________________
காலக்குறி | 56 ]Tਨ਼
படிப்பகம்________________
WWW.padippakam.com
மெல்ல கனவாய் ... பழங்கதையாய் - நாவலின் ஆசிரியை பா. விசாலம் அவர்களுடன் |ஒரு அனுபவ பகிர்வும்
சில.மிகச் சிறந்த நாவல்களை தென் தமிழகம் தந்திருக்கிறது. அவற்றில் குறிப்பாக கரையோர முஸ்லிம் மீனவர்கள் வாழ்க்கையை 4 நாவல் மூலம் தோப்பில் மீரானும் நாடார் வாழ்வியலை புத்தம் வீடு'மூலம் ஜெப்சியா ஜெசுதாசனும் தொட்டிருக்கின்றனர். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை கோலங்களை நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள். மா. அரங்கநாதனின் பரளியாற்று மாந்தர்'மூலம் தமிழகம் படித்து வியந்திருக்கிறது. இதே களத்தை அடிப்படையாகக் கொண்ட திருமதி விசாலம் அவர்களின் "மெல்லக் கனவாய் பழங்கதையாய்” நாவல் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து மெல்ல, மெல்ல விரிந்து தமிழக நாவலாசிரியர் பலரும் தொடாத செய்திகளை தொட்டு வியக்க வைத்திருக்கிறார்.
அவருடன் பகிர்ந்து கொண்ட உரையாடல்
அக்காலத்திற்கே உரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையைக் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தேன். அம்மாவிற்குக் கூடப்பிறந்தவர்கள் ஐந்துபேர். அம்மா ஒரே பெண். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் குடும்ப முறையில் அன்று மருமக்கத்தாயம் என்று ஒன்றிருந்தது.உலகத்தில் எங்கேயுமே இல்லாத ஒன்று இந்த மருமக்கத்தாயம். அதாவது தகப்பனின் சொத்துக்களில் பிள்ளைகளுக்கு உரிமை கிடையாது. சொத்து முழுவதும் தகப்பனின் உடன்பிறந்த சகோதரியின் பிள்ளைகளுக்கே சொந்தம். சகோதரிகளின் பிள்ளைகளை கவனிப்பதுதான் அவனது முதல் கடமை. தான் பெற்ற பிள்ளைகளை தன் மடியில் வைத்துக் கொஞ்சுவதற்குக்கூட உரிமை கிடையாது. அந்த அளவுக்கு மருமக்கத்தாயம் கோலோச்சிய காலம் அது. கிட்டத்தட்ட இருநூறு முந்நூறு ஆண்டுகளுக் கும் மேலாக இது வழக்கத்திலிருந்திருக்கலாம். இந்தக் கொடுமையை எதிர்த்து கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை 1917 ல் 'மருமகள் வழி மான்மியம் என்ற கவிதையை தொடர்ந்து பத்திரிகையில் எழுதி பின்னர் அது புத்தகமாகவும் வெளிவந்தது. குடும்ப முறையில் இறுக்கமாகிப்போன அந்தப்
-
போக்கை எதிர்த்த போராட்டத்துக்கு அந்தக் கவிதை மூலம் கவிமணிவலிமை சேர்த்தார். இந்த முறையில் தகப்பனுக்கும் மகனுக்கும் நெருங்கிய உறவு இல்லாமல் போனது. கல்யாணமாகிப் போகும் பெண்ணுக்கு சீதனமாக ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. இல்ல்ைன்னா இல்ல. அதேசமயம் அந்தப் பெண்ணோடகணவன்இறந்ததும்உடனடியா அந்தப்பெண்ணும் குழந்தைகளும் கணவனின் வீட்டை விட்டு வெளியேறிடணும். எங்கே போவா என்ன செய்வா என்பதெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை.
'காரணவன்' என்கிற அந்தக் குடும்பத் தலைவன் இறந்ததும் அவனது வாரிசான அநந்தரவன்.அதாவது அவனது சகோதரியின் மகன்.அடுத்த காரணவனாக அந்த வீட்டையும் சொத்துக்களையும் தன் ஆளுகையில் எடுத்துக்கொண்டு விடுவான். அந்த இல்லம்' சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் தறவாடு' என்று பெயர். இதனால் அந்தக் குடும்பத்திற்குத் தலைவி பெண்தான். அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம். குடும்ப காரியங்கள் அனைத்துக்கும் அவள்தான் தலைமை.
www.padippakam.Com
திருவிதாங்கூர் அரச வம்சமும் மருமக்கள் வழி வாரிசு முறையைத்தான் பின்பற்றி வந்திருக்கிறது. நாஞ்சில் நாட்டில் குடியேறிய வெள்ளாளர்களும் இந்த மருமக்கள் வழியை பின்பற்ற வேண்டியதாயிற்று. அதன் வீச்சு அந்த அளவுக்கு இருந்தது. இந்த மருமக்கத்தாய முறை வழிவழியாக வந்த ஒரு குடும்பத்தில்தான் நான்ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தேன். பெரிய குடும்பம். இந்த மருமக்கத்தாயத்தாலே எனது அப்பாவிற்கு சொத்து எதுவும் கிடைக்கவில்லை. அப்பாவின் சகோதரியின் மகனான அடுத்த காரணவன் சொத்துக்களின் அவகாசியானான். பிறகுதான் மருமக்கள் வழியை எதிர்க்கும்.சட்டம் வந்தது. அம்மாவுக்கு சீதனமாகக் கிடைத்த விடும் வயலும்தான் எங்கள் குடும்பச் சொத்தாக இருந்தது. அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டு 56 வது வயதில் இறந்துபோனார். அப்போது அக்காக்கள் கல்யாணமாகிப் போய்விட்டிருந்தார்கள். ஒரு அண்ணன் இறந்து போனான். ஒரு அண்ணன் வேலை கிடைத்துப் போய்விட்டான். பிறகு குடும்பம் ரொம்பகஷ்டமானநிலையில், தம்பி, தங்கை இவர்களின் படிப்பு - இப்படிக் குடும்பம் தள்ளாட ஆரம்பித்தது. அப்போ எனக்கு 16/17 வயதிருக்கும். அம்மாவுக்கோ ஒன்றும் தெரியாது.இராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் படிச்சாலும் வெளிஉலகத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. வீட்டிலே ஒரே பொண்ணுங் கிறதனாலே செல்லமா வளர்ந்தவ. தனக்கு என்ன சொத்து இருக்கு? எங்கே இருக்குன்னு கூடத் தெரியாதவ. அப்பாவும் அம்மாவை செல்லமாகவே வச்சிருந்தாரு இந்தச் சூழ்நிலையிலே குடும்பப் பொறுப்பு அத்தனையும் என் தலையில் என்றாகிப் போச்சு. பொறுப்பு ஏற்க வேண்டியநிர்ப்பந்தம் ஏற்பட்டுப் போச்சு.அப்பாஉத்தியோகத்திலே இருந்தாரு ஆனால் எல்லாத்தையும் செலவு செய்தாரே தவிர சேர்த்து வைக்கிற பழக்க மில்லை. தான் திடீர்னு மரணமடைவோம்னு அவர் எதிர்பார்க்கலேன்னு நினைக்கிறேன். பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்திருக்கலாம். அப்போதெல்லாம் பிள்ளைகள்தானே பெரிய சொத்து. அண்ணன்மார்களும் திறமைசாலி கள்தான், ஆனாலும் பணம் சம்பாதிக்கும் வழி தெரியல்ல. அதோடு அம்மாவுக்கிருந்த சீதனச் சொத்தும் அண்ணனின் ஊதாரித்தன மானசெலவுகளினால் கொஞ்சம் கொஞ்சமாக கரையவும், தானும் கெட்டு, குடும்பத்தைக் கவனிக்கவும் தவறிட்டான்.
இப்படி எல்லாம் நடக்கிற குடும்பத்திலே இருந்ததினாலேதான் பல அனுபவங்கள் கிடைச்சுது. கடன்தொல்லை, அதனால் ஜப்தி, கோர்ட்டு இவற்றை எதிர்கொள்ள வேண்டிய தாச்சு. வெளிஉலகம் தெரிஞ்சுது. இவற்றின் ஆழம் புரிய ஆரம்பித்தது. சிந்தனையைத் தூண்டியது. சிந்திக்க ஆரம்பித்தேன்.
சுதந்திரப் போராட்டம் உச்சத்தை எட்டிக் கொண்டிருந்த காலகட்டங்களில் தேசத் தலைவர்கள் பற்றியும், போராட்ட வீரர்கள் பற்றியும் அப்பாஅதிகமாகப் பேசக் கேட்டிருக் கிறேன். தேசபக்தின்னா என்ன என்பதை அப்பாவிடமிருந்து தெரிந்து வச்சிருந்தேன். பள்ளிப் பாடங்களிலிருந்தும் எனக்கு நான் ஒரு வீரமுள்ள பெண்ணாக, தேசபக்தி உள்ளவளாக ஆகவேண்டுமென்று ஆசை முளை விட்டிருந்தது. பாரதியார் கவிதைகள் கிடைத்தபோது அவை என் எண்ணங்களுக்கு மேலும்மேலும் உரம் சேர்த்து வளரவச்சுது.
இதெல்லாம் ஒருபக்கமிருந்தாலும் அரசியல் அறிவு வர முக்கிய காரணமாயிருந்தவர்கள் எனது இரண்டு அண்ணன்மார்களும்தான். ஒரு அண்ணனுக்கு அரசியலில் ஈடுபாடு. இன்னொரு அண்ணனுக்கு இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு. அப்பாவும் கூட அப்படித் தானிருந்தாரு நிறையப் புத்தகங்கள் படிப்பார். முக்கியமான 'கொட்டேஷன்ஸ் ஐ அவர் 'டைரி'களில் எழுதி வைத்திருந்தார். அவர் இறந்த சில வருடங்களுக்குப் பிறகு நான் அவற்றைப்படித்து வியந்து போயிருக்கிறேன்.
எனது அக்காக்களும் நிறையப் படிப்பார்கள். அந்த நாட்களில் வந்த நாவல்கள், கல்கி, விகடன், கலைமகள்; அம்மா உட்பட எல்லோரும்படிப்பார்கள்.இப்படிக்குடும்பமே அரசியல் இலக்கியம்னு ஈடுபாடு இருந்ததாலே அதன் பாதிப்பு எனக்கும் ஏற்பட்டிருக்கலாம்
குறிப்பா வீட்டிலே வறுமையிருந்ததாலே எல்லாத்தையும் பற்றித் தெரிஞ்சுக்கணும்ங்கிற உணர்வும் ஆர்வமும் ஏற்பட்டதுன்னுதான் சொல்லணும். அந்த வறுமை இல்லேன்னா இந்த மாதிரி சிந்திச்சிருப்பேனான்னு சந்தேகம் தான,
ஆம்பிளப் பிள்ளைகள் கவனிக்காவிட்டால் ான்ன, ஏன் அதை நான் செய்யக்கூடாது? ான்னை நானே கேட்டுக் கொண்டேன். மத்தவங்க மாதிரி நானும் ஏன் வீட்டுக் குள்ளேயே முடங்கிக்கிடக்கணும்? சுதந்திரமாக வீட்டுக்கு வெளியே போனா என்ன?
காரணம், கல்யாணமாகாத பெண்கள் வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதை அனு மதிக்க மாட்டார்கள். வயசுக்கு வந்தாச்சுன்னா விடியற்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் வாசல் பெருக்கிடணும்.ஆத்துக்கோ, குளத்துக்கோ குளிக்கப் போறதுன்னா அதுவும் விடியுமுன் போய்வரணும். சினிமாவுக்குப்போறதுண்ணா ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் வண்டி கட்டித்தான் கூட்டிப் போவாங்க. நான் கொஞ்சம் தைரியமா இதையெல்லாம் முறியடிக்க ஆரம்பிச்சேன்.
கொஞ்சம் பொண்ணுங்கSSLCதாண்டி டாக்டர், உச்சருன்னு படித்தார்கள். படிச்சாத்தான் வெளியே போலாமா, நாம் நம்ம காரியங்களைப் பார்க்க ஏன்வெளியே போகக் கூடாதுன்னு போக ஆரம்பிச்சேன். சொந்தக்காரர்கள் சிலருக்கு பிடிக்கவுமில்லை. கம்யூனிஸ்ட்கட்சியிலும் உறுப்பினரானபின் காங்கிரஸ் மற்றும் கட்சியிலிருந்த உறவினர்கள், இவள் எப்படி இப்படி எல்லாம் வெளியே வரலாம் என்று கேட்டார்கள் என்அக்காமார்கள் கூட அவர்கள் கணவன்மார்களுக்குப் பயந்து, நான் அவர்கள் வீட்டிற்கு வருவதைக்கூட விரும்பவில்லை; என்னிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தபோதும்! கொஞ்ச நாட்களில் எல்லோருக்கும் என்மீது ஒரு மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கியக் காரணம் கம்யூனிஸ்ட்டுகள் மீதும் கம்யூனிஸ்ட் கட்சி மீதும் எல்லோருக்கும் ஒரு மதிப்பு இருந்தது. நான் பேசுகிற அரசியல் கொள்கைகளை அவர்கள் மதித்தார்கள். முதலில் எதிர்த்த அம்மா பின்னர் எனது விளக்கங்களைக் கேட்டு சிந்திக்கத் தொடங்கினார்கள். நான் கொடுக்கிற புத்தகங்களைப் படித்தார்கள். கார்க்கியின் 'தாய்”அம்மாவுக்கு ரொம்பப்பிடித்த புத்தகம். தானும் அந்தத்தாய் மாதிரி மாறணும்னு சொல்ல ஆரம்பிச்சதோடல்லாமல்கட்சித்தோழர்களிடம் பாசமுடன் பழகினார்கள். எல்லோரையும் தன் பிள்ளைகளாகவே பாவித்தார்கள், நடந்து
கொண்டார்கள். கம்யூனிச சித்தாந்தத்தை ஏத்துக்கிட்டாங்க. பிறகு எனக்கு ரொம்ப உறுதுணையா வழிகாட்டியா இருந்தது அம்மாதான்.
பிறகு நான் வேலைசெய்த டவுன்கமிட்டியில், டவுன் கமிட்டிகாரியதரிசியாயிருந்த தோழர் ராஜூவின் நட்பு கிடைத்தது. நட்பு வளர்ந்து இயல்பாகவே காதலாக மாறியது. ஆறு ஏழு வருடங்கள் காத்திருந்து எங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டோம்.
கட்சி இரண்டாக பிளவுபட்டபின் நாங்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை. ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவாளர்களாகவே தொடர்ந்து இருந்து வந்தோம். இரண்டு கட்சிகளின் முக்கியமான தலைவர்கள் பலரும் எங்களுடன் நேச உறவு கொண்டிருந்தார்கள். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை அறிவிப்பை சி.பி.ஐ. ஆதரித்தது. சி.பி.ஐ., சி.பி.ஐ.எம்.கட்சிகளின் திருத்தல் வாதம், சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணிகள், தலித் மக்களின் பிரச்சனைகளில் கட்சியின் மந்தகதியான போக்கு, தமிழ் ஈழப் பிரச்சனையில் கட்சியின் நிலை இவை சம்பந்தப்பட்ட எங்கள் கருத்துக்கள் இரு கட்சிகளுக்கும் உவப்பாக இருக்கவில்லை. நாளடைவில் கட்சியோடுள்ள தொடர்பு அறுபட்டுப் போச்சு.
கட்சியை மையப்படுத்தி ஒரு நாவல் எழுதியிருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் இதுவரை யாரும் அதைப்பற்றிப் பேசுவதே இல்லை. இலக்கிய சந்திப்புகள், கலை விழாக்கள் நடத்தும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமோ, கலை இலக்கிய பெருமன்றமோ, எனக்கு அழைப் பிதழ்கூட அனுப்புவதில்லை.
புதுவையில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கக்கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த வாஸந்தி விரும்பி அழைத்ததின் பேரில், எனக்கு அழைப்பிதழ் இல்லாதிருந்த போதிலும் அந்தக் கூட்டத்திற்குப் போயிருந் தேன். செந்தில்நாதனும் கந்தர்வனும் பேசினார்கள். கந்தர்வன் பேசும்போது செம்மலர்நடத்தும் பெருமாயி-குப்பண்ணன்' நாவல் பரிசுக்கு பா. விசாலத்தின் மெல்லக் கனவாய் பழங்கதையாய் நாவலும், இமயத்தின் 'கோவேறு கழுதை நாவலும் தேர்வு செய்யப்பட்டு கோவேறு கழுதைக்குப் பரிசு கொடுக்கப்பட்டது என்றும் சொன்னார். அப்பொழுதும்கூட இவர்கள்தான் விசாலம் என்று என்னை யாரும் அவருக்கு அறிமுகப்படுத்தவில்லை.
கேள்வி: நாவல் வெளிவந்ததும் அதற்கான எதிர்விளைவுகள் எப்படி இருந்தது?
பா.விசாலம்: செம்மலர், தாமரை, காலச் சுவடு, முன்றில், புதிய நம்பிக்கை, நிறப்பிரிகை, கணையாழி போன்ற சிற்றிதழ்களும் தினமணி கதிர், இந்தியா டுடே, The Hindu போன்ற வணிகப் பத்திரிகைகளும் விரிவான மதிப்புரை கள் எழுதின. இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த நந்தலாலா என்ற சிற்றிதழும் நல்ல மதிப்புரை எழுதியிருந்தது. மும்பையிலிருந்து வெளிவரும்:Humanscape என்ற ஆங்கில மாத இதழில், அம்பை எனது நாவல் குறித்து விரிவான கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அண்மை நாட்களில் நிறைய மதிப்புரைகள் வந்த நாவல்களில் எனது நாவலும் ஒன்று என்று சொல்லலாம்.
நாவலைப் படித்துவிட்டு, சுந்தர ராமசாமி, பொன்னிலன், நீல பத்மனாபன், நாஞ்சில் நாடன், கோவை ஞானி, தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன், தி.க.சி., மா.அரங்கனாதன், ஆ. மாதவன், பாவண்ணன் ஆகியோர் நாவலைப் பாராட்டி எனக்குக் கடிதங்கள் எழுதினர்கள். எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்த கடிதங்கள் அவை,
'நிலவுடைமை சமூக மதிப்பீடுகளின் நெருக்குதலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஒரு பெண்ணின் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மார்க்லியத்தின் பேரன்பே இவருக்கு இதனைச் சாத்திய மாக்கியது என்னும்போது இவருடைய வாழ்வு மார்க்ஸியத்தின் வாழ்வுமாகிறது,' என்று வேதசகாயக்குமார் 'காலச்சுவட்'டில் பதிவு செய்தார்.
"சமகாலத்திய நிகழ்வுகளை நாவலாய் உருவாக்குவதற்கு புதிய படைப்பாளிகளுக்கு ஒரு வழிகாட்டியாய் இந்த நாவல் அமையும் என்பதில் சந்தேகமில்லை' என்று 'செம்மலர்' தனது மதிப்புரையில் குறிப்பிட்டது. '
இது ஒரு வரலாற்று யதார்த்த நாவல்.நாவலில் அழகியல் நன்றாகவே வந்திருக்கிறது. நிகழ்ச்சிகளை சித்தரிக்கும்போது ஏற்படும் படக்காட்சி sistēnsTamau (documentary effect) zasti;#gje? I mir” என்று தாமரை எழுதிற்று. 'நாவல் இலக்கியத்துக்கு வித்தியாசமான பங்களிப்பை நிறைவேற்றியிருப்பது புதுமை யிலும் புதுமை. நாயகியின் பெயர் எந்த இடத்திலும்தட்டுப்படவில்லை' என்று திருமதி ராஜம்கிருஷ்ணன் அவர்கள் இந்தியா டுடே'யில் எழுதியிருந்தார். 'பிற மொழியொன்றில் இதுபோன்றதோர் நாவல் வந்திருக்குமானால் எத்தனை பரபரப்பு நிகழ்ந்திருக்கக் கூடுமென எண்ணிப் பார்க்கையில் தமிழின் மெத்தனத்தன்மை வருத்தம் தருகிறது” என்று புதிய நம்பிக்கை எழுதிற்று. 'உங்கள் நாவலில் ஒரு நேர்மையின் தொனி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கை அனுபவங்கள்.எதுவும்போலியல்ல. சத்தியம் சார்ந்தது. நாஞ்சில் நாட்டுக்காரனான நான் சந்தித்தறியாத பல விஷயங்கள் எனக்குப் புலப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து மட்டுமே பெறமுடிகிற சில நுணுக்கமான விஷயங்கள் உங்கள் நாவலில் எனக்குப்புலப்பட்டன. ஐம்பதாண்டு காலத்துக்கு முந்திய ஒரு நாஞ்சில் நாட்டு 'அம்மை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வந்த மனவிரிவும், வலிவும் ஆச்சரியமூட்டும் வித்தில் நாவலில் அமைந்துள்ளது' என்று நாஞ்சில் நாடன் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கேள்வி: நாவலுக்கும் உங்கள் வாழ்கைக்கு முள்ள தொடர்பு என்ன?
பா. விசாலம்: என் வாழ்க்கையில் ஏற் பட்ட அனுபவங்களினூடாக பெற்ற உணர்வு களின் வெளிப்பாடுதான் எனது நாவல். அம்மாவுக்கும் எனக்குமான உயைாடல்கள் என் கற்பனை மற்றபடி குடும்பத்தகராறுகள், வறுமை, உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள், கட்சியில் செயல்பட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தும் நடந்த உண்மைகள். இவைகள் கற்பனைவிரிவாக்கத் தோடு நாவலில் சொல்லப்பட்டுள்ளன. என்னுடைய வாழ்க்கையையும் அனுபவத்தை யும் தேர்ந்தெடுக்கக் காரணம் - மற்றவர் களுடைய அனுபவத்தை விட சொந்த அனுபவங்களை படைப்பாக மாற்றும்போது அதற்கே உரிய வீச்சோடு படைப்பு
மார்ச் 99
படிப்பகம்________________
WWW-padippakam.com
வெளிவரும் என்பதால்தான். வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் நாவலில் கொண்டுவரவில்லை. ஒரு நாவலுக்குத் தேவையான விஷயம் என்னவோ அதை மட்டுமே என் வாழ்க்கையிலிருந்து எடுத்திருக் கிறேன். என் நாவல் சுயசரிதையும் அல்ல.
கேள்வி: நாவலின் நாயகி யார் என்று கடைசிவரை குறிப்பிடவில்லையே?
பா.விசாலம்: வேண்டுமென்றுதான்குறிப்பிட வில்லை. நாவலில் நான் என்று எழுத ஆரம்பித்தாலே நம்மையறியாமலேயே நாம் அதில் வந்துவிடுவோம் என்றுதான் அப்படி ஒருமுயற்சியைச்செய்து பார்த்தேன். அதனால் 'நானை முற்றிலும் தவிர்த்தேன். நான்ங்கிற பெயரைச் சொல்லாமலேயே கடைசிவரை போக முடியுமென்று பார்த்தேன். இந்த உத்தியை மிகவும் பாராட்டி நீல பத்மனாபன், ஆ.மாதவன், இராஜம் கிருஷ்ணன் ஆகியோர் எழுதினார்கள்.
கேள்வி: லட்சுமணப் பிள்ளைன்னு ஒரு கேரக்டர் வருகிறதே. அவர் தமிழிசை இயக்கத்தில் இருந்தவரா?
பா. விசாலம்: லட்சுமணப்பிள்ளையின் மூதாதையர்கள் திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தவர்கள். மக்கள்வழியைச்சேர்ந்தவர்கள். அவர் தமிழிசை இயக்கத்தில் இருந்தவரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு தமிழிசை மேதை. அவர் பாடல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது. அவரது கீர்த்தனைகள் பல எனக்குத் தெரியும். பாரதியினுடைய சிந்தனையின் சாயல் அவரது அனைத்துப் பாடல்களிலும் இருக்கும். அவர் கீர்த்தனை களை இயற்றியதோடு நன்றாகப் பாடவும் செய்வார். வீணை வாசிப்பதில் வல்லவர். முசிறி, மகாராஜபுரம், அரியக்குடி, செம்மங்குடி போன்ற இசை மேதைகளோடு அவருக்குத் தொடர்பு இருந்தது.
கேள்வி: லட்சுமணப் பிள்ளைன்னு ஒரு கேரக்டர் வருகிறதே. அவர் தமிழிசை இயக்கத்தில் இருந்தவரா?
பா. விசாலம்: லட்சுமணப்பிள்ளையின் மூதாதையர்கள் திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தவர்கள். மக்கள்வழியைச்சேர்ந்தவர்கள். அவர் தமிழிசை இயக்கத்தில் இருந்தவரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒரு தமிழிசை மேதை. அவர் பாடல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது. அவரது கீர்த்தனைகள் பல எனக்குத் தெரியும். பாரதியினுடைய சிந்தனையின் சாயல் அவரது அனைத்துப் பாடல்களிலும் இருக்கும். அவர் கீர்த்தனை களை இயற்றியதோடு நன்றாகப் பாடவும் செய்வார். வீணை வாசிப்பதில் வல்லவர். முசிறி, மகாராஜபுரம், அரியக்குடி, செம்மங்குடி போன்ற இசை மேதைகளோடு அவருக்குத் தொடர்பு இருந்தது.
கேள்வி: 1935 ல் தொடங்கி கட்சி உடையும் 1974 வரைக்கும் நாவலைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் நாஞ்சில் நாடு கேரளாவுடன்இணைவதா, தமிழ்நாட்டுடன் இணைவதா என்ற போராட்டம் பற்றி நாவலில் ஏன் குறிப்பிடவில்லை?
பா.விசாலம்: இதே கேள்வியை நீல பத்மனாபன் கேட்டிருந்தார். மிகப் பெரிய
போராட்டம் நடந்து பலர்துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். அதுபற்றி சில வரிகள்தான் எழுதியிருக்கிறேன் என்பது உண்மைதான். அதற்கு எந்த நோக்கமும் இல்லை. இந்தப் போராட்டத்தை ஆதரித்து கடுக்கரை என்ற ஊரில் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றில் தோழர் ஜீவா பேசினார். அந்தக் கூட்டத்தில் நானும் நாஞ்சில் நாடு தமிழ்நாட்டுடன் ஏன் இணைய வேண்டுமென்பதை எனக்கிருந்த சிந்தனை யளவில் பேசினேன். இந்த நிகழ்ச்சியை நாவலில் குறிப்பிட்டுள்ளேன். அந்தப் போராட்டத்தைப்பற்றி விரிவாக எழுதவில்லை என்றாலும் பல இடங்களிலும் குறிப்பிட்டிருக் கிறேன்.
கேள்வி: அன்றைய சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்ன?
பா. விசாலம்: தென் திருவிதாங்கூரின் தமிழ் பேசும் பகுதிகளும், தேவிகுளம்பீருமேடு தாலுகாக்களும் தமிழ் நாட்டுடன் இணைய வேண்டுமென்ற கோரிக்கை 1949 ல் எழுந்தது. அகில இந்தியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மொழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைக்கப்படும்போது தென்திருவிதாங்கூரின் தமிழ் பேசும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையும் என்ற நம்பிக்கை இருந்ததால் அந்தக் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற ஒரு புதிய அமைப்புத் தோன்றி திருவாளர்கள் நேசமணி, நத்தானியல், தானுலிங்க நாடார், பி.எஸ். மணி போன்ற தலைவர்களின் தலைமையில் போராட்டம் தீவிரமடைந்த போது, கம்யூனிஸ்ட்கட்சியும்போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டியதேற்பட்டது. தமிழ் பேசும்பகுதிகள் தமிழ்நாட்டுடன்இணைவதை திரு-கொச்சி மாநிலத்திலிருந்த கட்சிகளில் கம்யூனிஸ்ட்கட்சிநீங்கலாக மற்ற அனைத்துக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஊசலாட்டம் இருந்தது. தோழர்கள் ஏ.கே. கோபாலன், ஆர். சுகதன் போன்ற தலைவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அப்படி அமைந்திருந்தன. ஆனால் தோழர்ஜிவாதமிழ் பேசும் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைய வேண்டுமென்பதில் மிக உறுதியாக இருந்தார். காலம் கடந்தாகிலும் கம்யூனிஸ்ட்கட்சிஇந்தப் போராட்ட்தில் முழுவீச்சாக பங்கெடுக்கச் செய்த பெருமை தோழர் ஜீவாவுக்கே சேரும். தமிழ் இனவெறியைகிளப்பிவிட்டு மலையாளி எதிர்ப்பு உணர்வைத்துண்டிவிட முயன்றவர் களைகம்யூனிஸ்ட்டுகள் உறுதியுடன்எதிர்த்து நின்றனர். காமராஜர் இந்தப் போராட்டத்தில் எப்படி அக்கறையில்லாமல் இருந்தாரோ அதேபோன்றுதான்தமிழ்நாட்டுகம்யூனிஸ்ட்டு களில் பலர் இருந்தனர். திரு. ம.பொ.சி. மட்டும்தான் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து தமிழ்நாட்டு மக்களை இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகத் திரட்டினார்.
கேள்வி: கட்சியில் நீங்கள் என்னென்ன வேலைகள் செய்தீர்கள்?
பா.விசாலம்: ஆரம்பத்தில் கட்சியின் அலுவலகப் பணிகளிலேயே ஈடுபடுத்தப் பட்டேன். சுற்றறிக்கைகள் தயார் செய்வது, நகல்கள் எடுப்பது, கூட்டநடவடிக்கைகளை குறிப்பெடுப்பது போன்ற சிறியவேலைகளை செய்து வந்தேன். படிப்படியாக நானே துணிந்து மக்களை சந்திக்கும் பணிகளை மேற்கொண்டேன். வடசேரி கைத்தறி நெசவாளர்களில் முக்கால்வாசிப் பெண்கள். அவர்களைசந்திப்பது, அவர்களிடம் அரசியல், கலை, இலக்கியம் போன்ற விஷயங்களைப் பேசுவது, அவர்களுடைய தொழில் நிலைமையைப் புரிந்துகொண்டு அவர்கள் கூலி உயர்வும், இதர வசதிகளையும் பெற போராட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துவது, கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிற்சங்கத்தில் உறுப்பின ராக சேரவேண்டிய கடமையைவற்புறுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டேன். உழைக்கும் மகளிரிடையே ஒரு மகளிர் சங்கமும் அமைத்தேன். இதில் என்னுடன் சேர்ந்து முழுப்பங்காற்றியவர் தோழர் கமலம் என்ற நெசவுத் தொழிலாளிப் பெண் ஆவார். நகரசுத்தித் தொழிலாளர்களை அவர்களுடைய குடியிருப்புகளுக்குச் சென்று சந்திக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். அவர்களுடைய அன்றாடப் பழக்கங்களில் மாற்றம் கொண்டுவர முயற்சித்தேன். சுகாதாரமாக வாழ்வது பற்றியும், குடிப் பழக்கத்தை தவிர்ப்பது பற்றியும் அவர் களிடையே தொடர்ந்து பேசினேன். தீண்டாமைக்கெதிராகவும் வர்க்க ஒற்றுமைக்
காகவும் அவர்கள் ஒன்றுபடுவது பற்றியும் தொடர்ந்து பலநாட்கள் பேசினேன். அது நல்ல பயன் தந்தது. நகரசுத்தி தொழிலாளர் சங்கம் அமைக்க எனது பணிஅடித்தளமானது. பொதுக்கூட்டங்களில் பேச முதலில் சற்றுத் தயக்கமும் பயமும் இருந்தது. போகப் போக அது சரியாகிவிட்டது. நாஞ்சில் நாட்டிலும் அன்றைய திருநெல்வேலி மாவட்டத்திலும் எண்ணற்ற கட்சி பொதுக்கூட்டங்களிலும் விவசாய சங்கக் கூட்டங்களிலும் பேசி யுள்ளேன்.
கேள்வி: அப்போது பெண்கள் போராட் டம் ஏதும் நடந்ததா?
பா.விசாலம்: திரு-கொச்சி மாநிலத்தில் அப்பொழுது ரைஸ் மில்கள் தடை செய்யப்பட்டிருந்தன. நாஞ்சில் நாட்டிலும் ரைஸ் மில்கள் தடை செய்யப்பட்டிருந்தன. கைக்குத்தல் அரிசிதான் கிடைக்கும். அரிசி குத்துவதற்கென்றே பெண்கள் இருந்தார்கள். இவர்களுடைய முழுநேர வேலையும் இதுதான். இது ஏராளமான பெண்களுக்கு வேலை வாய்ப்பளித்தது. அப்பொழுது திரு-கொச்சி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அவர்கள் ரைஸ் மில் மீதிருந்த தடையை நீக்கினார்கள். இதை எதிர்த்து நெல்குத்தும் பெண்களைத் திரட்டினோம். பெண்கள் நெல் குத்தும் உலக்கைகளோடு நாகர்கோவிலில் நடைபெற்ற ஊர்வலத்தில் பெருமளவு பங்கேற்றனர். அந்த ஊர்வலத் துக்கு நான் தலைமை தாங்கினேன். கேள்வி: நாவலைத் தவிர வேறு என்னென்ன படைப்புகள் வெளிவந்துள் ளது? பா.விசாலம்: 1960 ல் எனது முதல் சிறுகதை 'நோய் சரஸ்வதி இதழில் வெளிவந்தது. அப்பொழுது சரஸ்வதியில் சுந்தர ராமசாமியின் "புளிய மரம்' தொடர் நாவலாக வந்து கொண்டிருந்தது. சு.ரா.தான் எனது கையெழுத்துப் பிரதியை படித்துவிட்டு நன்றாக இருக்கிறது "சரஸ்வதிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று அனுப்பி வைத்தார். என்னுள் எழுத வேண்டுமென்ற ஒரு ஆவல் கனன்று கொண்டிருந்தது. கட்சிவேலைகளும் குடும்ப நெருக்கடிகளும் எனது எழுத்து முயற்சிகளுக்குத் தடையாக இருந்தன. அந்த சந்தர்ப்பத்திலும் நான் பல சிறுகதைகளை எழுதினேன். ஆனால் அவைகளை பிரசுரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற முனைப்பு இல்லாமல் போய்விட்டது. சரியாக முப்பதாண்டுகளுக்குப்பின் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். "மெல்லக் கனவாய்... பழங்கதையாய்...' நாவல் உருவானது. அதுவும் கையெழுத்துப் பிரதியாகவே சில வருடங்கள் கிடப்பில் கிடந்தது. அப்பொழுது புதுவைப்பல்கலைக் கழகத்தின் நாடகப் பள்ளியின் இயக்குநராக இந்திரா பார்த்தசாரதி அவர்கள் இங்கு வந்தார்கள்.இ.பாவும் இந்திராவும் என்னுடைய நெருங்கிய நண்பர்களானார்கள். இ.பா. ஒரு சந்தர்ப்பத்தில் எனது நாவலின் கையெழுத்துப் பிரதியைப் பார்க்க நேர்ந்தபோது அதைப் படிக்க எடுத்துச் சென்றார். படித்துவிட்டு இது அச்சில் வரவேண்டியது மிக அவசியம் என்று சொல்லி அவருக்கு மிகவும் நெருக்கமான
ஒரு வெளியீட்டு நிறுவனத்திடம் பிரசுரத் துக்காக கொடுத்தார். அந்த வெளியீட்டாளர் இரண்டு ஆண்டுகளாக எந்த முயற்சியும் எடுக்காததால், அதைத் திரும்பப் பெற்று தோழர் ராஜூவின் துணையோடு 1994 ல் வெளியிட்டேன். தமிழ் படைப்புலகில் எனது நாவல் பெற்ற வரவேற்பு எனக்குத்தொடர்ந்து எழுத வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத் தியது. 1995ல் கணையாழியின் தி. ஜானகிராமன்நினைவு குறுநாவல் போட்டியில் எனது குறுநாவல் 'சாணாங்கி மண்டபம்’ தேர்வு செய்யப்பட்டு வெளியானது. அதே ஆண்டு 'முன்றில் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளிவந்தது. இப்பொழுது ‘சதங்கை' இதழில் சிறுகதை, பெண்ணியம் சார்ந்த கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
நினைவுச் சுருட்டல்கள்
சித்ரா
என் உணர்வில்லாமலேயே அறையை எதைக் கொண்டாவது நிரப்பி விடுகிறேன். உள் நுழையவே அவற்றின் இடமாற்றம் அவசியம் எனும்பொழுதுதான் இதை கவனிக்கிறேன் சிறு வயதிலேயே இப்பழக்கம் எனக்குண்டு. வீட்டுக்கு வரும் பழைய பேப்பர்காரனைக் கண்டால் எனக்காகாது. அம்மா கழிக்கும் பழைய பேப்பர், புத்தகங்களில் வெட்டி எடுக்க படம் (அல்லது) அவ்வளவு குப்பையும் எனக்கு வேண்டியிருக்கும் இத்தனை நாள் எங்கடி போன? அம்மாவின் கேள்விக்கு பதிலில்லாமல் எடுத்து வைத்துக் கொள்வேன். இவற்றுடன், வேண்டாமென்ற ஓட்டைப் பேனாக்கள், மூடிகள், குப்பிகள், குச்சி, பல்பம், கலர் சாக்பீஸ், பென்சில், ரப்பர், நிறைய கலர்கலர் பேப்பர்
ஒரு டப்பி முழுக்க
எச்சி எலந்தங்கொட்டை,
2, 3 உடைந்த ஸ்கேல்,
புத்தகத்துள் வைத்த
குட்டி போட்ட போடாத
மயில் இறக்கை, சாயம்போன பழைய ஸில்க் துணி, நிறைய சாக்லேட் கவரில் சுருட்டி செய்த பொம்மை
ஒரு பெரிய கட்டு, சிகரெட், தீப்பெட்டி லேபிள்கள். அட்டை போடும் பேப்பர், லேபில், இப்படி பலதையும் போட்டு ரொப்பி வைத்திருந்தேன் எனக்கென்று நான் எடுத்துக்கொண்ட தகரப் பெட்டியில்.
ஒருநாள்,
அதை தலைகீழாக கொட்டி கோபத்தில் குடைந்து கெண்டிருந்தார் soil ILIT, அவர் அதில் ஸ்பேனர் வைத்திருந்தாராம்.
கூப்பிடு அந்த கழுதாயை! என்று ஒரே சத்தம். “என் குடியைக் கெடுத்துவிட்டார்' என பாட்டியிடம் நான் அழுததும், அவள் அப்பாவிடம் சண்டை போட்டதுமாக ஞாபகம்.
அப்புறம், கிழவி சிரித்துக்கொண்டே கீழ்க்குரலில் கேட்டாள், ஆமா! அந்த எச்சி எலந்தங்கொட்டை எதுக்கு?