தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, October 02, 2019

செதில் மண் - ரவிசங்கர் ஜெர்லேஸ், நீரினுள் அலைவுறும் ஞாபக அரங்கு - ச. முருக பூபதி

செதில் மண் 
ரவிசங்கர் ஜெர்லேஸ் 
என் முகத் தழும்புகள் நோக்கிக் கனவுகளில் நீளும் விரல்களுக்குப் பயந்து சந்திரன் தேயும் இருளில் கம்பிவலைக்கு நேராக விழித்து வியர்த்தவாறு உட்கார்ந்திருக்கிறேன். உதட்டோரத்தில் எப்போதுமே தங்கியிருக்கும் , கசப்பை வெகுநாளைக்குச் சுவைத்துக் கொண்டிருந்தவன் சாயங்காலங்களில் விளையாடும்போது தன் வியர்வையை ஒற்றி உதட்டு வெடிப்பில் தீற்றிப் பார்த்ததைக் கீறல் விழுந்த சிமெண்ட் திண்டுகளில் மரநிழல்களைச் சிதைத்தவாறு உருகும் வெயிலில் வெற்றுத் தொடைகள் எரிய உட்கார்ந்திருந்தபோது பார்த்திருக்கிறேன். 
பல வருடங்களாகப் பழக்கப்பட்டது சரசரக்கும் ஒடிந்த இலைகள் பரவிக்கிடக்கும் தரையில் நிதானமாக நடந்துவரும் செருப்பணிந்த காலின் அதே ஒசை. காட்டமான சிகரெட் புகை அசைவுறும் காற்று தன் கறுத்த உருவத்தைச் சுற்றியும் பரவியிருக்க நடந்துவரும் அவரின் சட்டையின் மார்புப்பொத்தான் கழன்றேயிருக்க, வெள்ளிமுடிகளைப்பார்த்துத் தனிமையில் கண்கள் கலக்கமுறும். சடசடக்கும் ஆங்கிலத்தில் எங்கள் மூக்கள் வரிசையாக நின்றுகொண்டிருக்கும், ஒருநாள் வரிசையில் இரண்டு வீக்கள் இல்லாமலிருந்தன. மெஸ்ஸுக்குப் பின்புறத்து அடர்ந்த மர இருளில் தழுவிக்கொண்டிருந்த எங்களை யாரும் கண்டுபிடிக்கவில்லை. தனிமை கிடைத்திராத வெகுகாலங்களின் வால் நுனியில் புரண்ட ரோமத்தின் மேல் நாங்கள் தடுமாறிவிடாமல் நின்றிருந்தோம்." 
அழுத்தமாகப் பதிந்த அவனது உதடுகள் அன்ற அளவுக்கதிகம் வேகத்துடனிருக்க, அவன் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். 
காய்ச்சல் என்றேன். 
மணி அடித்துவிட்டது. அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகத் தேடப்பட்ட ஆட்கள் இல்லை; நான் 'போக நேர்ந்தது. 
பஸ்ஸின் இருபுறமும் வானம் இடிந்துகொண்டிருக்க, அனல்காற்று முகத்தில் அறைந்தது. அவன் முகத்தைக் கைக்குட்டையால் மறைத்தேன், பூக்கள் அசைவுற்று நெளிந்தன. இளகலான தலைமுடி மிதந்துவந்து கண்ணில் 'அறைய, தோளில் சாய்ந்து கொண்டான். திறந்த அறைக்குள் சிதறிக்கிடக்கும் புத்தகங்களை நினைவின்றி அடுக்கும் விரல்களில் சேரும் அழுக்கை நீக்க யாருமிருப்பதில்லை. மரமற்ற வனாந்திரத்தின் தகிக்கும் வெம்மை இறங்கும் கூரைகளின் எரிக்கும் மத்தியான நேரங்களில் மாடியின் சிக்கனமான நிழல்களுக்குள் தழுவிக்கொள்ளும் எங்களுக்குள் பரவும் நெருப்பு வழிந்திறங்கும் நகக்கணு நுனிகள் இன்றும் கிடக்கின்றன தணிந்த அனலுடன். உயரமான வெக்கை நீக்கும் துவாரங்களின் மத்தியானக் கருமை வெறிக்க பச்சைப் படுக்கை விரிப்பு கசங்கிக்கொள்ள தேடியலையும் எங்கள் வறண்ட உதடுகள் காய்ந்து கொண்டேயிருக்கும் தீவிரமான நேரங்களில் காம்பவுண்ட் வேலிதாண்டின கறுத்த வயல்வெளிகளின் வடிவமற்ற மண்கட்டிகளில் தடுக்கித் தடுமாறும் காக்கைகளின் முனுமுனுப்புச் சப்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் அகன்ற காலங்கள். தாண்டிப் போய்க்கொண்டிருந்த உயரமான கட்டிடங்களின் தகிப்பும் மத்தியான வேளைகளின் தொலைதூரத்தில் இருண்டிருக்கும் ஜன்னல்களின் முறைப்பும் பஸ்ஸின் சிதைந்த தகரங்கள் கொண்ட ஜன்னல் சட்டங்கள் வழியாகத் தயக்கத்துடன் வர முயல்வதைத் தவிர்த்து வளைவில் திரும்பும் 
பவளக்கொடி 0 30 

: : : . | 3) (வெள்ளைக்கோடுகள் இரண்டாகக் கிழிக்கும் கைப்பிடிகள் கொண்ட சாலையின் அந்தகாரம். குதித்துக் குதித்து செல்லும் ரோட்டின் மேல் போய்க்கொண்டிருக்கும் பஸ்ஸின் இரும்பு இணைப்புக்கள் துருப்பிடித்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. நெற்றியின் கொதிப்பு அதிகமாயிருந்தது; நான்கு கிலோமீட்டர் தூரத்தை வெகுநேரமாக அளந்துகொண்டிருந்தது பஸ். குறுக்கிட்ட ஒடையின்மேல் சரிப்படுத்தவேண்டிய பாலங்களும் கோபத்தில் ஜொலித்துக்கொண்டிருந்த மணற்துகள்களும். மெதுவாக முனகினான். பஸ்ஸின் கண்களுக்கிடையில் முத்தமிட்டு வெப்பத்தைத் தணிக்கமுடியவில்லை. பெண்களுக்குமேல் வரையப்பட்டிருந்த வெட்டுப்பட்டிருந்த மீனபடம் அசௌகரியத்துடன் அதே கோணத்தில் கிடந்து கொண்டிருக்க, அதன் ஒரளவு திமிர்ந்த வயிற்றுப்பகுதி கிழிபடும் நேரத்தை நோக்கி அறையப்படத் தெரிந்த பார்வையை வலியுடன் பிடுங்கியெடுத்தேன். 
ஜான்ஸியின் முகவட்டத்தில் கீழிறங்கும் மூக்குநுனியில் கவராயம் குத்தியதுபோலொரு தடம். தன் சீருடை அசைய அசைய டாக்டரின் அறைக்குப் பின்னாலுள்ள ரத்தப்பரிசோதனை அறைக்குள் அவள் போகும்போது அதன் ரோஜா வண்ணத்தின் காற்றுச் சரசரப்பு கலங்கலாகத் தேங்கிக ஆஸ்பத்திரிக்குள் மிதந்து வருவதை நான் பார்க்கும் நேரங்கள். ரத்தப்பரிசோதனை அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் அவனுக்கு ஒரு கை சூம்பிப்போயிருக்கும் தீயில் வாட்டிய கோழித் தொடைபோல்; என் தாடை இறுகி நெற்றியில் ப என்று நாளங்கள் புடைப்பதைப் பெயர் தெரியாத அந்த நோயாளிக்கிழவி நீலப் பெஞ்சின் மூலையில் ஒடுங்கி அமர்ந்துகொண்டு கைத்தடியுடன் பார்த்துக்கொண்டிருப்பதை என் தோளில் சாய்ந்து களைத்த கண்களுடன் அவன் பார்த்துக்கொண்டேயிருப்பதை உணர்கிறேன். நாசியைத் திருகி இழுத்துச் செல்கிறது ஜான்ஸியின் பிரத்யேக மணம். நிறையப்போகும் ஐந்தேகால் சந்தின் சப்தங்கள் வழியும் நேரம். வெறுமையை வீசியெறிந்துகொண்டு செல்லும் சைக்கிள்களின் மேல் ரோஜா நிறச் சீருடைகளணிந்து எழுத்துச் சுரங்கங்களை எண்களின் கோணல்களை பின்னிருக்கையில் சுமந்து செல்லும் வெறுமைகள். ஜான்ஸி மறுபடியும் அந்த அறைக்குள் போய்விட்டது ஆத்திரம்... டாக்டர் அழைத்ததும் அவன் போனான். பின்னாலே போய் காய்ச்சல் என்றேன். 
ஒரு கண்ணாடி ஜன்னல் இரண்டு அறைகளையும் பிரித்தது. நாற்காலிகளின் மெதுமெதுப்புக்குள் அருவெறுப்புடன் அழுந்திய என் பிருஷ்டங்களுக்குக் குறுக்காக முஷ்டியை வைத்துக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருக்க, ஒழுங்கற்றுக் கிடந்த புத்தகங்களும் ஸ்டெரிலைசரில் கொதித்துக்கொண்டிருந்த ஊசிகள் மருந்துக்குப்பிகள், தாங்கமுடியாத குமட்டலெடுக்கவைக்கும் அந்தப் பிரத்யேகமான வாசனையுடன் இழைந்துகொண்டு கொன்றெடுத்தது குரூரமான அந்த அறையின் ஏழரையடி உயரக் குட்டைத்தன்மை. என் சங்கு நெறிபடத் துடித்தது. அவன் கண்ணிமைகளுக்குள் டாக்டரின் வெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்தபோது பேப்பர் வெயிட்டினுள்ளிருந்த கோபுரம் - விபரீதமாக அசைந்து கொண்டிருந்தது. மெலிதாக நடுக்கமுறும் என் விரல் அதன் கோபுர உச்சியைக் கண்ணாடித்தடுப்புக்கு மேலாக வருடும் நேரத்தில் சட்டென்று கையைப் பின்னால் இழுத்து உதறிக்கொண்டேன். ஏதோ ஒரு ஊசி இறங்கிவிட்டது. கண்ணாடி ஜன்னல் அப்படியேயிருக்க, சுவரைத் திறந்துகொண்டுவந்து ஜான்ஸி என் மடியில் உட்காருவாளென்று நான் எதிர்பார்க்காததால் எக்கச்சக்கமாக மூச்சுத்திணற, பாதரசம் நிரம்பிய பிரபஞ்சத்தின் தொடைமேல் அழுத்தத்தில் நுரையீரல் அழுத்தமாய் நெறிபட்டு ஹா என்று வெளிவந்த மூச்சு மறுபடி உட்புகாமல் தவித்துக் கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டே அவள் என் மார்புமேல் தன் முதுகைச் சாய்த்து அழுத்த, நெஞ்சின் மையக்கோட்டில் வரிவரியாப் பிரிந்து பதிந்த அவள் ஜடையின் அழுத்தமான தடங்கள் காற்றை அறைந்து வெளியேற்றிக்கொண்டு அழுத்தமான மல்லிகையைத் திணித்ததில் மூச்சுத்திணறினேன். பெரிதாகப் பிதுங்கிவிட்ட கண்ணின் சிவப்பு நாளமொன்றுள் ரத்தம் பாய்ந்து புடைக்க, கீழிருந்த முஷ்டி மேலே வந்தது சட்டென்று. நாற்காலியின் இரண்டு கைப்பிடிகளையும் அழுத்தமாகப் பற்றிக்கொண்ட நேரத்தில் அவன் வாயிலிருந்த உஷ்ணமானி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது ஜான்ஸி, 
உன்னையும் சோதிக்கவேண்டுமென்றபோது டாக்டர், என் உதடு கோணித்தது. போரில் 
மெளனமான தெருவில் நடந்துவரும்போது ஆயாசமாக இருந்தான். மாதத்தின் காற்று வீசிக்கொண்டிருந்த அனலினூடாகத் தவழ்ந்தலைந்த மணலின் ஆவி நெளிசல்கள் மேலேறிக்கொண்டிருக்கும்போது நாங்கள் நடந்துகொண்டிருந்த மரநிழல்கள் அசைந்துகொண்டிருந்தன. இப்போது பரவாயில்லையென்றான். ஜான்ஸியின் கமலிலிருந்து வெளிவந்ததில் என் முகத்தில் அடர்ந்திருந்தது நிறமின்மை , அவள் முகம் நினைவில் தங்கியிருக்கவில்லை . நகரக் கசடுகளின் நடுவில் ஆழமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியின் இணையற்ற புதைசுமல், 

நாசித்துவாரத்தில் ஏறும் தண்ணீரின் அழுத்தத்தில் கண்கள் பிதுங்க, காலைச் சுற்றிக்கொள்ளும் அடாப்பசசைக கொடிகள் கழழுத்துச்செல்லும் ஆழத்தில் மங்கலாகிக்கொண்டே போகும் ஒளியும் காதினுள் தெறிக்கும் அழுத்தமும் கழுலக ஓசைகளை சமிக்ஞைகளை ஒளியை அவற்றின் கொடூர ஜீவராசிகளின் நிலைத்த பார்வைகளிலிருந்து காக்கின்றன. குறுக்கில் பிளந்த வெள்ளைக்கோட்டுடன் கறுப்பாக நீண்டுகிடந்தது சாலை. செயலற்ற மரங்களின் நிழல்கள் கிளைகிளையாகப் பரவிக்கிடக்க, ஓரமாகப் போகும் வானத்தின் நுனிப் பளபளப்பு காற்றைக் கிழித்துச் சென்றது. சூம்பக்கையனின் உருப்படியான கையின் விரல்கள் அறைக்குள் சும்மாயிராது. ஊசியை எடுத்து ஜான்ஸி மேல் குத்தினாலும் குத்திவிடுவான்; ஒருகணம் நின்று என் கால்கள் தயங்கியதில் அவன் ஐந்தடி முன்னால் போயிருந்தான், அவனது சட்டை காற்றில் மெலிதாக அசைந்துகொண்டிருக்க, முன்னேறிச்சென்று அவள் , தோளைச்சுற்றிக் கையைப்போட்டு அணைத்து இறுக்கினேன். 
சாயங்காலத்தின் விபரீத வெளிச்சம் கவியத் தொடங்கியிருக்க, அதீத உயரத்தைப் பிரதிபலிக்க இயலாமல் தண்ணீர் தேங்கியிருந்த படியை மிதித்தபோது இடிந்து விழப்போகும் நிலையின் மேலிருந்து எதிரெதிராகப் பார்த்துக் கொண்டிருந்த யாளிகளின் மடக்கப்பட்ட விரல்களின் கூரிய நகங்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்க, அசைவற்று நின்றேன். கோவிலின் அடக்கமான விஸ்தீரணம் கூர்மையாய்க் கத்தியாய்க் கிளைபரப்பி நின்றது. அவன் இடுப்பில் 'பரவின என் விரல்கள். வெளியே போய்விடலாம் வா என்றேன். அந்த இடத்தைவிட்டுத் தப்பினோம். தெருக்களின் கொடுர அடர்வுகள் வழியாக எங்களைத் தொடர்ந்துவந்தது மெல்லிய சாயங்கால இருள். வெளித்தள்ளப்பட்டுக் குரூரமாய் அரையிலிருந்து தொங்கும் மாட்டின் கருப்பைபோல் உள் புறம் வெளியாகக் கிடந்த கோவில் நீண்டுகொண்டிருந்தது. அதன் வளையும் தூண்கள் இருள் அடர்த்தியாகும் கருவறை. ஓங்கிய தசை புடைக்கும் கைகளின், மேல் இமை உள்தள்ளிப் பிதுங்கி ஆக்ரோஷ முறைப்பில் காற்றைச் சுருட்டும் பார்வைகளின், உயர்த்திய வாட்களின் அசுர வலிமையென்று உருகித் தவழ்ந்தவை தரையில் ஓடித் துரத்திக்கொண்டிருப்பதைப்பற்றி ஏதும் அவ்வளவாக உணர்ந்திராமல் சாப்பிடப் போனோம். நுனி வளைந்திருந்த என் தம்ளரில் எக்கச்சக்கமாகக் கறுப்புப் புள்ளிகள்; உதட்டை உரசி உரசிக் கூசவைத்தன. ஏராளமான பஸ்கள் திகிலூட்டும் வரிசைகளில் சீராக நின்றுகொண்டிருக்க, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படத்தை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தலைக் குடத்தினுள் என்ன இருக்கிறதென்று தெரியாமல் போய்விட்டபோதும், வெளியிலிருக்கும் வேலைப்பாடுகளைப் பார்க்கும்போது தண்ணீர்தான் இருக்கவேண்டும். குடத்தைச் சுற்றியும் தண்ணீர் நிரம்பியிருக்க, ஜான்ஸி மெதுவாக நடந்துகொண்டிருந்தாள். காற்றில் அசைந்தது கித்தான். என்னைப் போட்டியெடுத்துக்கொண்டிருந்தவனின் மூக்குக்கண்ணாடி உறுத்திக் கொண்டேயிருக்க, அவனது சுத்தம் என்னை சுட்டது. 
போய் அழுக்காகிக்கொண்டு வா. 
இப்போது சரி. கலைந்திருந்தான் என்றாலும் அவர்களால் அசுத்தமாயிருக்க முடியாதென்றே நினைக்கிறேன். பார்வையும் உறுத்துகிறது. கழற்றிவைத்துவிட்டு சாதாரணமாகப் பார். எதுவும் சரியில்லை . திரும்பி உட்கார்; உன் முதுகுக்குப் பேட்டியளிக்கிறேன். 
கேட்டுக்கொள். . 
ஒரு நீளமான மௌனம் அவர்களைக் கொன்றது. இருபத்திமூன்று மாதங்கள் அலைந்து திரிந்து அவர்களைத் திரட்டினேன். என் சக்திக்கு மேற்பட்ட விஷயம் அதுவென்று நினைத்தாலும், கிட்டத்தட்ட முப்பதாயிரம் மேடைகள், ஒன்றரை லட்சம் வீடுகளுள் நுழைந்து வந்தபோது என் பாதங்கள் இறுகியிருந்தன. அவற்றைக்கொண்டு அவர்கள் வயிற்றில் மிதித்துக் காலூன்றிக்கொண்டு சாக்குத் தைக்கும் ஊசியால் அவர்கள் வாய்களைத் தைத்தேன்; தைக்க உதவும் ஏகப்பட்ட நரம்புகள் இன்னும் என் தோட்ட அறைக்குள் கிடக்கின்றன. குறுக்கே பேசினால் உன் தலை உடைக்கப்படும். அவர்களின் கண்களும் பேசமுயல்வதை உணர்ந்து ஆக்ரோஷமடைந்து கண்களையும் தைத்தேன். மூடிய கண்களுள் அசையும் தெளிவற்ற ரேஜா நிறத்தை என்றும் அவர்கள் உணரமாட்டார்கள்; கண்களுள் அசையும் தெளிவற்ற ரோஜா நிறத்தைப் பற்றிக் கூறியவனைக் கௌரவிப்பதற்காக இவர்களைக் குருடாக்காமல் விட்டேன், சப்தங்களைக் கேட்டார்கள். மிகப்பெரிய மூன்று கப்பல்களின் சங்கூதும் கம்பீரமான ஒலியை அவர்கள் துறைமுகத்தின் தளங்களில் நின்றுகொண்டு தடுமாறியவாறு கேட்டார்கள். பின்புறம் பிணைக்கப்பட்டிருந்த அவர்களது கைகள் திகிலுடன் நெளிந்து கொண்டிருந்தன. கட்டைவிரல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைத் தடவிப்பார்த்தே உணர்ந்துகொண்டார்கள். அவர்களின் விடைத்த காதுகள் உன்னிப்பாகக் கவனித்தன. மையக் கப்பலின் மேல்தளத்தில் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் கூவினேன். 

என் பெயரால் ஆணையிடுகிறேன் ...... 
கப்பல் தலைவர்களுடனும் மாலுமிகளுடனும் கைகுலுக்கி விடைபெற்றேன். கூட்டம் கூட்டமாக அவர்கள் இரண்டு கப்பல்களின் சரக்குக் கிடங்குகளுக்குள் எறியப்பட்டார்கள். உணவு வீசப்பட்டது. இதுவரை அவர்கள் உணவற்ற சிறைச்சுவர்களின் இருளைத் தின்றுகொண்டிருந்தபடியால் பெரும் குழப்பம் தொடர்ந்தது கிடங்குகளுக்குள். தடவித் தடவி உணவைப் பொறுக்கியவர்கள் பசிதாங்காமல் தங்கள் வாய்த் தையல்களை அறுக்குமாறு மற்றவர்களை வேண்டிக் காலில் விழ விழ அலைகளின் ஓசை சிதறச் சிதற கப்பல் கடலுக்குள் முன்னேறிப்போயிற்று. சரக்குக் கிடங்குகளின் விளிம்புகளைச் சுற்றி நின்று கப்பல் ஊழியர்கள் இதைப் பார்த்தவாறு ரம் குடித்துக்கொண்டும் காலியான பாட்டில்களை உள்ளே வீசியடிப்பதுமாக இருந்த மூன்ற நாட்களில் கப்பலின் மையப்பகுதி வந்துவிட்டபோது - கிடங்குக்குள் கிடந்தவர்கள் முக்கால்வாசிப் பேரின் உதடுகளும் நாக்குகளும் தையல் கிழிக்கப்பட்டதில் சீரற்று அறுந்து போய்க்கிடக்க, கிழிந்த உதடுகளின் ஓரத்தில் உறைந்த ரத்தத்துக்குள் பொதிந்து கிடந்தன உணவுத் துணுக்குகள். என் தனியறையில் உட்கார்ந்துகொண்டு இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன் திரையில். கப்பல்களிலிருக்கும் படம்பிடிக்கும் குழு திறமைவாய்ந்தது. மையக் கடலில் நங்கூரமிட்டார்கள். கப்பலின் அசைவு நின்றுபோனதையுணர்ந்து கிடங்குகளுக்குள்ளிருந்து எழுந்த ஊளைக் கூக்குரல்கள் அடர்ந்த பழுப்பில் சுவர்களில் பதிந்துகிடக்க உப்புக் காற்றரித்த துருத்துகள்களை உதிரச் செய்துகொண்டிருக்க, மேலே பறந்துகொண்டிருந்த பறவைகள் திசைமாறின. கிடங்குக்குள் பிணவீச்சமடித்தது. பயத்தில் அளவற்றுச் சுரந்த கண்ணீர் கிடங்கை நனைத்தது. பிணங்களை மிதித்தவாறு தடுமாறித் தடுமாறி விழுந்துகொண்டிருந்தவர்களில் கண்ணின் தையல்களைப் பிரிக்குமளவு பிணங்களுக்குத் துணிச்சல் வரவில்லை. காலியான ரம் பாட்டில்கள் அடுக்குகளில் கொண்டுவரப்பட்டு கிடங்குகளுக்குள் கிடந்தவர்கள் தலைமேல் வீசியடிக்கப்பட்ன, அறுந்த நாக்குகளும் உதடுகளும் வேதனைக்குரல்கள் மட்டுமே எழுப்பின. பா ஹா பா ஹா என்று கண்ணீரினூடாக எழும் கொடூரமான கணக்குத் தவறாத வேதனைக் குரல்கள். அவர்களது இறுதி ஆசையாக நான் ஒன்றைத் தீர்மானித்து அதை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்ததால் ஒலிபெருக்கிகள் கிடங்குகளுக்குள் இறக்கப்பட்டன. ஊமைச் சாபங்களும் வசவுகளும் மொழி சிதைந்த கதறல்களும் அழுகைக் குரல்களும் ஊளைகளும் மத்திக்கடலின் மெளனத்தைச் சிதறடித்தபோது உணர்ச்சியேதும் காட்டாத அலைகள் நுரையுடன் கப்பலின் இரும்புச் சுவர்களை மோதிக்கொண்டிருந்தன. ஒருவர் பின் ஒருவராக மேல்தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு அவர்கள் கூட்டம் கூட்டமாகக் கயிற்றால் பிணைக்கப்பட்டுப் பின் பெரிய பாறாங்கற்கள் இணைக்கப்பட்டன. அவர்களும் பிணங்களும் கடலுக்குள் விழும் சப்தம் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது. வெகு சிலரின் கைகள் மட்டுமே அப்போதும் ஒலிபெருக்கிகளை இறுகப்பற்றியிருந்தன. 
ஏகப்பட்டஇடைவெளிகள் விழுந்துவிட்டன. பிறகு நான் ஜான்ஸியை விடுவித்துவிட்டேன். அவளைப் பிடித்துவர முடியுமா என்பதுதான் எனக்குத் தேவையாயிருந்தது. பிடித்துவர முடிந்தது போல, 
பேட்டியாளனுக்கு என் கையாலேயே தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடாக்களைச் சரிப்படுத்திக்கொண்டு என்னைப் பார்த்து மெலிதாகப் புன்னகையை வரவழைக்கமுயல, என் பார்வை அவனைத் தாண்டிச் சுவரில் நிலைத்தது. 
இது தொடர்ந்துகொண்டிருக்கச் சாத்தியமுள்ளது. என்றேன்..' 
எழுந்து என்க்கு விறைப்பாக வணக்கம் செலுத்துவிட்டுப் போட்டியாளன் விடைபெற்றுக்கொள்ள, என் பாதுகாப்பு அதிகாரி ஒருவன் அவனை அழைத்துச் சென்றான். அறைக்குள் இன்னும் மூன்றுபேர் நேர்ப்பார்வைகளுடன் நின்றிருக்க, முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியை அழைத்து, வரவேற்பறையில் பேட்டியாளனைச் சுட்டுப் பிணத்தைத் தெருவில் எறிந்துவிடுமாறு ஆணையிட்டேன். 
செதில் மண் 033 
***************************************************

 நீரினுள் அலைவுறும் ஞாபக அரங்கு - ச. முருக பூபதி
சமுத்திர அரங்கிற்குள் சலங்கைகட்டும் சூரமகாபுத்திரனின் துடிக்கூத்தின் அதிர்வில் நீராலான கரையும் திரைவிலக உலகின் நடனம் பிறந்து கைகளைக் கோர்த்தனர் ஆதி நடிகர் கள். அப்போது முதல் மனிதர்களிடமிருந்து நடனங்கள் பறிக்கப்படாமல் - இருப்பின் நிகழ்வெளி அறியப்பட்டது. இரவு வந்ததும் உலகம் அதன் ஆதிநிலைக்கு திரும்பிவிடுவதைப்போல அரங்கமும் அதன் ஆதிநிலையை ஸ்பரிசிக்க 'நிகழ்விற்கு இரவை தேர்ந்தெடுத்தது அப்போது பூமியின் மேற்பரப்பில் தொலைந்து மறைந்து போன ஒப்பனைக்காரர் களின் மெளனமூச்சு நாட்டியமாய் உயர்ந்து மோனச்சடங்கின் புதிரை நிகழ்த்துகிறது காணாத வெளியில் நகரும் சித்திர முக நடிகர்களை எல்லோரும் அறிந்திருந்தனர். அரங்கம் ஒரு தேவதைக் கதையை படித்த குழந்தை அது தன் தாய்க்கு நடனமாடி நடித்துக்காட்டும் வெளியின் மடிப்புகளில் கூடாரம் கூடாரமாய்த்தோன்றி மறைகிறார்கள் பார்வையாளர்கள். மிதந்தவான்வெளியில் கழுகு ஆமையின் முதுகோட்டை திருடியபோது உலகின் துன்பியல் நாடகம் கிரேக்க / வட்டரங்கில் ஜனித்து சேர்ந்திசைக்கீதமாக நடனமிட்டது. விரியும் துன்பியல் அரங்க வலையுள் ஆன்மாவைத் தீண்டும் அடுக்குப் பார்வைகள் இமைமூடித்திறக்கும் பரப்பில் அரிதார ரே கைகள். வர்ணக் குறிகள் பதிந்த முகங்களோடு பூர்வீக இனக்குழுக்கள். முதல் எழுத்தும், சித்திரமும் ஆதி நடிகனின் முகத்தில் தானே படர்ந்தது. வயல்வெளிகளையும், கோயில் முற்றங் களையும் வான்வெளியையும், சாவுத் திடல்களையும் நிகழ்விடமாக இமை களுக்குள் மறைத்து வைத்திருந்ததும் அதே முகம் தான். 
தெற்குலகு வீதிகளின் குளிர் இரவில் ரொட்டியால் செய்யப்பட்ட கபாலங் களை உண்ணும் ஜனக்கூட்டம் அட்டையால் செய்யப்பட்ட சவப்பெட்டிகளில் குதித்தாடியது சாவு நடனத்தை . உலகெங்கும் அதிர்ந்த அச்சாவு நடனம் துயருற்றோறையும் மாண்டோரையும் உயிர்ப்பித்து மரணத்தின் மடியில் அத்துவத்தை தீயாக மூட்டியது மூட்டிய தீயில் துர்மிருகங்களின் உலர்த்தி வைக்கப்பட்ட முரட்டுத் தோல்கள் பளபளத்து பறையாக, தவிலாக, உடுக்கை யாக, உறுமியாக பலநூறு உருவங்கொண்டு, கீழைவெளியில் காத்திருக்கிறது. சேவலின் அறுபட்ட தலையிலிருந்து கசியும் முதற்துளி உதிரம் தோலிசைப் பரப்பில் வீழ்ந்து பரவ நிகழ்வெளியெங்கும் அதிர்ந்த முழக்கத்தில் கொண்டை மிட்ட வட்ட முகங்கள் தோற்கருவியில் விரல்கள் அதிர அதிர அத்தோல் மிருகத் திற்கும் நிகழ்த்துவோருக்குமான போட்டி உறுமி உறுமி இசையாக நீண்டு ஹிருதயங்களைப் பற்றியது ஏக்கத்துடன் . நடிப்பின் முதல் இலக்கணத்தை சுழலும் தம் உடல்களுக்குள் மறைத்து கடவுளரின் ஆற்றல்களை ரூப அரூப் மாக்கி உடல் தோல்களின் கோடுகளில் மறையவிட்டனர். எலும்பு, தசைகளின் பல்வேறு நுண் நகர்வுகளை புலனாகும் தோலில் வசீகரித்து, துயரத்தில் உழலும் ஆன்மாவை மெல்லிய நடிப்பின் மூலம் மீளமுடியாத உள் ளுணர்ச்சி களுக்கு ஆட்படுத்தினர். 

உலகின் நிழல்களின் இயக்கத்தை உணர்ந்தபோது நடிகனின் விரல் மூட்டுகளால் பொம்மைகளின் கைகள் உயிர்கொண்டு பாவையாக. வாண நிழல்பாவையாக ஊர் ஊராகப் போய் குரல்களின் பிம்பத்தை உஷ்ண மூச்சாகப் பரப்பியது. பழுப்புக்கறைபடிந்த நாடகப் பிரதிகளின் வீச்செழுத்துக்கள் உதிர்ந்து ஒப்பனைக்காரர்களின் முகங்களில் பரவி அரங்கின் மொழி இசை ஒளியாக மறைந்து கொள்ள அரக்கு இசைத்தட்டில் சுழலும் ஓநாயின் கண் களுள் ஒப்பனை வெளி விரிகிறது. கண்ணாடியுள் நீளும் கல்பரவிய வீதியில் வயோதிக நடிகர்கள் ஒத்திகைக் குரல்களை அள்ளி முடிச்சிட்ட கூந்தலுக்குள் மறைக்க உடைந்த குரலால் வெற்று மேடையைச் சுற்றுகிறார்கள். பாலபார்ட் குட்டி நடிகர்கள் பளிங்கு உரு நடமாடும் தெருக்களில் வாள் சுழற்றும் ராஜபார்ட் மறைந்துபோன சிம்மக்குரல்களால் தமிழ் அரங்க சரிதத்தை கோர்க்கிறான் இசையாக. 
மறைந்த நகரின் கண்ணாடித் தெருவில் கிளிக்குரலோடு அலையும் கோமாளி கண் தெரியா நடிகைகளின் பெயர்களை உச்சரித்தபடி குதிரைகளின் கால்தடங்களைத் தேடித்தேடி ஓடுகிறான். அவர்களோ தாவரக் கோட்டைக்குள் முடிவற்று பாடுகிறார்கள். அக்கோட்டை வாசலில் துர்மிருகங்களின் இடமற்று மிதக்கும் பட்சிகளும் விருட்சங்கள் புலம்ப விசும்புகிறது கூவிக்கூவி. அவர்கள் பின்னும் கம்பளத்தில் கிளிகளும், பெண் வேடமிட்ட சேவல்களும் ஊர்ந்தபடி மறைவதை கோமாளியே அறிவான். யாருமற்ற சர்க்கஸ் கூடாரத்தில் பொத்தல் உடைகளை முகத்தில் புதைத்தழும் கோமாளிக்கு கானகவாசிகளின் மூங்கில் குழலிசை சுழன்று சுழன்று அவளின் குரல்கொள்வதை அந்தரத்தில் தொங்கிய படி இமை மூடி சுவாசிக்கிறான். மிருகங்களின் துயரத்தை விரட்ட சாட்டையின் சப்தம் உடலில் படிய கூடாரத் தூண்களில் மோதி மோதி கீழே வீழ்ந்து கொள்ளும் அவனின் வாத்துப்பாதங்களை முத்தமிட்டு கண்ணீரோடுமறைகிறது நரிகளின் ஊளை புலனாக உடலோடு பார்விளையாடும் சர்க்கஸ் கன்னிமார்கள் கோமாளியின் கருப்பு அங்கியை விரித்தபோது உள்ளே வெளிர் மஞ்சள் கொண்ட சுருள் எழுத்துக்கள் வெளவால்களாய் மிதந்துமிதந்து வெளியெங்கும். அலைவுற்று கீழைவெளியின் உடல்மொழியை எழுதிச் சென்றது. 
கண்ணாடி முகம் கண்ணாடியின் இதயத்துடிப்பு கண்ணாடி மூச்சு கண்ணாடி வெளி கண்ணாடியுள்... 
யாசகர்களால், விவசாயிகளால், நாவிதர்களால், மலம் சுமப்பவர்களால் கேவ . தாசிகளால், வீட்டை விட்டோடிய சிறுவ சீறுமியர்களால், வீதியோர அனாதை களால், குஷ்டரோகிகளால் அரசாங்கத்திற்கு எதிரான குற்றவாளிகளால் நெய்யப்பட்ட தமிழ் அரங்கவலை மென்மையிலும் மென்மையடைந்து நிகழ் கலைக்கலாச்சாரத்தை மின்னலென விரித்து அதன் தொன்மப்பாதையின் 
பவளக்கொடி 0 8 

சுழலுக்குள் அழைத்தபடியே காற்றுடலாகியது. நீள்வட்டக் கண்ணாடியால் ஆன உலகின் வெளியில் சிலந்திவலைபடிய அதனுள் உருளும் முட்டையின் உடைந்த முதுகில் உதடு பதித்து முனகுகிறாள் லிபி முகங்கொண்ட நடிகை ஓளியின் தெளிவையும் தீண்டாக்காற்றையும் அதனுள் நிரம்பியபடியே தன் மென் நரம்பு களால் சிதைந்த முதுகை தைத்து... தைத்து அரங்கின் முதல் தாலாட்டைப் பாடுகிறாள். முகத்தில் படரும் சுருள் கேசத்தை விலக்கியபடி முட்டையில் காது கொடுத்து கேட்கிறாள். ''காலத்தை விட இடப்பரப்பு அதிக உண்மையான து தானே? இல்லை... இல்லை இருப்பின் நடிப்பு உச்சியில் எல்லோரும் பேயின் கைகளில் சிக்குண்டவர்களாக அம்மந்திர உலகில் புதிது புதிதாய் ஜனிக்கிறோம் நரம்புக்குகையுள் குதித்தலையும் மலர்ப்பாத ஓலியானது நாம் தானெ'' என உருளும் முட்டையைப் பின்தொடர்ந்து ஊர்ந்து போகிறாள் அரங்கின் மந்திரத்தை முனகியபடி. 
"இசையென்றரு துவே நாம்” சலங்கைக்கால்கள் உரையாடியபோது கீறிய பனையோலையில் பிரதிகள் நிகழத்தொடங்கின. எல்லா ஒப்பனைக்காரர்களும் ஸ்திரியாக வாழ்ந்து மாறிய அதிசயம் நம் முன்னோர்களிடம் நடந்தது. கள்ள பார்ட், பபூன்பார்ட், ராஜபார்ட், என இருந்தாலும் ஸ்திரீபார்ட்டாவது நாடக மாதாவின் ஹிருதயத்தில் முகம் வைத்து உள்ளுணர்வுகள் நரம்புப்பாதைகளில் படரவிடுகிறோமென ஊ  ைள யி ட் டு க் கொள்கிறார்கள் மரசருகுகளிடம். ஒப்பனைக்காரர்களின் பிறைமுகப்பரப்பில் தாவி அலையும் மிருகத்தின் வசீகர நிழல் ரேகைகள் பார்வையடுக்குகளின் பிளவுற்ற மனநிலையை உடைத்து பலத்தின் கன்னிகளைக் கோர்க்கிறது. 
நடிகனின் சுவாசத்தடத்தின் நம் அரங்கு வேட்கைகொள்ளும் அரங்கச் சிருஷ்டியின் ஆன்மாவாகிய நடிகன் ஓர் கடவுள். நிகழ்வின் மாயத்தில் பார்வை யாளர்களும் அந்நிலையை அடைவர். நிகழ்த்தப்படும் காலவெளியை புனித மாக்கும் அரங்கு வியர்வையின் மூச்சின், முகத்தின் அதிர்வின் இடைவெளிகளின் சுவாசமாக முணுமுணுக்கிறது. அது மொழியை உடலாக மாற்றும் வித்தை. 
தாவரக்கொடிகள் படர்ந்த திரை விலகிக்கொண்டபோது தன் நிலம் சார்ந்த இலைகளை, பூக்களை சூடி ஜனித்த குழந்தைமுன் உருவிய வாளுடன் திறக்கப் போகும் தன் இமைகளை, தாவர மணங்களை வணங்கி போர்க்காட்சிக்கு தயாராகிறான் தமிழின் ஆதி நடிகன். கிளி மண்டபங்கள் சூழ்ந்த மதுரை வீதி களில் நீண்ட கூந்தலுடன் அரிதாரக்காரர்கள். அவர்கள் வாழ்ந்த தெருக்களோ கேஸத்தால் நெய்யப்பட்டிருந்தது. கூந்தலுக்குள் நூறு நூறு கிளிகளின் இசைக் குரல்கள் புலம்ப ஆர்மோனியக்கட்டைகளில் வெற்றிலைக்கரைவிரல்கள் நகர்ந்து பபூனை அழைத்தது. முகம் தேய்த்துத் திரும்பும் பின் பாட்டுக்காரர்களின் பாதத் தடத்தை தொயும் அரிதாரமிட்ட கண் தெரியா நடிகர்கள் அவர்கள் சந்திக் 
நீரினுள் . 9 

கிறார்கள் நீண்ட பெண் மலர்களோடு அவர்கள் பிரிகிறார்கள் ஒப்பனைப் பெட்டி யைத்திறந்து கைகோர்த்து மறைகிறார்கள் அத்துவான வெளியில், நிலவறை யில் பறவைகளின் சிறகுகளுக்கிடையிலான வெளியில். 
நாடகம் நிமிடத்திற்கு நிமிடம் சுய அழிப்பு செய்து, நிகழும் நொடியின் ஆழங்களை சடங்கின் நிலைக்கு அழைத்து காண்போர்மோன நிலையில் துயில, இருளின் நிழலுக்குள் வெற்றுப்பரப்பை மூடித்தழுகிறது. பார்வையடுக்குகளின் நரம்புகளில் மூளைச் செல்களில் உதிரக் குகைகளில் வரைபதிவினை ஏற் படுத்தும் கீகாட்டு முனியாக அரங்கெனும் ஆலமரம். உடல் பேசும் ஆன்மாவின் மொழியை நடிகர்களே தம் உஷ்ண மூச்சுப்பரப்பிற்குள் மறைத்துவைத்திருந் தனர் எங்கு நடிப்புயிர் பிறக்கின்றதோ அங்கு நம்பிக்கை பிறக்கின்றது. தம் சிறகில் விரியும் மேடையின் வாழ்வை அசைக்கிறார்கள் இருளின் ஒளிக்குள். 
இருளின் ஆன்மாவாக நடிகர்கள் உலவும்போது ஒளி அவர்களின் வாழ்வை சொல்லி மறைகிறதென கரையும் விரல்கள் எழுதிச்சென்றதை தெருவோரப் பாடகர்கள் முணுமுணுக்கிறார்கள். நிகழ்த்துவோனின் காண ரூபமே உலகின் நாடித்துடிப்பை அறியவும் ஆன்மீகம் மற்றும் இயற்பியல் லோகங்களுக்கிடை யிலான எல்லைக்கோட்டில் நின்று இடுகாட்டு துர்தேவதைகளின் ஆற்றல்களை வெளிப்படுத்துகிறது. இவ்வாற்றல்களில் நிகழ்வுகளே கோயில்களிலும், மண் டபங்களிலும், நடுகற்களிலும், கோட்டைகளிலும், குகைகளிலும், மண்பாண்டங் களிலும், மரத்தேர்களிலும், லட்சம் லட்சமாய் பிரதிமைகொண்டு தமிழ்பிரதியின் நிகழ்வாய்த் தொடர்கிறது. தமிழ் தொல் அரங்கின் அற்புதம் பாறைகளின் ரேகை களால் ஆனது. ஆதிப்பிரதி கற்களின் மொழிவட்டத்தில் ஊர்ந்தலைந்து சிற்பங்களாக வாழ்கிறது. இசையெனும் மையப்புள்ளியில் வாள் சுழற்றிய நம் அரங்கு இசைவெளி, உடல் இசை, முக இசை, ஒளி இசை, இசை உடை என மாறி மாறி தன் சிறகுகளை அசைத்தபடி நகர நகரமாய் கிராமம் கிராமமாய் பயணம் கொண்டது. 
வெள்ளைத் தொப்பிகள் உலவிய சரிதகாலத்தில் எதிர்ப்புணர்வின் குரலாக இருந்த நாடகம் தடைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட பிரதியின் ஜிவாலையில் உயர்ந்தன அரிதாரக் குரல்கள் ரத்து செய்யப்பட்ட சித்திர முகங்கள். கம்பி வலைகளுக்குள் அடைபட முக அடுக்குகளில் மிதந்தலைந்தது குரல்களின் இசை பரங்கிப் படைகளின் நெருக்குதலாலும் தனக்கு நேர்ந்த ஏமாற்றங்களாலும் எட்டாத வெளிக்கும் அதிரும் தன் குரலின் உயிரான நாவை அறுத்தான் காரியப்ப சுவாமி என்ற ஸ்திரீமுக நடிகன். துடித்தெறியும் அறுப்பட்ட நாவின் குருதித்துளிகளின் மௌனத்தில் நடுங்கித்தொடரும் தமிழ் நாடகம் சங்கரதாஸ் என்ற செதில்முக ஒப்பனைக்காரனின் வழித்தடத்தினால் நடனமிட்டு அலை வற்றது. தன் இமைவெளிக்குள் பயிற்சி கொண்ட நடிகர்கள் பிரிந்து வேறு 
பவளக்கொடி 0 10 

குழுவிற்கு போனபோது தன் உடலை நிசப்தமாக்கி கண்களின் படபடப்பில் தன் மரணத்தை பார்வையாளனின் ஏக்கத்தோடு ரசிக்கும் சங்கரதாஸ் எழுதி யெழுதி தன்னைக்கரைத்து கருஞ்சிவப்புப் படுக்கையில் மூச்சின் நாடித்துடிப்பை இசை ஒலியாக மாற்றி முடிக்கப்படாத தன் கட்டபொம்மு ரோமியோ ஜூலியட் நாடகத்தை பார்த்தபடி அரிதார உஷ்ணத்துள் மறைந்து கொண்டபோது ஓப்பணைக்குரல்கள் வெற்று வெளியெங்கும் அதிர்வு கொண்டது. தன் கண் களில் மிதக்கும் நீர்வீதியில் கூத்து நூலின் தாவர வரிகளைத்தேடும் சித்திர முகங்கள் நனைந்த ஈரவிரல்களோடு சங்கரதாஸின் கரம்பற்றி உரையாடிய போது ... | 
தூரக்கிராம இலை உதிரும் நடு இரவில் இறகுவிசிறிகளை அசைத்துப் பாடும் ஸ்திரீபாட்டைக் காண வருவீர்களா ஜட்காவில்? 
மஞ்சளின் கறைபடிந்து உடையாத உங்கள் நாடகப் பிரதிகளின் மாய எழுத்துக்களில் முகம்பதித்து முனகுகிறேன் வந்து விடுங்கள்.... வந்து விடுங்கள் இறுதி ஒத்திகை துவங்கி விட்டது. 
தன் மௌனத்தின் கடைசி நாளில் திரும்ப வந்த நடிகர்கள் தன் விரல்களில் உதடுகள் பதித்து விசும்பிய போது உயிர்கொண்டு ஆடிசுழன்ற தன் உடலின் விபரீதம் நிமிடங்கள் மணியாகி தனி நிகழ்வை புதிராக்க அந்நிமிடங்களே தமிழ் 
அரங்கில் ரகசியமானது. 
மதுரகவியின் பாடலைப்பாடும் கள்ளபார்ட் ஒப்பனை மணம் கொண்ட ஜிகினா சட்டையுடன் சப்வேயின் மெனத்தில் மரச்செருப்பணிந்து ஆடுகிறான். ரயில்வே பிளாட்பார யாசகர்களின் குரல்வெளிக்குள் பாஸ்கரதாஸின் தடை செய்யப்பட்ட பாடல்கள் கூடிக்கூடி கண்ணாடியின் ஒப்பனைக்குள் அதிர்வு கொண்டன. மூடிய கண்களுடன் பதிக்கப்பட்ட உதட்டின் ரேகைகளோடு அலைவுறும் ராஜபார்ட்டின் நிழல் யாருமற்ற தெருக்களில் பரவும் ருதுக்குரலை கூவியபடி சுடரில் மறைந்து கொண்டன. தமிழ் அரங்கின் இமைப்பரப்பில் சுதந்திர இயக்கம் இசையின் வெற்றியாகவே ஜொலித்தது. மதுரகவியின் நாடககீதத்தை தாஸ் எனும் புயல்காற்றில் காதர் எனும் கொக்கு நிகழ்த்திக் காட்ட தேம்ஸ் நதி வந்த உருவங்கள் சிதறிப்போனது. விஸ்வநாததாஸ் சவரக் கத்தியை முகத்தில் பதித்து தன் நிழலோடு உரையாட அந்நிழலை முத்தமிடும் காதர் தன் கபிலநிறக்கோட்டுக்குள் புறாக்களின் சப்தங்களை படரவிட்டு கைகளை அசைத்தசைத்து நீரின் ஆழத்திற்குள் மறைந்து சிரிக்கிறான். நடிப் பின் பாதையில் மரித்த அவனை சுந்தராம்பாள் என்ற பெண்புலி ரத்தினக் கம்பளத்தோடு கந்தர்வ உடலில் போர்த்தி அவன் பட்டு விரல்களை தன் ஈரக் கண்களில் பதிக்கின்றாள் முடிவற்று. 
நீரினுள் - 11 

ரத்து செய்யப்பட்ட பாடல் வரிகளை ஊர்ஊராய் மலரென உதிர்த்த காதரின் கழுத்திற்கு சுருக்கு கயிறு மிதந்துவர தூக்கு நாளில் இறுதி ஆசையின் பரிசாய் ஆர்மோனியம் கொடுக்க காதரின் விரல்கள் எட்டாவது கட்டையில் கவிழ்ந்தபோது குரலின் கனவு நாடகம்' அதிர தூக்கு நொடி கடந்து கடந்து பரங்கியர்களின் அழுகைக்கிடையே உதிர்ந்த வெள்ளைத் தொப்பி ரத்து செய்தது தூக்குத் தண்டனையை. இச்சரித்திர விரிப்பில் எழுதாத சித்திரமாய் பெயரற்ற ஒப்பனை முகங்களின் அலைவு ஊர்ந்தலைய கரையான்கள் அரிக்கப்பட்ட சிப்பியாடோன் வர்ணமுகங் களில் சித்திரப்பூச்சிகள் பேசிப்பேசி முத்தமிடுகிறது. 
மைக்கை நே ரிக்கும் காக்காய் கூட்டமும் அதன் வழிபின் தொடர்ந்து பிரதி. நூலெழுதிய சரித்திர நாயகன் மனோகராவின் தாவித்தாவி தழுவிய வசனச் சிதறல்களும் மேற்குலகுகண்ட பிம்பத்தின் வருகையும் தீவிர அலைவு கொண்ட அரங்க இசையை குழம்பிய பாதைகளுக்குத் திருப்ப நாடக சபாக்கள் தோற்று மூடுவிழா கொண்டாடியது வழியற்று தானிய ஆவிகளில், இசையாலான தமிழ் அரங்கு வாதாடும் களமாக இவற்றால் மாற்றப்பட்டதை எழுபதுகளில் ஒப்பனை யிட்ட நவீனவாதிகளும் மறந்து போனதும் அதிசயமே ! நம் முன்னோர்களின் மூச்சுவழி. நம் வெளியை உயிர்ப்பிக்க வரும் இறகுக்கூட்டத்தை எதிர்நோக்கி தாவரங்களால் ஆன அரங்கு. 
கண்தெரியா நடிகை சந்திரமதியின் வாக்குமூலம் 
அரிச்சந்திர வேடன் கட்டியவன் பிளாட்பார வெப்பத்தில் எலும்புகள் அதிரும் குரலுடன் இறகுகளால் ஆதிக் கூத்தாடியை 'அழைக்கிறான்! சுரங்கப் பாதை பிச்சைக்காரனின் பாடலில் மறைந்து தோன்றும் வள்ளியின் காதல் சங்கீதம் மூடிய வீட்டின் கதவுகளை உரசியபோது கூந்தல் விரிய நிலவுக்குள் ஆடி நகர்கிறார்கள் பெண் நடிகர்கள். திறக்கப்படாத பூமியின் கதவிடுக்கில் அரிதார மூச்சு பரவ உள்ளே சித்திரப் பூச்சிகளோடு அவர்களின் உரையாடல் பறவைகளான சடசடக்கும் மெழுகுச் சுடரில் அசைந்தசைந்து மறைகிறதே; 
தமிழ் ஞாபகத்தின் ஆதிரகசியம் ஸ்பசிக்க கண்ணாடியுள் பறக்கும் அகதிப்பறவை 
அழைக்கிறதே! உன்னை மட்டும் 
வன் மிருகத்தின் தடத்தில் குதித்தலையும் கீழை உலகின் உயிரான அப் பறவைப்பெண் திறக்கப்படாத பூமிக்குள் சாவியோடு அழைக்கிறாள் காம அதிரும் வெளிநோக்கி 
பவளக்கொடி - 12 வாக்குமூலமும் குறிப்புகளும் 
உயரும் நகரங்களின் படிக்கட்டுகளில் காலாட்டும் அந்நிய நகல் உருவங் களை வணங்கியபடி தலையாட்டும் ஸ்தாபன பிம்பங்கள் தன்னை முன் வைக்க மேற்கின் முகம் பதித்து விரல்வீசிச் சிரிக்கிறது. கிழக்கின் சுவாசம் பரவும் ஒப்பனைமுகங்கள் தன்னை அழித்து தாயின் கண்களுக்குள் விரியும் கண்ணாடி வெளியில் தம் ஹிருதயத் துடிப்பைக் கேட்டபடி குழந்தைகளை அழைக்கிறது. தீவிர அலைவு கொண்ட நம் காலத்தில் நாடகம் சம்பவ வெளியாகி தினசரி நாளிதழைக் கொரித்துக்கொள்ள கருவறைஉதிரம் சுவைக்கும் ஆலய விழிகளுக் குள் வெளிறிய வார்த்தைகளை நிகழ்த்தும் முகமற்ற நபர்கள் குளிர் நூதன அறைக்குள் சிக்கிய சித்திரக் கூடமென உறைகிறார்கள். 
ஏ.. ஏ கலாச்சார டாபர்மாமாக்கள் நம்மைச்சுற்றி அலைகிறார்கள்ஞாபகங் களைத் திருட வருகிறார்கள் ரகசியங்களின் புதிர்ப்பாதைகளைத் திறக்காதே வேண்டாம்... வேண்டாம் எம் குருதியின் ரகசியங்களைப் பார்க்காதீர்கள் போய் விடுங்கள் போய் விடுங்களேன்!.. 
நட்சத்திரங்கள் கவிழ்ந்த ஒப்பனை முகங்கள் சுடராய் பரவும் நிசப்த வெளி நோக்கி வருவாயா?... 
அவள் வடிவமைக்கப்பட்ட மேடையை மறுத்தாள்; முத்திரை பதிக்கப்பட்ட பார்வையாளர்களிடமிருந்து தப்பித்தாள்; நாடகம் முடிந்த பின்னும் காண் போரின் அக உலகின் தனிமைக்குள் பிரவேசித்தாள்; இடிந்த மண்டபங்களை யும், சிதைந்த கோயில் தூண்களையும், காரை உதிர்ந்த படிக்கட்டுகளையும், பாறை, மரவெளிகளையும் மனிதர்கள் புகாத ஆழ் வெளியையே நிகழ்விடமாக்கி நீராலான கண்ணாடிக்குள் மறைந்து கொண்டாள். 
நீரினுள் ப 13 


No comments:

Post a Comment