Automated Google-Ocr + half an hour proofing work for 45 to 50 days
மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடைவெளி - சம்பத் - 2
23
அவர் அலுவலகத்திற்குப் போய் வந்துகொண்டிருந்தார். சாவை மனம்
பின்னிக்கொண்டேயிருந்தது. ஆனால் செய்யும் வேலை சிந்திப்பதற்குத் துளியேனும்
இடைஞ்சலாக இல்லை. கணக்கிடும் இயந்திரங்கள் நிறைய இருந்தன. தோல்கள் நிறையவே வரும்,
டஜன் டஜனாகத் தோல்களை அடுக்கிக் கட்டவேண்டும். தோலுக்கு, பரப்பளவு போடும்
இயந்திரம் ‘ஸிய்ஞ்’ என்று ஒருவித சப்தமிட்டுக்கொண்டே இயங்கிக்கொண்டிருக்கும்,
புெரிய அறை. அறையின் மேற்குக் கோடியில் குளிக்க, சிறுநீர் மலம் கழிக்க இடமுள்ள
அறை. அதோடு கோடு இழுத்து ஒரு அளவு தூரத்திற்கு வந்தால், மேஸ்திரி ரகம் வாரியாகத் தோலைப்
பிரித்துக் கொண்டிருப்பது தெரியும். அந்த மேஸ்திரிக்கு ஒரு முந்நூறு ஆடி தள்ளி
அவனுக்குப் பின்னால், இன்னும் ஒரு மேஸ்திரி தோல் பார்த்துக் கொண்டிருப்பான்.
நடுவில் உத்திரம் அளவுக்கு 'ப' வரிசைகளில் தோல்கள் அடுக்கப் பட்டிருக்கும். அவை
குறைந்தபட்சம் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடையதாய் இருக்கும். அறையின் கிழக்குக்
கோடியில் ஒரு பளபளப்பான மரத் தடுப்பினுள், 'டெலக்ஸ்’ இயக்குநர் வெங்கட்ராமன்
இருப்பான். அதற்குப் பக்கத்தில் ஒர் பெரிய அறை. நிர்வாகிகள் தங்கும்
குளிர்பதனப்படுத்தப்பட்ட அறை. எப்போதும் அங்கு வெளிநாட்டுக்காரர்களுடன் காரசாரமாக
வியாபார விவாதங்கள், நிர்ணயங்கள் நடந்து கொண்டிருக்கும். அந்த அறையின் வலதுபுற
ஓரங்களில் தோலில் அளவு குறிப்பிட, நாற்காலிகளில் நாலைந்து பேர்கள்
உட்கார்ந்திருப்பார்கள். அதற்கு அடுத்து பெரிய மேஜைகள். அந்த மேஜைகளில் தோல்களை
அடுக்கி, அதில் குறித்திருக்கும் அளவை ஒருவர் படிக்க, பக்கத்தில் நாற்காலியில்
உட்கார்ந்திருப்பவர் கணக்கிடும் இயந்திரத்தில் சொல்லப்படும் அடிகளைத் தட்டிப்
பதிவு செய்வார். அந்த இயந்திரம் வைக்கப்பட்ட ஒரு முக்காலி பதிவு செய்பவர் முன் இருக்கும். தினகரன் அங்குதான்
உட்கார்ந்திருப்பார். ஒருவன் மூன்று மூன்றாக, தோல்களின் அளவை, ஒருவித ராகமிட்டு
வாசிப்பான். உடனே அதைப் படபடவென்று இயந்திரத்தில் பதிவு செய்வார் தினகரன்.
அளவுகள் சதுர அடியில் கொடுக்கப்படும். ஒரு பெட்டியில்-அட்டைப் பெட்டிதான் - ஆயிரம்
சதுர அடிகள் - இந்த அளவுக்கு மொத்தம் 175 முதல் 190 தோல்கள்வரை இட்டு அதைக்
கோணியில் தைத்து, பிறகு 'மார்க்கிங்' செய்யப்படும். ஒரு நாளைக்கு இவ்வாறு
பனிரெண்டு பெட்டிகள் தயாரிக்கலாம்.
பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும் விதம் சர்க்கரை ‘க்யூப்ஸ்' போன்று
தினகரன் கண்களுக்குப் படும். அவ்வளவு பெரிய பெட்டிகள் தன்னுடைய கண் முன்னால்
சர்க்கரை க்யூப்ஸ் ஆகும் விந்தையை அவர் வியப்பார். சில சமயங்களில், தானும் அந்தப்
பெட்டிக்குள் தோலாகி முடங்கிக் கிடப்பதாக ஓர் உணர்வு ஏற்படும். சில சமயங்களில்
நடைமுறை உண்மையாக இந்தப் பிரச்சினையை அணுகினால் எங்கோ, தான் பிரபஞ்ச ரீதியில்,
ஏதேனும் தூக்குப் போட்டுக்கொள்ளும் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமோ
என்று படும். மேற்கத்திய இலக்கியங்கள் ரொம்பப் படித்ததினால் ஏற்பட்டிருக்கும்
பாதிப்பாக இது இருக்கலாம் என்று நம்பினார். அவர் பலமுறை யோசித்ததுபோல
மேற்கிற்கும், கிழக்கிற்கும் ஆன்ம ரீதியில் ஒரு முரண்பாடு உள்ளது. அவர்கள் அறிந்தோ
அறியாமலோ, மேல்நாட்டினர்களுடைய ரத்த நாளங்களில் ஒரே ஒரு வாழ்க்கைச் சித்தாந்தம்
பசையாக ஒட்டிக் கெர்ண்டிருக்கிறது. இதில்தான், இந்த எண்ண பலத்தில்தான் அவர்களுடைய
பைத்தியம் பிடித்த அவ்வளவு செயல் ஈடுபாடுகளுக்கும் நாம் காரணம் காணமுடியும். எதையுமே
வெல்லவேண்டும், முதல் இடம் பிடிக்கவேண்டும் என்கிற அந்த ஓட்டத்தை இப்படித்தான்
பார்க்கவேண்டும்; பார்க்க முடியும். அவர்கள் எவ்வளவு வேண்டுமானுலும்
சொல்லிக்கொள்ளட்டும், ‘ஏசு’ என்கிற வார்த்தை ஒரு உண்மையான ஹிந்துவுக்கு
ஏற்படுத்தும் அடிப்படை உணர்வுகளே வேறு. அங்கு சமயமும் ஒரு பொருளாதாரத்
தத்துவத்தின் கண் கொண்டுதான் பார்க்கப்பட்டிருக்கிறது. நம்மிடையே அப்படியில்லை.
நாம் எவ்வளவு நாகரீகமாக மேற்கத்திய நாட்டவர்கள்போல் காண்பித்துக்கொள்ள
ஆசைப்பட்டாலும், நம்முடைய, ரத்த நாளங்களில் நம்மையும் அறியாது ஒரு விதிப்படிதான் நடக்கும்’
குடிகொண்டிருக்கிறது. இது செயல் ஈடுபாடுகளுக்கு முரண்பாடுடையதாகிறது. எங்கோ,
பூகம்பம் போன்று இந்த இரு பெரும் சக்திகளும் மோதிக்கொள்ளும் என்பதை இனங்கண்டார்
தினகரன். ஆனால் எதையுமே ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும் இந்த சமுதாயம் தான்,
இந்திய சமுதாயம் தான், கடைசியாக மனித இனத் தைப்பற்றி மீண்டும் பெரிதாக ஏதோ சொல்லப்
போகிறது என்று அவர் நம்பினார் எல்லாவற்றையும் கிரஹித்துக்கொள்வது என்பது பெரிய
சக்திதான்!
சாவைப்பற்றி தாம் ஏதோ கண்டுபிடிக்கப் போகிறோம் என்று அவரில் முளைத்த
அந்த எண்ணம், அப்படியே செயல்பட்டால், அது எத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்று
கணிக்க அவர் பாடுபட்டார். எப்படியோ அது அவர் அனுபவித்த மெளனத்திற்கும் குறைந்தே
இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காக, அது அவரை முழுமையாக அடித்து விடாது, குறைந்த
பட்சம் சுடுகாட்டில் வைத்துவிடாது எனறு நம்பினார்; 'ஏனென்றால் பெரிய எண்ணங்கள்
சில சமயங்கள் கொல்லும் தன்மை உடையது' என்றும் சொல்லிக்கொண்டார். அப்போதெல்லாம்
அவர், சஃபையரில், படத்தைப போடாமல் எண்ணற்ற விளம்பரங்களைப் போடும்போது எப்போதும்
ஏற்படும் ஒருவித பொறுமை யின்மையில் உழன்று கொண்டிருந்தார். இருந்தும் ஏதோ
நேரப்போகிறது, நேரப்போகிறது என்று காத்திருந்து கடைசியில் ஒன்றுமே இல்லாமல் வெடி,
புஸ்வானம் ஆனதுபோல் விஷயங்கள் போய்விட்டால்? இது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி
ஏதோ மயிர்க்கூச்செரிவது போல் இவர் எதையோ கண்டுவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம்;
அதன்பின், முதல் கொந்தளிப்பு எல்லாம் அடங்கினபின், அப்படி ஒன்றும் இது பிரமாதமான
விஷயம் இல்லை என்று பட ஆரம்பித்தால் ஆனால் இங்கு அவருக்குத் திட்டவட்டமாக ஒன்று
புலப்பட்ட்து. முதல் எழுச்சிக்குப்பிறகு, இது சாதாரண விஷயம்தான் என்று
மக்களுக்குத் தோன்றுமாயின் அதன் வீர்யமே அலாதி யானதாக இருக்கும் என்று அவர் நம்பினர்.
மேலும் சொல்லப்போனால், இப்பேர்ப்பட்ட மகத்தான சாவு விஷயத்தில் தனக்குப் புலப்படப் போவது, கடைசிபட்சத்தில் ஒரு
குழந்தைக்குக் கூடப் புரியும்படியாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். அது எப்படி
சாத்தியமாகும்? ஆனால் இதுவும் எப்படியாவது இருந்து போக்ட்டும்: ஒரே ஒரு
26
விஷயத்தில் மட்டும்அவர் நிஜமாகவே பயந்தார். இவர் ஏதோ பெரிதாக
நினைத்துக் கொண்டிருக்க, அது மருத்துவ உலகில் எப்போதோ நிர்ணயிக்கப்பட்டிருந்தால்?
பல பக்கங்கள், அத்தியாயங்கள் புஸ்தகங்கள் அதைப்பற்றி எழுதப்பட்டிருந்தால்? ஆனால்,
கூடவே தன்னுடைய உள்ளுணர்வின், அனுமானத்தின் துணைகொண்டு அதெல்லாம் அப்படி முடிந்து
விடாது என்று பிரத்தியேகமாக, அசைக்க முடியாத ஒரு வஜ்ரத் தின்மையுடன், ஆணவத்துடன்
நம்பினார். எங்கோ, தனக்கு அந்த மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்ட பிறகு குறைந்தபட்சம்
‘என்சைக்ளோபேடியா பிரிடானிகா'வை வைத்துக்கொண்டு அதில் சாவைப் பற்றி எழுதியதோடு
ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது என நினைத்தார். அவர் காத்திருப்பது எனத் தீர்மானித்தார்.
ஆனாலெ அவருடைய காத்திருப்பு அவரை வெகுதாரம் இட்டுச் செல்லவில்லை.
பல்லாயிரக்கணக்கான விபத்துகள் ஒரு வருடத்தில், இவ்வுலகம் முழுவதும் நடந்துவிடுகின்றன:
எப்படியோ சாவு சம்பவித்து விடுகிறது ........ தூங்கும் போதும் மூச்சு விடுகிறோம்
என்பதில்தானே பிணாயாமத்தின் அபூர்வ சக்தியை ஒருவன் கண்டுபிடித்தான். அது
போல், எந்த நிமிடமும் நீ சாகலாம் என்பதால், சாகாமல் இருப்பதால், சாவு உனக்களித்த
கருணைதானே அது!
சாவு என்பது வாழ்வுக்குக் கருணாசமுத்திரம் என்று
எழுதிப்பார்த்துத் கொண்டார். ஆமாம் கருணாசமுத்திரம் தான்; வாழ்வுக்குத்தான் என்று
சொல்லிக் கொண்டே நடப்பார். அவருக்கு என்று சில விஷயங்கள் அமைந்து விடும்.
சாதாரணமாக 21Aஇல் ஏறி நேரே சென்ட்ரலில் ஆபிஸ்க்குப் போவார்; அல்லது 23C பிடித்து
டி. வி.எஸ்ஸில் இறங்கி அங்கிருந்து 18 பிடித்து சென்ட்ரலில் இறங்கி
பெரியமேட்டுக்கு நடப்பார். ஆனால் சில நாட்களாக, 23Cஇல் ஏறி சைதாப்பேட்டை அடைந்து
- பிடிக்க ஆரம்பித்தார். பார்க் ஸ்டேஷனில் - இறங்கி அங்கிருந்து பெரியமேடு பக்கமாக
நடக்க ஆரம்பித்தார். ஒருநாள் அவர். பார்க் ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று அவருடைய கண்கள்.திடீரென்று.
27
கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட மதில் சுவர்களே, இந்தக்கோடிக்கு
அந்தக்கோடி விரவியிருப்பதைப் பார்த்தது. சிறைச்சாலை! சென்னையின் மத்திய சிறைச்சாலை
எவ்வளவு தூக்கிலிடப்பட்ட ஆன்மாக்கள் தங்களுடைய கடைசி நாட்களை அங்கு
கழித்திருக்கின்றனவோ? அவர்கள் விட்ட மூச்சுக் காற்று அங்கேயே சூழ்ந்திருக்குமோ?
எங்கேயாவது திடீரென்று காற்றுவாக்கில் வந்து தன்னையும் அது தாக்கி கொலைகாரனாக்கி
தூக்கு மேடைக்கு அனுப்பாதென்று என்ன நிச்சயம்? இவ்வாறு தோன்றவே கூட்டத்தை முண்டி
அடித்துக் கொண்டு ஓட, அழுத்தப்பட்ட உருவங்கள், நகரும் உருவங்கள் எல்லாவற்றையும்
அப்படியே கணங்களுக்கு நிற்க வைத்து, அவைகளிடமிருந்து திக்பிரமையையும்,
ஆச்சர்யத்தையும், அசூயையும் தன்மேல் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து அவர்
பார்க் ஸ்டேஷனைத் தவிர்த்தார்,
இருந்தும், மத்தியானச் சாப்பாட்டு இடைவேளையில் பெரியமேட்டிலிருந்து
சென்ட்ரல் வரை நடக்கும்போது சாவு வாழ்வுக்கு கருணாசமுத்திரம் என்பதில் ஊறித்
திளைப்பார். நேரு ஸ்டேடியத்தின் பக்கத்தில் ‘டர்ன் ஸ்டைலை' திருப்பி கொஞ்ச தூரம்
வந்தபிறகு, கார்ப்பரேஷன் பக்கத்தில் நிரந்தரமாகிவிட்ட துணிக்கிடையிலிருந்து,
பழைய தமிழ் சினிமாப் பாட்டு தென்றலோடு தழுவி வரும். அதையும் கிரகித்துக் கொண்டு
அவர் மூர் மார்க்கெட் எதிரில் ‘சொரெல்’னு விரவிய பழக்கடையில் நிற்கும்போதும்,
அவருக்கு அந்த கருணாசமுத்திரம் எண்ணம் தொக்கிட்டு நிற்கும். கார்ப்பரேஷன்
கட்டிடத்தைப் பார்க்கும்போது அது ஏதோ வானத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டது
போல், அப்போதுதான் அங்கு உட்கார்த்தி வைத்தது போல் காணப்படும். தன்மீதும் அந்த
சினிமாப் பாட்டு பட்டு, ஒலி கணிக்கப்பட்டு, பழக்கடை ஊடே நுழைந்து பரவி,
சென்ட்ரலின் மணிக்கூண்டை நோக்கித் தாவும். யோசித்தால் பசிக்கவும் செய்யுமோ?
நாக்பூரிலிருந்து வந்த ஆரஞ்சுகளை, அதிக ரசத்தையும் சுளைகளையும் கொண்டவைபோல் காட்சி
அளிப்பவைகளை, இருபது இருபத்தைந்து நிமிடங்களாக நின்று நிதானமாகத் தின்றாலும்
சிலசமயங்களில் இரண்டுக்குமேல் போயிருக்கமாட்டார். சில சமயங்களில் இருபதையும்
தாண்டியிருப்பார், முதலில் பழக்காரன் அவரைப் பார்த்து மனத்திற்குள் சிரித்துக்
கொண்டிருக்க வேண்டும். ஆனால் எப்போது அவனிடம் அவரைப் பற்றி அப்படியொரு
சிரத்தையும் கவனிப்பும் ஏற்பட்டதோ? மரியாதையாக அவரைப் பார்த்ததும் எழுந்து
நிற்பான். 'பழங்களா?' என்பான். பழம் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவனே அவருக்கு
ஏமாற்றாமல் செய்து வந்தான். பழங்கள் எப்போதும் இனிப்பாகவே இருக்கும். சில்லரை
திரும்பப் பெற்றுக்கொள்வதில், சில்லறை கொடுப்பதில் சிலசமயங்கள் முன்பின்னாக
இருந்தாலும் அவர் களிடையே ஒருவித நட்பு ஏற்புட்டுவிட்டது. அவர் மதராஸைப்பற்றி,
வியாபாரிகளைப்பற்றி, பொதுவாக இங்கு இருக்கும் மக்களப்பற்றி அவ்வளவு நல்ல
அபிப்பிராயம் கொண்டிருக்காத போது, ஒருநாள் அந்தப் பழக்காரன், "நீங்க
மறந்துபோய் நேத்து எங்கிட்ட பத்து ரூபா கொடுத்துட்டிங்க. கிராக்கியோட பேசி
முடிச்சுத் திரும்பறதுக்குள்ள போயிட்டிங்க' என்று மீதியை நீட்டினான். அவனும்
மதராஸ் வியாபாரி. மதறாஸ் வியாபாரி என்றால் யாரையாவது ஏமாற்றுவான். அவனால்
ஏமாற்றாமல் இருக்க முடியாது. அப்படியிருக்க இவன் ஏன் மாறுபடுகிறான்? இதற்கு என்ன
காரணம்; கவனிக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வார். ஆனால், எங்கிருந்துதான்
அப்படியொரு அசதி வந்து ஒட்டிக்கொள்ளுமோ முடியாமல் தளர்ந்து அங்கு
போடப்பட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து சுளைகளை உறிஞ்சி விழுங்கும்போது
தலைக்குள் ஆறேகால், நாலு நாலரை என்கிற தோல் பரப்பளவு நம்பர் ஒலித்ததும் டபடபவென்று,
அந்த நம்பரைப் பதிவாக்கும் இயந்திரத்தில் அடிக்கும் சப்தம், ‘சாவு என்பது
வாழ்வுக்கு கருணாசமுத்திரம்' ஒலியுடன் குழைந்து கலந்து போவதை உணர்ந்து விக்கித்து
விடுவார். பழம் விற்பவனின் மனைவி இவருடைய அகோரத் தனிமையைத் தரிசித்து, "நான்
எப்படி சார் இருக்கேன் - சுமாரா இல்லே” என்று சிரிப்பாள். அவளுடைய வார்த்தை இவரை
என்ன செய்யும் என்று திட்ட்வட்டமாகச் சொல்ல முடியாது. பத்மா கேட்டும் முதல்
தடவையாக மறுத்த இந்தக் காலகட்டத்தில் இதையும், இவ்வளவு அப்பட்டமாக வருவதையும்
மழுப்புகிறோம் என்பதால், அவருக்கு முக்கியமான இவ்விஷயத்தில், தான் எங்கே அசக்தனாகி
விட்டோமோ என்று சிறிதே பயந்தார். இருந்தும் தன் சக்திக்கு மீறி சாவைப்பற்றிய
சர்ச்சையில் ஈடுபட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. எது எப்படி வேண்டுமானாலும்
போகட்டும். அது எழுப்பிய சலனங்களிலிருந்து அதுவாகத் தன்னை விடுவித்துக் கொண்டா
29
லொழிய தானாக அதை விடுவதில்லை என்று நினைத்துக் கொண்டார்...... ஏதோ
ஒரு தாள லயத்தில் சிடுக் படக் சிக்சிக் என்று ஃபாஸிட் இயந்திர லயத்தில் அவரில் அது
இசைபாடிக் கொண்டிருந்தது - கருணாசாகரம்... கருணாசாகரம். அப்புறம் அவளிடம் பதவிசாக
அவள் மனம் புண்படாமல், வீட்டிலிருப்பவளை உணர்த்தி அதிலிருந்து விடுபட்டார்.
(சாதாரண காலங்களில் அவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்க மாட்டார்; கூடவே, எப்போது எது
நடப்பது என்றில்லாமல் என்னவெல்லாம் நிகழ்கிறது என்று அங்கலாய்த்துச் சிரித்தார்).
மீண்டும் கருணாசாகர'த்தைத் தலையில் சுமந்துகொண்டு நேரே எழும்பூர் போகும் சாலையில்
ஒரு பர்லாங்கு போய் மீண்டும் எழும்பூர் போகும் சாலையில் வானளாவிய சர்ச்'சைப்
பார்த்து வாய் திறந்து சிலசமயங்களில் நின்று விடுவார் அவர், உனக்கு எல்லாமே
அதிதமாக அர்த்தமாக வேண்டும். ஆனால் அர்த்தத்தைத் தேடுவதற்கு முன்னால்
எல்லாவற்றையுமே அவன் செயலாக ஒப்புக்கொண்டவனின் புனித சிலுவைப் பயணத்தை
என்னவென்பது? மேலும் ஹிந்துவாகிய, அதுவும் பிராமணளாகிய தான் எப்படி சாவை இவ்வளவு
பெரிய விஷயமாக்கலாம் - சட்டை மாட்டிக்கொள்வது போல்தானே அது?"
படபடத்த ஃபாஸிட் இயந்திரத்தின் நடுவே, தன் தலையில் டைரி குறிப்பு
எடுப்பார் தினகரன். எனக்குப் பிரபஞ்ச ரீதியில் ஏன் என்ற கேள்விக்கு விடை வேண்டாம்.
அதற்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியாது. நானும் ஆங்கிலத்தில் நினைத்து, ஏதேதோ
சொல்லிவிடலாம். இளிப்பு கண்ட சாவு என்று சொல்லிவிடலாம். குறைந்த பட்சம் அது எப்படி
சம்பவிக்கிறது என்பதில் மட்டும் எனக்கு ஏதேனும் துப்பு கிடைக்காதா?
‘எப்படி கிடைக்கும்டா அயோக்கிய படவா - தறுதலை...... மருத்துவப்
படிப்பு எடுத்துக் கொண்டிருப்பதற்கென்ன? பிஸிக்ஸ்னா, ரசாயனம் என்பாய் ...... சரி
ரசாயனம் என்றால் எண்களைப் பற்றிய தியரி என்பாய்; அதுவும்னா லலித கலைகள் என்பாய்;
இதுவும்னு சாவு' என்பாய் இப்பாடா... இந்தத் தோல் வியாபாரத்திலாவது கவனம் செலுத்து.
குழந்தை குமாருக்கு ஒழுங்கான நிக்கர் சொக்காய் இல்லை. இரண்டு வருஷமாக ஜெயஸ்ரீ ஒரு
பட்டுப் பாவாடை கேட்டுக் கொண்டிருக்கிறாள் சாவு தன்னைத் தானே கவனித்துக்கொள்ள, அதை அதன் போக்கிலேயே விட்டுவிடு...
30 ,
இந்நிலையில் யாரோ தன் பக்கத்தில் நிற்பதாக தினகரனுக்குப் பட்டது.
யாரோ, உருவமற்று கைகால் தளர்ந்து நிழல்களுமற்று, எவ்வளவு உயரம் அல்லது எவ்வளவு
குள்ளம் என்று கணிக்க முடியாமல் தன் பக்கத்தில், ரொம்பவும் பக்கத்தில், ரொம்ப
ரொம்பப் பக்கத்தில் - எப்போதுமே விடாது- அதாவது பழக்கடையில், அவருடைய டர்ன் ஸ்டைலை திரும்பும் செய்கையில், அவருடைய கார்ப்பரேஷன் கட்டிடத்தின் பார்வையில் - எப்போதும்
எதிலேயும் விடாமல் - கண்காணித்து நிற்பதை உணர்ந்தார். தன்னுடைய ஹிருதயமே வெளியே
வந்து விழுந்து விடுமோ எனப் பயந்து துணுக்குற்று. சற்றே எழுந்து தன்னையே இருதரம்
சுற்றி நல்ல வேளையாக நாற்காலியில் விழுந்தார். ‘சார் சார்' என்றிருக்கிறான் தோல்
வாசிப்பன் அவர் மேல், இரண்டு மூன்று முறை, முக்கியமாக அவர் முகத்தில் தண்ணீர்
அடிக்கப்பட்ட போது அவர் விழித்துக் கொண்டார். வீட்டுக்குப் போய் ஓய்வு எடுத்
துக்கொள்ளுங்கள் படலத்தை அவர் லட்சியம் செய்ய வில்லை. தொடர்ந்து அளவுகளை
இயந்திரத்தில் தட்ட ஆரம்பித்தார்.
ஆகுல் இதற்குப் பிறகு சாவு என்பவர் கருணாமூர்த்தியாத் தென்படவில்லை.
சாவு என்பவர் கண்காணிப்பவர் என மாறினார். இந்த எண்ணம் தொடர்ந்து ஒரு மூன்று நான்கு
நாட்களுக்கு இருந்தது. ஆனால் இந்த எண்ணமும் அதிக நாட்களுக்குத் தங்காது என்று
பட்டது. எல்லோருமே ஒருவிதத்தில் சாவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு
கதையில்,அந்தப் பொருள்பட வாசித்ததாக ஞாபகம். இந்த எண்ணம் சிறிதே
பிடித்திருந்தாலும், அதிலும் மனிதனின் அற்புத்தனமான ஈகோ, கழிவிரக்கம் இரண்டுமே
தெரிந்தது; திட்டவட்டமாகக் கடைசி பட்சத்தில், தோசை திருப்பப்படுவது போல், ஒரு நாள்
மாலை ஏழு மணிக்கு, அவருக்குத் தன்னைப் பொருத்தவரையில் அந்த உண்மை கிடைத்தது: ,
சாவு மனிதர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
- 31.
முதலில் அவருக்கு இந்த எண்ணம் சந்தோஷத்தைக் கொடுத்தது.
காத்திருத்தல் - பிரபஞ்சரிதியில் எப்பேர்ப் பட்ட மகத்தான காத்திருத்தல் இது!
சாசவதத் தன்மை கொண்ட காத்திருப்பவன் என்று முனகிக் கொண்டார். ஒரளவுக்கு பளு
உடம்பிலிருந்து இறங்கியதுபோல் பட்டது. ஆனால் மனமும் அறிவும் விறைத்துக் கொண்டு
அடம் பிடித்தன. அதைப்பற்றிய இந்த ஒர் எண்ணம் அவருக்குப் பேtதுமானதாக இருக்கவில்லை.
இருந்தும், இந்த எண்ணத்திற்கும், கொஞ்சநாள் முன்பு ஞாயிற்றுக்கிழமையில்
கடற்கரையில் படுத்திருந்தபோது ஏற்பட்ட எண்ண ஒட்டத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கும்
என்று நினைத்தார். எப்படி எங்கு என்றுதான் புரியவில்லை. ஆபீசில் ஆதிகாரி தன்
அறையில் அவருக்கு மட்டுமே தெரிந்த ஒர் இடத்தில் டேப் - ரிகார்டரை ஒளித்து
வைத்திருப்பார். அவர் இல்லாத போது, அவர் இருக்கும் போது அந்த அறையில் என்னவெல்லாம்
பேசப்பட்டதோ அவ்வளவும் பதிவாகிவிடும். மாலையில் வீட்டில் அதைப் போட்டுப் பார்த்து,
முக்கியமாக, வியாபார முடிவுகள் எடுக்கப்படும் போது பேசப்பட்டதெல்லாம் கேட்டு,
அதிலிருந்து சில: உண்மைகளை அவருக்குச் சாதகமானதை எடுத்துக்கொள்வார். எங்கேயாவது
கடனாவது வாங்கி டேப் போட்டு அதன் முன் உட்கார்ந்து சாவைப்பற்றி மனத்திற்குத்
தோன்றியதைப் பேசிப்பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஆனல் அவர் ஒரு விஷயத்தை -
இப்போதைய விஷயம் சாவைப்பற்றியது- எடுத்துக் கொண்டால் அதில் அமைதியையும் அதிக
நேரத்தையும் விழைவார். குழந்தைகளும் , பத்மாவும் இதை விரும்புவதில்லை என்பதோடு,
அவர்கள் இதனாலெல்லாம் பெரிய குழப்பத்திற்கு உள்ளாகி விடுவார்கள். எப்போதுடா இவரின்
இந்த விஷயம் ஓயும் என்று காத்திருக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதை எல்லாம் பிறரிடம்
பேசி கரை காணலாம் என்றால் - அதுவும் முடியாது. இதற்கு என்று ஒரு மனப்பான்மை
வேண்டும்; வீட்டில் இதற்கெல்லாம் களன் கிடைக்காது என்பது கிடக்கட்டும். எங்குதான்
கிடைக்கப் போகிறது என்பதே பிரச்சினை. அலுவலகத்தில் அதிகாரி சொன்னதுபோல் ஒரு இருபது
ஆண்டுகள் பேனா நிப்பின் வாழ்வைக்கூட பொறுக்க முடியாது ஓடும். இந்த வேகத்தின்
நினைத்தபோதெல்லாம் சாவைபப்பற்றி உரையாட யாரை அழைப்பது. மேலும், அப்படியே
மனத்தில் ஒடும் எண்ணங்களை உரக்கப் பேசி டேப் பண்ணுவோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மைப் பைத்தியம் என்று மற்றவர்கள் தீர்மானிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்?
32
சாவு என்பது பிரபஞ்ச ரீதியில் காத்திருப்பது என்பது. அவருக்குப்
பிடித்திருந்தது. ஆனல் இதற்குமேல் போக முடியவில்லையே என்கிற ஆதங்கம்
கூடியசீக்கிரமே அவரைச் சூழ்ந்தது. கடற்கரையில் நடந்த எண்ண ஓட்டங் களையும்,
சைகைகளையும் மீண்டும் நினவுகூர்ந்தார். துணியால் தலையைத் துவட்டிக்கொள்ளும்போது
நினைவுகூர்ந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. பிணமாய் மிதப்பது போல் உப்புத்
தண்ணீரில் கிடந்தது ஞாபகத்திற்கு வந்தது. எது ஞாபகம் வந்தாலும், இப்போது இந்த இரு
எண்ணத் தொடர்களையும் இணைக்க இது உதவவில்லை. அது ரொம்பவும் தேவை என்பதுபோல்
அவருக்குப் பட்டது.
இந்த மாதிரி விஷயங்களே எல்லாம் அவ்வளவு சுருக்க மறந்துவிடக்
கூடாதென்று நினைத்து எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்வதென்று தீர்மானித்தார்
தினகரன், அதன்படி ஒரு குண்டு நோட்டுப் புஸ்தகம் வாங்கி, கடற்கரையில் ஏற்பட்ட
அனுபவத்திலிருந்து சதுர அடிகளைப் பதிவு செய்யும் இயந்திரம் முன்னால் நடந்த
காத்திருக்கும் படலம்வரை எல்லாவற்றையும் எழுதிமுடித்தும் கூட, திடீரென்று
எப்போதாவது அதை எடுத்துப்படித்தால் அது ரொம்பவும் வீர்யமற்று இருப்பதுபோல் படும்.
அதாவது இதையே இன்னொரு விதமாகப் பார்க்கும்போது, அப்போது நினைத்ததின் தீவிரம்
சொல்லில் எழுதியதில் இல்லை என்று நினைப்பார். அப்படியே வந்ததாக அப்போது
நினைத்தாலும், நான்கு நாட்கள் கழித்துப் பார்த்தால், அப்போது நினைத்ததின்
சாராம்சம் துளிகூட அந்த வார்த்தைகளில் இல்லாததுபோல் படும்.
-
இதற்கு என்ன செய்வது? மனத்தில் தோன்றும் இம்மாதிரி யான விஷயங்கள்
ஹேஷ்ய ஸ்வரூபம் கொண்டதாக உள்ளதை நிர்ணயிக்க, முக்கியமாக அர்த்த ரீதியில் அவை
தங்கிவிட வேறு ஏதாவது யுக்தியைக் கையாளவேண்டும் என்று அவருக்குப் பட்டது. அதாவது
ஹேஷ்யங்கள் மனத்தில் தோன்றி வலுவடைய, நிஜம் அல்லது பொய் என்கிற நிரூபணம்
கிடைத்துக் கொன்டிருந்தால், ஹேஷ்யங்கள் தம். கதியில் தன்னில் தங்கும் என்று
நினைத்தார். இதற்காக அடிக்கடிகுதிரைப் பந்தயத்திற்குப் போகலாம் என்று பட்டது.
குதிரைப் பந்தயத்திற்கு ஏகப்பட்ட பணம் தேவையாக இருந்தது. அதுகூட எப்படியாவது
புரட்டி விடலாம். ஒருதரம் ஒருவன் வீட்டிலிருந்து ஹார்லிக்ஸ் பாட்டிலை
எடுத்துக்கொண்டு வந்து ரேஸ் கோர்ஸில் விற்றுக்கொண்டிருந்தான். இன்னொருவன் வைர
மூக்குத்தியை ஒரு அடகு வியாபாரியிடம் அடகு வைத்துக்கொண்டிருந்தான். அவர்
அவ்வாறெல்லாம் செய்யவேண்டியதில்லை. அவரிடம் பணம் இருந்தது. பத்மாவிடம் நகைகள்
நிறையவே இருந்தன. கேட்டாலும் கொடுப்பாள். ஆனால் அவர் அதில் விளையாடிப் பணம்
பண்ணவேண்டும் எனகிற எண்ணம் உடையவராக இருக்கவில்லை. நினைத்த குதிரை வருகிறதா?
இல்லையா? இது அவருடைய ஹேஷ்ய உலக நிர்ணயத்திற்குப் பெரிதும் அணைகட்டும் என்று
நம்பினார். நாலைந்து தரம் குதிரைப் பந்தயத்திற்குப் போனார். ஒவ்வொரு தடவையும் 75
ரூபாய்க்குமேல் ஆடுவதில்ல்லை என்று நிர்ணயித்துக் கொண்டார். அவர் நினைத்த குதிரை
ஒரு தரம் வந்தது. கிட்டத்தட்ட அது 150 ரூபாய் கூடக் கொடுத்தது. ஆனால் அவர்
குதிரைப் பந்தயத்திற்குப் போவதை விட்டுவிட்டார். அது முற்றிலுமான ‘வாய்த்தான்
பிழைத்தான்' இல்லை என்பதை இனங்கண்டார். பந்தய முடிவு எல்லையில் குதிரைகளின் லகான்
இழுக்கப்பட்டன. இதுகூடப் பரவாயில்லை. குதிரைகளுக்குக் கள் கொடுக்கப்பட்டு
உந்துதல் கொடுக்கப்பட்டது. இதுவும் பரவாயில்லை. ஆனால் ஓடும் குதிரைகளின் ஜாதகம்
அறிந்து வைத்திருக்கவேண்டும் என்ற் நிலை ஏற்பட்டதும், அவரை ஆயாசம் தொற்றியது.
கற்றுக்கொள்ளலாம்தான், ஆனால் அதற்கும், அவ்ர் எடுத்துக்கொண்டிருக்கும்
பிரச்சினைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்காது என்று தோன்றவே அந்த முயற்சியைக்
கைவிட்டார்.
இந்நிலையில்தான் அவர் மூர்மார்க்கெட் எதிரில் இருக்கும் இன்னும் ஒரு
சூதாட்டக் கிடங்கைப் பார்த்தார். நின்ற படிக்கே தலைகள் குனிந்து, வரைந்த படங்களைப்
பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய ரப்பர் துணியில் ஆறு
படங்கள் வரையப்பட்டு இருந்தன. அவர் நின்ற இடத்துக்கு நேர்கோடியில்
ஒட்டகப்படம். அந்தப் படத்துணிக்கு எப்போதும் பூஜை போட்டு, வாழைப் பழத்தில்
எரியும் ஊதுபத்தி செருகப்பட்டிருக்கும். அவர் எப்போதும் கூட்டமிருப்பதை அவர்
கண்டிருக்கிறார்: காலை ஒன்பது
34
மணியிலிந்து இரவு ஒன்பது மணிவரை அங்கு கூட்டம் இருக்கும்.
சாதாரணமாக மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பதரை மணிவரை நல்ல கூட்டம்
இருக்கும். மாலை வேளைகளில் ரேஷன் வாங்கக் கிளம்பியவர்களை அங்கு
பார்க்கலாம். போர்ட்டர்கள், பெரியமேட்டிலிருந்து வரும் பெரும் வர்த்தகர்களின்
பிள்ளைகள், நகரத்தின் பல பகுதிகளிலும் பிரசித்தி பெற்ற வட்டிக் கடை வீட்டுப்
பிள்ளைகள் ஆகியோரை அங்கு பார்க்கலாம். ‘தாட்’ என்று அழைக்கப்படும், ரப்பர்
துணியில் இருக்கும் படங்கள் முன் உட்கார்ந்திருப்பவன் இவ்வாறு கூவுகிறான்:
“மோசம், "ட்ரிக்ஸ்' கிடையாது சார். நீங்களே வைக்கலாம் நீங்களே
பிரிக்கலாம். பெட்டி உள்ளேருந்து எடுக்கும் கவர்லே இன்ன இருக்கும் என்று. உனக்கும்
தெரியாது; எனக்கும் தெரியாது. வை. இன்னும் வை... அண்ணன் வைச்சா தம்பி
வைக்கக்கூடாதுன்னு இல்லே. வை; யாரு வேணும்னாலும் வைக்கலாம். ஆளு ஒருகட்டத்திலே
பத்து ருபாதான் வைக்கனும். அதுக்கு மேலே வைச்சுடாதீங்க.....பத்து ரூபா லிமிட்
நேத்துப் பாருங்கோ ஒரு சேட்டுப் பையன் பத்து பத்தா ஆறு பத்து மடிச்சு வைச்சான்.
அந்த மாதிரி பண்ணாதீங்கோ, நமக்குத் தாங்காது. வைச்சாச்சா...... எடுக்கலாமா,.... ஏன்
பெட்டியப் பெட்டிய பாக்குறிங்க. பெட்டிக்குள்ளே என்ன இருக்கு......ஒரு கோழி முட்டை
ஒரு பாம்பு இருக்கு, பசிச்சுதுன்னா பாம்பு கோழி முட்டையைத் தின்னும் -
அவ்வளவுதான். தாட்ல போடு பணத்தை... . ம் ... வைச்சாச்சா..." பெட்டியைத்
திறக்கிறான். பெட்டிக்குள்ளே நிறையப் பழுப்புநிறக் காகித உறைகள் இந்தக் கோடிககு
அந்தக் கோடி வரிசையாய் வைக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து தன்பக்கமாக உள்ள முதல்
உறையை எடுக்கிறான். அந்தப் படங்களின் நடுவே மீண்டும் அந்த உறையைப் போட்டுவிட்டு
மீண்டும் பேசுகிறான்: 'இப்ப கூட பத்துரூபா இனாம் தர்றேன். இதில்லே இருக்கும்
படம் என்னன்னு சொல்லிட்டா - காசு போடு' வெறி பிடித்துக் கத்துகிறான் -
’காசு போடு - காசு கொடுத்தா தாசி, காசு இல்லே தாசி இல்லே - போடு இப்ப பிரிக்கப் போறேன்'
ஒரு ஆக்ரோஷத்துடன் உறையைப் பிரிக்கிறான் மூன்று, ஒட்டகப்படத்தில்
ஒரு ஆள் நாலரை ரூபாய் போட்டிருக்கிறான். அவனுக்கு அத்துடன் 13.50
சேர்த்துத் தரப்படுகிறது. குதிரையில் கிட்டத்தட்ட , பத்து ரூபாய் இருக்கிறது:
புலியில் நூறு ருபாய் சில்லரை தேறும்.
35
யானையில் சில்லரையும் ருபாயுமாக எட்டு ரூபாய் தேறும். மயிலிலும்,
மானிலும் ஒரு இரண்டு ரூபாய் தேறும். இந்த எல்லாப் பணத்தையும் தன்னிடம்
அள்ளிக்கொள்கிறான், தினகரன் இப்போது மீண்டும் ஒட்டகம் வராது என நம்பி மானில்
எட்டணா போடுகிறார். சிறிது நேரம் செல்கிறது உறையைப் பிரிக்க. மீண்டும் ஒட்டகமே
வருகிறது. குதிரையில் எட்டணா போட்டார். மயில் வந்தது. யானையில் எட்டணா போட்டார்.
மீண்டும் ஒட்டகமே வந்தது.
அவருக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக இருந்தது. இது என்னடா கூத்து' என்று
சொல்லிக்கொண்டார். வரும் படத்தை எப்படி நிர்ணயிப்பது? அவருக்கு ஒன்றுமட்டும் பட
ஆரம்பித்தது. இதில் தொடர்ந்து அவர் சரியாகச் சொன்னால், சாவு விஷயத்தைப்பற்றி
எண்ணுவதில் ஒரு தொடர்ச்சியும், அந்தத் தொடர்பில் உருவாகும் இணைப்புச் சக்தியும்
கண்களுக்கு, மனக்கண்களுக்கு, புலப்படும் என்று நம்பினார். அன்றிலிருந்து அவர்
தினமும் மாலை அங்கு போக ஆரம்பித்தார். அவர் விளையாடிய வேகத்தில் ஒரு வாரத்திற்குள்
117 ரூபாய் தோற்றுவிட்டிருந்தார். இதனலெல்லாம் சொல்லமுடியாத தொல்லை. அந்தப் பணம்
போய் பால் கணக்கிலிருந்து குழந்தைகளின் பள்ளிக்கூடக் கட்டணம்வரை உதைத்தது.
இப்படியே ஒரு இருபது நாட்களில் மூன்று மாதச் சம்பளம் போய்விட்டது. ஆனால் ஒன்று,
அந்தக் கவர்கள் பிரிக்கும் முறையில் ஒரு சித்தாந்தம் தெரிய ஆரம்பித்தது. என்றாவது
ஒரு நாள் தற்செயலாக இல்லாமல், முழுமையாக, சித்தாந்த அடிப்படையில் அந்தக் கூட்டத்தை
மொத்தம் பத்து தடவைகள் ஜெயித்து, அந்த உலகம் தனக்குப் பிடி பட்டுவிட்டது என்கிற நிலையில்
அந்த மூன்று மயில் மூன்று புலி ஆட்டத்திலிருந்து விடுதலை அடைவது என்று தீர்மானம்
செய்து கொண்டார். கையில் ஒருநாள் எழுபது ரூபாயுடன் புறப்பட்டார். அவர் அங்கு நிற்க
ஆரம்பித்ததும் அவருக்கு வரவேற்பும், டீயும், சிகரெட்டும் கொடுக் கப்பட்டன. டீயை
நிராகரித்துவிட்டு, சிகரெட்டைப் புற்ற வைத்துக் கொண்டு ஆட்டத்தில் ஆழ்ந்தார்.
கையிலிருக் கும் காசை படபடவென்று போடாமல் நிதானமாக நின்று பார்க்க ஆரம்பித்தார்.
அவர் நரம்பெல்லாம் முறுக்கிக்கொண்டது. என்ன சாமி வைக்கலையா?' என்று இவரைப்
பார்த்து அவன் பேசினான். உன் பாட்டுக்கு நீ கவரைப் பிரி. சும்மா தொந்தரவு செய்யக்
கூடாது' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். 'சரி ராஜா உன் இஷ்டம்' என்றான்
அவன் சிரித்துக்கொண்டே.
36
முதலில் மூன்று யானை வந்தது. பிறகு மான், அதற்குப் பிறகு மீண்டும்
மூன்று யானை. பிறகு மூன்று மான். தினகரன் மனத்திற்குள் கணக்குப் போட ஆரம்பித்தார்,
தொடர்ந்து மூன்று முறை மூன்று யானை வந்தது. இப்போது ஒட்டகத்திலும் மானிலும்
எக்கச்சக்கமாக பணம் விழுந்தது. தினகரின் புலியிலும், மயிலிலும் பத்து ரூபாய்
போட்டார். கையில் இப்போது ஐம்பது ரூபாய்கள்தாம் இருந்தன. மனம் 'திக்திக்' என்று
அடித்துக்கொண்டது.பணம் போவதை விட மீண்டும் தோற்றுவிடுவோமோ..
என்கிற பயம். துக்கம் தொண்டையை அடைததது. அப் போது காவல்துறை ஊர்தி
ஒன்று அங்கு வந்தது. ஒருவன் ஐம்பது ரூபாய் எடுத்துக்கொண்டு ஊர்தி அருகில்போனான்.
காவல் உடையில் ஒருவன் இவர்களை நோக்கி வந்தான். அவர்களிடையே ஏதோ பேரம்
நடந்துகொண்டிருந்தது. தினகரனுக்குப் பயம், சிலசமயம் நடுவிலிருந்து ஏதேனும் உறையை
உருவி விடுவான். அதுகூட ரொம்ப சூஷ்மமாகச் செய்யப்படும். அவர்கள் எல்லோருக்குமே
நெளிவு சுளிவுகள் கொண்ட கைவிரல்கள். ஒருவன் குனிந்து வாழைப்பழத்தில் வத்தி
சொருகுவதுபோல் செயல்பட்டு, இருபது முப்பது உறைகளை மாற்றி வைத்து விடுவான்.
தின்கரன் கவனித்துக் கொண்டிருந்தார். வீட்டில் உட்கார்ந்து தோராயம் போட்டுப்
போட்டுப் பார்த்ததில் நல்ல பலன் கிடைக்கும் என்று நம்பினார். ஒரு வழியாகப் பேரம்
பேசி, பணம் பெற்றுக்கொண்டு காவல் ஊர்தியும் சென்று விட்டது. உறையைப் பிரித்தான்.
மூன்று மயில் பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும், புலியிலும் மயிலிலும் பத்து ரூபாய்
போட்டார். மூன்று புலி வந்தது. மற்ற இரு ஆட்டமும் மயில் வந்தது, ஆந்த இரு
கட்டத்திலேயே அவர் தொடர்ந்தார். ஆனால் இந்த முறை மூன்று மான் வந்தது. அவர் துணுக்குற்றார்,
ஆனால் தன்னுடைய அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. திடீர் என்று அவருக்கு
அது பட்டது. அதாவது இனிமேல், மான் வரும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தவே அவன்
அப்படிச் செய்கிறான் என்று பட்டது. ஒரு ஆட்டம் விட்டுப் பார்ப்போம் என்று
நினைத்தார். மூன்று ஒட்டகம் வந்தது. ஒட்டகத்திற்குப் பிறகு மீண்டும், மயிலிலும்
புலியிலும் பணம் போட இருந்தவர், மான்
37
படத்தைப் பார்த்துக் கொஞ்சம் தயங்கினார். இதற்குள் அவன் கவரை
எடுத்துவிடுவான் போலிருக்கவே, மீண்டும் புலியிலும் மயிலிலும் பத்து ரூபாய்
போட்டார். நினைத்துக்கொண்டதுபோல் மானிலும் பத்து ரூபாய் போட்டார். மூன்று மயில்
வந்தது. அந்த ஆட்டத்தில் அவருக்குப் பத்து - ரூபாய்தான் லாபம், ஒருவித குதூகலத்துடன் மீண்டும் மயில் கட்டத்தையும்
புலிக் கட்டத்தையும் பிடித்தார். மூன்று முறைகள் புலியும் மூன்று முறைகள் மயிலும்
வந்தன. 'என்ன சாமி, இன்னிக்கு எங்களை போண்டி பண்ணிடுவே போலிருக்கே'
என்றான், ஆட்டத்தை நடத்துபவன். ஏனோ இப்போது குதிரையில் வைத்தார். வந்தது.
தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் ஒட்டகத்தில் வைத்தார். வந்தது. பிறகு யானையிலும்
மயிலிலும் வைத்தார். இரண்டு யானை ஒரு மயில் வந்தது.பிறகு மூன்று யானையில் வைத்தார்
வந்தது. மீண்டும் புலியில் வைத்தார். வந்தது. இப்போதுதான், இந்நிலையில் தான், இவர்
வைப்பதில் எல்லோரும் வைத்து ஆட்டம் நடத்துபவனே நிஜமாகவே போண்டி செய்து
கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்த அர்த்த உலகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற
ஆசைக்கு மேல் பணத்தாசை தன்னைத் தொற்றிக்கொண்டு விட்டதோ எனப் பயந்தார். ஆனல்
உண்மையில் அவருக்கு பணம் தேவையாக இருந்தது. அற்ப சொற்பமாகவா அவருடைய பணத்தை
அந்தப்படத் கட்டங்கள் விழுங்கியிருக்கின்றன! ...... இந்த சிந்தனை ஒட்டங்கள், கடலில்
குளிப்பு, ஏதோ ஞாபகம் வரவேண்டி குதிரைப் பந்தயம், புலி, மான் ஆட்ட்ம், இவையெல்லாம்
நம்மைச் சூழ்ந்த பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கத்தான் என்பதல்லாது வேறு எவ்வாறு
இவற்றை நிலைநாட்ட முடியும்? ஆனாலும் தான், இவ்வாறு சூதாடுவதற்கும் பிரபஞ்ச
ரீதியில் சாவைப்பற்றி சிந்திப்பதற்கும். ஏதோ தொடர்பு இருக்கும் என்றே பட்டது.
நடைமுறை வாழ்க்கை ...தன் செய்கைகளை மதிக்கவில்லை என்பதினாலேயே தனக்கு இந்தத்
தடுமாற்றம் ஏற்படுகிறது என்றும், தான் அதை வெகுவாகப் பாராட்டக்கூடாது என்றும்
நினைத்துக்கொண்டார். ஆனல் அன்று ஜெயித்ததற்குப் பிறகு அவர் அதிகமாக அந்த இடத்தை
நாடவில்லை. எப்பேர்பட்ட ஆட்டக்காரனையும் சிலசமயங்களில், பல தடவைகள் தொடர்ந்து
தப்பாகப் பணத்தைப்போட வைத்து அவ்வளவு பணத்தையும் விழுங்கும் படுகுழி அது
எப்பேர்ப்பட்ட ஆட்டக்காரனையும், தொடர்ந்து அது
38
தப்பாகப் படத்தை நிர்ணயிக்க வைக்கும் தன்மைகொண்டிருப்பதை
என்னவென்பது?
ஆனால் மனத்தில் சாவுபற்றிய முக்கியமான எண்ணங்களைப் புலி, குதிரைகளாக
மாற்றி நிற்க வைப்பதில் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சுலபமாக
இருந்தது. அவரையும் அறியாது அநதப் படங்களைப் போல முக்கியமான எண்ணங்களை
ஒவ்வொரு கட்டத்திலும் உறையைப் பிரிப்பவரானார். இந்த நாட்களில்தான் பெல்ஜிய
நாட்டைச் சேர்ந்த இவான்ஸ்
இவரிடம், தானே வலிய ஆன வந்து பேச ஆரம்பித்தார். அதிகாரி
ஏதாவது சொல்லியிருப்பாரோ?" அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமேது? எங்கெங்கோ எப்படியோ
நேரத்தைப் பலவித பல நாட்டுப் பணநோட்டுகளாக்க, நேரத்தைப் பம்பரமாகச் சுழல
வைப்பவருக்கு ஒரு தினகரன் என்ன நினைக்கிறார், ஏன் அடிப்படைகளில் கிடந்து
உழல்கிறார் என்றெல்லாம் நினைக்க நேரமேது. ஒர் கழிவிரக்கத்துடன் தான் அவர் களுடைய
கவனிப்பு நிலைகளை எதிர்பார்க்கிறோமோ என்று கூடப்பட்டது. அப்படி இல்லாவிடினும்
பிரபஞ்ச ரீதியில் எப்போதும் ஒர் நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு அது நிறைவேறாமல்
இப்படிக் கோமாளிக் கூத்து அடிக்கிறோமோ என்றும் பட்டது. இந்த மாதிரி எண்ணம்
ஏற்பட்டதும் அவருக்குத் தன் மேலேயே வெட்கம் உண்டாயிற்று. குரங்கைச் சாகக் கொடுத்த
ஆண்டிபோல், புன்சிரிப்பற்று, பணமும் கலையும் தாண்டவம் ஆடுமிடத்தில், சிருஷ்டி
பரிகாரம் போன்று காணப்படும் ஒரு சோளக் கொல்லை பொம்மையாக அவர் தம்மைக்
கண்டார்.இவான்ஸிடம் சிரித்துப்பேசி, அவன் விரிக்கும் வலையிலிருந்து தப்பப்
பார்த்தார். அவர் டிமிக்கிக் கொடுக்கிறார் என்பதை அவன் இனங்கண்டிருக்கவேண்டும்.|
ஒரு நாள் இவர் தன் பிரக்ஞையற்று தோல் பரப்பளவைப் பதிவு
செய்துகொண்டிருக்கும் போது இவான்ஸ் இவர் பக்கத்திலேயே நின்றிருக்கிறான்.
பரப்பளவை வாசிப்பவன் ஏதேதோ சைகைகள் செய்தும் கனைத்தும் இவர் கவனிக்காமல்
இருந்திருக்கிறார். அளவுகளை, நோட்டுப் புத்தகத்தில் குறித்துக்கொள்ளும் பால் பாயின்ட்
பேனா கீழே விழ அதை எடுக்கக் குனிந்தபோது
39
தான் அடிக்கடி பார்த்த முதலைத்தோல் பூட்ஸ் கொண்ட இவான்ஸின் தோற்றத்தை
இனங்கண்டார். இவான்ஸ் சிரித்த சிரிப்பு அந்த ஆபிஸையே கதிகலங்க வைத்தது.
நான்கு அதிகாரிகளில் மூன்று பேர் கூடிவிட்டார்கள். வேலைக்காரர்கள் முன்னிலையில்
பலவித விமர்சனங்களுக்கு உள்ளானர் தினகரன். காரியம் நடக்கும் பட்சத்தில் அங்கு
யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம். கேலி செய்யலாம். ஒரு நாள் பெரிய அதிகாரி
ஒர்க்ஸ் மானேஜரைப் பார்த்து - அந்த 15 வருட ‘நிப்’ மேல் ஆசைக் கொண்டவர் தான்.
- “சும்மார்ரா, உனக்கு வியாபாரமும் தெரியாது ஒண்னும் தெரியாது, ஏதாவது
வெள்ளைத்தோல ஊம்பிண்டு போன்னா போவே. அதுதான் உனக்குத் தெரியும்” என்றார்.
-
“அதுக்கில்லே சித்தப்பா. ..”
என்னடா அதுக்கில்லே - இதுக்கில்லே - நீ வெள்ளைத் தோலை ஊம்பரவன்னா
ஊம்ப்ரவன்தான், நூற்றுப்பதினெட்டு சதவீதம் சுங்கம் கொடுத்து வாங்கி வந்த கெமிகல்ஸை
இவனுக்கே ஊத்தி தோல் சமைக்கிறானாம் - இவனும் இவன் வியாபாரமும்” என்று மூன்று மாடி
கேட்க இறைந்துக்கொண்போனார் எல்லோருக்கும் பெரிய அதிகாரி. நிறைய பேர்கள்
மனத்திற்குள் சிரித்துக்கொண்டதை தினகரனால் பார்த்க முடிந்தது. ஆனால் இதெல்லாம்
அர்த்தமற்ற சீண்டல்தான். அன்று அந்த அதிகாரி தான் வாங்கிய உதையைத்
தோல் கட்டும் பிரிவின்மேல் விசிறி எறிந்தார். "ஏண்டா! படுப்பாவி
பசங்களா-அறிவுகெட்ட ஜடங்களா - ஒரு பெட்டி இருபது ரூபாடா...... மயிரா சுன்னு அவனவன்
மொதிச்சுண்டே போறேளே -டேய் போங்கோடா-துண்டைத் தூக்கி தலையிலே போட்டுண்டு அம்போன்னு
போரேன் - என்ன மயிரு வியாபாரம் வேண்டிக் கிடக்கு எனக்கு.' வேலைக்காரர்கள் செய்வது
தவறுதான் என்று தெரிந்தாலும் எது அதை ஏற்படுத்தியது என்று தெரிந்ததால் எல்லோருமே
மனத்திற்குள் சிரித்துக்கொண்டார்கள், எங்கேயாவது அங்கே, இன்னும் கொஞ்ச நேரம்
நின்றால் தானும் சிரித்துவிடுவோமோ என்று அஞ்சி அதிகாரி தன் அறைக்கு விரைந்தார்.
ஆனாம் தினகரன் அப்போது நடந்து கொண்டிருந்து தன்னைப் பற்றிய அலசல்களை
அவ்வளவு தூரம் லட்சியம்
40
செய்திருக்க வேண்டாம்: இருந்தும் அவர் ஏதோ குன்னிப் போனார் அசட்டுச்
சிரிப்பு சிரித்தார். கல்லூரியில் பழகிய விதத்தில், இப்போது பந்தமற்ற முறையில்,
இடுப்பை வளைத்து வளைத்து ஒருவித அங்கீகரிப்புப் புன்னகையை காட்டிக் கொண்டு, பின்
மண்டையைச் சொரிந்து இன்னும் வெகுவாக அசடு தட்ட நின்றார். இவான்ஸ் ஆறடிக்கு மேல்
இருப்பான், அவனுக்கு வயது அறுபதுக்கு மேல் இருக்கும். இருந்தும், தான் ஏக
வசனத்திலேயே இவான்ஸைப்பற்றி நினைப்பதேன் என்று தினகரனுக்குச் சந்தேகம், அவ்வளவு
ஆஹிருதியில் வளர்ச்சியில் மாமிசமலை போல் இவான்ஸ் காணப்பட்டான். பாலகன் குமார்
முகத்தில் இருக்கும் தீட்சண்யம், ஒளி அந்த முகத்தில் இல்லை. பொதுவாக எவ்வளவோ
வெள்ளைக்காரர்களை அவர் பார்த்துப் பேசி இருக்கிறார், ஆனால் இங்கு இவர் நம்பாது
இருந்தும் ஒளிமிகக் கொண்ட முகங்களை உடைய ஆனந்தாக்களும், ஏன் சாதாரணமாக பஸ்ஸில்
போகும் மனிதர்களில், சில பேர்களின் பல்லிலெல்லாம் இது வண்டிக் கணக்கில் ஊத்தை
இருந்தாலும், அந்த முகங்களின் தேஜஸ் இவர்களுக்கு ஒரு நாளும் கிட்டுவதில்லை என்பதை
இனங்கண்டிருந்தார். ஆனால் அவ்வளவு பிரகாசம் முகத்தில் இருந்தும், இவர்களைப் போல்,
பெட்ரோல் பதம் செய்யும்விதம் அவர்களுக்கு முதன் முதலில் பட்டிருக்காது எனவும்
நம்பினார். இந்த வயதிலும் இவான்ஸ் நாலு செட் டென்னீஸ் ஆடுகிறான். சமுத்திரத்தில்
நீந்துகிறான். அதிகமாக இரைக்காமல் மாடிகள் ஏறி வருகிறான். எப்போதாவது,
தொழிற்சாலையில் உருண்டைத் தொட்டிகளுத்குள் அறை நிக்கருடன் குதித்து வெந்த
தோலைப் பரிட்சை செய்கிறான். அவரைவிட இருபத்தைந்துவயது குறைந்த பெரிய அதிகாரிக்கு மாடியேறி
வந்தால் இரைக்கிறது - இவான்ஸை விடப் பெரிய அதிகாரிக்கு கவலை அதிகமென்பன்தைக்
கணக்கில் கொண்டாலும்கூட. இவான்ஸ் பெல்ஜியம் கான்ஸ்லேட் பிரதிநிதியாக மதராஸில்
முப்பது வருடமாக இருக்கிறார். அவனுக்கு மதராஸில் சந்துபொந்தெல்லாம்_தெரியும். ஒரு
ஐ.ஏ.எஸ் அதிகாரி போன்றவன் அவன். திடீர் என்று பத்து வருடங்களுக்குமுன் கொஞ்சம்
வியாபாரமும் செய்தால் என்ன என்று தோன்ற பிரான்ஸிலும், பெல்ஜியத்திலும், உள்ள பெரிய
வர்த்தகங்களுடன் சம்பந்தம், ஏற்படுத்திக்தொண்டு, காலப்போக்கில் அஜ்ஜீமர்
என்றவருக்கு பிரான்ஸின் பிரதிநிதியாகி இரண்டு பக்கங்களிலிருந்தும் கமிஷன்
சம்பாதிக்கிறான்.
41
எப்போதும் அவனது கண்களில் ஒரு பருந்தின் குரூரமிருப்பதாகத்
தினகரனுக்குப்படும். இந்தப் பருந்துக் கண்கள்தாம் அவனிடம் மனம் விட்டுப் பழக
முடியாமல் அவரைத் தடுத்தது. எப்படி இருந்தும் பெரிய அதிகாரி, தினகரன், தினகரனுடைய
அதிகாரி மூன்று பேர்களும் சேர்ந்தால்கூட அவனைக் கீழே தள்ள முடியுமா என்றால்
சந்தேகம்தான். முக்கியமாக மார்பின் இரு பக்கங்களிலும், ராத்தல் ராத்தலாக சதை
பொங்கி வழிந்துகொண்டிருந்தது. கால்களில், நேராக நின்றவிதத்தில் எக்கச்சக்க வலு
தெரிந்தது. என்னவோ ஒரு வசவு சொல்லி "இப்ப கூட இவன் ஒரு பதினாறு
வயதுக்குட்டியை..." என்று பெரிய அதிகாரி அவன் எதிரிலேயே திட்டுவார். முப்பது
வருடம் இங்கேயே இருந்ததினலோ என்னவோ, 'நீங்க என்ன சொல்றேள்" என்பான்
இவான்ஸ், போடான்னு வைது விட்டு "ஐ டெல் யு குட்மேன்' என்பார் பெரிய அதிகாரி,
அரை குன்ற ஆங்கிலத்தில். அவர் எட்டாவது வரைதான் படித்தவர் - சில சமயங்களில்
தினகரன் இப்படிவா - இவன் என்ன எழவுடா சொல்றான் - என் தாலியை அறுக்கிறாண்டா.
இவனும் இவன் பாஷையும் - சுத்த கண்டார. பய” என்று திட்டுவார். 'ஹி இஸ் அப்யூசிங்
மீ?' என்பான் இவான்ஸ். அது பெரிய அதிகாரிக்குப் புரிந்துவிடும். அதற்கும்
ஏதாவது திட்டுவார் பெரிய அதிகாரி, இரண்டு பேரையும் பார்த்து இவான்ஸ் டச்சு
மொழியில் ஏதோ சொல்வான். நீங்கள் இருவரும் என்னத் தமிழில் திட்டினீர்கள். நான்
டச்சு மொழியில் உங்களைத் திட்டினேன். அது உங்கள் தமிழ் வசைக்குக் கொஞ்சம்கூடத்
குறைச்சல் இல்லே' என்று சொல்லிச் சிரிப்பான் இவான்ஸ்.-
திடீர் என்று பெரிய அதிகாரி வேட்டி ஓரத்தை எடுத்துப் பல்லால் கடிக்க
ஆரம்பித்து விடுவார். கண்கள் எங்தோ குத்திட்டு நிற்கும். , அது ஒரு நாலரை அல்லது
முக்கால் "ஏண்டா கண்ணா இன்பீரியர் ஃபித்தை கொஞ்சம்கூட தாமதிக்காமல்
சார்ட்டருக்குப் புக் பண்ணிவிடு” என்று சொல்லிக் கொண்டே போய்விடுவார்.
தினகரன் மெய்மறந்து போனதைக் கேலி செய்துகொண்டிருந்த எல்லோரும், பெரிய
அதிகாரி திடீரென்று ஏதோ, |மனக்கணக்குப் போட்டுக்கொண்டு போய்விடவே, அவரவர் வேலையைக் கவனிக்கப் பிரிந்துவிட்டார்கள். இவான்ஸ், தினகரன் தனியே
விடப்பட்டார்கள்.
42
இவான்ஸ் பேச்சின் நடுவே அவரை ஞாயிற்றுக்கிழமை மத்தியான உணவிற்கு
அழைத்தான், தினகரன் மறுத்துப் பார்த்தார். இவான்ஸ் கேட்கவில்லை. என்னுடைய
சமையல்காரன் சாம்பார், ரசம்கூடப் பண்ணுவான் என்றான். தினகரன் சிரித்தார்.
"மாமிசம் வேண்டாம். சைவமாக என்ன இருந்தாலும் பரவாயில்லை' என்றார். பெரிய
அதிகாரி ஒருக்கால் தன்னை ஆழம் பார்க்க இவான்ஸை ஏற் படுத்தியிருப்பாரோ என்று
நினைத்தார் தினகரன். ஆனல் அதெல்லாம் அப்படியிருக்காது, இரண்டு மூன்று தடவை பார்த்து
நாலு வார்த்தைகள் பேசினாலே போதும். பண விஷயங்களில் அவன் எப்படியிருக்கிறான்,
அவனுடைய சிந்தனை ஓட்டம் எத்தன்மை வாய்ந்தது என்று ரொம்பவும் சுலபமாகவே அவர்
கண்டுபிடித்து விடுவார். அவருக்கு முக்கியமும் அதுதான். இதற்கு ஒரு இவான்ஸின் தேவை
எதற்கு? அவருக்கு விஷயம் புரிய வெகுநேரம் பிடிக்க வில்லை. இவான்ஸ்-க்கு, அவர்
இந்தக் காலங்களில் என்னதான் நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள ஆசை. அதனால்தான்
மத்தியான உணவிற்குக் கூப்பிடுகிறான்.
இவான்ஸ் இருந்த பங்களா, அந்தத் தெருவில் சற்று உள்ளடங்கி இருந்தது.
சுற்றுப்புறத்தில் எல்லாம் ஒரே மரங்கள். காலப் பத்து மணிவாக்கில், அந்த இடங்களில்,
இவான்ஸ் வீட்டைக் கணிக்க தினகரன் நடந்துகொண்டிருந்தபோது சூரியன் தன்னை,
மரங்களிலிருந்து வடிகட்டிக் கொண்ருப்பதைப் பார்த்தார், ஏனோ அவருக்கு அழ வேண்டும்
போலிருந்தது. - துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது. இவான்ஸ், மீண்டும் இவர்
ஏக்கலபிச்சமாக நடப்பதை வீட்டிலிருந்து பார்த்து, கைதட்டி ஆரவாரித்து, தலையை ஆட்டி
ஆட்டி ஆங்கிலத்தில், "எப்படித்தான் - எப்படித்தான் நீ எண்ணங்களில் தொலைந்து
விடுகிறாயடா மனிதா' என்று அட்டகாசமாகச் சொல்லி வரவேற்றான்.
‘ஹோ! இவான்ஸ் தயவு செய்து...' என்றார் தினகரன். தொடர்ந்து ‘இவன்
என்னிடம் என்ன எதிரபார்க்கிறான்’ என்று நினத்தார். மிகவும் தனிமையாக உணர்கிறான்
போலிருக்கிறது என்றும் நினைத்துக் கொண்டார்.
வீடு பெரியதாக இருந்தது. ரொம்பப் பழையகாலத்து வீடு. இவ்வளவு காலமும்
அதைப் பாதுகாத்த விதத்தில் ஒரு மெருகு தெரிந்தது. திடீர் திடீர் என்று முளைக்கும்
தூண்களுக்கு வெள்ளை அடித்து, ஆங்காங்கே தட்டிகளைத் தொங்கவிட்டிருந்த விதத்தில் ஒரு
புதுமை இருப்பததாகப்பட்டது. வீட்டைச் சுற்றிப் பார்த்தார் தினகரன். அவர் வெளி
நாட்டவர்களிட்ம் அடிக்கடி கேட்டிருந்த குற்றச்சாட்டை இவான்ஸிடமும் பெற்றார் -
"இந்தியர்களுக்கு வீட்டைச் சுற்றிப்பார்க்க வேண்டும்.”
"ஐரோப்பியர்கள் நிறைய பேர்களிடம் இந்தக் கண்டனத்தைக்
கேட்டிருக்கிறேன். ஆனால் இதில் தவறென்ன என்று எனக்குப் புரியவில்லை' என்றார். அவன்
இப்படிச் சொன்னதும் சூழ்நிலையில் அவர் அதிகம் கவனம் செலுத்தவில்லை. காலத்திற்கு
ஏற்றார்போல் வீட்டில் புதுமைகளை இவான்ஸ் ஏற்படுத்தும் முயற்சியில், மாறாத சில
வடுக்களை அந்த வீட்டின் அறைகள் பெற்றிருப்பதைத் தினகரன் பார்த்தார்.
கலர் டெலிவிஷன் (1974) - அறையின் மூலையில் அழகாக, ஆனால் அர்த்தமற்று
வைக்கப்பட்டிருந்தது. பெல்ஜியத்தில் அகப்படும் அவ்வளவு செளகரியங்களையும், மதராஸ்
வீட்டில் பிரதிபலிக்க வைக்க முயற்சி செய்து இவான்ஸ் தோற்றுப் போயிருப்பதைத்
தினகரன் பார்த்தார். அவனுடைய பெரிய பெல்ஜியம் கார்கூட, வீட்டின் பின்னணியில்,
அர்த்தமற்று இருப்பதுபோல் அவருக்குப் பட்டது. அதாவது அந்தமாதிரி கார் ஏதோ ஒரு
காலத்தில் நிற்கக்கூடும் என்று கனவில்கூட கண்டிராது, அந்த் அர்த்தத்தை
எள்ளளவுக்கும் கிரகித்துக்கொள்ளாமல் அந்த வீடு கட்டப்பட்டிருப்பதைத் தினகரன்
பார்த்தார். தினகரனுக்கு இந்தப் புதிய எண்ணம், புதிய உலகத்தைத் கற்பித்துக்
காட்டும் என்று நம்பினார் ஆனால் அதனுள் அவர் பிரவேசிக்க விரும்பவில்லை.
இதைப்பற்றிப் பிறகு யோசிக்கலாம் என்று சும்மாயிருந்து விட்டார்.
44
44
இவான்ஸ் சொன்னதுபோல் சமையல்காரர் சர்மா, ஊ. பி. யைச் சேர்ந்தவ்ர்,
நன்ருகவே சமையல் செய்திருந்தார். நன்றாக உப்பிய ‘னான்’களை, முகலாய பாணியில் ரொம்பவும் பெரிய தட்டில், பெரிது பெரிதாக மடிக்காமல் வைத்திருந்தான்.
நல்லக்ரீமும், பாலேடு கட்டியும் சேர்க்கப்பட்டு பாலக் ஒரு பெரிய பீங்கான் தட்டில் பரப்பிச் சுடச்சுட
வைக்கப்பட்டிருந்தது. ‘லகுனா ’ ஹோட்டல் இருந்த களுட்பிளேஸ் ஞாபகம், தினகரனுக்கு
வந்தது. குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துக்கொண்டு போய் ரொம்ப நாட்களாகிறது என்று
நினைத்துக் கொண்டார். தேவிகலாவைச் சார்ந்த ஒரு சின்னச் சிற்றுண்டிச்சாலை
திறக்கப்பட்டிருக்கிறது என்றும் பதார்த்தங்கள் எல்லாம் ரொம்பவும் ருசிகரமாக
இருக்கிறது என்றும் கேள்விப்பட்டிருந்தார். குழந்தைகளையும் பத்மாவையும்
ஞாயிற்றுக்கிழமை அங்கே அழைத்துக் கொண்டு போகலாம். சாதாரணமாக இவான்ஸும் அவரும்
பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.
"எங்கே உங்கள் மனைவி' என்றார் தினகரன்.
"அவளுடைய தம்பிக்கு உடம்பு சரியில்லை. பெல்ஜியம்
போயிருக்கிருள்!'
'உன்னுடைய மகள் எப்படியிருக்கிறாள்' -
'பரவாயில்லை... அவளுடைய மூன்று குழந்தைகளும் நியூயார்க்கில்
படித்துக் கொண்டிருக்கின்றன."
மேலே பேச்சு தொடராதோ என்று சந்தேகமாகப் போய் விட்டது. என்ன பேசுவது
என்று யோசித்துக் கொண்டிருந்தார். "இந்தியர்கள் கர்வம் மிக்கவர்கள்' என்றான்
இவான்ஸ். நானும் அவர்கள் ஒன்றுமில்லை என்பதுபோல் மிரட்டப் பார்க்கிறேன்.
முடிவதில்லை."
'நீ ஏன் அப்படிச் செய்யவேண்டும்" என்றார் தினகரன் சிரித்துக் கொண்டே.
"இவ்வளவு பொருளாதார நசிப்பும் நாசமும் இருந்தும் இது எப்படி சாத்தியமாகிறது.'
"இவ்வளவு பொருளாதார நசிப்பும் நாசமும் இருந்தும் இது எப்படி சாத்தியமாகிறது.'
'ஆன்மா" என்றார் தினகரன். -
ஆமாம், நீங்களும் உங்கள் பிலாசபியும், நான் இறந்ததற்குப் பிறகு,
என்னவாகப் பிறக்கிறேன் என்பது எனக்கு எப்படித் தெரியும்?" .
45
தினகரன் இதற்கு ஒன்றும் சொல்லவில்லை.
'ஏன் உங்கள் அரசியல்வாதிகள் இவ்வளவு பேசுகிறார்கள். பேசுவதற்கும் ஒரு
வரையரை, எல்லை வேண்டாம்" என்றான் இவான்ஸ்.
。
。
பேசிப் பேசி அரசியல் பதவிகள் வேறு வாங்கி விடுகிறார்கள்' என்றார்
தினகரன்.
அவனுக்கு ரொம்பவும் விட்டுக் கொடுக்கிறோமோ என்று பட்டது. அதனால் 'அது
தமிழ் ரொம்பவும் பழமையான மொழி" என்றார் தினகரன்.
"கிரேக்க மொழியும் தான்' என்றான் இவான்ஸ்.
"கிரேக்க மொழியும் தான்' என்றான் இவான்ஸ்.
'சம்ஸ்க்ரிதம் கிரீக்கைவிடப் பழமை வாய்ந்தது' என்ருர் தினகரன்.
இவான்ஸுடைய முகம் சற்றே வாடிவிட்டது. "எங்கள் நாட்டிலும் மொழிச்
சண்டை எல்லாம் இருக்கிறது. ஆளுல் இன்றைக்கெல்லாம் முப்பது லட்சம் ஜனங்கள்
இருந்தால் ஆதிகம். 'தன்னுடைய நாட்டில் ஜனத்தொகை குறைந்திருப்பதைப்பற் அவன்
ரொம்பவும் கவலைப்படுகிறான் என்று தினகரனுக்குப் பட்டது. எல்லாவற்றையும்விட
நம்முடைய எண்ணிக்கை மேல்நாட்டுக்காரன்களுடைய கண்களை உறுத்துகிறது' என்று
நினைத்தார்.
காப்பியை எடுத்துக்கொண்டு லானில் போட்டிருந்த நாற்காலிகளை இருவரும்
அடைந்தனர். ஒரு மேஜையும் இருந்தது. அதில் இரண்டு மூன்று புத்தகங்கள். நீண்டு
வளர்ந்திருந்த மரங்கள் மெல்லிய காற்றில் அசைந்து கொண்டிருந்தன. அவை தினகரனின்
மனத்தை ஈர்த்தன. தன் இனத்தைவிட, அவைகளும் சக்தி வாய்ந்தவை என்று பட ஆரம்பித்தது.
அன்று கடற்கரையில் மணல் - தன் இனத்தைவிடச் சக்தி வாய்ந்தது என்று பட்டது. இன்று
மரங்களும் தன் இனத்தைவிடச் சக்தி வாய்ந்தது என்று படுகிறது. மணல், மரம் இதில் எது
அதிக சக்தி வாய்ந்தது. இவான்ஸ் கண்கொட்டாமல் தினகரனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தனக்குள்ளேயே ஒருவிதமாகச் சிரித்துக் கொண்டு,'உன்னுடைய காப்பி ஆறிப்போகிறது’
என்றான்.
46
தினகரனும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதுபோல் மடக் மடக்கென்று
காப்பியைக் குடித்தார்.
“நான் உனக்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன்" என்றான் இவான்ஸ்.
“ஏன் என்ன ஆயிற்று' என்ருர் தினகரன்.
“ நீ மனநோய் பிடித்தவன் என்று நினைக்கிறேன்' என்றான்
“ நீ உன்னையே, பைத்தியம் இல்லை என்று நிச்சயமாக நம்புகிறாயா?'
என்றார் தினகரன். தொடர்ந்து, "இந்த லேபிள் எல்லாம் எனக்கு முக்கியமில்லை.
உங்கள் உலக பாஷையில் நான் என்னை ஒரு ஜீனியஸ் என்றே கருதுகிறேன்' என்றார்.
"உன்னுடைய சாதனை என்ன?' என்றான் இவான்ஸ் ஒரு வித எரிச்சல் கலந்த
நையாண்டித்தனத்தோடு. தொடர்ந்து ஒரு புன்முறுவலை இழையவிட்டு மீண்டும் ஆங்கிலத்தில்
இதனை விடு. என்ன சாதனை புரியப்போவதாக நீ நம்புகிறாய்?' என்றான்.
"எனக்குத் தெரியாது' என்ருர் தினகரன் ஒருவித
கையாலாகாத்தனத்துடனும் விரக்தியுடனும்.
"உண்மையான விஷயம் என்னவென்றால் நீ ஒரு சீக்காளி' என்றான்
இவான்ஸ். தொடர்ந்து, "இப்போது இதற்கெல்லாம் எக்கச்சக்க மருந்து
இருக்கிறது?" என்றான்.
"தாங்ஸ்' என்றார் தினகரன். அவருக்கு ஏன் வந்தோம் என்று
ஆகிவிட்டது. அவர் மனத்தை புரிந்துகொண்டது போல் இவான்ஸ் "என்னைத் தப்பாக
எடுத்துக்கொள்ளாதே' என்றான்.
“அதனாலென்ன பரவாயில்லை” என்றார் தினகரன்.
“நீ இப்போதெல்லாம் எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருக்கிறாய்”
என்றான் இவான்ஸ். தொடர்ந்து தினகரன் மௌனம் சாதித்தார்.
“பணம்...!"
“இல்லை..."
"பின்னே எதுதான்? - என்ன விஷயம் சொல்லேன்."
"அது சாவைப் பற்றியது?"
"சாவைப் பற்றியா? அப்படியென்ன?' என்றான் இவான்ஸ்.
‘சாவு சம்பவிக்கும் விதத்தில் இழைக் கோலத்தின் ஒர் துல்லியமான தன்மை
இருக்கிறது என்பது என் கணிப்பு' என்றார் தினகரன். ”இப்படியும் ஒருவித
ஆன்மாவா" என்கிற மாதிரி இவான்ஸ் தன்னுடைய வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டான்.
இப்போது இவான்ஸைப் பார்க்க தினகரனுக்குப் பரிதாபமாக இருந்தது.
"நாம் எல்லோரும் ஒருநாள் போய் விடுவோம்...அதுவா" என்றான்
இவான்ஸ்.
தினகரன் இதற்குப் பதில் சொல்லவில்லை, "இந்த இழைக் கோலத்
தன்மையைப்பற்றி நீ என்ன சொல்ல விரும்புகிறாய்' என்றான் இவான்ஸ்.
"இன்னமும் எனக்கு அது சரியாகப் புலப்படவில்லை' என்றார் தினகரன்.
"நீ இப்போது சற்று முன்னால் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மரத்துக்கும்
அதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?” என்றான் இவான்ஸ்.
‘இருக்கிறது! - நாம் இப்போது கால் ஊன்றியிருக்கும் மண்ணையும்
சேர்த்துத்தான்' என்றார் தினகரன் எழுந்து கொண்டே... "நாமும் ஒருநாள்
மண்ணாகிப் போவோம் என்கிற சென்டிமெண்டலிஸமா?’ என்றான் இவான்ஸ்.
தினகரனுக்கு இந்தக் கேள்வி உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரை
மின்சாரம் பாய்ச்சினாற் போலிருந்தது. அவர் வாஞ்சையுடன் இவான்ஸ் தோள்மேல் ஒரு
கையைப் போட்டு இந்த மண் எல்லாம் ஒரு காலத்தில் உருண்டு திரண்ட பாறைகளாக
இருந்ததில்தான் என் ஆச்சர்யம் மிளிர்கிறது” என்றார். -
48
48
அன்று இரவு தினகரன் ஒரு கனவுக் கண்டார். முதலில் ஒரு சிறுமி
கயிற்றில் தாண்டு விளையாட்டு விளையாடிக் கொண்டே போகிறாள். தான் அவ்வாறு
தாண்டிக் குதித்துப் போவதை எண்ணிக்கை இடுகிறாள். அவளுக்குச் சிறிதே இரைக்கிறது.
பிறகு அவள் மறைந்து விடுகிறாள். இப்போது சற்றே குளிர்கின்ற ஈரச் சூரிய மாலையில்,
வெண்மணலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஒரே தென்னை மரங்கள் தெரிகின்றன. இவர் நடக்க
நடக்க அந்தத் தென்னந் தோட்டமும் நீண்டு கொண்டே போகிறது. நேரம் செல்லச் செல்ல
இருட்டு மெல்லப் பரவுகிறது. அந்தத் தென்னைகளைத் தாண்டியதும் ஒரு பட்டணம் தெரியும்
என்றும், இன்னமும் இருட்டுவதற்குள் அந்தப்பட்டணத்தைத் தான் அடைந்து விடவேண்டும்
என்கிற முனைப்புடனும் நடையை எட்டிப்போடுகிறார். அப்போது இவான்ஸ் தோன்றுகிறான். 'நீ
ஒரு மன நோயாளி' என்கிறான். அவர் அவனை லட்சியம் செய்யாமல் மேலே தொடர்ந்து போக வலது
புறத்தில் கருப்பு சால்வை போர்த்தி ஏதோ ஒரு உருவம் இவரையே கண்காணித்துக்
கொண்டிருப்பதாகப் படுகிறது. என்ன தான் அதனிடத்திலிருந்து ஓட யத்தனித்தாலும்
விடாப் பிடியாகப் பக்கத்தில் வந்து நிற்கிறது. இவர் ஆயாசம் மிக்க்கொண்டு ஒரு
கல்லின்மேல் உட்கார்ந்து விடுகிறார். நல்ல அமாவாசை இருட்டு, சற்றே வலுத்துப் போன
காற்றில் தென்னங்கீற்றுகள், ஜே ஜே என்று கோஷமிட்டு ஆரவாரிக்கின்றன. அந்தக்
கோஷத்தையும் தாண்டி அவருடைய கண்கள் தென்னங்கீற்றுகளில் லயிக்கின்றன. கீற்றுகளும்
மட்டைகளும் பிரிந்து பிரிந்து தொங்கட்டான் ஆடும் நட்சத்திரத்தைக் காட்டிவிட்டு
மீண்டும் அவைகள் மறைந்துக்கொள்கின்றன. மீண்டும் நட்சத்திரம் தெரியும்போது
‘இடைவெளி’ என்று, பள்ளிக்கூடத்தில் ஏதோ கேள்வி கேட்கப்பட்டதற்குக் கை உயர்த்திப்
பிறகு நின்று பதில் சொல்லுவதுபோல் சற்றே இரைந்து சொல்லிக்கொண்டார். இப்போது இதை
அடுத்து நடந்த சம்பவத்தில் அவருடைய வாயே சற்று ஆச்சர்யத்தால் திறந்து.விட்டது.
கருப்புப்போர்வை போர்த்திய உடம்பு இவருக்கு வெகு சமீபத்தில் நின்று ஆமாம்
என்பதுபோல் தலை ஆட்டுகிறது. ‘எப்படி?" என்று பேயாகத் தினகரன்
கூச்சலிடுகிறார், ஆனால் அந்த உருவம் மறைந்து விடுகிறது. இவர் ரொம்ப நேரம் கழித்து
ஒரு கடற்கரையை அடைகிறார். அங்கு நான்கு பேர்கள் வெறும் கருப்புக்கோடுகளாக நின்று
கொண்டிருக்கிருர்கள். சாம்பலாகக் காலை ஒளி பிரவேசிக்கும்போது அவர்கள் பேசிக்கொண்டே
நடக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் தினகரனும் நடந்து
49
போகிறார். அவர்கள் நடக்க
நடக்க பகல் இரண்டு மணி ஆகிவிடுகிறது. சின்னச் சின்ன வெள்ளைக்கல் ஸ்தம்பங்கள்
நடப்பட்ட புல்வெளிகள் மிகக்கொண்ட ஒரு ரேஸ் கோர்ஸ் தெரிகிறது. அதை அவர்கள்
அடையும்போது குதிரைகள் ஓடிவரும் குளம்பொலி கேட்கிறது. ஆறு குதிரைகள் ஓடி
வருகின்றன. இந்த ஐவரையும் தவிர்த்து ஒரு நடுத்தர வயதுத்தம்பதிகள் அங்கு ரேஸ்
புத்தகத்தில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தினகரன் அவர்களையும்
கவனித்துவிட்டுப் புயலாக வரும் குதிரைகள் மேல் கவனம் செலுத்துகிறார். எந்தக்
குதிரை ஜெயிக்கும் என்கிற பயங்கர அவா அவரைத் தொற்றுகிற்து. கடைசியில் எல்லாக்
குதிரைகளும் எப்போதே பின் தங்கிவிட, ஒரு குதிரை மட்டும் கன வேகமாக ஓடுகிறது. அது
எவ்வளவு ஓடியும் அதற்கு வெற்றியின் எல்லைக்கோடே தெரிவதில்லை. ஒடிக்கொண்டே
இருக்கிறது. அவர் கனவு கலைந்து சொரேல்னு எழுந்தபோது உடம்பெல்லாம் வேர்த்திருந்தது.
விளக்கைப் போட்டு மணியைப் பார்த்தார். மணி பனிரெண்டு. சோப்பும், டவலும்
எடுத்துக்கொண்டு குளிக்கக் கிளம்பினார். புரண்டு படுத்த பத்மா கண்களை இடுக்கி
இவரைப் பார்த்து, பைத்தியம்' என்று சொல்லி லேசாகத் தலையில் அடித்துக்கொண்டு
தூங்கப் போனாள்.