தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, May 10, 2014

மொழி மீறிய காதல்(கள்) - பிரம்மராஜன்

மொழி மீறிய காதல்(கள்) - பிரம்மராஜன்

இந்தச் செய்தியுன் யோனிவரை சென்று சேருமா
அன்றி அப்படி ஒன்றுனக்கு உளதா எனும் அறிதலின்றியே
கூட
பச்சை உடல்மீது வெண்மையில் மின்னிய தேமல்களின்
சருமத்தில்
எச்சில் அதரங்களை
குவித்துத் தொட்டேன்
உன் தாவரப் பெயர்
என் சகதியின் ஆழ் இருள் நரகத்தில் புதைந்துகிடக்கிறது
மொழி மீறியக் காதல்கள்
எழுதும் பலகையில் விரல்கள் தட்டும்போது
முதல் தொடுதலின் பதற்றக் காய்ச்சல் போல்
விரல்கள் பழுத்துவிட்டன எலக்ட்ரிக் பழங்கள்
மனிதச்சி ஒருத்தி சொன்னதை
என் தீட்டுப்பட்ட சொற்களை மீறி எப்படியாவது
வாழ்வின் பிராணன் ஊறிய என் தோல் செல்கள்
உனக்குத் தெரிவித்தாக வேண்டும்
உன் இதயம் உன் லிங்கத்தில் துடிக்கிறது ( முன்னவள்
சொன்னாள் )
தாவரக் காதலி
என் மனம் உன் பச்சையத்தின் தொடர் மூச்சுகளின்
ரிதம்களை
பின்வருடியும் செல்கிறது
வில் தொடங்குவதன்றி வேறெந்த வர்ணமும்
நமக்கிடையில் நுழையாது முடியாது
சக கிழத்தியாகக்கூட இந்த மலர்கள்
பெருந்திணை என்றுகூடச் சொன்னார்கள் இதை
வக்கிரப்பெருவழுதி நான்
எதை மறுப்பேன்.