தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, January 22, 2025





ஸ்ரீதேசிகன்

எஸ்ரா பவுண்டு கண்ட கவிதைத் தத்துவம்

இவர் அமெரிக்க நாட்டு நவீன கவிஞர்களுக்குள் மிகச்சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஓர் இளைஞ னாயிருக்கும்பொழுதே இங்கிலாந்திற்கு வந்தார். மத்திய காலத்து இலக்கியத்தில் திளைத்தார். பல நவீன கவிஞர்களுடைய நூல்களை உலகத்திற்கு முரசடித்த பெருமை இவரைச் சார்ந்ததாகும். ஐரோப்பா கண்டத் தில் பல ஆண்டுகள் கழித்தார். பல மொழிகளில் திளைத்து அவற்றின் நயங்களைப் பருகியிருக்கிறார். கிரேக்க, லத்தீன், பிரெஞ்சு சீனம் முதலிய மொழிகளி லுள்ள சிறந்த நூற்பகுதிகளைத் தம் ஆங்கில செஞ் சொற்களில் மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பு சாதாரண காரியமன்று என்ற விஷயத்தைப் பல இடங் களில் புலப்படுத்தியிருக்கிறார். தாம் கண்ட கருத்தை நல்குவதில் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். உதாரண மாக : மில்டனால் ஆங்கிலத்தின் தூய்மை மாசுற்றது என்று அச்சமின்றிச் சாற்றுகின்றார்.

ஷெல்லி இசைத்த மேல்காற்றைப் பற்றிய பாடலை (Ode to the Western Wind) எல்லோரும் போற்றுகிற வழக்கம். ஆனால் இந்தப் பாட்டை மிகவும் இழிவு படுத்தி இவர் பேசுகின்றார். இவர் கொண்ட கருத்தை உலகம் ஏற்குமோ, ஏற்காதோ ஏற்காதோ அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தைரியமாய்த் தம் மனச்சாட்சியின் குரலை மாய்க்காமல் தான் கண்ட நல்லதை இயம்பும் ஆற்றலை இவர் படைத்திருக்கிறார். இத்தகைய ஆற்றல் நம் நாட்டிற்கு வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் வணக்கஞ் செய்வோமாக. இவர் கவி தையைப் பற்றித் தந்த கருத்துக்கள் பல கட்டுரைகளில் சிதறிக்கிடக்கின்றன. அவைகளைத் திரட்டினால் அவர் கவிதையைப் பற்றிக் கண்ட தத்துவம் முழு உருவம் அடையும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. அவர் கவிதைத் தத்துவ உலகத்தில் சற்றுத் திரிவோமாக. இவருடைய இலக்கியக் கட்டுரைகளைத் திரட்டி ஒரு நூன்முகத்தோடு டி, எஸ் எலியட் இவ்வையகத்திற்கு அளித்திருக்கிறார். சங்கீதத்தின் இயல்பை அ கின்ற பொழுது தான் எந்தக் கலையும் ஒரு முதிர்ச்சி அடைகின்றது-ஒரு பூரணத்தை எய்துகின்றது என்று பேட்டர் பகர்ந்தது நம் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும்

கவிதை என்பது இசைக்கேற்பச் சொற்களால் அமைக்கப்பட்டதாகும். (Poetry is a composition of words set to music) இசையில் திளைக்கா தவர்கள் நல்ல கவிஞர்களல்லர். இசையை ஒரு கலையாகப் பயில வேண்டுமென்பதில்லை ஆனால் கவிஞன் கவி களைப் புனையும்பொழுது இசையின் சுயவடிவத்தை அறிந்தே செய்தால் அவை தெவிட்டாத இன்பத்தை நல்கும். செஞ்சொற் கவி இன்பம் என்று கம்பரும்

பாடுகின்றான்றோ. கம்பருடைய சொல் நயங்களை நோக்கினால் எத்தனையோ இசையின் நயங்களை அவ ருடைய செவிகள் மாற்றி மாற்றிக் களித்திருக்க வேண் டும் என்பது நன்கு புலனாகும்.

யோடு

மேலும் கவிதைகளைப் படிக்குந்தோறும் இசை: பாடவேண்டும். வேதங்களெல்லாம்-மனித னின் அகவுயிரிலிருந்து எழுந்த வேதங்களெல்லாம்- சுவரத்தோடு பாடப்பட்டவை அல்லவா? சாமகானப் பிரியன் சிவபிரான் என்று நாம் அறிகின்றோம். ஆழ் வார்கள் பாடிய நாலாயிர திவ்யபிரபந்தம், நாயன்மார் கள் இயற்றிய தேவாரங்கள் எல்லாம் பண்ணிசைத்துப் பட்டன என்பது அவைகளுக்கேற்ப வகுக்கப்பட்ட ராகங்களால் நாம் அறிகின்றோம்.

கவி

வால்மீகி இராமாயணம் வீணையொத்த இசையை நல்குகின்றது; எல்லாச் செவிகளும் நுகரக்கூடிய இன்னிசை வாய்ந்ததாய் அது மிளிர்கின்றது. களைப் படிக்கின்றபொழுது சொற்பொழிவு ஆற்றுகிற வன் போலச் செய்யக்கூடாது. தேன்மதுர ஓசையோடு அவைகளைப் பாடவேண்டும்.

கவிதையில் வெறும் அலங்காரத்திற்கு (ரெடரிக்) இடமில்லை. அதைக் களைந்துவிட வேண்டும். செறிந்த கருத்துடைய சொற்களைச் சிக்கனமாய் வழங்க வேண் டும். மில்டனின் கவிதையெல்லாம் பொருளற்ற சப்த ஜாலங்கள் என்று இவர் கருதுகின்றார்.

1912-ஆம் ஆண்டு ஓர் இளவேனிற் காலத்தில் ரிச்சேர்:ட் ஆல்:டிங்க்டனும், எஸ்ரா பவுண்டும் கவிதைக் கலையைப் பற்றிய மூன்று தத்துவங்கள் சம்பந்தப்பட்ட வரையில் ஒத்த முடிவுக்கு வந்தனர்.

(1) அகமோ, (சப்ஜெக்டிவ்) அல்லது புறமோ (அப்ஜெக்டிவ்) அதைப் பற்றிச் சுற்றிச் சொல்லாமல், நேர்முகமாய் இயம்ப வேண்டும், (Direct treatment of the thing whether subjective or objective) பொருளின் ஆன்மாவைச் சட்டெனத் தொடவேண்டும். இப்படி அமைக்காமற் போனால், அது மனத்தில் ஒரு குழப்பத்தை எழுப்பிவிடும். உதாரணமாக : ஓர் இராகம் பாடுகின்றவன் அந்த இராகத்தின் சுயரூபத்தைத் தொடக்கத்திலேயே காண்பித்துவிட வேண்டும். பிறகு அதை விரிவுபடுத்திக் கொண்டே போகலாம்.

(2) எடுத்துக் கொண்ட பொருளுக்குப் புறம்பாக ஒரு சொல்லையும் புகுத்தக்கூடாது. (2) (To use abso Ituely no word that does not contribute to the presentation)கூட்டினாலும் குறைத்தாலும் ஒரு படைப்பு மாறும். ஒரு தெய்வத் தச்சன் ஒரு படைப்பைச் செய் தால், அதிலிருந்து ஒன்றை எடுத்துவிட முடியாது; அதோடு ஒன்றைச் சேர்க்கமுடியாது. சொல் ஆடம் பத்திற்கோ அவசியமில்லாத அணிகளுக்கோ சிறந்த படைப்பில் இடமில்லை.

(3) ஓசைக் கோப்பு அல்லது ரிதம் அல்லது இழும் சம்பந்தப்பட்ட வரையில், இசைச் சொல்லின் ஒழுங்கைக் கவனிக்க வேண்டுமே தவிர கடிகாரம் போலக் கணக்காய்ப் போகின்ற முறையைப் பின்பற்றக் கூடாது. (As regarding rhythm; to compose in the sequence of the musical phrase, not in sequence of a metronome) ஒரு சங்கீதமுறையைப் பின்பற்று வதுதான் கவிதைக்கழகாகும். உதாரணமாக: ஒரு வெண்பாவில் தளை மோனை சீர் எல்லாம் விளங்கும்.

velopment. Moreover the truthfulness and histo- rical concreteness of the artistic representation of reality must be linked with the task of ideolo gical transformation and education of workers in the spirit of socialism. (First All union Congress of Soviet Writers, 1934)

இந்த நோக்கில் விமர்சனப் பார்வையை செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்போலும். அழகியலைப் பொருத்தி இலக்கியத்தைப் பார்ப்பவர் களை வெறுக்கும் இவர் அரசியலைப் பொருத்திப் பார்க்க வெட்கப்படவில்லை.

'வ.வெ.சு.அய்யரின் கருத்துக்களை தம் கருத் துக் குறைபாடுகளுக்கு சமன் செய்ய ரசிக விமர்சகர் கள் உபயோகிக்கிறார்கள், அதை வைத்துக்கொண்டு இலக்கியத்தில் அமைப்பு அல்லது வடிவமே அடிப் படையானது என்று தலை தடுமாறும் இரசிக விமர் சகர்கள்' என்கிறார். முதலில் அய்யர் தன் கருத்து கோட்பாட்டுக்கு ஏற்ப தானே செயல் முறை விமர் சனம் செய்திருப்பதை படித்தவர்களுக்கு ஐயர் வழி புரியும். ஐயரையே இவர் அழகியல்காரர், ரசிக விமர்சகர் என்று ஏனோ தள்ள வில்லை? அவ ரைப் பிரித்து (ஓரு வேளை முன்னோடி, போகிறார் பாவம் என்று) வைத்துவிட்டு மற்றவர்களை சாடு கிறார். 'எதையும் இலக்கியத்தில் கூறலாம் அது எப் படிக் கூறப்படுகிறது என்பதே முக்கியம்' என்ற ரசிக விமர்சகர்களின் 'ஓலக்குரல்' ஐயர் கருத் தைத்தான் பின்பற்றியது என்று இல்லை. இலக்கிய ரசனையின் அடிப்படையே அதுதான். ஐயர் செய்த அளவுக்கு சரி ரசனைக்கு, பாரதி செய்த அளவுக்கு போல.ஐயர் சரி படைப்புக்கு என்பது போல. ஐயர் ரசனை பூரணமானது என்றும் முடிவு கட்டிவிட முடியாது. ஐயர் கோடி காட்டியவர். அவ்வளவுதான். பின்வரு பவர் மேலே மேலே சேர்க்கக்கூடும். இலக்கியத் துறை இதுக்கு இடம் கொடுப்பது.

ஐயரைப் பின்பற்றி வருவதாக கைலாசபதி குறிப்பிடுபவர்கள் 'இலக்கிய ரசனை எக்காலத்துக் கும் மாறாது இருக்கும் அறிவு நிலை, புனிதமானது' என்று கருதுபவர்கள் என்று எப்படி முடிவு கட்டி னார் ? அதுக்கு மாறாகமாறக்கூடியது என்பதைத்தான் அய்யரே தன்பார்வை மூலம்,அவருக்கு முன் போன இலக்கண ஆசிரியர்களிடம் குறை கண்டு அவர்கள் செய்யத் தவறியதை குறிப்பிடுகிறபோது உணர்த்து வது தெரிகிறது. ஐயர் கருத்தை கைலாசபதி சரி யாக புரிந்துகொள்ளாததால் தான் திசை மாறின அபிப்ராயத்தை சொல்லி இருக்கிறார். அதோ இந்த அடிப்படைத் தவறின் விளைவாக பல தவறு களில் காலை இட்டுக் கொள்கிறார். 'இலக்கியத்தில் வடிவம் முக்யம் என்றால் பொருளுக்கு முக்யத்வம் இல்லை. அதனால் பொருள் இன்றியமையாததன்று என்று ஆகிறது. அதனால் இலக்கியத்தில் அதை இனம் கண்டுகொள்ளும் ஆசை இல்லாமல் போகி றது, அதனாலே அலட்சிய மனோபாவம், அதனாலே அலட்சியக் குரல்' என்கிறார். தர்க்க ரீதியாக வந்த முடிவு இது! முகத்தில் கண்கள் முக்கியம் என்றால் மூக்கு காது இன்றியமையாததன்று என்று ஆகும் என்று ஒருவர் முடிவுகட்டி விட்டால்!

அன்பர் கைலாசபதிக்கு: பொருள் இல்லாமல் வறுமையில் இலக்கியப் படைப்பு உருவாகவே

முடியாது. இலக்கியம் மட்டும் என்ன, எந்த துறை யிலுமேதான். ஆனால் பொருளுக்கு உரிய இடம் துறைக்குத் துறை அந்தஸ்து வித்யாசம் உண்டு. விஞ்ஞானம்,கத்துவம் இவைகளில் முழு அளவுக்கு. கலையில் குறைந்த அளவுக்கு, அதிலும் சங்கீ தத்தில் குறைந்த பட்ச அளவுக்கு. இலக்கியத்தில் ஒரு அளவுக்கு. ஏனென்றால் அங்கே அறிவு ரீதியாக கொள்ளப்படும் பொருள் மட்டும் இன்றி, உணர்ச்சி ரீதியாக கொள்ளப்படும் எழுச்சி நிலைகளை எழுப்ப ஏதுவாக உள்ள பல்வேறு சாதனங்கள் கலக்கின் றன. அவை தமக்கு உரிய தனித்தனி இயல்பு களை இயைவிக்கின்றன. இந்த இயைவால் உருவா கிற கோவைதான் இலக்கியம்.

இலக்கியம் பற்றி ரசிக விமர்சனம்தான் இருக்க முடியும்; அது முதன்மையாக அழகியல் அடிப்படை யில்தான் இயங்கமுடியும்.