தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, May 26, 2014

வரவேற்பு - ஸ்தேஃபான் மல்லார்மே (மொ. பெ. : பிரமிள்)

வரவேற்பு - ஸ்தேஃபான் மல்லார்மே (மொ. பெ. : பிரமிள்)

இன்மை-கடலின் நுரை
கவிதையின்
கன்னிமை நுரைத்தெழும்
மதுக்கிண்ணம்.
அங்கொரு தூரத்தில்,
மயக்கக் குரல்களின்
ஸைரன் சேனை ஒன்று
முழங்கிக் கொண்டிருக்கிறது.
புயல் - பனிக்கடல்
யாவற்றினூடேயும் விரையும்
கப்பலின் பாய்மரத்தோடு நான்;
மரக்கல முகப்பில்
பல்வேறு விதமான நீங்கள்.
என்னைப் பீடிக்கும்
ஒரு அபூர்வ உன்மத்தம்,
கப்பலின் பயங்கர வேகத்தை
பயமற்றதாக்குகிறது.

தனிமை - நிர்மூலமாக்கும் பாறை -
அல்லது ஒரு நட்சத்திரம் -
இவற்றுள், அவரவர்க்குப் பொருத்தமான
ஏதோ ஒன்று வரவேற்க,
கப்பலில் விரிந்த வெண்படுதா
இழுத்துச் செல்கிறது -
உங்களையும் என்னையும்

 இணை மொழிபெயர்ப்பாளர் : டேவிட் சந்திரசேகர்


A TOAST
StéphaneMallarmé




trans. A. S. Kline

Nothing, this foam, virgin verse
Depicting the chalice alone:
Far off a band of Sirens drown
Many of them head first.

We sail, O my various
Friends, I already at the stern,
You at the lavish prow that churns
The lightning’s and the winters’ flood:

A sweet intoxication urges me
Despite pitching, tossing, fearlessly
To offer this toast while standing

Solitude, reef, and starry veil
To whatever’s worthy of knowing
The white anxiety of our sail.

http://www.brindin.com/pf26m001.htm

Salut

by Stéphane Mallarmé

Translated from the French by Robert Glück

Nothing, this foam, virginal verse
Lineates only the cup
In which a distant siren troop
Drowns, bottoms mostly up

Oh my divers friends, we sail,
I already on the stern
You the sumptuous prow cutting
Through winters of thunder and hail

A fine inebriation makes me fight—
Even as you pitch and reel—
To toast while standing upright:

Solitude, reef, star—
To whatever’s worth the white
Anxiety of our sail

Translated on September 6, 2000, for Barbara Guest’s birthday
 http://constructionlitmag.com/the-arts/poetry/salut/