தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, January 22, 2025

 மௌனியின் கதைகள் - க நா சு
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள சிறுகதை களில் மிகச் சிறந்த, தலை சிறந்த சிறுகதைகளை எழுதியவர். என்று மௌனியைத்தான் நான் சொல் வேன். அவரைவிட அதிகமாக எழுதியவர்கள் உண்டு; அவரைவிட அதிகமாக பாராட்டுப் பெற்ற வர்கள் உண்டு; அதிகமாக ஜனரஞ்சகமாக எழுதிய வர்கள் இருக்கலாம். ஆனால் மௌனியின் கதைகள் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனிப்பெரும் சிகரம்- அதைவிட "உயரமான " சிகரம் என்று சொல்ல வேறு யாருடையதும் இப்ப சத்தியாக இல்லை.
அவர்
எழுதியதே மொத்தத்தில் இருபது கதைகள்தான் இதில் பதினைந்து கதைகள் 'அழியாச்சுடர்' என்கிற நூலில் வெளியாகி யிருக்கின் றன. இந்தக் கதைகளைப் படிக்கும்போது இவற்றின் தனித்வம் தெரியவருகிறது. படிக்கப் படிக்க இவற் றின் தனித்வமும் பாதிப்பும் அதிகமாகின்றன. பூரண மான ஒரு வாழ்க்கைத் தத்துவத்தையும், ஒரு தனி நோக்கையும் அவர் கதைகளில் காண்கிறோம். அவர் சொல்லாத விஷயங்கள் எத்தனை எத்தனையோ ; ஆனால் அவற்றை எல்லாம் பற்றி அவர் என்ன சொல்லியிருக்கக் கூடும் என்பதை, சொல்லியிருப் பதை வைத்து நாம் கணித்துக் கொள்ள முடியும்.
இப்படி ஒரு தனித்வமும், பூரணத்வமும் உள்ள ஒரு இலக்கியாசிரியரைத்தான் மிகச் சிறந்த இலக்கி யாசிரியர் என்று சொல்லவேண்டும். பொதுவாகத் தனது தனித்வம் தெரிய எழுதுபவனைத் தான் நாம் நல்ல இலக்கியாசிரியன் என்கிறோம். இந்தத் தனித்வம் (பெர்ஸனாலிட்டி) கவிக்கும் பொது வானது; நாடகாசிரியனுக்கும் பொதுவானது ? நாவலாசிரியனுக்கும் பொதுவானது சிறுகதா
சிரியனுக்கும் பொதுவானது. அந்த அளவில் மௌனியின் தனித்வம் அவருடைய சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் பிரகாசிக்கிறது என்று சொல்வ தால் அவர் நல்ல இலக்கியாசிரியர் என்று ஏற் படுமே தவிர, சிறுகதாசிரியராக அவரைச் சிறந்த வர் என்று சொல்வது எப்படி?
சிறுகதையின் திருமூலர் என்று மௌனியைப் பாராட்டினார் புதுமைப்பித்தன். வருஷத்துக்கு ஒரு கதை எழுதியவர் என்பதற்காகப் பாராட்டினார் என்று சில முற்போக்குவாதிகள் இதுபற்றிக் திரித்துக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
ண்மை அப்படியல்ல. மௌனியின் சிறுகதை களில் பெரும் பகுதியும் ஒரே வருஷத்திற்குள் (ஒரு குறுகிய இரண்டு மாதகாலத்துக்குள்) எழுதி அப் போது மணிக்கொடி ஆசிரியராக இருந்த பி. எஸ். ராமய்யாவுக்கு அனுப்பப்பட்டவை. இது விஷயம் அப்போது மணிக்கொடியில் நெருங்கிய உறவு கொண்டிருந்த புதுமைப்பித்தனுக்கும் தெரியும். தவிரவும் திருமூலர் அப்படி ஒன்றும் குறைவாகவும் எழுதியவரில்லை. புதுமைப்பித்தன் சொன்னது

மௌனியின் உருவ அமைதியையும், விஷய அமை தியையும் உத்தேசித்துத்தான் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. மௌனியின் சிறுகதைகளில் விஷ யமும் உருவமும், அவருடைய தனித்வத்தின் வேகத் துடன் பிரமாதமாக அமைந்திருக்கின்றன. இந்த அள வுக்கு உருவமும் விஷயமும் அமைந்துள்ள தமிழ்ச் சிறுகதைகள் மிகவும் சிலவே. அதிலும் தமிழ் சிறு கதாசிரியர்களில் பலர் ஒரு சில நல்ல கதைகளே எழுதினார்கள். உதாரணமாக புதுமைப்பித்தன் எழுதியுள்ள சற்றேறக்குறைய நூறு கதைகளில் ஒரு சில தான் தேறக்கூடியவை ; உருவத்தால் சிறட் புப்பெற்ற சில விஷயச் சிறப்புப் பெறவில்லை
விஷயச் சிறப்புப்பெற்ற சில உருவச் சிறப்புப் பெறவில்லை. அதை அவரைப்பற்றி எழுதும்போது எழுதுகிறேன். மௌனியின் சிறு கதைகளிலோன்கு அமையாத கதைகளிலும்கூட ஒரு உருவச் சிறப்பு, ஒரு விஷயச் சிறப்பும் இருப்பதைக் காணலாம்.
தமிழில் சிறுகதை தோன்றத்தொடங்கிய அநீதக் காலத்தில், மெளனி தமிழில் வார்த்தைகளுக் கடங் காத பல விஷயங்களைப் பற்றி எழுத முன்வந்தார். அவரைத் திருமூலருடன் ஒப்பிடுவதைவிட, ப்ராங் காஃப்காஎன்கிற ஜெர்மன் மொழிக்க தாசிரியருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சிறப்பாக இருக்கும். ஆனால் தமிழ் வாசகர்கள் மிகவும் அதிக அறிவாளிகள். அவர்கள் பொதுவாக மௌனியையும் படிக்கமாட் டார்கள். அந்நியனான காஃப்காவையும் படிக்கமாட் டார்கள். ஆனால் இரண்டு பேரையும் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கணித்துப் பார்ப்பது இலக்கிய விமரிசகன் தமிழ் வளர்ச்சிக்குச் செய்யக்கூடிய தோர் அருந்தொண்டாகும்.
மௌனியின் தமிழ் நடையைப் பற்றியும் ஒரு வார்த்தை அவசியமாகிறது. வார்த்தைகளுக்கு அகப் பட மறுக்கிற விஷயங்களை வார்த்தைகளில் அடைத் துச்சொல்கிற பணியில் மௌனி பிரமாதமாகவே வெற்றி பெற்றிருக்கிறார். அதற்காக, தனக்கென்று அவர் ஒரு தனி மொழியையே சிருஷ்டித்துக் கொண் டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். உணர் ச்சி, விஷய வெளியீட்டை இந்த அளவுக்குச் செய்து தமிழ் போதுமான அளவு வளரச் செய்தவர் என்று அவரைப் பார்க்கவேண்டும். மொழிச் சோதனையை யும், விஷயச் சோதனையையும், சிறுகதை உருவச் சோதனையையும் சிறப்பாகச் செய்து வெற்றி கண் டவர் மௌனி.
அவருடைய கதைகளில் சமூகச் சூழ்நிலை பிரதி பலிப்பு, இன்றையப் பிரச்னைகள் பிரதிபலிப்பு அதிகமில்லை என்று முற்போக்கு வாதிகள் சொல்ல லாம். விமரிசகன் நிர்த்தாக்ஷண்யமாகச் சொல் வதை மௌனி வழிபாடு என்று சொல்லி ஒதுக்கி விட முயலலாம். ஆனால் மௌனி வழிபாடு என்ப தற்கு அர்த்தமேயில்லை. முற்போக்குக்காரர்கள் தான் ஏதேதோ வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நாலாந்தர முற்போக்குக்காரர்கள்
ருக்கட்டும். மௌனியைப் பற்றியன்றே பேசிக் கொண்டிருந்தோம். மௌனியின் கதைகளிலே இன்றையப் பிரச்னைகள் பிரதிபலிக்க வில்லை என்று சொல்வது தவறு. லக்ஷியவாதி ஒருவனின் கனவுகள் எத்தன்மையன என்பதைச் சுட்டிக் காட்டுகின் றன: தெரிந்து கொள்ளக்கூடியவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
உலகிலுள்ள மனிதர்களை யெல்லாம் பலமற்ற கனவு காணும் பதினெட்டுப் பிராயத்துக் காதலர் களாக - அப்படிப்பட்ட காதலர்களின் பலத்துட னும் பலஹீனத்துடனும் கற்பனை செய்து கணித்துக் காட்டுகிறார் மௌனி. அவருடைய கதாநாயகர்கள் பலருக்கும் தனிப் பெயர்களே கிடையாது. இந்தக்
கனவு காணும் தன்மை பிற்காலத்திய ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்களின் கவிதைகளில் பலஹீன மடைந்திருப்பதை நாம் காண்கிறோம். இதன் உச்சம் என்று சொல்லக்கூடியது டாண்டேயின் கவிதை யிலும் அதற்குச் சற்று முந்தியும் பிந்தியும் புரோ வென்ஸல் பாட்டுகள் என்று புகழ்பெற்ற இலக் கியப் பகுதிகளிலும் உள்ளது. இந்த இலக்கியப் பகுதிகளை உலகத்தின் மிகவும் உயர்ந்த ஒரு சிகரமாகச் சொல்லலாம். உலகத்து மிகச் சிறந்த பல காதற்கதைகள் இன்றுள்ள அற்புத உருவம் பெற்றது அந்தக்' காலத்தில் தான். 'ரொமான்டிக் அ:கனி' என்று தன் சோகத்தைத் தானே வளர்த்திக் கொண்டு இன்பங்காண முயலுவது இந்த இலக்கி யத்தின் ஒரு தத்துவம். அடிப்படை. தெரிந்தோதெரி யாமலோ இந்த இலக்கியத்தின் வாரிசாகத் தமிழில் கதை செய்திருக்கிறார் மௌனி. இந்த அடிப்படை யில் மேலை நாடுகளில் கூட இவ்வளவு பரிபூரண மாகக் கதை செய்திருப்பவர்கள் மிகவும் குறைவு. அந்த அடிப்படைத் தத்துவத்துடன் இருபதுக்களில் வளர்ந்து படித்துப் பெரியவனான ஒரு வாலிபனின் மனப் போக்கும் சேர்ந்து மௌனியின் கதைகளைச் சிருஷ்டித்திருக்கின்றன.
சரி; நமது சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கு. இந்த மௌனியின் கதைகளிலிருந்து எதைப் பொறுக்கி எடுப்பது என்று யோசிப்போம். என் னைப் பற்றியவரையில் அழியாச்சுடரும், பிரபஞ்ச கானமும்தான் மௌனி எழுதிய கதைகளிலே மிக மிகச்சிறந்தவை என்று தோன்றுகிறது.மௌனியின் தனித்வம், உருவ, விஷய அமைதிகள், சோகம்,நடை எல்லாம் இவை இரண்டிலும் காணக்கிடக்கின்றன. அத்துடன் தமிழ்ப் பண்பும் மரபும் இந்த இரண்டு கதைகளிலும் அபூர்வமாகப் பின்னிக்கிடக்கின்றன. கோவில் சந்நிதியும் அதன் உயிருள்ள சிற்பங்களும் சங்கீதத்தின் உயிருள்ள பகைப்புலமும் இந்த இரண்டு கதைகளிலும் சிறப்பாக உருவாகியிருக் கின்றன. காலத்தை நோக்குகிற அளவிலும், தன் மையிலும் மௌனியின் தனித்வம் இந்த இரண்டு சிறுகதைகளிலுமே சிறப்பாகத்தெரியக்கிடக்கிறது.
உலகமே குமுறிச் சங்கீத மயமானதையும், சங் கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள் காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டும் பரிமாணம் கொண்டதையும் மேருவை விட உன்னதமானதையும், மரணத்தைவிட மனச் தைப் பிளப்பதாயும், மாதரின் முத்தத்தைவிட ஆவ லைத் தூண்டி. இழுப்பதாயும் இருந்ததையும்,காலம் விறைத்து விட்டது என்றும், குளத்து மேட்டுவரட் டிகள் உலர்ந்து அடுக்கப்பட்டு இருந்தன என்றும் சொல்கிற பிரபஞ்ச கானத்தில் போராட்டம், மோதல் இல்லை. அதிசயோக்தமான ஓரு அனு பவத்தை, உணர்ச்சியை, வார்த்தைகளுக்கு எட்டாத எட்டமுடியாத ஒரு அதிசய அனுபவத்தை வாசக னுக்கு உணர்த்துகின்றது பிரபஞ்சகானம்.
அழியாச்சுடரில் பொய்மைக்கும்,வாய்மைக்கும்
உள்ள போராட்டம் லேசாக நிழலாடுகிறது. மனித னின் பலமும் பலமின்மையும் மோதுகின்றன. உயி ரற்ற பயங்கரமான கல் யாளி உயிர் பெற்று எழுந்து மனிதனையே விழுங்கி விடுவேன் என்பதை எத்தனை அற்புதமாகச் சொல்லிருக்கிறார் ஆசிரியர். கோவிலில் விக்கிரஹத்துக்கும் அப்பால் நிழலாடும் உண்மை, பரம உண்மை எவ்வளவு நிச்சயத்துடன், தீர்மானத் துடன் இங்கு உயிர் பெற்றிருக்கிறது? நேற்று நேற்று நேற்று என்று காலத்தைப் பின் கடத்திச் சென்று ஒன்பது ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு சம்பவத்தையும், பிறர் அறியச் செய்யாமல் தானே மனத்திற்குள் செய்து கொண்ட ஒரு சங்கற்பத்தை யும் அற்புதமாக உருவாக்கித் தந்திருக்கிறார் ஆசிரி யர். இதுபோன்ற உருவம் பெற்ற சிறுகதை தமி ழில் வேறு ஒன்றுமே இல்லை என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது மௌனியின் சிறந்த சிறுகதை என்பதுடன், தமிழில் இதுவரை வெளி வந்திருப்பதில் மிகவும் சிறந்த சிறுகதை என்று ஒரே ஒரு கதையைப் பொறுக்கி எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் நான் இந்தக் கதையைத் தான் தேர்ந்தெடுப்பேன். அழியாச்சுடரைப் போன்ற சிறுகதைகள் உலக மொழிகளில் மிகவும் சிலவற்றிலுமே உள. மிகவும் சிலவே உள.
மௌனியின் கதைகள் படிக்கப் படிக்கத்தான் தெளிவாகத் தொடங்கும். ஒரு தரம் படித்துவிட்டு இதில் ஒன்றும் இல்லை என்று விசிறிவிட விரும்புகிறவர்கள் இலக்கிய விமரிசனம் செய்ய முன்வரா மல் இருந்தால் நல்லது. விஷயம் இருக்கிறது புரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று பணிவுடன் வருகிறவர்களுக்கே விமரிசன உலகில் இடம் உண்டு. அப்படி வருபவர்கள் மௌனியின் கதை களைப் பல தடவைகள் படித்துப் பார்க்கவேண்டும். எந்த விமர்சகனுடைய சிறந்த எழுத்தும் எந்த சிருஷ்டி இலக்கியாசிரியனுடைய எழுத்தையும் தள்ளிவிட்டு அதன் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளமுடியாது.