தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, October 27, 2019

மன நோயாளியின் குறிப்புகள் - கோணங்கி

மன நோயாளியின் குறிப்புகள் - கோணங்கி
ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றுகிறான். ஒரு மாயம்; விந்தையான சுழற்சிப்பாதையில் நகர்ந்தது.  ஒரே இடத்தில் இரு காலங்களில் இருந்து கொண்டிருந்தான். வில்லாக  வளைந்தும் இழுத்துக் கட்டிய நரம்பாகவும் இருந்தான். எதையும் வெளிப்படுத்தத் தயங்கினான். கத்திமுனையில் செதுக்கக்கூடிய கற்பனைகளை நம்பினான். வார்த்தைகளைத் தாண்டிய இடைவெளிகளில் கத்திகள் இருந்தன . திறமை அவனைக்கை விடவில்லை. முடிந்தவரை இடைவெளிகளில் பழகினான். நேருக்குநேர் உரசிக்கொண்டபோது விபரீதம் எந்த க்ஷணத்திலும் காத்திருந்தது. நண்பர்களைவிட பரிச்சயமானோர் அதிகம் .பாதுகாப்புக்கு எதிரிகளையும் பாதுகாப்பை இழப்பதற்கு நண்பர்களை நாடினான். அவன் முதுகில் இடித்த கத்திகளுக்கு அவனே சாணைச்சக்கரத்தை சுழற்றி பொறி பறக்கும் கூர்மைகளை பார்வையால் வடித்துத்தந்தான். எதிர்க்காதபோதும் எதிர்பாராதபோதும் முதுகு காயமடைகிறது. ஆனாலும் நண்பர்களிடம் போய்ச் சேர்ந்தான். வாதைகளால் ஏற்பட்ட கேவலை உறக்கத்தில் வெளிப்படுத்தினான். விழித்ததும் திறந்த ரணம்போல் காலை விடிந்தது. மூடிய ரணங்களுடன் திரும்பவும் அவர்களோடு தேனீர்பருகினான். ஸ்டோரி டிஸ்கஷன். தேனீர் கோப்பைகளுடன் சந்துபொந்துகளில் விவாதித்தார்கள். அவரவர் இடத்தில் தர்க்கம் வலுவாக இருந்தது. ஒவ்வொருவர் பக்கமும் நியாயங்கள் சாய்வானவை. சலிப்பூட்டின எல்லாம். நண்பர்கள் அறைக்கு தங்கிச்செல்பவனாக வருகிறான். அவர்கள் வருவதற்கு முன்னால் அறைதிறந்து உள்ளேபரவும் அடுக்குகளில் புஸ்தகங்கள் பழைய சூட்கேஸ்கள் உடைந்த கேசட் மோனோ டேப்ரெக்கார்டர் அட்டைப்பெட்டிகள் என்று அறைபத்திரமாக இருந்தது. உடைந்து வழிந்த HMV கேசட்டிலிருந்து அரக்குநாடா அறை முழுவதும் சுற்றிப் பரவிக்கிடந்தது. அதில் பதிவான பாடல் அவனுக்குத்தெரியும். பாடல் சிதைபட்டு வயலின் கோடுகள் கந்து கந்தாய் அறுந்து கிடந்தது. சொலிசனைப் பயன்படுத்தி அரக்கு நாடாவை வெட்டி ஒட்டுதல். வரிகளை மாற்றியமைத்து வயலின் கோடுகளில் இருந்த புயலை அதே வேகத்தில் ஒட்டினான். கேசட்டில் சுற்றி மோனோவில் ஓடவிட்டான். வேறொரு மெட்டில் அமைந்தது அந்தப்பாடல். அறை முழுவதும் ததும்பிய மூன்லைட். . பழங்கிழவன் புயல் ரூபமான குரலில் அவர்கள் இழந்த சொர்க்கத்தை . . மந்திரங்களால் மீட்டுவதை அப்பாடல் வெளிப்படுத்தியது. கிழவனின் கையிலிருந்த வயலின் மேலும்மேலும் மந்திர நரம்புகளால் அதிர்ந்து சாக்காட்டின் துயரங்களிலிருந்து மீளும் செந்நிற நாரைகளைப்பற்றி. . அவற்றின் அசைவுகளில் தோன்றும் கூட்டிசைவு . . திருப்பங்கள் எழுந்தெழுந்து மேல் எழும்பும் வழிகளைப்பற்றி . . கடந்து வந்து . . அழிந்து போன அறையிலிருந்த பழைய முகங்களை வெளிப்படுத்தியது. இசையை ஊடறுக்கும் பகைமையின் சாம்பல் நிற முனைகள் எட்டிப்பார்த்தன. கசப்புணர்வில் அலை மோதும் கோடுகள் அறையெங்கும் தத்தளித்தன. மீண்டும் அவற்றை துடைக்கும் நடுக்கத்துடன் கிழவனின் குரல் குளுமையான இரவுகளில் வெளிப்பட்டது. மூன்லைட்டின்.. வரவை வயல்வெளிகளில் சென்று அங்கே நெல் நாற்றின் மேல் நெல்லின் பால்பருவத்தை அடைவதாக அமைந்தது. கண்பார்வையுடன் அவர்கள் அறைக்கு திரும்புவதாக அப் பாடல் . . கட்கட்கட்கட்கட்கட்கட்கட் கேசட் அறுபட்டு துடிக்கிறது. திடீரென்று ஐம்பதுக்குமேல் ஹேங்கர்கள் கொடியில் அசைந்து கொண்டிருந்தன. காணாமல் போனவர்கள் அடையாளங்களை ஆமோதித்து ஹேங்கர்த்தலைகள் அசைந்தன. பழுதடைந்த டேபிள் ஃபேனில் கட்டிய நூலாம் படைக்குள் சிலந்திப்பூச்சி அங்கிங்கும் ஓடி விளையாடியது. சிலந்தி அவனை எதிர்கொண்டது அழகாயிருந்தது. சிலந்தி வாழும் காலத்துடன் நண்பர்கள் அறை. கதவுகளில் பச்சைகலந்த கருப்பு பெயிண்ட். வெளிச்சுவரில் கட்சி பேனர்கள் தட்டிகள் டயர்கள் பச்சைச்சட்டி கலர்சிரட்டைகள் கொடிக்கம்புகள் கிடந்தன. ஜன்னலைத்திறந்தான். வெளியே அய்யர் வீட்டு பசுமாடுகள் வாலாட்டிக் கொண்டிருந்தன. மாமி வழக்கம்போல் மஞ்சள் உடம்புடன் நின்று குளிக்கிறான் தொடர்ந்து. யாரையோ திட்டுகிறாள். ஜன்னலை மூடினான். முன்பு ஒரு காலத்தில் மாளிகையாக இருந்த போது அந்த வீட்டு இளவரசிக்காக அவள் விரும்பிய கலர் கண்ணாடிகள் உச்சி உல்லில் பொருத்தட்டட்டிருந்தன. மல்லாந்து படுத்தபடி எத்தனையோ முறை கலர் கண்ணாடி வழியே இறங்கி வரும் இளவரசியுடன் தாபூர்கள். அவர்கள் கனவாகவும் நனவாகவும் இளவரசி,அறைக்குள் நடமாடுகிறாள். அவளைத் தொடுவதற்குள் மாயமாய் மறைந்து விடுவாள். கலர்க் கண்ணாடிகள் அதிக சக்தி வாய்ந்தவை.எத்தனையோ நாள் பட்டினியில் அவர்கள் இருந்த போது கனவு வழியாக இளவரசி அவர்களுடன் பேசிச் சிரிக்கிறார். சொப்பனத்தில் மறைந்து விடுவாள். பேனர் எழுதி எழுதி விரல்கள் தேய்ந்தவர்களும் தட்டிகளில் விரல்களை எடுத்து வைத்தவர்களும் திரும்பவில்லை இன்னும். சுவர் எழுத்தில் ஒவ்வொரு இரவாக கழிகிறது. அறை முழுவதும் நோட்டீஸ்கள் கலைக்குழு தோள் கருவிகள் தவில் உடுக்கு கஞ்சரா ஜால்ராக்கள் தாறு மாறாய் கிடக்கின்றன. அவற்றின் மேல் இருந்த அலமாரியில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் தேர்வு நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சுவர் கீறல் வழியே 'அலமாறி வரை கறையாண்கள். பழைய நண்பனின் உடலையும் இளவரசியையும் தூக்கிச் சென்ற அரக்கு நிறகறையாண்கள். ஒவ்வொரு புஸ்தகமாகப் புகுந்து அறிக்கைகள் கட்சித்திட்டங்கள் தஸ்தாவேஜுகள் கடிதங்கள் கோப்புகள் இலக்கியம் சாஸ்திரம் பூட்டுகள் இரும்புக் கவசங்கள் கண்ணாடி.வெயிட் கயிறுகள் நாடக காஸ்ட்யூம்கள் பேப்பர்கள் பாட்லாக்குகள் பேனா மேஜை பென்சில் நாற்காலிகள் ஒவ்வொன்றையும் அரித்து மூடும் செம்மண் கூடுகளுடன் கறையாண்கள் வெள்ளை இறகுகளும் அரக்கு உடம்புகளுடன் சிறு சிறு கால்களுடன் நகர்ந்து நகர்ந்து நகர்ந்து நகர்ந்து மென்று மென்று மென்று மென்று மென்று நிசப்தத்தின் ஊசிகளுடன் தாள் தாளாய் அணு வணு வணு வணு வாய் தகரங்களை கபாலங்களை எலும்புகளை உறுதியை நம்பிக்கையை நம்பிக்கையின்மையை துளைத்து துளைத்து கண் கண் கண் கண்ணாக ஓட்டைகளுடன் கனவுக்குள் புகுந்து பறந்து திரிகின்றன. அரிக்கப்பட்டுக் கொண்டிருந்த அவன் கடிதங்களின் எஞ்சிய பகுதிகளை மீட்டுக் கொண்டிருந்தான். அவனையே இழுத்துச் சென்று அடுப்பிருந்த மூலையில் போட்டு தின்று கொண்டிருந்த கறையாண்களிடமிருந்து முழுமையாக செம்மண் கூட்டுக்குள் இருந்து விடுபட முடியாமல் கிடந்த அவனை எடுத்து இழுத்து வந்து கறையாண்களிடமிருந்து விடுவித்துக் கொண்டிருந்தான். இன்னும் பலரும் அவனோடு கிடந்தார்கள். எஞ்சிய பகுதிகளை ஒவ்வொரு வார்த்தையாக வார்த்தைகளுக்குள் - இருந்த இடை வெளிகளில் ஒளிந்து கொண்டிருந்த சாம்பல் கத்திகளை அரித்துக் கொண்டிருந்தன கரையாண்கள் . புஸ்தங்களுக்குள் இருந்த துவாரங்களை எடுத்து வார்த்தைகளுக்குள்ள அர்த்தங்களை தேடிக்கொண்டிருந்தான். தரையில் விரித்தே கிடந்த பழையபாய்கள் சுருண்டு மடங்கி சேம்பலும் சலிப்புமாய் உறங்கிக் கொண்டிருந்தன. காரணமில்லாமலேயே தற்கொலைக்குத் தூண்டும் அறையின் பச்சை நிறகதவுகளில் இருந்து தப்பி ஓடியவர்களை வரிசைப் படுத்திப்பார்த்தான். உணர்வுகளை மெல்ல மெல்ல அழிப்பதற்கு முன் தற்கொலைக்கு காரணங்கள் இருக்கவில்லை. செய் நேர்த்தியாக செய்யப்பட்ட கொலைக்கு கலையழகு உண்டு தானே. தைரியமும் அதிகம் தான். ஒருவன் அழிவுக்குப்பின் காரணங்களும் காரணமானவர்களும் மறைகிறார்கள். அவன் எல்லாரோரும் இந்த  அறையில் இருந்த நாட்கள். பிரிவு வெகு இயல்பாக நிகழ்கிறது. இதற்கெல்லாம் காரணமில்லை. சந்தித்துக் கொண்டதால் மட்டும் நிகழ்வதில்லை உறவு. மனவிருப்பம் கடந்த எதேச்சையில் துவங்கி விடும். அற்ப காரணம் ஒன்றைச் சொல்லலாம். சுப்பு அவனை எரித்து விடும்படி வெறுத்தான். தோழர்களும் அறிந்திருந்தார்கள். சுப்புவின் அங்கீகாரத்திற்காகவா இருந்தான். அவனிடமிருந்த மௌனம் இவனை வெளியில் விரட்டிக் கொண்டிருந்தது. சுப்பு இவனைக் கவனித்தது கூட இல்லை. திரும்பத் திரும்ப சுவற்றில் மோதும் குருட்டு வௌவால். பறந்தபடி தூண்களில் மோதிச் சிதறும் குருட்டு வௌவாலிரவைத் தவிர யாரும் துணையில்லை. ஒற்றை நட்சத்திர ஒளி நோக்கி தன் அற்ப சக்தியணைத்தையும் திரட்டி உயரப்பறந்தது. காரணமில்லாமலேயே அவன் மறைந்து விடுகிறான். தற்கொலை செய்து கொள்வான் என்பதற்கு சாட்சியங்களாய் ஒவ்வொரு முகமும். அவன் இறந்து கொண்டிருந்த கடைசி நாட்களில் அவனை யாரும் நெருங்கவில்லை. சுப்பு அவனை நெருங்கியிருக்கலாம். ஒரு பெர்சனாலிட்டி அவனை ஈர்த்த படி கரைத்து விடும். 

சுப்புவின் நண்பர்கள் ஒரு தனிவட்டம். பிளாக் ஹோல் ஒன்றைச் சுற்றிச் சுழலும் கிரகங்களைப் போல் விமர்சனத்திற்கு அப்பால் உருவாகும் ஒரு பெர்சனாலிட்டியிடம் பலர் ஈர்க்கப்படுவது வசீகரமானது தான். மௌனத்திலிருப்பவனின் உள்ளே ஸ்திரீயின் சாயைகள் படிந்திருப்பதை நாடி ஒவ்வொருவரும் சாய்வு கொண்டார்கள். சுப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாரான அப்பாவிகள் அவன் நண்பர்கள். எதற்கெடுத்தாலும் சுப்புவை கேள். மௌனமாய் எல்லாவற்றையும் பார்வை மூலமே பதில் அளித்து விடுவான் சுப்பு. மற்றவர்கள் பேசிப் பேசி வெறுமையடைவதால் சாம்பல் நிறம் அறையெங்கும் படிகிறது. அவனும் சுப்பு மேல் இருந்த ஈடுபாட்டை வெளிப் படுத்தியதில்லை மெல்ல மெல்ல ஒரு பெர்சனாலிட்டியின் மௌனப்பிரேசத்தில் அவனும்; ஒவ்வொருவராய் அகப்பட்டு கரைந்து கொண்டிருந்தார்கள். அறை ஜன்னல்களில் படிந்த சாவு எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முகத்திலும் கறைபடிந்தது. வெளிப்படுத்த முடியாத உணர்வுகளாக.. அவரவர் உள்ளூர உணரக்கூடியதாக இருந்தது அந்தக்கறையின் படுதுயரமான தனிமையை. ஸ்திரீ தன்மையான ஆணிடமிருந்த எந்த வெளிப்பாடும் அவர்களை வெகுவாக ஈர்த்தது. மற்றவர்கள் நிலை பரிதாபமானது. ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்த ஒவ்வொருவருக்குள்ளும் கனலும் நெருப்பு முகத்தில் கருப்பு வடுவாக படிந்தது. எல்லோரும் எவரோ போலாயினர். சுப்புவின் சக்திவாய்ந்த இயற்கைத் தன்மையிலிருந்து மற்றவர்களை சட்டை செய்யும் போக்கு இருந்ததில்லை. அவன் என்ன செய்ய முடியும். பெண் ஸ்பரிசமில்லாத பேச்சிலர் அறையில் கருப்பு படிந்தசைக் எப்போதும் ததும்பிக் கொண்டிருக்கும். அந்த அறையில் இருப்பவர்களுக்கென்று தனி முகம் தோன்றியது. சுப்புவின் 'மோனம்' ஒவ்வொருவர் சாயலிலும் சட்டை துணிமணி ஸ்டைல் பேச்சு நடை விவாதம் உணர்வு கனவு நனவு நினைவு வரை பரவியது. ஆனால் அவன் மட்டும் வேறு பாட்டில் இருந்தான். சுப்பு நகர்த்தும் காய்களை கண்டும் காணாததுமாக அவனை பெரிய தளத்தில் சந்திக்க தயாராக இருந்தான். அந்த மாளிகையில் இருந்த இளவரசியைப் பற்றியும் அவளுக்கு தரவேண்டிய முதல் முத்தம் பற்றியும் கனவு கண்டான். சுவர்களில் சாய்ந்தபடி பலர் சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார்கள். பல புஸ்தகங்கள் திறந்து முகங்கள் பதிந்து மறையும். கண்ணாடி முன் அவன் ஜட்டியுடன் நின்று நாட்டியமாடினான். சுப்பு இதை கவனித்தும் பாராதது போல் புஸ்தகத்துக்குள் புகுத்தியிருந்தான் பார்வையை. கொடியில் தொங்கும் அழுக்குச் சட்டைகள் மடங்கிய கைகளுடன் அசைந்தன. படிப்பவர்களுக்கு நடுவில் அவன் மல்லாந்து கிடைந்தான் ஜட்டியுடன். கலர் கண்ணாடியில் சிரிக்கும் இளவரசியுடன் அதை இதை வம்பளந்து கொண்டு சிறகுகட்டிப்பறந்து சென்றான் . . . ஊரில் விட்டுவந்தவளை நினைத்து பெருமூச்சு விட்டான் . அவன் குணஷ்டைகளை ரசிப்பதற்கு ஒருவருமில்லை. எல்லாரும் சீரியஸ்ஸாக டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தார்கள். பேச்சாக டீக்கடைக்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். அவனை ஒருவரும் கூப்பிடவில்லை வந்தால் டீ கொடுப்பதாக ஒருவன் கூட்டிச் சென்றான் அவனை. தேனீர் கோப்பைகளை ஆட்டி ஆட்டி தீவிரமடைந்த விவாதத்தின் ஊடே அவன் சில மோசமான கமெண்ட்களை சொல்லி தனியே சிரித்துக் கொண்டிருந்தான். 

இரவு வரவும் நண்பர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்பேடு ராணி கிங்கிளாவர் எட்டாம்பந்து நாலாம் பந்து அறாம்பந்து ஆஸ் ரெம்மி. சீட்டுகள் களைந்து கிடக்கின்றன. அவன் நிழல் அவர்களுக்குமேல் விழுந்தது. வீலிங்ஃபேனில் தொங்கும் அவன் உடல், ஜட்டியுடன். கருத்து வளைந்த கால்கள். பிதுங்கியவிழிகள். நகக்கண்களின் பளுப்புநிறம். சுவர்களில் பதுங்கிய முகங்களும் சாம்பல் கத்திகளும் மறைகின்றன. அவர்கள் தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். சுப்பு ஒவ்வொரு வரையும் வீழ்த்தியபடி கார்டுகளை கவிழ்த்தினான். அவனை ஆண்கள் காதலிக்கிறார்கள் என்று வாய்விட்டு சொல்லி விட்டான் .சந்துக்குள் சரசரவென்று வார்த்தைகள் கூர்மையான கத்திகளாகி முதுகில் பதிந்தன. ஆண் காதலியோடு சண்டை போட்டுக் கொண்டும் இறந்தவனுக்கு சடங்குகள் நடத்திக்கொண்டுமிருந்தார்கள். சீட்டுகள் கலைந்து கிடக்கின்றன. ஊர்வலம் . . . அடையாறு சிக்னலைக்கடந்து செல்கிறது . . செம்பதாகைகள் பட்டொளி வீசிப்பறக்க . . கொடிகள் அசைந்தசைந்து நெற்றிகளை தழுவ . . மேதை லெனினும் ஸ்டாலினும் ஏற்றிவைத்ததீப்பந்தத்தை அணையவிடோம்.... அணையவிடோம் . . செம்பதாகைகள்.. அறைக்குள் அவன் நிழல் சுற்றுகிறது. கீழே கார்டுகள் மேல் எழுந்து மேல் எழுந்து அவன் நிழலுடன் நிழல்களாக சுற்றுகின்றன. சுருட்டப்பட்ட கொடிகள் அறைக்கு வெளியிலும் சுருட்டப்பட்ட அவன் உடைகள் அறைக்குள்ளும் பாதுகாக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்டுள்ள தஸ்தாவேஜுகள், பொருட்கள் விபரம்: சிறகு ஓடிந்த ஷீலிங்ஃபேன். ஓடி நின்று போயிருந்த மூன்லைட் அவன் கேன்வஸ் போக்கில் கிடைத்த 1987ஆம் வருஷடைரி. அவன் எழுதி ரீடைரக்ட் ஆன கடிதம். கிராமத்தில் இருந்து அம்மா எழுதிய கடிதங்கள். சென்னைக்கு வரச்சொல்லி அந்த மாளிகையின் இளவரசி அனுப்பிய தூதோலைகள். பீதோவனின் குரூசர் சொனாடா சம்பத்தின் இடைவெளி லத்தீன் அமெரிக்க சிறுகதைகள். அறைமுழுவதும் கிடந்த பீடித் துண்டுகள். சுப்புவின் சிகரெட் துண்டுகள். ரகுவின் வில்ஸ் சிகரெட்கள் ஆஸ்ட்ரேயில் வழியும் சிகரெட் சாம்பல் பற்றவைப்பதற்கு முன் கொழுத்திய தீக்குச்சிகள் நின்று எரிந்து ஒவ்வொன்றாக தரையில் விழந்து கொண்டிருந்தன. இருபத்தி ஆறு எரிந்த தீக்குச்சிகள் தரையில் வேலை தேடிச்சென்ற பழைய ஷூக்கள். தீர்ந்த விஸ்கிபாட்டில்கள். காலித் தீப்பெட்டி மூன்று . துருப்பிடித்த ஸ்டவ். தகரங்கள் கழுத்தில் பதிந்த வடுக்கள். தகர டின்கள். மூடியில்லாத சோப்பு டப்பா பாதி தேய்ந்த  பச்சை நிற சோப். அவனது டூத் பிரஷ் பிதுங்கிய களிம்புக்கூடுகள். தூக்க மாத்திரைகள். மருந்து சீட்டுகள். போதை மாத்திரை நான்கு. அவன் விட்டு சென்ற எல்லாப் பொருட்களும் இறப்புக்கான அடையாளங்களாய் உயிர் பெற்றுள்ளன. இறந்தவனின் கருப்பு ஷீ சுருண்டு வளைந்து ஊதிப் பெருத்த பிணம்மாதிரி அசைந்தது. கருப்பு ஷீ அழுத்தமாக அவனுக்கள் உற்புகுந்து பதிந்தது. அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகளை பிரித்தான். தனியாக ஆடும் ஆட்டத்தில் கார்டுகளை வீசிக் கொண்டிருந்தான். முதலில் சுப்புக்கு ஒருகார்டு. அடுத்தகார்டு ரகு. அடுத்தது சி. எஸ். அதற்கடுத்தது சங்கருக்கு அப்பணசாமிக்கு சாரதிக்கு பாரதிக்கு குமாருக்கு வந்துபோன தோழர்களுக்கு தலைவர்களுக்கு தொண்டர்களுக்கு பிரஜைகளுக்கு அடிமைகளுக்கு அவனுடைய நண்பர்களான சுப்புவின் அடிமைகளுக்கு . அவனுடைய வெளிறிய உதடுகள் முறுவலித்தன. ஆனால் அவன் என்னதான் கலங்கா உறுதியுடன் இருப்பினும் அவனது வெளிறிய முகத்தில் சாவின்முத்திரை பதிந்திருந்தது. ஏற்கெனவே இறந்துவிட்டவனது அழகிய விழிகள் பதிந்திருந்தன. நண்பர்கள் விந்தையான அவன் விதிகளில் சுழன்று சுழன்று கார்டுகளை வீசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரிடமும் அவன் தோற்றுப்போனதாக அந்தக் கணத்தில் உணர்ந்தான். அவன் ஒவ்வொரு கார்டாக திரும்பவும் கலைத்து போட்டு ஆடிக் கொண்டிருந்தான். இது உனக்கு இது அவனுக்கு இது எனக்கு உனக்கு அவனுக்கு இவனுக்கு. . பந்தயத்தில் தோற்றுப் போனதை ஒத்துக்கொள்கிறேன் . . என்று துணிச்சலாக ஒரு வெடி வெடித்து கத்தினான். அறை ஜன்னல்கள் திறந்து சிரிப்பினால் படபடத்து அதிர்ந்தன. அவனுக்கே ஆன மர்மம் நிறைந்த அவர்களுடன் அமர்ந்திருந்தான். லாஸ்ட்கேம். சுப்பும். அவனும் வெட்டுச்சீட்டு. அவன் சுப்புவை ஏறிட்டுப் பார்த்தான். அவன் லேசாக சிரிப்பது போலிருத்தது. கடை வாய் ஓரங்களில் அலட்சியத்தைகண்டு நடுங்கினான. அவன் பார்வையிலிருந்து தப்புவதற்காக சீட்டுக்குள் புகுந்து கொண்டான்.சுப்புவின் கண்கள் மூடியிருந்தன. ஒரு மோனத்தில் சீட்டுகளை விசிரியாகப்பிடித்துக்கொண்டு அவன் கண்கள் மூடிய இமைகள்மீது எட்டிப்பார்த்தான். திடீரென்று திறந்த இமைகள் வெறித்தன, சற்றும் அதை அவன் எதிர்பார்க்க வில்லை. சுப்பு கார்டை வீசினான். அவர்கள் சந்திக்கும் தருணம் . . . அபாயகரமாக இருந்தது. நேருக்கு நேர் கார்டுகளை இறக்கும் சூது ஆரம்பமானது. ஒருவர் மாற்றி ஒருவர் சமபலத்தில் சரிந்து கொண்டு . . . அடுத்தடுத்து மேலும் மேலும் அவன் தோற்றுக் கொண்டிருந்தான். கடைசி கார்டு அவன் கையில். சுப்பு தடுமாறினான். அவனை நோக்கி கார்டை பிரயோகிக்க தயங்கியதை உணர்ந்த க்ஷணமே சுப்பு வெளியேறியிருந்தான். அவன் கடைசிகார்டு மூடிய நிலையில் இருந்தது. அதை எடுத்து பையில் வைத்துக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தான். சுப்பு ஏன் ஏன் . . சுப்பு எதிரில் நின்றான். அந்த கார்டு அவன் பையில் இருந்தது. சுப்பு அதைப்பார்த்தான். அதை எடுத்துப்பார்க்க அவன் முயலவில்லை. யார் தோத்தது . . அதை இருவரும் முடித்துவிட விரும்பவில்லை. கடைசி கார்டை அவன் இவன் பார்காத நிலையில் அவன் அதை சொல்ல மறுத்தான். எதையும் சொல்ல முடியவில்லை அவனால். பின் தொடர் பின் தொடர் என்று தொடந்து கொண்டிருந்தவன் நின்று போயிருந்தான். சுப்பு உன்னை தோற்கடிப்பதற்காக விளையாடவில்லை. உன்னோடு விளையாடும் ஒவ்வொரு நிமிஷமும் நீ அலட்சியமாய் இருந்தாய்.. அதான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். உன் அலட்சியத்தை கண்டு நான் பதைக்கிறேன். ஆனால் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. நான் நம்பவே மாட்டேன் .. சுப்பு மௌனமாய் எதிர்த்தபடி எதிரில். மௌனத்தின் எதிர்ப்பலைகள் அவனை இழுத்துச் சென்றன. மணல் மணலாய் அடுக்கி வைக்கப்பட்ட அவன் மௌனம். வார்த்தைகளற்ற மௌனம் ... எதையும் தரமறுக்கும் மௌனம் கேட்கமறுக்கும் பேசமறுக்கும் சந்திக்க மறுக்கும் பிரியமறுக்கும் பிரிந்தபின் சந்திக்கமறுக்கும் பிறகு இன்று நேற்று நாளை இனி எப்போதும் சந்திக்கமறுக்கும் அவனை  மறுக்கும் மௌனத்தின் முன் மௌனத்தின் முன் முன் முன் முன் முன் அவன் முன் இவன் இவன் முன் அவன் அவன் இவன் இவன் அவன் மறுக்கும் முன் மணல் ஊளையிட்டு பரபரக்கும் மணல் முன் மௌனத்தின் முன் மணல் வெளியை கடந்து கடந்து பாலைவன மௌனத்தில் ஊளை யிடும் கூ . . கூ.. வென்று உளையிடும் பாலைவனத்தில் பரபரக்கும் அவன் மௌனத்தில் அவன் தேடித்தேடி அலைந்தலைந்து நின்று நின்று காத்திருந்து விட்டு சிறுவனைப்போல் புறங்கையால் கண்களை கசக்கியபடி மணலில் புரண்டு புரண்டு கால் கைகளை பரத்திக்கிடந்தான். மணலில் அவன் கையை தலைக்கு வைத்து அனாதை யாக படுத்திருந்தான். அவன் கால் கைகள் பனியில் வெட வெட வெட வெட வென்று நடுங்குகிறது.. சிதறடிக்கப்பட்ட சிறுவனைப் போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான் . . செத்தபிணமாக மணலில் வெள்ளையாக வெளிறிப்போன உடல் பல நாட்கள் பனியிலும் காற்றிலும் வெயிலிலும் தனிமையிலும் வெறுமையிலும் புயலிலும் தலைக்குள் கொந்தளிக்கும் உஷ்ணத்தில் துளையிட்டு இறங்கும் இயற்கையின் விரல்கள் அவனைக் குளிர்வித்தபடி மரத்துப் போகச் செய்தது. அவன் பையில் பிரயோகிக்கப்படாத கார்டு இருந்தது. முதுகில் செலுத்தப்பட்ட கத்தி குத்திட்டு நின்றது. அதை அவன் செத்தபடி உணர்ந்து கொண்டிருந்தான் . . அதை விட்டு தன்னையும் கடந்து அவ்வுணர்வின் எல்லையை விட்டு கடந்து தொலைவில் சல சலத்து ஓடும் கானல் நதியின் அக்கரையில் அவன் நண்பன் தலை திரும்புகிறான். கானலில் உருவம் அசைகிறது. அவனை திரும்ப அழைக்க விரும்பினான் . . இருவருக்கும் நேர்ந்த துரதிர்ஷ்டமான சாம்பல் நிறக் கத்தியில் அவர்கள் இருவரின் சதையும் நரம்புகளும் சிதறி கந்துகந்தாய் முறிந்து கிடந்ததை மணலில் மறைக்க முயன்றான். . அவன் நண்பன் தனியாக அலைவதை.. புயலில் கூக்குரலிட்டு அழுவதிலிருந்து அவனை தவிர்ப்பதற்காக.. அவனுக்குத் துணையாக யாருமில்லாத அந்த தருணத்தில் அவனை . . அழைப்பதில் தான் அவன் கைகள் எதேச்சையாக அசைந்து கொண்டிருந்தன. மணலில் எழுந்து நின்ற மணலைப் போன்ற வெள்ளை நிறமடைந்து வெளிறிப்போன அவன்கைகள் அசைந்துகொண்டிருந்தன... தொலைவில் நீர் உருவம்போல் மெல்லிய நீர்ப்படலம் போல் வெள்ளை நிற அரூபம் . அது அவன் தான் . . மெல்ல மெல்ல கானல் அலைகளில் சின்னா பின்னமடைந்து சிதறிச் சிதறி கானலாக அலையலையலையலையாக அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்வதை அவன் கண்கள் இறந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தன. அவர்கள் இருவரும்கடைசி முறையாக நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருந்தபோது கண்களின் ஒவ்வொரு கடைக்கோடியிலும் அவ்வி நாடியில் பரவிய கசப்புணர்வு அவன்முன் உடல் முழுவதும் பரவியது. கசப்புணர்வின் சுடர் நெருப்பு திகுதிகுவென அவனைத் தொட்டு பற்றிக்கொண்டு எரிகிறது. கருகிக்கொண்டிருக்கும் கசப்பின் பச்சை நிறமானது..... அவர்கள் அறையின் கதவுகளும் ஜன்னல்களும் பற்றி எரிவதாக இருந்தது . . அறையிலிருந்த பொருட்களும் பச்சை நெருப்பில் கசப்புணர்வின் சடசடப்பில் கதவுகள் பற்றி எரிந்து கொண்டி ருக்கின்றன.. அவன் முழு ஆகிருதியும் பச்சை நிறமடைந்து கருகியும், சுப்புவின் பார்வைக்கு முன் தன்னை நிறுத்தியிருந்தான். அதை விட்டு தப்பியோட அவன் விரும்பவில்லை. தடுமாறி விழும் தருணத்தை எதிர்பார்க்கவுமில்லை. உடல் முழுவதும் தீப்பரவுகிறது. அவன் உதடுகளில் துடித்துக் கொண்டிருந்த கணவாயின் குமுறலை . . அவன் அவனுக்கு முன்னால் வெளிப்படுத்தாமலிருந்தான். அவ்விடம் விட்டு அவன் நகர்ந்து சென்றான். அவன் மட்டும் வறண்ட மணல் வெளியில் அவன் விட்டுச் சென்ற மௌத்தின் சாயைகள் அம்மணல் வெளியெங்கும் ததும்பி எரிவதை அவன் எரிந்து கொண்டிருந்த நிலையிலும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளவரசியின் முதல் காதலின் முத்தத்தை விட... மணலில் வரண்டு கிடந்த நண்பன் உதடுகளை நடுங்கும் விரல்களுக்கிடையில் சந்தித்தான். இந்த கசப்புணர்வின் மர்மத்தை வசீகரமான ஏக்கத்துடன் சுமந்து செல்கிறான். சுப்புவின் நிழலாய் சரிந்து கிடந்த நண்பர்கள் நிழல் நிழலாய் கரையும் நிழல்களாய் கூட்டம் கூட்டமாய் அவனைப் பின் தொடரும் துரதிர்ஷ்டத்தின் வேளையில் ஷீலிங்ஃபேனில் வளைந்து தொங்கும் அவன் கால்கள் அறைமுழுவதும் சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சுழல்கிறது... அவன் உடல் அந்த அறையின் மூலையில் தகரங்கள் சிறகுத் தகடுகள் கிழித்த தடிப்புத் தடிப்பான நினைவுகளுடன் .. தூக்க மாத்திரைகளில் நீலமடைந்து கிடந்தது. Valume Ten மாத்திரைகள் சிதறிக் கிடந்தன... போதை மருந்துகளில் திறந்த பல அறைகளின் வெளிச்சங்களில் நீல நிறமடைந்த மணல் வெளியில் சரிந்து சரிந்து ஓடிக் கொண்டிருந்தான் ..... திரும்பத் திரும்ப அவன் நினைவை விட்டு நீங்காமல் ... அதே இடத்துக்கு நீல மணல் வெளிக்கு கூட்டிக் கொண்டு போகிறான். அவன் முன் அவன் ...பெரிய பெரிய சீசாக்கள் திறந்து புகைகக்குகின்றன . . . மணலில் சில உருவங்கள்... நீல ஸ்படிகக்கல்லைப் போல் அவன் நண்பன் . . . எல்லாமே அவனிடமிருந்து தோன்றுவதாய் . . அவனிலிருந்த சில சாயைகள் வெளிப்பட்டு நீல மணல் வெளியில் மல்லாந்து கிடக்கின்றன. அதில் யாவர் நிழல்களும் தெரிந்து கரைந்து மறைந்தன .... கனவுகளும் உருவங்களும்' அரூபங்களும் சதாவும் மாறி மாறி எல்லா முகங்ளாகவும் அவன் தோன்றினான். நீல இரவுகள் தோன்றி ஜன்னல்களின் உள்ளே பார்வை கொள்ளா அகாதம் ... திறந்து சென்றது . . வெள்ளையும் நீலமுமான கோடுகள் அடர்ந்து சுழல்கின்றன .. மௌனத்தின் உள் தளம்.. நீலமே ஸ்பரிசமாய் அவனை நிர்வாணமாக இழுத்துச் செல்கிறது ... எங்கும் உயிர்களின் முணுமுணுப்பு.. மௌனத்தின் அடியில் தூங்தம் உருவங்கள் எழுந்து வருகின்றன . . நீலப்புகைக் கூடுகள் திறந்து எங்கும் சூழ்கிறது. வெள்ளை - வெளியில் அமர்ந்த அவன் இவன் பிம்பங்கள் உள்வாங்கிய பிளவுகளில் . . செல்கின்றன . . உள்ளே திறந்த சில அறைகளில் மௌனத்தின் நூறாயிரம் சாயைகள் நீலத்தில் ததும்புகின்றன. பாழ்விழுந்த கண்கள் ஆழத்தில் புதைந்து வெளிச் சென்று பெரிய பெரிய உருவங்களாக மாறுகின்றன . . நீலம்பாரித்த அவன் உடல் அறைக்குள் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டுள்ளது. தடிப்புத்தடிப்பான . . வெட்டுக்காயங்களில் களிம்பு பூசி.. நீல நிறமடைந்து வெளிரிய அவன் உடல் மீதுபடிந்த சில கனவுகள் நினைவுகள் . . அவன் இவன் அவர்கள் பற்றிய நச்சரிப்புகளின் குத்துக்குத்தான - காயங்களிலிருந்து வடிந்த கருப்பு ரத்தத்துளிகளை அவன் கண்ட கனவு வழியாக வெளிப்பட்ட அவன் இளவரசி. . வெள்ளை துணிகளால் துடைத்து மருந்து தடவிக்கொண்டிருக்கிறாள் . . அவளது சிச்ருஷையில் . . மீள்வதற்காண சிறுசிறு துளி கனவுகள் அரும்பி அவன் உடல் முழுவதும்குளிர்கிறது.. அவனைப் பற்றிய நினைவுகளற்றிருந்த அந்த அறையில் அவனுக்கான கனவொன்று மிதந்து கொண்டிருந்தது . . சில மாத்திரைகள் முத்து முத்தாய் அறையில் சிதறிக் கிடந்தன . . அவற்றிலிருந்த மயக்க நிலையிலிருந்து அவன் அறையே தகரமாக நெளிந்து நில நீறமான வெளிச்சத்தில் மங்கியிருந்தது. அவன் பெரிய பெரிய விழிகள் பார்த்துக் கொண்டிருந்தன...போய்விடு போய்விடு பனியால் நடுங்கிச் சாவதற்முன் ஓடிவிடு...மைக்கேல்ஃபிரே ஓடுவிடு மைக் கேல்ஃபிரே ..அவள் இருந்த மேல் மாடி கண்ணாடி ஜன்னல் மீது கல்லெறிந்ததும் ஜன்னல் திறந்து லிசா எட்டிப்பார்த்ததை... விரைத்து இறுக்கும் பனிக்குள்ளிருந்து திறந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான். ஓடிவிடு மைக்கேல்ஃபிரே.... குளிரால் விரைத்து இறந்து விடுவாய்.. நீஓடி விடு... இறந்து விடுவாய்...விரைத்து விடுவாய்... I do not want to liye I do not want to live.. The Dead The Dead..... 

இளவரசியின் புலம்பல்: ...
ஆனால் உன் சிகரெட்நெடி இருந்துகொண்டே இருக்கிறது. மாளிகைக்குள் நேரம் அப்படியே நின்று விட்டிருக்கிறது. நீ விட்டுச் சென்ற கறையாண்கள் என் இருப்பிடம் நோக்கிவந்து கொண்டிருக்கின்றன. இறுதி வரை உன்னை அங்கீரிக்கவில்லை என்று சுப்புவைச் சொல்ல என்ன இருக்கிறது.உறவு அமைவதற்கும் மனவிருப்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நம்பு.உனக்கு எழுத அவனுக்கு வார்த்தைகள் இல்லை என்று புரிந்துகொள். அந்த தருணத்தை அடைந்தவர்களுக்கு சூதுதான் பெரிய மர்மம். ஒருவரை ஒருவர் காப்பாற்றிக்கொண்டிருந்தால் எல்லாமே பாழாகியிருக்கும் காதல், வசீகரம் ,விந்தை இளமை இவற்றுக்காண அர்த்தங்களே சூதிலிருப்பது தான். உண்மை என்று எதையும் தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறோம். இதோ என் மாளிகையில் தொடர்ந்து அலைந்து கொண்டிருக்கிறேன் ...இதைவிட்டு என்னால் வெளியேற முடியாது. எத்தனையோ காதலர்களைச் சந்தித்து விட்டேன்... ஒவ்வொருவராய் கடந்துபோகிறார்கள். ... எதையுமே பெறவில்லை என்றே தோன்றுகிறது. உன்னை நான் நம்பவில்லை ஓடிப்போய்விடுவாய். நீ அயோக்கியன்...ஏன் என்னை துரத்தி அடிக்கிறாய்... உன்னால் என் ஆவியே கலங்கிக் கொண்டிருக்கிறது . . . என்னை விட்டுத் தொலை.. ஏமாற்றுகிறாய் என்னை பொய் பொய் பொய் பொய்... 

ஒவ்வொருவராய் இந்தமாளிகையை விட்டு மறைந்து போனார்கள், சபிக்கப்பட்ட குயில் நான். தனிமையடைந்து கிடக்கிறேன். வருகிறவர்களின் சாயைகளும் நிறங்களும் சுவர்களில் பதிகின்றன. இந்தக் கண்ணாடிகளின் நிறங்கள் ஒவ்வொருவரின் விந்தைப் பரப்பு, அவர்கள் முகங்கள் கறைபடிவதேன்... அவர்கள் ஏன் மாட்டிக்கொள்கிறார்கள். கண்ணாடிகளில் மோதிமோதிச் சிதறுகிறார்கள். சிதைகிறேன் நான்... ஒவ்வொருவரின் சிதைக்கப்பட்ட வாழ்விலிருந்தும் சிதைக்கப்படுகிறேன். மாளிகையில் இருந்த சாயைகள். என்றுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய சினேகிதனை தேடித்தேடி... அவனைப்போன்ற சாயைகள்.. அவன் இந்த உலகத்தில் தோன்றாதபோதும் அவனை ஒவ்வொரு இடமாய் இந்த அறைகளில் தேடித் தேடி.. அதே சாயைகள் அடிமனத்திலிந்துமேல் எழுந்து கலர்கண்ணாடிவெளியில் அவனை உயிர்ப்பிக்கிறேன்.... இறந்தபடி. அவனுக்காக எல்லாவற்றையும் முன்வைத்து அவனை என் கைகளோடு பிணைத்து உறங்குகிறேன். ஒவ்வொரு சிறு இடத்திலும் அவன் பரவுகிறான். அவனே பொன் நிறமான சிறுவனாக செம்பட்டை தலையுடன் என்னை ஊடுருவிப் பார்க்கிறான்.செம்பட்டைக் கண்களில் மிதக்கும் என் உருவம் தலைகீழாக நீந்துகிறது. அறைச் சுவர்களை ஒட்டி நடக்கிறான். மாளிகைமீதுள்ள விளக்குத் தூண்மீது பெரிய சேவல் அமர்ந்திருக்கிறது மாளிகைக்கு ராஜாவாய்...மாளிகையின் வெறுமையான தூண்களில் கால்வைத்து நின்று கொக்கரிக்கும் சேவல்கள் மந்திர வாதியைப்போல் செந்நிற கொண்டைகளை அசைத்து ஆமோதிக்கும். அவனும் நானும் கல்தூண்களைச் சுற்றிச் சுற்றி பறந்து பறந்து விளையாடுகிறோம். மாளிகை முழுவதும் ஓடி ஓடி விளையாடுகிறோம். இரவெல்லாம் சேவல்கள் ராஜியத்தில் என் உடல் மீது பதிந்து உறங்குகிறான். அங்கிங்குமாக தலை நீட்டிப்பார்த்தபடி அவன் சேவல் வரும். எங்கள் தோள்கள் மீது ஏறி நின்று கொக்கரிக்கும். பெரிய அகல வராண்டாவில் பழந்தூண்கள் பார்த்தன. பச்சை பெயிண்ட் அடித்தவிட்டங்களை வெருக் வெருக் கென்று பார்க்கும் சேவல் கண்கள் வட்டமானவை. எங்களை ஊடுருவி காட்டுக்கு அழைத்துக் செல்லும். 
கனவுகளில் வரும் காடு. காட்டுவழிநெடுக சிறு சிறு சீனிக் கற்களில் இருந்த அதிசய ஒளியை ஊடுருவி நாங்கள் அடிவாரத்தை நோக்கி நடந்து செல்கிறோம். கீழேவரை எழுந்த சேவல் இறகுகள் ஆடி அசையும்.பொன் நிற சேவல் உயரத்தில் உயரத்தில் பறந்து செல்லும்... என் அருமை கண்ணும் மறைந்து போனான். அக்கற்களை பார்த்துக் கொண்டே அடிவானத்தை நோக்கி நடந்து போகிறேன். பெரிய சேவலுடன் அவன் விண்ணுக்கடியிலிருந்து கூப்பிடுகிறான். அந்த ஓசை மாளிகை எங்கும் எதிரொளிக்கிறது. என்னை எங்கெங்கோ கூப்பிட்டு தவிக்கிறது... சுவர்களுக்கப்பால் கைவிடப்பட்ட அவனும் சேவலும் போய்மறைந்தார்கள். காத்திருக்கிறேன் மாளிகையின் உச்சியில்.... அவன் வருவான் என்று வானம் உச்சரிக்கிறது...பெரிய பெரிய பாதங்களுடன் வேறு வேறு மனிதர்கள் மாளிகை அறைகளுக்கு வருகிறார்கள்... அவர்களிடம் கேட்டேன் அவனை எங்கே அவனை எங்கேனும் பார்த்தீர்களா! அவன் சேவல் எப்படி இருக்கிறது... சேவலைப்பார்த்தாகச் சொன்னார்கள் கம்யூனிஸ்ட்கள். சேவலின் கொண்டைகளிலிருந்து கிடைத்த வசீகர வெளிச்சம் மாளிகையெங்கும் பரவுகிறது. அவள் முகம் மறைந்து அவள் உயிர் போன்ற சுடரில் இழைகள் பிரிந்து மங்கிமறையும் பெண்ரூபங்களாக அடுக்கடுக்காக சுவரில் பதிந்தன .பழம் புகைப்படங்கள் மாட்டியிருந்த மாளிகையின் வராண்டாவில் திராட்சை நிறமான அவள் அப்பா அம்மா புகைப்படத்தின்மீதும் அவள் சிறுமியாக இருந்த போட்டோ மீதும் தீபப்புகை படிந்து ஆற்றொனா சோகத்தின் சித்திர வரைவுகளாய் தீபம் அசைந்தது... தீராது புலம்பிக் கொண்டிருக்கிறாள்...மாளிகையில் பரம்பரம்மென்று காற்றடித்து ஜன்னல்கள் அடித்துக் கொள்கின்றன. அவற்றின் சப்தத்திலிந்து பற்றிய நெருப்பு திகுதிகுவென கதவுகள் ஜன்னல்களுக்குள். அவன் கண்ணாடிமுன் ஜட்டியுடன் நின்று நாட்டியமாடுகிறான். கறுப்புச்சட்டமிட்ட கண்ணாடிமுன் நிற்கிறான். ஒயிலாக நடந்து சென்று மோனோ .... டேப்ரெக்கார்டரில் அவன் அந்தப் பாடலை திரும்ப ரீவைண்ட் செய்து ஓடவிடுகிறான் .... சுற்றிச் சுற்றிச் சுழன்று எரிகிறது நெருப்பு. . . அறைநடுவில் தொங்கும் தற்கொலை நிழல் .... வெறுமையின் இதழ்களாய் விரியும் கண்ணாடி .... கண்ணாடியின் கீறலொலி விரிவடைந்து தாக்குகிறது. தனித்தனிமுகங்களாய் விழுந்து கொண்டிருக்கும் கண்ணாடி...அரை பட்டுக் கூழான முகப்பதிவு. சுவரில் ரத்தம்.கொலை சுற்றுச் சுவர். அவன் கண்ணாடியின் எதிர்உருவம். இறந்து குளிரும் கண்கள் . அவன் முகம் நொறுங்கி விழுந்து கொண்டிந்தான். கண்ணாடி வில்லைகளாக நிழலுருவகங்கள்.அறையை விட்டு வெளியேறி மாளிகையெங்கும் கண்ணாடிகளின் நீர்ப்பரப்பில் தத்தளிக்கின்றன.. அப்பாடலின் கோடுகள் .நீரின் அடியில் அசையும் அந்தரங்க இசையின் அதிர்வுகளாய் பழம் கிழவனால் இசைக்கப்பட்டு மிருகங்களின் குரலை ஒத்திதிருந்தன. அலைந்து திரிந்த புலிகளின் பசியால் நிறைந்த கோடுகள். அப்பாடல் எங்கெங்கோ இழுத்துச் செல்லும். வயோதிகனான கிழவன் மரங்களுக்கிடையே  நீரில் பதிந்த நிலவை அசைக்கிறான். நினைவுகளைத் தொட்டு வில்லை முறுக்கி நரம்புகளை நீருக்கடியில் செலுத்தி தேய்க்கிறான். ஒரே கார்வையுடன் நீர் சலசலக்கிறது ... அலைகளில் தோன்றும் ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருந்தது.. மனித உருவில் பல சாயைகள் அசைகின்றன. யாராலும் தீர்க்கவே முடியாத துயரங்களின் புயல்... வீசுகிறது. புயலின் இசையில் எரியப்பட்ட பாறைகள் சுழன்று சுழன்று உருள்கின்றன. கரகரத்த கிழவனின் குரல் மாளிகையெங்கும் எதிரொலிக்கிறது.......... எனவே கட்கட்கட்கட்கட்ககட்கட்கட்கட்கட்கட்கட்........

டிசம்பர் 1990, ஜனவரி 1991