________________
உன்னதம் | 2
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்
www.tamilarangam.net
நிலம்
- கெளதமசித்தார்த்தன்
எழுத்தின் மாற்றம் என்பது ஒருமுடிவுறாதது. Infinity. ஒவ்வொரு காலத்திலும் அது மொழி ரீதியாக,உருவம் - உள்ளடக்க ரீதியாக என்று பல்வேறு மாற்றங்களுடன் தீராதபக்கங்களில் உருமாறிக்கொண்டே போகிறது.
நீரோடையில் கல்லை விட்டெரிந்து வளையங்களைச் சுழலவிடும் போது நீரின் சுழற்சிக்கும், தெளிந்த நீரோடையாய் மிதக்கும் நீரின் சுழற்சிக்கும் இடையே உள்ள உருமாற்றம் உடனே புலப்படுவதில்லை. மேலும் இந்தச் செயல்பாடுகளில் சட்டெனக் கவர்வது வளையங்களே, காலங்காலமாய் சலித்துப் போன மொழிக்கிடங்கில் சுழல்கின்றன. இந்த வளையங்கள். எந்த விதமான புது அனுபவத்தையும் தரவல்லாது நீரில் அமிழ்ந்து போகின்றன நைந்துபோன படிமங்கள்.
மாறாக, கண்காணாச் சுழற்சியின் உள்முகம் நோக்கி ஒடும் நீர்மச் சுழல்வுகளோ, புதியமொழியை எல்லையற்ற சவால்களுடன் வெற்றுவெளியில் உருவாக்குகின்றன. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை நோக்கிய பாய்ச்சலில் புதுவகை எழுத்து பிறக்கிறது.
வெற்று வெளி என்பது என்ன? ஏற்கனவே இந்தச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட படிமங்களுடன் ஒரு விஷயத்தை எதிர்கொள்வதிலிருந்து விலகி, சூன்யமாக எதிர்கொள்ளும்போது அந்த விஷயத்தின் தீவிரம் முற்றிலும் புதிய பரிமாணங்களுக்கு அழைத்துச்செல்லும். ஒரு படைப்பை வாசிக்கிறீர்கள், அப்படி வாசிக்கும் போது அந்த வாசிப்பு வரிகளினூடே அதன் படைப்பாளி குறித்த ஆளுமை, படிமம், செயல்பாடுகள், போன்ற பல்வேறு விஷயங்கள் கலந்து அது ஒருபக்கமாக மனசில் ஒடிக்கொண்டிருக்கும். ஆக, படைப்பும் படைப்பாளிகுறித்த விஷயங்களும் ஒரு நான்லீனியர் வாசிப்பாக பின்னிப்பினைந்து படைப்புக்குச் சம்பந்தப்படாத ஒரு தளத்திற்குத்தான் இட்டுச் செல்லும். எவ்வித முன்னனுமானங்களும் இன்றி வெற்று வெளியில் வாசிப்பதே படைப்பின் மையத்தை நெருங்குவதற்கான வழி.
இந்தக்கருத்தை ஒரு ஜனரஞ்சகமான பார்வையிலோ அல்லது மேலோட்டமான பார்வையிலோ அணுகாமல், அதன் ஆழ்ந்த தீவிரத்துடன் நெருங்கும் போது படைப்பின் தர்சனா மண்டலம் உக்கிரத்துடன் சுழன்று கொண்டிருப்பதை உணரலாம்.
புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் பிறந்த உடன், "நீங்கள் கடவுளா?" என்று கேட்கின்றனர். இல்லை யென்கிறார்.
"அப்படியானால் நீங்கள் யார்?"
முகத்தில் சலனமே காட்டாமல் 'சூன்யம்' என்கிறார்.
'சூன்யம்' என்பதற்கு பொருள் வெற்றிடம் அல்ல. ஏனெனில், வெற்றிடத்தில் எதை வேண்டுமானாலும் போட்டு நிரப்பலாம். ஆனால் சூன்யத்தில் அப்படியல்ல. சூன்யம் பற்றிய மதக்கருத்துக்களை வி.க்கி வெகு நுட்பமாக யோசிக்கும்போது, அதன் அர்த்த தளம் எல்லையற்ற பெருவெளியில் புலனாகும்.
இந்தச் சுழற்சியின் சொல்லாடல்களில் திறவுபடுவது முற்றிலும் புதிய ஒரு நிலக்காட்சி.
ஒரு கதைப்பிரதியில் மிக முக்கிய விஷயம் நிலக்காட்சி, கதையின் களம் எங்கு காலூன்றிநிற்கிறது என்ற இடம் பற்றிய பிரக்ஞை புதுவகை எழுத்தின் மிக முக்கியமான பரிமாணம் இந்த Geographical Sence. 95. வரையிலான நிலம் என்ற யதார்த்தம் Metaphor ஆக மாறும் போது எழுத்து மறை உருவம் கொள்கிறது. நிலம் குறித்த பிரக்ஞை புதுவகை எழுத்தில் விரிபடும் எல்லைகள் வினோதம் கொள்கின்றன. காலடியில் உள்ளடங்கும் நிலம் உருகி வழிந்ததோடும் ஜாலாத்தத்தில் மனிதனுக்கும் நிலத்துக்குமான வாழ்வின் சவால்களை எதிர் கொள்ளும் அபூர்வமான கணங்களில், கதைப்பிரதி கண்கானா சுழற்சியில் உள்முகம் நோக்கி ஒடுகிறது.
'நிலம் பற்றிய பிரக்ஞையே எழுத்து தளத்தை தீர்மானிக்கும் விஷயமாக மாறிநிற்பதை ஒருசில உதாரணங்களுடன் பார்க்கலாம். முதலில் வெற்று வெளி என்கிற என் கதையை எடுத்துக் கொள்ளலாம்.
முற்றுப்புள்ளியில்லாமல் ஒரு நீண்ட ஒற்றை வாக்கியமாக எழுதப்பட்ட இந்தக்கதை மோஸ்தருக்காக எழுதப்பட்டதல்ல. தன்னைத்துரத்தி வரும் குரலிடமிருந்து தப்பிக்க ஒடிக்கொண்டேயிருப்பவன், இடையில் நிற்கக்கூடாது, நின்றாலும் சிலையாக மாறிவிடுவான் என்பதற்காக, கதைப் பிரதி தன்னளவிலேயே, முற்றுப் புள்ளியை உதறிவிட்டு ஓடிக்கொண்டேயிருந்தது. ஆக, கதையின் உள்ளடக்கமே அந்த வடிவத்தைத் தீர்மானித்தது. நல்லது. கதைக்கு வருவோம் :
கதை, ஒரு துப்பறியும் கதை, ஒரு சுரங்கத்தில் விலை மதிப்பற்ற தங்கம் இருக்கிறது. அதை எடுத்துவர அந்தச் சுரங்கத்துக்குள் பலர் நுழைந்து வெளியேவராமல் அழிந்து போய்விடுகிறார்கள். ஆனால், ஊமைத் தாத்தாஎன்கிற வாய்பேச முடியாத ஊமையான ஒரே ஒருவர் மாத்திரம் வெளிவந்து விடுகிறார், தங்கத்தை விடவும் மதிப்பற்ற செல்வத்தை கொண்டுவந்தவர் போல கண்கள் மின்ன வெளியே வந்தவர், அன்றிலிருந்து தனது நிலத்தை தினமும் ஓயாமல் உழுதுகொண்டேயிருக்கிறார். இதைக் கண்டு, சுரங்கத்திற்குள் போய் வந்ததிலிருந்து பைத்தியம் பிடித்து விட்டதாய் மக்கள் சொல்கிறார்கள், இப்படி ஒரு தொன்மம் அந்த கிராமத்தில் நிலவுகிறது.
இந்தப் பின்னணியில் ஆரம்பிக்கிறது கதை:
விளையாட்டுச்சிறுவர்களின் கிட்டிப்புள் அந்தச் சுரங்கத்திற்குள் போய் விழுந்துவிட, அதைத் தேடிஎடுத்துவர ஒரு சிறுவன் உள்ளே இறங்குகிறான். உள்ளே நுழைந்ததும் கிராமத்துத் தொன்மங்களின் எண்ண ஒட்டங்கள் அவனை புடைசூழ அவன் ஒட ஆரம்பிக்கிறான். ஊமைத்தாத்தா பற்றிய நிகழ்வுகள் ஒடுகின்றன. ஒடிஓடி நேற்றும் நாளையுமற்ற காலப் பெருவெளியின் முன் நிற்கிறான். சிறுவன். இரவும் பகலுமற்ற இன்மையின் தாபத்தில் நிலம் உருகி ஊமைத்தாத்தாவின் வெற்றுவெளி புலனாகிறது. எவ்வித சலனமும் அற்ற வெற்று வெளியாய் இருப்பதே பெரிய புதையல் என்கிற ரகசியத்தை மக்களுக்குச் சொல்லும் பொருட்டே ஓயாமல் தனது நிலத்தை வெற்றுவெளியாகவே உழுது கொண்டிருந்தார் என்ற அற்புதம் அந்தச்சிறுவனது தன்மைக்கேற்பப் புரிகிறது.
இதுதான் கதை.
இதில் நிலம் என்கிற விஷயத்தைக் கவனமாகக் கையாளவேண்டும். நிலம் என்பதை அந்தச் சுரங்க வெளியாக வைத்துக்கொண்டால், அது யதார்த்த Text ஆகிவிடும். கதைக்கு அப்பால் சாதாரணதளத்தில் முடிந்து போயிருக்கும்.
அப்படியில்லாமல், நிலம் என்பது அந்தச் சிறுவனுக்கு Abstract ஆகத் தெரிகின்ற பல்வேறு தோற்றங்கள் எனில், அது நவீன Text, இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய ஒரு அனுபவத்தை நோக்கி போகக்கூடிய தருணம் வாய்த்தும், அதன் போதாமையினாலேயே சாத்தியத்திற்கும் அப்பால் அதன் வீச்சை செலுத்த முடியாமல் போய்விடுகிறது.
புதுவகை எழுத்தில் 'நிலம் வேறுவடிவம் கொள்கிறது. நிலம் என்பது புதிர். புதிர் மீது நடக்க நடக்க இதுவரை புலனாகாத தரிசனம் எதிர் படுகிறது. அதை சிருஷ்டிக்கவல்ல எழுத்தின் தன்மை மாற்றம் அடைந்து புதுவகை எழுத்து பிறக்கிறது.
இப்படி ஒவ்வொரு text லும் நிலக்காட்சியின் அமைப்பை மாற்றிப் போடும் போது இருப்பின் சவால்கள் புதுவகை எழுத்தை எதிர் தரிசனமாக்குகிறது.
IRRடோல்கின் தனது கதை ஒன்றில், படம் வரைந்து கொண்டிருக்கும் ஒரு ஓவியன், தான் வரைந்து கொண்டிருக்கும் கான்வாஸின் புதுமையான நிலக்காட்சியின் மீது நடந்து வந்து கொண்டிருக்கின்ற geographical ஐ ஆழகாக பதியவைத்திருப்பார்.
இந்த மொழிநடையின் அபூர்வ வீச்சில் தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ளும் தொழில் நுட்பத்தினூடே முற்றிலும் புதியதாய் மிளிர்ந்து நிற்கும் Text புதுவகை எழுத்தாய் உருக் கொள்கிறது.
இந்த மொழி நடையைக் கையாளத் தவறிய ஒரு கதையைப் பார்க்கலாம் : உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் ஜப்பானிய எழுத்தாளரான யசுனாரி கவபட்டாவின் House of the Sleeping Beauties என்கிற நாவலைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
வயதான கிழவர்கள் தங்கள் பாலியல் ஆர்வங்களைத் தணித்துக் கொள்ள ஒரு விடுதி உள்ளது. அதில் இளம் பெண்கள் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுக் கொண்டு, அறையில் நிர்வணமாகப் படுத்திருப்பார்கள். அங்கு வரும் கிழவாடிக்கையாளர் தூங்கும் அழகிக்கு இடைஞ்சல் செய்யவோ, மோசமான ரசனையில் ஈடுபடவோ செய்யாமல் அந்த தூங்கும் அழகியோடு ஓரிரவைக் கழிக்கலாம். கிழவர்துங்குவதற்கு ஆர்வப்பட்டால், அவருக்கும் தூக்கமாத்திரைகள் தரப்படும். அடுத்த நாள் விடிகாலை அந்தப் பெண்ணுக்கு முன் பாகவே கிழவர் எழுந்து போய்விட வேண்டும். அந்தப் பெண்ணுக்கும் அவரைத் தெரியாது. அவரும் அந்தப் பெண்ணை மறுபடியும் சந்திக்கக் கூடாது.
மிகவும் அற்புதமான இதுவரை யாரும் கையாளப்படாத கதைத்தளம். மரணத்துக்கும் காமத்துக்குமான உறவு, மனிதனுக்கும் வாழ்வுக்குமான தாத்பர்யத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. மரணத்தின் அருகாமையில் சந்திக்கும் பெண் உடலின் வாசனையில்வாழ்நிலை வினோதம் கொள்கிறது. மனிதமனங்களின் இருண்ட பகுதிகளின் புதிர்வழிப் பாதையினுடே பயணம் செய்யும் இந்த Fantasy தளத்தின் அருமையான வீச்சு, வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை ஆழமாகத் தொட்டுச் செல்கிறது. -
அதேசமயம், இது நவீனப் பிரதியாக மட்டுமே சுருங்கிப்போய் நிற்கிறதே தவிர புதுவகை எழுத்தாக விரியவில்லை. இதன் மூல காரணமாய் இருக்கும் மொழிநடையைக் கவனிக்கும் போது கதை காலூன்றி நிற்கும் நிலம் விரிகிறது. இந்த நிலக்காட்சி இதுவரை சொல்லப்படாத நவீன தளமாக இருந்தாலும் யதார்த்த நிலக்காட்சியாய் அமைந்து விடுகிறது, அதனால் அதன் மொழி நடை வேறுவேறு பரிமாணங்களுக்கு நகராமல் சுருங்கிவிடுகிறது.
ஐந்து முறைகள் அந்த விடுதிக்கு வருகிறார் ஒரு கிழவர். ஒவ்வொரு வருகையின் போதும் நிர்வாணமாய்ப் படுத்திருக்கும் பெண்ணைப்பார்க்கும் போதெல்லாம் நனவோடை உத்தி (Stream OfConsciousness) என்கிற மொழி நடையிலேயே திளைக்க வைக்கிறார் கவாபட்டா. இதனால்தான் நாவல் சரிந்து வீழ்கிறது.
முதல் முறை : விடுதியின் அறைக்குள் நுழைகிறார் கிழவர், தூங்கும் பெண்ணைப் பார்த்ததும் தனது மகள் ஞாபகம் வருகிறாள். அவளுக்கு வாங்கிக் கொடுத்த கெமிலியாப் பூக்கள் ஞாபகம் வருகின்றன.
இரண்டாம் முறை : தனது முதல் காதலி ஞாபகம் வருகிறாள், அவளது முத்தம் ஞாபகம் வருகிறது. இது சம்பந்தமான காட்சிகள்.
மூன்றாம் முறை : தான் தொடர்பு வைத்திருந்த ஒரு பெண்ணின் ஞாபகம்.
நான்காம் முறை : பால் கவிச்சி வாசனை, தனது மகள் கன்னித்தன்மை இழந்துபோனது குறித்த ஞாபகங்கள்.
ஐந்தாம் முறை : தனது மனைவி குறித்த ஞாபகங்கள். வீடு குடும்பம் குறித்த ஞாபகங்கள்.
ஐந்து முறை அங்கே போகும் கிழவன் தூங்கிக் கொண்டிருக்கும் கணந்தோறும், அவனது கடந்தகால விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. இந்த மொழிநடை மாறாமல் போனதற்கு காரணம் நிலம் பற்றிய பிரக்ஞை இன்மை.
இந்த நாவலின் நிலக்காட்சி (அந்த விடுதியாக அல்லாமல் மரணப்பெருவெளியாக மாறியிருந்திருக்கும் பட்சத்தில் மொழிநடை மாறும் புதுவகை எழுத்தாக உருமாற்றம் கொள்ளும். இந்தக் கதையாடலில் முற்றிலும் புதிய தளத்தில் செயல்படுகிற நிலம் என்னும் Element இதுவரை புலனாகாத புதிய தளத்திற்கு காட்சி நிலையை நகர்த்தும்.
இது போன்ற நிலத்தில் கதை நடக்கிற தென்பது வைத்துக் கொண்டால், அதன் மொழிநடை எவ்வாறெல்லாம் மாறி கதையை பல்வேறு பரிமாணங்களில் மிளிர வைக்கும் என்பதை புதுவகை எழுத்தில் நகர்த்திப் பார்க்கலாம் இப்படியாக :
அதாவது,
மூன்று முறைதான் கிழவர் விடுதிக்குப் போகிறார். (கசகசவென்று நான்கைந்து முறைகள் எல்லாம் வேண்டாம்) மேலும் ஜப்பானிய மரபின் படி 3 என்கிற எண்ணுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. ஜென் தத்துவத்தில் வருகிற ஜென் மாடுகள் என்கிற விஷயத்தில் உள்ள பத்து விஷயாம்சங்களில் முதல் 3 தான் பிரதான பங்கு வகிக்கிறன்றன. 1. தேடல், 2தரிசனம், 3.தவம், (முதல் இரண்டும் ஒன்றாகும்போது ஏற்படும் தவநிலை) மீதி உள்ள 7விஷயங்களும் இந்த 3ஐயும் படிப்படியாக மலர்ச்சியுறச் செய்வது தான். அதேபோல, கவிமரபான ஹைகூ பாடல் 3அடிகள் கொண்ட வடிவம். என 3 என்ற எண்ணுக்கு நிறைய கதவுகள் திறந்து கொண்டேயிருக்கும்.
இருக்கட்டும், கதைக்கு வருவோம்.
முதல் முறை : கிழவர் விடுதிக்குள் நுழைகிறார். துங்கும் பெண்ணைப் பார்க்கும் போது ஒவ்வொரு சம்பவமாக பழைய ஞாபகங்கள் வருவது இயற்கையே. அந்தத்தேடலிலேயே திளைத்திருக்கட்டும்.
இரண்டாவது முறை : கிழவர் ஒரு முடிவுடன் கண்டதை யோசித்து நேரத்தை வீணாக்கக்கூடாது என்ற வைராக்கியத்துடன் உள்ளே நுழைவார். இப்பொழுது அவருக்கு வேறு ஒரு அனுபவம் அங்கு காத்திருக்க வேண்டும். கதைத் தளத்தின் சவால்களை எதிர் கொள்ளும் கதை சொல்லியின் வழி திறந்து கொள்ளும் புதுவகைக் கதைத்திறப்பு.
இரண்டாவது முறையாக விடுதிக்குப் போகும் கிழவரின் தரிசனம் இப்பொழுது வேறு விதமாக இருக்கும். தூங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் உடலோடு கிழவரின் உடல் பிரக்ஞாபூர்வமாகப் பேச ஆரம்பிக்க முடியும். அப்படியாகும் பட்சத்தில், காலங்காலமாய் மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் பெண் உடல்மொழியின் வெளி விரிபடும். ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் பெண் உடலின் நிலை - ஆண்பெண் குடும்பம் என்ற திரிகோணத்தில் கூம்பும் பெண் - என காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்ட பெண் உடலின் மொழி நடை வீரியம், சாத்தியமானவற்றிற்கும் அப்பால் நெளியும் வாழ்நிலை தரிசனத்தை முன் நிறுத்தும்.
மூன்றாவது முறை : இப்பொழுது புதுவகை எழுத்தின் நுட்பமான வீச்சு முற்றிலும் வேறுபடும். இந்தமுறை கிழவர், துங்கும் அழகியின் உலகத்தில் நுழைய யத்தனிக்கலாம். பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் தூக்கமாத்திரைகளைத் தானும் பயன்படுத்தி துங்கிய பிறகு, தூக்கத்தின் உச்சபட்ச சந்திப்பில் துங்கும் அழகியின் உலகத்திற்கு Fantasy யாய் உள்ளே நுழைய முடியும். இது வரையிலான நிலம் என்கிற யதார்த்தம் melaphor ஆக மாறி மனிதனுக்கும் வெளிக்குமான வாழ்வின் சவால்களை எதிர் கொள்ளும் அபூர்வமான தனத்தில் செயல் படுகிற இந்த Element இதுவரை புலனாகா வெளிக்குள் காட்சி நிலையை நகர்த்தும், துங்கும் அழகியும், துங்கும் கிழவரும் வேறு ஒரு வெளியில் சந்திக்க முடியும். வாழ்வுக்கும் மரணத்திற்குமான இடைவெளியாக மாற்றம் இடம் என்கிற Metaphor மனித வாழ்வைக்கவ்வும் காமத்தின் பயங்கரமும் பாலியலின் வசீகரமும் மரணத்தின் அழகியலில் உந்தம் பெறும். தேடலும் தரிசனமும் இணைந்த ஒரு தவநிலையில் - முற்றாக மறந்த நிலையிலிருந்து Fantasy-யாய் எழும்பும் கதையாடல் புதுவகை எழுத்தாய் உருமாறியிருக்கும். O
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்www.tamilarangam.net