தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, May 08, 2016

ஐந்தாவது பொருத்தம் - திலீப்குமார் : காலச்சுவடு - ஆண்டுமலர் 1991

________________
காலச்சுவடு -  ஆண்டுமலர் 1991
படிப்பகம்
www.padippakam.com

ஐந்தாவது பொருத்தம்
திலீப்குமார்

இந்தக் கதையின் நாயகர்கள் இருவர். ஒன்று நீங்கள். மற்றது உங்களுடைய செல்ல நாய்க்குட்டி.

உங்கள் பெயர் காந்திலால் பி. கேன்யா.உங்களுக்கு வயது 21. பி.காம் கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சுமாரான உயரம். மாநிறம். உங்கள் முக்ம் சதுரமானது. உங்கள் கன்னக்கதுப்புகள் பால்பவுடர் விளம்பர குழந் தைக்கு உள்ளதுபோல் பூரித்து பளபளக்கின்றன. நீங்கள் கண்ணாடி அணிந்திருக்கிறீர்கள். உங்கள் சுபாவத்தின் ஆழத்தை இந்தக் கண்ணாடி மறைத்துவிடுகிறது. எனவே நீங்கள் மனவளர்ச்சி குன்றிய வெகுளிபோல் தோற்றம் அளிக்கிறீர்கள். அதனால் பரவாயில்லை உங்களுக்கு. நீங்கள் உங்கள் முகத்துடன் வாழ எப்போதோ கற்றுக் கொண்டுவிட்டீர்கள். நீங்கள் ரொம்பவும் நல்லவர்,


"நாய்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று உங்களிடம்யாராவது சில மாதங் களுக்கு முன்பு கேட்டிருந்தால் உங்களுக்கு பதில் சொல்லத் தெரிந்திருக்காது. அன்பு, பாசம், கருணை, அனுதாபம், பரிதாபம் என்று எந்த பரி மாணத்திலும் நீங்கள் அதுவரை நாய்களை அணுகியதில்லை. ஒரு வகையில் நாய்கள் என்றால் உங்களுக்குப் பயம்தான். இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு தனியாக திரும்பிய எத்த னையோ சமயங்களில் தெருநாய்கள் உங்களை கலவரப்படுத்தியுள்ளன. அவை உங்களைப் பின் தொடர்ந்து உங்கள் கால்களுக்கு மிக அருகி லேயே வந்து குரைக்கும்போது உங்களுக்கு குடல் சரிவதுபோல் இருக்கும். என்றாலும், உங்க ளுக்குநாய்கள் மீது விசேஷ பகைஏதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பகல் நேரத்தில் நீங்கள் அவற்றைப்பற்றி நினைத்ததுகூட இல்லை.

உங்களைப் போலவே, நீங்கள் வசிக்கும் கரடி சேட் காலனியில் உள்ள மற்ற குஜராத்திகளுக்கும் நாய்கள் பற்றி நிச்சயமான அபிப்பிராயம் ஏதும் இல்லை

கடன்காரர்களையும், குழந்தைகளையும் உவமைநயத்துடன் திட்டும்போது தவிர மற்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் நாய்களைப் பற்றி பிரஸ்தாபிப்பதே இல்லை. கரடிசேட் காலனி வாசிகள் ஏழைகள் எளியவர்கள்.

கரடிசேட் காலனி என்பது, ஒரு பெரிய பங்க ளாவின் பின்புறம் அமைந்த 12 சிறிய தலா மூன்று அறைகள் கொண்ட ஒட்டு வீடுகளின் தொகுப்பு. பங்களாவின் பின்கட்டிலிருந்து சிறிது தள்ளி மூங்கில் தட்டி போட்டு தடுக்கப்பட்டிருந்தது காலனி. பனிரெண்டு வீடுகளும் ஒரேநேர்வரிசையிலிருந் தன. அவற்றின் நீண்டமுற்றத்தில் ஒருமுனையில் இரு தென்னைமரங்களும் மறுமுனையில் ஒரு நெல்லிமரமும் இருந்தன. முன்னால் நின்ற பங்களா கரடி சேட்டுடையது. கரடிசேட்டின்இயற்பெயர் சகன்பாய் பட்டேல். சுமார் ஐம்பது ஆண்டுக ளுக்குமுன்பு அவர், சகன்மகன் மற்றும் சகோதரர்கள் என்ற பெயரில் ஒரு கடையை துவக்கி, ஊத்துக்குளி நெய்யை வாங்கி விற்பனை செய்து வந் தார். வியாபாரம் சூடுபிடித்து ஓரிரு ஆண்டுகளில் சொந்தமாக பண்ணை வைத்து நெய் தயாரித்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, அதற்குசின்னமாக கரடியை தேர்ந்தெடுத்திருந்தார் சகன்பாய். கரடிமார்க் நெய் இந்தியாவெங்கும் பிரபலமாகி விட்டது. சகன்பாய் லட்சக்கணக்கில் பணம் சேர்த் தார். அவரது சின்னத்தைப் போலவே பேரும் பிரபலமாகிவிட்டதால், உள்ளுர் மக்கள் அவரை திடீரென்று ஒருநாள் கரடிசேட் என்று வாஞ்சையு டன் அழைக்கத் துவங்கினர். அவரும் அப்பட்டத்தை ஏழை குஜராத்திகளுக்காக அவர் கட்டிய காலனி இது.

தினமும் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தபின் மாலை 6.00 அல்லது 6.30 வாக்கில் நீங்கள் உலா வச் செல்வது வழக்கம். உங்கள் நண்பர்கள் மணி, பாரத் ஹஸ்முக்ராய், பக்கா என்கிற பல்லுபாய் ஆகியோர் உங்களைத் தேடி வருவார்கள். அவர்கள் வந்தவுடன் நீங்கள் கிளம்பி விடுவீர்கள். நீங் கள் உலாவச் செல்லும்பாதையும் கூட ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். வி. சி. வி. லே அவுட் சந்திப்பில் துவங்கி தேவாங்க உயர்நிலைப்பள்ளி வழியாக ப்ருக்பாண்ட் சாலையில் திரும்பி நேராக செல்வீர்கள். சிந்தாமணி சூப்பர் மார்க் கெட்டைக் கடந்து சென்ட்ரல் தியேட்டரை அடை வீர்கள். அங்கு கேன்டினில் காப்பி அல்லது ஐஸ்கி ரீம் சாப்பிடுவீர்கள். பின் கோல்டுப்ளேக் கிங்ஸ். சிகரெட்டை பற்ற வைத்து கொண்டு, அதே பாதை வழியர்கள் அதே மாதிரியாக திரும்பிவிடுவீர்கள். வி. சி. வி. லேஅவுட் சந்திப்பில் பிரிந்து கொள்வீர்கள். பணம் உபரியாக இருக்கும் சில சமயங்களில் மட்டும் நீங்கள் எல்லோரும் அன்னபூர்ணா ஹோட்டலுக்குச் சென்று டிபன் சாப்பிடுவீர்கள். பான்பீடா போடுவீர்கள். ஹிந்தி சினிமாவுக்கு செல்வீர்கள். எப்படியேனும் மாதம் ஒருமுறை இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

உங்களுக்கு நண்பர்களுடன் உலாவச் செல்வது மிகவும் பிடித்தமானது. ஒருநாள்கூட தவற சங்கோஜமின்றி மாட்டீர்கள். குளிர்ந்த மலைக்காற்று வீச ப்ருக் பாண்ட் ஆலையிலிருந்து பதப்படுத்தப்படும் தேயிலையின் மணம் எங்கும் பரவ பெரிய மரங்க ளின் வரிசைக்கு கீழே நடந்து செல்வது மிக ரம்மி யமானதாய் இருக்கும். உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களாலும் வண்ணக் கற்பனைகளாலும் நிரம்பி வழியும். இப்படி உலாவச்செல்லும்போது தான் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப்பற் றியும். நீங்கள் பேசிக்கொள்வீர்கள். மணி ஆங்கில இலக்கியம் படிப்பவன். அவன் ஆங்கில இலக்கியம் பற்றி ஒரு ஆங்கிலேயனை விடவும் விசுவாசமாகவும் திறமையாகவும் பேசுவான். ஹஸ்முக் மின்பொறியியல் படித்தான். எனவே அணுமின் சக்தி பற்றி பேசிக்கொண்டு வருவான். பரத் சமீப காலத்தில் ஒரு வினோத மனநிலைக்கு ஆட்பட்டி ருந்தான். அவன் பிரதான்மாக தனக்குத் தோன் றிய பயங்கர கனவுகளைப்பற்றியும்பேய்பிசாசுக ளைப் பற்றியுமே பேச விரும்பினான். பக்கா தேசிய வர்த்தக சபையின் தலைவனாய் இருக்க வேண்டியவன். ஸ்ப்போதும் ஏதேனும் வியாபா ரத் திட்டத்துடன் ததும்பிக் கொண்டிருப்பான். இன்று வியாபார ரீதியில் வெற்றி பெற்றுள்ள பல தொழில்களைக் குறித்து (சொட்டு நீலம் தயா ரிப்பு, பெட்ரோல் எஞ்சினை டீசல் எஞ்சினாக மாற்றுவது. இத்யாதி) பல ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து முடித்திருந்தான் பக்கா. தற் போது அவன் கரும்பு, தேங்காய், வெல்லம், மற் றும் சில தாவரங்களைக் கொண்டு யானைகளுக் கான பதப்படுத்தப்பட்ட மலிவு உணவை தயாரிக் கும் திட்ட வழிமுறை அறிக்கையை தயார்செய்து வைத்து இருந்தான். கேரளத்து மாவுத்தங்களையும், இந்து அறநிலைத்துறையையும் அவன் இதற்காக மிகவும் ஆவேசமாக நம்பிக் கொண்டிருந் தான். தான் தயாரிக்க இருக்கும் அந்த விசேஷ யானைத் தீனிபற்றி விளக்கிக் கொண்டே வரு வான் பக்கா. நீங்களும் சிறிது பொருளாதாரம் குறித்து பேசுவீர்கள். அணுமின் உலைக்களம், எலியட்டின் கவிதைக் கோட்பாடு, யானைக்கவளம், பொருளாதாரம், பேய் பிசாசுகள் தவிர நீங்கள் அவ்வப்போது பெண்கள் மற்றும் பாலுணர்வு குறித்தும் பேசுவதுண்டு.
***
ஏற்றுக்கொண்டார்.
*****
  
இதுபோல் ஒருநாள் நீங்கள் உலாவச் சென்று விட்டு திரும்பிய போதுதான் அது நடந்தது. அன்று ஹஸ்முக், பக்கா, மணி மூவரும் வர வில்லை. பரத் மட்டுமே வந்திருந்தான். அவனு டன் தனியாகச் செல்ல உங்களுக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும் சென்றீர்கள். பரத் முதல் நாளிரவு தான் கண்ட மிக மிகக் கொடூரமான ஒரு கனவை பயங்கரமாக வர்ணித்தான். கூடவே மூன்று பேய்க்கதைகளையும் சொன்னான். ஒன்று தமிழ்நாட்டு நீலிக்கதை மற்றவை குஜராத்தின் இரண்டு பெண் பேய்கள் பற்றியவை.

ஒருவழியாக பரத்தை அனுப்பிவிட்டு நீங்கள் உங்கள் காலனி இருக்கும் தெருவிற்குள் நுழைகிறீர்கள். திடீரென்று எங்கிருந்தோ சிறு குழந்தை அழுவதுபோல் முனகல் கேட்கிறது. நீங்கள் துணுக்குறுகிறீர்கள். அப்படியே நின்று விடுகிறீர் கள். மீண்டும் சப்தம் கேட்கிறது. தெருவில் வெளிச்சம் அதிகமில்லை. நீங்கள் மெல்ல சப்தம் வரும் திசையை நோக்கி நடக்கிறீர்கள் தெரு முனையிலிருந்த மரத்தடியிலிருந்துமுனகல் கேட் கிறது. நீங்கள் மரத்தருகே சென்று குனிந்து பார்க்கிறீர்கள். ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டி இருப் பது தெரிகிறது. அது முனகுகிறது. மரத்தடியில் இங்கும் அங்கும் கற்றுகிறது. மீண்டும் முனகுகி றது. மீண்டும் மீண்டும் முனகுகிறது. நீங்கள் அந் தக் குட்டிக்காக வருத்தப்படுகிறீர்கள். உங்களுக் குள் அன்பும் வாஞ்சையும் சுரக்கிறது. நீங்கள் ஒரிரு கணங்கள் யோசிக்கிறீர்கள். பின் சட் டென்று இருகைகளாலும் நாய்க்குட்டியை எடுத் துக் கொள்கிறீர்கள். பின் வேகமாக நடக்கத் துவங்கி விடுகிறீர்கள்.

உங்கள் சகோதரிதான் கதவைத் திறக்கிறாள். நாய்க்குட்டியைப் பார்த்ததும், 'என்ன இது?" என்று பதட்டத்துடன் கேட்கிறாள்.

"நாய்க்குட்டி இனி நம் வீட்டில்தான் இருக்கும். நான் வளர்க்கப்போகிறேன்' என்று நீங்கள் பதில் சொல்கிறீர்கள். உங்கள் சகோதரி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறாள்.

உங்கள் தாயாரிடம் உங்கள் சகோதரி பேசும் குரல் கேட்கிறது. நீங்கள் நாய்க்குட்டியை கதவருகே உட்புறம் இறக்கிவிட்டு விடுகிறீர்கள். நாய்க்குட்டி மீண்டும் முனகுகிறது. நீங்கள் உடைமாற் றிக் கொள்கிறீர்கள். முகம் கழுவிக் கொள்கிறீர் கள் உங்கள் தாயார் உணவைத் தட்டில் வைத்து உங்களிடம் தருகிறாள். நீங்கள் முன்னறையி லேயே உட்கார்ந்து நாய்க்குட்டியைப் பார்த்தபடி சாப்பிடுகிறீர்கள். உங்களையும், நாய்க்குட்டியை யும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் தாயார் திடீரென்று. 'இந்தப் பீடையை எங்கி ருந்து பிடித்துக்கொண்டு வந்தாய்?" என்று குஜ ராத்தியில் கேட்கிறார். நீங்கள் பதில் ஏதும் சொல் லாமல் அவரைப் பார்த்துப் புன்னகைக்கிறீர்கள். உங்கள் தாயார் மீண்டும் "நிஜமாகவா இதை நீ வளர்க்கப்போகிறாயா?" என்று கேட்கிறாள். நீங் கள் தோரணையுடன் தலையை ஆட்டி ஆமோதிக் கிறீர்கள் சரியான பைத்தியம் என்று கூறிக் கொண்டே உங்கள் தாயார் தலையிலடித்துக் கொள்கிறாள்.

நாய்க்குட்டி உங்கள் குடும்பத்தாரின் செருப்பு களை ஒவ்வென்றாக முகர்ந்து பார்க்கிறது. ஒவ் வொரு ஜதை செருப்பையும் முகர்ந்து பார்த்தவுடன் தலையை சற்று உயர்த்தி முனகுகிறது. சற்று தள்ளியிருக்கும் உங்கள் பூட்ஸ்க்குள் தலையை நுழைக்க முயலுகிறது. பின் பித்தான் துளை போன்ற சிறிய கண்களை மூடித்திறந்தபடி நீங்கள் இருக்கும் திசைக்கு மெல்ல வருகிறது. உங்கள் கால்களில் அதன் ஸ்பரிசம் ஏற்படுத்தும் கூச்சம் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் சத் தம்போட்டு சிரிக்கிறீர்கள்.

உங்கள் தாயாரும் சகோதரியும் உடன் சிரிக்கிறார்கள்.
சாப்பிட்டு எழுந்தவுடன், பழைய மாம்பழக் கூடை ஒரு கோணித்துணி, உங்கள் வீட்டு வேலைக்காரியின் சிற்றுண்டித் தட்டில் சிறிது பால், இவற்றை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வருகிறீர்கள். நாய்க்குட்டியின் முன்பு பாலை வைக்கிறீர்கள். அதுமெதுவாகசாப்பிட்டுமுடிக்கி றது. நீங்கள் செருப்புகளை நகர்த்திவிட்டு கூடையை வைக்கிறீர்கள். பின்பு அதற்குள் கோணிததுணியை வைத்து நாய்க்குட்டியையும் வைக்கிறீர்கள். நாய்க்குட்டியின் முனகல் இப் போது குறைந்துவிட்டதுபோல் தோன்றுகிறது.

நீங்கள் வழக்கம்போல் முன்னறையிலேயே படுக்க ஆயத்தமாகிறீர்கள்.

இரவு வெகுநேரம்நாய்க்குட்டியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். யோசிக்க யோசிக்க அந்த சிறிய ஜீவன் மேல் உங்களுக்கு ஹிந்தி சினிமா கதாநாயகன் தன் பார்வையற்ற தங்கை மீது கொண்டிருப்பது போன்று அன்பு பெருகி வழிகிறது. அந்த அன்புப் பெருக்கில் அப் படியே தூங்கிப் போய்விடுகிறீர்கள்.

மறுநாள் நீங்கள் கண்விழிக்கிறீர்கள். வெளியூ ரிலிருந்துதிரும்பிய உங்கள்  தந்தை உச்சஸ்தாயியில் உங்கள் தாயாரிடம் கத்திக் கொண்டிருக்கிறார். அந்த அறிவு கெட்ட கழுதைதான் ஒரு நாயைப் பிடித்துக்கொண்டு வந்தானென்றால், உனக்கு எங்கே போயிற்று புத்தி?"

"நீ அவனை வீட்டிற்குள்ளேயே விட்டிருக்கக் கூடாது இருக்கும் தொல்லை போதாது என்று இந்த சனியன் வேறா?"

"நாளைக்கு கண்ட இடத்தில் ஒன்றுக்குப் போகும். இரண்டுக்கு போகும். அதை யார் சுத்தப் படுத்துவது?"

"நாம் புஷ்டிமார்க்கிகள். மதுராவிலிருக்கும் கிருஷ்ணனை நேரடியாக வழிபடுபவர்கள். பசு வளர்க்கும் புண்ணியம் நமக்கு இல்லைதான். அதற்காக தெருவில் கிடக்கும் சனியனையெல் லாம் வீட்டிற்குள் கொண்டுவரலாம் என்று யார் சொன்னது?"

உங்கள் தந்தை அடுக்கிக் கொண்டே போகிறார். உங்களுக்கு கோபம் வருகிறது. நீங்கள் விருட்டென்று எழுந்து நேராக உங்கள் தந்தையிடம் செல்கிறீர்கள். "எதற்காக சத்தம் போடுகிறீர்கள்? அந்த நாய்க்குட்டி இனி என் பொறுப்பு. உங்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். பேச்சை விடுங்கள்' என்று உறுதி யான குரலில் கூறுகிறீர்கள். உங்கள் தந்தை உங்களைப் பார்த்து முறைக்கிறார். நீங்கள் தலையைக் குனிந்து உங்கள் பனியனால் மூக்குக் கண்ணாடியை துடைத்துக்கொண்டு, 'செய்தித்தாள் வந்து விட்டதா?' என்று உங்கள் தங்கையிடம் கேட்கி றீர்கள். உங்கள் தாயார் உங்களுக்கு டீ கொண்டு வந்து கொடுக்கிறார். நீங்கள் உங்கள் தந்தையை ஓரக்கண்ணால் பார்த்தபடியே டீயை சுவைக்கிறீர்கள்.

நீங்கள் நாய் வளர்க்கப்போகும் செய்தி உங்கள் தங்கை மூலம் அதிகாலையிலேயே கரடிசேட் காலனி முழுவதும் காட்டுத்தீ போல் பரவி இருப் பதை உணருகிறீர்கள். நாய்க்குட்டியைப் பார்க்க காலனி குழந்தைகள் கூட்டமாக கதவருகே நிற்கி றார்கள். பாய், ஷங்கர், பாயின் மகன் அதுல், மகள்கள் ஹேமமாலினி, ரேகா, ராக்கி, பூரீதேவி, சுமித்திராபேகனின் பெண் ஸ்மிதா, ராவ்ஜி பாயின் பையன்கள் பூபேந்திரா, ஹேமேந்திரா, மகேந்திரா, ஜிதேந்திரா. இவர்களைத் தவிர ஒரிரு பெரிய பையன்களும் இருக்கிறார்கள். நீங்கள் நாய்க்குட்டியை கூடையோடு சேர்த்து எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறீர்கள். குழந் தைகளும் உங்களைப் பின் தொடருகின்றனர்.

(திலிப்குமார் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் முதல் அத்தியாயம்)
காலச்சுவடு 63 ஆண்டுமலர் 1991]

படிப்பகம்