காலச்சுவடு ஆண்டுமலர் 1991
www.padippakam.com
automated google-ocr மெய்ப்பு பார்க்க இயலவில்லை
உள்ளேயும் வெளியேயும் - ஆனந்த்
ஒரு மாபெரும் மரத்தையும்
சூழ்ந்து நின்ற வெளியையும்
மழை பெய்த மாலை ஒன்றுடன்
சேர்த்து விழுங்கினேன்.
காலையும் மாலையும்
கூடு திரும்பும்
பறவைக் கூட்டங்களும்
நிகழ்கின்றன. உள்ளே
காலமும் ஒடுகிறது.
வெளியே அக்கோடிக்கும் இக்கோடிக்கும்
நீளும் சிறகு விரித்து
வண்ணங்கள் கடந்த
இந்தப் பறவை மட்டும்
மெல்லப் பறந்து
கொண்டு இருக்கிறது.
எங்கு
எப்போது
என்பதுதான்
தெரியவில்லை.
ੇ ੂ_।
— | காலச்சுவடு | 1 O6 ஆண்டுமலர் 1991
படிப்பகம்________________
WWW.padippakam.com
கோடுகள் வளைந்த போது - ஆனந்த்
கோடுகள் வளைந்த வேளை ,
கேள்விக்குறியாய்ப் போயிற்று
பார்வையும் மனமும்
கூடவே வளைந்தன
உலகம் முழுவதும்
ஒரு சேர வளைந்தது
பொருள்கள் அனைத்தும்
திடத்தன்மை இழந்தது
போலாயிற்று.
காலமும் வளைவதைக்
காணப் பொறாமல்
கண்களை மூடிக்
கடுந்தவம் புரியக்
- கானகம் ஏகினர்
மந்திர வாதிகள்
இது பெரும் பேறு
என நினைத்தவர்கள்
களிப்பில் மூழ்கி
நாடடியம ஆடினா
நடக்கும்.இது போல்
ஏதோ ஒரு நாள்
என்று சொன்னவர்கள்
பெருமை பேசித்
தூக்கத்தைத் தொடர்ந்தனர்.
காலமும் பார்வையும்
காற்றில் கலந்தன
காலையின் கிழக்கில்
முளைத்த வெள்ளியைப்
பார்த்துச் சிரித்தது
அப்போதே மலர்ந்த
ஒரு சிறிய
வெள்ளைப் பூ.
| காலச்சுவடு 107 ஆண்டுமலர் 19]
படிப்பகம்
மழலை மொழிகள்
இ வெளி
என்ன இருக்கிறது
காதம் கடந்த துரம்
விரல்கள் பற்ற
கைகளை நீட்டி
வேளை தானடி
জ্ঞাoেub நேரம்
மனத்தின் விளிம்பில்
வழியும் போது
பற்றிய கைகளில்
அகப்படுகிறது
பறவை சிறகு விரித்து
தன் முஷ்டி
மன விளிம்பு
தாண்டிப் பறக்கையில்
நேற்று வருவான்
நாளை வந்தான்
என்ற மழலை மொழிகள்
பொருள் கொள்ளத் தொடங்குகின்றன. ________________
www.padippakam.com
சிகரமேற்றுகிறது உன் விழிகள் - அப்பாஸ் T
அடிவாரத்தில் வெட்டப்பட்ட
மரங்களென வீதியில் நாம்
பார்த்த விழி மூடி
நகர்கிறாய்
மனமாகி, மெல்லியதாய்
வீசி காய்க்கிறது ஒரு மாயக்காற்று
மெல்ல கடந்து, கடந்து நகர்கிறாய்.
நான் என்னைக் கடந்து போக,
நீ - அப்பாஸ் T
கோதிக் கலைக்கிறது காற்று
உன் கேசத்தை நீ
விரல் எழுப்பி சரி பண்ண
ஆகாசமேறி பறக்கிறது வெண் கொக்கு,
கையில் பிடிக்கவும், கூட பறக்கவும்
மீளாது
கேசம் கலைக்கும் காற்றின்
வெளியில் நான்.
ஒரு பகல்
வீட்டின் கதவை தட்டுகிறது
எப்போதும்
ஒரு பகல்.
யாவரும் வெளிக்கிளம்பினர்
எனது தந்தை அலுவலகத்திற்கு
சகோதரி கல்லூரிக்கு
எனது தாய் சமையலறைக்கு
நானும் வெளிக்கிளம்பினேன்
நண்பகலோடு.
அப்பாஸ் T
பறந்த வண்ணம்...... அப்பாஸ் T
தலை, கை, கால்களோடு
இந்த சிறகுகளும்
சீன மதில் சுவர் தாண்டியும்
எட்டி என்னை ஒடுக்கும்
நிலத்தையும் மீறி
அவைகள்
மேல் எழும்புகின்றன
வெட்ட வெட்ட
வளர் மரங்களைப் போல்,
பூமி தழுவிய பெருமரத்தின்
உச்சியில் அவைகள்
நீ உன் வீடு திரும்புவதற்கும்
நான் நூலகம் திரும்புவதற்கும்
அவளின் அவசரத்திற்கும்
இடையில் அவைகள்
பறந்த வண்ணம், பறந்த வண்ணம்..........
இன்று அப்பாஸ் T
ஊரும் எறும்பையும்
ஒடும் அணிலையும்
விரட்டி திரிகிறது
கைகளை விரித்த ஆனந்தத்துடன்
குழந்தை
மதில், மரமேறி தப்பும்
அணிலோடு, தலை நிமிர்ந்து
ஆகாசம் பார்க்கும் விளையாட்டின் உயிர்ப்பில்
இன்று நானும்,
படிப்பகம்________________
WWW.padippakam.Com
மெளனியின் சாவில் பிறந்த சிருஷ்டி
-
ஜி. ஆர். பாலகிருஷ்ணன்
சாவில் பிறந்த சிருஷ்டி'யில் வரும் ஐம்பது வயது சுப்பய்யரின் மன நிலையையும், அதன் பாதிப்பில் வெளிப்படும் அவருடைய செயல், பேச்சு ஆகிய வற்றையும் மனப் பகுப்பாய்வியல் கண்ணோட்டத்தில் ஆராய முற்படுவோம்.
இளம் வயது கெளரி, சுப்பய்யரின் இரண்டா வது மனைவி, திருமணமாகி நாலைந்து வருடங்க ளான பிறகு, முதல் தடவையாக, தங்கையின் கல் யாணத்திற்காக கெளரி தன் பிறந்தகம் செல்கி றாள். தனிமை வாழ்வு மிகவும் கசந்துவிட எண் ணியிருந்ததற்கு ஒரிருநாட்கள் முன்னதாகவே, சுப்பய்யர் தன் மனைவியின் ஊர் போய்ச் சேர்கி றார். கல்யாணமான இரண்டாம் நாளன்று ஒரு நிகழ்ச்சி. திண்ணையில் மற்ற வர்கள் நடுவில் பேசாமல் இருந்த சுப்பய்யர், கூடத்திலி ருந்து வந்த தன் மனைவியின் மகிழ்ச்சி நிறைந்த சிரிப்பொலி கேட்டு, உள்ளே சென்று பார்க் கிறார். அன்று வரையிலும் தான் கண்டு அனுபவித்தறி யாத கலகலப்பான கெளரி யைக் கண்டவுடன் அவர் மனது ஒருவித ஆத்திரம் கொள்கிறது. கசப்பான எண் ணங்கள் தோன்றுகின்றன. ஓர் உயர்வகை இன்பம் தனக்கு உண்டாக வேண்டி யதை, கூடியதை அவன் மறைத்துவிடுகிறான்.' 'வேண்டுமென்றுதானே தன்னிடம் மாறுவிதமா கப் பழகுகிறாள். உள்ளே தன் பிறந்தகத்துக் கூடத்திலே அவள் தோற்றம், பேச்சு, சிரிப்பு, குதுகலம் மறைத்துக் கொண்டுதான் பழகுகிறாள்' என்று எல்லாவற்றையும் தன்னிடம் எண்ணுகிறார். திண்ணையில் மறுபடியும் வந்து உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில், மன தில் ஒருவித ஆத்திரம் காண திரும்பவும் உள்ளே சென்று, தன் மனைவியைத் தனியே கூப்பிட்டு, அவள் மனது நோகப் பேசி, உடனே ஊருக்குத் திரும்பிப் போக ஏற்பாடு செய்யும்படி உறுதியாகச் சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தி
லிருந்து தொடங்கி, ஊர் வந்து சேரும் வரையிலும் இரயிலில் நடக்கும் நிகழ்ச்சிகள், சுப்பய் யரின் மனம், சாடிஸத்தில் துன்புறுத்தலில் காணும் பண்பில் இயங்குவ தைத் தெளிவுபடுத்துகிறது.
மகிழ்ச்சி மனப்பகுப்பாய்வியல் பற்றிச் சில உண்மைகளை வலியுறுத்திக் கூறுகிறது. பொதுவாக, துன்பு றுத்தலில் மகிழ்ச்சி காணும் சாடிஸத்தைப்மனம் ஆண்களிடமும், தன்னைத் தானே துன்பு றுத்திக் கொண்டு இன்பம் அடையும் (மாசோகி ஸம்) தன்மை பெண்களிடமும்தான் வெளிப்ப டும். விதிவிலக்குகள் இங்கேயும் உண்டு. கடு சொல்லால் வேதனைத் தருவதிலிருந்து உடலை புண்படுத்தித் துன்புறுத்துவதும், கொடுமைப்ப டுத்துவதான அத்தனைச் செயல்களும் துன்புறுத் தலில் இன்புறும் மனப்பாங்கில் அடங்கும். பிற ரைத் துன்புறுத்த வேண்டிய காரணம் என்ன என்று ஆராய்ந்தால், இவ்வகை மனநிலைக்கு ஆட்பட்டவர்கள் - இந்த மனநிலை ஒருவகை நோய்தான் - தங்களைச் சுற்றி தங்கள் ஆதிக்கம் தடையின்றி நிலைநிறுத்தப்படுவதைத் தீவிரமாக விரும்புபவர்களாக இருப்பார்கள். சாடிஸ்' உணர்ச்சியும், அடிப்படையில் பாலுணர்ச்சியு டன் இறுக்கமான தொடர்புடையதால், இந்த ஆதிக்கவெறியும் பொதுவாக உடலுறவு வட்டத் திற்குள், அதாவது, நடந்து கொள்ளும் விதத்தில் வெளிப்படும். இந்த வெறியில் மனம் இயங்கும்பொழுது, மனைவி யின் உயிருக்கு தீங்கு விளைந்தாலும் அது கவ லைப்படாது. இவ்வளவு கொடுரமாக நடந்து கொள்வதனால், அவன் தோற்றத்திலும் பேச்சி லும் வெளிப்படையாக ஒரு முரடனாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. பெரும்பா லும், சாடிலத்திற்கு அடிமைப்பட்டவர்கள், வெளித்தோற்றத்தில், மென்மை பேச்சும் இனிய மனைவியிடம் ஒருவன் நடத்தையும் கொண்டவர்களாக காணப்படுவார் கள். ஆனால் அவற்றின் அடியில் மறைவில் ஒரு தீவிர அழிவு உணர்ச்சி வலிமையாக ஊன்றி இருக்கும். இங்கே குறிப்பிட்டாக வேண்டிய செய்தி என்னவென்றால், சாடிஸ் உணர்ச்சி ஒருவ னுடைய அறிவுத்திறனைப் பாதிப்பதில்லை:சாடிஸ் பிணைப்பில் வராத மற்றவர்களுடன் அவ.னுடைய உறவும் சற்றும் கெட்டுவிடுவதில்லை. இந்தக் காரணங்களினால் சாடிஸ்டுகளை புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுவது உண்டு. கெள ரிக்கும் சுப்பய்யரைப் புரிந்து கொள்வதில் ஏற் பட்ட குழப்பத்தை மெளனி மிகச் சுருக்கமாக குறிப்பிடுகிறார். "அநேக உயர்குணமும் ஞான
மும் படைத்த சுப்பய்யருக்கு இந்த மூர்த்தன்ய மும் கூட இருந்தது. சமீப காலமாக அதிகமாகவும் தலைகாட்ட ஆரம்பித்தது. வயது ஆக ஆக, அவ ருடைய முன்கோபம் கட்டுக்கடங்காது அதிக மாகி தன்னுடைய மனைவியிடமும் இடம் காலம் மாறிக் கொள்ளும் நிலைக்கு வந்தது'. 'சாடிஸ்டு களின் முரண்பட்ட நடத்தையைத்தான் மெளனி யின் வரிகள் வெளிப்படுத்துகின்றன. மனைவியு டன் அன்பொழுக நடந்து கொள்ளவும், அவளு டைய நுண்ணிய உணர்வுகளையும் முழுமையாக புரிந்து கொண்டு மற்ற நேரங்களில் எல்லை யில்லா ஆறுதலையும் தரவல்ல கணவன், சாடிஸ் மனநிலைக்கு ஆளாகும்பொழுது, ஒரு சில நொடி களில், இரும்பு இதயம் படைத்த மூர்க்கனாகவும் மாறி, இரண்டு மனிதர்களை உள்ளடக்கியவனோ என வியப்புறும் வண்ணம் அவன் முரணாக நடந்து கொள்வான்.
வேறொரு வழியில் சொல்லுவதானால் அன் பும் வெறுப்பும் ஒருசேர சாடிஸ் மனநிலையில் இவனது மனம் போராட்ட வெறியுடன் இயங்கிக் கொண்டிருக்கும். இந்தக் குழப்பத்திற்கெல்லாம் காரணம் தன் மனைவி தன்னை உண்மையில் காதலிக்கவில்லை என்றுதான் இவன் உறுதியாக எண் ணிக் கொண்டிருப்பான். தான் இல்லாத நேரத்திலும் அவளால் மிக மகிழ்ச்சியாக மற்றவர்களிடம் பேசவும் நடந்து கொள்ளவும் முடிவதற்கு அடிப்ப டைக் காரணமே, அவளுடைய சந்தோஷமான வாழ்க்கைக்கு தான் தேவை இல்லை என்று அவன் சந்தேகமின்றி நம்பிக்கொண்டிருப்பான். அதே நேரத்தில், அவளை முழுமையாகச் சார்ந்து, தன் மகிழ்ச்சி வாழ்க்கை அமைந்திருக்கி றதே என்று எண்ணி மிகவும் வருந்திக் கொண்டி ருப்பான் வருத்தம், கோபமாக மாறி, பின் அது துன்புறுத்தலில் இன்புறும் பழக்கத்திற்கு அவனை இழுத்துச் சென்றுவிடும். இப்படி, தன் செயல் களை, எண்ணங்களை தனக்குத்தானே மட்டு மின்றி, தன் மனைவியிடமும் தொடர்ந்து நியா யப்படுத்திக் கொண்டிருப்பான். மனப்பகுப்பாய் வியல் இம் மனநிலையை, இந்தவகையான எண் ணவோட்டத்தை வேறுவிதமாக தெளிவுபடுத்துகிறது. ஒருவித தாழ்வு மனப்பான்மை உணர்ச் சிக்கு இவன் ஆளாகிறான். தன்னால், தன்னைத் தவிர தன் மனைவியையும் உண்மையில் நேசிக்க முடியவில்லை என்று அதிர்ச்சி தரும் உண்மை முதலில் அவனுக்கு ஏதோ ஒரு நொடியில் சட் டென புலனாகிறது. இந்த அப்பட்டமான சுயநலத் தன்மையை அவனுடைய தன்முனைப்பு (ego) ஏற்க மறுக்கிறது. தன்னைப்பற்றித் தான் கொண்டி ருந்த உயர்ந்த எண்ணம், தன்னலமில்லாதது தன் னுடைய காதல் என்ற நம்பிக்கை, இவை முழுவது மாக தகர்க்கப்படும்பொழுது ஏற்படுகின்ற வேதனையைத் தன்முனைப்பினால் ஏற்க முடிவதில்லை. ஆகையால் தன் மனைவி தன்னை உண்மையில் நேசிக்கவில்லை என்று தலைகீழாக மாற்றி நிலைமையை உணர்த்துகிறது. இந்த பொய்யான உணர்வின் அடிப்படையிலிருந்து தான் அவனுடைய மற்ற செயல்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இப்படி சாடிஸ் மனநிலையில் இருக்கும்பொழுது, மனைவியின் சாதாரண பேச் சையும், செயல்களையும் தன் உணர்விற்கேற்ப தான் அவனால் புரிந்துகொள்ள முடியும். புற உல கத்தின் காட்சிகளை, நிகழ்ச்சிகளை, பிறழ்ந்து இயக்கும் மனநிலைக்கேற்ப அர்த்தப்படுத்திக் கொள்வார்கள் மனநோயாளிகள் என்பதுமனப்ப, குப்பாய்வியல் எடுத்துக் கூறும் அடிப்படைச் செயல்களில் ஒன்று. தவிர கற்பனைக் காட்சிகள் கூட அவர்களுக்கு நடந்து முடிந்த நிகழ்ச்சிகளா கத்தான் உணர்வார்கள். நம்புவார்கள். மேற்கோ ளாக, இரயிலை விட்டு இறங்கி கூஜாவில் தண் aர் கொண்டு வரச் சென்ற சுப்பய்யர், இரயில் மறுபடியும் புறப்பட்ட பிறகு வேகமாக ஓடிவந்து ஏறியபின், அவர் பேசும் வார்த்தைகளில் அவரு டைய பிறழ்ந்து இயங்கும் மனநிலையைக் காண லாம். 'வண்டி ஊதினதும் தான் ரயிலில் எதையோ மறந்து வைத்து விட்டு வெளியே அங்கேநிற்பதான ஞாபகம் வந்தது. உன் ஞாபகம் தான். வேகமாக ஓடிவந்து ஏறிக்கொண்டேன். வயதாச்சோன்னோ? வண்டி போனால்தான் என்ன என்று தோன்றியது ஓடி வரும்போது. அடுத்து வண்டி இல்லையா. துணைக்கு நீங்கள் இல்லையா ஸ்ார். ரயில்லே போகிறபோதுதான் ஸார் குஷியாக என்னவெல்லாமோ தோன்றுகி
றது. ஸ்நேகமும் அகப்படுகிறது. நாளைக்குப் பின்னாலே நடக்கப் போறதெல்லாம் நேத்திக்கு முன்னாலே நடந்ததுபோல காலம் எல்லாம் தலைகீழே மாறிப் போகிறது ஸார்."
உடன்பயணம் செய்கின்ற இளைஞனுக்கு இவ்வார்த்தைகளின் மேலோட்டமான பொருள் தான் புரியும். ஆனால் இந்த நாகரிகப் பேச்சில் மறைந்திருப்பது சுப்பய்யருடைய சாடிலக் கொடு ரம். கெளரிக்கு அவர் உணர்த்துவது: "உனக்கு நான்தான் துணையாக வரவேண்டும் என்று இல்லை; எந்த ஆண்மகனும், குறிப்பாக எந்த இளைஞனும் உனக்குப் போதும்; எனக்குத் தெரி யும். உள்ளத்தால் ஏற்கனவே இந்த இளைஞனு டன் உனக்கு நட்பு உண்டாகிவிட்டது. இனிமேல், என்ன நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன? என்னைப் பொறுத்தவரையிலும் எல் லாம் முடிஞ்சி போச்சு'.
இந்த மனநிலையில் சுப்பய்யருக்கு இம்மா திரி எண்ணங்கள்தான் வரும் என்று கெளரிக்கும் தெரியும். அதனால் அவள் மிகவும் வேதனைப்ப டுவாள் என்று சுப்பய்யர் நன்கு அறிந்ததினால் தான் இப்படி நடந்துகொள்கிறார். கெளரியின் வேதனை. சுப்பய்யரின் மகிழ்ச்சி; தன்னுடைய ஆதிக்கம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதற்குச் சான்றாகத்தான் கெளரியின் துய ரத்தை அவரால் பார்க்கமுடியும். அப்பொழுது தான் தன்னுடைய வாழ்க்கைக்கு பொருள் உள்ள தாக அவரால் உணர்ந்து, ஒருவித மனநிறைவு காணமுடியும். இப்படி, சாடிஸ்டுகளின் உணர்ச்சி வாழ்க்கை பிறருடைய வேதனையைச் சார்ந்து தான் இருக்கும். அன்பு செலுத்தி, ஆளுமையை முழுமை அடையச் செய்வதற்குப் பதிலாக, ஆட்சி செலுத்தி அடக்கி ஆளுவதில்தான் தாங் கள் முழுமை பெறுவதாக இவர்கள் எண்ணிக் கொண்டிருப்பார்கள். முன்பே கூறியதுபோல், வேதனைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் அதே நேரத்தில், அவர்கள் மனநிலையில் அன்பும் காதலும் இருக்கத்தான் செய்யும். தீவிர வேகத்துடன் அவை இயங்கிக் கொண்டிருக்கும். பின் ஏன் இவர்கள் இப்படி முரண்பாடாக நடந்து கொள்ள வேண்டும்? சாடிஸ் உணர்ச்சியை இன்னும் சற்று ஆழமாக ஆராய்ந்தால் நமக்கு தெளிவான விடை கிடைக்கிறது. சாடிஸ்டுகள், அடிஆழத் தில், கோழைகள். வாழ்க்கையைப் போலவே, இவர்களுக்கு காதலும் நிலையற்றதாகவே படும். ஆனால் உண்மையில் அவர்களுக்குள் நடப்பது என்ன? காதலிக்கப்பட வேண்டும் என்றால், காத லிக்கத் தெரிய வேண்டும், முடிய வேண்டும். ஆனால் பிறரை உண்மையில் நேசிக்கத் தெரியாத இவர்கள். தங்களுடைய இயலாமையை நியாயப் படுத்தி காதலுக்கு அவர்களுக்கென ஒரு புது விளக்கம் வைத்திருப்பார்கள். 'ஒரு வேளை நான் காதலிக்கும் பெண் என் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால், அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகையால், எங்கே என்னால் தடையற்ற ஆதிக்கம் நிலைநிறுத்த முடி யுமோ அங்கேதான் என்னால் அன்பு செலுத்த முடியும்'. இப்படித்தான் இவர்கள் ஆழ்மனதில் எண்ணங்கள் ஓடியிருக்கும். ஒரு சிறு ஏமாற்றத் தையும் நேர்கொள்ள முடியாத குழந்தைப் பருவ a astiáólourpóscoa (infantile emotional life) ulo பாதிப்பிலிருந்து இவர்கள் முழுமையாக விடுத லைப் பெற்றிருக்க மாட்டார்கள். உணர்ச்சி வழி பிறரைசார்ந்தும் இருக்கவேண்டும். அதே நேரத் தில் தாங்கள் சார்ந்திருக்கிற ஒருவரை துன்புறுத் திக்கொண்டும் இருக்க வேண்டிய பரிதாபமான நிலையில் இவர்கள் சாடிஸம் செயல்பட்டுக் கொண்டிருக்கும். சாடிஸ் உணர்ச்சியில் தீவிரம் குறைந்த நேரத்தில், இவர்களுக்கு வாழ்க்கை வெறுமையாக, பொருளற்றதாக, உயிரற்றதாக புலனாகிக் கொண்டிருக்கும். அப்பொழுது இவர் களுக்கு எல்லா உயிர்களும் சாவில் பிறந்த சிருஷ்டி யாகத்தான் தெரியும். தாங்கள் உணரு கின்ற உயிரற்ற வெறுமையை, வழக்கம்போல், பிறர்மீது ஏற்றிக் காணுகின்ற முரண்பாடான சாடிஸ் உணர்ச்சிதான் சுப்பய்யரின் புதிய புரா ணத்தில் வெளிப்படுகிறது.
'பிரம்மா படைத்ததை எல்லாம் குஷியால், ஒரு நொடியில் அழித்து முடித்துவிட்டான். மேலும் மேலும் சிவன் அழித்துக்கொண்டே இருந்தான் லார் படைத்தது ஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து அழித்துக் கொண்டிருக்கிறான் சிவன், துங்கிவிட்டு பிரும்மா தன் வேலையை ஆரம்பித்தார். அது தான் லார், உன்னை என்னை, இந்த பொம் பிள்ளை, நாய், நரி. எல்லாவற்றையும் படைக் கிற பிரும்மா. சிருஷ்டி கொள்வதற்கு முன்னால் தான் அவைகள் சிவனால் அழிக்கப் பட்டுவிட் டாச்சே. இப்படிப் படைக்கிறதிலே ஏதாவது உண்டா ஸார் சொல்லுங்கோ என்ன பிறவிகள் நாம் எல்லாம் இந்தத் கலியில். துள்ளுகிற தறிதலைகள்தான். அடுத்து திருமூர்த்திகளின் போட்டி நம்மை எல்லாம் உயிர் இல்லாமல்
தவிக்க விட்டுக் கொண்டிருக்கும்'....
இந்தவகையில், மனப்பகுப்பாய்வியலின் கொள்கைகளைக் கொண்டு இலக்கியத்தை அணு குவது இன்று ஒப்பிலக்கியத் திறனாய்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பலராலும் கையாளப்பட்டுவரு கிறது. சமூகவியல் இலக்கியத்திறனாய்வும் இன்று நிலைத்துவிட்ட ஒன்று. இப்படிப்பட்ட கட்டுரை கள் இலக்கியத் திறனாய்வு எப்படி ஆக முடியும் என்ற கேள்வி பலருக்குத் தோன்றக்கூடும். மேற் கோளாக, மனப்பகுப்பாய்வியலின் கொள்கை களை விளக்குவதற்குச் சிறுகதையை பயன்ப டுத்தி எழுதப்பட்ட ஒன்றாக இந்த கட்டுரையை எடுத்துக் கொள்வதற்கு நிச்சயமாக முடியும். பொதுவாக, மனப்பகுப்பாய்வியல் இலக்கியத் திறனாய்வு கட்டுரைகள் இவ்வகை அமைப்பில் தான் எளிதாக அடங்கும். ஆனால் ஒரு குறிப் பிட்ட மனநிலையின் தோற்றம், அதன் வளர்ச்சி, வெளிப்பாடு ஆகியவற்றின் தொடர்பாக ஆழ மான செய்திகள் நாம் அறிந்து கொள்ளும் பொழுது, சிறுகதையில் அம்மனநிலை சித்தரிக் கப்பட்டிருக்கும் விதத்தை ஆழமாக நாம் புரிந்து கொள்கிறோம். நம் இலக்கிய அனுபவமும் சற்று தீவிரமடைகிறது. "சில அபூர்வமான மனநிலை களை மெளனி எழுத்தால்வடிக்க முயற்சிசெய்து, அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார் என்று கூற வேண்டும்" என்று அசோகமித்திரன் (மூன்று பார்வைகள், தமிழ்ப்புத்தகாலயம் பக்கம் 96) குறிப்பிடும்பொழுது, அக்கூற்றில் அடங்கியுள்ள முழு உண்மையைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள முடிகிறது. உளவியல் உண்மைகளை அறிந்து கொள்கிறோம் என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும், இறுதியில் கலைஞனின் படைப்பு நுட்பத்தைக் கண்டு வியப்படைகிறோம். மெளனி போன்ற அகஉலகக் கலைஞனின் மனப்பாதைப் பயணத்தின் ஆழத்தையும் தீவிரத்தையும் நன்கு உணர்கிறோம். சுருக்கமாக, இவ்வகை விமர்ச னங்களில் நிகழக்கூடிய குறையை சுந்தரராமசாமி தெளிவாகக் குறிப்பிடுகிறார். ' (இத்தகைய) விமர்சனங்களோ துறைகளின் வெற்றிகளைப் படைப்புகளில் கண்டு நிறைவுகொள்ளும் போக்கை ஊக்குவிக்கிறது. இது ஒரு பகுதியை அளக்க மற்றொரு பகுதியை ஆதாரமாகக் கொள் வதாகும்." (வீடு, அன்னம், பக்கம் 127). ஆனால் மனப்பகுப்பாய்வியல் இலக்கியத்திற னாய்வின் நோக்கம் இது இல்லை. துறைகளின் வெற்றிகளைப் படைப்புகளில் கண்டு, படைப்புக ளின் வெற்றியை நிலைநிறுத்த முயலுகிறது. ஒரு பகுதியை ஆழமாக அறிந்து அனுபவிக்க மற் றொரு பகுதியில் துணையை நாடுகிறது. அவ்வளவு தான். வாழ்வின் முழுமையை உணர்தல், அதாவது உண்மைத்தேடல் இலக்கியத்தின் pவ நாடி என்றால், அந்த நீண்ட நெடிய பயணத்தில், ஒரு பகுதியின் முழுபரிமாணங்களை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சி அங்கீகரிக்க வேண்டிய ஒன்றுதானே.
O
படிப்பகம்