www.tamilarangam.net
செவ்விலக்கிய வரிசை - 2
பூனைப்பறவையின் இருக்கை
ஜேம்ஸ் தர்பர்(JAMES THURBER)
தமிழில் : கோ. பிரேம்குமார்
புதுப்புனல்
வழங்கும் பன்முகம் 9 ஜனவரி - மார்ச் 2003
1894-ல் பிறந்த ஜேம்ஸ் தர்பர், அமெரிக்காவின் தீவிர
இலக்கியத்தில் தம் படைப்புகள் வாயிலாகப் பெரும்பங்கை அளித்தவர். வில்லியம் ஃபாக்னரின்
சம காலத்தவர்.
1942-ம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சிறுகதை முதலில்
நியூயார்க்கர் பத்திரிகையில் வெளிவந்தது. The great American short stories என்ற தொகுப்பிலிருந்து
எடுக்கப்பட்ட The Catbird Seat என்ற இக்கதையின் கருத்து மிக எளிமையானது.
வால்ட் டிஸ்னியின் படைப்புகளிலும், ஈசாப் நீதிக்கதைகளிலும்
காணப்படும் எளிய நீதியான வலியாரை எளியார் வெல்லுதல் என்ற கருத்தை இன்றைய நவீன வாழ்வியலை
ஒட்டித் திறமையாக, மெல்லிய நகைச்சுவையுடன் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
திருவாளர் மார்ட்டின், பிராட்வேயில் இருந்த அந்த நெரிசல்
மிகுந்த சிகரெட் கடையிலிருந்து ஒரு பாக்கெட் ஒட்டகம் மார்க் சிகரெட்டுகளை திங்கட்கிழமை
இரவு வங்கினார்.அது திரைப்படக்காட்சி நேரம் என்பதுடன் அங்கு ஏழெட்டுப்பேர் சிகரெட் வாங்கிக்
கொண்டும் இருந்தனர். கடை ஊழியர் திரு. மார்ட்டின் மீது பார்வையைச் செலுத்தவில்லை. அவர்
சிகரெட்டைத் தம் மேல் கோட்டின் பாக்கெட்டின் உள் போட்டுக் கொண்டு வெளியேறினார். உணவு
மற்றும் விநியோக நிறுவன ஊழியர்களில் எவரேனும் ஒருவர் இதைப் பார்த்திருந்தால் அவர் வியப்படைந்திருக்கக்
கூடும். ஏனெனில் திரு. மார்ட்டின் பொதுவாகவே புகைபிடிக்காதவர் என அறியப்பட்டவர். அவர்
ஒரு போதும் புகைத்ததில்லை; அவரை யாரும் பார்க்கவும் இல்லை.
ஒருவரம் முன்பாகத்தான் திரு.மார்ட்டின், திருமதி.அல்ஜின்பரோஸ்
அம்மையாரை அகற்றுவதாக முடிவுசெய்திருந்தார்." அகற்றுவது” என்ற சொற்பிரயோகம் அவருக்குப்
பிடித்திருந்தது; ஏனென்றால் அது ஒரு பிழையைத் திருத்துவது என்ற பொருளில், அதாவது திரு.
பிட்வீலரின் பிழையைத் திருத்துவது அதற்கு மேலாக ஒன்றுமில்லை. கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு
இரவு நேரங்களிலும் திரு.மார்ட்டின், இது குறித்தே திட்டமிடுவதும், பரிசீலிப்பதுமாக
இருந்தார்.தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டே இது குறித்து மீண்டும் சிந்தித்தார். தனது
தொழிலில் இது போன்ற பழி வாங்கும் வேலைக்கென திட்டமிட வேண்டி வந்த தன் நிலையை நூறாவதுமுறையாக
சபித்துக் கொண்டார்.
அவர் இப்பணிக்கென வகுத்த திட்டம் தற்செயலானதும்,
வெளிப்படையானதும் ஆனால் பெருமளவு ஆபத்தானதும் கூட சிறிதளவு பிழையும் கூட மொத்த சூழ்ச்சித்
திட்டத்தையும் கெடுத்துவிடக்கூடும். எச்சரிக்கை உணர்வும், கடின உழைப்பும் கூடிய எர்வின்
மார்ட்டின் உடைய வேலைதான் இது என்று எவராலும் கண்டு கொள்ள முடியாது. உணவு மற்றும் விநியோக
நிறுவனத்தின் கோப்புகள் பிரிவுத் தலைமைப் பொறுப்பாளரான அவரைப்பற்றி திரு.பிட்வீலர்
ஒருமுறை குறிப்பிட்டார்;
“மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள் தாம்; ஆனால்
மார்ட்டின் அப்படி அல்ல".
அவரது செயல்பாட்டை யாரும் கண்டுபிடித்து விட முடியாது;
பிரச்னை குறித்து மீண்டும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
இதையேதான் கடந்த ஏழு இரவுகளாக ஒவ்வோர் இரவும் செய்து வந்தார். அவர் துவக்க முதலே யோசித்துப்
பார்க்கத் துவங்கினார். அவளது வாத்துப் போன்ற குரலும், கழுதைக் கத்தல் போன்ற சிரிப்பும்,
உணவு மற்றும் வழங்கு நிறுவனத்தின் சுவர்களின் துய்மையை முதன் முதலாகக் களங்கப் படுத்தியபோது,
அவள் தாம், நிறுவனத்தின் தலைவர், திரு.பிட்வீலருக்கு புதிய சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பவள்
என்பதாக ஊழியர்பிரிவுத் தலைவர் ராபர்ட்ஸ் கிழவர் தெரிவித்து அறிமுகம் செய்து வைத்தார்.
அது 1941ம் ஆண்டின் மார்ச் 7-ம் தேதி (தேதிகளில் குறிப்பான நினைவாற்றல் கொண்டவர் திரு.
மார்ட்டின்) அந்தப் பெண்மணி திரு.மார்ட்டினை உடனடியாக திகைப்பூட்டச்செய்தபோதும் அவர்
அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவர் தனது உலர்ந்த கைகளை அவளிடம் கொடுத்து உன்னிப்பான
பார்வையுடன், வெற்றுப் புன்னகையையும் செலுத்தினார். அவரது சாய்வு மேசை மீதிருந்த காகிதங்களைப்
பார்த்துக் கொண்டே அவள் சொன்னாள்; “நல்லது', "நீங்கள் என்ன மாட்டுவண்டியை சாக்கடையிலிருந்து வெளியே
இழுத்து விட்டீர்களா?” இதை மீண்டும் ஒரு கணம் நினைத்துப் பார்த்த திரு.மார்ட்டின் தனது
பாலுடன், மன உளைச்சலுடன் லேசாக நெளிந்தார். சிறப்பு ஆலோசகர் என்ற முறையில் அவளது குற்றங்கள்
மீதுதான் அவர் கவனத்தைச் செலுத்த முடியுமே தவிர, அவளது ஆளுமை சார்ந்த சிறுபிழைகள் மீதல்ல.
இதற்கு மறுப்புச் சொல்வதையும், தாங்கிக் கொள்வதையும் கடினமாக உணர்ந்தார். பெண் என்ற
முறையில் அந்தப் பெண்மணியின் பிதற்றல்களும் பிழைகளும் அவரது மனத்துக்குள்ளே கட்டுங்கடங்காத
சாட்சியாகப் பதிந்திருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவள் அவரை அச்சுறுத்தி விட்டிருந்தாள்.
ஹால், அல்லது. லிப்ட் அல்லது அவருடைய அலுவலகத்திலேயே கூட அவள் எதிர்ப்பட்டு சர்க்கஸ்
குதிரையைப் போல முரட்டுக் கும்மாளம் அடித்தாள். அவள் எப்போதும் உரத்த குரலில் இத்தகைய
அர்த்தமற்ற கேள்விகளை அவரிடம் கேட்பாள்;
“என்ன மாட்டு வண்டியை சாக்கடையிலிருந்து தூக்கியாகி
விட்டதா?”
“பட்டாணியின் தோலைஉரித்துக் கொண்டிருக்கிறீர்களா?”
கையும் களவுமாக பிடிபட்டால் தவிர; “என்ன மழைப்பீப்பாயைக்
கவிழ்த்துவிட்டீர்களா?”
தன் வீட்டின் உள் அமர்ந்து, ஒரு கிளாஸ் பாலை அருந்திய
“ஊறுகாய் ஜாடியின் அடிப்பாகத்தை சுரண்டிக் வண்ணம் திரு.மார்டின் திருமதி. அல்ஜின் பரோஸ்-உடனான
தனது கொண்டிருக்கிறீர்களா?”
புதுப்புனல் வழங்கும் பன்முகம் 9 ஜனவரி - மார்ச்
2003 29
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்
________________
www.tamiarangam.net
"நீங்கள் என்ன பூனைப் பறவையின் இருக்கையில்
அமர்ந்து கொண்டிருக்கிறீர்களா?”
திரு. மார்ட்டினின் இரண்டு உதவியாளர்களில் ஒருவனான,
ஜோ ஹார்ட் இத்தகைய பிதற்றல்களுக்குப் பொருள் சொன்னான். “அவள் டாட்ஜரின் ரசிகையாக இருக்கக்கூடும்.
ரெட்பார்பர் ரேடியோவில் ஒலிபரப்பி வரும் டாட்ஜர் கேளிக்கை நிகழ்ச்சியில் இத்தகைய சொற்பிரயோகங்கள்
வரும்; அதை இவள் “தெற்கு”வரை கொண்டு வந்துவிட்டாள்” மேலும், ஜோ, ஒன்றிரண்டுக்கு அர்த்தமும்
சொன்னான். “பட்டாணியின் தோலை உரிப்பது, என்றால், பெருமளவு கிளர்ச்சியடைதல் என்று பொருள்;
அதேபோல பூனைப்பறவையின் இருக்கையில் அமர்தல் என்றால் வேலைவெட்டியில்லாமல் உட்கார்ந்து
இருப்பது, அதாவது மட்டையாளனின் எதிரில் மூன்று பந்துவீச்சுகள் இருக்கும்போது எவ்வித
செயலுமற்று இருத்தல்". இவை அனைத்தையும் திரு.மார்ட்டின் முயன்று அழித்துவிட்டார்.
அது அவருக்கு அலுப்பூட்டுவதாகவும், மனநோய்க்கு அண்மையில் கொண்டு செல்வதாகவும் இருந்தது.
ஆனால் அவர் கொலை பாதகம் வரை செல்லாத அளவிற்கு திடசித்தம் உள்ள மனிதர். அதிர்ஷ்டவசமாக
திருமதி.பரோஸ் மீதான முக்கிய குற்றச்சாட்டுகள் மீது சரியாக எதிர்வினை புரிந்தார். அவர்
எப்போதும், வெளித்தோற்றத்திற்கு பெருமளவு பொறுமையைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக் கொண்டார்.
குமாரி. பெயர்ட் என்ற பெயருள்ள அவரது இன்னொரு உதவியாளர் ஒரு முறை அவரிடம், “அந்தப்
பெண்ணைப் போன்றே உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்” என்றாள். அவர் வெறுமனே புன்னகைத்தார்.
திரு. மார்ட்டினின் மனதை திடுமென ஓர் எண்ணம் மெலிதாகத்
தாக்கியது: திருமதி. அல்ஜின்பரோஸ் மீதான அவரது குற்றச் சாட்டுகள் எல்லாம். அவள் மனப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும், பிடிவாதமாகவும்,
உணவு மற்றும் வழங்கல் நிறுவன அமைப்பின் செயல்திறனை சீர்குலைக்க செய்து வருகிறாள் என்பதுதான்.
அவள் தன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக செய்யும், சாகசங்கள் அனைத்துமே சரியாக மறுஆய்வு
செய்வதற்குரிய தகுதி, பொருள். போட்டித்திறன் கொண்டனவாகும். குமரி. பெயர்ட்டிடமிருந்து
திரு. மார்ட்டினுக்குக் கிடைத்த தகவலின்படி, திருமதி. பரோஸ், திரு.பிட்வீலரை ஒரு பார்ட்டியில்
சந்தித்திருக்கிறாள். உணவுமற்றும் வழங்கல் நிறுவனத்தின் தலைவரான அவரை புகழ்பெற்ற மத்திய
மேற்கு கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளர் என்று நினைத்து, அவரைக் கட்டியணைக்க முயன்ற
ஒரு முரட்டுக் குடிகாரனிடமிருந்து அவள் அவரைக் காப்பாற்றியிருக்கிறாள். அசுரத்தனமான
சாகசம் ஒன்றைச் செய்து அவரை ஒரு சோபாவுக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தாள். வயதான
அந்தக் கனவான் உடனடியாக தன் லட்சியங்கள் நிறைவேறவும், தனது நிறுவனம் முன்னேறவும் தேவையான
ஒரே பெண்மணி இவள்தான் என்ற முடிவுக்குத் திடுமென வந்தார். ஒருவாரம் கழித்து உணவு மற்றும்
வழங்கு நிறுவனத்திற்கு அவள்தான் சிறப்பு ஆலோசகர் என அறிவித்தார். அன்றைய தினம் அலுவலகம்
குழப்பத்தில் ஆழ்ந்து கிடந்தது. குமாரி டைசன், திரு.பிரண்டேஜ், திரு.பார்லெட்ஆகியோர்
துரத்தப்பட்ட பிறகு, திரு. மூன்சன் தனது தொப்பியை எச்சரிக்கையுடன் எடுத்துச் சென்றார். பிறகு
தன் பணி விலகல் கடிதத்தை அஞ்சலில் அனுப்பிவைத்தார். முதிய ராபர்ட்ஸ் அதன் பிறகே திரு.
பிட்வீலருடன் பேசத் துணிவு கொண்டார். அவர் திரு. மூன்சனின் துறைப்பிரிவு “சிறிது சீர்குலைந்
திருப்பதாகவும்" பழைய முறையையே இனியும் கடைப்பிடிக்க வேண்டுமா?’ என்றும் குறிப்பிட்டார். திருமதி.பரோஸ்-சின்
திட்டங்கள் மீது அவர் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தார். "இவற்றுக்குத் தேவை என்பதெல்லாம்
சிறிதுமாற்றம் சிறிதுமாற்றம் அவ்வளவுதான்” என்றும் சொன்னார். திரு.ராபர்ட்ஸ் விட்டுக்
கொடுத்து விட்டார். திருமதி. பரோஸ் கொண்டு வந்த எல்லா மாற்றங்களையும் திரு. மார்ட்டின்
கவனித்துக் கொண்டுதானிருந்தார். மாளிகை பின் மேல் அலங்காரத்தை சிதைப்பதில் துவங்கிய
அவள் தற்போது நிறுவனத்தின் அஸ்திவாரக்கற்களையே கோடரி கொண்டு தகர்க்கத் துவங்கியிருந்தாள்.
திரு.மார்ட்டின் சொல்வதுபோல அவர் திங்கட்கிழமை 1942-நவம்பர்
-2ம் தேதி பிற்பகல் அதாவது ஒரு வாரம் முன்புதான் வந்திருந்தார். அன்று பிற்பகல் 3-மணியளவில் திருமதி. பரோஸ் அவரது அலுவலகத்திற்குள்
பாய்ந்து வந்தாள். “ஹே." அவள் கூச்சலிட்டாள். நீங்கள் ஊறுகாய் ஜாடியின் அடிப்பாகத்தை
கரண்டிக் கொண்டிருக்கிறீர்களா? திரு. மார்ட்டின் தன் பச்சை நிற கண்ணாடித் தடுப்புக்கு
கீழாக அவளைப் பார்த்தார்; எதுவும் சொல்லாமல். அவள் அலுவலகம் முழுதும் சுற்றித்திரிந்தாள்,
தனது பெரிய விழித்து நோக்கும் கண்களுடன்; “உங்களுக்கு கோப்புகள் வைக்கும் அமைப்புகளில்
இத்தனையும் தேவைதானா?” என்று திடுமெனக் கேட்டாள். திரு.மார்ட்டினின் இதயம் துணுக்குற்றது.
தன் குரலை ஒன்று போலாக்கி, அவர் பதிலளித்தார். "இங்குள்ள ஒவ்வொரு கோப்பும், உணவு
மற்றும் வழங்கு நிறுவன அமைப்பின் செயல்பாட்டில் தவிர்க்கவியலாத அங்கம் வகிக்கின்றன’
அவள் கழுதையாகக் கத்தினாள், “சரி, இனியும் பட்டாணியின் தோலை உரிக்கவேண்டாம்” சொல்லிவிட்டு
கதவு நோக்கிச் சென்றாள். அங்கிருந்தே அவள் உரத்துக் கூச்சலிட்டாள், "ஆனால் இங்கே
நிச்சயமாக ஏகப்பட்ட காயலங்கடைச்சரக்கு இருக்கிறது. தனது நேசத்திற்குரிய துறைப்பிரிவின்
மீதுதான் அவள் விரல் சுட்டிக்காட்டுகிறது என்பதில் திரு.மார்ட்டினுக்கு இனியும் எவ்வித
சந்தேகமும் இருக்கவில்லை. அவளது கோடரி, மேல் நோக்கி உயர்ந்து முதல் தாக்குதலாக இறங்கியது.
இன்னும் அது வந்து விடவில்லை. சகிக்க முடியாத அந்தப் பெண்மணியின் மடத்தனமான கட்டளைகளைத்
தாங்கிய வசியப்பட்டிருந்த திரு. பிட்வீலரிடமிருந்து, எவ்வித குற்றச்சாட்டு குறிப்பாணையும்
அவருக்குக் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் திரு. மார்ட்டினுடைய உள் மனதில் ஏதோ நடக்கப் போகிறது என்பதில்
எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை. அவர் விரைந்து செயல்பட்டாக வேண்டும். ஏற்கெனவே மதிப்புமிக்க
ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது. திரு. மார்ட்டின் தன்வீட்டின் முன் அறையில் தன் பால்கிளாசுடன்
நின்று கொண்டிருந்தார். தனக்குள் சொல்லிக் கொண்டார். “மதிப்பிற்குரிய ஜூரி கனவான்களே", "இந்தக் கொடுமைக்காரிக்கு
மரண தண்டனை விதிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்".
அதற்கு மறுநாள், திரு.மார்ட்டின் வழக்கம்போல தன் வழிமுறையில்
இயங்கினார். தன் கிளாஸ்களை பலமுறை மெருகேற்றினார். ஏற்கெனவே சீவப்பட்டிருந்த பென்சிலை
மீண்டும் சீவிக் கூராக்கினார். இவற்றை குமாரி. பெயர்ட் கூட கவனிக்கவில்லை. ஒரே ஒரு
முறை அவர் தன் பழிகளியின் பார்வையில் பட்டார். அவரைக்கடந்து ஹாலில் "ஹே" என்ற
கூச்சலுடன் பறந்து கொண்டிருந்தாள். ஐந்து முப்பதுக்கு அவர் வழக்கம் போல வீடு நோக்கி
நடந்தார். எப்போதும் போல ஒரு கிளாஸ் பால் அருந்தினார்.
கடுமையான பானம், எதுவும் அவர் தம் வாழ்நாளில் அருந்தியது
இல்லை. இஞ்சி ரசத்தை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவிட்டால், உணவு மற்றும் வழங்கு
நிறுவனத்தின் செயலராக இருந்த காலஞ் சென்ற சாம் ஷ்லோசர், சில ஆண்டுகள் முன்பு ஒரு முறை
ஊழியர் கூட்டத்தில் அவரது நல்லபழக்கங்கள் குறித்து வியப்புடன் குறிப்பிட்டார்:
“நமது மிகச்சிறந்த ஊழியராகிய இவர் ஒரு போதும் மது
அருந்துவதில்லை, புகைப்பதும் இல்லை; விளைவுகள்தாம் ஒருவரைப் பற்றிப் பேகம்:" இதை
ஆமோதிப்பவர் போல திரு. பிட்வீலர், தலையசைத்தார்.
திரு.மார்ட்டின் அந்த ஒருமுக்கியமான நிகழ்ச்சிக்குரியநாள்
பற்றி இன்னும் சிந்தித்தவண்ணம், 46-வது தெருவின் அருகிலிருந்த ஐந்தாவது நிழற்சாலையில்
இருந்த ஷராப்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அங்கு அவர் சென்றபோது எப்போதும் போல மணி
எட்டு ஆகிவிட்டிருந்தது. அங்கு இரவுணவை முடித்துவிட்டு 'சன் பத்திரிகையின் நிதி ஆலோசனைப்
பகுதியைப்படித்து முடித்தபோது எப்போதும் போல மணி எட்டேமுக்கால் ஆயிற்று. எப்போதும்
இரவு உணவுக்குப்பின் சிறிது நடப்பது அவரது வழக்கம். இம்முறை அவர் ஐந்தாவது நிழற்சாலையில்
சாவதானமாக நடந்தார். கையுறை அணிந்து இருந்த அவர் கைகள் வெம்மையாகவும்
30 புதுப்புனல் வழங்கும் பன்முகம் 9 ஜனவரி - மார்ச்
2003
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்
________________
அவரது நெற்றி குளிர்ந்தும் இருந்தன. அவர் தன் மேல்கோட்டுப்
பையிலிருந்து ஒட்டகம் பிராண்டு சிகரெட்டுகளை தன் உள் அங்கிக்கு மாற்றினார். அவ்வாறு
செய்ததற்காக அவர் தம்மைத் தாமே வியந்து கொண்டார். திருமதி. பரோஸ் எப்போதும் லக்கி பிராண்டையே புகைப்பவள். அவரது எண்ணம்
எ ன் ன .ெ வ ன் ற ர ல் , (அழித்தபிறகு) ஒட்டகம் பிராண்டை, புகைப்பது என்பதுதான். பிறகு அதை அவளுடைய ஆஷ்ட்ரேயில் வைத்து
விட வேண்டியது. அதில் ஏற்கெனவே அவள் புகைத்து திணித்த 'லக்கி' சிகரெட் துண்டுகள், அவளது
உதட்டுச் சாயக்கறையுடன் இருக்கும். விசாரணையை இழுத்தடிக்க இது உதவும்.இது ஒன்றும் சரியான
திட்டம் என்று சொல்ல முடியாது. இதற்கு நேரமாகும். அவருக்கு மூச்சுத் திணறியது. செருமினார்.
திரு.மார்ட்டின், மேற்கு பன்னிரண்டாவது தெருவிலிருந்த திருமதி.
பரோஸ் வசித்துவந்த வீட்டை ஒரு போதும்பார்த்ததில்லை. ஆனால் அது குறித்து அவருக்கு தெளிவான
வரைபடம் மனதில் இருந்தது. அவள் தற்பெருமையாக தனது முதல் மாடிக்குடியிருப்பு பற்றியும்
அது அருமையான செங்கல் கட்டிடத்தில் வாகாக அமைந்திருப்பது பற்றியும் அவள் அவ்வப்போது
பீற்றிக் கொண்டது அதிருஷ்டவசமானதுதான். அங்கு கதவருகேயோ வேறெங்குமோ, பணியாளர்கள் யாரும்
கிடையாது. நடந்து கொண்டே திரு. மார்ட்டின் தாம் ஒன்பது முப்பது மணிக்கு முன்னதாகப்
போய்ச் சேர்ந்து விடவேண்டுமென்பதாக உணர்ந்தார். ஷ்ராப்டிலிருந்து கிளம்பி, வடக்காக
ஐந்தாவது நிழற் சாலையில் நடந்து அந்த வீட்டை அடைய பத்துமணி ஆகும் என்று தோன்றிது.
அந்த நேரத்தில் ஜனங்களின் வருகையும், போவதும், மிகக்
குறைவாகவே இருக்கும். ஆனால் அவரது நிதானப்போக்கு அருவருக்கத்தக்க அபத்தத்தை உருவாக்கி
விடக்கூடும் என்று தோன்ற அந்த நினைப்பை விலக்கினார். எவ்வாறாயினும், வருகிற போகிற ஜனங்களை யாரும்
குறிப்பாகக் கவனிப்பது என்பது இயலாதகாரியம். எந்தக் கணமும், பெரும் அபாயம் சூழ்ந்திருந்தது.
செயலற்ற கோப்பில் வைத்து அல்ஜின் பரோஸை அழிப்பது என்ற முடிவில் அவர் இருந்தார்.
அவளுடைய குடியிருப்பில் வேறு யாரேனும் இருந்தால்
நிலைமை வேறாகிவிடக்கூடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர் அவளிடம் அந்த வழியாகத்தாம்
கடந்து சென்றதாகவும், அவளது அருமையான வீட்டைப் பார்த்ததாகவும்.உள்ளே நுழைந்ததாகவும்
சொல்வார்.
திரு. மார்ட்டின் 12-வது தெருவுக்குள் நுழைந்தபோது
ஒன்பது மணி, பதினெட்டு நிமிடங்கள். அவரைக் கடந்து ஒரு மனிதனும், பேசிக் கொண்டே ஒரு ஆணும்,
பெண்ணும் சென்றனர். அவர் அந்த வளாகத்தின் பாதிப்பகுதியைக் கடந்தநிலையில், அங்கிருந்த
ஐம்பது குடியிருப்புகளிலும் எவரும் இருக்கவில்லை. விரைந்து உள்பகுதியின்படிகளில் மேலேறினார்.
"திருமதி.அல்ஜின்பரோஸ்” என்ற பெயர்ப்பலகையின் கீழிருந்த அழைப்பு மணியை உடனடியாக
அழுத்தினார். கதவின் தாழ் விலகும் ஓசையைக் கேட்ட கணத்தில் விரைந்து கதவினூடே பாய்ந்து
விட்டார். வேகமாக உள்ளே நுழைந்த அவர் தனக்குப் பின்புறமாக இருந்த கதவை மூடினார்.
ஹாலின் மேற்கூரையிலிருந்து சங்கிலியில் தொங்கிய
விளக்கின் பல்ப் அசுரத்தனமாக வெளிச்சத்தைக் கொடுத்தது. இடது பக்கச் சுவரை ஒட்டிச் சென்ற
படிக்கட்டுகளில் எவரும் இருக்கவில்லை. வலப்புறமிருந்து சுவரில் ஒரு கதவு திறந்திருந்தது.
அதை நோக்கி வேகமாக நுனிக்காலால் நடந்தார்.
“நல்லது அடக்கடவுளே! இது யாரென்று பாரேன்!” - திருமதி.
பரோஸ் கூச்சலிட்டாள். அவளது கனைக்கும் சிரிப்பு. துப்பாக்கி வெடிப்பைப் போலிருந்தது கால் பந்தாட்டக்காரனின் லாவகத்துடன் அவர் விரைந்து கடந்து அவள் மீது
வந்து மோதினார். தனக்குப் பின்னாலிருந்த கதவை அவள் தாளிட்டாள். அந்த அறையில் நூறு விளக்குகள்
எரிந்து கொண்டிருப்பதாக திரு. மார்ட்டினுக்குத் தோன்றியது. அவள் கேட்டாள்; “என்ன விஷயம்?
இதென்ன குதிக்கும் ஆடுபோல” அவர் தாம் ஏதும் பேச முடியாமல் இருப்பதை உணர்ந்தார். அவரது
இதயம் தொண்டையில் வந்து அடைத்தது. "நான்:- ஆமாம்” அவர் ஏதோ சொன்னார். அவள் குதித்தாள்,
சிரித்தாள்: அப்படியே அவரது கோட்டைக் கழற்றவும் உதவினாள். “வேண்டாம்: வேண்டாம்” அவர்
சொன்னார். "இதோ இங்கே வைக்கிறேன். தன் கோட்டைக் கழற்றிய அவர் அதை கதவின் அருகே
இருந்த சோபாவின் மீது போட்டார். "உங்கள் தொப்பியும், கையுறையும் கூட” - அவள் சொன்னாள்.
“நீங்கள் ஒரு பெண்மணியின் வீட்டில் இருக்கிறீர்கள்”.
அவர் தனது தொப்பியைதன் கோட்டின் மீது வைத்தார். திருமதி.பரோஸ் அவர் நினைத்திருந்ததைவிடவும்
பருமனாக இருந்தாள். அவர்தம் கையுறைகளை அணிந்தே இருந்தார். அவர் சொன்னார்:" நான்
இப்படியே கடந்து போய்க் கொண்டிருந்தேன்; எனக்கு நினைவு வந்தது; வேறு யாரேனும் இங்கு
இருக்கிறார்களா?” முன்னைக் காட்டிலும் சத்தமிட்டுச் சிரித்தாள். “இல்லை” என்றாள்."நாம்”“இப்போது
தனியாகத்தான் இருக்கிறோம் ஒரு வெள்ளைத் தாளைப் போல வெள்ளையாக இருக்கிறாயே! சரியான கோமாளி
தான்; உனக்கு என்னவாகி விட்டது சரி உனக்கு சிறிது சரக்கு கலந்து கொண்டு வருகிறேன்”
அந்த அறையை கடந்து அடுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.
"ஸ்காட்ச்சும், சோடாவும் போதுமா! ஆனால் நீ குடிப்பதில்லை என்று சொல்வாயே! என்ன,
குடிக்கிறாயா? அவள் திரும்பி அவரை விளையாட்டாகப் பார்த்தாள். திரு. மார்ட்டின் அவளை
நெருங்கினார். "ஸ்காட்ச்சும் சோடாவும்போதும்” அவர் சொன்னது அவருக்கே கேட்டது. உள்ளே
அடுக்களையிலிருந்து அந்த அவளது சிரிப்பை அவரால் கேட்க முடிந்தது.
திரு.மார்ட்டின் அந்த அறைக்குள் ஏதேனும் ஆயுதம்
கிடைக்கிறதா என்று விரைவாக கவனித்தார். இந்திய கிளப்புகளில் காணக்கிடைக்கும் விளையாட்டுச்
சாமானும், சீட்டுக்கட்டும் தான் ஒரு மூலையில் கிடந்தன. இவை எதற்கும் உதவாது. இந்த வழியில்
இது முடியாது. அவர் சுற்று முற்றும் பார்க்கத் துவங்கினார். சாய்வு மேஜைக்கு வந்தார்.
அதன் மீது வேலைப்பாடுபொருந்திய கைப்பிடியுடன் கூடிய உலோகத்தாலான காகிதம் வெட்டும் கத்தி
கிடந்தது.போதுமான அளவு அதுகூர்மையாக இருக்கும? அதை எடுத்த அவர் அருகிலிருந்த பித்தளை
ஜாடியின் மீது தட்டிப்
புதுப்புனல் வழங்கும் பன்முகம் 9 ஜனவரி - மார்ச்
2003
31
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்
________________
www.tamilarangam.net
பார்த்தார்.அதனுள்ளிருந்த அஞ்சல் வில்லைகள் தரையில்
விழுந்து சிதறின.
“ஹே" திருமதி.பரோஸ், அடுக்களையிலிருந்துக த்தினாள்."என்ன
பட்டாணியின் தோலை உரிக்கிறாயா?" திரு. மார்ட்டின் விசித்திரமான சிரிப்பொன்றை உதிர்த்தார்.
அந்தக் கத்தியை எடுத்த அவர் தனது இடது கை மணிக்கட்டில் வைத்து அதன் கூர்மையை பரிசோதித்தார்.
அது கூர் மழுங்கியது.அது உதவாது.
திருமதி. பரோஸ், மீண்டும் தோன்றியபோது, இரண்டு ஹைபால்ஸ்
மதுக்கோப்பைகளுடன் வெளிப்பட்டாள். திரு.மார்ட்டின் தம் கையுறைகளை அணிந்த நிலையிலேயே
நடக்கும் கூத்தை உன்னிப்பாக உணர்ந்ததுடன் கிளர்ச்சியாகவும் உணர்ந்தார்.
அவரது பாக்கெட்டில் சிகரெட்டுகள் இருந்தன. அவருக்கெனமது
கலக்கப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் மொத்தத்தில் அசாதாரணமானவை; அதற்கும் மேலாகவும்
இருக்கலாம். இது அசாத்தியமானது.அ வரது மனதின் அடியாழத்தின் ஒருபுறம், அவருக்கு ஒருவெற்றுயோசனை
குமிழியிட்டது: வளர்ந்தது. "அடகடவுளே, அந்தக் கையுறைகளை கழற்றி விடுங்களேன். திருமதி.பரோஸ்
சொன்னாள்." நான் எப்போதும் வீட்டில் இவற்றை அணிந்திருப்பேன்’ திரு. மார்ட்டின்
சொன்னார். ஒரு அற்புதமான, விசித்திரமான திட்டம் உதிக்கத்துவங்கியது. அவள் கிளாஸ்களை,
சோபாவுக்கு முன்னிருந்த காபிமேசைமீது வைத்து விட்டு சோபாவில் அமர்ந்தாள். "இங்கே
வாரும், பெரிய மனிதரே" அவள் அழைத்தாள்.
திரு.மார்ட்டின் அவளருகே சென்றுபக்கத்தில் அமர்ந்தார். ஒட்டகம்
பிராண்ட் சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை வெளியில் எடுப்பது கஷ்டமாகத்தானிருந்தது.
ஒரு வழியாக வெளியே ஒன்றை எடுத்தார். அவள் அதைப் பற்றவைத்தாள் சிரித்தாள்: "நல்லது
அவரது மதுக்கோப்பையை அவரிடம் கொடுத்தவாறே அவள் சொன்னாள்; “இது மிகவும் ஆச்சரியமானது:உன்கையில்
மதுவும். சிகரெட்டும்".
திரு. மார்ட்டின் புகைத்தார். ஆனால் மிக மோசமான
முறையில் அல்ல: ஹைபால் மதுவை ஒருமிடறு விழுங்கினார். "எல்ல் நேரங்களிலும் நான்
குடிக்கிறேன். புகைக்கிறேன்" அவர் சொன்னார். தனது கிளாசை அவளது கிளாசுடன் மோதினார்.
"அந்தக் காற்றுத் துருத்திப்பயல் பிட்வீலருக்காக பருப்புகள் இங்கே கிடக்கின்றன."
அவர் சொன்னார். மீண்டும் மிடறு விழுங்கினார். சரக்கு சற்று மோசமாகத்தானிருந்தது. ஆனால்
அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “உண்மையாகவா, மார்ட்டின்” அவளது குரலும்,பாவனையும்
மாறின."நமது எசமானரைc அவமதிக்கிறாய்”. திருமதி. பரோஸ், தலைவருக்கு அனைத்து சிறப்பு
ஆலோசகராக தற்போது இருக்கிறாள். திரு.மார்ட்டின் சொன்னார்: "நான் ஒரு வெடிகுண்டு
தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அது அந்த கிழட்டு ஆட்டை நரகத்திற்கும் கீழாக வீசி விடும்”.
அவர் மதுவை சிறிதளவு மட்டுமே குடித்திருந்தார்; அதுவும் கடுமையானதாக இல்லை. அவ்வாறாக
இருக்கவும் முடியாது. "நீ போதைப்பொருள் தான் சாப்பிடுகிறாயா அல்லது வேறு ஏதேனுமா?”
திருமதி. பரோஸ், தன்மையாகக் கேட்டாள். "ஹெரோயின்” திரு.மார்ட்டின் சொன்னார்.
“அந்தக் கிழப்பருந்தை நான் விட்டு வைக்கப் போவதில்லை'. தன் கட்டுப்பாட்டை இழந்தவளாக
நுனிக்காலில் நின்று அவள் கத்தினாள்; “திரு. மார்ட்டின்!” “எல்லாம் முடிந்தது. உடனேபோய்விடு". திரு.மார்ட்டின்
மீண்டும் தன் மதுவை ஒருமிடறு விழுங்கினார்.தனது சிகரெட் துண்டை சாம்பல் கிண்ணத்தில் வைத்த
அவர் ஒட்டகம் சிகரெட் பாக்கெட்டை எடுத்து காபி மேசையின் மீது வைத்தார். பிறகு அவர்
எழுந்தார். அவள் அவரையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள். அவர் நடந்து சென்று தன் மேல்
கோட்டையும், தொப்பியையும் அணிந்தார். "இதைப்பற்றி எதுவும் வெளிவரக்கூடாது".
இதைச் சொன்னபடியே அவர் தனது ஆள்காட்டிவிரலைத்தன் உதட்டுக்குக் குறுக்கே வைத்தார். திருமதி.
பரோஸால் சொல்ல முடிந்ததெல்லாம். "அப்படியா' என்பதுதான். திரு.மார்ட்டின் கதவுக்குமிழ் மீது தன் கையை
வைத்தார். "நான் பூனைப்பறவையின் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்"
அவர் சொன்னார்; அவர் தனது நாக்கைத் துருத்தி அவளுக்குக்
காட்டிவிட்டு கிளம்பினார். அவர் சென்றதை யாரும் பார்க்கவில்லை.
திரு.மார்ட்டின் தன் வீட்டிற்கு நடந்தே சென்று பதினெருமணிக்கு
முன்னதாகவே போய்ச் சேர்ந்தார்.அவர் போகும் போதும் யாரும் அவரைப் பார்க்கவில்லை. தன்
பற்களைத் துலக்கியபின் இரண்டு கிளாஸ் பால் அருந்தினார். வெற்றிப் பெருமிதமாக உணர்ந்தார்.அதுபோதையால்
அல்ல; ஏனெனில் அவருக்கு போதை ஏறவில்லை. எப்படியோ அவரது நடைப்பயணம், விஸ்கியின் விளைவுகளை
செயலற்றதாக்கி விட்டது.
அவர் படுக்கையில் விழுந்தார். சிறிது நேரம் பத்திரிகையை
வாசித்தார்.நடுநிசிக்கு சற்று முன்னதாக உறங்கி விட்ார்.
வழக்கம் போலவே திரு. மார்ட்டின், மறு நாள் காலை
எட்டு முப்பதுக்கு அலுவலகத்துக்குச் சென்று விட்டார். பத்து மணிக்கு முன்னதாக ஒரு போதும்
அலுவலகம் வந்திராத திருமதி.அல்ஜின்பரோஸ், எட்டேமுக்காலுக்கே அவரது அலுவலகத்தினுள் பாய்ந்து
வந்தாள். அவள் கத்தினாள்: "நான் இப்போதே திரு.பிட்வீலரிடம் புகார் செய்யப்போகிறேன்".
"அவர் உன்னைப் போலிசிடம் ஒப்படைக்கக் கூடும்;
இதைக் காட்டிலும் உனக்குத் தகுதியானது வேறென்ன?” திரு. மார்ட்டின் அதிர்ச்சியும், ஆச்சரியமும்
கலந்த பார்வையை அவள் மீது செலுத்தினர். அவர் சொன்னார்: "உங்கள் மன்னிப்பை வேண்டுகிறேன்.
திருமதி. பரோஸ், சீறலுடன் அறையை விட்டுப் பாய்ந்தோடினாள். குமாரி. பெயர்ட்டும் ஜோஹார்ட்டும்
அவுளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். குமாரி.பெயர்ட், கேட்டாள்;"அந்தக் கிழட்டுப்
பிசாசுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை?” “எனக்கொன்றும் தெரியவில்லை" - சொன்ன திரு.
மார்ட்டின் தம் வேலையில் ஈடுபட்டார். அவர்களிருவரும் அவரைப் பார்த்து விட்டுப்பின் தங்களை
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். குமாரி. பெயர்ட் எழுந்து வெளியே சென்றாள். அவள்
மெதுவாக நடந்து சென்று திரு. பிட்வீலரின் அலுவலக அறையின் கதவை அடைந்தாள். திருமதி.
பரோஸ், உள்ளே உரத்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள், ஆனால் கழுதையின் கனைப்பு இல்லை.
குமாரி பெயர்ட்டுக்கு அவள் என்ன சொன்னாள் என்பது கேட்கவில்லை.தன் இருக்கைக்கே மீண்டும்
வந்து அமர்ந்தாள்.
நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு திருமதி,
பரோஸ், தலைவரின் அலுவலகத்தை விட்டு வெளிக்கிளம்பி, தானாக கதவை மூடிவிட்டுச் சென்றாள்.
இதன்பின் அரைமணி நேரம் கூட ஆகவில்லை; திரு.பிட்வீலரிடமிருந்து திரு.மார்ட்டினுக்கு அழைப்பு வந்தது. கோப்புகள்
பிரிவு தலைமைப் பொறுப்பாளரும், சிறப்பானவரும் அமைதியானவரும், பொறுப்பானவருமான அவர்,
கிழவரின் மேசை முன்பாக நின்று கொண்டிருந்தார். திரு. பிட்வீலர் வெளுத்தும், நடுக்கத்துடனும்
காணப்பட்டார். அவர் தனது கண்ணாடியைத் திருகிய வண்ணம் இருந்தார். அவர் தொண்டையிலிருந்து
மெல்லிய குழம்பிய ஒலி வெளிப்பட்டது. "மார்ட்டின்”, “நீ எங்களுடன் இருபது ஆண்டுகளாக
இருந்துவருகிறாய்";
"ஐயா.இருபத்து இரண்டு"- என்றார் மார்ட்டின்.
"இந்தக் கால கட்டத்தில்.” தலைவர் சொல்ல ஆரம்பித்தார்.
“உன்னுடைய வேலை, உன் நடவடிக்கை, இவை மிகவும் முன்மாதிரியாக இருந்தன".
திரு.மார்ட்டின் சொன்னார்: "நானும் அவ்வாறே நம்புகிறேன்.ஐயா.”
திரு.பிட்வீலர் சொன்னார்: " எனக்குப் புரிகிறது. மார்ட்டின்,நீ
ஒரு போதும் மது அருந்தியதோ புகைத்ததே இல்லை."
"அது சரிதான் ஐயா" மார்ட்டின் சொன்னார்.
"ஆ. ஆமாம் திரு. பிட்வீலர், தன் கண்ணாடியை மெருகேற்றிக் கொண்டிருந்தார்."நீ
நேற்று அலுவலகத்தை விட்டுச் சென்றபிறகு என்னவெல்லாம் செய்தாய் என்பதைச் சொல்ல முடியுமா, மார்ட்டின்”அவர்
கேட்டார். திரு.மார்ட்டின்,
32
புதுப்புனல் வழங்கும் பன்முகம் 6 ஜனவரி - மார்ச்
2003
ஒரு வினாடிக்கும் குறைவான நேர குழப்பமான அமைதிக்குப்பின்
சொன்னார்.
நிச்சயமாக”, “நான் வீட்டை நோக்கி, நடந்தேன்; பிறகு
இரவு உணவுக்காக ஷ்ராப்டுக்குச் சென்றேன். பிறகு மீண்டும் வீட்டுக்கு நடந்தேன். ஐயா,
நான் படுக்கைக்கு விரைவிலேயே சென்று விட்டேன். சிறிது நேரம் பத்திரிகை வாசித்தேன். பதினொரு
மணிக்கு சற்று முன்பாக உறங்கி விட்டேன்”, “திரு.பிட்வீலர், மீண்டும் சொன்னார்: "ஆ.
சரி” சற்று நேரம் அமைதியாக இருந்த அவர், கோப்புகள் பிரிவுத் தலைமைப் பொறுப்பாளருக்குச்
சொல்வதற்கு சரியான வார்த்தைகளைத் தேடி, முடிவாகச் சொன்னார்: "திருமதி. பரோஸ்”,
“திருமதி. பரோஸ், மிகக் கடுமையாக உழைத்தார்; மார்ட்டின், மிகக் கடுமையாக, அவளுக்கு
மிக மோசமாக மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்;
அது துயருற்ற மனநிலையும் பிறரைத் துன்புறுத்தும் வகையிலான மனப்பிரமையும் கொண்டதாகும்".
"வருந்துகிறேன் ஐயா" என்றார்.திரு.மார்ட்டின். "திருமதி.பரோஸ்,
தற்போது தவறான நம்பிக்கையில் இருக்கிறாள்” திரு. பிட்வீலர் தொடர்ந்தார். "நேற்று
மாலை நீ அவள் வீட்டுக்குப் போயிருந்தாயாம். தவறாக நடந்துகொண்டாயாம்; அதாவது தகாத முறையில்”.
அவர் திரு. மார்ட்டினின் முகத்தில் தெரிந்த துயரத்தின் வெளிப்பாட்டை அமைதிப்படுத்தும்
வகையில் தன் கையை உயர்த்தினார். திரு.பிட்வீலர் சொன்னார்: “இத்தகைய மன நோய்களின் தன்மை
அத்தகையது, ஒரு களங்கமும் அற்ற ஒருவரைத் துயரப்படுத்துவது, இத்தகைய விஷயங்கள், பாமரனின்
மனதுக்கு எட்டாதவை.மார்ட்டின் நான் இப்போதுதான் எனது நண்பரும், மன நல மருத்துவருமான
டாக்டர், பிட்ச்-உடன் தொலைபேசியில் அவர் இதை உறுதிப்படுத்தாவிட்டாலும் கூட சந்தேகத்தின்
பொதுத்தன்மையை ஏற்றுக் கொண்டார். திருமதி. பரோஸ், தன் கதையை இன்று காலை என்னிடம் சொல்லி
முடித்தவுடன், நான் என் தொடர்பு கொண்டேன்.
சந்தேகத்தை அவளிடம் சொல்லி, உடனே அவளை டாக்டர் பிட்சிபம்
செல்லுமாறு அறிவுறுத்தினேன். நான் இதைச் சொல்வதற்காக வருந்துகிறேன்; அதாவது அவள் வெறியுடன்
பறந்து விட்டாள். அவள் உன்னை அழைத்து விசாரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள்; வேண்டினாள்.
மார்ட்டின், திருமதி. பரோஸ், உன்னுடைய துறைப்பிரிவை மறு சீரமைப்புச் செய்ய வேண்டுமென்று
திட்ட மிட்டிருந்தாள். இது உனக்குத் தெரியாமல் இருக்கலாம். இது என்னுடைய ஒப்புதலுக்காகத்தான்
காத்திருந்தது. என்னுடைய ஒப்புதலுக்காகத்தான். இதுதான் அவள் மனதுக்கு உன்னை இட்டுச்
சென்றது. ஆனால் டாக்டர் பிட்ச் போன்றோருக்கு இதெல்லாம் சாதாரணம்: நமக்கல்ல. திருமதி.
பரோஸ் நமக்களித்த பயன்பாடு இப்போது முடிவுக்கு வந்து விட்டதென எண்ணுகிறேன்".
“நான் பெரிதும் வருந்துகிறேன் ஐயா" என்றார்
திரு.மார்ட்டின்,
இந்த நேரத்தில், அலுவலகக் கதவு வீச்சுடன் திறக்க,
திடுமென வாயு வெடிப்புக்கு நிகரான வேகத்துடன்
புதுப்புனல் வழங்கும் பன்முகம் o
திருமதி. பரோஸ் உள்ளே அதனூடே பாய்ந்து நுழைந்தாள்.
“இந்தச் சுண்டெலி அதை மறுக்கிறதா?" அவள் கூச்சலிட்டாள்.
"இவன் இதிலிருந்து தப்ப முடியாது” திரு. மார்ட்டின்
தன்னிச்சையாக நகர்ந்து திரு.பிட்வீலரின் இருக்கைக்கு அருகாமையில் நின்றார். "நீ
என்விட்டில், குடித்தாய், புகைபிடித்தாய்' திரு.மார்ட்டினை நோக்கிக் கூச்சலிட்டாள்."இது
உனக்குத் தெரியும்; நீ திரு.பிட்வீலரைக் கிழட்டுக் காற்றுத் துருத்தி என்றும் அவரை
உன்னுடைய ஹெரோயின் போதையில் தாக்குவேன் என்றும் சொன்னாயே”. சற்று மூச்சு வாங்குவதற்காக
அவள் சற்று நிறுத்தியபோது அவளது விழிக்கும் கண்களில் ஒரு ஒளி தோன்றியது. "இவ்வளவு
கீழ்த்தரமானவனான நீ;ஒரு சின்ன சாதாரண ஆள் தான். நீ எல்லாவற்றையும் திட்டமிட்டு விட்டாய்
என்று நினைக்கிறேன். உன்னுடைய நாக்கைத் துருத்திக் கொண்டு சொன்னாயே, நீ பூனைப்பறவையின்
இருக்கையில் அமர்ந்திருப்பதாக; அடக்கடவுளே! நான் இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்
என்று நினைத்தாயாl இது உண்மையிலேயே மிகவும் கச்சிதம்'.அவள் கத்தினாள், உணர்ச்சி வசப்பட்டு
கூச்சலிட்டாள். மீண்டும் அவளுக்கு வெறி கிளம்பியது. அவள் திரு. பிட்வீலரை நோக்கினாள்;
“உங்களுக்குப் புரியவில்லையா, கிழட்டு முட்டாளே, இவனுடைய தந்திர விளையாட்டு தெரியவில்லையா?”
ஆனால் திரு. பிட்வீலர் தன் மேசையின் மீதிருந்த எல்லா அழைப்பு: பொத்தான்களையும் அழுத்திவிட உணவு
மற்றும் வழங்கல் நிறுவனத்தின் அனைத்துப்பிரிவு ஊழியர்களும் அவரது அறைக்குள் வந்து குவிய
ஆரம்பித்தனர். திரு. பிட்வீலர் அழைத்தார், "ஸ்டாக்டன், நீயும், பிஷ்பினும், திருமதி.
பரோசை அவளுடைய வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள். திருமதி. பாவெல், நீயும் அவர்களுடன்
போக வேண்டும்" ஸ்டாக்டன் தன் உயர்நிலைப் பள்ளியில் ஓரளவு கால்பந்தாட்டம் ஆடிய
அனுபவத்தைக் கொண்டு, திருமதி, பரோசைப் பிடித்தான். அவனும், பிஷ்பீனும் ஒன்றாக அவளை
வம்படியாக, கதவு வழியே ஹாலுக்குக் சுருக் கெழுத்தர்களும், அலுவலகப் பையன்களும் கூடியிருந்தனர்.
இன்னும் அவள் திரு. மார்ட்டின் மீதான தன் சாபங்களை அலறலுடன் விடுத்துக் கொண்டிருந்தாள்.
அவை சிக்கலும், முரண்பாடுமிக்க வையுமான சாபங்கள். இந்த ரகளை நடைவழி வரைநீடித்து ஓய்ந்தது.
திரு. பிட்வீலர் 'இப்போது நடந்ததற்கு வருந்துகிறேன்.
உங்கள் மனதிலிருந்து இவற்றை நீக்கி விடுங்கள் மார்ட்டின்,” “சரி ஐயா" மார்ட்டின்
சொன்னார். இதை யடுத்து, “எல்லாம் முடிந்தது” என்று தலைவர் சொன்னதை ஏற்பதுபோல கதவை நோக்கி
நகர்ந்தார்.
கொண்டுவந்த போது,
சொன்னார்;
எல்லாவற்றையும் நீக்கிவிடுவேன்” அவர் வெளியே சென்று
கதவை மூடினார்.அவரது காலடி ஹாலில் லேசாகவும், விரைவாகவும் இருந்தது. தனது துறைப்பிரிவின்
உள்ளே அவர் நுழைந்தபோது, வேகம் குறைந்தவராக எப்போதும் போல, அமைதியாக அறையைக் கடந்து,
நடந்து, W20 என்ற கோப்பை ஆழ்ந்த கவனத்துடன் பார்வையிடத் துவங்கினார்.
ஜனவரி - மார்ச் 2003 33
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்