மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Automated Google-Ocr + half an hour
proofreading for 45 to 50 days
இடைவெளி - சம்பத் 3
.
50
‘பார்த்தசாரதி வந்துட்டுப் போனான்' என்றாள் பத்மா,
சமையலறையிலிருந்து காப்பி கலந்துகொண்டே.
"எந்த பார்த்தசாரதி” என்றார் தினகரன், பூட்ஸைக்
கழட்டிக்கொண்டே. காப்பியை எடுத்துக்கொண்டு வந்த பத்மா "அதான், தேரடித்
தெருவில் இருக்கிறானே" என்றாள்.
“என்ன விஷயமாம்."
"உங்களுடைய ஒன்றுவிட்ட பெரியப்பாவாமே! வயசு ஆயிடுத்தாம்
நினைவில்லாம கிடக்திறாராம். அதிக நாள் தாங்காதுனு சொன்னான், உங்களை சின்ன வயசில்
பார்த்த தாம். அவருக்கு உங்களைப் பார்க்கணும்போல ஆசையாய் இருக்குனு
சொன்னாராம்."
"யார் அவர்... டேய் குமார் இந்தப் பூட்ஸைக் கொண்டு உள்ளே
வை.” ஏதோ ஒரு உருவம், காலமற்று கிராமச் சூழலில் நெடிந்து நிற்பது கண் முன்
நிழலாடுகிறது. இதுவுரை மூனறு நான்கு முறைகளுக்கு மேல் அவரைப் பார்த்ததாக ஞாபகம்
இல்லை.
குடும்பத்தில் எப்போதும் இருபது, முப்பது நபர்கள் பார்த்துப் பழகியதினாலா ஒன்று, இரண்டு விட்ட உறவுகள் மேல்
இப்படியொரு பாசமேன்? ஏன் தனக்குத் தெரிந்த அதைவிடவும் நெருக்கமான உறவு முறைகளில்
தனக்கு ஈடுபாடு உள்ளதா என்று நினைத்துக் காண்டார் தினகரன். திட்டவட்டமாக ஒன்றும்
சொல்ல முடியவில்லை என்று அவர் மழுப்பிக் கொண்டாலும் அடிமனத்தில் அந்த உறவு முறைகள்
தன்னில் எந்த விதத் சலனமும் ஏற்படுத்தவில்லை என்பதை இனங்கண்டார். ஏன்?
இதைப்பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று
51
நினைத்துக்கொண்டார். டைரியில் இவ்வாறு அன்றிரவு குறிப்பு
எடுத்தார். -
சரித்திரத்தின் முக்கியத்துவத்தை எந்தத், சமுதாயமும் என்றுமே
உணர்ந்ததில்லை. மனித சமுதாயத்தின் இழப்பே, பெரிய அபத்தமே இதில்தான் அடங்கியுள்ளது.
இந்த விஷயத்தில், அதற்கு, எப்போதுமே திராணி இல்லாமிருப்பதுதான் காரணம் எனறு
தோன்றுகிறது. ஆம்! மனித குலத்தின் பூரண இழப்பே சரித்திரத்தின் உண்மைகளை, தன்மைகளை
உள்வாங்கிக் கொள்ளாமல் போவதில்தான்! தனிமனித அளவில் சார்த்ரே, காஃப்கா போன்று எந்த
நிலையிலும் உலகத்தின் அபத்தத் தன்மையைக் காணலாம்; ஆனால் சமுதாயத்தின், மனித
குலத்தின் அபத்தம் சரித்திரத் தன்மைகளை உள்கொள்ளாமல் போனதில்தான் தோற்றம்
கொள்கிறது."
காலையில் எழுந்த உடன், "பத்மா, இன்னிக்கி அவரைப் போய் பார்த்திட்டு
வர்றேன்” என்றார், அவள், பக்கத்தில் வந்து “எனக்கு இதைப்பத்தி ஒன்னும் இல்லே. ஆனா
இப்போல்லாம் சாவைப்பத்தி நினைச்சு மண்டையைப் பிய்ச்சுக்கிறிங்க. ஆபிசில வேற மயங்கி
விழுந்திருக்கிங்க. இங்க பெரியப்பாவோ சாகக் கிடக்கிறார். உங்களுக்குத்
தெரியாததில்லை" என்றாள்.
“...நீ சொல்றது நிஜம் பத்மா - சாவு எப்படிச் சம்பவிக்குதுனு
பார்க்கத்தான் போறேன் - அநேகமா இனிமே நான் பார்த்தசாரதி வீட்டில்தான் கொஞ்ச
நாளைக்குத் தங்கப்போறேன்."
'உடம்பு ஜாக்கிரதை. அதை வச்சுக்கிட்டுதான் சித்திரம் வரையனும்.
நானும் என் மூணு. குழந்தைகளும் உங்களை நம்பித்தான் இருக்கோம்." . . "
அலுவலகத்தில் அன்று மாலை பெரியப்பாவைப் பார்க்கப் போவதற்காக
அரைமணி நேரம் முன்னால் அனுமதி கேட்டார். கொடுக்கப்பட்டாலும் வேலையை முடித்துக்கொண்டு
அவர் வெளியே வரும்போது மணி ஐந்தேமுக்கால் ஆகிவிட்டது. மஸ்ஜித் பக்கம்
டர்ன்ஸ்டைலைத் திருப்பிக்கொண்டு நேரு ஸ்டேடியத்திற்குப் பக்கத்தில், அங்கங்கே விரவிய ஜோஸியம்
சொல்லும் கூட்டத்தைக் கடந்தபோது எதிரே சென்ட்ரல் பக்கம் விட்டு
53
விட்டுத் தெரிந்த அவ்வளவு மஞ்சள் சுவர்களிலும் வெள்ளையாகச்
சூரியன் பட்டு மஞ்சள்நிறத்தை மிகைப் படுத்திக்கொண்டிருந்தான். பச்சையான ஒரு சுவர்
தெரிந்தது. அதில் அவன் நிறமற்று அமுங்கிப் போயிருந்தான். இடது புறமாக ஒரு சுவர்.
கருமஞ்சளில் ஒரு வேப்ப மரத்தின் நிழல் துணையுடன் ரொம்பவும் ஆவலுடன் அதில்
அமிழ்ந்து போயிருந்தான். அந்தக் கருமஞ்சளைப் பார்க்கும்போது என்னவோபோல் இருந்தது.
அந்த மஞ்சள் சுவர்களைத் தாண்டி கருமையாக ஒரு இன்ஜின் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.
வெயில் அங்கு நிழற்சாயையாக விரவியிருந்தது. அப்படித்தான் இரண்டு மைல் தூரத்தில்
சாவு எவரையோ நிழற்சாயையாகத் தொற்ற விரைந்து கொண்டிருக்கிறதோ?
'நன்றாகக் கவனி தினகரன். அவன் உன்னை ஏமாற்றி விடுவான்' என்று
தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நடந்தாா.
இந்நிலையில்தான் அவரைப் பெரிதாக ஆயாசம் தொற்றியது. எது
எப்படியாவது இறந்து போகட்டுமே? சாதாரணமாக வாழ்ந்து, இந்த மண்ணோடு சம்பந்தப்பட்டு
இருந்து போக வேண்டியதுதான் - உத்தமம் என்ற அவரின் சித்தாந்தத்திற்கு
என்னவாகிவிட்ட்து? ஆனால் அது எவ்வளவு பெரிய சித்தாந்தமோ அதைப் போலவே இதுவும் பெரிய
சித்தாந்தம்தானே? அவருடைய மனம் 'அழிவு' என்கிற தலைப்பில் லைஃப் பத்திரிகை
வெளியிட்ட படங்களைக் கொண்ட புத்தகத்தைப் பின்னியது. அந்த வெளவால்கள் சூழ்ந்த
கோட்டைகள்; பெருச்சாளிகள் அசுத்தம் செய்த குகை அறைகள்; அந்தப் படங்களிலிருந்தே
எழுந்துவிடும் காலத்தால் கல் மக்கிப்போன, ஒரு வாசனை என்னவென்பது - சூரியன்
கூடத்தான் ஒருநாள் மக்கிப் போய்விடுமாமே? சில்லுன்னு நாதியற்று - தன் நிலை இழந்து?
தனக்கு ஏதோ தோன்றப் போகிறது என்கிற பதத்திலேயே அவருக்கு அசூயை
ஏற்பட்டது. எது தோன்றினால்தான் என்ன? பிரபஞ்ச அளவில் மனிதனிடம் ஒரு கையாலாகாத்தனம்
இருக்கிறது. அந்த விதத்தில் எந்தச் செய்கையுமே பயனற்றது, அர்த்தமற்றதும்கூட! நாம்
ஏன் வீணாக அலட்டிக்கொள்கிறோம் என்று பட்டது. பேசாது வீட்டுக்குத் திரும்பி
விடுவோமே? என்று நினைத்தார்.
53
ஜெயஸ்ரீ எல்லாவற்றிலுமே சொல்லிவைத்தாற் போன்று ஸபைர்
வாங்குகிறாள். அவளுக்கு ஒரு மணி நேரம் பாடம் சொல்லிக்கொடுத்தாலும் புண்ணியம்
உண்டு. வீட்டுக்கு மலிவாகத்தானே முறையில் சோபா செட்டுகள் கிடைக்குமா என்று
தேடினாலும் பயனுண்டு. வீடு என்றாலே வேலைக்கா பஞ்சம்? பார்த்துப் பார்த்துச் செய்ய
எவ்வளவோ வேலை இருக்கிறது, உப்பங்காற்றா? இரும்பு இருக்குமிடமெல்லாம்
துருப்பிடிக்கிறது. ஆயிரம் சாய விளம்பரங்கள் தினம் பார்க்கிறுேம். அதற்கு ஏதாவது
செய்யக்கூடாதா என்ன? ஆபீசில் "பிரெஞ்சு கற்றுக் கொள்ளுங்களேன்; செலவை
ஏற்றுக்கொள்கிறோம்' என்கிறார்கள். அதற்குப் போகலாம். ஸ்கூட்டர் ஒட்டக்
கற்றுக்கொள்ளலாம்.
எங்கோ தான் பத்மாவிடம்கூடப் பிரியமாக இல்லேயோ என்று பட
ஆரம்பித்தது. நீ ஏதோ பெரிய மஜ்னு, ஹாம்லெட் (அவனை எதற்கு இழுத்தாள்) ஸலீம் என்று
உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்னைப் போன்று
எந்தப் பெண்ணையும் நீ சோகமடையச் செய்துவிடுவாய்' என்றாள் கல்பனா. ஏன் அப்படி
சொன்னாள். அந்தப் பெரிய விஷயமெல்லாம், துல்லியமான நூல் போன்றதை - இப்படி யெல்லாம்
சொல்லிவிட்டால்? அறுபட்டது முடிச்சு வேண்டுமானால் போடலாம். சாவுக்குப் பயந்துதானே
நான் இப்படிப் பெண் அன்புக்கு ஏங்குகிறேன்? ஆனால் இப்போது நினைத்துப்
பார்க்கும்போது, அந்தப் பெரிய விஷயங்கள்ல்லாம், ஒரே சந்தோஷமாய் இருப்பினும்
கடைசியில் பெரிய சாவாகத்தான் முடிவடைகிற்து, அதற்கு என்ன செய்வது? அரைவேக்காடான,
சாசுவதத் தன்மை கொண்ட சூரியனும் இதோ இந்தக் காலகட்டத்தில் தினப்படலமே எனினும்,
அநித்தியமாகிக் கொண்டிருக்கிறான். என்ன வேண்டிக் கிடக்கு. எல்லாமே எப்படியாவது
போகட்டும். மேலும் உன்னுடைய சிந்தனை ஓட்டம்தான் உனக்கு முக்கியம் என்ன மாதிரியான
சுய நலமிது! அவரோ உன்னை உனக்காகவே பார்க்கணும்னு கூப்பிட்டிருக்கிறார். நீயோ? அது
எப்படி சம்பவிக்கப் போகிறது என்று பார்க்கப் போகிறாய்? எவ்வளவு வருத்தத்திற்கு
உரிய விஷயமிது, தளர்ந்த நிலையில் நின்றார் தினகரன். இப்படி வெட்கப்பட்டு
தலைமயிரைப் பிய்த்துக்கொண்டு சாலையில் நிற்கவா - ‘அம்மா! என்ன ஏன்டி பெத்தே' என்று
சொல்லிக்கொண்டார். சிரிப்பு
54
வந்தது. கூடவே,அவருக்கு வருத்தமாகவும் இருந்தது. நேரே
புகாரிக்குப் போனார். ஒரு டீ சொன்னார். பாங்க் விஷயமாக அடிக்கடி அவர் போய்க்
கொண்டிருந்த ஸ்டேட் பாங்க், இந்தியன் பேங்க் தொழிலாளர்கள் சில பேர்களை அவர்
கண்டார். ஒரிரு கைகள் அங்கீகரிப்புப் புன்னகையாக மேலெழுந்து ஆடின. பதிலுக்குப்
புன்னகைக்க இவரும் யத்தனித்தார். எங்கேயாவது அவர்கள் வந்து பேச்சுக் கொடுக்க
ஆரம்பித்து விடுவார்களோ என்று பயந்தார். அவர் தனியாகவே இருக்க ஆசைப்பட்டார். அந்தக்
கூட்டத்தில் செங்கல்பட்டிலிருந்து வரும் ஒரு கிளார்க் தினகரனை ரொம்பவும்
வசீகரித்திருந்தார். அவருக்கு வாய் கொஞ்சம் திக்கினாலும் அவரில் எப்போதும் ஒரு
புன்னகை குடிகொண் டிருந்தது. விஷப் புன்னகையில்லை. இதோ நானும் இருக்கிறேன்
புன்னகை. நீ சொல்வதை என்றுமே கேட்டு, உன்னுடையவனாக. உனக்கு இயைந்த வகையில்
இருக்கிறேன் புன்னகை. மெல்லப் பத்து வருஷம் கூட கேள்வியே கேட்காமல்
உழைக்கிறேன். அப்புறம் ஆபீசர் பதவி கொடு. இப்பேர்து கிளார்க்காக இருந்தாலும்,
என்றாவது நீ என்னை ஆபீசராக அங்கீகரிக்க இப்போதிருந்தே என்னைத் தயார் செய்துகொள்கிறேன்
புன்னகை! சொல்லி வைத்தாற்போன்று அவர் பில் பணத்தைக் கொடுப்பதற்காகக் கைவசம்
வைத்திருந்த சூட்கேசைத் திறந்தபோது அதிலிருந்து ஒரு டவல் வெளிப்பட்டது. தனி அளவு
கொண்ட் ஆபிசர் அறையில் டவல் ஸ்டாண்டு இருக்க, அதில் அந்த மனிதனுடைய டவலையும்,
அவனுடைய நரைத்த தலையையும், அந்தப் புன்னகையையும் தினகரன் கண்டார். ஓயாது அதில் ஒரு
நிர்ணயிக்கப்பட்ட இயக்கத்தைக் கண்டார். தன்னையும் ஒரு பத்து வருஷம் கழித்துப்
பார்த்துக்கொண்டார். நாற்பத்தைந்தில் நீ எப்படி அப்பா இருப்பாய் தினகரன்?
தன்னைப்பற்றி ஏதாவது கழிவிரக்கத்தில் விழுகிறோமோ என்று
நினைத்துத்தொண்டார். நிச்சயமாக இல்லை, ஆனால் இந்தச் சிந்தனை ஒட்டங்கள்: பயனுள்ளதோ,
பயனற்றதோ இதிலிருந்து தான் விடுதலை அடைய முடியாததை நினைத்து வருத்தப்பட்டார். அது,
ஒரு கழிவிரக்கமாகவே அமைந்தது. தனக்கு இது விதிக்கப் பட்டது என்றே பட்டது. மீண்டும்
அங்கேயே அதை ஒரு தோரணையுடன் ஒப்புக்கொண்டார். எல்லோரும் எல்லோரையும் போல் எப்படி
இருக்க முடியும். இந்த மாதிரி வக்கரிப்புகளும் அவசியம்தான். வக்கரித்தவன்
என்பதினாலேயே எங்கேயாவது தன்னைத் தொங்க விட்டுவிடபோகிறார்கள்" என்று பட்டது
மீண்டும் அவரிடம் மின்சாரம் பாய்ந்தது போல் ஏதோ ஒன்று ஏற்பட்டது.
என்னை இவர்கள் தூக்கிலிட முடியாது. நான் அவர்களை விடமாட்டேன். என்னைத்'
காத்துக்கொள்ள எனக்குத் தெரியும்' என்று சொல்லிக்கொண்டார். ‘நில்லு, நில்லு,’
தினகரன் என்று சொல்லிக்கொண்டார். பாண்ட் பாக்டெட்டில் கையை விட்டார் ஒரு நாலணா
கிடைத்தது. கட்டை விரல், ஆள்காட்டி விரல் பர்ம்பு விரலின் துணை கொண்டு, அதை
மேஜையில் சுண்டிச் சுற்றவைத்தார். அதுவும் கிர்கிர்' என்று சுற்றியது. அதை
உள்ளங்கையால் அழுத்தி நிலையைப் பார்த்தார். தலை விழுந்திருந்தது.. மீண்டும்
சுற்றினார். டீயை எப்போதோ குடித்தாகி விட்ட்து. அவர் எத்தனை நாழிகை பூவா தலையா
போட்டுப் பார்த்தாரோ: "வேறு ஏதாவது வேண்டுமா?” என்று சர்வர் பக்கத்தில் வந்து
நின்றான். “இன்னும் ஒரு டீ கொண்டா" என்றார் தினகரன்.
நீங்க ஒரு மணி நேரமா இந்தக் காசைச் சுண்டிக்
கிட்டிருக்கிறீங்க. எல்லாரும் உங்களையே பார்க்கிறாங்க" என்றான் சர்வர்.
“அப்படியா” என்ற தினகரன் மணியைப் பார்த்தார். மணி ஏழு
வாஸ்தவம்தான். பாங்க்காரர்கள் எப்போது போனார்களோ நிச்சயமாகத் தன்னைப்பற்றி ஏதாவது
இளப்பமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அதனாலென்ன. பரவாயில்லே
ஆமாம்! தூக்குக் கயிறு. அதிலென்ன.'
‘சாவை சம்பவிக்க வைக்கிறது.'
‘தூக்குக் கயிறு... இன்னொரு பெயர்...இன்னொரு
பெயர்... ஆமாம்... ஆமாம். .. என்னது... ம் - சுருக்கு' சாவை
சம்பவிக்க வைக்கும் சுருக்குக் கயிறு! இதில் பெரிய விசேஷம் என்ன அடங்கியிருக்கப்
போகிறது. மூழ்கியும்தான் செத்துப் போகிறான். கில்லோட்டினாலும்தான்! காஸ் அறையிலும்
தான்! வாஸ்தவம்தான் சர்வர் டீயுடன் வந்தான். 'எனக்கு ரொட்டியும் பாலும் பன்னும்
கொண்டு வா" என்றார். தொடர்ந்து “ஒன்றும் தப்பாக எடுத்துக்
56
கொள்ள மாட்டியே! நான் இன்னும் அரைமணி நேரம் இங்கு உட்காரலாம்
என்றிருக்கிறேன்' என்றார்,
"எனக்கு ஒன்றுமில்லை! வீட்டுக்குப் போக இன்னமும்
நேரமாகல்லை, வீட்டுக்குப் போகலாம் என்று நினைக்கும் போதுதான் வைப்பாட்டியுட வந்து
ஒருவன் சல்லாபிப்பான் நீங்களோ அடிக்கடி வர்றிங்க. எனக்கு உங்களைத்
தெரியாதா? ரொம்பவும் யோசனை சாருக்கு? எதைப் பற்றியோ?”
'ஏதோ தத்துவம் போயேன். தீப்பெட்டி இருக்கா?”
அவன் அவருடைய சிகரெட்டைப் பற்றவைத்தான். "நேரத்தை
அரைமணிக்கா, இல்லை ஒரு மணிக்கு நீடிக்க வைக்கட்டுமா?"
'இல்லை சீக்கிரமே கொண்டா! போகணும்...'
"இதோ!" அவன் போய்விட்டான்.
சுருக்குக் கயிறு - ஆமாம். ஆனால் தண்ணிரிலும் சாவு
சம்பவிக்கிறது - ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு - போடா மடையா- காஸ் அறையிலும்தான்
சாவு... ஹே.. ஹே. உன்னுடைய முன்னோர்கள் வணங்கப் பழகலை. சூரியனுக்கே கூட ஒருநாள்
அது இருக்கு ஹி. ஹி... ஹி...'
"யார் அது." தினகரனுக்கு வேர்த்துக் கொட்டியது. என்ன
காரணமோ தெரியவில்லை சாவுதான் சர்வர் வாயிலாக நேரத்தை அரைமணிக்கா
இல்லை ஒரு மணிக்கு நீடிக்க வைக்கட்டுமா? என்று கேட்டிருக்கிறது. அவனை
விட்டு விட்டு, மீண்டும் எண்ணமாகத் தன்னத் தொற்றியிருக்கிறது என்று நினைத்தார்.
பழமாக இருந்தது. ஹிருதயத்தைத் தொட்டுக்கொண்டார் தினகரன். பத்மாவைக்கூட அவ்வளவு
ஆதரவுடன் அவர் தொட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
வாழ்க்கை முக்கியமில்லை என்று சதா சாவுக்குத் தன்னைத்
தயார்படுத்திக் கொண்ட லோகத்தில் பிறந்ததின் பயன்? வாழ்வுதான் முக்கியம் என்று
நம்பிய தன்னில், இந்த மண் வாடையே முறுகித் தன்னைச் சாக அடிக்கிறதோ? எங்கேயாவது
அமெரிக்கா, சீமை என்று ஓடிவிடலாமா?
57
என்று நினைத்தார். இவான்ஸ்கூடச் சொல்லியிருந்தான் - -
அமெரிக்காவில், சீமையில் 'ஐடியா செல்' என்று இருக்கிறதாம். ஐடியா கொடுப்பவர்களை
ஆதரிக்கும் இடம் அது. எவ்வளவு தூரம் நிஜமோ? அட, அப்படி இல்லாவிட்டால் தான்
போகட்டும்? சாப்பிட்ட தட்டுகளை அலம்பியவாறே, டாலர் டாலராக சம்பாதித்துக் கொண்டே
சிந்திக்கலாம், எழுதலாம், படிக்கலாம். அவரோடு எம். ஏ. படித்த எவ்வளவோ பேர்கள்,
ஐரோப்பா, அமெரிக்கா என்று விரவியிருக்கிறர்கள். கேட்டால் இல்லை என்று
சொல்ல மாட்டார்கள். ஆனால் இத்தனை நாள் என்ன பண்ணினாய் என்று விரிவுரை
நிகழ்த்த ஆரம்பித்துவிட்டால்- அப்படியும் நடக்கலாம் எண்ணத்தொடரில்
சிக்கியபோதெல்லாம் தினகரன் நடப்பார். பார்த்தசாரதி, பத்மநாபன் ஒருவிதம். ரஷ்யாதான்
அவர்களுக்கு எல்லாம். கைதேர்ந்த கம்யூனிஸ்டுகள். அவர்களோடு சேர்ந்து அவரும் நிறைய
ரஷ்யத் திரைப்படங்களை பார்த்திருக்கிறார். ‘A ballad for the soldier'
‘Cranes ạre flying". அப்புறம் வெகுகாலம் கழித்து ‘லியர் அரசன்'
அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. மற்றபடி முக்காலே மூன்றுவீச ரஷ்யப் படங்கள்
படு அறுவை எனது அவருக்குப் பட்டது. ‘பாஸ்டர் நாக்கில், ஏதாவது ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் அவருடைய உலகம் பிலாக்கணமாகவே போய்விட்டது, என்பார் தினகரன்.
'கலை-இலக்கியம் என்றால் என்ன?” என்பான் பத்மநாபன் விடிய
விடியப் பேசினாலும், அவர்களிடையே சமரசம் ஏற்படாது. பாதைகளற்றுத் தத்தாரியாய்த்
திரியும் பெரிய ஆன்மாக்களிடம் இருந்துதான் ஐடியாக்கள் பிறக்கிறது என்பது
தினகரனுடைய வாதம். "ஐடியாக்களை நீ என்ன தான் முயன்றாலும் ஒரு ஒழுங்குமுறையில்
அடைத்துவிட முடியாது என்பது.அவருடைய கருத்தாக இருந்தது. "எக்கச் சக்க
விடுதலையும், தத்தாரித்தனமும், எக்கச்சக்க - எப்படிச் சொல்வது - பிளைட் ஆஃப்
பான்ஸி'யும் தான் முக்கியம்'
'போதும் நிறுத்து' என்பான் பத்மநாபன். ஒருசமயம் ரொம்புவும்
கெட்ட வார்த்தைகளால் இவரை அவன் திட்டியிருக்கிறான், தினகரனுக்கு மனது
கஷ்டப்பட்டாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு வகையில் பார்ககும்போது
இப்போது இருக்கும் ஏற்றத்தாழ்வு அவருக்கும் சம்மதமில்லைதான். "ஆனால்
பொருளாதார ஏற்றத்தாழ்வுை எப்படிச் சரிசெய்வது? அவர் இதைப் பற்றி நிறையவே
சிந்தித்திருக்கிறார்.
58
'இப்போது எதற்கு இந்த வம்பெல்லாம்' என்று சொல்லிக்கொண்டே
நடந்தார். சென்ட்ரல் பக்கமாக, சாலையைக் கடந்து இடது புறமாக மவுண்ட் ரோடை நோக்கி
நடக்க ஆரம்பித்தபோது மர நிழல்களில் கல்லறைகள் உறங்கிக் கொண்டிருப்பதைப்
பார்த்தார். ஒரு குழந்தையின் கையாலாகாத்தனம் அங்கு மிளர்வதைக் கண்டார். அங்கு ஆவர்
சற்றுநேரம் நின்றார், 'ஆன்மாவுக்கு அழிவில்லை’ என்று சொல்லிக்கொண்டார். ‘உன்னை
எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது' என்று வெகு சமீபத்திலிருந்து ஒரு குரல் கேட்பது
போலிருந்தது - யார் என்று பார்க்க யத்தனிக்கவில்லை. வேறு யார்? கனவிலும் நனவிலும்
அவரைத் தொற்றியிருக்கும் அது தான். இப்போது குழந்தை போன்று இங்கு இடத்கும்
அதுதான்! வேறு எது அந்த மாதிரி குரல் கொடுக்க முடியும்?
அந்தக் குரலையும் கிரகித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டவர்,
வலது பக்கத்தில் அழகாக, ஒளியுடன், சப்தமற்று இருக்கும் சிறைச்சாலையைப் பார்த்தார்.
சிறைச்சாலை இப்போது அவரை அவ்வளவு தூரம் வாட்டவில்லை. தூக்கு மேடையாக இருந்தால்
என்ன? எண்பதில் பூவும் குங்குமமுமாய் போனாலென்ன? சாவு சாவுதான். என்ன தான் இந்த நாட்டிலே
தான் போவதை முன்கூட்டியே கணித்து அதற்காகவென இங்கு நம்முடைய பெரியவர்கள்
சிஷ்யகோடிகளைத் தயார் செய்திருந்தாலும் சாவு சாவு தான்!
பல்லவன் போக்குவரத்துக் கழக ஊர்திகள் தங்கும் இடத்திற்கு,
சென்ட்ரலிருந்து கல்லறைகளையும் தாண்டி வந்து விட்டிருந்தவரை, ஒருவித இருள்
மூழ்கடித்தது. சிறிது புயமாக இருந்தது. தைரியம் கொடுப்பது போன்று தூரத்தே ஏதோ நீர்
பவுன்டன் மேலே எழும்பி ஆடிக்கொண்டிருந்தது, ஏனோ அவருக்கு அது மிகைப்படுத்தப்பட்ட
வாழ்வு ஸிம்பலாகப் பட்டது. குதுப்மினாரைப்பற்றி அப்படியொரு
எண்ணம் ரொம்ப சின்ன வயதிலேயே எற்பட்டதை நினைவுகூர்ந்து
சிரித்துக்கொண்டார்
59
சிம்சனில் 31ஆம் நம்பர் பஸ் காத்துக்கொண்டிருந்தது. அது
கிளம்பும்போல் - ஆகிவிடவே ஓடித் தொற்றிக்கொண்டார். எங்கே போகிறோம்? எதற்காக?
ஏதாவது மனஇயல் நிபுணரைக் கேட்கலாமா? இவான்ஸ், இவருடைய மனைவி, இன்னும் பலரும்
பைத்தியம் என்று சொல்லியாகிவிட்டது. போனோமே! ‘உனக்கு ஏதாவது கோவில் மணி சப்தம்
கேட்கிறதா’ என்றாள் அந்த மனோதத்துவ நிபுணப் பெண்மணி. இதையெல்லாம்
என்னவென்று சொல்ல! 'ரத்த சோதனை, மூத்திர, மலச் சோதனைகள் - எல்லாம் செய்து கொண்டு
வா" என்றாள். கொஞ்சம் கிறுக்கு! ஆனால் சரியாக்கிவிடலாம் என்று
சொல்லியிருக்கிறாள். அதிலிருந்து, இனி சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்று
தன்னைத்தானே எவ்வளவோ கடிந்து கொண்டிருந்தும் அவரால் முடியவில்லை. அலுவலகத்தில்
தன்னைத்காட்டிக் கொண்டு விட்டார். சற்று முன் புஹாரியில். இதோ கண்டெக்டர் பஸ்ஸின்
படியில் நின்று பிரயாணம் செய்யாதே என்று சுத்துகிறானே? "அறிவு இருக்கா!
எவ்வளவு நாழி கத்துறது - படிச்சவங்களாட்டமா தெரியலியே?"
“சாரி கண்டெக்டர்!”
அவர் விவேகாநந்தர் இல்லத்தில் இறங்கி பம்பு ஸ்டேசுனுக்கு நேரே
இருந்த சந்தில் நுழைந்து பார்த்தசாரதி கோவிலை நோக்கி நடந்தார். இங்கேயும்
மனிதர்களா இருக்கிறார்கள் என்று பட்டது. ஏழ்மையைப் பற்றிப் பேசி, படம் எடுத்துக்
காரும் பங்களாவும் வேண்டுமானால் வாங்கலாம். ஆனால் அதை அகற்றுகிறேன் என்று சொன்ன
காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக்கொண்டார். அவர்
வரையில் அவர் கண்டதென்ன? லெனினைத்தான் எடுத்துக்கொள்வோமே! அவருக்குப் பிடித்தமான
சகோதரன் தூக்கிலிடப்பட்டான். அவனும்தான் எதைக் கண்டான். ஏனோ அவருக்குக் காந்தி
வெறும் உடம்புடன் நின்றதுதான் அவருடைய அத்தனை காலத் தற்காப்பிற்கும்
காரணகர்த்தாவாக இருந்திருக்கிறது என்று பட்டது, வெறும் உடம்பில் சுடுவது என்பது
அவ்வளவு வலுவான காரியமா? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற
மனிதனை! உண்மையிலேயே சேவை மனப்பான்மை இருந்தால் சட்டையைக் கழட்டிப் போட்டுத்தான்
ஆக வேண்டும்.
60
என்று நினைத்தார். அவ்வளவு ராஜ தந்திரிகளும் அரை வெற்றுடம்புடன்
அலுவலகங்களில் நின்றால் நாடு எவ்வளவோ முன்னேறும் என்று அவர் நினைத்தார். இந்தியர்
அவ்வளவு பேர்களுக்கும் சட்டை இல்லை என்பதோடு காந்திக்குத் தன் அரை வெற்றுடம்பு சதா
ஒரு புனித நிலையை உருவாக்கிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.
வெறும் உடம்பில் அழகையும், தான் என்கிற அகந்தையையும் பார்ப்பது கஷ்டம். ஆனால்
எப்படி வந்தாலும் உடம்புதான் முக்கியமாகிறது. சாவோம். அது சத்தியம்! ஆனால்
“வாழலாமேடா பகவானே” என்றார் துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டது. அவரைக்
கூப்பிட்டு அனுப்பி சாகக் காத்துக்கொண்டிருந்த பெரியப்பாவை நினைத்துத்தான்.
தேரடித் தெருவில் போக்குவரத்து வெகுவாகக் குறைந்து
விட்டிருந்தது. பார்த்தசாரதி கோவிலின்மேல் எப்போதும் போல் வெளிர் நீலத்தில் பல்பு
எரிந்து கொண்டிருந்தது. இடதுபுறம் இருந்த குளம் வற்றிவிட்டது. ஆங்காங்கு கல்லூரி
மாணவர்கள் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டை விமர்சித்துக்
கொண்டிருந்தார்கள். தினகரன் அந்த வீட்டுக்கு நிறைய தடவைகள் போயிருக்கிறார்.
பத்மநாபன் வெளியே நின்றுகொண்டிருந்தான். வீட்டு முகப்பில் வைக்கப்பட்டிருந்த
கடையில் வாழைப்பழம் பேரம் பேசிக்கொண்டிருந்தான். “எடுத்துக்குங்க - எப்பப் பார்த்தாலும்
ஏன் பேரம் பண்றிங்க” என்று சொல்லிக் கொண்டிருந்த கடைக்காரன் இவரைப் பார்த்து,
"என்ன சார் வேண்டும்” என்றான். பத்மநாபன் திரும்பி, “அடடே எப்ப வந்த” என்றான்
"சாரதி காலைல வந்திருந்தானாம்” என்றார் தினகரன். "ஆமாம் நாங்களும்
அசிரத்தையாகத் தான் இருந்தோம். ஆனல் எவ்வளவு உறவுக்காரங்க இருக்கிறாங்களோ அவ்வளவு
பேரையும் பார்க்கணும்கிறார்? நினைவு வந்தா கூடவே ஞாபக சக்தியும் வந்துடறது”
என்றான்.
"இப்ப எப்படியிருக்கார்?” என்றார் தினகரன்.
“கார்த்தாலே ஏழு மணிக்கு நினைவு வந்தாற்போல் தெரிஞ்சது.
பக்கத்திலே போய் காப்பி சாப்பிடறயானு கேட்டோம் பதிலேயில்லே. எழுந்து உக்காரப்
பார்த்திருக்காரு போலத் தோணுச்சு. கைலாகு கொடுத்து உக்கார்த்தி வைச்சோம்.
இடதுபக்கம் முழுசா சுவாதீனம் போயிடிச்சு, குடிக்கு ஏதாவதுனு சைகை காட்டினாரு. ஒரு
வாய் காப்பி உள்ளே போயிருக்கலாம். அவ்வளவுதான், இரண்டாவது மடக்கைக் குடிக்கலே.
கண்ணு ரெண்டும் மூடிக்கிருச்சு. காப்பி இன்னமும் வாயிலேயே தங்கியிருக்கு.
நூலிழைபோல மூச்சு வேணாயிருக்கு. நிக்க வைச்சுண்டு பேசிண்டிருக்கேனே உள்ளே வாயேன் -
சாப்பிட்டாச்சா?”
"ஆச்சு”
அவன் அவரை உள்ளே அழைத்துக்கொண்டு போனான். எப்போதும் போல் வாசல்
திண்ணையில் பாய் போட்டுக் கொண்டு வழக்கமாகப் படுத்துக்கொள்பவர்கள் படுத்துக்
கொண்டாகிவிட்டது. இடதுபுறம் சின்ன அறையைப் போட்டோ கடையாக வைத்திருந்தவர் கடையை
மூடிக் கொண்டிருந்தார். தினகரனைப் பார்த்ததும், “செளக்கியமா?” என்றார்.
“ம்” என்றார் தினகரன். "எங்கே இப்ப எல்லாம் இங்கே
காணவேயில்லை”
“வரணும்னுதான் - எங்கே முடியுது”
“கிழவனாரை பார்க்க வந்திருக்கேளா?”
"ஆமாம்! வரட்டுமா."
"செய்ங்க! மறந்துடாதீங்க."
“அதெப்படி முடியும்?”
வலதுபுறம் சின்னஅறை. அம்மாவும் பிள்ளையுமாக
இருந்தார்கள். சமையலறை, வரவேற்பறை, படுக்கை அறை எல்லாம் அதேதான். சின்ன மண்ணெண்ணை
விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தூங்கும்போது ஏற்றப்படும் சிறு விளக்கு போலும்.
தூங்கிவிட்டார்கள் போலும். பத்மநாபனுக்கும், பார்த்தசாரதிக்கும் தாழ்வாரத்தில் ஒரு
போர்ஷனும் வீட்டின் பின்கட்டில் இடதுபக்கமாக ஒரு சமையலறையும்
கொடுக்கப்பட்டிருந்தது. தாழ்வாரத்தில் இன்னும் ஒரு இடம் தடுக்கப்பட்டு ஆபிசில்
வேலைசெய்யும்இளைஞனுக்கு வாடகைக்கு விட்டிருந்தார்கள். பின்கட்டுக்குப்
போகும் முன் இருக்கும் இரண்டு அறைகளிலும் இரண்டு குடித்தனங்கள், பதினொரு பேர்கள்
தேறலாம். புழக்கடையில் இரண்டு பாக்குமரமும், இருபது தென்னைகளும், பப்பாளி,
மாமரமும் இருந்தன. இரண்டு குளியலறைகள்; தூரத்தில் வீட்டு எல்லையில் இரண்டு அறை
கக்கூஸ்; பின்கட்டில் ஒரு கிணறு. அதைத்தான் ஐம்பது நபருக்குமேல்
நம்பியிருந்தார்கள். தாழ்வாரத்திற்கு நேரே எதிர்புறத்தில் மாடிப் படிகள். மேலே
முழுதும் ஒரு என்ஜினியர் குடித்தனத்திற்கு விடப்பட்டிருந்தது. அவருடைய வீட்டினுள்
நுழையாமலே மொட்டை மாடிக்குப் போய்விடலாம்.
பார்த்தசாரதியின் தகப்பனார் சாவோடு மன்றாடுபவரோடு
இருக்கப் பிடிக்காமல் தாழ்வாரத்தில் படுத்துத் துங்கிக்கொண்டிருந்தார். அவருக்கும்
எழுபது வயதுக்கு மேல் இருக்கும். அவருடைய மனைவி உள்ளேயிருந்து வந்தாள். சுவரைத்
தடவித் தடவிக்கொண்டே வந்தாள். "யாருடா பத்து' என்றாள், கையால் கண்களை ஒரு
விதமாகத் திரையிட்டுப் பார்த்துக்கொண்டே.
'நான்தான் கனகவல்லி'
“யார்
தினகரனா? உன்னைத்தான் நாலஞ்சு தடவை எங்கேன்னு
விசாரிச்சுட்டார்.
அவர்கள் எல்லோரும் பெரியப்பா படுத்துக்கொண்டிருந்த
அறையில் நுழைந்தார்கள். அறையின் மத்தியில் ஒரு அறுந்துபோன கட்டிலில் பெரியப்பா
கிடந்தார். வாயில் காப்பி இன்னமும் ஆப்படியே இருந்தது. தலைக்கு உயரமாக வைத்த
தலையணையில், வாயில் இருந்த காப்பி நன்றாகவே தெரிந்தது. எவ்வளவோ பினாயில், இன்னும்
என்ன வெல்லாமோ உபயோகித்தும் அறையில் ஒரு லேசான மூத்திர நெடி. இன்னும் ஏதோ ஒரு
மக்கிப்போன நாற்றமும் தேங்கியிருந்தது; அல்லது மக்கிப் போய்க்கொண்டி யிருக்கிற
நாற்றமா? அங்கு பின்னால் ஒரு சின்ன மேஜையில் வைக்கப்பட்டிருந்த கொஞ்சநஞ்ச
திராட்சைப் பழமும் இரண்டு ஆப்பிளும் ஒரு வெள்ளி டம்ளரில் பாலும் உயிரைக் கேலி
செய்வது போலிருந்தது.
63
அங்கு நிஜமாகவே சாவு சம்பவித்துக் கொண்டிருந்தது.
உறவுகளையும் சம்பவங்களையும் நிமிடங்களாக இல்லை மணிக்கணக்கிலோ ரொம்பப்
போனால்நாட்கணக்கிலோ எண்ணிக்கொண்டிருந்தது. பெரிதாக முற்றுப்புள்ளி வைக்க,
வெளியே வந்துவிட்டார் தினகரன். "தாங்காது
போலிருக்கே’’ என்றார், அவர் மொட்டை மாடிக்குப் போகும் போது. "எவ்வளவு நாளா
இருக்கு...” என்றான் பத்மநாபன்.
மேலே பார்த்தசாரதி பெண்ணுக்குப் பாடம் சொல்லிக்
கொடுத்துக் கொண்டிருந்தான்.“வா தினகரன்” என்றான்; தொடர்ந்து "பெரியப்பாவைப்
பார்த்தையோனோ” எனறான்.
"அதிக நாள் தாங்க மாட்டார் போலிருக்கே'
என்றார் தினகரன் உட்கார்ந்து கொண்டே. ஏதோ சொல்ல முடியாத பீதியை திடீரென்று
பெண்ணின் முகத்தில் பார்க்கவே "கீழே போ' என்றான் சாரதி. அதுவும் பை, ஸ்லேட்டு
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஓடியது.
தினகரன் அங்கு போடப்பட்டிருந்த பாயில் சாய்ந்து
கொண்டார். "பூட்ஸைக் கழட்டேன்' என்றான் சாரதி. பத்மநாபன் வேஷ்டி
எடுத்துக்கொண்டு வரக் கீழே போனான்.
'இதெல்லாம் என்ன கூத்து' என்றார் தினகரன்.
"எதெல்லாம்' என்றான் சாரதி.
'ஏதோ வர்ரோம் போறாேம்' என்றார் தினகரன்.
-"நம்மோட சாபக்கேடு- எதையும் ஆன்மரீதியா
கழிவிரக்கம் ஆக்கிடணும்' என்றான் சாரதி.
தினகரன் தலையைக் கைகளில் ஊன்றிக்கொண்டு சாரதியைப்
பார்த்தார். சொல்லு, கடைசிபட்சத்தில் எதுவுமே தங்கறதில்லையே, கடைசிபட்சத்தில்
வாழ்க்கையோட அர்த்தந்தான் என்ன?
'இதென்னடா தினகரா, மூணு குழந்தையையும் பெத்துக்
கொண்டு. வாழறதுக்குத்தான்” என்றான் சாரதி.
64
பதினைந்து ஆண்டுகளாகச் சிநேகிதம். ஆனல் எந்தத்
துறையிலாவது ‘வேவ் லெந்த்' சரியாக் அகப்பட்டுதா-படுமா ஊஹாம்.
"இப்படி ஒரு சிநேகிதம் அமைஞ்சுதே' என்றார்
தினகரன் வாய்விட்டு.
"அதனாலென்ன, எப்பப் பார் என்ன பேச்சு
வேண்டிக் கிடக்கு ஒருத்தர் முதத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டிருப்போம். மெளனமா
எவ்வளவு அர்த்தம் உருவாகும இந்த நட்சத்திரங்களைத்தான் பாரேன்.... மெளனமா... என்ன
ஆழமாப் பேசுது!'
“ஆமாம்-ஆமாம்.'
அவர் துங்கிப் போனார், இரவு ஒரு மணிக்கு அவருக்கு
விழிப்புக் கொடுத்தது. என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்து உட்கார்ந்தார்.
தென்னைகள் தங்களைத் சிலுப்பித் கொண்டிருந்தன. பார்த்தசாரதி கோவில் உச்சி விளக்கில்
ஏதோ ஒரு சாந்தம் நீர்த்துக் கிடந்தது. எங்கோ வெளியில் விடலையாகத் தொலைந்து பாடம்
கற்றுக்கொண்டது போல் - 'அதெல்லாம் ரகசியம் போல்-நட்சத்திரங்கள் கூட மெளனம்
சாதித்துக் கொண்டிருந்தன. எல்லாமே தான் மெளனம் சாதிக்கின்றன என்று ஆயாசத்துடன்
சொல்லிக்கொண்டார். எதையெல்லாமோ பிட்டுப் பிட்டு வைக்க வேண்டுமென்கிற வெறி அவரைத்
தொற்றியது, ஆப்பிளும், ஆரஞ்சும், நல்ல திராட்சையும் கேலியாகப் போவதை என்னவென்பது?
அடிவயிற்றிலிருந்து காறித் துப்பினார். அவர் சிகரெட் பற்றவைத்துக் கொண்ட போது
சாரதியும் பக்கத்தில் வந்து நின்றான்,அவனும் அவருடைய சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு
சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். அவர் படுக்கப் போய் அரைமணி நேரம்
கழிந்துவிட்டது. சாரதி மெதுவாகப் பார்த்தசாரதி கோவில்ப் பார்த்து ‘ணங்குணு’ தன்
முட்டிகள் செங்கல்லில் சப்திக்க மண்டியிட்டான். சிறிது நேரத்தில் அவனுடைய
கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணிர் வழிந்தது.
தினகரனுக்கு முழிப்புக் கொடுத்தபோது மணி ஏழு
இருக்கலாம். இன்னமும் சூரியனில் தங்க ரேக் போயிருக்கவில்லை. சாரதி காப்பியுடன்
வந்தான். “இதோ நொடியில் பல் தேய்ச்சுட்டு வர்றேன்” என்று கீழே சென்றார் தினகரன்.
பெரியப்பாவைப் போய் பார்க்கலாமா? என்று தோன்றியது. இருந்தும், காப்பி ஆகட்டும்
அப்புறம் பார்க்கலாம் என்று புழக்கடைப் பக்கம் பல் தேய்க்கப் போனார். மொட்டை
மாடியில் காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது "நான் உனக்கு ஒரு புதிர்
வச்சிருக்கேன்!" என்றான் சாரதி
65
காப்பியை சாப்பிட்டு முடித்தவர், பெரியப்பாவைப்
போய் பார்க்கும் எண்ணத்தை விடாது "எங்கே பத்து, கீழே போகலாமா?' என்றான்
தினகரன். "பத்து காய்கறி வாங்கப் போயிருக்கான்' என்றான் சாரதி. தொடர்ந்து
'என்ன புதிர்னு கேட்கலியே' என்றான்.
'சொல்லேன்' என்றார் தினகரன்.
'கம்யூனிஸ்டு கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே
பயங்கரமானவன்' என்றான், தொடர்ந்து 'எனக்கு நேத்திலிருந்து கடவுள்_பக்தி
ஆரம்பிச்சிருச்சு' என்றான். அவன் என்ன சொல்கிறான் என்றே அவருக்குப் புரிய வில்லை.
'இப்ப என்ன மாதிரியான விஷயத்திலே கெடந்து உழல்றே' என்றான் சாரதி.
தினகரன் மீண்டும் பெரியப்பாவைப் போய்
பார்க்கலாமா?' என்றார், சிறிது மெளனத்திற்குப் பிறகு. அவர்கள் பெரியப்பாவின் அறையை
அடையும்போது, பத்து அவருடைய வாயில் தங்கிப்போன காப்பியை பேசினில் வாங்க
யத்தனித்துக் கொண்டிருந்தான். எங்கேயாவது இந்த முயற்சியில் பெரியவரின்
இதயத்துடிப்பே நின்று விடப் போகிறது என்று தினகரன் பயந்தார், எல்லாம் முடிந்ததும்
கிட்டத்தில் போனார் தினகரன். கைகள் இரண்டும் குச்சியைப் போலிருந்தன. அவ்வளவு
ரத்தமும் சுண்டிப் போயிருந்தது. பேருக்குக்கூட கையில் மயிர் :இல்லை. எண்ணெய்
தடவியப்,பழுப்படைந்த குச்சிபோல், தோலிலிருந்து கைவரை அது காணப்பட்டது. அஆழ்
கைவிரல்களில் ஏதோ ஒன்று, புலப்படாத வகையில் தன்னை நிழற்சாயையாகப் பூசிக்கொண்டு
இருப்பதாகத் தினகரனுக்குப் பட்டது. கால்களும் அதே குச்சிபோன்று தான் காணப்பட்டன,
அங்கும், எப்போதோ அதில் தங்கி இருந்த வீர்யமெல்லாம் நிழலுரு கொண்டு விட்டதுபோல்
பட்டது. அந்த உடம்புக்கு உள்ள வீர்யத்தையே, அங்கு காணப்பட்ட நிழல் உறிஞ்சி
விட்டதாகப் பட்டது. திடீரென்று, தினகரனுக்கு அந்த நிழல் எதையோ எதற்காகவோ
கெஞ்சுவதுபோல் பட்டது. அவருடைய அடிவயிற்றிலிருந்து மேல் வயிறு வரை ஒரே
சுருக்கங்கள். மார்பில் ஓரிரு நரை மயிர்கள் தனித்து ஆடிக்கொண்டிருந்தன. வாய்
இருந்த இடத்தில் இப்போது இருள் மிகக்கொண்ட_ஒரு குகை தெரிந்தது. இதில்
தேங்கியிருந்த பழுத்துப்போன ஒரிரு பற்கள் அவரை அச்சுறுத்தின. கண்கள் குழிவிழுந்து
மண்டை பின் தள்ளி, அந்தச் சதைகளோடும் அது ஒரு மண்டை ஓடு போன்று காணப்பட்டது. அங்கு
சாவு பரவுவதை அவர் பார்த்தார். அதில் ஒரு எக்களிப்பு தெரிவது போலிருந்தது.
வாழ்வையே கற்பழிக்கும் உக்கிரம் அதில் தொக்கிட்டு நின்றது.
'சாவே' என்றார் தினகரன். ‘சாவே உன்னை என்னால்
மன்னிக்க முடியாது' என்றார் ஒரு முடிவார்ந்த நோக்குடன்!
'நீ யார்?' என்றான் சாரதி.
அவனையும் அறியாது சாரதியை அது ஒரு வாயிலாகத்
தேர்ந்தெடுப்பதை அவர் உணர்ந்தார்.
"என்னைக் கேட்டால்? வெட்கம் இருந்தால்
உன்னைக் காட்டிக்கொள்' என்றார் தினகரன் சாவைப் பார்த்து. "என்னடா சொல்றே
நீ" என்றான் சாரதி, "உனக்குப் புரியாது' என்றார் தினகரன்.
அன்று ஆபீசில்தான் மீண்டும் எதையோ சரியாகப்
பார்க்காமல் விட்டுவிட்டோம் என்று தினகரன் அங்கலாய்த்துக் கொண்டார். திடீரென்று
யார் வாயைத் திறந்தாலும் சாவு அவர்கள் வாயிலாக ஏதோ பேசுமோ, விட்டுவிடுவோமோ என்று
பயந்து, காதைத் தீட்டிக்கொண்டு, ஹிருதயத்தைக் கெட்டித்துக்கொண்டார். பயமாய்
இருந்தது. எங்கேயாவது ஓடிவிடலாமா என்று நினைத்தார். ஆனால் எங்கு ஒடுவது? எங்கு ஓடினாலும்
கூடவே எண்ணங்களும் தொடருமே? எண்ணங்களினால் தான் வாழ்க்கையே அமைகிறதோ? ஒரு ஆணும்
பெனும் புணரும்போதுகூட அங்கு எண்ண அலைகள் மோதத்தானே செய்கின்றன. எண்ணமற்ற புணர்தல்
எங்கே? எல்லாமே எண்ணங்கள் தாமே? எண்ணங்கள் எங்கிருந்து எவ்வாறு உதயமாகின்றன?
ம்ருத்யூகூட எண்ணம்தானே. நாம் காணும் உருவங்களுக்கும் பின்னால் எப்போதுமே
எண்ணங்கள் இருப்பதால் சாவுகூட எண்ணம்தானே?
திடீரென்று அவருக்குத் தண்டவாளங்களை விட்டு நிலை
பெயர்வது போன்ற எண்ணம் ஏற்படவே தன்னக் கெட்டித்துக் கொண்டார். ‘இதோ பார் சாவே'
என்றார், மீண்டும் அவர், "இதோ பார், சாவே பாதை மாறாதே' என்றார். அவரில் மெல்ல
ஒரு இளிப்பு பிரவேசித்தது. ஒரு கைமேல் பூசிக்கொண்ட நிழல் மீண்டும் சென்ட்ரலுக்கு
அப்பால் எங்கோ பீச் ரோடில் சிரித்துக்கொண்டு ஒடுவது போன்ற பிரமை!
சரியாகப் பனிரென்டு மணிக்குத் தன் வீட்டின்
பக்கத்து வீட்டுக்கு ஃபோன் பண்ணினார். ரொம்ப நேரம் மணி' அடித்துக்
கொண்டேயிருந்தது. அப்பா, யாரோ கடைசியில் ரிசீவரை எடுத்துவிட்டார்கள்.
"மேடம், நான்தான் தினகரன். பத்மாவைக் கூப்பிடறேளா?'
'நீங்க அடிக்கடி தொந்தரவு செய்றிங்க. உங்களுக்கும்
உங்க மனைவிக்கும் வேற வேலை கிடையாது."
‘'எதுக்கு இப்படிக் கோவிச்சுக்கிறேள். நாம யாரும்
எதையுமே தலையில கட்டிண்டு போகப் போறதில்லே.”
'மிஸ்டர் ... பாருங்க. உங்க வறட்டு வேதாந்தமும்
வெங்காயத் தத்துவமும் எங்களுக்கு வேணும். ஃபோனைக் கீழே வைங்க.." தொடர்ந்து
டொங்’ என்ற சப்தம். அவர் தோளைக் குலுக்கினார்.
அரைமணிநேரம்கழித்துமீண்டும் ஃபோன் பண்ணினார்.
'ஆல்ரைட் மேடம், இனிமே ரொம்ப அவசியம்னு மட்டும் ஃபோன் பண்றோம் இந்த ஒருதரம்
மட்டும் தயவு செய்து......'
68
“ஆல்ரைட்...செத்தே
இருங்கோ லைன்லே. கூப்பிடறேன்.”
பத்மா வந்தாள்.
"ஹலோ.”
"நான்தான் தினகரன்.”
'பெரியப்பாவுக்கு
எப்படியிருக்கு...”
'கவலைக்கிடம்தான். நான்
இன்னும் இரண்டு நாள் கழித்து வர்ரேனே.”
எங்கேயாவது ரிஷிகேஷ்
ஹரித்வார்னு கம்பி நீட்டிட்டேளோன்னு பயந்தேன்.
முன்னே அடிக்கடி வேலையை
மாத்தினாப்பிலே முடியாது. எங்கேயாவது ஒரு இடத்தில் உக்காந்துக்க முயற்சி
பண்ணுங்க...!
"நிச்சயமா - கடவுள்
சத்தியமா - அப்படியெல்லாம் ஒன்னும் இல்லே -
கல்யாணத்துக்கு முன்னலே
நாம எவ்வளவு கவனத்தோட எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் - இப்ப நமக்கு என்ன ஆயிடுத்து.”
"பணம் அன்பே,
பணம்தான் காரணம். செத்துக்கிட்டிருப்பவர் வட்டிக்குவிட்டு வட்டிக்குவிட்டு
நிறையப் பணம் பண்ணியிருக்கார். தலையணைக்குக் கீழே பார்த்தேளா? உங்களுக்கு எங்கே
அவ்வளவு சாமர்த்தியம் இருக்கப் போறது?
'எனக்கு வேண்டாம்.'
"பிணம்கூட பணத்தில்தான்
வேகும்.”
'போதும் நிறுத்து. உன்
பேச்சைக் கேட்டு அச்சானியமா இது என்ன
தலைவேதனை என்று
வீட்டுக்காரி வந்துடப் போறா.'
"சரி.
ஒழுங்கா வேலைக்குப் போங்கோ."
"நிச்சயமா! வந்து.
குமாரிடம் கொஞ்சம் துணிமணி கொடுத்து அனுப்பேன்.”
''சாயந்திரம்
அனுப்பறேன்."
69
அன்று இரவு மீண்டும் அவர்
தேரடித் தெருவில் அந்தவீட்டுக்குப் போனபோது டாக்டர்
வந்திருந்தார். சாரதியும், பத்மநாபனும், அவர்களுடைய தகப்பனாரும்
அங்கு இருந்தார்கள். அவர்களுடைய் தகப்பனார் மஃப்ளர் கட்டிக்கொண்டிருந்தார்.
அடிக்கடி இருமிக்கொண்டிருந்தார். தினகரனை வெறித்து வெறித்து இரு முறை
பார்த்தார். ஆனால் பேசவில்லை. கையில் பழைய ஸ்வராஜ்யா' ஒன்றைச் சுருட்டி
வைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி கனகவல்லி வந்து சுவர் ஓரமாக நின்றாள்,
எல்லோருமே டாக்டரைப்
பார்த்துக்கொண்டு ஒருவித வெறுமையில் உழன்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடையே
டாக்டர் சொல்லப் போவதை எதிர்பார்ப்பதில் ஒரு காத்திருப்பு தெரிந்தது. ஆனால்
தினகரனைத் தவிர மற்ற எல்லோரும் நாடகம் முடிந்துத் திரை கீழே விழுவதற்காகக் காத்திருந்தார்கள். தினகரனுடைய
கவனம் மீண்டும் குகை போன்ற அந்த வாயில் ஆழ்ந்தது. அங்கு ஏதோ நாற்றம் குடிகொண்டிருக்கும் என்று பட்டது. அதற்குமேல் எண்ண ஓட்டம் நிலை பெயர மறுத்தது. அவருடைய
கண்களில் இவருடைய கவனம் விழுந்தது.
"குழிந்திருக்கிறது
என்று சொல்லிக் கொண்டார். வயோதிகத்தில் ஏற்படுவதுதான். இதில் என்ன பெரிய
விஷயம் காண்கிறாய் என்று தன்னையே கேட்டுக்கொண்டார்.டாக்டர் பரிசோதிப்பதை
நிறுத்திக்கொண்டார். பரிசோதனை குழாயையும் ஊசிகளையும் சற்று உயரமாகயிருந்த, கூடவே
கொண்டு வந்திருந்த தோல்பெட்டியில் வைத்து மூடினார். 'இனிமே இவர் கண் - முழிக்க
மாட்டார். அநேகமா இன்னிக்கி ராத்திரி இல்லே, நாளை காலைக்குள்ளே உயிர் போயிடும்'
என்றார்.
வெளியே வந்தவர் என்னுடைய
பீஸ்' என்றார். சாரதி மீண்டும் உள்ளே பெட்டிப் பக்கம் போன். அவனுடைய தகப்பனர்
இன்னமும் சலனமற்று உட்கார்ந்திருதார். அவர் அங்கு பேசப்பட்டதைக் காதில்
வாங்கிக் கொள்ளவில்லை. பணத்தை எடுத்துக்கொண்டு வந்த சாரதி, ! கிழவனார் காதில்
நடந்ததை இரைந்து கத்தினான். அவர் :
70
என்னமோபோல் தலையை
ஆட்டினார். மீண்டும் அப்படியே வெறித்து உட்கார்ந்திருந்தார். தலையிலே
போட்டுக் கொண்டு சாரதி வெளியே வந்தான். "அடுத்து” என்றான் . சாரதி.
"அப்படியெல்லாம்
சொல்லக் கூடாது” என்றார் டாக்டர் சிரித்துக்கொண்டே.
“தவிர்க்க
முடியாததைத்தானே சொன்னேன்” என்றான் சாரதி.
"இருக்கட்டுமே...
உயிரை மீட்க எவ்வளவு கஷ்டப்படறோம் - இன்னமும் எதைப்பத்தி எல்லாமோ என் துறையில்
தினமும் மூணு மணி நேரமாவது படிக்கிறேன்.”
"ஏன் டாக்டர்”
என்றார் தினகரன். கடைசிபட்சமாக சாவுக்கு என்ன காரணம்?"
“ரத்த ஒட்டம் குறைஞ்சு
போயிடறது. வச்சுக்குவோமே."
"அது இல்லே டாக்டர்.
கடைசிபட்சமாக சாவை எதுவுமே - ஜெயிக்க முடியறதில்லே இல்லையா?”
"ஆமாம்”
அதனால அதனிடம் திண்மையான
ஒரு குனம் எக்காலத்துக்கும் அழியாதது ஒன்னு இருக்கவேணும் ... இல்லையா ?”
"ஆமாம்”
டாக்டர் சிரித்தார்.
“இன்னமும் எல்லாமே, இப்படியா அப்படியான்னுதான் இருக்கு. பரவாயில்லை, இதிலெல்லாம், ரொம்பவும் ஈடுபாடு
கொண்டிருக்கிறீர்களே நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?”
-நீங்கள் என்னவாக
இருக்கிறீர்கள்? எங்கேயாவது இப்படிப் புதுசாக ஏதாவது
கேள்விகளே எடுத்துக் கொண்டு போனால் அங்கெல்லாம் சிறிது நேரத்திலேயே இந்த மாதிரி
கேள்விகளை அவர் எதிர்கொண்டிருக்கிறார். தோற்றத்தைக் கண்டு மயங்கியவர்கள், அவருடைய
சாதாரண வாழ்க்கை நிலையைக் கண்டு சுருங்கி விடுவார்கள். இப்போதும் அதுதான் ஏற்படப்
போகிறது என்று நம்பினார். அவருடைய பதிலக் கேட்டவுடன் அவரை ஏதோ தேடுவது போல்
பார்த்து "ஹோ! அப்படியா?” என்ற டாக்டர், "வரட்டுமா?” என்று பேச்சுக்கு
முற்று புள்ளி வைத்தார்.
71
டாக்டர் போனதும்
"எப்போதும் உன்னைக குறைச்சுக்காதே. எக்காரணம் கொண்டும்' என்றான் சாரதி.
"இப்ப என்ன
ஆயிடுத்து” என்றார் தினகரன்.
"அவரிடம் போய்
எல்லாச் சாவுக்கும் ஒரே காரணம் கேட்கிறாய்.”
“இல்லே, நான் அப்படிக்
கேக்கலே! கடைசியா அது ஜெயிக்கும் விதத்தில், ஒரு முக்கியமான தன்மை இருக்கும்
என்றேன்" என்றார் தினகரன்.
“அவ்வளவு பெரிய
விஷயங்களையெல்லாம் தத்துப் பித்துன்னு கேட்டு,நீங்க என்ன பண்றிங்கன்னு கேள்வியை
வாங்கிக் கட்டிக்கிறே - எனக்கென்ன?”
“எண்ண ஓட்டங்களுக்கு,
பெரிய எண்ண ஓட்டங்களுக்கு ஒரு பூ மணப்பின் குணம் ஆண்டு. யாருமே அதை அசட்டை
செய்துவிட முடியாது” என்றார் தினகரன்.
"மண்ணாங்கட்டி,
உக்கிரம் வீர்யம் உண்டுன்னு வேணுமானா சொல். தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டியில் பூ
மணத்தையா நீ பார்க்கிறே. சுத்த கிறுக்குடா நீ.
'வாஸ்தவம்தான்' என்று
சிரித்தார் தினகரன்.
பத்மநாபன் இன்னமும்
வந்திருக்கவில்லை. சாரதியும் தினகரனும் காப்பி சாப்பிட வெளியே கிளம்பினார்கள்.
உன்னைப் பார்க்காமலேயே
போய் விடுவார் போலிருக்கு' என்றான் சாரதி.
“யார் கண்டது, இனிமேல்
நினைவு வந்தாலும் வரலாம்.” என்றார் தினகரன்.
எனக்கென்னமோ
நம்பிக்கையில்லை' என்றான் சாரதி. "இவர் போனபிறகு மீண்டும் ஜென்மம் எடுப்பாரா?
என்றார் தினகரன்.
"நம்
சித்தாந்தப்படி, அப்படித்தான். ஆன்மாதான் முக்கியம். அது வளர்ச்சி அடைந்து
கொண்டேயிருக்கும் என்கிறார்கள்.
'ஆன்ம வளர்ச்சின்ன என்ன?'
என்றார் தினகரன்.
அப்படின்னா?'
72
'ஆன்ம வளர்ச்சி என்பது
எத்தன்மை வாய்ந்தது:”
'பிறவிக் கடல் என்பது
துக்கசாகரம். இறப்பும் துக்கமயம் தான். அதனாலெல்லாம் இதையெல்லாம், கடந்தே ஆக
வேண்டும். அதைக் கடக்க எடுத்துக்கொள்ளும முயற்சி தான் ஆன்ம சோதனைக்கு - இல்லை ஆன்ம
வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது.'
“இன்னொரு தரமும் இவர்
மனிதனாகவே பிறப்பாரா”
"அது பெரும்பாலும்
அவரவர் தன்னோடு இட்டுத் செல்லும் வாசனாவைப் பொறுத்தது. அதோடு எப்பிறவி
எடுத்கிறோம் என்பதும் இதில் முக்கியமில்லை. முடிவற்ற பயணம் இது.”
“அது என்ன
பிரயாணமோ?" என்றார் தினகரன்.
“நீ ஏன் இப்படி
எல்லாத்துக்கும் ஆயாசப்படறே - வேண்டாததை எல்லாம் போட்டு ஏன்
இப்படி மண்டையைக் குழப்பிக்கிறே.”
“எல்லாரும்
கேட்டாச்சு - எல்லாருக்கும் பதில் சொல்லியாச்சு - பலசமயங்களிலே அசடும்
வழிஞ்சாச்சு-ஆனால் என்ன செய்வது? பெரிய விஷயங்களைப் பார்த்துப் பார்த்துத் தலை
குனிஞ்சு நிக்கிறதைத் தவிர நான் வேறு என்ன செஞ்சிருக்கேன். நான் என்னையே இதுல
அழிச்சுக் கொண்டு தானே இருக்கேன். எனக்கு என் கையாலேயே நான் தீ அல்லவா
வச்சுக்கிறேன். அது என்ன அவ்வளவு சுலபமா? இப்போ, இந்தக் கால கட்டத்தில் ஏல்லா
இடத்திலேயும் சாவை அல்லவா நான் பார்த்துக்கிட்டிருக் கேன்.”
"ஒஹோ, ஏதாவது
கண்டுபிடிப்போம்னு இப்போ வந்திருக்கே அடப் படுபாவி' என்றான் சாரதி.
ஒருவித குற்ற
மனப்பான்மையுடன் தலையை அசைத்தார் தினகரன். “ஆனா போடா நமக்கு அவன் -சாவு- ரொம்பவும்
பெரியவன்” என்றார் தினகரன்.
“பார்க்கப் போனா
ரொம்பவும் அல்பமா இல்லை”, என்றான் சாரதி. "தனக்கும் அப்படித் தோன்றுவதுண்டு”
என்றார் தினகரன். -
73
“போகலாமா?” என்றான்
சாரதி.
அவர்கள் கிளம்பினார்கள்.
அவர்கள் வீட்டை அடைந்த போது பெரியப்பா எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். உடம்பு
மட்டும் நடுங்கிக் கொண்டிருந்தது. “வா” -- என்றாள் கனகவல்லி. “உன்னைப்
பார்க்கணும்தான் காத்துக்கிட்டிருக்கிறார்.”
"யாரு தினகரனா?'
என்றார் பெரியப்பா.
குரலில் இவ்வளவு தெளிவா!
தினகரனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
"எப்பவோ பார்த்தது.
செளக்கியமா இருக்கியா? ஸ்ரீரங்கத்தில், அப்பு அடிக்கடி வந்து பார்த்துக்குவான்.
பிராவிடன்ட் ஃபண்டு விசயமா டெல்லி போயிருக்கானுமே?”
“ஆமாம்”
"அவனைப்
பார்த்தாச்சு, நிறைய பேர்களைப் பார்த்தாச்சு. எங்கே உன்னப் பார்க்காமல், உன்னையும்
கூட்டிண்டிடுவேனோன்னு பயம். உனக்கு அதெல்லாம் புரியாது. உன்னையும்
பார்த்தாச்சு. செளகரியமா இருப்பே. எத்தனை குழந்தைகள் .”
'மூணு'
‘பள்ளிக்கூடம் போரதுகளா?'
“ம்”
உட்காரு! நிக்கிறியே'
"பரவாயில்லை!' அவர்
அங்கு போடப்பட்டிருந்த மோடாவில் உட்கார்ந்தார். அப்போதுதான் அதைக் கவனித்தார்.
அவருடைய தொண்டை, சட்டை உரித்த பாம்பின் சுருள் போன்று பெரிய கோடாகத் தாங்கிக்
கொண்டிருந்தது. அந்த இடம் ஒரு காலத்தில், இடைவெளி அற்று சேர்ந்து
இருந்திருக்கிறது: அவருக்கு, முதலில் கண்ட கனவின் தென்னை மரங்களும், அவைகள்
நட்சத்திரங்களை மறைத்துக் கொண்டிருந்த விதமும் முன்னால் நீந்தின.
‘சாவு என்பது - இடைவெளி
என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டார்.
74
“என்ன என்னையே
பார்க்கிறே?' என்றார் பெரியப்பா.
"ஒன்றுமில்ல” என்று
அசடு வழிந்தார் தினகரன்.
"நானும்
தைரியசாலிதான். நேரப் போவதைப் பார்த்துப் பயம் இல்லை, வாழ்ந்தாச்சு. இருந்தும் ஏதோ
பரப்பரப்பு உண்டாகிறது?"
அவருக்கு என்ன தைரியம்
சொல்லுவது என்று தெரியாமல் விழித்தார் தினகரன்.
"இன்னும் ஒரு
பத்துநாள் கோவில் குளம்னு போய், எல்லோரையும் பார்த்துப் பேசி சந்தோஷ்மா இருக்கிற போது பொட்டுனு போயிடனும் என்று தோன்றுகிறது” என்றார். தொடர்ந்து,
"அல்பத்தனமா இல்லை' என்றார்.
"இதில்
அல்பத்தனமென்ன இருக்கு? நியாயமான ஆசைதானே' என்றார் தினகரன்.
“ஏதோ சொல்றே? _ ஆனா -
எங்கே முடியப்போறது. ஆனா எத்தனை காலம் இப்படியே படுத்துண்டு
கிடக்கிறது. விளையாட்டா ரெண்டு வருஷம் ஆயிடுத்து. எல்லோருக்கும் பாரம்.
போய்ச்சேர்ந்தால் சரிதான்.”
அவர் கண்களை
மூடிக்கொண்டார். தலையணையில் சாய்ந்தார். பிறகு அவர் கண்களைத் திறக்கவேயில்லை. அந்த
வார்த்தைகள்கூட, அவர் பேசியது, கடைசி வார்த்தைகளாகவே அமைந்தன. அன்று இரவு
12-45க்கு அவர் உயிர் பிரிந்தது.
தினகரன் கடைசிவரை அவருடைய
பக்கத்தில்தான் உட்கார்ந்திருத்தார்.
இடைவெளியை உண்டாக்கி
இருந்த பாம்புச் சட்டை போனற தொண்டைத் குழாயை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
அங்கு, மூச்சு பொட்டுகளாகத் தங்கி சிறிது சிறிதாக உயிர்த்துக்கொண்டே இருந்தன.
கடைசிவரையிலும் அவர் அந்த மோடாவைவிட்டு அகலவில்லை. சாரதி வந்து இரண்டு மூன்று முறை
சாப்பிடக் கூப்பிட்டான். அவர் ஒரேயடியாக நிராகரித்து விட்டார்.
"எத்தனை நாழி
இப்படி உட்கார்ந்திருக்கப் போறே?” என்றான் சாரதி.
75
"இன்று இரவு
முழுவதும்தான்" என்றார் தினகரன்.
“உனக்கு ஒன்றும்
புலப்படப் போவதில்லை” என்றான் சாரதி.
"பரவாயில்லை”
என்றார் தினகரன்.
பாயை எடுததுக்கொண்டு
போகும்போது, “ஏதாவதுன்னா என்னைக் கூப்பிடு” என்றான்.
“சரி"
முதல் இரண்டுமணி நேரமும்
அவருக்கு ரொம்பவும் நிராசை ஏற்படுத்துவதாக அமைந்தது. சின்ன பல்புதான் எரிந்து
கொண்டிருந்தது. இருந்தும் வெளியே படுத்துக் கொண்டிருப்பவ்ர்கள் வெளிச்சம் கண்ணைக்
குத்துகிறது என்று சொல்லவே, இருந்த ஒரு ஜன்னல் கதவையும் சாத்தி விடும்படி ஆகிவிட்டது.
முதலில் அங்கு
தங்கியிருந்த சிறுநீர் நாற்றம் கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. கொஞ்ச நேரத்தில் அதுவும்
புழகிவிட்டது. பார்த்தசாரதியும் பத்மநாபனும சேர்ந்து பைண்ட் செய்த் ருஷ்ய் சினிமா
உலகத்தைப்_பற்றிய புஸ்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிக்கொண்டு இருந்தார்.
சில சமயங்களில் அவரையும் அறியாது, கண் மூடிக் கிடக்கும் பெரியப்பா மீது கண்கள்
சென்று லயிக்கும். இன்னமும் பாம்புச் சட்டைக் கணக்காது நீண்ட தொண்டைச் சதை முணுக்
முணுக்கென்று விதிர்த்துக் கொண்டிருந்தது. ‘இடைவெளி' என்று முனகிக்கொண்டார் ஆனால்
அப்போதும் ஒன்றும் புரியவில்லை. அந்த முணுக்முணுக்கில் எங்கோ சாவு தன்ன
நிர்ணயித்துக் கொள்ளப் பிரயத்தனப்படுகிறது என்று நினைத்தார். படுத்திருப்பவர்
வரையில் எவ்வளவோ காலம் காத்திருந்து, இப்போது தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது,
மனிதன் சாவைக் கடக்க வேண்டும் என்றால் தன்னைச் சூழ்ந்திருக்கும் காலத்தையும் கடக்க
நேரிடுமோ என்று நினைத்துக்கொண்டார். ஆனால் மனிதன் காலம் என்பதையே ரொம்பவும்
அனுபவித்து அனுபவித்துத்தான் கற்பனை செய்திருக்கமுடியும். கண்ணுக்கு நேரே காலம்
காலமாகக் கிழடு தட்டுவதை, திடீர்னு போவதைப் பார்த்துப் பார்த்துத்தான் அவன் காலத்தைக்
கற்பித்திருக்க வேண்டும். காலத்தில் ஒரு விதி
75
அமைப்பு தெரிந்தது.
அப்போது அவருடைய அகக் கண்களில், ஒரு துல்லியமான உணர்வு ஏற்பட்டது. சாவுக்குத்
காலம் என்பது ஒரு துணைப்பொருள் என்பதே அது. இட்லி சாப்பிடும் குழந்தை சர்க்கரை
கேட்பது போன்றதுதான் சாவுக்குக் காலம் என்பது. அதற்கு மேல் என்ன? இன்னும் ஒரு
கேள்வி? ஏன் காலம் தேவைப்படுகிறது? சாவுக்குக் காலத்தின் துணை ஏன்?
ஆறுமணியிலிருந்து பத்துமணி வரை அவர் இந்தச் சிந்தனையில் ஈடுபட்டிருந்தார்.
கடைசியாக வைகறை போன்று ஒர் எண்ணம் பளிச்சிட்டது. 'இது ரொம்பவும் சுலபம்' என்று
சொல்லிக்கொண்டார் தினகரன்.
'கடைசிபட்சமாக விஷயம்
இவ்வளவுதான் - சாவு வாழ்வை ரொம்பவும் மதிக்கிறது' என்று சொல்லிக் கெர்ண்டார்.
‘அப்படின்னா' என்று கேட்டுக்கொண்டார். புரியவில்லை. வாழ்வு என்று ஒன்று
ஏற்பட்டபின் அதனுடைய கதியில் அது இயங்குவதால் சாவு காத்திருக்க வேண்டியதாகிறது.
"மண்ணாங்கட்டி.
அறையிலேயே வந்து கவ்விண்டு போயிடறது. இருபது வயதுல ஒருத்தன் தூக்கு மேடைக்குப்
போயிடறான். அதுவும் சாவுதானே?"
ரொம்பவும் கஷ்டப்படடு
‘சாவு வார்த்தை ரூபம், எண்ண ரூபங்களும் எடுக்கலாம்' என்று சொல்லிக்கொண்டார்.
“விவரி"
'இரு. ரொம்பவும்
சுலபமாக்கித் தருகிறேன் இந்த எண்ணத்தை.’
'வங்கியைக் கொள்ளை
அடிக்கணும்னு நினைக்கிறே? ’
"சரி...ம்...சொல்லு'
‘வங்கிக் காவலாளியைச்
சுட்டுக் கொன்னுடறே’
தூக்கு மேடை!
வாஸ்தவம்தான். ஆனா நீயும் நானும் போறோம். நான்தான் கொல்றேன். ஆனா நீ தூக்கு
மேடைக்குப் போனால்?
|
77
'யார் நீ’ என்றார்
தினகரன். பிறகு அந்தமாதிரி இடத்துக்குப் போனதே ஒரு சாவு ஆசைதான்' என்றார்.
'அதற்குச் சம்பந்தமே
இல்லாது அங்கு கார் ஒட்டிவரும் ஒருவன் கைரேகைகளைப் பிணத்தின்மேல் விட்டுத்
தூக்குக்குப் போகிறான்-அப்போ?’
'யார் நீ - அவனிடமும் ஒரு
சாவு ஆசை ஒளிஞ்சுண்டு இருந்திருக்கும்’ என்றார் தினகரன்.
"அப்படியா, இல்லை.
நான்தான் அவனைத் தேர்ந்தெடுத்தேனா?”
"யார் நீ"
'இன்னமும் ஏன்
கேட்டிண்டிருக்கே?’
‘......’
'இப்போது, இவருக்குப்
பதிலாக உன்னைக்கூட நான் இட்டுச் செல்லலாம் அல்லவா?’
ரொம்பவும்
சட்டென்று ‘இவர் என்னைப் பார்த்துடார்' என்றார் தினகரன்.
'ஏன் உயிர்மேல் உனக்கு
இவ்வளவு ஆசை?
‘அதுதான் தர்மம்'
'எதையுமே
அர்ப்பணிப்பதுதான் தர்மம். பெரிய சுழலில் எதிர்நீச்சல்
போடறயே?
தனக்கு என்னவாகி விட்டது
என்று தினகரன் பயந்தார். ஒன்றும் புரியவில்லை, அன்று ஜூவில் தனக்கு ஏற்பட்ட
அனுபவத்திற்குப் பிரபஞ்ரீதியில் எதிர்ப்பு இருக்கிறது என்று பயந்தார்.
குணங்கள் இழந்து போகும்
விதத்தைச் சாடியிருப்பது அதற்குப் பிடித்தமில்லாது போயிற்றா? அப்படித்தான் இருக்க
வேண்டும்.
அதனால்தான் அது இவரைப்
பயமுறுத்துகிறது என்று நினைத்தார்,
78
சாரதிகூட கடவுள்
நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது என்கிறான் .
உண்மையிலேயே எனக்கு
நம்பிக்கை இல்லையா? அதனால்தான் தவிக்கிறேனோ? எது எப்படி ஆயினும் இன்றோடு அதைப் பேச
விடுவதில்லை என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டார். அந்தப் பெரிய
தத்துவத்தைத் தானே விளித்துப் பேச வேண்டும் என்று நினைத்தார்.
சரியாகப் பத்து ஐம்பத்து
நான்கிலிருந்து பெரியப்பா கண் விழிப்பதும் மூடுவதுமாக இருந்தார். முதல்தரம் கண்
விழித்தபோது, கண் இமைகள்கூடக் கொட்டாமல் அவர் பத்து நிமிஷத்திற்கும் மேலாக
இருப்பதாகத் தினகரன் நினைத்தார். எல்லாம் நிலைத்தே விட்டதா? இல்லை என்பதுபோல்
சட்டை உரித்த இடம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் வேகம்தான் குறைந்து
விட்டிருந்தது. நிலைத்த கண்கள் மீண்டும் மூடிக் கொண்டன. அவர் ஏதோ
கிரகித்துக்கொள்ளப் பாடுபடுகிறார் என்று நினைத்தார். அந்த நினைப்புகளில் அங்கு
ஏதோ புரிபடாத சம்பாஷணையே நடந்துகொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. என்னவாக
இருக்கும். பதினொன்ருரை மணிவாக்கில் அவருடைய கண்கள் இன்னும் ஒருதரம் திறந்துகொண்டு
எங்கோ லயித்தது.
"பெரியப்பா” என்றார்
தினகரன் மெதுவாக. ஊஹீம். அவருடைய வார்த்தைகளே அவர் கிரகித்துக் கொள்ளவே இல்லே.
ஆனால் என்னமோ அரூபமாக எதனுடனே சம்பாஷணை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்று மட்டும்
பட்டது.
‘என்னவாக இருக்கும்?’
'என்னவாகத்தான் இருந்து
போகட்டுமே. என்றென்றும் அதெல்லாம் புரியாது.’
‘உன்னுடைய குரலில்
அவ்வளவாக நம்பிக்கையில்லையே?’
'என்னைப் பற்றி எனக்குத்
தெரியும்! உங்களைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியாது
79
'நமக்குள்ளே எதற்கு
தர்க்கம். நீ யார்? தயவுசெய்து சொல்லேன்?’
‘அப்படி வா வழிக்கு.
உன்னை மன்னித்து விட்டேன். உன் காலம், நிஜகாலம் வரும்வரை நான் காத்திருக்கிறேன்!’
"அப்படியானால்
விபத்தில் சாவு என்பதெல்லாம் அங்கு ஏதோ சம்பவிக்க இருந்ததைத் தடுப்பதற்குத் தான?’
‘எப்படி வேண்டுமானாலும்
வைத்துக்கொள்ளேன்.'
அதோடு அந்தப் புரியாததோடு
சம்பாஷணை முடிவு பெற்றது. அவர் பெரியப்பாவைக் கவனிக்கலானார். மூச்சுக் காற்று
உடம்பில் எங்கெங்கெல்லாமோ இடம் தேடிக் கொண்டிருந்தது. ரொம்பவும் மெல்ல மெல்ல, ஒரு
எறும்பு கணக்காகித்தான் ஊறிக்கொண்டிருந்தது. அதன் கதியில் ஒரு நிராசை தொக்கி
நிற்பது தெரிந்தது. அவர் நினைப்பதினலா? அதில் ஒரு ஆயாசம்கூட இருப்பதாகப் பட்டது.
இன்னும் எதற்கு' என்று பெரியப்பா வேக வேகமாக விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்க
வேண்டும். ஆயாசமும் மெல்ல மெல்ல மெலிந்து, மூச்சு ஆங்காங்கே துகள்களாகிக்
கொண்டிருந்தது. "பெரியப்பா” என்றார் தினகரன். மீண்டும் அவரிடம் ஒரு
கையாலாகாத்தனம் பிரவேசித்தது. ஒன்னுமே செய்ய இயலாது என்பதை இனங்கண்டார்.
பனிரெண்டரை மணிக்கு அவருடைய கண்கள் மீண்டும் திறந்தது. வேகமாக, ரொம்பவும் வேகமாக
இங்கும் அங்கும் சுழன்றது. உடம்பில் மெல்ல ஒரு விதிர்ப்பு உண்டாயிற்று. அது
நிற்காமல் கூடி இரு கட்டத்தில் தூக்கித் தூக்கிப் போட்டது. அந்த உடம்பு
முறுக்கலையும், வக்கரிப்பையும் பார்த்து அவர் தன்னிடத்திலிருந்து எழுந்துகொண்டார்.
‘போறது' என்று மீண்டும்
ஒரு குரல் கேட்டது. அவர் செயல்ற்று நின்று கொண்டிருக்கும்போதே வக்கரிப்புகள்
முறுக்கல்கள் ஒரு உத்வேகத்துடன் ஒடுக்கம் அடைந்தன. கடைசியாகத் திறந்த கண்கள்
நிலைத்துப் போனபோது அவர் உடம்பில் மூச்சுக் காற்றைக் காண விழைந்தார்.
‘வாசல் பக்கத்திலிருந்து
எப்படி?’ என்று ஒரு குரல். "அவர் மூலம் நான்தான் உன்னை இங்கே கூப்பிட்டேன்'
என்றது. பிறகு சாவு வெளியேறிவிட்டது.
80
அரைமணி நேரம்
செய்வதறியாது அவர் மோடாவில் உட்கார்ந்திருந்தார். பிறகு பார்த்தசாரதியை
எழுப்பு வதற்காக மொட்டை மாடிககு விரைந்தார்.
* * *
பதினைந்து நிமிடங்களில்
அந்த வீட்டில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட உருவங்கள் அந்த
அறைவாசலில் கூடிவிட்டன. கனகவல்லி நின்ற நிலையில் எங்கேயாவது பழையகால
வழக்குப்படிப் பிலாக்கணம் பாட ஆரம்பித்து விடுவாளோ என்று பயந்தார் தினகரன்,
ஆனால் நல்ல காலம் அவள் அப்படியெல்லாம் ஒன்றும செய்துவிட வில்லை
பார்த்தசாரதி சைக்கிளில்
தந்திக்காக ஓடினான். அவனுக்கு தான் அவர் சேர்த்து வைத்தது எல்லாம்.
பணத்தேவையை இவன் ரொம்பவும் அதிகப்படுத்திக் காட்டிக்கொள்வதாக
அவர் நினைத்தார். இவரைவிட அவன் எவ்வளவோ பொறுப்புள்ளவன். தான்
இப்படி நினைத்ததாகப் பத்மாவிடம் சொல்லிவிடக் கூடாது. "பின்னே எல்லோரும்
உங்களைப் போல அசடாகவா இருப்பா' என்று கேலி செய்வாள்.
காலப் பத்துமணி வாக்கில்
உறவினர்கள் என்று யாரோ வந்தார்கள். இளநீர்கள் வந்தன. பாடை வந்தது. மந்திர
பலத்துடன் வாத்தியார் வந்தார். எல்லாமே துரிதகதியில் தட்சண்யம் பெற்று,
ஒரு உத்வேகத்துடன் தூக்கப்பட்டு ஓட்டமும் நடையுமாக,
பாடைக்குள் கிடந்தவிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு அவர் செல்ல
ஆர்ம்பித்தார். தென்னைகளின் பின்னணியில் அவர் புகைய ஆரம்பித்ததும், இரக்கத்திலும்,
துக்கத்திலும், கையாலாகாத்தனத்திலும் தினகரனுடைய பற்கள் கிட்டித்து சூழ்நிலையை
கிரகித்துத் கொள்ளப் பாடுபட்டன. புருவங்கள் இரண்டும் குறுகி
இழுத்துக்கொண்டது, அவரையும் அறியாது ஊரில், காவிரி வெண்ணாற்றில்
பாலம் கட்டிக்கொண்டிருந்தபோது பெரியப்பா தினசரியுடன்
மேற்பார்வை இடச்சென்றது ஞாபகம் வந்தது. தினகரன் அப்போது
எட்டாவது படித்துக் கொண்டிருந்தார்.
o
81
இவர், "பேப்பர்
எதுக்கு பெரியப்பா” என்றார்.
'அடி செருப்பாலே.
வாண்டுப் பயலே எனக்குப் பேப்பர் படிக்கத் தெரியாதுன்னு யாருடா உனக்கு
சொன்னது.”
"அப்பாவும்,
பெரியப்பாவும் பேசிண்டு இருந்தா பெரியப்பா.”
"ஓஹோ அப்படியா
சங்கதி. வந்து விசாரிச்சுக்கறேன்.”
இரண்டு நாள்
கழித்து..... .
"ஏண்டா என்னடா
பெரிசா ஆங்கிலத்திலேயே படிச்சுட்டா பெரிய இதுவோ! உங்களைவிடக்கூட நான் நன்னா
வேலை செய்வேன்டா.”
“என்ன வேலை” என்றார்
அப்பா சிரித்துக்கொண்டே.
அவர் ஒரு கணம்
திக்கித்தார். பிறகு "ஹான்! கேட்டியே ஒரு கேள்வி போனாலும் போறதுன்னு”
என்றார், சிரிக்க ஆரம்பித்தார். 'ஏன்டாலே அந்த வேலையில் நான் உன்னைவிட
'ஷுபீரியர்' என்று சொல்லிகொண்டா உனக்கு வெட்கமா இருக்காது. நீ
ஆம்பிள்ளே தானேடா.”
"என்ன வேலை
பெரியப்பா. ‘ஷுபீரியர்' “ஷுபீரியர்'ன்ன என்ன பெரியப்பா?”
"அடி செருப்பாலே!
வாண்டுப் பயலே. உனக்கென்னத்துக்கடா இதெல்லாம்?"
“தினகரா, பேப்பரை
எடுத்துண்டு போய் என்ன பண்ணுவேன்னு கேளுடா" என்று சிரித்தார் பெரியப்பா.
(அப்பாவின் சொந்தத் தமையனார்).
"என்ன பண்ணுவேனா!
படிப்பேன்.”
"உனக்குத்தான்
படிக்கத் தெரியாதே பெரியப்பா.”
"அடி
செருப்பாலே படம் பார்க்கிறேன்."
"யாராவது என்ன
சேதின்ன என்ன பண்ணுவேன்னு கேளுடா” - அப்பா.
“அடி செருப்பாலே, அவ்வளவா
ஒன்னும் சுகம் இல்லேன்னு
சொல்லுவேன்!"
82
“அப்படியும் வற்புறுத்தினா” என்றார் அப்பா நேரடியாகவே.
கண்கள் அகல, - * நிஜமாகவே பேசும் விஷயத்தில் அக்கறை விழ!
“இந்தா, நீயே பார்த்துக்கோ. நான் போய் மண் கொட்டறதைப்
பார்த்துவிட்டு வருகிறேன்னு அவனிடம் பேப்பரைக் கொடுத்துவிட்டு விடுவிடுன்னு மேலே நடப்பேன்.”
“நரிக்குன்னா தந்திரகுணம் ஜாஸ்திம்பா - சாரதி நேற்று சொன்னபடி படி
பார்த்தா!....,தினகரன் தன்னையும் அறியாமல் சிரித்துவிட்டார்!