Saturday, November 14, 2026

கரைந்த நிழல்கள் பற்றி அசோகமித்திரன் :: கசடதபற 4

 கரைந்த நிழல்கள் பற்றி அசோகமித்திரன் :: கசடதபற 4

.

'கரைந்த நிழல்க'ளில் ஒவ்வொரு பாத்திரத்திற் கும் ஒரு முன் மாதிரி உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்கள் தான் அந்த முன் மாதிரியல்ல. அதா வது பல தகவல்களில் பாத்திரங்களும் முன் மாதிரி களும் பெரிதும் மாறுபட்டு இருக்கும். சூழ்நிலை reaction கள், இவையெல்லாம் வேறு வேறு. இதன் காரணமாக அந்த முன் மாதிரிகளே இந்த நாவலைப் படிக்க நேர்ந்தால் கூட அவர்களே அது வேறு யாரோ என்றுதான் நினைத்துப் படிப்பார்கள். பல படமுதலாளிகளின் கலவை ரெட்டியார். அதே போலப் பல ஸ்டுடியோ முதலாளிகளின் கலவை ராம ஐயங்கார். பல புரொடக்ஷன் மானேஜர்களின் கலவை நடராஜன். ஆனால் இந்த நாவலில் அந்த ஸ்டுடியோவும் சினிமாவும் அவ்வளவு முக்கியமல்ல. இது மனிதர்களைப் பற்றியது. உண்மையாக இருக்கக் கூடிய மனிதர் களைப்பற்றி ஒரு அந்தரங்கத்தோடு, ஒரு உரிமையோடு எழுதப்பட்டது என்பதுதான் முக்கியம். பிற்காலத்தில் இது ஒரு நல்ல நாவல் என்றில்லாமல் இது சினிமாத்துறை பற்றிய ஒருநல்ல நாவல் என்று கூறப்படுமானால் நான் தோல்வி யடைந்தவனாவேன்.

ஒரு திட்டமான முடிவு வைத்துக்கொண்டு எழுத வில்லை. உண்மையில் என்னுடைய கதைகள் பலவற் றிற்கு நான் முடிவை மனதில் நினைத்து எழுதியது கிடையாது இந்த நாவலும் அப்படித்தான்.

தமிழ்ப் படைப்பிலக்கியம் இன்று எழுதுபவர்களில் நான் ந. முத்துசாமியைத் தலைசிறந்தவராகக் கருது கிறேன். அவர் இந்த நாவல் நன்றாக வந்திருக்கிறது என்று கூறினார். என் எழுத்து சரியான திசையில் இருக்கிறது என்பதற்கு அதைத்தான் வழிகாட்டியா கக் கொண்டிருக்கிறேன். நான் ஏதோ 'சோதனை' செய்கிறேன் என்று எழுதுவதில்லை. ஒன்றை வலுக் கட்டாயமாகச் செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை -வாழ்க்கையில் நம் ஜீவனத்திற்காக, குடும்பத்தின ருக்காக, உயர் அதிகாரிகளுக்காகச் சில காரியங்களை நாம் வலுக்கட்டாயமாகச் செய்யத்தான் வேண்டியிருக் கிறது. ஆனால் முழுக்கமுழுக்கச் சுதந்திரம் இருக்கும் என் படைப்புச் செயலில் வலுக்கட்டாயம் என்வரை யில் நம்பிக்கையற்ற ஒன்று. பொருளாதார லாபத்தை எண்ணியதும் இல்லை. இந்த நாவலிலும் கிடையாது. ரூ. 150/- கிடைத்தது -ஒரு சிறுகதைக்கு ரூ.1000/-பெற்று விட முடியும் இந்நாளில்.

ஒரு நல்ல வாசகர் குழுவுக்கு இது நான் சொல் லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. இந்த நாவல் மொத்தம் எட்டு முக்கிய பாத்திரங்களின் கண்ணோட் டங்களைக்கொண்டது. (அத்தி. 4, 5, 6-ராஜகோபால் என்னும் ஒரே பாத்திரம் - தீபத்தின் இடவசதிக் கேற்ப மூன்று அத்தியாயங்களாக அமைக்கப் பெற் றது) அத்தியாயம் இரண்டும், மூன்றும் telescope ஆகும். ஒரே நிகழ்ச்சி இரு வெவ்வேறு தளத்தில் உள்ளவர்கள் கண்ணோட்டத்தில் எப்படிக் காட்சி யளிக்கிறது என்று தெரியும். எட்டு, ராமஐயங்கார் கண்ணோட்டம். ஒன்பதாம் அத்தியாயம் பாச்சா கண்ணோட்டம். இதைப் 'புரிந்து கொண்டுவிட்டால் நாவல் இன்னும் அர்த்தமளிக்கும். 10-ம் அத்தியா யம் வேறு ஒரு பாத்திரத்தின் கண்ணோட்டம். இதை 'நான்' என்று சொல்வதில் ஒரு சௌகரியம், ஒரு பரவலான தன்மை கிடைக்கிறது. இங்கே, 'நான்' ஆசிரியரல்ல.

இதில் சம்பாஷணைகள் பாதிக்கு மேல் தமிழில் தான் பேச முடிகிறது- காரணம் அவர்கள் உணர்ச்சி களைக் கூட அறிவின் தளத்திற்கு ஒதுக்கிவிட்டு அந் தத் தளத்திலேயே இயங்குகிறார்கள். ஆனால் அவர் களும் சாதாரண மனிதர்கள்போல் மனதால், உணர்வு களால் இயங்கும்போது, இயல்பாகச் சொற்கள் தமி ழில் தான் வருகின்றன. இந்த இடங்கள் "" என்று தமிழில் சொன்னான்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நான் வேண்டுமென்றே அப்படி எழுதுவதில்லை. ஆனால் என் எழுத்துக்களை இரண்டாம் முறை படிப் பது அவசியமாகி விடுகிறது. முதல் வாசிப்பில் பல தகவல்கள் கவனத்திலிருந்து பிறழ்ந்து விடுகின்றன. பலவற்றிற்குச் சம்பந்தமே இருப்பதாகத்தெரியவில்லை. ஆனால் கதையைத் தெரிந்து கொண்டு ரண்டாம் முறை வாசிக்கும் போது நிறைய விவரங்கள் தெளி வாகின்றன. ஆனால் நான் யாரையும் 'இரண்டு முறை வாசியுங்கள்' என்று வற்புறுத்த முடியாது. முடிந்தால் வாசியுங்கள் என்றுதான் கூறமுடியும்.

நான் செய்ய முடியாத ஒன்றைச் செய்து முடித்த தாக நினைக்கவில்லை. இந்த நாவலை, அல்லது இதே மாதிரி நாவல்களை சிறிது அப்பியாசத்திற்குப் பிறகு, சிறிது முயற்சிக்குப் பிறகு யாரும் எழுதிவிட முடியும்.

(மதுரை இலக்கிய வட்ட இரண்டாவது ஆண்டு விழாவில் படிக்கப் பெற்றது. அனுப்பிஉதவியவர்: ட்டி .ஆர் நடராஜு )
@

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும் rrn.rrk.rrn@gmail.com இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து translate.google.com, docs.google.com, msword translateஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்