தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, April 19, 2016

வண்ணங்கள் - அசோகமித்திரன்




வண்ணங்கள் - அசோகமித்திரன்
Automated Google_OCR script in python by TShrinivasan

https://archive.org/details/orr-12701_Vannangal
ஒரு வெளியூர் நண்பரிடமிருந்து வந்த கடிதத்தில் நான்கு சட்ட புத்தகங்களை வாங்கி அனுப்புமாறு இருந்த வேண்டுகோளினால் எனக்கு ஒரு புது உலகமே தெரியலாயிற்று. சட்ட புத்தகங்கள் என்பது பிரபல நீதிபதிகள் அல்லது வக்கீல்களின் பெரிய பெரிய உருவப் படங்களில், பின்னணியில், அலமாரி களில் அடுக்கி வைத்திருக்கும் தடிப்புத்தகங்கள் மட்டும் இல்லை; பல வெளியீடுகள் இருபது முப்பது பக்கங்களே கொண்டதாக இருக்கும்; சில தடிப் புத்தகங்கள் பதினைந்து ரூபாயளவில் கிடைக்கும் போது சினிமா பாட்டுப் புத்தகம் போன்றுள்ள சில வெளியீடுகள் ஐந்து ரூபாய்க்குக் குறையாத விலையுடையதாக இருக்கும்; எல்லாவற்றுக்கும் மேலாக நான் தெரிந்து கொண்டது, இவை எல்லாப் புத்தகக் கடைகளிலும் கிடைக்காது.

ஆதலால் முதலில் இந்தச் சட்ட புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தேன். புத்தக விற்பனைத் துறையில் இருப்பவர்களிலேயே இது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக இல்லை. லிங்கிச் செட்டித் தெருவில் வரதாச்சாரி கடையில் கிடைக்கும் என்று ஒருவர் சொன்னார். சென்னை ஹைகோர்ட்டுக்கு நேர் எதிரே உள்ளது இந்த லிங்கிச் செட்டித் தெரு. ஹைகோர்ட் டுக்குப் பக்கத்திலே சட்டக் கல்லூரி, கல்லூரி என்னும்போது பாட புத்தகங்களும் ஒரு நியாயமான சேர்க்கை எனக்கு ஏன் முதலி லேயே ஹைகோர்ட்டு சமீபத்தில் சட்ட புத்தகங்கள் விற்கும் கடை கள் இருக்க வேண்டும் என்று தோன்றவில்லை என்று சிறிது வெட்கமாகக்கூட இருந்தது. நான் வரதாச்சாரி கடையைத் தேடிப் போனேன்.

இங்கு கூடத் தேடிப் போனேன் என்றுதான் நினைக்கவும் சொல்லவும் தோன்றுகிறது. உண்மையில் சாதாரணமான பார்வை யிருப்பவன் கண்ணைத் திறந்து வைத்திருந்தாலே லிங்கிச் செட்டித் தெருவும் கிடைத்துவிடும்; வரதாச்சாரி கடையும் உடனே கண்டு கொள்ளத் தெரிந்துவிடும். ஆனால் நான் ஒரு கடைக்கு எதிரிலே

ப.வே.-14



________________

210 பறவை வேட்டை | வண்ணங்கள்

நின்று கொண்டு வரதாச்சாரி கடை எங்கே இருக்கிறது என்று விசாரித்தேன். ஆனால் அந்தக் கடையே வரதாச்சாரி கடைதான். பளபளவென்றும் டம்பமாகவும் பெயர் பலகைகள் பார்த்துப் பார்த்து மூளை மந்தித்துவிட்டதில் இந்தக் கடையின் பெயர்ப் பலகை எடுத்த எடுப்பில் என் கவனத்தில் படவில்லை.

கடையில் நுழைந்த போதும் வெட்க உணர்ச்சி. ஏதோ விக்கிர மாதித்தன் கதையின் மந்திரவாதியின் உயிர்நிலையைத் தேடிக் கண்டுபிடிப்பது போல அந்தக் கடைக்குள் நான் அடியெடுத்து வைத்தாலும், அந்தக் கடைக்குள் எவ்வளவோ ஆண்டுகளாகப் பல ஆயிரக்கணக்கான, அல்லது இலட்சக்கணக்கான, பாதங்கள் பட்டிருக்கின்றன என்பது ஒவ்வொரு அங்குலத் திலும் தெரிய வந்தது. இதே ஊரில் முப்பத்தைந்து வருடங்களாக இருக்கிறேன். எனக்கு எல்லாமே புதிதாக இருக்கிறது!

அந்தக்கடை மிக மிகப் பழைய கடையாக இருக்க வேண்டும். அது நிறுவப்பட்டு நூறாண்டுகள் ஆகியிருந்தால்கூட ஆச்சரிய மில்லை. ஓரிடத்தின் வயதை எவ்வளவுதான் முயன்றாலும் மூடி மறைக்க முடியாது. வாசற்படி காட்டிக் கொடுத்து விடும். உள்ளே போட்டிருக்கும் மேஜை நாற்காலி பீரோக்கள் ஏதாவது ஒன்று காட்டிக் கொடுத்துவிடும். அங்கு தொங்கும் மின்சார விளக்கின் ஷேட் காட்டிக்கொடுத்துவிடும். இப்போது என் கண்களுக்குக் காணக் கிடைப்பதெல்லாம் அந்த இடத்தின் வயதின் தடயங்கள். நான் சென்றபோது கடையில் இரு பெண்கள்தான் விற்பனையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வரதாச்சாரியுடைய பேத்திகளாக இருக்கலாம். கொள்ளுப்பேத்தி, எள்ளுப் பேத்திகளாகக்கூட இருக்கலாம். அது அவர்கள் குடும்பக்கடை என்பதற்காகத்தான் அப்பெண்கள் அங்கு வேலை புரிகிறார்கள்; அவர்களை வேறு எந்த வர்த்தக நிறுவனத்திலோ, அலுவலகத்திலோ பார்க்க முடியாது என்றுதான் தோன்றிற்று. கட்டுப்பாடாக வளர்க்கப் பட்டவர்கள். கட்டுப்பாடு தெரிய நடந்து கொண்டார்கள். அதே நேரத்தில் தங்களுக்குச் சொந்தமான பூமி மீது தங்களுக்குச் சொந்த மான கூரைக்கடியில் நிற்பதான சுதந்திரம் தெரியும் முகத்துடனும் இருந்தார்கள். என் கண்களுக்கு அவர்கள் இரு சிறு குழந்தைகளாகத் தெரிந்தாலும், நான் அவர்களோடு பன்மையில் பேசி, நான் தேடிப் போன சட்ட புத்தகங்கள் பற்றி விசாரித்தேன்.

எனக்கு வேண்டிய நான்கு புத்தகங்களில் மூன்றுதான் அங்கிருந்தது. இன்னொன்று கிடைப்பது மிகவும் சிரமம் என்று தான் அக்குழந்தைகள் சொன்னார்கள். அப்படிச் சட்டங்கள், அச்சட்டங்கள் கொண்ட புத்தகங்கள் உண்டு என்று எனக்கு அந்நாள்வரை தெரியாது. ஆனால் அக்குழந்தைகள் எல்லாம் நன்கு

அசோகமித்திரன் 211

தெரிந்த உணர்வில், இது கிடைக்காது என்று சொல்வது கடுமை யான பதில் என்பதை உணர்ந்து, இது கிடைப்பது சிரமம் என்று கூறினார்கள். ஒரு பெண் மூன்று புத்தகங்களுக்கு பில் எழுதினாள். இன்னொரு பெண் என் கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டை வாங்கி, புத்தகங்களுக்கான தொகை போகப் பாக்கிச் சில்லறை கொடுத்தாள். புத்தகக் கட்டைக் கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் தெருவில் காலடி வைத்தபோது எனக்கு என் உலகமே மிகவும் விரிவுப்பட்டது போலத் தோன்றியது. லிங்கிச்செட்டித் தெருவில் பத்தடி கூட நடந்திருக்க மாட்டேன், அந்தோணியைப் பார்த்தேன்.

அந்தோணியை நான் பார்த்தேன் என்று கூறுவது கூடத் தவறுதான். அந்த நேரம் ஒருவனுக்கு அந்தத் தெருவில் கண்ணுக் கெட்டினபடி டஜன் கணக்கில் மனிதர்கள் தென்படுவார்கள். அவர்கள் தென்படுவார்கள் என்பதனால் மட்டும் அவர்களைப் பார்க்கிறோம் என்றாகிவிடாது. நான் அந்தோணியைப் பார்க்க வில்லை; அவன்தான் என்னைப் பார்த்து என் முன் வந்து நின்று, "எப்படி இருக்கே சார்?" என்று கேட்டான். அப்போது கூட நான் அவனைப் பார்த்தேன் என்று சொல்ல முடியாது. அவன் தலையை இம்மியளவு அசைத்தான். அப்போது அவனை அந்தோணியாகத் தெரிந்து கொண்டு பார்த்தேன். நானும், "அந்தோணி!” என்று உரக்கச் சொன்னேன். என் ஒரு கையால் அவன் தோளைப்பிடித்துக் கொண்டேன். தெருவில் அந்த நேரத்தில் அப்பக்கமாகப் போனவர்கள் எல்லாரும் எங்களிருவரையும் திரும்பிப் பார்த்தார் கள். அந்த ஒரு கணத்தில் எங்கள் சந்திப்பு அவர்கள் உலகத்தைக்கூட மிகவும் விரிவுபடுத்தியிருக்கும்.

இருபது வருடங்கள் முன்னால், நானும் அந்தோணியும் இருபது ஆண்டுகள் குறைந்த வயது இளைஞர்களாக இருந்தபோது, ஒரே இடத்தில் வேலை பார்த்தோம். அந்தோணி, மாணிக்கராஜ், மாணிக்கவாசகம், முனுசாமி இவர்கள் எல்லோரும் என் பிரிவி லேயே வேலை பார்த்தார்கள். சற்று விலகி நாய்ர் என்றொருவர். இவர்கள் எல்லாருக்கும் நான் அதிகாரி என்று தோன்றினாலும், நடைமுறையில் நாங்கள் எல்லாரும் ஒரே மாதிரி வேலை, ஒரே அளவு வேலை பார்த்தோம். -

அது தவிர எங்களோடு இணைந்து பத்து டிரைவர்கள், இரண்டு கிளீனர்கள், பெருக்குபவர்கள் என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள், தோட்டிகள் என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள், ஒன்பது வாச்சுமென்கள், பன்னிரண்டு தோட்ட வேலைக்காரர்கள் இப்படி ஒரு சைன்யம் அதன் பணி களுக்காக எங்களைப் பொறுப்புக்காட்ட இருந்தது. அவர்கள்



________________

212 பறவை வேட்டை | வண்ணங்கள்

செய்யத் தவறிய வேலைகள், தவறாகச் செய்த வேலைகள் என்று நான்தான் எவ்வளவு முறை விளக்கங்கள் எழுதியிருப்பேன்! அதன் பிறகு கடன் விண்ணப்பங்கள், சம்பள அட்வான்ஸ் விண்ணப்பங் கள், முன் அனுமதி இல்லாமல் பதினைந்து நாட்கள் எங்கோ கண்காணாமல் போய்விட்டதற்கு மனமுருகும் மன்னிப்புக் கடிதம், பதினைந்து நாட்கள் லீவுக்கு அனுமதி கோரி இன்னும் மனமுருகும் விண்ணப்பக் கடிதங்கள். என் பேனாவில் மையூற்றி எழுதவில்லை. கண்ணிரையூற்றி எழுதினேன். அது சரியில்லை. கண்ணிர் வரவழைக்கும் கடிதங்கள். ஆதலால் வெங்காயச்சாறு நிரப்பி எழுதினேன் என்று சொல்வது பொருத்தம்.

ஸ்வீப்பர்ஸ், ஸ்காவென்ஜர்ஸ், டிரைவர்கள், தோட்ட வேலைக் காரர்கள் இவர்கள் எல்லாருக்கும், எல்லா மனிதர்களுக்கும் நேரும் கஷ்ட துக்கங்கள் வரத்தான் செய்தன. அவர்களுக்கு நோய், சுகவீனம் ஏற்பட்டது. வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் இறந்தார்கள், அவர்களுக்கு விபத்துகள் நேர்ந்தன. அடிபட்டது. திடீரெனப் பெரும் செலவினங்கள் வந்தன. ஆனால் அவர்கள் அந்த நேரத்திற்கு உபாதைப் பட்டவர்களாக இருந்தாலும், விரைவிலேயே இயல்பானநிலை அடைந்தார்கள். சிரித்தார்கள், சாப்பிட்டார்கள், தூங்கினார்கள், குழந்தை பெற்றுக்கொண்டார்கள். இவர்களுக்கு மேற்பார்வையாளர்களாக இருந்த மாணிக்கராஜ், மாணிக்க வாசகம், அந்தோணி, முனுசாமியும், இவர்கள் அனைவரின் மேற்பார்வையாளராக இருந்த நானும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

மேற்பூச்சாகப் பார்த்தால் அவ்வளவு பேருடைய பொருளாதார நிலையும் அநேகமாக ஒன்றுதான். எல்லாருக்கும் எப்போதுமே பற்றாக்குறை. எல்லாருடைய அரைப்பட்டினி வயிறும் முகத்தில் தெரிந்தது. இந்தப் பற்றாக்குறை குறையாமல் இருக்க விலைவாசி கள் உயர்ந்த வண்ணமேயிருக்க, எங்கள் சம்பளங்கள் மட்டும் அதம நிலையில் இருந்து கொண்டேயிருக்கும். நாங்களும் எங்கள் காரியாலயத்திடமிருந்து கடன் வாங்க விண்ணப்பங்கள் செய்தோம்; நாங்களும் சம்பள அட்வான்ஸ் வாங்கினோம். இதெல்லாம் போதாமல் வெளியிலும் கடன் வாங்கினோம். ஆனால் எங்கள் ஐந்து பேருக்கும் ஏனோ எந்நேரமும் மூளை பேதலித்து விடுமோ என்ற ஒரு நிலை இருந்து கொண்டே இருந்தது. மற்றவர்கள் எல்லாருக்கும் அவர்கள் தொழில் செய்யும் சாதனத்துடன் நேரடி உறவு இருந்தது. அவர்களிடம் வேலை வாங்குபவர்களாயிருந்த

நாங்கள், அவர்கள் கண் முன்னிலையே அவர்களைப் போன்றே

சதையும் இரத்தமும் பேச்சும் சுவாசமுமாக இருந்தோம்; ஆனால் நாங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு நிர்வாகத்துடன், ஒரு தொலைபேசி மூலமும் யாரோ கொண்டு தரும் சீட்டுகள் மூலமும்

அசோகமித்திரன் 213

தொடர்பு வைத்துக் கொண்டு எந்நேரமும் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தோம்.

இந்தப் பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் எங்களை வாட்டியது போல மற்றவர்களைச் செய்யவில்லை. மாணிக்க வாசகத்துக்கு ஒரு முறை நிதானம் தவறி மாதக்கணக்கில் அவனைக் கட்டிப்பிடித்து வைக்க நேர்ந்தது. மாணிக்கராஜ் நினைத்தபோது ராஜினமாக் கடிதத்தை நீடடுவான். முனுசாமி ஓயாமல் பேசிக் கொண்டேயிருப்பான்-அது அவனுடைய தற்காப்பு.

அந்தோணி ஒருவன்தான் சாதாரண மனிதன் மாதிரி யாகவும் நடந்து கொண்டு அவனுக்குக் கீழே உள்ளவர்களை அதட்டி மிரட்டி வேலை வாங்கவும் செய்வான். ஆரம்பத்திலிருந்தே என்னுடைய ஜனநாயக உணர்வு நான் இந்த அதட்டல் மிரட்ட லைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டது. என் நிலையில் இந்த ஜனநாயக உணர்வுதான் பைத்தியக்காரத்தனம் என்று நன்கு தெரிந்தால்கூட நான் விடாப்பிடியாக யாரையும் ஒருமுறை கூட மிரட்டவில்லை. இதனா லேயே நான் நிர்வாகத்துக்கு விளக்கங்கள் கொடுத்து வருவதும் அதிகரித்த வண்ணமேயிருந்தது. கடைசி வரை மிரட்டாமலேயே காலம் தள்ளிவிட்டேன்.

அந்தோணி அதட்டுவான். மிரட்டலால் பிரயோசனம் கிடையாது. ஒரு மிரட்டலையும் நிறைவேற்றிக் காட்ட முடியாது. மிரட்டி அதை நிறைவேற்ற முடியாமல் இருந்தால் அதட்டலுக்கு வலுவே கிடையாது. அந்தோணிக்கு அது தெரியும். எல்லா ருக்குமே தெரியும். ஆனால் அவன் அதட்டுவான். என்னைவிட இன்னும் சிறப்பாகவே எல்லாரிடமும் வேலை வாங்குவான்.

எனக்கும் அவனுக்கும் அநேகமாக ஒரே வயதுதான் இருக்கும். அதிகமாயிருந்தால் ஓரிரு ஆண்டுகள் அவன் பெரியவனாயிருப்பான். ஆனால் அவன் அந்த நிறுவனத்தில் என்னைவிடப் பல ஆண்டுகள் கூடுதலாகப் பணி புரிந்து வந்து கொண்டிருக்கிறான். பதினைந்து பதினாறு வயதிலேயே வேலைக்கு வந்திருக்க வேண்டும். நாராயண சாமித் தோட்டத்துக் குடிசைப் பகுதியிலிருந்து வரும் பதினைந்து வயதுச் சிறுவனுக்கு என்ன வேலை கிடைக்கும்? அவன் எவ்வளவு படித்திருக்கக்கூடும்? என்ன சம்பளம் பெற்றிருக்க முடியும்? இதெல்லாம் நினைக்கும் போது எனக்கு மிகவும் சோர்வாக இருக்கும். ஆனால் அவன் அடைந்ததாகத் தெரியவில்லை.

நாங்கள் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் சம்பளந்தான் குறைவு தவிர, வெளியே அதற்கும் அதன் முதலாளிக்கும் மிக நல்ல பெயர். அவருக்கு அப்படி ஒரு ராசி. இருபது வயதுக்குள் அந்தோணிக்குக் கல்யாணம் நடந்து விட்டது. நான் வேலைக்கு



________________

214 பறவை வேட்டை | வண்ணங்கள்

சேர்ந்த நாளில் அவன் புது மாப்பிள்ளை. ஒரு பிள்ளை பிறந்த சில மாதங்களுக்குள் உடனே அடுத்த குழந்தையும் உண்டு என்பதற்கான அறிகுறிகள். அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது அந்தப் பெண்- அவன் மனைவியைப் பெண் என்பதா? சிறுமி என்பதா?-ஜூரம் கண்டு ஒரே நாளில் செத்துப் போனாள். பிறந்த குழந்தையும் மறுதினமே செத்துப் போய்விட்டது.

இதெல்ல்ாம் நான் வேலைக்குச் சேர்வதற்கு முன்னாலேயே

நடந்துவிட்டது. எடுத்த எடுப்பிலேயே நானும் அந்தோணியும் சேர்ந்து வேலை செய்யவும் நேரவில்லை. ஏழெட்டு ஆண்டுகள் நான் ஏதேதோ பிரிவுகளிலெல்லாம் இருந்து விட்டுக் கடைசியில் தான் இந்தப் பெரிய மேஸ்திரி நிர்ப்பந்தத்தை ஏற்கும் படியாயிற்று. துணை மேஸ்திரி அல்லது உதவி மேஸ்திரியாயிருந்த அந்தோணி அப்போதே மணவாழ்க்கையின் கடுந் துக்கங்களை நேரடியாக எதிர் கொண்டவன்.

கையில் மூன்று சட்டப் புத்தகங்களோடு நான்காவதற்காக நான் தேடிக் கொண்டிருந்தபோது, அந்தோணியைப் பார்த்தேன். எனக்கு அந்த நேரத்தில் என் கண் முன்னால் வயது முதிர்ந்த ஓர் உருவம் நின்றிருந்தால்கூட நான் பார்த்தது தாயையிழந்த மூன்று வயதுச் சிறுவனை வேறு யாரிடமும் விட்டு வைக்க முடியாமல் வேலை செய்யும் இடத்திற்கே அழைத்துவர வேண்டியிருந்த இளைஞன் அந்தோணியைத்தான். அவன் கண்ணில் நான் எப்படி யிருந்தேன் என்று ஊகிக்க முடியவில்லை. என்னையும் என் அம்மாவையும் அவன் சேர்த்து நினைத்திருக்கக்கூடும். அவனாகவே ஒருநாள் என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி என் வீட்டை ஒட்டடை அடித்துவிட்டுப் போனான். அதன் பிறகு ஒரு நவராத்திரி சமயத்தில் வீட்டை அலங்கரிக்கவென வண்ணத் தாள்கள் எடுத்து வந்தான். தாள்களைத் தோரணம் கட்டி ஜோடனை செய்வது எனக்கும் தெரியும். ஆனால் எங்கள் வீட்டில் எங்களிடமிருந்த பொம்மைகளுக்கு அந்த அலங்கார மெல்லாம் பொருத்தமாயிராது என்று நான் அதில் ஈடுபடவில்லை. ஆனால் அந்தோணியாக முன் வந்தபோது நான் வேண்டாமென்று சொல்ல முடியவில்லை. அவன் எடுத்து வந்த தாள்களின் வண்ணங்களைக் கண்டபோது எனக்குக் குபிரென்றிருந்தது. மிகவும் விபரீதமான கற்பனையில் கூட அப்படி ஒரு வண்ணச் சேர்க்கையை நான் நினைத்துப் பார்த்திருக்க மாட்டேன்.

ஆனால் அந்த ஆண்டு அந்தோணி செய்த அலங்காரத்துக்கு முழுவதுமாகப் பணம் கொடுத்து விட்டேன். நவராத்திரியான அந்தப் பத்து நாட்களும் எனக்குவிடாது தலைவலித்துக் கொண் டிருந்தது. என் வீட்டில் காலடி எடுத்து வைத்தவுடன் அந்தோணி

அசோகமித்திரன் 215

யின் வண்ணங்கள் என் பசியைப் போக்கிவிடும். வயிறு பசிக்கும்; மூளை உணவை வெறுக்கச் செய்யும். ஆனால் அந்தோணி என்மீது கொண்ட அக்கறையை இதெல்லாம் மறைக்க முடியவில்லை.

அலுவலகத்திலும் அவன் என் மீது எடுத்துக் கொண்ட உரிமைகள் சங்கடத்திலும் சில தருணங்களில் பெரிய சண்டையிலும் இழுத்துவிட்டன. அப்போதெல்லாம் தொழிலாளர்கள் இன்னும் வேலைக்காரர்களாகத்தான் இருந்தார்கள். எல்லாப் பெரிய நிறுவன முதலாளியும் போல எங்கள் முதலாளியும் தொழிற்சங்கம், அரசு அமல்படுத்த விரும்பிய தொழிற் சட்டங்கள் போன்றவற்றின் மீது மிகுந்த சந்தேகம் உடையவராகத்தான் இருந்தார். யூனியன், கம்யூனிஸ்ட் இதெல்லாம் அங்கு தொடர்ந்து வேலையிலிருக்க வேண்டுமானால் அபாயகரமான சொற்கள், சிந்தனைகள். ஆனால் எப்படியோ அடித்துப் பிடித்துச் சில பிரிவுகள் மட்டும் அரசு தொழிற்சட்டங்களுக்கு உட்பட்டாக வேண்டும் என்றாகிவிட்டது. அதில் டிரைவர்கள் அடங்குவர். அவர்களுடைய வேலை நேரம், சம்பள விகிதம், பஞ்சப்படி, ஓவர்டைம் ஊதியம் இதெல்லாம் ஒவ்வொன்றாக அமலாக ஆரம்பித்தது. ஆனால் நிறுவன இயக்கம் இதுநாள் வரை தொழிலாளி, அவருடைய சாப்பாட்டு நேரம், வார விடுமுறை என்றெல்லாம் நினைத்தும் பாராமல் பழகிவிட்டி ருந்தது. மேலதிகாரிகளும் இன்னமும் அவ்வாறே நினைத்துப் பாராத பழக்கமாயிருந்ததில் இத்தொழிலாளிகளை நேரடியாக வேலை வாங்கும் பொறுப்பு இருந்த நபர்கள் நாய் படும் பாடுபட வேண்டியிருந்தது. டிரைவர்களுக்கு வேறிடங்களைப் பார்க்கும் போது சம்பளவிகிதம் குறைவு. ஆனால் எங்கள் எல்லாரையும் விட அதிக ஊதியம். எட்டு மணி நேர வேலைச் சட்டம் அமலுக்கு வந்த புதிதில் பகல் பதினோரு மணிக்கு அவர்கள் எங்கிருந்தாலும் வண்டியை அப்படியே விட்டு விட்டுச் சாப்பாட்டுக்குப் போய் விடுவார்கள். அதே போலப் பிற்பகல் மூன்று மணிக்கு வீட்டுக்கு போய்விடுவார்கள். இதனால் விளைந்த குழப்பங்கள் முதலில் என் மீது விடிந்தது. அப்புறம் நிர்வாகமே ஆடிப்போயிற்று. டிரைவர்கள் பங்கு பெற்றிருந்த அனைத்துச் சென்னைத் தொழிற்சங்கத் தலைவரைக் கூப்பிட்டு எங்கள் முதலாளி பேச வேண்டியிருந்தது. இப்படி ஒரு ஏற்பாட்டிற்கு இருவரும் ஒப்புக் கொண்டார்கள்: காலை ஷிப்டில் வேலைக்கிருக்கும் டிரைவர்களைப் பதினொரு மணிக்குச் சாப்பாட்டுக்கு அனுப்ப வேண்டும்; ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் வண்டியெடுத்துப் போயிருந்தால் அடுத்துப் பன்னிரண்டு மணிக்குச் சாப்பாட்டுக்கு அனுப்ப வேண்டும்; பன்னிரண்டு மணிக்கும் அனுப்ப முடியாமல் போய்விட்டால் அவர்கள் சாப்பாட்டுக்கென்று அலுவலகம் பணம் தரவேண்டும். எவ்வளவு? பத்து அணா, பைசாக் கணக்கில் அறுபத்திரண்டு.

________________

216 பறவை வேட்டை | வண்ணங்கள்

இந்த அறுபத்திரண்டு பைசா டிரைவர்களைத் திருப்தி செய்வதாக இருந்திருக்கலாம். ஆனால் அது மேற்பார்வையாளர் பணியில் இருந்த மாணிக்கராஜ், மாணிக்கவாசகம், அந்தோணி, முனுசாமி ஆகிய நால்வரிடத்தில் கசப்பை உண்டு பண்ணியது. இவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஊதியம் மிகக் குறைவு. இவர்களும் அநேக நாட்களில் சரியாக பதினொரு மணிக்கோ அல்லது பன்னிரண்டு மணிக்கோ சாப்பாட்டுக்குப் போக முடியாத படி நேர்ந்தது உண்டு. இவர்களுக்கு இந்த அறுபத்திரண்டு காசு கிடையாது. ஆனால் டிரைவர்கள் விஷயத்தில் மட்டும் மணி பன்னிரண்டு அடித்து ஐந்து நிமிஷம் ஆனவுடன் அக்கவுண்ட்ஸ் பிரிவிலிருந்து டிரைவர்களுக்காகப் பணத்தை இவர்கள் வாங்கி வந்து விநியோகம் செய்ய வேண்டும்!

இந்த அறுபத்திரண்டு பைசா இன்னும் பல சிக்கல்களுக்கு வழி வகுத்தது. நிறுவனப் பணிக்காக எந்த அதிகாரிக்காவது வண்டி தரப்படுமானால் அவர் இந்தப் பதினொரு மணி-பன்னிரண்டு மணி கால அட்டவணையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டார்கள். இதை நான் செய்ய வேண்டும்; அல்லது மாணிக்கராஜ் - மாணிக்கவாசகம்-அந்தோணி - முனுசாமி செய்யவேண்டும். டிரைவர்களுக்கு நாங்கள் இப்படிச் செய்வது அவர்கள் வயிற்றில் அடிப்பது போலிருந்தது. அதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்டிருந்த பிளவு அதிகரித்துக் கொண்டே போயிற்று. அலுவலக வேலையில் வண்டி எடுத்துப் போகும் அதிகாரிகள் இந்தக் கால நிர்ப்பந்தத்தைக் கேட்டு சீறி விழுந்தார்கள். அவர்கள் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு பதினொரு மணிக்கே திரும்புவதாக இருந்தாலும் அப்போதுதான் வண்டி உடனே கிளம்ப மறுத்தது. சாலையில் ஊர்வலம் வழி மறித்தது. எங்களுக்குக் கட்டளை, எக்காரணம் கொண்டாவது சாப்பாட்டுப் பணத்தைத் தருவதைத் தவிர்க்க வேண்டும். டிரைவர்களின் ஒரே குறிக்கோள், எப்பாடு பட்டாவது அதைப் பெற்றுவிட வேண்டும்.

அந்தோணிக்காக நான் பல விண்ணப்பங்கள் எழுதியிருக் கிறேன். பெரிய கடன், சிறிய கடன், சம்பள அட்வான்ஸ், முன் அனுமதிப் பணம், ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வேலைக்கு வராமல் போனதற்காக மனமுருகும் விளக்கம், நாராயணசாமித் தோட்டத்தில் ஒரு போலீஸ்காரன் குடித்துவிட்டு ரகளை செய்ததற்காக ஐ.ஜி.க்குப் புகார் கடிதம், சாந்தோம் கிறிஸ்துவ நிறுவனத்தில் மகனின் படிப்புக்காகவும் வைத்தியச் செலவுக்காகவும் நிதியுதவி கேட்டுக் கடிதம், அப்போதிருந்த வீட்டு வசதித் துறை தாழ்த்தப்பட்டவர்கள் குடி யிருப்புத் திட்டத்தில் அவனுக்கு அளித்திருந்த மனைக்குப் பணம் கட்டத் தவறியதற்கு மன்னிப்புக் கடிதம். அறுபத்திரண்டு காசு ஒவ்வொரு நாளும் எங்களுக்குள்

அசோகமித்திரன் 217

வேதனையையும் துவேஷத்தையும் வளர்த்துக்கொண்டு போன நாளில் அந்தோணி என்னிடம் ஒரு புதிய விண்ணப்ப மனு எழுதக் கேட்டுக் கொண்டான். சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களை மேற்பார்வை பார்த்து வேலைவாங்கும் நிலையில் இருந்தாலும் அவனுடைய பதவி ஆபீஸ் பையன் என்றுதான் இருந்தது. இந்தப் பையன் என்ற பெயர் வேண்டாம். தொழிலாளி என்று அ-ை ழக்கட்டும். தெருப்பெருக்குகிறவன் என்று அழைக்கட்டும். கிளீனர் என்று அழைக்கட்டும். குமாஸ்தா என்று பெயரிட்டு அதிகச் சம்பளம் தரட்டும். இனியும் பையன் என்ற பெயர் வேண்டாம்.

பையன் என்ற பெயர் வேண்டாம் என்று எழுதிவிட முடிந்தது. ஆனால் அந்தோணி தந்த மாற்றுப் பெயர்களை நியாயம் தொனிக்க எழுத முடியவில்லை. புதுப் பெயர் வைப்பதை நிர்வாகத்திடம் விட்டுவிடலாம் என்று சொன்னேன். ஆனால் அந்தோணிக்கு அதில் சம்மதம் இல்லை. அவன் எப்படியாவது தொழிற் சட்டமும் தொழிற் சங்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய உத்தியோகப் பிரிவுகளில் இடம் பெறவேண்டும் என்று முயற்சி செய்தான். "அப்படியானால் குமாஸ்தாவாகப் பெயர் மாற்று என்று ஏன் கேட்க வேண்டும்?' குமாஸ்தா வேலைக்கு அந்தநாளில் தொழிற்சங்கப் பாதுகாப்புக் கிடையாது.

எங்கள் விண்ணப்பங்கள், நேரடியாக முறையிடுதல் எதுவும் பலன் தரவில்லை. நிர்வாகம் எல்லாவற்றுக்கும் ஏதாவது பதில் வைத்திருந்தது. இவ்வளவு குறைந்த சம்பளத்தில் இவ்வளவு குறைந்த வசதியில் எப்படிக் காலம் தள்ளுவது என்று கேட்டால் எங்களை விட இன்னும் குறைந்த சம்பளம் பெற்று உழைக்கும் வேறு நிறுவனப் பணியாளர்களை உதாரணம் காட்டியது. அனைத்துக்கும் துருப்புச் சீட்டாக ஒரு எச்சரிக்கை நிறுவனத்தையே இழுத்து மூடிவிடுவோம்.

இப்போதெல்லாம் அந்தோணிக்கும் எனக்குமே வாக்கு வாதங்கள் நேர்ந்தன. இதில் தனிப்பட்ட பகைமை இருவரிடமும் கிடையாது என்று இருவருக்கும் தெரியும். ஆனால் அவன் திடீர் திடீரென்று எங்காவது போய்விடுவதும் என் சங்கடங்களைத் தவிர்க்க முடியாத அளவுக்கு எடுத்துச் சென்றன. எனக்கு அந்தோணியையோ இதர பையன்களையோ விட்டுக்கொடுக்கும் எண்ணம் கிடையாது. நான் ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் பன்னிரண்டு மணி நேரம் அலுவலகத்திலேயே கிடந்தேன். மாணிக்கவாசகம் வேலைக்கு வந்தாலும் எந்நேரமும் இங்கே பேய் இருக்கிறது, அங்கே பிசாசு இருக்கிறது என்று பெஞ்சுக்கடியிலும் நாற்காலிக்கடியிலும் ஒளிந்து கொள்வான். உரத்த குரலில் எல்லாக் கடவுள்களையும் கும்பிடுவான். ஒருநாள் அவனுடைய கூச்சல் ஒரு



________________

218 - பறவை வேட்டை | வண்ணங்கள்

போலீஸ்காரனை அங்கு வரவழைத்துவிட்டது. அவன் வீட்டுக்குச் செய்தி அனுப்பினோம். அவர்கள் யாரும் வரவில்லை. வீட்டிலும் அப்படித்தான் நடந்து கொள்வதாகச் சொன்னார்கள்.

மாணிக்கராஜ் தினமொரு ராஜினாமாக் கடிதம் கொண்டு தருவான். முனுசாமியின் ஓயாத பேச்சு இப்பொழுது சிரிப்பை உண்டு பண்ணவில்லை. தலைவலியை அதிகரித்தது. நான் தனிமையில் இருந்தபோது பல தருணங்களில் இரு கைகளில் தலையைப் புதைத்துக்கொண்டு அப்படியே உயிர் போய் விடாதா என்று ஏங்கியிருக்கிறேன். பணம்பற்றாக்குறையான பணம், யாரிட மும் வாக்குக் கொடுத்து விட்டு மாறக்கூடாது என்ற கட்டுப்பாடு, எஜமானன் ஒழுங்கோ இல்லையோ- அவன் தரப்பில் அவனுடைய நலன்களையே மனத்தில் கொண்டு இயங்குவது, படும் கஷ்டத்தையும் துயரத்தையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாக யிருப்பது போலத் தோற்றமளிப்பது - ஐயோ என்று ஒருநாள் அலறினேன். என் பக்கத்திலிருந்த இரு டிரைவர்கள் என்னைத் துரக்கி உட்கார வைத்தார்கள். ஆனால் நான் துவண்டு மீண்டும் கீழே ஒரு துணி மூட்டை போல விழுந்து விட்டேன். ஒரு நிமிடம். ஒரு நிமிடந்தான். அன்று வண்டி அனுப்பி யார் யாரை அழைத்துவர வேண்டும் என்ற பட்டியல் அன்று பூர்த்தி செய்து அனுப்ப வேண்டியது கண் முன் நின்றது. ஆளுக்கு அறுபத்திரண்டு காசு வாங்கிக் கொண்டு வரிசையாக டிரைவர்கள் கையெழுத்திடும் காகிதம் கண்முன் நின்றது. தோட்டி ராஜய்யாவின் மகள் திருமணப் பத்திரிகையும் அவளுக்கு அன்பளிப்புத் தர நாங்கள் சேகரிக்கும் நிதிப் பட்டியலும் கண்முன் நின்றது. நானும் எழுந்து நின்றேன். என்னைச் சுற்றி நின்ற அனைவரும் ஏதும் நிகழாது போல விலகிப் போனார்கள். நான் உத்தியோகமும் பழக்கமும் மனிதன் மீது செலுத்தும் அபார ஆதிக்கத்தை நினைத்து வியந்த வண்ணம் என் நாற்காலியில் உட்கார்ந்து என் வழக்கமான கடமைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.

இது நடந்தபோது அந்தோணி இல்லை- அன்று அவனுக்கு வாராந்திர விடுமுறை. எனக்கு உதவியாக இருக்க வேண்டிய மாணிக்கராஜ் யாரோ சாமியார் வந்திருக்கிறார், தரிசனம் செய்துவிட்டு வருகிறேன் என்று சென்றுவிட்டான். மறுநாள் வேலைக்கு வந்த அந்தோணி நாங்களிருவரும் அன்று தனியாக இருக்க நேர்ந்த முதல் வாய்ப்பிலேயே, "சார், நீ நேத்து மயக்கம் போட்டு விழுந்துட்டயாமே?” என்று கேட்டான்.

நான், "இல்லையே” என்றேன். எனக்குத் தலை சுற்றியது உண்மைதான். ஆனால் சுயநினைவு கடைசி வரை இருந்தது.

அசோகமித்திரன் 219

பார்க்கப் போனால் சுயநினைவு சற்றுத் தீவிரமாகவே இருந்தது என்று கூற வேண்டும்.

அந்தோணி என்னைப் பார்த்தவண்ணம் நின்று கொண் டிருந்தான். இரு நாட்கள் முன்புதான் நாங்கள் இருவரும் பெரிதாகச் சண்டை போட்டிருந்தோம். மறுபடியும மறுபடியும அந்த அறுபத்திரண்டு பைசா தான். ஒரு டிரைவர் ஒரு ரூபாய வாங்கிக் கொண்டு பாக்கிச் சில்லறை தரும்போது அவனிடம் இல்லாததால் ஒரு பைசா குறைத்துக் தொடுத்திருக்கிறான். அதற்காக அந்தோணி அந்த டிரைவரிடம் பெரிதாகச் சணடை போட்டிருக்க அதற்குத் தண்டனை தருவது போல அடுத்த மூன்று நாட்களுக்கு அந்த டிரைவர் லீவு போட்டுவிட்டான். மாறு டிரைவர் கிடைக்காமல் நாங்கள் திண்டாடிப் போய் விட்டோம். நான் அந்தோணியிடம் ஒரு பைசா குறைந்தால் குடி முழுகியா போய்விடும்?' என்று கேட்டேன். நான் டிரைவாகள பக்கமே சார்ந்திருக்கிறேன் என்றும் பையன்களுக்கு ஒனறும செய்வதில்லை என்றும் அந்தோணி சொன்னான். திரும்பித் திரும்பி இதையே உயர்ந்து வரும் குரலில் Tು 5ಣಿ இருவரும் சொல்லித் தொண்டை கிழியக் கத்தும் அளவிற்கு வந்தோம்.

இப்போது அந்தோணி என்னையே உற்றுப் பார்த்தான். "சார், நீ இந்த எடத்தை விட்டுட்டுப் போயிடு, சார்" என்றான்.

"ஏன் ?” "நீ இங்கே இருக்காதே, சார் உனக்கு நல்லதில்லே.” "நான் இங்கேந்து போயிட்டா மட்டும் எனக்கு நல்ல தாயிடுமா?"

"இதைவிட மோசமாயிருக்காது, சார்” "ஏன் அப்படிச் சொல்லறே?” "இந்த எடத்திலே நிறையப் பிசாசுங்க இருக்கு, சார்” எனக்குக் குபிர் என்றது. மாணிக்கவாசகம்தான் பிசாசு, பேய் என்று கத்திக்கொண்டிருப்பான். கொஞ்சம் நிதானமா யிருக்கும் அந்தோணிக்கும் ஏதாவது ஆகிவிட்டதா?

“என்ன சொல்லறே அந்தோணி? பிசாசாவது, பேயாவது? அதெல்லாம் கிடையாதுப்பா.”

"நீ ஹிண்டு-நீ இப்படிச் சொல்லறியே, சார்? இந்த எடத்திலே அஞ்சாறு இருக்கு. மாணிக்கவாசகம் சும்மாப் பைத்தியமாகலே, சார். இந்தப் பிசாசுங்கதான் அவனைத் துரத்தியடிக்குது.

"அப்ப எல்லாரையும் துரத்தியடிக்கிறதுதானே?”

________________

220 பறவை வேட்டை | வண்ணங்கள்

"அடிக்குது, சார். அடிக்குது. ஒவ்வொருத்தரை ஒரு மாதிரியா அடிக்குது. நான் உங்கிட்டே சண்டை போடறேனே, வாய்க்கு வந்த மாதிரிப் பேசறேனே, நானா செய்யறேன், சார்? இல்லே, முழுக்க முழுக்கப் பிசாசு வேலை.”

"அப்ப எல்லா வேலையும் பிசாசு வேலைன்னு சொல்லிட லாமே ?”

"பிசாசு எல்லா வேலையும் செய்யாது, சார். ஆனா மனுஷாளுங்களையும் பிசாசு மாதிரி மாத்த என்னென்ன செய்யனுமோ அதெல்லாம் செய்யும். இத்தினி நாள் அது எதுவும் உங்கிட்டே வரலை, சார். ஆனா இனிமே வந்துடும். என்னிக்கு நீ மயக்கம் போட்டு விழறியோ அன்னிலேந்து உனக்கும் பிசாசு பிடிச்சுச்சு இல்லே, பிடிக்கப் போறது."

"நீ ரொம்பத் தெரிஞ்ச மாதிரிப் பேசறியே, நீ பிசாசைப் பார்த்திருக்கயா?”

அந்தோணி வெறுப்போடு என்னைப் பார்த்தான். 'உன் நல்லதுக்குச் சொல்லறேன், சார். நீ பாழாவறது எனக்குச் சம்மதம் இல்லே. அதான் சொல்லறேன். நீ வேணும்னா பாரு, இனிமே மறுபடியும் மறுபடியும் மயக்கம் வரும். தினம் வரும். மயக்கம் சுமமா வராது, சார்."

இதற்குள் வேறு வேலை வந்துவிட அவன் என்னை விட்டுப் போக வேண்டியிருந்தது. எனக்கு இப்போது நிஜமாகவே கோபம் வந்திருந்தது. அந்தோணியைப் பிடித்து இரண்டு அடி அல்லது குத்து விடவேண்டும் என்று தோன்றியது. அந்தோணி அதுவரை ஒரு துடிப்புள்ள, உரிமைகளுக்கு வாதாடத் தயங்காத துணிச்ச லுடைய, படிப்பு வசதி அதிகம் இல்லாத காரணத்தால் மட்டுமே எளிய ஆபீஸ் பையன்' உத்தியோகத்தை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த இளைஞனாக நான் அறிந்திருந்தேன். இப்போது பேய் பிசாசுகளை அறிந்தவனாக அவன் அறிமுகப் படுத்திக்கொண்டது அவனுக்கு ஒரு புதுப் பரிமாணம் கூடியது போலிருந்தது. வழக்கம் போல அன்று ஒரு கடுமையான தினமாக எனக்கு இருந்தாலும் அந்தோணியின் எச்சரிக்கை திரும்பத் திரும்ப என்கவனத்துக்கு மிதந்து வந்து கொண்டிருந்தது.

அவனுடைய விப்ட் முடிந்து போகும் போது அவனைக் கூப்பிட்டேன். "அந்தோணி, இப்போ சொல்லு நீ காலையிலே சொன்னதை"

இந்து ஐந்தாறு மணி நேரத்தில் அவன் பேச்சின் கூர்மை குறைந்திருந்தது. ஆனால் ஒரு நிதானமும் தீர்மானமான தோரணையும் வந்திருந்தன. "நான் சொன்னதுதான், சார், உன்னைப் பிசாசு பிடிக்கப்போறது."

அசோகமித்திரன் 221

காலையில் நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில் இப் பேச்சு எழுந்ததால் நான் சிறிது திகைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த திகைப்பு கிடையாது. "அந்தப் பிசாசுக்கு என்ன பேர், அந்தோணி?”

"பிசாசுங்களுக்குப் பேர் கிடையாது, சார். ஆனா எல்லாத் துக்கும் ஒரு குணம் உண்டு. மனுஷாளுங்களைச் சுத்தமாப் பிடிக்காது. மனுஷாளுங்க சந்தோஷமாச் சிரிச்சுப் பேசிட்டிருக் கிறது பிடிக்காது.”

"இங்கே நாம்ப என்ன சந்தோஷமாச் சிரிச்சா பேசிட்டிருக் கோம் ?”

"பிசாசு வந்தப்புறம் எப்படி சந்தோஷமாயிருக்க முடியும், சாரு?"

"நீ பிசாசைப் பார்த்திருக்கியா?” அவன் முன்பு போலவே இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் போகப் பார்த்தான். "அந்தோணி’ என்று கூப்பிட்டேன். அவன் நின்றான்.

"நிஜமான பிசாசு எது தெரியுமா? இவன் பணக்காரன், இவன் ஏழை, இவன் எஜமானன், இவன் வேலைக்காரன், இவன் சம்பளம் தறவன், இவன் சம்பளம் வாங்கறவன்னு இருக்கே இந்த அமைப்புஇதுதான் நிஜமான பிசாசு. இந்தப் பிசாசு இல்லேன்னா அரை வயத்துக்குச் சாப்பிட்டாக்கூட நீயும் நானும் எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். இந்தப் பிசாசுக்கு ஆயிரக்கணக்கான வருஷம் வயசாயிருக்கு. அது பெரிசாயுண்டே போறது. இந்தப் பிசாசை ஒழிச்சுட்டா நீ சொல்லற பிசாசெல்லாம் தானாகவே செத்துப்போயிடும். செத்துப்போக முடியாதுன்னா அப்படியே மறை ஞ்சு போயிடும். இந்தப் பெரிய பிசாசை ஒழிக்கறதுக்கு ஏதேதோ வழி இருக்குதுன்னு சொல்றாங்க. எங்கேயோ சில இடங்களிலே ஒழிச்சுட்டதாகக் கூடச் சொல்லிக்கிறாங்க. ஏதோ ஒரு நாளைக்கு இங்கேயும் நாம்ப ஒழிச்சுடுவோம்னுதான் நான் நம்பறேன்."

அந்தோணி வரையில் அப்போதே பிசாசு பிடித்துவிட்டது என்று தோன்றியிருக்க வேண்டும். அவன் போய்விட்டான்.

நான் ஏதேதோ பேசிவிட்டேனே தவிர எனக்குத் தலை சுற்றலும் ஓரிரு விநாடிகளுக்கு நினைவே போய்விடுகிற மாதிரி ஒரு நிலையும் அடிக்கடி வரத்தொடங்கின. இது பிசாசால் அல்ல, பிசாசால் அல்ல என்று நான் சொல்லிக் கொண்டேன். அந்தோணி இப்போது என்னை ஒரு எதிரி போலவே நடத்தத் தொடங்கினான். ஒருவருடைய பரிவை அவர் எதிர்பார்ப்புக் கிணங்க ஏற்றுக் கொள்ளாது போனால் இவ்வளவு துவேஷம் ஏற்பட்டுவிடும்



________________

222 பறவை வேட்டை | வண்ணங்கள்

போலும். ஆனால் பல அம்சங்களில் போதிய பாதுகாப்பு அளிக்கப் படாத போதிலும் உறுதியுடனும் அதிகாரத்துடனும் அந்தோணி யால் நடந்துகொள்ள முடிவது பற்றி எனக்கு உள்ளுர அவன் மீது மதிப்பு இருந்தது. அவன் மிகச் சிறு வயதிலேயே மனைவியை இழந்துவிட்டு, பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று தீர்க்கமாக நம்புவது பற்றியும் எனக்கு வியப்பும் மரியாதையும் இருந்தன.

நவராத்திரி வந்தது. அந்தோணி என்னை ஒரு வைரியாக நினைக்காது போனால் அவனிடம் பத்து ரூபாய் கொடுத்து வீட்டில் கொலு ஜோடனை செய் என்று சொல்லியிருப்பேன். ஆனால் அவன் மீண்டும் சகஜமாகப் பழகுவான் என்ற நம்பிக்கையே ஏற்படாத வகையில் திரும்பத் திரும்பச் சங்கடங்கள் விளைவித்தான். எனக்குச் சிறிது சிறிதாகப் பிசாசுகள் மீது நம்பிக்கை வந்தது.

அது மதுவிலக்கு அமலில் இருந்த காலம். போலீஸ்காரர்கள் போலீஸ்காரர்களாக இருந்த காலம். வீட்டில் தனியாகக் குடித்துப் படுத்துவிடுகிறவர்கள் பற்றிக் கவலை இல்லை. ஆனால் பொது இடங்களில் யாராவது குடித்துவிட்டு வந்தால் போலீஸிடமிருந்து தப்பிக்க முடிந்ததே கிடையாது. அன்று அந்தோணி வேலைக்கு வந்த போது சரியாகத்தான் இருந்தது. ஆனால் வேலைக்கு வந்த பிறகு ஐந்தே நிமிடங்களில் எங்கோ போய்க் குடித்துவிட்டு வந்து விட்டான். ஒரு வேளை கையோடு வாங்கி வந்து அலுவலகம் வந்த பிறகு குடித்திருக்க வேண்டும். எங்கள் அலுவலகத்திற்கு நிறைய வெளி மனிதர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அந்தோணி போன்ற பாணியில் இருப்பவன் குடித்துவிட்டு அதை ரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது.

அன்று அந்தோணியைத் தனியாகக் கையைப் பிடித்து ஒரு மூலைக்கு இழுத்துச் சென்றேன். "நீ வேலை கீலை ஒண்ணும் பண்ணவேண்டாம் டுல்ஸ் ரூம்லே பேசாமப் படுத்துக்கிட” என்றேன்.

உடனே என்னை எதிர்க்கத்தான் அவனுக்குத் தோன்றி யிருக்க வேண்டும். ஒருமுறை கையை வீசியவன் உடனே அடங்கிப் போனான். நான் சொன்னபடியே டுல்ஸ் ரூமில் பாதி நாள் படுத்திருந்தான். கடைசியாக வேலை நேரம் முடித்து வீட்டுக்குப் போக வேண்டியபோது என் மேஜையருகே வந்து என்னையே பார்த்த வண்ணம் நின்றான். அந்தோணி என்ற பிறவியே இந்த உலகத்தில் கிடையாது என்கிற மாதிரி நான் என் வேலையில் ஆழ்ந்திருந்தேன். அவன் பொறுமையிழந்து, "இன்னிக்கு வீட்டுப் பக்கம் போயிருந்தேன்” என்றான். -

நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். அவள் மறுபடியும், "வீட்டுப் பக்கம் போயிருந்தேன்” என்றான்.

அசோகமித்திரன் 223

"இத்தினி நாள் நீ வீட்டுக்குப் போகாம நடைபாதையிலேயே இருந்தாயா?”

"உன் வீட்டுக்குப் போனேன், சாரு”

"என் வீட்டுக்கு ஏன் போனே? உனக்கும் எனக்கும் இனிமே பேச்சே வேண்டாம்.”

அவன் போய்விட்டான். எனக்கு நிஜமாகவே கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. என் வீட்டுக்கு எதற்கு இவன் போக வேண்டும்?

ஆனால் வீட்டுக்குப் போன பிறகுதான் தெரிந்தது. அவன் இந்த ஆண்டும் நவராத்திரி கொலுவுக்கு என் விட்டில் அலங்காரம செய்துவிட்டு வந்திருக்கிறான் என்று. அவன் வேண்டாம் எனறு சொன்ன போதிலும் என் அம்மா அவனிடம் பணம் கொடுத்திருக் கிறாள். அன்று அவனை எந்தப் பிசாசு பிடித்திருந்ததோ ಪಡಿತ டிங்க்சர் வாங்கி வந்து விட்டான். எனக்கு அந்த அலங்காரத்தைப் பார்த்தபோது கோபமும் பரிதாபமும் மாறிமாறித் தோன்றின. அவனுடைய ஜோடனை விசேஷ கலைத்திறமை பொருந்தியதாக இருக்காது. அவனுக்குண்டான வசதியிலும் ஆனுபவத்திலும் அவனுக்கு வண்ணங்களின் ஒருமை, இசைவு, எதிரெதிர்த்தன்மை இவை எல்லாம் மனதில் பிடிபட வழியில்லை. ஆனால் տուտուա கைத்திறனும் ஏதோ ஒரு தளத்தில் செயல்படத்தான் செய்தன. அலங்கரித்தல் என்னும் முயற்சியே அவனை யொத்தவர் பலருக்குத் தோன்றாமலே இருக்கக்கூடும். ஆனால் அவனுக்கு இது அலங்காரம், இது அலங்கரிக்கக் கூடியது என்று அவனுடைய பிரக்ஞையில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அந்த நாளெல்லாம் நான் நாயாகப் பாடுபட்டு மாடாக உழைத்திருந்தாலும் எளிதில் தூக்கம் வரவில்லை. எங்கள் வீட்டில் எல்லா விளக்குகளையும் அணைத்திருந்தாலும் தூரத்தில் இருந்த ஒரு தெரு விளக்கு முன்னறையில் சிறிது வெளிச்சம் ೭6ನಕ್ಸr® பண்ணிய வண்ணமிருந்தது. அங்கேதான் கொலு வைக்கப்பட்டி ருந்தது. கொலுவும் எந்த திட்டமோ ஒழுங்கான அமைப்போ இல்லாதது. சிங்கத்தின் பக்கத்தில் தாஜ்மதாலும் அதறகுப பக்கத்தில் நாரதர் பொம்மையும் இருக்கும். இந்தப் பொம்மை வரிசைகள் மீது அந்தோணி தொங்க விட்ட காகிதத் தோரணங்கள் அந்த அரை இருட்டில் விநோதமாகக் காட்சியளித்தன. என்ன பைத்தியக்காரத்தனமான வண்ணக்கலவை!

திடீரென்று அந்தோணியின் வண்ணத் தேர்வு எனக்கு ஏதோ உணர்த்துவது போலிருந்தது. சம்பிரதாயக் கலைஞர்களுக்கு அவனுடைய வண்ணப் பிரயோகம் அறியாமையில் உருவானது போலிருந்தாலும், அவன் பயன்படுத்திய வண்ணங்களுக்குச்

________________

224 பறவை வேட்டை | வண்ணங்கள்

சாதாரணமாகப் புலனாகாத சக்தி ஏதோ ஒன்று புதைந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்த அரை இருட்டில் அந்த வண்ணக் காகிதங்கள் மர்மமான இயக்கம் ஒன்றில் ஈடுபட்டி ருப்பதாகவும் தோன்றியது. எனக்கு அவன் எச்சரிக்கை செய்தது நினைவுக்கு வந்தது. பிசாசுகள்! அந்தோணி என்னை எச்சரிக்கை செய்கிறான்: ஜாக்கிரதை, பிசாசு! அப்படி என்றால் அவனுக்குப் பிசாசுகள் பழக்கமாயிருக்குமா! ஏன் நான் மீண்டும் மீண்டும் பிசாசை அவன் பார்த்திருக்கிறானா என்று கேட்டபோது பதில் சொல்லாமல் கோபப்பட்டுக் கொண்டான்? இதோ இங்கே வீட்டிலேயே பிசாசுகளைக் கொண்டு வந்து விட்டானா?

எனக்கு இப்படி நினைப்பதற்குக் கோபமாகவும் இருந்தது, வெட்கமாகவும் இருந்தது. இந்தப் பிசாசுகள் பற்றித் தர்க்க பூர்வமான விளக்கம் என்றுமே கிடைத்ததில்லை. சரி, சரி, சரி, என்று இரண்டு மூன்று படிகளுக்குப் பிறகு நான்காவது படி விளக்கம் தரும் போது எல்லாப் படிகளும் நொறுங்கி விழுந்து விடுகின்றன. பிசாசு இருக்கிறது என்று சொல்ல வருகிறவர்கள் இக்காரணத்திற்குத்தான் விவாதம் என்று ஆரம்பித்தவுடன் பின்வாங்கிவிடுகிறார்கள் போலும்.

இதெல்லாம். நான் எனக்குள் சொல்லிக்கொண்ட போதிலும் அந்தோணி செய்த அலங்காரத்தினால் என்றும் ஒரு பொருட்டே யில்லாத கொலு ஓர் அசாதாரண முக்கியத்துவம் அடைந்தது போலிருந்தது. பழைய மண் பொம்மைகள் அச்சத்தை விளை வித்தன. அவை அனைத்துக்கும் விபரீத சக்தி விநியோகிப்பதாக அந்தோணி கட்டிய காகிதத் தோரணங்கள் கூரையிலிருந்து அசையத் தொடங்கிக் கொண்டிருந்தன.

எப்போதோ கேட்டு மறந்து போன பிசாசுக் கதைகள் எல்லாம் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன. இம்மாதிரிக் கதைகளைக் கேட்பதில் அசிரத்தையாக இருக்கும் நானே இவ்வளவு கேட்டிருக்கிறேனா என்று ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு கதையும் ஒரு தகவல் தவறிப்போய் விடாமல் நிதானமாக என் மனதுக்குள் விரிந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் நான் மேற்கொண்ட திமிறி எதிர்க்காமல் என் மனதை அதன் போக்குக்கு விட்டேன். நான் உடனேயே தூங்கியிருக்க வேண்டும், ஏனென்றால் அந்தக் கட்டத்திற்குப் பிறகு எனக்கு நினைவு இருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் அந்தோணியின் தோரணங்களுக்கும் பிசாசு களுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று அடுத்த நாளே எனக்குத் தோன்றிவிட்டது. இதற்கும் தர்க்க ரீதியாகக் காரணம் இல்லாது போனாலும் ஏனோ அந்தோணியின் நிலைமையைக் கேள்விப்

அசோகமித்திரன் 225

பட்டதும் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அந்தோணிக்கு மறுபடியும் கல்யாணம். மகிழ்ச்சிக்குரியதா துக்கத்துக்குரியதா என்று புரியாத நிலையில்தான் அவன் குடித்திருந்தான்.

நாராயணசாமித் தோட்டம் எப்போது தோட்டமாக இருந்தி ருக்கும் என்று ஊகிக்க முடியாதபடி ஒரு குடிசைப் பகுதியாக மாறிப் பல ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும். அந்தோணியின் தாய்வழித் தந்தை வழி உறவினர்கள் என்று டஜன் கணக்கில் அங்கு இருந்தார்கள். சிறு வயதிலேயே மனைவியை இழந்து ஒரு குழந்தையுடன் அப்படியே காலத்தைத் தள்ளிவிடலாம். ஆனால் ஏகப்பட்ட உறவினர்கள் சுற்றி இருப்பத னாலேயே மறுமணத்தைத் தவிர்க்க முடியவில்லை. எல்லா உறவினர்களுக்கும் பெண்கள் இருந்தார்கள். ஏதோ நல்ல காரணங்களுக்குத்தான் அந்தோணி இன்னொரு கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் அது நாள் வரை கடத்தியிருக்க வேண்டும். ஆனால் என்றென்றுமாக அப்ப்டிச் சமாளிக்க முடியவில்லை. என் பெண்ணைக் கட்டிக்கொள், என் பெண்ணைக் கட்டிக் கொள் என்று தினம் நான்கு நடுவயது மாதுக்கள் நச்சரிப்பதை முடிவு கட்டுவதற்காவது ஏதோ ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டுவிடச் சம்மதம்

தெரிவித்திருக்க வேண்டும்.

மறுமணம் என்று தீர்மானமான பிறகு அந்தோணி தினமும் குடிக்கத் தொடங்கிவிட்டான். அவனுக்கு எங்கே பணம் கிடைத்தது என்று எனக்கு ஆச்சரியமாகயிருந்தது. நானறிந்த அவன் நாராயணசாமித் தோட்டத்திலிருந்து நுங்கம்பாக்கத்துக்கு நீண்ட கால்நடையாக வெறுங்கை, வெறும் பையாகத்தான் வருவான். வேலை நேரத்தில் சாப்பாட்டு இடைவேளை என்று சண்டை போட்டு ஒருமணி நேரம் எடுத்துக் கொண்டாலும் ஒருமணி நேரமும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து விட்டுத்தான் வருவான். அவன் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தில் எல்லாருமே கிட்டத்தட்ட அந்தோணி மாதிரிதான் வாழ்க்கை நடத்த வேண்டும். அவனுக்கு மனைவி உயிருடன் இருந்தால் உணவு இடைவேளைக் காகவென அவள் ஏதாவது கட்டிக் கொடுத்து அனுப்பலாம். அதற்காகவாவது அவன் இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் இப்படிக் குடிக்க ஆரம்பித்துவிட்டால் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே திண்டாட்டமாகிவிடுமே?

அவன் கல்யாணத்திற்கு யாரையும் கூப்பிடவில்லை. ஆனால் நான்தான் கையெழுத்தில் ஒர் அழைப்பு மாதிரி எழுதி அதை வைத்துக் கொண்டு கல்யாணப்பரிசு நிதி திரட்டினேன். ஐம்பது ரூபாய் கூடச் சேரவில்லை. அப்போதிருந்த விலையில் ஒரு

ப.வே.-15



________________

226 பறவை வேட்டை | வண்ணங்கள்

தண்ணிர் குடமும் இன்னொரு பாத்திரமும் வாங்க முடிந்தது. கல்யாணத்திற்கு என்று யாரும் போகாவிட்டாலும் இரு நாட்கள் கழித்து அந்த இரு பாத்திரங்களையும் அவனுடைய வீட்டில் கொண்டு போய்க் கொடுத்துவர ஏற்பாடு செய்து, கடைசியில் நானே தூக்கிப் போகும்படியாயிற்று. நடந்தேதான் போனேன். அந்தோணி அவனுடைய குடிசையில் இல்லை. அங்கு யாருமே இல்லை. நான் விசாரிப்பதை அறிந்து வேறொரு குடிசையிலிருந்து ஒரு பெண் வந்தாள். அவள்தான் அந்தோணியின் புது மனைவி. அவளிடம் இரு பாத்திரங்களையும் கொடுத்துவிட்டுத் திரும்பினேன். அந்தோணி குடிக்கத் தொடங்கியதற்குக் காரணம் புலப்படுகிற மாதிரியிருந்தது.

அவள் நன்கு வளர்ந்த பெண். அந்தோணியைவிடப் பெரியவளாகவும் இருக்கக்கூடும். படித்தவளாகத் தெரிந்தாள். கணவன் பற்றியும் வாழ்க்கை பற்றியும் எதிர்பார்ப்புகள் இருக் கும். எனக்கு அந்தோணி மீது மதிப்பும் வியப்பும் இருக்கலாம். நான் அவனிடம் காணும் சிறப்புகள் அவளுக்குச் சிறப்புகளாகத் தோன்றுமா?

அந்தோணியாக இந்தக் கல்யாணத்துக்கு முயற்சி செய்ய வில்லை. ஆனால் ஏராளமான உறவினர்கள் குவிந்திருக்கும் பகுதியில் ஒருவன் வாழ்ந்ததனால் அவனுடைய வாழ்க்கையைச் சார்ந்த பல முடிவுகள் வேறு யார் யாரோ எடுப்பதாகத்தான் இருக்கும். அந்தப் பெண்ணின் தகப்பனுக்கு ஒரு பொறுப்புக் குறை ந்தது என்றிருக்கலாம். தாயற்ற சிறு பையனை வைத்துக் கொண்டு அவதிப்படுகிறானே என்று உண்மையாகவே அந்தோணி மீது பச்சாத்தாபம் கொண்டிருக்கலாம். ஆனால் இதெல்லாம் வயது வந்த, நினைவு தெரிந்த தீர்மானமான மனதுக்கு முன் எம்மாத்திரம்? அந்தோணி இதெல்லாம் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் எல்லாருமாகச் சேர்ந்து அவனுக்கும் அப்பெண்ணுக்கும் மணமுடித்து வைத்துவிட்டார்கள்.

என்னிடம் அந்தோணி எவ்வளவு கண்டிப்பாக இருப்பான்? அவனுக்கு உரிமைகளும் சலுகைகளும் குறைவுதான். ஆனால் அவற்றில் சிறிதளவும் விட்டுக் கொடுக்க மாட்டான். உணவு இடைவேளை பதினொரு மணி அடிப்பதற்கு முந்தைய விநாடி ஏதாவது பணியிட்டால்கூடக் காதில் கேளாது மாதிரிப் போய் விடுவான். இந்தக் கண்டிப்பு அவனுடைய சித்தி, மாமன், பாட்டி, பெரிய தாத்தா இவர்களிடம் செல்லவில்லையே.

அந்தோணி புது உடை உடுத்தியபடி கூட வேலைக்கு வரவில்லை. சில சமயங்களில் நாமாக விபரீதமாகக் கற்பனை செய்து கொண்டு திண்டாடுவோம். எதார்த்தம் உண்மையில்

அசோகமித்திரன் - 227

மகிழ்ச்சியையும் தரக் கூடியது; அந்தோணி விஷயத்திலும் அவ்வாறு இருந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அவன் இன்னும் சண்டைக்காரனாகவும் குடிகாரனாகவும்தான் மாறினான். எது எதையெல்லாமோ மீறி அவனுடைய புது மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. பெண். அடுத்த ஆண்டு இன்னொரு குழந்தை, பிள்ளை. அப்போதுதான் பிசாசுகள் நிறைந்த அந்த இடத்தை விட்டு நான் நிரந்தரமாக விலகினேன்.

இருபது வருடங்கள் கழித்து நான் மீண்டும் அந்தோணியை, லிங்கிச் செட்டித் தெருவில், பார்த்தேன். நடுவில் ஓரிரு சமயம் அவனும் என் கண்ணில் பட்டிருப்பான். நானும் அவன் கண்ணில் பட்டிருப்பேன். ஆனால் அந்தத் தருணங்களில் நின்று பேசிக்கொள்ள வசதியில்லாமல் போயிருக்கும். அவன் பஸ்ஸில் போய்க் கொண்டிருப்பான், நான் சைக்கிள் மிதித்துக் கொண்டி ருப்பேன்; அவன் மவுண்ட்ரோடு தபாலாபீஸருகில் நின்று கொண்டிருப்பான், நான் எதிர்சாரியில் சுதேசமித்திரன் காரியால யத்திலிருந்து வெளிப்பட்டிருப்பேன், எங்கள் இருவர் நடுவில் டஜன் கணக்கில் பஸ்களும் கார்களும் ஸ்கூட்டர்களும் இரு திசைகளில் தலைதெறிக்கும் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தத் தருணத்தில் பழைய நினைவுகளுக்கு நேரமிருக்காது, அல்லது பழைய நினைவுகள் தவிர்க்கப்பட வேண்டியதாக இருந்திருக்கும். பழைய நினைவுகள் மனதைக் குதறிப் போடாமலிருக்கக் காலம் தேவைப்படுகிறது. இப்போது அந்தோணிக்கு என்னைக் கண்டதில் எவ்வளவு மகிழ்ச்சியோ அவ்வளவு எனக்கு அவனைச் சந்தித்ததில் இருந்தது. எங்களிருவருக்கும் இந்த இருபது வருடங்கள் எப்படியிருந்தன என்று எங்களுக்குள் விவரமாகக் கேட்கத் தேவையில்லாமல்

எங்கள் இருவரின் தோற்றங்களும் அனைத்தையும் தெரிவித்துவிடும்

போல இருந்தன. என்னோடு அந்தக் காலத்தில் வேலை செய்த வர்கள் அநேகமாக எல்லாருமே"காபி வாங்கித் தாயேன், மூணு ரூபாய் இருந்தால் கொடுக்கறியா, கண் டாக்டருக்குத் தர ஒன்பது ரூபாய் வேண்டியிருக்கிறது என்று தான் முதல் விசாரிப்புகளுக்குப் பிறகு கூறுவார்கள். நான் அந்தோணியைக் கேட்டேன், "நீ எப்படி இருக்கே, அந்தோணி? உனக்கு ஏதாவது வேணுமா?"

அவன் பழைய சட்டை, பழைய டிரவுசர், பழைய செருப்பு தான் போட்டுக் கொண்டிருந்தான். முற்றின சேனைக்கிழங்கின் மேற்பரப்பு போல அவனது முகம் கரடுமுரடாக இருந்தது. கண்களை இடுக்கிக் கொண்டு பேசியதிலிருந்து அவன் கண்ணாடி அணிவதை ஒத்திப் போட்டுக் கொண்டு வருகிறான் என்று தெரிந்தது. அவன் சொன்னான், "எனக்கு ஒண்ணும் வேண்டாம் சார். நீ எப்படி இருக்கே?"

________________

228 பறவை வேட்டை | வண்ணங்கள்

லிங்கிச் செட்டித் தெருவின் அடைசலான போக்குவரத்து, இரு நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்துச் சந்தித்துப் பேசிக் கொள்ளும் தகுதியைச் சற்றும் பெறாமல் இருந்தது. நாங்கள் இருவரும் ஒரு கடையின் முன்வாயிற் படிக்கட்டு மீது ஏறிக் கொண்டோம்.

என்னுடைய சிறு விளக்கங்களுக்குப் பிறகு அவனைக் கேட்டேன், "நீ என்ன பண்ணறே, அந்தோணி?”

"இப்போ ஒண்ணும் பண்ணாமச் சும்மாத்தான் இருக்கேன், சார். நீ போனப்புறம் அடுத்த வருஷமே அந்தப் பீடை வேலையை விட்டு ஒழிச்சேன். பதினைஞ்சு வருஷம் என் பொண்டாட்டி பிள்ளையைச்சாகக் கொடுத்து உழைச்சேன், வெளியிலே போற ப்போ கையிலே ஆயிரம் ரூபா கூடத் தரலே, சார்."

"அங்கே சம்பளமே ரொம்பக் கொஞ்சம்தானே?" "பகல் சாப்பாட்டுக்குப் பத்தணா தர என்னமா வயத்தெரிச்சக் கொட்டிண்டாங்க?"

"இன்னும் அதெல்லாம் ஞாபகம் வைச்சிண்டிருக்கயா?” 'படுபாவிங்க முதலாளியும் அவன் மகன்களும் ஊரிலே இருக்கிற தேவடியாளுக்கெல்லாம் கொட்டி அளந்தாங்க வீடு வீடாக் கட்டிக் கொடுத்தாங்க காரு வாங்கிக் கொடுத்தாங்க. எங்க ளுக்குப் பத்தனா கொடுக்கப் பிசிநாறித்தனம் பண்ணி நல்லவங் களை எல்லாம் விரோதிகளாக்கினாங்களே, அதான் அடுத்த தலைமுறைக்கு ஒண்ணும் தங்காமப் பாழாப் போறாங்க”

"உன் பையன் என்ன பண்ணறான்?” "எத்தினி தொழிலாளிங்க வயத்தெரிச்சலையும் வேதனையை யும் வாங்கிக் கட்டிட்டாங்க, அந்தப் படுபாவிங்க! அவுங்க வம்சமே உருப்படாமத் தெருத் தெருவா நாறும்.” "பையன் வேலையாயிருக்கானா?” "ஆமா, சார். கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட்லே ஒரு இடத்திலே ஃபிட்டராயிருக்கான். கல்யாணம் கட்டி ஒரு குழந்தை கூட இருக்கு."

"அவனுக்கும் ஏன் இப்படிச் சின்ன வயசிலேயே கல்யாணம் கட்டினிங்க?" -

"அவன் சோத்துக்கு என்ன பண்ணுவான், சார்? நானே தான் பெரிய மச்சான் பொண்ணையே கட்டி வைச்சேன்.”

"ஏன், அவன் உன் வீட்டிலே இல்லையா?”

அசோகமித்திரன் 229

'இல்லையே, சார். நான் இரண்டாவது கட்டிண்டேனே, அந்தப் புண்ணியவதி அவனைப் பத்து வயசிலேயே விரட்டி விட்டுட்டாளே."

"பத்து வயசிலேந்தா அவன் வேலைக்குப் போறான்?”

"இல்லே, சார் என் சின்னம்மா ஒருத்தி சின்னமலைகிட்டே இருந்தால்லே, அவ கிட்டே கொண்டு போய்விட்டு மாசம் அம்பது ரூபா கொடுத்தேன்.”

“g, Lo P’’

"நான்தான் வேலையிலே இருந்தேனே? இங்கேதான், இதே தெருவிலே. பதினாறு வருஷம் சர்வீஸ் முடிச்சுட்டு ரிடயர் ஆயிட்டேன். நான் ரிடயர் ஆனப்போ அந்த மார்வாடி எவ்வளவு கொடுத்தான், தெரியுமா?”

"தெரியாது.”

"இருபத்தையாயிரம், சார். அங்கே உன்னோடப் பதினஞ்சு வருஷம் உழைச்சேன், எட்டு நூறு ரூபா கொடுத்தான் அந்த முதலாளி நான் போனப்போ. இவன் இருபத்தையாயிரம் ரூபா கொடுத்தான். அதுலே ஒரு ஃபைவ் தெளசண்ட் பெரிய பொண்ணு மாரேஜூக்குத் தனியா வைச்சுட்டேன். மிச்சப் பணம் அங்கே இங்கே வட்டிக்குக் கொடுத்திருக்கேன்."

"வட்டிக்கா?”

"அதெல்லாம் பத்திரமா இருக்கு, சார். கவலைப்படாதே. வீட்டு மேலே, வீட்டு மனை மேலேதான் கொடுத்திருக்கேன். உன் பையன்லாம் என்ன பண்ணறான், சார்?"

எனக்கு அவனைப் பற்றிப் பெருமையாக இருந்தது. மீளவே முடியாது என்று கஷ்டங்களும், துக்கங்களும் வந்தால் கூட ஒரேயடியாக விழுந்து போகாமல் சிறிது நிறுத்திப் பிடித்துக் கொண்டால் அந்த நேரத்தில் கணக்கில் அதுவரை எடுக்காத சில காரணிகள் நிவர்த்திக்கு வழி செய்கிறதல்லவா? | நாங்கள் அந்தக் கடையைவிட்டு நகர்ந்து இன்னொரு கடை வாசலில் போய் நின்றோம்.

"அந்த இன்னொரு மாரேஜ்தான் ரொம்ப டிரபிளாயிடுத்து, சார் மூனுவாட்டி அது ஒடிப் போயிடுத்து. எல்லாருமாப் போய் இழுத்துண்டு வந்தாங்க. இப்போ அது பாட்டுக்கு நாராயண சாமித் தோட்டத்திலே இருக்கு. நான் பெரியமேட்டிலே இருக்கேன்." -

"பிசாசு பிடிச்சுருக்கும்.”



________________

230 பறவை வேட்டை / வண்ணங்கள்

அந்தோணி முகத்தைச் சுளுக்கிக் கொண்டான். "அங்கே வீட்டிலே எங்கே சார் பிசாசுங்க? கிரீன்வேஸ் ரோடு வந்தா உண்டு. இல்லை, பாலத்தாண்டே உண்டு. நாராயணசாமித் தோட்டத்திலே பிசாசு கிடையாது, சார்.”

அந்தோணியைப் பார்க்கப் பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. விடிவே தோன்றாத பற்றாக்குறையால் அறை வயிறு கால் வயிறு உண்டு உலகத்தையே துவேஷக் கண் களோடு பார்த்து அவனும் அழிந்து உலகமும் அழியட்டும் என்றி ருந்த அந்தோணிதான் நான் அது வரை அறிந்தது. எப்போதுமே அவன் முகச்சருமம் சேனைக் கிழங்கின் தோல் மாதிரி இருக்கும். கண்களை இடுக்கிக் கொண்டுதான் பேசினான். ஆனால் இப்போது அதிலெல்லாம் அழகும் ஆர்வமும் இருந்தது. ஒருவன் உலகத்தை நேசிப்பதற்குப் பணக்காரனாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஒருவேளை பணக்காரனாக இருப்பதே அதைச் சாத்தியமில்லாமல் செய்து விடலாம். ஆனால் சுயகெளரவத்தையும் கைவிடாமல் பட்டினியாகவும் இருக்கவேண்டுமானால் அவனுக்குக் கண்ணில் தெரிபவர்கள் எல்லாரும் விரோதிகள். அவர்களை அவன் அழித்தேயாக வேண்டும், மனத்தினளவிலாவது. -

"நாம வேலை பண்ணின இடத்திலே பிசாசுங்க இருக்கும்னு சொன்னியே, நினைவிருக்கா அந்தோணி?”

"ஆமாம், சார். அங்கே பிசாசுங்க நிறைய இருந்தது. அங்க மட்டும் இல்லே, சார். சுத்தி நாலா பக்கமும். சன் தியேட்ட ராண்ட இருந்தது. அந்த கார்டன்லேயும் நிறைய. இந்தப் பக்கம் கிராமபோன் கம்பெனி காம்பவுண்டிலே.”

"நிஜமான பிசாசு அதெல்லாம் இல்லே, அந்தோணி, கையிே காசு இல்லாம போயிடறதே, நீயும் சாப்பிடாம, உன் குழந்ை குட்டிக்கும் ஒழுங்காச் சாப்பாடு போட முடியாம போயிடறே அதுதான் நிஜப் பிசாசு. தரித்திரம்தான் நிஜமான பிசாசு.”

அந்தோணி மரியாதைக்காக நான் பேசுவதைக் கேட்டு கொண்டிருந்தான். அந்தக் கடையின் வாயிற்படியையும் நாங்க கைவிட வேண்டியிருந்தது. லிங்கிச் செட்டித் தெருவின் போக் வரத்து வெயிலோடு சேர்ந்து உச்சநிலையடைந்திருந்தது. ச பத்தில் பெய்த மழையும் எங்கோ ஒரு பாதாளச் சாக்கடை அடைத்துக் கொண்டு மறைவாகப் பாய வேண்டிய தண்ணிரும் தெருவில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இயல்பாக எழும் அருவருப்பை அடக்கிக்கொண்டு, வாகனங்களும், மக்களும் தெருவில் போய்க் கொண்டிருந்தார்கள். அசுத்தமான தண்ணிரில் காலை வைக்காமல் சமாளிக்கவெனச் சிலர் தெருவோரமாகச் கடைகளின் வாயிற்படிகள் மீதுஏறி இறங்கிச் சென்று கொண்

அசோகமித்திரன் 231

ருந்தனர். நாங்கள் நின்று கொண்டிருப்பது பலருக்கு இடைஞ்சலாக இருந்தது. எனக்கு அப்போது நான் வாங்க வேண்டியிருந்த நான்காவது புத்தகம் பற்றி நினைவுக்கு வந்தது. அதையும் உடனே வாங்க முடிந்தால் நான்கு புத்தகங்களையும் உடனே நண்பனுக்கு அன்றைய தபாலில் சேர்ப்பித்து விடலாம்.

"நீ இந்தத் தெருவிலேயேதானே வேலை பார்த்தே?” "ஆமாம், சார் பிரதாப் கம்பெனி" "இங்கே சட்டப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?" "வரதாச்சாரி கம்பெனி, சார். அதோ அங்கேதான் இருக்கு” "அங்கேந்துதான் வரேன். எனக்கு வேண்டியது நாலுலே மூணு அங்கே இருக்கு. ஒண்னு கிடைக்கலை."

"அப்போ சீதாராமன் கடையிலே டிரை பண்ணு, சார்” "அது எங்கே இருக்கு? பக்கத்திலேயே இருக்கா?” "இங்கே இல்லை, சார் ராயப்பேட்டையிலே இருக்கு." "பைகிராப்ட்ஸ் ரோடிலியா?" - 'இது அஜண்டா கிட்டே, சார். அஜண்டாயில்லே அஜண்ட்டா, அஜண்ட்டா ஹோட்டல்?”

"ஆமாம்.” "அதுக்குக் கிட்டே அங்கே போனாச் சொல்லிடுவாங்க” எனக்கு இதுவும் அந்தோணி அடைந்த இன்னொரு பரிமணாமாகத் தோன்றியது. சட்ட புத்தகங்கள் சென்னையில் எங்கு எல்லாம் கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு அவனுடைய உலகம் விரிவடைந்திருந்தது.

"ஆயிரம் விளக்காண்ட சொன்னே-ஆமா இங்கே பிசாசு இருக்கா?"

"எங்கே, சார்?" "இங்கே, சைனா பஜார்லே, டவுன்லே." "நிறைய இருக்கு, சார் பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் கிட்டே மரமும் கக்கூஸம் இல்லே? அங்கே டஜன் கணக்கிலே இருக்கு. இங்கே லா காலேஜ் கேட் கிட்டே. அண்ணாமலை மன்றம் எதுத்தாப்லே இருக்கிற ஹைகோர்ட் காம்பவுண்ட் கேட்டாண்ட இதோ இந்தத் தெருவிலேயே நிறைய இருந்தது, சார். பழைய கட்டிடத்தை இடிச்சாங்க, பிசாசுங்களும் போயிடுத்து.”

"அப்போ இங்கேயெல்லாம் இருக்கிறவங்க பிசாசு தோணற படி ஆடுறாங்கன்னா சொல்லறே?”

|











________________

232 и

பறவை வேட்டை | வண்ணங்கள்

"அப்படி இல்லே, சார். பிசாசு எல்லார் கிட்டேயும் போற தில்லையே? டீ சாப்பிடறியா, சார்?"

நாங்க இருவரும் ஒரு சிறு டீக் கடைக்குச் சென்று இரண்டு டீக்குச் சொன்னோம். அதன் பிறகுதான் எனக்குத் தெருவில் ஒடும் சாக்கடைத் தண்ணிர் மறுபடியும் கவனத்துக்கு வந்தது. டீ வேண்டாம் என்று சொல்வதற்குள் டீக்கடைப் பையன் அந்தோணியிடம் இரு கோப்பைகளைக் கொடுத்துவிட்டான்.

ஆனால் டீ. நன்றாக இருந்தது. நான் டீக்குப் பணம் கொடுக்கப் போனபோது என்னை உறுதியாகத் தடுத்து அந்தோணி பணம் கொடுத்தான். அந்த தெருவையே விட்டு வெளியேற வேண்டுமென நான் நினைத்தேன். ஆனால் அந்தோணிக்கு அங்கே ஏதாவது வேலை இருக்க வேண்டும். அல்லது இன்னும் யாரையாவது சந்திக்க வேண்டியிருக்க வேண்டும். அவன் மறுபடியும் இன்னொரு கடை வாயிற்படியை ஆக்கரமித்துக் கொண்டான்.

"நான் கிளம்பறேன், அந்தோணி. உன்னைப் பாத்ததுலே ரொம்ப சந்தோஷம்" என்றேன்.

"எனக்கும் சார். உன் வீட்டுக்கு வரலாமான்னு நிறைய நாள் நினைச்சிருக்கேன். ஆனா உங்கம்மா செத்துட்டாங்க, அப்போ நான் வரலை. இப்ப்ோ எப்படி வறதுன்னு கஷ்டமாயிருந்தது."

"அம்மா செத்தது தெரியுமா?” "தெரியும் சார்." "இப்போ வீட்டிலே கொலு கிலுவெல்லாம் பெரிசா வைச்சுக்கறது கிடையாது.”

"அப்படியா, சார்?" "ஆனா நான் நினைச்சுப்பேன், நீ வீட்டுக்கு வந்து டெக ரேஷன் பண்ணினதை. அதெப்படி அந்த மாதிரி கலர் காகிதம் வாங்கினே?”

"எந்த மாதிரி, சார்.” -'என் வீட்டிலே பண்ணினயே?”

இரண்டு வருஷம் நீ டெகரேஷன்

"ஆமாம், சார்”

"நீ எப்பவுமே அந்த கலருங்கதான் உபயோகப்படுத்துவியா?

"இல்லே, சார். உன் வீட்டுக்கு என்ன கலர் காகிதம் போடணும்னு முதல்லே தெரிஞ்சுண்டுதான் நான் வாங் வந்தேன்.”

"வீட்டுக்கு வீடு கலர் மாறுமா?"

அசோகமித்திரன் 233

"ஆமாம் சார் ஒரு வீட்டுக் கலர் இன்னொரு வீட்டுக்குச் சுகப்படாது.”

"சுகப்படாதா?”

"ஆமா, சார். சுகப்படாது.”

"ஏன் ?”

அந்தோணி அரை வினாடி நின்றான். பிறகு, "காரணம் சொல்லட்டுமா, சார்?" என்று கேட்டான்.

"அதானே கேக்கறேன்.”

"நீ இருக்கிற வீட்டிலேயேயும் பிசாசுங்க இருக்கு சார்"

இப்போது நான் சிறிது நேரம் பேசாமல் நின்றேன். ஏதேதோ நினைவுகளும் எண்ணங்களும் வெடித்துச் சீறி மோதி அடித்துப் பிடித்துக் கொண்டன. அந்தோணி சொல்வது நிஜமாக இருக்கலாம். நிஜமாகவே இருக்கலாம். நானும் ஒரு ஆயுதம் வைத்திருந்தேன். அதை உபயோகப் படுத்தினேன்.

"அந்தோணி, நீ பிசாசைப் பார்த்திருக்கயா?”

அந்தோணி ஓர் அற்புதமான புன்னகை எனக்குத் தந்தான்.

"நீ நிஜமாப் பிசாசைப் பாத்திருக்கயா?” முன்பு ஒரு தடவையும் அவனை இக்கேள்வி கேட்டிருக்கிறேன். அன்று போலவே இன்றும் அவன் பதில் தரவில்லை.

1985