தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, June 02, 2016

ஒரு முறை இலையுதிர் காலத்தில் - மாக்ஸீம் கார்க்கி

Cதமிழ் மொழிபெயர்ப்பு, முன்னேற்றப் பதிப்பகம், 1979.

மொ.பெ - பூ.சோமசுந்தரம் ?, நா.முகம்மது செரீபு ?

www.padippakam.com

ஒரு முறை இலையுதிர் காலத்தில்

...ஒரு முறை இலையுதிர் காலத்தில் மனத்துக்குக் கொஞ்சமும் பிடிக்காத, எக்கச்சக்கமான நிலைமையில் நான் மாட்டிக்கொள்ள நேர்ந்தது. அணிமையில் நான் வந்து சேர்ந்த, தெரிந்தவர் எவரும் இல்லாத நகரத்தில், கையில் ஒரு காசு இன்றி, தங்க இடம் இன்றி நான் தெருவில் நிற்க வேண்டியதாயிற்று.

எந்த உடுப்புகள் இல்லாமல் சமாளிக்க முடிந்ததோ அவற்றை எல்லாம் முதல் நாள்களில் விற்று விட்டு, நகரத்திலிருந்து ஊஸ்தியே என்ற கழிமுகப் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்கே நீராவிப் படகுத் துறைகள் இருந்தன. படகுப் போக்குவரத்து நடந்த காலப் பகுதியில் அங்கே மும்முரமாக வேலை நெரிந்து கொண்டி ருக்கும். இப்போதோ, அது வெறிச்சோடி, ஆள் நடமாற்றமின்றி கிடந்தது. நான் குறிப்பிடும்நிகழ்ச்சி அக்டோபர் மாதக் கடைசி நாள்களில் நடந்தது.

நான் ஈர மணலில் கால்களை அடித்தவாறு அதில் எதாவது மிச்ச உணவுப் பண்டம் தென் படாதா என்று விடாப்பிடியாகத் துழாவிப் பார்த்தவாறு, வயிறார உண்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று எண்ணியபடி வெறுமையான கட்டடங்களுக்கும் விற்பனைச் சாவடி களுக்கும் இடையே தன்னந் தனியாகச் சுற்றி வந்தேன்.

தற்போது பண்பாடு எட்டியுள்ள நிலையில், உடற் பசியைக் காட்டிலும் விரைவாக உள்ளப் பசியைப் போக்கிக்கொள்ள முடியும். நாம் வீதி களில் சுற்றி அலைகிறோம். வெளிப் பார்வைக்கு நன்றாய் இருக்கும் கட்டடங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. அவை உட்புறமும் நன்றாக வசதி செய்யப்பட்டிருக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும் கட்டடக் கலையையும் உடல் நல இயலையும் மூதறிவு நிறைந்தவையும் உயர்ந்தவையுமான வேறு பலவற்றையும் குறித்த இனிய எண்ணங்களை இது நம் மனத் தில் எழுப்பக் கூடும். வசதியாகவும் கதகதப்பாக வும் உடை அணிந்து நமக்கு எதிர்ப்படுகிற மனிதர்கள் மரியாதை உள்ளவர்கள், நாம் நிலவு கிறோம் என்ற துயர் தரும் உண்மையைக் கவ னிக்கத் தங்களுக்கு விருப்பம் இல்லாததை நயமாகக் காட்டியவாறு நம்மிடமிருந்து எப்போதும் விலகிச் செல்கிறார்கள். கடவுள் ஆணை, பசித்தவனின் உள்ளம் வயிறு நிறைந்தவனின் உள்ளத்தை விட மேலாகவும் நலத்துடனும் எப்போதும் ஊட்டம் வெறுகிறது. இந்த அடிப்படைக் கருத்திலிருந்து வயிறு நிறைந்தவர்களுக்குச் சாதகமாக மிகவும் சந்தர்ப்பப் பொருத்தமான முடிவைப் பெறலாம்!.

...மாலை வந்தது, மழையும் வந்தது, வா டைக் காற்று குட்குப்பென்று வீசிற்று. அது வெற்று விற்பனைச் சாவடிகளிலும் பெட்டிக் கடைகளிலும் சீழ்க்கை அடித்தது, தங்கு விடுதிகளின் பலகைகளால் அடைக்கப்பட்டிருந்த சன்னல்களில் மோதியது. காற்றின் அடிகளால் ஆற்று நீர் அலைகள் துரைத்தன, கரையோர மணலில் ஒசையுடன் மோதின, தங்கள் வெண் முடிகளை எழுப்பியவாறு ஒன்றின் மேல் ஒன்று தாவிப் பாய்ந்து கலங்கல் தொலைவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக விரைந்தன. குளிர்காலம் நெ ருங்குவதை ஆறு உணர்ந்தது போலவும், வாடைக் காற்று அன்று இரவே தன் மீது போடக் கூடிய உறைபனி விலங்குகளுக்குத் தப்பி அச்சத் துடன் எங்கோ ஒடியது போலவும் தோன்றியது. வானம் மேகங்கள் அடர்ந்து கருங்கும்மென்று இருந்தது. கண்ணுக்கு அரிதாகவே புலப்பட்ட மழைத்துளிகள் அதிலிருந்து பூமழையாகச் சிதறிக் கொண்டிருந்தன. என்னைச் சூழ்ந்து ஒலித்த இயற்கையின் துயரப் புலம்பற்பாட்டை முறிந்து அவலட்சணமாக இருந்த இரண்டு வெள்ளை வில்லோ மரங்களும் அவற்றின் வேர்களுக்கு அருகே குப்புறக் கவிழ்ந்து கிடந்த ஒரு படகும் அழுத்திக் காட்டின.

அடி உடைந்து கவிழ்ந்து கிடந்த படகு, குளிர் காற்றால் குறையாடப்பட்ட, பரிதாபகரமான முதிய மரங்கள். சுற்றிலும் எல்லாம் அழிவுக்கு உள்ளாகி, பாழாக, உயிரற்றுக் கிடந்தன. வான மோ, வற்றாத கண்ணிரைப் பெருக்கிக் கொண்டி ருந்தது. சுற்றிலும் எங்கும் வெறிச்சோடி இருந்தது, துயரம் ததும்பியது. எல்லாம் மடிந்து கொண்டிருக்கின்றன என்றும் விரைவில் நான் ஒருவன் மட்டுமே உயிரோடு எஞ்சி இருப்பேன் என்றும் என்னையும் உணர்வற்ற சாவு எதிர் நோக்கி இருப்பதாகவும் தோன்றியது.

அப்போது எனக்கு வயது பதினேழு-நல்ல பருவம்!

பசியையும் குளிரையும் போற்றிப் பற்களால் நெறித்தவாறு நான் குளிர்ந்த ஈர மணலில் மேன்மேலும் நடந்தேன். உணவுப் பண்டம் ஏதாவது கிடைக்காதா என்று வீணாகத் தேடிய வண்ணம் ஒரு விற்பனைச் சாவடியின் பக்கம் போன போது, பெண் உடையில் ஒர் உருவம் சா வடியின் பின்னே தரை மேல் சுருண்டிருக்கக் கண்டேன். மழையில் நனைந்த உடை குனிந்த தோள்களோடு இறுக்கமாக ஒட்டிக் கொண்டிருந்தது. அவள் அருகே நின்று என்ன செய் கிறாள் என்று கவனமாக நோக்கினேன். அந்த விற்பனைச் சாவடிக்கு அடியில் கைகளால் மணலைத் தோண்டிக் குழி பறித்துக் கொண்டிருந்த தாகத் தெரிய வந்தது.

நான் அவள் அருகே குந்தி, இது உனக்கு எதற்காக?' என்று கேட்டேன்.

அவள் மெல்லெனக் கிறிச்சிட்டுச் சட்டென்று துள்ளி எழுந்து நின்றாள். இப்போது, அகலத் திறந்த சாம்பல் நிற விழிகளால் என்னை அச்சத்துடன் நோக்கிய பொழுது, அவள் என் வயதுப் பெண் என்பதைக் கண்டேன். அவளது முகம் மிகவும் இனியது, ஆனால் மூன்று அடித் தழும்புகள் வருந்தத்தக்க விதத்தில் அதில் படிந்திருந்தன. இவை முகத்தைக் கெடுத்தன. ஆனால் தழும்புகள் அருமையான தகவுப் பொருத்தத்துடன் அமைந்திருந்தன. சம அளவுள்ள ஒரு தழும்பு ஒவ்வொரு கண்ணுக்கு அடியிலும், கொஞ்சம் பெரிய தழும்பு நெற்றி யில் மூக்கந்தண்டுக்கு நேர் மேலேயும். மனித முகங்களைக் கெடுப்பதில் மிக நுட்பமான தேர்ச்சி பெற்ற கலைஞனின் கைத்திறனை இந் தச் சமச்சிரில் காண முடிந்தது.

அந்த பெண் என்னை நோக்க அவளது கண்களில் இருந்த அச்சம் சிறிது சிறிதாக மறைந்தது. தனது கைகளில் ஒட்டியிருந்த மண்தை தட்டிப் போக்கி சீட்டித் துணி தலைக் குட்டையைச் சரிப்படுத்திக்கொண்டு சற்று நெளிந்து பின்பு சொன்னாள்

"உனக்கும் பசியாய் இருக்கிறது, அல்ல வா? எங்கே தோண்டு பார்ப்போம் என் கை கள் களைத்துப் போய் விட்டன. அங்கே,'அவள் விற்பனைச் சாவடியைத் தலையசைப்பால் சுட்டினாள்-கட்டாயம் பொட்டி இருக்கும். இந்தச் சாவடியில் வியாபாரம் இன்னும் நடக்கிறது.'

நான் தோண்டத் தொடங்கினேன். சற்று தேம் பொறுத்திருந்த அவள் பின்பு அருகில் உட்கார்ந்து எனக்கு உதவத் தொடங்கினாள்.

நாங்கள் மெளனமாக வேலை செய்தோம். குற்றச் சட்டத் தொகுப்பையும் ஒழுக்க நெறியை யும் சொத்துரிமையையும் இவை போன்ற பிற வற்றையும் நான் அந்தக் கணத்தில் நினைத் துக் கொண்டேனா என்று இப்போது என்னால் சொல்ல முடியாது. விஷயம் தெரிந்த மனிதர் களின் கருத்துப்படி இந்த விவரங்களை வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நினைவு வைத்திருப்பது அவசியம். ஆனால் கூடிய வரை யில் உண்மைக்கு நெருங்கி இருக்க விரும்புவ தால் நான் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும்: விற்பனைச் சாவடிக்கு அடியில் குழி பறிப்ப தில் ஆழ்ந்து முனைந்திருந்த நான், இந்தச் சாவடிக்குள் என்ன இருக்கலாம் என்பதைத் தவிர மற்ற எல்லா விஷயங்களையும் மறந்து விட்டேன்...

மாலை ஆயிற்று. ஈரமும் மழைத் துாறலும் குளிரும் நிறைந்த இருள் எங்களைச் சுற்றிலும் மேன் மேலும் அடர்ந்து கவிந்தது. அலைகள் முன்னிலும் மந்தமாக ஒலித்தன, ஆனால் மழை சாவடிப் பலகைகள் மேல் வரவர அதிக உரக்கவும் அடிக்கடியும் தாளம் போட்டது. இரவுக் காவல்காரனின் கிலுகிலுப்பை அதற்குள் எங்கோ ஒலி எழுப்பியது.

'இதற்குத் தரை இருக்கிறதா, இல்லையா?” என்று தணிந்த குரலில் கேட்டாள் என் துணைவி. அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாததால் நான் பேசாதிருந்தேன்.

'இந்தச் சாவடிக்குத் தரை இருக்கிறதா இல்லையா என்று கேட்கிறேன். இருக்கிறது என்றால், நாம் வீணாகப் பாடுபடுகிறோம். குழி பறித்த பிறகு பருத்த பலகைகள் எதிர்ப் படலாம். அவற்றைப் பிய்த்து அகற்றுவது எப் படி? பூட்டை உடைப்பது மேல்... பூட்டு மோச மானது தான்...'

நல்ல கருத்துக்கள் பெண்களின் மூளைகளில் உதிப்பது அரிதே. ஆயினும், அவை அவற்றில் உதிக்கத் தான் செய்கின்றன என் பதை நீங்களே காண்கிறீர்கள். நல்ல கருத்துக் களை நான் எப்போதும் மதித்தேன், முடிந்த அளவு அவற்றைப் பயன்படுத்த எப்போதும் முயன்று வந்தேன்.

பூட்டைக் கண்டுபிடித்து அதை இழுத்து வளையங்களோடு சேர்த்துப் பிய்த்து விட்டேன்... என் கூட்டாளிப் பெண் நொடிப் போதில் வளைந்து சாவடியின் நாற்கோணத் திறப்பில் பாம்பாய் நெளிந்து புகுந்து விட்டாள். அவளு டைய பாராட்டுக் குரல் அங்கிருந்து ஒலித்தது.

'சபாஷ்' பெண்ணின் ஒரு சிறு புகழ்ச்சி ஆணின்அந்த ஆண் பண்டைக்காலச் சொற்பொழிவாளர் கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததுபோன்ற சொல் லாற்றல் பெற்றவனாய் இருந்தாலும் சரியேமுழு நீளப் போற்றிப் பாடலைக் காட்டிலும் எனக்கு அதிக மதிப்பு உள்ளது. ஆனால் அப் போது நான் இப்போதை விடக் குறைவாகவே இனிய மனநிலையில் இருந்தேன். எனவே பெண்ணின் புகழுரையைப் பொருட்படுத்தாமல் சுருக்கமாகவும் அச்சம் தொனிக்கவும் அவளிடம் கேட்டேன்:

‘'எதாவது இருக்கிறதா?” அவள் தன் கண்டுபிடிப்புகளைச் சலிப்பூட்டும் குரலில் வரிசையாகச் சொல்லிக்கொண்டு போனாள்:

"புட்டிகள் நிறைந்த கூடை. வெற்றுச் சாக்குகள்... குடை... இரும்பு வாளி.”

இவை எல்லாம் உண்ணத் தகாதவையாக இருந்தன. என் நம்பிக்கை விளக்குகள் அனை வதை உணர்ந்தேன். ஆனால் அவள் திடீ ரென்று உற்சாகமாகக் கத்தினாள்:

“ஆகா! இதோ...' **টোতো তো? ? ? 'ரொட்டி... பெரிய வட்ட ரொட்டி... ஆனால் நனைந்திருக்கிறது. பிடி!'

என் காலருகே உருண்டது வட்ட ரொட்டி அதன் பின்னே அவளும்-என் துணிவுள்ள கூட்டாளிப் பெண்ணும்-வெளியே வந்தாள். அதற்குள் நான் ஒரு துண்டு விண்டு வாயில் நுழைத்துக்கொண்டு சவைக்கலானேன்...

"எங்கே, எனக்குக் கொடு. தவிர இங்கி ருந்து நாம் போய் விட வேண்டும். எங்கே போ வது? அவள் இருளில் நான்கு திசைகளிலும் ஆவலுடன் பார்வை செலுத்தினாள். இருட்டும் ஈரமும் இரைச்சலுமாக இருந்தது. அதோ அங்கே படகு கவிழ்ந்திருக்கிறது. போவோமா அங்கே?'

'போகலாம்' நாங்கள் கிடைத்த ரொட்டியை விண்டு வாயில் திணித்தவாறு நடந் தோம். மழை வலுத்தது, ஆறு முழங்கிற்று. நகைப்பது போன்ற நீண்ட சீழ்க்கை ஒலி எங் கிருந்தோ வந்தது. யாருக்கும் அஞ்சாத ஒரு பெரியவன் உலகின் எல்லா ஒழுங்கு முறை
களையும் இந்த அசிங்கம் பிடித்த இலையுதிர் கால மலையையும் இதன் நாடகப் பாத்திரங் களான எங்கள் இருவரையும் ஏளனம் செய்து சீழ்க்கை அடித்தது போல் இருந்தது. அது. இந்தச் சீழ்க்கையால் இதயம் நொந்து சாம்பி யது. ஆனாலும் நான் ஆர்வத்துடன் தின்றேன். என் இடப் புறம் நடந்த மங்கையும் இதில் எனக்குச் சளைக்கவில்லை.

'உன் பெயர் என்ன?’ என்று எதற்காகவோ அவளிடம் கேட்டேன்.

"நத்தாஷா என்று மொச்சு மொச் சென்று சவைத்துக்கொண்டு பதில் சொன் бот тотт Фіо) 16 т -

நான் அவளைப் பார்த்தேன்-என் இதயம் வலித்துச் சுருங்கியது. நான் இருளில் என் முன்னே நோக்கினேன். என் விதியின் முரண் நகை மிளிர்ந்த முகம் என்னைப் பார்த்து இரக் கமின்றி மர்மப் புன்முறுவல் செய்வது போல எனக்குப் பிரமை உண்டாயிற்று.

...படகுக் கட்டை மேல் ஒய்வின்றி அடித்தது மழை. அதன் மெல்லோசை துயர எண்ணங் களை ஊட்டியது. படகின் உடைந்த அடிக்குள் பாய்ந்த காற்று சீழ்க்கை அடித்தது. அந்தப் பிளவில் ஒரு சிம்பு அடித்துக் கொண்டதுஅடித்துக் கொண்டு அமைதியற்ற, முறையிடும் ஒலியுடன் சடசடத்தது. ஆற்றின் அலைகள் கரை யில் மோதி ஒலியெழுப்பின. சலிப்பும் நம்பிக் கையின்மையும் தொனிக்க அவை ஒலித்ததைக்கேட்கையில், தாங்க முடியாதபடி அலுப்பு தட்டியதும் துயர் ததும்பியதும் அருவருப்பு உண்டாகும் அளவுக்குத் தங்களுக்குத் தெவிட் டியதுமான ஒன்றை, எதிலிருந்து தப்பியோட அவை விரும்பி இருக்குமோ, எதைப் பற்றிப் பேசுவது இன்றியமையாததாக இருந்ததோ அத் தகைய ஒன்றை, அவை விவரித்தது போலத் தோன்றியது. மழையின் ஒசை அலைகளின் ஒலிகளுடன் கலந்தது. வெளிச்சமும் வெப்பமும் உள்ள கோடையும் குளிரும் மூடுபனியும் ஈரமும் உள்ள இலையுதிர் காலமும் இடைவிடாது இப் படி மாறி மாறி வருவதால் கோபம் கொண்டு களைப்படைந்த தரையின் நீண்ட துயரப் பெரு மூச்சு கவிழ்ந்த படகுக்கு மேலே மிதந்து சென்றது. வெற்றான கரை மீதும் நுரைத்த ஆற்றின் மேலும் வீசிய காற்று சோர்வூட்டும்

பாட்டுக்களைப் பாடியது.

படகுக்கு அடியில் இடம் வசதி அற்றதாக இருந்தது. அங்கே நெருக்கமாகவும் ஈரமாகவும் இருந்தது. உடைந்த அடி வழியாகச் சில்லிட்ட சிறு மழைத் துளிகள் துாறின, காற்றுப் பெ ருக்குகள் பாய்ந்து வந்தன. நாங்கள் மெளன. மாக உட்கார்ந்து குளிரால் நடுங்கிக் கொண்டி ருந்தோம். எனக்கு நினைவிருக்கிறது, எனக்கு உறக்கம் வந்தது. நத்தாஷா சிறு பந்தாகச் சுருண்டு முதுகைப் படகின் பக்கப் பகுதியில் சாய்த்துக் கொண்டிருந்தாள். கைகளால் முழங் கால்களைக் கட்டிக்கொண்டு அவற்றில் மோவா யை வைத்தவாறு கண்களை அகலத் திறந்து ஆற்றை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெண் புள்ளி போன்ற அவளுடைய முகத்தில் கண்கள் அவற்றின் கீழ் இருந்த தழும்புகள் காரணமாகப் பிரமாண்டமாகத் தோற்றம் அளித் தன. அவள் அசையவில்லை. இந்த அசையா மையும் பேச்சின்மையும் அந்நியளான அவள் மீது அச்சத்தை எனக்குள் கொஞ்சங் கொஞ்ச மாகத் தோற்றுவித்ததை நான் உணர்ந்தேன். அவளிடம் பேச்சுக் கொடுக்க எனக்கு விருப்பம் உண்டாயிற்று, ஆனால் எதில் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை.

அவளே பேச்சைத் தொடங்கினாள். “எதற்கும் உதவாத கடை கெட்ட பிழைப்பு.’ என்று சொற்களைத் தெளிவாக உச்சரித்தவாறு ஆழ்ந்த உறுதி தொனிக்கக் கூறினாள்.

ஆனால் இது முறையீடு அல்ல. இந்தச் சொற்களில் முறையீட்டுக்குப் பொருந்தாத அள வுகடந்த அலட்சியம் இருந்தது. அவள் வெறு மனே தன்னால் இயன்ற வகையில் சிந்தனை செய்தாள், சிந்தனை செய்து திட்டமிட்ட முடி வுக்கு வந்து அதை உரக்க வெளியிட்டாள் எனக்கு நானே முரண்படாமல் அதை மறுக்க என்னால் முடியவில்லை, ஆகையால் நான் பே சாதிருந்தேன். அவளோ, என்னைக் கவனிக் காதவள் போலத் தொடர்ந்து அசையாமல் உட் கார்ந்திருந்தாள்.

"செத்தாவது தொலைக்கலாமா என்ன...' என்று மீண்டும் சொன்னாள் நத்தாஷா ஆனால் இப்போது தணிந்த குரலில் சிந்தனை யுடன் பேசினாள். இப்போதும் அவளுடைய சொற்களில் முறையிடும் தொனி சிறிதும் இல் லை. அவள் வாழ்க்கையைப்பற்றி எண்ணமிட்டு, தன்னைப் பார்வையிட்டு, வாழ்க்கையின் எள னங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வ தற்குச் செத்துத் தொலைவது தவிர வேறு எதுவும் செய்யும் நிலையில் தான் இல்லை என்று உறுதியான முடிவுக்கு வந்தாள் என் பது தெரிந்தது.

இத்தகைய சிந்தனைத் தெளிவால் எனக்கு விவரிக்க முடியாத அளவு துயரம் உண்டா யிற்று. மேற்கொண்டும் பேசாதிருந்தால் எனக்கு அழுகை வந்து விடும் என்று உணர்ந்தேன்... ஒரு பெண்ணுக்கு முன்னால் அழுவது அவ மானமாக இருந்திருக்கும். அவள் அழாததால் அவமானம் இன்னும் மோசமாகி இருக்கும். நான் அவளிடம் பேச்சுக் கொடுக்க முடிவு செய் தேன்.

'உன்னை இப்படி அடித்தது யார்?' என்று கேட்டேன், அதிகப் புத்திசாலித்தனமான கேள்வி எதுவும் தோன்றாததால்.

'அட பாஷ்கா தான் என்கிறேன்...' என்று ஒரு சீரான உரத்த குரலில் விடையளித்தாள்.

'யார் அவன்?..' 'ஆசைநாயகன். ரொட்டிக் கடைக்காரன் ஒருத்தன்...'

'அவன் உன்னை அடிக்கடி அடிப்பா (&обтт?..??

'குடித்து வெறி எறிய போதெல்லாம் அடிப் பான்...'

அவள் திடீரென்று என் பக்கம் நகர்ந்து

தன்னையும் பாஷ்காவையும் தங்களுக்குள் நில விய உறவுகளையும் பற்றி விவரிக்கத் தொடங்கி னாள். அவள் ...தொழில் செய்யும் கட்டில் லாத பெண்களில் ஒருத்தி, அவன் ரொட்டிக் கடைக்காரன், செம்பழுப்பு மீசையுள்ளவன், மிக அருமையாக அக்கார்டியன் வாத்தியம் வாசிப் பவன். அவளுடைய விடுதிக்கு அவன் வந் தான். அவளுக்கு அவனை நிரம்பப் பிடித்து விட்டது, ஏனென்றால் அவன் குதுகலப் பேர் வழி, துப்புரவாக உடையணிந்தான். பதினைந்து ரூபிள் விலையுள்ள நீள் கோட்டும் நாகரிகமான காலணிகளும் அவனிடம் இருந்தன. இவற்றால் அவள் அவன் மேல் காதல் கொண்டாள். அவன் அவளுடைய பற்று வாடிக்கைக்காரன் ஆகிவிட்டான். பற்று வாடிக்கைக்காரன் ஆன பிறகு அவன் மற்ற வாடிக்கைக்காரர்கள் மிட் டாய் வாங்குவதற்காக அவளுக்குக் கொடுத்த இனாம் பணத்தை எடுத்துக்கொள்ளவும் அந்த காசில் குடித்து விட்டு வந்து அவளை அடிக்க வும் தலைப்பட்டான். இதோடு நின்றாலும் பர வாயில்லை. அவள் கண் எதிரிலேயே மற்றப் பெண்களோடு சரசமாடத் தொடங்கினான்.

'எனக்கு இதனால் மனத்தாங்கல் எற்படா தா? நான் மற்ற எவர்களுக்கும் குறைந்தவள் அல்லள். அவன் இப்படி என்னை இளக்காரம் செய்தான், கீழ் மகன். மூன்று நாள்களுக்கு முன் நான் எசமானியிடம் விடுமுறை வாங்கிக் கொண்டு அவனிடம் போனேன். அங்கே துன் கா குடி மயக்கத்தில் இவனோடு இருந்ததைப் பார்த்தேன். அவனும் குடிவெறியில் இருந்தான். இழி பிறவியடா நீ, இழி பிறவி போக்கிரிப் பயல்' என்றேன். அவன் என்னை அடித்து நொறுக்கி விட்டான். உதைத்தான், மயிரைப் பிடித்து இழுத்தான்-எல்லா விதமாகவும். இதாவது தொலைகிறது என்று இருக்கலாம்! ஆனால் அவன் எல்லாவற்றையும் கிழித்து விட் டானே... இனி எப்படி? நான் எசமானியிடம் எப்படிப் போவேன்? எல்லாவற்றையும் கிழித்து விட்டானே கவுனையும் சட்டையையும்-புத்தம் புதிசு. தலைக் குட்டையைத் தலையிலிருந்து பிய்த்து விட்டான்... கடவுளே! இனி நான் என்ன செய்வேன்?’ என்று எங்கி உடைந்த குர லில் திடீரென்று வீரிட்டாள் அவள்.

காற்று மேன்மேலும் வலுத்து அதிகக் குளி ராகி ஊளையிட்டது. என் பற்கள் மறுபடி கட கடவென்று அடித்து நடனமாடத் தொடங்கின. அவளும் குளிரால் நெளிந்து துடித்தாள். அவள் எனக்கு மிக மிகக் கிட்டத்தில் நகர்ந்து வந்து விடவே நான் இருளின் ஊடாக அவளு டைய கண் ஒளியைக் கண்டேன்...

'நீங்கள் இருக்கிறீர்களே, ஆண்கள், எல்லா ரும் எப்பேர்ப்பட்ட கயவர்கள்! என்னால் முடிந் திருந்தால் உங்கள் எல்லாரையும் மிதித்துத் துவைத்திருப்பேன், கை கால்களை முறித்துப் போட்டிருப்பேன். உங்களில் எவனாவது செத் துத் தொலைந்திருந்தால்... அவன் மூஞ்சியிலே துப்பி இருப்பேன், வருத்தமே பட்டிருக்க மாட் டேன்! இழி பிறவிகளா கெஞ்சிக் குழைவீர் 5ள், காலை வருடுவீர்கள், கடை கெட்ட நாய்கள் மாதிரி வாலை ஆட்டுவீர்கள். எவளாவது அறிவு கெட்டவள் உங்களுக்கு மசிந்து விட்டாளோ, தொலைந்தாள். நீங்கள் உடனே அவளைக் காலடியில் போட்டு நசுக்குவீர்கள். கேடு கெட்ட புரட்டுக்காரப் பயல்களா...'

அவள் வெவ்வேறு விதச் சொற்களால் திட் டினாள். ஆனால் அவளுடைய வசவுகளில் வலு இல்லை. கேடு கெட்ட புரட்டுக்காரப் பயல்களி டம் வன்மமோ வெறுப்போ அவற்றில் எனக் குக் கேட்கவில்லை. மொத்தத்தில் அவளுடைய பேச்சின் தோரணை அதன் உள்ளடக்கத்துக் குப் பொருந்தாத விதத்தில் அமைதி கொண் டிருந்தது. குரல் ஏற்ற இறக்கங்கள் இன்றித் துயர் நிறைந்திருந்தது.

ஆனால் நான் அதற்கு முன்னரும் பின் னரும் நிறையக் கேட்டிருந்தவையும் இன்று வரை கேட்டும் படித்தும் வருபவையுமான யா வற்றிலும் சொல்லாற்றலும் அறிவுறுத்தும் திற னும் மிக்க சோர்வுவாத நூல்களையும் பேச்சு களையும் காட்டிலும் அதிக வலிவாக இவை எல்லாம் என்னைப் பாதித்தன. இதன் கார ணம் என்ன என்றால் இறந்து கொண்டிருப்ப வனின் மரண வேதனை சாவு பற்றிய யா வற்றிலும் துல்லியமானவையும் கலைச் சிறப்பு உள்ளவையுமான வர்ணனைகளை விட எப் போதும் மிக இயல்பானது என்பதுதான்.

எனக்கு அசிங்கமாக இருந்தது-அந்நியனின் பேச்சுகளைக் காட்டிலும் அதிகமாகக் குளிர் இதற்குக் காரணம் போலும். நான் மெதுவாக முனகி, பற்களை நெறு நெறுத் தேன்.

அநேகமாக அதே கணத்தில் சில்லிட்ட இரு சிறு கரங்களின் பரிசத்தை உணர்ந்தேன். ஒன்று என் கழுத்தைத் தொட்டது, மற்றது என் முகத்தை வருடியது. கலவரம் நிறைந்த, பரிவு ததும்பிய கேள்வி அதே சமயம் மென்மையாக ஒலித்தது:

'உனக்கு என்ன?”

எல்லா ஆண்களும் கயவர்கள் என்று சற்று முன் கூறி அவர்கள் எல்லாருடையவும் அழிவை விரும்பிய நத்தாஷா அல்ல, வேறு யாரோ என் கணிடம் இப்படிக் கேட்கிறார்கள் என்று எண்ண நான் தயாராய் இருந்தேன். ஆனால் அதற்குள் அவள் மளமளவென்று பொரிந்து கொட்டி னாள்...

'உனக்கு என்ன? ஊம்? குளிர்கிறதா? உடம்பு விறைத்துப் போகிறதோ? அட அசடே! வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறா யே... ஆந்தை மாதிரி குளிர்கிறது என்று முன் பே என்னிடம் சொல்லி இருக்கலாமே நீ... ஊம்... படு தரையில்... கால்களை நீட்டிக் கொள்... நானும் படுக்கிறேன்... இப்படி இப் போது என்னைக் கைகளால் கட்டிக்கொள்... இன்னும் இறுக... அப்படித் தான், இப்போது உனக்குக் கதகதப்பாய் இருக்க வேண்டும். அப் புறம்-ஒருவர் முதுகை மற்றவர் முதுகோடு ஒட்டியபடிப் படுப்போம். எப்படியாவது இரவைக் கழிப்போம். நீ என்ன, குடித்தாயா, ஊம்? வேலையிலிருந்து விரட்டி விட்டார்களா?. பர வாயில்லை!...”


அவள் என்னைத் தேற்றினாள். அவள் என்னை உற்சாகப்படுத்தினாள்...

நான் மும்முறை பாழ்படுவேனாக இந்த நிகழ்ச்சியில் என் மீது எத்தகைய முரண்நகை பொதிந்திருந்தது சற்று எண்ணிப் பாருங்கள்! அந்தக் காலத்தில் நான் மனித குலத்தின் விதி பற்றி ஆழ்ந்த கவலை கொண்டிருந்தேன், சமூக அமைப்பை மாற்றுவது பற்றி, அரசியல் புரட்சி கள் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தேன், படு மூதறிவு நிறைந்த பல்வேறு நூல்களைப் படித்து வந்தேன்-அந்த நூல்களின் பொருள் ஆழம் அவற்றை இயற்றியவர்களுக்குக் கூட எட்டாத தாய் இருந்தது போலும்-என்னைப் 'பெருத்த செயலாற்றும் சக்தியாக உருவாக்க அந்தக் காலத்தில் நான் எல்லா வகையாலும் முயன்று வந்தேன். அப்பேர்ப்பட்ட என்னைத் தன் உடம்பால் சூடுபடுத்தினாள் ஒரு விலை மாது, ஆக்கங்கெட்ட துன்பத்தில் உழன்ற, கசக் கிப் பிழியப்பட்ட ஜீவன், வாழ்க்கையில் இடமோ மதிப்போ இல்லாத ஜீவன். அவள் எனக்கு உதவியதற்கு முன்னால் அவளுக்கு உதவ எனக்குத் தோன்றவில்லை, தோன்றி இருந்தா லும் எதனாலாவது அவளுக்கு உதவ என்னால் முடிந்திருக்குமா என்பது சந்தேகம்.

இவை எல்லாம் எனக்கு நிகழ்வது கனவில், பொருளற்ற கனவில், துன்பக் கனவில் என்று எண்ண நான் தயாராக இருந்தேன்...

ஆனால், அந்தோ! நான் இவ்வாறு எண்ணி இருக்கக் கூடாது, ஏனென்றால் குளிர்ந்த மழை துளிகள் என் மேல் சொரிந்தன, என் மார்போடு இறுக இணைந்திருந்தது பெண்ணின் மார்பகம், என் முகத்தில் வீசியது அவளுடைய வெதுவெதுப்பான மூச்சு, ஒரு சிறிது வோத்கா மணம் கமழ்ந்தாலும் உயிரூட்டும் திறன்மிகுந்த மூச்சு... காற்று ஊளையிட்டது, முனகியது, மழை படகின் மேல் சடசடத்தது, அலைகள் ஒலி யெழுப்பின, நாங்கள் இருவரும் ஒருவரை ஒரு வர் இறுகக் கட்டிக்கொண்டிருந்த போதிலும் குளிரால் நடுங்கினோம். இவை எல்லாம் முற்றி லும் உண்மையில் நடந்தன. உண்மைக்கு நிகரா கத் துயர் நிறைந்ததும் அசிங்கம் பிடித்ததுமான இச்செயலை ஒருவரும் கனவு கண்டிருக்க மாட் டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நத்தாஷாவோ ஓயாமல் என்னவோ சொல் விக்கொண்டு போனாள். பெண்களுக்கு மட்டுமே பேச முடியக் கூடிய அவ்வளவு கனிவுடனும் பரிவுடனும் அவள் பேசிக்கொண்டு போனாள். பேதைமையும் அன்பும் ததும்பிய அவளுடைய சொற்களின் பாதிப்பால் எனக்குள் ஒரு நெருப் புப் பொறியில் மெல்ல மெல்லச் சூடேறலா யிற்று. அதனால் என் இதயத்தில் எதுவோ இளகிற்று.

அப்போது என் விழிகளிலிருந்து ஆறாய்ப் பெருகியது கண்ணிர். இந்த இரவுக்கு முன் என் நெஞ்சில் குவிந்திருந்த வன்மங்கள், எக்கங் கள், அசட்டுத்தனங்கள், அழுக்குகள் ஆகியவற் றில் பலவற்றை இந்தக் கண்ணிர் அதிலிருந்து கழுவிப்போக்கி விட்டது. நத்தாஷாவோ என் னைத் தேற்றினாள்:

'நல்லது, நிறுத்து, கண்ணே, அழாதே!

போதும் ஆண்டவன் அருளால் எல்லாம் சரியாகி விடும், உனக்கு மறுபடி வேலை கிடைத்து விடும். எல்லாம் நேராகி விடும்.'

தேற்றியபடியே என்னை ஓயாமல் முத்த மிட்டாள். நிறைய, கணக்கில்லாமல், ஆர்வம் பொங்க...

வாழ்க்கை எனக்கு அளித்த முதலாவது பெண் முத்தங்கள் இவையே. யாவற்றிலும் சிறந்த முத்தங்களும் இவையே, ஏனெனில் அடுத்து வந்த எல்லா முத்தங்களுக்கும் நான் பயங்கரமாக விலை செலுத்த நேர்ந்தது, அவற் றால் எனக்கு அநேகமாக ஒன்றும் கிடைக்கவும் இல்லை.

"ஊம், அழாதிரு, அசடே உனக்குப் போக்இடம் இல்லை என்றால் நாளைக்கே உனக்கு இருப்பிடம் கிடைக்க உதவி செய்வேன்.-- நம்பிக்கையூட்டும் இந்தத் தணிந்த கிசுகிசுப்பு கனவில் போல என் காதுகளில் பட்டது.

...பொழுது புலரும் வரை நாங்கள் ஒருவரை ஒருவர் தழுவியவாறு படுத்திருந்தோம்.

விடிந்ததும் படகுக்கு அடியிலிருந்து வெளி வந்து நகரத்துக்குப் போனோம். பின்பு நட்புடன் பிரிந்தோம். ஒரு முறை இலையுதிர் கா லத்தில் எந்த இனிய நத்தாஷாவுடன் நான் விவரித்துள்ள இரவைக் கழித்தேனோ அவளை எல்லா ஏழைச் சேரிகளிலும் இந்த ஆறு மாதங் களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆயினும் நாங்கள் மீண்டும் சந்திக்கவே இல்லை.

அவள் இதற்குள் இறந்து விட்டாள் என்றால் - அது அவளுக்கு எவ்வளவு நல்லது


அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்திருப்பாளாக உயிரோடு இருந்தால், அவளுடைய உள்ளம் அமைதி அடையுமாக வீழ்ச்சி பற்றிய உணர்வு அவளுடைய உள்ளத்தில் விழித்துக் கொள்ளாதிருக்குமாக, ஏனெனில் இது வாழ்க்கைக்குத் தேவையற்ற, வீண் துன்பமாக இருக்கும.

1894

படிப்பகம் -

________________

www.padippakam.com