தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, April 19, 2016

ஜே. ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி ( ஜே. ஜே யின் டைரி குறிப்புகள் )

ஜே. ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
 Automated Google_OCR

19. 12. 1940
நிம்மதி என்பது துளிக்கூட இல்லை. எப்போதும் ஒரு மனக் கலவரம். பிறரால் ஒதுக்கப்படுகிறேன் என்ற உணர்வு ஏற்படுகிறது. யாருக்குமே என்னைப் பிடிக்க வில்லை என்று தோன்றிவிடுகிறது. முறுக்கப்படும் நூல் கள் போன்றவை என் உறவுகள். முதலில் தளர்ச்சி, தொய்வு, அதன் பின் வலு, அழகு, இறுக்கம். மேலும் முறுக்கத்திற்கு ஆளாகின்றன. இப்போது அறுபட்டுப் போய்விடுகின்றன. வலுவின் உச்சக்கட்டத்தில் முறுக் கேற்றுதல் நிறுத்தப்பட வேண்டும். அந்த நிமிஷம் எனக்குத் தெரிவதில்லை. அப்போது, மேலும் வலுவூட் டும் என எண்ணிச் செய்யப்படுகிற முறுக்கலே அறுபடும் காரியத்தைச் செய்துவிடுகிறது. 
என்னை ஏன் உங்களுக்குப் பிடிக்காமற்போய்விட்டது என்று ஒவ்வொருவரையும் பார்த்து ரகசியமாகக் கேட்டறிந்து யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் மனிதன் உண்மை பேசத் தெரியாதவன். பேச முற்படும் போதுகூட முடியாதுபோய்விடுகிறது. அவன் பேச ஆரம்பிக் கும்போது அவன் குரலின் சத்தம் அவன் காதில் விழு கிறது. இச்சத்தம் காதில் விழுந்ததும் அகந்தையின் சிறகு கள் விரிகின்றன. உண்மையை அகந்தையால் அளக்க ஆரம்பிக்கிறான். தன்னை நியாயத்துக்கு இட்டுச்செல்லும் உணர்வுகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்க ஆரம்பிக் கிறான். எல்லோரிடமும் எப்போதும் பேரன்புடன் இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறான். சந்திக்கும் முதல் மனிதன் எதையோ செய்து, எப்படியோ சிண்டி உணர்வு தளை நாசமாக்கிவிட்டுப் போய்விடுகிறான். எப்படியோ கிறீச் சிட்டுவிடுகிறது. பெரும் துக்கம் இது. இந்தத் துக்கத்தைத் தாங்க முடியாமல்தான் மகான்கள் ஒடி ஒளிந்துகொண் டார்கள் போலும். மனித உறவுகளை நேசப்படுத்த முடிய வேண்டும். நேசப்படும் என்றால் கடவுள் சர்வ வியாபியாக இருக்கிறான் என்பது உண்மைதான்.
 3. 2. 1941
மாறிவிட வேண்டும் என்ற எண்ணம். மாறி, முற்றாக மாறி, கனவாகிவிட வேண்டும். கனவுக்கும் நடைமுறைக் கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிவிட வேண்டும். இந்த எண்ணத்திலிருந்து விடுபட முடிவதில்லை. பொய்யாக இருக்கலாம். கற்பனையாக, சாத்தியமற்றதாக இருக் ಹಣTಯ. ஆனால் விடுபட முடிவதில்லை. என் கனவுகள் உள்ளுர ஓங்கி, திமுதிமுவென்று வளர்ந்துகொண்டிருக் கின்றன. மாறிக்கொண்டிருக்கின்றன. விகசித்துக் கொண் டிருக்கின்றன. அவற்றின் சாயல்கள் வெளியே கசிகின்றன. அவற்றின் ஈரத்தை நான் ஸ்பரிசித்து உணருகிறேன். ஆனால் இந்த உணர்ச்சி ஒரு வடிவத்தைக் கேட்டு வதைக் கிறது. நடைமுறைக்கு வழி கேட்கிறது. எதனை நம்பி ஏற்றால், எதனைப் பின்தொடர்ந்தால், எவ்வகை உபாயங் களை அனுசரித்தால், என்னென்ன அப்பியாசங்களை மேற்கொண்டால் மலை உச்சியை அடைவேன் என்பது தெரிய வேண்டும். எதை எடுத்துக் கொண்டாலும் அதிக அளவுக்குச் சொல்லப்பட்டுவிட்டது. மூல அர்த்தங்களைப் பற்றிச் சிந்தித்த மனிதன், அது பற்றி எழுதி எதிர்நிலைகள் பற்றி எழுதி, வாதாடி, வியாக்கியானித்து, மீண்டும் எழுதியதில் மூல அர்த்தங்களே சீரழிந்துபோய் விட்டன. இச்சீரழிவில் சரியாத துறைகள் இல்லை.
 2, 2, 1942
கல்லூரியில் என்ன ஆதரவு! தலைமைப் பீடத்திலிருந்து அசட்டுப் பிரியம் ஒழுகிய வண்ணம் இருக்கிறது. நான் ஒரு ஏழை. கிறிஸ்தவன். பந்தாட்டக்காரன். மூன்று தகுதி தளும ஒன்றுபட்டுத் திரண்டுவிட்டன. உள்நோக்கம் 5767- இலவச அன்பு மிகுந்த அருவருப்பை ஊட்டுகிறது. போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து மகாராஜா கையி லிருந்து கோப்பையை வாங்கிக் கொடு’ என்று உயிரை எடுக்கிறார்கள். இவர்களுடைய மிதமிஞ்சிய உற்சாகம் என்னை உள்ளுரச் கருங்கவைக்கிறது. விளையாட்டுகளில். தோல்வி என்பது தோல்வியுமல்ல. வெற்றி என்பது வெற்றியுமல்ல. விளையாட்டே ஒரு வெற்றி. தீவிரமாக, ஆத்மார்த்தமாகத் தன்னை மறந்து விளையாட ഖേண்டும். இவர்களுக்கோ, இவர்கள் உயர்நீதி மன்றங்களில் நடததும் வழக்கைப் போலத்தான் விளையாட்டுகளும். ஒரு போட்டியில்  தோற்றுவிட்டால் ஃபாதர் ஜேக்கப் கண்டபடி திட்டு கிறார். நான் சரியாக ஆடவில்லை என்கிறார். நேற்று அவர் சொன்னதில் உண்மை உண்டு. தோற்க நேற்று உள்ளுர ஆசைப்பட்டேன். இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது நான் வெறுப்படைகிறேன்.
 23.3.1942
இம்மானுவேல், என். கிருஷ்ணன் நாயர், சர்மா மூன்று பேரையும் அகஸ்மாத்தாகச் சந்தித்தேன். ஒரு பெரிய வீட்டின் காம்பெளண்ட் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் தபால்பெட்டியின் முன், கடிதம் போட வருகிறவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்திக்கொண்டு, ஆனால் அது பற்றிக் கிஞ்சித்தும் பிரக்ஞை இல்லாமல், கத்தி விராவேச மாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நானும் கலநது கொண்டேன். பேச்சின் சாராம்சம்: 
தலைநகரில் பெரும் கொந்தளிப்பு நிகழ்ந்துகொண்டிருக கிறது. வங்காளி பாபு சுடச்சுட புரட்சியை ரயிலில் ೧೯T® வந்து இறக்கிவிட்டிருக்கிறான். மாணவர்கள் பெரும் எழுச்சிக்கு ஆளாகி விட்டார்கள். வட இந்தியாவிலிருந்து வரவிருக்கும் ஒரு பெரும் தலைவரின் கூட்டத்தைத் தந்திர மாகக் குலைத்துக் குழப்பிவிடுவது முதல் கட்டம. மாணவர் தலைவன் போத்தன் ஜோசஃப் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறான். மூன்று பேருமே போத்தன் ஜோசஃபாக உடனடியாக மாற ஆவேசங் கொள்ள நினைக்கிறார்கள் என்பது தெரிந்தது. டிராட்ஸ்கி, டிராட்ஸ்கி என்று புலம்பிக்கொண்டிருந்தான் கிருஷ்ணன் நாயர். அவனுடைய சமீபத்தியக் கண்டுபிடிப்பு. ‘யாரும் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று வருந்தினான். இந்த வருத்தத்தில் அவனுக்குச் சந்தோஷம் இருப்பது தெரிந்தது. விதிவிலக்காக இருக்க விரும்புகிறான் போலும்! ஆத்மாவை ஜேப்படிக்க ஒரு உடலுக்குள்தான் எத்தனை கைகள்! நம்முடைய கிராமம் தூங்கிக்கொண்டிருக்கிறது என்று மூன்று பேரும் வருந்தினார்கள். "குறைந்தபட்சம் சுவரொட்டிகளையேனும் எழுதி ஒட்டுவோமா?” என்று கேட்டான் கிருஷ்ணன் நாயர், மூன்று பேரிலும் அதிக கொந்தளிப்புடன் இருந்ததும்: மிகையாக அதைக் காட்டிக்கொள்ளத் துடித்துக் கொண்டிருந்ததும் அவன்தான். சமீபத்திய தலைநகர் யாத்திரை அவனைப் படுத்திக் கொண்டிருக்கிறது. 
சந்தையிலிருந்து வம்பளப்புகளை வாரியிறைத்துக் கொண்டே விரைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அந்தி அற்புதமாக மயங்கிக்கொண்டிருக்கிறது. நான் இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நண்பர்களின் பிரச்சினைகளுக்கும் இவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி என்னை பயங்கரமாக உறுத்திற்று. என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத தர்மசங்கடத் தினால்தான் புதிய பெயர்ச் சொற்கள் வந்து புகுந்துகொள் கின்றன. இதற்குப் பெண்களுடைய கண்டுபிடிப்பு வம்பளப்பு. உறைந்து போயிருந்த என் உணர்ச்சியை உணர்ந்து, நீ அவநம்பிக்கைவாதி என்பது தெரியும்' என்றார்கள். இதற்கு சர்மா உபயோகித்த வார்த்தை நிஹறிலிஸ்ட் என்பது. இனிமேல் இவன் அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல் வான். துர்க்கனேவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. தினசரியின் ஞாயிறு இதழிலிருந்து பொறுக்கிக் கொண் டிருக்கக்கூடும். இவ்வார்த்தையின் மூலப்பொருள் என்ன? எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன காரணங்களுக்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது? ஒரு கவலை கிடையாது. ஊசிகளின் மேல் வைக்கோல் போர்கள் சரிக்கப்படுகின்றன. ஊசியை மீண்டும் கண்டுபிடிப்பது மற்றொரு உண்மையான ஜீவனின் அவஸ்தை.
 7.11.1942
பெரும் புகழ் பெற்றுவரும் பவானியை நேற்றுப் பார்த்தேன். கம்யூனிஸ்ட் வீராங்கனை அலுவலகத்தில் ஒரு வலம்புரிச் சங்கு. தொண்டர்களுக்குப் புல்லரிப்பு. கட்சி அலுவலகத் திலிருந்து அவள் மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பும் போது தோட்டத் தொழிலாளி ஃபிரான்சிஸ் துணைக்குச் செல்கிறான். காரியதரிசியின் ஏற்பாடு. இடைக்கால ஏற்பாடுதான். புரட்சிக்குப் பின் தேவையிராது. எனக்குத் தெரிந்து பதினேழு தோழர்கள் பவானியைக் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பவானி பேசும் கட்டமொன்றைக் கேட்டேன். நல்ல
வீராவேசம். ஆணாகிக் கொண்டிருக்கிறாள். கம்யூனிஸ்ட்
ஆகிவிட்டாளா என்பதைச் சொல்லத் தெரியவில்லை. நல்ல சன்னமான குரல். அருமையாகப் பாடுகிறாள்.
புரட்சி கீதங்கள் மிகப் பயங்கரமானவை. ஜோசஃப்
விஸாரியோனோவிச் ஸ்டாலின் வாழ்க!” என்று அவள் யதுகுல காம்போதியில் பாடுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெருந் தலைவர் தோழர் மாத்யூ தரகனைச் சந்தித்தேன். கட்சி மீது விமர்சனம் வைக்கிறா யாமே, என்ன செய்ய வேண்டும் சொல்லு என்றார். கட்சிச் செலவில் பவானி அம்மாளுக்குக் கர்னாடக சங்கீதம் கற்றுத் தர உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னேன். 'என் நன்கொடை மாதம் ஒரு ரூபாய்' என்றேன். திருவையாறு தியாகராஜ பாகவதருக்கு ஊழியம் செய்வது அல்ல கட்சியின் வேலை என்றார். உள்ளார்ந்து கிடக்கும் மன ஆற்றலை வெளிப்படுத்துவது கட்சியின் வேலை என்ற எண்ணத்தில் சொன்னேன். மன்னிக்க வேணும்' என்றேன்.
11.1.1943
அம்மாவுக்கு அவள் விரும்பும் வகையில் நான் சாகித்திய கர்த்தவாக உருவாகவில்லை என்ற கோபம். மத்தாய் மாமாதான் அவளுக்கு அதாரிட்டி, அம்மா மூலம் உபதே சங்கள் வந்தவண்ணமாக இருக்கின்றன. எனது இலக்கியக் கிளைகள் செங்குத்தாக மேலே போகாமல் பக்கவாட்டு களில் வளைந்து திரும்புகிறதோ என்ற சந்தேகம் மாமா வுக்கு அவிசுவாசி ஆகிவிட்டால் மீட்டு எடுக்கவே முடியாது என்று சொல்லி இருக்கிறார். அத்துடன் வள்ளத்தோள், ஆசான், உள்ளுர் ஆகியோரின் கவிதைகள் முழுவதையும் மனப்பாடம் செய்துவிட வேண்டுமாம். யாப்பை இப்போதே பலமாகப் போட்டுக்கொள்ளாவிட்டால் எதிர்காலம் இல்லை. சங்கம்புழை கிருஷ்ணபிள்ளையின் புத்தகங்களின் வாசனை அடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடைப் பள்ளி ராகவன் பிள்ளை தற்கொலை செய்து கொண்டதிலும், 'ரமணன் எழுதப்பட்டதிலும் கருத்து வேற்றுமை என் அருமை மாமாவுக்கு.
 24.2.1943
கோட்டயம் முனிசிபாலிட்டியில் பெரிய தண்ணிர்த் தொட்டி வைத்துள்ள புதிய லாரி வாங்கிவிட்டார்கள். பூவாளியி லிருந்து வருவது போல் பின்பக்கம் நீண்ட குழாயிலிருந்து தண்ணீர் வெளிவந்துகொண்டிருக்கிறது. மாலை 5.45க்கு இந்த லாரி ரொட்டிக்கடை முக்கைத் தாண்டிப் போகிறது. டிரைவர் எவன் என்றாலும் சரி, காந்தியைவிட சமய நிஸ்டிடை உள்ளவன். சந்தேகம் இல்லை. பட்டணப் பிர வேசக் கார் போவது போல் ஊர்ந்து போகும். செம்புழுதியை ஈரம் பண்ணி அமிழ்த்தும். மீண்டும் உலர்ந்து ஆனந்தமாகப் பறக்க ஆரம்பிக்க அரை மணி நேரம் ஆகிறது இந்தப் புழுதிக்கு. ஒவ்வொரு இடத்திலும் இப்போது எங்கள் ஊரில் இருபத்தி மூன்றரை மணி நேரம் மட்டுமே புழுதித் தொல்லை. லாரிக்குப் பச்சை வர்ணம் பூசியிருக்கிறார் கள். செடி - தண்ணிர் - பசுமை என்ற தொடர்பு உணர்வாக இருக்கலாம். சமூகசேவையும் அழகுணர்ச்சியும் அற்புதமாகப் பிணைந்துள்ளன. அபூர்வக் கலவை இது. முற் போக்கு எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டும்.
 1, 3, 1943
அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ, திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு கிறிஸ்துவன்கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பி னாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சி 1973ణు வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. 
சம்பார மடம் நாராயண அய்யர் இறந்துவிட்டார் என்ற செய்தி தெருவில் காதில் விழ, பேசிக்கொண்டு போனவர் கள் அளித்த முக்கியத்துவத்திலிருந்து ஏதேதோ கற்பனை கள் மனதில் விரிய, அவர்கள் பின்னாலேயே சென்றேன். சரியான கூட்டம். 250 ஏக்கர் நஞ்சை ஹரிப்பாடில் இருக் கிறதாம். அப்படி என்றால் சட்டுப் புட்டென்று சிதையில் ஏற்ற முடியுமா? காலையில் ஒன்பது மணியிலிருந்து தொடர்ந்து காரியங்கள், மதச் சடங்குகள், மந்திரங்கள், ஹோமப் புகை, தவணை வைத்து அழுகை, ஏழைப் பிராமணர்களின் அட்டகாசம். கொளுத்தும்போது சாயங் காலம் மணி ஆறேகால். அவர்கள் குடும்பத்திற்கென்று தனிச் சுடுகாடு, கற் கோட்டை போல் கவர் எழுப்பி பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். குழந்தைகள், பேரன் பேத்திகள், பேரனுக்குப் பேரன், பேத்திக்குப் பேத்தி எல்லோரையும் சேர்த்தால் குடும்ப அங்கத்தினர்
್ರ 96 பேராம். அவரைக் குளிப்பாட்டி முடித்ததும், சிரங்குக்கு என்றும் மருந்து போடும் பேத்தி அன்றும் அழுது கொண்டே களிம்பு போட்டது எல்லோருடைய மனத்தையும் உருக்கிவிட்டது. பாவம், சம்பார மடம் நாராயண அய்யர் நான் முதல் தடவையாக அவரைப் பார்த்தபோது இறந்துவிட்டிருந்தார். எப்படிப் பேசுவார் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை.
29. 3.1943
கால் பந்தாட்டம் ஒரு புனிதமான விளையாட்டு மைதானம் காலியாகி, மாலையும் மயங்கி இருள் தழ்கிறபோது, புன்னை மரத்தடியை ஒட்டிப் படிக்கட்டில் படுத்துக் கிடப் பேன். வியர்த்துக் கொட்டுவதும் உடல் சோர்ந்து தளநது விடுவதும் எத்தனை இதம். இளங்காற்று பிடரியில் அடித்துச் குளிர்விக்க, அமைதியிலும் பேரமைதி. நறபுறமும் இருள் சூழ்ந்து என் உடலைக் கவ்வுவதை உன்னிப்பாகக் കുഖങ് வாறு படுத்துக் கொண்டிருப்பேன். நெற்றிப் பொட்டும் மார்பும், புஜங்களும் கொதித்துக்கொண்டிருக்கும, ததடி பயங்கரமாகக் கொதிக்கும். நேரம் போகப் போகக் கொதிப்பு அடங்கி, உடல் சில்லிட்டுக் குளிர்வது பேரானந்தமான அனுபவம். விளையாட்டு நேரத்தில் பொங்கி வழிந்து கொண்டிருந்த எழுச்சி அடங்கி, மனம் நிர்மலமான ஆகாசம் போல் மாறும். வானத்தில் பறவைகள் விரைவாகக் கூடு திரும்புவதும், காகங்கள் புளியமரங்களில் அடைவதும்தான் லேசான நிம்மதியின்மையையும் சோகத்தையும ஏற்படுத்தக் கூடியன. 
கால்பந்தாட்டத்தில் எவ்வளவோ சவால்கள். கோபமற்ற சவால்கள். பயங்கரமான வெறி. ஆனால் பாதகமறறது. வெற்றியில் பெரும் எக்களிப்பு. ஆனால் நிறுவன அமைப்பு கள் இந்த விளையாட்டைக்கூடக் கீழ்த்தரமான தளத்திற்குச் சரித்துவிட்டன. நிறுவனங்கள், நோக்கத்தின் அடிப்படையையே உலரச் செய்து, அமைப்புகளுக்கே உரித்தான முட்களை முளைக்கவைத்துவிடுகின்றன. நோக்கம் பின்னகர்ந்து போய்விடுகிறது. கோபம், கசப்பு, மனிதத்தன்மை துறந்த இறுக்கமான விதிகள், சம்பிரதாயம், மரபு சாாநத அடிமைத்தனங்கள் படர்கின்றன. மனித மனம் மூல  பழக்கத்தில் கெடுத்துச் இடுக்கை ஏற்படுத்தி விடுகிறது. இதுதான் வளர்ச்சிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டை
 13. 3.1944
இந்தியா பூராவும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள், சுதந்திரம் கிடைத்து விட்டால் எப்படிப் பிரச்சினைகள் திரும்? ஒரு விட்டில் பாகப் பிரிவினை நடைபெறும் போது தெரியும் கனககு ஒரு தேசம் சம்பந்தமாக எப்படித் தெரியாமல் போக முடியும்? நினைப்பதை எல்லாம் வெளியே சொன்னால் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்ன உணர்ச்சி, என்ன ஆவேசம்! அரசியல் என்பதே கோபத்தை ஏமாற்றங்களை
வெறுப்புகளை ஒருமுகப்படுத்தி, ஒரே எதிரியை உருவகப் படுத்துவது என்றாகிவிடுகிறது. ஒரே எதிரி என்ற படிமம் தான் இங்கே முக்கியமானது. சிக்கலற்ற எளிமை. புரான மரபுக் கற்பனையைச் சார்ந்தது. சைத்தான் அல்லது ராவணன். அல்லது கம்சன். அல்லது துரியோதனன். வெள்ளைக்காரன், யூதர்கள் அல்லது சோவியத் யூனியன். ஒழித்துக்கட்டிவிட்டால் சொர்க்கம், அலையடித்துப் புதிய வாழ்வு கரையேறி வரும். நோய்கள் பல கூறாகப் பிரிந்து கிடப்பது பற்றியோ, சிடுக்கும் சிக்கலுமாகக் கிடப்பது பற்றியோ பேச ஆரம்பித்துவிட்டால் ஜனங்களுக்கு எட்டச் செய்ய முடியாது. ஒன்றைச் சொல்லு' என்று கத்துவார் கள் அவர்கள்.
 13. 9, 1945
மாக்சிம் கார்க்கியின் அமெரிக்காவிலே படித்துக்கொண்டி ருக்கிறேன். என்ன அற்புதமான எழுத்து. என்ன நுணுக்கம். வர்ணித்துத் திரவில்லை கார்க்கிக்கு. அமெரிக்க முதலாளித் துவத்துக்கு வளைத்து வளைத்துச் சவுக்கடி மொழிபெயர்ப் பதில் மேனன் கில்லாடிதான். ஆங்கில மொழிபெயர்ப்பு யாருடையது என்று தெரியவில்லை. படித்துப்பார்க்க வேண்டும். 
உலகச் சிந்தனை வளத்தையும், உலக இலக்கிய வளத்தை யும், நம் பின்னணி தெரிந்து, தேவையை உணர்ந்து வாசகனின் கிரகிக்கும் சக்தியைப் பற்றிய பிரக்ஞையுடன் மொழிபெயர்ப்புகள் கொண்டு வந்தால், நம் கருத்துலகில் ஒரு பெரிய மாற்றத்தைச் சிறுகச் சிறுக நிகழ்த்திவிடலாம் என்று மேனன் நம்புகிறார். அவருடைய மொழிபெயர்ப்பு கள் அவருடைய ரசனையைக் காட்டுகின்றன. பிரக்ஞை யையும் பொறுப்புணர்ச்சியையும் காட்டுகின்றன. பலர் இங்கு மொழிபெயர்ப்பது வேறொரு பாஷையும் தெரியும் என்று பயமுறுத்த.
 23. 9. 1945
மீனச்சில் ஆற்றில் கழிவுகள் கலப்பதைப் பற்றி எம். கே. அய்யப்பன் எழுதியிருக்கும் கட்டுரை சந்திரோதயத்தில் வெளிவந்திருக்கிறது. எவ்வளவு ஆழ்ந்த நோக்கு! இதன் பின்னுள்ள உழைப்பு எவ்வளவு கடுமையானது! விஷயங்களைச் சேர்ப்பதிலும் தொகுப்பதிலும் பல தளங்களில் விரியும்படி ஒன்றிணைப்பதிலும். நம் படிப்பாளிகள் கூட உழைப்பிற்கும், தரத்திற்கும், ஆழ்ந்த பார்வைக்கும், தார்மீக நோக்குக்கும், மதிப்புத்தரத் தெரியாதவர்கள். எதுவும் அதிர்ச்சியாகப் படுவதுமில்லை. அதிர்ச்சிதாங்கி இணைக்கப்பட்டுள்ள மூளைகள். காலங்காலமாக இதை மனிதன் குடித்துக்கொண்டிருக்கிறான். என்ன ஆகிவிட் டது? என்று படித்த கிழவர் ஒருவர் நூல் நிலையத்தில் கேட்டார். இயற்கைத் தாய் எல்லாவற்றையும் ஏதோ ஒரு விதத்தில் சமனப்படுத்திவிடுவாளாம்! 'அம்மைத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டேன். என் கேள்வியைக் காரியார்த்தமாக எடுத்துக் கொண்டு சட்டைக் கைகளைத் துக்கித் தழும்புகளைக் காட்டினார்.
 26. 10, 1945
சுதந்திரப் போராட்டம் தீவிரம் அடைந்துவிட்டது. பத்திரிகைகள் முழங்குகின்றன. காலைப் பத்திரிகைளைப் படித்து விட்டுத் தெரு வழியாக நடந்து போகும்போது வயிற்றுப் பாட்டுச் சலனங்களில் உலகம் அமிழ்ந்து கிடப்பது தெரிந் தது. ஏழை ஜனங்கள், இதுள்ளைக்காரன் இருந்தால் போதும் என்று சொல்வது அடிக்கடி காதில் விழுகிறது. மீன் சந்தைப் பக்கம், மாதா கோவில்களில், ஆஸ்பத்திரி களில், ஹோட்டல்களில், வெள்ளைக்காரன் இருந்தால் இவர்களுக்கு என்ன? வாழ்க்கை மிக மோசமாக இருக் கிறது. ஏதும் மாற்றத்தால் மேலும் மோசமாகிவிடும் என்று பயப்படுகிறார்களோ என்னவோ. அத்துடன் வெள்ளைக் காரன் ஆட்சி செய்யும் திறமை கொண்டவன் என்று உள்ளுர ஒரு நினைப்பு. நம்மவர்கள் மீது அவநம்பிக்கை பெண்களிடந்தான் இது அதிகம். அவர்களுக்குத் தங்கள் புருஷர்களைத் தெரியும், குடும்பத்தையே நிர்வாகம் பண்ணத் தெரியாதவன் தேசத்தை எவ்வாறு நிர்வாகம் பண்ணப்போகிறான் என்ற எண்ணம். 
அநேக நாட்களில் மாணவர்கள் பள்ளிகளையும் கல்லூரி களையும் வெறுத்துவிட்டு, பரம உற்சாகத்துடன் தெருக் களில் ஆர்ப்பரித்துக் கொண்டு போகிறார்கள். நேற்று ஒரு காட்சி பார்த்தேன். மாணவர்கள் சிலர் கூடி, எதிர்ப்படுபவர் கள் அனைவரையும் நிறுத்தி, வற்புறுத்தி, 'பாரத மாதாவுக்கு ஜே', மகாத்மா காந்திக்கு ஜே' என்று குரல் எழுப்பச் செய்தார்கள். சிறு பையன்களின் தலையில் குட்டியும், செவியைத் திருகியும் இதைச் செய்யச் சொன்னார்கள். வற்புறுத்தல் இன்றியே பல சிறுவர்கள் ஆர்வமாக உணர்ச்சி வசப்படக் கத்தினார்கள்.
வயதான ஒரு கிழவி கத்த மறுத்துவிட்டாள். 'கொன்றாலும் கத்தமாட்டேன்' என்றாள். கொள்கை காரணம் என்று நான்
நினைக்கவில்லை. வற்புறுத்தலுக்கு இனங்கக் கூடாது என்ற வீம்பு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த மனோபாவம் தான் சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்றி வந்திருக்கிறது.
 9. 12, 1946
எம். கே. அய்யப்பனிடமிருந்து இன்று பதில் வந்தது. நன்றி தெரிவித்து ஒரு வரி எழுதியிருக்கிறார். சிறிதும் உணர்ச்சி வசப்படவில்லை. இவரைச் சந்திக்க வேண்டும். தேடிப் போவதில் எனக்கு நம்பிக்கையில்லை. இயற்கையாகக்
கூடும். அதுதான் அழகு.
22, 12, 1946
வீட்டில் பிரச்சினைகள் முளைக்கின்றன. நான் மட்டும் வேலைக்குப் போகாமல் இருக்கிறேனாம். சொகுசாக இருக்கிறேனாம். இவர்களுக்கு உடல் உழைப்பு மட்டுமே உழைப்பு. மூளை உழைப்பு உழைப்பல்ல. அதிலும் வருமானமற்ற சிரம தானம். மர வேலை எனக்குப் பிடிக்கும். மனத்தைப் பரவசப்படுத்தும் நிமிஷங்கள் கொண்டதுதான். படைப்புத் திறனுக்கும் அழகின் வெளிப்பாட்டிற்கும் இடந்தரக்கூடியதுதான். அதிலும் என் செய்நேர்த்தியைக் கண்டு புளகாங்கிதப்படும் தகப்பனாரின் துணை வேறு. சிறு வயதில் இவ்வளவு செய்நேர்த்தி கொண்டிருந்தும், பயனற்ற புத்தகங்களில் ஏன் காலத்தை வீணாக்குகிறாய்? கண்களையும் கெடுத்துக்கொள்கிறாயே’ என்றார் அவர், தச்சு வேலைக்குக் கண்கள் வேண்டிய தில்லையா? என்று நான் கேட்டால், அவ்வளவு சூட்சும மான கண்கள் வேண்டாம் என்பார். எப்போதும் என் கட்சி பேசும் தாயாரின் அன்பு கஷ்டமாக இருக்கிறது. அவளுக்கு உடல் உழைப்பிலிருந்து மூளை உழைப்புக்குத் தன் குடும்பத்தை உயர்த்திவிட வேண்டும் என்ற எண்ணம். ஒரு குமாஸ்தாவைக் கல்யாணம் செய்துகொள்ளப் போதுமான படிப்பும், அறிவும், அழகும் தனக்கு இருந்துங் கடப் பெற்றோர்களின் சிரத்தைக் குறைவால் ஒரு தொழி லாளியை மணந்துகொள்ளும்படி ஆகிவிட்டதாம். வீட்டில் உணவு அருந்தும்போது குற்ற உணர்ச்சி ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.
 7, 1, 1947
நிஜின்ஸ்கி பற்றி எழுதிய கட்டுரைக்கு ஏழரை ரூபாய் சன்மானம் வந்திருக்கிறது. என்ன கணக்கோ! இக்கட்டுரை
எழுத ஒன்றே முக்கால் ரூபாய்க்கு ஒரு. புத்தகம் வாங்கி னேன். நூல் நிலையத்தில் நாற்பது நாற்பத்தைநது ಣ நேரம் படித்திருக்கிறேன். கட்டுரை எழுதி முடிக முறுை நாட்கள். நகல் எடுக்க ஒருநாள் காகிதம், இங்க் பிடி இத்யாதி எட்டனா மூளை உழைபபுககு ஒரு மணி  நேரத்திற்கு அரையனாவுக்கு மேல் சம்பாதித்திருக்கிறேன்.
12.4.1947
கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொள்ள முற்படும் போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ண மும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற றையும் திறக்கும்போது மேலும் பலகதவுகள் மூடிக்கிடப் பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப பார்க்கத்தானா? பெரிய சவால்தான் இது. 
அய்யப்பன் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக் கிறார். கதவுகளை உதைத்துத் திறக்கிறார். ‘என் ஜீவன் இருப்பது வரையிலும், கடைசி மூச்சு இருக்கும் வரை யிலும் உதைத்துக் கொண்டே இருப்பேன் என்கிறார். அந்த வைராக்கியத்தில் இருந்து வெளிப்படும் தகுருதம அவரைப் படிக்கும்போது நம் ஆத்மாவைத் தொடுகிறது. ஊரிலுள்ள தெருக்களைப் பார்ப்பது போல் சரித்திர கால நூற்றாண்டுகள் எதை வேண்டும் என்றாலும் அவரால பார்க்க முடிகிறது. ஆழ்ந்த விஞ்ஞான அறிவு தேர்ந்த அறுவைச் சிகிச்சை மருத்துவரின் கத்தி போல் அவர் பார்வை, எடுத்துக் கொள்ளும் விஷயத்தின் மேல் இறங்குகிறது. இமயம் போன்ற காலப் பகுதி. எண்ணற்ற ஊடுபாவுகள் நிறைந்த காலப் பகுதி. இங்கு போலிச் சத்தங்களை உதறிவிட்டு அர்த்த பாவத்துடன் முடிவதை நினைத்துப் பிரமிப்பு ஏற்படுகிறது. வனாந்திரத்தில் ஊடுருவி ஓடும் நதியைத் தாழ்ந்து பறக்கும் ஹெலி காப்டரிலிருந்து பார்த்துக்கொண்டு போவது மாதிரி ஆனால் நதியோரங்களில் எவ்வளவு காட்சிகள் மரங்கள அவற்றின் அசைவுகள். அழகுகள். பறவைகள். விலங்குகள் ஈயக்குண்டு போல் மனத்தை அழுத்தும் நிசப்தம் ஆனால முழு நீளத்தையும் இணைத்து ஒடுவது நதிதான் இல்வே பகுதிக்கும் தன்னில் ஒரு பகுதியைக் காட்டிக் கொண்டு பார்க்கக் கிடப்பவை அனைத்தையும் கவனித்துக் கொண்டு. சங்கமம்கட யாத்திரையின் முடிவல்ல. மீண்டும்
யாத்திரைக்கு ஆயத்தமாக, பெரும் விரிவில் இரண்டறக் கலந்து கொள்வதுதான். 
நானோ நதியைப் பார்க்கிறேன். கரையோரங்கள், ஓடும் நதியை விட அழகானவை என்று சில நேரம் தோன்று கிறது. மனத்தை அழுத்தும் அமைதியை வாரி உண்பதற் காக எதையும் பார்க்காமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டுவிடுகிறேன். புற்களின் ஓரங்களில் கட்டி நிற்கும் பனித்துளி மனத்தைக் கவர்ந்துவிடுகிறது. புல் நுனி வைரக்கற்கள் எந்தவிதத்தில் நதியைவிடக் குறைந்தவை? எங்கும் மலை மலையாகக் கொட்டிக் கிடக்கிறது அழகு. அர்த்தம் கண்டு எதைக் கொள்ள, எதைத் தள்ள? அர்த்தங் களை உருவாக்கும்போதோ, அனுபவம் கசங்குவது போல் வருத்தம் ஏற்படுகிறது. ஹிம்சைக்கு ஆளாக்கும் வருத்தம் ஏற்படுகிறது. நாம் கையில் ஏந்தும்போது, ஒரு பகுதியை, மிக முக்கியமான ஒரு பகுதியை இழந்துவிடுகிறோமோ என்று தோன்றிவிடுகிறது. காட்டில் பைத்தியம் போல் அலைந்து திரிகிறேன். நதியோரங்களிலும் நடந்து போகிறேன். பாதைகள் வசதியானவைகளே தவிர, பார்வையைச் சுருக்கக்கூடியவைகளோ என்று சந்தேகப்பட ஆரம்பித்து விடுகிறேன்.
 13. 4.1947
'ஒரு பைசா இல்லை என்ற நிலை. அம்மாவிடம் கேட்டால் தருவாள். என் நெருக்கடியைச் சமாளித்த சந்தோஷத்துடன். எங்கள் உறவு மேலும் நெருங்கும் என்ற சந்தோஷத்துடன். தன் கணவரால் செய்ய முடியாததை, தான் செய்வதான திருப்தியுடன். அப்பாவிடம் இவள் கொண்டிருக்கும் கோப தாபங்கள், எவ்வளவோ நற்காரியங்களைச் செய்யும்படி இவளை இம்சித்துக் கொண்டிருக்கின்றன. நன்மைகள், உதவிகள், தான தர்மம், சமூக சேவை, இவற்றிற்குப் பின்னாலுங்கட விரோதங்கள், கொடுமைகள், ஆங்காரம், துர்புத்தி, பொறாமை எல்லாம் இருக்க முடியும், மிக மோச மான அகந்தை சோறும் கறியுமாக வெந்து ஆயிரக்கணக் கான ஏழைக் குழந்தைகளின் வயிற்றை நிரப்புவதைப் பார்த்திருக்கிறேன். கற்பு உணர்வற்ற ஆண்கள், கற்பு உணர்வற்ற மனநிலையில், கற்புக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் பெண்களுக்கு எண்ணற்ற உதவிகள் செய்து வர, இதன் நாடி அறிந்து பெண்களும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். சமுதாயத்தின் ஆத்மா முற்றாகச் சுத்தமாகி மேலான சமுதாயம் தோன்றுமா? உள்ளும் புறமும் மனிதன் பரிசுத்தம் அடையட்டும். வேண்டாம் என்று
சொல்லவில்லை. மேலான சமுதாயத்திற்கு, இது நிர்ப்பந்த மான நிபந்தனை அல்ல. உறவுகளில் சிறிது நேர்மை. உண்மை மீது கொஞ்சம் மதிப்பு. பொது நன்மை சார்ந்த சில சுய நியதிகளைக் கூடியமட்டிலும் கைப்பிடித்தல். சுத்த ஆத்மாக்களின் சமுதாயம் எப்போதும் சரித்திரத்தில் உரு வானது இல்லை. மதிக்கத் தகுந்த சமுதாயங்கள் உருவாகி யிருக்கின்றன. நோயற்ற எவனும் இல்லை. நோயாளியாக ஆஸ்பத்திரியில் இருப்பவனும் மிகக் குறைவு. இந்நிலை சமுதாயத்திற்கும் பொருந்தும். உன்னத மனிதன்தான் உயர்ந்த சமுதாயத்தை ஏற்படுத்துவானா? ஆசாபாசங்கள் அற்ற, போட்டி மனோபாவமற்ற, அகந்தையற்ற, பொறாமை யற்ற மனிதன் உன்னத சமுதாயத்தை உருவாக்குவானா? 
என் தகப்பனாரையும் தாயாரையும் எடுத்துக்கொண்டு யோசிக்கிறேன். என் தகப்பனாரைப் பார்த்தால் மக்கு என்ற எண்ணம் ஏற்படும். உண்மையில் அவர் மக்கு அல்ல. இரண்டு விஷயங்களேனும் அவருக்கும் தெரியும். தச்சு வேலையில் அவர் நிபுணர். அவருக்குத் தெரிந்த காலம் மாறிக்கொண்டு வந்திருக்கும் கதையைப் பற்றி அவர் பேசுவது ஊன்றிக் கேட்கும்படி இருக்கும். ஆனால் அவர் ஆசாபாசங்கள் அற்றவர். போட்டி பொறாமை அற்றவர். அவருக்கு நண்பர்கள் இல்லை. குடும்பத்தில் நான்கு வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன்தான் கொஞ்சிக்கொண்டிருப்பார். ஒவ்வொரு நாள் காலையிலும் அம்மாவிடமிருந்து வெற்றிலை புகையிலைக்காக இரண்டு சக்கரம் வாங்கிக் கொள்வார். இது சற்று அதிகம்தான். அம்மா குறைக்க முயன்றால் சத்தம் போட்டு வாங்கிக் கொண்டுவிடுவார். இது போன்ற ஒன்றிரண்டு விஷயங்கள் தவிரப் பிற விஷயங்கள் எல்லாவற்றிலும் எதிராளிக்குச் சாதகமாகச் சமரசம் செய்துகொள்வார். சிந்தனைகள், கற்பனைகள், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் சொல் லும்படி இல்லை. இந்த நிமிஷம் அடுத்த நிமிஷத்தில் உதிர்ந்து போய் விடும் ஒரு வாழ்க்கை. நதியின் அடித்தட்டில் ஒரு கூழாங்கல், ஒழுக்கில் தனித்து ஒதுங்கிவிட்டது. தன்மீது எதையும் ஒட்டவிடாத திடமான கூழாங்கல். இருந்தாலும் நதியின் ஈரத்தைத் தவிர்ப்பதற்கு அதற்கு வழி தெரியுமா? தனது கவனத்தைத் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படக்கூடியதுதான். மெதுவாக அசையக் கூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்கு ஆளாகக் கூடியதுதான். இதுதான் அப்பா. எதிர் துருவம் அம்மா. உலையில் கொதிக்கும் நீரைப் போல் மூளை பரபரப்பு. படபடப்பு. தன் காரியங்களிலும்பிறர் காரியங்களிலும் பட்டுக்கொண்டே இருத்தல், பரக்கப் பாயும் சுறுசுறுப்பு. ஒய்வெடுத்துக்கொள்வதிலும், நாவின் ருசிக்குச் சிறிது இடங்கொடுப்பதிலும், அலங்கார ஆசை களை விட்டுவிடாததிலும் சதா குற்ற உணர்ச்சி. இரண்டு காசு செலவழித்துச் செய்ததை ஒரு காசில் முடித்திருக்க முடியுமோ என்று ஓயாத சந்தேகம். எல்லாம் சரிவரச் செய்து முடித்துவிட்டு, பின்னால் ஓய்வெடுத்துக்கொண்டு, உதறிய ஆசைகளையும் பூர்த்திசெய்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கற்பனை, அந்தப் 'பின்னால் ஒருநாளும் வரப்போவது இல்லை என்பது அவளுக்குத் தெரிவது இல்லை. எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் மூலம்தான் வாழும் காலங்களின் துன்பங்களை அவளால் தாங்கிக்கொள்ள முடியும். அண்டை அசலுடன் நெருங்கிய உறவு. கொடுக்கல் வாங்கல்கள். பரஸ்பர உதவிகள். இக்கட்டான நேரத்தில் சிரம தானம். தன்னை ஒரு தார்மீக சக்தியாக மாற்றிக்கொண்டு, நெருக்கடியில் நம்பலாம் என்ற உறுதிப்பாட்டைப் பிறருக்குத் தந்து, அவசியம் ஏற்படும் போது தான் சாய்ந்துகொள்ள வசதி யான தூண்களாகப் பிறரை மாற்றிவைத்துக்கொண்டிருக் கிறாள். மிக மோசமான அவசரத்திலும் தெரிந்தவர்களுடன் இரண்டு வார்த்தைகள் விசாரிக்காமல் போகமாட்டாள். கடைசியாகத் தெரிந்துகொண்ட நபரின் பிரச்சினை பற்றி எப்போதும் விசாரிக்கத் தவறமாட்டாள். இது முற்றாகப் பிரியமும் இல்லை. பிரியமற்ற நடிப்பும் இல்லை. ஈடுபாடு களை எப்போதும் மறக்காமல் வெளிப்படுத்துவது சிறு உறுத்தலாக இருக்கும். பிறருடைய கஷ்டங்களுடன் வெகுதூரம் நடந்து சென்றிருக்கிறாள். அவள் மூன்று நாட்கள் கண் விழித்த நோயாளியுடன் என்னால் அரை மணி நேரம் கழிக்க முடியாது. ஆனால் பிறரிடம் எதிர் பார்த்து ஏமாற்றம் அடையும்போது, அவர்கள் தர மறுத்த உதவிக்கு, நன்றாகத் திட்டி, கத்தி ஆர்ப்பாட்டம் செய்வாள். செய்ந்நன்றி மறத்தல் - இதுதான் சகல பாவங்களிலும் கொடுமையானது அவளுடைய அகராதியில், ஏனெனில் அவளுடைய மூலதனமே இதுதான். நிரம்ப ஆசைகள் உடையவள். மேல்தட்டுக்குப் போகக் கை சோராமல் துடுப்புப் பிடிக்கக்கூடியவள். ஒட்டப்பந்தயத்தில் தன்னுடைய நிலை எப்படியிருக்கிறது என்பதை அடிக்கடி அவதானித்துக் கொண்டு மேலும் விரைவாக ஒடுகிறவள். இப்போது என் தந்தையா அல்லது தாயாரா நல்ல சமுதாயத்தை ரு, வாக்கக்கூடியவர்கள்? என் தந்தையைப் போன்றவர். சிறந்த பிரஜைகள் என்று பதில் கூறவே நான் தயாரிப பட்டிருக்கிறேன். எனக்குக் கற்றுத்தரப்பட்ட நம்பிக்கைகள், நன்னடத்தைகள், அறவொழுக்கங்கள் அனைத்தும் என் தகப்பனாருக்குச் சாதகமானவை. ஆனால் நிச்சயமாகச் சொல்வேன் என் தாயைப் போன்ற வர்களே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். அதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
 13, 4,1947
(இரவு மணி பதினொன்று) காகத் தட்டுபாடு. இதைப் பற்றி நினைக்க ஆரம்பித்து வேறு எங்கோ போய்விட்டேன். ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. எவ்வளவோ நியாயங்கள் இருந்துங்கூடக் கடன் வாங்க மனம் கொள்ளவில்லை. இதற்குக் கடன் கேட்க சந்தர்ப்பம் சரிவர அமையவில்லை என்று சமாதானப்படுத்திக் கொள்கிறேன். ஆனால் அசந் தர்ப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு கடன் வாங்கிக் கொண்டு ஓடிவிடுகிறவர்கள், கடனைத் திருப்ப வாக்களித்துவிட்டுப் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. 
ரொம்பக் காசு வேண்டாம். ஏதோ கொஞ்சம். நூல் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வருவது எளிதல்ல. பசி தலையைச் சுற்றும், சிறிது ரொட்டியும் டீயும் போதும். ஆனால் அதற்குக்கூட வழியில்லை. கங்காதரன் இருந்தால் எங்கேயாவது கூட்டிக் கொண்டு போய் எப்படியோ அதட்டி வாங்கித் தந்துவிடுவான். கடன் கொடுக்க வேண்டிய இடத் தில் அதட்டி மேலும் கடன் வாங்கி விடும் சாமர்த்தியம். ஓமனக்குட்டி பிளாஸ்கில் கொண்டு வருவாள். ஒவ்வொரு நாளும் பிற்பகல் மூன்று இருபதுக்கு (என்ன கணக்கோ!) மரத்தடி துவைக்கும் கல்லில் உட்கார்ந்துகொண்டு ம குடிப்பாள். அம்மாவிடம் கேட்டால் எப்படியோ புரட்டிக் கொடுக்கத்தான் செய்வாள். கேட்கக் கஷ்டமாக இருக் கிறது. அதிலும் உணவுக்காக.

23. 4.1947
மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எடுக்கலாம் என்கிறார்கள். நண்பர்கள் சிபாரிசு. சுதந்திர ஜீவனமாம்! எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. பாடப் புத்தகங்களைக் கண்ணெ டுத்துப் பார்க்க முடியவில்லை. அவற்றின் அச்சும் அமைப் பும். அரசாங்க அச்சகமும் புனலூர் பேப்பர் மில்லும் ஆபாசத்தை எட்டிப் பிடிக்க ஒன்றுக்கொன்று போட்டிபோடு கின்றன. நவீன விஞ்ஞானச் சிந்தனையின் பாதிப்புக்கே ஆளாகாத கோயில் பாஷை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதுதான் முதன்மையான நோக்கம். என்னால் கூலிக்கு மாரடிக்க முடியாது. 
பத்திரிகை அலுவலகத்தில் ஏதாவது குட்டி வேலை கிடைத்தால் போதும். புரூஃப் ரீடர் வேலை. புனிதமான வேலை. பொய், அகடவிகடங்கள் இல்லாத வேலை, சென்னை ஆங்கில தினசரியில் காலி இருக்கிறது என்று தெரிந்து எழுதிப் போட்டேன். பதில் முன் அனுபவம் வேண்டும். கங்காதரன் சொன்னான், 'பெயரை கோபால சாமி அய்யங்கார் என்று மாற்றிக்கொண்டு நெற்றியில் நாமம் போட்டுக்கொள் என்று. இங்குள்ள பத்திரிகைகளில் இடம் தரப் பயப்படுகிறார்கள். நான் எழுதுபவற்றைப் பிரசுரம் செய்ய வேண்டும் என்பதுகூட இல்லை. வெளியே பார்த்துக்கொள்கிறேன். இல்லை, என் டிராயரில் வைத்துக் கொள்கிறேன். நான் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கும் கட்டுரைகள், கவிதைகளைப் பிரசுரம் செய்தால் போதும். (மோசமான கதைகளும், மோசமான கவிதைகளும் எழுதிக் கொண்டிருப்பவர்கள் சொந்தப் படைப்புகளை விட்டு மொழி பெயர்ப்பாளர்களாக மாறினால், நம் வளம் எவ்வளவோ ஓங்கிவிடும். உலகச் சிந்தனை வளத்தின் சிகரங்கள்; நம் மொழி விழுந்து கிடக்கும் பள்ளம். இதன் வேற்றுமை மனத்தில் பட்டால் மோசமான இலக்கிய உருவங்களுக்கு உழைப்பை இப்படி வீணாக்கிக்கொண்டிருக்க முடியுமா? மொழி, கலாச்சாரம், சமுதாயம் என்றெல்லாம் வாய்கிழியக் கத்துவது வெறும் பொய். இவர்கள் நோக்கமெல்லாம் தங்களை ஸ்தாபித்துக்கொள்வதும், உயர்வு பெறுவதும், பனம் பெறுவதும், புகழ் பெறுவதும்தான்.) 
ஆனால் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஆசிரியர்கள் வெளியிட மாட்டார்களாம். உலகச் சிந்தனை யாளர்களின் பொன் மொழிகளை அவர்கள் அவ்வப்போது உதிர்ப்பது, அச்சிந்தனையாளர் மீது கொண்ட மதிப்பினால் அல்ல. தங்கள் புலமையை வெளிப்படுத்திக்கொள்ள இந்தச் சிந்தனையாளர்கள் அவர்களுக்கு ஒரு கருவி. நானோ மொழிபெயர்ப்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்துள் ளேன். என்னிடம் காசு இல்லை. என் நம்பிக்கைகள் செயல் வடிவம் பெற இது பெரிய தடை. ஒரு கட்டுரைக்கு ஐந்து ரூபாயிலிருந்து ஏழரை ரூபாய் வரையிலும் சன்மானம் தருகிறார்கள். மொழிபெயர்ப்புகளைத் தப்பித் தவறி வெளி யிட்டாலும் சன்மானம் கிடையாதாம். சொந்தச் சரக்கு அல்லவே' என்கிறார்கள். அப்படியானால், மூல ஆசிரியர் களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறார்களா என்ன? நண்பர்களுடைய யோசனை, ஆப்பிளை வெண்டைக்காய்
ஆக்குவது மேல்நாட்டுச் சரக்கைத் தழுவி. இதைவிடப் பட்டினி கிடக்கலாம். 
எனக்கு என்ன வேண்டும்? ஒரு நாள் உணவுக்கு ஒரு Lങ്ങു. மேனன் எப்போதும் அவருக்கு எடுக்கும்போது எனக்கும் சேர்த்துத் துணி எடுத்துவிடுகிறார். எளிய சந்தோஷமான சூழ்நிலை வேண்டும். கால் இல்லாத ஒரு நார்க் கட்டில். ஒரு தலையணை. நீச்சல் அடித்துக் குளிக்க நதி. இருப தாம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நூல நிலையம். ஆத்மார்த்தமான ஒன்றிரண்டு நண்பர்கள். கூராக எழுதும் ஒரு பேனா. இதற்கு மேல் வருடத்திற்கு ஆயிரம் மைல் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் கறற முடிந்தால் அது கடவுள் தந்த விசேஷ போனஸ்.
 2.12.1947


 வாழ்க்கையில் பிடிப்பு என்பதே இல்லை. எதை நம்பி உயிர் வாழ? கடவுள் சரிந்துவிட்டார். சமயங்கள் சரிந்துவிட்டன. ஆலயங்கள் அழுகி முடை நாற்றம் எடுத்துக்கொண்டிருக கின்றன. பண வெறிபிடித்து அலைகிறான் மனிதன். உறவு களில் மனிதத் தன்மை முற்றாக உலர்ந்துவிட்டது. எல்லா மனங்களும் உள்ளுரத் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. அமைதியின் குடிநீர் கிடைக்காமல் நா உலர்ந்துவிட்டது. கடற் காற்று, சில சமயம் சூறை, இல சமயம் தென்றல் சில சமயம் அலைகளின் கொந்தளிப்பு. சில சமயம் குளம் போல் கிடக்கும் அமைதி. பாய்மரம் இல்லை. துடுப்பு இல்லை. திசைகளைத் தீர்மானிப்பது காற்று. அதன்மீது நமக்கு எவ்விதப் பிடிப்பும் இல்லை. காற்றோ உருவமற்றது. நெறி அற்றது. குறி அற்றது. அடிவானம் எங்கே? கரை எங்கே? பெரும் தவிப்பு.
 2. 3. 1948
புத்தகக் கடைகளுக்குச் சென்று சலிப்புடன் திரும்புகிறேன். புத்தகங்களில் ஈடுபாடோ அறிவோ அற்றவர்கள் புததக கடை நடத்துகிறார்கள். அவர்களுக்குப் புத்தகங்களும ஒரு பண்டம். புத்தகங்கள் வாங்கக் கையில் காக இருப்ப தில்லை. ஆனால் புதிய புத்தகங்களைப் பாாபதும, புரட்டுவதும், ஒரத்தாள் செய்திகளை இலவசமாகப் படி: பதும் பேரானந்தமானவை. இதற்குக்கூட அதிக சந்தர்ப்பம் கிடைப்பது இல்லை. போய் உட்கார இடம் இல்லை. நண்பர்களைத் தேடிப் போவதை அவர்களுடைய மனைவிகள் வெறுக்கிறார்கள்


மனைவிகளின் பெரிய எதிரி கன வனின் இலக்கிய நண்பனே. கணவர்களைத் தங்கள் கைகளிலிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயப்படுகிறார் கள். ஆழ்ந்த பேச்சும் ஈடுபாடும் அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. லெளகீகத்தில் பற்றுக் குறைந்து, தங்கள் மீது பற்றுக் குறைந்து, வாழ்க்கையை நிமிர்த்து வதற்குக் கணவன் பயன்படாது போய்விடுவானோ என்று பயப்படுகிறார்கள். நண்பர்களின் மனைவிகளால் நான் வெறுக்கப்படுகிறேன். நாளாவட்டத்தில் அவர்களுடைய மனோபாவத்தைத்தான் நண்பர்களும் பிரதிபலிப்பார்கள்.
 25, 3.1948
எம். கே. அய்யப்பனைச் சந்தித்தது ஒரு பெரும் பேறு. எனது தனிமையையும் துக்கத்தையும் அவர் உணர்ந்துகொண்டார். சேர்ந்து வாழலாம் என்றார். எனக்கு ஆட்சேபணை இல்லை. மீனச்சில் ஆற்றங்கரையில் இயற்கையின் அற்புத மான பின்னணியில் அந்த மரக்குடிலில் வாழக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்ன துன்பம் இழைத்தோம் என்பதற்காக எங்களை விட்டுப் போகிறாய்? என்று கேட் டாள் அம்மா. 'உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக் கிறேன் நான் என்றாள். என்ன சொல்ல? குடும்பத்தோடு இணையவே முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் துன்ப மாக இருக்கிறது. எச்சில் இலைகளுக்கு அடித்துக்கொள் ளும் நாய்களைத்தான் குடும்பத்தில் பார்த்துக்கொண்டிருக் கிறேன். ஈனப் புத்திகள் பல்லைக் காட்டுகின்றன. நாகரிகம், இங்கிதம், தளுக்கு உபசாரம், அன்பு, ஆதரவு, அனைத்தும் போலி. வெறும் பொய். உள்ளே வெறும் பொக்கு. அனைத்தும் கலகலத்துக்கொண்டிருக்கின்றன. குடும்பம் என்ற நாடக கோஷ்டியிடம் ஒரு பெரிய படுதா மட்டும் மிஞ்சியிருக்கிறது. அம்மாவைத் தேற்ற முடியவில்லை. ‘ஓ’ வென்று அழுகிறாள். ஒரு தாய் இவ்வாறு அழும்போது மனத்தை ஆழமாகத் தொட வேண்டாமா? தொடத் தவறு கிறது. ஏதோ ஒருவிதமான தடை மனத்தை நெருக்குகிறது. எனக்காக அழவில்லை என்றும், தனக்காகத்தான் அழு கிறாள் என்றும் தோன்றுகிறது. தகப்பனின் கரங்களுக்குள் விழ மறுத்து அழுவதாகத் தோன்றுகிறது. இருந்தாலும் இவளை நான் என்னுடன் அழைத்துப்போகவே விரும்பு கிறேன். ஆனால் அய்யப்பனின் குடிலில் நிலவும் பேரமைதி இவளைப் பார்த்த மாத்திரத்தில் தற்கொலை செய்து கொண்டுவிடுமே, அதற்கு என்ன செய்வது? பக்கர் முதலாளிக்கும் எம்.கே. அய்யப்பனுக்குமுள்ள உறவு விசித்திரமானது. பக்கர் ஐந்தாவது வகுப்பு ഖரை படித்தவர். எம். கே. அய்யப்பனின் புள்ளித் தோழர் அய்யப்பன் மீது ஆச்சரியம் கலந்த இவருக்கு அய்யப்பனின் கனவுகள் நிறைவேறும் போது பக்கர் போன்ற கோடீசுவரர்களுக்கு இடம் இருக்க முடியாது என்பது அவருக்குத் தெரியுமா என்பது எனககுத தெரியவில்லை. 
மீனச்சில் ஆற்றங்கரையோரம் இருக்கும் பக்கர் முதலாளி யின் மர அறுப்புத் தொழிற்சாலை பிரம்மாண்டமானது. எங்கும் தடிகள் அறுத்து அடுக்கியிருக்கும் மரப்பலகை களின் அட்டிகள். அறுக்கும் மரத்தின் பச்சை மணம். ஏக காலத்தில் பலர் மரத்தை அறுத்துக் கொண்டிருப்பார்கள். இந்த இடத்தில் சுமார் ஐம்பது ஏக்கர் முதலாளிக்குச் சொந்தமாம். இப்போது அய்யப்பனுக்குக கொடுத் திருக்கும் மர வீட்டில்தான் ஒரு காலத்தில் அவர் குடியிருந் தார். மர டிப்போவின் முன் ஆறு முனனும பின்னும் குறுகி, நடுவில் விரிந்து, முதலையின் உடல் போல் ஓடும். மந்தமான, கபடமான அசைவு. ஆழமில்லை. ஆனால ஆழத்திற்குரிய கம்பீரத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக கிறது. விழுந்தால் இறந்தோம் என்ற எண்ணுததை ஏற்படுத் தும்படி உலகின் அழகான துண்டுகளில் இதுவும்  ஒன்றாக இருக்கக்கூடும். இங்கு காற்றும், காற்றில் மரங்களின் சலனங்களும், காரியங்களில், வேலைகளில் மனிதர்களின் சலனங்களும் அற்புதமானவை. கண்களுக்குக் கிடைக்கும் இயற்கை, காலத்தையும் மனத்தையும் மென்மை படுத்தக் கூடியது. ஆண்கள் துறை. சற்று எட்டிப் பெண்கள் துறை நீச்சல் அடிக்கும் ஆண்கள், பெண்கள் குழநதைகள மரத்தடியில் ஆண்களும் பெண்களும் சுற்றிவர உட்கார்ந்து பெரிய பானைகளிலிருந்து நீண்ட மூங்கில் கைகளைக் கொண்ட சிரட்டை அகப்பையில் கஞ்சி குடிப்பார்கள் மாலை ஐந்து மணி வாக்கில் வேலையை முடிதது ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்புவார்கள். அகனறு மார்புகளும் திரண்ட புஜங்களும் கொண்ட ஆண்களுக்கு கால்கள் சோனியாக இருக்கும். கால் பந்தாட்டக்காரர் களுக்கு நேர்மாற்றி. பந்தாட்டக்காரர்களின் காலகளும, மர அறுப்புக்காரர்களின் மார்பும் புஜங்களும் இணையும் போது முழு மனிதன் கிடைக்கிறான். 
உடல் பயிற்சிகளிலும் சரி, மனப் பயிற்சிகளிலும் சரி, ஒரு பக்கம் வீங்கி மறுபக்கம் சிறுத்துப் போய்விடுகிறது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் எல்லோருமே ஒரு பக்கம் வீங்கிப் போனவர்கள்தாம். ஒரு துறையின் மீதான அதிக ஈடுபாடு, அத்துறையின் மீது அதிக ஆட்சியை ஏற்படுத்தும்போதே வேறு துறை சார்ந்த அஞ்ஞானத்தை யும் ஏற்படுத்திவிடுகிறது. ஒரம் கார்ந்த பயிற்சிகளிலிருந்து தனிப்பெரும் குனம்கொண்ட கண்ணோட்டங்கள் உருவா கின்றன. ஆனால் இந்தக் கண்ணோட்டங்கள் முழுமை யானவையாக இருக்க முடியாது.
எம். கே. அய்யப்பனின் தகப்பனார் அவர் காலத்தில புகழ் பெற்ற வைத்தியர். யானைகளுக்கு அவ்வப்போது ஏற்படும் மந்தத்தைத் தீர்க்கும் மருந்து, தலைமுறை தலைமுறை யாக இந்தக் குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்டு இலவச மாக அளிக்கப்பட்டுவருகிறது. யானைப்பாகர்கள் அய்யப் பனையும் விட்டுவைக்கவில்லை. அய்யப்பன் வைத்தியம் படித்ததில்லை என்றாலும் இந்த மருந்தை மட்டும் தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. அன்றாடம் ஒன்றிரண்டு யானைகள் வருகின்றன. இவற்றைக் கரும்புள்ளிகளாக வெகு தொலைவில் கண்டு பிடித்து விடுவது என்னுடைய வேலை. யானை, வீட்டின் பின்பக்கம் வந்து நிற்கும். யானைப்பாகன் வாயைத் திறக்க மாட்டான். மரத்தடியில் சென்று உட்கார்ந்து, பின் வாசலையே பார்த்துக் கொண்டிருப்பான். யானை துதிக் கையை அற்புதமாக அசைத்தும், சீறிப் புழுதி கிளப்பியும், உடல் பாரத்தை மாற்றியபடியும் நிற்கும். அய்யப்பன் அவர் ஈடுபட்டிருக்கும் வேலையை ஒரு குறிப்பிட்ட நிமிஷத் தில் நிறுத்தி, உள்ளே சென்று, மண் பானையைத் திறந்து வெல்ல உருண்டை போன்ற மருந்தை எடுத்துக்கொண்டு வருவார். யானையை வாய்திறக்கச் செய்வான் பாகன். முழுக் கையும் உள்ளே போகும்படி மருந்தைத் தொண் டைக்குள் வைத்து விட்டு யானையைச் செல்லமாகத் தட்டுவார் அய்யப்பன். யானைப்பாகன் எதுவும் பேசாமல் யானையை அழைத்துச் செல்வான்.
 7. 9. 1948
ஓமனக்குட்டியுடன் பேசிக்கொண்டிருந்தேன். கூச்சம் என்ற பொய்ப் போர்வை போர்த்திக்கொண்டிருப்பவள். லெளகீகப் போர்க்களத்தில் பெரும் வீராங்கனை. பழகப் பழக வார்த்தைகளை அள்ளி இறைக்க ஆரம்பித்துவிடு வாள். அவளுடைய சத்தமே போதையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சம்பாஷணை என்பது அவளுடைய முகத்தைத் தன் மனக்கண்ணாடியில் பார்த்து அலங்காரம்
செய்துகொள்வதற்கு நான் சாட்சியாக நிற்பது என்பதுதான். மற்றபடி என்னைப் பற்றி ஒரு கேள்வியுமில்லை. விசா ரணையுமில்லை. நீங்கள் எழுதுவீர்கள் என்று தெரியும்' என்று மட்டும் சொன்னாள். அதைவிட அதிகம் அவளுக்குத் தெரியும். என்னைப்பற்றித் தெரிந்ததை என்னிடம் சொல் வது தனக்குத் தோல்வி என்று நினைக்கிறாள் போலும், பேரழகி இவள், நெற்றி வகிட்டிலிருந்து கழுத்து வரையி லும் விரிந்து பிரகாசிக்கும் அழகு, ஒரு ஓவியனின் விரலைச் சுண்டி இழுக்கக்கூடியது.
 13. 10. 1948 
மனம் ஓயாமல் தத்தளித்துக்கொண்டே இருக்கிறது. உள்ளுர இனந்தெரியாத பாரம் எதிர்காலத்தில் பல துன் பங்கள் தலை மீது கவியக் காத்துக்கொண்டிருக்கின்றன என்று எப்போதும் நினைக்கிறேன். அருமையான பல உறவுகள். அநேகமாக எல்லாம் புளித்துப்போய்விட்டன. என்னிடம் குறைகள் இல்லை என்று நான் எண்ணவில்லை. ஆனால் எனக்கு எட்டிய வரையிலும், என்னை விசாரணை செய்துகொண்டே இருக்கிறேன். ஆனால் எவ்வளவு விட்டுக் கொடுத்து யோசிக்கும்போதும், நண்பர்களின் நடத்தை களில் நியாயம் இல்லை என்று எனக்குப் படுகிறது. என் மீது உள்ளுர்க் கோபத்தை வளர்த்துக்கொண்டுவிடுகிறார் கள். கங்காதரன் சொன்னது ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம். என் உண்மை உணர்ச்சியும் பார்வையும் தான் எனக்கு எதிராக ஒரு வளையத்தை உருவாக்குகிறது என்றான் அவன். இருக்கலாம். அப்படியே வைத்துக்கொண் டாலும் என்னால் எப்படியோ எல்லோருக்கும் சங்கடம் ஏற்பட்டுவிடுகிறது. எல்லோரையும் இழந்துவிட்டு நிற்கும் போது உண்மையும் திறமையும் இருந்து என்ன பயன்?
 9,4,1949
நட்புகளின் கோலாகலம், ஆத்மார்த்தமாகவும் மனதுக்கு இசைவாகவும். அய்யப்பன், மேனன், சம்பத். மூன்று வெவ்வேறு விதமான அனுபவங்கள். சூறை, காற்று. தென்றல். இவர்களுடன் பழகும் போது வாழ்க்கை மீதே கொஞ்சம் பிடிப்பு ஏற்படுகிறது. நம்பிக்கை ஏற்படுகிறது. காரணம், இவர்களிடமிருக்கும் உண்மை அம்சம்தான். மேனன் காட்டும் அன்பு மனத்தை நெகிழ வைக்கக்கூடியது. உள்ளே எவ்வளவு இருந்தாலும் கூச்சத்துடனும் வெட்கத் துடனும் அன்பைக் கொஞ்சமாகக் காட்டுவார். இந்தச் சிக்கனம்தான் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கால்பந்தளவு புனுகை உருட்டிக் காட்டினால் புனுகுதானா என்று நான் சந்தேகப்பட ஆரம்பிப்பேன். அருமைக்கு அளவு மிக முக்கியம்.
 I7. 4.1949
திருநக்கரை மகாதேவர் கோவில் பக்கம் மற்றொரு கிருஷ்ணன் கோவில், கிடுகிடு பள்ளத்தில் இருக்கிறது. மகாதேவர் கோயிலிலிருந்து பல படிகள் இறங்கி ஒரு சந்து வழியாகப் போக வேண்டும். சந்தில் மீண்டும் படிகள். கோவில் பக்கம் குளம், வாரத்தில் ஒன்றிரண்டு முறையே னும் நான் இக்குளக்கரைக்குப் போகிறேன். கோவிலின் பின்பக்கம் புறாக்கள் வருகின்றன. காலை நேரங்களில் ஒன்றிரண்டு அல்லது இரண்டு மூன்று. பத்து மணிக்குக் கோவிலைச் சாத்திக்கொண்டு நம்பூதிரி போய்விடுகிறார். அதன் பின் ஆள் அரவமே இல்லை. அந்தப் பிராந்தியமே அதன் மண் தன்மையை உதறிவிட்டு மேகங்களை அடைய முன்னுவது போல் தோன்றுகிறது. இந்தப் பிரயாசையின் மத்தியில்தான் புறாக்கள் வந்துசேருகின்றன. குறிப்பிட்ட இடத்திலேயே அவை வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றன. கோயிலின் பின்சாய்ப்பின் கீழே மண் தரையில், ஈர மண்ணில் வாரியலின் தடம் தெரியும். அதை அடுத்துச் சுவர். அந்தச் சுவரைத் தாண்டிக் குளத்தில் இறங்கும் படிகள். கோயிலின் பின்பக்கம் வேலி. அதன் பின் அடர்த்தி யான தோட்டம், கூரையின் விளிம்பில் புறாக்கள் அமர்ந்து தலையைத் திருப்பி எதையோ ஆராய்கின்றன. பெரு வெளியில் எவ்வளவு குறைந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு பெரிய அழகை ஏற்படுத்துகின்றன! தங்கள் நிலைகளை அவை கணத்துக்குக் கணம் மாற்றிக் கொண்டிருக்கின்றன. குளக்கரையின் மறுபக்கம் மரத்தடி யில் அமர்ந்து இவற்றையெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது என்னிடம் சஞ்சலமும் சோகமும் கலந்த வியப்பு ஏற்படுகிறது. 
என் காட்சிக்கு இலக்காகும் இவையெல்லாம் என்ன? எத்தனை ஏற்பாடுகள்? இதன் பின் நின்று தொழில்படும் நியதி என்ன? புறாக்கள், மரங்கள், நம்பூதிரி. இவர்கள் வெவ்வேறு வடிவமும் வெவ்வேறு இயக்கமும் ஏன் கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு கொள்ள அவசியமான நியதிகளை உருவாக்கிய கரங்கள் யாருடையவை? இவை எல்லாவற்றிற்கும் எனக்குமுள்ள உறவு என்ன? எனக்கு இவ்வாறு இவை படுவது போல் இவற்றுக்கு நான் எவ்வாறு படுகிறேன் ? ஒரு புறாவின் வாழ்வு என்ன பொருள் கொண்டது? பிறப்பு, உணவு, வேட்டை இனவிருத்தி, முடிவு. (மிருகங்களும் பட்சிகளும் எங்கு இறந்துபோகின்றன என்பதே தெரியவில்லை.) மனிதன் மட்டும் துக்கமுள்ளவனாக இருக்கிறான். பெரும் துக்கம் கொண்டவனாக.சந்தோஷத்திற்கு அதிக ஆசைப்பட்டவனும் அவன்தான். ஆசைப்படவும், தேடவும், மாற்றியமைத்துக் கொள்ள வழிவகைகள் தெரிந்தவனும் வழிவகைகளைத் தேடி அலைபவனும் அவன்தான். அதிகமாகத் துக்கப்பட்டுக் கொண்டு நிற்பவனும் அவன்தான். மனிதனைப் பற்றி யோசிக்கும் போது அவனுக்கு ஒருநாளும் விமோசனம் இல்லை என்றே தோன்றுகிறது. சந்தோஷம் அவனை ஸ்பரிசிக்கவில்லை. சந்தோஷம் கவியும்போது அவன் அதிருப்திக்கு ஆளாகி, வந்துசேராத சந்தோஷத்தைக் கனவு காண ஆரம்பித்துவிடுகிறான். வந்து சேர்ந்தவை எல்லாம், வந்துசேர்ந்துவிட்டவை என்பதாலேயே அவனுக்கு அற்பமானவை. தன்னையும் துன்பப்படுத்திக்கொண்டு பிறரையும் துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறான். உறவுகள் பயங்கரமாகச் சிடுக்காகிக்கொண்டிருக்கின்றன. மனிதனுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் காரியங் களுக்கும், மனிதனுக்கும் நிறுவனங்களுக்கும், மனிதனுக் கும் தத்துவங்களுக்கும் இலட்சியங்களுக்கும், உறவுகள் அனைத்தும் சிடுக்குகள். மனித ராசியில் ஒரு ஜீவனுக்கா வது சுயவாழ்வு இல்லை. சுயசார்பு வாழ்வு இல்லை. அடுத்தவன் மீது சாய்ந்து வாழ்கிறான். அடுத்தவன் மற்றொருவன் மீது கணவன் மனைவி மீது மனைவி குழந்தைகள் மீது நண்பர்கள் மீது அரசாங்கத்தின் மீது. தத்துவங்களின மீது ஓயாத சாய்வு. தன் காலை முற்றாக வெட்டிக்கொண்ட சாய்வு. இச்சாய்வுக்குப் பெயர்களே உறவுகள். பிற ஜீவராசிகளுக்கு இந்தத் தீராத சாய்வு இல்லை. இப்புறாக்களுக்கு மனிதனைப் போல் அடிமைத் தனமான சாய்வு இல்லை. அவை இறக்கைகள் கொண் டவை. ஒருநாள் இவையும் நோயுற்றோ, விபத்தில் சிக்கியோ, வயோதிகம் கவிந்ததாலோ மரணத்தின் வாயில் விழும். வெளிக்குத் தெரியாமல், சுவடு தெரியாமல், ஏதும் பரபரப் பின்றி இவை மரணங்களில் ஒடுங்கும். ஆனால் இவற்றிற்கு வாழ்வே மரணம் அல்ல. மரணம்தான் மரணம். வாழ்வு. சிறகடித்து வானில் பறக்கும் வாழ்வு. மனிதனோ, கணந் தோறும் மரித்துக்கொண்டிருக்கிறான். மரணத்திற்குப் பயந்து மரித்துக்கொண்டிருக்கிறான். உறவுகள் முற்றாகக் கசந்த பின்னும், தற்கொலை அச்சத்தை ஊட்டுகிறது அவனுக்கு. என்ன காரணத்திற்காக அவன் இங்கு புதை பட்டுக் கிடக்கிறான் என்பது அவனுக்கு இன்னும் சரிவரத் தெரியவில்லை. அவனுடைய பொறிகள் சங்கிலியால் மண்ணுடன் பிணைக்கப்பட்டுக் கிடக்கின்றன. தேனில் கால்கள் சிக்கிக்கொண்ட ஈ போல் அவன் அவஸ்தைப் படுகிறான். இந்நிலையில் ஈக்களுக்குத் தேன் உணவல்ல. எழுந்து பறப்பதே அவற்றின் ஜீவப் பிரச்சினை. அதற்காகத் தங்கள் முழு பலத்தையும் அவை திரட்டுகின்றன. ஆனால் காலிலோ திட்பத்தின் விலங்கு.
 29.4.1949
தெளிவில்லாமலும், முரண்பட்டும், ஏறுக்குமாறாகவும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அய்யப்பன். இருக்கலாம். ஒவ்வொரு கணத்திலும், அந்த கணத்தில் படும் உண்மையை எட்ட ஆவேசமாகப் பாயும் குணம் என்னுடையது. அய்யப்பனுடைய அணுகல் நிதானமானது. தர்க்கரீதியானது. அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற தத்துவங்கள் சார்ந்த அளவுகோல்கள். இவற்றில் சிக்கும் விஷயத்தை முன்வைத்துப் பேச ஆரம்பிக்கிறார். இதற்கு அப்பாலும், அவர் தேடிச் செல்வது, நாம் அவர்மீது சிரத்தை கொள்ளக் காரணமாகிவிடுகிறது. ஆனால் இந்தப் பயணங்களில் உணர்வின் கீற்றுகள் வியாக்கியானங்களுக்கு ஆளாகித் தத்துவத்தின் ஒரு பகுதியாக வந்து ஒட்டிக் கொள்ளும்போது இக்கீற்றுகள் சப்பி உருக்குலைந்துபோய் விடுவன போல் தோன்றிவிடுகின்றன. அனுபவங்களை விண்டு பார்க்கும்போது அவற்றிற்கு இரண்டு முகங்கள். ஒன்று: பிறருக்கு விளக்குவது. மற்றொன்று தனக்குத் தானே அரற்றிக்கொள்வது. இதன் ஒரு முகம் கவிதை என்றால், மற்றொரு முகம் தத்துவம் தத்துவம், கவிதை இழந்து குறைபட்டு நிற்கிறது. தத்துவத்தின் முன்னுருவங்களான கவிதைகள் கலைஞர்களிடமே சிக்கி இருக்கின்றன. (பால் சாக் பற்றி மார்க்ஸ்சம், தஸ்தாயேவ்ஸ்கி பற்றி ஃப்ராய்டும் கூறியுள்ளவை நினைவுக்கு வருகின்றன.) அனுபவத்தை மூளையால் அள்ளும்போது குறைந்து போகும் பகுதியைக் கலைஞன் நிரப்புகிறான். மேலும் தத்துவ ஞானி, மேலான கலைஞனை எப்போதும் உன்னிப் பாகக் கவனித்துக்கொண்டுவந்திருப்பது இதனால்தான்.
 28.8. ፲949

நேற்று பஸ் நிலையத்தில் வினோதமான காட்சியைப் பார்த்தேன். இரு கைவிரல்களும் அற்ற ஒரு குஷ்டரோகி சுருட்டுப் பிடிக்கிறான். ஈர்க்குச்சியைச் சுருட்டில் குத்தி, வணங்குவது போல் கைகளால் ஈர்க்குச்சியைப் பிடித்துக்..