புதிய கவிதைகள் எதையும் ..... பை ஜுயி (தமிழில் பினாகினி)
புதிய கவிதைகள் எதையும்
அவன் தூரிகை தீட்டவில்லைதான்
அவனது புகழும் கூட மங்கிப்போனது
அவனது பழைய கவிதைகள்
பெட்டிகளில்
அலமாரிகளின் அடியில் தூசித்தும்புகளில் கிடக்கின்றன
ஒரு சமயம் எவனோ ஒருவன்
பாடிக்கொண்டிருந்த பொழுது
அவனது அக்கவிதையை தற்செயலாகக் கேட்டேன்
ஒரு பெரும் வலி
எனது இதயத்தை துளைத்துச் சென்றது
முன்னமே அதனை கவனம்
செய்ய நேரமிருந்தும்
சும்மா இருந்ததால்
கவிஞர் யுவான் ஷியன் எழுதிய பாடலை (ஷியன் இறந்து நெடுங்காலம் கழித்து) - எவனோ ஒருவன் பாடக்கேட்ட பொழுது பை ஜுயி எழுதியது
தமிழில் பினாகினி
புது எழுத்து 8 - ல் - எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் சிறப்பிதழில் - அவரது போட்டோவை பின் அட்டையில் போட்டு இக்கவிதை பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.