தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, May 09, 2016

குசுமபாலெ - தேவனுரு மஹாதேவ : தலித் 10

குசுமபாலெ - தேவனுரு மஹாதேவ : தலித் 10
கன்னடத்திலிருந்து தமிழில் நஞ்சுண்டன்
நாவலின் முடிவுப் பகுதி
9
சலசலன்னு கலகலப்பா ஆடிட்டிருந்துச்சுல்ல தூரம்மாவோட குடிசெத் தென்னங்கீத்து முதலானதுங்க அங்கெ தூரம்மாவோட கை சைகைக்குத் தக்க மாதிரி ஈரியோட கையாடிட்டே இப்பொ மசாலா அரைச்சிட்டே அங்கருந்து எளுந்துட்டிருந்த அந்த வாசனெக்கி, அப்பத்தான் மொளுவிப் பச்சையா இன்னும் ஈரமா சாணி வாசனெயும் கலந்துட்டு இருக்க அங்கெ ஒரு சேவலு ஒன்னோட தலெ முண்டத்துலருந்து வேறெயா வுளுந்திருக்க அறுக்குறப்ப அந்தச் சேவலோட வாயிக்கு நாலு சொட்டுத் தண்ணியெச் சொட்டு சொட்டா வுட்டிருந்தாலும் அதோட மொத்தச் சரீரத்தோட ஒதறாட்டம் இப்பொ ஒதறாமெயிருக்க. அந்தச் சரீரத்தோட உள்ளயிருந்த சுதந்திரமான மாம்சக்கண்டங்கள்ளயிருந்த சின்ன உசுரும் வுட்டுப்போவக் கடேசியா படபடத்துட்டிருக்க முன்னாடி வச்சிருந்த அந்தக் கிண்ணியில ஊத்தி வச்சிருந்த ரத்தமுங் கட்டியாயிட்டிருக்க அதுமேல தூவியிருந்த நாலஞ்சி உப்புக் கல்லுங்க கரெயாம ஒக்காந்திருந்துச்சிங்க. முன்னாடி பத்தவச்சிருந்த ஊதுவத்தியும் இன்னும் எரிஞ்சிட்டே இந்த வாசனெயும் மசாலா சாணி வாசனெயோட சேந்துட்டே. எப்பொ சரியும் சேவலோட ரெக்கெயெப் புடுங்கி நெருப்புலப் புடுச்சித் தீய்க்கத் தொடங்குனப்பொ மூக்கறுக்கர இந்த வாசனெயும் தாக்கிக்கிட்டே சுத்தியும் ஆடுற அந்த மூச்சுங்களுக்கு ஒட்டிட்டே எல்லாமும்.

இந்த வகெயா வாசனெங்க ஒன்னாச் சேந்து ஆடிக்கிட்டு இந்தப் பக்கம் ஈரியுங் குளிச்சி மடியா நெத்தி நெறயா ரொம்பியிருந்த துன்னுறு குங்குமத்தோட ஒருசந்தியிருந்து தன்னோட தலெ முடியெ எண்ணிக்கும் இல்லாமெச் சீவி அந்தச் சீவுறதுக்கு ஊத்தியிருந்த வெளக்கெண்ணெ அவளோட கண்ணத்தெ லேசாத் தடவிக்கிட்டே எறங்க. அவ சீவிக் கட்டியிருந்த கூந்தலு மொனெயோட செவப்பெல்லாம் ஒன்னாச் சேந்து அந்த எண்ணெ முடிச்சு நெருப்புக் கங்கு மாதிரியே தெரிய இந்தக் கங்கு மாதிரி இருந்ததோட மேலெ மூணு பூவுங்க சிரிச்சிக்கிட்டே ஒக்காந்திருந்துச்சிங்க.

அம்மா இப்புடியிருக்க, மவெஞ் சுடுதண்ணியிலக் குளிசிட்டு ஒடம்போட எலும்புக்குத் துன்னூறு ரொப்பிக்கிட்டு. அதுக்கே களச்சிப்போயி அங்கெ ஒடியாடிக்கிட்டிருந்த அது எந்த வாசனெயும் அவனெ மோந்து பாக்கலியோ ங்கற மாதிரித் தாம்பாட்டுக்குத் தான் செவுத்துப் பக்கொம் மொவத்தெக் காட்டி ஒக்காந்துருந்துச்சி.

ஈரியும் பூஜெயிலப் பிரியம் ரொம்பிப் பத்துப்பேரு சாப்புடறளவு ரொம்புற தாம்பாளத்தெப் பளபளப்பாக் கிட்டே பளபளப்பாக்குனப் பறம் அந்தத் தாம்பாளத்தெத் தொடச்சப்பறம் முனு கோடு துன்னுாறு இழுத்தவளாயி, இழுத்து அதுக்கு ஊதுவத்தி பத்த வெச்சி அதுக்குங் கையெடுத்துக் கும்புட்டு நெலத்துல முன்னந்தலெ பட நெடுக்கா வுளுந்தா அப்புறமா அந்தத் தாம்பாளத்துல தாஞ் செஞ்சுது கிஞ்சதெயெல்லாம் ஒண்ணொண்ணாக் கண்ணுல ஒத்திக்கிட்டு வெக்க அந்தத் தெரண்ட புழுங்கலரிசிச் சோறெக் கொட்டி அந்தச் சோறெச் சுத்தி நனெயிறளவு கமகமங்கறக் கொழம்பெ ஊத்தி மேலெ ஈரலு குண்டிக்காயி மெத்துண்ணிருந்த கறித்துண்டு சேத்து ஒரு அடசலு வெச்சி பக்கத்துல ஒரு முடி தளும்புறப் பாயாசத்தெ வெச்ச அந்தத் தாம்பாளம் ரொம்பி அங்கியே சரிபண்ணிக் கொண்டாந்திருந்த ரொட்டி குல்கந்து ரொப்பி.

ரொப்பி முடிச்சி அங்கெ எரியுற வெளக்கெண்ணெ வெளக்கெத் தன்னோட ரண்டு கையிலயும் புடுச்சி ஒரே தெடத்துல அதெ அந்தத் தாம் பாளம் ரொம்பியிருந்த சாப்பாட்டுக்கு மேலெ வெத்தல பாக்கு வச்சி அந்த எரியுற வெளக்கெ வெச்சி . . . .

ஈரியும் ஆடிக்கிட்டே பாக்கத் தன்னோட காரியத்தெக் கத்துட்டிருக்கற வகெக்குத் துரம்மா தலெயாட்டிக்கிட்டிருக்க ஈரிக்கு அது ஆனந்தத்தெக் கெலிச்ச மாதிரி ஆச்சி. சாப்பாடு ரொம்பித் தளும்பிக்கிட்டிருந்த தாம்பாளத்துக்கு ஈரி புதுக் கூடெ கவுத்து எளுந்திருச்சி ஈரி சாம்புராணிப் பொகெ போட நெருப்பெ, அந்த நெருப்பு மேலெ சாம்புராணி போட்டு அந்தச் சாம்புராணிப் பொகெ தாம் தூம்முன்னு எழுந்தாட அந்தச் சாம்புராணிப் பொகெயெக் கை குவிச்சுப் புடுச்சி, நெருப்பெக் குடுத்த அடுப்புக்கு ஒருவாட்டி ஆரத்தி எடுத்துத் தன்னோட முன்னந்தலெ நெலத்தெத் தொடக் கும்புட்டுச் சாமியோட தீர்த்தம் ரொப்பிக் கிட்ட மஞ்சள் பருத்தித் துணிக்குச் சாம்புராணிப் பொகெ வெளாவிக் கும்புட்டு நெடுக்கா வுளுந்தவ எழுந்துரிச்சித் தாம்பாளத்துப் பக்கம் வந்தவ சாம்புராணிப் பொகெயெ வெளாவிக் கும்புட்டு. ஈரியோட மூச்சு வேத்துக் கொட்டியிருந்துச்சி, அந்தச் சாம்புராணியெ எடுத்துட்டு வந்து சாமியோட தீர்த்தம் ரொம்புனத் துணி முன்னாடி வச்சி நெடுக்கா வுளுந்து எளுந்து.

அப்பொ தாந் தொப்புள்கொடியோடத் தலெயெத் தவிக்கிட்டு ஈரி கண்ணு . . . ன்னா. அது கண்ணெ முளிச்சிச்சி. கொஞ்சூண்டு வெளியே போயிட்டு வாறேன். ஏதாவுது வவுறு கிவறு பசிச்சா அந்தக் கூடையிலெ ரவ்வூண்டு என்னமோ மூடி வச்சிருக்கறெந் தின்னுக்கோ எங்கண்ணே ன்னா. அது தலயெ ஆட்டிச்சி. ஈரி அப்பொ துாரம்மாவெப் போல மறஞ்சி நின்னு கொளந்தெ மேலெக் கண்ணெ நட்டப்பொ,

இன்னென்னா இனி அரெனிமிசந் தாமதிச்சாலும் இந்தச் சிறுகொடலெ அந்தப் பெருங்கொடலு தின்னுட ராப்பு:லாட அப்பவும் அம்மா வராமயிருக்க ஈரிபையன் தாந் தலெயெ தூக்கிச்சி. அந்தத் தலெயெத் தூக்குன ஈரியோட பையனும் எளுந்துச்சி ஒக்காந்துச்சி.

அந்த எளுந்து ஒக்காந்த ஈரியோட பையனுக்கு அப்பொ அம்மாவோட கொரலு வந்து கண்ணு காதெத் தொறந்துட்டு தவுந்துட்டுக் கூடெக்கிட்டெ வந்து தான் வந்து, அந்தக் கூடெயெத் தான் ரண்டு கை பலத்துலயும் எடுத்ததுக்கு அதோட மூச்சுக்குக் களெப்பாச்சி. அந்தக் களெப்புக்கு அந்தத் தாம்பாளம் ரொம்பியிருந்த சாம்ராஜ்யம் ஆனந்தத்தெ ரொப்பியிருந்துச்சி. இருந்த அந்தக் கண்ணுங்க அதுங்களால முடிஞ்சளவு அகலமாயி. அகலமான கண்ணுக்கு அந்தச் சாம்ராஜ்யத்து மேலெ எலயெ விரிச்சிட்டு அது மேலெ ஒக்காந்துக்கிட்டு எரிஞ்சிட்டிருக்குறா ஜோதியம்மா.

இன்னும் புடுங்கி அகலமாச்சி கண்ணு. அந்த வேர்வெ ஒடம்புலர்ந்து எங்கிருந்துச்சோ வேர்வெ புடுங்கி எறெஞ்சிக்கிட்டேயிருந்துச்சி வேர்வெ. அந்தப் பையங் கண்ணாரப் பாத்துட்டே வேர்வெ புடுங்கி எறெஞ் சிட்டே. தாம்பாளம் ரொம்பியிருந்த ஆனந்தம் அந்தப் பையனோடக் கண்ணுல ரொம்பிச்சி. கண்ணுல ரொம்புன ஆனந்தம் அந்தச் சரீரத்துல ரொம்பிட்டே. ஆனந்தம் அந்த அந்தப் பையனோட மொகமாயி, அங்கிக்கே மூச்சப்புடுச்சி நின்ன அம்மா, தூரம்மா பாட்டியோட குத்திட்டிருந்த கண்ணுங்களெச் சேந்து ட்டே இந்த மாதிரி ஆவ வந்த சரீரங்கள்ளயும் ஆனந்தம் ஆடிக்கிட்டு.

அந்த ஆனந்தத்துக்கு இந்த மின்னாடியிருந்த சாம்ராஜ்யத்தெ அது எந்த வகெயிலத் திங்கனுமோ கொள்ளனுமோ.

அதோட கண்ணுங்களோட அகலம் அதெவ்வுளவோ

அனுபவிக்கத் திராணியில்லாத அந்தச் சரீரம் நடுங்கிட்டே

அந்த நடுங்குற வெரலுங்களும் கறியெத் தேடிப் புடிக்க முடிஞ்சதுல

கறியெத் தேடிப் புடுச்ச வெரலப்பொ நாக்கெச் சேர

இந்த நாக்கெ நக்கிட்டு அந்த வெரலெப் பாயாசத்துக்கு அனுப்ப

ஒட்டிக்கிட்ட வந்த பாயாசத்தெ இது சிரிச்சிட்டே நக்கிக்கிட்டே

அந்தக் குல்கந்துக்கு வெரல அனுப்பி அதெயிப்பொ வரவழச்சிட்டு

வந்த அந்தக் குல்கந்தெ நக்கிக்கிட்டு பெறவு

இந்த ஈரலு குண்டிக்காயெ வரவழச்சி அதெச் சப்பிக்கிட்டே அப்புறமா

அப்பொ அந்த எலும்புலயும் உசுரு சஞ்சாரம் பண்ணி

இன்னென்ன சாப்புடறதோ இன்னென்னா

தெரியாமயிருக்கறப்பொ

தெரியாமயிருக்கறப்பொ அந்தச் சரீரந் தன்னோட அறிவெத் தொலச்சிட்டு. தொலச்சிட்ட அந்தச் சரீரம் ஒரு பக்கமா சாஞ்சி விளுந்துச்சி. துரம்மா தடுமாறிட்டே வெருசா வர, பாத்துட்டே ஈரியும் பாத்துட்டே அப்புடியே பாத்துட்டே தின்னுருந்தால்ல நின்னுருந்தா.

காத்துட்டேயிருந்தாப்புல சாவும் அந்தப் பயனோட எலும் புங்களெ கெவ கெயாத் தி ன்னு அந்த எலும்புலயும் ரவ்வூண்டு ஈரமாடுறதுக்குக் காத்துட்டிருந்த சாவும் இப்பொ அந்த ஈரத்தெச் சப்பிக்கிட்டே நடந்துச்சி.

அப்புடி நடக்கறப்ப சாவும் அந்த மொவத்து லவுண்டாயிருந்த சிரிப்பும் தாம் பாளத்து ரொம்பியிருந்த சாம்ராஜ்யமும் அந்தக் கண்ணுல எறங்கி ஈரி  ைபயனோட மொவத்துலருந்த சிரிப்பெ, வேணு மின்னே என்னவோ அதெ எடுத்துட்டுப் போவாமெ அந்தச் சிரிக்கிற அந்த மொவத்துலயே தங்கி அது அந்த விரிஞ்ச அந்தக் கண்ணு வாயி மூடாமெ நடந்துருந்துச்சி அப்பொ,

அந்த வந்தவங்க யாரு போனவங்க யாரு. யாரோ வந்தாங்க. யாரோ அந்த எலும்பெ வாரிக்கிட்டாங்க. யாரோ எலும்புக்குக் குளிப்பாட்டிச் சுத்தம் பண்ணுனாங்க. யாரோ தூக்கிக்கிட்டாங்க. தோளு மாத்தி யார் யாரோ நடந்தாங்க. யாரோ பொதச்சாங்க. யாரோ பொதச்சி வந்தாங்க வந்தவங்க யாரோ சிரிப்புத் தடவுன மூஞ்சியோட இருந்த ஈரி முன்னாடித் தண்ணி ரொம்புன கலசத்தெ வச்சாங்க. யாரோ கலசத்துக்கு ஊதுவத்தி பத்த வச்சாங்க, பொகெ பரவிக்கிட்டிருக்க யாரோ கலசத்துக்குப் பக்கத்துலக் கண்ணாடி வச்சாங்க.

அந்தக் கண்ணாடி, ஈரியோட அந்தச் சிரிப்புத் தடவியிருந்த மொகத்தெ, அந்தக் கண்ணாடியில அந்தச் சிரிப்பெக் காட்டிக்கிட்டிருந்துச்சி அந்தச் சிரிப்பு.

O