தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, September 30, 2023

விமர்சன மீட்சிகள் - பிரமிள்

 கட்டுரை 
 விமர்சன மீட்சிகள் - பிரமிள்
எழுத்துப் பரம்பரை என்று ஏதாவது
எ ண்டா? இந்தப் பரம்பரை யாவாரம், இளங்கோ, கம்பன் ஆகியோரின் பெயர்களுடன் சம்பந்தம் காட்டிய இலக்கிய சரித்திரம் இல்லை. தமிழில் பாரதியின் மறைவுக்குப் பிறகுதான், பாரதி பரம்பரை என்ற பிரேயாகமாக இது பிறந்திருக்கிறது. இந்தப் பிரயோகத்தின் தாத்பர்யம், பாரதியின் கவிதா உபாசனையிலிருந்து அவனது சமூக தர்சன உபாசனை வரையில் காட்டும் ஈடுபாட்டையே குறிக்கும். வர்ணாஸ்ரமமே நீதித்வம் என்ற கொள்கை நிலவி வந்த ஒரு சமூக மனோமண்டலத்தினை, பாரதி நேர்முகமாக எதிர்த்தவன். இதனால்தான் பாரதியிடமிருந்து பாரதிதாசனும், பாரதிதாசனிடமிருந்து அண்ணாதுரையும், கருணாநிதியும், ஒரு பரம்பரைத் தொடர்ச்சியைக் காட்டுகின்றனர். கவித்துவமாகப் பாரதியிடம் பிறந்த நவீனத் தொனியை, புதுமைப் பித்தனின் பின்னலான சிந்தனைச் செறிவு கொண்ட உரைநடை தொடராகக் கண்டாலும், பாரதிதாசன், புதுமைப்பித்தன், அண்ணாதுரை, கருணாநிதி யாவருமே ஒரு புதிய மனோதர்ம எழுச்சியினை எழுத்தியலாகப் பயின்றவர்களாவர். இவர்களுள்
4 கணையாழி / ஜூன் 2014
புதுமைப்பித்தனின் இலக்கியச் சாதனை வீறு, ஒரு சக்ரவர்த்தியாக அவரைக் காட்டுகிறது. நவீன தொனி, சிந்தனைச் செறிவு ஆகியவற்றைப் பின் வைத்து, பாமரப் பெருவாரி மக்களிடையே இந்த புதிய மனோதர்மத்தைப் பரப்பி வேரூன்றச் செய்ய எழுந்த ஈ.வெ.ராமசாமி. (பெரியார்) இயங்கிய நேர்முகத் தன்மையை, பாரதிதாசன், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் ஆதர்சித்து எழுதியிருக்கிறார்கள். எழுத்து வடிவங்களிலிருந்து கிடைக்கும் சாட்சியங்கள் இவை. இந்த இயக்கத்தின் நாடகத் துறை வெளியீடு மிகக்காட்டமாகப் பெரியாருடன் இயங்கிய எம்.ஆர். ராதாவிடமும், சினிமா வெளியீடு கவர்ச்சித் தன்மையாக அண்ணாதுரை கருணாநிதியுடன் இயங்கிய எம்.ஜி.ராமச்சந்திரனிடமும் பிறந்து, பாமரப் பெரும்பான்மையினருள் ஊடுருவிற்று. எனவே, இது ஒரு சமூகப் புரட்சித் தொடர் இயக்கம். இந்தப் புரட்சிகரம் மட்டுமே, பாரதி பரம்பரை என்ற பிரயோகத்தின் நியாயமாகும். ஆயினும்கூட, புதுமைப்பித்தன் தம்மைப் பாரதி பரம்பரைக்காரராகக் கொண்டதில்லை. அவ்விதம் தங்களைத் தாங்களே கொண்டாடியவர்களை, அவரும்
பி.எஸ்.ராமையாவும், 'வீரபாரதீயன்' என்று நக்கலடித்திருக்கிறார்கள் (தகவல் சி.சு. செல்லப்பா). பெரியாரின் சமூகப் புரட்சிகரம், பாரதியின் தளத்தைத் தொட்டு அதனின்றும் வேறுபட்டு விரிந்த ஒன்று. இந்த வேறுபாட்டை
ணர்ந்து, பெரியாரின் இயக்கத்தைப் பாதகமாக விமர்சித்து, பாரதி ஒரு கட்டுரையைக்கூட எழுதியுள்ளார். இதன் உள் விவரத்துக்கும் பாரதி பெரியார் வேறுபாட்டுக்கும் வருமுன் இலக்கியப் பரம்பரை என்பதுக்கு ஏதும் அர்த்தம் இருந்தால், அதில் நீதித்துவத்தின் நம்பிக்கை, கொள்கை என்ற வெளி வியாபகமாக, இந்த
இழை இலக்கிய இயல் வடிவத்துக்கு பொருளம்சத் தகுதியை வழங்குவதாக இருக்க வேண்டும். நீதிப் பண்புக்கு முரணாக அழகினை அநுசரிக்கும் இயல் எதுவும் இருக்க முடியாது. விமர்சனத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அநீதியே
அழகியலாக வடிவெடுக்க இடமில்லை. ஆயினும், இல்லாமையற்ற, சமூக ஏற்றத் தாழ்வுகள் அற்ற பகுத்தறிவுப்பூர்வமான இயக்கங்களை வேரறுக்கும் ஏற்றத் தாழ்வுக் கங்காணிகள், இந்தியாவில் அழகியலை வர்ணாஸ்ரமச் சார்புள்ள
இயலாகவே பயின்று
வந்திருக்கின்றனர். காரணம், வர்ணாஸ்ரமமே தர்மம் நீதி நியதி என்ற இந்திய மனோவியாதி மண்டலத் தொடர்ச்சியாகும். இது இந்தியாவை, 'எவனுக்கும் மண்டியிடும் எந்து புய நாடு என்றே சரித்திர காலங்களில் காட்டி வந்திருக்கிறது. சரித்திர சமூக சுவாதீனம் உள்ளவர்கள் இதை மறுக்க மாட்டார்கள்.
ஆனால், அத்தகைய அதுவும்
சுவாதீனம்
இ இங்கே இன்று எழுத்துத் துறையில் ‘பூந்து' செயல்படும் பெரும்பான்மையினருக்கு இல்லை. உயிர்த்தன்மைதான் 'அழகு'. உயிர்த் தன்மை, புது மலர்ச்சி என்கிற தன்மையாக, ஒரு வெளியீட்டில் நிலவும் நிலையே "அழகு இதனை உணராதவர்கள் பயிலும் 'அழகியல்”, ஒரு வறண்ட 'இயல்' தானே அன்றி, அழகுடன் சம்பந்தம் உள்ள ஒன்றல்ல. இந்த உயிர்த் தன்மைதான் என்ன என்று பார்த்தால், அது நீதியுணர்விலிருந்து பிசகாத ஒரு மனோதர்மம் என்று காணலாம். எப்போது இந்த மனோதர்மத்திலிருந்து கலைஞன்
ஜூன் 2014 / கணையாழி 5
6
பிசகுகிறானோ, அது அவனது படைப்பிலிருந்து பிறிதான தனி மனிதப் பார்வைப் பிசகாக இருந்தால்கூட, அது அவனது கலை இயக்கத்தை வளர வைத்துவிடும். மௌனிக்கு நடந்தது இது என்பது, நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிற எனது சித்தாந்தம். பெரிய கலைஞனுக்குரிய லட்சணங்கள் இருந்தும், அவர் விரிந்து வியாபிக்க முடியாமல் போனதுக்கு இந்த மனோதர்மப் பிசகே காரணம். அவரிலிருந்து பல படித்தரங்கள் கீழே உள்ள 'புத்திசாலி" திறனாளியான சுந்தர ராமசாமிக்கும் இதுவே நடந்திருக்கிறது. ஓரளவு நம்பிக்கைக் காட்டிவிட்டு, இந்த மனோதர்மப் பிசகினால் சுத்த சூனியமாகிவிட்ட ந.முத்துசாமி, பிறக்கும்போதே இந்தத் தார்மீகப் பிசகினால் சவலைப் படைப்பாளியாகப் பிறந்து அறுவை இலக்கியம் பண்ணும் ஜெயமோகன் ஈறாக, இந்த எனது சித்தாந்தத்துக்குச் சாட்சியங்கள் உள்ளன.
இந்தத் தார்மீகப் பிசகுக்கு, இவர்களும், இவர்களுடன் ஒத்தூதுகிறவர்களும் தரும் சப்பைக் கட்டுதான் 'அழகியல்'. அழகியலைப் பற்றி நான் இங்கே ஏற்கெனவே தந்திருக்கும் விவரத்தின்படி பார்த்தால், மனோதர்மத்தின் உயிர்த் துடிப்பினால் விளையும் புதுமலர்ச்சித் தன்மை அற்று, இதனால் அழகும் அற்று. வெறும் இயல்பாகவே இது இவர்களால் இயற்றப்படுகிறது எனக் காணலாம். இதற்கு நேர்மாறானதுதான், பெரியாரின் கலாச்சார நிர்மூலம். அதாவது. சிலப்பதிகாரத்தைப் பெண்ணடிமைவாதம் என்றும், கம்பராமாயணத்தைப் பார்ப்பன சாமிவாதம் என்றும் பெரியார் தாக்கினார். இவ்விடத்தில்தான், நாம் பாரதி பெரியார் வேறுபாட்டிற்கு வருகிறோம். பாரதியின் கலாச்சாரப் பார்வையும், பெரியாரின் கலாச்சார நிர்மூலப் பார்வையும்தாம். இவ்விருவரின் பிணக்கு. இது ஒரு ஆதார வேறுபாடு. பார்க்கப்போனால், பாரதியின் கலாச்சாரப் பார்வைகூட அங்கங்கே தவறான முடிவுகளுக்கு அவரை இட்டுச் சென்றிருக்கிறது எனக்காணலாம். பார்ப்பன எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு ஆகியவற்றில் பெரியாரும் பாரதியும் இரட்டையர்கள். ஆனால், தாம் நேரடியாகச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ்ப்படுத்திய பகவத்கீதைக்குப் பாரதி எழுதிய முன்னுரையில், பௌத்தத்தைத் தவறாகக் கிரகித்துவைத்துத் தாக்கும் பார்வையைக் காணலாம்.
கணையாழி / ஜூன் 2014
பெரியாரும் பௌத்தத்தை அறியாதவர். ஆனால், புத்தர்பிரான் ஒரு தளத்தில் தமது முழு சக்தியையும் கொண்டு எந்த இந்திய ஜாதீயத்தை எதிர்த்துப் பெருமளவுக்கு அதை ஒரு சில நூற்றாண்டுகள் வலுவிழக்க வைத்தாரோ, அதேபோல் தமது முழு சக்தியையும் கொண்டு ஜாதீயத்தை எதிர்த்து, அதன் தேவதாஸி முறை ஈறான செயல்முறைகளைத் தமிழகத்திலிருந்து கல்லி எறிந்தவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார். இது, எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆட்சி வரை தொடர்ந்து செயல்பட்ட ஒன்று. எம்.ஜி.ஆரைக் கட்டாயப்படுத்தியது, பெரியாரின் ஜாதி எதிர்ப்பு வீர்யமாகும். தமிழகத்தில் மட்டும்தான் எவரும் தங்கள் பெயருடன் ஜாதிப் பெயர்களைச் சேர்ப்பதில்லை என்பது, பெரியாரின் உச்சகட்ட சமூக மனோதர்மச் சாதனையாகும்.
பெரியாரின் இந்த வீக்ஷண்யத்தினால், தங்கள் பெயர்களைப் பீடித்திருந்த அரிசனர்,
தேவர், பிள்ளை என்ற பூர்வகுடிச் சேறுகள் உலர்ந்து உதிர்ந்து, வெறும் ஜெயகாந்தன்களாகவும் சா.சந்தசாமிகளாகவும் கார்லோஸ் தமிழவன்களாகவும் நிற்கிறவர்கள், மத்திய அரசின் சாகித்ய அகாதமியில் இன்று குந்தியிருந்து, பெரியாரின் கருத்துகள் பிற இந்திய மொழிகளில் வந்துவிடாமல் அடைசல் போடுகிறபோது, இந்த அடைசல் அந்தப் பழைய பூர்வகுடிச் சேறு தானா என்று நாம் பார்க்க வேண்டும். பெரியாரைப் பாரதி விமர்சித்தது, ஒரு கலாச்சாரக் கோணத்திலிருந்து மட்டுமே என்று திட்டவட்டமாகக் கூறிவிடவும் முடியாது. ரஷ்யாவில் ஜாரிஸம் வீழ்ச்சியுற்று வந்தபோது, 'கிருதயுகம் எழுக மாதோ' என்று அதை வரவேற்ற பாரதிக்கு, உள்ளூர்ப் புரட்சியாளரான பெரியாரின் இயக்கம் எங்கே எப்படிப் போய் முடியுமோ என்ற கிலேசம்தான் ஏற்பட்டிருக்கிறது என்றே அவரது பார்வை காட்டுகிறது. பாரதியின் பிரஸ்தாபக் கட்டுரையை ஞாபகத்தில் வைத்தே நான் இதை எழுதுவதால், இதை என் முடிவாக எடுக்கக்கூடாது. இருந்தும், பாண்டிச்சேரிவாசியாக பிரிட்டிஷ் ஆளுமைக்கு வெளியே பாரதி வாழ்ந்தபோது, பாண்டிச்சேரியின் பிரெஞ்சு அரசு, அங்கிருந்த அரவிந்தர், பாரதி ஈறான தேசியவாதிகளைப் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப் போவதாக ஒரு சமயம் வதந்தி ஏற்பட்டது. அப்போது அரவிந்தரிடம் பாரதி போய், அவர் வெளிநாடு போனால் தாமும் போசுலாம் என விசாரித்தபோது, பாரதியிடம் அச்சமே வெளிப்பட்டதாக அரவிந்தர் வரலாற்று அடிப்படை நூலை எழுதிய புராணி பதிவு செய்திருக்கிறார்.
பெரியாரின் புரட்சிகரத்தைப் பாரதி பார்த்த தோரணையுடன், புராணி வெளிக்கொண்டு வந்த பாரதி இசைவு காட்டுகிறார். இதுதான் கவிதைக்குப் புறம்பான பாரதியின் தனிமனித வடிவம். எனவே, 'பாரதி பரம்பரை' என்ற பிரயோகம்கூட, நான் இங்கே முன்பு குறிப்பிட்ட தீர்க்கமான சமூகப் புரட்சியாளர்களுக்கு நூற்று வீதம் பொருந்தாது. தம்மை ‘வீரபாரதீயன்'களிலிருந்து தனிமைப்படுத்தினார் புதுமைப்பித்தன் என்றால், பாரதிதாசன், பெரியாருக்குச் சளைக்காமல் சம்பிரதாயங்களை உதறி எறிவதிலும், பெரியாரையே அன்புறவுடன் எள்ளி நகையாடக்கூடிய அடிப்படையிலும், தமது மேடைப் பிரச்சார முறைகள் முதலியவற்றிலும்
ஒரு மாவீரனாக வாழ்ந்திருக்கிறார். இங்கே படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடையே உள்ள சம்பந்தமின்மைக்கு, பாரதியும் பாரதிதாசனும் அபார உதாரணங்களாவர். வீர ரஸம் அதீத அளவுக்கு வெளிப்படுகிறது பாரதியின் படைப்புகளில், தனி மனிதராக அவர் 'கொஞ்சம் பயந்தசுபாவம்' என்கிற சாமான்ய லட்சணத்தையே வெளியிடுகிறார். பாரதிதாசன் படைப்புகளில், பாரதியின் அதீத வீர ரஸ வீச்சு ஒன்றுமில்லை. ஆனால், தனிமனிதராக அவர் அஞ்சாமையே உருவான ஒருவர் போகட்டும் இந்தக் கோணத்தை எடுத்தால், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற வரிசை, 'பாரதி பரம்பரை'யே அல்ல, பெரியார் பரம்பரை' எனக் காணலாம்.
வ்விடத்தில், கருணாநிதியைப் படைப்புக் கோணத்திலிருந்து குறைவுபடுத்திக் காட்டுகிறவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அவரது 'மந்திரிகுமாரி'யும். “பராசக்தி”யும் வெகுஜனதளத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய படைப்புகள். அவற்றுக்கு இணையாக, வெகுஜனத்தினரை எட்டக்கூடிய புரட்சிகரத்தை ஜெயகாந்தன்கூட. வெளியிட்டதில்லை. ஜெயகாந்தன் செய்தது மலிவு விலை தர்மப் பிரச்சாரத்தைத்தான். கருணாநிதி இந்தத் தளத்துக்குக் கீழிறங்கி, எழுது கருவியைக் கனவிலும் தொட்டதில்லை. மேலும், "அடேய் பூசாரி/முதலில் உன் ஜாதகத்தைக் கணித்துக் கொள்!" என்ற கருணாநிதியின் 'பராசக்தி' வசனத்தில், "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே" என்ற பாரதியின் தீர்க்கதர்சனம் அபாரமான விடம்பன வடிவம் பெறுகிறது. பெற்ற, அடிமட்டப் பாமர உள்ளங்களில்கூட பாய்ந்து அதிரடி தருகிறது இப்படி மேலும் உதாரணங்களைத் தர இடமுண்டு. இது, கருணாநிதியின் அரசியலுக்கும் புறம்பாக நாம் காணக்கூடிய எழுத்தியல் விபரமாகும்.
'பாரதி பரம்பரை' என்ற பிரயோகம் இப்படி பிசுபிசுத்தால், மீறல் சிறப்பிதழ் பேட்டியில் பெரியாரும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் சந்தித்த விவரத்தையும் அதன் விளைவையும் நான் பதிவு செய்திருப்பதை இங்கே நினைவுறுத்தலாம். அந்தச் சந்திப்பையும் மீறி, பெரியாருக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே உள்ள அடிப்படை ஒற்றுமைகளை இங்கே கவனிப்போம்.
ஜூன் 2014 / கணையாழி 7
"கடவுள் இல்லை, இல்லை, இல்லவே Imraa'இல்லை' என்பதும், 'கடவுளை மற, மனிதனை
நினை' என்பதும் பெரியாரின் கொள்கைகள்.
“அச்சமே கடவுளை உருவாக்குகிறது. அச்சம் இல்லை, எனவே கடவுளும் இல்லை" என்பதும், "தனியாக இருந்து ஒருவன் தன்னை அறிய முடியாது. பிறருடன் ஏற்படும் அன்றாட உறவுகளில், தனது மனக்கிளர்ச்சிகளை இடைவிடாமல் அவதானிப்பதன் மூலம் மட்டுமே தன்னை அறிய முடியும் என்பதும், கிருஷ்ணமூர்த்தியின் முக்கிய கருத்துகளுள் அடங்கும்.
இங்கே 'பெரியாரியம்', பிரமிக்கத்தக்க விதத்தில் ஒரு புதிய பரிமாணத்தினை அடைகிறது என்று காணலாம். பிசுபிசுத்த 'பாரதி பரம்பரை' என்ற பிரயோகம், இங்கே தவிடுபொடியாவதையும் காணலாம். ஏனெனில், பாரதியினால் பெரியாரை உணரவும் முடியவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் மேற்படி கருத்துகளை கிரகிக்கக்கூடிய விதமான மனப் பின்னணியை, பாரதியின் எந்த எழுத்திலும் காணக்கூட காணோம். மாறாக, 'யார் அம்பாளா பேசறது?' என்று கேட்கும் பூசாரியிடம், 'அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்? அறிவு கெட்டவனே!" என்று கேட்கிறார் கருணாநிதி தமது ‘பராசக்தி'யில். இந்த வெகுஜன தளத்து வெளியீடு நேரடியாக பெரியாரின் 'கடவுள் இல்லை', கிருஷ்ணமூர்த்தியின் 'அச்சம் இல்லை, எனவே கடவுளும் இல்லை' என்ற பார்வையைப் பிரதிபலிக்கிறது.
இந்த விவாதத்தை, திடீரெனச் சுருக்கம் கருதி நிறுத்திவிட்டு, இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வருவோம். 'எழுத்துப்
பரம்பரை' என்று ஏதாவது உண்டா? 'பாரதிப் பரம்பரை'யே தவிடுபொடியாகக் கண்ட பிறகு, இந்தக் கேள்வியே ஒரு இளக்காரமான சிரிப்புக்குத்தான் உரியதாகும். இதுவரையிலான விவாதத்தில் நான், வெளியீட்டியலை ஒரு மனோதர்மக் கருவியாகவும் அதன் வெவ்வேறு தளத்து தளத்து வீச்சாகவும் காட்டியிருப்பதை உணர்கிறவர்களுக்குத்தான், இந்தப் புன்னகை பிறக்கும். இப்படி உணர முடியாத நத்தை ஜென்மங்கள், பீக்காக்காய்'கள்கூட தமிழ் எழுத்துத் துறையில் இன்று, 'கச்சை வரிந்துக் கட்டிக் கடுங்கோவணம் தானும்
8 கணையாழி / ஜூன் 2014
கட்டி', வந்த நிற்கிறதுகள்! மனோதர்மத்தை அநுசரிப்பவனைப் பார்த்து, தங்கள் அயோக்யத்தனத்துக்காகவும் (லயம் 11, ப.75) அறிவுகெட்ட பிடிமானத்துக்காகவும், 'பேட்டை ரவுடி' என்று தங்களை மீறிய ஒரு நிந்தா ஸ்துதியை அவனுக்கு இதுகள் வழங்குகிறதுகள்! (வேர்கள் இதழ், பின்னட்டை உள்பக்கம்) மேலும், தாங்கள் 'பேட்டை ரவுடி போல் புலிவேடம் போடாமல்', ஜப்பானிய மொழியிலிருந்து ஆழமற்றக் கதை ஒன்றை உயிரற்றத் தமிழில் பண்ணியிருப்பது பற்றிப் பீத்தியும் கொள்கிறதுகள்! இவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். நாயாவது புலிக்குட்டி வேடம் போட்டுவிடும்; நத்தைக்கும் 'பீக்காக்காய்'க்கும் அதுகூட முடியாது. 'எழுத்துப் பரம்பரை' இதுதானா? எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பாவுக்காகப் படிக்கும் பினாமி வாசகர் சு.சங்கர சுப்ரமணியனின் ‘எழுத்தும் புதுக் கவிதையும்' கட்டுரை இந்த மாதிரி லிஸ்ட் மயமான புஸ்வாண மிரட்டல்களை மீறிச் சிந்திக்கக் கூடியவன் எல்லாம் 'பேட்டை ரவுடி', விசாரித்து அறிய வேண்டிய ஒரு விஷயத்துக்காக, எடுத்த எடுப்பில், 'அடா புடா' என்று சரித்திரம் படைக்கும் சா.கந்தசாமியின் சிறுகதை, வேர்கள் பத்திரிகையில். இந்த மாதிரி 'அடா புடா'வுக்கு இலக்கானவன் மௌனமாகவே இருந்து பிரச்சினையைத் தீர்த்தால், தீர்த்தால், இவன்தான் பேட்டை ரவுடி. இப்போதெல்லாம் எங்கே இந்தப் பேட்டை ரவுடியைக் கண்டாலும், 'அடா புடா' சரித்திர நாயகரான சா. கந்தசாமியார் பிடிக்கிறார் விடுவிடு நடையோட்டம்! விசாரிக்காமல், ‘அடா புடா'வில் இறங்கியதுக்காக மன்னிப்புக் கேட்கக்கூடிய மனோதர்ம தைரியம் அற்ற இதுகூட, இப்ப 'எழுத்துப் பரம்பரை' சுட்டுப் போட்டாலும் கவிதை வராத அழகிய சிங்கர், விக்ரமாதித்யன் ஈறாக!
ஆக. மேற்படி, 'எழுத்து பரம்பரை'யாகப்பட்ட பத்திரிகையின் சிறு பத்திரிகை இயக்கப் பட்டியலைப் பார்த்தால், அதில் அடங்காத இரண்டு பத்திரிகைகளின் பெயர்கள் நேர்மையான இலக்கிய அவதானிகளைப் பிரமிக்க வைக்கும். பிரமிளின் எழுத்துகளைத் தாங்கி வந்த மீறல், லயம் என்கிற இரண்டு பத்திரிகைகள். ஆங்கில அறிவு இல்லாவிட்டாலும் அறிந்ததை அபார தாகத்துடன்
பருகி, ஒரு அரிய நவீன எழுத்தாளராக லயம் ஆசிரியர் கால சுப்ரமணியம் அவர்களால் வழிகாட்டப்படும் கௌதம சித்தார்த்தன் நடத்தும் உன்னதம். இந்த உன்னதம், சமீபத்தில் மிகச் சிறந்த தமிழ்ச் சிறு பத்திரிகை என்ற பாராட்டுப் பரிசைக்கூட பெற்றுள்ளது. ஆனால், இவை பற்றித் தகவல் தெரியவில்லையாம்! யாருக்கு என்று பார்த்தால், 'எங்களுக்கு' என்கிறதுகள் நத்தையும் 'பீக்காக்காயும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இவர்களது பத்திரிகையின் பின்னணியில் இருக்கிறது. 'பீக்காக்காய்' பிரசுரத்தின் பிரசுரத்தின் ரகசியம் ஒன்று. இதனை என்னிடம் சி.சு செல்லப்பா, வெளியிடக்கூடாது!' என்று கூறியே தெரிவித்தார். எனினும், சம்பந்தப்பட்ட பிரச்சினையை மூடி மறைப்பதற்காக 'எழுத்துப்
'பரம்பரை' வேஷம் போடப் பிரசுரதாரர் முன் வந்திருப்பதனால், விஷயம் வெளிப்படுவதே தர்மமாகும். இப்போதைய நிலையில், சி.சு.செ. இதற்கு உடன்படவே செய்வார்.
அன்று சி.சு.செல்லப்பாவின் எழுத்துக்களைத் தாம் நூல் வடிவமாக வெளியிட ஆசைப்படுவதாக அவரிடம் பிரசுரகாரர் விண்ணப்பித்தபோது, அவர் ஒப்புக் கொண்டார். கூடவே பெருந்தன்மையுடன், "எனக்கு ராயல்டி வேண்டாம். தொடர்ந்து வெளியிடக்கூடிய என் நூல்களுக்கு முதலாக அவை இருக்கட்டும். ஆனால், இது தெரியக் கூடாது" என்றார். வெளி வந்த புத்தகங்கள் பொது நூலகங்களுக்குத் 'தள்ள'ப்பட்டனவே தவிர, வாசகர்களை ஈர்த்து வாங்க வைக்கவில்லை. விமர்சனத்தை 'வழவழா' லெவலுக்கு சி.சு.செ. கொண்டு வந்தமைதான் இதன் காரணம். இது மட்டுமல்ல, படிக்கவே முடியாத அளவு தினுசு தினுசான அச்சுப் பிழைகள். ஆயிரம் பிழைதாங்கி அபூர்வ சிந்தாமணிப் பதிப்புகள். இது ஒரு உலக மகா சாதனை. கின்னஸ் ரிக்கார்டுக்கு உரிய சாதனை. இது ஒரு புறம், மறுபுறம் சி.சு.செ. ரகசியமாகப் பாதுகாக்கும்படி கூறிய விவரம்.
சென்னைக்குச் சென்ற வருடம் வந்த சி.சு.செ.க்குப் பண நெருக்கடி. தெளிவில்லாத விதத்தில் தமக்குத் தரப்பட்ட பரிசுத் தொகையை மறுத்து. அதை அவரது இன்னொரு விமர்சன(?) நூலான எனது சிறுகதைப் பாணியில் போட்டுவிட்டார். அது விற்கப்பட்டுப் பணம் வருவதே துர்லபம் என்பது என் அபிப்பிராயம். சுபமங்களாவுக்குப் பேட்டிக் கேட்டு, இரட்டையராகப் பிரசுரக்காரரும் ஒரு எழுத்து கவிஞர்வாளும் வந்து பேட்டி எடுத்து, அதிலும், பின்னாடி, சி.சு.செ. கதறும்படியான கசாமுசா வெளி வருவதற்கும் சி.சு.செ.யைச் சிறப்பித்த பரிசுக் கூட்டத்துக்கும் முன்னாடி, கவிஞர்வாளுடன் சி.சு.செ.யிடம் போனார் பிரசுரக்காரர். சி.சு.செ.. தமது நூல்களுக்கான ராயல்டி அடிப்படையில் பிரசுரக்காரரிடம் பணம் கேட்டார். ராயல்டி விஷயத்தைப் பிறர் அறியக் கூடாது என்று சி.சு.செ. கூறியிருந்தும், கவிஞர்வாளின் முன்னால், “நீங்கதான் ராயல்டி வாண்டான்னுட்டேளே!" என்றார் பிரசுரக்காரர் வெற்றிகரமாக. சூட்சுமமாக சி.சு.செ. எச்சரித்தும். இந்த மகாமந்திரத்தை விடாமல் பிரசுரக்காரர் திரும்பத் திரும்ப உச்சரிக்கவே,
ஜூன் 2014 / கணையாழி 9

பொறுக்க மாட்டாமல் 'ஷட் அப்!' என்றார் செல்லப்பா. உறவு முறிவு! தற்காப்புக்கான கவசம், எழுத்துப் பரம்பரை யாவாரம்/
கட்டம்' என்று சி.சு.செ. தீர்த்தாரோ, அப்போதே அவர் மதிப்பீட்டுக் கண்காணிப்பு வேலைக்குத் தலைமுழுகிவிட்டார் என்று அர்த்தம். இதன்
கேட்கிறேன், "இதுதானா எழுத்துப் அடிப்படையில், 'எழுத்துப் பரம்பரை' என்ற
பரம்பரை?"
"எழுத்துப் பரம்பரை" சமாச்சாரம் சரி, வேறு எந்தப் பரம்பரை சமாச்சாரமும் சரி, ஆய்வுப் பார்வைக்கு மட்டுமே உரியது. 'உரிமை' கொண்டாடும் பார்வைக்கு அல்ல. இதை, 'பாரதிப் பரம்பரை' பற்றிய எனது மேற்படி பார்வை காட்டும். ஆனால், எழுத்துவை நடத்திய சி.சு.செ., அதில் எழுதி ஒரு விமர்சன இயக்கத்தை
நடத்திய பிரமிள் வெங்கட்சாமிநாதன் ஆகிய இருவர், அதில் கவிதைகள் மூலம் புதிய பரிமாணத்தைப் பிறப்பித்த ந.பிச்சமூர்த்தி. தி.சோ. வேணுகோபாலன், சி.மணி, நகுலன், பசுவய்யா, பிரமிள் முதலியோர் இவர்கள்தாம் எழுத்துப் பரம்பரை. பீக்காக்காய் அல்ல! விமர்சனம், கவிதை என்ற எவ்வித சிருஷ்டிகர இயக்கத்திலும் ஈடுபடாமல், எம்.கோவிந்தன், சி.சு.செ., மௌனி ஆகியோரிடம் போய் உட்கார்ந்திருந்து பல்லைக் காட்டி, அங்கில்லாத திறனாளிகளுக்கு எதிராகக் 'கோள்' சொல்வதும், பேட்டி தரவே மறுத்து வந்த மௌனியிடம் (அவரே என்னிடம் சொன்னபடி) காலைப் பிடித்தும் கெஞ்சியும் மௌனியை மண்டூகராக்கும் பேட்டி ஒன்றைக் கண்டு கொள்வதும், பிரசுர
இயக்கத் தொடருடன் சி.சு.செ.க்கு இன்று சம்பந்தமே இல்லை என்றாகிறது.
ஒரு சரித்திரத் தகவல். பிரேட் ஹார்டி, எலியட், எஸ்ராபவுண்டு முதலிய நவீன எழுத்தாளர்களை உலகு அறியும். இவர்களுள் எலியட்டிற்கு நோபல் பரிசுகூட தரப்பட்டுள்ளது. ஆனால், இவர்களைப் பற்றி அறிந்துள்ள அளவுக்கு, இவர்களைத் தமது பத்திரிகை இயக்கங்கள் மூலம் பிரசுரித்து வந்த ஒரு தீவிரமான ஆசிரியரை, பெரும்பாலான வாசகர்கள் அறிந்ததில்லை இவர் ஒரு கவிஞராகவும், நூலாசிரியராகவும் இருந்துகூட. காரணம், அங்குள்ள கண்காணிப்பு தீர்க்கமானது, நேர்மையானது என்பது மட்டுமல்ல. மேற்படி ஆசிரியரே தாம் பிரசுரித்த எழுத்தாளர்களைவிட தமக்கு முக்யத்துவம் தரும் தினுசாகப் பிரசுர சாதனங்களையும் பேட்டிகளையும் சந்திப்புகளையும் உபயோகிக்காமை ஆகும். அந்த ஆசிரியரின் பெயர், ஃபோர்ட் மெடக்ஸ் ஃபோர்ட். அங்கிருந்து திரும்பி, 'இங்கே' நடப்பதைப் பார்த்தால், இதுவரை நாம் சர்ச்சித்த ஒரு சி.சு.செ. எவ்வளவு தூரம் தமது தகுதியை மீறியே தமக்கு இல்லாத ஒரு
அபிப்பிராயங்களை அள்ளி வீசியபடி, 'நானே எல்லாம்!' என்று நிற்பதன் கருத்துலக ஆபாஸத் தோற்றதைக் காணலாம். இது, எவ்விதச் சூழலில் சி.சு.செ.யை ஒரு அதிகாரியாக்குகிறது என்று எழுத்துவைப் பார்த்தால், தொடர்ந்து நடந்து வரும் சிறு பத்திரிகைகளின் பக்கங்கள் மூலம், அவற்றில் அவரவரால் முடிந்த அளவு நிர்வகிக்கப்படும் கண்காணிப்பு அடிப்படையில் அல்ல நவீன எழுத்தியலையே அறியாதவர்கள் நடத்தும் விளம்பரப் பத்திரிகைகள் மூலம் திறனோ படைப்பாற்றலோ அற்ற சி.சு.செ. யினாலேயே 'முட்டாளாச்சே' என்று வர்ணிக்கப்படுகிற ஒரு பத்திரிகாசிரியர் மூலமே. இது நடந்திருக்கிறது.
வேலையே புரியாமல், சி.சு.செ.யின் நூல்களை கருத்துலக அதிகாரத்தை, அத்திவாரமில்லாத நாசமாக்கும் வகையில் ஏராளமான ஏறுமாறான அச்சுப் பிழைகளுடன் வெளியிடுவதும், ஒருவரை எவ்விதமான அர்த்தப்பூர்வமான பரம்பரைக்கும் உரியவராக்காது. பார்க்கப் போனால் சமீபத்தில் (சென்ற தீபாவளிபோது), பிரசுரகாரர் கதை எழுதிய செய்தியை என்னிடமிருந்து அறிந்த சி.சு.செ., "அவன் முட்டாளாச்சே! அவனுக்கு கதை எழுத எப்படி வரும்?” என்று வியந்திருக்கிறார். பரம்பரை என்பது, மதிப்பீட்டின் வளர்ச்சி, கண்காணிப்பு ஆகியவைதாம் என்று கொண்டால், இன்று 'எழுத்துப் பரம்பரை'யாளனாக எஞ்சி நிற்பவன் பிரமிள் ஒருவன்தான். எப்போது அவனது இயக்கத்தை நேரடியாகத் தாமே வாசித்து அபிப்பிராயம் உருவாக்கிக் கொள்ளாமல், பசப்பல் ராஜகோபால், சு.சங்கர சுப்ரமணியன் (அம்பி) போன்ற ஏஜண்டு வாசிப்புகள் மூலம் மட்டுமே. அதிதீவிர இயக்கக் காலத்தை 'ஏசல்
10 கணையாழி / ஜூன் 2014
நன்றி: லயம் வெளியீடு, 1996.

No comments:

Post a Comment