தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, October 01, 2019

கானகத் தேகவெளியில் திராட்சைப் பெண் ச. முருகபூபதி,"ஒரு நூற்றாண்டுத் தன்மை" காப்ரியல் கார் ஸியா மார்க்வெஸ் நாவலில் . . . மொழிப் பெயர் வும் கால்வழி மரபு வரலாறும் அனிபல் கோன்ஜலெஸ்,சந்திப்பு ஜோர்ஜ் லூயி போர்ஹே ----பவளக்கொடி


கானகத் தேகவெளியில் திராட்சைப் பெண் 

ச. முருகபூபதி 

00 
முதல் கானக நடிகையான வனப்பேச்சியைத் தீண்ட மேற்குப் பட்டிண ஜமீன்கள் அறுவரும் வாள் வீசிப்புறப்பட்ட லாட ஒலிகள் கேட்கும் அக்னி நாளில் முகம் திருப்பாமல் ஸர்பமென நெளியும் காட்டுப்பாதைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறாள் வனப்பேச்சி. துர்மிருகங்களின் உறுமல் வனமெங்கும் உருண்டபோது அவள் தன் பதினாறடிக் கூந்தலை திசைகளின் காற்றிடம் கொடுக்க முன்விரியும் கேஸ் இருட்டில் கால்களை உதைக்கும் குதிரைகளின் உடலை கடித்துக்கத்தும் அவர்கள். மிருகங்களின் ஊளை கூடக்கூட விருட்சங்களிடமிருந்து இலைகளை பறித்துச் சென்றது நெடுங்காற்று. பட்சிகள் முணுமுணுக்கும் காட்டுபூமிக்குள் ஓடிய வேகத்தில் புதையும் அவளுடலைக் கண்டு வாள் உயர்த்தி கேஸம் பற்ற பூமிக்கள் மறைகிறது தேகம். ஆறு வாட்களின் நுனி அவள் கழுத்தில் பதிய கீகாட்டு வெளியின் ரத்தநெடியில் துண்டித்த சிரம் ரகசியம் சொல்ல வாட்களுக்குள்ளிருந்து கசியும் ரத்தபிசுபிசுப்பின் வாடையில் உடல் துடிக்க குதிரைகள் இழுக்கும் கொடும் பாதைக்குள் அலறலுடன் மறைகிறார்கள் ஜமீன்கள். 
துண்டித்த சிரசின் கேஸத்தில் கசியும் உதிர எண்ணெயை தன் மூன்றடிக் கூந்தலில் தடவத் தடவ நீண்டு கொண்டே இருக்கிறது தமிழின் முதல் ஸ்திரீ நடிகனுக்கு. ரத்த நெடி கொண்ட தன் கேஸத்தை மரவேர்களில் விரித்து "விருட்ச தேகத்துள் அலைவுறும் என் வனப்பேச்சியே! வெளிகளின் உதிரத்தில் அரிதாரம் படர் மோதுகிறேன், வெளிகளின் காலத்தில் மிதக்கும் ரத்த மூச்சை வணங்ககிறேன். உன் வனக்கேஸத்தில் பறக்கும் காக்கைச் சிறகுகளோடு புறப்படுகிறேன்". எனக்கூறி மரத்தில் முகம் உரசி உரசி சருகிலைகளை ஏந்தியபடி ஊளையிட்டு சலங்கை குலுங்க கானகத்திற்குள் ஆடியாடிப் போகும் அவன் கூந்தலை மறைந்து மறைந்து முத்தமிட்டுப் போகிறாள் வனப்பேச்சியெனும் - 
முதுமொழியின் ஆதி நடிகை. 
ஒண்டியம்மாள் எனும் முது நடிகை வரைந்த திச்ைசீலை விரிந்தபோது முதல் நடிகனும் நடிகையும் கருஈரமண்ணை அணைத்து எதிரெதிர் நிற்கிறார்கள் முகம்பாராமல். தூரத்தில் ஆட்டிடைச்சிறுமிகள் குரல் கொடுக்க ஈரமண்ணை பரிமாறிக் கொள்கிறார்கள் தலை கவிழ்ந்து. அவன் பேசுகிறான் மெலிதாக "சருகிலைகளில் நொச்சிப் பூக்கள் ஓடிய நொடிகளிலேயே உன் கேஸத்தின் ஸ்பரிசம் உணர்ந்தேன் கண்முடி." காற்றில் மிதக்கும் இருவர் கூந்தலும் நதிச்சுழலென பிணைந்து விலகிற்று. "என் அகங்கையின் ரேகைகளுள் உன்னை சித்திரமிட்டுள்ளேன் . தொட்டுக்கொள்". தொடர்ந்த அமைதியில் திசைமறந்து நடக்கின்றார்கள் இருவரும் . "என் மனப்பறவையின் அலகிலிருக்கும் கேஸ் தான்யத்தை உனக்குத் தீருவேன் அகங்கையைப் பிரிக்காதே!". குறுக்கும் நெடுக்குமாக ' நடந்து "திரேதாயுகத்தில் தேசத்தின் மனக்கலக்கம் தீர பூம்புலியூர் கன்னிவனபுராணக் கூத்தில் மணற்சலங்கை அணிந்து உன் சகோதரியின் குருதிப்பூ இதோ.!" "வேண்டாம் ஞாபகத்தின் வேதனை என்னை மரணஹிம்சைப்படுத்துகிறது" என்றாள். "சஞ்சல் அரங்கின் வெப்ப நரம்பைத்திண்டும் இதயத்தின் ஆன்மாவாகிய உன் கேஸக் கொடியில் முத்தம் சிட் தின்றேன் " சில நொடி மெளனத்திற்குபின் "இமைகளில் கசிவது நேசத்தின் ஈரம்தானா ..... ஏன்?" வருவரையொருவர் சுற்றுகிறார்கள். என் இருதயம் துக்கவீட்டிலேயே அலைகிறது". தூரவெளியைப் பார்க்கும் அவன் காலில் முகம் திணித்து குழந்தையெனக் கேவியழுகிறான், அவள் திரும்பவும் "துக்கத்தின் நொடிகளிளெல்லாம் இருதயம் சீர்படும்தானே? இதோ என் விசனக் கரங்களை நீட்டுகிறேன் , உன் உதடுகளை பதித்துக்கொள்". 
மச்சால் கண்மூடிக்கொள்கிறார்கள். இமையின் உப்புநீர் படிந்த உதடுகளால் அவன் முத்தபதித்த மறு நொடியில் 
பவளக்கொடி 04 
தீண்டிய கைகளில் அவள் இதழ்கள் கவிழ பதற்றம் கொள்ளும் அவன் அவள் கூந்தலுள் முகம் மறைத்துக் கொண்டான. தூரத்தில் கல்லறைப்பட்டின அரும்பிணிக்காரர்கள் தம் உருகும் கைகளில் வெண்மலர்களையேந்தி திரைச்சீலைக்குள் மறைந்து கொண்டே இருந்தனர். திரைச்சீலை சுருள பொதிகளுடன் முதுநடிகை ஒண்டியம்மாளை பின் தொடர்கிறார்கள் நடிகைகள். தனியே கண்களில் மயில் பீலி பதித்து நிற்கும் அவன் "உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும் நீரின் உப்புத் தன்மையை , துக்கத்தின் காதலை என் நடிப்பின் மூச்சாக வைத்திருக்கிறேன் விசனம் கொள்ளாதே , உன் கூந்தலின் 
ஸ்பரிச மலர்களோடு நடிக்கின்றேன் , உன் வருகை வெகு சீக்கிரத்தில் இருக்கட்டும்" 
கேஸவரிக்குறிப்புகளில் வனப்பேச்சி 
கானகத்திலிருந்து நீண்டு வரும் அவள் கருநிற முகத்தின் தீண்டுதலில் அலைவடையும் கீகாட்டு அரங்கலங்களன் ரகசியம் அவள் நீள்வட்ட முகத்திலேயே படிந்திருந்தது. அதிசயக் கனவின் சாத்தியம் போலவே அவள் நாடகம் நிகழ்கிறது. உடலை மீறிய அவள் தீவிரம் காலவெளியின் மூலமே நிகழ்வாகி ஜனித்த இடத்திலேயே எல்லா பரப்பையும் பற்றிக் கொண்டு விரிகிறது. அவள் உடல் பார்வையாளனின் முன்னே சீறி நிசப்தத்தின் ஆழத்தை உணர்த்தும் போது நிறங்களின் இருப்பு மாற்றம் கொள்ள நம்புற உடலின் இருப்பை இழந்து கொண்டே இருக்கிறோம். தீராமல் வேட்கை கொள்ளும் மொழி உடலுக்குள் 
அவளது மாயவிசிறி. அவள் முன் நிற்கும் வெளியில் எல்லா மாயங்களும் சாத்தியம். ஒப்பனைக்காரர்களின் உடலும் மூச்சும் . வியர்வையின் குரலும் பார்வையாளர்களின் இமைப்படபடப்புமே நம்முன் சுழல்கிறது. சடங்கின் தீவிர ரகசியத்தை பின் தொடர முடியாத ஒப்பனைக்காரர்கள் தம் உருவை தட்டையான நிகழ்வில் படியவிடுகிறார்கள். கொலைகாரர்களின் இதயத்துடிப்பு, கூந்தலின் ரகசியம், உதிர மூச்சு, இறகுகளை காதல் செய்யும் கோமாளி எதுவுமே அரங்கச் சடங்கில்கனவு கொள்கிறது. தாவர மிருக துக்கத்தாலான அரங்கம் தொலை தூரத்தில் நின்று தன்னை முடிவற்றுத் தீண்டிய ஒப்பனைக்காரர்களின் அதிசயத்தை ஸ்பரிசிக்க அழைக்கிறது. எல்லையற்று தனிமையின் ஊற்றை நோக்கி காதல் கொள்பவர்களே ஒப்பனைக்காரர்களும் பார்வையாளர்ளும். கர்ப்பவதியின் வயிற்றில் துளிர்க்கும் சிசு எலும்பின் பிராய இசை ரகசியமே அரங்கின் தான்யம். 
நடுகல்லில் வனஇருளி எழுதிவைத்த முதுகதை 
- மேற்குத்திசையிலிருக்கின்ற கல்லறைப் பட்டிணத்தின் வாசல் கதவு பூட்டப்பட்டு சாவியோடு தப்பித்துப்போன கூன் கிழவன் இன்னும் திரும்பவே இல்லை. பட்டிணம் பூட்டப்பட்டபோது கிழவன் ஆடிய வெறிக்கூத்திற்கு வானாசுரன் வேடமிட்ட முதுகண்ணி பிச்சம்மாள் தன் ஆயிரங்கைகளாலும் முழங்கிய இசைக்கருவிகளின் பாதைகள் கோபங்கொண்டு துடித்துக்காத்திருந்தது. பட்டிண மதில்களின் உட்புறத்தில் பேய்கொண்ட ஸ்திரீ நடிகர்களின் கூந்தல் அலைபாய மிருக ஊளையிட்டு வானோக்கி விரல் வீசிக்கூவ, கள்ளப்பார்ட் கானாடுகாத்தான் அரிப்பறையெனும் வன்கருவியை இசைத்து பட்டிண மதில்களை தீராமல் சுற்றுகிறான். 
அறுவடைக்குப் பிந்திய இரவில் பூட்டிய பட்டிண வாசலில் நிகழ்திய நாடகத்தில் துர்குணம் கொண்ட முனிவர்களும் பஞ்சத்தில் குழந்தையோடு அலையும் ராணியையும் பெண் நடிகனை காதல் செய்யும் கடவுளையும் திமிலை, துடுமை, திசாளம் 
எனவீர இசைக்கருவிகளால் தேற்றினர் பின் பாட்டுக்காரர்கள். நாடகத்தின் இறுதிக்காட்சியில்கூன்கிழவன் அரசனால் மறுக்கப்பட்ட. எழு லட்சம் பனயோலை கிரந்தங்களை வனமையத்தில் தீயூட்டி பைசாச மொழியில் கீறப்பட்ட கதைச் சுவடிகளை வாசித்து வாசித்து ஒவ்வொன்றாய் எரித்தான். எளியுண்ட சுவடிகளின் புகைவாசனை காட்டுக்குள் நுழைந்தபோது துர்மிருகங்களும், பட்சிகளும், ஊர்வனப்பிராணிகளும்கிழவனைச் சுற்றி சப்திக்காமல் கதைகேட்டு ஏங்கியது. புகைநெடியின் அடர்த்திவனத்தைக் குடைந்தபோது வெகு தூரத்திலிருந்து விருட்சங்களின் புலம்பல் மிதக்க கல்லறைப் பட்டிண ஆவிகள் சுவர்களெங்கும் மோதி மோதி அழுதது. ஆவிகளின் மன உருக்கம் இளைப்பாறுதலற்ற நட்சத்திரக் கூட்டங்களுக்கு ஒத்த அதன் பிள்ளைகள் யுத்த தேசமெங்கும் நிர்க்கதியாய் அலைவதை வண்டுகளின் இமிரிசையென முழங்கியது. சஞ்சலப்பட்ட ஆவிகள் விருட்சங்களின் முதற்கனியோடு ஆலயக் கதவுகளில் மோதி அவைகளின் புலம்பல் தூரத்திலே கேட்கப்பட்டது. எவருமற்ற நியாய பாதைகளில் நவவிதைகளோடு கனிகளோடு காத்திருக்கும் துர் ஆவிகளின் குரல்கள் பட்சிகளுக்கு மட்டுமே கேட்டிருந்தது. 
பட்சிகள் சொன்ன கதையின் வனம் 
மன நகரின் பட்டப்பட்ட பாசி மண்டப அரங்கில் சருகுகள் பறக்க உடல் முழுதும் லட்சம் சலங்கைகள் அணிந்து வாள் சுழற்றி சலங்கை குலுங்காமல் அரங்கைக் சுற்றுகிறான் முதல் நடிகன். "ஜனிக்கும் உயிர்களுக்காக ஆன்மாவைப் பகிரும் காற்றின் கேசம் அணைத்து முனகுகிறேன். அரிதாரச் சடங்கின் ஆதிவாசனை ததும்பமணல்வெளியைத்துலாவுகிறேன். 
வா... ஒளிரும் ஊசியிலை வாசனையில் காட்டுப்பலி உதிரத்தை ஒப்பனையிட்டு வணங்குகிறேன்" 
கானகத்தேகவெளி 05 - 
அரங்காடும் சமுத்திர வெளியில் துண்டிக்கப்பட்ட இறுதி வார்த்தை , வெளிகடக்கும், நடிப்புயிர்களில் உதிர்கிறது. வார்த்தையின் லிபிகள் கடலில் மிதக்க அதன் ரகசியங்களை மீன்கள் தன் உதடென முணுமுணுத்துச் சென்றது. லிபிகளாலெ நெய்யப்பட்ட தாவர உடைகளோடு கடற் ஜீவராசிகள் புலம்பும் யாழினிசை,யில் என் கேசம் உனக்கு. உன் பாசி விரல்களால்ல் சமுத்திரவெளியில் எழுதிய அம்முடிவற்ற வார்த்தைதான் என்ன? வார்த்தையின் நிசப்தத்தை  துடிப்பெனக் காப்பேன். இரவுச் சமுத்திரங்களின் ஜ்வாலை நீ.


வேதனைகொண்ட வனாந்திரங்களில் அவளைத் தேடினேன் காணவில்லை. பூமியில் முகம்பதித்து அவளைக் கூப்பிட்டேன் என் பாதைகள் வியாகுல இலைகளால் மூடிக்கொண்டது. மீன் வாசலில் ஈரம் கொண்ட மலை குகையிலேயே இருந்த அவள் வர்ணங்களின் நாட்டியங்களை நெய்து கொண்டிருந்தாள். ஸர்வதேச மூடர்களும் காண பிரபஞ்ச மனிதர்களும் தறியை, நெய்த கம்பளத்தை நிர்மூலமாக்கியபோது பிரபஞ்சமெங்கும் நிறங்களைச் சுமந்த வண்ணத்துப் பூச்சிகள் ஜனித்து கொண்டே இருந்தது. இன்றும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த காணாத அரங்கவெளியில் அள்ளி முடித்த கூந்தலோடு காத்திருக்கும் ஸ்திரீமுக நடிகர்கள் முணுமுணுக்கிறார்கள் , கரங்களை நீட்டி அழைக்கின்றார்கள். அவர்கள் அழைப்பது மணல் உலகில் மறைந்த வடதேச நதியின் யுவதி களைத்தானோ நதி தேடிப்போன வனஸ்திரீகளையா ... வனம் ... வனம் ... வனம் வனமாய் வருகின்றார்கள். 
வளையல்காரத் தெருவின் கனவு 
- ஆதியில் பள்ளத்தெரு பரஸ்திரீகள் கொடுத்துப்போன ஓவல் வடிவ பெல்ஜியக் கண்ணாடி வளையல்காரத் தெருவில் நெடுங்காலமாகவே இருக்கிறது. எல்லையற்ற காற்றின் மடிப்பில் புதையுண்டு போன குரல்களின் நினைவுகளை சிலந்திகள் கண்ணாடியின் முதுகில் வலைபின்னிக் கொண்டிருப்பது இரவில் மோப்பமிடும் எருகுப் பூனைகளுக்கே தெரியும். மேடையின் இரவுகளில் ஒப்பனை வாசத்துடன் துளிர்த்த நடிகைகளின் இசைக்குரல்கள் தூரக் காற்றில் ஒளிந்துகொண்டதைத் தேடிப்போன சாம்பல் பூனைகள் இன்னும் திரும்பவே இல்லை. எல்லா இரவுகளிலும் சுடருடன் கண்ணாடியில் முகம் மறைத்து நிற்கிறாள் அவள். மார்கழி மாத முன் இரவில் தடைசெய்யப்பட்ட நாடகத்தின் காதல் காட்சியை நிகழ்த்த ஸ்திரீ நடிகர்கள் மூவரும் தெருத்திருப்பமெங்கும் சப்தமிட்டு அவளைத் தேடுகிறார்கள். ஜட்கா வண்டிகள் தெருவைக் கடந்தபோது மூவரும் வெவ்வேறு திசையில் தானியங்களுடன் நிற்கிறார்கள் கண்ணாடியைச் சுற்றி. நீண்ட மௌனத்தில் அவள் 'தாயின் இமையீரம் பொதிந்த என் ஹிருதயத்துள் காப்பாற்றியுள்ள உன் வார்த்தைகளின் தானியம் எங்கே! "அவளை வணங்கி பாதத்தில் தானியங்களைப் பரப்பி கூந்தலை அவள் முன் விரிக்கின்றார்கள். புலப்படாத எம் தனிமையின் நிழல் திக்கற்ற தளிர்ப்பாதைகளில் தொடர்வதாகக் காற்றில் முகம் பதிக்கிறோம்". "எனச் சொன்ன ஸ்திரீபார்ட் நாகூர் பிச்சை மணல்வெளியில் விரல்கள் அலைபாய சுவற்றில் உடல் பதிக்கிறான். நீண்ட மௌனத்தில் சிறு கோழிக்கூட்டம் இவர்களைச் சுற்றியபடி மறைந்து கொள்கிறது. அவைகள் ' போன பாதையில் இறகுகள் உதிர்ந்து கொண்டே இருந்தது. 'நேசத்தின் இறகுகளை பத்திரப்படுத்தவே கண்ணாடியை சுமக்கின்றேன். சிலந்திகள் வலைபின்னும் என் கூந்தலைப் பார்த்தீர்களா"? மற்ற இருவரும் சட்டென நாகூர் பிச்சையின் முதுகில் முக முரச வெற்றிலைக் கறையோடு ஆர்மோனியம் வாசித்தபடி இரு பின் பாட்டுக்காரர்கள் மதில்களைச் சுற்றி சுற்றி மறைகிறார்கள், "உங்களை சந்திக்கும் தைரியம் எங்களுக்கு இல்லைதானே சொப்பன தேசத்தில் உங்களுடன் மட்டுமே வாழ்கிறோம். கனவின் பலம் சந்திப்பில் பலஹீனமடைகிறதே!. பேசவேண்டிய வார்தைகள் இருளின் திசாதிசைகள் நெடுகிலும் நட்சத்திரங்களுக்கு கதை சொன்னபடி மறைந்து விடுகிறதே!" முகம் திருப்பாமல் கண்ணாடியிடம் பேசுவதென என் திறந்த ஹிருதயமே உங்கள் பித்து மனம் மூவரின் நேசம் எனக்கு கை கூடுமானால்" 
. . மூவரும் கண்களை பொத்தியபடி அவளிடம் நெருங்கி நெருங்கி விலகுகிறார்கள். "எதையும் தீர்மானித்து விடவேண்டாம் தானே ஞாபகங்களின் வேதனை எங்களை மரண ஹிம்சைப்படுத்துதே! எமக்காக ஒருமுறை ஒரேயொருமுறை கண்ணாடி வெளியை முத்தமிட்டுக் கொள்ளுங்களேன்". நேசத்தால் துயரம் கொண்ட கண்ணாடிக்கு வவள் (மக்கம் தந்தபோது பெரும் பறவைக்கூட்டம் தெருவின் திசையெங்கும் அலைவுற்றது. "எம் தனிமை பலஹீனம் 
இதயத்தின் பசி எதை வைத்து உன்னை அடைவோம்", திடீரென மூவரும் தானியங்களை இமைகளில் பதித்தபடி ஆடியின் நிழல்பாதைக்குள் ஊர்ந்து மறைந்த பின்பும் கண்ணாடியே தனித்திருந்தது 
அதிசயத்தைப் பார்க்கத் துடிக்கும் குழந்தையைப்போல சேலையின் மடிப்பகளில் உதிரம் சொட் மாத்தில் மோதி மோதி இலைகளோடு மறைகிறார்கள் கண்ணாடிக்காரத் தெருவின் பெண்டுகர்கள். ஸ்திரீகளின் பெருமச்சால் பாசிநிறங்கொண்ட வளையல்காரத் தெருவில் உதிரும் இலைகளை பீங்கான் வளையல்கள் கோர்த்த திராட்சை நிறக்கைகள் தழுவிக் கொண்டிருந்தது. தெருவின் வளைவுகளிளெல்லாம் தென்படும் அறுங்கோணக் 
Soணாடியத்தான் நிஜமானதுத. 1 14 11 (தென்படும் முகங்கள்ட்வ ளுடையதுதானா? (தெருவன கா]] Aityாதெல்லாம் அவளேசிம்னிவிளக்கேந்தி வருகிறாள். மடிப்பு கொண்ட தருவில் விளக்கொளிபடர்ந்தபோது சலங்கைகள் நால்களுடன் தாவரப் பொம்மையேந்தி வருகிறார்கள் கள்ளப்பார்ட் நடிகர்கள். தெருவின் திசையெங்கும் கண்ணாடி ப.)ந்திருப்பதான உணர்வில் எல்லோரும் நின்றுவிட திருப் பார்க்கும் அவள் கண்களக்குள் மறைந்து கொள்கிறார்கள். |றைந்த பின்பும் அசைந்து கொண்டிருக்கும் ஒரு கண்ணாடியை அவள் தொட எல்லாக் கண்ணாடிகளும் நின்று விடுகிறது. பனிகசிந்த கண்ணாடியில் கைரேகை பதிந்தபோது உள்ளே காக்காய் சத்திரத்தூண்கள். கண்ணாடியைத் துடைக்க துடைக்க பத்திர பதில்களெங்கும் கேஸம் அனைத்துச் சுற்றும் கள்ளபார்ட் நடிகர்கள். சுருட்டிக்கட்டிய தன் ஏழடிக் கூந்தலை அவள Mத போது தெருவெங்கும் விதைகளுதிர்த்த காக்கைள் கரைந்தபடி ஆடியின் திசையில் மறைந்தது. கூந்தலைச்சுற்றி மண்டியிட்டிருக்கும் ஸ்திரீபார்ட் தூதுச் செட்டியார், நாகூர் பிச்சை, காளப்பாண்டி மூவரும் அள்ளி முடித்திருந்த தம் கேஸத்திற்குள்ளிருந்து தானியங்களை எடுத்து அவளிடம் கொடுத்தபோது நரிவேடமிட்ட நடிகர்கள் தரையில் முட்டி முட்டி ஊளையிட்டு மதில்களெங்கும் மோப்பமிட்டபடி அறுங்கோணக் கண்ணாடிகளை இழுத்து மறைகிறார்கள். 
மழைநாளின் மாலையில் இறுதி ஒத்திகைக்காண எகிப்திய நரம்பு வாத்தியத்துடன் நனைந்தபடி வளையல்காரத் தெருவில் நான். விரித்த கருப்புக்குடைகள் தூரத்தில் நகர்ந்து கொண்டே இருக்க பூக்காரப்பெண்களின் கூக்குரல்தெருவெங்கும் மிதக்கிறத. மழையின் ரூர் கல்பாவிய பாதையெங்கும் தேங்கிக் கிடந்தது. என் கருப்புக்கோட்டால் தலையை மறைத்து ஓடிக்கொண்டிருக்க இடதுபுறமோ வலதுபுறமோ தெரியவில்லை கரும்பச்சை உடையுடன் மரப்பிடிகொண்ட பனாரஸ்குடையுடன் எதிர்பட்டாள் அத்திராட்சை நிறப்பெண். "வாத்தியத்தின் அதிர்வே மழையாகியிருக்கிறது நனைய வேண்டாம் குடையுள் நிற்கும் மானை பார்த்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் ... நான்..... - சட்டென மழைநீரை பிடித்து அவன் முகத்தில் தெளித்து திரும்பிய சந்தில் மறைந்து கொண்டாள். அன்று இரவுமுழுவதும் குடையின்மானுடன் என்புலம்பல். மழைவெரித்தபின் குடையுடன் அவளை சந்திக்க தெருவெங்கும் அலைந்தேன். கோமாளிவேடமிட்ட பகல் வேடக்காரர்களிடம் கேட்க அவர்கள் முகம் வெட்கத்தில் சிவந்து சுவரில் புதைந்து கொண்டது. நகரம் உறங்கிய பிறகும் குடையுடன் அலைந்து கொண்டிருக்கிறேன். 
அவள் இதழ்களை முத்தம் கொண்ட கண்ணாடி நாள் 
ஒப்பனைகளைத்து அரங்கைவிட்டு மறைந்த பெண்வேட நடிகர்களின்வாசனை இன்னும்கண்ணாடியெங்கும் உஷ்ணம் கொள்கிறது. வயோதிகக்கண்ணாடியின் கோமாளி" என் இமைகளில் சுரக்கும் அலைகளின் நித்ய இசையை உனக்காகவே வைத்திருக்கிறேன் கனவின் நீலமலர்களோடு மறு ஒத்திகைக்கான பாடல் வரிகளை உன் மூச்சின் வெப்பமென சுமந்திருக்கிறேன் நடிக நடிகர்களற்ற இம்மேடையின் இரவில் முன்கனவில் சித்திரக்காரி கொடுத்துப்போன இறகு விசிறியோடு காத்திருக்கிறேன் உன் விரல்களின் உஷ்ணம் ஸ்பரிசிக்க. என் இருதயப் பலகையில் உன் வார்த்தைகளை பதித்து வைத்துள்ளேன். உன் முதல் தக்க இசைத்துளியின்பாஷையை என்சுவாச உயிராகவைத்திருக்கிறேன். நெகினோத்வாத்யம் அதிரும்பனிஇரவில் கண்தெரியா சிலமிகளின் பாதையை வருடி வருவேன் உதிர் இலைகளின் தேகம் தொட்டு . உன் துக்கத்தின் தூய்மையே தாய்ச்சுடரின் வார்தைகளாய் இருக்கிறது. கபடமற்ற உன் இமைகளுக்குள் என் நினைவுகளை புதைத்துக்கொள். கீத்தித் வாத்யம் அறந்து கொண்ட ஒத்திகை நாளில் என் அழுகையைத் தேற்ற ஒருவர் வராவிட்டாலும் உன் நினைவுகளோடு தானியக் கஞ்சியுள் முத்தமிட்டுக்கொண்டேன். மீட்பரின் பண்டிகை நாளில் நாடகம் முடிந்தபோது ஒப்பனையறையெங்கும் கரம்பதித்தழுச அந்த உமைப்பெண் யார் தெரியுமா? உனக்கு தெரிந்திருக்காது. அவள் என் சகோதரி, திராட்சை ரசமும் தானியங்களும் பெருகி இருக்கின்ற நாட்களில் அவள் துக்கத்திற்கான சங்கீத லிபிகளை கண்ணாடியின் மேடையில் இலைகளென உதிர்வு கொள்ள நடித்துக் கொண்டிருப்பேன். பெருமூச்சினால் இளைத்துப்போன என் சகோதரியை உன் பாடலால் கேற்றுவாயா? அவள் இருதயம் வியாகுலத்தின் உஷ்ண முத்தங்களால் நிரம்பியுள்ளது. அவளுக்காக நடிப்பின் கார்வெளியை முத்தமிட்டுக்கொள் என் நிலத்தின் முதல்கனியை உனக்குத் தருவேன். அவள் என் தைரியமும் தேமமானவள். அவள் பாதைகளில் சஞ்சலக்காற்று வீசுகிறது. காகங்கள் அலைவுகொண்ட வயல்நாளில் உன மாகாரிகள் பதிந்த இலைகளை அவர்கள் கிழித்தபோது உதிரம் சொட்டிய அவ்விலைகளை என் ஆத்ம பலத்திற்கு 
கென காளகப்பாஷாணப் பெட்டியின் மார்புக்குள் பத்திரப்படுத்தியுள்ளேன். நிர்விசாரமான இரவின் திக்கற்ற பொமதில் பெண்வேட நடிகனின் நாஅறுவுண்டபோது உஷ்ணபூமியை பிசைந்த அவளிடமிருந்து வார்த்தையற்ற பாலையே எழுந்தது. முடிக்கப்படாத நாடகம் பிரதியோடு ஆடியின் திசையெங்கும் சலங்கை அதிர மறைகிறாள் வந்து விடுவாளா உன்னிடம் மரக்கிளைகளில் சிக்கியிருக்கும் மின்மினிகளின் ஞாபகங்களில் நீ வருவாயென அவள் சொல்லியிருந்தாள். நாட்களையும் வருடங்களையும் வேதனையால் கழுவிக் கொண்டிருக்கிறேன் 'ஸ்திய கொள்ளும் தேகவெளியில் சகோதரியின் ஞாபகம் சுமந்து காத்திருக்கிறேன். 

"ஒரு நூற்றாண்டுத் தன்மை" காப்ரியல் கார் ஸியா மார்க்வெஸ் நாவலில் . . . 
மொழிப் பெயர் வும் கால்வழி மரபு வரலாறும் 
அனிபல் கோன்ஜலெஸ் 
மார்க்வெஸின் 'ஒரு நூற்றாண்டுத் தனிமை' (One Hundred Years of Solititude) நாவல் குறித்துரைக்கும் பல சங்கதிகளில் மொழிப்பெயர்வும் (Translation) ஒன்று. மொழிப்பெயர்வானது இக்குறிப்பிட்ட நாவலுடன் தொடர்புற்று இருப்பதோடு, நாவலிலக்கிய பாணியுடனும் தொடர்புற்றிருக்கிறது. உண்மையில் சில விமர்சகர்கள், இவ்நாவலின் நிகழ்ச்சிப்போக்கு, மெல்கியூவாடெஸின் தீர்க்க தரிசனமிக்க கையெழுத்துப் பிரதியில் குழுஉக்குறிகளை மறைவிடுத்து எழுதிய நிகழ்முறையோடு தவிர்க்கவியாலாபடிக்கு தொடர்பு கொண்டுள்ளதை காணத்தவறிவிட்டார்கள். அத்தகைய குழுஉக்குறிகள் மொழிப்பெயர்வை உள்ளடக்கியவையாகும். ஆனால் இந்த நோக்கில் நாவல் குறித்து - அளிக்கப்படும் விளக்கமானது, மொழிப்பெயர்வு அதனளவில் செயற்படுமுறையை உய்த்துணரும்படி சொல்வதற்கு சொற்ப கவனத்தையே கொண்டிருந்தால், அது வாசிப்புத் தத்துவங்களையும் எழுத்தின் தன்மை பற்றிய மிகப் பொதுவான கேள்விகளையும் சுற்றிச் சுழலவே நேரிட்டது. 
மேலும், இந்நாவலது பொருத்தப்பாட்டின் (Context) மொழிப்பெயர்வில் பொதிந்திருப்பவை, சமகாலத்திய பகம்வாய்ந்த லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை ஊடுருவிப் பார்க்கும் கண்ணோட்டங்களை மட்டுமல்ல; இலக்கிய வரலாற்றில் மொழிப்பெயர்வின் பங்கையும் நாவலிலக்கிய பாணியின் அமைப்பையும் உள்ளுடி நோக்கும் நுண்ணறிவையும் நமக்களிக்கிறது. மொழிப்பெயர்வெனும் விவாதக்கூறை மிகத் தெளிவாகச் சுட்டுவதன்முலமும், அதை மற்ற அடிப்படையான விவாதக்கூறுகளான கால்வழிமரபு வரலாற்றுடனும் (genealogy), முறைதகாப்புணர்ச்சியை (incest) தடை செய்தலுடனும் தொடர்புபடுத்துவதன் மூலமும் மொழிப்பெயர்வு நாவலிலக்கிய பாணியின் முடிவுறுதியற்ற சிக்கலான தன்மையின் இதயமையத்தில் உள்ளார்ந்து இருப்பதையும், சற்றும் விளக்கவியலா இலக்கிய பாணிகளின் தனிச்சிறப்புப் பண்புகளை விளக்கத் துணையாகும் திறவுகோலாக அது செயற்படுவதையும் " ஒரு நூற்றாண்டுத் தனிமை" குறிப்பறிவிக்கிறது. 
இந்நாவலின் பனுவலில் (text) மொழிப்பெயர்வுக் காட்சிகளும், அந்நிய்மொழிகளை அறிவதற்கும் பேசுவதற்கமான குறிப்புகளும் ஏராளமாய் மல்கியிருக்கின்றன. இப்போதைக்கு நாவலின் பனுவலிலுள்ள மிகக் கர்த்திமிக்க மொழிப்பெயர்வுகளில் சில எடுத்துக்காட்டுகளையும், அவற்றுக்குரிய மறைக்குறிப்புகளையும் (allusions) - சதா கிறேன். இவை பற்றிய விளக்கமான கருத்துரைகளை பின்னர் சொல்வேன். மொழிப்பெயர்வுக்குரிய முதல் நேரடியான மறைக்குறிப்பு இந்நாவலில் இரண்டாவது அத்தியாயத்தில், ஜோஸ் அர்காடியோ ஜிப்ஸி பெண்ணுடன் படுக்கைக்கு செல்லும்போது இடம்பெறுகிறது : 
"ஜோஸ் அர்காடியோ தான் மேலே செந்தூக்காய் உயர்த்தப்படுவதாக உணர்ந்தான். தெய்வீக காண்டுதலுறும் திசைக்கு நகரும் காற்றின் அந்தரத்தில் மிதந்தபடியிருந்த அவன் இதயத்தின் முன்புறம் திறந்து கனிந்த அன்பின் நயமற்ற நாற்றம் பொழிந்துப் படர்ந்தது. அந்த ஜிப்ஸி பெண்ணின் காதுகளுள் புகுந்தூர்ந்துச் சென்ற அவன் அவளின் மொழியாகப் பெயர்ந்து அவள் வாயதரம் திறந்து வெளிப்பட்டான்" (பக்.36) 
அம் மூன்றாவது அத்தியாயத்தில், அர்காடியோவையும் அமரந்தாவையும் பேணி வளர்த்து வருபவளான, உறக்கமின்மை எனும் கொள்ளை நோய் அணுகாத மக்கோண்டாவை சென்றடைந்த குவாஜிரோ இந்தியப் பெண்மணியான விஷிட்டாசியோன், "ஸ்பானிஷ் மொழிக்கு முன்னிலையில் பதிலை குவாஜிரோமொழியில் பேசவந்தாள் (பக். 39) "இந்திய மேலங்கிகளைகைகொள்வதற்காக நாள்முழுதும் அங்குமிங்கும் திரிந்த அவர்கள் மனதில் குவாஜிரோ மொழியில்தான் பேச வேண்டும், ஒருபோதும் ஸ்பானிஷில் கூடாதென்ற பிடிவாதம் உறைந்திருந்தது' (பக். 4) 
- ரிபெக்கா கைக்கொண்ட தனது பெற்றோரது எலும்புகளின் 'கிளிக்' ஒலிகள் சகிதம் வந்து சேர்ந்த போது அவளும் குவாஜிரோ மொழியில் பேசத் துவங்கினாள், மண்ணைத் தின்னும் அவளது தீயொழுக்கத்திற்கு மாற்றாக கொஞ்சம் மருந்தை அவளுக்குத் தர ஊர்சுளா முயன்றபோது, "ரியெக்கா கௌவிகடித்துத் துப்பும் தனது செய்கைக்கு இடையிடையே விசித்திரமான குறியீட்டுச் சித்திரபாஷையில் ஊர்சுளாவிற்கு பதிலளித்தாள். நயநாகரிகமற்ற இந்தியர்களுக்கு ஒத்திசைய அமைந்த அவள் பதில் பரவும் இழிந்த நாற்றத்தை எவ்வொருவரும் அவரது மொழியில் கற்பனையாக நுகர்ந்தறிய முடியும்" (பக். 43) 
கொள்ளைநோயான உறக்கமின்மை நிலவிய காலத்தில் , சற்றே தாமதமாய் மொழியிழப்பும் மொழிமீட்பும் பெருமளவில் நிகழ்ந்தது, அதனூடாக நினைவிழப்பும் நேரிட்டது (பக். 45 = 9) 
* மேலும், இந்நாவலில் மொழிப்பெயர்வுடன் தொடர்புடைய மிகத் தனச்சிறப்பான கிளைக்கதை மெல்கியூவாடெஸின் இறுதி நாட்கள் பற்றியதாகும். அப்போது மிகத் தளர்ந்த வயோதிகத்தை தொட்டிருந்த அவர் கேள்விகளுக்கு படுசிக்கலான கலவைக் கதம்ப மொழியில் பதில் பகர்வார்" (பக். எம். அவ்வாறிருந்த காலத்திலேயே அவர் விசித்திரப் பூடகப் புதிர் இலக்கியப் படைப்பொன்றை எழுதி வந்தார் (பக், 68). மெல்கியூவாடெஸ் தமக்குத் தாமே கூட்டவியலாக்கும் தனி மொழிகளில் அவர் சொல்வதெல்லாம் தன் புரிவுக்கு புலப்பட்டுவிட்டதாக ஒரு சமயத்தில் எண்ணும் அவரெலியனோ அத்தனி மொழிகளில் கவனம் செலுத்துபவராகிறார். ஆனால் உண்மையில், பாறைப்பாங்காய் எழுதப்பட்ட அந்தப் பத்திகளில் சுத்தியை விடாப்பிடியாக ஊன்றி அழுத்தமாய்ச் செலுத்தி செலுத்தி செதுங்கி தனிப்பட வெளித்தெரியும் விஷயம் equinox, equinox, equinox என்ற சொல்லும், அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் என்ற பெயரும் தான் (பக். 68). 
அதே கிளைக்கதையில், மெல்கியூவாடெஸ், ஊடுருவி கருத்தேற்க இடந்தராத தனது எழுத்தின் பலபக்கங்களை உற்றுக் கேட்க அவரெலியனோவை ஆட்படுத்தினார். புரியாத போதிலும், உரக்க வாசிக்கப்படும் போது அது இன்னிசைக் கமகங்கள் இழையும் சுற்றுக் கடிதங்களைப்பார்வையிடுவது போலிருப்பதாய் அவரெலியனோ உணர்ந்தார் (பக். 68) இங்கே நாம் மெல்கிபபூவாடெஸால் மறைபுதிராய் பொறித்துவைக்கப்பட்ட எழுத்துமுலங்களோடு. புயெண்டியா இடையறாது போராடுவதன் தொடர்வரிசையைக் காண்கிறோம். இப்போராட்டம் மெல்கியூவாடெஸின் கையெழுத்து பிரதியிலிருக்கும் மறைகுறியெழுத்து மூலங்களுக்கெல்லாம் இறுதியான பொருள் விளக்கம் கூறும் நிலை வரை உச்சமடைந்துச் செல்கிறது. 
இந்நாவலில் மற்றொரு தனிச்சிறப்பான கிளைக்கதை ஜோஸ் அகார்டியோ புயெண்டியாவின் அறிவுதிறம்பிய தன்னிலை மறந்த நிலை பற்றியதாகும். இந்நிலையில் மலர் ஸ்பானிஷில் பேசுவது வெகுநேரம் நீடித்திருக்கவில்லை. மாறாக, புரிவுணர்வை சற்றும் எட்டாத புதிர்மொழியை அவர் சரளமாக உரத்தொலித்துப் பேசினார் (பக். 74). அதுவே பின்னர் லத்தீனாக உருமாறி வெளிப்பட்டிருக்க வேண்டும் (பக். 77 - 8). 
:) 
இந்நாவலில் தனிமுறையான வரையுருவச் சித்திரக்கலை (grahpic) - இப்படிச் சொல்லலாம் என்றால் - சார்ந்த மொழிப்பன்மைக்குரிய சான்றாதாரம், இளைஞரான ஜோஸ் அகார்டியோவின் மிகப்பெரிய ஆண்குறியாக வர்ணிக்கப்படுகிறது. "நீலமும் சிவப்பும் ஒன்றுடனொன்றாக பின்னிப் பிணைந்து நிறங்குழம்பிய பல்வேறு மொழிகளின் சொற்களால் பச்சைக் குத்தப்பட்ட அவரின் ஆண்குறி பச்சையெழுத்துக்களால் முற்றிலும் மூடி மறைக்கப்பட்டிருந்தது" (பக் - 84) 
இதற்கு மாறுபாடான காட்சியாக, இந்நாவலில் பண்டைய செம்மொழி பாணியில் ஊடாடும் மொழிப்பெயர்வு : "பெட்ரார்ச்சின் உணர்ச்சி நுரைத்தும்பிய ஈரேழ்வரிப்பா விறிசைக் கீதங்கள் அவரின் ஆழ்ஹிருதய மொழிரீதியில் 'அமரந்தாவிற்காக உருமாறிப் பெயரும் கதியிலிலங்கும்" (பக். 97) 
ஜோஸ் அகார்டியோவின் மகனும், பிலர் டெனெராவுக்கு இளையவனும், தன்னிச்சையாய 
ன அாகாடியோதான் அவன் குடும்பத்தில் மெல்கியூவாடெஸின் எழுத்துப்பிரதிகளில் பொதிந்திருக்கும் ஐ"யெழுத்து மூலங்களுக்கு பொருள் விளக்கம் கண்டுணர முயன்ற முதலாமவன் என்பது கவனத்தை ஈர்க்கும் 
ம. விஷிட்டாசியோன் மற்றும் காட்டவருடன் அவர்கள் மொழியில் பேசிப் பகிர்ந்ததைவிட மேம்பட்டு அம்மொழியை கிரகித்து அவன் தொடர்புற வேறெந்த நபரும் இல்லாமல் தோல்வியெய்தினான். மெல்லி மட்டும்தான் அவனை மதித்து உறவாடினார். புரியாத தன் புதிர்மொழிப் பனுவல்களின் வாசிப்பை செவியுறவும், பாதர்ஸ் ஆவி மூலம் நிழற்படமெடுக்கும் கலை சார்ந்த பாடங்களைக் கற்கவும் அவனை அவர் ஆட்படுத்தியே. 22"""""" தனிமையில் அவன் அழுத ரகஸிய கண்ணீர் எவ்வளவென கற்பனையில் கூட எவராலும் காணமுடியாது. புரியாப் புதிர்மொழிப் பிரதிகளை வாசித்தறியும் வீணார்வத்தோடு மெல்கியூவாடெஸிற்கு புனர்ஜென்மம் அளிக்க முயன்று - 
முயன்று களைத்துச் சோர்ந்த அவன் நம்பிக்கையிழந்துப் போனான் (பக். 100) 
மெல்கியூவாடெஸின் கையெழுத்துப் பிரதி மீதான இரண்டாவது உணர்ச்சிமிக்க மோதலை அவ்ரெலியனோ செகுண்டோ நடத்துகிறார். ஒரு புத்தகத்தை (தலைப்பு குறிப்பிடவில்லை என்றாலும், அது ஐயத்திற்கிடமின்றி ' அரேபிய இரவுகள்' என்ற நூல்தான்) படித்தபிறகே இம்மோதலை மேற்கொள்கிறார். கையெழுத்துப் பிரதிகளில் ஆர்ந்திருக்கும் மறைக்குறியீட்டின் குறிப்பு கண்டுணர, அவ்விதம் கண்டுணர்வது சாத்தியமில்லை என்பதை கண்டுணரவே அவர் முனைகிறார். அவ்வெழுத்துகள் கம்பியில் உலர்வதற்காக தொங்கவிடப்பட்டிருக்கும் துணிகளைப் போலவும், அவை எழுத்துக்கள் என்பதைக் காட்டிலும் மிகையாய் இசைக்குறிப்புகள் போலவும் காட்சியளிக்கின்றன (பக். 161). பிறகு மெல்கியூவாடெஸ் அவன் முன்தோன்றி தனது அனுபவமிக்க அறிவாழத்துள் அவனைச் செலுத்த முயன்றார் என்றாலும் தனது கையெழுத்துப் பிரதிகளை மொழிப்பெயர்த்துக் கூற மறுத்துவிட்டார். "ஒரு நூறு வயதை தொடும் வரை, அவற்றின் அர்த்தமானங்கள் புரிந்து அறிவுறுவது எவ்வொருவருக்கும் சாத்தியமில்லை" என்று விளக்கமளித்தார் (பக். 161). 
* புயெண்டியா கால்வழியில் இரண்டாவது தலைமுறையான ஜோஸ் அர்காடியோ செகுண்டோ கையெழுத்துப் பிரதிகளை அறிவுறுவதற்காகவே தன்னை அர்ப்பணம் செய்து, மறைகுறியெழுத்து மூலங்களை கண்டுணர்வதில், 
பாபிலோனா அப்பிரதிகளிலிருக்கும் குழுஉக்குறிச் சொற்கோவைகளில் மேலாட்சி செய்து நகக்கீறல் வடுக்களை ஏற்படுத்துவதற்கு முன்பாக வெகுதூரம் முன்னேறி வந்தார். தோல்களில் எழுதப்பட்ட மறைபுதிரான எழுத்துக்களை இனவாரியாக வகைப்படுத்துவதில் இறங்கினார். அவை நாற்பத்தியேழு முதல் ஐம்பத்து மூன்று பண்புருவடிவங்கள் வரையிலான நெடுங்கணக்கை ஒத்திருப்பதாகவும், இந்த உருவடிவங்களை தனித்தனியே பிரித்தால் அவை எழுதுகோலின் கீறுதடங்களாய் கிறுக்கல்களாய் மிஞ்சுவதாகவும், மெல்கியூவாடெஸின் அழகிய கையெழுத்தில் அவை கம்பியில் உலத்துவதற்காக தொங்கவிடப்பட்ட துணிகள் போலிருப்பதாகவும் அவர் ஐயத்திறகிடமின்றி முடிவுக்கு வந்தார். 
பின் 
இறுதியாய், கையெழுத்தேட்டில் மெல்கியூவாடெஸ் எழுதிய பனுவலில் அமைந்திருக்கும் மொழி சமஸ்கிருதம் என்று அவ்ரெலியனோ கண்டுபிடித்தாள் (பக். 301). ஆனால் அது இன்னும் போதுமானதாக இல்லை, "ஏனெனில் ஸ்பானிஷில் அமைந்த பனுவல் எந்த அர்த்தத்தையும் வரித்திருக்கவில்லை; ஏட்டின் வரிகள் எல்லாம் குழுஉக்குறிச் சொற்கோவைகளால் ஆனவையாக உள்ளன (பக். 307). இவ்விதம், ஆங்கிலம், பிரெஞ்சு, கொஞ்சம் லத்தீன், கிரேக்கம் . இவற்றைக் கற்றறிந்ததிற்கு எதிர்மாறாக கூடுதலாய் சமஸ்கிருதமும். கற்க வேண்டும் (பக். 322). பனுவலின் அர்த்தத்தை கண்டுணரத் துணையாகும் திறவுகோலை இன்னம் அவ்ரெலியனோ கைவரப் பெறாமலிக்கிறார். அந்த திறவுகோல் பனுவலில் காணப்பெறவில்லை; ஆனால் இனமறியப்படாத ஏதோ ஒன்றில் பனுவலை ஒத்தத்தன்மை புலப்படுகிறது; ' அவரின் பன்றிவாலுடைய குழந்தை உடலைப் பெற்றெடுத்த அமரந்தா ஊர்சுளா பச்சையீரம் உலர்ந்து காற்றூதிய தோல் பையாக (பக். 349), மெல்கியூவாடெஸ் தீட்டிய தோல் எழுத்தேடுகளை ஒத்தமாதிரியாய் தோற்றமளித்தாள். 
2. சகிப்பெயர்வக் காட்சிகளையும், அந்நிய மொழிகள் ஊடாடும் மறைக்குறிப்புகளையும் சான்றிடும் என் 
• மேற்கோள்கள் முனைப்பாய் குறிப்பறிவிப்பது யாதெனில், மொழிப்பெயர்வெனும் விவாதக்கூறு உருவமைக்கும் நுண்இழை நாவலினூடாக தங்குதடையின்றி படர்ந்து பரவிச் சென்று, நாவல் முரணற்ற இசைவிணைவுத் தன்மையுடன் கலங்கத் துணைபுரிகிறது. மெல்கியூவாடெஸின் கையெழுத்துப்பிரதிகள் கடைசியில் மொழிப்பெயர்க்கப்பட்டு 
முக்கோண்டாவின் வரலாறு முன்னரே அறுதியிட்டு அமைச்சப்பட்டதன்மை திரைநீங்கி வெளிப்படும் தருணத்தை நோக்கி நாவலின் கதை நிகழ்வுகள் வசப்படாதவகையில் நகர்வது கண்கூடு. இந்நாவலில் இடம்பெறும் மொழிப்பொடி* சான்றுகள் அல்லது அந்நிய மொழியிலிருந்து சட்டப்பெற்ற ஒவ்வொன்றும் பயண இலக்கையும், முற்பு+: ??? நிகழ்வுகளை கற்பனையுருப்படுத்தலையும் நோக்கி படிப்படியாக முன்னேறுகிறது. - 
1:21+4+'}'' 
- இரண்டாவதாக, இந்நாவலில் மொழிப்பெயர்வும் கால்வழி மரபு வரலாறும் ஒன்றுக்கொன்று இசைவாய 
பொக்கில் இயங்குவதை நாம் காணமுடியும்: கையெழுத்துப் பிரதிகளை மொழிப்பெயர்க்கும் கடமைப் பொறுப்பு ஒரு தலைமுறையினின்று அதற்கடுத்த தலைமுறையின் தேர்ந்தெடுத்த அங்க்த்தனா க' ஒப்படைக்கப்பட்டு - இதற்கும் கையெழுத்துப் பிரதிகளின் விசித்திரப் புதிரை விடுவிப்பதற்காக தவரமாய ப" பொருத்தமானவர்கள் முன் மெல்கியூவாடெஸின் ஆவி தோன்றுவதற்கும் குறிக்கத்தக்க மாறுதல் ஏதுமற்ற 3" காலங்காலமாய் மொழிப்பெயர்ப்பு முயற்சிவிடாது நீள்கிறது. 
- இதுவரை நான் எழுத்துப்பேறின் நோக்கு நிலையிலிருந்து இந்நாவலின் மொழிப்பெயர்வு குறித்தான ஆயவை குறுகிய எல்லைக்குட்பட்டு பரிசீலித்து வந்தேன். இப்போது நான் நாவலின் அகல்விரிவான' பொருத்தப்பாட்டில் மொழிப்பெயர்வின் அர்த்தம் என்னவென்று ஆழ்ந்தாராயத் தொடங்குகிறேன். "ஒரு நூற்றாண்டுத் தனிமையில்" ஏன் மொழிப்பெயர்வு எடுப்பாய் மேலோங்கி வெளிப்படுகிறது? எது மொழிப்பெயர்வை மிக முக்கியமானதாய் ஆகும்படிச் செய்கிறது? கால்வழி மரபு வரலாற்றுடனும் முறைதகாப்புணர்ச்சியை தடை செய்தலுடனும் மொழிப்பெயர்வுக்குள்ள உறவு என்ன ? 
, '' - 
, - . . . - - - - 
- - 
உறவு என்ன? 
இந்தக் கேள்விகளுக்கு பதிலிட முயல்வதற்கு அத்யாவசியமானது என்னவெனில், முதலில் நாம் மொழிப்பெயர்வுக் கருத்தியலின் பொருத்தப்பாட்டில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தனிவகையாகப் பிரித்து வரையறுத்த, கோட்பாட்டியலான மூன்று கருத்தறிவிப்புகள் "ஒரு நூற்றாண்டுத் தனிமை" நாவலுடனான எத்தகைய வாசிப்புக்கும் பொருத்தமானவையாக அமையுமென நான் நம்புகிறேன். இந்த மூன்றில் (காலவரிசைப்படி) முதலாவதான கருத்தறிவிப்பு வால்டர் பெஞ்சமினுடையதாகும். 
IITனெ 
" "மொழிப்பெயர்பாளரின் கடமைப்பணி" என்ற கட்டுரையில் பெஞ்சமின் மொழிப்பெயர்வு குறித்து சில கருத்துகோள்களை முன்வைக்கிறார். அவரைப் பொறுத்தவரை, மொழிப்பெயர்வுச் செயற்பாடு தூயத் தனிநிலை மொழிக்கான (Pure Language) தேடலை உள்ளடக்கியுள்ளது; அதாவது, மொழி நீண்டகாலத்திற்கு ஒரு வழிவகையாகவோ எதையேனும் வெளிப்படுத்துவதாகவோ நீடிக்காது: மாறாக, உணர்ச்சிவெளித்தலல்லாத சிருஷ்டிகரமான சொல்லாக எஞ்சி, அது எல்லா மொழிகளுக்கும் உரியதாகிவிடும். மொழிப்பெயர்வு நிகழ்முறையை இலக்கிய சிருஷ்டித்தன்மைக்கு உயிராதாரமான ஆக்கக் கூறாக பெஞ்சமின் காண்கிறார்: "மொழிப்பெயர்வானது இந்த நேரம் வரை இரண்டு இறந்த மொழிகளின் மலடான சரி ஒப்பு நிலையை குறித்தமைவிலிருந்து விலகி, அனைத்து மொழிவடிவங்களின் கால்வழி மரபை ஒட்டி அமைவதாகி, அது மூலமொழியின் முழுவளர்ச்சி நோக்கி நகரும் நிகழ்முறையின் முதிர்வை எதிர்பார்த்து விழிப்புடனிருக்கும் பணித்திட்டத்தைப் பொறுப்பேற்று, அது அதன் தனிப்பட்ட கடும் வேதனைகளினுடாக பிரசவிக்கிறது" . 
மொழிப்பெயர்வின் முடிவுறுதியற்ற சிக்கலானத் தன்மையை பெஞ்சமின் நவ - ஹெகலிய முறையில் அணுகி இலக்கியம் மற்றும் கலையின் உயிராதாரமான உட்கருத்தாய் மொழிப்பெயர்வு செயல்பட வேண்டுமென்றும் மொழிப்பெயர்வின் கருத்துருவம் அறிவெல்லை கடந்த அக வெளிப்பாட்டு நிலை நோக்கி இயக்கங்கொள்ள வேண்டுமென்றும் வற்புறுத்துகிறார். வரலாற்று நிகழ்முறையைப் பின்பற்றியோ அல்லது இன்னங் கூடுதலான துல்லியத்துடனோ மொழிநூல் அடிப்படையிலான ஆய்வினூடாகாவும், "மொழிகளின் மையமான ரத்த உறவுமுறையை" 
ஆராய்வதனுாடாகவும் முன் வகுத்தமைவு. இதுவரை முரண்கள் நீங்கிய இணக்கம் அணுகவியலாக ஆட்சியெல்ல மொழிகளின் நிறைவான முழுவினை முறை ஆகியவை தொடர்பான பார்வையை மொழிப்பெயர்வு எய்தப்பெறுவதாய் பெஞ்சமின் காண்கிறார். 
அவரின் சொற்படி, மொழிப்பெயர்வானது மொழிகளுக்கிடையில் இறுதியாக மைய உறவை வெளிப்படுத்தும் செயல்நோக்கம் ஈடேற உதவுகிறது. ஒருவேளை அ? 
து மொழிகளுக்கிடையில் இறுதியாக மையமான பரஸ்பரமான 
வெளிப்படுத்தவோ நிலைநிறுத்தவோ முடியாமல் போகலாம். ஆனால் 
'கேம் ஈடேற உதவுகிறது. ஒருவேளை அதனால் இம்மறைமுக உறவை . 
நிறுத்தவோ முடியாமல் போகலாம். ஆனால் அது கருநிலையான அல்லது முனைப்பான வடிவத்தில் அவ்வுறவை கைகூடச் செய்வதன் மூலம் புறவுருப்படுத்திக் காட்டுகிறது. மொழ" ரத்த உறவுமுறையை மெய்ப்பித்துக் காட்டுவதாய் சொல்லப்படும் இந்தக் கருத்து மொழிப்பெயாதொன் 
முலம்புறவுருப்படுத்திக் காட்டுகிறது. மொழிப்பெயர்வானது மொழிகளின் 
தாய் சொல்லப்படும் இந்தக் கருத்து மொழிப்பெயர்வானது மொழிகளின் ரத்த உறவுமுறையை மெய்ப்பித்துக் காட்டுவதாய் சொல்லப்படும் இந்தக் கருத்து மொழிப்பெயர், 
காட்டுவதாய் சொல்லப்படும் இந்தக் கருத்து மொழிப்பெயர்வு குறித்த மரபான டம்பெறும் பொதுவான கருத்துதான் என்று கூறும் பெஞ்சமின் இன்னும் ஒருபடி மேற்செல்கிறார் : பச்சுமொழிகள் மற்றும் எழுத்தாளரின் உள்நோக்கங்கள் ஆகியவற்றால் வலிந்துச் சுமத்தப்படும் தற்செயலான மாறுபாடுகளிலிருந்து விடுதலைப் பெற்ற ஓர் தொடர்புறவுச் சாரத்தின், அதாவது தூயத் தம் மொழியின் இருப்பை, உண்மையில் மொழிப்பெயர்வானது முன்னறிவிப்பதாய் பெஞ்சமின் குறிப்பிடுகிறார். 
நீண்ட காலத்திற்கு ஒரு வழிவகையாகவோ எதையேனும் வெளிப்படுத்துவதாகவோ நீடிக்காமல். மாறாக, உணர்ச்சி வெளித்தலல்லாத சிருஷ்டிகரமான சொல்லாக எஞ்சி, அது எல்லா மொழிகளுக்கும் உரியதாகிவிடுகிற தூயத் தனிநிலை மொழியுள் எல்லாத் தகவல்களும் எல்லா உணர்வுகளும் எல்லா உள்நோக்கங்களும், அவை முன்பே வகுத்தமைக்கப்பட்ட - துடைத்தழிக்கப்பட வேண்டியதான - சமூகத்தர நிலை அடுக்கை பகைமையோடு எதிர்த்து நிற்கின்றன." அறிவெல்லை கடந்த அகவெளிப்பாடான, களைநீக்கி விடுவிக்கும் மீட்பாளர் சார்பான கருத்தில் மதக் கருத்துச் சாயல்களும் வந்து கவிந்து, "புனிதப் பனுவல்களின் விவிலிய வாசகங்கள் தங்குதடையின்றி மொழிப்பெயர்க்கக் கூடியவை; ஏனெனில் அவற்றுள் உண்மையுடன் அல்லது சமயக் கொள்கையுடன் பனுவலானது . எல்லாக் கூறுகளிலும் முழுதொத்த நிலையைக் கொண்டுள்ளது" எனச் சொல்லிச் செல்கிறார் பெஞ்சமின். 
(அடுத்த இதழில் முற்றும்) 
தமிழ்ப்பெயர்வு : சௌந்தர்யவல்லி 
பின்குறிப்பு : 
பியெனஸ் அயர்ஸிலிருந்து 1973 இல் வெளியிடப்பட்ட காப்ரியல் கார் ஸியா மார்க்வெஸின் "ஒரு நூற்றாண்டுத் தனிமை' நாவலின் சுடமெரிக்கானா பதிப்பிலிருந்து இக்கட்டுரைக்கான மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.


சந்திப்பு 

ஜோர்ஜ் லூயி போர்ஹே 
தன் சூழலை மறக்கவோ அன்றைய மாலைப் பொழுதுக்கான விஷயத்தை சேகரிக்கவோதான் எந்த ஒருவரும் காலைத் தினசரியைப் புரட்டுகிறார், எனவே, ஒருகாலத்தில் மிகவும் பேசப்பட்ட புகழ்பெற்ற மேன்கோ உரியார்டி - டங்கன் விவகாரத்தை யாரும் நினைத்திருக்கவில்லை, அல்லது கனவில் நிகழ்ந்ததாக நினைத்திருக்கிறார் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மேலும் சம்பவம் நிகழ்ந்தது வால் நட்சத்திரம் தோன்றிய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட 1910 இல் அதன்பின்னர் நிறைய நிகழ்ந்துள்ளன, நிறைய மறைந்துள்ளன, வீரர் இருவரும் இறந்துவிட்டனர்; சம்பவத்தை கண்டவர்கள் மௌனம் சாதித்தனர். சம்பவத்தின் முக்கியத்துவத்தை எனது ஒன்பது பத்தாண்டுகளுக்குரிய புனைவியல் தீவிரத்துடன் உணர்ந்து படைப்பாக்கம் வாக்குறுதிக்கு நானும் கை உயர்த்தினேன். நான் வாக்களித்திருந்ததை மற்றவர்கள் கவனித்தனரா என்று தெரியாது; தமது வாக்கினை நிறைவேற்றினரா என்று தெரியாது; எப்படியாயினும் காலமும் நல்ல / மோசமான எழுத்தும் உருவாக்கிய தவிர்க்கவியலாத மாறுதல்கள் சேர்ந்த கதையை இதோ முன்வைக்கின்றேன். 
அன்று மாலை லாரல்ஸ் எனும் இல்லத்தில் நடந்த விருந்துக்கு என் அத்தை மகன் லாஃபினர் என்னைக் கூட்டிப் போயிருந்தான். அது எங்கேயிருக்கிறது என்று சரிவரச் சொல்ல இயலாது, பரந்து கிடக்கும் போனஸ் அயர்ஸ் மற்றும் அதனைச் சூழ்ந்திருக்கும் சமவெளியுடன் எந்த தொடர்புமற்று ஆற்றோரமாகச் சரிந்து, நிழல் கவிந்தும் நிசப்தமாயும் நிலவும் வடக்குப்புறநகரங்கள் எதனையாவது வைத்துக் கொள்ளலாம். எனக்கு முடிவற்றதாகத் தோன்றியது இந்த இரயில் பயணம் - குழந்தைகளுக்கு நேரம் மெதுவாய்ப் போகும் என்பது நன்கறிந்ததே. 
அ அக்கிராமத்தின் பிரதான வாயிலைக் கடக்கும்போதே இருட்டிவிட்டது. இங்கே புராதனமானதும் பிரகிருதியுமான விசயங்களெல்லாம் இருந்ததாக உணர்ந்தேன் : பொன்னிறத்தில் வெந்துவரும் கறியின் வாசனை, மரங்கள், நாய்கள், விறகுக்கட்டைகள் மற்றும் மனிதரை ஒன்றுகூட்டும் கணப்பு. விருந்தினர் சுமார் ஒரு டஜன் இருப்பார்கள்; எல்லாரும் பெரியவர்கள் அவர்களில் முத்தவருக்கு இன்னம் முப்பதாயிருக்கவில்லை என்பதை பின்னர் அறிந்தேன், நான் இன்னம் கத்துக்குட்டியாயிருக்கும் விஷயங்களிலும் அவர்கள் கற்றுத் தேர்ந்திருந்ததை சீக்கிரமே கண்டு கொண்டேன். 
பந்தயக் குதிரைகள், தேர்ந்த தையல்காரர்கள், மோட்டார் வாகனங்கள், அதிகச் செலவுபிடிக்கும் வேசிகள் என்பவை அவை. யாரும் என் கூச்சத்தைப் போக்கவில்லை, என்மீது கவனம் கொள்ளவில்லை. மெதுவாய் கவனமாய் தயாரிக்கப்படும் ஆட்டுக்கறி பெரிய விருந்துமண்டபத்தில் எங்களை வெகுநேரம் தங்க வைத்திருந்தது. நிலவறையில் ஒயின் வைக்கப்பட்ட நாள் குறித்து வாக்குவாதம் நடந்தது; கிடார் ஒன்றிருந்தது; என் நினைவு சரியாயிருந்தால், அந்தக் கிடாரில் உருகுவேயின் குதிரை வீரர் பற்றிய எலியர்ஸ் ரெகுலேஸின் இரு இசைப்பாடல்களையும் ஜீனின் தெருவிலுள்ள வேசியர் இல்லத்தில் நடந்த கத்திச் சண்டை பற்றி சில நாட்டுப்புற பாடல்களையும் என் அத்தைமகன் இசைத்தான். காஃபியும் ஹவானா சுருட்டுகளும் வரவழைக்கப்பட்டன. திரும்புவது பற்றி ஒரு வார்த்தையம் சொல்லப்படவில்லை. திடீரென மிகவும் தாமதமாகிவிட்டதான அச்சத்தை (கவிஞர் லுகோனஸின் வார்த்தைகளில் உணர்ந்தேன், கடிகாரத்தை பார்க்கத் துணியவில்லை. பெரியவர்களிடையே எனது தனிமையை கொள்வதற்காக - விருப்பமின்றியே - ஒபின் கிளாஸ்கள் ஒன்றிரண்டைக் காலி செய்தேன், பந்தயச் சீட்டு இரண்டா ஆடலாம் என உரியார்டி, டங்கனிடம் உரத்த குரலில் கூறினான். அது சாதாரண ஆட்டமென ஆட்சேபித்த சிலர், 
சந்திப்பு 0 (3 
நாலுகை ஆட்டத்தைக் குறிப்பிட்டனர். டங்கன் சம்மதித்தான். ஆனால் உரியார்டி பிடிவாதமாக - அது எனக்குப் புரியவில்லை., புரிந்து கொள்ள முயலவும் இல்லை - முதல்வகை ஆட்டத்தையே வற்புறுத்தல் 
வும் இல்லை - முதல்வகை ஆட்டத்தையே வற்புறுத்தினான். விஷமங்களுடனும் வேதைகளுடனும் நேரத்தைச் செலவிடுவதான ட்ருகேர் ஆட்டத்தினின்றும் தனிமையின் புதிர்ப்பாதைகளைத் தாண்டியும் நான் சீட்டாட்டத்தை ரசித்ததேயில்லை . யாரும் கவனியாதபடி நழுவினேன். ஒரு பயணிக்குப் புதிய 2 விடவும், ஒரு சிறுவனுக்கு பரிச்சயமற்றதும் இருண்டதுமான பழங்காலத்து கட்டிடம் (விருந்து மணப் வெளிச்சமிருந்தது) மிகவும் முக்கியமானதாகும். அடிமேல் அடிவைத்து அறைகளில் தேடினேன், பில்ல நள்சதுரமும் வரைவடிவும் கொண்ட நெடிய காட்சி அரங்கம், அசைந்தாடும் நாற்காலிகள் இரண்டு, மற்றும் வேனில் 
" கண்டு கொள்ளக்கூடிய ஜன்னல் ஒன்று நினைவுக்கு வருகிறது. இருளில் பாதை தவறினேன்; வீட்டின் - உரிமையாளர் - இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பெயரினை நினைவு கூர்ந்தால், அசிவெடோ அசயால் என்று இருக்கக்கூடும் - ஒரு வழியாக என் பக்கமாய் வந்து சேர்ந்தார். அன்பினால் அல்லது பொருள் சேகரிப்பாளரின் பகட்டுடன் ஒரு நிலைப்பெட்டிக்கு என்னை இட்டுச் சென்றார். விளக்கேற்றப்பட்டதும் உருக்கின் பளபளப்பைக் கண்டேன், ஒரு காலத்தில் கீர்த்திமிக்கவரின் கரங்களில் சுழன்ற கத்திகளின் சேகரம் அது, பெர்கமினோவுக்கு வடக்கில் தனக்குச் சிறிது நிலமிருப்பதாகவும் அங்குப் போய் வரும் சமயங்களில் அது சேகரிக்கப்பட்டது என்றும் கூறினார். நிலைப்பெட்டியைத் திறந்து, குறிப்புச் சீட்டில் உள்ளதை நோக்காமலேயே ஒவ்வொன்றின் சிறப்பையும் எடுத்துரைக்கத்தக்க தொடங்கினார்; இடங்கள், நாட்கள் தவிர்த்து மற்ற விபரங்கள் அநேகமாக ஒன்றாகவே இருந்தன. அவருடைய கருவிகளிடையே ஜீவான் மொரிராவின் குத்தீட்டி இருக்கிறதா என்று வினவினேன் - அக்காலத்தில் அவன் ஸ்பானிய குதிரைவீரர்களுக்கு ஆதர்ஷமாய் விளங்கியவன் - பிற்காலத்தில் மார்டின் பியரோவும் டான் செகண்டோ சாம்ப்ராவும் போன்று. அது தன்னிடமில்லை என ஒப்புக் கொண்டவர், கைப்பிடியில் 'ப' வடிவ கம்பி கொண்டு அதுபோன்ற இருப்பதான கத்தியைக்காட்ட முடியும் என்றார். புறத்தே சீறும் குரல்களால் இடைமறிக்கப்பட்டார். சட்டென்று நிலைப்பெட்டியை மூடினதும் கிளம்பிவிட்டார்; நான் பின் தொடர்ந்தேன். 
தன் எதிரி தன்னை ஏமாற்ற முயன்றதாக உரியார்டி கத்திக் கொண்டிருந்தான். மற்றவர்களெல்லாம் அவர்களிருவரையும் சூழ்ந்திருந்தனர். மற்றவர்களைவிடவும் டங்கன் நெடியவன், பலசாலி; வட்டமான தோள்களைப் பெற்றவன்; வெளிப்பாடற்ற முகம், வெளிறிய முடி கொண்டவன் என்ற நினைவு இருக்கிறது. மேன்கோ உரியார்டி, செவ்விந்தியக் குருதிச்சிலிர்ப்பும், வெடவெடக்கும் மீசையும் கருத்தும் நடுக்கம் மிக்கவனாயுமிருந்தான், எல்லாருமே போதையிலிருந்ததை சொல்லத் தேவையில்லை; தரையில் காலியான பாட்டில்கள் இரண்டு, மூன்று கிடந்தனவா அல்லது அதிகமாய்ப் பார்த்த திரைப்படங்களால் உண்டான பிரமையா அது என்பது எனக்குத் தெரியாது. உரியார்டியின் சீண்டல்கள் ஓயவில்லை; முதலில் கூர்மையாயிருந்தவை இப்போது ஆபாசமாயின. அசட்டையாகக் காணப்பட்ட டங்கன், அலுத்துப் போனவனாக எழுந்துவந்து ஒரு குத்துவிட்டான். இதனைச் சகியாமல் முணங்கிய உரியார்டி, டங்கனைச் சண்டையிடுமாறு சவால்விட்டான். 
மறுதலித்த டங்கன் விளக்குவதுபோல "உன்னைக் கண்டு நான் அச்சப்படுகிறேன்" என்றான். எல்லாரும் நகைத்து ஊளையிட்டனர். எழுந்து நின்ற உரியார்டி "இப்போது உன்னுடன் சண்டையிடப் போகிறேன்" என்று பதிலளித்தான். யாரோ ஒருவர் - அவரை மன்னித்துவிடலாம் - ஆயுதங்களுக்குப் பஞ்சமில்லை என்றார். 
கண்ணாடி நிலைப்பெட்டியை அடைந்து திறந்தது யாரென நினைவில்லை எனக்கு, 'ப' வடிவ கம்பி பொருத்தப்பட்டதும் பளபளப்பானதும் நீண்டதுமான குத்தீட்டியை மேன்கோ உரியார்டி எடுத்துக் கொண்டான்; விளிம்பில் சிறு விருட்ச முத்திரை கொண்ட மரப்பிடி பொருத்திய கத்தியை அநேகமாக ஞாபகக் குறைவாக எடுத்துக் கொண்டான் ' டங்கன். உரியார்டிதயின் கை நடுங்கத் தொடங்கியது யாருக்கும் வியப்பளிக்கவில்லை ; டங்கனுக்கும் அது 
நேர்ந்ததுதான் வியப்பளித்தது. 
சண்டையிட இருக்கும் விருந்தினர்கள் தாமிருக்கும் இல்லத்தை மதித்து வெளியே போய்விடவேண்டும் என்பது மரபு. பாதிப்பேர் குதூகலமாய்பாதிப்பேர் தீவிர உணர்வுடன் சில்லிட்ட இரவுக்குள் போனாம். நான் குடித்திருக்கவில்லை - குறைந்தபட்கம் ஒயின் குடித்திருக்கவில்லை - ஆனால் சாகச உணர்வால் போதையேறியிருந்தேன். யாரேனும் கொல்லப்பட வேண்டும், அதனைப் பற்றிக் கூறவேண்டும், எப்போதும் நினைத்திருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். அக்கணத்தில் என்னைவிட வேறுயாரும் வயதுவந்தவர்களாக இருந்திருக்க மாட்டார்கள் போலும் வல்லமைகொண்ட நீர்ச்சுழல் ஒன்று எங்களையெல்லாம் இழுத்துச் சென்று மூழ்கடித்து விடும் என்ற உணர்வும் எனக்கிருந்தது, மேன்கோவின் குற்றச்சாட்டில் ஒரு சிறிதைக்கூட யாரும் நம்பவில்லை. பழைய பகைமையின் விளைவு இது என்றும் ஒயினின் போதையால் கிளறப்பட்டு வந்துவிட்டது என்றும் கண்டுகொண்டனர். 
பவளக்கொடி 0 14 
- கோடை இல்லத்தை விட்டு மரக்கூட்டங்களின் வழியாக நடந்து சென்றோம். ஒருவர் மது 92 சலிப்புற்றவர்களாக உரியார்டியும் டங்கனும் தலைமை தாங்கிச் சென்றனர். திறந்த புல்வெளியின் விளிம்பைச் சுற்று'' நாங்கள் நின்றுகொண்டோம். நிலவொளியில் நின்றிருந்த டங்கன் சற்று அதிகார தொனியில் கூறினான் இது சரியான இடமாகத் தோன்றுகிறது". 
என்ன செய்வதன்றறியாதபடி அவ்விருவரும் மையத்தில் நின்றனர். ஒரு குரல் ஒலித்தது : "ஆயுதங்களை போட்டுவிட்டு கைகளைப் பயன்படுத்துங்கள்!" 
ஆனால் அவர்கள் சண்டையிடத் தொடங்கியிருந்தனர். ஒருவரையொருவர் புண்படுத்திவிடுவோம் பெறு அஞ்சுபவர்களைப்போல், மோசமாக ஆரம்பித்தனர்; கத்தி முனைகளை நோக்கியவாற துவங்கிய அவர்களின் விழிகள் ஒருவர் மீது ஒருவர் பதிந்துவிட்டன. உரியார்டி தன் ஆத்திரத்தையும், டங்கன் தன் வெறுப்பு, விலகிய தன்மையினையும் ஒதுக்கி வைத்தனர். எதோ ஒரு வகையில் அபாயம் அவர்களை உருமாற்றியிருந்தது; இப்போது சண்டையாடுவது இரு ஆண்கள், சிறுவர்களல்ல. உருக்கின் களேபரமாக அச்சண்டையினை கற்பிதம் செய்திருந்தேன், மாறும். அதனை ஒரு சதுரங்க ஆட்டமாக என்னால் பின்தொடர் முடிந்தது அல்லது அநேகமாய் பின்பற்ற முடிந்தது. இடைப்பட்ட ஆண்டுகளில் நான் கண்டதை மிகைப்படுத்தியிருக்கலாம் அல்லது மங்கச் செய்திருக்கலாம். எவ்வளவு நேரம் நீடித்ததென எனக்கு தெரியாது; பொதுவான காலக்கணக்கிற்கு அப்பால் நிகழும் சம்பவங்கள் இருக்கவே செய்கின்றன. 
கவச உடைகள் இல்லாதபடி கத்தியின் சீற்றத்தைத் தடுத்திடத் தம் முன்கைகளைப் பயன்படுத்தினர் விரைவிலேயே நார்நாராகத் தொங்கிய அவர்தம் சட்டையின் கைப்பகுதிகள் குருதியால் கருத்துப்போயின. இத்தகைய கத்திச் சண்டை அவர்களுக்குத் தெரியாது என்று நாங்கள் கருதியிருந்தது தவறாகிவிட்டது என்று எண்ணினேன் வெவ்வேறு விதங்களில் அவர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டதை இப்போது கண்டேன். அவர்தம் ஆயுதங்கள் சமமற்றதாயிருந்தன. தனது பாதகநிலயைச் சரிசெய்யும் பொருட்டு, டங்கன், அடுத்தவனுக்கு அருகாமையிலிருக்க முயன்றான்; நீளமாகவும் தாழ்வாகவும் கத்தியைப் பாய்ச்சும் பொருட்டு உரியார்டி பின்னால் வந்துகொண்டே இருந்தான் நிலைப்பெட்டியின்பால் கவனத்தை ஈர்த்த அதே குரல் இப்போது கூச்சலிட்டது: "ஒருவரையொருவர் கொன்று கொண்டிருக்கிறார்கள்! அவர்களை நிறுத்துங்கள்!'' 
ஆனால் யாரும் குறுக்கிடத் துணியவில்லை. உரியார்டி தடுமாறினான்; டங்கன் பாய்ந்தான், அநேகமாக ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து நின்றனர். உரியார்டியின் கருவி டங்கனின் முகத்தைத் தேடியது. திடீரென அக்கத்தி குட்டையானதாகத் தோன்றியது. அது நெடியவனின் மாரினைத் துளைத்துக் கொண்டிருக்கிறது. டங்கன் புல்மீது விரைத்துக் கிடந்தான். இத்தருணத்தில்தான் தாழ்ந்த குரலில் அவன் சொன்னான்: "எவ்வளவு விநோதானது இதெல்லாம் கனவாய் இருக்கிறது". 
அவன் விழிகளை மூடவில்லை, அசையவில்லை, ஒருவன் இன்னொருவனைக் கொல்வதைப் பார்த்திருந்தேன். 
- மேன்கோ உரியார்டி அப்பிரேதத்தின் மீது குனிந்து வெளிப்படையாக அழுது, மன்னிக்குமாறு மன்றாடினான். தற்போது அவன் செய்திருந்தது அவனுக்கு அப்பாற்பட்டது. குற்றமொன்றை இழைத்ததற்காக என்பதைவிடவும், முட்டாள்தனமான காரியம் ஒன்றைச் செய்ததற்காகவே அவன் வருந்தினான் என்று இப்போது அறிந்து கொள்கிறேன் 
மேலும் உற்றுநோக்க நான் விரும்பவில்லை. நீண்ட நாளாக நான் விரும்பியிருந்தது நிகழ்நதேறிவிட்டது, அது என்னை உலுக்கிவிட்டது. ஆயுதத்தைப் பிடுங்குவதற்காக அவர்கள் போராடவேண்டியிருந்தது என்ற லாஃபினர் பின்னர் தெரிவித்தான். தற்காலிகமான ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது. முடிந்த அளவு சொற்பமாகப் பொய் கூறுவதெனவும் இக்கத்திச் சண்டையை வாட்போராக உயர்த்திவிடுவதெனவும் தீர்மானித்தனர். அவர்களில் நால்வர், அசிபால் அதில் ஒருவர், வழிமொழிந்தனர். போனஸ் அயர்ஸில் எதனையும் செய்துவிடலாம். ஒருவருக்கு எட்டு நண்பன் கிடைத்து விடுவான். 
சீட்டாட்டம் ஆடுகின்ற மஹோகனி மேசை மீது, யாரும் பார்க்கவோ தொடவோ விரும்பாதபடி சீட்டுக்கட்டும் பில்களின் குவியலும் தாறமாறாய்க் கிடந்தன. 
சந்திப்பு - 15 
அடுத்துவந்த ஆண்டுகளில் யாரேனும் ஒரு நண்பனுக்கு இக்கதையை வெளிப்படுத்திவிடலாம் என்று பலமுறை கருதினேன், ஆனால் இரகசியம் ஒன்றைச் சொல்வதை விடவும் காப்பாற்றுவதில்தான் பெருமகிழ்வு உண்டாகிறது என்று உணர்ந்தேன். இருந்தபோதிலும், 1929 வாக்கில், தற்செயலான ஓர் உரையாடல், திடீரென என் நீண்ட நாளைய , மெளனத்தை கலைக்குமாறு செய்துவிட்டது. ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் டான்ஜோஸ் ஓலாவ், ரிடைரோவில் : ஆற்றோரப்பிரதேசத்தில் கத்திச் சண்டையில் சூரர்களாய் இருந்தவர்களைப் பற்றின கதைகளை நினைவு கூர்ந்து கொண்டிருந்தார்; இலக்கான மனிதனைக் கொல்லும்போது, ஆட்டத்தின் விதிமுறைகளால் அவர்களுக்குப் பயனிருந்ததில்லை, இப்போது கத்திச் சண்டைகளில் காணப்படும் சாகசமும் புனைவும் சொற்பம்தான் என்றார். அப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டிருப்பதாகக் குறிப்பிட்டு, இருபதாண்டுகளுக்கு முன்னாள் நிகழந்ததை விவரித்தேன். 
தொழில் சார்ந்த கவனத்துடன் கேட்டுவிட்டு அவர் கூறினார், அதற்கு முன்னர் உரியார்டியும் இன்னொருவனும் - அவன் பெயர் என்ன? - கத்தியைத் தொட்டதே இல்லையா? அவர்தம் தந்தையாரின் தோட்டங்களில் ஒன்றிரண்டை எடுத்துப் பார்த்திருக்கலாம். 
"அப்படி நான் எண்ணவில்லை. அன்றிரவு இருந்த எல்லாரும் ஒருவரையொருவர் நன்கறிந்தவர்கள், அவ்விருவரும் சண்டையிட்டது பற்றி அவர்களெல்லாம் வியந்துபோனார்கள் என்பதை உங்களுக்குக் கூற வேண்டும்." 
உரத்துச் சிந்திப்பவரைப் போன்று தனது அமைதியான பாணியில் லுவாவ் தொடர்ந்தார். "அக்கருவிகளில் ஒன்றிற்கு 'ப' வடிவ குறுக்குக் கம்பி உண்டு. மிகவும் புகழ்பெற்றுவிட்டதான இருகத்திகள் அந்த ரகமானவை அவை மொரிரா மற்றும் அல்மடாவினுடையவை. அல்மடா தென்பகுதியைச் சேர்ந்தவன்." 
என் நினைவில் ஏதோ ஒன்று எழுவதாய்த் தோன்றியது. ஒலாவ் மேலும் தொடர்ந்தார் : "சிறு விருட்சம் பொறித்து மரப்பிடிகொண்ட கத்தியினையும் நீ குறிப்பிட்டாய். அது போன்றவை ஆயிரக்கணக்கில் உண்டு, ஆனால் ஒன்றிருந்தது." 
ஒரு கணம் நிறுத்திவிட்டுக் கூறினார், "பெர்காமினாவைச் சுற்றிலும் அசீவெடோவுக்கு நிறைய சொத்து இருந்தது. அங்கே ஒரு போக்கிரி உண்டு - ஜீவான் அல்மன்ஸா என்பது அவன் பெயர், இது இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தது. அவனுக்குப் பதினான்கு வயதாயிருக்கையில், இக்கத்திகளுள் ஒன்றால் ஒருவனைக் கொன்றான். அதிலிருந்து, அதிர்ஷ்டத்தின் பொருட்டு, இக்கத்தியையே பயன்படுத்தினான். ஜீவான் அல்மடாவும் ஒருவர் மாற்றி ஒருவர் அதனை வைத்திருந்தனர்; மக்கள் இவர்களைக் குழப்பிக் கொண்டனர். நீண்ட காலமாய் அவர்கள் ஒருவரையொருவர் தேடினர், ஆனால் ஒருபோதும் சந்தித்ததில்லை, ஜீவான் அல்மன்ஸா, தேர்தல் கலவரமோ வேறு ஏதோ ஒன்றில் துப்பாக்கி ரவைக்குப் பலியானான். மற்றவன் லாஸ் ஃப்ளோரஸிலுள்ள மருத்துவமனையில் இயற்கையாக மரணமடைந்தான் என எண்ணுகிறேன்". 
வேறதுவும் கூறப்படவில்லை . அவரவர் முடிவுக்கு விடப்பட்டோம். 
ஒன்பது , பத்துப்பேர், அவர்களில் யாருமே உயிர்த்திருக்கவில்லை, என் விழிகள் கண்டதை கண்டனர் - அத்திடீர்க்குத்தினையும் நீலவானின் கீழான உடலையும் - ஆனால் நாங்கள் உண்மையில் பார்த்துக் கொண்டிருந்தது. இன்னொரு கதையின், பழைய கதையின் முடிவாக இருக்கலாம். உங்கனைக் கொன்றது மேன்கோ உரியார்டியா அல்லது மனிதர்களுக்கு பதிலாக ஆயுதங்களே தந்திரமாகச் சண்டையிட்டுக் கொண்டனவா என்று அதிசயிக்கத் தொடங்கினேன். தன் கத்தியை முதலில் பற்றும்போது உரியார்டியின் கரம் எப்படி நடுங்கிற்று, அதுபோலவே டங்கனின் கரமும் எப்படி நடுங்கிற்று - நிலைப்பெட்டியில் நீண்டகாலம் அருகருகே கிடந்து தூங்கிய கத்திகள் விழித்துக் கொண்டன போலிருந்தது - என்பது இன்னமும் எனக்க நினைவிருக்கிறது, அவ்வீரர்கள் துகளாகிப்போன பின்புகூட, அக்கத்திகள் - கத்திகள்தான், அவர்களது கருவிகளல்ல - எவ்விதமும் சண்டையிடுவது என்பதை அறிந்திருந்தன. அவ்விரலில் அவை நன்றாகச் சண்டையிட்டன. 
மனிதர்களைவிடவும் பொருட்கள் நீடித்திருக்கின்றன; இக்கத்திகள் மீண்டும் சந்திக்குமா என்பதை இக்கதை இங்கே முடியுமா? என்பதை யாரறிவார் !!! 
தமிழில் : சா. தேவதாஸ்.

No comments:

Post a Comment