மதிபபிட முடியாது. இவர்கள் எடுத்துக் கொள்வதைவிடக் கொடுப்பது அதிகம்.

மேலே விவரித்த தத்துவப்பார்வை ஜே.ஜே.விடம் ஏற்பட வில்லை. ஜே.ஜே. தன்னை மேலும் கிறிக் கொண்டிருந்தால், பிரச்சனைகளின் ஆழத்திற்கு அவன் போயிருக்க முடியும். ஆழத்திற்குச் சென்று பார்த்திருந்தால், தான் கலைஞனாகவே அல்லது கலைத் துறைச் சித்தாந்தியாகவே இருப்பதன் பொய்மை தெரிந்திருக்கும். அதாவது முல்லைக்கல் ஒருவகையில் பொய்யன் என்றால், தானும் இன்னொரு வகையில் பொய்யன் தான் என்பது புலப்பட்டிருக்கும்.

ஜே.ஜே. முல்லைக்கல் ஆகியவர்களின் எதிர் எதிர் நிலைகளி லிருந்து விலகி நாவலில் மூன்றாவது கோணத்தைப் பிரதிபலிப் பவர்களாகத் தோன்றும் அய்யப்பன் மேனன், சம்பத் ஆகிய வர்களின் பார்வையிலும் பாராட்டத்தக்க பல அம்சங்கள் இருந்த போதிலும், நாம் விவரித்து வந்த தத்துவப் பார்வை இல்லை (இப்படி எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி முக்கியத்துவம் உடையதாகத் தெரியவில்லை. பிரச்சனைகள், மனிதர்கள் சரியான கண்ணோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்களா என்ற பார்வையை முன் வைத்து அப்புறம் ஆசிரியரது பார்வை பற்றி மதிப்பிடு வதும் தேவையாக இருக்கிறது. தவிர தமிழிலுள்ள தலைசிறந்த நாவல் ஒன்றிலாவது நம் பார்வையைச் சோதித்துப் பார்ப்பது தேவை அல்லவா!).

ஜே.ஜே. நாவலாசிரியர் சுந்தர ராமசாமி அவர்களின் பார்வையோடு சம்பந்தப்பட்ட நாவல் இது என்ற முறையில் இதுவரை விவரித்தவற்றைப் பார்ப்போம்.

கா. 1955 வரை கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டவர் 1 ஆகவும் இருக்கலாம்). கட்சியிலிருந்து கருத்து வேறு பாட்டோடு, வெளியில் வந்தவர். கட்சியிலிருந்த காலத்தில் மார்க் சியம், அதன் வரலாற்று ப் பார்வை, தத்து வ ம் முதலியவற்றில் அவர் ஈடுபாடு கொண்டிருக்கக்கூடும். அவரது தொடக்க காலக்கதைகள், நாவல் ஆகியவை அவரது சமூகப்பார்வை, மார்க்சியம் சார்ந்தவை என்பதைப் புலப்படுத்து கின்றன. கட்சியை விட்டு வெளிவந்த போது நிறைய விமர்சனங்களோடு அவர் வெளிவந்திருக்க முடியும். தொடர்ந்து பல பிரச்சனைகள்பற்றி அவர்சிந்தித்திருக்க முடியும். படித்திருக்கமுடியும். 67 வரை பல வகை அனுபவங்கள் பெற்றிருக்கிறார். அந்த அனுபவங்களைப்பற்றி அவரது பின்னைய படைப்புக்கள் சிறிதளவே சொல்லுகின்றன. மார்க்சியத்தை, சு.ரா. முற்றாக மறுக்கவில்லை. அதன் போதாமை பற்றியே மிகுதியும் சு.ரா. பேசுகிறார். இத்தகைய விமர்சனங்கள் ஜே.ஜே. நாவலில் நிறைய இடம் பெற்றுள்ளன. சு.ரா.வின் விமர்சனங்களில் பலவற்றை ஏற்பதில் நமக்குத் தடை இல்லை.

1956க்கு முன்பிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, தத்துவம் பற்றிய அறிவைப்பற்றி நாம் அதிகம் பெருமையாகச் சொல்லிக் கொள்வதற்கில்லை. அக்காலத்து மார்க்சியம், பெரும்பகுதி 'அரிச்சுவடி மார்க்சியமே. இன்றைய நிலையில் பார்க்கும்போது, அந்த மார்க்சியம், வைதிக மார்க்சியம். இன்று மார்க்சியம், அதன் பல அம்சங்களில் பெருமளவு விரிவு கண்டிருக்கிறது. குறிப்பாக ரஷிய, சீனப் பிளவு ஏற்பட்ட பிறகு, இந்தியாவில் கம்யூனிஸ்ட்கட்சி உடைந்த பிறகு, நக்ஸல் பாரி இயக்கம் தோன்றிய பிறகு, சீனாவில் பண்பாட்டுப் புரட்சி தோன்றிய பிறகு- இன்று வரையிலான புதிய அனுபவத் தொகுப்போடு புரிந்துகொள்ளப் படும் மார்க்சியம் மிக வளமானது. சு.ரா. தன் நாவலில் முன் வைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறை, தொழிற்சங்கம் முதலியன பற்றிய பல விமர்சனங்களை, இந்த வளமான மார்க்சியம் எளிதாக ஏற்றுக்கொள்ளும்.

ஜே.ஜே. 1960 இல் இறந்துவிடுவதாகக் கூறுகிறது நாவல். ஒரு கலைஞன் என்ற முறையில் இனி ஜே.ஜே. வளர முடியாது. உயர முடியாது. இந்த நாவலை சு.ரா. 15-க்குப்பிறகு எழுதத் தொடங்கி 81-ல் வெளியிடுகிறார். உலக அரங்கில் 1964-க்குப் பிறகு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள், அவற்றால் பாதிக்கப்பட்டு மார்க்சியம் பெற்ற வளம்-இந்த வளத்தின் பார்வையில் நாவலில் நிகழ்வுகள் மனிதர்கள் பார்க்கப்படவே இல்லை. அதாவது, சு.ரா.வின் மார்க்சியம் பற்றிய அறிவு 1956-உடன் தேங்கிவிட்டது.

குறிப்பாக, மார்க்சியத்தின் செழுமையான பகுதிகளில் ஒன்றாகிய வரலாற்றுப்பார்வையிலிருந்து நிகழ்வுகள், மனிதர்கள் பார்க்கப்படவேயில்லை. நான் விவரித்த தத்துவப் பார்வை என்பது 68-க்குப் பிறகு செரித்துக்கொண்ட 70களின் இறுதியில் பெருமளவு வடிவம் பெற்ற பார்வை.

இதனால்தான் இப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜே.ஜே. 60-ல் இறந்ததாகக் கூறுவது, அதற்குமேல் ஜே.ஜே.வுக்குள்ளி ருந்து விரிவுபடுத்தக் கூடிய சக்தி எதுவும் அற்று ஜே.ஜே. தேங்கி விட்டதைத்தான் குறிக்கிறது. இப்படி ஒருமனிதன் சாகக் கூடாது என்பது இல்லை. இலக்கியம் என்பது, ஒரு மனிதன் சாவதற்குமான காணத்தோடுதான் படைக்கப்படுகிறது.

ஞானி 213

இதிலிருந்து மேலும் ஒன்றைச் சொல்வது-முன்னைய கூற்று உண்மையில்லை என்றால் அபத்தமாகவும் தோன்றலாம். முன்னைய கூற்று சரி என்ற கருத்தில் இதனைக்கூறுகின்றேன். சு.ரா. தன்னை முழுமையாக ஒரு கலைஞர் என்ற இயக்கத்திற்குள் சுருக்கிக் கொண்டார். அந்த இயக்கத்திலிருந்து மேலும் பரிணாமம் பெற்று, உடைத்துக்கொண்ட தத்துவவாதியாக அவரால் வளர்ச்சிபெற முடியவில்லை. 60-களில் $7.JТТ. வின் வளர்ச்சி தடைப்பட்டுவிட்டது. 70-களுக்குள் அவர் வரவே யில்லை.

ஞானரதம், ஆகஸ்ட்-டிசம்பர் 1983.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


ஞானி 202

கோயில்களைச் சார்ந்த ஆசிரமங்கள் . ஆசிரமங்களிலிருந்து புரட்சிக்காரர்கள் தோன்ற முடியும். இந்து மிதம் தன்னை நவீன காலப்போக்கில் புதுப்பித்துக் கொண்டால், நிலைமை இப்படி இல்லை.

ஆதி தோற்றுவிக்க விரும்பும் காந்தி இல்லம் கூடத் தோன் போலத் தெரிகிறது. இ த தோனறாது

ஜெயகாந்தன் படைப்பில் இடம்பெறும் சங்கரர் நாம் காணும் யாரையும் குறிப்பதாக இல்லை. பெரியார் மரியாதைக்கு உரியவராகக் கொண்டாட்ப்படலாம். அவர் நெறி தீவிரம் பெறவில்லை.

மதம் சாகாது. காலம் தோறும் புதிய விளக்கங்களை மதம் பெறும். ஆனால், சமூக மாற்றத்தைச் சாதிக்கும் திறன் இனி மதத்துக்கு இல்லை.

தமிழ்க் கலை தமிழ் 4, கலை 3-4. - தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக வெளியீடு