தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, May 20, 2014

அஞ்சலி - நகுலன் (நீண்ட கவிதை)


அஞ்சலி - நகுலன் (நீண்ட கவிதை)

சமர்ப்பணம்
(இகர முதல்விக்கு)

ஆகாய வடிவமான
உன்னை
ஊழி தோறும்
தேடி நின்றேன்.
.

1.
காலையில் ககனத்தில்
காய்கதிர்ச் செல்வன்
கடுகிப் பாயப்
புவியில்
வெண்ணீ லவெயில்
தீயெனப்
பற்றியெரியும்
.

2.
மேற்கில்
கதிரவன் தளர்ந்து
கடலில் நழுவ
அந்திநேரம் புவியனைத்தும்
நிழல்கள்
மெல்லெனப் பரவும்.

3.
நள்ளிரவில்
வெளி முற்றத்தில்
நாளை வரும் முன்
நான் வருவேன்
என்று சொல்லி
எங்கெங்கும் நிலவு
தன் வருகை பகரும்;
அங்கு நாயொன்று
படுத்துறங்கும்.

4.




ஈமக்காட்டில்
பேய்கள் படுத்துறங்கும்;
அவைகளைக் காவல் செய்து
சப்பாத்தி முட்செடிகள்
சச் சச் சச்சென நிற்கும்.

5.
அந்தரத்தில் பறந்ததொரு பறவை;
ஒரு முறை பார்த்த பின்னர்
இருமுறை கண்டேன்
என்று சொல்வதுமுண்டோ ?

6.
குருவாயூரில்
இருந்து பறந்து
வந்த்தொரு குருவி;
சேதி நீ அறிவாயோவென்று
சொல்லிச் மறைந்தது.

7.
இங்கு தெருவனைத்தும்
மேடுபள்ளம்;
தெருக்க ளெல்லாம்
தெங்குங் கமுகும்.

8.
அக்காக் குருவி
என்றொரு பறவை;
அதுவெனைக் கண்டு
சிறகடித்துச் சிரிக்கும்.

9.
இங்குப்
பனையேறிக் கள்
ளெடுப்பார்
பந்தல் கட்டி
மணம் முடிப்பார்.

10.
வீங்கு திரைக்கடலில்
பாய்ந்தி சென்றதொரு
பாய்மரக்கப்பல்;
கரை நெடுக
ஒரு வரிசை மீன் வற்றல்

11.
கொல்லி மலையி
லொரு பாவை;
அதைக் கண்டு நின்றவர்
காணாமல் போனார்.

12.
பித்தா! பிறைசூடி!
என்றவரெல்லாம்
பிச்சிப்பூ! பிச்சிப்பூ வென்று
சித்தங் கலங்கிச்
சிரிசிரி என்று சிரிக்கின்றனர்

13.
மல்லிகையின்
கைப்பு மணம்;
மருக்கொழுந்தின்
பிணவாடை.

14.
உருண்டு திரண்டு
படுத்து கிடந்தொரு
பூசணிக்காய்
நீண்டுவிரைத்து
நின்றதொரு முருங்கக்காய்

15.
தோட்டத்தில் தத்தித் தத்தி
திரியுதொரு சிறுகுருவி
வானத்திலுயுர வுயரப்
பறந்து வட்டமிடுது ஒரு பருந்து.

16.
பாரதியினுருவம்
துவாரகை வீதியூடு
சென்றது கண்டோர்
அவன் கூறுவது கேட்டார் :
“மோனத்திலிருக்குதடி - இந்த
வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் - பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ ?”

17.
நீலத்துகிலடுத்து
நித்திலத் திலகமணிந்து
நானிலம் நின்றதிசயிக்க
நடைபயிலுமவளுருக் கண்டு
வானம் சிவந்ததடி
வையமும் மெய் சிலிர்த்ததடி.

18.
கோட்டை கொத்தளமென்றாலும்
கொற்றவர் தலைவனில்லையென்றால்
கோட்டைதான் என்ன ?
கொத்தளம்தான் என்ன ?

19.
சேவலுக்குத் தாடியுண்டென்றால்
ஏவலுக்கு மனமுண்டென்பார்

20.
அண்ணாமலை யண்ணாவி
சொன்னதென்ன ?

21.
கங்காளமொரு வயிறென்றால் ஒரு மகாசமுத்திரம்
மனதென்பார்.

22.
நீ அங்கிருக்கின்றாய்; நீ
அதைச் செய்கின்றாய்;
நான் இங்கிருக்கின்றேன்;
என்று சொன்னால், எங்கு சென்றால்
எதைச் செய்தால் எது எதுவாகும்?

23.

இதுபோல் அதுவாகும்
அதுபோல் இதுவாகும்

24.
வந்தது  போல் போனான்;
போனது போல் வந்தான்!
மடக்கி கையை விரித்தபோது
எல்லாம் வெட்ட வெளியாகத் தெரிந்ததடி

25
எல்லாம் பல பல
பப்பல பலபல
எல்லாம் சல சல
சஞ்சல சலசல

26.
பந்தலில் கொடியைப்
படரவிட்டார்;
பட்டமரத்தை
வெட்டினார்

27.
மலைக்குகையில்
பாடுகிடந்தா னொருவன்
மாதேவன் வருவான்
சோடு தெரியாமலென்றபடி.

28.
அவள் போக
நான் வர
அவள் வர
நான் போக

29.
இடை  அசைய
நடை குலுங்க
நடம் பயின்றாள்
ஒரு வாலைக் குமரி.


30.
வெறித்து நின்ற
என்னிலை கண்டு
ஈமக் காட்டில்
மேல்கீழாக நடை
பயிலும் பேய்கள்.
 .
31 .
வேறு வேறு ஆகும்
நீயும் நின்னை அறிவாயோ ? பசி
குடலைப் பிடுங்குது
அண்ணே !
அது தணிய
உன்னை இசைவுடன்
புசிப்போம் அண்ணே !
என்று பேய்கள் பாட

32.
அவ்வமயம்
நான் என்னையே
பிட்டுத் தின்றேன்
அவ்வயமயம்
நிழல்போல் வந்தபேய்கள்
அவை போல் சென்றன.

33.
மைதான வெளியில்
கள நடுவே காலுதைபடும்
ஒரு பந்து; கைகட்டி மரம் தாழ
ரயில் ஓடும்.

34.
கண்ணிருக்கும் குருவாயூரில்
கண்மணியவள்தன்
கன்னிமை தவிர்ந்தாள்.

35.
திக்குகள் னைத்தும்
திகம்பர மென்றால்
தில்லையம்பலந்தனில்
இகம்பரம் என்பதுண்டோ ?

36.
ஒன்றொன் றாக
ஓரொன் றாக
இரண்டிரண் டாக
ஈரிரண் டாக

37.
அவள் சூலுற்றாள்;
தன்னைப் போல்
ஒரு பெண்ணைப்
பெற்றாள்
நான் தனியிருந்தேன்;
மிகநன்று.

38.
அன்றொரு நாள்
நின்னைத் தெருவில்
கண்டேன் !
கண்ணம்மா !!

39.
வேறொரு நாள்
ஒருவர் சொன்னார் :
அன்று நான் கண்டது
நின்னை அன்றென்று.

40.
பாதைகள் செல்கின்றன;
ஏசுபெருமான் குரிசிலேற
பாவிகள் கடக் கடக் கக்கட
என வக்கரிக்கின்றார்.

41.
அவனுக்கு
நீ
அவன் பெற்ற பரிசு;
எனக்கு
நீ
என் குரிசு
மிகநன்று.

42.
தவளைப்
பாட்டி !
நீயும் அறிந்தினையோ
சூல்போன்ற நின் வயிறு
பகர்வதும் காதலென்று

43.
பூட்டைத் திறக்க
ஒரு திறவுகோல்
மனப்பூட்டைத் திறக்க ?

44.
கண்முன்
தெரியுதொரு வீதி
அதை யேகும்
வித
மேதோ?

45.
இருவிரல் கொண்டு
ஒரு பேனா
பிடித்து
அதுகொண்டெழுத
வருவதோ வெழுத்து

46.
உள்ளுக்குள்ளிருப்ப
துள்ளமென்றால்
கண்முன்
காண்பதேதோ ?

47.
வா வா வா
வா வா வா
போ போ போ
போ போ போ

48.
“வரும் போகும்”

49.
வந்தது போல்
போவதும்
போவதுபோல்
வருவதும்.

50.
உள்ளதுபோல்
இல்லாதததும்
இல்லாததது போல்
இருப்பதும்.

51.
சொல்லில்
சிக்காது
சிந்தனையில் வாராது

52.
குருவாயூரிலிருந்து
வந்ததொரு குருவி
சொன்னதொரு சேதி.

53.
தன்னவனைக் காண
தலைகாலாக நடந்தாள்
ஒருத்தி
நீயோ ?

54.
ஆறாண்டுகள்
அகன்ற பின்
அன்று
நின்னைக் கண்டபோது
நீ
அங்கிருக்கின்றே
னென்றாய்.

55.
அங்கு

56.
தார்ரோட்டில்
தந்திக் கம்பங்களில்

57.
சட்டைப்பையில்
தொட்டவிடத்தில்

58.
நாலுபேர் பேசிக்
கூடு
மிடத்
தில்

59.
சகாப்தங்களின்
சிருஷ்டியில்

60.
இயக்கங்களின் மயக்கத்தில்

61.
சிநேகிதனின்
கைகுலுக்கலில்

62.
சத்துருக்களின்
சிந்தனைக்
குழப்பத்தில்

63.
பேய்களின்
நடமாட்டம்

64.
அங்கு

65.
சங்கு வெள்ளையென்றால்
மனங் கறுப்பென்பார்

66.
அங்கு

67.
வெட்டுக்கிளி
திப்
தத்
                    பாயும்

68.
கோடை வெயில்
“நெற்றிக் கண் கத்ரி”

69.
எட்டுக் கால் பூச்சி
வலை                 ம்             வி
                                    குக்ரி

70.
புழுப் போல்
மனிதன்                 ளி
                               நெ     வான்

71.
புலிப்போல்
சீறுவான்

72.
அவனெல்லார்க்கும்
மித்திரன்

73.
சந்தர்ப்பவாதி
அவன்
“இசங்களுக்கு”
எதிரியில்லை

74.
ஒருவருக்குந் தெரியாமல்
அவன்
தன்னை (ஏ)
வியந்துகொள்வான்.

75.
அங்குத்
தஞ்சாவூர் தலை
யாட்டிப்
பொம்மைகளுக்கு
மீசைமிகப் பெரிது.

76.
“நேற்று
சந்னதியில்
நிமிடம்தான் பார்த்தேன்”

77.
என்றாலு
மென்ன ?
சௌரியின்
காத்திருப்பு
சகாப்தங்களின்
நி ச ப் த ம்

78.
நானெந்தவூருக்கும்
போன
தில்லை
யாரையும்
பார்த்த
தில்லை

79.
அன்று பகல்
ஐந்து மணிக்கு
நானுன்னை
முதல்முறையாகச்
சந்தித்தேன்.

80.
லோர்கா
என் றொரு கவிஞன்

81.
என் காத
லதைப் பற்றியென்ன
சொல்வது ?

82.
என் தேகத்தில் சீதள
முத்துக்கள்
ஒருபிடி வேப்பிலைக்கொத்து

83.
அன்றொருவன்
தன் கண்ணைப் பிடுங்கித்
தன் காதலைக்
காட்டினான்
நீயோ ?

84.
கொட்டு முரசே !
எட்டுத்திக்கும்
சிதறக்கொட்டு முரசே !
காதலால்
அண்டஞ் சிதறுமென்று
கொட்டு முரசே !

85.
உனது நெற்றிக் குங்குமம்
நீண்ட கூந்தல்
எளிய ஆடை
உன் முறுவல்
பிரகாசமான கண்கள்
நீண்ட விரல்கள்
உன் நிதானமான
போக்கு
உன் தேர்போன்ற அல்குல்
எல்லாம்தான்
என்
மம்மரறுக்கும் மருந்து

86.
“வாளால் அறுத்துச் சுடி
னும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயா
ளன் போல்”

87.
சிவன் சிரித்தான்
“வெறும் தோல் விவகாரம்
பால் வேற்றுமை
இவைகள் தான் நம்மை
வாளாக அறுக்கின்றன
நாம் இவைகள் மீதுதான்
மாளாத காதல் உற்றோம்”
என்றான்.

88.
ஒரு நாட்டுப் பாடல்
வயது
உத்தேசம் பதினாலு
உடலெல்லாம்
புனுகு சவ்வாது
மணக்குது

89.
புனுகுப் பூனை
கூட்டினுழலும்
அதன் கழிவு
சவ்வாது போல்
கம கம
வென மணமணக்கும்.

90.
“மாலுமென் னெ ஞ்சு”

91.
வேய்மென்தோள்
மெல்லிய ஆகிருதி
அவள்
கடலினும் பெரிய கண்கள்,
அறல் கூந்தல்,
ஸ்தன பாரம்
உந்திச் சுழி
தேர் அல்குல்
ஸ்பர்ஸ சுகம்
பேசுவதற்கு
பார்ப்பதற்கு
பேசாமல் இருப்பதற்கு
தோல் விவகாரம்தான்
பால் வேற்றுமைதான்
என்றாலு மென்ன?

92.
வீட்டு குறுக்குச் சுவர்கள்;
வெளியுலகின் வசீகரம்;
என்னைப் போல்
உன்னைப் போல்
இல்லை நீ
இல்லை நான்
என்றாலும்
நாம் ஓரொருவரும்
ஈரிருவராக
வாழும்
வகை அறிவோம். தோல் விவகாரம்தான்
பால் வேற்றுமைதான்.

93.
பால் வரைதெய்வம்

94.
அண்ணே !
ஆண் பெண்ணாக
மேல் கீழாக
கீழ், மேலாக
உலகு
சலிக்குதடா !

95.
மிகச் சிறிய
துவாரத்தினூடு
கர்ப்பச் சிறையில்
ஒடுங்கிய
ஒரு யோகி
ஓரு புது நகரைக் காண
தான் தனியாகத்தான் வருவான்.

96.
புனுகுப் பூனை
கூட்டினுழலும்
அதன் கழிவு
சவ்வாது போல்
கம கம
வென மணமணக்கும்.

97.
“ ஐந்து தலை
நாகமடி
ஆதாயங்
கொஞ்சமடி !”

98.
மேகங்கள் வர
மண்குளிர
வந்தது கார்காலம்

99.

சென்ற நாட்கள்
நின்னைக் கண்ட நாட்கள்
நின்னைக் காணாத நாட்கள்
நீ இங்கிருந்து அங்கு சென்ற
பின் வந்த நாட்கள்
ஒரு புதிய சகாப்தம்

100.
இடமே சாக்ஷியாக
காலமே கணக்காக
நின்னைக் கண்டபின்
மீண்டும் கண்டதேயன்றி
“வேறொன்று மறியேன்”

101.
“ஆலயம் தொழுவது
சாலவும் நன்று”

102.
“மேஜை மீது
சில புத்தகங்கள் சிதறிக்
கிடக்கின்றன;
தட்டெழுத்து இயந்திரம்
மூடப்பட்டிருக்கிறது;
மெர்க்காராவிலிருந்து
வந்த கடிதங்கள்
ஒரு நாள் ஒரே ஒரு நாள்
தாமதித்து வந்ததால்
திறக்கப்படாமலேயே
இருக்கின்றன.

103.
இந்த உலகில்
சுசீலா போன்ற
பெண்கள்

104.
நினைவு வர

105.
கிருஸ்துவப் பாதிரிமார்கள்
சாவுச் சடங்குகளில் சம்பந்தப்
படும்பொழுது
கறுப்பு
அங்கி அணிந்து
கொள்கிறார்கள்.

106.
ஹிந்துக்கள் கல்யாணச்
சடங்குகளில்
அவனும் அவளும்
அக்னி சாக்ஷியாகத்
தங்களை வரிக்கிறார்கள்.
மந்திரம் ஓதும்போது
சுவாஹா ! சுவாஹா !
என்கிறார்கள்

107.
“சீவகசிந்தாமணி”யிலிருந்து
விசயை பற்றி ஒரு வரி
“அழகு சுமந்து இளைத்த
ஆகத்தாள்”

108.
காஃப்காவிடம் அவன் நண்பர்கள்
முதல் உலக யுத்தம் தொடங்கு
விட்டது என்று சொன்னதும் அவன்
“சிரி, சிரி” என்று சிரித்தானாம் என்று
ஒரு வதந்தி.

109.
நான் ஒரு
உடும்பு
ஒரு
கொக்கு
ஒரு
ஒன்றுமே இல்லை.

110.
அலைகளின் அடித்தளத்தில்
மண்ணின்
மௌனலயிப்பில்.
காய்ந்துலர்ந்த
கறுத்த ரத்தத்தில்
மழை நின்று
ஓய்ந்த நிசப்தத்தில்
அந்தி வானின்
குங்குமச் சிவப்பில்
நின்முகங் கண்டேன்.

111.
சுசீலாவிடம் எனக்குள்ள ஈடுபாட்டை நான்
நண்பன் ஒருவனிடம் கூறிய போது அவன்
சொன்னான் :  “நீ ஒரு ..........” அதற்கு பதிலாக நான்
சொன்னேன்.
“நீ ஒரு ..........”

112.
சகாப்தங்களின் நிசப்தம்

113.

114.
வண்டின் மீது மகரந்தப்
பொடிகள்

115.
கலவியின்
பின்
கண்கள் சிவந்தன.

116.
உண்மையறிய
உள்ளிப்பூண்டு
தின்றபோது
வயிற்றிலிருந்து
வாயில் வந்தது.

117.
என் ஆசை பலிக்க
என் அகம் தெரிய
நேசம் நெடிது நிற்க
“ஏகதேசம் பூர்ணத்திற்குண்டோ”
என்று நானறிய நீ
சொல்லாமல் சொன்னாய்

118.
உனக்கு
நீ
இருப்பதால்
நான்
உண்டு;
எனக்கு நீ இல்லை என்றால்
நான் இல்லை.

119.
‘பார் முதல் பூதம்’

120.
நான்
நிழலானேன்;
நான் ஒரு ரோகியானேன்.

121,
அதன் பின்
நினைவே பாதையாக
அதன்மேல் ஓடும்
ஒரு நா-
யானேன்.

122.
சிவன் சிரித்தான்
ஏதேதோ சொல்கின்றாய்
நீ அறியாயோ ?
காதலாம் காதல்
இருகால் மனிதன்
நாலு கால் மிருகமானான்.

123.
ஆணுக்குப்பெண் வேண்டும்;
பெண்ணுக்கு ஆணும்;
பின்னென்னென்னென்வனன்ன?

124.
அவள் அங்கு இருந்தாள்
நான் இங்கு இருந்தேன்.

125.
அவள் மூலம்
நான் உடலை வடலெறிந்தேன்
உள்ள மென்பது
எங்குமில்லை என்றுணர்ந்தேன்
ஆகாய வடிவான அவள்
நித்ய சுந்தரியென அறிந்தேன்.

126.
ஆனால்
அவள் அங்கிருந்தாள்.

127.
அங்கு
வார்த்தைக்கு விலையில்லை.

128.
தனி மனிதனுக்கு இடமில்லை.

129.
அங்கு
அரசரில்லை; அமைச்சருண்டு.

130.
அங்கு
 எல்லாம் சட்டப்படி,திட்டப்படி

131.
அங்கு  சட்ட சபையில்
வினாக்களை வீசியெறிவார்
அங்கு
உலகப் பெருஞ் சந்தை
கையில் பணமிருந்தால்
ஏதுதான் அங்கில்லை
இடமாற்றம்
வேலை உயர்வு
வியாபார சலுகைகள்
கொடுக்கப் பணம் இருந்தால்
படிக்க இடம் , படுக்க இடம்
சொல்லப் போனால்
நிதியிருந்தால் நீதியும் நின் வழி வரும்
எல்லாம் சட்டப்படி
எல்லாம் திட்டப்படி
அன்று முதல் இன்று வரை
நேற்றிலிருந்து நாளை வரை
“சரித்திரத்தின் சூழ்ச்சி நிறைந்த
வீதிகள்”

132.
“திங்கள் தோறும்
எங்கள் ஊரில்
சந்தை கூடும்”

133.
அங்கு
சண்டைக் கோழியென
வல்லரசுகள் பொருதி மோத
சிற்றரசுகள் தர்மம் பேசும்;
என்றாலும்
அவை
வல்லரசுகளைத் தழுவி
வானம் பார்த்த பயிர்போல்
வாழும்;
வல்லரசுகளும்
எள்ளி நகையாடும்
அன்று கவிஞன்
இன்று சொன்ன மாதிரி
இந்நாட்டில் எங்கேயோ
தகராறு.

134.
அங்கு
மனிதனை மனிதன் பாடுவான்
ஆண்டவன் மாண்டவன் என்பார்
அங்கு
காதல் என்பதும்
ஆண்-பெண் விவகாரம் என்பார்.

135.
வாழ்தல் என்பதும்
உண்ண
உடுக்க
உடன்கூட
வந்தொரு தேவையின்றி

136.
வேறென்ன தானென்பார்
அதிகாரமென்றால்
அழகியென்பார்;
கட்டுப்பாடென்றால்
வெட்டியெறி என்பார்

137.
அங்கு
வீதியெல்லாம் விளம்பரம்
தொழில்விடுதி தோறும்
வேலை நிறுத்தம்;
எல்லோரும் இந்நாட்டு மன்னர்.

138.
என்றாலும்
அங்கு நீ இருக்கின்றாய்
அங்கு அமைச்சர்கள்
அனைவரும் வெகுசுகம்
அதிகாரிகளும் மோசமிலை
நடுவர்க்கத்தினர்
வேலையிலிருப்போர்
சிப்பந்திகள்
எல்லாருமே மோசமிலை
என்றாலும் என்றும் போல்
அங்கும் பிச்சைக்காரர்களுக்கும்
தெரு நாய்களுக்கும்
பஞ்சமில்லை.

139.
உள் வளையமான
வாழ்விலுழலும்
நமக்கு உலகின்
உள் நடப்புத்
தெரிய உள்ளிருந்து
வெளி
வர
ஏது
வழி ?

140.
“முதல்  அமைச்சருடன்
ஐந்து நிமிடம்பேச
ஒரு வாய்ப்புக் கிடைத்தால்
போதும்; அது உம் பொறுப்பு”
“அதற்கென்ன ?”

141.
அங்கு கக்ஷிகள் ஓங்க
வார்த்தைகள் பேதலித்து விட்டன.

142.
கக்ஷிகள் வார்த்த வார்த்தைகளவை
வெறும் கள்ள நாணயங்கள்.

143.
வார்த்தையென்றாலும்
அதற்குண்டு
அதனுள் நின்ற
சூன்யத்தில்
ஆகாயத்தின் மேலுருவம்.

144.
ஆனாலங்கே
அதிகாரமென்றாலக்கிரமம்
அக்கிரமமென்றாலோ
அநீதி
தட்டை வார்த்தைகள்
அடுக்கு மொழியில்
தடுக்கி விழும் சொற்கள்

145
மேலே செல்ல எத்தனிக்கும்
வார்த்தைகள்
மிக விரைவாகக்
கீழே சரிந்து விழும்

146.
அங்கொரு நண்பனைச் சந்தித்தேன்
அன்றிருந்த முகம் இன்று உண்டவனுக்கு
இன்று தெரிகிறதவன் முகம்
எதைப் பிரதிபலிக்கிறதென்று
முகஞ் சோர்வுற்று
இடுங்கின கண்களுடன்
அவன் வாய் பேசாமலொ துங்கி மறைவது
சாற்றும் : அவனொரு பாம்பு

147.
அங்கு
 வார்த்தைகள் சோரம் போய் விட்டன
தெருவெல்லாம் மொழி நாசம்
கக்ஷிகள்
பாஷையைக் காயடித்த
தோஷம்
பொருளிழந்து
வெறும் ஓசையாக
மொழி செத்துக் கிடக்கும்.

148.
செல்வந்தர்கள் சுருட்டுகிறார்கள்
ஏழைகள் மிரட்டுகிறார்கள்
பாதைகள் வேறென்றாலும்
வழி ஒன்றே.

149.
ஆபிஸில்
ஆஸ்பத்திரியில்
சட்டமன்றத்தில்
நீதி சபையில்
பஸ் ஸ்டாண்டில்
சொந்தவீட்டில்
மனிதன் காத்துநிற்கின்றான்

150.
“காவாக்கால் சோகாப்பான்”
சென்ற உலக மகா
யுத்தத்தில் மொத்தம் மடிந்தவர்
(துருப்பில் மாத்திரம்) 15,000,000

151.
ஃப்ளெமிங் தன் மூக்கைத்
தோண்டி அதைப்
பரிசோதித்தபோது
லையோஸைமைக் (Lysoyme)
கண்டு பிடித்தான்
பூப்பிலிருந்து
பென்ஸிலின் பிறந்தது
பிரகிருதி வலை பின்னுகிறது.

153.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்
இந்தியா சுதந்திரமடைந்து வுடைந்தபின்
காந்தி சுடப்பட்டது
எலியட் வேஸ்ட்லண்ட்
எழுதியது
ஏட்ஸின் தனிப்பட்ட
கவிதைகள்
ஜாய்ஸும் மில்டனைப்
போல் குருடனென்பது
டிலான் தாமஸ் தனது
அற்புதமான கவிதைகளை
எழுதிவிட்டு
அமெரிக்காவில்
குடித்துச்
செத்தது
பிரிஸிடென்ட் நிக்ஸன்
தன்பதவியிலிருந்து
“நீக்கப்பட்டது”
இவையெல்லாம் உன்
வளையமான உலகிலுழலும்
நமக்குதான் ஆச்சரியமாக இருக்கிறது.

154.
அன்றவன்
நாய்போல்
பின்தொடர்ந்தான் என்னை
இன்றவன்
ஒரு
பாம்பாக
என்
காலைச்
சுற்றுகின்றான்
இவனைப் போன்றவர்களுக்கு
தெரிய நாள் பிடிக்கிறது.

155.
மனிதன்
ஒரு
வலைபின்னுஞ் சிலந்தி
அடுத்துக் கெடுக்கும் மித்திரன்.

156.
எலியட்டினெழுத்து :
இந்தக் காட்டாந்தரைக்
குப்பையிலிருந்து எந்த
வேர்கள் கௌவிப் பிடிக்கின்றன!
எந்தக் கிளைகள் துளிர்கின்றன!

ஏட்ஸின் : ஒரு திடீர்த் தாக்குதல்
அந்தப் பெரிய சிறகுகள் தள்ளாடும்
அந்தப் பெண் மீது இன்னும் படபடக்
கின்றன; அதன் கரிய ஒட்டு மொத்த
மாகப் பிணைந்த விரல்கள் அவள் தொடை
யை வருடுகின்றன; அவளுடைய புறங்
கழுத்தை அது தன் அலகால் கௌவிப்
பிடித்துக்கொண்டிருக்கின்றது; அவளுடைய
துவண்டு போகும் மார்பகத்தைத் தன்
நெஞ்சுடன் அணைத்துக் கொண்டிருக்கிறது
அந்த அன்னம்.

ஜாய்ஸின் : இந்த ஆற்று வெள்ளத்தின்
பரபரப்பில் ஒன்றும்கேட்கவில்லை; இந்த
ஆற்றலைகளின் சலசலப்பு; விர்ரென்று
சிறகடித்துப் பறக்கும் இந்த வௌவால்கள் :
வயல் எலிகளின் கிரீச் கிரீச்; ஓ, இன்னும்
போகலையா ? யாரு ? தாம்

மலோன் ? இந்த வௌவால்களின்
பாய்ச்சலில், ஆற்றலைகளின் சலசலப்பில்
ஓ! பேசினால்தான் பிழைக்க முடியும்.
என்னுடைய பாதங்கள் பாஷியில் வயுக்கிப்
போகின்றன - அக்கரையில் காணும்
எல்ம் மரத்தைப் போல எனக்கும்
கிழடுதட்டிவிட்டது - ஷெம் அல்லது ஷானைப்
பற்றிய கதையிது - அகில லோக நாயகியான
லிவுயாவின் பத்திர - புத்திரிகள் - கரிய கழுகுகள்
நாம் பேசுவதைக் கேட்கின்றன - ராத்திரி! ராத்
திரி என் தலை சுற்றியது - அக்கரையில்
காணும் கல்லை போல் நான் கனத்துப் போனது
போல் - எனக்கு ஜானைப் பற்றிய ஷானைப் பற்றிச்
சொல் - இப்பொழுது ஷெம்மும் ஷானும்
யாருடைய உயிருடன் இருக்கும் புத்ர - புத்
திரிகள் ? ராத்திரியாகிவிட்டது ! எனக்குச் சொல்!
எனக்குச் சொல்! எனக்குச் சொல்! எல்ம்
மரமே ! ராத்திரி ! ராத்திரி ! கேட்கவொரு கதை
சொல் ! கல்லைப் பற்றி - கிளையைப் பற்றி -
ஆற்று நீரின் அரித்துச் செல்லும் விரைவி
னருகில், இங்குமங்கும் பாயும் அலைகளின்
பக்கத்தில் - இராத்திரி

டிலான் தாமஸ் - கவிதை ஒன்றின் நினைவில்
அவள் கூந்தல் வீதியிலிருந்து ஒரு குதறல் -
“நீளக்கால் மோகினி, மீன் பிடிக்கத் தூண்டில்
வைத்த மாமிசக் கொத்து! அதைத் தேடிப்போன
அதில் சிக்கியவன் பாடு, கசாப்புக் கடையில்
கட்டி வைத்த காளை மாடு!”

டிரானஸ் நிக்ஸ் என்று ஒரு கவிதை
எழுதியிருந்தான் அதில் நிக்ஸனுக்கு
இனியும் ஜுபிடர் காம்பெளக்ஸ் இல்லாமல்
இருக்கட்டும் - எல்லாச்
சண்டைகளையும் தான் ஜெயிக்க முடியும்
என் ஜுபிடர் காம்பெளக்ஸிலிருந்து அவன்
விடுபடட்டும் என்று எழுதியிருக்கிறான்.

157.
நாளை நான்
இவ்வூரிலிருந்து
போய்விடுவேன்.

158.
இன்று நான்
என் பெட்டி படுக்கைகளைக்
கட்டி வைக்கிறேன்
மாலை 5க்கு ரயில்.

159.
நான்
திரும்பி வருவேன்
என்னவோ என்பது எனக்கே
நிச்சயமில்லை.

160.
நினைவுகள் என்னைச்
சூழ்கின்றன
வருகின்ற(ன) என்னை வழி அனுப்ப.

161.
திரும்பிப் பார்க்கையில்
உருவத்தின் உள்ளுருவம்
ஒவ்வொன்றாக.

162.
சம்பவங்கள் என்றவை
இந்தச் சந்தர்ப்பத்தில்
நினைவில் வருகின்றன; நானும் ஒரு
சந்தர்ப்பவாதி என்பதால்.

163.
ஒரு பொருள் இடம் மாறி இருந்தால்
பழக்கப்பட்ட சூழ்நிலை
இல்லாத வேறொரு சூழ்நிலையில்
ஒருவரைப் பார்க்கையில்
எல்லாமே ஒருமாதிரிதான் இருக்கிறது.

164.
எந்தப்புத்தகத்தைப் படித்தாலும்
பிளோட்டோ சொன்னதுதான் சரி.
நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை.

165.
நினைவு என்பதையே அறிவென்று அவன்
சொன்னான்;
உண்மை என்பது கேவலம்
நிகழ்ந்தது கூறுதல் என்பது மாத்திரமில்லை
என்று இன்னொருவன்; அப்படியானால்
எதை வைத்து எதைப் பாகுபடுத்துகிறோம்.

166.
சுமார் 20 வருஷங்களுக்குமுன் பிற்பகல்
ஐந்து மணிக்கு உன்னைநான் முதன்
முறையாகச் சந்தித்தேன்.

167.
ஓவல்
டின்

168.
இந்த இருபது
வருஷங்களில் விஷயங்கள்
பல நடந்துவிட்டன; அப்பா
மிதமிஞ்சிய குடியினால்
வேலையை இழந்துவிட்டு
(ஒரு பத்து வருஷம்
வேலை பார்த்திருப்பார்)
தனது 70ஆவது வயதில்
தான் செத்துவிடுவோம் என்ற ஜுரத்தில்
பிரக்ஞை தடுமாறி
வேட்டி வேறு தான் வேறு ஆகி
தெருவில் ஓடுவது -
அம்மா
அவருடன் பட்டதெல்லாம் பட்டுவிட்டு
இருந்தாலும்
அவருக்குப் பணிவிடை செய்துகொண்டு
கட்டிலிருந்து கொண்டு
இந்தக் கட்டையை நீட்ட
இன்னும் எவ்வளவு நாளோ
என்று
தினமும்
புலம்புவது
அவள்
தினம்
தினம்
தான்
வாழ்ந்த வாழ்வையும்
அது
போன
விதத்தையும்
நினைந்து
தன்
பொம்மைக் கண்களுடன்
உத்தரத்தை
உற்றுநோக்கி
தற்பரமாகத் தான் தனியாக
சிரிசிரி என்று சிரிப்பது
தான்
எங்கெங்கோ சென்றபின்
இங்கு வந்து
இந்த வாத்திமைத் தொழிலில்
கிடைச் சரக்கானது
என்றாலும்
ஏதோ
ஒரு நாள்
ராமநாதனைச்
சந்தித்தது
அதன்பின்
எழுத்தைப்
பிடிக்க
எத்தனித்தது.
உன்னைப்
பார்த்து
“உறங்கி விழித்தது”

169.
“பிற்பகல் 5 மணிக்கு சாவு
(அவன்) காயத்தில்
முட்டையிட்டது.”

170.
அவன் தொழிலில்
அவன் சமர்த்தன்தான்
யாரில்லை என்றார்கள்
என்றாலும்
இவ்வளவும்
பேசிய பிறகு
செய்த பிறகு
நாற்பது வெள்ளிக்
காசுகள் சம்பாதிக்க
வேண்டுமென்றால்
அதற்கு ஏசுவின்
தலையைத்தான் வெட்ட
வேண்டுமா ?
நீ என்ன உளறுகிறாய்.

171.
தோல் விவகாரம்தான்
என்றாலும்
தோலைக் கிழித்து
அதனை ஊடுருவி
உள்ளே செல்ல விரையும்
இவ்வேகமோ காதல்
அப்படியானால் அழகு ?
காமம் சற்றுக் கவனித்துப்
பார்த்தால்
இருந்த இடம் தெரியாமல்
மறைந்து போகும்.

172.
அவன் திறமைசாலி
ஸ்தாபனங்களின் கௌர
வமான வில்லைச் சேவகன்.
அவன் யாரையும்
பகைத்துக் கொள்ளமாட்டான்;
அவன்
செத்த முகம்
அவன்
ஓயாமல் சிகரட் குடிப்பான்
அவன்
பேசுகிற பேச்சிலே மிக
அலக்ஷிய பாவத்துடன்
தன்-எதிரிகள்-சொந்த வாழ்வு-பற்றி
விரும்பத்தகாத விஷயங்களை உதிர்ப்பான்ய
அவர்கள் இவனுக்கு
அஞ்சு காசு ஒரு
சமயம் கொடுக்க மறுத்த காரணத்தால்.

173.
அவன் உன்னுடன் இசைவதற்கு
அறிகுறியாக “ஆமாம்”
என்று தலையை
ஆட்டிக் கொண்டிருக்கும்ய
போதே “உன்னைப்
பார்த்துக் கொள்கிறேன்”
என்று உள்ளே
உறுமிக் கொண்டிருப்பான்.

174.
அவன்
எவர்களை ஒரு உத்தேசத்திற்காக
மதிக்கிறானோ
அந்த உத்தேசம் நிறைவேறிய பின்
அவன் அவர்களை
அவமதிப்பான்
இதற்கு அவன் கொடுத்திருக்கும்
அர்த்தம் :  ஆத்ம சுதந்திரம்

175.
அவன் அதிகமாகப் பேசமாட்டான்
ஏனென்றால்
தான் பேசினால் எங்கேயாவது
அகப்பட்டுக் கொண்டு விட்டாலோ
என்று ஒரு எச்சரிக்கையான வாழ்வு.

176.
அவனைப் பற்றி
நாலுந் தெரிந்தவர்
சொல்வது; அவன் நல்லவன்;
ஆனால் அவனிடம்
போகாமல் இருப்பது
நமக்கு நல்லது!

177.
“போகட்டும்”
என்னவானாலும்
நாலுபேர்
அவன் பேரைச் சொல்லுவார்கள்
பிறகு இருக்கவே
இருக்கிறது; நாற்பது
வெள்ளிக்காசு.

178.
கட்டிப் பிடிக்க
விட்டுக கடிக்க

179.
எட்டிப் போக
சட்டி உடைய

180.
காதல்
சாலை

181.
சாவில்
சிருஷ்டி

182.
எனக்குச்
சமயமாகிவிட்டது.

183.
இந்த உடலை விட்டு
உள்ளத்தை விட்டுப்

184.
போக

185.
ஆசார்யா ராஜ் நீஷ்
என்றுதான் நினைக்கிறேன்.
சாவைக் காணப்
பயமாக இருந்தால்
தினம் ஒரு சிறிது நேரமாவது
தனியாக  இருக்கப்
பழக்கிக் கொள் என்றார்.

186.
உண்பதை விட
உண்டதை ஜரிப்பது
இருப்பதை விட
இல்லாமல்
இருப்பது - எனபவை தெரிய

187.
கிருஷ்ணமூர்த்தியின்
“சூன்யவாதம்”

188.
நீ அங்கிருக்கிறாய்
நான் இங்கிருக்கின்றேன்
இடம்
காலம்
ருசி-அருசி
“கனவுகள்-மயக்கங்கள்-லக்ஷியங்கள்”
எல்லாம்தாம் நம்மைப்
பிரிக்கின்றன.
என்றாலும் என்ன ?

189.
எழுதும் பொழுது
சிந்திக்கும் பொழுது
செயல்புரியும் பொழுது
சும்மா இருக்கும் பொழுது
ஒன்றைக் காணும் பொழுது
காணாத பொழுது
உண்ணும் பொழுது
உறங்கும் பொழுது
மலஜல விஸர்ஜனம் செய்யும் பொழுது
மூச்சுவிடும் பொழுது
நாக்கடிக்கும் பொழுது
நான் இல்லை
என்னும் அதே சமயம்
நான் உண்டு
என்று உணரும் போது
எதைச் செய்தாலும் அறிந்தாலும்
உணர்ந்தாலும்
எல்லாவற்றிற்கும்
இடைவிட்டு இடை
தொடர்ந்து வருமொரு
சூன்யம்தான்
நம்மைக் காக்கிறது.

190.
அதனால்தான்
இன்று திரியும் பாஷையில்
“எதிலிருந்து எதிலிருந்து ஒருவன்”
உனக்குத் தெரியாததில்லை எப்படி
இந்த வரி முடிகிறது என்பது,
என் அன்பே !

191.
அதனால்தான்

192.
ஆகாய வடிவமான
உன்னை நான்

193.
ஊழி தோறும்
தேடி நின்றேன்.