தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, November 23, 2021

கூந்தலில் மருக்கொழுந்து சூடிய ஈஞ்ச நாடன் கதை -கோணங்கி ===============================================================

கூந்தலில் மருக்கொழுந்து சூடிய ஈஞ்ச நாடன் கதை -கோணங்கி

===============================================================

ஆம்புராவில் உருவி எடுத்த செந்நிற அரவத்தை கையில் விட்ட வேடன் மறைந்த கனவில் உடல்மேல் தொட்டு நெளிந்து சுற்றி காமுக ஈர்ப்பில் உறிஞ்சி நகரும் அரவத்தின் பல்அடுக்கு ஆயிரம் குமிழ் குமிழாய் உதிரம் தொட்டு எலும்புடன் ஊறும் அருவி விலாவெலும்பில் இரைத்துபாய சுருதிமேல் பறந்தது செந்நிறமாய் விண் நோக்கி, கமகங்களின் வளைவில் கீழ்பாய்ந்த ஆதித் தோட்டத்து மரக் கிளையில் இலையில் ஒன்றாகி ஏன் எங்கே எனக் கேட்ட அரவத்தின் விழிப்பில் கட்புலனாகா பாசிக்கண் தோன்றிச் சுழியும் நீரில் மிதந்து கொண்டிருந்த பார்வை சுழன்று எல்லாத் திசையிலும் பாய்ந்த செந்நிற அரவம் பாசி ஒளி மூடியிருந்த குகையில் உதிரும் வர்ண மூலிகை ஒளிச் சாறு கசிந்து முதிர முதிரப் புலப்பட்ட கனவு நெளிந்து செந்நிறக் குகையில் தீட்டிய பாறைப் படிவுகளில் நிறம்பல தோன்றி ஆயிரம் நரம்புத்தொகை கொண்ட ஈஞ்சநாட்டு அரக்கர் இனத்தின் பேரியாழ் ஈஞ்சமரங்கள் சூழ்ந்த திணையில் மௌனமாய் கரையும் கருதிகள் வளைந்து கமகங்கள் படர்ந்த இலைகளுடன் ஈஞ்சாள் எனும் கீழை ஸ்திரீயின் முன் தோன்றியிராத செந்நிற கதாச்சுரள் சுருண்டு கொண்டது பாசிக்கண்ணில் நீர் முள்ளிப்பாசிகள் மெல்ல நகர்ந்து அவள் உடலை மூடியிருந்தன பச்சையால். 

மயங்கிப் பரவிய கண்ணாடிச் சட்டத்துக்குள் எப்போதும் பூட்டியிருக்கும் அவ்வீட்டு ஈச்ச நிழலில் ஆடும் ஊஞ்சலில் ஈஞ்சாளின் தாயின் தாத்தா செதிலாய் சுருண்டு வளைந்து வயோதிக மூச்சில் ஆயிரம் நெல்கதிரேந்தி உதிர் நரம்புகளில் விரல் அசைய கிழவனின் நிர்வாண உடல் பாசிபடர்ந்து ஒவ்வொரு நெல் ஈக்கியிலும் பூதகண சுரவரிசை ஒற்றைச் சடைக்குதிரைவாலிக் கதிர் அடுக்கைக் கொண்டு பூமியில் குனிந்து நாணி தன் வேரைத்தொட குதிரைவாலி உதிர்ந்தோடும் விண்பரப்பில் அதிரும் சோகம் கட்புலனாகா ஈஞ்சம்பூவின் அடியில் பதுங்கும் செந்நிற அரவம் படர்ந்த கன்னிகை ஈஞ்சாளின் நீள விரல்கள் நேர்த்தியான சுரங்கள் நெல்லின் ஒளிக்கோர்வைகளாக மாறி மறைந்த நிலத்தின் வெண்பளிங்கு மிருகங்கள் பெயர்ந்து உறும வயலில் உறைந்துவிட்ட அலை கர அடுக்கைத் துளைத்து மேல் எழும் குதிரைவாலிக் கதிரடுக்கு சடைசடையாய் அகரனின் யாழ் நரம்பில் குதிரைவாலித்தவசம் சுழன்று உருள சிங்கங்கள் மயங்கும் செந்நிற அரவின் புலத்தில் திறந்த கதவுவழியே வந்த ஊஞ்சலில் ஆடும் கிழவன் உடல் செவுளில் புதைந்து செம்மஞ்சள் பிடறி முடிகளில் சிலிர்த்து படபடவென விதிர்த்து இரவெல்லாம் உரசி லயிக்கும் அசைவற்ற வன ராசாக்களான சிங்க முகங்கள் தோன்றி விசும்பிய கால்தூக்கி கிழவன் தோள்களில் வைத்து நாக்கால் தடவும் சடை முடியை 

க 


122 

மரச்சதுரத்தினின்று வெளியேற ஆடிக் கொண்டிருக்கிறான் ஊஞ்சலில். கையிலேந்திய ஒவ்வொரு கதிரினாலும் ஈஞ்ச ஓலையில் சுருண்டிருந்த ஒவ்வொரு நரம்புகளினூடே கீறியவாறிருந்த சங்கேத குறிகளை நூறுவகை நெல்லாக மாற்றி உதிரும் நாற்று வர்ண மடலை மடித்து அடுத்தகதிரை எடுத்தான் கிழவன். உயரமான கதிரிலிருந்த நெல் உதிர்ந்து தரையில் சிந்தியவாறு உருளும். வீட்டுக்கு வெளியேயும் சிதறிய மணிகளில் கிழவன் கீறிய கோடுகள் இருக்கும். வெளியில் எடுத்துச் செல்ல முடியாத பேரியாழில் பதிந்து கிடக்கும் நெல்மணிகளோடு ஈஞ்சாளும், நெல் நிரம்பிய அவள் எலும்புத்தண்டில் பாயும் நரம்பு அருவி வளைய எண்புகளில் கற்றி வடிவமைந்த பல வெப்ப ரத்தப்பிறவிகளாய்த் தொடரும் ஈஞ்ச யாழைத் தேடி புலப்படா நிலங்களின் தொன்மம் அலைந்த வாறிருக்கும். 


ஈஞ்சவயல் எனும் பழைய ஊரின் இழப்பிலிருந்து மறைந்த யாழ் ஐந்து நிலங்களில் மயங்கி அலைவுறுகிறது. கரடிமுடியடர்ந்த ஈஞ்சானின் உடலில் முதுகுச் சுழிகள் சுற்றி வந்தன ஏறுபூறாணாய். இறங்குபூறாணின் விதிவசத்தால் இடிமேல் இடிச் சுழிகள், சுவர் தேள் கடந்து செல்கிறது பாசி மூடிய யாழை. விருச்சிக விரல்கள் தந்தியில்பட்டு விஷஒலி அதிர ராசி மண்டலத்தில் மறைந்து தேய்ந்தது. நிர்வாணியின் கையில் வரைந்த நகராத பச்சை விருச்சிகம் மெல்ல நகர்ந்து முணுமுணுத்தது அந்தரங்கத்தில், தரைக்குப் பதிலாய் பச்சை வெள்ளை சதுரங்கக் கட்டங்களில் மாறிமாறிச் செல்லும் ஊஞ்சலின் இரு நிழல்களில் வேறு யாரோ நகர்ந்து வருகிறார்கள் அவனிடம். ஊசி ஊசியான ஈஞ்சம் பூக்களை வைத்து வெள்ளைக்கட்டங்களில் மறைந்திருக்கிறான் ஈஞ்சான். அவனிடம் தோற்றுப் போன வேடர்கள் வில்யாழின் ஒற்றை நாண் அதிரப் பச்சைக் கட்டங்களில் மறைந்தவாறே அழைக்கிறார்கள் மிருகங்களை, ஓடிச் செல்லும் வேடர் கையில் முதல் வில்லில் அதிர்ந்த நரம்பே யாழின் ஆதி ஸ்ருதி என வாதாடுகிறான் வேடன் பூக்களிடம். தலைகவிழ்ந்த ஈஞ்சானின் கண்களின் ஆழத்தில் பூக்களின் மர்மம் ஒளிந்திருக்கக்கூடும். எல்லா நிறங்களின் ஸ்ருதி எல்லையில் மயங்கும் தேரிப்பூவின் மெலிவு மெலிவுக்கு மெலிவு சமன் வலிவு வலிவுக்கு வலிவு என ஐந்து தாளங்களில் ஊசிப் பூக்கள் மாறி மாறி வெள்ளைப் பூவின் விநோதம் அவன். 


கண்ணைக் குருடாக்கும் இருளால் தைக்கப்பட்டிருந்த ஈஞ்சாளின் இமையுள் பதிந்த நெல் மெல்லத் திறந்து வெளிர் மஞ்சலான நீளமான இரு உமியில் கோடு கோடாய் கீறியிருந்த கதா ஒளி வயல் நிலத்தில் காயும் கதிர்கள் மீது படிய எல்லா மணிகளிலும் பால் ஒளி உறைந்து அறுப்பறுக்கும் இருளடைந்த ஜனத்தின் பாடு குருதியோடு நெல்லுக்குள் மறைந்துவிட ஈஞ்சாள் ஏந்தி வந்த கர்ப்பத்தில் ஒரு நெல்லின் உரிமை கொண்டாடி மரபாய் தரைதொட்டு எழுந்த எலும்புக் கருக்கறிவாள் வீசி வீசி உரையாடலைத் தொடங்க அவர்கள் பின்னே விட்டுச் சென்ற கட்டைத்தாள் ஈஞ்சாளின் காலால் மிதிக்கப்பட்டபோது குத்தியது. சிறு சிறு வெண் மேகங்கள் சூரியனை மெதுவாய் கடக்கும்போது வயல் வழியாக நிழல்பாய்ந்தோடியது, 


அறுப்புக்காரர்கள் குனிந்து நகர அவர்கள் பின்னே அலாதியாக இருட்டிவரும் சிறுபெண் ஈஞ்சாள் சிந்தின கதிரை சேகரித்து வந்தாள். 


மெல்லிய மூச்சுடன் அசையும் ஈச்சமரங்களிடையே நீண்ட முடிவளர்த்த ஈஞ்ச நாட்டு அறுப்புக்காரர்கள் சிணுக்கோலியால் முடிசிலுப்பி கோணல் கொண்டை 


123 

ஊசி சொருவி முடிந்த குழலில் உண்ணிப்பூவும் மருக்கொழுந்தும் சூடித் திரிந்தார்கள் தேரியில், செடிகள் மறைக்க கூந்தல் விரித்த ஆண்கள் கள்ளிக் குடி.அருவாள் வீச்சில் நீண்டு வளைந்து கிடந்த நிலப்பரப்பில் நேருக்குநேர் கழுத்தைக் குடைந்து எடுத்த ஈச்சங்கள் ஊறி நுரைத்துப் புளித்த கல்சுவரில் உதிரும் யாழ் வடிவங்களைப் பார்த்தவாறு முன் அறியப்படாத காலத்துள் இடறி விழுந்து மருதத்தில் பொங்கும் தேரைக் கலயங்களுடன் கள் உண்ட வெறி கண்களில் சிவந்து பழுத்து வாய குலவை ஒலி ஈஞ்சங்காட்டு மிருகங்களைக் கூவி அழைக்கும். தானே எழுந்து வளைந்த தேரி நில வெண்வெளி சுருண்டு ஹோ ஹோ வென மனதில் அலறி வெளியில் மௌனம் காத்த கற்பகோடி வருஷ உருளலில் மிதந்த சுருதியசைவில் சமைந்த கூரைவீடுகளின் வாசல் ஜன்னல் கற்களில் ஒளிர்புகை நீலஅவாந்திரம் காத்திருந்தது எட்டிப் பார்த்தவாறு. தொலைவில் அசையும் காற்று கிளைகளில் தங்காமல் போய் வீடுகளின் ஈச்ச ஓலைகளில் ஒலிப்படாமல் உறைந்து துயிலும் நிசப்தத்தில் ஈஞ்சநாட்டார் விழித்த கண் உருட்டி எதிரியின் கழுத்தைக் குடைந்து எடுத்த கள்ளில் கடிக்கும் காடி உறுமலில் வனமே நுரைத்தது பாறைகளில் சிரிப்பும் ஊளையும் கொண்ட நரிகள் தேரை குடித்த வெறியில் கால் தூக்கி வால் சுழற்றி ஏன் ஏன் எனக்கேட்டு தன் வாலுடன் பேசும். வேடர் வில்யாழ் அதிர்வுகளை நரிதன் குரலில் ஊளையிட ஒற்றை நரம்பை முறுக்கி கானில் ஓடும் வேடர் காலோசை திடுதிடுமெனக் கேட்டது தொலைவில், நகரும் பாறைகள் மீது ஜந்துக்கள் ஊர்ந்து குரல்பலவாய் வந்து ஈக்கியாய் கரைந்து ஆயிரமாயிரம் நரம்புத்தொகை கொண்ட மிருகயாழ் ஈஞ்ச நிலத்தில் எரிய தீவிர மயக்கத்தில் ஈஞ்சர்களும் நரியாய் கூகையாய் வெருளாந்தையாய் அகவி வௌவாலாய் மாறிப்பறந்து ஊஞ்சலில் ஆடும் கிழவன் உடலில் சிறகடித்து மறைகிறார்கள். அவை கீறிய குரல்கோடுகளை கற்றையாக ஏந்திய நெல்கதிரில் சேர்த்து பிடித்திருந்தான் ஈஞ்சான். ஊருக்குள் பூனைவேட்டை நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள் பெண்கள், உணவுக்காக வெளியில் அலைந்து கொண்டிருக்கிறான் எங்கோ. வாயோரம் உறைந்திருந்த ரத்தத் துளிகளோடு முணங்குகிறான் கிழவன். ரத்தவாடை கண்ட மிருகமாய் மேலும் கீழும் இருநிழல்கள் நடமாடக்கூடும். வேடர்கள் பின் தொடர்கிறார்களா. இரவு முழுவதும் வேடர் களுடன் வாதாடிக் கொண்டிருக்கிறான் தானாகவே. கண்ணாடிச் சட்டத்தின் திருகாணிகளில் பூனைரத்தம் பட்டு கிறுகிறுத்து உளறி நடுங்கும் ஆணிகள், கண்ணாடியைக் கரும்பும் சப்தம் இரவுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. வந்து பார்த்தால் கிழவன் பற்கள் அசைபோட்டவாறு பீங்கானை விழுங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. குடலை அறுத்துக் கொள்ள விரும்புகிறான் போலும். குடலுக்குள் வளர்ந்த காளான் ஏற்படுத்திய உணர்வுகளால் புராதன வீதிகளில் நடமாடக்கூடும். குடல்வயிற்றை அறுத்து காளானைப்பார்க்க விரும்பினான். முட்டைக்காளானுடன் பேசி வறக்காளான் பொறுக்கி வேகவைக்காமல் அசை போட்டது வாய். குமிழ்விட்டுவந்த வாக்காளான் காடுகளில் அனந்தவெளி அசைவதைப் பார்த்தான். அவளால் ஒன்றும் பேசமுடிவதில்லை அவனோடு விநோதப்பழக்கங்களுக்கு ஆளான வயோதிகனின் சித்தம் இசையும் ரத்தமும் கலந்து வெளிப்பட்டது தீராமல். அறையுள் வௌவால் ஒன்று பறந்து பறந்து கிழவனை எச்சரித்தும் சிரித்தும் கூக்குரலிட்டும் பாடிக்கொண்டிருந்தது. அவனிடத்தில் உலர்ந்த நெல்வாடை வீசியது. அறுவடைக்காலம் துவங்கி விட்டதென்று நெல்லின் காற்று வீசிக் கொண்டிருந்தது அருகே. காய்ந்த 


124 

நெல்கதிரின் மணம் - அலையலையாய் பாவி விருட்சங்களிடையே போய் பொடிப்பறவைகளை தேன் சிட்டுக்களை தொட்டு வயல் ஏவின. 


வந்தேறி ஜனம் வயலில் குடிபோட்டு அறுவடையான வயலின் குறுக்கே நெல் பெட்டியுடன் பாதைபோட்டுச் செல்ல மேகத்தின் நிழல்கள் உருவை மாற்ற வயல்மேல் செல்வதை அண்ணாந்து பார்த்தாள். ஆயிரம் நரம்புத்தொகை கொண்ட பாசிக் கண்ணில் மேகங்கள் சிதறி வளைந்து கீழே சரிய நீரில் சலன மடைந்தவாறு முன் ஜனத்தின் ஆதிச்சருக்கத்தை பேரியாழின் அதிர்வு வழி சொல்லத் தொடங்கினான் கிழவன் ஒரு ராத்திரியில். 


ஏதோ மழை இரவுகளில் பழுப்பு நிற தினைமணிகள் கண்திறந்து பேசிய படபடத்த இமைமேல் வரிவரியாக கீறிய பாராயணத் தாள்கள் வெளிறி உதிர ஆவி விளக்கின் செந்நிற சுடரில் வந்த பார்வை தீண்டி நகர்ந்த வரிகளில் குமிழ்விட்ட பாறை முகங்களின் கற்பனா வீரர்கள் கிளம்பி ஊரை அரசிருக்க வந்து சுவர் ஓரம் ஒளிந்து கேட்டனர் தங்கள் மீதான புராதனத்தின் ஏற்ற இறக்கமான குரலின் ராகத்தை. தினைக்காட்டின் ஊடே போன வண்டிச் சக்கரம் மத்தளமாய் முழங்கி தூர முணுமுணுத்தது தினையுடன். அம்பாரமாய் அறுத்து குவிந்த தினைக்கதிர் பொடிச்சுடர்களாய் விழித்து ஊர்மடத்தில் கூடிய தலைகள் சாய்த்து அதிசயத்தில் புகுந்து கேட்ட பெரிய எழுத்துத்தாளில் உதிர்ந்தோடிய தினைவாசனை வீசும் காடு பழுப்புநிறமாய் தோன்றி அசைந்தது. யாரோ காய்ந்த தினைக் காட்டின் ஊடே ஓடி வருகிறார்கள். காடுசூழ்ந்த கூரை மடத்து பெரியவரின் கந்து கந்தலான ஆடைமேல் பாராயணவாசகம் காயும். பெண்களும் முதியவர்களும் யுவர்களும் கண்விழித்துப் பார்த்த தேரிவெளியில் எல்லாக் கோடுகளுமே வளைந்தது வெளியுடன். எதையும் கண்ணால் சுருட்டி கற்பனை காண இருந்த பழுப்புக் கதிர் தினைமுளைத்து வெளிவந்து பாராயணம் கேட்போர் மனம் குமுறியது. மடத்தின் விளக்கடியில் புஸ்தகப்பலகையில் கீறிய மரங்களின் நிகண்டு வரிசைமாறி பின்புலமானது ஊர்ப்புராணம். வரிவிளக்கில் அசையும் வீச்சின் நிழல்கள் விருட்சங்களின் அந்தரங்கப்பாதையில் செல்ல ஜனம் கூடி இருட்டுத் தலைகள் திறந்த ஏடுகளில் கற்பனை வலியும் வசீகரஉருக்களும் சுடர்களாய் அசைந்து தினைக்கதிர் திறந்து ஆயிரம் எழுத்தில் விசும்பி எழுந்த வீரர் ஜனத்தின் தாந்திரீக 

மூளைகளில் விநோதமாய் வளைந்து வருகிறார்கள் திசாதிசையில். 

அப்பால் ஜனம் ஊழியில் திருகிய காலச்சுழியில் எரியும் சுருதிகள் நெல்கதிர்களில் பற்றி இசைக்கப்பட்ட வரப்பில் துவண்டு கிடக்கும் வெளிர்மஞ்சள் கதிர்களிடையே கால்வைக்காமல் தாண்டி நடந்தாள் ஈஞ்சாள். அவர்கள் அறுப்பறுக்கும் வயலில் குனிந்து எதையோ வாதாட விடுகதிர் சேகரித்தவாறே ஈஞ்சாளின் பாசிக்கண் திறந்து கொட்டிய முன் காணா நீள நெல்லை அவர்கள் பார்த்து தரை மேலே முகம் குப்புற விழுந்து அழுது ஈக்கி நெல்மணிகளை கையிலேந்தி அதில் இருட்டு இனத்தின் ஜாடை வெளிப்படக் கண்டு கதறினார்கள். அது தரையில் , விழுந்தபோது ஓசையும் ஒளியும் உண்டானது. வானத்திலிருந்து விழுந்த ஆலங் கட்டியின் குளிர்கொண்ட ஈக்கி நெல்லை விரல்களுக்கிடையே மூடினார்கள் - நடுங்கியவாறே 

அறுப்பு அம்பாரத்தின் மேல் அவளை அமரவைத்து “ராஜாத்தியே உன்கையும் காலும் காணாமல்போன தகப்பனும் மகனும் போலிருப்பதேன். எங்கள் 


125 

சாடையில் விழிக்கப் பண்ணுவதேன் உன் கண்கள். வனாந்திரத்திலிருக்கும் நமது குடியிருப்பில் திரியும் காட்டுப்பகடையின் மிருகத்தொலியால் உனை மூடுவோம். தொலைவாகப் போன அறுப்புக்காரர்கள் வந்து பார்க்கும் வரை எங்களோடிரு குச்சிலிலே. காடிக்கஞ்சியில் கை நனைத்து பகிர்ந்து கொள் மகளே. உன் முக வெட்டு தைலான் பறவை போலவும் தண்ணிப்பார்வை குடும்பனின் மண் வெட்டியாகவும் இருக்கிறதே. அவன் பட்டினவாசலில் காத்திருக்கிறான் நெல் மணக்க. நகரத்தார் வந்து, அவனை மோந்து பார்ப்பதில்லை. நெல் சுமையோடு காணாமல்போன முத்து வேலை அமைத்துவா'' என்றார்கள். அவளும் பட்டன வாசலில் நிற்கக்கூடும். அவள் திரும்பாவிட்டால் நீயொருத்தி ஆதரவாக இருந்துவிடு குட்டியே என கூவினார்கள் பச்சைப்பெண்கள். தற் செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்தவயல் நிலம் ஈஞ்சாளின் வமிசத்தாரின் முன் வயலாக இருக்கும். பாசிக் கண்ணைப் பார்த்து பலரும் கூடி குலவையிட்டு கதிர் பிடித்து அறுத்தார்கள். உலந்த வயல்மீது எழுந்த காற்று அடுக்கடுக்காய் ஊர் நாட்களின் பகல் ஒலி மாறி வந்தது. 

இலைகள் படர்ந்த ஈஞ்சாள் ஜன்மதேசத்திலிருந்து முன் அறிந்திராத ஜனங்களிடத்தில் வந்து வயல் மேட்டில் வைக்கோல் வெளிறிய கூரை நிழலில் வாசமாயிருந்தாள். அதிசயித்திருந்தன காடுகள். வனாந்திரப்பட்சிகளெல்லாம் வயலிறங்கி அவள் தடத்து வழிநடந்து ரேகையிலிருந்து ஒலியை திரும்பக்கூறி கூச்ச மடைந்து ஈக்கி நெல் தேடி அந்த ஊரில் படர்ந்திருந்த கிளைகளில் தாமசித்தன சத்தங்களோடு. கனி மரங்கள் பூத்து வண்டுகள் கரகரத்து உராய்ந்து சிலிர்த்து சொரிந்த தித்திப்பான கனிகளையுதிர்த்து சூதெறும்புகள் அறியாவண்ணம் கனி வாசத்தில் சிரித்தன மயங்கி. 


பிழைக்க வந்த இடத்துக்கு வயதுசென்ற அத்தையோடு கூட வந்த கனவின் செந்நிற அரவம் வழிநடந்த தேசாந்திரங்களில் மறைந்து விட நீரைக்காணாமல் சத்தமிட்டு அழுத மாடுகளோடு சேர்ந்து அழுதார்கள். சுருட்டைமாடுகள் உயரத்தில் * காதசைத்து பாறைக்குள் உருளும் தாய்ப்பசுவின் கண்ணீர் திரும்பிய திசை யெல்லாம் தாகத்தில் அலைந்தமாடுகள் பின்னே சென்றார்கள் ஈஞ்சாளும் அத்தைக்காரியும், இரவெல்லாம் கனவின்றி புலம்பி அழுதாள் அத்தைக்காரி. உலர்ந்த நில நீலவிந்தில் சுருண்டு உயிரின் அனந்தத்தில் கனவிருந்த செந்நிற அரவு திரும்பி வந்து அவள் முன் நெற்றிவரை விசும்பி படமெடுத்து வனாந்திரத்தில் பசித்திருந்த தாது வருஷத்தின் நினைவுகளை வதைபடும் காதையாக உரைத்தது புராணவிநோதத்தில். எழுத்தாணிகளில் இறங்காத துடி துயரங்கள் கூந்தப் பனைகாயும் கூம்பறுத்து சரியும் பாழ்தேரி ஓலையாய் சரசரத்து வளைந்து கூட்டிய ஓலைக்கூடில் ஈக்கி முற்றி பாலறுந்து கிடந்தது பெண்பனை. 


“நான் வயது சென்றவள். ஒரு புருஷனோடும் வாழத்தக்கவள் அல்ல. திரும்பிப் போய்விடு மகளே. வேண்டாம் என்னைப் பின் தொடர, திரும்பி விடு மகளே." என்றாள் ஊசி நெல்லை இழந்த அத்தை. அவள் கிழிந்த காதுடனே அதிகக் சுசப்பான பாதையில் தனியே நடக்க விரும்பினாள். அவள் காதுத் தோடில் இருந்த சிவப்புக் கல் தெறித்து உருண்டது. ஆறுகல்லில் மிஞ்சிய ஒன்றும் கிடுகிடுத்தது. களிம்பேறிய கம்மலில் இருந்த காலக் கருப்பு இருட்டி அழைத்தது உள்ளே. 


126 இழந்துவிட்ட தேரியில் நின்ற பனைகளையும் ஈஞ்சமரங்களிடையே திரிந்த புருஷனையும் வழிநெடுக நினைத்துப் புலம்பினாள் அத்தைக்காரி. 


அவர்கள் கால்களை அடக்கிக் கொள்ளாமல் ஊரைவிட்டு வெளியேறி பிழைக்க விரும்பி அலைவுற்று வந்தனர். கதவு மூடிக்கிடந்த பல ஊர்களில் திரிகருத்த விளக்குகளிடம் சென்று வருந்தி காயங்களைக் காட்டி மருகினார்கள் இருவரும். குடியிருப்பு இல்லாத நூற்றி முப்பத்தாறு கிராமங்களில் கருத்த மாடாக்குழியில் முட்டைவிளக்கு மட்டும் அணையாதிருக்கும். ஊரைவிட்டே போனவர்கள் ஒரு சில நெல்லையும் போணித் தண்ணீரையும் லாடஞ்செம்பையும் பனை விசிறியையும் வைத்து சுடரில்வாதாடி அழுதிருப்பார்கள். நெல் அளக்கும் மரக்காளை தீபத்தருகில் யார் வந்தும் எடுத்துச் சென்று மணிகளை அளந்து கொள்ள வைத்திருந்தனர். லாடஞ்செம்பிலிருந்த நீரை எறும்புகளும் வாயில்லாப்பட்சிகளும் வந்து குடித்திருக்கும். நீர் குறையக்குறைய விளக்கும் சுண்டிச் சுருங்கிவரும். வனாந்திரங்களில் இல்லாத கீதாரிகள் குடியிருந்த கிராமங்களும் கண்மலையில் குடியிருப்பவர்களும் காணாமல் போன வனங்களும் அதில் மறைந்திருக்கும் ஊர்களும் மெல்ல நகர தெற்கிலுள்ள பட்டனங்களும் அடைக்கப்பட்டன. அவைகளைத் திறப்பாருமில்லை. 


நடவாதிருந்த பாதைகளில் போய் பட்டனத்தின் வாயிலில் நின்று கூவினார்கள் மனிதரை. அபயக்குரல் சுழன்று சென்று சுவர்களில் மோதி வளைவாய் எதிரொலித்தது. நகரை உருட்டும் எலிகள் வந்து பாசிக்கண்களால் எதிரில் ஈஞ்சாளையும் அத்தைக்காரியையும் பார்த்து புலம்பியது. தன் இருபாசிக் கண்களில் நகரில் திரியும் அனாதைகளை பைத்தியக்காரிகளை வெளிப்படுத்தி உள்ளே வருமாறு கெஞ்சின பாசிக்கண்களால். அவற்றோடு குனிந்து பலவாறு சொல்லிமாலாது தீராது உருகினாள் அத்தை. விளக்குத் தூண்களில் மினுக்கிக் கொண்டிருந்த திரியும் நகரத்தாரின் கண்ணீரும் எழுதப்பட்டிருக்கிறது. தொலைவே போய் தண்ணீர் எடுக்கப் போன பிள்ளைகளுக்காக அடைக்கப்பட்ட பட்டிணப்பெண்கள் காத்திருக்கிறார்கள் வாசலில். நீர்காணா பட்டிணக்காரைகள் பாளம்பாளமாய் பிழந்து தாகத்துடனிருந்தன. காற்றுக்காக ஏங்கிய பட்சிகள் கோட்டை வாயிலில் தொங்கி மறந்து போன நீரில் சுழலும் பாசிக் கண் தோன்றி எலிகளோடு வருவதைக் கண்டு பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் சுவர் மறைவில். ஒவ்வொரு உடலிலிலும் புகுந்த பாசிக் கண் எலிகளுடன் உறக்கமின்றி அலைந்தவாறிருந்தன. பஞ்சத்தால் வருந்துவாரும் தாது வருஷத்தில் தேசாந்திரத்தில் அலைவாரும் புகுந்த வீதிகளே வெம்பியிருக்கும். பட்டணத்திலிருந்து போன பிள்ளைகள் தண்ணீர் தேடி அது கிடையாமல் அவர்கள் நாவு தாகத்தால் வறலும் போது உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும் பள்ளத்தாக்குகளில் ஊற்றுகளையும் திறந்து சிலர் காணா நீருக்குள் போய் திரும்பாமலிருந்தனர். நீர்த்துறையில் நின்று பட்டணத்தை எட்டும்படி மனிதரைக் கூவினர். பட்டணத்துள்ளே அடக்கிக் கொண்ட கால்களையுடைய பெண்களும் தகப்பன்மார்களும் சுவர்களில் தலை கீழாய் தொங்கி குழாய்களையும் காங்ரீட் கம்பிகளையும் கடித்து பைத்தியமாகி அலறி பிள்ளைகளைக் கூவி மறுகுரல் கொடுத்தாலும் பட்டணத்தின் வெளிமதில்களை எட்டவேயில்லை கூக்குரல். நீரின் மர்மஊற்றுகள் அடைபட்டுப் போன பட்டணங்களைக் கடந்து கானல் அசைந்து கொண்டிருந்தாலும் வறண்ட 


127 பூமி வழி ஈஞ்சாள் நடந்துபோய் பார்த்தாள் நீர் கேணிகள் விருவோடி விட்டிருந்தன உ ணத்தில்.. – 


தேசத்திலே மழையில்லாத பொழுது தரைவெடித்திருந்தது. சம்சாரிகள் வெட்கி தங்கள் தலையை மூடிக்கொண்டனர். ஊர் கழுதைகள் மேடுகளில் நின்று வலு சர்ப்பங்களைப் போல் உட்கொண்டன காற்றை. புல் இல்லாததால் கண் சொருகிய மாடுகள் கட்டுத்தரையை விட்டுகாணாமல் மறையும். கிராம வீதிகளில் பஞ்சத்தில் வாடிய வீடுகளும் வெளிச்சமும் புழுதிபடர்ந்திருந்தது. புருஷனை இழந்த அத்தையின் கண்களிலிருந்து இரவும் பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். அவள் ஒன்றுவிட்ட சகோதரன் குமாரத்தியான ஈஞ்சாள் மகா வேதனையாலும் கொடிய காயத்தினாலும் ஜனத்துடன் சேதப்பட்டிருந்தாள். அப்பொழுது ஈஞ்சாள் சத்தமிட்டு அழுதவாறு "கூட வருவேன் உன்னோடு. நீ மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைவேன்" என்றாள். கிலேசப்பட்ட அத்தைக்காரி குமாரர் இருவரை இழந்து தனித்தவளானாள். சுவரில் ஏறும் சூதெறும்புகளைப் பின்தொடர்ந்து வெறித்தவாறு படுத்திருந்தாள் அலாதியில். கண்ணீரின்றி உலர்ந்துவிட்ட அவள் முகத்தில் எதை எதையோ தேடினாள் ஈஞ்சாள். அவள் பிடிவாதமாய்கூட வருவதைப்பற்றி அதற்குப்பின் அவள் ஒன்றும் சொல்லாமலிருந்தாள். இருவரும் வந்து சேர்ந்த ஈஞ்சவயலில் நெல் அறுப்பு துவங்கியிருந்தது. ஈஞ்சவயலுக்கு அவர்கள் திரும்பிவந்தபோது ஊரார் எல்லோரும் அவர்களைக்குறித்து ஆச்சரியப்பட்டு இவள் காடல்குடியில் வாழ்க்கைப்பட்ட முத்துவேல் என்று பேசிக் கொண்டார்கள். அதற்கு அவள் “நீங்கள் என்னை கிழக்கிலிருந்து வந்த முத்துவேல் என்று சொல்லாமல் ஈஞ்சவயல் காரி முத்துவேல் என்று சொல்லுங்கள். நான் கசந்து போனவள். வெறுமைப்பட்டு வந்தேன். இதோ இந்தக் குட்டி ஈஞ்சவயலிலே மூப்படைந்த தொண்டுக்கிழவனின் பேத்தி ஈஞ்சாள். என்னைக்கிலேசப்படுத்திவிட்ட தேசத்திலிருந்து வந்தேன்'' என்றாள். ஊரார் கேட்டதற்கெல்லாம் வெட்கி லெட்ஜைப்பட்டாள் அத்தை. காடல்குடி பற்றியும் கிழக்கில் இருந்த ஆயிரம்பனை கூட்டத்தில் புருஷன் தாயாதிகள் விட்ட ஆவி களையும் வேப்பங்குளத்து வமிசத்தாரின் தாஷ்டிகமான களவு பற்றி சொன்னாள் கண்கவிழ்ந்து. பெருநாழிச் சந்தையில் கண்ட எத்தனையோ ஆப்பநாட்டு பெண்களின் இடுப்பிலிருந்த சூரி கம்பரக்கத்தி நவதானியப் பெட்டிமேல் வந்த சேவலைப் பற்றி விநோதமாகக் கூறினாள் முத்துவேல். படபடத்த கண்களுடன் புகுந்த நாட்டுக் காடுகளை நினைத்து வெம்பினாள் ஆதூரத்தில். கண்களில் நெல் உதிர்ந்தது. பழுத்திருந்த முத்துவேல் முகம் பார்த்து வயலே அழுதது. அவர்கள் வந்திருந்த இடத்தில் கூடி.விட்ட வயல்காரிகளுக்கு யாரென்று தெரிந்துவிட்டது. அவள் கையைப்பற்றி இழுத்தார்கள். அதுவரை முத்துவேல் காணாத தன்னூர் வழி நடைத்தோற்றங்கள் சோகத்தில் எழுந்து வசீகரம் கொள்ள இருந்தது. அவள் சும்மலிலிருந்த ஒற்றைச் சிகப்புக்கல் உதிர்ந்து தெருவில் சிதறியது ஒளிப்பிழம்பாய், எல்லாம் இருண்டது ஒரு கணம். பிறந்த ஊர் சுவர் பொந்துகளிலிருந்து சில பூச்சிகள் வெளிவந்து அவளைத்தொட்டு ஓடின குதூகலத்தில், செடிகளுக்குத் தெரியும் முத்துவேலின் கண்களிலிருந்த சுருமணியை - அடையாளம் காண இருந்த தாவரங்கள் - வளைந்து அசைத்த இலைகளில் ஒளிந்தது பாழ், ஒவ்வொரு தெருவாகப் போய்ப் பார்த்தாள் கால் பதியாமல், தரையடிக்கற்களின் முனகல். சுரிந்து இழுத்த நீரோட்ட அலைகள் அவள் பாதவிரல்களை கவ்வி ஈர்த்தன 


128 

வேகத்தில், முன் காணாத மரங்களும் ஈச்ச ஓலை வீடுகளும் இடிந்த பழைய வடிவங்கள் மேல் அமைத்திருந்தார்கள். எட்டிய தூரம் வரை வயல் முணங்கியது அவளோடு, பார்வை எட்டிய கால நீட்சியில் பழுத்துக் காய்ந்த வெளிறிய மஞ்சள் வயல் பரவி அசைந்து சுருண்டது தோற்றத்தின் அழியாத படலமாய். தெரு கடந்து நெல் மூடைகளுடன் போன மொட்டை வண்டியை வயதானவர் ஓட்டிச்செல்ல மாட்டு வாசனை அவளைச் சுற்றிப் படரும். தெரு அசைந்து வண்டிச் சக்கரத்தில் கல் உடையும் ஓசை, வண்டிக்குப்பின்னே நெடுக நடந்து போய் ஈஞ்சவயலில் ஆடியவாறு பேரியாழின் நரம்புகளிடையே வீடுகள் பேசின துயரத்தின் சாயல் வயதான தடித்த பாட்டிகளின் தனிமையில் அந்த நரம்புகள் அதிர்ந்து ஒலித்தன. முத்துவேல் பிறந்த வீட்டின் இருண்ட அறையில் நெல் கற்றையுடன் கிழவன் இருந்தான். இவ்வளவு நெடிய காலம் வாழ்ந்த கிழவன் அங்கு வேறு யாருமே இருக்கவில்லை. கிழவன் கண்களை உற்றுப்பார்த்தாள் முத்துவேல். அதில் எல்லா நிறங்களும் பிரிந்து அவளுக்கான சம்பிரதாயமும் ஒளிந்திருக்கக்கூடும். அதுவரை காணாதிருந்த பூச்சிகள் சுவர்களில் இரைந்து கத்தின. தெருவில் அப்போது தோன்றிய மர்மமான பாசிக்கண்களுடன் கிழவன் நெல் ஏட்டில் புலப்படாத சுரங்களை வாசிக்க மறைவாக இருந்த பல ஈஞ்சமரங்கள் ஈக்கிகளுக்கிடையே வெண்பூவின் பூர்வீக இழையானது ஈஞ்ச இனத்தின் வாழ்வாகத் தொடர்ந்து வந்த முடிவளர்த்த ஆண்கள் சிணுக்கோலியால் முடியை கோதியவாறு ஈச்ச நிழலில் மறைந்திருக்கிறார்கள். ஈச்ச மரத்தின் கழுத்தைக் குடைந்து பால் எடுத்தார்கள். 


கிழவன் இருந்த ஊஞ்சலைச் சுற்றிலும் பூனைகள் வாலைப் பரசி அவளை அருகில் வரவிடாமல் பயமுறுத்தின. அறைச் சுவரிலிருந்த கண்ணாடிச் சட்டமிடப்பட்டு பாசிபடர்ந்த ஓவியத்திலிருக்கும் வேறொரு அதே கிழவனை அருகில் சென்று முகம்முகமாய் பார்த்து எதை எதையோ பேசியவாறிருந்தான் கிழவன். சுவரில் திட்டுத்திட்டாய் மிருகங்களின் இறைச்சியும் வாலறுந்த பல்லிகளின் நைந்த உடலும் ஒட்டியிருந்தது. அந்த அறையே ரத்தமும் மாம்சத்தின் நெடியும் பரவி வெறிபிடித்த கண்களுடன் பார்த்தது அவளை. 


பழைய யுத்தத்தில் பதிந்த வடு ஈஞ்சானின் மார்பில் உடும்பாக ஒட்டியிருந்ததை பார்த்தாள் முத்துவேல். நேருக்கு நேர் நாள் குறித்து படுகளத்தில் முறிந்த எதிரியின் கொடுவாளிடமிருந்து வெளியேறிய ரத்தம் முன்தோன்றி சுருதிகள் எரிய வாளின் கொடுமையை யாழில் இசைத்தான் கிழவன். ஏனோ ஈஞ்சசவயலில் உறையாத குருதி துர்க்கந்தத்தால் ஊளையிட்டது பேயாகி. யுத்தத்தில் சேகரித்த ரத்தத்தை எப்போதும் கண்ணால் பார்த்து அதை சிந்திவிடாமல் தன் அறையில் பத்திரப் படுத்தி வருகிறான். இளங்குருதியாகும் யுத்தத்தை விரும்பினான்போலும். சேகரித்த குருதியின் நெல்மேனி வெப்பத்தால் மேல் எழுந்து சீறிவர ஈஞ்ச இனத்தின் வீழ்ச்சியை ரத்தமேறிய நரம்புகளில் இசைத்துக்காட்ட இழந்த வயல்களில் மருதோரின் கரங்களுக்குள் கதிர்கள் முளைத்து மறைகின்றன. கிழவன் ஊஞ்சலில் மெதுவாக ஆடியவாறு லெட்ஜையடைந்த முத்துவேலை வெறுமையான கோலத்தில் பார்த்தவாறு ஏந்திய கதிர்களை தழுவினான் ஆதங்கத்தில். கிழவன் அறையை விட்டுப் போய்விடாமல் அந்த வடுவில் யார் யாரையோ அடையாளம் காண இருந்தாள். 129

மயக்கத்தில் வெளிர்பூவிடம் உறவாடிப் பல வார்த்தைகளைச் செடிகளிடம் சொன்னான். அவன் உயரமான உடலில் தாவரங்களின் வாசனை நிறம் நிறமாகப் பிரிந்து வயல் வெளியில் வீசும் காற்றாய் மாறியது. கரைபடாத பேரியாழின் தாகம் ஈஞ்சாளின் முதுகெலும்பின் வடிவத்தில் மாந்திரீக வனத்தில் தோன்றியிருக்கும். ஈஞ்சநாட்டு அரக்கரின் பெரிய சுவட்டில் ஊர் மறைந்திருக்கும். முத்துவேல்ஊர் மறையாத ஈச்சமரங்களிடையே வெளிர் மணல் விரிவு கொண்டது அடிவானுக்கு அப்பால், நரியோடும் சாம்பல் காடுகளில் புதர் மண்டியிருக்கும். மிருதுவான அமைதியில் துயிலும் மணலில் மிருகங்களின் சிறுபட்சிகளின் தடம் கோடு கோடாய் தெரியும். படிவுபடிவாய் மேல்வரும் ஈஞ்சங்காற்றில் குருத்து ஓலைகளின் உரசலில் ஏதேதோ வெள்ளி நாற்றின் சன்னமான துயரமும் முன் நடந்தவைகளும் படிந்த மணலில் கிழவனின் நீளமான பாதம் கடந்து போனது. ஈஞ்சநாட்டார் அரளிப்பான விருட்சங்களுக்குள் எலும்புகளை அசைக்கும் சைகை முதுகாட்டில் புதையுண்ட அரசனை அழைத்தது. கனியான் தீமூண்ட மலைமீது மகுடமடிக்கும் ஒலி பாறைகளைப் பிளந்து வந்தது தேரிவரை. தோல் முழங்கும் பறையில் தீப் பந்தங்கள் சுற்றி ஓடுகிறார்கள் இருளில். சடைமுடி படர்ந்த ஈஞ்சான் வேட்டைக்குப் போன தேரியில் மிருகங்கள் மறைந்து உறுமும் இருட்டு. பாறைகள் மேல் மிருகமூச்சு ஊர்ந்து செல்லும். மெல்லிய இருட்டில் தெரியும் ஈச்ச மரங்களின் கோரையான கூந்தலில் ஆந்தை கீழ் பாய்ந்து போ.. போ வென அரற்றும். குத்துப்பாறைகளில் அசைந்து கொண்டிருக்கும் சாவைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாய் மெலிந்து கொண்டிருக்கிறான் துயரில். மறதியிலும் கண்ணில் ஓடும் பைத்திய ரேகையிலும் இடம் விட்டு நகரும் ஊஞ்சலில் அவர்கள் வாழ்வின் அகத்திணை நெல்கதிர் கற்றையாக கிழவன் கையில். ஒவ்வொரு நெல்லாக தொட்டு எதையோ தேடுகிறான் ஈஞ்சான். நெல்லில் ஒளிந்த பேத்தி ஈஞ்சாள் யாழின் நரம்புகளில் பதிந்து வயலில் வெடிக்கும் வெளிர் பூக்களில் மறைகிறாள் உடனே. 


அப்போது முத்துவேலிடம் ஈஞ்சாள் கேட்டாள் “நான் வயல்வெளிக்குப் போய் வயோதிகர் கண்ணில் எனக்குத்தயை இருந்தால் அவர் பிறகே கதிர்களை பொறுக்கி வருவேன்... நோயின் ஆழத்தில் ஈஞ்சானின் நரம்புகள் மறைந்து கொண்டிருக்கிறதால் புதுக்கதிர்களை கொண்டுபோய் அவன் மீது படைப்பேன்" என்றாள். அதற்கு முத்துவேல் "பூட்டனின் வயலில் அவன் காலடி தொட்டுப்போ வேடர்குத்திய கதிரை பொறுக்கிவா மகளே” என்றாள். 

அவள் வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள். அப்போது ஈஞ்சாளின் பாசிக்கண்ணில் கிழவனின் ரத்ததாகம் கொண்ட சுருதிகள் கிளம்பி நெல்வயலில் சுருதிகள் எரியும் ஆழத்தில் கிழவன் ஊஞ்சலில் சரிந்தவாறு சாவின் அருகே போய் அடுத்த கணம் மீண்டு உயிரில் பரவிய நெல் மூடி திறந்து செந்நெல் குடி கிராமத்தின் உடைந்த கதிர் விதானத்தில் மணிகள் எட்டிப் பார்த்தன இமைகீறி. பழுப்பு வயல்வர்ண வைக்கோலின் சருகு புலம்பி அசைய தலை சாய்ந்து வரப்பில் கண் மூடிக்கிடக்கிறது சோம்பலில் நெல்கதிர்கள். வாட்டமான கதிர் வளைந்து எல்லாப் பக்கமும் நெளிந்து தண்டில் காற்றேறி முணுமுணுத்தது. யாரோ தண்டை அணிந்த நீள நீளமான கால்களுடன் நெல்மீது அழுந்தாமல் தடவி நடக்கும் பாதங்களில் கண் திறந்தது புதுநெல், சம்பா நெல்லின் உதிர் நரம்புகளை கைவிரல்கள் ஆழமாய் தொட்டு ஏங்கும், நெல்கோடு விழுந்த 130 தொடுவானின் புகைமட்டத்தின் நீலத்துள் புதையுண்ட சாவுடன் உரையாடும் செந்நெல், கம்மாய்க்கரை சுற்றி கீழத்தெரு ஆட்கள் கதிர் அருவாளுடன் எட்டிப் போன வயல் அறுவடையாக வேண்டும். வெயில் அசையும் கரைச் சரிவில் உதிர்ந்த மணிகள் இரவெல்லாம் கண்விழித்துப்பார்த்த சாதாரண மண்தெரு சோகத்தால் கதவுகளைத்தொட்டு துயில்வோரைக் காணும். பாசிமூடியிருந்த ஓவியத்தில் வர்ணமற்று வெளிர்பரப்பாய் விரியும் வெண்பாதையில் தனியே அவன் மட்டும் நடந்து போய் கூவுகிறான் கீழ்திசையில், ஆயிரம் ஒலித்தொகுதி கொண்ட பட்சி ஜாலங்களின் சப்தாசமுத்திரம் புறண்டு மேல் எழுந்து சப்தத்தின் சுழலாய் அவன்முன் அசைய பேத்தியின் விடுகதிரில் ஒவ்வொரு விரல்பட்டு ஈஞ்சானின் மறைவு காலத்தை இசைத்துக் காட்டினாள் எளிய மணிகளில். 


கண்மலையின் வடிவங்களில் உருவமற்ற வேடர் நிழலாகி ஒரே கண் உள்ள மலையின் உச்சிப்பார்வை மெல்ல ஊசியாய் சரிந்து கீழே நகர்ந்து வேகமாய் ஒவ்வொரு மனிதரையும் தொடர்கிறது. தொலைவிலுள்ள கண்கொண்டு பார்த்தனர் இசையின் பாதையை. யுகங்களுக்கு முற்பட்ட மலையின் கண் சாவினுடையதாக இருக்கும். ஒவ்வொருவரையும் சுருட்டிச் சென்றது கண்மலை. வில்யாழின் ஒற்றை நரம்பினால் பாறைகளின் குரலை எழுப்பியது வில். வேடர் நிழல் வில்நாணின் அதிர்வில் தூரம் வரை போய் வேட்டையாடித் திரும்பும். அரக்க இனஈஞ்சர்களோடு யுத்தத்தில் உடல் இழந்த கனியான்களே கண்மலையாகி விட்டிருந்தனர். சரியும் கண் மலையின் இடுக்குகளில் ஊளையிடும் முன்னோரின் ஆவிகளை அழைத்துக் கொண்டு ஈஞ்சவயலில் அதிர்வுறும் வயோதிக அரசன் ஈஞ்சானின் சுரங்களை கேட்டு மயங்கும் வேடர் ஆவிகள் ஈச்ச நிழலைச் சுற்றிச்சுற்றி வந்தன. ஊஞ்சல் சலனமடையாமல் இருக்கும் காற்றில்லாத வேளை வேடர் ஆவிகள் வந்து ஈஞ்ச அரசனை மெல்ல தாலாட்டி அவன் காது களில் கிசுகிசுத்து கனியான் மறந்த பாறையின் அகம் கொப்பளிக்கும் சுருதிகளை இசைக்குமாறு கெஞ்சுகின்றன ஆவிகள். கிழவன் நாண் ஏற்றி வெகு ஆழத்தில் புதைந்த கல்முகமாகி கரகரத்த திகைப்பூண்டுகளின் நெடிப்பூக்களை நுகர்ந்தவாறு எரிமலைகள் குமுறும் ஓசையுடன் ஆயிரம் வில் நாண்கள் பூட்டிய அம்புகள் பாயும் யுத்தகள இசை கண்மலையில் உருள நரிகளின் தோலால் வனைந்த மகுடங்களை கனியான் ஆவிகள் ஒலித்தன கண்மலையில், 

A OU 

அப்போது ரூபவதியான ஈஞ்சாள். கதிர் சாயும் வயல் நடுவே அறுப்பறுக்கும் வேட இன பெண்களுக்குப்பின்னே சிந்திய கதிர் பொறுக்குவதை பார்த்து வயல்காரன் கனியான் "கண் மலையில் இல்லாத ஈக்கி நெல்லில் சுரங்களை உலர்த்தும் சிறு பெண்ணே நீ யாருடையவள். சுரங்களை நிறுத்தாமல் வாசி. நான் தூர இருக்கிறேன்” என்றான், 

“அறுக்கிறவர்களின் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதை உம்மைக் கேட்டதாமல் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன். நான் யாராயிருந்தால் என்ன நான் யாரோ" என்றாள் அலட்சியமாக, அப்போது கங்காணிக்காரன் கனியான் கிட்டத்தில் வந்து “இவள் அனாதை” என்றான். “தூர உறவோ சொந்த பூமியோ வயலோ இல்லை" என்றான். “காலமே துவங்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள். இப்பொழுது அவள் என் குச்சிலுக்கு அருகில் வந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது” என்றான். 


131 அப்பொழுது வயல்காரன் ஈஞ்சாளைப் பார்த்து “பெண்ணே கேள். வேடப்பெண்கள் நீயாரென்று சைகைகாட்டி கண்ணால் சொன்னார்கள் நீ வரும்போதே ஈஞ்ச இனத்தின் கிழ அரசனுக்கு சிந்திய கதிர்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறாய் பறவைகளுடன். பொறுக்கிக்கொள்ள வேறு வயலில் போகாமலும் இங்கே என் அறுப்பறுக்கும் பெண்களோடு கூடவே இரு” என்றான். அப்படியே அவள் அறுப்பறுப்பவர் பக்கம் உட்கார்ந்தாள்.


 "அவர்கள் அறுப்பறுக்கும் வயலைத் தொடர்ந்து நீ போ. உனக்குத் தாகம் எடுத்தால் கண்மலை ஊற்றுநீரை உனக்காக குச்சிலிலே வைத்திருக்கிறேன். தண்ணீர்த் தோண்டி அருகே போய் கூசாமல் குடி” என்றான். அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது “வேடுவப்பெண்களே அவள் அரிக்கட்டுகள் நடுவாந்திரத்தில் பொறுக்கிக்கொள்ளட்டும். அவளை ஈனம் பண்ண வேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும் படிக்கு அவளுக்காக அரிக்கட்டுகளிலே சிலதை பிந்திவிடுங்கள் அவளைத் தொடாதிருங்கள்” என்றான் கனியான். 


அப்படியே அவள் சாயங்காலம் மட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள். பொறுக்கினதை தட்டி அடித்து தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் நெல் கண்டது. 

ஊஞ்சலில் ஆடும் கிழவன் தனக்குள் ஆழத்தில் மெல்லச் சரிந்து புலம்பியவாறிருந்தான். அவன் நிழல் ஆடியது வேகமாய். மற்றொரு நிழல் பார்த்துக் கொண்டிருந்தது சுவரில். அதனருகில் மரக்கால் நெல்லை வைத்து ஒரு சில மணி களை கொண்டுபோய் கிழவன் கையிலுள்ள கதிர் மீது பதித்தாள் அழுகையோடு. அந்த மணிகள் ஜீவனாகத் துடித்து உருண்டன கிழவனின் ஒலிமுகத்தில், 


பின்னே அவள் கரைந்த முகத்தோடு ஈஞ்சமரங்களின் நிழல்பாதையில் இரவுக் களத்தில் நெல் அம்பாரத்தின் மீது மினுக்கும் சிம்ளி விளக்கின் அருகே சென்று ஒவ்வொரு நெல்மணியாக கிழவனின் தோளிலிருந்து முளைத்தநெல் சிலவற்றை திரியுடன் சேர்த்து எரியூட்டினாள். அடர்ந்து எரியும் கிழவனின் கதிர் சுருதிகளை அந்த ஆழ்ந்த இருட்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் கனியானோடு. பொலி நெல்லை கண்மலை வடிவில் குவித்து அம்பாரத்தில் சாணத்தால் சுற்றிவரக் கோடுகள் இட்டாள். ஒருவருக்கொருவர் ஒத்தாசையோடு அந்தரங்கமாய் கதிர்களைப் பகிர்ந்து கொண்டார்கள் இருட்டில். மிருதுவான செடிகள் அருகில் போய் இலைகளை வருடினாள் ஈஞ்சாள். அப்போது அவாந்திர வெளியை ஊடுருவி எழுந்த ஈஞ்சயாழின் சுரத்தை வயல்காரன் கேட்டு இராவெல்லாம் பொலி நெல் அம்பாரத்தில் மயங்கிக் கண்சொருகி அழுதான். வேடர் நிழல்கள் சூழ்ந்து சுருக்கிருட்டில் மெல்ல அவர்களை வில் இசையால் மயக்கி சரிந்துவரும் பார்வைக்குள் ஆட்கொண்டு கூட்டிச் செல்கிறார்கள் கண்மலையின் ஈர்ப்பில், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியுமுன்பே எழுந்து கதிர்களின் பின் சென்றாள் ஈஞ்சாள். 

ப 

ஐப்பசி 

தாது வருஷம் 


No comments:

Post a Comment