தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, September 19, 2019

நீரைப் போன்றது ஒளி - Gabriel Garcia Marquez ----தமிழில் - கோபிகிருஷ்ணன்

நீரைப் போன்றது ஒளி - Gabriel Garcia Marquez ----தமிழில் - கோபிகிருஷ்ணன் 
கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்
கிறிஸ்துமஸின் போது பையன்கள் துடுப்புகளால் இயங்கும் படகை வாங்கித் தருமாறு கேட்டார்கள் மீண்டும். 
"சரி கார்டஜெனாவுக்குத் திரும்பியதும் வாங்குவோம்" என்றார் அப்பா. 
ஒன்பது வயதான டோடோவும் ஏழுவயதான ஜோயெல் லும் அப்பா நினைத்திருந்ததை விட தீவிரமாக ஒரே குரலில் "படகு இங்கே இப்பொழுதே வேண்டும்" என்றனர். 
ஷவர் தண்ணீரில்தான் இங்கு படகுவிடமுடியும்" என்றாள் அம்மா.சரிதான்.கார்டஜெனா டி இண்டியாஸில் அவர்கள் வீட்டு முற்றம் கப்பல்துறை போன்றது. கொட்டகை இரண்டு நாவாய்கள் பிடிக்கும். மாட்ரிட் நகரத்திலோ அவர்கள் பாஸியோ டி லா காஸ்டெல்லானா வீதியில் இலக்கம் நாற்பத்தேழில் ஐந்தாவது மாடியில் நெருக்கடித்து இருந்தனர். 
வகுப்புப் பரிசுகளை ஜெயித்தால் படகுகளை குழந்தைகளுக்கு மறுக்க முடியாது போகும். திசைமானி கோணமானி உட்பட்ட துடுப்புப்படகை வாங்கித் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தது தான் காரணம். ஜெயித்ததால் வாங்கிவிட்டு, சூதாட்டக் கடன்களை அடைக்க அவரைவிட ஆவல் கொண்டிருந்த அம்மாவிடம் ஏதும் சொல்லத் தயங்கி நின்றார் அப்பா. நீர்படும் இடத்தில் தங்கக்கோடு விழ இருந்த அலுமினியப்படகு. "இருக்கும் கொட்டகையில் அதிக இடமில்லை. லிஃப்டிலோ படிக்கட்டிலோ கொண்டுவர இயலாது" என்றார் மதிய உணவின் போது அப்பா, 
சனிக்கிழமை மதியம் வகுப்புத் தோழர்களை உதவிக்கு அழைத்திருந்தனர். இருந்தாலும் படகை வேலைக்காரி அறை வரைதான் கொண்டுவர முடிந்தது. 
"பாராட்டுகள். இனி என்ன" என்றார் அப்பா. 
"ஒன்றுமில்லை. படகை அறையினுள் கொண்டுவர விரும்பினோம். வந்தாயிற்று." 
பதன்தோறும் பையன்களை விட்டுவிட்டு சினிமாவுக்கு சென்றது போல அன்றும். வீட்டின் பிரபுக்களான பையன்கள் கதவு, ஜன்னல்களை மூடி வசிப்பறையின் மின்குமிழை உடைத்தார்கள். குமிழ் உடைந்து பாய்ந்த தண்ணீரின் குளுமையான, தங்க ஒளியை மூன்று அடி ஆழம் வரை செல்ல வைத்தனர். மின்சாரத்தை நீக்கி படகை எடுத்து வீட்டுத் தீவுகளுக்கு விருப்பம்போல் விட்டனர். 


வீட்டுச்சாமான் கவிதை அரங்கில் நான் சொல்லியிருந்த என் முக்கியமற்ற கருத்தின் விளைவுதான் பையன்களின் சாகசம். விசையை அழுத்தி விளக்கு எரிவது ஏன். டோடோ கேட்டான். அதை நினைக்க பயமாகத்தான் இருந்தது. 
நீரைப் போன்றது ஒளி. குழாயைத் திறந்ததும் வெளியே வருவதுபோல" என்றேன். 
புதன் இரவுகளில் படகு ஓட்டியது இப்படியாகத்தான். கோணமானி திசைமானிகளைக் கையாளக் கற்றுக் கொண்டதும் இப்படித்தான். சினிமாவிலிருந்து திரும்பும்போது உலர் நிலத்தில் தேவதைகளாகக் குழந்தைகள் துயில்வதைக் கண்டனர். மாதங்கள் பல சென்றதும் தூரம் போக விரும்பி நீர்ச்சறுக்கும் பிரத்தியேக உடைகள், அழுத்தத் துப்பாக்கி, முகமூடி, துடுப்பு, டாங்கிகளையும் கேட்டார்கள். 
"பயனற்ற படகை வேலைக்காரி அறையில் போட்டு வைத்திருப்பதே தவறுதான். இப்போது நீர்ச்சறுக்கு உடைகளைக் கேட்கிறீர்களே" என்றார் அப்பா. 
"முதல் செமஸ்டரில் கார்டெனியா தங்கப்பரிசை ஜெயித்தால்" என்று கேட்டான் ஜோயல். 
"போதும், போதும்" என அலறினாள் அம்மா. 
அவள் கண்டிப்பதைக் கடிந்துகொண்டார் அப்பா. "வேண்டியவற்றைச் செய்யாமல் விரும்பியதை அடைய எதையும் செய்வார்கள், ஆசிரியரின் நாற்காலியில் அமரக்கூடச் செய்வார்கள்" என்றாள் அம்மா. 
ஏதும் சொல்லவில்லை பெற்றோர்கள். 
சொல்லியிருந்த பரிசுகளை ஜெயித்து ஆசிரியத் தலைமையின் அங்கீகாரத்தைப் பெற்றார்கள் பையன்கள். அன்று மதியமே நீர்ச்சறுக்கு உடைகளின் பார்சலைப் படுக்கையில் கண்டார்கள். 
அடுத்த புதன் Last Tango in Paris சினிமா. 
வீட்டிலோ பன்னிரண்டு அடி ஆழத்தை படுக்கை நாற்காலிகளுக்கு அடியில் சுறா மீன்களாக நீந்தி இருட்டில் வருஷக்கணக்கில் தொலைந்திருந்தவற்றை ஒளி ஆழத்திலிருந்து மீட்டனர். அந்த வருஷம் சிறந்த மாணவர் பரிசும் சான்றிதழ் பெற்றதால் கேட்காமலேயே வேண்டியதும் வகுப்புத் தோழர்களுக்கு விருந்து வேண்டியும் கிடைத்தன. 
269 

தனிமையில் அம்மாவுடன் உற்சாகமடைந்தார். "வளர்ந்து வருவதற்கு நிரூபணம் என்றார் அப்பா. 
"இந்த வார்த்தைகள் ரட்சகரின் காதில் விழட்டும்" என்றாள் அம்மா. 
புதன் கிழமை The Battle of Algiers சினிமா . 
காஸ்டெல்லானா வீதிவழியே நடந்து சென்றவர்கள் கண்ட, மரங்களில் மறைந்த, கட்டிடத்திலிருந்தோ ஒளி நீர் பொங்கி உப்பரிகைகளில் பாய்ந்து முகப்பில் பொழிந்து நிழற்சாலையில் தங்க வெள்ளமென ஓடி காடரமா வரையிலும் நகரத்தை தழல்விடச் செய்தது. 
வந்த தீ அணைப்புக்காரர்களோ ஐந்தாவது மாடிக் கதவை உடைத்து திறந்த போது கூரைவரை நிரம்பியிருந்த ஒளியைப் பார்த்தார்கள். குடித்துப் போட்ட போத்தல்களுக்கும் பாதி மூடியிருந்த கப்பலின் கொடியாக, தங்க மினுப்பிலான போர்வையைக் கொண்ட பழைய பியானோவுக்கும் இடையில் சிறுத்தைத் தோல் போர்த்திய நாற்காலிகள் மிதந்து கொண் டிருந்தன. வீட்டுச் சாமான் கள் கவித்துவம் பொங்கி சமையலறையில் இறக்கைகளுடன் பறந்து சென்றன. குழந்தைகள் நடனத்துக்கான இசைக் கருவிகள் அம்மாவின் மீன் தொட்டியிலிருந்து விடுபட்ட ஒளிச்சகதியில் சந்தோஷத்தில் துடிதுடித்த ஒரே ஜீவிகளான மீன்களுக்கு இடையே நீந்தின. 
குளியலறையில் பல் துலக்கும் பிரஷ்களும் அப்பாவின் ஆணுறைகளும் அம்மாவின் க்ரீம் பாட்டில்களும் பொய்ப்பல்லும் படுக்கை அறை டிவியில் வயது வந்தவர்களுக்கான நள்ளிரவுப் படத்தின் கடைசி அத்தியாயமும் மிதந்து கொண்டிருந்தன. 
அறையின் மூலையில் நீர் ஓட்டத்தில் துடுப்புப் போட்டுக் கொண்டு முகமூடியுடன் கலங்கரை விளக்கத்தைத் தேடிக் கொண்டு டோடோ. படகின் கூரான முன்பகுதியில் துருவ நட்சத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டே ஜோயல். 
பள்ளிக்கூடப் பாடலுடனும் தலைமை ஆசிரியரைக் கேலி செய்ய அதன் வார்த்தைகளை மாற்றிப் போட்டுக் கொண்டும் அப்பாவின் போத்தலில் இருந்து கோப்பை பிராந்தி திருடிக் கொண்டும் ஜெரேனியப் பூத்தொட்டியில் ஒன்றுக்கு இருந்துகொண்டும் அந்தக் கணத்தின் அமரத்துவத்தில் வீடு பூராவும் மிதந்திருக்கிற முப்பத்திஏழு வகுப்புத் தோழர்கள். 
பல விளக்குகள் எரிவதால் வீடு முழுக்க வெள்ளம். 
270 

இலக்கம் 47 காஸ்டெல்லானா வீதியின் ஐந்தாவது மாடியில் புனித ஜூலியன் ஹாஸ்பிடாலர் ஆரம்பப் பள்ளியின் இரண்டு முழுவகுப்புகளும் மூழ்கித்தான் போனார்கள் எரியும் கோடைகளையும் வாடைமிக்க பனிக் காலங்களையும் கொண்டதும் சமுத்திரமும் ஆறும் அற்றதும் ஒளியில் கப்பல் விடும் கலை அறியா தரைசார் மனிதர்கள் வசிப்பதுமான ஸ்பானிய மாட்ரிட் நகரத்தில் இது நடந்தது இப்படியாகத்தான். 
தமிழில் - கோபிகிருஷ்ணன் 

No comments:

Post a Comment