தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, April 15, 2016

கனவுகள், சாதாரண மனிதன் - க.நா.சு. சிறுகதைகள்

________________

61. கனவுகள் - க.நா.சு. சிறுகதைகள் 

620
https://archive.org/details/Kanavugal
எங்கிருந்தோ வந்தது. அதன் வால் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை-தலைமட்டும்தான் என்னை எட்டியிருக்கிறது... தலை என்றா சொன்னேன்? இல்லை இல்லை வால்தான் என்னை எட்டியிருக்கிறது. தலையாக இருந்தால் அது வாயைப் பிளந்து படம் எடுத்து விஷப் பல்லால் என்னைத் தீண்டியிராதோ? வால்தான் என்னை எட்டியிருக்கிறது. தலை எங்கேயோ கிடக்கிறது. கண்ணைக் குவித்துக் கொண்டு பார்க்க முயலுகிறேன். கண்ணுக்கு எட்டிய அளவில் தலை தெரியவில்லை. தங்கச் செதில்களாகப் பாம்பின் உடல் கவசங்களும் வளைந்து நேராகி வளையும் மூங்கில் பளபளப்புடன் பாம்பின் உடலும் கண்ணுக்கெட்டிய அளவில் தெரிகிறது. வாலால் தொட்ட பாம்பு என்னை வாயாலும் தொடும்விஷப் பல்லாலும் தீண்டும். எப்போது? அதுதேடி என்னைக் காண வேண்டும். குருட்டுப் பக்கம் மாறி கண்பக்கம் என்னைத் திருப்பி (திரும்பிப்) பார்த்து... அல்லது வாலைச் சுற்றிச் சுற்றி என்னைப் பிணைத்து வாயை அருகில் இழுத்துக் கொள்ளுமோஅத்தனை பிணைப்புகளுக்கு என் ஐந்தடி ஐந்தரை அங்குல உயர மூணடிக் கனத்தில் இடம் இராது. என்ன செய்யுமோ? ஏக்கத்துடன் காத்திருக்கிறேன். ஓடி விடலாம் என்று எண்ணி நகர்ந்தாலோ, அந்த வால் பசைவைத்து ஒட்டினாற்போல ஒட்டிக்கொண்டே என்னைத் தொடர்ந்து வருகிறது, இதுவே பாரம்பரியம், மரபு, காலம்-காலபாசம், நானும் என் முன்னோர்களும். அந்த வால் நுனிதான் என் தகப்பனார். முகமே அதோ அதிலே தெரிகிறதே. அதற்கடுத்து இதுவரை நான் உயிருடன் பார்த்திராத என் தாத்தாஅவர் முகத்தைக் கண்டு கொண்டேன் இன்று. அதற்குமுன் அவர் அம்மா. அவர் அப்பா... ஆனால் அப்பா என்று தொடங்குவதை விட அம்மா, அவள் அம்மா, அவள் அப்பா என்று போவது பொருந்தும் என்று எனக்குள் ஏதோ சொல்லுகிறது. அந்தக் கால ஸர்ப்பத்தின் தலைதான் உலகில் ஆதி மனிதனோ- அம்மாவானால் ஏவாளோ? டெலிபோன் நம்பர் 0001.
★ ★ ★________________


ஐவராகச் சேர்ந்து என்னைப் பிணைக்கிறார்கள். "ஐயோ ஐயோ என் சுதந்திரம், என் சுதந்திரம்” என்று நான் கூவாமல் கூவுகிறேன். "சுதந்திரம் தானே வேணும் உனக்கு. இந்தா சுதந்திரம்" என்று மூட்டை ஒன்றைக் கட்டிக்கொணர்ந்து என்னிடம் தருகிறான் ஐந்தாவது ஆசாமி. தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டு நால்வரும் என்னை உதறிவிட எங்கேயோ எட்டிப் போய் விழுகிறேன், என் சுதந்திர மூட்டை பிரிந்து அவிழ்ந்து என்மேலேயே விழுந்து விட்டது. மறுவிநாடி காணவேயில்லை.... சுற்றுமுற்றும் பார்க்கிறேன். வானத்திலே கொளுத்தும் சூரியனையும் தரையில் புல் பூண்டு கருகிய கோடையும் தவிர வேறு எதுவும் காணவில்லை... தெற்கு நோக்கி நடக்கிறேன். எட்டு நாள் நடக்கிறேன். போக்குப் போக்கென்று போயும் ஒன்றும் தென்படவில்லை- ஒரு மனிதனையோ உயிருள்ள ஜந்துவையோ காணவில்லை. திரும்பும் கால் இந்த எட்டு நாள் தொலைவும் அரை நாளில் கடந்து விடுகிறேன். என் கால்கள் ஹெலிகாப்டர்களாக மாறிவிட்டன; பழைய நடு மையத்துக்கு வந்தவுடன் ஹெலிகாப்டர்கள் மறைந்து விடுகின்றன. மேற்கு நோக்கிப் பத்து நாள் நடக்கிறேன். அங்கும் எதையும் யாரையும் காணவில்லை. தூரத்தில் ஏதோ ஒரு கண்ணாடிச் சுவர் தெரிவது போல லேசாகத் தெரிகிறது. சூரிய ஒளியில் அது மின்னுகிறது என்பதைத் தவிர இன்னும் இரண்டு நாள் நடந்தும் அதைத் தொட இயலவில்லை... அப்பால் போய் விடுகிறது. திரும்ப நினைக்கும்போது கால்கள் ஹெலிகாப்டர்களாக மாறிவிடுகின்றன. ஆனால் இந்த ஹெலிகாப்டர்கள் நான் விரும்புகிற பக்கம் திரும்ப மறுக்கின்றன. மேற்கு கோடியிலிருந்து கிழக்கே பன்னிரண்டு நாள் தொலைவையும் அரைநாளில் கடந்து மறுபடியும் அந்த நடுமத்திக்குக் கொணர்ந்து சேர்க்கின்றன. ஆமாம். அதுதான் நடுமத்தி என்று எதைவைத்துச் சொல்கிறேன்? அதை அடையாளம் கண்டு கொள்ள. அங்கே என்ன இருக்கிறது? மரமா, கட்டிடமா, மனிதனா?.... அதுதான் நடுமத்தி என் சுதந்திர மூட்டையை இழந்த இடம் என்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்கிறது. அடுத்து நான் வடக்கேயோ கிழக்கேயோ செல்ல வில்லை. அங்கும் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும் வீணாக அலைவானேன். பத்மாஸனம் போட்டுத் தவத்தில் ஆழ்ந்து விடுகிறேன். துருவன் ஆகிவிடுகிறேன் வசிஷ்டர் ஜனகாதி முனிவர்கள் எல்லாம் ஆகிவிடுகிறேன். பிட்சாடனர் வரவேண்டும்ஆனால் தாருகாவனத்தில் முனிவர்களின் மனைவிகள் இல்லாத வரையில் எதற்காகப் பிட்சாடனர் வரப்போகிறார்? அல்லது நானேதான் முனிவர்களும் முனிவர்களின் மனைவிகளுமா?... இது________________

621 கனவுகள்
சின்னப் பிரச்சனை. பெரியப் பிரச்னை என் சுதந்திரம் எங்கே என்பதுதான். அதைக்குறித்தே நான் தவமிருக்கிறேன்.- தவம் இருந்தேன். கல்பகோடி காலம் தவமிருந்தேன். ஹரியும் வரவில்லை. காளி மாசக்தியும் வரவில்லை... பரமசிவனும் வரவில்லை. சிறிது சிறிதாக என் கோர தவத்தினால் என் சுதந்திர மூட்டை... பழைய மூட்டையேதான் உருப்பெற்றது. அந்த மூட்டைக்குள் ஒன்றுமில்லை என்பது எனக்குத் தெரியாதா? ஆனால் அது என் மூட்டை என்பது எனக்குத் திருப்தி தந்தது. என் மூட்டையை என் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு அதன் ஒன்றுமில்லாத கனத்தில் அழுந்தியவனாக என் தவத்தை முடித்துக் கொண்டேன். இனித் தவத்துக்கு என்ன அவசியம்- மூட்டைதான் கிடைத்துவிட்டதே.
★ ★ ★
முகர்ந்து முகர்ந்து பார்க்கிறேன்... எழுத்து வாசனை தெரிய வில்லை... மூக்குத்தான் தேய்கிறது. வாசனை புலனாகவில்லை... கம்பனுக்கு எழுதப் படிக்கத் தெரியுமோ? பாட்டுச் சொல்லத் தெரியும். கற்றுச் சொல்லி எழுதிக் கொள்வான். எழுதவோ எழுதுவதைப் படிக்கவோ வராது-என் எழுத்துப் போல. பிளாஞ் செட்டில் அன்றொரு நாள் எல்லோரையும் கூப்பிட்டுக் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டேன். உலகத்துக் கவிகள் எல்லாமே பள்ளிக்கூடம் போய் முறையாகக் கற்றதில்லை. புளியங்காய் எண்ணுகிற ஒரு உத்தியோகத்துக்கும் லாயக்கற்றவர்கள்... கல்வி அதிகாரி ஒருவர் தன் எதிரில் பெரிய பேப்பர் ஒன்றைப் பிரித்து வைத்துக் கொண்டு அதில் சிவப்பு மசியால் ஆயிரக்கணக்கான X குறிகள் போட்டுக் கொண்டிருக்கிறார். எதிரில் நிற்கிற கூட்டத்திலே அவர் ஒரு X குறிபோட்டு விட்ட உடனே ஒரு உருவம் மறைந்து விடுகிறது... இப்படி இப்படியாக இல்லாமல் ஆக்கும் கலை இவர் கையில் வளர்ந்திருக்கிறது என்று நான் யோசித்துக் கொண்டே நிற்கும் போது யாரோ எங்கேயோ சிவப்பு மசியால் ஒரு X குறி போட்டதன் காரணமாக அந்த அதிகாரியும் அவர் கைக்காகிதமும் ஒரு விநாடியில் மறைந்து விட்டன. தேடிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் கண்டு விடுவேன்-கவலை வேண்டாம்.
O இலக்கிய வட்டம் 22.5.64
 ________________

54. சாதாரண மனிதன்
https://ia902705.us.archive.org/12/items/SadharanaManithan/Sadharana%20Manithan.pdf
ரெயிலில் சாமான்களை எல்லாம் ஏற்றிவிட்டு என்னை வழியனுப்ப வந்த நண்பர்களுடன் பிளாட்பாரத்தில் பேசிக்கொண்டு நின்றேன். பேச்சு சுவாரசியத்தில் கார்டு கொடி காட்டியதையும், ரெயில் ஊதியதையும், கிளம்பியதையும் நான் கவனிக்கவில்லை. நண்பர் ஞாபகப்படுத்தியபின்தான் ஒடி ஏறிக் கொண்டேன். அவசரமாக அனாவசியமான அவசரத்துடன் ஒடி ஏறினேன். சற்று ஸ்துல சரீரம் எனக்கு-வண்டி ஒடும்போது ஏறிய சிரமம் எனக்கு மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கியது.
தனக்குப் பக்கத்தில் எனக்கும் நகர்ந்து இடம் கொடுத்தார் ஒருவர். உட்கார்ந்து கொண்டேன்.
வண்டியில் கூட்டம் அதிகமில்லை. நாலைந்து பேர் வழிகள் தான் இருந்தோம். எனக்கு இடம் கொடுத்தவருக்கு ஐம்பதுக்குக் குறையாமல் இருக்கும்-வழுக்கைத் தலையும், தங்கப் பிரேம் போட்ட கண்ணாடியுமாக ஏதோ நல்ல ஸ்திதியில் இருப்பவர் போல இருந்தது.
நான் அவரைத் திரும்பிப் பார்த்ததைப் பார்த்ததும் அவர் சொன்னார்; “ரெயில் ஒடறச்சே எல்லாம் இப்படி வந்து ஏறக்கூடாது ஸார்".
"கூடாதுதான்” என்று. நானும் ஒப்புக் கொண்டேன். “வழக்கமாக நான் இப்படி ஒடற ரெயிலில் ஏற மாட்டேன். இன்று என்னவோ” என்றேன்.
“நாமெல்லாம் நமக்குச் சின்னவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும்படியாக நடந்து கொள்ளவேண்டும்” என்றார் எதிர் சீட்டிலிருந்த ஒருவர். அவருக்கு வயது நாற்பது நாற்பத்தைந்திருக் கும். நோஞ்சான். அவர் ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருந்தால் அவருக்குப் பையன்கள் கட்டாயம் ஸ்கெலிடன் என்று பெயர் வைத்திருப்பார்கள்.
________________

க.நா.சு. சிறுகதைகள் 570
முதலில் பேசியவர் சொன்னார்; “இதைப் பாருங்கோ, இப்படித்தான் ஒரு சமயம் ஒடற ரெயிலில் ஏறினான் ஒரு பையன். நான் சொல்றது பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடந்த கதை. புதுசாகக் கல்யாணம் ஆன பையன். தீபாவளி சமயம். தலைத் தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந் தான். ஜோரா ஒவ்வொரு ஸ்டேஷன்லேயும் இறங்கறது; பிளாட்பாரத்தில் உலாத்தறது; ரெயில் ஒடறப்போ கதவண்டை நிற்கிறது, இப்படிப் பண்ணிக் கொண்டிருந்தான். இப்படி ஒரு ஸ்டேஷன்லே ரெயில் ஒடறச்சே ஏறினான். வழுக்கிவிட்டது....”
"அப்புறம்” என்றார் ஸ்கெலிடன்.
"அப்புறம் என்ன? ரெண்டுகாலும் போயிடுத்து” என்று சுருக்கமாகக் கதையை முடித்தார்.
"அந்த மட்டோடு விட்டதே' என்றார் வண்டியிலிருந்த நாலாவது ஆசாமி.
"ஐயோ பாவம் தலைத் தீபாவளிக்குப் போயிண்டிருந்த பையன்... பாவம்' என்று தன் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார் ஸ்கெலிடன்.
கதையைச் சொன்னவர் சொன்னார்; “எதற்காகச் சொன்னே னென்றால் சாதாரணமாக இப்படிஎல்லாம் நடப்பதற்கு நாமெல்லாம் இடம்கொடுத்து விடக்கூடாது. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு எதுவும் அசாதாரணமானது நேர்ந்து விடக்கூடாது. அசாதாரணமானது ஏதாவது நடந்து விட்டால் அவ்வளவுதான். நம்மால் தாளாது. அதற்குப் பிறகும் நாம் மனிதர்களாக நடமாட முடியாமலே போய்விடும்.”
ஸ்கெலிடன் பதில் சொன்னார்; உண்மைதான். பணக்காரர் களுக்கு எது எப்போது நேர்ந்தாலும் சமாளித்துக் கொண்டு விடுவார்கள். நமக்கெல்லாம்...”
முதலில் பேசியவர் குறுக்கிட்டார்; "பணக்காரன், ஏழை என்பதை நான் மதித்து, அசாதாரணம் சாதாரணம் என்று சொல்ல வில்லை. சாதாரணம் என்று நான் சொன்னது ஒரு மனோபாவத்தைக் குறித்துத்தான். பணக்காரனும் சாதாரணமானவனாக இருக்கலாம். ஏழையும் அசாதாரணமானவனாக இருக்கலாம்.”
57.1 சாதாரண மனிதன்
"உண்மைதான்' என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். எனக்கு வயசு ஐம்பத்து இரண்டாகிறது. ஏதோ சின்ன உத்யோகம் பார்க்கிறேன். போதுமென்ற மனம் படைத்திருப்பதனால் வருவது போதுமானதாக இருக்கிறது....”
"அதைச் சொல்லுங்கோ” என்றார் ஸ்கெலிடன்.
“எனக்குக் குடும்பம் சற்றுப் பெரிசுதான். ஐந்து பையன்களும் இரண்டு பெண்களும் இருக்கிறார்கள். எனக்கு மனைவியிருக்கிறாள். விதவைத் தாயார் இருக்கிறாள். தங்களுடைய குழந்தைகள் இரண்டு என்னையே நம்பி அடைக்கலமாக இருக்கின்றன. என் பெயர் கிருஷ்ணசாமி....”
இதுவரை பேச்சில் கலந்து கொள்ளாத ஐந்தாவது ஆசாமி கேட்டார். “ஜாதி, மதம், இனம், கொள்கை கோட்பாடுகள்....?”
அவர் அதை அப்படிக் கேட்டது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. எல்லோரும் சிரித்தோம்.
ரெயில் கொள்ளிடத்துப் பாலத்தில் கடகட குடுகுடு என்று ஒடியது. அந்தச் சத்தத்தில் பேசுவது சாத்தியமில்லை. பாலம் தாண்டி ரெயில் கொள்ளிடம் ஸ்டேஷனில் நின்றதும் கிருஷ்ணசாமி இந்தக் கேள்விக்குப் பதில் கூறினார். 'இனம் மனித இனம்தான். ஜாதி ஒளவைக் கிழவி கூறியபடி, இடாத ஜாதி. நம்பிக்கை எதுவும் அதிக அழுத்தமாகக் கிடையாது; கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் வாழ்வில் குறுக்கிடாத வகையில்தான் உண்டு” என்றார்.
இதைச் சொல்லி விட்டு கிருஷ்ணசாமி அங்கிருந்தவர்கள் ஏதாவது சொல்வார்களோ என்று ஒரு நிமிஷம் மெளனமாக இருந்தார். ரெயில் கொள்ளிடத்திலிருந்து கிளம்பியது.
“மதம் என்றும் எனக்குக் கிடையாது. எம்மதமும் என்னைப் பற்றிய வரையில் சம்மதம்தான். ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டுமானால் காங்கிரஸ் மதம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.”
"புது மதமாக இருக்கிறதே!” என்றார் ஸ்கெலிடன். அவரைப் பார்த்தால் சநாதனி மாதிரிதான் இருந்தது.
“மதம் என்பதற்கே புதுசு புதுசாக அர்த்தம் கொடுத்துக்
________________

க.நா.சு. சிறுகதைகள் 572
கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது. பழைய அங்கீகரிக்கப்பட்ட மதங்களுக்கெல்லாம அர்த்தம் இப்போது தேய்ந்து விட்டது. புது மதம் எதுவும் இன்னும் சரியானபடி வேர் ஊன்றவில்லை....” என்று கிருஷ்ணசாமி சொன்னதற்கு நான் எனக்குத் தெரிந்தவகையில் வியாக்யானம் செய்தேன்.
ஸ்கெலிடன் சொன்னார்; “இந்த நாளில் ஜாதி, மதம், இனம், கொள்கை எதுவும் முக்யமேயல்ல ஸார் முக்யமல்ல; Economic Status பொருளாதார நிலைமை ஒன்றுதான் ஸார் முக்கியம்”. அவர் பெருமூச்சுவிட்டார். அவருடைய உடல்நிலையைப் போலவே அவருடைய பொருளாதார நிலையும் சரியாக இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
“ஏதோ சுவாரசியமான விஷயமாகச் சொல்ல வந்தீர்கள். பாதியில் நின்று விட்டதே!” என்று கிருஷ்ணசாமியைத் தூண்டினார் ஐந்தாவது ஆசாமி.
“நான் என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். கிடைப்பது போதுமென்ற மனத்துடன் நான் ஒரே ஆபீஸில் இருபத்து ஏழு வருஷங்களாக வேலை பார்த்துவிட்டேன். இன்னும் ஏழெட்டு வருஷங்கள் வேலை பார்ப்பேன். அரைச் சம்பளத்தில் எத்தனை வருஷங்கள். அதற்குப் பிறகு நான் உயிருடன் இருக்கப் போகிறேனோ, எனக்குத் தெரியாது. சொத்துச் சுதந்திரம் என்று என்னால் ஒன்றும் என் பிள்ளை குட்டிகளுக்கு வைத்து விட்டுப் போக முடியாது.”
“உங்கள் தகப்பனார். உங்களுக்கு என்ன வைத்துவிட்டுப் போனார்?' என்று கேட்டார் அந்த ஐந்தாவது ஆசாமி.
ஏது இந்த ஐந்தாவது ஆசாமி கெட்டிக்காரராக இருப்பார் போலிருக்கே என்று எண்ணியவனாக நான் அவரைக் கவனித்தேன். யாரோ ஒரு வாலிபன் நவயுவன் என்றதான் சொல்லவேண்டும், படிப்பு மணம் மாறாதவன் என்று கூடச் சொல்லலாம்.
கிருஷ்ணசாமி அந்த யுவனின் கேள்விக்குப் பதில் சொன்னார். “என் அப்பா எனக்கு வைத்து விட்டுப் போனதையேதான் நான் என் குழந்தைகளுக்கும் வைத்துவிட்டுப் போவதாக உத்தேசித்திருக் கிறேன். ஒரு சாதாரண மனிதனின் வாழ்வு என்கிற உதாரணம் சதா என் குழந்தைகளின் கண்முன் இருக்கும். அவர்கள் வாழ்க்கையில்
573 சாதாரண மனிதன்
வெற்றிபெற அவர்களுக்கு என் உதாரணம் போதுமானதாக இருக்கும். என் தகப்பனாரின் உதாரணம் எனக்குப் போதுமானகாக - மாதிரி'. கு துமானதாக இருந்த
"சாதாரண மனிதனாக வாழ்வது என்பது உலகில் எல்லா மனிதர்களுக்குமே அவசியமான ஒரு லட்சியம். ஆனால் முத்தால்வாசிப் பேருக்கு அது சாத்தியமானதாக இருப்பதில்லை” என்றேன் நான்.
"அசாதாரணமாக இருக்க விரும்புகிற மனிதன் சமூகத் துரோகி” என்றார் ஸ்கெலிடன். மூகத
- “அசாதாரணமாக ஏதாவது செய்ய வேண்டுமென்கிற ஆசை எல்லா மனிதர்களுக்குமே அவர்களுடைய வாழ்வில் எப்பொழு தாவது தோன்றி ரகளை செய்துவிடுகிறது. அப்படி எண்ணாமலே வாழ்நாளைக் கழித்து விடுபவனை அதிருஷ்டசாலி என்றுதான் நான் சொல்லுவேன்” என்றேன் நான்.
- "ஆனால் சாதாரணமான வாழ்க்கை என்றால் என்ன என்பதுதான் விவாதத்திற்குரிய விஷயம்" என்றான் அந்த வாலிபன்.
- "இந்தக் காலத்தில் எல்லாமே விவாதத்திற்குரிய விஷயமாக்கப் பட்டதுதான் விசேஷம்” என்றார் ஸ்கெலிடன்.
- "விவாதம் என்பது இன்றைய உலக அரசியல் நிலையில் ஏற்பட்டுவிட்ட ஒரு சுதந்திரம்” என்றார் ஸ்கெலிடன்னுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்.
இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்கவும் கிருஷ்ணசாமிதான் வரவேண்டியிருந்தது. “சாதாரண மனிதன் என்பதற்கே இதுதான் ஆததம என்று வைத்துக் கொள்ளலாமே. அரசியல், தத்துவம், இந்த மாதிரியான விவாதங்களில் ஈடுபட மறுப்பவனே சாதாரண மனிதன். சாதாரணமாக வாழ்க்கை அடிப்படைகளைப் பற்றிப் பிறர் சிந்தித்து வைத்திருப்பதை ஏற்றுக்கொண்டு விடுபவன்தான் சாதாரண மனிதன். வாழ்க்கை வழிகளைப் புதிதாக வகுத்துக் கொள்ளாதவன்; வகுத்துக்கொள்ள விரும்பாதவன்தான் சாதாரண மனிதன் இல்லையா?” என்றார் கிருஷ்ணசாமி.
... - - ** - - - உண்மைதான் என்றேன் நான்.________________

க.நா.சு. சிறுகதைகள் 574
“உதாரணமாக மீண்டும் என்னை எடுத்துக் கொள்ளுங்கள். நான் மிகவும் சாதாரணமான மனிதன். நான் எந்தவிதமான விவாதத்திலும் எப்பொழுதுமே ஈடுபட்டது கிடையாது” என்றார் கிருஷ்ணசாமி.
"உதாரணமாக உங்களையே எடுத்துக் கொண்டு சாதாரணத் வத்தைப்பற்றி மேலே சொல்லுங்கள்” என்றான் படிப்பு மணம் மாறாத வாலிபன்.
மற்றவர்கள் சிரித்தார்கள். ரெயில் சீர்காழியில் நின்று விட்டுக் கிளம்பியது.
கிருஷ்ணசாமி சற்று நேரம் மெளனம் சாதித்தாரே தவிர, கோபித்துக் கொள்ளவில்லை. பிறகு சொன்னார்: “சொல்லுகிறேன். சாதாரண மனிதன்தானே நான்? எனக்கு என்னைப் பற்றியே பேசிக் கொள்வதில் விருப்பம் அதிகம்தான்.”
“தெரிகிறதே!” என்று எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என் காதில் மட்டும் விழும்படியாகக் கூறினார்.
கிருஷ்ணசாமி தொடர்ந்து சொன்னார்: “நான் என்ன ராதா கிருஷ்ணனா? பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளில் சொல்லி உங்களுக்குப் புரியவைப்பதற்கு? நான் ரொம்பவும் சாதாரண மனிதன். எனக்குச் சாதாரணமான விஷயங்கள்தான் தெரியும். மிகவும் சாதாரணமான வார்த்தைகள்தான் தெரியும்....”
“எங்களுக்கும் அவ்வளவுதான்” என்று எங்கள் சார்பில் ஸ்கெலிடன் கூறினார்.
"இதோ என் பேனா. இது 1927ஆம் வருஷத்திய மாடல் பிளாக்பர்ட் பேனா. இன்னும் என்னிடம் புத்தம் புதுசாக இருக்கிறது” என்றார் கிருஷ்ணசாமி.
“கைபட்டுக் கைபட்டுப் புதுசையும்விட அதிகமாக மெருகு ஏறியிருக்கிறது பேனா.” என்றான் வாலிபன்.
“தேடு தேடு என்று தேடினால்கூட இந்த நாட்களிலெல்லாம் இந்த மாதிரிப் பேனா எங்கே ஸார் கிடைக்கிறது?” என்றார் ஸ்கெலிடன்.
575 சாதாரண மனிதன்
- "எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் யுததததுககு முந்திய மாடல் வாடர்மன் பேனா ஒன்று இருக்கிறது. கைபட்டுப் பட்டு அதன் பாரல் தேய்ந்து உள்ளேயிருக்கிற மகி தெரிகிறது. அதை அவர் 1912-ல் அதாவது நான் பிறந்த வருஷம் வாங்கினாராம். இன்னமும் அவரிடம் அது நன்றாக இருக்கிறது; எழுதுகிறது. என்னையும் அந்தப் பேனாவையும் சேர்த்து வைத்துப் பாததால எனக்குத்தான் வயசு அதிகமாகியிருக்கிறது என்று மதிப்பிடும்படியாக இருக்கும்” என்றேன் நான்.
சாதாரண மனிதனை அவனுடைய பேனா, கடிகாரம், குடை
5ణ வைத்து மதிப்பிட்டு விடலாம்” என்றார் கிருஷ்ண
- “என்னை என் குடையைக் கொண்டு மதிப்பிட முடியாது எனபது நிச்சயம். என்னிடம் குடையே கிடையாது” என்றேன் நான.
"அதுவும் ஒரு மதிப்புத்தானே?” என்றான் அந்த வாலிபன்.
கிருஷ்ணசாமி சொன்னார்:- "ஆயிரம் சிறு கவிதைகளும் ஒரு பெரிய தாவியத்தையும் இயற்றிய ஒரு கவியை எடுத்துக் கொள்ளுங்கள். என்னைப் போல இருபத்தைந்து வருஷங்களில் தனனுடைய இரண்டே முக்கால்ரூபாய்க் குடையை ஒருதரம்கூட இழக்காதவனையும் எடுத்துக் கொள்ளுங்கள். இருவரில் யார் சிறந்த மனிதன் என்று என்னைக் கேட்டால் நான் இரண்டாவது ஆசாமி யைத்தான் சொல்லுவேன்.”
“சபாஷ் என்றார் ஸ்கெலிடன். - ஆப்படிப் போடய்யா போடு” என்றார் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்.
"ஆமாம், உலகில் கவிதையையும் காவியத்தையும் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறார்கள். பொய்யும் புளுகுமாகத் திரித்து விட்டு வாழத் தெரியாமல் வாழ்கிறவர்களை எல்லாம் பெருமையாகப் போற்றுகிறார்கள்” என்றார் கிருஷ்ணசாமி.
- "புரியாததைப் போற்றுவது என்று நமக்கு ஒரு அசட்டு வழக்கம் ஏற்பட்டுவிட்டது” என்றேன் நான்.________________

க.நா.சு. சிறுகதைகள் 576
“எனக்கென்னவோ அதெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்றே தோன்றவில்லை. கவிதையைப் படிப்பதைவிட எனக்கு இஷ்டமான காரியம் என் ஆபீஸ் பைல்களைப் புரட்டுவது தான். அதில் உலகத்திலுள்ள கவிதை எல்லாம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது” என்றார் கிருஷ்ணசாமி.
“பிரமோஷன் தரக்கூடிய, லாபகரமான சித்தாந்தம்தான்” என்றான் அந்த வாலிபன்.
"என் வேலையில் எனக்குக் கவனம் இல்லாமல் பிறர் வேலையில் ஈடுபட்டுப் பிரயோசனம் என்ன? தாதி மனம் நீர்க்குடத்தே காண என்கிற வாக்கியம் சாதாரண மனிதனை உத்தேசித்து ஏற்பட்டது தான் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் கிருஷ்ணசாமி.
"உங்கள் வேலையை நினைத்துக் கொண்டால் நீங்களும் கவியாகி விடுகிறீர்களே” என்றான் வாலிபன்.
"தெருவோடு காரில் போகிறவர்களைப் பார்த்துச் சாதாரண மனிதன் பொறாமைப்படுவதே கிடையாது. அவன் மனசில் விகல்பமென்பதே கிடையாது. எவ்வளவுதான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் சாதாரண மனிதன் கம்யூனிஸத்தை ஆதரிக்கமாட்டான். சாதாரண மனிதனைக் கண்டு அமுலிலிருக்கும் எந்த அரசாங்கமும் பயப்பட வேண்டியதே கிடையாது. அரசியலில் எவ்விதமான கனவுகளும் காணாதவன். சாதாரண மனிதன்.”
ஒரு நிமிஷம் தயங்கினார் கிருஷ்ணசாமி-மற்றவர்கள் இடை மறித்து ஏதாவது சொல்வார்களோ என்று. ஒருவரும் எதுவும் சொல்லவில்லை. அவரே தொடர்ந்தார். “அழகான ஸ்திரிகளை சாதாரண மனிதன் ஆசையோடு பார்ப்பது கிடையாது. அவனுக்குப் பணம் காசுவந்ததே. என்று பிறருடைய நல்லதிர்ஷ்டத்தை எண்ணி வருந்தமாட்டான்.
ரெயில் ஆனதாண்டவபுரத்தில் நின்று கிளம்பியது. “என்ன ஊர் இது?” என்றார் கிருஷ்ணசாமி. "ஆனதாண்டவபுரம்" என்றான் வாலிபன்.
“அடாடா! நான் வைத்தீசுவரன் கோயிலில் இறங்கியிருக்க வேண்டுமே!” என்று பரபரப்புடன் எழுந்து இறங்கினார் கிருஷ்ண சாமி. ஆனதாண்டவபுரத்தில் அசாதாரணமான அவசரத்தில் தன் குடையை (அதுவும் 1927 ஆம் வருஷத்திய மாடல்தான்) வண்டியில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார்.
- நான் அவருடைய குடையை எடுத்து, பிளாட்பாரத்தில் எறிந்தேன்.
வாலிபன் சிரித்துக் கொண்டே சொன்னான். “சாதாரணமான மனிதர் இப்படிப் பேச்சு சுவாரசியத்தில் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இறங்காமல் இருந்திருக்க மாட்டார்.”
"பாவம் திரும்புவதற்கு அவருக்கு ரெயில் இனிமேல் சாயங்காலம் நாலரைக்குத்தான்.”
அப்போது மணி பதினொன்று.
“சாதாரண மனிதர் நடந்து போய்விடுவார்.” என்றான் வாலிபன்.
எல்லோரும் சிரித்தோம்.
ரெயில் நீடுரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
1966