தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, May 08, 2016

சித்தம் - கோலாகல ஸ்ரீநிவாஸ் : காலச்சுவடு ஆண்டுமலர்

 WWW.padippakam.Com படிப்பகம்

சித்தம் - கோலாகல ஸ்ரீநிவாஸ் காலச்சுவடு  ஆண்டுமலர் 

அவன் தன்னோடு பேசிக் கொண்டான். தற்செயலானது உலகம்; தன்னிச்சையானது செயல்கள் தானே நிகழ்வது கவனம் என்ற வரிகள், ஏதோ ரிஷி ஒன்று என்றைக்கோ சொன்னது போல், பழமையின் தூசிகளோடு அவன் மனதில் தென்பட்டது.

அடிக்கடி ஜன்னல் வழியே வானத்து நீலத்தை ரசித்தபடி மனதையும் சேர்த்துக் குளுமை செய்து கொண்டிருக்கும் காற்றுக்கு வாழ்த்துச் சொல்லியபடி - பெர்த்துக்கும் சேர்த்து டிக்கட் எடுத்துவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் தூங்கிக் கொள்ளலாம் எனும் நம்பிக்கையில் வழக்கத் துக்கு மாறாக விழித்துக் கொண்டிருந்தபடி - அந்த ரயில் பயணத்தை அவன் கெளரவித்துக் கொண்டிருந்தான்.

எதிரே வடநாட்டுப் பயணிகள். அநேகமாய் வியாபாரிகளாய் இருக்க வேண்டும். சட்டைக்கு மேல் இரண்டு சட்டைகள் போட்டுக் கொண்டிருந்தனர். மிகவும் கலகலப்பான ஒரு நிலையில் செஸ் விளையாடத் துவங்கியிருந்தனர். ஒவ் வொரு காயும் நகர்த்தப்படுகிற போதெல்லாம், தங்கள் சாதுர்யங்களை தாங்களே மெச்சிய படி - அதைத் தங்களின் கடைவாய் வழியே வழியும் புன்னகை மூலம் காட்டிக் கொண்டபடி ஷவின் லேஸ்களை அடிக்கடி அவிழ்த்தும் முடிந்தும் தங்களின் சுறுசுறுப்பை நிரூபித்துக் கொண்டபடி - விளையாட்டைக் காட்டிலும் புற இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர்.

அவன், அவர்களையும் வானத்தையும் அடிக்கடி பார்த்துக் கொள்வான். நிலவை சுற்றி, இருந்தும் கலைந்தும் போகிற மேகங்களின் இயக்கங்கள் அவனுக்குப் பிடித்திருந்தன. முன் தீர்மானமற்ற நிகழ்வுகளில் அவனுக்கு அதிக உற்சாகம், சிங்கம் போலத் தெரிகிற மேக அடைசல் இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியாகும் என்று யோசித்து, இப்படியாகும் எனத் தீர்மானிக்கும் முன் - அவன் தீர்மானத்தின் எல்லைகளை தாண்டி புதிய ரூபத்தை மேகம் கொண்டிருக்கும். தீர்மானங்கள் தோற்றுவிடுகிறபோது, இனி வருவது எப்படியிருக்கும் என்ற கேள்வியின் உற்சா கம் பதில் கிடைக்கிற போது அற்றுப்போய் விடுகிறது என் பது அவன் அனுபவம்.

அவன் மீண்டும் செஸ் விளையாட்டைக் கவனிக்க ஆரம்பித்தான். நீண்ட மூக்குடன் நீலநிற சட்டைகள் அணிந்து வலப்புறத்தில் அமர்ந்திருந் தவன் இடது கையால் செஸ் காயையும் வலது கையால் லேலையும் தொட்ட போது, அவன்பிஷப் அடிப்பட்டுப் போனது. . வாய் விட்டுக் கத்திய படி, தன் தவறைத் தானே சபித்துக் கொள்ளும் பாவனையில் நெற்றியில் ஓங்கித் தட்டிக் கொண்டான். வேகத்தில் லேஸையும் அவிழ்த்துக் கொண்டு விட்டான். எதிர் அணிக்காரனிடம் கையை ஒரு போலீஸ்காரர் பாவனையில் நிறுத்துமாறு காட்டிவிட்டு, ஷாவை சரிப்படுத்திக் கொண்டான்.


தீர்மானங்களுக்கு இடம் கொடுக்காமல் நிகழ்ச்சிகள் நடந்து விடுவதால், நடந்த நிகழ்ச்சிகளை கவனிக்க மட்டுமே முடிகிறது. முன் கவியும் மூடுபனியை விலக்கிக்கொண்டு நடப்பதுபோல, கவனங்களைக் கலைத்துவிடுவது அவ்வளவு சுலபமல்ல என்று அவன் எண்ணினான். ஒருவேளை அவன் நிறுத்தச் சொல்லி சைகை காண்பித்தது கூட, அடுத்த நகர்த்தலுக்கு யோசிக்க நேரம் எடுத் துக் கொள்வதற்காக இருக்குமோ? என்றாலும், லேஸைக் கட்டாமலும் நேரம் எடுத்துக் கொள்ள முடியும். ஒருவேளை தான் யோசிப்பதைக் காட் டிக் கொள்ள பிரியப்படாதவனாய் இருக்கலாம். புரியாத மொழியில் உரையாடிக் கொண்டு பிடிபடாத பாவங்களோடு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தது ஒரு விதத்தில் அவனுக்கு வசதி யாய் இருந்தது. எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளும் சுதந்திரத்தை அது அவனுக்கு வழங்கியது. நிலவில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை உதைப்பது போன்ற கற்பனை, திடீர்ென்று அவனுக்குள் எழுந்தது. மெல்லிய அதிர்ச்சியால் ஒரு நொடி சிலிர்த்தான். மீண்டும் புன்னகையோடு வெளியைப் பார்த்தான்.

ஆவேசத்தோடு மோதிச் சென்ற குளிர்காற்று அவன் செவிகளில் குறுகுறுப்பை ஏற்படுத்திச் சென்றது. இனி அவன் துவக்கப் போகும் வாழ் வின் கணங்கள் பற்றிய மிகையான கற்பனைகள் சுருள் சுருளாய் ஊதுபத்தி புகைபோல மூளையி லிருந்து எழுந்தன. வைரம் பதிக்கப்பட்ட மண்டை ஓடு கவர்ச்சி தருமா என்று அவன் யோசித்தான். ஏன் அப்படி யோசித்தோம் என் பது அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் கற்பனை அலாதியாக இருந்தது. லேசாக விசில டித்துக் கொண்டான்.

முன்பு ஒருமுறை சென்னைக்கு வந்திருந்த போது அந்நகர மனிதர்களை அவன் கவனித்திருக்கிறான். ஆலமரத்தைக் காண்பதற்குக் கூட அடையாறு செல்ல வேண்டியிருந்தது அவர்களுக்கு மரத்தின் பசிய நினைவுகள் மீசலூருக்கு இழுத்தடித்தன. மீசலூரில் சிறுபையனாக அவன் இருந்தபோது செல்லத்தாய் அவனை இடுப்பில் துக்கிக் கொள்வாள். கோயிலுக்குப் போகும் நேரங்களில் எதிர் வீட்டுப்பாட்டி வீட்டுக்கு வந்து தானாகவே காவலுக்கு உட்கார்ந்து கொள்வாள். அந்த ஊர் நாயக்கர்கள் நிறைந்த ஊர். பிராமணப் பிள்ளை என்பதால் ஏக மரியாதை, சகல காய்கறிகளும் அவர்கள் வீட்டுக்கு, போதும்போதும் என் கிற அளவுக்கு குவியும், இலவசமாக அப்பாவுக்கு மாற்றலாகி பந்தல்குடிக்கு அத்தனை பேரும் கிளம்பிய போது, அவனுடைய நண்பன் நாகராஜன் அழுதது இன்னமும் அவனுக்குள் நினைவாக நிற்கிறது. ஒருவருக்கொருவர் அழு கையின் மூலம் பரிமாறிக் கொள்ளும் உத்திகளை அறியாதது அந்த வயது ஏனோ அவனுக்கு அழத் தோன்றியது. அழுதான். பதிலுக்கு இவ னும் அழுதான். பரஸ்பரம் பேசிக் கொள்ளாமலே நடந்த காரியங்கள் இவை.

பந்தல்குடியில்தான் முதன்முதலில் அவன் கிளியைப் பார்த்தான். கரியமால் அழகர் கோவிலின் மதில்களைத் தாண்டி நீலத்தை ஊடுருவும் பசுமையாக காற்றை எற்றித் திரியும் அதன் சுதந்திரத்தை எண்ணி அவன் பொறாமைப்பட்டதுண்டு. ஆலமரத்தடியில் சின்ன வயதில் அவன் கோலி விளையாடிய போதும்: எட்டாம் வகுப்பு படிக் கையில் ஹாக்கி விளையாடிய போதும், கிளிக ளின் பறத்தலை மனதில் பாவித்துக் கொண்டே விளையாடுவான் ஆலமரப் பொந்துக்குள் இருக் கும் கிளிக்குஞ்சுகளை பாம்பு விழுங்கிவிடும் சாத்தியக்கூறுகளை எண்ணிக் கவலைப்படுவான். "கிளி கொஞ்சும் ஊர் என்று அம்மா சொன்னதில் இருந்த அழகு, ஜானகிராமனைப் படித்தபோது அவனுக்கு உறைத்தது. சிறகுகளைக்கொண்டிருப்பதன் மூலமே மனிதனை அலட்சியப்படுத்திவிடுகிற சுதந்திரத்தை அவைகள் பெற்றிருப்பது, சிற்சில நேரங்களில் பொறாமையைக் கிளறி விடும். எல்லாம் நிறைந்த கலவையில் தன்னைப் பொருத்திக் கொண்டு விட்டதாக அவன் உணர்ந்த போது அவன் சிரித்துக் கொண்டான்.

வட இந்தியர்கள் விளையாட்டை விட்டு விட்டு சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் சாப்பிட பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அதைவிடக் கொடுமை உங்களுக்கு வேண்டுமா?' என்று அவர்கள் கேட்டு விடக்கூடும். உடம்பில் தொங்கும் கையைப் போல ரயிலில் தொங்கும் அபாய சங்கிலியை அவன் பார்த்துக் கொண்டான். அது தொங்கிக் கொண்டிருப்பதற்கு நேர் கீழ் தன்தலை இருப்பதை எண்ணிப் பார்த்தான். கழுத்தைப் பிடித்திருக்கும் துக்குக் கயிறாகத் தோன்றியது அது ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு வீடு, சுற்றம் இந்த சுவர்களுக்கப்பால், தன்னைத் தானே உற்றுநோக்குவதற்குரிய வெளி ஒன்று தனக்கு லயித்திருப்பதாக அவன் உணர்ந்தான்.

இடக்கைப் பக்கம் திரும்பி ஜன்னலை நோக்கி யவாறு மண் அறையை அலம்பி விடுவது மாதிரி, குளிர்ந்த காற்றை உள் இழுத்து உறிஞ்சி - கைகளை தேய்த்துக் கன்னத்தில் பதித்துக் கொண்டான். நிலவு மறைய இன்னும் 10 மணி நேரம் இருக்கிறது என்பதை அறிந்த போது, 10 மணி நேரம் சந்தோஷம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். அவர்கள் அநேகமாக சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சாப்பிடுகிற போது அவர்களின் அவயவங்கள் எப்படிசெயல்பட்டன என்பதை கவனிக்க முடியவில்லையே என்று அவ னுக்கு வருத்தம்.

ரயில் தன் விரைவைக் குறைத்துக் கொண்டு ஒரு நிலையத்தில் நின்றது. குளிர்கால நேரத்தில் சூடான காபியை குடித்துக் கொண்டே நிற்பதன் மூலம் முரண்பாடான சீதோஷ்ணங்களை தனக் குள் ஈர்த்துக் கொள்ள முடியும் என அவன் நம்பினான். காபியும் அதன் மணமும் - அது நாசிக்கேற் றுகிற சுகமும், அந்தக் கோப்பையிலேயே தன்னை அழித்துக் கொண்டு விட்டதுபோல் அவன் உணர்ந்தான்.

தன்னையும் அறியாமல் அவன் தூங்க ஆரம்பித்தபோது, இரவு மணி 12-க்கு மேல் ஆகியிருந்தது. நீலமும் மஞ்சளும் கலந்து. சின்ன சின்ன குமிழ்களாக கண்களின் உள் வளையங்களில் பறந்து கொண்டிருந்த கனவுத் தூசிகளை, ஒரு ரசிகனைப் போல பாவித்து தனக்குத் தானே சிரித் துக் கொண்டான். கனவுகளின்ஈடேற்றம் மலைப் பிரசங்கத்துக்கு இட்டுச்சென்றது. ஏசுநாதர்பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் கையசைவுகளின் போது அலை அலையாக உள் அமைதி குவிந்து ஞானப் பெருக்கில் மூளைச்சுவடு அமிழ்ந்த மாதிரி. தன் இதயப் பெருக்கின் பிரவாகத்தில் சலனம் நிலைகொண்டு விட்டது போல். சொல்லத் தெரியாத சொர்க்கத்தின் அருகில் சென்று கொண்டிருந்த போது,அவனை யாரோ தட்டி எழுப்ப,எழும்பூரில் வண்டி நின்றிருந்தது.

காலச்சுவடு - - 16 ஆண்டுமலர் 1991
படிப்பகம்